Jump to content

அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சிலவருடங்களில் எல்லா வெள்ளை நாடுகளும் இதை (அகதிகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சட்டங்களை) மாற்றி அமைக்க போகிறார்கள் :)

அதற்கான முன்னேற்ப்பாடு தான் இது....

இது எல்லாம் முஸ்லீம்களால் வந்தது --அவர்கள் தான் குடியேறும் நாடெல்லாம் முக்காடோடு திரிந்து எல்லாரையும் கலவரப்படுத்துகிறார்கள்..சீக்கியர்கள் தொப்பியோடு திரிந்தாலும் தமது சமயத்தை மற்றவர்கள் மேல் திணிப்பது இல்லை....ஆனால் முஸ்லீம்கள் உலகை புனிதமாக்குகிறோம் என்று எல்லாருக்கும் பிரச்னை

 

1- தெருவுக்கு தெரு கோயிலும் மசூதியும் முளைத்தால்...வெள்ளைகள் எவ்வளவு காலம் தான் பொறுக்க முடியும் :)

 

2- எவ்வளவு காலத்துக்கு...எத்தனை பேருக்கு????

இங்குள்ளவர்களுக்கு 40%வரி விதித்து வருபவர்களுக்கு செலவு செய்வதென்றால்....எத்தனை பேருக்கு செய்ய சொல்லுகிறீர்கள்????

 

1-  எங்கள் ஊரில் சேர்ச்சுக்களை  அமைத்தது  எவ்வாறு??

யாரின் அனுமதியுடன்?

அவற்றை உடைக்கத்தயாரா இவர்கள்???

 

2- ஐநா ஒப்பந்தப்படி இவர்களது பணம் செலவிடப்படுவதில்லை

இவர்கள் அதில் கையெழுத்துப்போட்டு

ஐநாவால் ஒதுக்கப்பட்ட பணத்திலேயே செலவு செய்கிறார்கள்.

 

உண்மையில் இவர்களால் அகதிகளை  ஏற்கமுடியாது என்றால்

அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகலாம்

அதைவிடுத்து

பணத்தையும் எடுத்துக்கொண்டு

அகதிகளுக்கு உதவுகின்றோம் என நடித்துக்கொண்டு

அகதிகள் மேல்  வேட்டை நாய்கள் மாதிரி  நடந்து கொள்வது பெரும்  மிருகத்தனமான செயல்.

 

இவர்கள் தேர்தல்களில் வெல்ல 

இந்த அகதிகளை  பகடைக்காய்களாக பாவிப்பதும்

தமது சுயலாபங்களுக்காக 

முன்பு வந்தவர்கள் அவர்களை  கேவலமாக நடாத்துவதும் வெறுக்கப்படக்கூடிய  செயல்களன்றி  வேறொன்றுமில்லை. :(  :(  :(

Link to comment
Share on other sites

  • Replies 247
  • Created
  • Last Reply

ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களைக் கொன்ற சிங்கள அரசுடன் துடுப்பாட்டம் விளையாடிவருகிறது அவுஸ்திரெலியா, இங்கிலாந்து நியூசிலாந்து. ஆனால் முகாம்பே அரசு வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நடந்ததினால்(இத்தனைக்கும் ஒரு வெள்ளையும் சாகவில்லை) சிம்பாவேக்கு எதிரான துடுப்பாட்டத்தினைப் புறக்கணித்தது அவுஸ்திரெலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து. சிம்பாவேயில் இருந்து படகுகளில் வெள்ளைகள் வந்தால் அவுஸ்திரெலியா என்ன செய்யும்?

 

 

நிச்சயமாக ஏற்கும். அதற்கு பல கதைகளை தமக்கு சாதகமாக ஊடகங்களும் அரசியல்வாதிகளும் புனைவார்கள். தாங்கள் தான் சரி  மற்றவர்கள் பிழை என்பதில் வெள்ளையர்களுக்கு நிகர் அவர்கள் தான்.

Link to comment
Share on other sites

1- எங்கள் ஊரில் சேர்ச்சுக்களை அமைத்தது எவ்வாறு??

யாரின் அனுமதியுடன்?

அவற்றை உடைக்கத்தயாரா இவர்கள்???

2- ஐநா ஒப்பந்தப்படி இவர்களது பணம் செலவிடப்படுவதில்லை

இவர்கள் அதில் கையெழுத்துப்போட்டு

ஐநாவால் ஒதுக்கப்பட்ட பணத்திலேயே செலவு செய்கிறார்கள்.

உண்மையில் இவர்களால் அகதிகளை ஏற்கமுடியாது என்றால்

அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகலாம்

அதைவிடுத்து

பணத்தையும் எடுத்துக்கொண்டு

அகதிகளுக்கு உதவுகின்றோம் என நடித்துக்கொண்டு

அகதிகள் மேல் வேட்டை நாய்கள் மாதிரி நடந்து கொள்வது பெரும் மிருகத்தனமான செயல்.

