Jump to content

சென்னை கனவு


arjun

Recommended Posts

எழுபதுகளின் கடைசி.

மூன்றாம் முறை A/L பரீட்சை எழுதிவிட்டு ஏதோ டாக்டர் ஆக போகின்றவன் கணக்கு விடுமுறைக்கு மன்னாருக்கு அத்தானிடம் செல்கின்றேன்.அத்தானின் ஜீப்பில் மன்னார் வங்காலை காடுகள் எல்லாம் சுற்றி அடித்தாலும் பொழுது போவதாக இல்லை .ஒரு லைபிரரி ,ஒரு தியேட்டர் , எங்கும் கழுதைகள் ,அதிக வெய்யிலால் காஞ்சு கிடக்கு மண்.

இரண்டு நாட்களில் அம்மாவும் அக்காவும் மன்னாருக்கு வந்து சேர்ந்தார்கள் .சும்மா இருந்த அத்தானின் குவார்ட்டர்சில் இந்தியாவில் இருந்து கப்பல் வரும் போது கப்பல் கப்டன் ,ரேடியோ ஆபிசர் வரை தங்குமிடமாக அது மாறியிருந்தது .அவர்கள் ஒரே குடியும் கும்மாளமும் தான் .அத்தான் எச்சில் கையால் காகம் விரட்ட மாட்டார். குடி என்றால் என்னவென்று இன்றுவரை தெரியாது .அவர்களுக்கு இடமும் பொருளும் கொடுத்து தானும் பல இந்திய பொருட்களை அள்ளிக்கொண்டுஇருந்தார் .

இந்தியா நீங்களும் வர போகின்றீர்களா ? கப்டன் கேட்டார் .இந்திய கனவு என்பது குறிப்பாக தமிழ் நாடு எனக்கு மிக மிக பெரியது .

முடியுமா ? விசா தேவையில்லை பாஸ்போர்ட் இருந்தால் காணும் என்றார் .எங்கள் மூவரிடமும் அது இருந்தது .அடுத்த கிழைமை திரும்பும் கப்பலில் ஏறுவதாக சொல்லிவிட்டோம் .

சினிமா ,வாசிப்பு ,இசை ,ஓரளவு சாப்பாடு எல்லாமே எனக்கு சென்னை கனவுதான் .எம் ஜி ஆர் சிவாஜி கமல் எல்லாம் காலுக்க தட்டுபடுவார்கள் என்ற எண்ணம் .

கப்பல் ஏறியாச்சு .எமக்கு இரண்டாம் தட்டில் ஓர் இடம் .சாப்பாடு கப்பல் அதிகாரிகளுடன் தான் .கத்தி, முள்ளுகரண்டியால் இட்டலியை சாப்பிடுவார்கள் என்று அன்று தான் தெரிந்தது .எனக்கு உதவியாக ஒரு தொழிலாளியை பைனாகுலருடன் அனுப்பி இடங்கள் காட்ட சொல்லிவிட்டார் காப்டன் .பெடி மூன்றாம் தளத்திற்கு என்னை கொண்டுபோய் விட்டு புகைக்க தொடங்கி எனக்கும் ஒன்றை நீட்டினார் .வேண்டாம் என்று சினிமா பக்கம் கதையை விட்டால்

“முதன் முதலாக காதல்” என்று நிறம் மாறாத பூக்கள் பாட்டு இழுக்க தொடங்கிவிட்டார் .எனக்கு அப்போது பாரதிரஜாவையே ஒழுங்காக தெரியாது.அந்த கதையுடன் ராமேஸ்வரம் இறங்குகின்றேன்.

எங்களை அனுப்பிவிட்டு கப்பல் அலுவல்கள் எல்லாம் முடித்து வருவதாக சொல்லிவிட்டார் கப்டன் .விசா இல்லை என்று எங்களை வாசலில் தடுத்துவிட்டார்கள் .காப்டன் வந்து சின்ன ஒரு சர்சையுடன் வெளியே வந்தோம் .எங்கும் ஒரே மணலும் மணமும். குதிரை வண்டிலில் ஏறி ரேடியோ ஆபிசர் கிருஷ்ணமூர்த்தி வீடு போகின்றோம் .

தொடரும்

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply

ராமேஸ்வரம் முழுக்க முழுக்க அக்கிரகாரத்தால் நிரம்பியிருந்தது .மன்னாரில் குடியும் கும்மாளமுமாக இருந்த கிருஸ்னமுர்த்தி பூணூடன் மனைவிக்கு முன்னால் மந்திரம் சொல்லிக்கொண்டு நிற்கின்றார் .அழகான மகள் ஆங்கிலத்தில் மட்டும் கதைக்கின்றார் .நான் ஊரில ஒரு ஆளுக்கு கடிதம் கொடுத்துவிட்டு  வந்தபடியால் இவாவை நான் கணக்கிலேயே எடுக்கவில்லை .தயிர் இரசம் என்று மரக்கறியுடன் ஒரு நாள் ஓடிவிட்டது .

கனவு சென்னைக்கு போவம் என்றால் ஆறு நாட்களில் கப்பல் திரும்புதாம் மதுரை திருச்சிக்கு போட்டு வாங்கோ என்கின்றார்கள் .புடவை மட்டும் கனவாக வந்த அக்காவிற்கும் அம்மாவிற்கும் எங்கு போனாலும் ஒன்றுதான் .மதுரை போயாச்சு அம்மா தனது நண்பியை கண்டாச்சு என்று அங்கேயே தங்க முடிவு செய்துவிட்டார் (இவர்கள் உலகம் அறிந்த பிரபலங்கள் இப்போ தேவையின் விபரம் இணைக்கின்றேன்)

அம்மாவும் அக்காவும் புடவை என்று காலம் கழிக்கையில் நான் பார்த்த படங்களின் பட்டியல் ஆறு நாட்களில் ,

நிறம் மாறாத பூக்கள் ,புதிய வார்ப்புகள் ,சிவப்பு ரோஜாக்கள் ,நினைத்தாலே இனிக்கும் ,கன்னி பருவத்திலேயே ,பட்டா கத்தி பைரவன்.

