Jump to content

கலாசாரத்தின் பெயரால் தமிழ்ச் சிறுமிகளின் சாமத்தியச்சடங்கு


Recommended Posts

http://youtu.be/hdWi9B3OyFA

 

நாளுக்கு நாள் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் மகள்களின் பூப்படைதல் நிகழ்வை நாகரீகத்தின் உச்சமாக நடாத்திக் கொண்டிருக்கும் கொண்டாட்டங்களை தினமும் அறிகிறோம். இந்த வீடியோ இணைப்பில் இன்னொரு புதுவகை விழா. 
 
ஒருகாலம் தேசத்தின் பாடல்களை பாடிய பாடகர் சாந்தன், பிறின்சி ரஞ்சித்குமார் போன்றோர் பாடலைப்பாட புதுவை அன்பன் பாடலொன்றை சடங்கிற்கு உரிய சிறுமிக்காக பாடியுள்ளார்கள். மிகவும் வருத்தம் தருகிறது இந்நிகழ்வு. பெண் பிள்ளைகள் துணிச்சலோடு சாதனைகள் படைக்கும் திறமையாளர்களாக வளர்ந்து வர வேண்டிய வளர்க்கப்பட வேண்டிய இக்காலத்தில் போகப்பொருளாகவே பெண்பிள்ளைகளை அவர்களது எண்ணங்களை சிதைக்கும் நிகழ்வாகவே இன்றைய கால சாமத்தியச் சடங்குகள் நடாத்தப்படுகிறது. 
 
கருத்துக்கள உறவுகள் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள். 
 
நாங்கள் எங்கே செல்கிறோம் ???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வீடியோக்காரன் தனக்கு குடுத்த வேலையை ஒழுங்காய் செய்திருக்கிறான்...
 
ஏனெண்டால் இப்ப கலியாணவீடு சாமத்தியவீடு செய்து காட்டுறது கமராக்காரங்கள்தான்...
 
 
வீடியோகார தம்பிக்கு நன்றி. :)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூல வீடியோவுக்கு பின்னூட்டம் எழுதின ஒருவர் "அட இவ்வளவு செல்வந்தக் குடும்பமா?" எண்டு வியந்திருக்கிறார். பிரான்ஸில இருக்கிறவைக்குத் தான் விளங்கும், அப்பா concession child உம் பெத்து, வரி கட்டாமல் அரசாங்கப் பணத்தில நல்லா சோக்குக் காட்டியிருக்கிறார் போல! ஒரு ஊகம் தான்! ஆனா பணத்தை இப்படித் தண்ணியாகச் செலவு செய்யும் பலரின் பின்னணியைப் பார்த்த அனுபவத்தில் வந்த ஊகம்! விசுகர் வந்து உறுதி செய்ய வேணும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடையங்கள் பற்றி எல்லாம் எத்தனையோ தரம் எழுதி,எழுதி அலுத்துப் போச்சு...எங்க பாட்டுக்கு  பந்தி,பந்தியாக நாங்கள் புலம்பிட்டு போக வேண்டியது தான் இப்படியான கூத்துக்களை எடுப்பவர்கள் நிறுத்தவோ இல்லை வீண் ஆடம்பரங்களின்றியோ செய்யாமல் விடப் போவதில்லை.கனேடிய மண்ணிலும் இவ்வாறன விழாக்களுக்கு பஞ்சம் இல்லை..பிள்ளை அந்த வயதை எட்ட முன்னமே தாய்மார் கனவு பெரிதாகவே இருக்கிறது.
ஆகவே பிள்ளை விருப்படுகிறது,வாழ்க்கையில் ஒருக்காத் தானே இப்படிச் செய்யப் போறம் என்ற கதையையும் தூக்கி போடுகிறார்கள்.பிள்ளைகள் சொல்கிற எல்லாத்துக்கும் ஆமா போடாதீங்கள், அதனுடைய நன்மை,தீமைகளை எடுத்து சொல்லி அதிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னால்,இதுகளுக்கு ஒன்றும் தெரியாது தீவுக் கூட்டம் என்று வேறை நக்கல்,நளினம் பேசுகிறார்கள்,அப்படி இருக்கையில் பேசி என்னத்தைக் காணப்போறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினியின் கருத்துடன் உடன்படும், அதே வேளையில், இப்படியான பணச் சடங்குகள், இரண்டு விதத்தில் எமது இனத்தைப் பாதிக்கின்றன!

 

முதலாவது கொஞ்சம் கல்வியறிவு, பொது அறிவு கொண்ட பெற்றோர்கள் இப்படியான சடங்குகள் செய்யாது விடுவதால், அவர்களது குழந்தைகளின் மனதின் ஒரு விதமான ' வெளியே சொல்ல இயலாத ஏக்கம்' குடி கொள்ளுகின்றது! நாளடைவில், அவர்களது அறிவு வளர்ச்சியடையும் போது, அவர்கள் புரிந்துகொள்வார்கள் என எண்ணுகின்றேன்!