இவர்கள் தேர்தல்களில் வெல்ல

இந்த அகதிகளை பகடைக்காய்களாக பாவிப்பதும்

தமது சுயலாபங்களுக்காக

முன்பு வந்தவர்கள் அவர்களை கேவலமாக நடாத்துவதும் வெறுக்கப்படக்கூடிய செயல்களன்றி வேறொன்றுமில்லை. :(:(:(

அவுஸ் அரசாங்கம் செய்ததை நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத அதேவேளை இவர்கள் எமது மக்கள் என்பதால் இவர்களைப்பற்றிக் கதைக்கிறோம். போனமாதம் 72 ஆப்கானியர் மற்றும் ஈரானியருடன் வந்த படகு திருப்பி அனுப்பப்பட்டும் அவர்கள் பற்றிய எது விதமான செய்திகளும் தெரியவில்லை. இதுபற்றி எதுவிதமான ஊடகங்கலுக்கும் தகவல் கிடைக்கவில்லை. அவர்களும் வாயை திறக்கவில்லை. தனப் படகு போன்ற மற்றைய படகில் இருந்த 50 பேருக்கும் என்ன நடந்தது என்று யாராவது கவலைப்பட்டார்களா? உயிருடன் இருந்தாலே பெரிய விடயம். மன்னிக்க வேண்டும் விசுகு அண்ணா, ஐ.நா ஒரு செப்புக் காசு கூட தருவது இல்லை என்பதையும், வரிகட்டுபவர்களே செலவுகளை சுமக்கிறார்கள் எனவும் என்னால் உறுதிப்படுத்த முடியும். தமிழர்கள் பலருக்கும் லிபரலைப் பிடிக்காத போதும் போன தேர்தலிலே லிபரளுக்கே வாக்குப் போட்டார்கள், காரணம் லிபரல் வந்தால் பொருளாதாரம் மாறும் எனப் பலரும் நினைத்தார்கள் ஆனால் பல விடயங்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

Link to comment
Share on other sites

கப்பலால் வந்தவர்களுடன் போய் பேசவே மாட்டார்கள் பிறகு எப்படி பணம் அனுப்புவார்கள்

  

நான் அறிய சிட்னியில் இருக்கும் ஒரு பெண் மட்டுமே விலாவூட் அங்க இங்க எண்டு சாப்பாடு கூட சமைச்சுக் கொண்டு போய்க் குடுக்கிறவர். அவுசில் இருக்கும் எத்தனைபேர் அகதி முகாம்களில் இருப்பவர்களை, அல்லது முகாம்களில் இருந்து வந்தவர்களைப் போய்ப் பார்த்து இருக்கிறோம்?

இன்னொரு புது பழக்கமும் தொடங்கி இருக்கு...கப்பலால் வந்தவர்களின் கையறு நிலையை பயன் படுத்தி சுரண்டவும் சிலர் வெளிகிட்டிருகிரார்கள் (குறைந்த ஊதியத்துக்கு வேலை வாங்கி.....)

தமிழர்களுக்கு தமிழர்கள் செய்வது போல்...நிச்சயமாக மற்ற இனமும் தங்கள் இனத்தவர்களுக்கு இதையே செய்வார்கள்....

மிகவும் உண்மை. வெளியில் தற்காலிக விசாவில் வந்தவர்கள் சட்டப்படி வேலை செய்ய முடியாது. அவர்களும் cash in hand இக்கு வெளியால் வேலை செய்கிறார்கள். மணித்தியாலத்துக்கு 6AUD அல்லாது $8 இக்கு மேலே இவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். பிடித்தால் அடுத்த விமானத்திலேயே breach of visa condition என்று அனுப்ப முடியும். இவர்களைக்கொண்டு சில தமிழ்க் கடைகளும் வேலை வாங்குவிப்பது. எனக்குத் தெரிந்த பலரின் வீடுகளில் புல்லு வெட்டுவது வீட்டுப் பூங்கா வேலைகள் என்று பல செய்கிறார்கள் நல்ல நல்ல விடயம் இப்படி வந்தவர்களின் கைச் செலவுக்கு காசு கொஞ்சமாவது கிடைக்கிறது. உண்மையான garderner ஒருத்தனைப் பிடித்தால் பல மடங்கு செலவாகும்.

Link to comment
Share on other sites

இந்த அகதி விண்ணாணமெல்லாம்.. மேற்கு நாடுகள் உலக அரங்கில் தாங்கள் செல்வாக்கு செலுத்த எடுத்துக்கொண்ட விடயங்களாகவே நான் பார்க்கிறேன். சோவியத் யூனியன், சீனா, தற்போதைய ரஷ்யா இவற்றை உலக அரங்கில் ஜனநாயக விழுமியங்கள் அற்றவர்களாக காட்டுவதற்கு இந்த அகதி உள்ளெடுப்பு உதவுகிறது. 

