• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Athavan CH

மரணம் - ஒரு கட்டுக்கதை- சத்குரு (video)

Recommended Posts

மனதை புண்படுத்துபவரை எப்படி சமாளிப்பது? 

 

Share this post


Link to post
Share on other sites

பாமர மக்களுக்கும், விளங்கக் கூடிய அருமையான...

தமிழ் மொழி  குரல் வளமும், அவ்வப் போது... அவிட்டு விடும் நகைச்சுவையும் மிக்க நன்றாக உள்ளது.

 

இவர், நித்தியானந்தா சாமி மாதிரி... வீடியோ வெளி வந்து,
தனது பெயருக்கு, களங்கம் ஏற்படுத்த மாட்டார் என நம்புவோம்.
"மனிதனுக்கு, நம்பிக்கை தானே... வாழ்க்கை"

Share this post


Link to post
Share on other sites

இப்போது.... நல்ல சாமியையும்......
சுப்பிரமணிய சாமி போல்..... சந்தேக வைச்சுப் போட்டாங்கள். கெட்ட சாமியள்.

Share this post


Link to post
Share on other sites

சாமிகளைப் பார்த்துக் கொண்டு போயிடணும், சாமிகளைப் பார்க்கப் போனால் ஒரே பிரச்சனை ...!

Share this post


Link to post
Share on other sites

மனதை கஸ்ரப்படுத்துபவர்களை ஒரு முறை அவதானித்து விட்டால் அவாகளது தொடர்பில் இருந்து விலகி நிற்பது நன்று..நான் யாரையும் விலத்திக் கொள்ளனும் அப்படி என்று எல்லாம் எப்போதும் நினைப்பதில்ல..ஆனால் மற்றவர்களும் மனிதர்கள் தானே என்று நினைப்பார்களாக இருந்தால் எடுத்ததும் வாய் வைக்க மாட்டார்....தடுபதற்கு ஏற்ற வழி ஒதுங்குதல்.

Share this post


Link to post
Share on other sites

 ஆனந்தமாக வாழ்வது எப்படி. 1

 


 

 

ஆனந்தமாக வாழ்வது எப்படி. 2


ஆனந்தமாக வாழ்வது எப்படி. 3

 

 

ஆனந்தமாக வாழ்வது எப்படி. 4

 

 

ஆனந்தமாக வாழ்வது எப்படி. 4a

 

 

 

ஆனந்தமாக வாழ்வது எப்படி. 5

 

 

ஆனந்தமாக வாழ்வது எப்படி. 6

 

 

Share this post


Link to post
Share on other sites

அமைதிக்கு எது வழி

 

Share this post


Link to post
Share on other sites

வெற்றிக்கு தேவை - கஷ்டமா? இஷ்டமா?

 

Tamil_News_large_1063723.jpg

 

கஷ்டப்படாமல் வெற்றிக்கனியை சுவைக்க முடியாது என்று சிறு வயதிலிருந்தே அட்வைஸ் மழையில் நனைந்திருப்போம். அப்படியே கஷ்டப்பட்டாலும் அனைவருக்கும் வெற்றி கிட்டிவிடுகிறதா? கஷ்டப்படாமல் வெற்றியை எட்டிப் பிடித்தவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்! இங்கே சத்குருவின் சில சிந்தனைகள் உங்களை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சேர்க்கும்

 

சத்குரு:
 
உங்களுடைய ஆசை என்ன? எதைத் தொட்டாலும் வெற்றி கிடைக்க வேண்டும்என்பதுதானே?மேல்நாட்டு உளவியல் நிபுணர்கள் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள்? 'ஜெயிக்க வேண்டும். ஜெயிக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள். வெற்றியைக் குறிவைத்தே உங்களுடைய ஒவ்வொரு செயலும் இருக்கட்டும்' என்கிறார்கள்.
 
பெரும்பாலும் இந்த முயற்சி உங்கள் ரத்தக் கொதிப்பைத்தான் அதிகரிக்கும். ஏன்?
 
