Jump to content

ஆரியர்களின் பூர்வீக நாடு எது?


Recommended Posts

ஆரியர்களின் பூர்வீக நாடு எது?
   - பொறியாளர் பி.கோவிந்தராசன்-

 

முன்னுரை:

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனார். இது தமிழர்களின் பரந்த மனப்பான்மையைக் குறிக்கின்றது. தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! இது தென்னிந்தியரின் / திரா விடரின் / சிவனடியாரின் பரந்த மனப் போக்கினைத் தெரிவிக்கின்றது. இத் தகைய தென்னிந்தியரின் நாகரிகத்திற்கு மாறானது ஆரிய நாகரிகம். ஆரியர் உரு வாக்கியது வேதமதம். இந்த மதத்தின் வேதங்களை ஆரியர் தவிர மற்றவர்கள் படித்தால் கொடுந் தண்டனை. வேதமதத் தில் ஆரியர்களே முதல் வருணத்தினர். ஆரியர்கள் உருவாக்கிய கடவுள்களுக்கு ஆரியர்களே அர்ச்சனை செய்யவேண்டும். ஆரியர்களின் ஆரிய மொழியான சமஸ் கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும். சமஸ்கிருதம் தவிர இதர மொழிகள் மிலேச்ச மொழிகள் என்று கூறப்பட்டது. ஆரியர்கள் அல்லாதார் மிலேச்சர்கள், தஸ்யூக்கள், தாசர்கள் என்று அழைக்கப் பட்டார்கள். இவ்வாறு பல சிறப்புகளை உடைய ஆரியர்களால் இந்தி யர்களுக்குக் கிடைத்த பயன்கள் என்ன? இந்த ஆரியர்கள் இந்திய நாட்டை முன் னேற்ற எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள்? இது குறித்த பல செய்திகளைக் கீழே காணலாம்.

அய்ரோப்பிய வரலாற்று ஆசிரியரின் நூல்:

ஜேம்ஸ் ஹார்ட் டேவிஸ் என்ற வர லாற்றாளர்   “ History” என்ற நூலை எழுதியுள்ளார். சமீபத்தில் இவரும் இவரது நண்பர் டாக்டர் சூசன்பிளாக்மோர் அவர்களும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை பெரியார் திடலில் சந்திதது உரையாடினர் (விடுதலை நாளிதழ் 04.02.2012). இவர்கள் இருவரும் பகுத்தறிவாளர்கள்.

ஜேம்ஸ் ஹார்ட் டேவிஸ் தனது நூலில் எவ்வாறு ஆப்பிரிக்கர்கள், ஆஸ்திரேலியர் கள், இந்தியர்கள், அமெரிக்கர்கள் அடி மைப்படுத்தப்பட்டார்கள் என்பதை விரி வாகக் கூறியுள்ளார். அடிமைப்படுத்தப்பட்ட வர்கள் எவ்வாறு விடுதலை பெற்றார்கள் என்பதையும் விவரிக்கிறார். அந்த நூலில் ஆரியர்கள் எவ்வாறு இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்பதைக் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“The origin of  (Hindu) religion can be traced to about 1500 BCE when it is believed that Aryan horseman invaded from central Asia, the indus valley, in Northern India accompanied by creator god Indra and a pantheon of lesser deities. These were the vedic gods who feature in Vedas, the 3000 years old sacred textss, that are central to the development of Hinduism. The religion evolved to focus on senior deity called Brahma Vishna creator and Shiva the destroyer along with their consorts or sakthis from 6th century BCE Brahminism become the dominant form of Hinduism and triggered the composition of Brahminic epic, and puranic literature including the great texts of Mahabharata and Ramayana   (கலைஞர் தொலைக்காட்சியில் எனது 02.09.2011  நாள் நேர்காணலில் சொல் லியவை)

மேலே கண்ட வரிகளில் தெரிவிப்பது கீழ்வருமாறு;

ஆரியர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இந்திரன் என்ற முதன்மைக் கடவுளையும் பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் (சிவன்) போன்ற உப கடவுள் களையும், அவர்களின் மனைவிகளையும் உள்ளடக்கிய பல்வேறு கடவுள்களையும் இந்தியாவிற்குள் கொண்டு வந்தார்கள். இந்த கடவுள்களின் உதவியால், பின்னர் பிராமணீயம் இந்தியாவில் மேலோங்கி இருந்தது.

பாரசீக மொழியில் இருந்து மதக் கடவுள்கள்:

சிரியா நாட்டைச் சேர்ந்த மித்தனி (Mittani) யிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையும் முன் சில காலம் ஈரானைச் சேர்ந்த ஈஸ்பராயன் (Esfarayen) என்ற மாநிலத்தில் தங்கிவிட்டு வந்தார்கள். அப்போது பாரசீக நூல்களைக் கற்றார்கள். அதன்பின் இந்தியாவிற்குள் வந்த பின் பாரசீக மதம் நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள். எனவே பாரசீக மொழியில் உள்ள கடவுள் பெயர்கள் ஒரு பாரசீக அகராதியில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த பாரசீக அகராதியின் பெயர்  இதை எழுதியவர்கள் திருமதி மேனகா காந்தி மற்றும் பேராசிரியர் ஓசைர் ஹூசைன். இந்த நூலில் ஒவ்வொரு சொல்லிற்கும், சொல் பெறப்பட்ட மொழிகள் - Arabic, Avestan, Hindustani, Hebrew, Persian, Pazand, Phalavi Syria, Turkish (அரபி, அவெஸ்தன் ஹிந்துஸ்தானி, ஹிப்ரு, பாரசீகம், பாலவி, பசந்த், துருக்கி, சிரிய) விவரங்கள் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து பெறப்பட்ட மதம், அரசியல் குறித்த பாரசீக சொற்களைத் தொகுத்து கீழே உள்ளவாறு விவரிக்கப்படுகிறது.

பாரசீக மொழியும் ஆரியரும்:

sunday%20%284%29.jpg

வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தா நீதிமன் றத்தில் நீதிபதியாகப் பணிபுரிந்தவர். இவர் அய்ரோப்பிய மொழிகள், ஈரானிய மொழி கள், இந்திய மொழிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு அவைகளை வகைப்படுத்தினார். அதன்படி பாரசீக மொழியும் சமஸ்கிருதமும் அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை எனக் கண்டறிந்தார். மற்றும் அதன் உட்பிரிவான இந்தோ -இரானிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்றும் கண்டறிந்தார்.

ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியான பாரசீக மொழி ஆரியரின் நாகரிகத்தினைப் பற்றியும் பூர்வீகத்தைப் பற்றியும் பல சுவையான வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது. அவை கீழே தரப்பட்டுள்ளன. (பாரசீக சொற்கள் தொகுப்பு பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.)

1. ஆரியர்கள் இந்தியாவிற்கு வரும் முன் சில காலம் பாரசீகத்தில் தங்கி இருந்துவிட்டு பின்னர்தான் இந்தியாவிற் குள் நுழைந்தார்கள். இது சுமார் கி.மு. 1500ல் நடந்தது. இதன் பின் இஸ்லாமிய மதம் தோன்றி இந்தியாவுக்கு கி.பி. 800ல் பரவியது. பாரசீக நாட்டிலிருந்து கஜினி முகம்மது (1012) படையெடுத்து வந்தார். இறுதியாக தில்லியில் சுல்தான்கள் ஆட்சி (கி.பி. 1206- 1526) நடைபெற்றது. பின்னர் முகலாயர் ஆட்சி 1857 வரை நடந்தது. முகல் என்ற சொல்லே பாரசீக சொல் ஆகும். இது மங்கோலியரைக் குறிக்கும். பாரசீக மொழியின் தொடர்பு இந்திய வர லாற்றுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.

2. பாரசீகரின் மத நம்பிக்கைகளும், ஆரியரின் மத நம்பிக்கைகளும் பெருமள வில் ஒற்றுமை உடையவை. உதாரணம், ஈரானியரின் தொன்மையான மொழியான அவெஸ்தாவிற்கும் ரிக் வேதத்திற்கும் மிகவும் ஒற்றுமை உள்ளது.

3. வேத கால  கடவுள்களாக இந்திரன், வருணன், வாயு, மித்திரன் போன்றவர் களும், ரிஷிகளான வசிஷ்டர், அகஸ்தியர், மரூத் போன்றவர்களும் பாரசீக மொழியில் இடம் பெற்றுள்ளனர்.

4. ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 1600 அய்ச் சேர்ந்த கல்வெட்டுகளிலும் கி.மு. 1400 அய்ச் சேர்ந்த  மித்தாணி கல் வெட்டுகளிலும் காணப்படும் பெயர்களும், வேதகால கடவுள்களின் பெயர்களும் ஒத்துப் போகின்றன.

5. ஆரியர்கள் யாகங்கள் செய்தனர், தீயை வணங்கினர், பசுவை வணங்கினர், குதிரையை வணங்கினர். காமதேனு போன்ற மனித உருவம் + மிருகம்  + இறக்கை உடைய பறவை உருவம் ஒன்றாக அமைந்த உருவங்களைப் பற்றிய சொல் தீயைப் பற்றி பல சொற்கள், யாகங்களைப் பற்றி பல சொற்கள் பாரசீக மொழியில் காணப்படுகின்றன.

6. இராமன், ஆரியன், ராணா, ராணி, இந்திரன், வருணன், இரான், சாமி (கடவுள்) ரங்கா ராகவன், ரகு, பீஹார்  தேவா (Daeva), மணி (கடவுள்), கந்தர்வா, கயா, லஷ்கரி, ஜலம், மன்னன், மந்த்ரம், மாரி (கடவுள்), கௌ போன்ற சொற்கள் பாரசீக மொழியில் இடம் பெற்று, அதற்குரிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

7. பஞ்சாங்கம் என்ற ஆண்டுகாட்டி யில் உள்ள அங்கம் பாரசீக சொல்லாகும். இதன் பொருள் காலம், பருவம் (Time - Season) ஆகும். பஞ்ச என்ற சொல் அய்ந்து வகை ஆண்டு கணக்கீட்டு முறையைக் குறிக்கிறது. பாரசீகத்தின் அன்பளிப்பு பஞ்சாங்கமாகும். இந்த பஞ்சாங்கத்தை வைத்து நாள் குறிப்பது, பூணூல் அணிந்த ஆரியர்களின் வேலை ஆகும்.

8. Gowpathi Sha = (கௌபதி +ஷா)= கௌபதி+ஷா = பசுபதி+மன்னன் (அ) அரசன்). இந்த  Pathi  என்ற சொல்  நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் என்ற பெயர் போன்றது.

9.  Hom (ஓம்) என்ற சொல்லுக்கு, பாரசீக மொழியில் - யாக சடங்குகளில் பயன்படுததும் சாறு என்பதனைக் குறிக் கின்றது. இது சோமபானம் போன்றது.

10. Jal (ஜலம்) என்ற பாரசீக சொல்லுக்கு தண்ணீர் என்று பொருள். இன்று கூட ஆரியர்கள், தமிழர் திருமணங்களில் ஜலம் விடுங்கள் என்கிறார்கள்.

11. பாரசீக மொழியில் ஈரான் நாட்டினைக் குறிக்கும் சொல்  Airan இந்த பாரசீக சொல்லுக்குப் பொருள் ஈரான் நகரம் ஆகும். இந்த நாட்டை ஆரியர்கள் தாயகமாகக் கொண்டிருந்தனர் என்று இந்த பாரசீக அகராதியில் கூறப் பட்டிருக் கிறது. இது ஆரியர்கள் பாரசீகம் வழியாக இந்தியாவிற்கு வந்தார்கள் என்பதனை உறுதிப் படுத்துகின்றது.

12. பாரசீக மொழி அகராதியில் ஆரியர்களின் மூதாதையர் பிறந்த நாடாக துர்கிஸ்தானைக் (Turkistan)  குறிப்பிடு கின்றது. ஆரிய இனம் தோன்றிய பகுதியின் பெயர் Airyana Vaeja.. இது துர்கிஸ்தான் நாட்டில் புல்வெளிகள் நிறைந்த வடக்குப் பகுதியில் அமைந் துள்ளது. இங்குதான் மேய்ச்சல் நாகரிகம் (Stepi Culture) என்று அழைக்கப்படுகின்ற - வரலாறு கூறுகின்ற நாகரிகம் தொடங் கியது. இந்த  Airyana Vaeja என்ற இடம் பாரசீக மொழியில்  (Gaya) கயா என்று வழங்கப்படுகின்றது. இந்த கயா என்ற சொல் அவெஸ்தான் மொழியில் முதலில் தோன்றியது.

