Jump to content

அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்?


Recommended Posts

 

அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து ஆபத்தான  கடற்பயணத்தை மேற்காண்டிருந்த 153 இலங்கை தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது மர்மாக உள்ள அதேவேளை இவர்களை அவுஸ்திரேலிய கடற்படையினர் இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


படகிலிருந்தவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டு உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவலகள் தெரிவிப்பதாக கிறிஸ்மஸ் தீவின் ஜனாதிபதி கோர்டன் தோம்சன்  தெரிவித்துள்ளார்.


படகிலிருந்தவர்கள் எவரும் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கான அறிகுறிகளோ அல்லது படகோ தென்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108816/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

  • Replies 247
  • Created
  • Last Reply

வரவேற்கப்பட வேண்டிய முடிவு Australia அரசுக்கு பாராட்டுக்கள்.....

Link to comment
Share on other sites

கொத்தியும் நாமலும் தாமே அனுப்பி தாமே காப்பாற்றுகிறார்கள். உலக அரசியல் யுக்தியாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கப்பட வேண்டிய முடிவு Australia அரசுக்கு பாராட்டுக்கள்.....

 

 

என்னை  இவ்வாறு ஒப்படைத்தது போல  உணர்கின்றேன்

காய்ச்சலும்

தடிமனும்

அவரவருக்கு வந்தால் தான் உணர்ந்து கொள்ளமுடியுமா  சுண்டல்??? :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் அவர்களுக்கு, சிலவேளை ஊரில் இருக்கும் வளர்த்த நாயைத் தவிர அங்கிருந்த அம்மிக்குழவி ஆட்டுக்கல் எல்லாத்தையும் உங்களுடன் நீங்கள் கொண்டுவந்து சேர்த்திருக்கலாம். என்ன விடையம் யாழ் களத்தில் அட்வான்ஸ் மெம்பர் போல நீங்களும் அவுஸ்ரேலியா நாட்டின் அட்வான்ஸ் மெம்பர் அவ்வளவே.

 

சில வேளை அகதியாகக் காரணம் எதுவுமில்லாது கப்பலில் ஏறிவருபவர்கள் அதிகமாக இருக்கலாம், அதற்காக உண்மையாக சிங்களத்தின் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்படும் அப்பாவிகளோ இல்லை முன்னாட் போராளிகளோ வந்து அவர்களைத் திருப்பி அனுப்பியோ அன்றேல் காணமற்போகச் செய்தோ ஏதவது நடந்தால் அதை வரவேற்க வேண்டிய தேவை இல்லை என்பது எனது அபிப்பிராயம்.

 

மேலும் இங்கிலாந்து தேசத்திலிருந்து குற்றப்பின்ணணியுள்ளவர்களை நூற்றாண்டுகளுக்கு முன்பு நாடுகடத்தி குடியேற்றப்பட்ட மக்களை கொண்டதே தற்போதைய அவுஸ்ரேலியா அதன் வரலாற்ருடன் ஒப்பிடுகையில் மிகவும் அண்மைக்காலத்திலேயே வேண்டாத விருந்தாளியாகப் போன வந்தேறு குடியே சுண்டலான நீங்களுமாகும்.

 

அந்தமண்ணின் மைந்தர்களான அபரோஜினர்கள் இப்போது தெருப்பிச்சைக்காரர்களாகவும் குற்றப்பரம்பரையைச் சேர்ந்தவர்களாகவும் நடாத்தப்படுகிறார்கள்.

 

இங்கிலாந்திலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களுக்கும் சில பத்துவருடங்களுக்கு முன்பு வேண்டாவிருந்தாளியாக அன்றேல் கடைநிலை ஊழியம் செய்பவராகவோ குடியேறிய உங்களுக்கும் தற்போது சிறுதோணிகளில் ஈழத்திலிருந்து அந்தப் பெருந்தீவினை நோக்கிப் பயணப்படுபவருக்கும் இடையில் காலங்கள் வித்தியாசம் இருக்கலாமேயொழிய வேறு ஒரு காரணமும் வேறுபாடானதல்ல.