கடைசியில் எனக்கென்றொரு கொட்ரோயில் பான்ஸ் மட்டும் வாங்கி நாடு திரும்புகின்றேன் .

(இனி இயக்கமும் சென்னையின் அழகிய முகமும் .) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரஷ்யமான பதிவு அர்ஜூன்.

தொடர்ந்தும் எழுதுங்கள். மன்னிக்கவும் இன்று பச்சை தீர்ந்து விட்டது.

மறக்காமல் அக்ரஹாரத்து மடிசார் மாமி மற்றும் மாமியின் டாட்டர் இப்படி சுத்தி இருந்த

பொம்முநாட்டிகளப் பற்றியும் கொஞ்சம் விலாவாரியா இழுத்து உடுங்க ஸார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் எனக்கு அர்ஜுனிடம் பிடித்தது 70 / 80 காலங்களை கண்முன் கொன்டு வருவார். தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கிரகாரத்து பொம்மனாட்டிகளிடம் விலாவரிதான்  எழுதமுடியும்.

 

தொடருங்கள் அர்ஜுன்...!

Link to comment
Share on other sites

ராமேஸ்வரத்தில் நாங்கள் தங்கியிருந்த வீடு ராமநாதசுவாமி வீதியிலேயே இருந்தது .அக்கிரகாரம் வெளித்தோற்றத்தில் எல்லாவீடுகளும் அநேகமாக ஒரே மாதிரித்தான் இருக்கும் .வசதியான குடும்பம் என்ற படியால் தங்குவதற்கு எதுவித பிரச்சனையும் இருக்கவில்லை .உணவு மேசையில் வைத்துத்தான் பரிமாறினார்கள் .ராமாநாத சுவாமி கோவிலில் கண்ணுக்கு எட்டாத தூரம் வரை எல்லை தெரியாமல் மண்டபம் இருக்கு .மிக பெரிய கருங்கற்களால் ஆன தூண்களால் கட்டப்பட்டிருக்கு .மிக பெரிய நந்தியும் முகப்பில் இருக்கு .

கோவில் வீதியில் கச்சான் சாப்பிட்டுக்கொண்டு  அரைதாவணிகளை பார்ப்பதில் இருக்கும் சுகமே தனி சுகம்  .வீதியெங்கும் இலங்கை வர்த்தகசேவை  தான் ஒலித்துக்கொண்டு இருந்தது 

 

மதுரையில் நாங்கள் தங்கியிருந்ததும் பிராமண வீடுதான் .ஆனால் கொஞ்சம் வசதி குறைந்தவர்கள் .ஒரு பையனும் மூன்று பெண்களும், மூத்த பெண் அம்மாவுடன் படிப்பிக்கும் ஆசிரியையின் மகனை கல்யாணம் செய்தத்தால் தான்  எங்களுக்கு இந்த தொடர்பு கிடைத்தது .அவர்கள் ஓயாமல் கதைத்துக்கொண்டே இருப்பார்கள் .வாசிப்பு சினிமா இசை எல்லாம் விரல் நுனியில் இருக்கும் .நான் அருகில் இருக்கும் சயிக்கிள் கடையில் சைக்கிள் வாடைக்கு எடுத்து பையனுடன் சென்று இரண்டு படம் பார்த்தேன்.

தரையில் இருந்து சில்வர் பிளேட்டில் சாப்பாடு .ஒரு சொட்டு சோற்றை போட்டு கொஞ்ச கறியும் வைத்தார்கள் அட என்னடா என்று பயந்துபோனேன் .சாப்பிட்டு முடியும் போது மீண்டும் கொஞ்ச சோறும் போட்டு தயிரும் விட்டார்கள் பின்னர் அது முடிய கொஞ்ச சோறும் போட்டு ரசமும் விட்டார்கள் .இதுவே அனேக பிராமணர்களின் சாப்பாட்டு முறை .

சென்னை கனவு பலிக்காமலே மீண்டும் அதே மன்னார் நோக்கி அதே போல அதே அதிகாரிகளுடன் கப்பல் பயணம்... கப்பலில் சென்னையில் படித்துக்கொண்டிருக்கும் தங்கையுடன் குகனும் (பொன்னம்மான் ) ஆனால் பெரிதாக கதைக்கவில்லை .அப்பவே அவர் அதில் இருந்தார் எனக்கு தெரியாது .

மதுரையில் நாங்கள் தங்கியிருந்த வீட்டு பெண் கணவருடன் சிலவருடங்களுக்கு முன் ஆஸியில் இருந்து கனடாவிற்கு அம்மாவிடம் வந்த போது சந்தித்தேன் .அதே விடாத பேச்சு ,வாசிப்பு சினிமா இசை அரசியல் .பிரமிப்பாக இருந்தது .

 சென்னை கனவு பலித்தது அடுத்து . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை பதிந்த.... மூன்று சென்னை நினைவுகளும், வாசிக்க சுவராசியமாய் இருந்தது.
இப்படியே.... தொடர்தால், வாசிக்க ஆவலாக உள்ளோம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக இருக்கின்றது அர்ஜீன் அண்ணா இதையாவது இடையில் விடாமல் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

சுவாரசியமான பதிவு.. :D தொடர்ந்து எழுதுங்கள்..!

