• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
sathiri

ஆயுத எழுத்து

Recommended Posts

சீமானுக்கும் நெடுமாறனுக்கும் தனது நூல் பிரதிகளை அனுப்பிய சாத்திரியார் அப்படியே சங்கருக்கும் மணிரத்தினத்திற்கும் ஒரு பிரதியை அனுப்பியிருந்தால் இந்நேரம் அவர்களின் படங்களிற்கு (ஆயுத எழுத்து) சாத்திரியார் கீரோவாகி சீயான் விக்ரம் சூர்யா ரேஞ்சுக்கு வந்திருப்பார்.  :D

Share this post


Link to post
Share on other sites

சீமான் விவாதத்துக்கு கேட்டது என்பது ஒரு அவியலாய் தான் இருக்கும். கவிஞரோடை விவாதித்து இருக்கலாம். கவிதையாலேயே அடித்து துரத்தி இருப்பார்.

Share this post


Link to post
Share on other sites

சாத்திரியின் நாவல் புறக்கணிப்பு எண்டு செய்தி வந்தமாதிரி .சாத்திரி பின்கதவால் தப்பியோட்டம் எண்டு யாராவது செய்தி போட முதல் நானே படத்தை போடுறது நல்லது

 

10945611_10202395570130346_4441667050452

10958048_10202395571810388_5377984256634


10947246_10202395574050444_6190226196138

Edited by sathiri

Share this post


Link to post
Share on other sites
கருணாகரனின் முக நூலில்
3 h ·

ஆயுத எழுத்து வெளியீடு பற்றி
----------------------------------------------------

ஆயுத எழுத்து - புதினம் வெளியிடப்பட்ட நாளில் எனக்கு நினைவுக்கு வந்தது, 2010 ஒக்ரோபரில் தேவதைகளின் தீட்டுத்துணி - சிறுகதைத் தொகுதியை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டபோது அதைக் கண்காணிப்பதற்காக வந்திருந்தவர்களைத்தான். ஆனால், அவர்கள் நிகழ்ச்சியைத் தடை செய்ய முயற்சிக்கவில்லை. குழப்பவும் இல்லை. புத்தகம் ஒன்றை மட்டும்தான் கேட்டார்கள்.

ஆனால். ஆயுத எழுத்து வெளியீடு மற்றும் விற்பனையின் போது நடந்தவை வேறு. ஆயுத எழுத்தை எதிர்த்தவர்கள் வெளியீட்டு நிகழ்ச்சியைத் தடை செய்ய முயன்றார்கள். அதற்காக அவர்கள் சிலரை அனுப்பியிருந்தனர். அதில் ஒருவர் எனக்கும் தெரிந்தவராக இருந்தார். ஆனால், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத்தான் வந்திருக்கிறார் என்று எண்ணினேன். நாங்கள் சேப்பாக்கம் பத்திரிகையாளர் அரங்குக்குச் சென்றபோது அந்த நண்பரைக் கண்டேன். நீண்ட காலத்திற்குப் பிறகு சந்தித்ததால் இருவரும் சுகநலன்களை விசாரித்துக் கொண்டோம். பிறகு, நிகழ்வு தொடங்க முன் உள்ளரங்கிற்கு அழைப்பதற்காக தேடியபோது அவரைக் காணமுடியவில்லை. என்னிடம் சொல்லாமற் கொள்ளாமல் போய்விட்டார். இவ்வளவுக்கும் அவர் நல்ல பண்பாளர். நீண்டகாலமாகப் பழகி வருகிறவர். ஏன் அப்படிச் செய்தார் என்று தெரியவில்லை.

ஆனால், எதிர்பார்த்த மாதிரி தடைகளோ எதிர்ப்போ நடக்கவில்லை. காவல்துறையின் காவலை மிஞ்சி வருவதற்கு தடையாளர்கள் விரும்பாதிருக்கலாம். அல்லது இந்தத் தடைக்கும் எதிர்ப்புக்கும் பிற சக்திகள் யாரும் முன்வராததால் தனித்துப் போய் நாம் தமிழர் அமைப்பினர் பின்வாங்கியிருக்கலாம். ஆனாலும் அவர்கள் எந்த இடைஞ்சலையும் தரவில்லை. கூட்டம் அமைதியாக நடந்தது.
அமைதியாக நடந்த கூட்டத்தில் ஆதவன் தீட்சண்யாவின் விமர்சன உரை மிகச் சிறப்பு. நாவலை மிக நுட்பமாக - செழுமையாக விமர்சித்தார். அதைப்போல கேர்ணல் ஹரிகரனும் சிறப்பாகப் பேசினார். ஹரிகரனையும் சிறி - சாத்திரியையும் ஒரே மேடையில் பார்த்தபோது எனக்கு உள்ளுரச் சிரிப்பு வந்தது. ஒரு காலம் ஆளை ஆள் தேடிக்கொண்டிருந்தவர்கள். ஹரிகரன் இந்திய அமைதிப்படையிலும் சாத்திரி புலிகள் அமைப்பிலும் எதிரெதிராக இருந்தவர்கள். இப்பொழுது ஒரே மேடையில் தங்கள் கடந்த காலத்தை அலசிக் கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஊடகவியலாளர்களுக்கு ஈழப்போராட்டம் பற்றியோ, ஆயுத எழுத்தைப் பற்றியோ, அங்கே என்னவெல்லாம் பேசப்படுகின்றன, ஈழப்போராட்டத்தோடும் இந்த நாவலோடும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டவர்கள்தான் இந்த அரங்கில் உள்ளனர் என்பதைப் பற்றியே தெரியாது. ஏதோ ஒரு கூட்டத்துக்கு வந்திருப்பதைப்போல வழமையாக இருந்தார்கள். ஒரு சிலர் மட்டும் கொஞசமாக விவரம் கேட்டனர். ஆனால் அவர்களும் அதைச் சரியாக விளங்கிக் கொண்ட மாதிரித் தெரியவிலலை.

நிகழ்வு முடிய என்னைச் சந்திப்பதற்காக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த வன்னி அரசு வந்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வன்னியரசுவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. பல விடயங்களைப் பற்றியும் பேசினோம். ஆதவன் தீட்சண்யா, குகன், வன்னியரசு, நான் என அங்கே ஒன்றாக நின்றது இன்னும் சந்தோசமாக இருந்தது. வெளியீடு முடிந்து எல்லோரும் சென்ற பிறகு இறுதியாக நாங்கள் வெளியேறினோம். எல்லாம் ஒழுங்கா முடிஞ்சுதா சார் என்று காவல்துறையினர் கேட்டார்கள். அவர்களுக்கும் பசி வந்திருக்க வேணும். நேரம் மதியம் ஒரு மணியாகி விட்டிருந்தது. நண்பர்கள் சாப்பிடுவதற்காக பயணமாகினோம்.