 

மேலும் வியட்நாம் போரின் பின்னர் ஏராளமான வியட்நாம் அகதிகள் அமெரிக்காவுக்கு வந்தார்களாம். அதுபோல ஈராக் போரின் பின்னும் ஈராக்கியர்கள் வந்தார்கள். ஈரானியர்களும் வந்துள்ளார்கள். இவர்கள் அமெரிக்காவின் கைப்பாவைகளாக செயற்படுவது கண்கூடு.

 

ஈழப்பிரச்சினையிலும் பல அமைப்புகள் மேற்குலக சார்பு நிலை எடுத்து அரசியல் செய்கிறோம் என்று சொல்வது வாடிக்கை.

 

அகதிகள் உருவாவதே இந்த மேற்கு நாடுகளின் தான்தோன்றித்தனமான, பேராசை பிடித்த, மற்றவர்களை அடக்கி ஆள மேற்கொள்ளப்படும்  நடவடிக்கைகளால் தானே.....

Link to comment
Share on other sites

  

மிகவும் உண்மை. வெளியில் தற்காலிக விசாவில் வந்தவர்கள் சட்டப்படி வேலை செய்ய முடியாது. அவர்களும் cash in hand இக்கு வெளியால் வேலை செய்கிறார்கள். மணித்தியாலத்துக்கு 6AUD அல்லாது $8 இக்கு மேலே இவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். பிடித்தால் அடுத்த விமானத்திலேயே breach of visa condition என்று அனுப்ப முடியும். இவர்களைக்கொண்டு சில தமிழ்க் கடைகளும் வேலை வாங்குவிப்பது. எனக்குத் தெரிந்த பலரின் வீடுகளில் புல்லு வெட்டுவது வீட்டுப் பூங்கா வேலைகள் என்று பல செய்கிறார்கள் நல்ல நல்ல விடயம் இப்படி வந்தவர்களின் கைச் செலவுக்கு காசு கொஞ்சமாவது கிடைக்கிறது. உண்மையான garderner ஒருத்தனைப் பிடித்தால் பல மடங்கு செலவாகும்.

 

இதை நல்ல விடயம் என்று சொல்ல மாட்டேன்....மணித்தியாலத்துக்கு $15-20 கொடுத்தால் சொல்லலாம் நல்ல விடயம் என்று...ஆனால் 6-8$ மிக மிக அடிமட்ட சுரண்டல்..இந்த வேலைகளின் போது இவர்கள் காயப்பட்டால் அவர்களின் நிலை என்ன ஆகும்.... பணத்தை கட்டாயம் அதிகமாக கொடுக்க வேண்டும்..இல்லை என்றால் இதை நாம் நியாய படுத்த கூடாது....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

நான் அறிய சிட்னியில் இருக்கும் ஒரு பெண் மட்டுமே விலாவூட் அங்க இங்க எண்டு சாப்பாடு கூட சமைச்சுக் கொண்டு போய்க் குடுக்கிறவர். அவுசில் இருக்கும் எத்தனைபேர் அகதி முகாம்களில் இருப்பவர்களை, அல்லது முகாம்களில் இருந்து வந்தவர்களைப் போய்ப் பார்த்து இருக்கிறோம்?

மிகவும் உண்மை. வெளியில் தற்காலிக விசாவில் வந்தவர்கள் சட்டப்படி வேலை செய்ய முடியாது. அவர்களும் cash in hand இக்கு வெளியால் வேலை செய்கிறார்கள். மணித்தியாலத்துக்கு 6AUD அல்லாது $8 இக்கு மேலே இவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். பிடித்தால் அடுத்த விமானத்திலேயே breach of visa condition என்று அனுப்ப முடியும். இவர்களைக்கொண்டு சில தமிழ்க் கடைகளும் வேலை வாங்குவிப்பது. எனக்குத் தெரிந்த பலரின் வீடுகளில் புல்லு வெட்டுவது வீட்டுப் பூங்கா வேலைகள் என்று பல செய்கிறார்கள் நல்ல நல்ல விடயம் இப்படி வந்தவர்களின் கைச் செலவுக்கு காசு கொஞ்சமாவது கிடைக்கிறது. உண்மையான garderner ஒருத்தனைப் பிடித்தால் பல மடங்கு செலவாகும்.

 

ஐரோப்பாவில் இதை விட கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கின்றன.....இருந்தும் அவர்களின் மனிதாபிமானம் ஒன்றே எம்மை தூக்கி நிறுத்துகின்றது. 
 
இஞ்சையிருக்கிற எங்கடை ரமில் அரச மொழிபெயர்ப்பாளர்களும் அகதிகள் விசயத்திலை வலு கண்டிஷன் போடுற ஆக்கள் கண்டியளோ....ஆனால் தங்கடை விசயத்திலையும் காசிலையும் குறியாய் இருப்பினம் கண்டியளோ...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1- எங்கள் ஊரில் சேர்ச்சுக்களை அமைத்தது எவ்வாறு??

யாரின் அனுமதியுடன்?

அவற்றை உடைக்கத்தயாரா இவர்கள்???

