Jump to content

வரதராஜன் மாஸ்டர் காலமானார்.


Recommended Posts

யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பொருளியல் ஆசிரியரும் யாழ் எய்ட் ஆலோசகரும்,கலிங்கம் இதழின் செயற்குழு உறுப்பினருமான வரதராஜன் மாஸ்டர் காலமானார்.அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம் அவர் ஆத்மா சாந்தி அடையவும்.கடவுளை வேண்டுகிறோம்.

10557331_10154547529710637_4187163269778

 

Link to comment
Share on other sites

பொருளியல் ஆசான் வரதராஜனின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

Link to comment
Share on other sites

ஈழத்தின் பிரபல பொருளியல் ஆசான் சி.வரதராஜன் மறைந்தார்

ஈழத்தின் பிரபல பொருளியல் ஆசிரியரும், தமிழ்த் தேசியவாதியுமான – வரதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை வரதராஜன் இன்று தனது 63வது வயதில் காலமானார்.

 

Varatharajan-2.jpg

 

தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.

யாழ்ப்பாணத்தில், நான்கு பத்தாண்டுகளாக பொருளியல்துறை ஆசானாக விளங்கிய, சி.வரதராஜன் ஆசிரியர் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பொருளியல் கல்வியைப் போதித்தவராவார்.

இவரது மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும், உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.

இலங்கையில் தமிழர்களின் பூர்விக வரலாறு, மற்றும் தமிழர் தாயகத்தின் வளங்கள், சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக, பல கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியவர் சி.வரதராஜன்.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக, கடந்த 2010ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முதலாவது தலைவராகவும் இவரே தெரிவு செய்யப்பட்டார்.

அரசியலில், இவரால் பிரகாசிக்க முடியாது போனாலும், போருக்குப் பின்னர் தமிழ்மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பல்வேறு வழிகளிலும் பங்களித்து வந்தவராவார்.

ஈழத்தமிழர்களின் மூத்த பொருளியல் ஆசான் வரதராஜனின் மறைவுக்காக,  சிரந்தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம்.

புதினப்பலகை

****varatharajan.jpg

ஆசான் வரதராஜனின் இழப்பு தமிழீழ மக்களுக்கு தமிழ்த்தேசத்திற்கு தமிழ்த்தேசியத்திற்கு பேரிழப்பாகும்

தமிழ்தேசிய ஆசான்களில் ஒருவரும் பிரபல பொருளியல் ஆசிரியரும் ஈழம்ஈநியூஸ் ஊடகத்தின் ஸ்தாபர்களில் ஒருவருமாகிய ஆசிரியர் வரதராஜன் அவர்கள் காலமாகிவிட்டதை மிகுந்த மன வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. ஒரு ஆசிரியராக தமிழ்தேசிய சிந்தனையாளராக ஒரு போராட்ட தலைமுறையை உருவாக்கியதில் இவரது பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது.

மே 18 இற்கு பிறகு தமிழ்த்தேசியம் பேசியவர்கள் பலர் தடம் மாறியபோதும், தமிழ்த்தேசியத்தை இறுகப்பிடித்துக்கொண்டு ஒரு வழிகாட்டியாக முன்நின்றார்.

ஊடகங்கள் பல திசைமாறியது கண்டு ஒரு தனித்துவமான தமிழ்த்தேசிய ஊடகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்று ஈழம்ஈநியூஸ் உருவாக்கத்திற்கு வழிகோலியவர்களில் முதன்மையானவர் ஆசிரியர் வரதராஜன்.

எமது இணையத்தில் பல புனை பெயர்களில் குறிப்பாக “தேனுப்பிரியன்” என்ற பெயரில் அவர் 2009 இற்கு பின்னான காலப்பகுதியில் எழுதிய தொடர் கட்டுரைகள் பலரை தமிழ்த்தேசியத்தின் பால் மீள திருப்பியதென்றால் அது மிகையல்ல.

பின்நாளில் “தமிழ் அரசியல்வாதிகள்” என்ற பெயரில் உலாவிய பலதமிழ்த்தேசிய போலிகளை இனங்கணடு ஒரு வித விரக்திக்குட்பட்டு கொஞ்சம் விலகியே நின்றார்.