 

இரண்டாவது, நாம் வாழும் நாட்டைச் சேர்ந்தவர்கள், நாம் ஒரு 'மத்திய கிழக்கு நாடுகளின் 'திருமண வைபவங்களைப்பற்றி' என்ன கருத்தை வைத்திருக்கிறோமோ, அப்படியான கருத்தைத் தான், எமது கலாச்சாரத்தைப் பற்றியும் வளர்த்துக்கொள்வார்கள்! ஆனால் வெளியே சொல்லமாட்டார்கள்!

Link to comment
Share on other sites

ஊரில் இருந்திருந்தால் காவோலை எடுத்து கிடுகு பின்னியிருப்பார்கள். :huh: இந்தப் போர் ஒன்று வந்ததால் ஹெலியில் பறந்து அலைக்கழிகிறார்கள்.. :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருந்திருந்தால் காவோலை எடுத்து கிடுகு பின்னியிருப்பார்கள். :huh: இந்தப் போர் ஒன்று வந்ததால் ஹெலியில் பறந்து அலைக்கழிகிறார்கள்.. :(:D

தென்னோலையிலை பின்னிறது தான் 'கிடுகு'...! வர வரத் தமிழும் மறந்து போகுது....! :o

 

காவோலையிலை பின்னிறது.... பாய், தடுக்கு, கடகம், நீத்துப்பெட்டி, பனங்க்கட்டிக் குட்டான்...! :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பறிவில்லாத பெற்றோர்களுக்குப் பிறந்தால் இந்த நிலைதான் வரும்.   :(  :(  :(

 

படிப்பறிவுள்ளவை மட்டும்...??????????????!

 

இப்படியான காட்டுமிராண்டித் தனங்களை படிச்ச எம்மவர்களிடமும் நல்லாவே காணலாம். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெற்றியில வைக்கிற சந்தனம் மிஞ்சினால் நம்ம ஆளுக குண்டிளையும் பூசுவானுகள்... (மன்னிக்கவும்)

நல்ல நேரம் ... இந்த கருமங்கள பார்த்து நெஞ்சு வெந்து; சோகத்தில் வடிய எங்கள் காவல் தெய்வங்கள் எங்களிடம் இல்லை.

என்னா ஒண்ணு ... இவனுகள் நல்லா இருந்த சிங்களவனையும் நாசமாக்கிப் போட்டனுகள். (சந்தோசம்)

இத பாருங்க:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

(மேலே இணைந்த காணொளியின் மீள் இணைப்பு.)


ஊரில் இருந்திருந்தால் காவோலை எடுத்து கிடுகு பின்னியிருப்பார்கள். :huh: இந்தப் போர் ஒன்று வந்ததால் ஹெலியில் பறந்து அலைக்கழிகிறார்கள்.. :(:D

 

இசைக்கு.. தன்னையும்.. ஹெலில ஏத்தி.. பாரீஸை சுற்றிக்காட்டல்ல என்ற எரிச்சல். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியச்சடங்கு செய்யவே இப்படி என்றால் கலியாண வீடு  எப்படி இருக்கும்!

இந்த பெண்ணுக்கு பின்னாலே இன்னும் இரண்டு சுட்டிப்பெண்கள் காத்திருக்கிறதே அவையளுக்கு இப்படி செய்தால்.......... பணம், துட்டு, சல்லி, money money  எங்கிருந்து 

இப்படி எல்லாம்  செய்ய எங்கிருந்து பணம் கிடைக்கிறது.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியச்சடங்கு செய்யவே இப்படி என்றால் கலியாண வீடு  எப்படி இருக்கும்!

இந்த பெண்ணுக்கு பின்னாலே இன்னும் இரண்டு சுட்டிப்பெண்கள் காத்திருக்கிறதே அவையளுக்கு இப்படி செய்தால்.......... பணம், துட்டு, சல்லி, money money  எங்கிருந்து 

இப்படி எல்லாம்  செய்ய எங்கிருந்து பணம் கிடைக்கிறது.!