2- ஐநா ஒப்பந்தப்படி இவர்களது பணம் செலவிடப்படுவதில்லை

இவர்கள் அதில் கையெழுத்துப்போட்டு

ஐநாவால் ஒதுக்கப்பட்ட பணத்திலேயே செலவு செய்கிறார்கள்.

உண்மையில் இவர்களால் அகதிகளை ஏற்கமுடியாது என்றால்

அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகலாம்

அதைவிடுத்து

பணத்தையும் எடுத்துக்கொண்டு

அகதிகளுக்கு உதவுகின்றோம் என நடித்துக்கொண்டு

அகதிகள் மேல் வேட்டை நாய்கள் மாதிரி நடந்து கொள்வது பெரும் மிருகத்தனமான செயல்.

இவர்கள் தேர்தல்களில் வெல்ல

இந்த அகதிகளை பகடைக்காய்களாக பாவிப்பதும்

தமது சுயலாபங்களுக்காக

முன்பு வந்தவர்கள் அவர்களை கேவலமாக நடாத்துவதும் வெறுக்கப்படக்கூடிய செயல்களன்றி வேறொன்றுமில்லை. :(:(:(

விசுகு,

அகதிகளை பாதுகாக்க யாருக்கும் ஐநா பணம் தருவதில்லை. இங்கே ஒப்பந்தம் என்பது Convention/treaty என்றவகையில் பாவிக்கப்படும் சொல். சாசனம் என்பதே சரியான பதம். நீங்கள் ஒப்பந்தத்தை contract என்று பிழையா விளங்கி கொண்டுள்ளது போல் தெரிகிறது.

எல்லா முன்னேறிய நாடுகளும் தம் சொந்த் செலவில்தான் அகதிகளை பராமரிக்கிறன.

நாந்தான், தும்பளையான், சுண்டல்,

தனது நாட்டை ,அதன் எல்லையை குடிவரவு வீதத்தை கட்டுப்படுத்தும் உரிமை அவுஸ்ரேலியா உட்பட எல்லா நாட்டுக்கும் உண்டு. 300 வருடமா எம்மை ஆண்டார்கள் தானே என்பதெல்லாம் மொக்குக்கதை.

ஆனால்,

இங்கே கேள்வி அதுவல்ல. எந்த வித சட்ட விசாரணையும் இன்றி due process இன்றி கடலில் மறித்து யாரிடம் இருந்து தப்பி வந்தார்களோ அவர்களிடமே மீள ஒப்படைத்ததுதான். இது ஆப்கானியினரோ தமிழரோ யாருக்கு நடந்தாலும் குற்றமே.

அவுஸ்ரேலியா ஒன்றில் (இலங்கை, இந்தியா போல) 1951 அகதிகள் சாசனத்தில் தான் இட்ட கையெழுத்தை மீளப்பெற வேண்டும் அல்லது சாசனத்து ஏற்றபடி அகதிகளிடம் விசாரணை செய்து உண்மையான வர்களை ஏற்று மிகுதியினரை நாடு திருப்ப வேண்டும்.

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பதுபோல், அகதிகள் சாசனத்தில் ஒப்பமிடுவதால் வரும் நர்பெயரும் வேண்டும் அகதிகல் நாட்டுக்கு வரவும் கூடாது என்னும் அவிசின் இரட்டை நிலைப்பாடே கண்டனத்துகுரியது.

You can't have the cake and eat it at the same time.

Link to comment
Share on other sites

இலங்கையில், நாம் தமிழர்கள், மூண்றாந்தர பிரஜைகள். (ஈனப்பிறவிகள்). எமக்கு வேலைவாய்ப்புகளோ அரிது. அதனிலும் அரிது மேலுயர்வு. வியாபாரங்கள் செய்ய எம்மிடம் முதல்களும் இல்லை. இருந்து வியாபாரங்கள் செய்தாலும் சிங்கவனுக்கு கப்பம் கட்டி தாளாது. இலங்கையில் எம் மீது பொருளாதார தடையுள்ளது. இலங்கை தமிழர்கள் யாவரும் வெளிநாடுகளில் பொருளாதார தஞ்சம் பெற உரிமையுள்ளது. ஏனனில் நாம் ஈனப்பிறவிகள்...Simples as that. Nothing could explain it more.

