Jump to content

சென்னை கனவு


arjun

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே அப்பிடியே உங்கட இயக்கப்பெயரையும் சொன்னா நல்லாருக்கும்

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்கட பேச்சு வார்த்தையில் என்ன கதைத்தனீங்கள் ? உங்கட நிலைப்பாடு தொடர்பாக இந்திய அரசியல்வாதிகளது நிலைப்பாடு அப்போது என்னவாக இருந்தது அர்ஜீன் அண்ணா? ...கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நல்லம் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே அப்பிடியே உங்கட இயக்கப்பெயரையும் சொன்னா நல்லாருக்கும்

 

ஒன்றுமே  செய்யாத இயக்கத்துக்கு :(

முகவுரையே  இந்தளவு பில்டப்பா இருக்கு என்று பார்க்கின்றீர்களா?? :(

 

சொல்வார்தானே

வைச்சுக்கொண்டா வஞ்சகம் செய்கிறார்...?? :(

Link to comment
Share on other sites

 

எல்லோருக்கும் தெரிந்த எமது உள்அரசியலை முடிந்தவரை தவிர்த்துவிடுகின்றேன் .

 

 

http://vozme.com/speech/en-ml/47/4726e30b6dc3ad55da7a0c4b28b142e2.mp3

Link to comment
Share on other sites

உங்கட பேச்சு வார்த்தையில் என்ன கதைத்தனீங்கள் ? உங்கட நிலைப்பாடு தொடர்பாக இந்திய அரசியல்வாதிகளது நிலைப்பாடு அப்போது என்னவாக இருந்தது அர்ஜீன் அண்ணா? ...கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நல்லம் அண்ணா

சென்னை 375 என்று ஆதவன் போட்ட பதிவு தான் என் கனவு நகரமாகிய சென்னை பற்றி எழுத சொன்னது .இன்றும் என் கனவு நகரம் அதுதான் .

முடிந்தவரை அரசியல் தவிர்த்து சென்னை பற்றி எழுதமுயற்சிக்கின்றேன் .

வேறு இடத்தில் அதை எழுதினால் போச்சு .நேற்று அமிர் பிறந்ததினம் என்ற தலைப்பில் பலர் எழுதிய கருத்துக்கள் சற்று விபரமாக எங்கு எமக்கும் இந்தியாவிற்கும் முரண்பாடு வந்தது என்று எழுதவேண்டும் என்று நினைத்தேன் .

 

நந்தன் -இதில் ஒழிக்க ஒன்றும் இல்லை .ஜெயகாந்தனின் பாரிஸுக்கு போ கதாநாயகனின் பெயர் .யாரிடமும் விசாரித்து என்னில் இருக்கும் மரியாதையை கொஞ்சம் கூட்டுங்கள். :icon_mrgreen:

 

விசுகு அண்ணை -நான் என்ன தமிழ் ஈழம் பிடித்தார்கள் அல்லது தாக்குதல் செய்தார்கள் என்றா எழுதினேன் .ஆரம்பத்தில் இருந்தே அழிய வேண்டிய இயக்கம் எண்பதுகளிலேயே அழிந்து விட்டது என்றுதான் எழுதுகின்றேன் .பல எனது பதிவுகளுக்கு பதில் வைக்க முடியாதவர்கள் சோத்து பார்சல் ,மாலைதீவு ,வவுனியா கடத்தல் கொள்ளை பற்றி எழுதி தமது கோபத்தை தீர்த்துகொள்வார்கள் ஆனால் இது எவற்றிலும் எனக்கு சம்பந்தம் இல்லாத எனக்கு ஏன்  கோவம் வரப்போகின்றது .

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணா தனது அனுபவங்களை விபரித்து செல்கிறார்.தயவுசெய்து யாரும் குழப்பாதீர்கள்.எங்களைப்போன்ற அந்த காலத்திற்கு பின் வந்தவர்கள் பல விடயங்களை அறியக்கூடியதாய் உள்ளது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும்.அனுபவம் அழகானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

>

நந்தன் -இதில் ஒழிக்க ஒன்றும் இல்லை .ஜெயகாந்தனின் பாரிஸுக்கு போ கதாநாயகனின் பெயர் .யாரிடமும் விசாரித்து என்னில் இருக்கும் மரியாதையை கொஞ்சம் கூட்டுங்கள். :icon_mrgreen:

 

 

உதைத்தானே சொல்லுறது எங்கன்ட" கெப்பர்" குணமென்று :D.....இனி ஜெயகாந்தனின் புத்தகத்தை தேடி அதை வாசித்து "ஒ" இதுதான் அவற்ற பெயரென்று அறிந்து ....தொடருங்கோ அர்ஜூன்..

Link to comment
Share on other sites

 

 

விசுகு அண்ணை -நான் என்ன தமிழ் ஈழம் பிடித்தார்கள் அல்லது தாக்குதல் செய்தார்கள் என்றா எழுதினேன் .ஆரம்பத்தில் இருந்தே அழிய வேண்டிய இயக்கம் எண்பதுகளிலேயே அழிந்து விட்டது என்றுதான் எழுதுகின்றேன் .பல எனது பதிவுகளுக்கு பதில் வைக்க முடியாதவர்கள் சோத்து பார்சல் ,மாலைதீவு ,வவுனியா கடத்தல் கொள்ளை பற்றி எழுதி தமது கோபத்தை தீர்த்துகொள்வார்கள் ஆனால் இது எவற்றிலும் எனக்கு சம்பந்தம் இல்லாத எனக்கு ஏன்  கோவம் வரப்போகின்றது .

 

சிலர் எழுதி இருக்கலாம்.. ஆனால் நீங்கள் புலிகள் பற்றி எழுதியவை பத்திரமாக உள்ளன. ஆகவே நீங்களும் எழுதினீர்கள் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்.....
உங்களது சென்னை கனவு, நன்றாக இருக்கின்றது. எழுத்தோட்டம் அருமை.

அதில்.... அரசியல் இதுவரை பெரிதாக.... கலக்கப் படவில்லை.
அப்படியே... தொடர்வது, நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன்.

 

 

 

 

Link to comment
Share on other sites

கே கே நகர் அம்மன் கோயிலடியில் இருக்கும் எம் ஜி ஆர் உருவாக்கிய சத்துணவு கூடம் தான் எமது பாடாசலை .ஓரளவு வசதி படைத்தவர்கள் வசிக்கும் இடம் என்பதால் சத்து உணவு கூடம் தேவையில்லாமல்  போய்விட்டது போலிருக்கு அது எமக்கு பாடசாலை ஆகிவிட்டது .கே கே நகரில் மட்டும் எம்மவர்கள் ஆறு வீடுகளுக்கு கிட்ட வெவ்வேறு தேவைகளுக்காக வாடகைக்கு எடுத்திருந்தார்கள் . பாடசாலைக்கு அருகில் இரண்டு வீடுகள் அங்கு படிக்கும் மாணவர்களுக்காக எடுத்து இரண்டிலுமாக  மொத்தம் நாப்பது பேர்வரை தங்கியிருந்தார்கள் .

 

நான் ஆட்டோவில் போயிறங்கிய நேரம் வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபடியால் வீட்டில் எவரும் இல்லை .பாடசாலையும் வீடும் மிக அருகே இருந்ததால் வகுப்பில் இருந்த ஒருவர் வந்து விபரம் கேட்டு உள்ளே அனுமதித்தார் .நான் வரும் விபரம் அவருக்கு முதலே தெரியும் என நினைக்கின்றேன் .

இரண்டு மாடி வீடு முன்றாம் மாடியாக ஒரு சிறு திறந்த அறையும் இருக்கு .அதில் இருந்து பார்த்தால் அரைவாசி கே கே நகர் தெரியும் அவ்வளவு உயரம் .மிக வசதியான வீடு ,சோலை போல சுற்ற வர மரங்கள் .உடை மாற்றி முகம் கழுவி பாடசாலையை எட்டிப்பார்ப்பம் என்று போனால் 

என்னைவிட இளமையான உருண்டையான ஒருவர் கரும்பலகையில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று ஏதோ சொல்லி படிப்பித்துக்கொண்டிருந்தார் .பாடசாலையில் கல்வி கற்பது போல பெடியங்களும் குறிப்பு எடுத்துகொண்டிருந்தார்கள் .எங்கு போனாலும் உந்த படிப்பு என்னை விடாது போலிருக்கு என்று எனக்குள்ளேயே நினைத்துக்கொண்டேன் .