 

கலியாணமா.. அது எப்பவும் போல.. தென்னிந்திய தமிழ் சினிமா பாணியிலேயே போய்க்கிட்டு இருக்குது. தென்னிந்திய சினிமா எவ்வளவுக்கு முன்னேறுதோ அவ்வளவுக்கு இதுவும் முன்னேறும். நமக்குத்தான்.. கொள்கை.. கோட்பாடு.. நாடு.. புலம்.. எதுவும் இல்லையே. :lol::D

 

Link to comment
Share on other sites

பிள்ளைகள் வளர்நத பின் எத்தனை தாய் தந்தையருக்கு அவர்களின் திருமணத்தைக் கோலாகலமாகக் கொண்டாட முடியுமோ என்ற சந்தேகம் உண்டு. வெள்ளைகளைக் கட்டினாலும் பரவாயில்லை,  சாதி மாறிக் கட்டினால் எடுப்பாகத் திருமண விழா செய்ய முடியாதாம். சிலர் திருமணம் செய்வார்களோ இல்லையோ என்றே தெரியாது. அதுக்குத் தானாம் பிள்ளை தமது கட்டுப்பாட்டில் இருக்கும்போதே சாமத்திய வீட்டை ஆடம்பரமாக கொண்டாடி மகிழ்கிறார்களாம் என்று ஒருவர் எனக்கு விளக்கம் தந்தவர்.  :D

Link to comment
Share on other sites

இவர்கள் தமது சொந்தப் பணத்தில் தமது வீட்டு வைபவத்தினைச் செய்கிறார்கள்.அது அவர்களின் விருப்பம், அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் தவறைச் சுட்டிக் காட்டலாம் (அது தான் சரியான முறை) , அதைவிடுத்து அவர்களின் வீடியோவை இணையத்தில் பதிவேற்றி விமர்சிப்பதென்பது  எனது பார்வையில் சரியெனப்படவில்லை. ஆகக்குறந்தது அவர்களது முகங்களையென்றாலும் மறைத்திருக்கலாம்,  இங்கு விருந்த்தினர்களாக வந்திருப்பவர்கள் உட்பட அணைவரும் தெளிவாகத் தெரிகிறார்கள். 
 
இங்கே புலம் பெயர் தேசங்களில்  மக்களிடம் மில்லியன் கணக்கில் மக்களிடம் பணத்தினச் சேர்த்து கோயில்களக் கட்டி ஆன்மிகம் எனும் பெயரில் மிகப் பெருந்த்தொகைப் பணத்தினை வீண‌டிக்கிறார்கள் ,  வாருங்கள் அவற்றில் உள்ள தவறுகளை விவாதிப்போம். ஏனெனில் இங்கே பொது மக்களின் பணம் வீணடிக்கப்ப்டுகிறது.
Link to comment
Share on other sites

ஆதவன்,  அவர் தனது வீடியோவைப் பொது இணையத்தளத்தில் எல்லோரும் பார்த்து விமர்சிக்கக் கூடியவாறு வெளியிட்டுள்ளார். விமர்சனங்களை அவர் ஏதிர்கொள்ள வேண்டும். வீடியோ எடுத்தவர்கள் அவரது அனுமதி இன்றி இதனைப் பிரசுரித்திருந்தால் நீங்கள் சொல்வது சரி.

Link to comment
Share on other sites

தென்னோலையிலை பின்னிறது தான் 'கிடுகு'...! வர வரத் தமிழும் மறந்து போகுது....! :o

காவோலையிலை பின்னிறது.... பாய், தடுக்கு, கடகம், நீத்துப்பெட்டி, பனங்க்கட்டிக் குட்டான்...! :D

அடடா.. ஹெலியில் போகாமலே எனக்கு எல்லாம் மறந்து போகுது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் வளர்நத பின் எத்தனை தாய் தந்தையருக்கு அவர்களின் திருமணத்தைக் கோலாகலமாகக் கொண்டாட முடியுமோ என்ற சந்தேகம் உண்டு. வெள்ளைகளைக் கட்டினாலும் பரவாயில்லை,  சாதி மாறிக் கட்டினால் எடுப்பாகத் திருமண விழா செய்ய முடியாதாம். சிலர் திருமணம் செய்வார்களோ இல்லையோ என்றே தெரியாது. அதுக்குத் தானாம் பிள்ளை தமது கட்டுப்பாட்டில் இருக்கும்போதே சாமத்திய வீட்டை ஆடம்பரமாக கொண்டாடி மகிழ்கிறார்களாம் என்று ஒருவர் எனக்கு விளக்கம் தந்தவர்.  :D

 

உடன நீங்கள் சொல்லி இருக்கனும்... அண்ணே.. நீங்க எப்ப சாவீங்களோ தெரியாது.. அந்த வகையில்.. தினமும் களியாட்டம் கொண்டாட்டமுன்னு வாழுங்கோ.. அது தான் உங்க கொள்கைக்கு சரின்னு. முடிஞ்சா வாழ்ந்திட்டு போகட்டுமேன். :lol::icon_idea:

ஆதவன்,  அவர் தனது வீடியோவைப் பொது இணையத்தளத்தில் எல்லோரும் பார்த்து விமர்சிக்கக் கூடியவாறு வெளியிட்டுள்ளார். விமர்சனங்களை அவர் ஏதிர்கொள்ள வேண்டும். வீடியோ எடுத்தவர்கள் அவரது அனுமதி இன்றி இதனைப் பிரசுரித்திருந்தால் நீங்கள் சொல்வது சரி.