சிலபேரின் கதைகளை பார்த்தால் வெள்ளைக்காரனே சிரிப்பான், இதுகளும் ஒரு ஆக்களெண்டு கதைக்க வெளிக்கிட்டுதுகள் எண்டு. எதோ ஒரு வழியா வந்தமா தின்டாமா செத்தமா என கிடக்காமல் உங்களுக்கு என்னத்துக்கய்யா வெள்ளைக்காரன் பொலிட்டிக்ஸ்? போங்கப்பா போயி ஆகிற வேலைய பாருங்க!! உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, அதுதான் இந்த தினவெடுத்த விண்ணாணம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில், நாம் தமிழர்கள், மூண்றாந்தர பிரஜைகள். (ஈனப்பிறவிகள்). எமக்கு வேலைவாய்ப்புகளோ அரிது. அதனிலும் அரிது மேலுயர்வு. வியாபாரங்கள் செய்ய எம்மிடம் முதல்களும் இல்லை. இருந்து வியாபரன் செய்தாலும் சிங்கவனுக்கு கப்பம் கட்டி தாளாது. இலங்கையில் எம் மீது பொருளாதார தடையுள்ளது. இலங்கை தமிழர்கள் யாவரும் வெளிநாடுகளில் பொருளாதார தஞ்சம் பெற உரிமையுள்ளது. ஏனனில் நாம் ஈனப்பிறவிகள்...

சிலபேரின் கதைகளை பார்த்தால் வெள்ளய்க்காறனே சிரிப்பான், இதுகளும் ஒரு ஆக்களெண்டு கதைக்க வெளிக்கிட்டுதுகள் எண்டு. எதோ ஒரு வழியா வந்தமா தின்டாமா செத்தமா என கிடைக்காமல் உங்களுக்கு என்னத்துக்கய்யா வெள்ளைக்காரன் பொலிட்டிக்ஸ்? போங்கப்பா போயி ஆகிற வேலைய பாருங்க!! உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, அதுதான் இந்த தினவெடுத்த விண்ணாணம்..

 

 

பனங்காய்! கட்டுநாயக்க எயாப்போட்டிலை இறங்கி நிண்டு தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் எண்டு சொல்லிப்பாரரும்  அதுக்குப்பிறகு தெரியும் தமிழருக்கு என்ன பிரச்சனை எண்டு....

Link to comment
Share on other sites

பனங்காய்! கட்டுநாயக்க எயாப்போட்டிலை இறங்கி நிண்டு தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் எண்டு சொல்லிப்பாரரும் அதுக்குப்பிறகு தெரியும் தமிழருக்கு என்ன பிரச்சனை எண்டு....

அவ்வளவு ஏன்? ஏதாவது தமிழ் வார்த்தைகள் அடங்கிய டீசேர்ட்டை போட்டுக்கொண்டு போய் பாருங்கோவான் பார்ப்பம்

Link to comment
Share on other sites

இதை நல்ல விடயம் என்று சொல்ல மாட்டேன்....மணித்தியாலத்துக்கு $15-20 கொடுத்தால் சொல்லலாம் நல்ல விடயம் என்று...ஆனால் 6-8$ மிக மிக அடிமட்ட சுரண்டல்..இந்த வேலைகளின் போது இவர்கள் காயப்பட்டால் அவர்களின் நிலை என்ன ஆகும்.... பணத்தை கட்டாயம் அதிகமாக கொடுக்க வேண்டும்..இல்லை என்றால் இதை நாம் நியாய படுத்த கூடாது....

நிச்சயமாக உழைப்புச் சுரண்டல் தான். நான் அதனைச் சரி என்று ஒருபோதும் கூறவில்லை. இப்படி வேலை செய்பவர்களை ஏன் செய்யுறியள், கூடக் காசு கேளுங்கோவேன் என்று சொன்னாலும் கூடக் காசு கேட்டால் வேறயாருக்கும் வேலை போய்விடும் என்பதே அவர்கள் கூறும் விடை. சட்ட விரோதம் என்பதால் அவர்களுக்கும் ஒன்றும் செய்ய முடியாத நிலை. இதனால் தான் something is better than nothing என்ற பொருளில் கூறினேனே ஒழிய அதனை நியாயப்படுத்த முயலவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு ஏன்? ஏதாவது தமிழ் வார்த்தைகள் அடங்கிய டீசேர்ட்டை போட்டுக்கொண்டு போய் பாருங்கோவான் பார்ப்பம்

 

Download_zps919547bf.jpg

இப்பிடி போட்டுக்கொண்டு போனால்........

Link to comment
Share on other sites

இன்னும் சிலவருடங்களில் எல்லா வெள்ளை நாடுகளும் இதை (அகதிகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சட்டங்களை) மாற்றி அமைக்க போகிறார்கள் :)

அதற்கான முன்னேற்ப்பாடு தான் இது....

இது எல்லாம் முஸ்லீம்களால் வந்தது --அவர்கள் தான் குடியேறும் நாடெல்லாம் முக்காடோடு திரிந்து எல்லாரையும் கலவரப்படுத்துகிறார்கள்..சீக்கியர்கள் தொப்பியோடு திரிந்தாலும் தமது சமயத்தை மற்றவர்கள் மேல் திணிப்பது இல்லை....ஆனால் முஸ்லீம்கள் உலகை புனிதமாக்குகிறோம் என்று எல்லாருக்கும் பிரச்னை

தெருவுக்கு தெரு கோயிலும் மசூதியும் முளைத்தால்...வெள்ளைகள் எவ்வளவு காலம் தான் பொறுக்க முடியும் :)

எவ்வளவு காலத்துக்கு...எத்தனை பேருக்கு????