13. துர்கிஸ்தானில் உள்ள கயா என்ற ஊரைப் போல பீகார் மாநிலத்தில், கங்கைக் கரையில் புத்தகயா உள்ளது. இது தென்னிந்திய ஆரியர்களுக்கு புனித தலமாகும். இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறந்தது என்று ஆரிய சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது ஆரியர் கள் துர்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.

14. உருது என்ற பாரசீக சொல்லுக்கு படை, முகாம் (Camp),, படைவீடு, சந்தை (மார்க்ட்) என்று பொருள். இதன் அடிப்படையில் ஹூமாயுன் / முகலாயர் காலத்தில் படை வீரர்கள் சந்தையில் பேசிய மொழியே பிற்காலத்தில் இந்தி என்றும் உருது என்றும் அழைக்கப்பட்டன. இந்த மொழிகள் ஆரம்பத்தில்  Campu Language என்று அழைக்கப்பட்டன. (Camp = உருது);(Camp)   = பாசறை,

15. பாரசீக மொழியில் இந்தியாவில் வாசிக்கப்படும் தம்புரா, வீண்(ணா) வாத்ய (வாத்யம்) என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. வாத்யம் என்ற சொல் அவஸ்தன் நூலில் உள்ளது.

16. வீர் (Vir) என்ற சொல் பாரசீக மொழியில் உள்ளது. இந்த சொல்லே வடமொழியில் வீர்பூமி, பரம் வீர் சக்ரா போன்ற சொற்களாக உருப்பெற்றுள்ளது.

முடிவுரை:

1. துருக்கிஸ்தான் என்று அறியப்பட்ட பகுதியில் (துர்க்மேனிஸ்தான் அருகில்) இருந்து முதல் ஆரியர் தோன்றியதை இந்த அகராதி தெரிவிக்கின்றது. இந்த நூல் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த NDA அரசில் அமைச்சரர்க இருந்த திருமதி மேனகா காந்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளதால், இந்த நூலில் ஆரியர் பற்றி சொல்லப் படும் செய்திகள் மற்றும் விளக்கங்கள் சிறப்புப் பெறுகின்றன.

2. பாரசீகத்திலிருந்து வந்த  இந்திரன், பிரம்மா, விஷ்ணு போன்ற வேதகால கடவுள்கள் இந்தியாவில் பார்ப்பனீயத்தை வளர்க்க உதவியதான வரலாற்று ஆசிரியர் ஜேம்ஸ் ஹார்ட் டேவிஸ் தனது நூல்  History -- யில் தெரிவிக்கிறார்.

3. கனிஷ்கர் காலத்தில் கல்வெட்டுகள் 1993 இல் ஆப்கானிஸ்தானில் கண்டெடுக் கப்பட்டன. இதில் இரானிய மொழியை ஆரிய மொழியாகக் குறிக்கப்பட்டுள்ளது.

4.  Helena Petroun Blavatsky jdJ  ‘Secret Doctrine 888’ இல் கீழ்க் கண்டவாறு தெரிவித்துள்ளார். யூதர்கள் ஆரியன் அல்லாதவர்கள். ஆபிரஹாமைச் சார்ந்த வர்கள்.    A- brham x-brham 

(பிரம்மன் = பிராமணர்) Abrham   பிராமணனின் எதிர்ச்சொல்.

5. பிராமணர் அல்லாத யூதர்களை அறவே அழிக்கும் கொள்கைளை நாசி (NAZI) கொள்கை என்று கூறுவர். இந்த கொள்கை ஆரியமயமாக்குதல் என்று பெயர். இதனால் இரண்டாம் உலகப்போர் ஹிட்லரால் நடத்தப்பட்டது. இந்த ஆரிய மயமாக்கும் கொள்கைகளை (NAZI) அமெரிக்கா, இங்கிலாந்து, இரசியா போன்ற நாடுகள் போரிட்டுத் தோற் கடித்தன.

6. ஆரியமயமாக்கும் கொள்கையை ஜெர்மனி கடைப்பிடித்ததால்  “The American Heritage Dictionary of English Language  என்ற அகராதியில் ஆரியர் என்ப வருக்கு கீழ்க் கண்ட விளக்கம் தரப்பட் டுள்ளது. “It is one of the ironies of History that Aryan, a word nowadays referred to the blond haired, blue eyed, physical, ideal of NAZI Germany was originally referred to people looked different. Its history starts with Ancient Indo Iranian People, who inhabited parts of Iran, Pakistan, Afghanistan, India, Bangladesh.”

7. ஆரியர்கள் துர்கிஸ்தான் (துர்க் மேனிஸ்தான்) இல் இருந்து வந்தார்கள்  என்று அகராதி உருவாக்கிய மேனகா காந்தியும், ஆரியர்கள் நாசிகள் (NAZI) நாசகாரர்கள் என்று அகராதி எழுதிய அமெரிக்கப் பண்பாட்டுக் கழகமும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

http://www.viduthalai.in/component/content/article/97-essay/41010-viduthalai.html

Link to post
Share on other sites

பாரசீகர் இந்தியாவை நோக்கிய படை எடுப்பின் போது இந்தியாவில் ஆரியம் வேரூன்றியது. திராவிடர் தெற்கு நோக்கி கலைக்கப்பட்டார்கள்.வடக்கில் உள்ளவர்கள் மாற்றப்பட்டார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாரசீகர் இந்தியாவை நோக்கிய படை எடுப்பின் போது இந்தியாவில் ஆரியம் வேரூன்றியது. திராவிடர் தெற்கு நோக்கி கலைக்கப்பட்டார்கள்.வடக்கில் உள்ளவர்கள் மாற்றப்பட்டார்கள்.

 

அப்படி  என்றால்

தமிழர்கள் தப்பித்துக்கொண்டார்கள்......?

