யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
arjun

சென்னை கனவு

Recommended Posts

அண்ணே அப்பிடியே உங்கட இயக்கப்பெயரையும் சொன்னா நல்லாருக்கும்

Share this post


Link to post
Share on other sites

உங்கட பேச்சு வார்த்தையில் என்ன கதைத்தனீங்கள் ? உங்கட நிலைப்பாடு தொடர்பாக இந்திய அரசியல்வாதிகளது நிலைப்பாடு அப்போது என்னவாக இருந்தது அர்ஜீன் அண்ணா? ...கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நல்லம் அண்ணா

Share this post


Link to post
Share on other sites

அண்ணே அப்பிடியே உங்கட இயக்கப்பெயரையும் சொன்னா நல்லாருக்கும்

 

ஒன்றுமே  செய்யாத இயக்கத்துக்கு :(

முகவுரையே  இந்தளவு பில்டப்பா இருக்கு என்று பார்க்கின்றீர்களா?? :(

 

சொல்வார்தானே

வைச்சுக்கொண்டா வஞ்சகம் செய்கிறார்...?? :(

Share this post


Link to post
Share on other sites

 

எல்லோருக்கும் தெரிந்த எமது உள்அரசியலை முடிந்தவரை தவிர்த்துவிடுகின்றேன் .

 

 

http://vozme.com/speech/en-ml/47/4726e30b6dc3ad55da7a0c4b28b142e2.mp3

Share this post


Link to post
Share on other sites

உங்கட பேச்சு வார்த்தையில் என்ன கதைத்தனீங்கள் ? உங்கட நிலைப்பாடு தொடர்பாக இந்திய அரசியல்வாதிகளது நிலைப்பாடு அப்போது என்னவாக இருந்தது அர்ஜீன் அண்ணா? ...கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நல்லம் அண்ணா

சென்னை 375 என்று ஆதவன் போட்ட பதிவு தான் என் கனவு நகரமாகிய சென்னை பற்றி எழுத சொன்னது .இன்றும் என் கனவு நகரம் அதுதான் .

முடிந்தவரை அரசியல் தவிர்த்து சென்னை பற்றி எழுதமுயற்சிக்கின்றேன் .

வேறு இடத்தில் அதை எழுதினால் போச்சு .நேற்று அமிர் பிறந்ததினம் என்ற தலைப்பில் பலர் எழுதிய கருத்துக்கள் சற்று விபரமாக எங்கு எமக்கும் இந்தியாவிற்கும் முரண்பாடு வந்தது என்று எழுதவேண்டும் என்று நினைத்தேன் .

 

நந்தன் -இதில் ஒழிக்க ஒன்றும் இல்லை .ஜெயகாந்தனின் பாரிஸுக்கு போ கதாநாயகனின் பெயர் .யாரிடமும் விசாரித்து என்னில் இருக்கும் மரியாதையை கொஞ்சம் கூட்டுங்கள். :icon_mrgreen:

 

விசுகு அண்ணை -நான் என்ன தமிழ் ஈழம் பிடித்தார்கள் அல்லது தாக்குதல் செய்தார்கள் என்றா எழுதினேன் .ஆரம்பத்தில் இருந்தே அழிய வேண்டிய இயக்கம் எண்பதுகளிலேயே அழிந்து விட்டது என்றுதான் எழுதுகின்றேன் .பல எனது பதிவுகளுக்கு பதில் வைக்க முடியாதவர்கள் சோத்து பார்சல் ,மாலைதீவு ,வவுனியா கடத்தல் கொள்ளை பற்றி எழுதி தமது கோபத்தை தீர்த்துகொள்வார்கள் ஆனால் இது எவற்றிலும் எனக்கு சம்பந்தம் இல்லாத எனக்கு ஏன்  கோவம் வரப்போகின்றது .

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

அர்ஜுன் அண்ணா தனது அனுபவங்களை விபரித்து செல்கிறார்.தயவுசெய்து யாரும் குழப்பாதீர்கள்.எங்களைப்போன்ற அந்த காலத்திற்கு பின் வந்தவர்கள் பல விடயங்களை அறியக்கூடியதாய் உள்ளது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும்.அனுபவம் அழகானது.

Share this post


Link to post
Share on other sites

>

நந்தன் -இதில் ஒழிக்க ஒன்றும் இல்லை .ஜெயகாந்தனின் பாரிஸுக்கு போ கதாநாயகனின் பெயர் .யாரிடமும் விசாரித்து என்னில் இருக்கும் மரியாதையை கொஞ்சம் கூட்டுங்கள். :icon_mrgreen:

 

 

உதைத்தானே சொல்லுறது எங்கன்ட" கெப்பர்" குணமென்று :D.....இனி ஜெயகாந்தனின் புத்தகத்தை தேடி அதை வாசித்து "ஒ" இதுதான் அவற்ற பெயரென்று அறிந்து ....தொடருங்கோ அர்ஜூன்..

Share this post


Link to post
Share on other sites

 

 

விசுகு அண்ணை -நான் என்ன தமிழ் ஈழம் பிடித்தார்கள் அல்லது தாக்குதல் செய்தார்கள் என்றா எழுதினேன் .ஆரம்பத்தில் இருந்தே அழிய வேண்டிய இயக்கம் எண்பதுகளிலேயே அழிந்து விட்டது என்றுதான் எழுதுகின்றேன் .பல எனது பதிவுகளுக்கு பதில் வைக்க முடியாதவர்கள் சோத்து பார்சல் ,மாலைதீவு ,வவுனியா கடத்தல் கொள்ளை பற்றி எழுதி தமது கோபத்தை தீர்த்துகொள்வார்கள் ஆனால் இது எவற்றிலும் எனக்கு சம்பந்தம் இல்லாத எனக்கு ஏன்  கோவம் வரப்போகின்றது .

 

சிலர் எழுதி இருக்கலாம்.. ஆனால் நீங்கள் புலிகள் பற்றி எழுதியவை பத்திரமாக உள்ளன. ஆகவே நீங்களும் எழுதினீர்கள் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

அர்ஜுன்.....
உங்களது சென்னை கனவு, நன்றாக இருக்கின்றது. எழுத்தோட்டம் அருமை.

அதில்.... அரசியல் இதுவரை பெரிதாக.... கலக்கப் படவில்லை.
அப்படியே... தொடர்வது, நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன்.

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

கே கே நகர் அம்மன் கோயிலடியில் இருக்கும் எம் ஜி ஆர் உருவாக்கிய சத்துணவு கூடம் தான் எமது பாடாசலை .ஓரளவு வசதி படைத்தவர்கள் வசிக்கும் இடம் என்பதால் சத்து உணவு கூடம் தேவையில்லாமல்  போய்விட்டது போலிருக்கு அது எமக்கு பாடசாலை ஆகிவிட்டது .கே கே நகரில் மட்டும் எம்மவர்கள் ஆறு வீடுகளுக்கு கிட்ட வெவ்வேறு தேவைகளுக்காக வாடகைக்கு எடுத்திருந்தார்கள் . பாடசாலைக்கு அருகில் இரண்டு வீடுகள் அங்கு படிக்கும் மாணவர்களுக்காக எடுத்து இரண்டிலுமாக  மொத்தம் நாப்பது பேர்வரை தங்கியிருந்தார்கள் .

 

நான் ஆட்டோவில் போயிறங்கிய நேரம் வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபடியால் வீட்டில் எவரும் இல்லை .பாடசாலையும் வீடும் மிக அருகே இருந்ததால் வகுப்பில் இருந்த ஒருவர் வந்து விபரம் கேட்டு உள்ளே அனுமதித்தார் .நான் வரும் விபரம் அவருக்கு முதலே தெரியும் என நினைக்கின்றேன் .

இரண்டு மாடி வீடு முன்றாம் மாடியாக ஒரு சிறு திறந்த அறையும் இருக்கு .அதில் இருந்து பார்த்தால் அரைவாசி கே கே நகர் தெரியும் அவ்வளவு உயரம் .மிக வசதியான வீடு ,சோலை போல சுற்ற வர மரங்கள் .உடை மாற்றி முகம் கழுவி பாடசாலையை எட்டிப்பார்ப்பம் என்று போனால் 

என்னைவிட இளமையான உருண்டையான ஒருவர் கரும்பலகையில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று ஏதோ சொல்லி படிப்பித்துக்கொண்டிருந்தார் .பாடசாலையில் கல்வி கற்பது போல பெடியங்களும் குறிப்பு எடுத்துகொண்டிருந்தார்கள் .எங்கு போனாலும் உந்த படிப்பு என்னை விடாது போலிருக்கு என்று எனக்குள்ளேயே நினைத்துக்கொண்டேன் .

 

மதிய இடைவேளை விட்டுவிட்டார்கள் போலிருக்கு ஆளை ஆள் அடித்து தள்ளி முண்டியடித்துக்கொண்டு வந்து  தத்தம் அலுமினிய பிளேட்டை எடுத்து வர பெரிய பாத்திரங்களில் சாப்பாடுகளுடன் நின்ற இருவர் வரிசையில் வரும் அவர்கள் எல்லோருக்கும் பரிமாற மதிய உணவை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள் .நான் ஹாலின் ஒரு மூலையில் இருக்கின்றேன் .இவர் யார் ? ஏன் இங்கு இருக்கின்றார் என்று எவரும் அது பற்றி அக்கறைபடவில்லை .தினவெடுத்த உடம்புகள் நல்ல பசி போலும்  . சோறு ,ஒரு மாமிசம் ,ஒரு மரக்கறி ,இரண்டாம் தரமும் போட்டு வெட்டுகின்றார்கள். அன்றைய தினம் சமையலுக்கு பொறுப்பான இருவர் அளவுடன் கணக்கு பார்த்தே கொடுத்துக்கொண்டிருந்தார்கள் .

அந்த வீட்டில் இருந்த  உணவு சாப்பிட்டுகொண்டிருந்த எவரையும் எனக்கு முன்னர் தெரிந்திருகவில்லை . பலர் என்னைவிட வயது குறைந்தவர்களாகவே இருந்தார்கள் .பலர் அரைகாற்சட்டை யும் அரை கை சேர்ட்டும் அணிந்திருந்தார்கள் .சாப்பிட்டு சிலர் முற்றத்தில் இளைப்பாற செல்ல ,சிலர் மொட்டை மாடிக்கு செல்ல ,ஹோலிலேயே பாயை விரித்துவிட்டு குட்டி தூக்கம் போட ஆரம்பித்துவிட்டார்கள் .எவரும் என்னுடன் கதைக்காதது ஏன் தமக்கு வேண்டாதவேலை என்று எல்லோரும் நினைத்துவிட்டார்கள் போலிருக்கு அல்லது முன்னர் இசக்கு பிசக்காக எதுவும் நடந்ததோ தெரியவில்லை .எனக்கோ பசி வயிற்றை கிண்டுகின்றது .

 

அப்போது தாடி வைத்த இருவர் உள்ளே வருகின்றார்கள் அதில் ஒருவரை நான் ஊரில் கண்ட ஞாபகம் . சும்மா ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர்களும் போய் சாப்பிட தொடங்கிவிட்டார்கள் . சாப்பிட்டு முடிய அந்த முகம் அறிந்தவர்தான் (லிங்கம் )என்னுடன் கதைக்க ஆரம்பித்தார் ,நான் இன்னமும் சாப்பிடாதை அறிந்து பொறுப்பாளரை கூப்பிட்டு விஷயத்தை சொன்னார .பொறுப்பாளர் ஒரு அலுமினிய பிளேட்டும்,கப்பும் தந்து இனிமேல் எல்லோரும் சாப்பிடும் போது போய் சாப்பிட்டு விடவேண்டும் அல்லது பிந்தி வருவேன் என்று முதலே சொல்லி வைத்தால் போட்டு வைப்பார்கள் என்று விட்டு போய்விட்டார் .லிங்கம் என்னை  வெளியில் கூட்டிக்கொண்டு போய் சாப்பாடு வாங்கித்தந்தார் .

 

பாடசாலை விதிகள் -

பொறுப்பாளர் அனுமதியுடன் தான் வெளியே செல்லமுடியும் .

வகுப்புகள் கட் பண்ணமுடியாது

சாப்பாடு நேரத்தில் சப்பிட்டுவிடவேண்டும்

சண்டை வாக்குவாதம் முற்றிலும் தடை

அனைவரும் முறை வைத்து இரவு  கிற நெற்ருடன் காவல் 

 

அவசரபதிவு மீண்டும் தணிக்கை செய்யப்படும் . 

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் அண்ணா

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் அண்ணா 

Share this post


Link to post
Share on other sites

சினிமா பார்த்துக்கொண்டு தமிழ் நாட்டு பயணிகளுடன் இரவு பஸ் பயணம் சென்னை நோக்கி ,மனதில் பல எண்ணங்கள் அலை மோதிக்கொண்டு இருந்தாலும் பஸ்ஸிலும் வீதி நெடுகவும் கண்ணில் படும் காட்சிகளை ரசித்துக்கொண்டே இருந்தேன் .

 

டெல்கி செல்ல இன்னமும் இரண்டு நாட்கள் இருக்கு ,பகல் MLA Hostel, திருவல்லிக்கேணி லோட்ச் அதே அட்டவணை . மோகனுக்கும்  எனக்கும்  நெருக்கம் அதிகரிக்க ஒவ்வொரு பிரச்சனையாக முடிச்சை அவிழ்கின்றார் . அண்ணை இப்படியே நிலைமை தொடர்ந்தால் கொம்பனியை இழுத்து மூட வேண்டித்தான் வரும் என்று மனம் திறந்து சொல்லிவிட்டார் . அறையில் உள்ள மட்டக்களப்பு சிறை உடைப்பு போஸ்டரை காட்டி இது நடக்காமலே இருந்திருக்கலாம் என்றார் .(வாமன் ,மாணிக்கம் ,ராஜன் ,அற்புதம் இவர்களை மனதில் வைத்து தான் சொன்னார் ).  அந்த இரண்டு நாட்களில் கந்தசாமி (சங்கிலி ),மாணிக்கம்,கண்ணன் ,வாசு   எல்லோரையும் சந்தித்தேன் .மனம் விட்டு கதைத்து சாப்பிடுவம் என்று கூட்டிக்கொண்டு போனது சங்கிலிதான் (புலனாய்வு ?). பொட்டம்மானை சங்கிலி கடத்தியதும் பதிலுக்கு கண்ணனை புலிகள் சென்னையில் கடத்தியதும்  இந்த நாட்களில் தான் நடந்தது .

 

டெல்கி போய் சேர்ந்தாயிற்று .

அது ஒரு புது உலகம் .எமக்கு இரண்டு அலுவலகங்கள் இருந்தது .ஒன்று  தி மு க எம்பி எல்.கணேசனின் முழு வீடு , இரண்டாவது அதிமுக எம்பி ஆலடி அருணாவின் வீட்டில் ஒரு அறை. ஏற்கனவே டெல்கியில் ஒருவர் பொறுப்பில் இருந்தார் .எமது இரண்டு அலுவலகங்களுமே  பிரசிடென்ட் வீடு ,பார்லிமென்ட்டிற்கு மிக அருகிலேயே இருந்தது .அந்த ஏரியா முழுக்க இந்திய,சர்வதேச  இராஜதந்திரிகளின் ராஜாங்கம் தான் .