இங்குள்ளவர்களுக்கு 40%வரி விதித்து வருபவர்களுக்கு செலவு செய்வதென்றால்....எத்தனை பேருக்கு செய்ய சொல்லுகிறீர்கள்????

மிகவும் உண்மை. முஸ்லீம்களால்தான் பல சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதனை நான் முன்பும் கூறியிருக்கிறேன். அண்மையில் இங்கிலாந்து கடவுச் சீட்டுடன் தீவிரவாதப் பயிற்சிகளில் பலர் ஈடுபட்டு கைதானதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த நிலை அவுஸிட்கும் வந்திருக்கும். குறிப்பாக ஆப்பகானிஸ்தான் ஈரான் கிராமங்களில் இருந்து வருபவர்கள் மிகவும் கடும்போக்கு வாதிகள். மனுஸ் நவ்று தீவுகளிலே கடந்த வருடம் ஏற்பட்ட ஒரு பில்லியன் டாலர்கள் பெறுமதியான சொத்து இழப்புக்கும் இவர்களே காரணமானவர்கள். கட்டட வசதிகளை எரித்து அழித்தால் அவர்களை அவுசினுள் மாற்றுவார்கள் என்பது அவர்களது நினைப்பு. தற்போது கூடாரங்களில் குந்திக்கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Download_zps919547bf.jpg

இப்பிடி போட்டுக்கொண்டு போனால்........

 

உந்த டிசேர்ட் சிங்கமிருப்பதால் சிங்களவனுக்கு சப்போர்ட் :D .....புலிப் படம் போட்டு புலி பசித்தாலும் புல்லை திண்ணாது,என போடவேணும் :D

Link to comment
Share on other sites

ஒட்டு மொத்த ஈழத்தமிழ் சமுகத்தையும் தங்கள் ஆசை வார்த்தைகள் மூலமும் பசப்பு வார்த்தைகள் மூலமும் அகதி சமூகமாக்க நினைக்கும் இவர்களின் சிடிசன்ஷிப் எல்லாத்தையும் கான்செல் பண்ணிட்டு திருப்பி அனுப்பிடணும் ஊருக்கு.....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டு மொத்த ஈழத்தமிழ் சமுகத்தையும் தங்கள் ஆசை வார்த்தைகள் மூலமும் பசப்பு வார்த்தைகள் மூலமும் அகதி சமூகமாக்க நினைக்கும் இவர்களின் சிடிசன்ஷிப் எல்லாத்தையும் கான்செல் பண்ணிட்டு திருப்பி அனுப்பிடணும் ஊருக்கு..... :D

 

முதலில்...    ஸ்ரீஇலாங்காவுக்கு போகும் சுண்டலுக்கு.

ரிக்கற் இலவசம். :D  :lol:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நான் இலங்கையில் இருக்கும் உறவுனர்களை அகதிகளா வரும்படி ஊக்குவிக்கலையே .... இதெல்லாம் தாங்களும் அகதியா வந்ததும் பத்தாமல் அங்க இருக்கிற சனத்த உசுப்பி விடுற ஆக்களுக்கு........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படகுகளில் வந்தவர்களில் குறைந்தது 11 பேராவது இலங்கை அரசபடைகளால் சித்திரவதைக்கு ஆளானவர்கள் என்று சொல்லப்படுகின்றது.

அவர்களை இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைத்து மனிதாபிமானத்தைக் காக்கும் அவுஸ்திரேலியா அரசுக்கு ஆதரவளிக்கும் தமிழர்கள் அவுஸில் வந்து காடைத்தனம் செய்யும் தமிழர்களை விட உயர்ந்தவர்கள் அல்ல.
 

Australia in row over boats carrying Tamil asylum seekers

_76064067_146655193.jpg
Australia says it is trying to deter asylum seekers from making dangerous sea voyages


Australia is refusing to comment on the fate of more than 200 Tamil asylum seekers reportedly intercepted at sea to the north-west of the country.

It is believed two boats carrying the asylum seekers were stopped by Australian authorities in the Indian Ocean and that some passengers were handed over to the Sri Lankan navy.

Refugee campaigners say it is a violation of international law.

They say at least 11 of those on board had been tortured in Sri Lanka.

Australia has been taking a tough approach on asylum seekers who try to reach the country by perilous sea journeys.

Hundreds of would-be migrants have died trying to make their way to Australia by boat in recent years.

The government has made no comment for what it says are "operational reasons" and will neither confirm nor deny the existence of the two boats carrying Tamils from Sri Lanka, says the BBC's Phil Mercer in Sydney.

But Australian media say that some have already had their refugee claims rejected and have been transferred to the Sri Lankan navy, he adds.

Forcing asylum seekers back to their country of origin without properly investigating their claims is a flagrant breach of the Refugee Convention and international law, the Refugee Council of Australia said.