Link to comment
Share on other sites

ஆறு வருட இடைவெளிக்கு பின்னர் இயக்கம் என்ற போர்வையில்  :o சென்னைக்கு பயணிக்க விசா கேட்டு லண்டனில் உள்ள இந்திய தூதரத்திற்கு போனேன் .என்னுடன் படித்துக்கொண்டிருந்த நாடு கடந்த அரசின் தலைவரின் தம்பியும் விடுமுறைக்கு :o  போக விசாவிற்கு வந்திருந்தார்.

டெல்கி போய் இரண்டு நாட்கள் நின்றுவிட்டு ,

சென்னை விமான நிலையத்தில் காலைநேரம்  என்னுடன் லண்டனில் இருந்து வந்த நண்பர் சகிதம் இறங்குகின்றேன். சினிமாவில் பார்க்கும் அதே சென்னை . விடாமல் ஒலித்துக்கொண்டிருங்கும் வாகனங்களின் Horn சத்தம் தான் அவர்களின் அடையாளம் .Accelerator இல் இருந்து கால் எடுத்தாலும் எடுப்பார்கள் Horn இல் இருந்து கை எடுக்கமாட்டார்கள் .விமான நிலையத்தில் இருந்து வெளியில் வர வீதியில் எருமை ,மாடுகளை பார்க்க விநோதமாக இருந்தாலும் ஒரு வித சந்தோசமாக இருந்தது .Taxi எடுத்து MLA Hostel என்றுவிட்டு வெளியில் எட்டி பார்த்தபடியே பயணிக்கின்றேன். வீதியெங்கும் ஆட்டோ ,சயிக்கில் ஆட்டோ ,மோட்டார் சயிக்கில் கார் ,பஸ் ,லொறி என்று  தாறு மாறாக ஓடிக்கொண்டிருக்கு .கிடைக்கும்  சந்து பொந்து எல்லாம் புகுந்து பறக்கின்றார்கள் வீதியோரம் எங்கும் பூக்கடை,பழக்கடை ,பால் கடை ரேசன் கடைகள் பெரிசு ,சிறிதாக இருக்கு .எங்கும் ஒரே சனக்கூட்டம் .சினிமா போஸ்டர்களும் பானர்களும் அரசியல்வாதிகளின் படங்களும் சந்திக்கு சந்தி விண்ணை தொட்டுக்கொண்டிருந்தது .மிகவிரைவில் முதல் மரியாதை ,காக்கி சட்டை ,ஆண்பாவம் என்று என்னை பார்த்து கண் சிமிட்டுகின்றது .

கண்கள் இவற்றை மேய்ந்துகொண்டிருந்தாலும் மனம் நான் போகுமிடம் பற்றியே சிந்தித்து கொண்டிருந்தது .

யாழ் கள உறவுகள் சந்திப்பு போல இதுவும் ஒருவித முகமறியா சந்திப்புத்தான் .இளம் கன்று பயமறியாது போல எதையும் எதிர்கொள்ளும் துணிவு ஓரளவு மனதில் இருந்தது .

MLA Hostel வந்தாச்சு .திருவல்லிக்கேணியில் மவுண்ட்ரோட்டில் சாந்தி தியேட்டருக்கு முன்னுக்கு சென்னையின் முக்கிய இடத்தில் இது அமைந்துள்ளது .இரண்டாம் தளத்திற்கு போனால் ஒரு சிறிய ரூம் .ஒரு மேசை ,நாலு கதிரைகள் ,ஒரு வாங்கு .சுவரில் மட்டக்களப்பு சிறையுடைப்பு நோட்டிஸ்  .

போனில் இருந்த சற்று கருப்புநிறமான களையான முகமுடைய ஒருவர் லண்டனா ? வாங்கோ வாங்கோ என்கின்றார் .எங்கள் இருவரையும் அமர சொல்லிவிட்டு போனில் ஒரே கதையும் சிரிப்புமாக இருக்கின்றார் .இன்னும் இருவர் மிக அமைதியாக எதையோ பறி கொடுத்தவர்கள் போல மௌனமாக இருக்கின்றார்கள் .

 

போனில் பேசி முடித்துவிட்டு என்னுடன் வந்தவரை பார்த்து "நீர் இன்று இரவு இந்த தோழார்களுடன் முகாமிற்கு போகின்றீர்" என்று விட்டு என்னை பார்த்து "உமக்கு ஒரு லோட்ச் புக் பண்ணியிருக்கு சில நாட்கள் அங்கு தங்கவேண்டும் .இப்ப முகத்தை கழுவிவிட்டு வாங்கோ போய் சாப்பிடலாம்" என்கிறார் .

சென்னையில் அனேக உணவகங்கள் மூன்றாக பிரித்து இருக்கும் .A/C ,NON A/C ,சில ROOM மாதிரி ஸ்கிரின் இனால்  சுற்றி இருக்கும் இடம்  .(காதலர்கள் வசதிக்கு ).மசாலா தோசை, சட்னி ,சாம்பார் , மெட்ராஸ் கோப்பி லண்டனில் காய்ந்து போன வாயிற்கு அந்த மாதிரி இருந்தது .

