• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
sathiri

ஆயுத எழுத்து

Recommended Posts

உங்களுக்கு ஆக சொல்கிறேன் .....
நாம் வேறு போராளி அமைப்பில் சேர்ந்ததை தவிர வேறு குற்றம் செய்தது கிடையாது. அப்போது எமது கரங்களை பின்னால் கட்டி ஊர் பார்க்க இழுத்துபோனவர்கள் இவர்கள். ஊரில் இருந்த பெட்டைகளுக்கு கலர் காட்டி  நாடகம் போட்டுவிட்டு.
மக்கள் காசில் நன்றாக உண்டு கொழுத்துவிட்டு. ஏமாளி பெட்டைகளை காதல் கீதல் என்று காரியம் பார்த்து 
விட்டு விட்டு ஓடியவர்கள்.
இன்று நேருக்கு நேர் நின்று பல சதிகளை கடக்க தமது உயிரை கொடுத்த போராளிகளின் தியாகங்களை விளம்பரம் செய்கிறார்கள்.
ஒருவனுக்கு முதலில் ஒரு தகுதி வேண்டும். 
 
இதற்குள் சுயநலம் கடந்து என்ன இருக்கிறது?
நாடு 
மக்கள் 
என்றால் இறுதிவரை நின்று அல்லவா இருக்க வேண்டும்?? 
 
இருந்ததை வைத்துதான் அவர்கள் போராடினார்கள். அதை வெளியில் இருந்து பார்த்தால் ஆயிரம் பிழை இருக்கலாம்.
ஆனால் இறுதிவரை அர்பணிப்போடு போராடினார்கள்.
 
ஆராவது ஒரு மாங்காய் மடையனால் புலிகள் சாதித்த ஒன்றில் ஏதாவது ஒன்றை சாதிக்க முடியுமா?
முடியாது என்று விட்டு போனதை முடித்து காட்டியவர்கள் அவர்கள்.
முடியாது என்றால் ................ மூடி கொண்டு இருக்க வேண்டும். 

Share this post

Link to post
Share on other sites

அப்போ புத்தகம் கிடைக்கும் வரை பொத்திக் கொண்டு இருந்து விட்டு முழுதும் வாசித்து விட்டு இங்கு வந்து எழுதி யிருக்க வேண்டும் ..

கேள்வி தங்களுக்கு எழுதியதல்ல. சுமேரியரிடம் கேட்டு எழுதியது.இங்குதான் மேலே இருக்கிறது ஆரம்ப இடம். இடையில் வந்து என்றி கொடுத்தது நீங்கள்தான்.

Share this post

Link to post
Share on other sites

கேள்வி தங்களுக்கு எழுதியதல்ல. சுமேரியரிடம் கேட்டு எழுதியது.இங்குதான் மேலே இருக்கிறது ஆரம்ப இடம். இடையில் வந்து என்றி கொடுத்தது நீங்கள்தான்.

கேள்வி யாரிடம் கேட்டாலும் எனது புத்தகம் பற்றிய திரியியில் வந்த கேள்வி என்பதால் பதில் கேள்வி தந்தேன் ..கேள்வி கேள்விதான் எந்த மாற்றமும் இல்லை .

Edited by sathiri

Share this post

Link to post
Share on other sites

லண்டன் பக்கம் என்ன மாதிரி அண்ணை?

Share this post

Link to post
Share on other sites

கேள்வி யாரிடம் கேட்டாலும் எனது புத்தகம் பற்றிய திரியியில் வந்த கேள்வி என்பதால் பதில் கேள்வி தந்தேன் ..கேள்வி கேள்விதான் எந்த மாற்றமும் இல்லை .

நீங்கள் புலிகள் மீது வைத்த விமர்சனங்களை இங்கு இணையுங்கள் அல்லது இணைப்பை தாருங்கள். முதலில் அவை எவை என்று தெரியணும்.. இல்லாவிட்டால் எனக்கு புத்தகம் கையில் கிடைக்கும் வரை நீங்கள்தான் பொத்திக்கொண்டு இருந்தாக வேண்டும்.. :D

Edited by சுபேஸ்

Share this post

Link to post
Share on other sites

லண்டன் பக்கம் என்ன மாதிரி அண்ணை?

