Jump to content

சுப்பர் மடம் பன்னாடைகள்


Recommended Posts

இன்றய சுப்பர்மடம் நிகழ்ச்சியில் மகிந்த விமல் வீரவன்ச வை நக்கலடிப்பதோடு முடிந்தது.

சுப்பர் மடம் என்ற நிகழ்ச்சி வந்து தாயகத்தில் (அதுவும் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பிரதேசத்தில்) உள்ள சாதாரண தேநீர்கடை சம்பாசனையாக வருகிறது.

இன்றைய தாயகத்து சூழ்நிலையில் மக்கள் நக்கலடித்து பொழுது போக்காட்டும் மனேநிலையிலா இருப்பார்கள்? உணவுத்தட்டுப்பாட்டின் உச்சத்தில் சிலர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள் களவெடுக்க தயாராகிறார்கள் என்ற மிகமோசமான அவலம். அடிப்படை உணவிற்கே தட்டுப்பாடு என்றால் சிறுவர் போசாக்கு? மருந்துகள்? வைத்தியசாலைகளிற்கு மின்சாரம்? அங்குள்ள மக்களின் நிலமையை சித்தரிப்பதான சம்பாசனையாக கொள்வதற்கு பலவிடையங்கள் உண்டு ஆனால் சுப்பர்மடத்தில் எதிரியை நக்கலடித்து மகிழ்விக்கிறார்களாம் நேயர்களை.

இவர்களின் எதிரியை நக்கலடிக்கும் நிகழ்ச்சி புலம்பெயர்ந்த மக்களை சிந்திக்க தூண்டுமா? அங்குள்ள அவலத்தை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று தூண்டுமா? இல்லை. மக்களை கவுண்டமணி செந்தில் நகச்சுவை மாதிரி ஏதே புலம்பி மகிழ்விக்க உதவலாம். ஏன் கூடவே கொஞ்சப்பேர் உடுப்புகள் எல்லாத்தை களட்டிப்போட்டு நடனம் ஆடினா புலம்பெயர்ந்த நேயர்களை இன்னும் அதிகமாக மகிழ்விக்கும் செய்வார்களா சுப்பர் மடத்தவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்காலைபோவாரே உங்களுக்கு காலம் கூடாது. ஆகா ஓகோ என்று புழுகாமல் மோதப்போய் உழவாழியாகப்போறியள். உங்காலை சிவனேசமூர்த்தி நீதிமன்ற உத்தரவோடை வரப்போறார். தவறுகளை திருத்தமாட்டார்கள். வாயில் குறையில்லை. உந்தத் தொலைக்காட்சி சந்தாவை புதுப்பிக்காமல் இருங்கோ. பிளட் பிறஷர் கூடாது நீங்களும் சுகதேகியாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

உந்தத் தொலைக்காட்சி சந்தாவை புதுப்பிக்காமல் இருங்கோ. பிளட் பிறஷர் கூடாது நீங்களும் சுகதேகியாக இருக்கலாம்.

அதுக்கும் பார்க்க இரத்தோட்டத்தையே நிறுத்தினா, ஏன் பிளட் பிரசர் வருது?! :P

அரை மணித்தியால வானொலி நிகழ்ச்சியை தயாரிப்பதற்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தயாரிப்பதற்கும் நிறைய வித்தியாசமுண்டு. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிக்க நேரமும், உழைப்பும் மிக மிக அதிக பட்சமாகத் தேவைப்படுகிறது. அதோடு ரீரீஎன் நிறுவனமே தன் சார்ந்த ஒரு குறிப்பிட்ட கலைஙர்களை வைத்து தயாரித்தளிப்பது என்பது மிக மிக கடினம். எனினும் அவர்கள் தம்மாலான தயாரிப்புகளை வெளிக் கொண்டு வருகிறார்களே என்ற ரீதியில் முதலில் வரவேற்போம்.

அதேவேளையில்.. வெளியில் உள்ள கலைஞர்களும், தொலைக்காட்சி நிகழ்வுகளைத் தயாரிக்க வல்லவர்களும் அவர்களுடன் கைகோர்க்கும்போது தமிழ்த் தொலைக்காட்சி இணையமானது அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தாவ முடியும்.

எனவே, தற்போது விமர்சனம் என்ற ரீதியிலே அவர்களுக்கு ஆலோசனைகளை முன்வைப்பதே மிகவும் சிறந்தது.

