Jump to content

வல்வை சகாறாவின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு


Recommended Posts

நூல் வெளியீட்டை மேற்கொள்ளவிருக்கும் பெரியோர்களை அறிந்தபோது நூலின் தரமும் அங்கு வெளிவந்துள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. வல்வை சகாறா அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வும் சிறப்பாகவே அமையும். வாழ்த்துக்கள்!!
 
 
Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply

சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.

இரு நூல்களின் பெயர்களும் மிக அழகாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீட்டு விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

நேரடி ஒளிபரப்பு இல்லையா ?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீடு ஒளிவீச வாழ்த்துக்கள் சகோதரி...!

 

நேரமிருக்கும் போது  அனுபவங்களைப் பகிருங்கள்...!

Link to comment
Share on other sites

நூல் வெளியீடு தொடர்பான படங்கள் சிலவற்றை முகநூலில் ஒருவர் போட்டிருக்கிறார். நான் பார்த்து விட்டேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை சகாரா அக்கா.....

 

உங்கள் நூல் வெளியீடு மிகவும் சிறப்பாக நிகழ்ந்தேற எனது வாழ்த்துக்கள்.....

 

பெரியவர்கள், மற்றும் சக யாழ் உறவு நண்பர்கள் எல்லாம் உரையாற்றும் நிகழ்ச்சியில், உங்கள் நூல்வெளியீட்டு விழாவில் உங்களை சந்திக்கமுடியவில்லையே என்ற கவலை ஒன்று இருந்தாலும், நீங்கள் நிகழ்த்தப்போகும் இன்னும் பல விழாக்களில் ஒன்றிலாவது உங்கள் எல்லோரையும் கனடாவில் சந்திக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு....

 

மீண்டும் வாழ்த்துக்கள்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய நூல் வெளியீட்டு நிகழ்விற்கு யாழ்க்கருத்துக்கள நண்பர் திருவாளர் இசையின் சிஷ்யகோடி தமிழகப்பிரதிநிதி கோயம்புத்தூரில் இருந்து வந்து கலந்து சிறப்பித்தார் தற்சமயம் என்னால் நிகழ்வின் படங்களை இணைக்கும் விடயத்தில் சில தொழில் நுட்பக்கோளாறுகள் இருப்பதனால் கனடா சென்ற பின்னர் இணைத்துவிடுகிறேன் ;) ஆளை ஆரென்று நான் சொல்லத்தேவை இல்லை வால்பையன்களில் ஒருவரப்பா...... :lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தநாள் உங்களது வாழ்வில் பெரும் சாதனை நாள் ..

வாழ்க  வளமுடன்...

Link to comment
Share on other sites

இந்த நூற்றாண்டு தமிழ்த் தலைவர்களை பற்றி எழுதும்போது பழ. நெடுமாறன் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.  அத்தைகைய சிறப்புமிக்க  தமிழ்த் தேசியவாதி கையில் பாராட்டு பெற்றது பாக்கியமே.

 

வாழ்த்துகள் வல்வை !
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீட்டுக்கு வந்த யாழ்க்கருத்துக்கள பெரிய மனிதன் இன்னும் பதிவிடவே காணோமே...ஏம்பா? :rolleyes:

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் பல...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகாறா.. நம்ப முடியாத ஒரு காலத்தின் கவிதை..
 

வல்வை மகளிர் மகாவித்தியாலயம் எத்தனையோ அறிவார்ந்த பெண் ஆற்றலாளர்களை தந்துவிட்டது. ஆனால் அந்த மகாவித்தியாலயம் தந்தபெண் கவிப்படைப்பாளி என்ற பெருமை சகாறாவுக்கே இருக்கிறது.

 

நன்றி ஆசிரியரே.    http://www.valvettithurai.org/newsdetails.php?id=2687

Link to comment
Share on other sites

அன்பான உறவுகளுக்கு முதலில் மன்னிப்பு கோருகின்றேன். யாழ் கள உறவு சாகாறா அக்காவின் சரித்திர புகழ் வாய்ந்த விழாவில் பங்கெடுத்து விட்டு காணாமல் போனதற்காக... இது நாள் வரை யாழ் களத்தை தொலைபேசியினுடாகவே பாவித்து வந்தேன். தற்போது தமிழில் தட்டச்சு செய்யக்கூடிய வசதி தொலைபேசியில் இல்லாததால் களத்தில் பங்கெடுத்து கொள்ள இயலவில்லை.

(கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்)

காலம் : 2014 மாதம் மே

சாகாறா அக்கா நூல் வெளியீடு பற்றி தோராயமாக சொன்னார் ஒகஸ்ட் மாதம் இறுதியில் நிகழ வாய்ப்பிருக்காலாம் என்று. சரி தங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள் தமையன் வரவேற்க காத்திருக்கிறேன் என்டு. வருவதற்கு முன்பு அறிய கிடைத்தால் நானும் சந்திக்க திட்டங்களை உருவாக்கி கொள்ளலாம் அல்லவா. வரும் முன்னம் சொல்லுங்கோ என்டு சொல்லியிருந்தேன். பிறகு நானும் மறந்துவிட்டேன். இடையில் அவரிடம் கதைக்கவில்லை. அதுவரை அவரை பற்றி பெரிதாக ஒன்றும் அறிந்திருக்கவில்லை கனடாவை வசிப்பிடமாக கொண்டவர் அபாரமான கவிதை எழுதும் திறனுடையவர் ஒரு பெர்ர்ரிய்ய்ய குடும்பத்தின் தலைவி என்பதை தவிர.

ஒகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் பாலக்காட்டில் இடைவிடாது கொட்டும் மழையின் ஈரலிப்பும், நீலகிரி மலைத்தொடரில் சறுக்கி வந்து நிலைகொண்ட மேகங்களும் குளிர்ச்சியுடைய கோயமுத்துரை மேலும் குளுமைபடுத்திக் கொண்டிருக்கும் முன்னிரவில் முகப்புத்தகம் பார்த்து கொண்டிருப்பதற்காக அம்மாவிடம் வசமாக வசை வாங்கி கொண்டிருந்த நேரத்தில் சென்னை வெயிலாக வந்து உட்பெட்டியில் விழுந்தது சாகாறா அக்காவின் தகவல். "தம்பியவை நான் இப்ப சென்னையில் நிக்கிறேன் என்டு, நான் இப்ப கோயமுத்தூரில் அம்மாவிடம் ஏச்சு வாங்கி கொண்டிருக்கிறேன் என்டு சொல்லி வேகமாக தொலைபேசி எண்ணை அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்திராமல் துண்டித்துவிட்டு அம்மா நான் தூங்கிட்டேன் என சொல்லவும் தலையனை முகத்தில் விழவும் சரியாய் இருந்தது.

அடுத்த நாள் தொலைபேசி அழைப்புவரும் என எதிர்பார்த்து காத்திருந்தேன். வரவில்லை இரண்டொரு நாள் கழித்து திண்ணையில் வணக்கம் வைத்தார். கொஞ்சம் யோசித்து வணக்கம் வைத்து திரும்ப திண்ணையில் குருநாதருடனும் விசகு தாத்தா ராசவன்னியன் மாமாகாருவுடனும் ஐக்கியமாகி கவிதாயினியை கண்டு கொள்ளவில்லை. நேரமிருப்பின் பேசுங்கள் என்று மறைமுகமாக சொல்லிவிட்டு சென்றேன்.

அடுத்தநாள் முகப்புத்தகத்தில் விழா அழைப்பிதழை பார்க்க சற்று கிலியானது. அதில் அழைக்கப்பட்டுள்ளவர்களெல்லாம் அடிக்கடி தலைப்பு செய்தியில் கேட்ககூடிய பெயர்கள். ஆகா எவ்வளவு பெரிய ஆளிடம் இப்படி பரோட்டா சூரி மாதிரி லொடலொட என்டு பேசிட்டமென்டு குற்ற உணர்வு குறுகுறுக்க அக்கா நீங்க யாரெண்டு தெரியாம அறியா சிறுவன் தெரியாமல் பேசிட்டன் மன்னிச்சுகோங்கனு மடல் அனுப்பி பார்த்திருந்தேன். பாவ மன்னிப்பு வழங்கபடவில்லை என்பது படித்தும் பதிலனுப்பாததில் இருந்தே விளங்கியது.

விழாவை தலைமையேற்க சொல்லி அழைப்பிதழில் அச்சடிக்காமல் புறக்கணித்த கோவம் ஒருபுறம் இருந்தாலும் அவரது மகள்கள் இருவரும் வரவிருப்பதாக ஒற்றுவர்கள் இரகசிய தகவலை தந்ததால் சாகாறா அத்தாச்சிக்கு அக்கணமே வருகையை அறிய தந்துவிட்டேன். தமிழ் என்னை தலைநகர் நோக்கி இழுத்தது... ஆனாலும் சென்னை செல்வதென்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றால் பிரம்மாக்களிடம் அனுமதி பெற வேண்டும். அது பற்றி நிச்சயமில்லாததால் யாழில் யாரிடமும் கதைக்கவில்லை. அனுமதி இல்லையென்றால் அவசர கால சிகிச்சை பிரிவில் அறைகுறை மயக்கத்தில் இருக்கிறேன் என்று சொல்லி சாமாளிக்க முடிவு செய்தாயிற்று.