 

எங்களை கூட்டிக்கொண்டு போனவர்தான் (மோகன் ) MLA Hostel இற்கு பொறுப்பாக இருந்தவர் .மிக கலப்பான பேர்வழி .எந்த நேரமும் பகிடி விட்டுக்கொண்டே இருந்தார் .இயக்க கதை மட்டும் கதைக்கவில்லை .திரும்பி வந்து உச்சி வெயில் மண்டையை பிளக்க கதிரையிலேயே தூங்கிவிட்டோம்.

வெண்கல கடைக்குள் யானை புகுந்த மாதிரி ஒரு சத்தம் கேட்டு விழித்தால் சுருட்டை முடி குறுந்தாடியுடன் ஜிப்பா,ஜோல்னா பை சகிதம் ஒருவர் பெருங்குரலில் கதைத்துக்கொண்டு கொண்டிருக்கின்றார்.

மோகன் எங்களை அறிமுகம் செய்ய என்னை பார்த்து "வெளியில் வாரும்" என்று ஒரு கடைக்கு கூட்டிக்கொண்டு போய் இரண்டு Thumps -up இற்கு ஓர்டர் பண்ணிவிட்டு லண்டனை பற்றி ,அங்கிருக்கும் எமது அமைப்பை பற்றி ,அங்கு வேலை செய்யும் சிலரை பற்றி ஏதோ எல்லாம் கேட்கின்றார்கள் .என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை ,இவர்தான் சங்கிலியோ என்று மனதிற்குள் நினைத்தபடி விக்கி விழுங்கி பதில் சொல்லிக்கொண்டுஇருந்தேன் .திடீரென்று சரி போவம் என்று எழுந்துவிட்டார் .

Hostel திரும்பினால் மோகன் கேட்டார் "உமக்கு விளங்காமல் ஆயிரம் கேள்வி கேட்டிருப்பாரே,கவிஞர் என்றால் அப்படிதானாம் என்று சிரித்தார் .

 

மாலை வந்துவிட்டது .என்னை கூட்டிகொண்டுபோய் கலைவாணர் அரங்கிற்கு முன்பாக உள்ள ஒரு லோட்சில் தங்கவைத்துவிட்டார்கள் .கனவு கண்ட கலைவாணர் அரங்கு ,ராஜாஜி நினைவு மண்டபம் ,சிதம்பரம் ஸ்டேடியம் , மரீனா பீச் எல்லாம் நடை தூரத்தில் இருக்கு ஆனால் ஒரு வித தனிமையும் பயமும் மனதில் குடிகொண்டுவிட்டிருந்தது .ரூமில் பானையில் குளிர் தண்ணீரும் அருகில் செம்பும் இருந்தது .ஒரு செம்பு தண்ணீரை குடித்துவிட்டு சாரத்தை மாற்றிக்கொண்டு தூங்கிவிட்டேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுனிக் கதிரையில்,இருந்து,  ஒரே.... மூச்சில் வாசித்து முடித்து விட்டேன்...... :D 
அப்புறம்..... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த MLA ஹாஸ்டல், ஓமந்தூரார் அரசினர் தோட்டதிற்குள்ளாக (Omandurar Govt.Estate) அப்போதில்லையா? (தற்பொழுது அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டார்கள்) இப்போதிருக்கும் ராஜாஜி ஹாலின் பின்புறம் 'L' மாதிரி வடிவில் இருந்ததாக நினைவு.

 

Link to comment
Share on other sites

இரண்டு ஹாஸ்டல்கள் இருந்தன . நாங்கள் இருந்தது பழையது புதியது அதற்கு சற்று தள்ளி கட்டியிருந்தார்கள் .அதில் தான் அமிர்தலிங்கம் இருந்தார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு வருட இடைவெளிக்கு பின்னர் இயக்கம் என்ற போர்வையில்  :o சென்னைக்கு பயணிக்க விசா கேட்டு லண்டனில் உள்ள இந்திய தூதரத்திற்கு போனேன் .என்னுடன் படித்துக்கொண்டிருந்த நாடு கடந்த அரசின் தலைவரின் தம்பியும் விடுமுறைக்கு :o  போக விசாவிற்கு வந்திருந்தார்.

-----

 

இதற்கு ஏன்... வாயை, என்கிறீர்கள் என்பது, புரியவில்லை.

வயிறு ..ஒன்று என்றாலும்,  வாய் வேறுதானே.....

இதனை.... ஆரம்பத்தில், தவிர்த்திருக்கலாம் என எண்ணுகின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதம் அர்ஜுன் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

பயண களைப்பு ,நேரமாற்றம் ,சென்னை வெயில் எல்லாம் சேர அடித்து போட்டது போல தூங்கிவிட்டேன் . எனக்கு முதலே சென்னை விழித்துவிட்டது .ஒரே வாகன சத்தமும்  அதைவிட அருகில் முஸ்லிம்களின் மொஸ்க்கில் இருந்து தொழுகை  சத்தம் வேறு . மரீனா குளிர்காற்று ஒரு இதத்தை தர லோட்சிலேயே காலை இட்லியை சாப்பிட்டுவிட்டு MLA Hostel போகின்றேன் . 