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சாணக்கியனுக்கு அறிவு இருந்திருந்தால் நாடாளுமன்றில் இவ்வாறு செயற்பட்டிருக்க மாட்டார்- கடுமையாக சாடிய கருணா!   கல்முனை பிரதேச செயலகம் என்பது தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கான ஒரு விடயம். அதை அவ்வாறுதான் அனைத்து அரசியல்வாதிகளும் பார்க்க வேண்டுமே ஒழிய தேவையற்ற விதத்தில் ஒரு பிரச்சார நோக்கத்திற்காக இதை பயன்படுத்துவது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமரின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று செங்கலடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது அண்மையில் அதிகமாக பேசப்படுகின்ற விடயம் இந்த கல்முனை பிரதேச செயலக விடயம். கடந்த காலத்தில் இந்த கல்முனை பிரதேச செயலக பிரச்சனையை சிறந்த முறையில் முன்னெடுத்து ஜனாதிபதி மற்றும் உரிய அமைச்சர்களுக்கு பிரதம மந்திரி மற்றும் பல துறை சார்ந்த அதிகாரமிக்க அமைச்சர்களிடம் அனைவரிடமும் நாம் இந்த விடயம் தொடர்பாக முன்னெடுத்து வந்தோம். இந்த வேலை திட்டம் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இது உண்மையில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதி கூட, இது நீண்டகால பிரச்சனையாக உருவெடுத்து தற்பொழுது முடிவுறும் தருவாயில் இதற்கான முடிவுகளை நிறைவேற்றும் அல்லது முடிவுறுத்தும் கட்டத்தில் அரசு தள்ளப்பட்டுள்ளது. இதை அறிந்து கொண்டு பல அரசியல்வாதிகள் இதை அரசியலாக்கி அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளை கவர்வதற்காக இந்த பிரதேச செயலகத்தை பயன்படுத்தி இன்று அனைவரின் வாயைத் திறந்தாலும் அதுதான் கதையாக உள்ளது. இது அம்பாறை மக்களின் வாக்கு பிரச்சனை அல்ல எமது இனத்தின் இருப்பை பாதுகாப்பதற்கான ஒரு பிரச்சனை ஆகவே இந்த இடத்தில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவன் நான். இது தொடர்பாக எங்களுடன் சேர்ந்து அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தமிழ் பிரதிநிதித்துவங்கள் அனைவருக்கும் இது சம்பந்தமாக கதைப்பதற்கு உரிமை உள்ளது ஆனால் அதை உரிய முறையில் நாகரீகமான முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் எனது அன்பான வேண்டுகோள்.   அதற்காக அவர்கள் ஒத்துழைத்து வருபவர்களாக இருந்தால் நாம் அதை உண்மையிலேயே வரவேற்கின்றோம். அனைவரது ஒத்துழைப்பும் இதற்கு தேவைப்படுகின்றது. அதைவிடுத்து நான் தான் இதை செய்கின்றேன் நான் தான் இதை செய்கின்றேன் என போட்டி போட்டு தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு கேலிக்கூத்தாக அனைவரும் அணிதிரண்டு இந்த கல்முனை பிரதேச செயலகத்தில் ஒன்றாக நிற்க வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றேன். இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது உங்களுக்கு தெரியும் நாடகமாடுகிறது கடந்த அரசாங்கத்தில் ஆட்சியை மாற்றுகின்ற அல்லது ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்தும் கல்முனை விடயத்தை அவர்கள் செய்யமுடியாமல் போனது. அன்று அவர்கள் நிபந்தனைகளுடன் பலமாக இருந்து இருந்தால் அதை இலகுவாக நிறைவேற்றி இருக்கலாம் ஆனால் தற்பொழுது அது சம்பந்தமாக பிரசாரத்தை மேற்கொள்வது தொடர்பான விவாதத்தை மேற்கொள்வதும் ஏமாற்றிவிட்டார்கள் என்றே பார்க்கின்றோம்.  ஆகவே அனைத்து மக்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும். அம்பாறை மாவட்ட மக்களுக்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன். ஜனாதிபதியாக இருக்கலாம் பிரதம மந்திரியாக இருக்கலாம் யாரையும் நான் சந்திக்கின்ற போதும் இந்த கல்முனை பிரதேச செயலக விடயத்தைதான் நான் முதலாவதாக பேசுகின்றேன். அமைச்சர் சமல் ராஜபக்சவும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரங்கள் தயாரித்து கொண்டிருக்கின்றார். இது தொடர்பான அனைத்து விளக்கங்களும் விபரங்களும் அவரிடம் உள்ளது.  நாம் அதை அவரிடம் வழங்கி இருக்கின்றோம். கல்முனை பிரதேச செயலகத்தில் இருக்கின்ற அதிகாரிகள் தங்கள் வரையறைக்குள் இருக்க வேண்டும் என்பதை நான் மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன். பிரதேச செயலாளராக இருக்கலாம் யாராகவும் இருக்கலாம். அவர்களும் அரசியல்வாதிகள் போல் செயற்பட்டு இதை ஒரு பூதாகரமான பிரச்சனையாக உருவாக்குவதாக இருந்தால் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். ஆகவே இவ்விடத்தில் அனைவரும் பொறுமையாக இருந்து செயற்பட வேண்டும் என்பதை நான் மிகவும் அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.  ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வாயால் வழங்கப்பட்ட வாக்குறுதி பிரதம மந்திரியால் அளிக்கப்பட்ட வாக்குறுதி இதை ஒரு அரசு கூறிவிட்டு மக்களை ஏமாற்றும் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், நாமும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதன் காரணமாகத்தான் நாம் அடித்து கூறுகின்றோம் இதை நிறைவேற்றுவதற்கு வேண்டிய ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றது. ஆகவே இதை அரசிடம் நாம் வலியுறுத்தி இருக்கின்றோம். இதற்காக அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்து நிற்க வேண்டும் என்பதுதான் எமது அன்பான வேண்டுகோள்.  