தை மாதம் கிடைக்கும்

Share this post

Link to post
Share on other sites

சாஸ்திரி என்ட மனிதர் இப்படித் தான் இருப்பார் என்பதை வைத்து அவரது நூலை வாசிக்காமல் கருத்து வைப்பது ரொம்ப தப்பு...அவர் புத்தகத்தை எழுதியிட்டார்.எங்கே,எப்படி,யார் மூலம் வெளீயிட்டால் மற்றவர்களுக்கு என்ன?...விரும்பினால் வாசியுங்கோ,இல்லாட்டில் விடுங்கோ...எதற்கு குத்தி முறிகிறார்களோ தெரியவில்லை..ஒரு வேளை பயப்படுகிறார்களோ தெரியவில்லை

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

ஒரு பத்திரிகையில் ஒரு ஆக்கம் எழுதுவது விளம்பரத்திற்கு என்று நினைப்பவர்களுடன் எப்படி உரையாடுவது ?

முதலில் அருகில் பாடசாலை ஏதும் இருந்தால் எட்டி பாருங்கள் .

உங்களுக்கு எதிராக ஒரு விமர்சனம் வைத்தவுடன் அடுத்த கணமே அவரை பாடசாலை செல்லாதவர் என்று எள்ளிநகையாடுவது உங்கள் வழமை. அல்லது உங்கள் ஆக்கங்களை முகவரியில்  வாசிப்பதால் அப்படி சொன்னீர்களோ

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

சாஸ்திரி என்ட மனிதர் இப்படித் தான் இருப்பார் என்பதை வைத்து அவரது நூலை வாசிக்காமல் கருத்து வைப்பது ரொம்ப தப்பு...அவர் புத்தகத்தை எழுதியிட்டார்.எங்கே,எப்படி,யார் மூலம் வெளீயிட்டால் மற்றவர்களுக்கு என்ன?...விரும்பினால் வாசியுங்கோ,இல்லாட்டில் விடுங்கோ...எதற்கு குத்தி முறிகிறார்களோ தெரியவில்லை..ஒரு வேளை பயப்படுகிறார்களோ தெரியவில்லை

அப்படியானவர்களைக் குற்றம் சொல்லியும் பிரயோசனமில்லை.

சாத்திரியார் எழுதும்பாணி அப்படி அவர்களைக் கருத  வைக்கின்றது.

ஆனாலும் நாங்கள் சாத்திரியாரின் தீவிர ரசிகர்கள்.

அவருடைய எழுத்துக்களில்  ஒரு உண்மை  இருந்தாலும் அந்த ஒரு உண்மைக்காகவே அவருடைய எழுத்துக்களை வாசிப்போம்.

ஜேர்மனியில்ஆயுத எழுத்துக் கிடைக்கும் இடத்தை அறியத்தாருங்கள் சாத்திரியார்.

Share this post

Link to post
Share on other sites

எனது ஆயுத எழுத்து நாவலை சென்னையில் ..New Book Lands..புத்தக சாலையிலும் பெற்றுக் கொள்ளலாம்
Adresse : No-52-C, Basement, Near Panagal Park Flyover North End, North Usman Road, Thiyagaraya Nagar, Chennai, Tamil Nadu 600017, Inde
Téléphone :+91 44 2815 6006

http://www.newbooklands.com/new/home.php

 சென்னையில் பாரதி புத்தக நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்
126, Usman Rd, Postal Colony, T Nagar, Chennai, Tamil Nadu 600017,

10530659_10202109256172676_8579110991679

Edited by sathiri

Share this post

Link to post
Share on other sites

சாத்திரியாரின் "ஆயுத எழுத்து" நூல்கள் சில நண்பர் ஒருவரின் உதவியால் கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்திருந்தது. விடுமுறையில் இருப்பதால் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். சாத்திரியார் யாழ் களத்தில் எழுதிய பல கதைகளும் இந்நூலில் அடக்கப்பட்டிருக்கின்றது. இளவயதில் இயக்கத்தில் இணைந்து, உயிரைத் துச்சமாகக் கருதி ஓர்மத்துடன் போராடிய இளைஞன் ஒருவன் படிப்படியாக வெவ்வேறு பிரிவுகளில் வேலை செய்யும்போது ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பாக உள்ளது. வஞ்சகத்தின் பாதையில் ஆனால் தாயகம் நோக்கி என்ற கோஷத்துடன் செய்வதெல்லாம் தமிழீழத்திற்கே என்ற நம்பிக்கையில், சொல்லைவிடச் செயலே முக்கியம் என்ற கருத்தியலில், கட்டளைகளின் காரணங்களைக் கேட்காது கடமைகளைச் செவ்வனே செய்யும் நேர்மையான விடுதலைப் போராளிகளின் பண்புகளை வெளிக்கொண்டு வருகின்றது. அத்தோடு வெளிநாடுகளில் நடந்த சில சம்பவங்களின் பின்னணிகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

