Jump to content

என் இல்லம் சொல்லும் சேதி இது.......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் இல்லம் சொல்லும் சேதி இது...

 

 

என் முற்றத்தில் மூழியாய் எறிக்கிறது முழுநிலவு.
சற்றைக்கொருதரம் தன்னை ஸ்பரிசிக்கும் திரைச்சீலைகளின் உரசல்களை இழந்த சாளரத்து ஓரங்கள்.
தலைவாசல்  கதவிழந்து தனிமையில் தவிக்கும் நிலைப்படிகள்.
மௌனித்துக் கிடக்கும் சமையலறை மேடை.
பொலிவிழந்து  புகைக்க மறந்த சோகத்தில் புகைபோக்கி.
ஏஞ்சல்கள் ஆடும் ஊஞ்சலை எண்ணி ஏங்கும் வேப்பமரம்.
சிறு சோறு சமைக்கும் சில்வண்டுகளைத் தேடும் சிறு தாழ்வாரம்.
சுற்றிப் பறந்த ( த) தும்பிகளைத் தேடும் கம்பி வேலிகள்.
தேவதைகளைத் தேடி தேகம் இளைத்த நிலைக் கண்ணாடி;.
ஓளித்து விளையாடிய தோழர்களின் தோள்சாயத் துடிக்கும் குட்டை மதில்.
ஓண்டிகாகி உறவிழந்து நிற்கும் ஒற்றைப்பனை.
உல்லாசமிழந்து உருக்குலைந்த மண்டபம்.
ஒப்பனை இழந்து உருமாறி நிற்கும் தலைவாசல்.
சல்லாபம் மறந்து தவிக்கும் சயனஅறை.
சலனமற்றுக் கிடக்கும் கிணற்று மேடை.
அன்னை தமிழை அழித்து எழுதிய முற்றத்து மண்.
சில்லுக்கோடு சொக்கட்டான் விளையாட நிழல் தந்த பூவரசு.
சிறுநீரைக்கூட சினக்காமல் சிறைப்பிடித்த புழக்கடை.
எல்லாமே...எல்லாமே...நிராசைகளைச் சுமந்து...
.எதிப்பார்ப்புக்களை நெஞ்சில் கனன்று...
'அவ்வப்போ உங்களை மகிழவைத்த ஜனனங்களும்
நெகிழவைத்த தருணங்களும் கூட
எமக்குள்தானே அரங்கேறின.
தேற்றுவார் யாருமின்றி வேற்றுக்கிரக வாசிகளாய்
முகவரியிழந்து நாம் இன்று.....
உங்கள் முகம்காண ஏங்கும் முதிர்கன்னிகளாய் நாம் இங்கு...
என் மடியில் விளையாட.. என் மதிலில் சாய்ந்தாட..
என் நிலவில் சோறுண்ண...என் மண்ணில் கோலமிட..
நீண்ட நாட்களாய் ஏங்குகின்ற தாயாய் நான்...
ஒருமுறை.. ஒரே ஒருமுறை...என் ஏக்கம் தீர்க்க
விண்ணைத்தாண்டி விளையாட வருவாயா??

 

                            xx-xx-xx-xx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்து சோகம்  சொல்லும் இழப்பும் ஏக்கமும் ..உங்கள் வரிகளில் ... பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

எண்ணத்தின் எச்சங்கள் கவிதையாய் நிற்கிறது நன்று அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு வருடங்களின் முன் நான் தாயகம் சென்றபொழுது என் வீடு கூரையிழந்து குட்டிச்சுவராக நின்றது. அதைப்பார்த்த பொழுது மனம் வெதும்பியது. இம்முறை நான் தாயகம் செல்லுமுன் வீட்டை முடிந்தவரை கூரையிட்டு கதவுகள் பொருத்தி பழையநிலைக்கு தயார் செய்துவிட்டுத்தான் போனேன். ஆனாலும் என்ன உறவுகளை இழந்த வீடு. வெறுமைதான் மிஞ்சியது. நன்றிகள் நிலாமதி சுமோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை படித்த திருப்தி மனசில்...! தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி...!! :)

Link to comment
Share on other sites

இக்கவிதை  தாயகத்தில் என் வீட்டின் ஏக்கங்களை உணரவைத்தது.


பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் ஒவ்வொருவருக்குள்ளும் இப்படியான வலிகள் ஏராளம். புலம் பெயர் மண்ணில் எத்தனை வசதி வாய்புகளுடன் வாழ்ந்தாலும் நம் இழப்பின் வலிகள் எமக்குள் நிரந்தரமானவை. மன உணர்வின் ஏக்கத்தை புரிந்துகொண்ட சுவி ஆதவன் இருவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ விதமான உணவுகள் இருந்தாலும்......பச்சை மிளகாயும்...சின்ன வெங்காயமும் நறுக்கிப் போட்ட.... அந்தப் பழைய சோத்துத் தண்ணீருக்காய்.... ஏங்குகின்றது   நாக்கு! :D

 

எனக்கென்னவோ கடற்கரையில மீனை வாங்கத் தென்நீர்க்கில கோத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து கறி வைச்சுச் சாப்பிட வேணுமெண்டு,  எப்போதுமே ஒரு ஆசை...! :icon_idea:

 

சாப்பிட்ட பிறகு, அப்பிடியே வேப்பமரத்துக்குக் கீழ, சாக்குக்கட்டிலல 'ஒருக்காச் சரிஞ்சால்'   அது தான் நான் ஏங்குகின்ற வாழ்க்கை! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையுரான் உங்கள் ஏக்கத்தை என்னால் முழுமையாக உணரமுடிகிறது. இம்முறை நான் வீட்டிற்கு சென்றபொழுது யாழ்பாணம் சென்று மண்சட்டி வாங்கி பண்ணைச் சந்தையில் நண்டும் வாங்கி கொண்டு வந்து வளவுக்குள் பனம் பாளையும் கொக்கறையும் எடுத்து அடுப்பெரித்து நண்டுக்கறியும் கத்தரிக்காய் பால் கறியும் ரசமும் சமைத்து சம்பாச் சோறுடன் சாப்பிட்டோம். இருபத்தைந்து வருங்களின் பின் என் வீட்டில் சமைத்து சாப்பிட்ட பசுமைநிறைந்த நினைவுகளுடன் நான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.