மறுநாள் புத்தகக் காட்சிக்குச் சென்றிருந்தபோது, அங்கே ஆயுத எழுத்தை விற்க வேண்டாம் என்று யாரோ வந்து சொல்லி விட்டுப் போனதாக விற்பனையாளர்கள் சொன்னார்கள். ஆனாலும் அதையும் மீறி ஆயுத எழுத்து விற்பனையாகியது. சிலர் அதை தங்கள் மேசைக்குக் கீழும் புத்தக அடுக்குகளின் கீழும் வைத்து விற்றார்கள்.

கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்ட சோதனையைப்பற்றி, மாற்றுக்கருத்துகளை முன்வைப்பதற்குப் படும் சிரமங்களைப் பற்றி சாத்திரியும் நன்றாக விளங்கியிருப்பார்.

எப்படியோ ஆயுத எழுத்து இரண்டாம் பதிப்புக்கு தயாராகும் நிலைக்கு வந்து விட்டது.

 

Share this post


Link to post
Share on other sites

 

கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்ட சோதனையைப்பற்றி, மாற்றுக்கருத்துகளை முன்வைப்பதற்குப் படும் சிரமங்களைப் பற்றி சாத்திரியும் நன்றாக விளங்கியிருப்பார்.

 

 

 

காலம் எப்படி எல்லாம் மாறுகின்றது. சபாலிங்கத்தின் ஆத்மா இனியாவது சாந்தியடையட்டும். :(

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

காலம் எப்படி எல்லாம் மாறுகின்றது. சபாலிங்கத்தின் ஆத்மா இனியாவது சாந்தியடையட்டும். :(

 

நிறைய ஆத்மாக்கள்  சாந்தி அடைய வேண்டியிருக்கு ..அது கிடக்கட்டும் ..எனது நாவலில் இந்தியப்படைகளின் பெரும்பாலான விதி மீறல்கள் படுகொலைகளையும் பதிவு செய்துள்ளேன் அத்தனையையும் மேடையில் வைத்து ஹரிஹரன் ஒத்துக்கொண்டார் ..எனது நாவலின் வெற்றியாக அதனை பார்கிறேன் .எனது நாவல் வெளியீடுக்கு ஹரிஹரனை அழைக்கிறேன் என்கிற விளம்பரத்தை பார்த்ததும் வழமை போல எம்மவர்கள் சாத்திரி றோ உளவாளி என்று கூச்சல் போடத்தான் முடிந்தது ஆனால் இந்திய இராணுவத்தின் படுகொலைகளை பதிவு செய்து விட்டு  அதனுடன்  சம்பத்தப்பட்ட  ஒரு அதிகாரியின் வாயாலேயே பொது மேடையில் தவறை ஒத்துக்கொள்ள வைக்க யாராலாவது முடிந்தால் அதனை செய்து விட்டு  இங்கு வந்து ...வேண்டாம் போது வெளியில் வந்து முழங்குங்கள்

Edited by sathiri
 • Like 5

Share this post


Link to post
Share on other sites

சோமிதரனை காலங்காத்தாலை தட்டியெழுப்பி புத்தகத்தை கொடுத்தபோது

10675738_10202347576490535_4920494438183

Share this post


Link to post
Share on other sites

நிறைய ஆத்மாக்கள்  சாந்தி அடைய வேண்டியிருக்கு ..அது கிடக்கட்டும் ..எனது நாவலில் இந்தியப்படைகளின் பெரும்பாலான விதி மீறல்கள் படுகொலைகளையும் பதிவு செய்துள்ளேன் அத்தனையையும் மேடையில் வைத்து ஹரிஹரன் ஒத்துக்கொண்டார் ..எனது நாவலின் வெற்றியாக அதனை பார்கிறேன் .எனது நாவல் வெளியீடுக்கு ஹரிஹரனை அழைக்கிறேன் என்கிற விளம்பரத்தை பார்த்ததும் வழமை போல எம்மவர்கள் சாத்திரி றோ உளவாளி என்று கூச்சல் போடத்தான் முடிந்தது ஆனால் இந்திய இராணுவத்தின் படுகொலைகளை பதிவு செய்து விட்டு  அதனுடன்  சம்பத்தப்பட்ட  ஒரு அதிகாரியின் வாயாலேயே பொது மேடையில் தவறை ஒத்துக்கொள்ள வைக்க யாராலாவது முடிந்தால் அதனை செய்து விட்டு  இங்கு வந்து ...வேண்டாம் போது வெளியில் வந்து முழங்குங்கள்

அப்ப நீங்க றோ இல்லையா பயலுக பொய் சொல்லிருக்குறாங்க  போல  :D

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

நிறைய ஆத்மாக்கள்  சாந்தி அடைய வேண்டியிருக்கு ..அது கிடக்கட்டும் ..எனது நாவலில் இந்தியப்படைகளின் பெரும்பாலான விதி மீறல்கள் படுகொலைகளையும் பதிவு செய்துள்ளேன் அத்தனையையும் மேடையில் வைத்து ஹரிஹரன் ஒத்துக்கொண்டார் ..எனது நாவலின் வெற்றியாக அதனை பார்கிறேன் .எனது நாவல் வெளியீடுக்கு ஹரிஹரனை அழைக்கிறேன் என்கிற விளம்பரத்தை பார்த்ததும் வழமை போல எம்மவர்கள் சாத்திரி றோ உளவாளி என்று கூச்சல் போடத்தான் முடிந்தது ஆனால் இந்திய இராணுவத்தின் படுகொலைகளை பதிவு செய்து விட்டு  அதனுடன்  சம்பத்தப்பட்ட  ஒரு அதிகாரியின் வாயாலேயே பொது மேடையில் தவறை ஒத்துக்கொள்ள வைக்க யாராலாவது முடிந்தால் அதனை செய்து விட்டு  இங்கு வந்து ...வேண்டாம் போது வெளியில் வந்து முழங்குங்கள்

 

முன்னாள் இந்திய படை அதிகாரி கரிகரன் மேடையில் தமது போர்க்குற்றங்களை ஏற்றுக்கொண்டாரா? இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளதா? 

Share this post


Link to post
Share on other sites
ஹரிகரனையும் சிறி - சாத்திரியையும் ஒரே மேடையில் பார்த்தபோது எனக்கு உள்ளுரச் சிரிப்பு வந்தது. ஒரு காலம் ஆளை ஆள் தேடிக்கொண்டிருந்தவர்கள். ஹரிகரன் இந்திய அமைதிப்படையிலும் சாத்திரி புலிகள் அமைப்பிலும் எதிரெதிராக இருந்தவர்கள்
எனக்கு கேபியையும்..கோத்தாவையும் நினைச்சு சிரிப்பு வருகின்றது....அன்று ஹரிகரன் தன்னுடைய நாட்டுக்காவும் சாத்திரி தன்னுடைய மக்களின் உரிமைக்காகவும் ஆயுதத்தால் பேசினார்கள் ...இன்று இருவரும் மேடையில் பேசுகின்றனர்

Share this post


Link to post
Share on other sites

முன்னாள் இந்திய படை அதிகாரி கரிகரன் மேடையில் தமது போர்க்குற்றங்களை ஏற்றுக்கொண்டாரா? இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளதா? 