 

மதிய இடைவேளை விட்டுவிட்டார்கள் போலிருக்கு ஆளை ஆள் அடித்து தள்ளி முண்டியடித்துக்கொண்டு வந்து  தத்தம் அலுமினிய பிளேட்டை எடுத்து வர பெரிய பாத்திரங்களில் சாப்பாடுகளுடன் நின்ற இருவர் வரிசையில் வரும் அவர்கள் எல்லோருக்கும் பரிமாற மதிய உணவை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள் .நான் ஹாலின் ஒரு மூலையில் இருக்கின்றேன் .இவர் யார் ? ஏன் இங்கு இருக்கின்றார் என்று எவரும் அது பற்றி அக்கறைபடவில்லை .தினவெடுத்த உடம்புகள் நல்ல பசி போலும்  . சோறு ,ஒரு மாமிசம் ,ஒரு மரக்கறி ,இரண்டாம் தரமும் போட்டு வெட்டுகின்றார்கள். அன்றைய தினம் சமையலுக்கு பொறுப்பான இருவர் அளவுடன் கணக்கு பார்த்தே கொடுத்துக்கொண்டிருந்தார்கள் .

அந்த வீட்டில் இருந்த  உணவு சாப்பிட்டுகொண்டிருந்த எவரையும் எனக்கு முன்னர் தெரிந்திருகவில்லை . பலர் என்னைவிட வயது குறைந்தவர்களாகவே இருந்தார்கள் .பலர் அரைகாற்சட்டை யும் அரை கை சேர்ட்டும் அணிந்திருந்தார்கள் .சாப்பிட்டு சிலர் முற்றத்தில் இளைப்பாற செல்ல ,சிலர் மொட்டை மாடிக்கு செல்ல ,ஹோலிலேயே பாயை விரித்துவிட்டு குட்டி தூக்கம் போட ஆரம்பித்துவிட்டார்கள் .எவரும் என்னுடன் கதைக்காதது ஏன் தமக்கு வேண்டாதவேலை என்று எல்லோரும் நினைத்துவிட்டார்கள் போலிருக்கு அல்லது முன்னர் இசக்கு பிசக்காக எதுவும் நடந்ததோ தெரியவில்லை .எனக்கோ பசி வயிற்றை கிண்டுகின்றது .

 

அப்போது தாடி வைத்த இருவர் உள்ளே வருகின்றார்கள் அதில் ஒருவரை நான் ஊரில் கண்ட ஞாபகம் . சும்மா ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர்களும் போய் சாப்பிட தொடங்கிவிட்டார்கள் . சாப்பிட்டு முடிய அந்த முகம் அறிந்தவர்தான் (லிங்கம் )என்னுடன் கதைக்க ஆரம்பித்தார் ,நான் இன்னமும் சாப்பிடாதை அறிந்து பொறுப்பாளரை கூப்பிட்டு விஷயத்தை சொன்னார .பொறுப்பாளர் ஒரு அலுமினிய பிளேட்டும்,கப்பும் தந்து இனிமேல் எல்லோரும் சாப்பிடும் போது போய் சாப்பிட்டு விடவேண்டும் அல்லது பிந்தி வருவேன் என்று முதலே சொல்லி வைத்தால் போட்டு வைப்பார்கள் என்று விட்டு போய்விட்டார் .லிங்கம் என்னை  வெளியில் கூட்டிக்கொண்டு போய் சாப்பாடு வாங்கித்தந்தார் .

 

பாடசாலை விதிகள் -

பொறுப்பாளர் அனுமதியுடன் தான் வெளியே செல்லமுடியும் .

வகுப்புகள் கட் பண்ணமுடியாது

சாப்பாடு நேரத்தில் சப்பிட்டுவிடவேண்டும்

சண்டை வாக்குவாதம் முற்றிலும் தடை

அனைவரும் முறை வைத்து இரவு  கிற நெற்ருடன் காவல் 

 

அவசரபதிவு மீண்டும் தணிக்கை செய்யப்படும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா பார்த்துக்கொண்டு தமிழ் நாட்டு பயணிகளுடன் இரவு பஸ் பயணம் சென்னை நோக்கி ,மனதில் பல எண்ணங்கள் அலை மோதிக்கொண்டு இருந்தாலும் பஸ்ஸிலும் வீதி நெடுகவும் கண்ணில் படும் காட்சிகளை ரசித்துக்கொண்டே இருந்தேன் .

 

டெல்கி செல்ல இன்னமும் இரண்டு நாட்கள் இருக்கு ,பகல் MLA Hostel, திருவல்லிக்கேணி லோட்ச் அதே அட்டவணை . மோகனுக்கும்  எனக்கும்  நெருக்கம் அதிகரிக்க ஒவ்வொரு பிரச்சனையாக முடிச்சை அவிழ்கின்றார் . அண்ணை இப்படியே நிலைமை தொடர்ந்தால் கொம்பனியை இழுத்து மூட வேண்டித்தான் வரும் என்று மனம் திறந்து சொல்லிவிட்டார் . அறையில் உள்ள மட்டக்களப்பு சிறை உடைப்பு போஸ்டரை காட்டி இது நடக்காமலே இருந்திருக்கலாம் என்றார் .(வாமன் ,மாணிக்கம் ,ராஜன் ,அற்புதம் இவர்களை மனதில் வைத்து தான் சொன்னார் ).  அந்த இரண்டு நாட்களில் கந்தசாமி (சங்கிலி ),மாணிக்கம்,கண்ணன் ,வாசு   எல்லோரையும் சந்தித்தேன் .மனம் விட்டு கதைத்து சாப்பிடுவம் என்று கூட்டிக்கொண்டு போனது சங்கிலிதான் (புலனாய்வு ?). பொட்டம்மானை சங்கிலி கடத்தியதும் பதிலுக்கு கண்ணனை புலிகள் சென்னையில் கடத்தியதும்  இந்த நாட்களில் தான் நடந்தது .

 

டெல்கி போய் சேர்ந்தாயிற்று .

அது ஒரு புது உலகம் .எமக்கு இரண்டு அலுவலகங்கள் இருந்தது .ஒன்று  தி மு க எம்பி எல்.கணேசனின் முழு வீடு , இரண்டாவது அதிமுக எம்பி ஆலடி அருணாவின் வீட்டில் ஒரு அறை. ஏற்கனவே டெல்கியில் ஒருவர் பொறுப்பில் இருந்தார் .எமது இரண்டு அலுவலகங்களுமே  பிரசிடென்ட் வீடு ,பார்லிமென்ட்டிற்கு மிக அருகிலேயே இருந்தது .அந்த ஏரியா முழுக்க இந்திய,சர்வதேச  இராஜதந்திரிகளின் ராஜாங்கம் தான் .

 

இலங்கை இந்திய பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி இருந்த கால கட்டம் அது  .ராஜீவ் காந்தி பார்த்தசாரதியை ஒதுக்கி பண்டாரியை அப்போதுதான் கொண்டுவந்திருந்தார் . எனது வேலை கொ.ப.செ.   இந்திய சர்வதேச அரசியல்வாதிகள் ,பத்திரிகையாளர்கள் , இராஜதந்திரிகளை சந்தித்து எமது பிரச்சனையை சொல்வதும் போராட்டத்திற்கான ஆதரவை கோருவதும் தான் .அவ்வவப்போது சென்னையில் இருந்து எமது தமிழ் ,ஆங்கில வெளியீடுகள் வரும் டெல்கி ரெயில் நிலையத்தில் போய் அவற்றை எடுக்கவேண்டும் . என்னிடம் ஒரு சயிக்கில் இருந்தது அதில் டெல்கி ரெயில் நிலையம் போய் அந்த பார்சலை எடுத்துக்கொண்டு வருவேன் .இப்போ நினைத்தாலும் நம்ப முடியாமல் இருக்கு .

 

திம்பு பேச்சு வார்த்தை தொடங்கிவிட்டதால் எனது பாடும் ரொம்ப பிசியாகிவிட்டது .நான் தேடிப்போன பத்திரிகையாளர்கள் இப்போ என்னை தேடிவர தொடங்கிவிட்டார்கள் .கூட்டணி தலைவர்கள் அசோகா ஹோட்டலில் இருந்தாலும் அவர்களை தேடுவார்கள் எவரும் இல்லை .எம்மை தவிர மற்ற நான்கு இயக்கங்களும் ஒரு கூட்டமைப்பில்  இருந்தாலும் புலிகள் என்றும் அவர்களுடன் ஒட்டியதில்லை .தனித்தே இருந்தார்கள் தனித்தே பறந்தார்கள் .முதல் சுற்று குழம்பி இரண்டாம் சுற்று ஆரம்பித்து பின்னர் அதுவும் குழம்பி சத்தியேந்திரா பண்டாரியுடன் வாக்குவாதத்துடன் முடிந்தது .பண்டாரி போய் வெங்கடேஸ்வரன் வருகின்றார் . இந்த காலகட்டத்தில் தான் பல உள்ளூர் வெளியூர் அரசியல் பிரபலங்களை, எமது இயக்க தலைமைகளை சந்தித்தேன். 