 
வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தால் படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்சல் என்று ஏராளமான பிசாசுகள் உங்கள் மீது வந்து ஏறிக்கொள்ளும்.
 
 
இலக்கின் மீது ஒரு கண்ணைப் பதித்துக் கொண்டால், அவன் பாதிக் குருடனாகி விடுகிறான் என்கிறது, ஜென் தத்துவம். மிச்சமிருக்கும் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் செயலாற்ற முடியும்?
 
 
அப்படி அரைகுறை கவனத்துடன் செயலாற்றாதீர்கள். இந்தக் கணம் செய்ய வேண்டியதை இரண்டு கண்களையும் பயன்படுத்தி முழுமையாகச் செய்யுங்கள். எட்டிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லாமல், வெற்றி இலக்கை சுலபமாகத் தொட்டுவிட முடியும்.
 
 
புரிந்துகொள்ளுங்கள்.
 
 
நீங்கள் கவனமாக உழைக்க வேண்டுமே தவிர, கடுமையாக உழைக்கத் தேவையில்லை. இதை விளக்க ஜென்னில் ஓர் அழகான சம்பவம் உண்டு.
 
 
சான்ஸூ என்றொரு ஜென் குரு இருந்தார். மிகச் சிறந்த வாள் வீரர். அவரிடம் ஒரு புதிய சீடன் சேர்ந்தான். "இந்த நாட்டிலேயே முதன்மையான வாள் வீரனாக என்னை ஆக்க முடியுமா?” என்றான்."அதற்கென்ன பத்து வருடங்களில் உன்னை அப்படித் தயார் செய்து விடுகிறேன்” என்றார் குரு. 'என்னது, பத்து வருடங்களா? ஐந்தே வருடங்களில் சாதிக்க வேண்டும் குருவே. மற்றவர்களை விட இரண்டு பங்கு அதிகமாக உழைக்கத் தயாராக இருக்கிறேன்'.
 
 
"அப்படியானால் இருபது வருடங்களாகும்” என்றார் சான்ஸூ.
 
 
சீடன் திகைத்தான். 'போதாது என்றால், இன்னும் நான்கு பங்கு கடுமையாக உழைக்கிறேன்' என்றான்.'அப்படிச் செய்தால், நாற்பது வருடங்களாகுமே' என்றார் குரு. ஆம், உங்களை வருத்திக் கொள்ள வருத்திக் கொள்ள - நீங்கள் நினைத்ததை அடைவதற்கு அதிகக் காலமாகும். இதைத்தான் சான்ஸூ அந்தச் சீடனுக்குப் புரியவைத்தார்.
 
 
கடுமையாக உழைப்பவர்கள் சில சமயம் வெற்றி பெறலாம். ஆனால், அதன்சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது.
 
 
உலகின் மிக அற்புதமான கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள் ஓய்வாக இருந்தபோதுதான் நிகழ்ந்திருக்கின்றன.
 
 
மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருந்தபோதுதான் ஆப்பிள் விழுவதைக் கவனித்தார் நியூட்டன். புவியீர்ப்பு பற்றிய விதியைக் கண்டுபிடித்தார். 'பாத் டப்'பில் ஓய்வாகக் குளித்துக் கொண்டிருந்தபோதுதான், மிதப்பது பற்றிய விதிகளைக் கண்டுணர்ந்தார் ஆர்க்கிமிடீஸ்.
 
 
டென்ஷனில்லாமல், ரசித்து முழு ஈடுபாட்டுடன் பணிகளைச் செய்யும்போதுதான், மூளை அதன் உச்சத் திறனுடன் செயலாற்றும்.
 