சாஸ்திரியின்ட புத்தகத்தை வாசித்திருந்து அல்லது அது பற்றி தெரிந்திருந்தும் ஒன்றாக மேடையில் அவர் அமந்திருந்தது சாஸ்திரிக்கு கிடைத்த ஒரு வித வெற்றி தானே...சீமான் போன்றோர் இந்த நூலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சாஸ்திரி எழுதி இருந்தார்.அது உண்மையோ தெரியாது!...உண்மையாயிருந்தால் அப்படி என்ன அந்த புத்தகத்தில் எழுதியிருக்குது என எதிர்க்க வெளிக்கிட்டார்கள்?...அவர்களது அமைதிப் படை பற்றியும்,அவர்கள் செய்த கொடுமைகள் பற்றியும் எழுதின படியாலா?

Share this post


Link to post
Share on other sites

அப்ப நீங்க றோ இல்லையா பயலுக பொய் சொல்லிருக்குறாங்க  போல  :D

 

நான் றோ இல்லை  றோ வோடு கள்ளத் தொடர்பு மட்டுமே உள்ளது ...எங்கடை ஆக்களுக்கு இந்த உலகத்திலை றோ ..சி ஐ ஏ  .இலங்கை( புலனாய்வு பெயர் தெரியாது )இதை விட்டால்  வேறை புலனாய்வு அமைப்புகளின் பெயரே தெரியாது ..அல்லது  வேறு நாடுகளிடம் புலனாய்வு அமைப்பு இல்லை

Share this post


Link to post
Share on other sites

சாஸ்திரியின்ட புத்தகத்தை வாசித்திருந்து அல்லது அது பற்றி தெரிந்திருந்தும் ஒன்றாக மேடையில் அவர் அமந்திருந்தது சாஸ்திரிக்கு கிடைத்த ஒரு வித வெற்றி தானே...சீமான் போன்றோர் இந்த நூலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சாஸ்திரி எழுதி இருந்தார்.அது உண்மையோ தெரியாது!...உண்மையாயிருந்தால் அப்படி என்ன அந்த புத்தகத்தில் எழுதியிருக்குது என எதிர்க்க வெளிக்கிட்டார்கள்?...அவர்களது அமைதிப் படை பற்றியும்,அவர்கள் செய்த கொடுமைகள் பற்றியும் எழுதின படியாலா?

 

இலக்கிய ஆர்வம் காரணமாக அல்லது இந்தியப்படையுடன் சம்மந்தப்பட்ட புஸ்தகம் என்பதனால் கரிகரன் வருகை தந்து இருக்கலாம். புஸ்தகத்தில் உள்ளது பற்றி என்ன கூறினார் என்று வீடியோவை இணைத்தால் அறியலாம். மேடையில் உட்கார்ந்தார் என்பதை புஸ்கத்தில் உள்ளவனற்றுடன் உடன்படுகின்றார் என்று எடுத்துக்கொள்ள இயலாதே. நாளை கோத்தாவும் முள்ளிவாய்க்கால் பற்றி யாராவது எழுதும் புஸ்தக வெளியீட்டில் கலந்து கொள்ளலாம். அதற்காக, கோத்தா குறிப்பிட்ட புஸ்தகத்தின் உள்ளடக்கத்துடன் உடன்பட்டு போர்குற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடும் என்று அர்த்தம் இல்லையே. இவ்வளவு படங்கள் இணைக்கும் சாஸ்திரி வெளியீட்டு விழாவின் வீடியோவை இணைக்கலாமே? யார் யார் என்ன கூறினார்கள் என்று இதன்மூலம் அறியலாம்.

Share this post


Link to post
Share on other sites

இலக்கிய ஆர்வம் காரணமாக அல்லது இந்தியப்படையுடன் சம்மந்தப்பட்ட புஸ்தகம் என்பதனால் கரிகரன் வருகை தந்து இருக்கலாம். புஸ்தகத்தில் உள்ளது பற்றி என்ன கூறினார் என்று வீடியோவை இணைத்தால் அறியலாம். மேடையில் உட்கார்ந்தார் என்பதை புஸ்கத்தில் உள்ளவனற்றுடன் உடன்படுகின்றார் என்று எடுத்துக்கொள்ள இயலாதே. நாளை கோத்தாவும் முள்ளிவாய்க்கால் பற்றி யாராவது எழுதும் புஸ்தக வெளியீட்டில் கலந்து கொள்ளலாம். அதற்காக, கோத்தா குறிப்பிட்ட புஸ்தகத்தின் உள்ளடக்கத்துடன் உடன்பட்டு போர்குற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடும் என்று அர்த்தம் இல்லையே. இவ்வளவு படங்கள் இணைக்கும் சாஸ்திரி வெளியீட்டு விழாவின் வீடியோவை இணைக்கலாமே? யார் யார் என்ன கூறினார்கள் என்று இதன்மூலம் அறியலாம்.

நீங்கள் கேட்பதிலும் ஒரு வித நியாயம் இருக்குது. சாஸ்திரி காணொலியை இணைத்தால் ஹரிகரன் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்கலாம். ஆனால் எது எப்படி இருந்தாலும் ஹரிகரன் இப்படி நூல் வெளியீட்டுக்கு வந்ததே ஒரு மாற்றம் தானே

Share this post


Link to post
Share on other sites
ஹரிகரனுக்கும் சாத்திரிக்கும் எவ்வளவு உறவு இருந்திருக்கிறது ?
ஒரு காரணம் இருக்கத்தானே வேண்டும் 

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் கேட்பதிலும் ஒரு வித நியாயம் இருக்குது. சாஸ்திரி காணொலியை இணைத்தால் ஹரிகரன் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்கலாம். ஆனால் எது எப்படி இருந்தாலும் ஹரிகரன் இப்படி நூல் வெளியீட்டுக்கு வந்ததே ஒரு மாற்றம் தானே

பாகம் 3ஆவது 4வதை எப்படி மாற்றவேண்டும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும்.
எல்லாம் ஒரே மாற்மாத்தான் இருக்கும். 
மாத்தி மாத்தி வித்தை காட்டினால்தான் ......... கொஞ்ச பேர் என்றாலும் நம்புவார்கள்.
ஒரே மாஜிக்கை எத்தனை தடவை நீங்கள் சென்று பார்ப்பீர்கள் ??? 
 
நீங்கள் இந்தியாவில் பிரபாகரனுக்கு சிலை வைத்தால் 
திறப்பதற்கு கரிகரன் வருவார்.
 