 

என்னுடன் வந்தவர் இரவே முகாம் சென்றுவிட்டதாக மோகன் சொன்னார் .சற்று கவலையாக இருந்தது .வீட்டில் கடைசி பெடி என்பதால் மிக செல்லமாக வளர்ந்தவர் .முழு குடும்பமும் அமேரிக்கா லண்டனில் தான் .அகதிகளுக்கு உடுப்புகள் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வருவதாகத்தான் வீட்டில் சொல்லிவிட்டு வந்தவராம் .(இவரின் கதை ,பின்னர் இவரால் நான் பட்டபாடு பற்றி  முன்னரே யாழில் எழுதியுள்ளேன் )

 

MLA Hostel இன்று வேறு புது முகங்களால் நிரம்பியிருந்தது .முகாமில் இருந்து வெவ்வேறு தேவைகளுக்கு வருபவர்கள் இங்குதான் வருவார்கள் இவர்களைவிட  இரண்டுநடுத்தர வயது  தம்பதிகளும் இருந்தார்கள் .நாட்டில் இருந்து பயிற்சிக்காக  சொல்லாமல் கொள்ளாமல் படகு ஏறி ஓடிவந்த பிள்ளைகளை தேடி பெற்றோர்கள் வருவதும் அவர்களின் விபரம் பெற்று ஒரு வார கால அவகாசத்தில்  பிள்ளைகளை சென்னைக்கு அழைத்து இரண்டு நாட்கள் பெற்றோருடன்  தங்கவிடுவதும் வழக்கமாக இருந்தது .பல பெடியங்களுக்கு திரும்பி பெற்றோருடன் செல்லத்தான் விருப்பம் இருந்தாலும் அது நடக்காது என்பதால் முகாமிற்கு போகவே விருப்பம் என்று சொல்லிவிடுவார்களும் .

 

அன்று அங்கிருந்த தம்பதிகள் கோயிலுக்கு  போய் பூஜை செய்த பொருட்களுடன் வந்திருந்தார்கள் .அந்த தாய்மாரை பார்க்க எனக்கு மிக பாவமாக இருந்தது .பிள்ளைகளில் தாய்மார் வைத்திருக்கும் அன்பு எழுத்தில் எழுத  முடியாதது . மோகன் சொன்னார் இந்த விடயத்தில் தான் மனதை கல்லாக்கி பல தடவைகள் பலரை பேசிக்கூட அனுப்பியிருக்கின்றாராம் , இரக்கம் பார்த்தால் முக்கால்வாசி பேர்களை திருப்பி அனுப்பவேண்டித்தான் வரும் என்றார் .

மாலை உமாவை வட பழனியில் போய் சந்திக்க ஏற்பாடு .

 

வட பழனி .

அழகான தெப்பக்குளத்துடன் கூடிய பெரிய முருகன் கோவில் கொண்ட ஊர் .பலர் திருப்பதிக்கு போகாமல் இங்கேயே மொட்டை போடுவார்கள் .கோடம்பாக்கத்திற்கு அருகில் இருப்பதால் சினிமாமயப்பட்டிருந்தது. துணை நடிக நடிகைகளின் நடன ,பயிற்சி ,சண்டை பயிற்சிகள், கட் -அவுட்டிற்கு படம் வரைதல் என்று வீதியெங்கும் நிரம்பியிருந்தது .

 

ஒரு வாரம் சென்னையில் இருந்து பயிற்சி முகாம்களையும் பார்வையிட்டு விட்டு டெல்கி போகச்சொன்னார் .

அன்றிரவு மரீனா பீச்சில் முகாமில் இருந்து வந்த தோழர் ஒருவருடன் காற்று வாங்க போனேன் .அவர் பெரிதாக எதுவும் அரசியல் கதைக்க விரும்பவில்லை  புகை பிடிக்க விரும்புவதாக சொன்னார் .எனக்கு பிரச்சனையில்லை என்றுவிட்டேன் .

 

இரவு லொட்ஜிற்கு சென்றுவிட்டேன் . தனிமையை போல கொடுமையானது எதுவுமில்லை .எதை அசை போடுவது என்று மனதிற்கே தெரியவில்லை.பெற்றோர் ,சகோதரங்கள் ,நண்பர்கள் ,ஊர் ,லண்டன் ,இயக்கம் என்று அங்கும் இங்கும் பாயுது .சுருட்டை முடியுடன் லேஞ்சியால் முகத்தை துடைத்த படியே கதைக்க உமாவின் முகமும் அடிக்கடி வந்து போக தூங்கிவிட்டேன்.

அடுத்த நாளும் வழக்கம் போல விடிந்தது . MLA Hostel இற்கு போனால் track pants,sleeveless பெனியனுடன் உயரமான சற்று விகார முகத்துடன் இருக்கும் ஒருவரை மோகன் அறிமுகம் செய்து வைத்து இவருடன் தான் இன்று  முகாம்களை பார்வையிட தஞ்சாவூர் செல்கின்றீர் என்றார் .மேலே ஹூட் இல்லாத ஜீப் சென்னை மாநகரத்தை தாண்டி செங்கல்பட்டு வழியே தஞ்சாவூர் நோக்கி பறக்குது .எனக்கு அருகில் புகை பிடித்தபடியே வாகனத்தை ஓட்டியபடி வாமன் .

 

இவர்களை இவற்றை எல்லாம் தாண்டிதான் போராட்டத்தை வெல்ல வேண்டும் என்று மனம் நினைக்கின்றது .

 

தஞ்சாவூரில் இனி தொடரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் உங்கள் எழுத்து நடைக்கு என்று ஒரு தனி ஸ்டைல் இருக்கின்றது...

 

பாரதிராஜாவை தெரியாத உங்கள் பருவத்து கதை வாசிக்கும் போது ...அந்த நிகழ்வுகள், அங்கு உலாவிய மனிதர்களை நம் கண் முன்னே கொண்டு வருகிறீர்கள்.