 
கவனித்துப் பாருங்கள். விளையாட்டில் கூட, வெற்றியை நினைத்து அதிகப் படபடப்புடன் விளையாடும் குழுதான் பெரும்பாலும் தோற்கிறது. விளையாட்டை அனுபவித்து ஆடுபவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
 
 
வெற்றி வெற்றி.. என்று உங்களை நீங்களே வருத்திக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் உடலளவிலும், மனதளவிலும் நீங்கள் பலவீனமாகிப் போவீர்கள்.வெற்றியைப் பற்றிய அச்சத்தை விட்டுவிட்டு, மனதை அமைதியாக வைத்திருங்கள். உடல் தானாக வேகமாக உழைக்கும். ஆனால், உங்களில் பெரும்பாலானவர்கள் நேரெதிராக அல்லவா இருக்கிறீர்கள்? உங்கள்மனம் நிலையில்லாமல் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், உடலில் வேகம் குறைந்துவிடுகிறது.
 
 
இப்படித்தான் சங்கரன்பிள்ளையின் வாழ்க்கையில் ஒரு வேடிக்கை நடந்தது.
 
 
'ஒரு வேலையை, மாலையில் வீட்டுக்குப் போனதும் மறக்காமல் செய்ய வேண்டும்' என்று கைக்குட்டையில் அவர் முடிச்சு போட்டுக் கொண்டார்.
 
 
ஆனால், வீட்டுக்குப் போனதும் எதற்காக அந்த முடிச்சைப் போட்டோம் என்பது அவருக்குச் சுத்தமாக மறந்துவிட்டது.
 
 
படப்படப்பானார். மூளையைக் கசக்கினார். மொட்டை மாடியில் உலாத்தினார். நெற்றியில் தட்டிக் கொண்டார். நோட்டில் என்னென்னவோ கிறுக்கினார். ஊஹூம் நினைவுக்கு வரவே இல்லை.
 
 
'பேசாமல் படுத்துத் தூங்குங்கள். எதுவாயிருந்தாலும் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்' என்று அவரது மனைவி அறிவுரை சொன்னார்.
 
 
'மாட்டேன். ஏதோ முக்கியமான விஷயமாயிருக்கும். அதைக் கண்டுபிடிக்காமல் எப்படித் தூங்குவது?” என்று படுக்கையில் உட்கார்ந்தே இருந்தார்.
 
 
இதுவா அதுவா என மண்டைக்குள் நூறாயிரம் யோசனைகள் பூச்சிகள் போல் பறந்தன. கடைசியில் இரவு இரண்டு மணிக்கு சலித்துப்போய் கைக்குட்டையைத் தூர எறிந்தார். சடக்கென்று ஞாபகம் வந்தது.
 
 
'இன்றைக்கு ஒன்பது மணிக்கே தூங்கப்போக வேண்டும்' என்று நினைவுப்படுத்திக் கொள்ள போடப்பட்ட முடிச்சு அது!
 
 
படபடப்பாக மூளையை இயங்கவிட்டால், சங்கரன் பிள்ளைக்கு நேர்த்ததுதான் உங்களுக்கும் நேரும்.
 
 
முடிவைப் பற்றிய கவலையை விடுங்கள். ஒவ்வொரு முறையும் முழுமையான ஈடுபாட்டுடன் செயலாற்றுங்கள். வெற்றி தானாக உங்கள் கதவை வந்து தட்டும்.
 

Share this post


Link to post
Share on other sites

கடவுள் நம்மை சோதிப்பவரா?

 

Share this post


Link to post
Share on other sites

அருமையான பதிவுகள் .இணைப்பிற்கு மிக்க நன்றி .நேரம் கிடைக்கும்போது முழுவதுமாக பார்க்கணும் . :)

Share this post


Link to post
Share on other sites

எதிர்காலத்தை அறிந்துகொள்வது பாவமா? 

 

Share this post


Link to post
Share on other sites

 சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு... 

 

Share this post


Link to post
Share on other sites

இப்படி இருந்தால் ஏமாற்றமில்லை

 

 

 


Share this post


Link to post
Share on other sites
மரணம் - ஒரு கட்டுக்கதை
 

 

Share this post


Link to post
Share on other sites

பாமர மக்களுக்கும், விளங்கக் கூடிய அருமையான...

தமிழ் மொழி குரல் வளமும், அவ்வப் போது... அவிட்டு விடும் நகைச்சுவையும் மிக்க நன்றாக உள்ளது.