உங்கள் இருவரையும் நம்பி பட்டவன் யாரும் வர மாட்டன் என்பது தான் கசப்பான உண்மை. 
பட்டவனுக்கு 
ஏன் ..?
எங்கே ...?
யார் ....?
 
என்பதற்கு பதில் வேண்டும். 
கூத்தாடிகளுக்கு தேவையில்லை அவர்களுக்கு அது தொழில்.
தமிழனுக்கு உயிர்!
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
 
முகநூலில்
 

ஆயுத எழுத்து என்ற இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடக்கவிருந்தபோது, சில இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. அதையும் மீறி, ஜனவரி 9ல் வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. அப்போது இலங்கையில் இருந்ததால், இந்த நிகழ்வு எதையும் நேரில் பார்க்க முடியவில்லை.

இலங்கையின் உள்நாட்டுப் போர் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், புலிகள் இயக்கத்தை விமர்சிக்கிறது என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணமாக கூறப்பட்டது. ஒரு படைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் எப்படி, சம்பந்தப்பட்ட படைப்பை பார்க்கவோ, படித்திருக்கவோ மாட்டார்கள் என்பதற்கு இந்த நாவல் சிறந்த உதாரணம்.

சுமார் 400 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் உண்மையில், புலிகள் இயக்கத்தின் பார்வையில்தான் இலங்கை இனப்போரின் பல கால கட்டங்களைச் சொல்லிச் செல்கிறது.

சமீப காலத்தில் நான் படித்த நாவல்களில் மிக சுவாரஸ்யமான நாவலாக இதையே குறிப்பிடுவேன். 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்தோடு துவங்குகிறது கதை. அந்தக் கலவரங்களையொட்டி, புலிகள் இயக்கத்தில் சேர்கிறான் நாயகன். 2009ஆம் ஆண்டில் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தவுடன், நாயகனும் இறப்பதாக நாவல் முடிகிறது.

இதற்கு நடுவில், புலிகள் இயக்கத்தில் சேரும் நாயகன் இந்தியாவுக்கு வந்து பயிற்சி பெறுவது, குண்டுகளைச் செய்வதில் தேர்ச்சி பெறுவது, பிரபாகரனின் திருமணம், அந்தத் திருமணம் இயக்கத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சி, சக போராளி இயக்கங்களுடனான மோதல், சிறிசபாரத்தினம் கொல்லப்படுவது, வெளிநாட்டிற்குச் செல்லும் நாயகன், போலி ஆவணங்களை உருவாக்குவதிலும் ஆயுதக் கொள்முதல் செய்வதிலும் வல்லவனாக உருவெடுப்பது, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை துவங்கியவுடன் வேலை இழந்து போவது என விரிகிறது இந்த நாவல்.

பொதுவாக, இனப் போர் குறித்த பதிவுகளில், இலங்கை அரசு, ராணுவம் ஆகியவை சிறுபான்மையினர் மீது நிகழ்த்தும் தாக்குதல்கள், அதன் கொடூரங்கள், அதற்கு தமிழர்களின் பதிலடி என்பதாக விரியும். ஆனால், இந்த நாவல் ஒரு விடுதலை இயக்கத்திற்குள் இருக்கும் கடைநிலை வீரனின் கதையாக விரிவதால், இயக்கங்களின் மனப்போக்கை புரிந்துகொள்ள உதவுகிறது.

போராளி இயக்கங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் நிகழ்வுகளும் அதற்கான அற்ப காரணங்களும் ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு இயக்கத்தினரின் கையில் சிக்கிக்கொண்டால், அவர்கள் அனுபவிக்கும் சித்ரவதைகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இந்த நாவில் இரண்டு முக்கியமான பதிவுகளைச் செய்கிறது. ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட நிகழ்வு ஒரு இஸ்லாமியக் குடும்பத்தின் பார்வையில் முன்வைக்கப்படுகிறது.

இரண்டாவது, இந்திய அமைதி காக்கும் படை அங்கே செய்த அட்டூழியங்கள். இந்த இரண்டு பதிவுகளுமே, வேறு புத்தகங்களில் இல்லாத வகையில் சொல்லப்படுகின்றன.
இதுதவிர, புலிகளின் சர்வேதச வலைப்பின்னல் பற்றிய தகவல்கள் ஆச்சரியத்தையும் சாகஸ உணர்வையும் தூண்டுகின்றன.

புலிகள் இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எதையும் நாவல் நேரடியாக முன்வைக்கவில்லை. ஆனால், நுணுக்கமான பல விமர்சனங்கள் புத்தகம் நெடுக விரவிக்கிடக்கின்றன.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், யாழ்ப்பாணத்தில் இருக்கும் மானிப்பாயில் பிறந்தவர். கௌரிபால் சிறி என்ற இவர், சாத்திரி என்ற பெயரில் புத்தகத்தை எழுதியிருக்கிறார். 1984ல் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த இவர் 2001ஆம் ஆண்டுவரை இயக்கத்தில் இருந்திருப்பதாகச் சொல்கிறார். தன் அனுபவத்தில் 40 சதவீதத்தையே இந்த புத்தகத்தில் எழுதியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார் சாத்திரி. மீதம் இருக்கும் 60 சதவீதத்திற்காக காத்திருக்கலாம்.

இலங்கையின் உள்நாட்டுப் போர் குறித்து திறந்த மனதோடு அறிந்துகொள்ள விரும்புபவர்கள் நிச்சயம் இதைப் படிக்க வேண்டும்.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நான் றோ இல்லை  றோ வோடு கள்ளத் தொடர்பு மட்டுமே உள்ளது ...எங்கடை ஆக்களுக்கு இந்த உலகத்திலை றோ ..சி ஐ ஏ  .இலங்கை( புலனாய்வு பெயர் தெரியாது )இதை விட்டால்  வேறை புலனாய்வு அமைப்புகளின் பெயரே தெரியாது ..அல்லது  வேறு நாடுகளிடம் புலனாய்வு அமைப்பு இல்லை

 

அப்ப உங்களுக்கு றோவுடன் கள்ள தொடர்பு மட்டும்தான் இருந்ததா? நல்லது. உங்களுக்கு றோவுடன் நேரடி தொடர்பு இருந்தது என்று கருதும் அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன்.  :D

