Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழ் சிறி

"இபோலா".... உலகை கதிகலங்க வைக்கும். புதிய வகை நோய்.

Recommended Posts

'எபோலா' காய்ச்சலுக்கு அமெரிக்கா அளித்த மருந்து நன்றாக வேலை செய்கிறது:

லைபீரிய அரசு.

 

மான்ரோவியா: எபோலா காய்ச்சலுக்கு அமெரிக்கா லைபீரியாவுக்கு அளித்த இசட்மாப் மருந்து சோதனை அடிப்படையில் 3 டாக்டர்களுக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக லைபீரிய அரசு தெரிவித்துள்ளது.

 

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உயிர் கொல்லியான எபோலா வைரஸ் பரவி வருகிறது. அதில் குறிப்பாக லைபீரியாவில் தான் எபோலாவின் தாக்கம் அதிகம் உள்ளது. லைபீரியாவில் எபோலா வைரஸ் தாக்கி 413 பேர் பலியாகினர். இந்நிலையில் வைரஸால் புதிதாக தாக்கப்பட்ட 101 பேரில் 53 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் லைபீரியாவில் எபோலா காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 466 ஆக அதிகரித்துள்ளது.

 

20-ebola-11600.jpg

 

இந்நிலையில் லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீஃபின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்கா எபோலா காய்ச்சலுக்கு தான் தயாரித்த மருந்தான இசட்மாப்பை அனுப்பி வைத்தது. அந்த மருந்து சோதனை அடிப்படையில் எபோலா காய்ச்சலால் அவதிப்படும் 3 லைபீரிய டாக்டர்களுக்கு அளிக்கப்பட்டது. மருந்தை எடுத்துக் கொண்ட டாக்டர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக லைபீரிய அரசு தெரிவித்துள்ளது.

 

எபோலா காய்ச்சலுக்கு மருந்தே இல்லை என்பதால் பீதியில் உள்ள மக்களுக்கு இந்த தகவல் ஆறுதல் அளித்துள்ளது.

 

எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 1, 299 பேர் பலியாகியுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Share this post


Link to post
Share on other sites

இதில் கொடுமை என்னவென்றால் இபோலா நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்த வைத்தியர்கள் 83 பேர் இந்த நோயால் இறந்து விட்டார்களாம். :o

Share this post


Link to post
Share on other sites

இபோலாவல் இறந்தவர் தொகை 2300 ஐ தாண்டியுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

இபோலாவல் இறந்தவர் தொகை 2800 ஐ தாண்டியுள்ளது.

 

இரண்டு வாரத்தில் 500க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

Share this post


Link to post
Share on other sites

ஜேர்மனியிலிருந்து..... 500 தன்னார்வ தொண்டர்கள், சுய விருப்பத்தின் பேரில்... இபோலா நோயால் பாதிக்கப் பட்ட  பகுதிகளுக்குச் சென்று கடமையாற்ற விண்ணப்பித்துள்ளதாக, வானொலிச் செய்தியில் குறிப்பிட்டார்கள்.