இவர், நித்தியானந்தா சாமி மாதிரி... வீடியோ வெளி வந்து,

தனது பெயருக்கு, களங்கம் ஏற்படுத்த மாட்டார் என நம்புவோம்.

"மனிதனுக்கு, நம்பிக்கை தானே... வாழ்க்கை"

இவரும் ஒரு கள்ளன் தான் இவர் மீதும் ஏகப்பட்ட புகார்கள் இருக்கு

Share this post


Link to post
Share on other sites

கோவை: லிங்க பைரவ சிலைக்காக ரூ.4.50 லட்சம் பெற்றுக் கொண்டு உடைந்த சிலையை தந்து ஏமாற்றியதாக கோவையில் உள்ள ஈசா யோகா மையம் மீது ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். போலீஸ் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து பணத்தை ஒப்படைத்தது ஈசா யோகாமையம். இதனையடுத்து வழக்கை வாபஸ் பெற்றார் ஸ்வீடன் பெண். ஸ்வீடன், பாகர்மூசன் ஸ்டாக் ஹோமைச் சேர்ந்தவர் ஜெயா பாலு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர், கடந்த 16-ம் தேதி ஸ்வீடனிலிருந்து இந்தியா வந்துள்ளார். டிசம்பர் 23ஆம் தேதி, கோவை பூண்டியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற லிங்க பைரவ யந்திர விழாவில் கலந்து கொண்டார். அப்போது, யோக மையத்தில் 160 கிலோ லிங்க பைரவ சிலை வேண்டி, கோயில் நிர்வாகத்திடம் ரூ.4.50 லட்சத்தை வெளிநாட்டு வங்கி கிரெடிட் கார்டு மூலமாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக்கொண்ட ஈஷா யோகா மையத்தினர், சேதமடைந்த சிலையைக் கொடுத்தார்களாம். இது குறித்து புகார் தெரிவித்த ஜெயா பாலு, இந்த சிலையை மாற்றி வேறு சிலை கேட்டுள்ளார். ஆனால், வேறு சிலையை மாற்றித் தருவதற்கு மேலும் ரூ.50 ஆயிரம் கேட்டார்களாம். இதையடுத்து, பணத்தை அவர் திருப்பித் தரக் கேட்டுள்ளார். பணத்தைத் தர மறுத்ததால், டெல்லியில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தில் பண மோசடி தொடர்பாக புகார் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை மூலமாக, கோவை மாவட்ட காவல்துறை அலுவலகத்துக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு வந்தது. ஜெயா பாலு அளித்த புகாரின் அடிப்படையில் ஆலாந்துறை போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து ஈசா யோகா மையத்தின் நிர்வாகி ஒருவர் ஜெயா பாலுவின் பணத்தை கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். பணத்தை திரும்ப பெற்றுக்கொண்ட ஜெயா பாலு, ஈஷா யோகா மையம் மீது அளித்த புகாரை வாபஸ் பெற்றார். Story first

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/woman-withdraws-complaint-against-foundation-218249.html

Share this post


Link to post
Share on other sites

கோவை: லிங்க பைரவ சிலைக்காக ரூ.4.50 லட்சம் பெற்றுக் கொண்டு உடைந்த சிலையை தந்து ஏமாற்றியதாக கோவையில்...............................

 

தகவலுக்கு நன்றி சுண்டல்

Share this post


Link to post
Share on other sites

மரணம் ஒரு பிறப்பு தான். காரியம் தொடங்கினால் பிறப்பு முடிந்தால் இறப்பு. எங்கள் எல்லோருக்கும் காரியம் இன்னும் மிச்சம் உள்ளது. கொங்கிரீட் காட்டுக்குள் ஆனந்தம் கிடைப்பது அரியது. அதை தேடி அலைந்து திரிய தேவை இல்லை ஒரு சின்ன வீட்டு தோட்டம் போதும்.