 

டெல்கி வந்த உமா சென்னையில் ஒரு பாடசாலை தொடங்கி மார்க்சிசம், உலக அரசியல்,சர்வதேச உறவுகள் பற்றி படிப்பின்றோம் .அடுத்த மாதம் தொடங்கும் வகுப்புகளுக்கு என்னையும் போகச்சொன்னார் .டெல்கியில் இருக்கும் போது கோவிந்தனின் புதியதோர் உலகம் வாசித்துவிட்டேன் .பழகிவிட்ட டெல்கியையும் தனிமையையும் விட்டு இடியப்ப சிக்கலுக்குள் தலை கொடுக்க விருப்பம் இல்லாமல் சென்னைக்கு ரெயின் எடுக்கின்றேன் .

 

ஏறக்குறைய முப்பது மணி நேர பயணம் அது .ஐரோப்பாவில் இப்படியான பயணங்கள் பச்சை பசேல் என்று இருக்கும் .இது இந்தியாவின்  மத்தியின் நெடுக்காக செல்லும் பாதை .உத்தரபிரதேசம் ,மத்தியபிரதேசம் ,மகராஸ்டிரா ,ஆந்திர தமிழ் நாடு என்று செல்லும் .கண்ணுக்கு எட்டிய இடங்கள் எல்லாம் காய்ந்த பிரதேசங்களும் அனல் காற்றும் தான் .ரெயினிற்குள்ளும் நிற்பாட்டும் இடங்களிலும் நல்ல குளிர்மையான உணவுகளை விற்றுக்கொண்டே வந்தது அந்த வெக்கையை ஓரளவு தணித்தது.

போபாலில் ரெயின் நிலையத்தில்  யூனியன் கார்பைட் நினைவு வந்து சாப்பிட சற்று பயம் வந்தாலும் தாமரை இலையை சுருட்டி அதற்குள் ரொட்டி, முட்டை குழம்பு வைத்து மற்றவர்கள் அதை தின்பதை பார்க்க நானும் போனால் மசிராச்சு என்று வெட்டிவிட்டேன் .நாக்பூர் வர ஒரே தோடம்பழ வாசம் .ஆசை தீர ஆரஞ்சு யூஸ் குடித்தேன் .

 

அதிகாலை சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து MLA Hostel சென்றேன் .

 

இனி எனது அடுத்த ஜாகை கே கே நகர் . தொழில் - படிப்பு .

 

காலை பதினொருமணியளவில் எனது கனவு தொழிற்சாலைக்குள் ஆட்டோ நுழைகின்றது .

 

(கனவு தொழிற்சாலை-சென்னையில்  நான் கழித்த பொன்னான நாட்கள் இங்குதான் )

எதோ உங்கள் அனுபவம் என்று எழுதுகிறீர்கள் ................. உங்களுடைய சொந்த அனுபவம் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். நீங்கள் பட்ட துயர்கள் துன்பங்களை இன்பங்களை இன்னொருவரால் வாசிக்க முடியுமே தவிர அதை புரிந்து கொள்ள முடியாது. சாதாரண வயிற்று வலி கூட எமக்கு வரும்போதுதான் உண்மையான வலியை புரிந்து கொள்ள முடிகிறது.
 
 
தமிழ் ஈழ விடுதலை போராட்டம் என்பது ....
ஒருவர் வீட்டு சொத்தல்ல பல அற்புதமான அதிசயமான உயிர்கள் தமது இரத்தத்தால் எழுதியது அது.
 
அதை விட்ட பிழைகளை திருத்துகிறோம் ...
பழைய ஞாபகங்கள் .....
எனது அனுபவம் ..... என்ற போர்வையில் பலர் திரித்தும் பிரித்தும். தமது காள்புனர்வுகளை கொட்டி தீர்த்திருக்கிறார்கள் தவிர அங்கே உண்மைகளை எள்ளளவிலும் காண கிடைக்காது. வரும் கால சந்ததியை குழப்ப செய்யும் முயற்சிகள்தான் அவை.
 
நீங்கள் இதய சுத்தியுடன் உங்கள் அனுபவத்தை தொடர விரும்பினால் ............
மேலே சுட்டிகாட்டிய கால அவகாசங்கள் சம்பவங்கள் பெயர்கள் பற்றி கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.
அதை நீங்கள் அசட்டை செய்தால் .............. நாம் மூக்கினுள்ளே விரலை நீட்டுவது போல் உங்களுக்கு தெரிந்தாலும்  அது அது தவிர்க்க முடியாதது.
 
திம்பு பேச்சுவார்த்தை ஜூலை - ஆகஸ்ட் 1985 இல் நடந்தது 
அதில் அரச தரப்பில் ஜே ஆர் தம்பி ஹெக்டர் ஜெயவர்த்தனா தலமையில் இன்னும் மூன்று வழக்கு அறிஞ்சர்கள் கலந்தார்கள் 
 
தமிழ் தரப்பில்  புலிகள் ஈபி புளொட் ஈரோஸ் டெலோ டுல்ப்வ் (tulf) அரசியல் கட்சியும் பங்கேற்றார்கள்.
 
தமிழர் தரப்பு கோரிக்கைகள் ....
தமிழர் தேசம் அடையளபடுத்தல் வேண்டும் 
இலங்கையில் தமிழர்களுக்கு என்று இருந்த பூர்விக நிலபரப்பு உறுதிபடுத்த பட வேண்டும் 
தமிழர்களின் தனி-சுதந்திரம் உரிமை (சுய நிர்ணய உரிமை)அடியாள படுத்தல் வேண்டும் 
இலங்கையில் வாழும் எல்லா தமிழர்களின் அடிப்படை பிரஜா உரிமை உறுதி படுத்த பட வேண்டும்.
 
 
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஜூலை 1987இல் நடந்தது 
அதில் முக்கிய பங்காளிகள் ..... இந்தியா - இலங்கை - புலிகள் 
தமிழ் அமைப்புகள் ஆயுத போராட்டத்தை கைவிடுவது என்றும். (அப்போது புலிகள் மட்டுமே ஆயுத போரில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்கள்). இந்திய அமைதி படை தமிழ் மக்கள் போராளிகள் பாதுகாப்பை உறுதி படுத்தும் என்றும் முன்மொளிந்தர்கள்.
டுல்ப்வ் (tulf) இதில் பங்கு தாரர் என்றாலும் தமிழ் மக்கள் ஏக பிரதிநிதிகளாகவும் ஆயுத போராளிகளாகவும் புலிகள் மட்டுமே இருந்தார்கள்.
மேசையில் கைச்சதிடபட்ட எந்த ஒப்பந்த பேப்பரிலும் பிரபாகரன் - ராஜீவ் - ஜே ஆர்  தவிர்த்து யாரும் கையெழுத்து  இடவில்லை. 
 
அதே காலத்தில் ...........என்று ஒரு பாரிய கால இடைவெளியை கடக்க முயற்சி செய்கிறீர்கள்.
சென்னைக்கு போகும் அவசரமாக கூட இருக்கலாம்.
ஆனால் முன்னுக்கும் பின்னுக்கும் நிற்கிறீர்கள். அதனால்தான் சுட்டிகாட்ட வேண்டி வந்தது. 
Link to comment
Share on other sites

இலங்கை -இந்திய ஒப்பந்தம் பற்றி நான் குறிப்பிடவில்லை .பண்டாரி பற்றி எழுதி இருக்கும் போது புரிந்திருக்கவேண்டும் .

 

பின்னர் வந்து ஒரு சிறு குறிப்பு எழுதுகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதெற்கெல்லாம் குறிப்பு எழுதி உங்கள் நேரத்தை வீண் அடிக்க தேவை இல்லை .........
 
உங்களுடைய அனுபவத்தை பகிர்வதே உங்கள் நோக்கம் என்றால். அதை தொடருங்கள் பலரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
 
எல்லாம் ஒரு இருண்ட மழைநாளில் நடந்ததுபோல் நடந்து முடிந்தவை ..... அடித்துவைத்து யாருக்கும் ஞாபங்கள் இருக்க போவதில்லை. முக்கி முக்கி முயற்சித்தால் மட்டுமே வரகூடியது.
 
(மட்டகளப்பு சிறை உடைப்பை பற்றி எழுதியது நீங்கள் சொன்ன சிலரை ஞாபகம் கொள்ள கூடியதாக இருந்தது. அதில் ஒருவர் குமார் அண்ணா (மயில்லிட்டி) ஈபி யின் முக்கிய படகோட்டி. பட்பனபாவை புலிகள் பிரச்சனை வந்தபோது எமது ஊரில் வைத்துதான் படகு ஏற்றினார்கள், அவரை இறுதியாக கண்டது அன்றுதான்) 
Link to comment
Share on other sites

எமது அரசியல் வரலாறு அனைவரும் அறிந்தது அவற்றை மீண்டும் பதிய விரும்பவில்லை .

 

நீங்கள் நாலு அடிப்படை கோரிக்கைகளை தான் தமிழர் தரப்பு வைத்தது .TULF,ENLF,PLOTE என்றுதான் பங்குபற்றினார்கள் .

(அமீர் ,சிவா ,சம்பந்தன் .)    (அன்டன் ,திலகர் ,வரதர் ,கேதிஸ் ,சார்ல்ஸ் ,மோகன் ,இரட்ணசபாபதி ,ராஜி)   ( சித்தர் ,வாசு .) இதில் திலகர் ,வரதர் ,மோகனை தவிர மற்றவர்களை எனக்கு முன்பே தெரியும் .