 

இலங்கை இந்திய பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி இருந்த கால கட்டம் அது  .ராஜீவ் காந்தி பார்த்தசாரதியை ஒதுக்கி பண்டாரியை அப்போதுதான் கொண்டுவந்திருந்தார் . எனது வேலை கொ.ப.செ.   இந்திய சர்வதேச அரசியல்வாதிகள் ,பத்திரிகையாளர்கள் , இராஜதந்திரிகளை சந்தித்து எமது பிரச்சனையை சொல்வதும் போராட்டத்திற்கான ஆதரவை கோருவதும் தான் .அவ்வவப்போது சென்னையில் இருந்து எமது தமிழ் ,ஆங்கில வெளியீடுகள் வரும் டெல்கி ரெயில் நிலையத்தில் போய் அவற்றை எடுக்கவேண்டும் . என்னிடம் ஒரு சயிக்கில் இருந்தது அதில் டெல்கி ரெயில் நிலையம் போய் அந்த பார்சலை எடுத்துக்கொண்டு வருவேன் .இப்போ நினைத்தாலும் நம்ப முடியாமல் இருக்கு .

 

திம்பு பேச்சு வார்த்தை தொடங்கிவிட்டதால் எனது பாடும் ரொம்ப பிசியாகிவிட்டது .நான் தேடிப்போன பத்திரிகையாளர்கள் இப்போ என்னை தேடிவர தொடங்கிவிட்டார்கள் .கூட்டணி தலைவர்கள் அசோகா ஹோட்டலில் இருந்தாலும் அவர்களை தேடுவார்கள் எவரும் இல்லை .எம்மை தவிர மற்ற நான்கு இயக்கங்களும் ஒரு கூட்டமைப்பில்  இருந்தாலும் புலிகள் என்றும் அவர்களுடன் ஒட்டியதில்லை .தனித்தே இருந்தார்கள் தனித்தே பறந்தார்கள் .முதல் சுற்று குழம்பி இரண்டாம் சுற்று ஆரம்பித்து பின்னர் அதுவும் குழம்பி சத்தியேந்திரா பண்டாரியுடன் வாக்குவாதத்துடன் முடிந்தது .பண்டாரி போய் வெங்கடேஸ்வரன் வருகின்றார் . இந்த காலகட்டத்தில் தான் பல உள்ளூர் வெளியூர் அரசியல் பிரபலங்களை, எமது இயக்க தலைமைகளை சந்தித்தேன். 

 

டெல்கி வந்த உமா சென்னையில் ஒரு பாடசாலை தொடங்கி மார்க்சிசம், உலக அரசியல்,சர்வதேச உறவுகள் பற்றி படிப்பின்றோம் .அடுத்த மாதம் தொடங்கும் வகுப்புகளுக்கு என்னையும் போகச்சொன்னார் .டெல்கியில் இருக்கும் போது கோவிந்தனின் புதியதோர் உலகம் வாசித்துவிட்டேன் .பழகிவிட்ட டெல்கியையும் தனிமையையும் விட்டு இடியப்ப சிக்கலுக்குள் தலை கொடுக்க விருப்பம் இல்லாமல் சென்னைக்கு ரெயின் எடுக்கின்றேன் .

 

ஏறக்குறைய முப்பது மணி நேர பயணம் அது .ஐரோப்பாவில் இப்படியான பயணங்கள் பச்சை பசேல் என்று இருக்கும் .இது இந்தியாவின்  மத்தியின் நெடுக்காக செல்லும் பாதை .உத்தரபிரதேசம் ,மத்தியபிரதேசம் ,மகராஸ்டிரா ,ஆந்திர தமிழ் நாடு என்று செல்லும் .கண்ணுக்கு எட்டிய இடங்கள் எல்லாம் காய்ந்த பிரதேசங்களும் அனல் காற்றும் தான் .ரெயினிற்குள்ளும் நிற்பாட்டும் இடங்களிலும் நல்ல குளிர்மையான உணவுகளை விற்றுக்கொண்டே வந்தது அந்த வெக்கையை ஓரளவு தணித்தது.

போபாலில் ரெயின் நிலையத்தில்  யூனியன் கார்பைட் நினைவு வந்து சாப்பிட சற்று பயம் வந்தாலும் தாமரை இலையை சுருட்டி அதற்குள் ரொட்டி, முட்டை குழம்பு வைத்து மற்றவர்கள் அதை தின்பதை பார்க்க நானும் போனால் மசிராச்சு என்று வெட்டிவிட்டேன் .நாக்பூர் வர ஒரே தோடம்பழ வாசம் .ஆசை தீர ஆரஞ்சு யூஸ் குடித்தேன் .

 

அதிகாலை சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து MLA Hostel சென்றேன் .

 

இனி எனது அடுத்த ஜாகை கே கே நகர் . தொழில் - படிப்பு .

 

காலை பதினொருமணியளவில் எனது கனவு தொழிற்சாலைக்குள் ஆட்டோ நுழைகின்றது .

 

(கனவு தொழிற்சாலை-சென்னையில்  நான் கழித்த பொன்னான நாட்கள் இங்குதான் )

எதோ உங்கள் அனுபவம் என்று எழுதுகிறீர்கள் ................. உங்களுடைய சொந்த அனுபவம் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். நீங்கள் பட்ட துயர்கள் துன்பங்களை இன்பங்களை இன்னொருவரால் வாசிக்க முடியுமே தவிர அதை புரிந்து கொள்ள முடியாது. சாதாரண வயிற்று வலி கூட எமக்கு வரும்போதுதான் உண்மையான வலியை புரிந்து கொள்ள முடிகிறது.
 
 
தமிழ் ஈழ விடுதலை போராட்டம் என்பது ....
ஒருவர் வீட்டு சொத்தல்ல பல அற்புதமான அதிசயமான உயிர்கள் தமது இரத்தத்தால் எழுதியது அது.
 
அதை விட்ட பிழைகளை திருத்துகிறோம் ...
பழைய ஞாபகங்கள் .....
எனது அனுபவம் ..... என்ற போர்வையில் பலர் திரித்தும் பிரித்தும். தமது காள்புனர்வுகளை கொட்டி தீர்த்திருக்கிறார்கள் தவிர அங்கே உண்மைகளை எள்ளளவிலும் காண கிடைக்காது. வரும் கால சந்ததியை குழப்ப செய்யும் முயற்சிகள்தான் அவை.
 
நீங்கள் இதய சுத்தியுடன் உங்கள் அனுபவத்தை தொடர விரும்பினால் ............
மேலே சுட்டிகாட்டிய கால அவகாசங்கள் சம்பவங்கள் பெயர்கள் பற்றி கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.
அதை நீங்கள் அசட்டை செய்தால் .............. நாம் மூக்கினுள்ளே விரலை நீட்டுவது போல் உங்களுக்கு தெரிந்தாலும்  அது அது தவிர்க்க முடியாதது.
 
திம்பு பேச்சுவார்த்தை ஜூலை - ஆகஸ்ட் 1985 இல் நடந்தது 
அதில் அரச தரப்பில் ஜே ஆர் தம்பி ஹெக்டர் ஜெயவர்த்தனா தலமையில் இன்னும் மூன்று வழக்கு அறிஞ்சர்கள் கலந்தார்கள் 
 
தமிழ் தரப்பில்  புலிகள் ஈபி புளொட் ஈரோஸ் டெலோ டுல்ப்வ் (tulf) அரசியல் கட்சியும் பங்கேற்றார்கள்.
 
தமிழர் தரப்பு கோரிக்கைகள் ....
தமிழர் தேசம் அடையளபடுத்தல் வேண்டும் 
இலங்கையில் தமிழர்களுக்கு என்று இருந்த பூர்விக நிலபரப்பு உறுதிபடுத்த பட வேண்டும் 
தமிழர்களின் தனி-சுதந்திரம் உரிமை (சுய நிர்ணய உரிமை)அடியாள படுத்தல் வேண்டும் 
இலங்கையில் வாழும் எல்லா தமிழர்களின் அடிப்படை பிரஜா உரிமை உறுதி படுத்த பட வேண்டும்.
 
 
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஜூலை 1987இல் நடந்தது 
அதில் முக்கிய பங்காளிகள் ..... இந்தியா - இலங்கை - புலிகள் 
தமிழ் அமைப்புகள் ஆயுத போராட்டத்தை கைவிடுவது என்றும். (அப்போது புலிகள் மட்டுமே ஆயுத போரில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்கள்). இந்திய அமைதி படை தமிழ் மக்கள் போராளிகள் பாதுகாப்பை உறுதி படுத்தும் என்றும் முன்மொளிந்தர்கள்.
டுல்ப்வ் (tulf) இதில் பங்கு தாரர் என்றாலும் தமிழ் மக்கள் ஏக பிரதிநிதிகளாகவும் ஆயுத போராளிகளாகவும் புலிகள் மட்டுமே இருந்தார்கள்.
மேசையில் கைச்சதிடபட்ட எந்த ஒப்பந்த பேப்பரிலும் பிரபாகரன் - ராஜீவ் - ஜே ஆர்  தவிர்த்து யாரும் கையெழுத்து  இடவில்லை. 
 
அதே காலத்தில் ...........என்று ஒரு பாரிய கால இடைவெளியை கடக்க முயற்சி செய்கிறீர்கள்.
சென்னைக்கு போகும் அவசரமாக கூட இருக்கலாம்.
ஆனால் முன்னுக்கும் பின்னுக்கும் நிற்கிறீர்கள். அதனால்தான் சுட்டிகாட்ட வேண்டி வந்தது. 
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இலங்கை -இந்திய ஒப்பந்தம் பற்றி நான் குறிப்பிடவில்லை .பண்டாரி பற்றி எழுதி இருக்கும் போது புரிந்திருக்கவேண்டும் .

 

பின்னர் வந்து ஒரு சிறு குறிப்பு எழுதுகின்றேன் .

Share this post


Link to post
Share on other sites
இதெற்கெல்லாம் குறிப்பு எழுதி உங்கள் நேரத்தை வீண் அடிக்க தேவை இல்லை .........
 
உங்களுடைய அனுபவத்தை பகிர்வதே உங்கள் நோக்கம் என்றால். அதை தொடருங்கள் பலரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
 
எல்லாம் ஒரு இருண்ட மழைநாளில் நடந்ததுபோல் நடந்து முடிந்தவை ..... அடித்துவைத்து யாருக்கும் ஞாபங்கள் இருக்க போவதில்லை. முக்கி முக்கி முயற்சித்தால் மட்டுமே வரகூடியது.
 
(மட்டகளப்பு சிறை உடைப்பை பற்றி எழுதியது நீங்கள் சொன்ன சிலரை ஞாபகம் கொள்ள கூடியதாக இருந்தது. அதில் ஒருவர் குமார் அண்ணா (மயில்லிட்டி) ஈபி யின் முக்கிய படகோட்டி. பட்பனபாவை புலிகள் பிரச்சனை வந்தபோது எமது ஊரில் வைத்துதான் படகு ஏற்றினார்கள், அவரை இறுதியாக கண்டது அன்றுதான்) 

Share this post


Link to post
Share on other sites

எமது அரசியல் வரலாறு அனைவரும் அறிந்தது அவற்றை மீண்டும் பதிய விரும்பவில்லை .

 

நீங்கள் நாலு அடிப்படை கோரிக்கைகளை தான் தமிழர் தரப்பு வைத்தது .TULF,ENLF,PLOTE என்றுதான் பங்குபற்றினார்கள் .

(அமீர் ,சிவா ,சம்பந்தன் .)    (அன்டன் ,திலகர் ,வரதர் ,கேதிஸ் ,சார்ல்ஸ் ,மோகன் ,இரட்ணசபாபதி ,ராஜி)   ( சித்தர் ,வாசு .) இதில் திலகர் ,வரதர் ,மோகனை தவிர மற்றவர்களை எனக்கு முன்பே தெரியும் .

டெல்கி விமானநிலையத்திலற்கு பிரபா ,உமா வரவில்லை .மற்றைய தலைவர்கள் வந்தார்கள் .

 

திம்புவில் இருந்து சென்னைக்கு நேரடி தொலைபேசி வசதி இல்லை என்று இந்த பேச்சுவார்த்தையை ஒழுங்கு பண்ணிய ரா சந்திரன் லண்டன் சென்று ஒரு HOTLINE ஒழுங்கு செய்தார் .இயக்க தலைவர்கள்  சென்னை சென்றபின் திம்புவில் இருப்பவர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடு .பேச்சுவார்த்தை இரகசியமாக் வைத்திருக்க சொல்லி ரா சொல்லியிருந்தது ஆனால் திம்புவில் இருந்து தினமும் சித்தர் எனக்கு தொலைபேசி எடுத்து நடந்ததை சொல்ல நான் சந்திரசேகர் என்ற PTI நிருபருக்கு அதை கொடுத்துக்கொண்டிருந்தேன் .அங்கு நடப்பது வெளியில் வருகின்றது  என்ற பழி பாவம் அமிர் மேலே விழுந்தது .

 

நான் டெல்கியில் இருக்கும் போது தான் எமது ஆயுதமும் சென்னையில் பிடிபட்டது (ஏப்ரல் ). சென்னை கஸ்டம்ஸ் அதை தடுத்தவுடன் பார்த்தசாரதியிடம் சென்றோம் .விஷயம் வெளியில் வராவிட்டால் முயற்சித்து பார்ப்பதாக சொன்னார் .அன்று இரவு சித்தரும் நானும் தூங்காமல் பிளேன் டீ சிகரெட் (நான் அப்போ பத்துவதில்லை) சகிதம் வீட்டிற்கு வெளியே ஒரு புல்வெளியில் இருந்தோம்  .காலை பத்திரிகைகளில் கொட்டை எழுத்தில் தலையங்கம் . விஷயம் கை மீறி போய்விட்டது .

 

முடிந்தவரை அரசியல் அற்று சென்னை வாழ்க்கை நதியா ரேவதி அம்பிகா ராதாவுடன் தொடரும் .

Edited by arjun
 • Like 3

Share this post


Link to post
Share on other sites

மாலை மூன்று மணிக்கு மாலை நேர அடுத்த வகுப்பு தொடங்க   அந்த இரண்டு தாடிக்காரர்களும் இருந்த வாங்கிற்கு அருகில் போய்  அமர்ந்தேன்  .எமது வீட்டில் இருந்த இருபது பேரை விட மற்ற வீட்டில் இருந்தும்  இருபது பேர்கள் வருகின்றார்கள் .அநேகம் எல்லோருமே காய்ந்து கறுத்து போயிருந்தார்கள் ,உடுப்புகள் வேறு அப்படி இப்படித்தான் .

 

அங்கிருந்து வந்தவர்களில் ஒருவர் மட்டும் ஏதோ படப்பிடிப்பிற்கு செல்பவர் போல ஆளும் நல்ல உயரம்,சரியான வெள்ளை ,ஒழுங்காக வாரிய தலைமுடி, கிளீன் சேவ் ,கை மடிப்பு கசங்காமல் சேர்ட் ,பெல்பொட்டம்.சிறிது மேக்கப் வேறு போட்டிருந்தார் போலிருக்கு . அவரை சுற்றி நாலு ஐந்து சிண்ணுகள் வேறு ,அவர் கதை கேட்டு சிரித்தபடி   .ஆளை பார்த்தவுடனேயே ஏனோ எனக்கு பிடிக்கவில்லை   .அவரும் நேர தாடிக்கரர்களைடம் (லிங்கம் ,துரை) தான் வந்து எனக்கு அருகில் உட்காந்தார் .

 

மூன்று பேரும் முன்பின் தெரியாதவர்கள் பாலஸ்தீனத்தில் பயிற்சிக்கு போன இடத்தில் நண்பர்கள் ஆனவர்கள் .லிங்கம் காந்தியத்தில் இருந்து பின்னர் பயிற்சிக்கு பாலஸ்தீனம் போனவர் .துரை ஜெர்மனில் இருந்து பாலஸ்தீனம் போனவர் .இந்த வெள்ளைப் பயல் பிரான்சில் இருந்து பாலஸ்தீனம் போனவர் பெயர் அயன் . இந்திய கம்னிஸ்டுகட்சியில் இருந்து ஒருவர் வந்து மார்க்சின் மூலதனம்  படிப்பிக்க ஆரம்பித்தார் .  இன்று வரை அது எனக்கு விளங்காமலோ இருப்பது வேறுவிடயம் ..