மற்றும் மரணம்/பிறப்பு எம் கண் முன்னாள் தான் இருக்கிறது. நேரம் வரும்போது தெரியும் நாம் யாரென்று பின் தெரியும் யார் இந்த உலகின் உண்மையான ஆளுநர் என்று.

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • இராவணத் தீவு – பயணத் தொடர் 3  June 16, 2020 பின்னவலை : யானைகள் சரணாலயம் நான் என் இன்பங்களை எண்ணுவதற்கு விரும்புகிறேன். வாழ்க்கை முழுக்க முழுக்க கொண்டாட்டங்களுக்கானவை. அந்த கொண்டாட்டங்களை கண்டடைய பயணங்கள் தேவையென்பதை நான் உண்மையாகவே நம்புகிறேன். தேவையாய் இருப்பதெல்லாம் எந்த இக்கட்டான சூழலைவிட்டும் முன்னோக்கி சிறிதுதூரம் செல்ல முடியுமாக இருக்கின்ற மனம். இந்தமுறை என் பயணங்கள் முழுவதும் ஜெ.மோவின் யானை டாக்டரை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்துவிட முடியாமல் இல்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக யானைகளின் உலகத்தில் நுழைந்துக்கொண்டிருந்தேன். எதை எழுதினாலும் வாசகனை அதன் பின் சுற்றவைக்கிற மாந்திரீகம் அவர் எழுத்துக்கு உண்டு. யானைகளை விரும்புகிறவர்கள் நிட்சயமாக அதை படிக்கவேண்டும்  . John Donne சொல்வதைப்போல  யானைகள் என்பது, ” Nature’s great masterpiece, an elephant; the only harmless great thing “ உலகின் அதியுன்னத படைப்பான யானைகள் பற்றி சில விசயங்களை தெரிந்துக்கொள்வது , இந்த பயணத்தில் மேலும் பல சுவாரஸ்யங்களை உங்களுக்கு ஏற்படுத்தக்கூடும் . அதில் முக்கியமாக இதை கருதுகிறேன், சுமார் பதினைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் 17 வகையான யானைகள் காடுகளில் திரிந்தன. கங்கை நதி உருவாகியபோது கூடவே பல்லாயிரக்கணக்கான நீர் யானைகள் இருந்தன. இப்போது இந்தியா , ஆபிரிக்கா யானைகள் மட்டுமே இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் யானைகளை பாதுகாக்கவேண்டிய சரணாலயங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இருந்தது. இந்த இடத்தில் இருந்துதான்  பின்னவலை யானைகள் சரணாலயம் நோக்கிய பயணம் தொடங்கியது. அது மெல்லிய  சாரலும் , மழையுமான ஒரு நாள்.  இன்று நெருக்கமான சாலைகளாக மாறிவிட்ட கண்டியின் இந்த நெடும்பாதைகள் , மலைகளையும் , நெடிய காடுகளிற்கும் ஊடாக போடப்பட்டது என்பதால் கண்டியை ஊடறுத்து செல்கின்ற எந்தப்பயணமும் வழிநெடுக பச்சை மலைகளினதும் , நதிகளினதும் , சிங்கள குடியிருப்புகளினதும் , பௌத்த மடாலயங்களினதும் காட்சியை கொண்டிருக்கும். இரயிலில் கண்டியை ஊடறுத்து செல்கின்ற பயணங்களில் ஜன்னல் வழி விரிகின்ற காட்சியினை பார்ப்பதற்கு அவ்வளவு பசுமையாக இருக்கும். கண்டி என்றால் எனக்கு காட்டின் வாசனை , மலைகளின்  வாசனை, பூக்களின் வாசனை, எல்லா பக்கமும் ஓடுகின்ற நதிகள், தேயிலைக்காடுகள், இவைதான். மலைகளையும் , காடுகளையும் வெட்டி குடியிருப்புகள் அமைக்க முன்னர், பாதைகள் அமைக்க முன்னர் , இவை யானைக்காடுகளாகத்தானே இருந்திருக்ககூடும் , இப்படியெல்லாம் மனம் சிந்தித்துக்கொண்டே இருந்தது. முடிவற்ற அந்த பசுமையான காட்சிகளை கடந்து கேகாலை மாவட்டத்தில் இரம்புக்கனையில் இருக்கின்றது பின்னவலை யானைகள் சரணாலயம். சுமார் இருபைத்தைந்து ஏக்கர் தென்னம்தோப்பில் மகாநதிக்கரையில் இந்த பின்னவலை யானைகள் சரணாலயம் அமைந்திருக்கின்றது .  