Jump to content

கூகுள் செய்து முடித்த மெய் சிலிர்க்கும் சாதனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சி.ஐ.ஏ. காரியாலயத்தில் இரகசியமான ஆய்வுகூடத்தில் முடுக்கிவிடப்பட்டன பணிகள்..
உலகத்தை தனது ஒற்றை விரலில் வைத்து சுற்றுவதற்கான இரகசிய பணிகளில் கூகுள் முன்னேறுகிறது... 
இந்த உண்மையை அறிய வேண்டியது இந்தக் கற்பனைகளுக்கு சொந்தமான தமிழினத்தின் கடமையாகும். 
goo3.jpgதமிழனும் கூகுளுமா..? மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா..? என்று சிந்திக்காதீர்கள்.. முதலில் பின்வரும் பக்கச் செய்திகளை அறிந்து கொண்டால் இந்தக் கட்டுரை நீங்கள் படித்த சுவாரஸ்யமான படைப்பாக மாறிவிடும்.
” உலகத்தை ஆளும் அரசு ஒன்றுதான்..” என்ற கொள்கைக்கான உயிர் விதைகளை கவிதை வரிகளில் தூவியவன் தமிழகத்தின் பூங்குன்றம் என்ற ஊரில் பிறந்த கணியன்..
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அவனுடைய வாசகத்திற்கு “ஒன்றே உலகம்” என்ற புது விளக்கம் கொடுத்து உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தியவர் தவத்திரு. தனிநாயகம் அடிகளார்.
உலக மக்கள் எல்லோருமே ஒருவருக்கு மற்றவர் உறவினர் என்று கணியன் சொன்ன கருத்தின் உட்பொருள் யாது..? 
” ஒன்றே உலகம் என்ற கொள்கையை அமல்படுத்த உலகில் யார் முயன்றாலும் அதை நாம் செய்யவில்லை என்று பேதம் காணக்கூடாது அச்செயலானது நமது உறவுகளின் செயலே..” என்று பொதுமைப்படுத்திப் பார்ப்பது நமது கடமை என்கிறார் அவர்.
கணியன் வழியில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்றான் வள்ளுவன், உலகெல்லாம் உணர்ந்தோதற்கு அரியவன் என்று முதற் பாடலிலேயே உலகத்தைப் பாடினார் சேக்கிழார்.. அவர்கள் கருத்தை இணையம் சிரமேற்கொண்டு, இணைய முகவரிகள் டபிள்யூ என்ற எழுத்தில் உலகத்தை முதலாவதாகக் கொண்டு ஆரம்பித்தன.. இது பழைய கதை.
இனி வரப்போவது புதிய கதை..
ஒன்றே உலகம் என்ற கருத்தை நிறைவேற்றும் உலக அரசாக மாறிக்கொண்டிருக்கிறது இணையம், இந்த இணைய உலகில் மாபெரும் சக்தியாக இருப்பதுதான் கூகுள் நிறுவனம்.
சேர்ஜி பிறின்ற், லரி பேஜ் என்ற இரண்டு இளைஞர்களும் சுமார் 20 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த நவீன கற்பனையே இன்று கூகுளாக மலர்ந்து நிற்கிறது.
1995ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் 2000 ம் ஆண்டில் ஒரு பில்லியன் மக்களால் பாவிக்கப்படும் தேடல் இயந்திரமாக உருவெடுத்தபோது உலகம் அதன் காலடியில் சுழன்றது.