ஜேம்ஸ் பொண்ட் பாணியிலான நிழல்மனிதர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டு திகிலூட்டும் ஆங்கிலப் படங்களில் வரும் கதைகள் போன்று சில கதைகள் உள்ளன. நம்பமுடியாத பலவற்றைச் சாதித்தவர்கள் நிறைந்த இயக்கத்தில் இப்படியும் நடந்தும் இருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

புத்தகம் பற்றிய உங்கள் பார்வைக்கு நன்றிகள் கிருபன்.பலரின் எதிர் பார்ப்புக்களை அல்லது சாத்திரியின் புத்தகம் இப்படிதான் இருக்கும் என்று நினைத்து வரிந்து கட்டி நின்றவர்களுக்கு உங்கள் கருத்து நிச்சயம் குழப்பத்தை கொடுத்திருக்கும்

Edited by sathiri

Share this post

Link to post
Share on other sites

சாத்திரியாரின் "ஆயுத எழுத்து" நூல்கள் சில நண்பர் ஒருவரின் உதவியால் கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்திருந்தது. விடுமுறையில் இருப்பதால் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். சாத்திரியார் யாழ் களத்தில் எழுதிய பல கதைகளும் இந்நூலில் அடக்கப்பட்டிருக்கின்றது. இளவயதில் இயக்கத்தில் இணைந்து, உயிரைத் துச்சமாகக் கருதி ஓர்மத்துடன் போராடிய இளைஞன் ஒருவன் படிப்படியாக வெவ்வேறு பிரிவுகளில் வேலை செய்யும்போது ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பாக உள்ளது. வஞ்சகத்தின் பாதையில் ஆனால் தாயகம் நோக்கி என்ற கோஷத்துடன் செய்வதெல்லாம் தமிழீழத்திற்கே என்ற நம்பிக்கையில், சொல்லைவிடச் செயலே முக்கியம் என்ற கருத்தியலில், கட்டளைகளின் காரணங்களைக் கேட்காது கடமைகளைச் செவ்வனே செய்யும் நேர்மையான விடுதலைப் போராளிகளின் பண்புகளை வெளிக்கொண்டு வருகின்றது. அத்தோடு வெளிநாடுகளில் நடந்த சில சம்பவங்களின் பின்னணிகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

ஜேம்ஸ் பொண்ட் பாணியிலான நிழல்மனிதர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டு திகிலூட்டும் ஆங்கிலப் படங்களில் வரும் கதைகள் போன்று சில கதைகள் உள்ளன. நம்பமுடியாத பலவற்றைச் சாதித்தவர்கள் நிறைந்த இயக்கத்தில் இப்படியும் நடந்தும் இருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.

என்னுடைய புத்தகம் கவனமாய் இருக்குது தானே!.எல்லாத்தையும் சேர்த்து எப்ப அனுப்புவதாக உத்தேசம்?!:lol:

Share this post

Link to post
Share on other sites

என்னுடைய புத்தகம் கவனமாய் இருக்குது தானே!.எல்லாத்தையும் சேர்த்து எப்ப அனுப்புவதாக உத்தேசம்?! :lol:

புத்தகங்கள் எல்லாம் கவனமாக இருக்கின்றன. யாழ்ப்பாண வீட்டு விலாசத்தையாவது தந்தால் அங்காவது சேர்ப்பிக்கலாம் <_<

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

சாத்திரியாரின் புத்தகத்தில் உள்ளவற்றில் பிரச்சினையான விடயங்கள் என்று சில முகப்புத்தகங்களில் அலசப்படுகின்றன. அவை இவைதான்:

 • துர்க்கை அம்மன் கோவிலில் கொள்ளையடித்தது.
 • பிரான்சில் கஜன், நாதன் ஆகியோரைக் கொன்றது.
 • ஆயுதங்களுக்காக போதைப் பொருள் கடத்தியது.
 • இயக்கப் போராளிகள் (வெளிநாட்டுப் பிரிவினர், வெளியகப் புலனாய்வுப் பிரிவினர்) தண்ணி அடிப்பது, விலைமாதர்களுடன் தொடர்பு.
 • தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார்.

