Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை

விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

 

பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை

சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை .....

.. பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை

சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை

 

நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை

தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வானம் என்னும் வீதியிலே 

குளிர் வாடை என்னும் தேரினிலே 

ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள் 

என் உறவுக்கு யார் தலைவன் என்று கேட்டு சொல்லுங்கள்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்! -
அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்!
இரவு வேளை அரசனாகப் போனவன்! -
நெஞ்சில் இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
! இரக்கமுள்ள திருடனாக ஆனவன்! உறவு சொல்ல
 
... பொன் பொருளைக் கொள்ளை கொள்ள ஓடுவான்! -
யாரும் அன்னை என்று சொல்லி விட்டால் வாடுவான்!
தன் பொருளை அவர்க்குத் தந்து தேற்றுவான்!
நெடும் சாலை வரை துணைக்கு வந்து வாழ்த்துவான்!
சாலை வரை துணைக்கு வந்து வாழ்த்துவான்! உறவு சொல்ல..
 
. பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலியவன்!
- ஆனால் பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்!
கலையழகை ரசிப்பதிலே புதியவன்! -
உடற் கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்!
கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்! உறவு சொல்ல..
.
இன்று நாளை அவனும் கூட மாறலாம்! -
அவன் இரவில் தூங்கி பகலில் கூட வாழலாம்!
கன்று கண்ட தாயைப் போல ஆகலாம்!
- அன்பு காதல் பாசம் அவனும் கூட காணலாம்!
 
 
Link to comment
Share on other sites

பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்

அவள் வந்துவிட்டாள்

ஹே ஐ என்றால் அது அழகு என்றால்

அந்த ஐகளின் ஐ அவள்தானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவளா சொன்னாள் இருக்காது 

அப்படி எதுவும் நடக்காது நடக்கவும் கூடாது 

நம்ப முடியவில்லை. இல்லை இல்லை ....!

உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா 

உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது 
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது 
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது 
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

செஞ்சோற்று கடன் தீர்த்த சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது 
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்தன் உறவை
நாடி வந்த பறவை
நானும் உந்தன் உறவை
நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை
வேடன் செய்த லீலை
தேடி வந்த வேளை
வேடன் செய்த லீலை
சிறகுகள் உதிர்ந்ததடி..
குருதியில் நனைந்ததடி
உயிரே…. உயிரே….

இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்
சிறையில் சிக்கிக்கொண்டேன் ஏனம்மா?
வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்
வழியில் மாட்டிகொண்டேன் நானம்மா
காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே
இனிமை காணுவது விதியம்மா
அன்பு உள்ளங்களை ரெத்த வெள்ளத்திலே
துவைத்து சிதைப்பது சதியம்மா
உடலகளை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா
உள்ளத்தை பிரித்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா

………. நானும் உந்தன் உறவை…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆட வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா

கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது

பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நானன்றோ
எனது மயக்கம் தெளிந்ததோ

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா

காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு

சந்திரன் இங்கு சாட்சியுண்டு
சங்கமமாகும் காட்சியுண்டு
வா மஞ்சமே பார் நெஞ்சமே
புதிய உலகம் திறந்தது
பழைய கனவு மறைந்தது

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கத்தின் திறப்பு விழா

இங்கு சொக்கத்தின் திறப்பு விழா

புது சோலைக்கு வசந்த விழா

பக்கத்தில் பருவ நிலா

இளமை தரும் இனிய பலா

பார்க்கட்டும் இன்ப உலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னென்ன பூவென்ன கண்ணே

உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே  

ஒரு கல்யாண பெண்ணாக உன்னை

புவி காணாமல் போகாது பெண்ணே

பொன்னென்ன பூவென்ன கண்ணே உன்

கண்ணாடி உள்ளத்தின் முன்னே

ஒரு கல்யாண பெண்ணாக உன்னை

புவி காணாமல் போகாது பெண்ணே,

 

மார்கழியில் மாலையிலே மலர்ந்ததொரு மல்லிகைபூ,

மார்கழியில் மாலையிலே மலர்ந்ததொரு மல்லிகைபூ,

யார் வருவார் யார் பறிப்பார் யார் அறிவார் இப்போது,

பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே

ஒரு கல்யாண பெண்ணாக உன்னை புவி காணாமல் போகாது பெண்ணே,

Link to comment
Share on other sites

ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் அழகிய கலைமான்
ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் அழகிய கலைமான்
ரகசிய இதயம் பலவகை துயரம்
அவனருள் கிடைத்தால் துயரங்கள் விலகும்
ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்


உண்மையை சொன்னால் சன்னிதி திறக்கும்
ஒவ்வொரு மானுக்கும் நிம்மதி கிடைக்கும்
யாரரிவாரோ ஊமையின் கனவு
யாரரிவாரோ ஊமையின் கனவு
மானுக்கும் உண்டு ஒரு வகை மனது
ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் 

நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய் 
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் 
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் யார் அவள் யாரோ 

ஊர் பேர்தான் தெரியாதோ.

அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள் 

அச்சம் நாணம் மடம் கொண்டாள் 

மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள் 

மனதையும் சேர்த்து ஏன் கொண்டாள்....!

Link to comment
Share on other sites

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்.
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு 
சோலைக்கிளியே சாய்ந்தாடு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மயக்கம் ......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயக்கம் என்ன...... இந்த மௌனம் என்ன
மணி மாளிகைதான் கண்ணே

மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே
கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா

தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


கண்ணே இது கல்யாண கதை கேளடி

கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி கேளடி
அன்பே இன்று பொன்னான திருநாளடி நாளடி
தண்ணீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா
முத்துப் பல்லக்கே இந்த தத்தை ஆடி வர

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே நீ அங்கே .. நான் இங்கே வாழ்ந்தால் 
இன்பம் காண்பது எங்கே ...
அன்பே நீ அங்கே .. நான் இங்கே வாழ்ந்தால் 
இன்பம் காண்பது எங்கே ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மௌனம் .....!

Link to comment
Share on other sites

மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
 
 
அல்லிக்கொடியே உன்தன் முல்லை இதழும் தேன்
ஆறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும்
அல்லிக்கொடியே உன்தன் முல்லை இதழும் தேன்
ஆறு போலப் பொங்கி வரவேண்டும் 
அங்கம் தழுவும் வண்ண தங்க நகைபோல் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் ம்ம்..
 

 

 
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேன் உண்ணும் வண்டு
மாமலரைக் கண்டு,
திரிந்தலைந்து பாடுவதேன்
ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓ ஓ
பூங்கொடியே நீ சொல்லுவாய்

ஆண்: வீணை இன்ப நாதம்
எழுந்திடும் விநோதம்
விரலாடும் விதம் போலவே ..
காற்றினிலே .. தென்றல் காற்றினிலே
சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில்தான் என்னவோ ..

மீன் உலாவும் வானில்
வெண்மதியைக் கண்டு
ஏன் அலைகள் ஆடுவதும்
ஆனந்தம் கொண்டு
மென்காற்றே நீ சொல்லுவாய் - ஓ ஓ
மென்காற்றே நீ சொல்லுவாய்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.