அஸ்வினியின் சிந்தனை பெட்டர் தான் மகிந்த சிந்தனை!! :oops:

Link to comment
Share on other sites

கடந்த சுப்பர்மட நிகழ்சியைதான் குறுக்ஸ் கூறுகிறார் என நினைக்கிறேன், பன்னாடை என்ற சொல்லை

இருவர் பாவித்தார்கள் ரஜபக்சாவுக்குதான் அந்த வார்த்தை பாவித்தார்கள், அவருக்கு ஏற்புடைய வார்த்தைதான், ஆனால் எமது தொலைக்காட்சியில், பலரும் பார்க்கும் தொலைக்காட்சியில் இது தேவையா?

Link to comment
Share on other sites

குறுக்காலைபோவாரே உங்களுக்கு காலம் கூடாது. ஆகா ஓகோ என்று புழுகாமல் மோதப்போய் உழவாழியாகப்போறியள். உங்காலை சிவனேசமூர்த்தி நீதிமன்ற உத்தரவோடை வரப்போறார். தவறுகளை திருத்தமாட்டார்கள். வாயில் குறையில்லை. உந்தத் தொலைக்காட்சி சந்தாவை புதுப்பிக்காமல் இருங்கோ. பிளட் பிறஷர் கூடாது நீங்களும் சுகதேகியாக இருக்கலாம்.

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருவாளர் சோழியன் மகிந்த சிந்தனை நேரமி;ல்லை இது. இரத்தோட்டத்தை நிறுத்திவிட்டு அதன் பயன்கள் என்னவென்று வந்து களத்தில் சொல்லுங்கள்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் குறைகள் சொல்லப்படுபகின்றன. விமர்சனங்கள் வைத்தால் அவர்கள் உழவு கழவு என கூச்சிடும் குணம் மாறாத வரைக்கும் மாற்றமும் வராது திருத்தமும் வராது.

நீங்களும் ரீரீஎன் போன்ற நொண்டிச்சாட்டுக்களைத்தான் சொல்லுகிறீர்கள். நீங்கள் திறமையாளர்களை எதிர்பார்த்து திறமையானவர்கள் ஒதுங்கியிருப்பதாக எண்ண வேண்டாம். குறுக்காலைபோவானிடம் நீங்கள் எண்ண முடியாத அளவு தொழில்நுட்ப திறனும் அறிவும் இருக்கிறது. அந்த இளைஞனின் திறமைகளை பாவிக்க முடியாது உளவு இழவென்று ஒரு ஊடகத்தின் வளர்ச்சியை சிரது சொந்த நலன்;களுக்கு செலவளிக்க நினைப்போருக்கு ஒத்து ஊதினால்தான் நாளை நீங்களும் ஏதாவது ஒரு இடத்தில் முகம் காட்டலாம். கருத்துக்கு கருத்தை தாங்கோ. உந்த மகிந்த சிந்தனை மண்ணாங்கட்டிச் சிந்தனையொண்டும் எனக்கு வேண்டாம்.

Link to comment
Share on other sites

தமிழ் தேசிய தொலைக்காட்சி (NTT) வேறு தமிழ் ஒளி இணையம் வேறு (TTN).

இங்கு வைக்கப்படும் விமர்சனங்கள் தமிழ் ஒளி இணையத்தின் நடத்தை அவர்கள் சொந்தமாக தயாரித்து வழங்குபவை பற்றி.

தமிழ் தேசிய தொலைக்காட்சி இன் தயாரிப்புகள் தாயகத்தில் எரிபொருள் மின்சார தட்டுப்பாடுகள் வெளி உலகினூடான தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப தட்டுப்பாடுகள் கிடைக்கக்கூடிய கலைஞர்கள் பொருளாதார உதவிகளின் தட்டுப்பாடுகள் மத்தியில் பல மடங்கு தரமாக நிகழ்ச்சிகளை தயாரிக்கிறார்கள்.

ஆனால் தமிழ் ஒளி இணையத்தற்கு வயது 7 ஆக போகிறது வரும் தை மாதம். ஜரோப்பாவில் நடத்துகிறார்கள், எந்த வகையான தட்டுப்பாட்டில் இவர்கள் தவிக்கிறார்கள்?