டெல்கி விமானநிலையத்திலற்கு பிரபா ,உமா வரவில்லை .மற்றைய தலைவர்கள் வந்தார்கள் .

 

திம்புவில் இருந்து சென்னைக்கு நேரடி தொலைபேசி வசதி இல்லை என்று இந்த பேச்சுவார்த்தையை ஒழுங்கு பண்ணிய ரா சந்திரன் லண்டன் சென்று ஒரு HOTLINE ஒழுங்கு செய்தார் .இயக்க தலைவர்கள்  சென்னை சென்றபின் திம்புவில் இருப்பவர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடு .பேச்சுவார்த்தை இரகசியமாக் வைத்திருக்க சொல்லி ரா சொல்லியிருந்தது ஆனால் திம்புவில் இருந்து தினமும் சித்தர் எனக்கு தொலைபேசி எடுத்து நடந்ததை சொல்ல நான் சந்திரசேகர் என்ற PTI நிருபருக்கு அதை கொடுத்துக்கொண்டிருந்தேன் .அங்கு நடப்பது வெளியில் வருகின்றது  என்ற பழி பாவம் அமிர் மேலே விழுந்தது .

 

நான் டெல்கியில் இருக்கும் போது தான் எமது ஆயுதமும் சென்னையில் பிடிபட்டது (ஏப்ரல் ). சென்னை கஸ்டம்ஸ் அதை தடுத்தவுடன் பார்த்தசாரதியிடம் சென்றோம் .விஷயம் வெளியில் வராவிட்டால் முயற்சித்து பார்ப்பதாக சொன்னார் .அன்று இரவு சித்தரும் நானும் தூங்காமல் பிளேன் டீ சிகரெட் (நான் அப்போ பத்துவதில்லை) சகிதம் வீட்டிற்கு வெளியே ஒரு புல்வெளியில் இருந்தோம்  .காலை பத்திரிகைகளில் கொட்டை எழுத்தில் தலையங்கம் . விஷயம் கை மீறி போய்விட்டது .

 

முடிந்தவரை அரசியல் அற்று சென்னை வாழ்க்கை நதியா ரேவதி அம்பிகா ராதாவுடன் தொடரும் .

Link to comment
Share on other sites

மாலை மூன்று மணிக்கு மாலை நேர அடுத்த வகுப்பு தொடங்க   அந்த இரண்டு தாடிக்காரர்களும் இருந்த வாங்கிற்கு அருகில் போய்  அமர்ந்தேன்  .எமது வீட்டில் இருந்த இருபது பேரை விட மற்ற வீட்டில் இருந்தும்  இருபது பேர்கள் வருகின்றார்கள் .அநேகம் எல்லோருமே காய்ந்து கறுத்து போயிருந்தார்கள் ,உடுப்புகள் வேறு அப்படி இப்படித்தான் .

 

அங்கிருந்து வந்தவர்களில் ஒருவர் மட்டும் ஏதோ படப்பிடிப்பிற்கு செல்பவர் போல ஆளும் நல்ல உயரம்,சரியான வெள்ளை ,ஒழுங்காக வாரிய தலைமுடி, கிளீன் சேவ் ,கை மடிப்பு கசங்காமல் சேர்ட் ,பெல்பொட்டம்.சிறிது மேக்கப் வேறு போட்டிருந்தார் போலிருக்கு . அவரை சுற்றி நாலு ஐந்து சிண்ணுகள் வேறு ,அவர் கதை கேட்டு சிரித்தபடி   .ஆளை பார்த்தவுடனேயே ஏனோ எனக்கு பிடிக்கவில்லை   .அவரும் நேர தாடிக்கரர்களைடம் (லிங்கம் ,துரை) தான் வந்து எனக்கு அருகில் உட்காந்தார் .

 

மூன்று பேரும் முன்பின் தெரியாதவர்கள் பாலஸ்தீனத்தில் பயிற்சிக்கு போன இடத்தில் நண்பர்கள் ஆனவர்கள் .லிங்கம் காந்தியத்தில் இருந்து பின்னர் பயிற்சிக்கு பாலஸ்தீனம் போனவர் .துரை ஜெர்மனில் இருந்து பாலஸ்தீனம் போனவர் .இந்த வெள்ளைப் பயல் பிரான்சில் இருந்து பாலஸ்தீனம் போனவர் பெயர் அயன் . இந்திய கம்னிஸ்டுகட்சியில் இருந்து ஒருவர் வந்து மார்க்சின் மூலதனம்  படிப்பிக்க ஆரம்பித்தார் .  இன்று வரை அது எனக்கு விளங்காமலோ இருப்பது வேறுவிடயம் ..

 

ஐந்து மணிக்கு வகுப்பு முடிந்துவிட்டது .இவர்கள் மூவரும் என்னையும் தங்களுடன் அழைக்க, அம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் ஒரு தேத்தண்ணி கடைக்குள் சென்று தேநீர் ஓர்டர் பண்ணி விட்டு சிகரெட் பத்த தொடங்குகின்றார்கள் .இந்த சிகரெட் பிடிப்பு சந்திப்புதான் எனது இயக்க வாழ்க்கையை திசை திருப்பியது .இவர்களை  சந்திக்காமல் இருந்திருந்தால் கடைசி வரை உமா ,சித்தர் ,மாணிக்கத்துடன் இருந்து கொலை கொள்ளைக்கு வேறு வழியில்லாமல் துணை வேறு போயிருக்கலாம் . அடுத்த ஒரு மாத எனது வாழ்க்கை இவர்களுடனேயே கழிந்தது .அயனில் நான் வைத்த அபிப்பிராயம் எவ்வளவு பிழை என்று பின்னர் புரிந்துகொண்டேன் .இவரை போல மிக நேர்மையான உண்மையான ஒரு தோழரை நான் சந்திக்கவே இல்லை. அயன் அடுத்த வீட்டு பொறுப்பாளர் .துரை உமாவுடன் ஆபிசில் தங்கியிருப்பவர் .இவர்கள் இப்படி மற்றவர்களை விட்டு வெளியில் வந்து சிகரெட் பத்துவது பிழையான ஒரு விடயம் தான் ஆனால் பொறுப்புகளில் இருந்த அவர்கள் அடுத்த கட்ட மாற்றத்திற்கு அவர்கள் இப்படி தனியே சந்தித்துகொண்டேதான் இருந்தார்கள் .

 

இரவு பெரிய பெட்டி,வாளிகளில்  இட்லி ,சம்பல் ,சாம்பார் அருகில் இருக்கும் ஓர் இடத்தில் எடுத்துவந்தார்கள் ..சாப்பாடு முடிய  சிலர் மொட்டை மாடியில் இருந்து அடுத்த விட்டு டி வி யில் ஒலியும் ஒளியும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் .ஒருவர் பழைய நினைவுகளை மீட்டு  "வெள்ளை புறா ஒன்று "பாடிக்கொண்டிருந்தார் அவரை சுற்றி ஒரு சிலர் . வேறு சிலர் வாசிப்பு ,படிப்பு என்று .நான் லிங்கத்துடன் எமது இரண்டுவருட குப்பைகளை  கிளறிக்கொண்டிருந்தேன்.

 

இன்று சென்னை சுப்பிரபாதத்துடன் விழித்தது.  கே கே நகர்  திருவல்லிக்கேணி போலல்லாது மிக அமைதியான இடம் .அயலில் உள்ள கோயிலில் மணியோசையுடன் விழித்த நான் மொட்டை மாடியில் இருந்து எட்டிப்பார்க்க ஒவ்வொரு வீட்டிலும் ரேவதிகள் அரை தாவணி ,முழு தாவணிகளுடன்  தொய்ந்து தலைமுடி அள்ளி செருகி, முற்றத்தை கூட்டி பெருக்கி கோலம்  போட்டுக்கொண்டிருந்தார்கள் .அவர்கள் சேலை கட்டும் அழகே தனி,  சேலை இடுப்பு இடைவெளி சிம்ரன் தோற்றுபோவார் . அதிகாலை சயிக்கிளில் "சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா" பாடிக்கொண்டு  டியுசன் செல்லும் நதியாக்கள் மறுபுறம் .நாயுடுஹால் பருத்தியில் பல வித டிசைனில் குர்த்தாக்களுடன் வேலைக்கு போகும் அம்பிகாக்கள் என்று  அதன் அழகே தனி .

 

மறுபுறம் சத்துணவு கூடத்தின் முன்னிருக்கும் மைதானத்தில் கே கே நகர் பெடியங்கள் டென்னிஸ்போலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள் .அதை பார்த்துக்கொண்டு உடற்பயிற்சி செய்துகொண்திருந்த எம்மவர்களிடம் "ஏன் நீங்கள் விளையாட போவதில்லலையா ?" என்று கேட்டேன் .அது " முதலாளித்துவ விளையாட்டு " என்று கோரஸாக பதில் வந்தது .அட இப்படி வேறு சொல்லி வைத்திருக்கின்றார்களா ? எதை சொன்னாலும் அதை கேட்டு சரி என்று தலையாட்டும் நிலையில் தான் பலர் . 