 

"எனக்கு முதலே சென்னை விழித்துவிட்டது" ...அடுத்த நாளும் வழக்கம் போல விடிந்தது "
நடை தூரத்தில் மரீனா பீச் ...ஆனால் ஒரு வித தனிமையும் பயமும் மனதில்"
"பூணூடன் மனைவிக்கு முன்னால் மந்திரம் சொல்லிக்கொண்டு கிருஸ்னமுர்த்தி"
"ஒரு லைபிரரி ,ஒரு தியேட்டர் , எங்கும் கழுதைகள் ,அதிக வெய்யிலால் காஞ்சு கிடக்கும் மண்."

 

keep it up ... :) 

Link to comment
Share on other sites

ஊரில் எந்த இடம் என்று வாமன் கேட்டால் என்ன சொல்லுவது ?

 

ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு கோண்டாவில் டிப்போவிற்கு பின்னால் உள்ள தோட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தேன் .டிப்போவிற்கு அருகில் சனம் கூடி நிற்குது என்ன விடயம் என்று பார்த்தால் வாமனை  கட்டி வைத்திருக்கின்றார்கள் .இயக்கங்கள் ஆரம்பித்த காலத்தில்  சங்க கடைகளை கொள்ளை அடித்துக்கொண்டு ஒரு சிலர் இயக்கம் எமது ஊரிலும் திரிந்தார்கள் .வாமன் அவர்களுடன் வந்து பெட்டிகளுடன் சேட்டை விடுகின்றார் என்று ஊர் இளைஞர்கள் கொந்தளித்ததன் விளைவுதான் அது .பின்னர் செல்வநாயகத்தின் சாரதி என்று மன்னிப்பு கேட்டதால் ஊர்ப்பக்கம் வரக்கூடாது என்று மன்னித்துவிட்டார்கள் . மட்டகளப்பு சிறைக்குள் சிலருடன் ஏற்பட்ட நட்பால் இங்கு வந்து சேர்ந்துவிட்டார் .

 

ஆறு மணித்தியால பயணத்தில் தஞ்சாவூர் வந்து பெரிய கோவிலுக்கு அருகில் இறங்கி சாப்பிட்டோம்.கதைத்த எதுவும் பெரிதாக ஞாபகம் இல்லை .பின்னரும் ஒரு மணித்தியால  ஓட்டத்தில் உரத்தநாடு சென்றுவிட்டோம் .பிரதான வீதிக்கு அருகிலேயே ஒரு பெரிய இரட்டை மாடி வீடு அதில்தான் ஒரு அறையில் அலுவலகமும் இருந்தது .மா பலா மரங்களால் சூழ்ந்து நல்ல குளிர்மையான இடம் .பொறுப்பாளரிடம் (செந்தில் )  மோகன் தந்த கடிதத்தை கொடுத்தேன் .இரவு மொட்டைமாடியில் தங்கிவிட்டு நாளை முகாம்கள் போய் பார்வையிடலாம் என்றார் .

 

 டென்னிஸ் வீரர்கள் கொண்டுதிரியும் பை போல ஒன்றுக்குள்தான் எனது அனைத்து உடமைகளும் வைத்திருந்தேன் .மொட்டைமாடியில் இராணுவ சீருடைகள்  ஒருவர் தைத்துக்கொண்டு இருந்தார் .வேறு சிலரும் அங்கும் இங்கும்  உலாவிக்கொண்டு திரிந்தார்கள் .ஒரு சிலரே சிரித்து கதைத்துக்கொண்டு திரிந்தார்கள் பலர் முகத்தில் ஒரு வெறுமையும் இறுக்கமும் குடிகொண்டிருந்தது .உடை தைத்துக்கொண்டு இருந்தவருடன் சில மணிநேரம் செலவழித்துவிட்டு எனக்கு தந்த கோரைப்பாயில் தூங்கபோய்விட்டேன் . உடை தைத்துக்கொண்டு இருந்தவர் என்னை பாவம் போல் பார்த்து கதைத்தது போல மனதில் உறுத்த நித்திரையாகிவிட்டேன் .

 

எல்லோருக்கும் தெரிந்த எமது உள்அரசியலை முடிந்தவரை தவிர்த்துவிடுகின்றேன் .  அமைப்பின் இருண்ட காலமே நான் போய் சேர்ந்த காலம் தான் .

காலை சுபாஸ் என்பவர் மோட்டார் சயிக்கிளில் என்னை ஏற்றிக்கொண்டு முகாம்களுக்கு கூட்டிச்சென்றார் .ஒவ்வொரு முகாமும் நடுவில் ஒரு மைதானம் அதில் இயக்ககொடி உயர பறந்துகொண்டு இருந்தது  அதை சுற்றி இடைவெளி விட்டு ஓலை கூரையும் தடுப்பும் வைத்து குடிசைகள் பல  அமைத்திருந்தார்கள் .  பயிற்சி ,படிப்பு ,சமையல் ,துப்பரவு செய்தல் என்று அவர்கள் வாழ்க்கை தினமும் ஓடிக்கொண்டிருந்தது .உலக புரட்சிகள் பற்றிய புத்தகங்கள் ,புதிய ஜனநாயகம் ,கலாச்சாரம் போன்ற தமிழ் முற்போக்கு இதழ்களும் ,அதைவிட முகாம்களுக்கு முகாம் பெயர் வைத்து தங்களுக்குள்  கையெழுத்து பிரதியும் வெளியிட்டுக்கொண்டிருந்தர்கள் .கதை ,கவிதை ,ஓவியங்கள் என்று அதில் பல ஆக்கபூர்வமான விடயங்கள் இருந்தது சற்று சோர்ந்து எனது போன மனதிற்கு புத்துணர்வை தந்தது .