தமிழ் தேசிய தொலைக்காட்சி ஆங்கிலத்தில் நிகழ்ச்சி தொடங்கியிருக்கிறார்கள். அதை பற்றி ஏதாவது தமிழ் ஒளி இணையத்தார் அறிவித்தார்களா? அதை ஏன் இன்னமும் ஜரோப்பாவில் மறு ஒலிபரப்பு செய்ய யோசிக்கவில்லை? தமிழ் செய்திகளை தான் இவர்கள் சொந்தமாக செய்கிறார்கள் என்றால் ஆங்கிலத்தில் வருவதை போடுவதில் என்ன முரண்பாடு?

ஒவ்வொரு நாளும் போடுவதில் கடினம் என்றாலும் வாரம் 1 முறை கடந்த வாரத்தின் முழுச் செய்திகளையும் தொகுத்து 30நிமிடமாகவே 1 மணத்தியால "வாராந்த பார்வை ஆங்கிலத்தில்" என்று போட யோசிக்கவில்லை?

தமிழ் தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வேறு வழிகளில் பார்க்கலாம் என்றால் யார் உந்த தமிழ் ஒளி இணைய இழவை பார்த்து மினக்கட போயினம்?

தமிழ் ஒளி இணையத்தை தமிழ் தேசிய தொலைக்காட்சி என்று குளப்பாதீர்கள். அவர்கள் தமிழ் தேசியத்திற்கே அவமானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இப்படி சொல்கிறேன் என்று என்னுடன் நிறையப் பேர் கோவிக்கலாம். இருந்தாலும் இந்த நிகழ்ச்சி பற்றி நான் நிறைய நாட்களாகவே கோபமடைந்திருக்கிறேன்.

1 வருடத்திற்கு முன்பு (அப்பொழுது இது கந்தர் மடம் என்ற ஏதோ வேறு பெயரில் வந்தது) ஒரு நிகழ்ச்சியில் ஒருவர் சொல்கிறார் "சேர்ந்து வாழுகின்ற இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைப்பதே எவ்வளவு கடினம், ஆனா சேர்ந்து வாழ விரும்பாத இரண்டு இனங்களை எப்படி சேர்த்து வைப்பது". இது நாங்கள் தமிழ் பேரினவாதிகள் என்பதை காட்டுகிறதா? நிறைய சிங்களவர்களிற்கு தமிழர்களுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாவிட்டாலும் அதற்காக நாம் ஒட்டு மொத்த இனத்தையே குறை சொல்லி விட முடியாது. அதுவும் லட்சக்கணக்கானவர்கள் பார்க்கின்ற இந்த நிகழ்ச்சியில். இதை அவர்கள் ராஐதந்திர முறையில் சொல்ல வேண்டும். அப்படி சொல்வதாக இருந்தால்.

மற்றது என்னவென்றால் இந்த நிகழ்ச்சி அமைப்பு.

இவர்களிற்கு வேலை வெட்டி இல்லையா? இப்படி சும்மா இருந்து ஊர் கதைபேசி நேரத்தை வீணடிப்பது தமிழர் பண்பாடா? சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு கண்ட இடங்கள்ள இருந்து வெட்டிப் பேச்சு பேசுறது தமிழர் மரபா?

Link to comment
Share on other sites

தேநீர் கடை சம்பாசனை என்பது ஒரு நல்ல பின்னணி வடிவமைப்பு அங்குள் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையின் நிலமையை நாசூக்காக இங்குள்ள மக்களிற்கு விளங்க வைக்க. ஆனால் அதில் உள்ள விபரங்களில் கவனம் தெளிவு இல்லை. தனியே மேலோட்டமாக அப்படி ஒரு stage/setting போட்டால் போதுமா ஒவ்வொரு விபரங்களிலும் கவனம் எடுத்தால் தான் சொல்ல வேண்டிய செய்தியை வெற்றிகரமாக சொல்ல முடியும். ஒருத்த வருவார் அரைக்கை சேட்டை மடிச்சு விட்டுக் கொண்டு தங்கச்சங்கிலகள் எல்லாம் போட்டுக்கொண்டு தமிழ் சினிமாவில் வாற வில்லன்கள் மாதிரி.

அர்த்தமற்ற முறையில் கவுண்டமணி செந்தில் வடிவேலு மாதிரி கோமாளிகளாக நடித்து நேயர்களை மகிழ்விப்பதுதான் அந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்றால் இப்படியே தொடரட்டும். சோழியன் சொன்ன மாதிரி எங்கட கலைஞர்களை ஊக்குவிக்கிறம் எண்டு போட்டு இருப்பம்.