Chief executive Paul Power said: "For asylum seekers, this is a matter of life and death, particularly in Sri Lanka which has a long history of political violence on a scale unimaginable to Australians."

Ministers say, however, that Australia is upholding its international obligations.

Protester in Sydney. 28 July 2013 The plight of refugees is a contentious issue in Australia
Tamil Refugee Council spokesman Aran Mylvaganam said he had spoken to relatives of some of those on the boats and that at least 11 had been arrested by Sri Lanka's intelligence forces "and had been tortured".

The UN refugee council earlier this week expressed "profound concern" about Australia's handling of the asylum seekers.

It has been six months since a vessel carrying refugees reached Australia after the military was called in to turn boats around.

Under current Australian policy, most asylum seekers who try to make their way to Australia by boat are sent to detention camps in Papua New Guinea or Nauru. If found to be refugees, they will be resettled there, not in Australia.

Australia says its asylum policy - which is also widely believed to involve towing back boats to Indonesian waters - is aimed at saving lives.

Our correspondent says stopping refugee boats from reaching the country was one of the main campaign pledges of Prime Minister Tony Abbott.

Sri Lanka has been under heavy international pressure over alleged human rights violations during the final phase of the war against Tamil separatists which ended in 2009.

Rights groups say Tamils still face violence at the hands of the military.


http://www.bbc.co.uk/news/world-asia-28173516

Link to comment
Share on other sites

//Australia says it is trying to deter asylum seekers from making dangerous sea voyages//

ஆடு நனையுது எண்டு ஓநாய் அழுத கதைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் பிரித்தானியர்கள் வருகைக்கு முன்னர் மனிதர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை என்ற தொனிப்பட கூறும் அவுஸ்திரேலிய பிரதமர் அங்கு பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடி மக்களை அவமதித்துள்ளார். இப்படியானவர் தமிழர்கள் விடயத்தில் சிங்கள அரசுடன் சேர்ந்து செயற்படுவது ஒன்றும் ஆச்சரியமல்ல.

Tony Abbott criticised for "unsettled" Australia remark

Australia's Prime Minister Tony Abbott has been criticised for saying that Australia was "unsettled" before the British arrived.

He said on Thursday night that Australia owes its existence to the British, as it was previously "unsettled or scarcely settled".

He was answering a question on foreign investment at a Melbourne conference.

An indigenous leader said the comments were offensive and his chief indigenous adviser called them "silly".

Mr Abbott was talking about the importance of foreign investment to Australia when he said: "I guess our country owes its existence to a form of foreign investment by the British government in the then unsettled, or scarcely settled, Great South Land."

Mr Warren Mundine, chairman of the prime minister's indigenous advisory council, said it was "a silly thing to say."

He told the Sydney Morning Herald: "I just thought it was a bizarre comment."

'Occupation'

Aboriginal opposition senator Nova Peris told local media that Mr Abbott's comments were "highly offensive, dismissive of indigenous peoples and simply incorrect".

She said British settlement was not foreign investment, but "occupation".

However, Tony Wright, national affairs editor for The Age newspaper, argued that Mr Abbott's comment was "factually correct in law".

Mr Wright pointed out that the High Court had ruled in a 1992 case that the settlement of Australia refers to the arrival of Europeans, adding that Mr Abbott's problem was that by using the word "unsettled", he "made it possible for his critics to assume he meant uninhabitated."

Mr Abbott is no stranger to controversy. He sparked a national furore in May when he winked and smiled during a radio chat with a caller who was upset about his budget proposals.

He has also been accused of making sexist remarks in the past. In 2012 former prime minister Julia Gillard called him a misogynist - a label he has strongly rejected.

http://www.bbc.co.uk/news/world-asia-28156729

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் பிரித்தானியர்கள் வருகைக்கு முன்னர் மனிதர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை என்ற தொனிப்பட கூறும் அவுஸ்திரேலிய பிரதமர் அங்கு பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடி மக்களை அவமதித்துள்ளார். இப்படியானவர் தமிழர்கள் விடயத்தில் சிங்கள அரசுடன் சேர்ந்து செயற்படுவது ஒன்றும் ஆச்சரியமல்ல.

 

 

ஏற்கனவே அவுஸ் அரசு இந்தக் கப்பல் அகதிகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசிற்கு பல உதவிகளைச்  செய்தது. பயனற்ற நிலையில் இப்படி மனிதாபிமானமற்ற செயல்களைத் தொடர்கின்றது.