 

சொந்த நாட்டினை விடவும் அவுஸ்ரேலியா அந்தமாதிரி கனடா அந்தமாதிரி லண்டன் மற்ரும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் அந்தமாதிரி எனப்புகழ்பவர்கள் அனைவரும் உங்களது கற்றக்கறியிலதான் சேருவினம்

 

நக்கிப்பிழைக்க வந்தனாங்கள் நக்கிறதவிட்டுட்டு வேற வேலை எதையும் செய்யவோ கதைக்கவோ கூடாது ஏனெண்டால் நக்கிற சட்டியை வேறு ஒரு தெருநாய் கொண்டுபோய்விடும் நான் உட்பட.

 

 

 

 

Link to comment
Share on other sites

உண்மையான அகதிகளை தவிர இந்தியாவில் பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்தும் உண்மையான அகதிகளின் நியமான கோரிக்கைகளை பின்தள்ளும் இப்பிடியான பொருளாதார அகதிகளின் வருகை நிறுத்தப்பட வேண்டியதே........

அந்தவகையில் ஆஸ்திரேலியா அரசு செய்துவரும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியதே......

இன்னும் ஒரு நாட்டுக்குள் நான் உற்பட யாராக இருந்தாலும் திருட்டுத்தனமாக நுழைவது கண்டனத்துக்குரியது...........

இவர்களுக்கு படகில் வர ஆளுக்கு 10000 டாலர்ஸ் கொடுத்து வர முடியும் என்றால் இவர்கள் எல்லோரும் பொருளாதார அகதிகள் தான் மாறாக உயிருக்கு அஞ்சி ஓடி வருபவர்கள் அல்ல.....அப்பிடி வருபவர்களா இருந்தால் இவர்கள் இந்தியாவிலே வாழ்ந்திருக்கலாமே.....

Link to comment
Share on other sites

சுண்டல்: முதல் (1980களில்) ஜெர்மனி க்கு போனவர்களை தவிர தற்போதுள்ள 95% வீதமான புலம் பெயர் தமிழர்களும் திருட்டு தனமாக புலம் பெயர்ந்தவர்களே.....இந்தியாவில் எவ்வளவு பணம் இருந்தாலும் நிம்மதியாக வாழமுடியுமா தெரியாது...எப்போதும் யாருக்கும் பயப்படவேண்டும்....ஆகவே அவுஸ்திரேலியாவுக்கு மக்கள் போவதை குறை சொல்ல முடியாது.....ஆனால் இப்போது எல்லா நாடுகளும் குடிவரவு முறைகளை இருக்க தொடங்கியுள்ளன...ஆகவே மக்கள் ஏமாற்றுபவர்களின் பேச்சை கேட்டு தங்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள்..மற்றும் தப்பி சென்றாலும் ஒரு பலனும் கிட்டாது என்பதை நினைத்து வேதனை தான்...ஆனால் மக்கள் புலம் பெயருவதை குறை சொல்ல முடியாது...இப்போது அவுஸ்திரேலியாவில் புதிதாக வருபவர்களுக்கு நல்ல வேலையும் கிடையாது....அரசும் பண்ணும் கொடுக்காது...அதை இவர்கள் விளங்கவும் வேண்டும்.....

Link to comment
Share on other sites

அது மட்டுமல்ல இலங்கை அகதிகள் என்ற போர்வையில் யுத்த வாசமே அறிந்திராத பலரும் வருகின்றார்கள் இலங்கை பாஸ்போர்ட் எடுத்து வரும் இந்திய தமிழர்கள்........உற்பட...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான அகதிகளை தவிர இந்தியாவில் பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்தும் உண்மையான அகதிகளின் நியமான கோரிக்கைகளை பின்தள்ளும் இப்பிடியான பொருளாதார அகதிகளின் வருகை நிறுத்தப்பட வேண்டியதே........

அந்தவகையில் ஆஸ்திரேலியா அரசு செய்துவரும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியதே......

இன்னும் ஒரு நாட்டுக்குள் நான் உற்பட யாராக இருந்தாலும் திருட்டுத்தனமாக நுழைவது கண்டனத்துக்குரியது...........

இவர்களுக்கு படகில் வர ஆளுக்கு 10000 டாலர்ஸ் கொடுத்து வர முடியும் என்றால் இவர்கள் எல்லோரும் பொருளாதார அகதிகள் தான் மாறாக உயிருக்கு அஞ்சி ஓடி வருபவர்கள் அல்ல.....அப்பிடி வருபவர்களா இருந்தால் இவர்கள் இந்தியாவிலே வாழ்ந்திருக்கலாமே.....