Link to comment
Share on other sites

கடந்த சுப்பர்மட நிகழ்சியைதான் குறுக்ஸ் கூறுகிறார் என நினைக்கிறேன்இ பன்னாடை என்ற சொல்லை

இருவர் பாவித்தார்கள் ரஜபக்சாவுக்குதான் அந்த வார்த்தை பாவித்தார்கள்இ அவருக்கு ஏற்புடைய வார்த்தைதான்இ ஆனால் எமது தொலைக்காட்சியில்இ பலரும் பார்க்கும் தொலைக்காட்சியில் இது தேவையா?

நாங்கள் தமிழை வளர்கிறம்...

இது தான் எங்கள் தமிழ் தொலை காட்சி...

அது பரவாயில்லை சொல்ல வந்த செய்தியை தெழிவா சொன்னா என்ன...???

ம்....ம்...ம்....

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

ரீரீஎன் வளர வேண்டும் என்றால் முதலில் அதன் பொருளாதாரம் வளரவேண்டும். தாயகத்தையும் புலத்தையும் ஒப்பிட முடியாது. தாயகத்திலே பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் கலைஞர்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் தொடர்புகளுக்கம் தட்டுப்பாடு இல்லை. அதோடு அவர்கள் அமைப்பு ரீதியாகச் செயற்படுவதால் பொருளாதாரப் பற்றாக்குறையையும் சமாளிக்க முடிகிறது.

ஆனால் இங்கே நிலமை வேறு.. இன்று பெரும்பாலும் பிரான்ஸ் கலைஞர்கள்தான் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்குபற்றுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் பொருளாதாரத் தட்டுப்பாடுதான். பொருளாதாரம் இருந்தால்தான் வேறு ஐரோப்பிய நாடுகளில் வாழும் கலைஞர்களாலும் தமது நேரத்தை ஒதுக்க முடியும்.

ஆகஇ புகலிட நாடுகளிலுள்ள தமிழர்களை இணைத்து பல ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க ஒரு அமைப்பு கட்டியெழுப்பப்பட வேண்டும். அதிலே கலைஞர்கள், புத்திஜீவிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள், சிறார்கள் என பல்வேறு பிரிவுகளும் ஒன்றிணைக்கப்படும்போது, பல விடயங்களை எம்மால் நிகழ்த்த முடியும். ஆனால் இப்படி ஒரு அமைப்பை யாரால் கட்டியெழுப்ப முடியும்.. என்றால், அதற்கும் தேசியத் தலைவர் பக்கமாகத்தான் கையைக் காட்ட முடியும்.

போதிய வசதிகள் இல்லாத நிலையில் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளால் அல்லது அதில் சம்பந்தப்பட்டோரால் குறைகள் ஏற்படலாம். எனினும், அதற்காக தோன்றியவற்றை முளையில் கருக்கும் கருத்துகளை விடுத்து, அந்த முளையை விருட்சமாக்க உதவும் ஆலோசனைகள்தான் தற்போது தேவை. ஆலோசனைகள் ஏற்கப்படுமோ என்னமோ, அவற்றின் பலனாக சிறிது சிறிதாகவாவது மாற்றம் வரத்தானே செய்யும்?!

முதலில் நானொரு ஆலோசனையை இத்தருணத்தில் கூறலாம்.

ஐரோப்பிய நாடுகளிலுள்ள கலையகத் தயாரிப்புகளென மேடை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை விடுத்து, அந்தந்த நாடுகளில் இயங்கும் தமிழ் பாடசாலைகள், மன்றங்கள், கழகங்களுடன் தொடர்பு கொண்டு நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

TTNல் காலையில் ஆங்கில, பிரான்சு நாட்டுப் பத்திரிகை செய்தி சுருக்கம் வருகிறது! இதை வாசிப்பவர்கள், ஆங்கிலத்தையும், பிரஞ்சு மொழி உச்சரிப்பில் ஓரளவு தெரிந்து கொண்டு உச்சரிப்பது, TTN ன்னுக்கு மாத்திரமல்லாமல், எமக்கும் ஓரளவு சங்கடத்தை குறைக்கும்.

வார்த்தைகளுக்கும் அதன் அர்த்தங்களுக்கும் இவர்களின் உச்சரிப்பு, சிரிப்பைத் தான் தருகிறது. உங்கள் இரத்தக் கொதிப்பை இதைக் கேட்டு கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம்!

Link to comment
Share on other sites

முதலில் நானொரு ஆலோசனையை இத்தருணத்தில் கூறலாம்.