ஒரு முகாமில் என்னுடன் வந்தவர் நல்ல ஒட்ட வெட்டிய மயிருடன் பயிற்சியில் இருந்தார் .அவரது பெயர் அங்கு  "ஜிம்போ ". வேறு ஒரு முகாமில் கிணறு வெட்டிக்கொண்டிருந்த பழைய நண்பர் ஒருவரை சந்தித்தேன் அவர் எனக்கு முதலே வெளிநாடு போனது தெரியும் .பிரான்சில் இருந்து வந்ததாக சொன்னார் (திலீபனின் அண்ணா ).இன்னும் சில தெரிந்தவர்களை சந்தித்தேன் .

 

செம்பாட்டு மண் என்பதால் அவர்கள் அணிந்திருந்த காக்கி அரைகாற்சட்டையும் ,அரை மண்ணிறம் ஆகிய பெனியனும் ஊரில் கல்லு கிறேசரில் வேலை செய்பவரை நினைவில் கொண்டுவந்தது .கடின பயிற்சியால் மரவள்ளி கிழங்கு கணக்கு கால் கைகள் விறைத்துபோயிருந்தது .பட்டுகோட்டை ,புதுகோட்டை என்று உரத்த நாட்டை விட்டு சற்று தொலைவிலும் முகாம்கள் இருந்தது .வயல் வெளிகளின் ஊடாக மோட்டார் சயிக்கில் பயணம் .விவசாயிகள் வீதியில் வயலை வெட்டி போட்டிருப்பார்கள் அதன் மேல் பயணம் செய்யும் வாகனங்களில் நசிந்து நெல்லு வைக்கோலில் இருந்து பிரிகின்றது .வீதி அருகில் இருந்தே பலர் வேலை செய்துகொண்டிருப்பார்கள் .

இறுதியாக High commando முகாமிற்கு சென்றோம் .செய்து வைத்தது போல பலர் ஆர்னோல்ட் சுவாட்சினேக்கர் சைசில் இருந்தார்கள் .இந்த படை வேண்டுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா சிங்களத்திடம் கேட்கவேண்டும் போலிருந்தது .பயிற்சி முடித்து இருந்தவர்களை திருப்ப அழைத்து எனக்காக  மரங்களுக்கிடையே கயிற்றில் போதல் ,நெருப்புக்குள்ளால் பாய்தல் என்று பல விளையாட்டுக்கள் காட்டினார்கள் . இது என்ன தேவையில்லாத வேலை சே என்று போய்விட்டது .வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு இப்படி கட்டி பணமும் ஆதரவும் தேடுகின்றார்களாம் . என்ன அறிவு ?

 

இரண்டு நாட்கள் தஞ்சாவூர் முகாம் வாழ்க்கையுடன்  இரவு பஸ் ஏறி மீண்டும் சென்னை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா  தொடருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் வாசிக்கின்றோம் தொடருங்கோ......

விசா இல்லை என்று எங்களை வாசலில் தடுத்துவிட்டார்கள் .காப்டன் வந்து சின்ன ஒரு சர்சையுடன் வெளியே
இது தான் இந்தியாவின் நீண்டநாள் கனவு ....30 வருடம் பிரபாகரனால் அது பின்னடைவை சந்தித்தது..... :D
Link to comment
Share on other sites

சினிமா பார்த்துக்கொண்டு தமிழ் நாட்டு பயணிகளுடன் இரவு பஸ் பயணம் சென்னை நோக்கி ,மனதில் பல எண்ணங்கள் அலை மோதிக்கொண்டு இருந்தாலும் பஸ்ஸிலும் வீதி நெடுகவும் கண்ணில் படும் காட்சிகளை ரசித்துக்கொண்டே இருந்தேன் .

 

டெல்கி செல்ல இன்னமும் இரண்டு நாட்கள் இருக்கு ,பகல் MLA Hostel, திருவல்லிக்கேணி லோட்ச் அதே அட்டவணை . மோகனுக்கும்  எனக்கும்  நெருக்கம் அதிகரிக்க ஒவ்வொரு பிரச்சனையாக முடிச்சை அவிழ்கின்றார் . அண்ணை இப்படியே நிலைமை தொடர்ந்தால் கொம்பனியை இழுத்து மூட வேண்டித்தான் வரும் என்று மனம் திறந்து சொல்லிவிட்டார் . அறையில் உள்ள மட்டக்களப்பு சிறை உடைப்பு போஸ்டரை காட்டி இது நடக்காமலே இருந்திருக்கலாம் என்றார் .(வாமன் ,மாணிக்கம் ,ராஜன் ,அற்புதம் இவர்களை மனதில் வைத்து தான் சொன்னார் ).  அந்த இரண்டு நாட்களில் கந்தசாமி (சங்கிலி ),மாணிக்கம்,கண்ணன் ,வாசு   எல்லோரையும் சந்தித்தேன் .மனம் விட்டு கதைத்து சாப்பிடுவம் என்று கூட்டிக்கொண்டு போனது சங்கிலிதான் (புலனாய்வு ?). பொட்டம்மானை சங்கிலி கடத்தியதும் பதிலுக்கு கண்ணனை புலிகள் சென்னையில் கடத்தியதும்  இந்த நாட்களில் தான் நடந்தது .

 

டெல்கி போய் சேர்ந்தாயிற்று .