அடுத்த நாள் காலை .எம்மவர் பார்த்துக்கொண்டிருக்க நான் பாட்டிங் செய்துகொண்டிருந்தேன் அடுத்தவாரமே கே கே நகர் அம்மன் கோவில் டீமில் ஒருவராகிவிட்டேன் .ஆறு வாரங்கள் இப்படியே ஓடிவிட்டது .எனக்கு ஓரளவு எமக்குள் என்ன அரசியல் நடந்துகொண்டிருக்கு ,உமா நிலை என்ன,நாட்டு நிலைமை என்ன என்று ஒரு படம் வந்துவிட்டது .படித்தவர்கள் முகாம்கள் திரும்ப புதிதாக ஆங்கில மீடியத்தில் உயர் படிப்பு என்று தொடங்கினார்கள் .இவ்வளவு காலமும் படித்தவர்களில் இருந்து ஒரு குறிப்பிட்டவர்களை அதற்கு தெரிவுசெய்து இருந்தார்கள் .எனது அந்த மூன்று நபர்களும் அதில் இல்லை . மீண்டும் பல புதிய முகங்கள் .அனேகர் நல்ல ஆங்கில அறிவு உள்ளவர்களாகவும் பல்கலைக்கழக அனுமதி கிடைத்து அதைவிட்டு வந்தவர்களாகவும் இருந்தார்கள் .முதல் பாட்சில் இருந்தவர்கள் எனது அரசியல் பாதையை மாற்றினார்கள் இந்த பட்சில் வந்த ஒருவர் எனது வாழ்கையையே மாற்றிவிட்டார் .

இப்போது இந்த இரு வீட்டிற்கும் நான் தான் பொறுப்பு .கன்னிமாரா லைபிரரிரிக்கு படிக்க போவது என்று இப்போ எல்லோரும் வெளியில் போய் வந்தார்கள் .வேறு விடயங்களுக்காக அவ்வப்போது உமாவை அடிக்கடி சந்தித்துகொண்டே இருந்தேன் .அகதிகளுக்கான வேலை ஒன்றையும் பொறுப்பு எடுக்க சொன்னார்.

 

சென்னையுடன் இருந்த எனது வாழ்வு தமிழ் நாடு என்று விரிந்தது .அடுத்த கட்ட பயணம் தொடரும் .

 

 

 

Link to comment
Share on other sites

இது தான் உங்கள் ரேவதி, அம்பிகா, நதியா கதையா? சப்பென்று போய்விட்டது... :)

உள்ளூர் தேவதைகளை நடிகைகளோடு ஒப்பிட்டது பிழை :)

நான் பின்-80களில் தமிழ்நாட்டில் திரிந்தபொழுது அவதானித்தது நாமும் சாதாரண இந்தியர்கள் போலிருந்தால் இந்தியா மிகவும் அருமையாக இருந்தது (வேலை வெட்டி/படிப்பு எந்த பிரச்சனைகளும் இல்லை-எந்த இயக்கங்களிலும் இல்லை)...ஆனால் வெளிநாட்டு பந்தா காட்டியவர்கள் தான் பிரச்சனைகளை எதிர்கொண்டார்கள்.....

(நான் பாதி தமிழ்நாட்டை சுற்றிஇருக்கிறேன் எந்த இடத்திலும் பிரச்சனைகளை சந்தித்தது கிடையாது)

Link to comment
Share on other sites

அண்ணா எப்படி நீங்கள் வெளிநாட்டில் இருந்து இயக்கத்தில் சேர்ந்தீர்கள்?எப்போது இணைந்தீர்கள்?தெரியபடுத்தக்கூடியதை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா.... கரனின் கேள்வியுடன், இன்னுமொன்று.....
இயக்கத்தில் சேருவது என்று, முடிவெடுத்த பின்...

புளொட்டில் தான் சேர வேண்டும் என்று, எப்படி முடிவெடுத்தீர்கள்? :)

Link to comment
Share on other sites

அகதிகள் பற்றிய விபரங்களை விபரமாக எடுத்தால் நல்லது என்று தமிழ் நாடு அரசு தலைமை காரியாலயத்திற்கு சென்று அதற்கு பொறுப்பானவரை சந்தித்தால் ,
 
தமிழ்நாடு அரசு அவர்களை  பொறுப்பு எடுத்து பராமரிப்பதால் வெளியில் இருந்து எவரும் முகாம்களுக்கு செல்ல அனுமதியில்லை  என்றுவிட்டு ,நாங்கள் அவர்களுக்கு மிக  அடிப்படை உதவிகளைத்தான்  செய்துவருகின்றோம் ,வேறு சில அமைப்புகள் அவர்களுக்கு உதவிகள் செய்துவருகின்றன அவற்றை நாம் கண்டும் காணாமலும் விட்டு வருகின்றோம் என்றார் .நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சந்திரகாசனின் அலுவலகத்திற்கு சென்றேன் .அவரின் செகரட்டரி ஒரு பெண் அப்படி விபரங்கள் தங்களிடம் இல்லை என்றுவிட்டார் .
 
எனக்கு முதல் எமது அமைப்பில் இருந்து இப்படியான வேலை செய்தவர்கள் சில விபரங்கள் வைத்திருந்தார்கள்  ,அதில் ஒரு பத்து பன்னிரண்டு முகாம்கள் பற்றிய விபரங்கள் மட்டுமே இருந்தது .முதலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் முட்டுக்காடு முகாமிற்கு சென்றேன் .அகதிகளாக வந்தவர்களிடம் பல விபரங்கள் இருந்தது .சென்னை மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டத்திலும் நூற்றுக்கு மேற்பட்ட முகாம்களில் எழுபத்திஐயாயிரம் பேர்கள் வரையில் இருப்பதாக சொன்னார்கள் .மன்னார் ,வவுனியா ,மட்டக்களப்பு ,திருகோணமலை இந்த இடங்களை சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் அகதியாக வந்திருந்தார்கள் .
 
எங்களிடம் இருக்கும் பணத்தில் முழு அகதிமுகாம்களின் தேவைகளை பூர்த்திசெய்வது என்பது முடியாத அலுவல் அதைவிட அகதிகளுக்கு உதவுகின்றோம் என்று வெளிநாட்டு கிறிஸ்டியன் அமைப்புகளிடம் இருந்து பெறும் பணத்தில் பெரும்பகுதி எமது அமைப்புப்பின் தேவைகளுக்கே பயன்படுத்தபட்டது .இருபத்திற்கு மேற்பட்ட முகாம்களுக்கு குடிசைகள் ,குழாய் கிணறு ,உடுப்புகள் என்று உதவி செய்துகொண்டிருந்தோம் .புலிகளை தவிர வேறு எந்த அமைப்பும் அகதிகளுக்கு உதவிசெய்ததை காணவில்லை .புலிகள் டாக்டர் ஜெயகுலராஜா தலமையில் என்று நினைக்கின்றேன் நடமாடும் வைத்தியசாலை ,மலிவு விலை கடை எல்லாம் நடாத்திவந்தார்கள் .விழுப்புரம் ,கடலூர்,தர்மபுரி,சேலம் ,ஈரோடு என்று பயணங்கள் தொடர்ந்தது .
குளத்தில் அருவியில்  குளித்தல் ,சவுக்க மர தோப்பிற்குள் காலை கடன் கழித்தல்,அகதி முகாம்களில் சாப்பாடு ,டூரிங் கொட்டகை சினிமா தரையில் இருந்து பார்ப்பது ,  முகாம் ,கோவில் திண்ணைகளில் தூக்கம் என்று பல மாறுபட்ட அனுபவங்கள் .அதைவிட அகதிகளின் பல தரப்பட்ட பிரச்சனைகளை கேட்டு அதற்கு ஆறுதல் சொல்வது வேறுவித அனுபவம் .
இரண்டு மாத ஆங்கில சர்வதேச அரசியல் படிப்பு முடிந்த பின்னர் தான்  அதிக அகதிமுகாம்கள் சென்றுவந்தேன் .நாட்டில் இருந்த பல தோழர்கள் அமைப்பில் மாற்றம் வேண்டி மகாநாடு ஒன்றை நாடத்துவதற்கு அந்த நேரம் மும்முரமாக வேலைசெய்துகொண்டிருந்தார்கள் .என்னுடன் முதல் வகுப்பில் படித்த லிங்கமும்  அயனும்  அதில் அடக்கம் .துரை  அலுவலகத்தில் இருந்தாலும் இடைக்கிடை நாடு சென்று வந்தார் .அவர்தான் எனக்கு அமைப்பிற்குள்ளே  நடக்கின்றது என்பதை சொல்லிவந்தார் .
தமிழ்நாட்டு அரசின் உதவியுடன் சினிமா  கலைஞர்களை வைத்து ஒரு நிதி திரட்டும் நிகழ்வு ஒன்று நேரு ஸ்டேடியத்தில் நடாத்த மூன்று மாதங்களாக முயன்று சில தடங்கல்கள் காரணாமாக  பிற்போட்டுக்கொண்டே வந்திருந்தார்கள் .அப்படி ஒரு நிகழ்வை நடாத்த இவர்களுக்கு பிறகு தொடங்கிய புலிகள் புதுமைபித்தன் துணையுடன் இளையராஜாவின் இசை  கச்சேரியுடன் நேரு ஸ்டேடியத்தில் நடாத்திவிட்டார்கள் .அந்த நிகழ்வு நடாத்த அமைத்திருந்தவர்களுடன்  என்னையும் இப்போ இணைத்துவிட்ட்டிருந்தார்கள் .நட்டமோ நயமோ தொடங்கிய நிகழ்வை எப்படியும் மிக சீக்கிரம் முடித்துவிட சொல்லி உமா என்னிடம் சொன்னார் .அந்த குழுவில்  யாழ் கள உறவு ஒருவரும்  இருந்தார் . 
 