ஐரோப்பிய நாடுகளிலுள்ள கலையகத் தயாரிப்புகளென மேடை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை விடுத்து, அந்தந்த நாடுகளில் இயங்கும் தமிழ் பாடசாலைகள், மன்றங்கள், கழகங்களுடன் தொடர்பு கொண்டு நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிடலாம்.

அண்ணா நீங்கள் சொல்வது போல புதிய புலம்பெயர் பாடகர்களை கொண்ட பாடல்களை ஒளிக்கீற்று எண்ற நிகள்ச்சியில் ஒளிபரப்பினார்கள்...! இன்னும் பல நல்ல நிகள்ச்சிகளையும் தயாரிக்க வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்... அதை எல்லாம் பிரச்சினையாக விரும்பவில்லை....! அதுக்கு பதிலாக தென்னிந்திய தொலைக்காட்ச்சிகளில் வரும் நிகள்ச்சிகள் எல்லாம் ஒளிபரப்பட்டும் வேண்டாம் எண்டவும் இல்லை..

ஆனால் ஈழத்தைபற்றியும், காலத்தில் தேவை கருதிய நிகள்வுகளை தருவதை ஏன் தவிர்க்கிறார்கள்...??? அதுக்கான விளம்பரங்கள் கூட அதிகம் வருவதில்லை... அரசியல் விவாதங்களில் இராணுவ விடயங்களை போட்டு குளப்பி எல்லாரையும் குளப்புவது ஏன்...??

உலக நிலைப்பாடுகளும் இண்றைய நிலைகளும் பற்றி மிகத்தெளிவாக பேசுபவர்கள் இருக்கிறார்கள் அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கலாமே...! அதோடு புலிகளின் அரசியல் திட்டமிடல் பிரிவு, இராணுவ பேச்சாளர்கள் ,பாலகுமார் அண்ணா போண்றோரின் கருத்துக்களை கேட்டு தங்களின் கருத்துக்களையும் இணைத்து அண்றாட கருத்தரங்கங்களை நிகள்த்தி புலம்பெயர்மக்களின் சந்தேகங்களையும் போக்கலாம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரீரிஎன் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. 90வீதமான தமிழர்கள் ரீரிஎன் சந்தாதாரர்களாக உள்ளார்கள் (சுவிசில் இந்த நிலை. வேறு நாடுகளில் தெரியவில்லை). மிஞ்சி உள்ள 10 வீதத்தினால் தான் இவர்களின் பொருளாதாரம் பற்றாக்குறையாக உள்ளது என்றால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. வர்த்தகங்களும் 90வீதமானவர்கள் இவர்கிளடம் விளம்பரம் செய்கிறார்கள். விளம்பரங்களை பார்த்தால் இவர்களிற்கு நல்ல லாபம். 30 நிமிடம் எந்த ஒரு நிகழ்ச்சியும் ஒருபரப்பப்படுவதில்லை. 10 நிமிடம் விளம்பரம் 20 நிமிடம் நிகழச்சி. இதுவே இவர்களிடம் வர்த்தகங்களின் விளம்பரம் அதிகமாக உள்ளன என்பதை காட்டுகின்றது. மற்ற விடயம் என்னவென்றால் நிறைய நிகழ்ச்சிகளிற்கு இவர்களிற்கு வர்த்தகங்கள் ஆதரவு வழங்குகின்றன. உதாரமாக செல்வா சுக், சூர்யா தயாரிப்புக்கள். குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் செலவினை இவ் வர்த்தகர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.

ரீரிஎன்னிற்கு செலவு என்று பார்த்தால் இந்திய நாடகங்களின் ஒளிபரப்புரிமை, மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதற்கான கட்டணம். எம்மவர்களின் நிகழ்சிகள் அனைத்து இலவசமாகவே இவர்களிற்கு வழங்கப்படுகின்றன. கலை நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் ஒளிப்படங்கள் அந்தந்த அமைப்புக்களால் இவர்களிற்கு வழங்கப்படுகின்றன.

தொலைக்காட்சிக்கான தயாரிப்பு பொருட்கள் ஒரு தடவை செலவே. ஒரு கமறா வாங்கினால் அதை குறைந்தது 5 வருடம் என்றாலும் பாவிக்கலாம். நிறையக் கமறாக்கள் தேவைப்படபோவதுமில்லை. காரணம் நிறைய நிகழ்ச்சிகள் ஏற்கனவே தயாரித்து அனுப்பப்படுவதால்.