goo2-150x150.jpg2006ல் உலகப் பிரசித்தி பெற்ற காணொளி ஊடகமான யூருப்பை விலைக்கு வாங்கியது, 2012ம் ஆண்டில் 50.000 பேர் பணியாற்றும் நிறுவனமாக மாறியது, 2014ல் கூகுள் கிளாஸ் என்ற புதிய கண்ணாடியை அறிமுகம் செய்தது, 2015ல் உலகம் முழுவதிற்குமான காற்றலை மின்சாரம் வழங்கும் கேபிளை அறிமுகம் செய்யவுள்ளது, சாரதி இல்லாமல் ஓடும் கார், பறக்கும் பலூனில் சற்லைற் 2019ல் சர்க்கரை வியாதியை அளவிடும் கண்களில் மாட்டும் கூகுள் கொன்ராக்ற் லென்ஸ், 3 டி கைத்தொலைபேசி என்று அசுர வேகத்தில் முன்னேறிச் செல்கிறது.
இணையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம் என்ற தாரக மந்திரத்திற்கு அமைவாக ஒவ்வொரு நாளும் ஒரு புதிய விடயத்தை அறிமுகம் செய்யும் புதுமைத்தாபனமாக ஒளி வீசுகிறது கூகுள்.
இதுதவிர பல தொழில்களிலும் பெரு முதலீடு செய்து வருகிறது.. உதாரணமாக 2011ம் ஆண்டு 168 மில்லியன் டாலரில் சூரிய ஒளி மூலம் சக்தியை உருவாக்கும் ஒளித்தோட்டத்தை கலிபோர்ணியாவில் உருவாக்கியது, அதே நேரம் 100 மில்லியன் டாலரில் காற்றாடி மின்சாரம் உருவாக்கும் பண்ணையை உருவாக்கியது. 2015ல் அதிசிறந்த புதுவகை மின் காற்றாடியை அறிமுகம் செய்யவுள்ளது.
உலகத்தின் அதிசிறந்த றோபோக்களை உருவாக்கும் தொழில் நுட்பத்தையும் கூகுள் வாங்கிவிட்டது, எக்ஸ்புளோருக்கு போட்டியாக முன்னேறிவிட்டது.. இப்படி அதன் வளர்ச்சியை அடுக்கிக் கொண்டே போகலாம்..

இருப்பினும் இந்தப் பீடிகைகளை எல்லாம் தாண்டி இப்போது கூகுள் வைத்துள்ள புதிய காலடிதான் நம்மை வெகுவாகச் சிந்திக்க வைக்கின்றன.
goo6.jpgஅமெரிக்காவின் கலிபோர்ணியாவில் உள்ள சி.ஐ.ஏ உளவுப்பிரிவு கட்டிடத்தின் நடுப்பகுதியில் உலகத்தில் யாருமே நெருங்க முடியாத பாதுகாப்புப் பகுதியில் பில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டியிறைத்து மிகமிக இரகசியமான ஆய்வு கூடம் ஒன்றை கூகுள் அமைத்துள்ளது.
பெயர் குறிப்பிடாத விஞ்ஞானி ஒருவர் தரும் தகவல்களின்படி.. இங்கு உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் பலரை பணிக்கு அமர்த்தி சுமார் 100 க்கும் மேற்பட்ட புதுவகையான ஆய்வுகளை கூகுள் செய்து கொண்டிருக்கிறது.
புதுமைப் பொருளாதாரம்.. அறிவால் உலகத்தை ஆட்சி செய்யும் புதுமை வலு.. என்று கூகுள் எடுத்துள்ள முயற்சிகள் வெற்றிபெற்றால் நிச்சயமாக எதிர்கால உலகத்தை வெற்றி கொள்ளப்போகும் புதிய அரசு இணையம்தான்.. அதன் சக்கரவர்த்தியாக முடிசூடப்போவது கூகுள்தான் என்று இலகுவாகக் கூறிவிட முடியும்.
சூரிய ஒளியிலும், காற்றிலும் உலகத்தின் சக்திவள தேவையை பூர்த்தி செய்ய கூகுள் முயல்கிறது.. வெற்றி கிட்டினால் எண்ணெய்வள நாடுகளின் முதன்மை தானாகவே மறைந்து போய்விடும்.
இதுதவிர மிகவும் அபார சக்தி கொண்ட ரோபோக்களை உருவாக்கும் பணிகள் இன்னோரிடத்தில் நடக்கின்றன.. உதாரணம் 150 கிலோ எடையைத் தூக்கி பணிபுரியும் புதுவகை ரோபோக்கள் தொழிற்கூடங்களில் குவிந்து மனிதனால் முடியாத பணிகளை செய்யப்போகின்றன… போர்க்களத்திற்கும் ரோபோக்கள் வரும்..
goo4.jpgஎல்லாவற்றையும் விட முக்கியம் மரபணு மாற்றம் மூலமாக மனிதர்கள் அனைவரையும் நூறாண்டு காலம் வாழவைக்கும் புதுவகை ஜீன் தொழில் நுட்பத்தை கூகுள் உருவாக்கிக் கொண்டிருக்கிறது… புற்றுநோய் வந்தவர்கள் கூட உயிர் தப்பி நூறாண்டு காலம் வாழ வழிசெய்யப்போகிறது கூகுள்.. இதனால் கிடைக்கும் வருமானம் சொல்லி முடியாத தொகை...