மீண்டும் இரண்டு வாரங்கள் எதுவித முன்னேற்றமும் இல்லாமல் சென்னையை காரில் சுற்றியதுதான் மிச்சம் .காரை விட்டு மோட்டார் சயிக்கிளுக்கு மாறி பொறுப்பையும் நான் வேறு ஒருவருடன்  சேர்ந்து எடுத்துவிட்டிருந்தேன் .பொம்மை ஆசிரியரின் உதவியுடன் வள்ளுவர் கோட்டத்தில் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் தலைமையில் கங்கை அமரனின் இசைக்கச்சேரியுடன்  இலங்கை அகதிகளுக்கான நிதி சேர் " நட்சத்திர இரவு "இனிதே நடைபெற்றது . 
 
நட்சத்திர இரவும் நான் பட்ட நல்லதும் கேட்டதும் நாளை .
Link to comment
Share on other sites

நட்சத்திர  இரவு ,
 
மீண்டும் ஒரு முகம் தெரியா புது உறவுகளுடன் வித்தியாசமான ஒரு பயணம் .சில வயது போனவர்களும் வேறு இருந்தார்கள் .உமாவின் அத்தான் ஒருவர் ,சிங்கபூரில் இருந்து ஆயுத கடத்தலுக்கு உதவியதற்கு நாடு கடத்தபட்ட  ஒருவர் .இவர்கள் இருவருக்கும் ஆளை ஆள் கண்ணில் காட்டகூடாது. அதைவிட  ரிக்கெட் விக்க ,நோட்டிஸ் ஓட்ட என்று இருபதிற்கு மேற்பட்ட உறவுகள்.ஒரு கார் சாரதியுடன் தந்திருந்தார்கள் . சாரதி சென் ஜோன்சில் படித்தவர் . சிரித்தபடி இருப்பார் பெரிதாக கதைக்கமாட்டார் .சில வாரங்களில் காரை நிற்பாட்டிவிட்டு ஒரு டி வி எஸ் மோட்டார் சயிக்கிளுக்கு மாறினோம் .அது சயிக்கில் மாதிரி எல்லா இடமும் பூந்து விளையாடலாம் .
 
இங்கு ஒருவர் எனக்கு பார்ட்னர் ஆக அகப்பட்டார் பெயர் ரவி .அமைப்பில் அப்படி ஒருவரை நான் சந்திப்பது அதுதான் முதல்தடவை .என்னை விட மூன்று நாலு வயது குறைவு .குரங்கன் என்ற குரங்கன் .ஊரில வசதியாக இருந்திருப்பார் போலிருக்கு , காட்லி கல்லூரி மாணவர் .இவர் தந்தை காட்லியின் ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் என்று சொன்னார் .அங்கு இருக்கும் அனைவருக்கும் எந்த நேரமும்  ஒரு வித அலுப்பு கொடுத்துக்கொண்டே இருந்தார் .அவரை எதிர்த்து எவரும் எதுவும் சொல்லுவதில்லை .முகாமில் ஒரு பொறுப்பாளரின் வலது கையாக இருந்து இதே அலுப்பு முகாம்களிலும்  பலருக்கு கொடுத்தவராம் . 
 
ஒரு நாள் காலை எம்முடன் இருந்த ஒரு தோழர் புது உடுப்பு ஒன்றை போட்டுக்கொண்டு வெளிக்கிட்டுகொண்டுவந்தார் .அவர் மொட்டைமாடியில் நிற்கும் போது ரவி ஒரு வாளி தண்ணீரை அவர் தலையில் ஊற்றிவிட்டு பெரிய பகிடி மாதிரி சிரித்தார் .வேறு ஒரு சிலரும் சிரித்தார்கள் .புது உடுப்பு போட்டவர் கோபம் வந்தாலும் இயலாமையால் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தார் . எனக்கு கோவம் வந்தால் வேறு ஒன்றும் கண் முன்தெரியாது .பேச்சு என்றால் அந்த மாதிரி பேச்சு அதுவும் அரை மணித்தியாலத்திற்கு கண் மண் தெரியாமல் அவரை வைத்து வாங்கிவிட்டேன் .முகாம்களில் நடந்த விடயங்களையும் வேறு சுட்டி காட்டி பேசினேன் .உனக்கு நான் இப்படி செய்தால் என்ன செய்வாய் என்று கேட்டேன் .அவர் எள்ளளவும் நினைக்கவில்லை நான் இப்படி எல்லோருக்கும் முன்னால் பேசுவேன் என்று .இயக்கம் என்று இல்லாவிட்டால் அடித்து பல்லை கழட்டியிருப்பன் என்றேன் .தண்ணி ஊற்றியவரிடம் மன்னிப்பை கேட்டுவிட்டு கீழே இறங்கி போய்விட்டார் .
அன்று இரவு மொட்டைமாடியில் படுத்திருக்கும் போது அழத்தொடங்கிவிட்டார் .முகாம்களில் நடந்ததை இழுத்ததும் ,மற்றவர்களுக்கு முன்னால் பேசியதும் அவரை பாதித்துவிட்டது .
 
அந்த நிகழ்விற்கு பின்னர் என்னுடன் மிக நெருங்கிவிட்டார் .நிகழ்சி முடியமட்டும் இருவரும் அனேகம் ஒன்றாகவே திரிந்தோம் .பிறகும் பல செய்கைகளில் குரங்கனாகவே இருந்தார் .மோட்டார் சயிக்கில் ஒரு வழி பாதியில் விடுவார் ,வேகமாக ஒட்டுவார் பொலிஸ் நிற்பாட்ட சொன்னால் மெதுவாக்கி அவர்களுக்கு கிட்ட போய் ஒரே இழுவையில் இழுத்துக்கொண்டு போய்விடுவார் .ஒரு முறை துரத்தி பிடித்துவிடார்கள் பிறகு உள்ள பொய்கள் எல்லாம் சொல்லி தப்பியாச்சு .எங்களிடம் எதுவித அடையாள அட்டைகள் வேறு இல்லை .அவரது உறவின மாணவிகள் சென்னையில் தங்கி இருந்து படித்தால் மோட்டார் சயிக்கில் இடைக்கிடை அங்கு போய்விடும். பணம் வேறு வாங்கி வந்து செலவழித்து தள்ளுவார் .
 
இந்த காலகட்டத்தில் தான் நான் இயக்க பணத்தை சற்று துஸ்பிரயோகம் செய்ததும் .ஐந்து சதத்திற்கும் கணக்கு எழுதிகொண்டிருந்த நான் இப்போ அடிக்கடி சரவணபவனில் சாப்பிடுவதும் தியாகராஜநகரில் இருக்கும் லிங்கம் கூல் பார் மாதிரி ஓர் இடத்தில் ஐஸ் கிறீம்,சர்பத் என குடிக்கவும் தொடங்கியிருந்தேன் .இரவில் படம் வேறு பார்க்க தொடங்கினேன் .
 
நிகழ்விற்கான வேலைகளை பகிர்ந்தே செய்தோம் .நானும் ரவியும் தான் நிகழ்சிக்காக நடிக,நடிகைகள் ,பாடர்களை சந்தித்துக்கொண்டு இருந்தோம் .காலை பொம்மை ஆசிரியர் நெல்லையுடன் வெளிக்கிட்டால் நடிக நடிகைகளின் வீடு ,ஸ்டுடியோ ,படப்பிடிப்பு தளங்கள் என்று அனைத்து பிரபலங்களையும் சந்தித்தோம் .
 
அந்த நேரம் எமது பிரச்சனை பற்றி எதுவும் அறியாதவர்களாக கை மட்டும் தந்து வெறுமன தலையாட்டி விட்டவர்கள் தான் அதிகம் .ரஜனி ,சத்தியராஜ் ,பாரதிராஜா ,பாக்கியராஜ் ,சிவகுமார் ,முழு நடிககைளும் என்று பெரிய பட்டியல் .
 
