Jump to content

சில்லுக்களி.


suvy

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/10606491_831119306907126_7245413857358199100_n.jpg?oh=fa1b8fb23fb38271af95bdad8fb3e95b&oe=545DCE6A&__gda__=1416835420_d4df096cd7263ab06b9100288379c68a

 

தேவையான சாமான்கள்.

 

---  வறுத்த உளுத்தம் மா _______________ அரை   சுண்டு.

---  சிவப்பு  அரிசி  மா ___________________ 1   சுண்டு.

--- வறுத்த பயறு   ______________________  காற் சுண்டு.

---  தேங்காய்ப் பால் ____________________  அரை லிட்டர்.

---  சீனி  _______________________________  250  கிராம்.

---  உப்பு  ______________________________   தேவையான அளவு.

 

சுமாராக  6 , 8 . பேருக்கு.

 

செய்முறை:

 

ஒரு பாத்திரத்தில் உளுத்தம் மா , அரிசி மா,  50 கி . சீனிஅளவான உப்பு  சேர்த்து கலந்து இளஞ்சூடான நீரில் புட்டு மா பதத்துக்குக் குழைக்கவும்.

பின்பு அதை சுன்டங்காயளவு சிறு சிறு உறுண்டைகளாக உள்ளங்கையில் வைத்து உறுட்டி விரலால் சிப்பி போன்று அழுத்தி விடவும்.

அதன் பின் அவற்றை நீராவியில்  அவித்து எடுக்கவும்.

 

மீன்டும் ஒரு பாத்திரத்தில் பயறைப் போட்டு அளவான நீர் விட்டு கொதிக்க அவிக்கவும். அதில் அரை லிட்டர் பாலையும் ஊற்றி 200 கி . சீனியையும் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். கொதித்ததும் அவித்து வைத்த சில்லுகளைப் போட்டு அவித்து பதம் பார்த்து இறக்கி  சூடாகப் பரிமாறவும்.

 

மறந்திட்டன். பாத்திரத்தை அடுப்பில் வைத்ததும் அடுப்பை மூட்ட நீங்கள் மறக்க வேண்டாம்.  :lol:  :D

 

படத்தைப் பதிந்து விடுங்கோ.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவை வறுக்கத் தேவை இல்லையா அண்ணா ???? எதுக்கும் மனைவியிடம் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வறுத்த அரிசி மாதான் சுமே..!  (பக்கட்டில் வறுத்துத்தானெ வருகின்றது).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் சிறியர் முதல்ல செய்துபாக்கட்டும்

 

இது.... சுவியின் சொந்த செய்முறை என்பதால்,

நம்பி.... சமைக்கலாம் போலுள்ளது நந்தன். :D

10606491_831119306907126_724541385735819

 

இதுதான்... சில்லுக்களி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில்லைச் சிலுக்கு  :icon_mrgreen:  என வாசித்ததால் இந்தப்பதிவுக்குள் வந்துவிட்டேன்.
அட இது சமையல் திரியே இணைப்பிற்கு நன்றி சுவி அண்ணா  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில்லைச் சிலுக்கு  :icon_mrgreen:  என வாசித்ததால் இந்தப்பதிவுக்குள் வந்துவிட்டேன்.

அட இது சமையல் திரியே இணைப்பிற்கு நன்றி சுவி அண்ணா  :D

சிலுக்கு ஆஆஆஆ.............இதில் அப்படி என்ன கிக்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்ன சுவியர்! இது எங்கடை ஆடிக்கொழுக்கட்டை கூழ் மாதிரி கிடக்கு.... :unsure:
 
நன்றி சுவியர்!!!  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்ன சுவியர்! இது எங்கடை ஆடிக்கொழுக்கட்டை கூழ் மாதிரி கிடக்கு.... :unsure:
 
நன்றி சுவியர்!!!  :)

 

அனேகமாய் அப்படித்தான் கு . சா. 

 

ஜெர்மனியில் இருந்து  எனது தங்கை இங்கு வந்து நிக்கின்றாஆவதான் விசேசமாய் செய்தவ. இதுவும் பருத்தித்துறையின் விசேச உணவுகளில் ஒன்று...!

 

Link to comment
Share on other sites

இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம்.  இனிப்பு என்பதால் நான் அதிகம் சாப்பிடுவதில்லை.  ஊரில் தேங்காய்ப்பாலில் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய்ப் பால்தான் இதுக்கு சுப்பர், சகோதரி...!

 

அதுசரி, தேங்காய்ப் பால் என்றுதானே எழுதியுள்ளேன்...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாய் அப்படித்தான் கு . சா. 

 

ஜெர்மனியில் இருந்து  எனது தங்கை இங்கு வந்து நிக்கின்றாஆவதான் விசேசமாய் செய்தவ. இதுவும் பருத்தித்துறையின் விசேச உணவுகளில் ஒன்று...!

 

 

வடமராட்சியெண்டாலே சாப்பாடுகளுக்கு விசேசம் தானே.....கோழிப்புக்கை,எண்ணைப்புட்டு எல்லாம்...சொல்லி வேலையில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.