உண்மையிலேயே இந்தப் பிரதேச செயலக விடயம் தரம் குறைக்கப்படவில்லை. ஏற்கனவே ஒரு பத்திரம் இருக்கின்றது. 1993 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட ஒன்றாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பும் உள்ளது. தற்பொழுது திடீரென்று இந்தப் பிரச்சனை பூதாகரமாக இதுவும் ஒரு காரணம். ஏனென்றால் இந்தப் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட்டதாக கருதப்பட்டால் பல விடயங்களை செய்ய முடியாமல் இருக்கும் அதற்காக இதை ஒரு உப செயலகம் என்ற அடிப்படையில் தெரியப்படுத்தி அதற்கான சகல விபரங்களையும் தற்பொழுது மாவட்ட அரசாங்க அதிபருக்கு கட்டளையாக வந்திருக்கின்றது. இந்த கல்முனை பிரதேச செயலகத்தின் அனைத்து விளக்கங்களையும் விடயங்களையும் எல்லை நிர்ணயங்கள் தொடர்பான விடயங்கள் பற்றியும் அனுப்பி வைக்கும்படி கேட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைவரும் அரசாங்க அதிபருடன் உரையாடலாம் அவருடன் உரையாடினால் இது தொடர்பான விடயங்கள் தெரியும். இது ஒரு பாதிப்பை தரப்போவதில்லை ஆகவே இது சம்பந்தமாக பல தடவை நான் அமைச்சரவையில் கலந்துரையாடி உள்ளேன். அவர்கள் இதுபோன்ற தகவல்களை ஏதும் தெரிவிக்கவில்லை தரம் உயர்த்துவது என்றுதான் வாக்குறுதி அளித்துள்ளனர். எம்மைப் பொறுத்தவரையில் மக்களை ஒரு அரசியலுக்காக பகடைக்காயாக பயன்படுத்துவதை நாம் விரும்பவில்லை. ஏனென்றால் காரணம் எமது மக்களின் உரிமை எமக்கு மிகவும் முக்கியமான விடயம் தமிழ் மக்களின் இருப்பை தக்கவைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான விடயம் அதற்காகத்தான் நாம் குரல் கொடுத்து வருகின்றோம். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் ஏற்கனவே நான் கூறியதைப் போன்று கல்முனை பிரதேச செயலகம் என்பது தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கான ஒரு விடயம் ஆகவேதான் அதை அவ்வாறுதான் அனைத்து அரசியல்வாதிகளும் பார்க்க வேண்டுமே ஒழிய தேவையற்ற விதத்தில் ஒரு பிரச்சார நோக்கத்திற்காக இதை பயன்படுத்துவது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார ரீதியாக தற்போது அரசாங்கம் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி கொண்டு வருகின்றது. ஏனைய நாட்டு உதவிகள் வருவது என்பது முடியாத விடயம் ஏனென்றால் கொரோனா எம் நாட்டிற்கான பிரச்சனை மட்டுமல்ல அனைத்து உலகத்திற்கான பிரச்சனை ஆகவே அரசாங்கத்தை நாம் குற்றம் சாட்ட முடியாது. இந்த அரசாங்கம் வாக்குறுதி அளித்தது போன்று இன்று பட்டதாரி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே அது ஒரு பாராட்டுக்குரிய விடயம் அதேபோல் பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இது போன்று பல நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது. எங்களை மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் பிரதம மந்திரியின் காரியத்தை நேரடியாக இணைத்து செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளோம். உண்மையில் இந்த கல்முனை விடயம் தொடர்பாக பிரதம மந்திரி கல்முனையில் உள்ள முக்கிய பிரதிநிதிகளை அழைத்து வரும்படி கூறி இருந்தார். அனைத்து ஆயத்தங்களையும் நாம் முன்னெடுக்கின்ற போதும் தற்பொழுது இந்த கொரோனா அச்சம் காரணமாக அனைத்தும் தடைபட்டுள்ளது. இதுபோன்று பல விடயங்களை நாம் எதிர்காலத்தில் முன்னெடுப்போம். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் நபர்களையோ அல்லது பேசுகின்றவர்களையோ இந்த அரசாங்கம் உண்மையில் கைது செய்யவில்லை. மாறாக தீவிரவாத போக்குடைய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை கைது செய்து விசாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதை நாம் உண்மையில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.  தற்பொழுது அனைத்து தரப்பிலும் இது நடைபெறுகின்றது. முஸ்லிம் தரப்பில் நடைபெறுகின்றது சிங்கள தரப்பில் நடைபெறுகின்றது ஏற்கனவே சட்டம் உள்ளது இனவாதத்தை தூண்டுகின்றன அல்லது தீவிரவாதத்தை தூண்டுகின்ற வகையில் எவரும் செய்யக்கூடாது என குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு நன்றாக தெரியும் ஆகவே அந்த சட்ட திட்டங்களுக்குள் நின்று நாம் செயற்பட வேண்டும் என்பதை நான் மக்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நான் ஆம்பளை சுமப்பதில் அர்த்தமில்லை. நாடாளுமன்றத்தில் துறைமுக சட்டமூலம் தொடர்பான தீர்மானம் விவாதத்திற்கு வர உள்ளது.  இது உண்மையிலேயே எப்போது வரப்போகிறது என்பது தொடர்பான விடயம் எமக்குத் தெரியாது இருந்தாலும் இது தொடர்பான விடயங்களை நாம் ஆராய வேண்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். மாகாண சபை தொடர்பாக முப்பதுக்கு 70 என்ற தீர்மானம் நான் முன்னாள் அமைச்சராக இருக்கும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி வாரியாக அனைத்து தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதே நிறைவேற்றப்பட்டது .  