வேலை செய்பவர்களிற்கு சம்பளம் என்று பார்த்தாலும் அவர்களிற்கு மணத்தியால சம்பளம் தான். ஒருவர் ஒரு சில நிகழ்ச்சிக்கு மட்டுமே வருகிறார்கள். அதனால் இவர்களிற்கு மாத சம்பளமாக இருக்க முடியாது.

பிறகு எப்படி பொருளாதார தட்டுப்பாடு வரும்? அதிகமான தமிழர்கள் பார்க்கின்ற தொலைக்காட்சிக்கே பொருளாதார தட்டுப்பாடு என்றால் தீபம் ரீவி எப்படி தாக்குப்பிடிக்கிறது?

என்னைப்பொறுத்த மட்டில் இது ரீரிஎன்னின் தவறான கண்கீடுகளே. சரியான திட்டமிடல் இருந்தால் எதனையும் நன்றாக செய்ய முடியும்.

மற்றும் புத்திஜுவிகளை பாரிசில் வைத்து தான் நிகழ்ச்சி செய்ய வேண்டியதில்லை. அந்தந்த நாட்டில் இருக்கும் அவர்களின் கலையகங்களுடாகவே செய்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

தாயகத்தில் வன்னியில் இல்லாத தட்டுப்பாடுகள் ஜரோப்பாவில் இயங்கும் ஒரு தொலைக்காட்சிக் இருக்கு என்று தாளிச்சு இறக்கிய நொண்டிச்சாட்டை வாசித்தால் புல்லரிக்கிறது. ஏதாவது விருதுகள் பொன்னாடைகள் போர்த்து கொளரவிக்கிற தகுதியில இருந்தால் நிச்சயமாக இந்த பிரபஞ்சத்து தமிழ் படைப்பாளிகள் களகத்தின் சார்பில் 2006 இற்கான சிறந்த எழுத்தாளர் விருதை சோழியனிற்கு கொடுக்க தயங்கமாட்டன்.

Link to comment
Share on other sites

டிடிஎன் ஏன் புலத்தில் உள்ள இளஞர்களுக்கு நிகழ்ச்சிகளைத் தாயாரிப்பதற்கு வாய்ப்புக் கொடுப்பதில்லை? தமிழ் மொழியில் உள்ளூர் மொழிகளில் புலமை பெற்ற இளஞர்கள், ஊடகத்துறை ஒளிபரப்புத்துறையில் பட்டப்படிப்பு படிக்கும் பல இளஞர்கள் இருகிறார்கள்.இவ்வாறானவர்கள் எத்தினை பேரை டிடிஎன் சரியாகப்பயன் படுத்தி இருக்கிறது. (சிலரை தொழில் நுட்ப உதவியாளர்களாகப் பயன் படுத்துகிறது)

