Jump to content

GARY யின் TVI நேர்காணல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி ஹரி அவர்களே, பொதுவெளியில் நீங்கள் கனேடிய அரசியல் மற்ரும் ஈழத்து அரசியல்பற்றி கதைக்கிறியள் அதனை யாழ்களத்திலையும் இணைத்துள்ளீர்கள்.

 

அண்மைக்காலத்தில் கனடா நாட்டில் இனப்படுகொலை எனும் ரீதியில் தங்களது கருத்துக்களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மற்ரும் பரப்புரைகளில் ஈடுபட்டிருந்த இளையோரை இடைமறித்து ஈழத்தில் நடைபெற்றது நடைபெற்ருக்கொண்டிருப்பது இனப்படுகொலை அல்ல. உங்களுக்கு இனப்படுகொலை என்றால் அதைப்பத்தி ஏதாவது தெரியுமா? நடைபெற்ரது போர்க்குற்றம் என்பதை முன்வைத்தே ஆர்ப்பாட்டங்களில், பரப்புரைகளில் ஈடுபடல்வேண்டும் என கொஞ்சம் மிரட்டினதாகவும் ஒரு இணையத்தளத்தில் செய்தி வந்ததே அதுபற்றி உங்களது கருத்தென்ன?

 

மீண்டும் கேட்கிறேன் பொதுவெளியில் வந்துவிட்டால் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுப்புடன் பதிலளிக்கவேண்டும் என்பதில் எவ்வுத கருத்துவேறுபாடும் இருக்காதென நினைக்கிறேன் ஆதலால்

 

உங்களுக்கு உங்கள் அப்பாவாகிய ஆனந்தசங்கரி அவர்களுக்குமான தற்போதைய தொடர்பாடல் எந்த அளவில் இருக்கின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gari ஆனந்தசங்கரியின் மகனா.....?
பேரைக் கேட்டாலே, சும்மா.... அதிருதில்ல.... :)

Link to comment
Share on other sites

Gari ஆனந்தசங்கரியின் மகனா.....?

பேரைக் கேட்டாலே, சும்மா.... அதிருதில்ல.... :)

 

அதிர வைக்கத்தான் பார்க்கிறார்.  ஆனால், அவரால் முடியாது.  அவர் கனேடிய அரசியலுக்குள் நுழையப் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே திட்டம் போட்டுச் செயற்படத் தொடங்கிவிட்டார்.   அதனால், தமிழ் மக்களுக்கு உள்நோக்கத்தோடு உதவி செய்ததால் சில தவறுகளையும் இழைத்து விட்டார்.  அவர் விட்ட அந்தத் தவறுகளே இப்போது அவரது அரசியல் நுழைவுக்கும் எதிராகப் போய் விட்டது.   

 

தனது கனேடிய அரசியல் லாபத்திற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி அதனை கனடாவில் செயலிழக்கச் செய்து விட்டார்.   அதோடு, தமிழீழ விடயங்களில் மதில் மேலை பூனையாகவே  நடந்து கொண்டார்.   அதனால், இவர் எதிர்பார்த்த ஆதரவு இப்போது இவருக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை.  தனக்கான ஆதரவைப் பெறுவதற்காக இவர் பகீரதமாக முயற்சிக்கிறார்.

 

இவரும் மற்ற அமைப்புகள் போலவே  இளையோரைத் தனது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தி வருகிறார்.  இவர் போட்டியிடவிருக்கும் தொகுதியில் வசிக்கும் ஒருவரை இரு தினங்களுக்கு முன்னர் சந்தித்தேன்.  அவரது வீட்டிற்கு ஹரியுடன் சென்ற இளையோர் ஒருவர், தன்னுடன் அதிகாரத்தனமாகக் கதைத்ததாகவும் அந்தப் பகுதியில் அவர்களைத் தான் முன்பு காணவில்லை என்றும் அதனால் இவர்கள் புதிதா என்றும் அந்தத் தொகுதியில் வசிக்கும் அனைவரையும் தனக்குத் தெரியும் என்பது போலவும் நடந்து கொண்டாராம்.  அவர் நடந்து கொண்ட முறை தனக்குப் பிடிக்கவில்லை என்றும் ஹரிக்கான ஆதரவுப் பத்திரத்தைத் தான் திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.  இதுவரை நாலைந்து தடவைகள் அவர்களது வீட்டிற்கு வந்து சென்றுவிட்டாராம்.  அவர்கள் எனத் தெரிந்ததும் தான் கதவு திறப்பதில்லை எனவும் கூறினார்.  

Link to comment
Share on other sites

Gari ஆனந்தசங்கரியின் மகனா.....?

பேரைக் கேட்டாலே, சும்மா.... அதிருதில்ல.... :)

இருவரும் ஒருவரல்ல என நினைக்கிறேன். :unsure: இவர் களத்தில் சேர்ந்த காலத்தில் இந்தக் கேள்வி எழுந்தபோது மறுத்துவிட்டார். அரசியல்வாதிகள் பொதுவில் பொய்சொல்ல மாட்டார்கள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.