இதெல்லாம் முன்னர் யாழில் அலசப்பட்டவைதான்!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

14302_10202308048582362_6812457368330316

புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள் .

எதற்கும் கௌதமனுக்கும் ஒரு பிரதியை கொடுத்துவிட்டு வாங்கோ . :icon_mrgreen:

Share this post

Link to post
Share on other sites

சென்னை புத்தக கண்காட்சியில் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருகிறது ஆயுத எழுத்து ...

புத்தகக்கடைகளின் விபரங்கள்.

1) டிஸ்கவரி புக் பேலஸ். இலக்கம் 543

2)பாரதி புத்தக நிலையம். இலக்கம் 449

3)மலைகள். இலக்கம் 518

4)கீழைக்காற்று. இலக்கம் 80

5)விழிகள் . இலக்கம் 100

6)நியூ புக் லேன்ட். இலக்கம் 170

7) தோழமை . இலக்கம் 522

8)பாரி நிலையம் . இலக்கம் 609

9)விஜயா பதிப்பகம். இலக்கம் 321

10)கங்காராணி பதிப்பகம்.இலக்கம் 284

11)கறுப்புப்பிரதிகள் 459

12)அகநாழிகை 304

ஆகிய புத்தக கடைகளில் கிடைக்கும் என்பதனை அறியத் தருகிறேன் நன்றி

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

நெடுமாறன், சீமான் வாங்கியிருப்பார்களா?

Share this post

Link to post
Share on other sites

நெடுமாறன், சீமான் வாங்கியிருப்பார்களா?

அவர்களுக்கு புத்தகம் அனுப்பிவைத்தேன் காரணம் அவர்கள் இந்த வெளியீட்டை தடுத்து நிறுத்த முயன்று தோற்றுப் போயிருந்தனர். அடுத்ததாக தந்தி தொலக்காட்சி சீமனோடு ஒரு விவாதத்துக்கு அழைத்திருந்தனர் ஈழம் ..போராட்டம் பற்றி எதுவுமே தெரியாத ஒருவரோடு நான் விவாதிக்க தயார் இல்லை எண்டு மறுத்து விட்டிருந்தேன்

10929092_10202358475923014_4389443385151

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

சாத்திரியின் புனைகதைகளின் தொகுப்பு வாசிக்ககிடைத்தது. அழகாக எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில் உண்மைச்சம்பவங்களும் உள்ளன.  வாசிக்கலாம். 

Share this post

Link to post
Share on other sites

அவர்களுக்கு புத்தகம் அனுப்பிவைத்தேன் காரணம் அவர்கள் இந்த வெளியீட்டை தடுத்து நிறுத்த முயன்று தோற்றுப் போயிருந்தனர். அடுத்ததாக தந்தி தொலக்காட்சி சீமனோடு ஒரு விவாதத்துக்கு அழைத்திருந்தனர் ஈழம் ..போராட்டம் பற்றி எதுவுமே தெரியாத ஒருவரோடு நான் விவாதிக்க தயார் இல்லை எண்டு மறுத்து விட்டிருந்தேன்

சீமானோடு கதைத்திருந்திருக்கலாம்..ஆனால் முதல்வன் படத்தில் வந்த பேட்டி மாதிரி

"நான் இருக்கு என்று சொல்லுறேன்..நீங்க இல்லைன்னு சொல்லுறீங்க" அப்படி சண்டைக்கு வந்தாலும் வந்திருக்கலாம்...

vlcsnap-2012-07-15-22h18m31s25.png

Share this post

Link to post
Share on other sites

நண்பர் சி .மகேந்திரனுடன்

10933976_10202355301323651_3010694811245

ஆதவன் தீட்சண்யா

10425024_10202308049302380_4377766860673

சுசீந்திரன்

10922843_10202308049582387_7304227891595

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.