சிறிது மனம் திறந்து எமது பிரச்சனையை காது கொடுத்து கேட்டவர்கள் பாலசந்தர் ,ராதாரவி ,மணிவண்ணன் ,நிழல்கள் ரவி போன்ற சிலர் .
 
கமல் ,விஜயகாந்த் ,ராஜேஷ்,எஸ் பி முத்துராமன் போன்றவர்கள் நிறைய எமது அரசியல் பற்றி கதைத்தார்கள் .கமல் அப்படி எங்களுடன் கதைத்தது மாத்திரம் அல்ல வேறு நடிகர்களை சந்திக்க போகும் போதும் தானே எம்மை தேடிவந்து நன்கு பழகியவர் போல கதைப்பார் .உலகம் முழுக்க சிலோன் தமிழர்கள் நல்ல பணத்துடன் இருக்கின்றார்கள் அவர்களிடம் உதவி கேட்பதை விட்டு ஸ்ருடியோ வாசலில் ஏன் காவல் நிற்கின்றீர்கள் என்று வேறு ஒருமுறை கேட்டார் .விட்டு தனது தயாரிப்பில் இருக்கும் விக்ரம்  படப்பிடிப்பு தளத்தையும் சுற்றி காட்டினார் .ராஜேஷ் மார்க்சிசம் பற்றி கதைக்க தொடங்கி அறுத்து தள்ளிவிட்டார் விஜயகாந்து,இப்பரகிம் ராவுத்தர் வீடுகள் நாங்கள் பயணம் செய்யும் பாதையில் இருப்பதால் இடைக்கிடை அங்கு புகுந்துவிடுவோம் .கங்கைஅமரனின் இசை கச்சேரி தான் ஒழுங்கு பண்ணியிருந்தோம் அதனால் அவர் மிக நெருக்கமாகி தனது மகனின் பிறந்த தினத்திற்கும் எம்மை அழைத்திருந்தார் .அம்பிகா ராதா வீட்டில் மிஸ்டர் பாரத் சூட்டிங்கில் ரஜனி ,சத்தியராஜ் ,அம்பிகாவை சந்தித்தோம் .அடிக்கடி போய் வந்ததால் பாடகர் ஜேசுதாசின் மனைவி நண்பராகிவிட்டிருந்தார் .எமது விட்டிற்கு அடுத்த வீடு என்பதால் குழந்தைகளாக இருந்த சோனியாவும் டிங்குவும் நிகழ்சிக்கு வந்தார்கள் .அவர்கள் அம்மாவும் நல்ல அழகு ,அடிக்கடி வந்து என்னுடன் கதைப்பதால் அண்ணை கதை அப்படி போகுதோ என்று தோழர்களின் பகிடி வேறு . 
 
 
வள்ளுவர் கோட்டத்தை சுற்றிய இடங்களிலும் மவுண்ட்ரோடு முழுக்க இரவு இரவாக நோட்டிஸ் ஓட்டினோம் .பின்னிரவு வந்தால் எந்த நகரும் தூங்கிவிடும் அந்த நேரத்தில் மவுன்ரோடு நெடுக எமது பஸ்சில் பத்து பதினைந்து பேர்கள் திரிந்து நோட்டிஸ் ஒட்டியது மறக்கமுடியாத அனுபவம் .
லண்டனில் இருந்து கிருஷ்ணன் வந்திருந்தார் அவருடன் திரிந்ததில் பல பணக்கார வர்த்தகர்களை சந்தித்து குறிக்கப்பட்ட அளவு பணம் சேர்க்க கூடியதாக இருந்தது .அவருடன் போய்த்தான்  நாகராசாவையும்  (ஆரம்ப புலி உறுப்பினர் ) சந்தித்தேன்.
நிகழ்சி அன்று மாலை வரை கடைசி நேர ஏற்பாடுகளை காரில் அலைந்து செய்துவிட்டு வீடு திரும்பினேன் .வீட்டில் எவரும் இல்லை எல்லோரும் நிகழ்சிக்கு போய்விட்டிருந்தார்கள் .குளித்துவிட்டு வந்து பார்த்தால் செருப்பு ,சப்பாத்து ,சிலிப்பர் எதுவும் இல்லை .நான் போட்டுக்கொண்டு வந்த செருப்பையும் காணோம் .நல்லவேளை எனது பாக்கில் சொக்ஸ் இருந்தது வெள்ளை சொக்சுடன் வெறும் காலுடன் போய் வள்ளுவர் கோட்டம் போய் இறங்கினேன் .ஏதோ கோயிலிற்குள் திரிவது போல சொக்சுடனேயே அங்கு திரிந்தேன் .பிரபல நடிக நடிகைகள் எவரும் வரவில்லை கங்கை அமரன் ஜேசுதாஸ் மலேசிய வாசுதேவன் பாட்டு கச்சேரி ,நிழல்கள் ரவி ,இளவரசி ,சார்லியின் நாடகம் என்று நிகழ்சியை ஒருவாறு ஒப்பேற்றிவிட்டோம் .
 
நிகழ்சி முடிய எல்லோரையும்  நன்றி சொல்லி வழியனுப்பிகொண்டு  இருக்கின்றேன்  "நடிகைகளுடன் பொல்லாத பிசி போல " திரும்பி பார்கின்றேன் ,எமது  தோழரின் சென்னையில் இருந்து படிக்கும் சகோதரி  ஒருவர் நக்கல் சிரிப்புடன் தாயாருடன் நிற்கின்றார் .அவர்களுக்கும் நன்றி சொல்லி அனுப்பிவைக்கின்றேன் .அவரே பின் எனது மனைவி ஆனது ஒருவித அதிசயம் தான் .
இந்த நிகழ்சி நடந்த நாட்களில் உமாவுடன் அடிக்க சந்திக்க வேண்டி வந்தாலும் அடிக்கடி உட்பிரச்சனைகள் பற்றி நான் கதைத்தால் சிறு இடைவெளி ஒன்றும் ஏற்பட்டிருந்தது .
 
மேலோட்டமாக அது பற்றி பின்னர் தொடர்கின்றேன் . 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் அர்ஜுன் ...
மனம் திறந்து மடை மடையாக எழுதுகிறீர்கள்.
உங்கள் எழுத்திலும் வீரியம் கூடி இருக்கிறது.
அடுத்த பதிவை எதிர் நோக்கி பலர் காத்திருக்கிறோம்.. :) 

 

Link to comment
Share on other sites

கடவுள் பாதி மிருகம் பாதி -மனிதன் .
 
உமாவிற்கும் எனக்குமான தொடர்பு இரண்டுவருடங்கள் என்றாலும் மிக நெருக்கமாக இருந்தது ,நான் என்று இல்லை எனது இடத்தில் எவர் இருந்திருந்தாலும் அப்படித்தான் இருந்திருக்கும் .தமிழ் நாட்டில் எப்பவும் நாலு பேர்கள் சூழ இருப்பார்கள் அதை விட அவருக்கும் ஆயிரம் வேலை இருக்கும் .டெல்கி வந்து அவர் தங்கி நிற்கும் நாட்களில் நாங்கள் மூன்று பேர்கள் தான் 
பல கதைகள் பேசியபடி ஒன்றாகவே திரிவோம் ,சாப்பிடுவோம் ,தூங்குவோம் .அதில் பகிடி சீரியஸ் சந்தோசம் துக்கம் என்று எல்லாம் இருக்கும் .அங்கிருந்த பலர்  மாதிரி "பெரியய்யா " என்று இடைவெளிவிட்டு பழகாமல் வெகு சகஜமாக பழகினேன் . அனேக இரவுகளில்  நான் ட்ரான்சிஸ்டரும் கையும் தான் .ஒன்றில் கிரிக்கேட் அல்லது டென்னிஸ் வர்ணனை கேட்டுக்கொண்டே இருப்பேன் .இதானால் என்னுடன் ஸ்போர்ட்ஸ் பற்றி அடிக்கடி கதைப்பார் (மகாஜனாவில் உதைபந்து விளையாடியதாக சொன்னார் உண்மை பொய் தெரியாது )கரம் விளையாடுவோம் .அவர் ரூமில் தூங்க நான் விறாந்தையில் தூங்குவேன் .
 
ஒருநாள்  சென்னையில் இருந்து தொலைபேசி .வைத்தியசாலையில் இருந்த தோழர் இறந்துவிட்டதாக  வந்தது .பயிற்சி முடித்து இலங்கை போகும் போது சிங்கள கடற்படையால்  சுடப்பட்டு பதினாறு பேரும் இறந்துவிட்டார்கள் என்று இருந்தார்கள் ஆனால் அதில் ஒருவர் மூன்று நாட்கள் கடலில் இருந்து உயிர்பிழைத்து வந்தார் .பின்னர் ஆறுமாதத்திற்கு மேல் சென்னை பொது வைத்தியசாலையில் தான் இருந்தார் . அவர் இறந்துவிட்டதாகத்தான் செய்தி வந்தது .மெல்ல போய் எழுப்பினேன், தலையணைக்கு கீழே தான் அவர் கை முதலில் போனது .முகாமிற்கு கொண்டு சென்று உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யசொன்னார் .பின்னர் விடியுமட்டும் இருந்து பல கதைகள் பேசிக்கொண்டு இருந்தோம் .
 