Share this post


Link to post
Share on other sites

நிறைய ஆத்மாக்கள்  சாந்தி அடைய வேண்டியிருக்கு ..அது கிடக்கட்டும் ..எனது நாவலில் இந்தியப்படைகளின் பெரும்பாலான விதி மீறல்கள் படுகொலைகளையும் பதிவு செய்துள்ளேன் அத்தனையையும் மேடையில் வைத்து ஹரிஹரன் ஒத்துக்கொண்டார் ..எனது நாவலின் வெற்றியாக அதனை பார்கிறேன் .எனது நாவல் வெளியீடுக்கு ஹரிஹரனை அழைக்கிறேன் என்கிற விளம்பரத்தை பார்த்ததும் வழமை போல எம்மவர்கள் சாத்திரி றோ உளவாளி என்று கூச்சல் போடத்தான் முடிந்தது ஆனால் இந்திய இராணுவத்தின் படுகொலைகளை பதிவு செய்து விட்டு  அதனுடன்  சம்பத்தப்பட்ட  ஒரு அதிகாரியின் வாயாலேயே பொது மேடையில் தவறை ஒத்துக்கொள்ள வைக்க யாராலாவது முடிந்தால் அதனை செய்து விட்டு  இங்கு வந்து ...வேண்டாம் போது வெளியில் வந்து முழங்குங்கள்

 

அப்ப என்ன ஐயா சொல்ல வாறியள்? 
புலிகள் சாத்திரியாரை இயக்கத்தை விட்டு துரத்தியது போல றோ ஹரிஹரனையும் துரத்தி விட்டார்களா என்ன?  :D
 
சாட்சாத் மேதகு சாத்திரி அவர்களே தமிழ் செல்வனின் மனைவி பிரான்சுக்கு போன நேரம் பார்த்து மிஸ். செல்வி என்கிற கதை எழுதிய உங்களை போன்ற பிறவிகள் உண்மையிலேயே புலிகள் இயக்கத்தில் இருந்திருந்தால் மகத்தான தியாகம் செய்த அந்த மாவீரர்களின் ஆத்மா ஒரு போதும் சாந்தி அடைந்திருக்காது. 
 
வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம் என்று எழுதிய சாத்திரியார் தானே ஆயுத எழுத்து என்கிற பெயரில் வியாபாரத்தை தொடங்கிய போது "வியாபாரிகளால் வீழ்ந்த" என்கிற சொல் பதத்தை நீக்கி விட்டு "மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்" என்று மாறியதன் மர்மம் என்னவோ?  :D
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் கேட்பதிலும் ஒரு வித நியாயம் இருக்குது. சாஸ்திரி காணொலியை இணைத்தால் ஹரிகரன் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்கலாம். ஆனால் எது எப்படி இருந்தாலும் ஹரிகரன் இப்படி நூல் வெளியீட்டுக்கு வந்ததே ஒரு மாற்றம் தானே

 

எது எப்படி இருந்தாலும் ரதியக்கா தேம்ஸ் நதிக்கைரையில் இருந்து கொண்டு இப்படியெல்லாம் எழுதுவதும் ஒருவித மாற்றம் அல்லவா?  :D

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் கேட்பதிலும் ஒரு வித நியாயம் இருக்குது. சாஸ்திரி காணொலியை இணைத்தால் ஹரிகரன் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்கலாம். ஆனால் எது எப்படி இருந்தாலும் ஹரிகரன் இப்படி நூல் வெளியீட்டுக்கு வந்ததே ஒரு மாற்றம் தானே

 

சாஸ்திரியின் புஸ்தகவெளியீடு இரகசியமாக ஒன்றும் நடைபெறவில்லையே. அப்படியாயின், புஸ்தகவெளியீட்டில் கரிகரன் என்ன கூறினார் என்பதை ஆதாரத்துடன் வீடியோவாக இணைப்பதில் என்ன தயக்கம்? ஆளுக்கு கையிலொரு செல்லுடன் திரியும் இந்தக்காலத்தில் வீடியோ எடுக்க முடியவில்லை என்று மட்டும் கூறவிட்டால் சரி.

Edited by கிழவி

Share this post


Link to post
Share on other sites

ஆயுத எழுத்து நாவல் விமர்சனம் . அம்ருதா இதழில் ..கோமகன்

6:30 AM Posted by Siva Sri No Comment

 என் பார்வையில் ஃ ( ஆயுத எழுத்து )

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை. அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ??? என்று ஓர் கேள்வியை நான் எழுதிய " சின்னாட்டி " என்ற சிறுகதையில் எழுப்பியிருந்தேன். நாங்கள் எப்பொழுதுமே  உண்மையைவிடக்  கற்பனையில்  மிகுந்த ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கின்றோம் . உண்மையைவிடப் பொய்தான்  மிகவும்  உண்மையாகத் எங்களுக்குத் தெரிகிறது. கற்பனைகள் என்றுமே  பலவகைகளில்  எங்களுக்கு திருப்தியைக் கொடுக்கின்றன .எங்களுடைய கற்பனைகள்  எங்கள் அகங்காரத்திற்கு  திருப்தியை  அளித்துக் கொண்டிருகின்றது. இன்றைய இலக்கிய  வெளியில் பெரும்பாலானவர்கள் உண்மைகளை பேசாது விடுகின்றனர். உண்மை பேசுவோர் பேசுவது உண்மை என்று தெரிந்திரிந்தும், இந்தப் பெரும்பாலானவர்கள் வெறும் கற்பனை வடிவங்களுக்கே   முண்டு கொடுக்கின்றனர் .

இவர்கள் உண்மைகளைப் பேசுவோரை கள்ளத்தனமாக ரசித்து அவர்களை  ஓர் செப்படிவித்தைக்காரர்கள் போல் பார்க்கின்றார்கள். ஆனால் உண்மை பேசுவோரை ஓர் பேசுபொருளாக இவர்கள் அங்கீகாரம் கொடுக்கத்தயாரில்லை. இந்த உண்மைகள் பேசுவோரை பெரும்பாலானவர்கள் இழிசனங்களாக, தீட்டுப்பட்டோராக கருதுகின்ற வேளையில், பிரான்ஸின் தென்கிழக்கு மூலையில் இருந்து உண்மைகளின் சத்தியாவேசம் ஆயுத எழுத்தாகப் பீறிட்டுப் பாய்கின்றது. உலகாளாகிய அளவில் ஆயுத மொழிக்கு ஒரேயொரு மொழி தான் உண்டு. அதுதான் கொலை. ஆயுத மொழிகள் என்றுமே கொலைகளுக்கான காரண காரியங்களை பொதுவெளிகளில் ஆராய முற்படுவதில்லை .ஆனால் காலம் எப்பொழுதுமே ஒரே திசையிலும் ஒரே நேர் கோட்டிலும் பயணம் செய்வதில்லை .