அது ஒரு புது உலகம் .எமக்கு இரண்டு அலுவலகங்கள் இருந்தது .ஒன்று  தி மு க எம்பி எல்.கணேசனின் முழு வீடு , இரண்டாவது அதிமுக எம்பி ஆலடி அருணாவின் வீட்டில் ஒரு அறை. ஏற்கனவே டெல்கியில் ஒருவர் பொறுப்பில் இருந்தார் .எமது இரண்டு அலுவலகங்களுமே  பிரசிடென்ட் வீடு ,பார்லிமென்ட்டிற்கு மிக அருகிலேயே இருந்தது .அந்த ஏரியா முழுக்க இந்திய,சர்வதேச  இராஜதந்திரிகளின் ராஜாங்கம் தான் .

 

இலங்கை இந்திய பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி இருந்த கால கட்டம் அது  .ராஜீவ் காந்தி பார்த்தசாரதியை ஒதுக்கி பண்டாரியை அப்போதுதான் கொண்டுவந்திருந்தார் . எனது வேலை கொ.ப.செ.   இந்திய சர்வதேச அரசியல்வாதிகள் ,பத்திரிகையாளர்கள் , இராஜதந்திரிகளை சந்தித்து எமது பிரச்சனையை சொல்வதும் போராட்டத்திற்கான ஆதரவை கோருவதும் தான் .அவ்வவப்போது சென்னையில் இருந்து எமது தமிழ் ,ஆங்கில வெளியீடுகள் வரும் டெல்கி ரெயில் நிலையத்தில் போய் அவற்றை எடுக்கவேண்டும் . என்னிடம் ஒரு சயிக்கில் இருந்தது அதில் டெல்கி ரெயில் நிலையம் போய் அந்த பார்சலை எடுத்துக்கொண்டு வருவேன் .இப்போ நினைத்தாலும் நம்ப முடியாமல் இருக்கு .

 

திம்பு பேச்சு வார்த்தை தொடங்கிவிட்டதால் எனது பாடும் ரொம்ப பிசியாகிவிட்டது .நான் தேடிப்போன பத்திரிகையாளர்கள் இப்போ என்னை தேடிவர தொடங்கிவிட்டார்கள் .கூட்டணி தலைவர்கள் அசோகா ஹோட்டலில் இருந்தாலும் அவர்களை தேடுவார்கள் எவரும் இல்லை .எம்மை தவிர மற்ற நான்கு இயக்கங்களும் ஒரு கூட்டமைப்பில்  இருந்தாலும் புலிகள் என்றும் அவர்களுடன் ஒட்டியதில்லை .தனித்தே இருந்தார்கள் தனித்தே பறந்தார்கள் .முதல் சுற்று குழம்பி இரண்டாம் சுற்று ஆரம்பித்து பின்னர் அதுவும் குழம்பி சத்தியேந்திரா பண்டாரியுடன் வாக்குவாதத்துடன் முடிந்தது .பண்டாரி போய் வெங்கடேஸ்வரன் வருகின்றார் . இந்த காலகட்டத்தில் தான் பல உள்ளூர் வெளியூர் அரசியல் பிரபலங்களை, எமது இயக்க தலைமைகளை சந்தித்தேன். 

 

டெல்கி வந்த உமா சென்னையில் ஒரு பாடசாலை தொடங்கி மார்க்சிசம், உலக அரசியல்,சர்வதேச உறவுகள் பற்றி படிப்பின்றோம் .அடுத்த மாதம் தொடங்கும் வகுப்புகளுக்கு என்னையும் போகச்சொன்னார் .டெல்கியில் இருக்கும் போது கோவிந்தனின் புதியதோர் உலகம் வாசித்துவிட்டேன் .பழகிவிட்ட டெல்கியையும் தனிமையையும் விட்டு இடியப்ப சிக்கலுக்குள் தலை கொடுக்க விருப்பம் இல்லாமல் சென்னைக்கு ரெயின் எடுக்கின்றேன் .

 

ஏறக்குறைய முப்பது மணி நேர பயணம் அது .ஐரோப்பாவில் இப்படியான பயணங்கள் பச்சை பசேல் என்று இருக்கும் .இது இந்தியாவின்  மத்தியின் நெடுக்காக செல்லும் பாதை .உத்தரபிரதேசம் ,மத்தியபிரதேசம் ,மகராஸ்டிரா ,ஆந்திர தமிழ் நாடு என்று செல்லும் .கண்ணுக்கு எட்டிய இடங்கள் எல்லாம் காய்ந்த பிரதேசங்களும் அனல் காற்றும் தான் .ரெயினிற்குள்ளும் நிற்பாட்டும் இடங்களிலும் நல்ல குளிர்மையான உணவுகளை விற்றுக்கொண்டே வந்தது அந்த வெக்கையை ஓரளவு தணித்தது.

போபாலில் ரெயின் நிலையத்தில்  யூனியன் கார்பைட் நினைவு வந்து சாப்பிட சற்று பயம் வந்தாலும் தாமரை இலையை சுருட்டி அதற்குள் ரொட்டி, முட்டை குழம்பு வைத்து மற்றவர்கள் அதை தின்பதை பார்க்க நானும் போனால் மசிராச்சு என்று வெட்டிவிட்டேன் .நாக்பூர் வர ஒரே தோடம்பழ வாசம் .ஆசை தீர ஆரஞ்சு யூஸ் குடித்தேன் .

 

அதிகாலை சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து MLA Hostel சென்றேன் .

 

இனி எனது அடுத்த ஜாகை கே கே நகர் . தொழில் - படிப்பு .

 

காலை பதினொருமணியளவில் எனது கனவு தொழிற்சாலைக்குள் ஆட்டோ நுழைகின்றது .

 

(கனவு தொழிற்சாலை-சென்னையில்  நான் கழித்த பொன்னான நாட்கள் இங்குதான் )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.