அப்போது அது அமுலுக்கு வரவில்லை ஆனால் அது வருவதால் உண்மையிலேயே என்னை பொறுத்தவரையில் சிறுபான்மை இனங்களுக்கு மிகவும் சிறுபான்மையினராக அல்லது சிறு தொகையினராக தொகுதிகளில் வாழுகின்ற மக்களுக்கு உண்மையிலேயே பாதிப்பு இருக்கின்றது. இல்லை என்பதற்கு இல்லை. ஆனால் எங்களை பொறுத்த வரை தமிழ் மக்களை பொறுத்தவரையில் இதனால் பாதிப்பு வருவது இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அண்மையில் தெரிவித்திருந்தார் கருணா அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை பிரித்து விட்டு தற்போது தலைமறைவாகி விட்டார் என.  அவருக்கு உண்மையிலேயே தெரியாது நாம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டம் என்பது அவருக்கு விளங்காது ஏன் என்றால் அவர் நாடாளுமன்றத்தில் பொதுவாக கதைப்பதற்கு பல விடயங்கள் இருக்கின்றது. ஒரு தனிநபரின் விடயத்தை போய் நாடாளுமன்றத்தில் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஒரு வேடிக்கையான விடயம் சாணக்கியன் போன்றோர் உண்மையிலேயே ஒரு பாலர் வகுப்பு படிப்போர் போல்தான் செயற்படுகின்றனர் என்றுதான் நான் கூறுவேன். காரணம் அவருக்கு அறிவு இருந்தால் அவ்வாறு பேச மாட்டார். அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்றால் நான்கு ஆங்கிலத்தை பேசி 4 சிங்களத்தை பேசினால் தாங்கள் அறிவாளிகள் என நினைக்கின்றார்கள்.  கருத்துக்களை தெளிவாக முன்வையுங்கள். தனிப்பட்ட முறையில் என்னை விமர்சிக்க வேண்டுமென்றால் ஒரு ஊடக சந்திப்பை ஏற்படுத்தி விமர்சியுங்கள். அதை விடுத்து நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற நேரம் என்பது மிகவும் பெறுமதியான நேரம் அதில் போய் உங்கள் விமர்சனங்களை செய்யாமல் தமிழ் மக்களின் பிரதிநிதி என்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக பல பிரச்சினைகள் உள்ளது அதை எடுத்து வைக்க வேண்டும் என்பதை நான் அவருக்கு அன்பாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். அண்மையில் கூட உங்களுக்குத் தெரியும் கருணாவை தற்போது காணவில்லை என சாணக்கியன் தெரிவித்தார்.  சாணக்கியன் 20 நாட்களுக்கு முன்னர் என்னிடம் வந்து எனது காலை பிடித்து கெஞ்சி கேட்டார் வாழைச்சேனை பிரதேச சபைக்கு உதவி செய்து தர வேண்டுமென. தமிழ் தேசியக் கூட்டமைப்பை காப்பாற்ற வேண்டும் எனவும். அன்று என்னுடன் பலர் செங்கலடி காரியாலயத்தில் இருந்தனர். அங்கு தான் வந்து சந்தித்தார். மக்களின் பிரச்சினைகள் என பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றை நாடாளுமன்றத்தில் கதையுங்கள். கல்முனை சம்பந்தமான விடயம் தொடர்பாக குரல் கொடுங்கள் வரவேற்கப்பட வேண்டிய விடயம்.  நாம் எதிர்க்க வேண்டியதில்லை. நான் இரு தடவைகள் நாடாளுமன்றத்தில் இருந்து சிறந்த முறையில் அந்த நேரங்களைப் பயன்படுத்தி இருந்தேன். அதேபோன்று தான் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதைப் பயன்படுத்த வேண்டும். முஸ்லிம் பிரதிநிதிகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக தமது இருப்பை தக்க வைப்பதற்காக தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றார்கள். ஏனைய இனத்தவர்கள் அவர்கள் கதைப்பதில்லை. இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கதைத்து எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுங்கள்.    https://ibctamil.com/article/batticalo-karuna-chanakyan-1620454970    
  • டெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு!   (துதி)தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் அவர்களின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்க காரியாலயத்தில் அதன் உபதலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேயர் க.சத்தியசீலன், மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், மாநகரசபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், சீ.ஜெயந்திரகுமார், பு.ரூபராஜ், ச.கமலரூபன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், தலைவருடன் இணைந்து மறைந்த அத்தனை இயக்க உறுப்பினர்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.           http://www.battinews.com/2021/05/35.html  
  • ‘பாலை நிலமாகும் யாழ்ப்பாணம்’ May 8, 2021   — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — “வலு கெதியில யாழ்ப்பாணம் பாலையாகி விடும்” என்று சில ஆண்டுகளாக எச்சரித்துக் கொண்டு வருகிறார்கள் சூழலியலாளர்கள். இது சீரியஸான உண்மையே. ஆனால், யார்தான் உண்மையை மதிக்கிறார்கள்! பாலையாகினால் என்ன? சோலை வரண்டால் என்ன? கிடைப்பது பொக்கிஷம். எடுப்பதையெல்லாம் அதற்குள் எடுத்துக் கொள்வோம் என்று பனைகளை வெட்டுகிறார்கள். மணலை அகழ்கிறார்கள். காடுகளை அழிக்கிறார்கள். போதாக்குறைக்கு கடலோரங்களையும் களப்புக் கரைகளையும் கூடத் தங்கள் இஸ்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். போதாக்குறைக்கு வளமான செம்மண் தோட்ட நிலங்களையெல்லாம் கடைகளுக்கும் குடியிருப்புகளுக்குமாக எடுத்துக் கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்து கொண்டே போனால் இந்தச் சின்னஞ்சிறிய யாழ்ப்பாணக் குடாநாடு பாலையாகாமல் வேறு எப்பிடியாகும்?  