 

ஐந்து மணிக்கு வகுப்பு முடிந்துவிட்டது .இவர்கள் மூவரும் என்னையும் தங்களுடன் அழைக்க, அம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் ஒரு தேத்தண்ணி கடைக்குள் சென்று தேநீர் ஓர்டர் பண்ணி விட்டு சிகரெட் பத்த தொடங்குகின்றார்கள் .இந்த சிகரெட் பிடிப்பு சந்திப்புதான் எனது இயக்க வாழ்க்கையை திசை திருப்பியது .இவர்களை  சந்திக்காமல் இருந்திருந்தால் கடைசி வரை உமா ,சித்தர் ,மாணிக்கத்துடன் இருந்து கொலை கொள்ளைக்கு வேறு வழியில்லாமல் துணை வேறு போயிருக்கலாம் . அடுத்த ஒரு மாத எனது வாழ்க்கை இவர்களுடனேயே கழிந்தது .அயனில் நான் வைத்த அபிப்பிராயம் எவ்வளவு பிழை என்று பின்னர் புரிந்துகொண்டேன் .இவரை போல மிக நேர்மையான உண்மையான ஒரு தோழரை நான் சந்திக்கவே இல்லை. அயன் அடுத்த வீட்டு பொறுப்பாளர் .துரை உமாவுடன் ஆபிசில் தங்கியிருப்பவர் .இவர்கள் இப்படி மற்றவர்களை விட்டு வெளியில் வந்து சிகரெட் பத்துவது பிழையான ஒரு விடயம் தான் ஆனால் பொறுப்புகளில் இருந்த அவர்கள் அடுத்த கட்ட மாற்றத்திற்கு அவர்கள் இப்படி தனியே சந்தித்துகொண்டேதான் இருந்தார்கள் .

 

இரவு பெரிய பெட்டி,வாளிகளில்  இட்லி ,சம்பல் ,சாம்பார் அருகில் இருக்கும் ஓர் இடத்தில் எடுத்துவந்தார்கள் ..சாப்பாடு முடிய  சிலர் மொட்டை மாடியில் இருந்து அடுத்த விட்டு டி வி யில் ஒலியும் ஒளியும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் .ஒருவர் பழைய நினைவுகளை மீட்டு  "வெள்ளை புறா ஒன்று "பாடிக்கொண்டிருந்தார் அவரை சுற்றி ஒரு சிலர் . வேறு சிலர் வாசிப்பு ,படிப்பு என்று .நான் லிங்கத்துடன் எமது இரண்டுவருட குப்பைகளை  கிளறிக்கொண்டிருந்தேன்.

 

இன்று சென்னை சுப்பிரபாதத்துடன் விழித்தது.  கே கே நகர்  திருவல்லிக்கேணி போலல்லாது மிக அமைதியான இடம் .அயலில் உள்ள கோயிலில் மணியோசையுடன் விழித்த நான் மொட்டை மாடியில் இருந்து எட்டிப்பார்க்க ஒவ்வொரு வீட்டிலும் ரேவதிகள் அரை தாவணி ,முழு தாவணிகளுடன்  தொய்ந்து தலைமுடி அள்ளி செருகி, முற்றத்தை கூட்டி பெருக்கி கோலம்  போட்டுக்கொண்டிருந்தார்கள் .அவர்கள் சேலை கட்டும் அழகே தனி,  சேலை இடுப்பு இடைவெளி சிம்ரன் தோற்றுபோவார் . அதிகாலை சயிக்கிளில் "சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா" பாடிக்கொண்டு  டியுசன் செல்லும் நதியாக்கள் மறுபுறம் .நாயுடுஹால் பருத்தியில் பல வித டிசைனில் குர்த்தாக்களுடன் வேலைக்கு போகும் அம்பிகாக்கள் என்று  அதன் அழகே தனி .

 

மறுபுறம் சத்துணவு கூடத்தின் முன்னிருக்கும் மைதானத்தில் கே கே நகர் பெடியங்கள் டென்னிஸ்போலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள் .அதை பார்த்துக்கொண்டு உடற்பயிற்சி செய்துகொண்திருந்த எம்மவர்களிடம் "ஏன் நீங்கள் விளையாட போவதில்லலையா ?" என்று கேட்டேன் .அது " முதலாளித்துவ விளையாட்டு " என்று கோரஸாக பதில் வந்தது .அட இப்படி வேறு சொல்லி வைத்திருக்கின்றார்களா ? எதை சொன்னாலும் அதை கேட்டு சரி என்று தலையாட்டும் நிலையில் தான் பலர் . 

அடுத்த நாள் காலை .எம்மவர் பார்த்துக்கொண்டிருக்க நான் பாட்டிங் செய்துகொண்டிருந்தேன் அடுத்தவாரமே கே கே நகர் அம்மன் கோவில் டீமில் ஒருவராகிவிட்டேன் .ஆறு வாரங்கள் இப்படியே ஓடிவிட்டது .எனக்கு ஓரளவு எமக்குள் என்ன அரசியல் நடந்துகொண்டிருக்கு ,உமா நிலை என்ன,நாட்டு நிலைமை என்ன என்று ஒரு படம் வந்துவிட்டது .படித்தவர்கள் முகாம்கள் திரும்ப புதிதாக ஆங்கில மீடியத்தில் உயர் படிப்பு என்று தொடங்கினார்கள் .இவ்வளவு காலமும் படித்தவர்களில் இருந்து ஒரு குறிப்பிட்டவர்களை அதற்கு தெரிவுசெய்து இருந்தார்கள் .எனது அந்த மூன்று நபர்களும் அதில் இல்லை . மீண்டும் பல புதிய முகங்கள் .அனேகர் நல்ல ஆங்கில அறிவு உள்ளவர்களாகவும் பல்கலைக்கழக அனுமதி கிடைத்து அதைவிட்டு வந்தவர்களாகவும் இருந்தார்கள் .முதல் பாட்சில் இருந்தவர்கள் எனது அரசியல் பாதையை மாற்றினார்கள் இந்த பட்சில் வந்த ஒருவர் எனது வாழ்கையையே மாற்றிவிட்டார் .

இப்போது இந்த இரு வீட்டிற்கும் நான் தான் பொறுப்பு .கன்னிமாரா லைபிரரிரிக்கு படிக்க போவது என்று இப்போ எல்லோரும் வெளியில் போய் வந்தார்கள் .வேறு விடயங்களுக்காக அவ்வப்போது உமாவை அடிக்கடி சந்தித்துகொண்டே இருந்தேன் .அகதிகளுக்கான வேலை ஒன்றையும் பொறுப்பு எடுக்க சொன்னார்.

 

சென்னையுடன் இருந்த எனது வாழ்வு தமிழ் நாடு என்று விரிந்தது .அடுத்த கட்ட பயணம் தொடரும் .

 

 

 

 • Like 7

Share this post


Link to post
Share on other sites

இது தான் உங்கள் ரேவதி, அம்பிகா, நதியா கதையா? சப்பென்று போய்விட்டது... :)

உள்ளூர் தேவதைகளை நடிகைகளோடு ஒப்பிட்டது பிழை :)

நான் பின்-80களில் தமிழ்நாட்டில் திரிந்தபொழுது அவதானித்தது நாமும் சாதாரண இந்தியர்கள் போலிருந்தால் இந்தியா மிகவும் அருமையாக இருந்தது (வேலை வெட்டி/படிப்பு எந்த பிரச்சனைகளும் இல்லை-எந்த இயக்கங்களிலும் இல்லை)...ஆனால் வெளிநாட்டு பந்தா காட்டியவர்கள் தான் பிரச்சனைகளை எதிர்கொண்டார்கள்.....

(நான் பாதி தமிழ்நாட்டை சுற்றிஇருக்கிறேன் எந்த இடத்திலும் பிரச்சனைகளை சந்தித்தது கிடையாது)

Edited by naanthaan

Share this post


Link to post
Share on other sites

அண்ணா எப்படி நீங்கள் வெளிநாட்டில் இருந்து இயக்கத்தில் சேர்ந்தீர்கள்?எப்போது இணைந்தீர்கள்?தெரியபடுத்தக்கூடியதை எழுதுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

அண்ணா.... கரனின் கேள்வியுடன், இன்னுமொன்று.....
இயக்கத்தில் சேருவது என்று, முடிவெடுத்த பின்...

புளொட்டில் தான் சேர வேண்டும் என்று, எப்படி முடிவெடுத்தீர்கள்? :)

Share this post


Link to post
Share on other sites
அகதிகள் பற்றிய விபரங்களை விபரமாக எடுத்தால் நல்லது என்று தமிழ் நாடு அரசு தலைமை காரியாலயத்திற்கு சென்று அதற்கு பொறுப்பானவரை சந்தித்தால் ,
 
தமிழ்நாடு அரசு அவர்களை  பொறுப்பு எடுத்து பராமரிப்பதால் வெளியில் இருந்து எவரும் முகாம்களுக்கு செல்ல அனுமதியில்லை  என்றுவிட்டு ,நாங்கள் அவர்களுக்கு மிக  அடிப்படை உதவிகளைத்தான்  செய்துவருகின்றோம் ,வேறு சில அமைப்புகள் அவர்களுக்கு உதவிகள் செய்துவருகின்றன அவற்றை நாம் கண்டும் காணாமலும் விட்டு வருகின்றோம் என்றார் .நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சந்திரகாசனின் அலுவலகத்திற்கு சென்றேன் .அவரின் செகரட்டரி ஒரு பெண் அப்படி விபரங்கள் தங்களிடம் இல்லை என்றுவிட்டார் .
 
எனக்கு முதல் எமது அமைப்பில் இருந்து இப்படியான வேலை செய்தவர்கள் சில விபரங்கள் வைத்திருந்தார்கள்  ,அதில் ஒரு பத்து பன்னிரண்டு முகாம்கள் பற்றிய விபரங்கள் மட்டுமே இருந்தது .முதலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் முட்டுக்காடு முகாமிற்கு சென்றேன் .அகதிகளாக வந்தவர்களிடம் பல விபரங்கள் இருந்தது .சென்னை மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டத்திலும் நூற்றுக்கு மேற்பட்ட முகாம்களில் எழுபத்திஐயாயிரம் பேர்கள் வரையில் இருப்பதாக சொன்னார்கள் .மன்னார் ,வவுனியா ,மட்டக்களப்பு ,திருகோணமலை இந்த இடங்களை சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் அகதியாக வந்திருந்தார்கள் .
 
எங்களிடம் இருக்கும் பணத்தில் முழு அகதிமுகாம்களின் தேவைகளை பூர்த்திசெய்வது என்பது முடியாத அலுவல் அதைவிட அகதிகளுக்கு உதவுகின்றோம் என்று வெளிநாட்டு கிறிஸ்டியன் அமைப்புகளிடம் இருந்து பெறும் பணத்தில் பெரும்பகுதி எமது அமைப்புப்பின் தேவைகளுக்கே பயன்படுத்தபட்டது .இருபத்திற்கு மேற்பட்ட முகாம்களுக்கு குடிசைகள் ,குழாய் கிணறு ,உடுப்புகள் என்று உதவி செய்துகொண்டிருந்தோம் .புலிகளை தவிர வேறு எந்த அமைப்பும் அகதிகளுக்கு உதவிசெய்ததை காணவில்லை .புலிகள் டாக்டர் ஜெயகுலராஜா தலமையில் என்று நினைக்கின்றேன் நடமாடும் வைத்தியசாலை ,மலிவு விலை கடை எல்லாம் நடாத்திவந்தார்கள் .விழுப்புரம் ,கடலூர்,தர்மபுரி,சேலம் ,ஈரோடு என்று பயணங்கள் தொடர்ந்தது .
குளத்தில் அருவியில்  குளித்தல் ,சவுக்க மர தோப்பிற்குள் காலை கடன் கழித்தல்,அகதி முகாம்களில் சாப்பாடு ,டூரிங் கொட்டகை சினிமா தரையில் இருந்து பார்ப்பது ,  முகாம் ,கோவில் திண்ணைகளில் தூக்கம் என்று பல மாறுபட்ட அனுபவங்கள் .அதைவிட அகதிகளின் பல தரப்பட்ட பிரச்சனைகளை கேட்டு அதற்கு ஆறுதல் சொல்வது வேறுவித அனுபவம் .
இரண்டு மாத ஆங்கில சர்வதேச அரசியல் படிப்பு முடிந்த பின்னர் தான்  அதிக அகதிமுகாம்கள் சென்றுவந்தேன் .நாட்டில் இருந்த பல தோழர்கள் அமைப்பில் மாற்றம் வேண்டி மகாநாடு ஒன்றை நாடத்துவதற்கு அந்த நேரம் மும்முரமாக வேலைசெய்துகொண்டிருந்தார்கள் .என்னுடன் முதல் வகுப்பில் படித்த லிங்கமும்  அயனும்  அதில் அடக்கம் .துரை  அலுவலகத்தில் இருந்தாலும் இடைக்கிடை நாடு சென்று வந்தார் .அவர்தான் எனக்கு அமைப்பிற்குள்ளே  நடக்கின்றது என்பதை சொல்லிவந்தார் .
தமிழ்நாட்டு அரசின் உதவியுடன் சினிமா  கலைஞர்களை வைத்து ஒரு நிதி திரட்டும் நிகழ்வு ஒன்று நேரு ஸ்டேடியத்தில் நடாத்த மூன்று மாதங்களாக முயன்று சில தடங்கல்கள் காரணாமாக  பிற்போட்டுக்கொண்டே வந்திருந்தார்கள் .அப்படி ஒரு நிகழ்வை நடாத்த இவர்களுக்கு பிறகு தொடங்கிய புலிகள் புதுமைபித்தன் துணையுடன் இளையராஜாவின் இசை  கச்சேரியுடன் நேரு ஸ்டேடியத்தில் நடாத்திவிட்டார்கள் .அந்த நிகழ்வு நடாத்த அமைத்திருந்தவர்களுடன்  என்னையும் இப்போ இணைத்துவிட்ட்டிருந்தார்கள் .நட்டமோ நயமோ தொடங்கிய நிகழ்வை எப்படியும் மிக சீக்கிரம் முடித்துவிட சொல்லி உமா என்னிடம் சொன்னார் .அந்த குழுவில்  யாழ் கள உறவு ஒருவரும்  இருந்தார் . 
 
மீண்டும் இரண்டு வாரங்கள் எதுவித முன்னேற்றமும் இல்லாமல் சென்னையை காரில் சுற்றியதுதான் மிச்சம் .காரை விட்டு மோட்டார் சயிக்கிளுக்கு மாறி பொறுப்பையும் நான் வேறு ஒருவருடன்  சேர்ந்து எடுத்துவிட்டிருந்தேன் .பொம்மை ஆசிரியரின் உதவியுடன் வள்ளுவர் கோட்டத்தில் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் தலைமையில் கங்கை அமரனின் இசைக்கச்சேரியுடன்  இலங்கை அகதிகளுக்கான நிதி சேர் " நட்சத்திர இரவு "இனிதே நடைபெற்றது . 
 