அதன் சுழற்சியில் அகப்பட்ட ஆயுத மொழிகள் கடந்து வந்த பாதையில் இருந்த உண்மைகளை பேச ஆரம்பிக்கின்றன. அதன் தொடர்ச்சியே சாத்திரி எழுதிய ஆயுத எழுத்து என்று எண்ண இடமுண்டு.
எமது இனம் கடந்து வந்த விடுதலைப் பாதையில் யாழ்ப்பாணியம் தனது வசதிக்கேற்ப ஏறத்தாழ 35 க்கும் மேற்பட்ட போராளிக்குழுக்களை உருவாக்கியிருந்தது. ஆரம்பத்தில் பல கணக்குத்தீர்ப்புகளின் பின்னர்  அவன் சார்ந்த போராளி அமைப்பே தமிழினத்தின் விடுதலைக்காக ஏகபோக உரிமையை எடுத்துக்கொண்டது.   இந்த  அமைப்பின் போராளிகள் தாய் மண்ணிலும் உலகின் பல பாகங்களிலும் நீக்கமறக் கலந்து இருந்தனர். இவர்கள் விட்ட தவறுகள், சீர்கேடுகள் சகலதும் எவ்வாறு  அதன் தலைவரை மட்டுமல்ல, தமிழ் இனத்தின் தலைவிதியை தமிழின் இறுதி எழுத்தான அகேனத்துக்கு  கொண்டு சென்றது என்பதை சல்லடை போட்டு விபரிக்கின்றது ஆயுத எழுத்து. இந்த நாவலை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம்.

01 தாயகத்தில் நடைபெற்ற ஆரம்பகால நடவடிக்கைகளும், அதன் தொடர்ச்சிகளும்.
02 சர்வதேச வலைப்பின்னலில் நடைபெற்ற இரத்தத்தை உறைய வைக்கும் சம்பவங்கள் .
முதல் பகுதியில்  தாயகத்தில் இருந்த போராளிகள்  எவ்வாறு சனங்களுடன் நடந்து கொண்டார்கள் ?? சனங்கள் எவ்வாறு அவர்களுக்கு ஆதாரசுருதியாக இருந்தார்கள்??  பின்னர் அதே சனங்கள் எப்படி அவர்களுக்கெதிராகத் திசை மாறினார்கள் ?? என்பதைக் குறிப்பாக இஸ்லாமியர்களது "ஓர் இரவு புலப் பெயர்வு" உரைகல்லாக நாவலில் ஓடுகின்றது. அந்த பகுதி மனத்தைக் கனக்க வைக்கின்றது. நாங்கள் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றோம் என்று என்மீதே எரிச்சல் பட வைத்தது. அன்றைய புலப்பெயர்வு தங்களுக்கும் வருங்காலத்தில் நடைபெறும் என்பதையும்,  போராளிகளின் இந்த நடவடிக்கைக்கு முண்டு கொடுத்துக்கொண்டும் அந்த அப்பாவி  இஸ்லாமியர்களை வேடிக்கை பார்த்த அந்த சனங்கள் அறிந்திருக்கவில்லை என்பதை நாவல் மறைமுகமாகச்  சுட்டி நிற்கின்றது.

மேலும் இந்திய அமைதிப்படை வருகையும் அதனுடனான முறுகல் நிலையும்,  அதனுடைய  செயற்பாடுகள் பற்றியும் வரும் பகுதியானது நாவலுடன் ஒட்டாது கட்டுரைத்தனமையாக துருத்திக்கொண்டு இருக்கின்றது.  இருந்த போதிலும் , " ஈழத்தில் பல்லாயிரம் குடும்பங்கள் யாரோ ஒருவரை இழந்து கதறினார்கள். எங்கள் கதறல்கள் யாவுமே அவர்களின் தேசத்தின் காற்றிலேயே  கரைந்து போனது ; யார் காதிலும் விழவில்லை. " (பக்கம் 182) என்று  இந்திய அமைதிப்படையின் செயற்பாடுகளைப்  நாவலாசிரியர் ரத்தினச் சுருக்கமாக வாசகர் மனதில் பதியவிட்டிருப்பது நாவலாசிரியரின் சொல்லாட்சியை படம் பிடித்துக்கட்டுகின்றது.

நான் ஏலவே கூறிய முதல் பகுதியில், யதார்த்தங்களை அறியாது ஆயுத மனநோய் பிடித்த நிலையில் இயக்க முரண்பாடுகள் எவ்வாறு  போராளிகளால் கணக்குத் தீர்க்கப்பட்டது என்பதை விபரிக்கின்ற இடத்தில் என்னையறியாது கண்கள் கலங்குவது தவிர்க்க முடியாது போகின்றது. அதிலும் ஓர் இடம் என்னை மிகவும் பாதித்தது. அந்த இடம் பின்வருமாறு நாவலில் விரிகின்றது,
" அதுவரை அவன் கிச்சானின் செய்கைகளை உற்றுப்பார்த்து கொண்டிருந்தவன் அவனது பேச்சு ,சுட்டித்தனம் ,எதையாவது சொன்னால் பட்டென்று பதில் சொல்லும் திறமை பிடித்திருந்தது .சைகைமூலம் ஜும்கலியிடம் "யாரது" ? என்று கேட்டான் .  அவனின் பெயர் இஸ்மாயில் .அப்பா ஆரோ பாக்கிஸ்தான் வியாபாரியாம். இவன் பிறந்ததோடை அவன் விடுட்டுப்போய்விட்டான் ?அவன்ரை அம்மா வேறை கலியாணம் கட்டிப் போயிட்டாளாம் .இவனைத் துரத்தி விட்டுட்டாங்கள் .இவன் போய் ஒரு தேத்தண்ணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான் .ஒருநாள் இவன்ரை குளப்படி தாங்காமல் முதலாளிக்காரன் இவனுக்குப் பிடரியிலை ஒண்டு போட,இவனும் சுடுதண்ணியாலை முதலாளிக்கு எத்தி போட்டு  ஓடியந்து எங்களோடை வந்து சேந்திட்டான் .இப்பதான் 11 வயதாகுது டிரெயினிங்குக்கும் அனுப்பேலை இங்கே முகாமிலை வேலையள் செய்யட்டும் எண்டு விட்டிருக்கிறன் .நல்ல கெட்டிக்காரப் பெடியன் .அதை விட நல்லாய் டீ போடுவான் .இங்கேயிருந்தே படிக்கிறான் " என்று சொல்லி முடித்தான் ஜும்கலி .

பக்கம் ( 289 - 290 ).
சில விசையங்களைக் கதைத்துவிட்டு ஜும்கலி புறப்படும் போதுதான் அவனுக்குக் கிச்சானின் ஞாபகம் வந்ததால் அதைப்பற்றி விசாரித்தான் " அது வேறை கதையடா !" என்றபடி தொடங்கினவன் , தெரியும்தானே மச்சான் .இயக்கம் உள்ளை ஜிகாத் புகுந்துட்டுதெண்டு எல்லா சோனகரையும் களையெடுப்பு நடத்தினது .அண்டைக்கு கரிகாலன் முகாமுக்கு வந்தவன். அவனுக்கு கிச்சான் டீ கொண்டு போய் குடுத்தவன் " என்று சொல்லத் தொடங்கினான் .