உமாவும் வீரப்பிரதாபங்ககளில் ஆர்வம் உடையவராகத்தான் இருந்தார் .கிளிநோச்சி வங்கி கொள்ளை ,கனகரத்தினம் கொலைக்கு பிராபாவுடன் போனது ,பஸ்தியாம்பிள்ளை கொலை ,அமிர் தன்னை கொலை செய்ய பிரபாவை செட் பண்ணியது என்று பலதும் கதைப்பார் .நான் ஆயுதம் ,ஸ்டன்ட் ,வீரதீரத்தில்  அக்கறை இல்லாதவன் .அவை என்னை பெரிதாக கவருவதுமில்லை .
 
டெல்கிக்கு வந்த செர்லி என்பவர் புதியதோர் உலகம் வாசிக்க சொல்லி தந்தார் .அதை வாசித்த பின்பு மிகவும் குழம்பிபோனேன் .அதற்கு பிறகு உமாவை சந்திக்கும் போது மனதில் எப்போதும் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது .சென்னை வந்தபின்பு முக்கியமானவர்கள்  இடைக்கிட  வைக்கும் கூட்டதற்கு போயிருந்தேன் .கூட்டம் வெகு நேர்த்தியாக அஜன்டா ஒன்றை முன் வைத்து உமா தலைமையில் நடந்தது .பலவிடயங்கள் பேசி சில முடிவுகளும் எடுத்தார்கள்
 
 .அடுத்த மாதமும் அப்படி ஒரு கூட்டம் .மீண்டும் பல விடயங்கள் கதைத்து சில முடிவுகளும் எடுத்தார்கள் .நான் அப்போ கேட்டேன் "போன கூட்டத்தில் எடுத்த முடிவுகள் நடைமுறையில் வந்துவிட்டதா ? நடைமுறையில் வராவிட்டால் முடிவுகள் எடுத்து என்ன பிரயோசனம் ?"
 
"நாட்டு நிலைமை தெரியுமா ? அதுவும் கிழக்கில் இப்போ முஸ்லிம்களுடன் ஈபி பிரச்சனை பட்டு நாங்கள் என்ன செய்வது என்று மண்டையை போட்டு குழப்பிகொண்டு இருக்கின்றம் எதுவும் தெரியாமல் கேள்வி கேட்கின்றீர் " வாசு முகத்தில் அடித்த மாதிரி கத்திவிட்டார் .
 
ஏனடா வாயை திறந்தேன் என்று இருந்தது .ஆனால் இவர்களின் முகமும் ஓரளவு வெளித்தமாதிரியும் இருந்தது .உமா ஒரு நாளும் இப்படி கதைப்பதில்லை ஆனால் மற்றவர்களை அப்படி கதைக்க அனுமதிப்பதும் பிழை என்பதுதான் எனது நிலைப்பாடு .பாடசாலையில் இருந்து தொடர்ந்த துரை,லிங்கம் உறவுகளுடாகவும் நாட்டில் இருந்து வரும் செய்திகளில் இருந்தும்  அமைப்பில் மாற்றம்  வராமல் அடுத்த அடி வைக்கமுடியாது என்று உறுதியாகிவிட்டது.
 
பாடசாலை ,அகதி வேலை என்று நான் திரிந்தாலும் அமைப்பின் மாற்றமே மனதிற்குள் எப்போதும் உறுத்த உமாவை சந்திக்கும் தருணங்களில் ஏதாவது கேட்டுவிடுவேன் .அவருக்கு அது ஓரளவு எரிச்சலை கொடுத்திருக்கவேண்டும் உமக்கு தந்த வேலையை ஒழுங்காக செய்யும் வீணாக ஏன் தேவையில்லாத விடயங்களில் தலை இடுகின்றீர் என்று ஒரு முறை சொல்லிவிட்டார் .எனது வேலையை விட அமைப்புத்தான் முக்கியம் ,அமைப்பு பிழையாக போனால் எனது வேலையை செய்யமுடியாமல் போய்விடும் என்று நேரே சொல்லிவிட்டேன் .
 
நான் அவரை போய் சந்திததை விட அவரும் இடைக்கிடை சந்திக்க வர சொல்லி ஆட்களை அனுப்புவார் .சங்கிலியின் வலது கை தான் அதிகம் வருவார் அவர் இப்போ கனடாவில் இருக்கின்றார் .அதற்கு பல காரணங்கள் இருந்தது என நினைக்கின்றேன்.பாடசாலையில் பல முக்கியமானவர்கள் படித்துவந்தார்கள் இவர்கள் தான் படிப்பு முடிய முகாம்களுக்கு சென்று வகுப்பு எடுக்க இருப்பவர்கள் .
 
அதைவிட அமைப்பில் பல பிரிவுகள் வைத்து எல்லோரையும் வித்தியாசமாக கையாண்டுகொண்டு இருந்தார் .எந்த ஒரு அமைப்பும்   அப்படித்தான் இருக்கும் ஆனால் எவருக்கும் கட்டுப்படாத ஒரு குற்ற கும்பலை தன்னை சுற்றி வைத்திருந்தது ஏற்கமுடியாத ஒரு விடயம் .அவர்களின் செயற்பாடுகளை கட்டு படுத்தாதவராகவும் கண்டும் காணாதவராகவும் இருந்தார் .சுந்தரம் கொலையும் பின்னர் தன் மீது பாண்டி பசாரில் நடாத்திய துப்பாக்கி சூடும் அந்த வட்டத்தை வைத்திருக்கவேண்டிய தேவையை ஏற்படுத்தி விட்டது என்றார்கள் .அதற்காக நாட்டின் விடுதலைக்காக உங்களை நம்பி வந்தவர்களை சந்தேகப்பட்டு மிக மோசமாக சித்திரவதை  ,கொலை செய்தது ஏற்கமுடியாதது .
 
முற்போக்கான ஒரு அமைப்பு இருக்கு, அதற்கான வேலைத்திட்டங்களும் இருக்கு அதில் தொடர்ந்து வேலை செய்யாமல் வீணாக இதற்குள் தலையை கொடுக்கின்றீர்கள் என்பது போல்தான் அவர் நிலைப்பாடு .உங்களை போல்தான்  அவர்களும் தங்கள் வேலையை செய்கின்றார்கள் என்று நம்பினார் போலும் . இனத்தின் விடுதலை ,ஆயுத போராட்டம் ,பயிற்சி ,அதற்கான வேலைபாடுகள் ,தோழர்களின் மனோபலம் இவற்றை எல்லாம் விட தனது பாதுகாப்பு முக்கியம் என்று நினைத்தாரோ தெரியாது .
நூறு பேர்கள் இருக்கும் போது உருவாகிய அந்த வட்டம் ஐயாயிரம் பேர்கள் வந்தபின்பும் அவர்களை கட்டுப்படுத்த நினப்பது முடியாத காரியம் .தமிழ் நாட்டில் முகாம்களில் ஆயுதங்களுக்கு பயந்து இருந்தவர்கள் நாட்டிற்கு போய் போர்க்கொடியை தூக்கிவிட்டார்கள் .அதைவிட உமா இலங்கை போன போது தலைவரின் பாதுகாப்பு என்ற பெயரில் சுழிபுரத்தில் ஆறு அப்பாவி புலிகள் இயக்கத்தவர்களை கொன்று புதைத்தது நீறு பூத்த நெருப்பாக பலர் மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது .இயக்கத்தை விட்டு போனபின்பும் வருடக்கணக்கில் பழி கிடந்தது நாகம் நஞ்சு கக்குவது போல சந்தியாரை கொலை செய்தது நிலைமையை இன்னமும் மோசமாக்கியது .
 
உமாவின் அனுமதியில்லாமலே அமைப்பு சுன்னாகத்தில் மாகாநாடு ஒன்று வைத்து பல முடிவுகளையும் எடுத்துவிட்டிருந்தது .பல பொறுப்பாளர்களை மாற்றம் செய்து விட்டிருந்தார்கள் அதில் எடுத்த மிக முக்கிய முடிவு நாட்டில் நடந்தது போல தமிழ் நாட்டிலும் மகாநாடு நடாத்துவது  என்பதாகும் .
 
சந்திப்புகளில் கதைத்த கனடாவின் கதையும் இன்னும் பலவும் தொடரும் .
 
(மேலே பதிந்ததை எழுதாமல் நான் கதைத்ததை எழுதமுடியாது என்பதால் இந்த பதிவு .சற்று சுயபுராணம் தான் ஆனால் தவிர்க்கமுடியாதது )
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.