நட்சத்திர இரவும் நான் பட்ட நல்லதும் கேட்டதும் நாளை .
 • Like 5

Share this post


Link to post
Share on other sites
நட்சத்திர  இரவு ,
 
மீண்டும் ஒரு முகம் தெரியா புது உறவுகளுடன் வித்தியாசமான ஒரு பயணம் .சில வயது போனவர்களும் வேறு இருந்தார்கள் .உமாவின் அத்தான் ஒருவர் ,சிங்கபூரில் இருந்து ஆயுத கடத்தலுக்கு உதவியதற்கு நாடு கடத்தபட்ட  ஒருவர் .இவர்கள் இருவருக்கும் ஆளை ஆள் கண்ணில் காட்டகூடாது. அதைவிட  ரிக்கெட் விக்க ,நோட்டிஸ் ஓட்ட என்று இருபதிற்கு மேற்பட்ட உறவுகள்.ஒரு கார் சாரதியுடன் தந்திருந்தார்கள் . சாரதி சென் ஜோன்சில் படித்தவர் . சிரித்தபடி இருப்பார் பெரிதாக கதைக்கமாட்டார் .சில வாரங்களில் காரை நிற்பாட்டிவிட்டு ஒரு டி வி எஸ் மோட்டார் சயிக்கிளுக்கு மாறினோம் .அது சயிக்கில் மாதிரி எல்லா இடமும் பூந்து விளையாடலாம் .
 
இங்கு ஒருவர் எனக்கு பார்ட்னர் ஆக அகப்பட்டார் பெயர் ரவி .அமைப்பில் அப்படி ஒருவரை நான் சந்திப்பது அதுதான் முதல்தடவை .என்னை விட மூன்று நாலு வயது குறைவு .குரங்கன் என்ற குரங்கன் .ஊரில வசதியாக இருந்திருப்பார் போலிருக்கு , காட்லி கல்லூரி மாணவர் .இவர் தந்தை காட்லியின் ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் என்று சொன்னார் .அங்கு இருக்கும் அனைவருக்கும் எந்த நேரமும்  ஒரு வித அலுப்பு கொடுத்துக்கொண்டே இருந்தார் .அவரை எதிர்த்து எவரும் எதுவும் சொல்லுவதில்லை .முகாமில் ஒரு பொறுப்பாளரின் வலது கையாக இருந்து இதே அலுப்பு முகாம்களிலும்  பலருக்கு கொடுத்தவராம் . 
 
ஒரு நாள் காலை எம்முடன் இருந்த ஒரு தோழர் புது உடுப்பு ஒன்றை போட்டுக்கொண்டு வெளிக்கிட்டுகொண்டுவந்தார் .அவர் மொட்டைமாடியில் நிற்கும் போது ரவி ஒரு வாளி தண்ணீரை அவர் தலையில் ஊற்றிவிட்டு பெரிய பகிடி மாதிரி சிரித்தார் .வேறு ஒரு சிலரும் சிரித்தார்கள் .புது உடுப்பு போட்டவர் கோபம் வந்தாலும் இயலாமையால் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தார் . எனக்கு கோவம் வந்தால் வேறு ஒன்றும் கண் முன்தெரியாது .பேச்சு என்றால் அந்த மாதிரி பேச்சு அதுவும் அரை மணித்தியாலத்திற்கு கண் மண் தெரியாமல் அவரை வைத்து வாங்கிவிட்டேன் .முகாம்களில் நடந்த விடயங்களையும் வேறு சுட்டி காட்டி பேசினேன் .உனக்கு நான் இப்படி செய்தால் என்ன செய்வாய் என்று கேட்டேன் .அவர் எள்ளளவும் நினைக்கவில்லை நான் இப்படி எல்லோருக்கும் முன்னால் பேசுவேன் என்று .இயக்கம் என்று இல்லாவிட்டால் அடித்து பல்லை கழட்டியிருப்பன் என்றேன் .தண்ணி ஊற்றியவரிடம் மன்னிப்பை கேட்டுவிட்டு கீழே இறங்கி போய்விட்டார் .
அன்று இரவு மொட்டைமாடியில் படுத்திருக்கும் போது அழத்தொடங்கிவிட்டார் .முகாம்களில் நடந்ததை இழுத்ததும் ,மற்றவர்களுக்கு முன்னால் பேசியதும் அவரை பாதித்துவிட்டது .
 
அந்த நிகழ்விற்கு பின்னர் என்னுடன் மிக நெருங்கிவிட்டார் .நிகழ்சி முடியமட்டும் இருவரும் அனேகம் ஒன்றாகவே திரிந்தோம் .பிறகும் பல செய்கைகளில் குரங்கனாகவே இருந்தார் .மோட்டார் சயிக்கில் ஒரு வழி பாதியில் விடுவார் ,வேகமாக ஒட்டுவார் பொலிஸ் நிற்பாட்ட சொன்னால் மெதுவாக்கி அவர்களுக்கு கிட்ட போய் ஒரே இழுவையில் இழுத்துக்கொண்டு போய்விடுவார் .ஒரு முறை துரத்தி பிடித்துவிடார்கள் பிறகு உள்ள பொய்கள் எல்லாம் சொல்லி தப்பியாச்சு .எங்களிடம் எதுவித அடையாள அட்டைகள் வேறு இல்லை .அவரது உறவின மாணவிகள் சென்னையில் தங்கி இருந்து படித்தால் மோட்டார் சயிக்கில் இடைக்கிடை அங்கு போய்விடும். பணம் வேறு வாங்கி வந்து செலவழித்து தள்ளுவார் .
 
இந்த காலகட்டத்தில் தான் நான் இயக்க பணத்தை சற்று துஸ்பிரயோகம் செய்ததும் .ஐந்து சதத்திற்கும் கணக்கு எழுதிகொண்டிருந்த நான் இப்போ அடிக்கடி சரவணபவனில் சாப்பிடுவதும் தியாகராஜநகரில் இருக்கும் லிங்கம் கூல் பார் மாதிரி ஓர் இடத்தில் ஐஸ் கிறீம்,சர்பத் என குடிக்கவும் தொடங்கியிருந்தேன் .இரவில் படம் வேறு பார்க்க தொடங்கினேன் .
 
நிகழ்விற்கான வேலைகளை பகிர்ந்தே செய்தோம் .நானும் ரவியும் தான் நிகழ்சிக்காக நடிக,நடிகைகள் ,பாடர்களை சந்தித்துக்கொண்டு இருந்தோம் .காலை பொம்மை ஆசிரியர் நெல்லையுடன் வெளிக்கிட்டால் நடிக நடிகைகளின் வீடு ,ஸ்டுடியோ ,படப்பிடிப்பு தளங்கள் என்று அனைத்து பிரபலங்களையும் சந்தித்தோம் .
 
அந்த நேரம் எமது பிரச்சனை பற்றி எதுவும் அறியாதவர்களாக கை மட்டும் தந்து வெறுமன தலையாட்டி விட்டவர்கள் தான் அதிகம் .ரஜனி ,சத்தியராஜ் ,பாரதிராஜா ,பாக்கியராஜ் ,சிவகுமார் ,முழு நடிககைளும் என்று பெரிய பட்டியல் .
 
சிறிது மனம் திறந்து எமது பிரச்சனையை காது கொடுத்து கேட்டவர்கள் பாலசந்தர் ,ராதாரவி ,மணிவண்ணன் ,நிழல்கள் ரவி போன்ற சிலர் .
 
கமல் ,விஜயகாந்த் ,ராஜேஷ்,எஸ் பி முத்துராமன் போன்றவர்கள் நிறைய எமது அரசியல் பற்றி கதைத்தார்கள் .கமல் அப்படி எங்களுடன் கதைத்தது மாத்திரம் அல்ல வேறு நடிகர்களை சந்திக்க போகும் போதும் தானே எம்மை தேடிவந்து நன்கு பழகியவர் போல கதைப்பார் .உலகம் முழுக்க சிலோன் தமிழர்கள் நல்ல பணத்துடன் இருக்கின்றார்கள் அவர்களிடம் உதவி கேட்பதை விட்டு ஸ்ருடியோ வாசலில் ஏன் காவல் நிற்கின்றீர்கள் என்று வேறு ஒருமுறை கேட்டார் .விட்டு தனது தயாரிப்பில் இருக்கும் விக்ரம்  படப்பிடிப்பு தளத்தையும் சுற்றி காட்டினார் .ராஜேஷ் மார்க்சிசம் பற்றி கதைக்க தொடங்கி அறுத்து தள்ளிவிட்டார் விஜயகாந்து,இப்பரகிம் ராவுத்தர் வீடுகள் நாங்கள் பயணம் செய்யும் பாதையில் இருப்பதால் இடைக்கிடை அங்கு புகுந்துவிடுவோம் .கங்கைஅமரனின் இசை கச்சேரி தான் ஒழுங்கு பண்ணியிருந்தோம் அதனால் அவர் மிக நெருக்கமாகி தனது மகனின் பிறந்த தினத்திற்கும் எம்மை அழைத்திருந்தார் .அம்பிகா ராதா வீட்டில் மிஸ்டர் பாரத் சூட்டிங்கில் ரஜனி ,சத்தியராஜ் ,அம்பிகாவை சந்தித்தோம் .அடிக்கடி போய் வந்ததால் பாடகர் ஜேசுதாசின் மனைவி நண்பராகிவிட்டிருந்தார் .எமது விட்டிற்கு அடுத்த வீடு என்பதால் குழந்தைகளாக இருந்த சோனியாவும் டிங்குவும் நிகழ்சிக்கு வந்தார்கள் .அவர்கள் அம்மாவும் நல்ல அழகு ,அடிக்கடி வந்து என்னுடன் கதைப்பதால் அண்ணை கதை அப்படி போகுதோ என்று தோழர்களின் பகிடி வேறு . 
 
 
வள்ளுவர் கோட்டத்தை சுற்றிய இடங்களிலும் மவுண்ட்ரோடு முழுக்க இரவு இரவாக நோட்டிஸ் ஓட்டினோம் .பின்னிரவு வந்தால் எந்த நகரும் தூங்கிவிடும் அந்த நேரத்தில் மவுன்ரோடு நெடுக எமது பஸ்சில் பத்து பதினைந்து பேர்கள் திரிந்து நோட்டிஸ் ஒட்டியது மறக்கமுடியாத அனுபவம் .
லண்டனில் இருந்து கிருஷ்ணன் வந்திருந்தார் அவருடன் திரிந்ததில் பல பணக்கார வர்த்தகர்களை சந்தித்து குறிக்கப்பட்ட அளவு பணம் சேர்க்க கூடியதாக இருந்தது .அவருடன் போய்த்தான்  நாகராசாவையும்  (ஆரம்ப புலி உறுப்பினர் ) சந்தித்தேன்.
நிகழ்சி அன்று மாலை வரை கடைசி நேர ஏற்பாடுகளை காரில் அலைந்து செய்துவிட்டு வீடு திரும்பினேன் .வீட்டில் எவரும் இல்லை எல்லோரும் நிகழ்சிக்கு போய்விட்டிருந்தார்கள் .குளித்துவிட்டு வந்து பார்த்தால் செருப்பு ,சப்பாத்து ,சிலிப்பர் எதுவும் இல்லை .நான் போட்டுக்கொண்டு வந்த செருப்பையும் காணோம் .நல்லவேளை எனது பாக்கில் சொக்ஸ் இருந்தது வெள்ளை சொக்சுடன் வெறும் காலுடன் போய் வள்ளுவர் கோட்டம் போய் இறங்கினேன் .ஏதோ கோயிலிற்குள் திரிவது போல சொக்சுடனேயே அங்கு திரிந்தேன் .பிரபல நடிக நடிகைகள் எவரும் வரவில்லை கங்கை அமரன் ஜேசுதாஸ் மலேசிய வாசுதேவன் பாட்டு கச்சேரி ,நிழல்கள் ரவி ,இளவரசி ,சார்லியின் நாடகம் என்று நிகழ்சியை ஒருவாறு ஒப்பேற்றிவிட்டோம் .
 
நிகழ்சி முடிய எல்லோரையும்  நன்றி சொல்லி வழியனுப்பிகொண்டு  இருக்கின்றேன்  "நடிகைகளுடன் பொல்லாத பிசி போல " திரும்பி பார்கின்றேன் ,எமது  தோழரின் சென்னையில் இருந்து படிக்கும் சகோதரி  ஒருவர் நக்கல் சிரிப்புடன் தாயாருடன் நிற்கின்றார் .அவர்களுக்கும் நன்றி சொல்லி அனுப்பிவைக்கின்றேன் .அவரே பின் எனது மனைவி ஆனது ஒருவித அதிசயம் தான் .
இந்த நிகழ்சி நடந்த நாட்களில் உமாவுடன் அடிக்க சந்திக்க வேண்டி வந்தாலும் அடிக்கடி உட்பிரச்சனைகள் பற்றி நான் கதைத்தால் சிறு இடைவெளி ஒன்றும் ஏற்பட்டிருந்தது .
 
மேலோட்டமாக அது பற்றி பின்னர் தொடர்கின்றேன் . 
Edited by arjun
 • Like 14

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள்.....

Share this post


Link to post
Share on other sites

பாராட்டுக்கள் அர்ஜுன் ...
மனம் திறந்து மடை மடையாக எழுதுகிறீர்கள்.
உங்கள் எழுத்திலும் வீரியம் கூடி இருக்கிறது.
அடுத்த பதிவை எதிர் நோக்கி பலர் காத்திருக்கிறோம்.. :) 

 

Share this post


Link to post
Share on other sites
கடவுள் பாதி மிருகம் பாதி -மனிதன் .
 
உமாவிற்கும் எனக்குமான தொடர்பு இரண்டுவருடங்கள் என்றாலும் மிக நெருக்கமாக இருந்தது ,நான் என்று இல்லை எனது இடத்தில் எவர் இருந்திருந்தாலும் அப்படித்தான் இருந்திருக்கும் .தமிழ் நாட்டில் எப்பவும் நாலு பேர்கள் சூழ இருப்பார்கள் அதை விட அவருக்கும் ஆயிரம் வேலை இருக்கும் .டெல்கி வந்து அவர் தங்கி நிற்கும் நாட்களில் நாங்கள் மூன்று பேர்கள் தான் 
பல கதைகள் பேசியபடி ஒன்றாகவே திரிவோம் ,சாப்பிடுவோம் ,தூங்குவோம் .அதில் பகிடி சீரியஸ் சந்தோசம் துக்கம் என்று எல்லாம் இருக்கும் .அங்கிருந்த பலர்  மாதிரி "பெரியய்யா " என்று இடைவெளிவிட்டு பழகாமல் வெகு சகஜமாக பழகினேன் . அனேக இரவுகளில்  நான் ட்ரான்சிஸ்டரும் கையும் தான் .ஒன்றில் கிரிக்கேட் அல்லது டென்னிஸ் வர்ணனை கேட்டுக்கொண்டே இருப்பேன் .இதானால் என்னுடன் ஸ்போர்ட்ஸ் பற்றி அடிக்கடி கதைப்பார் (மகாஜனாவில் உதைபந்து விளையாடியதாக சொன்னார் உண்மை பொய் தெரியாது )கரம் விளையாடுவோம் .அவர் ரூமில் தூங்க நான் விறாந்தையில் தூங்குவேன் .
 
ஒருநாள்  சென்னையில் இருந்து தொலைபேசி .வைத்தியசாலையில் இருந்த தோழர் இறந்துவிட்டதாக  வந்தது .பயிற்சி முடித்து இலங்கை போகும் போது சிங்கள கடற்படையால்  சுடப்பட்டு பதினாறு பேரும் இறந்துவிட்டார்கள் என்று இருந்தார்கள் ஆனால் அதில் ஒருவர் மூன்று நாட்கள் கடலில் இருந்து உயிர்பிழைத்து வந்தார் .பின்னர் ஆறுமாதத்திற்கு மேல் சென்னை பொது வைத்தியசாலையில் தான் இருந்தார் . அவர் இறந்துவிட்டதாகத்தான் செய்தி வந்தது .மெல்ல போய் எழுப்பினேன், தலையணைக்கு கீழே தான் அவர் கை முதலில் போனது .முகாமிற்கு கொண்டு சென்று உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யசொன்னார் .பின்னர் விடியுமட்டும் இருந்து பல கதைகள் பேசிக்கொண்டு இருந்தோம் .
 