டீ யை வாங்கிய கரிகாலன் அவனை உற்றுப் பார்த்திட்டு " டேய் நீ துலுக்கன் தானே ?" கிச்சான் பேசாமல் தலையை குனிந்தபடி நிக்க , முகாம் பொறுப்பாளராக இருந்த குமணனை கூப்பிட்ட கரிகாலன் , டேய் இவனை கொண்டு போ ........... கொண்டுபோய் போடு " என்று கத்தினான் .
அவன் தயங்கியபடி " அண்ணை கிச்சான் சின்ன வயசிலை இஞ்சை வந்துட்டான். அதைவிட அவன் இஞ்சை வந்ததிலை இருந்து வெளியாலை ஊருக்குள்ளை போறேல்லை .இவனுக்கும் ஜிகாத்துக்கும் தொடர்பு ஒண்டும் இருக்காது எண்டு எங்களுக்கு நல்லாய் தெரியும் .அதுதான் அவனை ஒண்டும் செய்யேலை .பாவம் சின்னப் பெடியன் .வேணுமெண்டால் அவனை வெளியாலை அனுப்பி விடலாம்" என்றான்.

கோபத்தில் கரிகாலன் " டேய் நான் சொன்னதை செய் என்று கத்தினான்.
ஆனால், குமணன் கிச்சானுக்காக  மீண்டும் வாதாடிப்பார்த்தான் .ஒரு பிரயோசனமும் இல்லை ." அவனைக் கொண்டு போய் கிடங்கு வெட்டச் சொல்லு , நானே வந்து போடுறன் " என்று கரிகாலன் கறாராகச் சொல்லி அனுப்பி விட்டான் .அதுவரை பேசாமல் தலையைத் தொங்கப் போட்டபடி நின்று கொண்டிருந்த  கிச்சான் ,பேசாமல் குமணனுக்கு பின்னாலை நடந்து போனான் . பிக்கானையும் மண்வெட்டியையும் எடுத்த குமணன் முகாமுக்குப் பின்புறம் இருந்த பற்றைப் பகுதியில் கிச்சானிடம் கிடங்கை வெட்டச் சொன்னவன் , அவனுக்கு உதவியாக இன்னொருவனையும் அழைத்து கிடங்கை வெட்டச் சொன்னான். கிடங்கை வெட்டி முடித்த வியர்வையோடு மூச்சு வாங்க குமணனை கிச்சான் பார்க்க, மௌனமாக நின்ற குமணன், கரிகாலனை அழைத்துவரப் புறப்படும்போது, “அண்ணோய் ..!” கிச்சானின் குரல் கேட்டுத் திரும்பியவனிடம், “அண்ணே... எனக்கு அப்பா யாரெண்டே தெரியாது. அம்மாவும் துரத்திவிட்டா.

பிறகு எங்கேயெல்லாமே அலைஞ்சு திரிஞ்சன். ஆனா, நான் இஞ்சை வந்தாப் பிறகு உங்களைத்தான் ஒரு சகோதரமா நினைச்சு பழகியிருக்கிறன். சரியான தாகமா இருக்கு. கடைசியா உங்கடை கையாலை கொஞ்சம் தண்ணி தாங்கண்ணே” என்றதும் குமணன் கொண்டுவந்து கொடுத்த தண்ணீரை வாங்கிக் குடித்தவன், ‘‘அண்ணே, நான் இங்கே வந்தபிறகு தொழுறதைக்கூடக் கைவிட்டிட்டன். நான் ஒரு முஸ்லிம் எண்டதைக்கூட மறந்தேபோயிற்றுது. அதாலைதான் இது அல்லா தந்த தண்டனையா இருக்கும். நான் தொழுகை நடத்துறன். அண்ணே, நீங்கள் போய்க் கரிகாலன் அண்ணையைக் கூட்டி வாங்கோ" என்றுவிட்டுக் கிடங்கின் முன்னால் முழந்தாளிட்டுத் தொழுகை நடத்தத் தொடங்கினான். குமணன் கரிகாலனிடம் போய் விஷயத்தைச் சொன்னதும், அங்கு வந்த கரிகாலனின் பிஸ்டல் தொழுகைநடத்திவிட்டு நிமிர்ந்த கிச்சானின் பிடரியில் அழுத்தியது. கிச்சானின் கண்கள்  மூடிக்கொள்ளத் துப்பாக்கி குண்டைத் துப்புகின்றது. கிச்சான் கிடங்கினுள்  தலைகுப்புற விழுந்தான்."  ( பக்கம் 320 - 321 ).

இந்தப் பகுதி நாங்கள் நிறையவே வினைகளை விதைத்திருக்கின்றோம் என்பதை அப்பட்டமாகக் காட்டி நிற்கின்றது. இன்று அரபு தேசங்களில் ஜிகாதிகள் மேற்கொள்ளும் கொடுமைகளை காணொளிகளில் கண்டு மனம் பதறியும், இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவம் அவன் சார்ந்த நிறுவனத்தின் தலைவரின் அதேவயதையொத்த சிறுவயது மகனைக் கொன்ற பொழுது பொங்கி எழுந்த சனங்கள்  எமது தாயகத்தில் பல கிச்சான்கள் காரணமின்றி ஆயுத மொழிக்கு இரையான பொழுது கள்ள மௌனம் சாதித்ததை நாவல் எள்ளி நகையாடுகின்றது. மொத்தத்தில் முதலாவது பகுதி எனக்கு கிளீன் எஸ்ட் வூட்டின் " கௌபோய் " படங்களையே நினைவு படுத்தியது.
இரண்டாவது பாகம் பிரபல கொலிவூட் படமான ஜேம்ஸ் பொண்ட் தொடர்களையே நினைவு படுத்தியது.இரண்டாவது பாகத்தில்,  இரத்தத்தை உறைய வைக்கும் கணக்குத்தீர்க்கும் காட்சிகளும், சர்வதேச ஆயுதப் பேரங்களும் ,அதனூடாக படுக்கையறைக் காட்சிகளும் தாராளமாகவே அள்ளித்தெளிக்கின்றது.