சரியான திட்டமிடலும் முயற்ச்சி இன்மையுமே பிரதான காரணங்களாகத் தெரிகின்றன.திறமை உள்ளவர்கள் முகாமைத்துவம் செய்தால் இவ்வாறான குறைபாடுகள் ஏற்படாது.சொல்லப் படும் சாட்டுக்கள் எல்லாம் போலியானவையாகவே இருக்கின்றன.தமிழ்த் தேசியத்தை வளர்க்காமல் ஏன் வேண்டும் ஒரு தொலைக் காட்சி,அதுவும் தமிழ்த் தேசியத் தொலைக் காட்சி என்ற பெயருடன்.எனது அபிப்பிராயம் இவர்கள் விமர்சனங்களை உள்வாங்காமல் ,தமது குறைகளை மறைகிறார்கள் என்பதாகவே படுகிறது.வாய்ப்பு வழங்கினால் பல இளஞர்கள் தங்கள் செலவிலேயே நிகழ்ச்சிகளை செய்து கொடுக்க முடியும்.ஒரு டிஜிடல் கமராவும் ஒரு கணணியிலும் கன வேலைகளை இப்போது செய்ய முடியும்.மேலும் கணணியூடாகவே வீடியோ இணைப்புக்களை ஏற்படுத்தி பலரை ஒரே நேரம் தொடர்பு படுத்தவும் முடியும்.சில காலம் ஒளிபரப்பாகிய வெக்டோன் தொலைக் காட்ச்சி இதனைப்பாவித்தே கொழும்பில் இருந்து நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளி பரப்பியது.ஐரோப்பாவில் இதனை தரமாகச் செய்யலாம்,இணயம் ஊடாக.டிடிஎன் என்றாவது இவ்வாறு இளஞர்களிடம் இருந்து பங்களிப்புக்களைக் கோரியது உண்டா? அல்லது புதிய தொழி நுட்பங்களைப் புல இளஞர்களிடம் இருந்து கற்று வருகிறதா? தமிழ் இளயோர் அமைப்பினூடாக இதனைப் போல பல காரியங்களை குறைந்த செலவுடன் செய்யலாம்.எல்லாவற்றிற்கும் முயற்ச்சி வேண்டும்,கோபுரங்களில் இருந்து கொண்டு இவற்றைச் செய்ய முடியாது என்பதுவே எனது தாழ்மையான கருத்து. நாற்காலிகளில் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் திறமைக்கும், புதிய உத்வேகத்திற்கும் ,இளஞர்களுக்கும் வழி விட்டால் டிடிஎன் உத்வேகம் அடயக்கூடும்.அல்லாது விடின் தொடர்ந்தும் சந்தாதாரர்களை இழக்க வேண்டி இருக்கும் .பிரிதானியாவில் டிடிஎன் வைதிருப்பவர்கள் தொகை குறைந்துகொண்டே வருகிறது.பிரதான காரணம் தீபத்தின் உள்ளூர் நிகழ்ச்சிகள் புல தமிழர்களின் இளஞர்களின் பங்களிப்போடு நடந்துவருவது மற்ரும் தரமான செய்திகள்,அரசியல் நிகழ்ச்சிகள், மற்றும் குறைந்த சந்தா எனப் பல காரணங்களைச் சொல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான திட்டமிடலும் முயற்ச்சி இன்மையுமே பிரதான காரணங்களாகத் தெரிகின்றன

:idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்கள் பற்றாக்குறை, நிதி நிலைமை காரணமாய் இருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***

மிக விரைவில் பல புதிய திருப்பங்கள் ஏற்படும். எதிர்பார்த்திருங்கள்.

*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது - வலைஞன்

Link to comment
Share on other sites

***

மிக விரைவில் பல புதிய திருப்பங்கள் ஏற்படும். எதிர்பார்த்திருங்கள்.

*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது - வலைஞன்

:roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்புடி பொத்திவைச்சுத்தான் நாறுது......

நல்லா பொத்துங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிரிஎன் நிகழ்ச்சிகளில் என்னும் உயர்ச்சி வேண்டும். அதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. அதில் தலையிடவும் விரும்பவில்லை. ஆனால் இங்கே சொல்லப்படுகின்றவை அனைத்தும் விமர்சனங்களாகவா இருக்கின்றன? ஹசன் அலிக்கு நடந்தது போல, நமக்குள்ளும் உளவாளிகள் ஊடுருவல் செய்வார்கள், என்பதில் அவதானமாகவும், அந்த நிலை நமக்கு வரக் கூடாது என்று சொன்னவுடன், இங்கே தம்மைத் துரோகியாகச் சொன்னது என்று ஆக்ரோசமான வார்த்தைகள்! ஆனால் மறுதலையாக, முதலில் இருந்தே, ரிரிஎன்காரர்கள் பன்னாடைகள், புறம்போக்குகள் என்று திட்டினால், அவர்கள் மெளனியாக வாய் மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்றால் என்ன நியாயம்?

ஒரு வகையில் ரிரிஎன் நிர்வாகம் யாழ்களத்தில் வந்த கருத்துக்களை, கவனத்தில் கொள்கின்றபோது, எம் மனதில் உள்ள குறைகளையும் எமக்குத் தெரிகின்ற தீர்வுகளையும், ஒழுங்குபடுத்தி எழுதுகின்ற போது தான், நட்புறவுரீதியிலான செயற்பாடுகள் தொடரக் கூடும். அதை விடுத்து, கேலியும், குதர்க்க வசனங்களையும் எழுதினால், தரம் குறைந்த மூன்றாம் நிலை விமர்சர்களாகத் தானே நம்மை அடையாளப்படுத்தும்.