உமாவும் வீரப்பிரதாபங்ககளில் ஆர்வம் உடையவராகத்தான் இருந்தார் .கிளிநோச்சி வங்கி கொள்ளை ,கனகரத்தினம் கொலைக்கு பிராபாவுடன் போனது ,பஸ்தியாம்பிள்ளை கொலை ,அமிர் தன்னை கொலை செய்ய பிரபாவை செட் பண்ணியது என்று பலதும் கதைப்பார் .நான் ஆயுதம் ,ஸ்டன்ட் ,வீரதீரத்தில்  அக்கறை இல்லாதவன் .அவை என்னை பெரிதாக கவருவதுமில்லை .
 
டெல்கிக்கு வந்த செர்லி என்பவர் புதியதோர் உலகம் வாசிக்க சொல்லி தந்தார் .அதை வாசித்த பின்பு மிகவும் குழம்பிபோனேன் .அதற்கு பிறகு உமாவை சந்திக்கும் போது மனதில் எப்போதும் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது .சென்னை வந்தபின்பு முக்கியமானவர்கள்  இடைக்கிட  வைக்கும் கூட்டதற்கு போயிருந்தேன் .கூட்டம் வெகு நேர்த்தியாக அஜன்டா ஒன்றை முன் வைத்து உமா தலைமையில் நடந்தது .பலவிடயங்கள் பேசி சில முடிவுகளும் எடுத்தார்கள்
 
 .அடுத்த மாதமும் அப்படி ஒரு கூட்டம் .மீண்டும் பல விடயங்கள் கதைத்து சில முடிவுகளும் எடுத்தார்கள் .நான் அப்போ கேட்டேன் "போன கூட்டத்தில் எடுத்த முடிவுகள் நடைமுறையில் வந்துவிட்டதா ? நடைமுறையில் வராவிட்டால் முடிவுகள் எடுத்து என்ன பிரயோசனம் ?"
 
"நாட்டு நிலைமை தெரியுமா ? அதுவும் கிழக்கில் இப்போ முஸ்லிம்களுடன் ஈபி பிரச்சனை பட்டு நாங்கள் என்ன செய்வது என்று மண்டையை போட்டு குழப்பிகொண்டு இருக்கின்றம் எதுவும் தெரியாமல் கேள்வி கேட்கின்றீர் " வாசு முகத்தில் அடித்த மாதிரி கத்திவிட்டார் .
 
ஏனடா வாயை திறந்தேன் என்று இருந்தது .ஆனால் இவர்களின் முகமும் ஓரளவு வெளித்தமாதிரியும் இருந்தது .உமா ஒரு நாளும் இப்படி கதைப்பதில்லை ஆனால் மற்றவர்களை அப்படி கதைக்க அனுமதிப்பதும் பிழை என்பதுதான் எனது நிலைப்பாடு .பாடசாலையில் இருந்து தொடர்ந்த துரை,லிங்கம் உறவுகளுடாகவும் நாட்டில் இருந்து வரும் செய்திகளில் இருந்தும்  அமைப்பில் மாற்றம்  வராமல் அடுத்த அடி வைக்கமுடியாது என்று உறுதியாகிவிட்டது.
 
பாடசாலை ,அகதி வேலை என்று நான் திரிந்தாலும் அமைப்பின் மாற்றமே மனதிற்குள் எப்போதும் உறுத்த உமாவை சந்திக்கும் தருணங்களில் ஏதாவது கேட்டுவிடுவேன் .அவருக்கு அது ஓரளவு எரிச்சலை கொடுத்திருக்கவேண்டும் உமக்கு தந்த வேலையை ஒழுங்காக செய்யும் வீணாக ஏன் தேவையில்லாத விடயங்களில் தலை இடுகின்றீர் என்று ஒரு முறை சொல்லிவிட்டார் .எனது வேலையை விட அமைப்புத்தான் முக்கியம் ,அமைப்பு பிழையாக போனால் எனது வேலையை செய்யமுடியாமல் போய்விடும் என்று நேரே சொல்லிவிட்டேன் .
 
நான் அவரை போய் சந்திததை விட அவரும் இடைக்கிடை சந்திக்க வர சொல்லி ஆட்களை அனுப்புவார் .சங்கிலியின் வலது கை தான் அதிகம் வருவார் அவர் இப்போ கனடாவில் இருக்கின்றார் .அதற்கு பல காரணங்கள் இருந்தது என நினைக்கின்றேன்.பாடசாலையில் பல முக்கியமானவர்கள் படித்துவந்தார்கள் இவர்கள் தான் படிப்பு முடிய முகாம்களுக்கு சென்று வகுப்பு எடுக்க இருப்பவர்கள் .
 
அதைவிட அமைப்பில் பல பிரிவுகள் வைத்து எல்லோரையும் வித்தியாசமாக கையாண்டுகொண்டு இருந்தார் .எந்த ஒரு அமைப்பும்   அப்படித்தான் இருக்கும் ஆனால் எவருக்கும் கட்டுப்படாத ஒரு குற்ற கும்பலை தன்னை சுற்றி வைத்திருந்தது ஏற்கமுடியாத ஒரு விடயம் .அவர்களின் செயற்பாடுகளை கட்டு படுத்தாதவராகவும் கண்டும் காணாதவராகவும் இருந்தார் .சுந்தரம் கொலையும் பின்னர் தன் மீது பாண்டி பசாரில் நடாத்திய துப்பாக்கி சூடும் அந்த வட்டத்தை வைத்திருக்கவேண்டிய தேவையை ஏற்படுத்தி விட்டது என்றார்கள் .அதற்காக நாட்டின் விடுதலைக்காக உங்களை நம்பி வந்தவர்களை சந்தேகப்பட்டு மிக மோசமாக சித்திரவதை  ,கொலை செய்தது ஏற்கமுடியாதது .
 
முற்போக்கான ஒரு அமைப்பு இருக்கு, அதற்கான வேலைத்திட்டங்களும் இருக்கு அதில் தொடர்ந்து வேலை செய்யாமல் வீணாக இதற்குள் தலையை கொடுக்கின்றீர்கள் என்பது போல்தான் அவர் நிலைப்பாடு .உங்களை போல்தான்  அவர்களும் தங்கள் வேலையை செய்கின்றார்கள் என்று நம்பினார் போலும் . இனத்தின் விடுதலை ,ஆயுத போராட்டம் ,பயிற்சி ,அதற்கான வேலைபாடுகள் ,தோழர்களின் மனோபலம் இவற்றை எல்லாம் விட தனது பாதுகாப்பு முக்கியம் என்று நினைத்தாரோ தெரியாது .
நூறு பேர்கள் இருக்கும் போது உருவாகிய அந்த வட்டம் ஐயாயிரம் பேர்கள் வந்தபின்பும் அவர்களை கட்டுப்படுத்த நினப்பது முடியாத காரியம் .தமிழ் நாட்டில் முகாம்களில் ஆயுதங்களுக்கு பயந்து இருந்தவர்கள் நாட்டிற்கு போய் போர்க்கொடியை தூக்கிவிட்டார்கள் .அதைவிட உமா இலங்கை போன போது தலைவரின் பாதுகாப்பு என்ற பெயரில் சுழிபுரத்தில் ஆறு அப்பாவி புலிகள் இயக்கத்தவர்களை கொன்று புதைத்தது நீறு பூத்த நெருப்பாக பலர் மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது .இயக்கத்தை விட்டு போனபின்பும் வருடக்கணக்கில் பழி கிடந்தது நாகம் நஞ்சு கக்குவது போல சந்தியாரை கொலை செய்தது நிலைமையை இன்னமும் மோசமாக்கியது .
 
உமாவின் அனுமதியில்லாமலே அமைப்பு சுன்னாகத்தில் மாகாநாடு ஒன்று வைத்து பல முடிவுகளையும் எடுத்துவிட்டிருந்தது .பல பொறுப்பாளர்களை மாற்றம் செய்து விட்டிருந்தார்கள் அதில் எடுத்த மிக முக்கிய முடிவு நாட்டில் நடந்தது போல தமிழ் நாட்டிலும் மகாநாடு நடாத்துவது  என்பதாகும் .
 
சந்திப்புகளில் கதைத்த கனடாவின் கதையும் இன்னும் பலவும் தொடரும் .
 
(மேலே பதிந்ததை எழுதாமல் நான் கதைத்ததை எழுதமுடியாது என்பதால் இந்த பதிவு .சற்று சுயபுராணம் தான் ஆனால் தவிர்க்கமுடியாதது )
 • Like 7