 

மிகவும் தப்பான கருத்து, அங்கு வாழ முடியாத நிலையில்தான் இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியிலும் தங்களின் பிள்ளைகளின் ஏதிர்காலத்திற்காக ஒரு நல்ல வழிபிறக்காதா என ஏங்கி வட்டிக்கு கடன் வாங்கி ஓடி வருகின்றார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்குப்பின்னும் எத்தனை சோகக்கதைகளோ? சொந்த மண்ணில் சந்தோஷமாக வாழமுடியுமென்றால், ஏன் நாம் இங்கு வந்து கஷ்டப்படனும் எல்லா உறவுகளையும் சந்தோஷங்களையும் விட்டுவிட்டு.

 

ஏன் இந்த அவுஸ்க்குள் குடியேறியவர்கள் எல்லாம் முன்னார் திருட்டுத்தனமாகதான் வந்தார்கள், அதை மறந்துவிட்டீர்கள், எல்லாம் வந்தேறு குடிகளே.

Link to comment
Share on other sites

நீங்க என்ன தான் சொல்லுங்க அகதிகள் விடையத்தில் லிபரலின் கடும்போக்கான கொள்கை பாராட்டப்பட வேண்டியது......

இனி இலங்கையில் இருந்து வருபவர்கள் அகதிகள் என்றே சொல்ல முடியாது வெறும் பொருளாதார அகதிகள் தான் இவர்களுக்கு குடுக்கும் வாய்ப்பை எவ்ளவோ உண்மையான அகதிகள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு கொடுக்கலாம்

இந்த இலங்கையில் இருந்து வரும் அகதிகள் உயிருக்கு பயந்து வந்தால் சரி உங்களுக்கு கம்போடியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி உயிர் பாதுகாப்பு தருகின்றோம் என்றால் உடனே திரும்ப இலங்கைக்கு போக கையை உயர்த்துகின்றார்கள். ....:D :d :D

நீர்கொழும்பு பக்கம் இருந்தெல்லாம் சிங்கள மொழி பேசி சிங்களவர்களாகவே வாழுகின்ற தமிழர்கள் வந்து இருக்கின்றார்கள்...அவர்கள் தங்கள் வாயால் சொன்னது தாங்கள் உழைக்க தான் வந்தது என்று சோ இதெல்லாம் ஆஸ்திரேலியன் க்கு தெரியாமல் இருக்குமா......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலை விட புத்தர்கள் எவ்வளவோ மேல்.

Link to comment
Share on other sites

இது ஒருவகை வாழ்வியல் சுண்டல்.. லக் இருக்கிறவை வெல்லலாம்.

நாங்கள் இங்கிலாந்தில் ஆங்கிலையருக்கே வாய்சவடால் விடுவது, இது என் தாத்தன் பூட்டன் சொத்து. வட்டியுடன் அனுபவிப்பது எனது பிறப்புரிமை என...

Link to comment
Share on other sites

அது மட்டுமல்ல இலங்கை அகதிகள் என்ற போர்வையில் யுத்த வாசமே அறிந்திராத பலரும் வருகின்றார்கள் இலங்கை பாஸ்போர்ட் எடுத்து வரும் இந்திய தமிழர்கள்........உற்பட...

 

இந்த கப்பலில் சரிபாதி இந்தியர்களும் அகதி என்கிற போர்வையில் வர இடமிருக்கு.....

(நிறைய இந்தியர்களும் இலங்கையூடாக இலங்கை தமிழர் என்கிற போர்வையில்  2000களில்  கனடா வந்ததாக கேள்விபட்ட ஞாபகம்)

 

மேலே பனங்காய் சொன்னது மாதிரி...வருபவர்களை குறை சொல்ல முடியாது..ஆனால் வந்து ஏமாற போகிறார்கள் என்று வருத்தப்படலாம்....(அவுஸ்திரேலியா கனடா தான் வரவேற்ற நாடுகள்...இப்போது அவையும் கதவைடைக்க தொடங்கி விட்டன...)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகள் என்று வருவோரை திருப்பியனுப்பும் லிபரல் கட்சியின் கொள்கை மனிதவுரிமைகள் சாசனத்திற்கு விரோதமானது. இங்கிருந்துதான் எமது கருத்தாடல் ஆரம்பிக்கப்பட வேண்டுமே ஒழிய, எமது உணர்வுகளிலிருந்தல்ல.