இந்த கதை சொல்லும் உத்தியானது முதல் பாகத்தில் கட்டுரைகளை வாசித்த வாசகர்களின் மனநிலையை மாற்றியமைத்து கிளுகிளு சம்பவங்களினூடாக தான் சொல்ல வந்த செய்தியினை கச்சிதமாக நாவலாசிரியர் நகர்த்தியிருப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது. ஆனாலும் படுக்கையறைக் காட்சிளைத் தவிர்த்திருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகின்றது. ஏனெனில் அவைகள் சொல்ல வந்த செய்திகளின் வீரியத்தை இருட்டடிப்புச்  செய்து தூக்கலாகாக நிற்கின்றன. பாரிஸில் நான் வாழ்ந்த காலப்பகுதிகளில் பங்கு பிரிப்புகளில் ஏற்பட்ட முரண்களில் நடைபெற்ற இரட்டைப் படுகொலைகளை விலாவாரியாக விபரித்த ஆயுத எழுத்து, தான் சார்ந்த நிறுவனத்தின் ஆரம்ப கால உறுப்பினர் ஒருவரின் படுகொலையை எடுத்துச் சொல்லாது கள்ள மௌனம் சாதிப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்புகின்றது. ஏனெனில் அந்த உறுப்பினர் செய்த ஒரேயொரு குற்றம் தான் சார்ந்த நிறுவனத்தை விமர்சித்தது ஒன்றே .இந்த சம்பவம் நான் வாழ்ந்த காலப் பகுதியில் நடைபெற்று என்னை உலுக்கிய சம்பவமாகும் அதே வேளையில் ஆயுத எழுத்தானது இந்தியாவில் நடைபெற்ற இந்தியப்பிரதமரின் கணக்குத்தீர்ப்பு மர்மமுடிச்சுகளையும் அவிழ்க்கத் தவறிவிட்டதாகவே  எண்ண இடமளிக்கின்றது. அத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட பலரால் இந்த நாவல் செம்மைப்படுத்தப்பட்டாலும், ஆங்காங்கே லகரங்களிலும், ழகரங்களிலும், இடைவெளி விடுவதிலும் ஆயுத எழுத்து தடுக்கி விழுந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. 

10246489_10202469705543685_9172321312615

இறுதியாக நாவலில் வருகின்ற கதை சொல்லியான " அவன் "  இறுதியில் கார் விபத்தில் அகால மரணமானதை இரண்டு விதமாகப் பார்க்கத் தோன்றுகின்றது. ஒன்று இன்றைய அரசியல் சூழலில் (அவன் சார்ந்த நிறுவனத்தின் தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்பது போல ) அவன் தனது வாழ்க்கையை முடித்திருக்க வேண்டும். இரண்டாவதாக, அவன் தவிர்க்க முடியாத கார்விபத்தில் அகாலமாக  இறந்திருக்க வேண்டும். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஆயுத எழுத்து என்பது பலரின் வயிற்றில் புளியைகரைக்கும் ஆயு(த்)த எழுத்தாகவே இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites
கோமகன் சொல்லுறதில ஒரு நியாயம் இருக்கு.
சாத்திரி முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்படும்போது இலங்கையில் 
இல்லை. இங்குஇருந்த போராளிகள் உண்மையை எழுதுவார்கள்.
நான் இந்த புத்தகத்தை வாசித்தேன்.இதைப்போன்று பல இடங்களில் 
பொய்கள் புனையப்பட்டிருக்கிறது.ஆனால் பல உண்மைகளும் எழுதப்பட்டிருக்கிறது.இதன் காரணமாய் பலர் இதை உண்மை தொடர் என்று நினைக்கலாம்.  
 
Edited by kkaran

Share this post


Link to post
Share on other sites

கோமணன் சொல்லுறதில ஒரு நியாயம் இருக்கு.

ஐயா, பெயரை இப்படி மாற்றிவிட்டீர்களே! எனக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. :lol: பக்கத்தில் இருந்து வேலை செய்பவர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்கின்றார்கள். :wub:

Share this post


Link to post
Share on other sites

:lol::D எனக்கும் தான் முடியல! இன்னும் அவர் மாற்றவில்லை! எவ்வளவு லொள்ளிப் பாருங்கோவன்!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • அட இனிமேலாவது துக்ளக் வாங்கி படியுங்க.
  • குளிருக்கு... வேலைக்குப் போகாமல், வீட்டிலை இருக்கிறதே..... சந்தோசம் தானே... கவி.  🤣
  • இந்தியாவிலிருந்து பூக்கள், பழங்கள், சிற்றுண்டிகள் கொண்டு வர யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் தடையாம்.! தமிழகத்திலிருந்து கொண்டுவரப்படும் அல்வா, மல்லிகை பூ மற்றும் சுவிற் வகைகள் யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் பயங்கரமான பொருட்களின் வகைப்பாட்டுக்குள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் கடும் விசனம் தொிவித்திருக்கின்றனா். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதனைக் கருவி இன்மை காரணமாக பலவகையான பொருட்கள் எடுத்துச் செல்லும் அனுமதிகள் மறுக்கப்படுகின்றது. பரிசோதனையின் போது யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணி தனது உடமைகளை கை மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவலம் காணப்படுகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து இலங்கை வரும் பயணிகள் உறவுகளிற்காக எந்த வகையான பழங்கள் , பூ வகைகளும் எடுத்து வர முடியவில்லை. கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வரும் பயணிகள் இதே வகையான பொருட்களை கொண்டு வரும் போது யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் ஊடாக அவற்றை கொண்டுவர தடை விதிக்கப்படுகின்றது. அண்மையில் திருமண நிகழ்வுக்காக 25 ஆயிரம் ரூபாவிற்கு பூ வகைகளும் , மேலும் 50 ஆயிரம் ரூபாவிற்கு  உணவுகள் , பழங்கள் போன்றவற்றை இருவா் கொண்டு வந்த நிலையில் கொழும்பின் ஊடாக யாழ்.வந்தவாின் பொருட்கள் வந்து சேர்ந்தபோதும் யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக வந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பில் விமான நிலைய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த வகை பொருட்களை எடுத்து வருவது தற்போது விவசாய அமைச்சு தடை செய்துள்ளது. இருப்பினும் கொழும்பில் இயந்திரம் மூலம் பரிசோதனை இடம்பெறும்போது தவறக்கூடும் எனத் தெரிவிக்கின்றனர். https://jaffnazone.com/news/16095
  • சில அவதானிப்புகள்…. 1) படி படி என்று சொன்ன நேரம் , பிடி பிடி என்று சொல்லியிருக்க வேண்டும் - 30 வயது தாண்டியும் திருமணமாகாமல் இருக்கும் பிள்ளைகளின் பெற்றோரின் அங்கலாய்ப்புகள்.. 2) அவுஸ்திரேலியாவில்  படித்து  சராசரி உத்தியோகங்களிலாவது இருக்கும் குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் சீதனம் என்பது அருகி விட்டது போல் தெரிகிறது. 3) பிள்ளைகள் , துணையை தெரிவு செய்வதில் இருந்து கல்யாண வீடு ஏற்பாடுகள் வரை ,தங்களின் முடிவுகள் தான் இறுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் , செலவுகள் உட்பட. 4) பேசிச் செய்யும் திருமணங்களை தற்போதைய இளவல்கள் விரும்புகிறார்கள் இல்லை.  பேசிச் செய்வது , தங்களில் எதோ குறைபாடு இருக்கின்றது  என்ற தோற்றப்பாட்டைத் தருகின்றது என்பது அவர்களின் கருத்து ...