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • வைத்தியர் ஷாபி விவகாரம் : முறைப்பாடளித்த தாய்மாருக்கு கொழும்பில் மருத்துவ பரிசோதனை   (எம்.எப்.எம்.பஸீர்) வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சட்ட விரோத கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களில் சி.ஐ.டி.யில் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தொடர்பில் நேற்று வரை 758 பேரின் வாக்கு மூலங்கள் குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.  கருத்தடை விவகாரத்தால் தாம் பாதிக்கப்பட்டதாக முறைப்பாடளித்துள்ள பெண்களில் 601 பேர், மகப்பேற்று மற்றும் பிரசவ விஷேட வைத்திய நிபுணர்கள் 7 பேர் உள்ளிட்ட 758 பேரின் வாக்கு மூலங்களே இவ்வாறு பதிவு செய்யப்ப்ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.  பொலிஸ் தலைமையகத்தில் நேற்று அவர் நடாத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். இந் நிலையில்  வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும்  சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையிலான குழுவினர்  இந்த விசாரணைகளுக்கு தேவையான பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி சட்ட விரோத கருத்தடை தொடர்பில் வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்துள்ள பெண்களை கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியின் கீழ்,  பிரசவ மற்றும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர்கள் இருவர் அடங்கிய  சிறப்பு குழு முன்னிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டுள்ளது. குறித்த மருத்துவ  பரிசோதனைகள் கொழும்பு காசல் வைத்தியசாலை மற்றும் டி சொய்ஸா பெண்கள் வைத்தியசாலைகளில் முன்னெடுப்பதற்கான அனுமதியை சி.ஐ.டி. பெற்றுக்கொண்டுள்ளது. அதன்படி சி.ஐ.டி. மன்றில்  குருணாகல் நீதிவானிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய,  குறித்த இரு வைத்தியசாலைகளுக்கும் குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுக்க தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளில் குறைபாடுகள் இருக்குமாயின் அதனை உடனடியாக நிவர்த்தி செய்துகொடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அத்துடன்  குருணாகல் போதனா வைத்தியசாலையில் செய்யப்பட்ட  சிசேரியன் சத்திர சிகிச்சைகள்  அவற்றில் பிரதி கூலங்கள்  தொடர்பில் பதிவான சத்திர சிகிச்சைகள் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி விரிவான  அறிக்கையை சி.ஐ.டி.க்கு கொடுக்கவும் சுகதார அமைச்சின் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை நேற்று வரை வைத்தியர் சாபி விவகாரத்தில் சி.ஐ.டி. பதிவு செய்துள்ள 758  வாக்கு மூலங்களின் விபரங்களும் கேசரிக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அதில் சட்ட விரோத கருத்தடை விவகாரம் தொடர்பில் வைத்தியருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்த தாய்மார்களில் 601 பேரிடமும்,  பிரசவ மற்றும் மகப்பேற்று  விஷேட வைத்திய நிபுணர்கள் 7 பேரிடமும், ஷாபி வைத்தியரின் தரத்துக்கு சமனான தரத்தை உடைய குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவு வைத்தியர் ஒருவரிடமும்,  குழந்தைகள் தொடர்பிலான  6 வைத்தியர்களிடமும்,  சிசேரியன் வைத்தியர்களுக்கு உதவி வைத்தியர்களாக கடமையாற்றும் 11 வைத்தியர்களிடமும், உணர்விழக்கச் செய்யும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் 10 வைத்தியர்களிடமும்  பதிவு செய்த வாக்கு மூலங்கள் உள்ளடங்குகின்றன. இதனைவிட, சிசேரியன் சிகிச்சைகளின் போது  இரு தாதியர்கள் அந் நடவடிக்கையில் பங்கேற்கும் நிலையில், அவ்வாறு அந்த சிகிச்சைகளில் பங்கேற்ற  பிரதான தாதி ஒருவர் உள்ளிட்ட 70 தாதியர்களிடமும்,  18 உதவியாளர்களிடமும் பாலியல் உறுப்புகள் தொடர்பிலான வைத்தியர் ஒருவரிடமும் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைவிட  குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளரின் வாக்கு மூலத்தையும் சி.ஐ.டி. பதிவு செய்துள்ளது. குருணாகல் வைத்தியசாலை பனிப்பாளரின் வாக்கு மூலத்தை பதிவு செய்ய முன்னர், சி.ஐ.டி. அவருக்கு எதிராக விஷேட நீதிமன்ற உத்தரவொன்றினைப் பெற்றிருந்தது. அதில் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந் நிலையில் வைத்தியர் ஷாபி விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் தொகுப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி குருணாகல் நீதிவானுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/58611
  • இந்துசமுத்திரத்தை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளது ஐஎஸ்- இந்திய புலனாய்வு அமைப்பு   சிரியா ஈராக்கில் ஏற்பட்டுள்ள தோல்விகளை தொடர்ந்து எஸ் அமைப்பு தனது கவனத்தை இந்து சமுத்திரத்தை நோக்கி திருப்பியுள்ளது இதன் காரணமாக இந்தியா இலங்கைக்கு ஆபத்துக்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படலாம் என இந்திய புலனாய்வு அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள காவல்துறையினரிற்கு இந்திய புலனாய்வு அமைப்பு அனுப்பியுள்ள மூன்று கடிதங்களில் இந்த ஆபத்து குறித்து சுட்டிக்காட்டியுள்ளது. ஈராக் சிரியாவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை இழந்த பின்னர் தங்கள் நாடுகளில் இருந்தபடியே வன்முறைகளில் ஈடுபடுமாறு ஐஎஸ் அமைப்பு தனது உறுப்பினர்களிற்கு வேண்டுகோள் விடுத்துவருகின்றது என இந்திய புலனாய்வு அமைப்பு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. கொச்சியில் வணிகவளாகங்கள் உட்பட முக்கியமான இடங்கள் இலக்குவைக்கப்படலாம் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் தனது இணைய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது இது தாக்குதல் நடைபெறலாம் என்பதற்கான அறிகுறி எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.   https://www.virakesari.lk/article/58617
  • உல­க­ளா­விய ரீதியில் 70 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்   உல­க­ளா­விய ரீதியில் போரால் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தொகை கடந்த வரு­டத்தில் 70 மில்­லி­ய­னாக அதி­க­ரித்­துள்­ள­தாக  ஐக்­கிய நாடுகள் அக­திகள் முகவர் நிலை­யத்தால் நேற்று புதன்­கி­ழமை புதி­தாக வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  கடந்த வரு­டத்தில் 70.8 மில்­லியன் பேர் இடம்­பெ­யரும் நிர்ப்­பந்­தத்­திற்குள்­ளா­கி­யுள்­ளனர் எனவும் அதற்கு முந்­திய வரு­டத்தில் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தொகை­யுடன் ஒப்­பி­டு­கையில் அந்த வரு­டத்தில் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தொகையில்  2.3 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான அதி­க­ரிப்பு இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் ஐக்­கிய நாடுகள் அக­திகள் முகவர் நிலை­யத்தால்  வெளியி­டப்­பட்ட  வரு­டாந்த  உல­க­ளா­விய போக்­குகள் அறிக்­கையில்  சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இந்த இடம்­பெ­யர்ந்த அக­திகள் தொகை­ யா­னது 30 வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்­ததை விடவும் இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. உல­க­ளா­விய ரீதியில் தின­சரி சரா­ச­ரி­யாக 37,000 புதிய இடம்­பெ­யர்­வுகள் இடம்­பெற்று வரு­வ­தாக அந்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்ளது. இது போர், மோதல்கள், துன்­பு­றுத்­தல்கள் என்­பன­வற்­றி­லி­ருந்து பாது­காப்பு தேவை­யான மக்­க­ளது தொகையில் நீண்ட  கால ரீதியில் அதி­க­ரிக்கும் போக்கு காண ப்­ப­டு­வதை மேலும் உறு­திப்­ப­டுத்­து­வ­தாக  உள்­ளது" என ஐக்­கிய நாடுகள் அக­திகள் உயர்ஸ்­தா­னிகர் பிலிப்போ கிரான்டி தெரி­வித்தார். வெனி­சு­லா­வி­லான நெருக்­க­டிகள் தொட ர்­பான தக­வல்கள் முழு­மை­யாக வெளிப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் மேற்­படி இடம்­பெ­யர்ந்த அக­தி­களின் தொகை மதிப்­பி­டப்­பட்­டதை விடவும் அதி­கமாக  இருப்­ப­தாக தோன்­று­வ­தாக அவர் கூறினார். இவ்­வாறு இடம்­பெ­யர்ந்­த­வர்­களில்  தாய் நாட்­டி­லான  மோதல்கள், போர் மற்றும் துன்­பு­றுத்­தல்கள் கார­ண­மாக  நாட்டை விட்டு வெளியே­றி­ய­வர்கள், தாம் பிறந்த நாட்டை விட்டு வெளியேறி  சர்­வ­தேச பாது­காப்பின் கீழ் இருக்கும் நிலையில்  அகதி அந்­தஸ்து வழங்­கப்­ப­டாத  புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்கள் மற்றும் உள்­நாட்­டுக்குள் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் என 3 பிரி­வினர் உள்­ள­டங்­கு­வ­தாக தெரி­வித்த பிலிப்போ கிரான்டி, கடந்த ஆண்டில் உல­க­ளா­விய அக­திகள் தொகை 25.9 மில்­லி­ய­னா­கவும் புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்கள் தொகை 3.5 மில்­லி­ய­னா­கவும்  உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தொகை 41.3 மில்­லி­ய­னா­கவும் உயர்ந்துள்­ள­தாக  கூறினார். உல­க­ளா­விய அனைத்து அக­திகள் தொகையில்  மூன்றில் இரண்டு பகுதியி னர் சிரியா, ஆப்­கா­னிஸ்தான், தென் சூடான், மியன்மார் மற்றும் சோமா­லியா ஆகிய நாடு­களைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். சிரி­யா­வி­லி­ருந்தே அதி­க­ள­வான அக­திகள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். அந்­நாட்­டி­லி­ருந்து 6.7 மில்­லியன் பேர் இடம்­பெ­யர்ந்­துள்ள அதே­ச­மயம் அந்­நாட்­டிற்கு அடுத்த இடத்­தி­லுள்ள  ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து 2.7 மில்­லியன் பேர்  இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். 2018 ஆம் ஆண்டில் 92,400 அக­திகள்  மட்­டுமே மீளக் குடி­ய­மர்த்­தப்­பட்­டு ள்­ளனர்.  இது மீளக்குடி­ய­மரக் காத்­தி­ருப்­ப­வர்கள் தொகையில் 7 சத­வீதம் மட்­டு­மே­யாகும்.   https://www.virakesari.lk/article/58615
  • நேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்? கலாநிதி அமீர் அலி 1956 பொதுத்தேர்தலில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் வெற்றிக்குப் பிறகு இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில் ஆதிக்கம் செலுத்திவருவது ஒரேயொரு பிரச்சினையே இனவாதமே அது. ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்த பிரசாரங்களின் பிரதான இலக்காக தமிழ் சமூகமே இருந்தது. இறுதியில் ஒரு முப்பது வருடகால போருக்கும் வழிவகுத்தது. அந்த போரினால் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட இழப்பு  உண்மையில் மதிப்பிடமுடியாததாகும். தமிழர் பிரச்சினை இப்போது அதன் தாக்கத்தை இழந்து வாக்காளர்களைக் கவருவதற்கு தென்னிலங்கையில் பயன்படுத்தமுடியாத ஒன்றாகிவிட்டது. என்றாலும்கூட, குறிப்பிட்ட சில ' அரசியல் ஹீரோக்கள் ' தமிழர் பிரச்சினைக்கு புத்துயிர் கொடுக்க முயற்சித்துக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதுவும் குறிப்பாக 2015 ஆம் ஆண்டிலிருந்து சிங்கள அரசியல்வாதிகள் அச்சுறுத்தும் புதிய பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு இன்னொரு இலக்கை தேடிக்கொண்டிருந்தார்கள் ; அந்த தேடலில் அவர்கள் முஸ்லிம் சமூகத்தை கண்டுபிடித்தார்கள். சிங்களவர்களுக்கு மேலாக அரசியல்ரீதியிலும் கலாசாரரீதியிலும் தமிழர்கள் மேலாதிக்கம் செலுத்தும் ' அச்சுறுத்தல் ' இருப்பதாக புனைவுசெய்து சிங்களமக்களை நம்பவைக்கக்கூடியதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதைப் போன்று முஸ்லிம்கள் வர்த்தகரீதியிலும் குடிப்பரம்பல் ரீதியிலும் சிங்களவர்கள் மேலாக ஆதிக்கம் செய்யும் அச்சுறுத்தல் வந்துவிட்டது என்று இப்போது பிரசாரங்கள் முழுவீச்சில் முன்னெடுக்கப்படுகின்றன.சஹரான் & கோ.வின் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் ( அவற்றின் பின்னணி பற்றிய விபரங்கள் இப்போது விளக்கமாக வெளிவந்துகொண்டிருக்கின்றன) காரணமாக முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டுவந்த பிரசாரங்களில்  ' முஸ்லிம் பயங்கரவாத ' பரிமாணமும் சேர்ந்துகொண்டுள்ளது. அதேவேளை, எந்தவொரு அரசியல் கட்சியுமே பொருளாதாரம், சுகாதாரம், கல்வி,சுற்றாடல் பாதுகாப்பு போன்ற மக்களை பெரிதும்  வாட்டிவதைக்கின்ற உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேசுவதாக இல்லை.கடந்த காலத்தில் கூட, இடதுசாரிகளைத் தவிர வேறு எந்தவொரு அரசியல் கட்சியின் தலைவரும் தேர்தல் சமர்களின்போது உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்தியதில்லை. இ்ன்று ஆட்சியதிகாரத்துக்காக மல்லுக்கட்டிக்கொண்டிருக்கின்ற மூன்று பிரதான கட்சிகளும் -- ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திறந்த பொருளாதாரத்தை ஏகமனதாக ஆரத்தழுவியிருக்கின்றன. அரசாங்கத்துறையை பொருளாதார பங்கேற்பிலும் முகாமைத்துவத்திலும் இருந்து படிப்படியாக விடுவிப்பதற்கு தயங்காத அளவுக்கு இந்த கட்சிகள் திறந்த பொருளாதாரத்தை நேசிக்கின்றவையாக மாறிவிட்டன. அதனால் முஸ்லிம் அச்சுறுத்தலைப் பற்றி பேசி மக்களை திசைதிருப்புவதைத் தவிர அவற்றுக்கு ஆக்கபூர்வமான திட்டம் எதையும் மக்கள் முன்வைக்கக்கூடிய வல்லமை இல்லை.மார்க்சியத்துடன் ஒரு புனைவுத்தன்மையான பிணைப்பைக் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) யாவது ஆக்கபூர்வமான பொருளாதார நிகழ்ச்சித்திட்டத்துடனான நம்பகத்தன்மையான மாற்றாக அமையும் பார்த்தால் அதுவும் ஏமாற்றமாகப் போய்விட்டது. ஜே.வி.பி.யையும் கூட இனவாத வைரஸ் தோற்றிக்கொண்டுள்ளது. தீவிர வலதுசாரிக்கட்சிகளிடம் எந்தவிதமான உருப்படியான கொள்கையும் இல்லை.அவை படுமோசமான அரசியல் வங்குரோத்து நிலையில் இருக்கின்றன. இதுதான் எமது தேசத்தின் இன்றைய நிலை. இவற்றினால் ஏற்படக்கூடிய விளைவு எத்தகையதாக இருக்கும் இருக்கும்? தமிழ்ச் சிறுபான்மை இனத்தவர்களை கண்ணியமாக நடத்தி அவர்களுக்கு சிலவகையான அதிகாரப் பகிர்வுகளை வழங்குவதற்கு தொடர்ச்சியாக மறுத்துவந்த காரணத்தால்தான் இறுதியில் உள்நாட்டுப் போர் வந்தது. இப்போது என்ன நடந்திருக்கிறது.தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர மறுத்தவர்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனர்களுக்கு 99 வருடங்களுக்கு  கொடுத்திருக்கிறார்கள். எப்போது அவர்கள் இங்கிருந்து போவார்கள்? இந்த கேள்விக்கு கடவுளினால் மாத்திரமே பதில் சொல்லமுடியும்.  