 

போர்முடிந்து ஏறக்குறைய 5 ஆண்டுகள் ஆகிவிட்டபின்னரும் அகதிகள் என்று மக்கள் வருவது பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், போர் முடிந்தது என்ற சிங்கள அரசாங்கத்தின் அறிவிப்பினால் மட்டும் அங்கே தமிழருக்கு தற்போது எந்தவித அடக்குமுறைகளும் இல்லையென்கிற முடிவிற்கு நாம் எப்படி வந்து சேர்ந்தோம் என்று எனக்குப் புரியவில்லை.

 

சரி, வருபவர்கள், இந்தியாவிலிருந்து வருகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். இந்தியாவில் ஈழத் தமிழ் அகதிகள் 2009 போரின்பின்னர் போய்ச் சேரவில்லையென்று எவராலும் சொல்ல முடியுமா? சுண்டலுக்குத் தெரிந்திருக்குமோ தெரியாது, சிட்னியில் சில மாதங்களுக்கு முன்னர் பாஷன அபேவர்த்தனவும், தமிழ்நெட்டின் வன்னிச் செய்திச் சேகரிப்பாளரும் கலந்துகொண்ட மெளனிக்கப்பட்ட குரல்கள் குறும்பட நிகழ்வில் தான் தமிழ்நாட்டிற்கு வந்தபின்னரும் கூட சிங்கள் புலநாய்வுத்துரையும், இந்திய புலநாய்வுத்துறையும் தம்மை எப்படி பிந்தொடர்ந்தார்கள் என்றும், தாம் எத்தனைக் கஷ்ட்டங்களுக்கு மத்தியில் அங்கே வாழ்ந்து பின்னர் முடியாமல் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறியிருந்தார். சரி, அவரை விடுங்கள், இன்று தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் வாழும் ஈழத் தமிழருக்கு எல்லாவித சலுகைகளும், பொலீஸ் கெடுபிடியற்ற சுதந்திரமான வாழ்வும் மற்றைய இந்தியர்களைப் போலக் கிடைக்கிறது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? இல்லையென்றால், அவர்கள் வருவதில் என்ன தவறிருக்கிறது?

 

2009 இல் முடிவுற்றது வெறும் சடங்கிற்கான போர் மட்டுமே. ஆனால் இன்றுவரை தமிழர் தாயகத்தில் சிங்களவரின் திட்டமிட்ட அடக்குமுறையும், ஆக்கிரமிப்பும் தொடர்ந்துதான் வருகிறது. அதை இங்கிருப்பவர்கள் யாரும் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். சுண்டலுக்கு நினவிலிருக்கலாம் என்பதற்காக இதைச் சொல்கிறேன், 2009 இல் போர் முடிவடைந்த கையோடு, அப்போது எதிர்கட்சியாக இருந்த லிபரல் கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ஜூலி பிஷப் இலங்கையின் வடக்குக் கிழக்கிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பியவுடன் பாராளுமன்றத்தி தனது பயணம் தொடர்பான உரையொன்றை ஆற்றியிருந்தார். அதில் தமிழர்களுக்கு அங்கே எந்தவிதமான பிரச்சனையுமில்லை, அவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள், அகதிகளாக இடம்பெயர்வதற்கான எந்தத் தேவையுமில்லை என்று கூறியிருந்தார். அது பலரது கண்டனத்திற்கும் உள்ளானதோடு, ஆட்சியைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட லிபரல் கட்சியின் எதிர்கால அகதிகள் தொடர்பான நிலை என்னவென்பதையும் அப்போதே தெளிவாகக் காட்டிற்று.

 

அதுபோலவே, ஆட்சிக்கு வந்தவுடன் அகதிகள் தொடர்பான புதிய கொள்கையை வகுத்துக்கொண்டு, அகதிகளை எப்படியாவது தடுத்து நிறுத்துவதென்று செயற்பட்டு வருகிறது. இதற்காகவே, உலக நாடுகளால் போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கையரசாங்கத்திற்கு இரு ரோந்துக் கப்பல்களையும், பெருமளவு பணத்தையும் அது கொடுத்து உதவியது.