இதில் உண்மையும் வேடிக்கையும் ஒன்றுண்டு. இந்த அநியாயங்களையெல்லாம் செய்வது வேறு யாருமல்ல. நம்மவர்கள்தான். நமக்கும் இவர்களைப் பற்றித் தெரியும். நம்முடைய அயலில் – ஊரில் – உள்ளவர்களே இதையெல்லாம் செய்கிறார்கள். அல்லது அக்கம் பக்கத்து ஊர்களில் இருப்பவர்கள். இதெல்லாம் தவறென்று நமக்கும் தெரியும். நமக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே தெரியும். இது எதிர்காலத்தில் உண்டாக்கப்போகும் பேராபத்தைப்பற்றியும் நமக்குத் தெரியும். அதைத்தான் சூழலியலாளர்கள் தொடக்கம் சமூக அக்கறையுள்ளோர் அனைவரும் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனாலும் இதைத் தடுப்பதற்கு யாருமே இல்லை. படித்தவர்களாக இருக்கிறோம். பலதையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அதிகாரிகளாக, கல்விமான்களாக, துறைசார்ந்தோராகப் பலர் இருக்கிறார்கள். நமக்கான தேசத்தைப் பற்றிக் கனவு வேறு காண்கிறோம். ஊர்களில் கிராம முன்னேற்றச் சங்கம், சனசமூக நிலையம், விளையாட்டுக்கழகம், இளைஞர் கழகங்கள், மாதர் சங்கங்கள், ஆலய நிர்வாகங்கள், ஆன்மீக சபைகள் என ஏராளம் பொது அமைப்புகள் எல்லாம் இருக்கின்றன. இப்படியெல்லாம் இருக்கும்போது இந்தப் பகற் கொள்ளை நடக்கிறது.  மண்கும்பானில் தொடர்ந்து மணல் அகழ்ந்தால் மண்டைதீவு உட்பட அல்லைப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்கள் எல்லாமே முற்றாகப் பாழடைந்து விடும் என்கிறார் புவியியற் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை. இதேநிலைதான் மணல்காட்டிலும். மணல்காட்டை இப்பொழுது போய்ப் பாருங்கள். அங்கே மணலுமில்லை. பனைகளும் கடலோரக் காடுகளுமில்லை. எல்லாமே பாழாகி, அந்த நில அமைப்பே கெட்டு விட்டது. இனி அந்தப்பிரதேசம் முழுவதும் உவராகி விடும். மணல் ஒன்றும் பெருகி நிரவுவதில்லை. அல்லது மரம், செடியைப்போல வளர்வதில்லை. ஒரு அளவுக்கு மேல் மணலை அகழ்ந்தால் நிலப்படிகத்தின் தன்மையே மாறி விடும். அது சுற்றயலையே கெடுத்து விடும். இது விஞ்ஞானபூர்வமான உண்மை.  இப்படித்தான் குடாநாட்டின் களப்புக்காடுகளும் அழிக்கப்படுகின்றன. களப்புக் காடுகள் (அலையாத்திக் காடுகள்) அந்தக் களப்புகளில் உள்ள உயிரினங்களுக்குப் பாதுகாப்பும் அவற்றின் உயிர் வாழ்வுக்குமானது. இந்தக் களப்புகள்தான் நம்முடைய சூழலை உயிர்ப்புடன் –ஈரலிப்புத்தன்மையுடன் வைத்திருக்கின்றன. இந்தக் காடுகள் இயற்கை அழகு மட்டுமல்ல, இயற்கையின் வளமுமாகும். இவற்றை அழித்து விட்டால் களப்புகளின் தன்மையே மாறி வெறும் நீர் வெளியாகி விடும். காலப்போக்கில் அந்த நீர்வெளி சேற்றுப் பரப்பாகி நாற்றமெடுக்கத் தொடங்கி விடும். பிறகு களப்புகள் மட்டுமல்ல, அதை அண்மித்த பகுதிகளும் கெட்டு விடும்.  இதே நிலைதான் யாழ்ப்பாணத்தில் உள்ள பனைகளுக்கும் ஏற்பட்டுள்ளது. ஒரு காலம் பனையில் தங்கியிருந்த வாழ்க்கை இன்றில்லை. முன்பு பனையிலேயே யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை மையம் கொண்டிருந்தது. பெட்டி, கடகம், பாய், பட்டை, உமல், தூக்குப் பை, ஓலை, மட்டை, கிழங்கு, ஊமல், பனாட்டு, ஒடியல், புழுக்கொடியல், மரம், சலாகை என்று நூறுக்கு மேலான தேவைகளைப் பனை நிறைவேற்றியது. இப்பொழுது அது மாறி விட்டது. என்பதற்காக பனைகளை முற்றாகவே அழிக்கத் துணிந்து விட்டார்கள் எல்லோரும்.  ஆனால், “யாழ்ப்பாணத்தின் ஒரே காடு, மரங்களின் தோப்பு பனைகள்தான் என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பனை விஞ்ஞானி. இந்தப் பனைகளை இழந்தால் நிச்சயமாக யாழ்ப்பாணம் பாலையாகி விடும்” என்று எச்சரிக்கிறார் அவர்.  அவர் சொல்வது உண்மையே. யாழ்ப்பாணத்தின் காடு மட்டுமல்ல, யாழ்பாணத்தின் முகம், யாழ்ப்பாணத்தின் அடையாளம், யாழ்ப்பாணத்தின் வளம் எல்லாமே பனைதான். அந்தப் பனைக்குக் கேடு வரும் என்றால் அது யாழ்ப்பாணத்துக்கான கேடுதான்.  இப்பொழுதே யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீருக்குப் பெரிய பிரச்சினை. இருக்கின்ற நிலத்தடி நீரும் கெட்டு விட்டது. அதை எப்படிச் சீர்ப்படுத்துவது, மேம்படுத்துவது என்று யாருக்குமே தெரியவில்லை. ஏற்கனவே பல இடங்களில் நல்ல தண்ணீருக்குப் பெரிய பிரச்சினை. தீவுப்பகுதிகள், வடமராட்சி, வலிகாமம் மேற்கில் சில பகுதிகள், தென்மராட்சியில் சில பிரதேசங்களில் எல்லாம் நீர்ப் பிரச்சினை உண்டு.  இந்தத் தண்ணீர்ப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு – யாழ்ப்பாணத்துக்கு – எங்கே இருந்து தண்ணீரைக் கொண்டு வருவது என்று யாருக்குமே தெரியவில்லை. கிளிநொச்சியில் உள்ள இரணைமடுக்குளத்திலிருந்து தண்ணீரைக் கொண்டு வரலாம் என்று திட்டமிட்டார்கள். இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனைப் பெற்று 23000 மில்லியனில் குளத்தை விரிவாக்கிக் கட்டினார்கள். நீரின் கொள்ளளவு கூட்டப்பட்டது. ஆனாலும் அங்குள்ள விவசாயிகள் நீரைத் தர முடியாது என்று சொல்லி விட்டார்கள். விவசாயிகளுக்கு செடில் குத்தி உஷாரேத்தி ஆட விட்டிருக்கிறார்கள் சில அரசியல்வாதிகள். எனவே அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.  