சென்ற ஆண்டே கூகுள் எக்ஸ் வேலைத்திட்டத்திற்காக ஒரு பாரிய (கொன்ரேனர்) கொள்கலத்தில் மிகவும் இரகசியமான அதிக விலை கூடிய பொருட்களை கூகுள் இறக்குமதி செய்துள்ளது, இதில் இருப்பது யாருக்குமே தெரியாத மர்மமாக உள்ளது.
இந்த ஆண்டு 2.1 பில்லியன் டாலர் செலவில் சிந்தனையின் ஆழம் என்ற கண்டு பிடிப்பை விலைக்கு வாங்கியுள்ளது, இதை ஆதாரமாக வைத்து மனிதனின் மூளையை 2029ம் ஆண்டில் உருவாக்கிவிட முயற்சி எடுத்துள்ளது. இந்த மனித மூளைத் தேடல் இயந்திரம் அசப்பில் மனித மூளையாகவே இருக்கும்.
goo5.jpgமேலும் என்னென்ன காரியங்களை எல்லாம் கூகுள் ஆய்வு செய்கிறது என்று தெரியவில்லை விஞ்ஞானி அஸ்ரோ ரெலர் தலைமையில் பல நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் இணைந்து கூகுள் எக்ஸ் என்ற இப்பணியை முன்னெடுத்துள்ளார்கள்.
அமெரிக்க அரசு இதற்குத் துணையாக இருக்கிறது.
உலகத்தை வெற்றிகொள்ள சீனர்களும், ரஸ்யர்களும், ஐரோப்பிய ஒன்றியமும் ஓடிக்கொண்டிருக்கும் ஓட்டத்தை கனவேகத்தில் முந்திவிட கூகுள் இரகசியமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
இரண்டாம் உலகயுத்த காலத்தில் அணு குண்டை உருவாக்க நடந்த போட்டியில் ஜேர்மனியை அமெரிக்கா வெற்றி கொண்டு முதலாவது அணு குண்டை உருவாக்கியது போன்ற அறிவியல் போட்டி இதுவாகும்.
அரசியல், பொருளாதாரம், சமுதாயம், போர், மதம் என்று அலைக்கழியும் இன்றைய உலகம் ஒரு கட்டத்தில் மறைந்துவிட முழு உலக உருண்டையையும் ஒன்றாக்கி இயக்கும் ஒரேயொரு இணைய யுகம் மலரும் நாள் மிகவும் அண்மையில் தெரிகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்...
ஒன்றே உலகம்…
அன்று ஆதித் தமிழன் கண்ட கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறது கூகுள்..
கூகுள் எக்ஸ் உலகத்தை வெல்லுமா..? கூகுளை வெல்லக்கூடிய பலமுள்ள இன்னொன்று அப்பிள் நிறுவனம் அதுவும், கூகுள் அளவுக்கு தன்னை விஸ்த்தரிக்கவில்லை.
21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பாய்ச்சலில் கூகுள் நிற்கிறது இதை அவதானிப்பது தமிழர் அறிவியல் கடமையாகும்.

http://anthimaalai.blogspot.co.uk/2014/08/blog-post_86.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது.
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்) அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.