புத்தக வெளியீடு சென்னை கனடாவில் வசிப்பவர் இணைய நண்பர் என்பதையெல்லாம் அழகாக விவரித்தால் என்ன நிகழும் என்பது ஒரளவு யூகித்திருந்ததால் திருமணம் நண்பனின் அண்ணன் சென்னை என்று எளிமையாக முடித்து கொண்டேன்.

காலை 6,15 ரயில் புறப்படும் நேரம் 5,30 நிலையத்தை அடைந்தேன். பயணச்சீட்டை வாங்கும்போது மணி 6,20. வாங்கிய சீட்டை வெறித்தபடி இருந்தேன் அடுத்தநாள் ஒணம் என்பதால் கேரள நாட்டிளம் பெண்டிரால் சுழ்ந்திருந்தாலும் மனம் ஜென் நிலைக்கு போயிருந்தது. சென்னை வழியாக மங்களூர் வரைசெல்லும் திருவனந்தபுரம் சிறப்புரயில் 6,40 மணிக்கு நடைமேடை நாலில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தானே காத்திருந்தாய் விச்ச்சு ஒடு ஒடு என்று அசிரிரீ உள்ளே ஒலித்தது. அருகில் நின்றிருந்த சிறிய மலையாள குட்டியிடம் "என்ட ஹிருதயம் நிறைஞ்ஞ ஒண அஷம்ஷகள்" என வாழ்த்திவிட்டு இரயில் பயணங்களில் மூழ்கியிருந்தேன்...

(நாளை சென்னையில்)

# நூல் வெளியீட்டின் நடுவே எனது மானே தேனே பொன்மானே எல்லாம் பொறுத்து கொள்ளுங்கள்....

Link to comment
Share on other sites

அழகான மொழி நடை விஷ்வா. வார்த்தைகள் கட்டியிழுக்கின்றன. 

நிகழ்வை நேரில் காண்பதுபோல இருக்கிறது வர்ணனை. ஒரு படைப்புக்கு உரிய எழுத்து நடை.  சிறுகதை எழுத முயற்சி  செய்யடா. நிச்சயம் வெற்றி பெறுவாய். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10647149_10152470753151551_1481512064538

 

யாழ்கருத்துக்கள வாண்டூ..................... :wub::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழாவை தலைமையேற்க சொல்லி அழைப்பிதழில் அச்சடிக்காமல் புறக்கணித்த கோவம் ஒருபுறம் இருந்தாலும் :D

 

மகள்கள் இருவரும் வரவிருப்பதாக ஒற்றுவர்கள் இரகசிய தகவலை தந்ததால் :(

 

பிரம்மாக்களிடம் அனுமதி பெற :lol:

 

இதற்காக தானே காத்திருந்தாய் விச்ச்சு :D

 

தொடரட்டும் உங்கள் வர்ணனை ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சிட்டாய் விச்சு,இப்பவே கையை கட்டி நிக்கிறது நல்லாயில்லே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய் விஸ்வா..பாக்கிறதுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.பாவம் வீட்டை எத்தனை பொய் சொல்லிட்டு வந்து  நிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10647149_10152470753151551_1481512064538

 

யாழ்கருத்துக்கள வாண்டூ..................... :wub::rolleyes:

 

வணக்கம் ராசா......  :) ... :wub:

Link to comment
Share on other sites

சிஷ்யா... பலே. :D சந்திப்பு எப்படி? குருவின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லியிருப்பாங்களே.. :lol:

நிகழ்வும் சந்திப்பும் இனிதே நடந்ததையிட்டு மிக்க மனமகிழ்வு கொண்டோம்.. :D எல்லாம் அவன் செயல்.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் நடந்த, வல்வை சகாறாவின் நூல் வெளியீட்டுக்கு,
யாழ்கள உறுப்பினர் ஒருவராக.... ராஜன் விஷ்வா கலந்து கொண்டது,

வல்வை சகாறாவுக்கு, நிச்சயம் பெரு மகிழ்ச்சியை.... ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

எமக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி, ராஜன் விஷ்வா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10647149_10152470753151551_1481512064538

 

யாழ்கருத்துக்கள வாண்டூ..................... :wub::rolleyes:

 

வல்வையின்.... கையில், ஒரு பிரசண்ட் கொடுத்த, பார்சல் ஒண்டு இருக்கு.....

அதற்குள் என்ன  இருந்தது.... என்று அறிய, ஆவலாய் உள்ளது. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.