இதைப் பயன்படுத்தி அவரது கனதியை உணர்ந்த தமிழ்த்தேசிய விரோதிகள் அவரை தம்பக்கம் இழுக்க வலைவிரித்தபடியே திரிந்தனர்.

அதன் விளைவான அவரது நடத்தை பலரது விமர்சனத்திற்குள்ளாகியது. ஆனாலும் அவரிடம் மாறாத ஒன்றாக தமிழ்த்தேசியம் அவருடனேயே பயணித்ததை எம் போன்றவர்கள் மட்டுமே அறிவோம்.

விளைவாக மீண்டும் எமது தளத்தில் இனஅழிப்பு குறித்தும் தமிழ்தேசிய அரசியலின் புதிய பரிமாணம் குறித்தும் ஒரு தொடரை எழுத சம்மதித்தார்.

ஆனால் அதை எழுத இன்று அவர் எம்முடன் இல்லை.

இந்த வகையில் ஆசான் வரதராஜனின் இழப்பு தமிழீழ மக்களுக்கு தமிழ்த்தேசத்திற்கு தமிழ்த்தேசியத்திற்கு பேரிழப்பாகும்.

எமது மண்ணுக்காக மரணித்த ஆயிரமாயிரம் மாவீரர்கள் வரிசையில் ஆசான் வரதராஜனும் நினைவு கொள்ளப்படுவார்.

தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதனூடாகவே ஆசான் வரதராஜனுக்கு உண்மையான அஞ்சலியை செலுத்த முடியும் என்ற ஆழமான புரிதலுடன் ஆசானின் பணியை தொடர தமிழ் மக்களாகிய நாம் உறுதி எடுத்துக்கொள்வோம்.

ஆசிரியர் குழு

ஈழம்ஈநியூஸ்.

 

http://www.eelamview.com/2014/08/18/varatharajan-dead/

 


பொருளியல் ஆசான் வரதராஜனின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருளியல் ஆசான் வரதராஜனின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருளியல் ஆசான் வரதராஜனின் மறைவுக்கு, ஆழ்ந்த இரங்கல்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகரை சார்ந்தவன் என்ற வகையில்.. எனது சிறுவயது முதல் இந்த ஆசிரியரை ரியூட்டரிகளுக்கு போக வரக் கண்டு தெரியும். அன்னாரின் சேவையைப் பெற்று பயனடைந்த பல தமிழ் மாணவர்கள் உலகெங்கும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கும் இந்தச் செய்தி நிச்சயம்.. சோகமானதாகவே இருக்கும். அன்னாரின் இழப்பு தமிழ் வர்த்தக, முகாமைத்துவக் கல்விச் சமூகத்திற்கு பேரிழப்பு என்றால் மிகையல்ல.

 

ஆழ்ந்த அனுதாபங்களும்.. கண்ணீரஞ்சலியும்.

Educationalist, veteran civil activist Varatharajan passes away

[TamilNet, Monday, 18 August 2014, 20:32 GMT]

Sinnathurai Varatharajan, a popular teacher of economics, who stood with his people throughout his life, has passed away in Jaffna on Monday due to cancer-related complications at the age of 63. With his extensive knowledge on the economic potentials in the Tamil homeland, both in the North and East, Mr Varatharajan paid a particular attention to the demographic genocide being committed against the Eezham Tamils in the North and East. Apart from serving his people as an educationalist, Mr Varatharajan stepped in as a grassroots civil activist whenever his people faced a challenging time under outside occupations. Eezham Tamils are a distinct nation with their own sovereignty in the unified North and East of the island was his political stand and he advocated a confederal model as the minimum acceptable solution.
 

S_Varatharajan_86352_200.jpg
S Varatharajan

Mr Varatharajan, who was a lecturer in Economics at the University of Peradeniya, left Kandy following the Sri Lankan State-sponsored anti-Tamil pogrom in 1983 and decided to serve Eezham Tamil students in their own country. He became a popular tutor in Economics among the students in Jaffna.