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • செல்போனில் இருந்து வரும் கதிர்கள் குறைந்த அதிர்வுடைய ரேடியோ கதிர்கள் (no ionized low frequency radio frequency energy) National Cancer Institute ஆய்வு அறிக்கையின்படி இதனால் கான்சர் வரும் சாத்தியத்துக்கு இதுவரை எந்தவித ஆதாரமும் இல்லை. இதயத்துக்கு ஏதாவது தீமை இருக்குமா என்று பல ஆய்வுகள் நடந்துள்ளன. அப்படியும் ஒரு தீங்கும் விளைவிப்பதாக தெரியவில்லை. இதயத்தில் நிறைய மின்சார ஓட்டம் தொடர்ந்து நடப்பதால், செல்போன் அதிர்வுகள் இந்த மின்சார ஓட்டத்தை இடையூறு செய்து அதனால் இருதயத்துடிப்பில் பாதிப்பு ஏற்படலாம் என்று நினைத்து பலதரப்பட்ட வயது, மற்றும் பலதரப்பட்ட உடல் நிலை உள்ள மனிதர்களை வைத்து Clinical studies பல செய்தும் பார்த்து அப்படி இதயத்துக்கு ஒரு பாரதூரமான விளைவுகளும் இருப்பதாக கண்டு பிடிக்கவில்லை. எனது மகனின் நண்பன் (Ross)  அவர்கள் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது அவரின் தமயன் எறிந்த baseball தவறுதலாக  Ross இந்த நெஞ்சில் பட்டுவிட்டது. இதயத்தின் அறைகள் சுருங்கி விரியும் நேரத்தில், மின்சாரம் பாய்ந்து கொண்டு இருக்கும் இடத்தில போய் பந்து அடித்தபடியால் இதயத்தின் மேல் அறைகளில் மின்சார ஓட்டம் குழம்பி அதனால் இதயத்துடிப்பும் குழம்பி (Atrial Fibrillation) போதிய அளவு இரத்தம் மூளைக்கு போவது குறைந்து விட்டது. அந்த இடத்தில் ஒரு Defibriliator இருந்திருந்தால் அன்று அப்படி ஒரு விபரீதம் நடந்திருக்காது. Defibrillator ஐ அதில் கூறியிருப்பது போல நெஞ்சில் பிடித்தால் மீண்டும் மின்சார ஓட்டம் சீராக ஓடத்தொடங்கி இதயமும் ஒழுங்காக துடிக்கத்தொடங்கும். அதனால்தான் இப்போதெல்லாம் First aid kit க்கு பக்கத்தில் defibrillator ஐயும் வைத்திருக்கிறார்கள். நாம் எல்லோருமே ஒரு அடிப்படை முதல் உதவி பயிற்ச்சி பெற்று  வைத்திருந்தால் சிலவேளைகளில் இப்படியான சந்தர்ப்பங்களில் பயன்படும். Ross உடனேயே Helicopter மூலம் அவசர சிகிச்சை பிரிவுக்கு எடுத்து செல்லப்பட்டாலும் அவரது மூளை மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. 3 மாதம் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்லும்போது அவர்களின் குடும்பத்தார் விட்ட அறிக்கையில் " Ross இன்று இரண்டாம் தடவையாக ஒரு குழந்தையாய் வீடு செல்கிறான்" என்று குறிப்பிட்டார்கள். இன்று அவன் 22 வயது இளைஞன். ஆனால் 3 வயதுக்குரிய மூளை வளர்ச்சி மட்டுமே இருப்பதால் படுக்கையில் தான் இருக்கிறான். செல்போனை பற்றிய எனது கருத்து என்னவென்றால், எந்த ஒரு இயற்கைக்கு மாறான பொருளிலும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கும். அதனால் கூடியவரையில் அதை எமக்கு மிக அருகில் வைக்காமல் தவிர்ப்பது நல்லம். மனித குலம் 5 மில்லியன் வருடங்களாக இந்த உலகில் வாழ்கிறோம். ஆனால் எமது நவீன விஞ்ஞானம் , தொழில் நுட்பம் எல்லாம் ஒரு சில நூற்றாண்டுகளில் தான் முன்னேறியது. எமது ஆதி காலத்து ஞானிகள்  விஞ்சானிகள் கண்டுபிடித்த எவற்றையும் நாம் இன்னும் மீள் கண்டுபிடிப்பு செய்யவில்லை. அதனை ஊக்குவிப்பார்களும் இல்லை (அநேகமான). எனவே எமது ஒரு சில நூற்றாண்டுகளே ஆன விஞ்ஞான , மருத்துவ தொழில்நுட்ப கண்டு பிடிப்புக்கள் எல்லாமே இன்னும் குழந்தையாக தவண்டு கொண்டு இருக்கிறது. தத்தி தத்தி நடந்து, நிமிர்ந்து நடப்பதற்கு இன்னும் பல நூறாண்டுகள் தேவை.  எமது உடல் ஒரு விசித்திரமான மிகவும் சிக்கலான ஒரு இயந்திரம். அதனை பற்றி நாம் அறிந்திருப்பது 1% மட்டுமே. அத்துடன் எமது உடல், உலகம் பற்றியதான எமது பார்வை, விளக்கம் எல்லாம் இந்த ஐந்து உறுப்பை கொண்டே . அதுக்கும் மேலாக எமது ஐம் புலன்களால் அறிய தெரிய முடியாத  விடயங்கள் நிறய, எமது கற்பனைக்கு எட்டாத அளவு உள்ளன. இந்த விளக்கங்களை நான் வாசித்த, கேள்விப்பட்ட, எனது சிந்தனைகளை வைத்து நானே விளங்கிக்கொண்டவை. இவற்றை எனது மாணாக்கர்களுக்கு கூறும்போது மிகவும் சந்தோசப்படுவார்கள் . வேறு  ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது  நான் அண்மையில் அழகப்பா பல்கலை கழக கடல் ஆராச்சி  பீட மாணவர்களுக்கு கடலை பற்றி சொன்ன விடயங்களை எழுதுகிறேன். சிறி எங்கேயோ தொடங்கி எங்கேயோ முடிச்சாச்சு.
  • பார்வைகள்  வித்தியாசப்படும் . நெருப்பில்லாமல் புகையாது நீங்கள்  என்னடாவென்றால் ஒன்றுமே நடக்கவில்லை என  நிறுவமுற்படுவது பிழையான ஒன்று.
  • கேட்டீர்களா? தானே பார்க்காத உறுதி செய்யாத ஒன்றை எப்படி பத்திரிகை அறிக்கையாக்கியிருக்கிறார் என்று?  இதில் சொல்ல என்ன இருக்கிறது? அவரது காவியக் கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொன்டு பின்னியிருக்கும் கற்பனையே talks in volumes!
  • நல்லது உங்கள் கருத்தை மனோன்மணிக்கு மெயிலில் அனுப்பி உள்ளேன் பதில் வரட்டும் பார்க்கலாம்.
  • திரியில் இருக்கிற தகவல் தான் காவப் பட்டிருக்கிறது முதலாளி! (212 பன்னிபிட்டிய பஸ் ரூட் இலக்கம்!) திரியின் கருத்து அல்ல! நீங்கள் கட்டாயம் போய் பன்னிபிட்டிய பஸ் கதையை கேட்க வேண்டும்!😁