Jump to content

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

21-remedies-for-teeth-stains.jpg

 

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!!

 

ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான். இப்படி சிரிக்கும் போது, பற்களானது மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்போரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும். அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாக மிகுந்த கறையுடன் இருந்தால், ஆசையாக முத்தம் கொடுக்க வரும் துணை கூட கொடுப்பதற்கு தயங்குவார்கள். சரி, இப்படி பற்கள் மஞ்சளாக இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

 
பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பரம்பரை காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவில் டீ மற்றும் காபி குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவைகளே காரணங்களாகும். இதனால் பலர் தங்கள் பற்களை வெண்மையாக வெளிக்காட்ட, பல் மருத்துவமனைக்கு சென்று பணம் செலவழித்து ப்ளீச்சிங் செய்து வெள்ளையாக்குவார்கள். இப்படி செய்வதால், பற்கள் வெண்மையடையும் ஆனால் அதன் ஆரோக்கியம் குறைந்துவிடும்.

 

எனவே உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை ஆரோக்கியமான வழிகளில் நீக்க சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதன்படி செய்து பற்களை வெண்மையுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

 

பேக்கிங் சோடா.

பற்களை வெண்மையாக்குவதில் பேக்கிங் சோடா பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து, தினமும் மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.

 

எலுமிச்சை.

எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து பற்களை தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்கலாம். இதன் மூலமும் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.

 

ஆப்பிள்.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளும் நீங்கிவிடும். ஏனெனில் அதில் இயற்கையாக உள்ள அசிட்டிக் தன்மையானது, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கிவிடும்.

 

உப்பு.

அனைத்தையும் விட மிகவும் விலை மலிவில் கிடைக்கும் ஒரு பொருள் தான் உப்பு. இந்த உப்பைக் கொண்டு பற்களை தினமும் தேய்த்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் அகன்றுவிடும். அதே சமயம் உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமாக உப்பை பயன்படுத்தினால், அவை ஈறுகளையும், எனாமலையும் பாதித்துவிடும்.

 

சாம்பல்.

தினமும் பற்களை துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் சிறிது சாம்பல் சேர்த்து, பின் பற்களை துலக்கினால், பற்களை வெண்மையாகும். அதிலும் இதனை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் பற்களில் உள்ள கறைகள் அகலும்.

 

ஆரஞ்சு தோல்.

இரவில் படுக்கும் போது, ஆரஞ்சு தோலைக் கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு, வாயை அலசாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள். இதனை அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது, வாயில் உள்ள கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து, பற்களை வலுவாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேக்கிங் சோடா என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் சிறி??? backing powder ஐயா அல்லது சோடா என்று இருப்பதையா ????

Link to comment
Share on other sites

பேக்கிங் சோடா என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் சிறி??? backing powder ஐயா அல்லது சோடா என்று இருப்பதையா ????

 

 

பேக்கிங் சோடா என்று நம்புறன். விரும்பினதைப் போட்டுப் பாருங்கோ சரி வந்தால் வந்து எழுதுங்கோ ஆட்களுக்கு உதவியாய் இருக்கும். உங்களில் பரிசோதிப்போம் சரியா என்று.  :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேக்கிங் சோடா என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் சிறி??? backing powder ஐயா அல்லது சோடா என்று இருப்பதையா ????

 

image001.jpg

DavisBakingPowder.jpg

பேக்கிங் பவுடருக்கும், பேக்கிங் சோடாவுக்கும்..... என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை சுமோ.

பேக்கிங் சோடாவை... தனிய பார்மசியில் தான் வாங்கலாம் என் நினைக்கின்றேன்.

ஆராவது தெரிந்தவர்கள் விளக்கினால்.... நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊமக்கொட்டைக்கரி நல்ல சாமான்

 

உமிச்சாம்பலாலை தீட்டினாலும் பல்லு அந்தமாதிரி வெள்ளையாய் வரும்.

Link to comment
Share on other sites

பேக்கிங் பவுடருக்கும், பேக்கிங் சோடாவுக்கும்..... என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை சுமோ.

பேக்கிங் சோடாவை... தனிய பார்மசியில் தான் வாங்கலாம் என் நினைக்கின்றேன்.

ஆராவது தெரிந்தவர்கள் விளக்கினால்.... நன்றாக இருக்கும்.

 

நான் அறிந்தவரையில் பேக்கிங் சோடாவை மாவை புளிக்க வைக்க அதிகம் உபயோகிப்பார்கள்

பேக்கிங் பவுடரை  cake, pastry, muffin,  போன்றவை தயாரிக்கும் போது உப்ப வைப்பதற்காகவும் மெதுவான தன்மைக்காகவும் உபயோகிப்பார்கள்.

Bake செய்யும் உணவுகளுக்கு இரண்டையும் ( baking soda and baking powder ) பாவிக்கலாம் ஆனால் புளிக்க வைத்து தயாரிக்கும் உணவுகளுக்கு baking powder ஐ உபயோகப்படுத்துவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.