அதேபோன்றே 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் செல்வாக்கும் கணிசமானளவுக்கு அதிகரித்திருக்கிறது. உள்நாட்டில் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுப்பதற்கு முன்னதாக இந்திய தலைவரிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக இலங்கையின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் புதுடில்லிக்கு விஜயம் செய்வதென்பது பெரும்பாலும் ஒரு சடங்காகவே மாறிவஞ்டது எனலாம்.மதரீதியான ஆசீர்வாதத்துக்காக திருப்பதியும் அரசியல்ரீதியான ஆசீர்வாதத்துக்காக புதுடில்லியும் இலங்கைத் தலைவர்களுக்கு அரசியல் யாத்திரை மையங்களாக மாறிவிட்டன. அம்பாந்தோட்டையைப் போன்ற சொத்துக்களை நீண்டகால அடிப்படையில் பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கைத் தீவில் சீனப்பிரசன்னத்தை எதிரீடு செய்வதற்கு இந்தியா விரும்புகிறது.பிரதமர் நரேந்திர மோடி சிறிசேன அன்ட் கம்பனிக்கு வெறுமனே ' ஹலோ ' சொல்வதற்கு ' கடந்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை.சீன -- இந்திய புவிசார் அரசியலுக்குள் இலங்கை வசமாக மாட்டிக்கொண்டுள்ளது.  அதிகாரம் செய்யவிரும்புகின்ற  மூன்றாவது நாடும்  மிகவும் பலம்பொருந்தியதுமான  அமெரிக்கா ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை அடுத்து  திருகோணமலையில் தனது கடற்படை கப்பல்களுக்கு தரிப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இலங்கையிடமிருந்து சலுகைகளை வலிந்து கேட்பதற்கு சர்வதேச முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தலை ஊதிப்  பெருப்பித்துக்காட்டும் என்பது நிச்சயம். ( எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியமே ஜிஹாதிகளையும் ஜிஹாதிகளுக்கு எதிரானவர்களையும் உருவாக்கியது. இப்போது  இலங்கையைப் போன்ற கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்ததும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வலிமையற்றதுமான நாடுகளில் நிரந்தரமாகக்  காலூன்றுவதற்கு அமெரிக்க வெளியுறவு  கொள்கைவகுப்பாளர்களுக்கு சர்வதேச ஜிஹாதிய அச்சுறுத்தல் ' வசதியான ஒரு சந்தைப்படுத்தல் ' கருவியாக மாறியிருக்கிறது ) மோடியைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கை வருகிறார். அமெரிக்காவின் கோரிக்கையையும் நெருக்குதலையும் எவ்வளவு காலத்துக்கு இலங்கையினால் மறுத்துநிற்க முடியும் ? மூன்று மேலாதிக்க நாடுகள் மத்தியில் இலங்கை இப்போது சிக்கியிருக்கிறது. அதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் ஒரு பக்கத்தில் செயலிழந்துபோன அரசாங்கத்தின் காரணமாகவும் மறுபக்கத்தில் தொடரும் இனவாக பதற்றநிலை மற்றும் வன்செயல்கள் காரணமாகவும் பாரதூரமான தாக்கத்துக்குள்ளாகியிருக்கிறது. சீர்குலைந்துபோயிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய வங்கி ஆளுநர் என்னதான் முயற்சிகளை எடுத்தாலும் -- தேசத்தின் பெரும்பாக பொருளாதாரத்தின் அத்திபாரங்கள் கெட்டியானவையாக இருப்பதாக பிரகடனம் செயதாலும் மக்கள் அனுபவிக்கின்ற கஷ்டங்கள் வேறுபட்ட கதையையே சொலகின்றன.அன்றாடம் அதிகரித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவு, குவியும் தனிப்பட்ட கடன்கள் மற்றும் வறுமை அதிகரிப்பு  எல்லாமே தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றன ; இவை விரைவாக வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் பொருளாதாரம் ஒன்றின் வெளிப்பாடுகள். இந்த பொருளாதார இடர்நிலை இனவாத வைரஸுக்கு பெருமளவுக்கு ஊட்டம் கொடுக்கிறது. ஒரு குடும்பத்தில் தாராளமாக வளம் இருந்தால் மூத்த சகோதரன் கூடுதலான வளத்தை அபகரிப்பதாகவும் தனக்கு சொற்பமே கிடைப்பதாகவும் இளைய சகோதரன் முறையிடமாட்டான். பகிர்வதற்கு சொற்பமே இருக்கின்றபோது தான் தகராறு தொடங்குகிறது. பொருளாதாரத்தை முழுமையாக எடுத்துப் பார்க்கும்போது இது தான் உண்மை நிலை.பொருளாதாரம் சுபிட்சம் அடைந்து பன்முக அரசியல் சமூகத்தில் பகிர்ந்துகொள்வதற்கு தாராளமாக இருக்கும்போது மக்களினால் அமைதியையும் சமாதானத்தையும் அனுபவிக்கக்கூடியதாக இருப்பதை வரலாறு நிரூபித்து நிற்கிறது. பொருளாதார இடர்நிலையின்போது மக்கள் கொந்தளிப்புக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கிறது என்பதுடன் பன்முகத்தன்மையும் ஆபத்துக்குள்ளாகிறது. கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் பன்முகத்தன்மையின் கதை இதுதான்.இனவாதம் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துகிறது ; அந்த பலவீனம் இனவாதத்தை போஷித்து வளர்க்கிறது. நாட்டின் பன்முக சமூகம் உயர்வாழவேண்டுமானால் இந்த தொடர்பு துண்டிக்கப்படவேண்டும்.இந்த உண்மையை முறையாகப் புரிந்துகொண்ட நாடு என்றால் அது சிங்கப்பூர் தான்.அந்த நாடு லீ குவான் யூவின் தலைமைத்துவத்தின் கீழ்  அதன் தோற்றத்தின் போதே இந்த விளக்கத்தை பெற்றிருந்தது.அதன் காரணத்தினால்தான்  1980களில் பேரினவாதத்தன்மையான கோரிக்கைகளை முன்வைத்த சிங்கப்பூரின் பெரும்பான்மையினத்தவர்களான சீனர்களைப் பார்த்து அந்த நாட்டை ஒரு இலங்கையாக்கிவிடாதீர்கள் என்று லீ குவான் யூ எச்சரிக்கை செய்தார்.  அந்த நிலைப்பாட்டை எடுத்ததன் மூலம் அவர் தான் ஒரு அரசியல்வாதி அல்ல, அரசியல்ஞானி என்பதை உலகிற்கு நிரூபித்தார். 1950 களிலும்  1960 களிலும் தொடங்கி( ஒரு சிலர் விதிவிலக்காக )  சிங்கள அரசியல்வாதிகள் பெரும்பான்மையினத்தவர்களுக்கும் சிறுபான்மையினத்தவர்களுக்கும் இடையிலான  அபிவிருத்தி இடைவெளிக்கு மற்றைய  சமூகத்தவர்களையே குற்றஞ்சாட்டினார்கள். அந்த இடைவெளியை நிரப்புவதற்கு  கடுமையான தீர்மானங்களை எடுக்காமல் அவர்கள் இனவாத அடிப்படையில் பாரபட்சமான அணுகுமுறைகளையே கடைப்பிடித்தார்கள்.அப்போது குற்றச்சாட்டு  தமிழர்களுக்கு எதிராகத் திரும்பியது.... இப்போது முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது ; அடுத்து யாருக்கு எதிராகத் திரும்பும்? இந்திய வம்சாவளி தமிழர்கள்? தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்பதே நாடு இன்று முகங்கொடுக்கின்ற அடிப்படை பிரச்சினையாகும். ' மென்மையான இன ஒதுக்கல் ' ஒன்றின் அறிகுறிகளை இலங்கை ஏற்கெனவே காண்பிக்கத் தொடங்கிவிட்டது ; அது  ' வன்மையான இன ஒதுக்கலாக ' பலமடைவதற்கு முன்னதாக அரசியல்வாதிகள் நிதானமாகவும் விவேகமாகவும் செயற்பட்டு, குணப்படுத்த முடியாத முறிவு நாட்டுக்கு ஏற்படுவதைத்  தடுக்கவேண்டும். ஏனெ்ன்றால், வெளிநாட்டு சக்திகள் இந்த முறிவை பெரிதும் விரும்புகின்றன. ஏனென்றால், வறியவையும் பலவீனமானவையும் உறுதிப்பாடற்றவையுமான  நாடுகளை ஒன்றுக்கு  எதிராக  ஒன்றை தொர்ச்சியாகப் பயன்படுத்தமுடியும் ;அதன் மூலமாக உள்நாட்டு அரசியல் அதிகார சக்திகளை தங்களது தாளத்துக்கு ஏற்ப ஆடவைக்கலாம் என்று அவை நம்புகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான தற்போதைய அலையைப் பொறுத்தவரை, முஸ்லிம் சமூகத்திற்குள் சீர்திருத்தங்களுக்காான தேவை குறித்து நிறையவே சொல்லப்பட்டிருக்கின்றன.ஆனால், எந்தவொரு சமூகமும்  அதன் இருப்புக்கு வெளியில் இருந்து அச்சுறுத்தலை எதிர்நோக்கும்போது உள்சீர்திருத்தங்களை முன்னெடுக்கப்போவதில்லை. அந்த பினபுலத்தில் நோக்குகையில், சீர்திருத்தங்களை நியாயப்படுத்துகிறவர்கள் கூட தங்களது சொந்தச் சமூகத்தினால் துரோகிகளாகவே கருதப்படுவர். நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.அதற்கு சகல சமூகங்களினதும் ஒத்துழைப்பு தேவை.பொருளாதாரம் என்பது வெறுமனே புள்ளிவிபரங்களுடனும் வகைமாதிரிகளுடனும் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. அதைவிடவும் பெரியது.அது மக்களைப்பற்றியது.மக்கள் அச்சத்துடனும் ஏக்கத்துடனும்்வாழும்போது எந்த பொருளாதாரமும் செழிக்க முடியாது. மதத்தை அனுஷ்டித்து கலாசாரத்தை கொண்டாடுவதற்கு மக்களின் வயிறு நிரம்பவேண்டும் என்பதை மதத்தையும் கலாசாரத்தையும் பேணிப்பாதுகாக்கவேண்டும் என்ற அதீத பற்றுதலை கொண்டவர்கள் முதலில் விளங்கிக்கொள்ளவேண்டும். வ்வாறு கூறுவதை பொருள்முதல்வாதத்தை போதிக்கும் ஒரு மடத்தனமான காரியம் என்று அர்த்தப்படுத்தக்கூடாது. மாறாக இதை  மனிதவாழ்வு பற்றிய பகுத்தறிவுபூர்வமான நோக்காக கருதவேண்டும். இலங்கை அரசியல்வாதிகள் நாட்டினதும் அதன் மக்களினதும் சிறந்த எதிர்காலத்தைப் பற்றி உண்மையான  அக்கறைகொண்டவர்களாக இருந்தால், அவர்கள் தமிழ் மக்களுடனும் முஸ்லிம் மக்களுடனும் நல்லிணக்கச் செயன்முறையைத் துரிதப்படுத்தவேண்டும் ;  வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகின்ற ( சில காவியுடைக்காரர்களையும் உள்ளடக்கிய ) கும்பல்களிடமிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்கவேண்டும். அனுகூலமான சில சமிக்ஞைகளையும் காணக்கூடியதாக இருக்கிறது. மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துகின்ற போக்கிற்கு எதிராக பல சிவில் உரிமை குழுக்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கு முன்வந்திருப்பதை உதாரணத்துக்கு கூறலாம்.  நிலைவரம் மட்டுமீறிச் சென்று பயங்கரமான கட்டத்தை எட்டிவிட்டதை செல்வாக்குமிக்க சில மதத்தலைவர்கள் கூட இப்போது உணருகின்றார்கள்.அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து  எந்தளவு விரைவாக செயற்படுகிறார்களோ அந்தளவுக்கு அது நாட்டின் கௌரவம் மீட்கப்படுவதற்கு நல்லதாக இருக்கும்.   https://www.virakesari.lk/article/58596
  • தொடரும் தவறுகள்..! தமிழ் அர­சியல் ஓர் இக்­கட்­டான நிலை­மைக்குள் பிர­வே­சித்­தி­ருக்­கின்­றது. இந்த நிலை­மையில் இருந்து அது எவ்­வாறு வெளி­வரப் போகின்­றது என்­பதும், பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கும், அர­சியல் ரீதி­யான அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் ஆளா­கி­யுள்ள தமிழ் மக்­களை எவ்­வாறு அது வழி­ந­டத்தப் போகின்­றது என்­பதும் சிந்­த­னைக்­கு­ரி­யது.  நல்­லாட்சி அர­சாங்கம் வாய்ப்­பேச்சில் தனது வீரத்தைக் காட்­டி­ய­தே­யொ­ழிய, காரி­யத்தில் எத­னையும் சாதிக்­க­வில்லை. எதேச்­ச­தி­கா­ரத்தை ஒழித்­துக்­கட்டி, ஜன­நா­ய­கத்துக்குப் புத்­து­யி­ர­ளித்து, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­போ­வ­தாக நல்­லாட்சி அரச தலை­வர்கள் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தனர். ஆனால், காலப் போக்கில் அந்த உறு­தி­மொ­ழி­களை அவர்கள் காற்றில் பறக்­க­விட்­டனர்.  தம்மை ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் இருத்­திய நாட்டு மக்­களின் மன­ம­றிந்து அவர்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்து நல்­லாட்சி புரி­வ­தற்கு மாறாக மனம் போன­போக்கில் ஆட்சி செலுத்­தி­ய­தையே இந்த ஆட்­சி­யா­ளர்­களின் 4 வருட காலத்தில் மக்கள் அனு­ப­வ­மாகப் பெற்­றி­ருக்­கின்­றார்கள். தமிழ் மக்­களைப் பொறுத்­த­மட்டில், யுத்­தத்தை வெற்­றி­க­ர­மாக முடி­வுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் இரா­ணுவ ஆட்­சி­யி­லேயே ஆர்வம் காட்­டி­யி­ருந்­தது. யுத்­தத்தின் பின்னர் அர­சியல் தீர்வு காண்­ப­திலும், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­திலும் அக்­கறை காட்­டவே இல்லை.  மஹிந்த அர­சாங்­கத்­துக்கு மாற்­றீ­டாக, பல முன்­னேற்­ற­க­ர­மான மாற்­றங்­களைச் செய்­யப்­போ­வ­தாக உறு­தி­ய­ளித்த, சந்­தி­ரிகா குமா­ர­துங்க, ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகிய மும்­மூர்த்­தி­க­ளுக்கும் தமிழ்த் தரப்பு தேர்­தலில் ஆத­ர­வ­ளித்­தது. இந்த ஆத­ரவின் மூலம் ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றிய நல்­லாட்சி அர­சாங்கத் தலை­வர்கள் முன்­னைய அர­சாங்­கத்­தை­யும்­விட தமிழ் மக்­களை மோச­மாக நடத்­து­வ­தி­லேயே கவ­ன­மாக இருக்­கின்­றனர். அவர்கள் நாட்டை சீர­ழிப்­ப­தி­லேயே வெற்றி கண்­டி­ருக்­கின்­றனர்.  எதேச்­ச­தி­காரப் போக்கைக் கொண்­டி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சி­யிலும் பார்க்க இந்த அர­சாங்கம் முன்­னைய அரசாங்கத்­திலும் பார்க்க மோச­மா­னது என்ற அவப்­பெ­ய­ரையே இது­வ­ரையில் சம்­பா­தித்­துள்­ளது.  உறு­தி­யற்ற (ஸ்திர­மற்ற) அர­சியல் நிலைமை, பொரு­ளா­தார பாதிப்பு, பொறுப்பு கூறு­கின்ற சர்­வ­தேச கடப்­பாட்­டையும், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிலை­மா­று­கால நீதியை வழங்­கு­கின்ற கட­மை­யையும் புறக்­க­ணித்த போக்கு, சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தத்தின்  மேலாண்­மைக்கு வழி­யேற்­ப­டுத்­தி­யமை, மத சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளுக்கு இட­ம­ளித்­தமை, சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் நாட்­டுக்குள் பிர­வே­சித்­ததைத் தடுப்­பதில் பொறுப்­பற்ற முறையில் செயற்­பட்­டமை, மக்கள் மத்­தியில் நல்­லு­றவு, நல்­லி­ணக்கம், ஐக்­கியம், சக வாழ்வு என்­ப­வற்றை ஏற்­ப­டுத்தத் தவ­றி­யமை போன்ற பல்­வேறு குறை­பா­டு­க­ளையே இந்த அர­சாங்கம் சாதனைப் பட்­டி­ய­லாகக் கொண்­டி­ருக்­கின்­றது. கேள்­விகள் இந்த நிலையில் நன்­மை­களைப் பெற்றுத் தரும். பிரச்­சி­னை­களைத் தீர்த்து நாட்டின் சுபிட்­சத்­துக்கு வழி­கோலும் என்ற நம்­பிக்­கையில் இந்த அர­சாங்­கத்­துக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, அதனை சரி­யான வழியில் கையாள முடி­யாமல் தடு­மாற்­றத்­துக்கு ஆளாகி இருக்­கின்­றது.  முன்­னெப்­போதும் இல்­லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்­கொண்­டுள் ளோம் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப் பின் பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுமந்திரன் தெரி­வித்­துள்ளார். அவ­ரு­டைய கூற்று இன்­றைய தமிழ் அர­சி­யலின் கடி­ன­மான சூழலைப் பிர­தி­ப­லித்­தி­ருக்­கின்­றது.  தமிழ் மக்­களின் அர­சியல் பய­ணத்­திலே பல வித்­தி­யா­ச­மான தசாப்­தங்­களைக் கடந்து வந்­தி­ருக்­கின்றோம். ஆனால், இன்று நாங்கள் இருக்­கின்ற சூழல் இதற்கு முன்­னெப்­போதும் இல்­லாத சூழ­லாக இருக்­கின்­றது என்று அவர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.  யாழ்ப்­பாணம் ஆழி­ய­வ­ளையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் பேசு­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார்.  எங்­க­ளுக்கு உகந்த ஒரு சூழலை நாம் உரு­வாக்­கி­விட்டோம் என்று நினைத்­தி­ருந்­த­போது, அந்தச் சூழலே எங்­க­ளுக்கு மாறா­ன­தா­கவும், நாங்கள் சறுக்கி விழக்­கூ­டி­ய­தா­கவும், விழுந்தால் பாரிய காயம் ஏற்­படக் கூடி­ய­தா­கவும் இன்று எங்கள் முன்னால் இருந்து கொண்­டி­ருக்­கின்­றது. கஷ்­ட­மான இந்த சவா­லுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்­களின் இலக்கை அடைந்தே தீருவோம் என அவர் கூறி­யுள்ளார்.  தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மற்றும் கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யா­கிய தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா ஆகி­யோரும் இந்த அர­சாங்கம் தங்­க­ளையும் தமிழ் மக்­க­ளையும் ஏமாற்­றி­விட்­டது என்றே தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். அர­சாங்­கத்தின் மீது அவர்கள் கொண்­டி­ருந்த நம்­பிக்கை இப்­போது ஏமாற்­ற­மாக மாறி­யி­ருக்­கின்­றது.  தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, தமிழ் மக்­களின் அர­சியல் தலைமை என்ற பொறுப்பில் சரி­யான வழி­மு­றையைத் தெரிந்­தெ­டுத்துச் செயற்­படத் தவ­றி­யி­ருக்­கின்­றது என்ற ஒப்­புதல் கூற்­றா­கவும் சுமந்­தி­ர­னு­டைய கூற்றைக் கருத முடியும். அதே­போன்று, இரா.சம்­பந்தன் மற்றும் மாவை சேனா­தி­ராஜா ஆகி­யோரின் அரசு மீதான ஏமாற்ற உணர்­வையும், தலை­வர்கள் என்ற ரீதியில் அவர்கள் தீர்க்­க­த­ரி­ச­ன­மான முடி­வு­களை மேற்­கொள்ளத் தவ­றி­விட்­டார்கள் என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன என்றே கொள்ள வேண்டி இருக்­கின்­றது. ஏனெனில் அடுத்த கட்­ட­மாக அவர்கள் என்ன செய்யப் போகின்­றார்கள், இந்த அர­சாங்­கத்­தையும் பேரின அர­சியல் தலை­வர்­க­ளையும் எவ்­வாறு கையாளப் போகின்­றார்கள் என்­பது தெரி­யாத ஒரு நிலை­மை­யி­லேயே தமிழர் தரப்பு அர­சியல் காணப்­ப­டு­கின்­றது.   இந்த கடி­ன­மான அர­சியல் சூழலில் இருந்து தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களை எவ்­வாறு வென்­றெ­டுக்க முடியும்? எவ்­வாறு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு செயற்­படப் போகின்­றது? – என்ற  கேள்­விகள் பூதா­க­ர­மாக எழுந்து நிற்­கின்­றன. பொறுப்­புக்கள் தமிழ் மக்­களின் அர­சியல் தலைமை என்ற பாரிய பொறுப்பை ஏற்­றுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, வெறு­மனே தேர்­தல்­களை இலக்கு வைத்த கொள்­கை­களைக் கொண்­ட­தா­கவே இது­வ­ரையில் செயற்­பட்டு வந்­துள்­ளது. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான மூலோ­பாயத் திட்­டங்கள் எதுவும் கூட்­ட­மைப்பின் தலை­மை­யிடம் இல்லை. அதே­போன்று கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யா­கிய தமி­ழ­ரசுக் கட்­சி­யி­டமும் இல்லை.  தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு என்­பது பல கட்­சிகள் ஒன்­றி­ணைந்­ததோர் அர­சி யல் கூட்டு என்­பதில் எந்­த­வி­த­மான சந்­தே­கமும் இல்லை. வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட இறை­மையின் அடிப்­ப­டையில் அதி­காரப் பகிர்வு, சுய­நிர்­ணய உரி­மை­யுடன் கூடிய சமஷ்டி ஆட்சி முறைமை என்ற பொதுக் கொள்­கை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே பங்­காளிக் கட்­சிகள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் இணைந்­துள்­ளன.  ஆனால் கல் தோன்றா, மண் தோன்றா காலத்­துக்கு முன் தோன்­றிய மூத்த குடி­களே தமி­ழர்கள் என்ற மிகவும் பழை­மை­யான பெருமை பேசு­வதைப் போன்று தாயகம், பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட இறைமை, சுய­நிர்­ணய உரிமை, சமஷ்டி  என்ற பழைய கொள்­கைகள் பற்றிப் பேசு­வ­திலும் அதன் அடிப்­ப­டை­யி­லான தீர்வே வேண்டும் என்று பிர­சாரம் செய்­வ­தி­லுமே, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் காலம் கரைந்து கொண்­டி­ருக்­கின்­றது.  தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் இந்தத் தேர்தல் காலப் பிர­சாரக் கொள்­கையை அல்­லது இலக்கை அடை­வ­தற்­கான ஓர் அர­சியல் வழித்­தடம் பற்­றிய திட்­டங்கள் எதுவும் கூட்­ட­மைப்பின் தலை­மை­யிடம் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அத்­த­கைய வழித்­தடத் திட்­டத்­துக்­கான வேலைத் திட்டம் பற்­றிய சிந்­தனை ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­ய­வில்லை.  தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கு­ரிய தீர்க்­க­த­ரி­ச­ன­மிக்க பார்வை அவர்­க­ளிடம் இருப்­ப­தா­கவும் தென்­ப­ட­வில்லை. அத்­த­கைய பார்வை ஒன்று குறித்த கலந்­து­ரை­யா­டல்­களோ விவா­தங்­களோ யுத்தம் முடி­வுக்கு வந்த பின்­ன­ரான ஒரு தசாப்த காலப் பகு­தியில் இடம்­பெ­ற­வு­மில்லை.  ஆறு தசாப்த கால வர­லாற்றைக் கொண்­ட­தோர் அர­சியல் போராட்­டத்தைத் தொட ர்ந்து முன்­னெ­டுப்­பது என்­பது சாதா­ரண அர­சியல் செயற்­பா­டல்ல. அது மிகவும் பொறுப்பு வாய்ந்­தது. மிகுந்த தொலை நோக்­குடன், அர­சியல் தீர்க்­க­த­ரி­ச­னத்­துடன் திட்­ட­மி­டப்­பட வேண்­டி­யது. அது, வெறு­மனே காலத்துக்குக் காலம் தேர்­தல்­களில் வெற்றி பெற்று பாராளு­மன்றக் கதி­ரை­களை அலங்­க­ரிக்­கின்ற சாதா­ரண அர­சியல் செயற்­பா­டல்ல. தேர்தல் வெற்­றி­களின் மூலம், பாராளு­மன்­றத்தில் தமது அர­சியல் சக்­தியை காட்­சிப்­ப­டுத்­து­கின்ற சாதா­ரண அர­சியல் அவர்­க­ளுக்கு அவ­சி­ய­மில்லை.  தமிழ் அர­சியல் என்­பது சாதா­ர­ண­மா­ன­தல்ல. தீர்­மானம் மிக்க இர­க­சி­ய­மான தந்­தி­ரோ­பா­யங்­களைக் கொண்ட பேரி­ன­வாத பௌத்த மேலா­திக்கம் கொண்­டதோர் இன­வாத அர­சியல் செயற்­பா­டு­க­ளுக்கு ஈடு­கொ­டுத்துச் செயற்­பட வேண்­டிய பாரிய பொறுப்பை அது கொண்­டி­ருக்­கின்­றது.  ஜன­நாயகப் போர்­வையில் பெரும்­பான்மை என்ற பாரிய பலத்தைக் கொண்­டுள்ள இன­வாத, மத­வாத போக்­கையும் சிறு­பான்மை இன மக்­களை இன ரீதி­யா­கவும், மத ரீதி­யா­கவும் அடக்கி ஒடுக்கி மேலாண்மை கொண்­டதோர் ஆட்­சியைக் கொண்டு செலுத்­து­கின்ற பலம் வாய்ந்த ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக அர­சியல் செய்ய வேண்­டிய பொறுப்பை, தமிழ் அர­சியல் கொண்­டி­ருக்­கின்­றது.  இத்­த­கைய பொறுப்­பு­மிக்க தமிழர் தரப்பு அர­சி­யலைக் கொண்டு நடத்­து­வது என்­பது தனிப்­பட்ட ஒரு சிலரின் தீர்­மா­னங்­க­ளிலோ அல்­லது கட்சி அர­சியல் நலன்­களை முதன்ைமப்­ப­டுத்­திய அர­சியல் செயற்­பா­டு­க­ளிலோ தங்­கி­யி­ருக்­க­வில்லை. அவ்­வாறு தங்­கி­யி­ருப்­ப­தென்­பது தமிழ்த் தரப்பு அர­சி­யலின் பொறுப்­பு­ண­ராத செயற்­பா­டா­கவே அமையும். இத்­த­கைய ஓர் அர­சியல் பின்­ன­ணியில் தமிழ்த் தரப்பு அர­சியல் எந்தத் திசையில் சென்று கொண்­டி­ருக்­கின்­றது, அது எத்­த­கைய அர­சியல் செல்­நெ­றியில் வழி­ந­டத்­தப்­ப­டு­கின்­றது என்­பதைத் தெளி­வாகப் புரிந்து கொள்ள முடியும்.  வெற்றுப் பிர­க­டனம்   பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­க­ளுடன் இணைந்து, சம அர­சியல் உரி­மை­க­ளுடன் வாழ்­வ­தற்­கான சாத்­வீகப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த மித­வாத தமிழ் அர­சியல் தலை­வர்கள், தங்­க­ளு­டைய முயற்­சிகள் தொடர்ந்து தோல்­வியைத் தழு­வி­ய­தை­ய­டுத்தே தனி­நாட்டுக் கொள்­கையைப் பிர­க­டனம் செய்­தி­ருந்­தனர். ஆனாலும் அந்தத் தனி­நாட்டை அடை­வ­தற்­கான அர­சியல் ரீதி­யான வழி­மு­றைகள் குறித்த எந்­த­வொரு திட்­டமும் அவர்­க­ளிடம் இருக்­க­வில்லை.  அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சாத்­வீகப் போராட்­டத்தை மக்கள் மயப்­ப­டுத்­து­வ­தற்­காக மேற்­கொண்ட அர­சியல் பிர­சா­ரத்­தையே தனி­நாட்டுக் கோரிக்கை தொடர்­பான திட்­டத்தின் செயற்­பா­டா­கவும் அவர்கள் கொண்­டி­ருந்­தார்கள்.  சம அர­சியல் உரி­மைக்­கான பேச்­சு­வார்த்­தைகள் வெற்­றி­க­ர­மாக இடம்­பெற்ற போதிலும், பேச்­சுக்­க­ளின்­போது எட்­டப்­பட்ட உடன்­பா­டுகள் நடை­மு­றையில் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மாறாக அந்த ஒப்­பந்­தங்­களும் உடன்­பா­டு­களும் கிடப்பில் போடப்­பட்­டன. அல்­லது கிழித்­தெ­றி­யப்­பட்­டன. அதனைத் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்ட சாத்­வீகப் போராட்­டங்கள் தொடர்ச்­சி­யாகத் தோல்­வியைத் தழு­வின.  அது மட்­டு­மல்ல. சாத்­வீகப் போராட்­டத்தில் ஈடு­பட்ட அர­சியல் தலை­வர்­களும், அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக அணி­தி­ரண்­டி­ருந்த தமிழ் மக்­களும் அடித்து நொறுக்­கப்­பட்­டார்கள். அரச படை­களின் ஆயுத முனையில் அவர்­களை அடக்கி ஒடுக்­கு­கின்ற செயற்­பா­டு­களை ஆட்­சி­யா­ளர்கள் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். இதனால் போராட்­டங்கள் நசுக்­கப்­பட்­டது ஒரு புற­மி­ருக்க, தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளி­னதும் தமிழ் மக்­க­ளி­னதும் பொது பாது­காப்பு அச்­சு­றுத்­த­லுக்கு ஆளா­கி­யி­ருந்­தது. இத்­த­கைய ஒரு நிலை­யி­லேயே தனி­நாட்­டுக்­கான கொள்கைப் பிர­க­டனம் செய்­யப்­பட்­டது.  ஆனால் அந்த தனி­நாட்டு கொள்­கையை நிறை­வேற்­று­வ­தற்­கான அர­சியல் செல்­நெறி குறித்த திட்­டங்­களோ முன் ஆயத்­தங்­களோ மித­வாத அர­சியல் தலை­வர்­க­ளிடம் இருக்­க­வில்லை. ஆனால், அவர்­களின் அர­சியல் விழிப்­பூட்­ட­லுக்­கான பிர­சா­ரங்கள், தமிழ் இளை­ஞர்கள் மத்­தியில் உணர்ச்­சி­யையும் வேகத்­தையும் தூண்­டி­விட்­டி­ருந்­தன. இந்தத் தூண்­டு­தலின் அடிப்­ப­டை­யி­லேயே ஆயுதப் போராட்டம் முளை­விட்­டி­ருந்­தது.  அர­சியல் வழி­ந­டத்­தல்கள் தமிழ் மக்­களின் அர­சியல் விடு­த­லைக்­கான ஆயுதப் போராட்டம் இந்­தியப் பிர­தமர் இந்­திரா காந்­தியின் அனு­ச­ர­ணை­யையும், ஆத­ர­வையும் பெற்­றி­ருந்த போதிலும், அது பிராந்­திய நலன்­சார்ந்­ததோர் அர­சியல் நட­வ­டிக்­கை­யா­கவே அமைந்­தி­ருந்­தது. தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்கும் நலன்­க­ளுக்கும் முன்­னு­ரிமை கொண்­ட­தா­கவோ அல்­லது அதனை முழு அளவில் முதன்­மைப்­ப­டுத்­தி­ய­தா­கவோ அமைந்­தி­ருக்­க­வில்லை.  புற­நி­லையில் இந்­தி­யாவின் ஆத­ரவு இருந்­தது போன்று அக­நி­லையில் அர­சியல் வழி­ந­டத்­தல்­களோ அல்­லது அர­சியல் சாணக்­கியம் மிகுந்த உத­வி­களோ ஆயுதப் போரா­ளி­களுக்கு இருக்­க­வில்லை. மித­வாத அர­சியல் தலை­வர்­க­ளுக்கும், போரா­ளி­க­ளுக்கும் இடையில் இறுக்­க­மான பிணைப்பு இருக்­க­வில்லை. மாறாக முரண்­பா­டான ஓர் அர­சியல் நிலை­மையே காணப்­பட்­டது. இந்த முரண்­பாட்டின் விளை­வா­கவே மித­வாத அர­சியல் தலை­வர்கள் அவ­ல­மாக உயி­ரி­ழக்க நேர்ந்­தது என்­று­கூடக் கூறலாம்.  ஆயுதப் போராட்­டத்தின் ஆரம்­ப­காலம் மட்­டு­மல்ல. ஆயுதப் போராட்டம் வீறு­கொண்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களின் காலத்­தி­லும்­கூட உரிய இரா­ஜ­தந்­திர ரீதி­யி­லான அர­சியல் தந்­தி­ரோ­ப­ாய அனு­ச­ர­ணையோ அல்­லது அர­சியல் வழி­மு­றை­க­ளுக்­கான வழி­ந­டத்­தல்­க­ளுடன் கூடிய உத­வி­களோ கிட்­டி­யி­ருக்­க­வில்லை. அந்தப் போராட்டம் முழுக்க முழுக்க இரா­ணுவ மய­மா­ன­தா­கவே காணப்­பட்­டது. அர­சுக்கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் இடை­யி­லான நீண்­ட­கால யுத்த நிறுத்தம் மற்றும் நோர்­வேயின் மத்­தி­யஸ்­தத்­து­ட­னான பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போதும் அர­சியல் தந்­தி­ரோ­பாயச் செயற்­பா­டுகள் அரு­கியே காணப்­பட்­டன என்­பதே அர­சியல் அவ­தா­னி­க­ளி­னதும், இரா­ணுவ ஆய்­வா­ளர்­க­ளி­னதும் கருத்­தாகும். யுத்தம் முடி­வ­டைந்த பின்னர், தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மையைப் பொறுப்­பேற்றுக் கொண்ட தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு உள்­ளக ஜன­நா­ய­கத்­துக்கு அதிக மதிப்­ப­ளித்­தி­ருக்­க­வில்லை. வலி­மை­யான ஆயுதப் போராட்டம் மௌனிக்­கப்­பட்­டதன் பின்­ன­ணியில் சாத்­வீக ரீதியில் அர­சியல் போராட்­டத்தை முன்­னெ­டுப்­பது என்­பது இல­கு­வான காரி­ய­மல்ல.  ஆட்­சி­யா­ளர்கள் ஆயுதப் போராட்டத்தை வெற்­றி­கொண்டு, பயங்­க­ர­வாதத்தை இல்­லாமல் செய்­து­விட்டோம் என்ற வெற்றி மம­தையில் உள்ள அர­சியல் உள­வியல் நிலையில் திட்­ட­மிட்ட வகையில் இரா­ஜ­தந்­தி­ரோ­பாய ரீதியில் முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். அத்­த­கைய முற்­த­யா­ரிப்­பு­ட­னான போராட்டம் என்­பது தனியே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினால் மட்­டு­மன்றி, தமிழர் தரப்பின் துறை­சார்ந்த பல­த­ரப்­பி­ன­ரு­டைய பங்­க­ளிப்­பு­டனும், வழி­ந­டத்­த­லு­டனும் ஈன்றெடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.  யுத்தம் முடி­வுக்கு வந்­த­பின்னர்,  அத்­த­கைய போராட்டம் முன்னெடுக் கப்படவில்லை. அத்தகைய போராட்டத் துக்கான முன் ஆயத்தங்கள்கூட செய் யப்படவில்லை என்றே கூற வேண் டும். மொத்தத்தில் கட்சி அரசியல் நலன் சார்ந்த நிலையில் கூட திட்டமிட்ட வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வல்ல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வில்லை.  பாதிக்கப்பட்ட மக்களை முதன்மைப்படுத்தி பிரசார அரசியல் நலன்சார்ந்த போராட்டங்களே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூறுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தின் பிடியில் உள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு போன்ற எரியும் பிரச்சினைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டன. அந்தப் போராட்டங்களும்கூட, பாதிக்கப்பட்ட மக்களை முன்னிலைப்படுத்தியதாக இருந்ததேயொழிய பெரிய அளவில் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களாக பரிணமிக்கவில்லை.  பாதிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சி பெற்று வீதிகளில் இறங்கிப் போராடிய போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மேட் டுக் குடி அரசியல் போக்கில் ஒதுங்கி நிற் கின்ற ஒரு போக்கைக் கடைப் பிடித்ததே தவிர போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்க ளின் நம்பிக்கையை வென்றெடுத்து, அவர் களுக்கு அவசியமான அரசியல் தலை மையை வழங்கவில்லை.  இத்தகைய ஒரு பின்னணியில்தான், தமிழ் அரசியல் ஒரு இக்கட்டான சூழ லில், கடினமான சவாலுக்கு முகம் கொடுத்தி ருக்கின்றது. இந்தியாவின் தலையீடு ஒரு வாய்ப்புக்கான வழி திறந்திருக்கின்ற ஒரு சமிக்ஞையைக் காட்டியுள்ள இந்தச் சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பரந்த அரசியல் மனப்பான்மையுடன் ஏனைய அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள் மற்றும் துறைசார்ந்தவர்களையும் இணைத்துக் கொண்டு வகுத்தொதுக்கப்பட்ட ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் அரசியல் நட வடிக் கைகளை முன்னெடுக்க வேண்டும்.  அத்தகையதோர் அரசியல் முயற்சியே தமிழ் அரசியலில் இப்போது அவசியம். இது குறித்து தமிழ் அரசியல் தலைவர் களும், அரசியல் தலைமைகளும் சிந்திப் பார்களா? சிந்திக்க முன் வருவார்களா?   https://www.virakesari.lk/article/58553