During the Indian occupation in the late 1980s, Mr Varatharajan was one of the key civil activists who mobilized the civil society in Jaffna defending the Eezham Tamils from the injustices committed by the so-called Indian Peace Keeping Force (IPKF) and its paramilitary forces. Mr Varatharajan courageously organized the funeral when one of the well-respected educationalists and fellow lecturer in Economics Mr Krishnananthan was assassinated by the IPKF-backed EPRLF paramilitary during the Indian occupation in 1989. Later, he was also arrested and harassed by the Indian forces.

As an academic who paid a keen interest in documenting and exposing the on-going structural genocide against Eezham Tamils, Mr Varatharajan faced continuous threat from the intelligence Establishment of the Sri Lankan military. In 2008, he survived an abduction by the Sri Lankan forces in Colombo. Amidst the threats and harassments, he chose to serve his people till his last breath.

In 2010, when TNA’s former MP and the leader of All Ceylon Tamil Congress (ACTC) Mr Gajendrakumar Ponnambalam, former TNA MP Selvarajah Kajendren and former TNA MP Pathmini Sithamparanathan, quitted the TNA and formed the Tamil National Peoples Front, Mr Varatharajan came forward backing the new formation and became the chief candidate of the ACTC in Jaffna in the parliamentary elections at that time.

Later, he retired from politics and was occupied with documenting the demographic genocide on Eezham Tamils till his demise.

Varatharajan was born on 07 December 1951. His native village is Oorezhu. He passed away on 18 August, 2014 at Thellippazhai hospital.

The funeral of the veteran educationalist and Tamil activist will take place at Koampaiyan-ma’nal Crematorium on Wednesday.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியத்தின்பால் உறுதியாக நின்ற மனிதர்.!!!ஆழ்ந்த இரங்கல்கள்!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருளியல் துறையின் ஒர் பாடப்பபுத்தகம் - வரதரே நீங்கள் காலமாகவில்லை காலம் ஆகிவிட்டீர்கள்

 

 

வரதராஜன் ஆசிரியர் பொருளியல் துறையின் ஒர் பாடப்பபுத்தகம். யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் அவர் சில ஆண்டுகள் கற்பித்தார். இன்று இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல துறைகளிலும் உயர் பதவிகளில் இருக்கும் பலர் அவருடைய மாணவனாக இருப்பர் என்பதில் சந்தேகம் இல்லை.

1987-88-89 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்களில் பொருளியல் கற்பித்த ஆசான்கள் இருவர்-- ஒரு வரதராஜன்- மற்றையவர் கிருஸ்ணானந்தன். கற்பிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.

1989இல் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் உச்சக்கட்டத்தில் ஆசிரியர் கிருஸ்ணானந்தன் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருடைய இறுதிச் சடங்குகளை துணிவுடன் நின்று நடத்தியவர் வரதராஜன்.

1989இல் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். 2008இல் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டார். இந்த மிரட்டல்களுக்கு பயந்து நாட்டை விட்டு ஓடாது தமிழ் மாணவர்களுக்கு கல்வி புகட்டிய ஒரு மொழிப்பற்றாளன்.

வடக்கு கிழக்கு மாகாணத்தின் வரலாறுகளையும் அதன் பொருளாதார வளங்கள் பற்றிய விபரங்களையும் தெளிவாக அறிந்து வைத்திருந்த ஓர் புலமையாளன். கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற சிங்கள குடியேற்றங்கள் பற்றிய தகவல்களை தொகுத்து எழுதியவா்- தமிழர் அரசியல் போராட்டத்தின் ஒரு தூண்.

வரதராஜாரே—காலமாகவில்லை- காலம் ஆகிவிட்டீர்கள்....

உங்களிடம் கல்வி பயின்று பல்கலை புகுந்தவர்களில் நாமிருவர்...

நிக்ஸன்- குருபரன்

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110688/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்

Link to comment
Share on other sites

நம்ப முடியவில்லை எனது பாடசாலை ஆசிரியர். :(
 
ஆழ்ந்த இரங்கல்கள் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.