 

அகதிகளை தடுத்து நிறுத்துவது அல்லது திருப்பியனுப்புவதென்கிற லிபரல் கட்சியின் கொள்கையென்பது இனக்கொலையாளிகளுடன் சேர்ந்து வேலை செய்வதையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆகவே லிபரல் கட்சியின் அகதிகள் தொடர்பான கொள்கையை ஆதரிக்கும் சுண்டல், இனக்கொலையாளிகளுடனான லிபரலின் நட்பையும் ஆதரிக்கிறாரா என்று சொல்வது நல்லது.


கியூ ஜம்பேர்ஸ் (Queue Jumpers) என்று சகட்டுமேனிக்குக் குற்றம் சாட்டும் வெள்ளையினத்தவர்போல சுண்டல் பேசுவது கொடுமை. எல்லோரையும் போலவே நீங்களும் அகதிகளுக்கு விண்ணப்பித்துக் காத்திருந்து வாருங்கள் என்று சொல்கிறார்கள்.

 

அப்படிக் காத்திருந்து விண்ணப்பித்தாலும் சொல்வதுபோல அனுமதித்துவிடுவார்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது. அப்படி 10 அல்லது 15 வருடங்கள் காத்திருந்து அனுமதி கிடைப்பதற்கிடையில் விண்ணப்பித்தவர் உயிருடன் இருபார் என்பதற்கும் என்ன அத்தாட்சி வைத்திருக்கிறீர்கள் ?

வேலையும், கல்வியும் கேட்டு வருபவர்கள் காத்திருந்து வரட்டும். அதற்காக , உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவன் காத்திருந்து வரவேண்டும் என்று கேட்பது முட்டாள்த்தனம். அதை ஒரு தமிழரே சொல்வது வேதனை.

Link to comment
Share on other sites

The standard DIBP procedure will be to process their claims in the Manus Island facility. But if the asylum seekers opted to be returned to SL than Manus, chances are they would have been escorted/towed/transfered to SLN vessels for safety reasons and their boat will be destroyed due to quarantine issues. SLN would then hand them over to SL Immigration for investigation.

Below is a good read, specially the comments.

http://m.smh.com.au/federal-politics/political-news/tamil-asylum-seekers-handed-over-to-sri-lankan-navy-according-to-reports-20140701-zssnn.html

Mods - Sorry on mob device.

Link to comment
Share on other sites

Also heard the news two men who had adverse ASIO security assessments have received their Visas and will be released into the community after 5 years!

Not official yet though.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகதியாக வந்து புலி அடிக்குது,ஆமி அடிக்குது என சொல்லி பிரஜாவுரிமை பெற்று அடுத்த நாளே சிறிலன்காவுக்கு எல்லொரும் குடும்பமாக சென்ற புள்ளிவிபரங்கள் அவுஸ்ரேலியா அரசிடம் இருக்கின்றது....ஆரம்பகாலகட்டத்தில் இரண்டு வருடத்தில் பிரஜாவுரிமையை அவுஸ்ரெலியா கொடுத்தது....மூன்றாம் வருடம் சகல அகதியும் சிறிலங்காவுக்கு சென்றார்கள்...இதுவும் ஒரு காரணம் .....ஐரோப்பா நாடுகளில் குறைந்தது 5 வருடமாவது இருந்த பின்புதான் அகதி அந்தஸ்து பரிசீலனை செய்யப்படும் என நினைக்கின்றேன்......பல்ஸ்தீனம்,ஈராக் ,ஈரான் ஆப்காணிஸ்தான்.....எல்லோரும் அப்படித்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்திரேலியாவுக்கு மாணவர் விசாவில் சென்று பிறகு அசைலம் அடித்த எல்லோரையும் திருப்பி அனுப்ப வேண்டும். மாணவராக இத்தனை காசு கொடுத்து வரமுடிந்தவர்கள் எப்படி அகதியாயிருக்க முடியும்.

Link to comment
Share on other sites

அகதியாக வந்து புலி அடிக்குது,ஆமி அடிக்குது என சொல்லி பிரஜாவுரிமை பெற்று அடுத்த நாளே சிறிலன்காவுக்கு எல்லொரும் குடும்பமாக சென்ற புள்ளிவிபரங்கள் அவுஸ்ரேலியா அரசிடம் இருக்கின்றது....ஆரம்பகாலகட்டத்தில் இரண்டு வருடத்தில் பிரஜாவுரிமையை அவுஸ்ரெலியா கொடுத்தது....மூன்றாம் வருடம் சகல அகதியும் சிறிலங்காவுக்கு சென்றார்கள்...இதுவும் ஒரு காரணம் .....ஐரோப்பா நாடுகளில் குறைந்தது 5 வருடமாவது இருந்த பின்புதான் அகதி அந்தஸ்து பரிசீலனை செய்யப்படும் என நினைக்கின்றேன்......பல்ஸ்தீனம்,ஈராக் ,ஈரான் ஆப்காணிஸ்தான்.....எல்லோரும் அப்படித்தான்

 

இது அவுஸ்ரேலியாவிலை மட்டும் இல்லை ஐரோப்பா கனடா எல்லா இடத்திலையும் இதுதான் கதை... !!