சிங்களம் எப்படி இலங்கை முழுவதையும் தனக்கென உரிமை கொண்டாடுகின்றதோ அதே போல அவுஸின் பிரதமரும் அவுஸின் வரலாறு தனக்கு மட்டும் தான் தெரியும் எனக் கதை அளக்கின்றார். அதற்கு வேறை சில  டமிழ்சும் புல்லாங்குழல்  வாசிக்கின்றார்கள் :D :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வரை இத் திரியை வாசித்ததில் இருந்து நான் தெரிந்தது கொண்டது என்ன என்டால்;

அங்கிருந்து உயிரை பணயமாக வைத்து பணமீட்டவோ அல்லது உண்மையாக அரசினால் பாதிக்கப்பட்ட போராளிகளை அங்கிருக்கும்[அவுசில்] தமிழ் மக்களே திரும்பியும் பார்ப்பதில்லை.இன்னும் சொல்லப் போனால் கொஞ்சப் பேர் அவர்களை அடிமையாகவே வைத்திருக்கிறார்கள்...இதில் வந்து சுண்டலுக்கு எதிராக கருத்து எழுதும் அவுஸ் உறவுகள் எத்தனை பேர் கப்பலில் வந்தவர்களுக்கு ஓடிப் போய் உதவி இருக்கிறார்கள்? மனசாட்சியைத் தொட்டு உண்மையை எழுதுங்கள் பார்ப்பம்.இலங்கை அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மனசாட்சிக்கு எதிராக கருத்து எழுதுகிறீர்கள் என நான் நினைக்கிறேன்.

ஒரு கப்பலில் வருபவர்கள் 100 பேர் என்டால் அதில் உண்மையாகவே அரசினால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் 10 பேராத் தான் இருப்பார்கள்.அவுஸ் அரசு அந்த கப்பலை பிடித்து விசாரித்தால் உடனே அந்த 10 பேரையும் தான் திருப்பி அனுப்புவார்கள்.காரணம் சொல்வார்கள் அவர்கள் பயங்கரவாதிகள் அவர்களால் தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பார்கள்.அதை உங்களால் தடுக்க முடியுமா?...ஆகவே உண்மையாகவே பாதிக்கப்பட்டவனுக்கு அகதி அந்தஸ்து கிடைக்கிறது சரியான குறைவு என்பது என் கருத்து.

இப்பவும் ஈழத்தில் ஆங்காங்கே கொலை,கைது,பாலியல் வன்புணர்வு என்று நடக்கிறது இல்லை என்று மறுக்கவில்லை.ஆனால் 2009 யுத்தம் அதையொட்டி 2010,2011 ஆண்டுகளில் மக்கள் வகை,தொகையாக இப்படி கடல் மூலம் வெளிக் கிட்டு இருந்தால் அதில் ஒரு காரணமும்,நம்பகத் தன்மையும் இருக்கும்.அந்த காலத்தில் வெளிக்கிடாத மக்கள் இப்ப வெளிக்கிடுவதில் சிங்கள அரசின் சதி இருக்கும் என நான் நினைக்கிறேன். இதுவும் ஒரு வகை இன அழிப்புத் தான். ஆசை வார்த்தைகளை நம்பி எத்தனை சனம் கடலில் அநியாயமாய் உயிர் விடுகிறார்கள்.அதைத் தவிர அவுஸ்சுக்கு என்று வருபவர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா?...பக்கத்து தீவுகளில் தானே அடைத்து வைக்கிறார்கள்.அதை விட ஊரில் கூழோ,கஞ்சியோ குடிச்சிட்டு நிம்மதியாய் இருக்கலாம் என்பது என் கருத்து.

கடைசியாக தமிழர் எல்லோரும் இப்படி புலம் பெயர வெளிக் கிட்டால் இனி மேல் யாருக்கு தமிழீழம்? முழு இடத்தையும் சிங்களவனிட்டையும்,முஸ்லீம்களிட்டையும் கொடுக்க வேண்டியது தான்...அதற்கான முயற்சிகள் தான் கொஞ்சம்,கொஞ்சமாய் நடந்து கொண்டு இருக்குது. சிங்கள அரசின் இச் சதிக்கு புலத்தில் இருக்கும் தமிழரும் தெரிந்தோ,தெரியாமலோ உடந்தையாக இருப்பது வேதனை.

கொஞ்சப் பேர் ஓடி வருவார்கள் நீ புலத்தில் வசதியாய் இருந்து இப்படித் தான் எழுதுவாய் என...நான் புலத்தில் இருக்கிற படியால் தான் சொல்கிறேன்.புலத்தை விட ஊரில் கூழோ,கஞ்சியோ குடிச்சிட்டி இருப்பது எவ்வளவோ மேல்.தவிர நான் அந்த மக்களை அரசிற்கு எதிராக போராடு,போய் சா என சொல்லவில்லை. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியக்கா இதை புலத்தின் சுகபோகங்களை விட்டு விட்டு ஊரில் போய் கஞ்சி குடித்தபடி சொல்லுங்க நம்புறம்.

இன்னும் மற்றவை நாட்டடை விட்டு வரக்கூடாது வந்தா நிலம் பறி போகும் ஆனால் நாம் மட்டும் வரலாம் என்பதே உங்கள் நிலப்பாடா?

நீங்கள் ஊரிற்க்கு திரும்பி ஒரு வீட்டில் வாழ்ந்து அட்லீஸ்ட் ஒரு ஏக்கர் நிலத்தையாவது காப்பாத்தலாம் தானே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.