 

அதுபோக.. எந்த பிரைவேட் செற்றிங்கும் இல்ல.. இந்த காணொளிகளில். அந்த வகையில்.. எவனும்.. எப்படியும்.. கூட காமண்ட் போடலாம். :icon_idea::lol:

Link to comment
Share on other sites

தமிழர் என்றாலே ஒரு அடையாளம் இல்லாத நாங்கள். எதை செய்தாலும்  ஒருவரும் கணக்கெடுக்க மாட்டார்கள்.

ஏதோ ஒரு கூட்டம்  விழா கொண்டாடுது என்டு மாத்திரம் சொல்வான்.

 

இப்ப இங்க கிட்டடியில  ஒரு கலியாண வீடு  மணமகன்  ஒரு பிரபல தமிழ்  பேப்பர் இலவசமா விடுகிறவருடைய பிள்ளை.

பெண்   இந்திக்காரி . 

கலியாணம் என்டா தடல் புடல். வடக்கு தாரை ,தப்பட்டை ஒரே கலக்கல். நாங்கள் மூலையில குந்தி இருந்து சாப்பிட்டு வந்ததான்.

 

செலவு என்டா   50 வருசம் உழைச்சாலும்  மிச்சப்படுத்தி இருக்க முடியாது.   பழகினதுக்கு  இலவச பேப்பரோட .இலவச சாப்பாடும் தந்தார்.

Link to comment
Share on other sites

படிப்பறிவில்லாத பெற்றோர்களுக்குப் பிறந்தால் இந்த நிலைதான் வரும்.   :(  :(  :(

 

படிப்பறிவில்லாதவனால்தான் இவ்வளவு பணம் சேர்க்க முடியும் என்கிறீர்களா?!  :D

 

என்னைப் பொருத்தளவில்...

'அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்!'

Link to comment
Share on other sites

ஹெலியும் லிமோவும் தான் மற்றவர்களின் சடங்கைவிட அதிகமாக இருக்கிறது.
 
ஹெலிக்கு பெரியவருக்கு 250 யூரோவும் சிறுவருக்கு 200 யூரோ.
 
ஹெலிக்கும் லிமோவுக்கும் ஒரு 2000 யூரோ செலவளிச்சிருப்பார்.
ஒரு நாள் தானே.
 
அந்தாள் தன்ட காசத்தானே செலவளிக்குது. அதுவும் தன் மகளுக்கு.
 
நீங்கள் எல்லாம் ஏன் எரியிரீங்க ??
 
கனடாவில, லண்டனில‌ இருந்து தமிழ்ப் பெடியள் தாய்லாந்துக்கு விபச்சாரிகளுக்கு ஆயிரக்கணக்கான டொலர் செலவளித்து பிளேனில போய் வாறங்கள். இந்தக் கணக்கெல்லாம் யார் பார்ப்பது ?? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக வேர்வை சிந்தி உழைச்ச காசு என்றால் ஒவ்வொரு சதத்தின் பெறுமதியும் செலவளிப்பவர்களுக்கு விளங்கும்,விளங்க வேண்டும்..அரசாங்கப்பணத்திலோ இல்லை வேறு குறுக்கு வழிகளில் வந்த பணம் என்றால் வாழ்வில் ஒரு நாளைக்கு தானே என்று தான் செலவளிக்கத் தோன்றும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை பணத்தைக் கொட்டி ஆடம்பர விழாக்களை நடத்துபவர்கள்
தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தைப் பற்றிச் சற்றும் சிந்திக்காதவர்களே.

 

எனது நண்பன் மூன்று பெண் பிள்ளைகளுக்குத் தந்தை. யாருக்கும் இப்படியான

திருவிழாக்களைக் கொண்டாடவில்லை.
ஆனால் ஒரு பிள்ளைக்கு ஒரு லட்சம் யூரோ  செலவளித்து இரு பிள்ளைகளை மருத்துவம் படிக்கவும்

அடுத்த பிள்ளைக்கு இன்னொரு நல்ல துறையில் 75 ஆயிரம் செலவளித்து படிக்கவும் ஊக்கம் கொடுக்கின்றான். இப்படியும் பெற்றோர்கள் இருக்கின்றார்கள்.
உப்படியும் பெற்றோர்கள் இருக்கின்றார்கள்.
அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
இலட்சியங்கள். எல்லா விரல்களும் ஒரே அளவில் இருப்பதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.