 

கிட்டடியில் பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் மூலம்  நாலுவருட விசா வளங்கப்பட்ட ஒருவரின்  விசாவை பார்த்தேன்...   அதில் இலங்கைக்கு போய் வருவது மட்டும் இல்லை  அலுவலக ரீதியில்கூட  தொடர்புகளை பேணியது கண்டு பிடிக்கப்பட்டாலும்  விசா உரிமை பறிக்கப்படும் எண்று எழுதி இருந்தது... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைகாலதில் இந்தியர் பலருக்கு அவுஸ்ரேலியா விசா கொடுத்துள்ளது அத்துடன் பிரஜாவுரிமையும் பலருக்கு கொடுத்துள்ளது.....கொடுத்துக்கொண்டுமிருக்கின்றது.

Link to comment
Share on other sites

எனது நிறுவனத்தில் பெயிண்டிங் வேலை செய்யும் இலங்கை ஆட்கள் பிள்ளை குட்டி எல்லாம் இழுத்துக் கொண்டு அகதியாக வாழும் மாவட்டத்திற்கு ஓடினார்கள் 7ம் தேதி கையெழுத்து வைக்க வேண்டும் என்று....
 இங்கு வந்து இருபது வருடம் ஆகிவிட்டது இன்னும் இவர்கள் அகதிகளாக தான் வாழ்கிறார்கள்... அப்பாவிற்கு எந்த குடியுரிமையும் இல்லை மகன் இங்கு பிறந்தவன் அடிக்கடி போக சொல்லி கேட்கிறார்கள் இலங்கைக்கு ... இங்கிருந்து இலங்கை சென்று நிலையான வாழ்க்கை வாழ  உறுதி இல்லை.. வவுனியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் சொந்தங்கள் வசதியாக தான் உள்ளார்கள் ஆனால் உதவி கேட்டு எந்த பலனும் இல்லை...
 இரவு பன்னிரண்டு  மணிக்கு  ஊருக்கு கிளம்பும் போது ஒரு பெரியவர் சொன்னார் எங்க வாழ்க்கை  இப்படி தான் குஞ்சே விடிவு காலமே பொறக்காது...
 
 வாழ்க்கையெல்லாம்  இவர்கள் இப்படியே இருந்துவிட்டு செத்து போகட்டுமா சுண்டல் ?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமல்ல இலங்கை அகதிகள் என்ற போர்வையில் யுத்த வாசமே அறிந்திராத பலரும் வருகின்றார்கள் இலங்கை பாஸ்போர்ட் எடுத்து வரும் இந்திய தமிழர்கள்........உற்பட...

 

இது 100% உண்மை
 
இதை நான் என் கண்கூடக கண்டேன். ஒரு நாள் லண்டனில் நான் போகும் இன்டெர்னெட் காபேயில் ஒரு இந்திய தமிழரை சுற்றி பலர் நின்றுகொண்டு இருந்தார்கள், எல்லேரும் இந்திய தமிழர்கள், நடுவில் இருந்தவர் ஒவ்வோருவரையும் விசாரித்து, அதற்கு எற்றார்போல் கணனியில் கேஸ் எழுதிக் கொடுத்து கொண்டு இருந்தார். அதற்கு எற்ப பணம் வசூலித்திக்கொண்டார்,
 
இவர்கள் ஒருபோதும் போரின் வாசனையை அறியாத தமிழ்னாட்டு தமிழர்கள், தாங்களை இலங்கை அகதிகளாக அறிமுகப்படுதி போலியாக அரசில் தஞ்சம் கோருகிரார்கள். இத்தகையவர்கள் உடனடியாக நாடுகடத்தப்ப்ட வேண்டும், அதே சமயம் உண்மையான அகதிகள் வடக்கு/கிழக்கில் உள்ளார்கள் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.