Jump to content

சொல்லாடற்களம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிடுதத்தி .   அவ  என்னை விடக் கூடுதலாக அம்மாவிடம் இந்தமாதிரிப் ஏச்சு வாங்கியிருக்கிறா...! :)

Link to comment
Share on other sites

  • Replies 467
  • Created
  • Last Reply
மிகவும் சரியான சொல் அங்கிடுதத்தி
 
அங்கிடுதத்தி என்னும் சொல்லைக் கண்டுபிடித்த தமிழினி மற்றும் சுவி அண்ணா ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 97.
 
அனைத்துத் தரவுகளும் மூன்று எழுத்துக்களில் அமைந்துள்ளன
 
இரு எழுத்துக்கள் விடை பெற்றுச் செல்ல ஒரு எழுத்து தொடர்ந்து வரும்.
 
தரவுகள் 10.
 
1. அன்னை என்பவள் இவள் தான்                                                                                                                        --------------------------------------
 
2. பிரபலங்களை ஊடகவியலாளர்கள் அணுகுவது இதற்காகத் தான்                                                        ---------------------------------------
 
3. வேட்கை, ஆசை போன்றவற்றை இப்படியும் சொல்லலாம்                                                                     ----------------------------------------
 
4. அகிளானைப் (புற்றெலி) பிடிக்கப் பயன்படுத்தும் பொறி                                                                             ----------------------------------------
 
5. இவன் கழுகுகளின் வேந்தனாம்                                                                                                                        -----------------------------------------
 
6. உறுதிமொழியை இவ்வாறும் கூறலாம்                                                                                                          ------------------------------------------
 
7. பிரியத்தை இவ்வாறு சொன்னால் என்ன?                                                                                                       ------------------------------------------
 
8. இது தான் குன்றிமணி                                                                                                                                            -------------------------------------------
 
9. விசுவாமித்திரனின் சகோதரி                                                                                                                                --------------------------------------------
 
10. ஒருவரை அன்புடன் வரவேற்கும் முறைகளில் இதுவும் ஒன்று                                                               --------------------------------------------
 
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
களம் 97.
 
அனைத்துத் தரவுகளும் மூன்று எழுத்துக்களில் அமைந்துள்ளன
 
இரு எழுத்துக்கள் விடை பெற்றுச் செல்ல ஒரு எழுத்து தொடர்ந்து வரும்.
 
தரவுகள் 10.
 
1. அன்னை என்பவள் இவள் தான்
 
செனனி
 
2. பிரபலங்களை ஊடகவியலாளர்கள் அணுகுவது இதற்காகத் தான்
 
செவ்வி
 
3. வேட்கை, ஆசை போன்றவற்றை இப்படியும் சொல்லலாம்
 
விடாய்
 
4. அகிளானைப் (புற்றெலி) பிடிக்கப் பயன்படுத்தும் பொறி
 
இடார்
 
5. இவன் கழுகுகளின் வேந்தனாம்
 
சடாயு
 
6. உறுதிமொழியை இவ்வாறும் கூறலாம்
 
வாயுறை
 
7. பிரியத்தை இவ்வாறு சொன்னால் என்ன?
 
வாஞ்சை
 
8. இது தான் குன்றிமணி
 
நஞ்சி
 
9. விசுவாமித்திரனின் சகோதரி
 
கௌசிகை
 
10. ஒருவரை அன்புடன் வரவேற்கும் முறைகளில் இதுவும் ஒன்று
 
கைலாகு
 
Link to comment
Share on other sites

களம் 98.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் -------------------------------------------- 
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் நம்ப வைத்து ஏமாற்றுவதை எம் முன்னோர்கள் இவ்வாறுதான் கூறினார்கள்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஒன்பது எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதலாம் எழுத்துடன் ஐந்தாம் எழுத்துச் சேர்ந்தால் பெரும்பாலான பெண்கள் விரும்புவது ஒன்று வரும்.
 
3. முதலாம் மூன்றாம் எழுத்துக்கள் இணைந்தால் ஆன்மீகத்துடன் தொடர்புள்ள பெயர் ஒன்று வரும்.
 
4. மூன்றாம் ஏழாம் எழுத்துக்கள் ஒரே எழுத்துக்களாகும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைப்பிசகு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைப்பிளவு

Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் நம்பிக்கைப்பிசகு
 
நம்பிக்கைப்பிசகு என்னும் சொல்லைத் தந்த வாலிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த தமிழினி மற்றும் நிலாமதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 99.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ---------------------------- 
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் மனதில் எழுந்த நிகழ்ச்சியை அல்லது உணர்ச்சியை மேடையில் வெளிப்படுத்திக் காட்டுதலை இப்பெயர் கொண்டு அழைக்கலாம்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் எட்டு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதல் இரண்டு எழுத்துக்களுடன் இறுதி எழுத்துச் சேர்ந்தால் விளிம்பு என அர்த்தமாகும்.
 