இதற்குப் பதிலாக ஒரு மாற்று வழியைக் கண்டு, மருதங்கேணி –தாளையடியிலிருந்து கடல் நீரைச் சுத்திகரித்து, நன்னீர் விநியோகத்தைச் செய்யலாம் என்றொரு மாற்றுத்திட்டம் உருவாக்கப்பட்டது. அதுவும் நிறைவேறவில்லை. புதுக்காட்டுச் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் பொருத்தப்பட்ட நீர்க்குழாய்களில் மூன்றாண்டுகளுக்கு மேலாக நிரம்பி வழிகிறது காற்று.  இனப்பிரச்சினையைத் தீர்த்தாலும் இந்தத் தண்ணீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது போலிருக்கு என்கிறார் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்.   யாழ்ப்பாணத்துக்கான தண்ணீரைப்பற்றிச் சிந்திப்பவர்களில் சிவச்சந்திரன் முக்கியமானவர்.  சிவச்சந்திரன் இன்னொன்றையும் சொல்கிறார். “யாழ்ப்பாணக் குடாநாட்டில் மிஞ்சியிருக்கும் ஒரேயொரு காடு இயக்கச்சி –பளைப்பிரதேசத்தில் உள்ள காடுதான். அதை என்ன பாடுபட்டாவது நாம் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் யாழ்ப்பாணம் பாலையாகிவிடும்” என்று. இப்பொழுது அந்தக் காடும் அழிக்கப்படுகிறது. ஏறக்குறைய இனி அங்கே காடே இல்லை என்றாகி விட்டது. இதில் வனவளப்பிரிவுக்கும் நிலச் சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் அரச காணிகளில் உள்ள காடுகளே அதிகமாக அழிக்கப்படுகின்றன. ஏறக்குறைய 4000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள காடுகள். இதைத் தடுத்து நிறுத்துவார் யாருமில்லை. உரிய தரப்புகள் என்று சொல்லப்படும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு, பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், மக்கள் பிரதிநிதிகள் என்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் போன்ற எல்லாத்தரப்புகளுக்கும் இதைப்பற்றி எடுத்துச் சொல்லியும் எதுவும் நடக்கவில்லை. வேலியே பயிரை மேய்ந்தால் யார் தான் என்ன செய்ய முடியும்? காடழிப்பு, மணல் அகழ்வு, மரக்கடத்தல் போன்றவற்றில் பெரிய கைகளே சம்மந்தப்பட்டுள்ளன என்பது ஊரறிந்த சேதி.  எனவேதான் நாமும் சொல்கிறோம், யாழ்ப்பாணம் பாலையாகிக் கொண்டிருக்கிறது என்று. இந்தப் பாலையில் சோலையைக் காண்பது எப்படி? பாலையில் வாழ்வை நடத்துவது எப்படி? நாம் வீடுகளையும் கோயில்களையும் கல்யாண மண்டபங்களையும் பென்னாம்பெரிய மாடங்களையும் பிரமாண்டமாகக் கட்டலாம். பாலையில் எப்படி வாழ்வது?  பாலையில் அபாய மணிகள் நம்முடைய காதுகளில் கேட்கிறது. தயவு செய்க, செவி கொள்க!    https://arangamnews.com/?p=4978  
  • வழக்கமான எதிர்க்கருத்தாளர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள் ஆனால் காறி  துப்புவது தமிழ் மேல்தான் என்பதை விளங்குகிறார்கள் இல்லை நீங்களும் நான் அவதானித்ததில் அந்த பத்தில்  ஒன்றுதான் . புலியை  தமிழை எதிர்த்து கொள்வது ஒருவிதமான மனஆற்றுதல். புலம்பெயர் தேசங்களில் ஒவ்வொரு காரணம்களில் இங்கு வந்த அனேகருக்கு 45 தாண்டி விட்டது வயது போக நாட்டில் நடந்த போராட்டமும் மவுனித்து  போன பின் ஊரில் நேரே போனவர்களில் பலருக்கு அங்கு நடந்த உண்மைகளையும் அவர்கள் மனதில் கட்டி இருந்த பிம்பமம் வேறு வேறாக போன அதிர்ச்சியை தங்க முடியாமல் புலி எதிர்ப்பு வாதிகளாக திரும்ப விமானம்களில் வந்து இறங்கும்போது மாறி இருந்தார்கள்  கடும் அதிர்ச்சியை தாங்க  முடியாமல் பயித்தியம் ஆன  கதை போல் .😃 ஆனால் உண்மை அப்படியொன்று நடக்கையில் சிங்களவன் தமிழர்களை தங்க தட்டில் வைத்து கவனிக்க மாட்டான் பல பாரிய பிரச்சனைகள் வரும் வந்தது வந்து கொண்டும் உள்ளது அதே போல் பாரிய  கொடுமைகளும்  உரிமை என்றால் என்ன என்றே தெரியாமல் அங்கு ஒரு சந்ததியே உருவாகும் உருவாகி  உள்ளது . இங்கு நாமதான் முதலில் எழுந்து கொள்ளணும் . எதிரிக்கு நாம மீண்டும் எழுந்து விடக்கூடாது என்பதில் கவனம் சண்டை முடிந்து பத்து வருடமாகி விட்டது இன்னும் கீழே விழுந்து கிடந்து அழுது  கொண்டு கிடக்கிறம் எழுந்து நிற்பவர்களையும் கீழே விழுந்து அழுது கொண்டு இரு அப்பத்தான் ஏதாவது தருவதை தருவார்கள் என்று இலவச ஆலோசனை . புலம்பெயர் தமிழராகிய நாங்கள் முதலில் எழுந்துகொள்ளுவோம் இன்னும் பத்தோ  பதின்ஐந்து வருடம் தான் நாங்க நினைத்த வாழ்க்கை அதன்பின் மறதியிலும்  நோயிலும் விழுமுன் . எழுந்து கொள்ள முயற்சிப்பம் . உங்களுக்கு புரியாது என்றால் அப்படியே போங்க ஆனால் எனக்கு உங்களின் கருத்துக்களை விமரிசிப்பதுக்கு உரிமை உள்ளது தொடரும் .
  • தமிழ்நாட்டு அரசியல் எல்லாம் அத்துப்படி ஆனால் ஹரோவில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் இருக்கிறீங்களே!! இந்த முகநூல் பதிவில் உள்ளது.. https://www.facebook.com/635787883455314/posts/1410192879348140/?d=n It's an absolute honour to welcome Harrow's ex-Labour Council Leader, Thaya Idaikkadar, to the Conservative Party today!  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.