அதை விட, மூன்றாம் மனிதன் ரிரிஎன் தொடர்பாக விமர்சிப்பது போலத் தான் பல கருத்துக்கள் இருக்கின்றன. அது நம் தொலைக்காட்சி, எமக்காகத் தான் செயற்படுகின்றன என்று சிந்திப்பதற்கும், "சந்தர்ப்பம் கிடைக்கின்றது. போட்டுத் தாக்கி எழுதலாம்" என்று சிந்திப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

இதில் சில உறவுகள் பட்டியிட்டு, கேள்விகளைத் தொடுத்திருப்பதை இட்டு வரவேற்புக் கொடுக்கலாம். ஆனால் அதில் உள்ள வார்த்தைத் தரங்கள் தான் இடிக்கின்றன. சொல்லப் போனால் தரங்குறைந்த வார்த்தைப் பிரயோகங்களில் எழுதுகின்ற வார்த்தைகளால், ஒட்டுமொத்த விமர்சனமும் எடுபடாமல் போவதற்கு, சாத்தியம் உண்டு. முக்கியமாக நிகழ்ச்சி தொடர்பான தீர்வுகளையும் வைப்போமாக இருந்தால், அது அவர்களுக்கு நல்லதொரு ஆலோசனையாக இருக்கும்.

எனவே தரமான வார்த்தைகள் மூலம் விமர்சனம் செய்வோம். எம் உறவுகள் என்று விமர்சனத்தை வைப்போம். அதை விடுத்து, ஏதோ கருணாக் கும்பலையோ, டக்ளஸ் தேவானந்தாவையோ கேவலமான விமர்சிப்பது போல விமர்சிப்பது சரியானதா?

இங்கே சோழியன் அண்ணாவிற்கு நக்கலடிப்பது கூட ஆக்கபூர்வ விமர்சனமாக இருக்கின்றதோ என்று ஜயம் கொள்ள வைக்கின்றது.

Link to comment
Share on other sites

நான் ரீரீஎன் பார்வையாளன் மட்டுமே. மற்றும்படிஇ ரீரீஎனஇனுடன் எனக்கு எவ்விதமான நேரடியான தொடர்புகளோ உறவுகளோ எனக்கில்லை. நக்கலடிப்பது சிலரது பாணியாக இருப்பதை என்னென்பது?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நான் எழுதியதை ஒரு நபர், பிரிதொரு தலைப்பில் தனக்குச் சாதகமாக ஆக்க முயல்கின்றார். புதினம், இணையத்தளத்தைப் பற்றிப் பேசியபோதோ, அல்லது நிதர்சனம் குறித்தோ விமர்சனம் வைக்கின்றபோதோ அதை எதிர்த்து தான் கருத்து எழுதியிருக்கின்றேன். எம் ஊடகங்களை, என்றைக்குமே மூன்றாம் நிலையில் வைத்துப் பேசக் கூடாது என்பதே என் எண்ணம்.

ஏனென்றால், இவர்கள் கருணாவையோ, டக்கஸ்சையோ தலையில் வைத்துக் கொண்டாடியதுமில்லை. தங்களின் தேவைக்காக இதுவரை அவர்களைப் புகழ்ந்ததுமில்லை. அதனால் அவர்களின் மீதான குற்றச்சாட்டை அன்பாகத் தெரிவிக்க வேண்டும் என்பதே அவா!

எனவே தான் மேலே தமிழினத் துரோகிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் ஒரு விதமாகவும், தமிழீழத்துக்காக தம்மால செயற்பாட்டில் இருப்பவர்களையும் வேறு ஒரு விதமாகவே கணிக்க வேண்டும்.

அதையே மேலே,

"தரமான வார்த்தைகள் மூலம் விமர்சனம் செய்வோம். எம் உறவுகள் என்று விமர்சனத்தை வைப்போம். அதை விடுத்து, ஏதோ கருணாக் கும்பலையோ, டக்ளஸ் தேவானந்தாவையோ கேவலமான விமர்சிப்பது போல விமர்சிப்பது சரியானதா?"

சொன்னேன்.

ஆனால் தன் சுய தேவைக்காக கேவலமான விமர்சனங்களை வைத்த நபர் இரண்டையும் ஒரே தட்டில் நினைத்துக் கொண்டு விமர்சனம் எழுதுவது அவரின் அறியாமையைக் காட்டுகின்றது. அதிலும் தன்னை நியாயப்படுத்தும் மறைமுக எண்ணம் தொனிக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனவே தரமான வார்த்தைகள் மூலம் விமர்சனம் செய்வோம். எம் உறவுகள் என்று விமர்சனத்தை வைப்போம்.

இங்கே வைக்கப்பட்ட தலைப்பு கூட தரமான வார்த்தையாக இல்லை.

சுப்பர் மடம் என்று மட்டும் வைத்து விமர்சனம் செய்ய தொடங்கியிருக்கலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.