3. இரண்டாம் எழுத்துடன் இறுதி இரரண்டு எழுத்துக்களும் சேர்ந்தால் வகை எனப் பொருள்படும்
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களம் 99.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ---------------------------- 
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் மனதில் எழுந்த நிகழ்ச்சியை அல்லது உணர்ச்சியை மேடையில் வெளிப்படுத்திக் காட்டுதலை இப்பெயர் கொண்டு அழைக்கலாம்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் எட்டு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.

ஓரங்கநாடகம்

2. முதல் இரண்டு எழுத்துக்களுடன் இறுதி எழுத்துச் சேர்ந்தால் விளிம்பு என அர்த்தமாகும்.
ஓரம்

3. இரண்டாம் எழுத்துடன் இறுதி இரரண்டு எழுத்துக்களும் சேர்ந்தால் வகை எனப் பொருள்படும்
ரகம்

Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் ஓரங்கநாடகம்
 
ஓரங்கநாடகம் என்னும் சரியான சொல்லைத் தந்த வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 100.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ------------------------------------ 
 
சகல மதத்தினராலும் கைக்கொள்ளப்படும் ஒரு ஆன்மீகச் செயற்பாடு எனக் கூறலாம்
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஏழு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதல் எழுத்து ஓர் உயிரினத்தைக் குறிக்கின்றது.
 
3. நான்காம் எழுத்துடன் இறுதி இரு எழுத்துக்களும் இணைந்தால் வருவது ஓர் கடல் வாழ் உயிரினம்.
 
4. இரண்டாம் எழுத்துடன் இறுதி மூன்று எழுத்துக்களும் சேர்ந்தால் வருவது பெருக்கலால் ஏற்படும் மாற்றம் எனச் சொல்லலாம்
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களம் 100.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ------------------------------------ 
 
சகல மதத்தினராலும் கைக்கொள்ளப்படும் ஒரு ஆன்மீகச் செயற்பாடு எனக் கூறலாம்
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஏழு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
ஈமச்சடங்கு
 
2. முதல் எழுத்து ஓர் உயிரினத்தைக் குறிக்கின்றது.
 
3. நான்காம் எழுத்துடன் இறுதி இரு எழுத்துக்களும் இணைந்தால் வருவது ஓர் கடல் வாழ் உயிரினம்.
சங்கு
 
4. இரண்டாம் எழுத்துடன் இறுதி மூன்று எழுத்துக்களும் சேர்ந்தால் வருவது பெருக்கலால் ஏற்படும் மாற்றம் எனச் சொல்லலாம்
மடங்கு
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?

Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் ஈமச்சடங்கு
 
ஈமச்சடங்கு என்னும் சொல்லைக் கண்டுபிடித்த வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 101.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ---------------------------------- 
 
பாண்டவர்களுள் ஒருவரின் வெற்றிச் சங்கின் பெயரை நேரடியாகக் குறிக்கின்றது.
 
தரவுகள்: 
 
1. இச்சொல் ஐந்து எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதல் எழுத்துடன் இறுதி இரு எழுத்துக்களும் இணைந்தால் ஓர் நட்சத்திரம் வரும்.
 
3. இறுதி ஐந்து எழுத்துக்களும் பர்மாவின் பண்டைய தமிழ்ப் பெயரைக் குறிக்கும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களம் 101.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ---------------------------------- 
 
பாண்டவர்களுள் ஒருவரின் வெற்றிச் சங்கின் பெயரை நேரடியாகக் குறிக்கின்றது.
 
தரவுகள்: 
 
1. இச்சொல் ஐந்து எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதல் எழுத்துடன் இறுதி இரு எழுத்துக்களும் இணைந்தால் ஓர் நட்சத்திரம் வரும்.
 
3. இறுதி ஐந்து எழுத்துக்களும் பர்மாவின் பண்டைய தமிழ்ப் பெயரைக் குறிக்கும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?

தரவில் பிழை இருக்கலாம்

சகாதேவனின் சங்கின் பெயர் மணி புஷ்பகம் ஏழு எழுத்துக்கள்

மகம் என்பது நட்சத்திரம்

புஷ்பகம் பர்மாவின் பழைய பெயர்

மணிபுஷ்பகம்

Link to comment
Share on other sites

தரவில் பிழை இருக்கலாம்

சகாதேவனின் சங்கின் பெயர் மணி புஷ்பகம் ஏழு எழுத்துக்கள்

மகம் என்பது நட்சத்திரம்

புஷ்பகம் பர்மாவின் பழைய பெயர்

மணிபுஷ்பகம்

மிகவும் சரியான சொல் மணிபுட்பகம்
 
மணிபுட்பகம் என்னும் சரியான சொல்லைக் கண்டுபிடித்த வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
தவறு எனது பக்கம் தான், தவறிற்காக மனம் வருந்துகின்றேன்.
 
இருப்பினும் சரியான சொல்லைக் கண்டுபிடித்த வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.