1975 இல் கொண்டுவரப்பட்ட நீலா, குமாரி, விஜயா, கதிரா, மத்தாலி என்ற அனாதரவாக்கப்பட்ட யானைக்குட்டிகளை பாதுகாக்கவே  உருவாக்கப்பட்டிருந்தது. இன்று 88 யானைகள் வரை அவ்வாறு இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. காட்டின் ராஜாவென்று சிங்கத்தை சொல்வார்கள். நான் யானையை சொல்வேன். ஏனோ உருவத்திலும் உடல் வலிமையிலும் பெரிய அந்த யானைகள் நடமாடும் காடு போல தோன்றுவதுண்டு. மகிழ்ச்சியையும் துயரையும் வெளி தீர்மானிக்கும். சில இடங்கள் மகிழ்வுக்கானவை, சில இடங்கள் அமைதிக்கானவை , சில இடங்கள் கொண்டாட்டங்களுக்கானவை என்பதை தீர்மானிக்கும் அல்லது தீர்மானித்து கொள்கிறோம். அதனால்தான் மகிழ்வான, துக்கமான நினைகளை மீட்டுபவையாக இடங்கள் காணப்படுகின்றன. இந்த  பின்னவலை யானைகள் சரணாலயம் மகிழ்ச்சிக்கான இடம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நுழைவுவாயிலில் இருந்து யானைகள் தங்கியிருக்கிற இடத்திற்கு சிறிதுதூரம் நடந்து செல்ல வேண்டும். இயற்கையான ஒரு சூழலில் மழைத்தூரலோடு நடந்து செல்கிற அந்த வழி நன்றாகத்தான் இருந்தது. ஒரு மகிழ்ச்சியான யானைக்குட்டியை வழியில் பார்க்க கிடைத்தது. அந்த நிமிடத்தில் உலகின் அதிகூடிய மகிழ்ச்சியான யானைக்குட்டியாக அது எனக்கு தோன்றியது. அதன் வாழ்வில் முக்கியமான இழப்புகள் நடந்திருந்தன. அது தனது தாயையும் , கூட்டத்தையும் , வாழ்விடத்தையும் இழந்திருந்தது. ஆனாலும் அது எல்லாவற்றையும் மறந்து விளையாடிக்கொண்டிருந்தது.  அந்த விளையாட்டைதான் வந்திருந்த எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்த மனநிலையை எடுத்துக்கொண்டு நகரமுடியுமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் .  பின்னவலையை நோக்கி வருகிற பயணிகள் முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக வருவார்கள். ஒன்று இங்கு இருக்கும் இந்த யானைக்கூடாரங்களை பார்ப்பதற்கு , அடுத்தது மகநதியில் யானைக்குளியலை பார்ப்பதற்கு. இந்த யானைக்குட்டியிடம் இருந்து யானைக்கூடாரத்தை அடைய சிறிது தூரம் நடக்கவேண்டியிருந்தது. . இங்கும் நிறைய யானைக்குட்டிகள்.   விளையாட்டுத்தனமும் குரும்பும் என்றிருந்தன . சாப்பிட்டுக்கொண்டே இருக்கவும் மகிழ்ச்சியாக இருக்கவும் அவை விரும்பின. பிறகு பார்வையாளர்களின் கைகளையோ ஆடையையோ பிடித்திழுத்து இங்கே வா வந்து என்னுடன் விளையாடு என்பது போல இருந்தது அவற்றின் சேட்டைகள். இந்த இரண்டு இடத்திற்கும் நடுவில்  பாதையின் இருமருங்கிலும் நீண்டிருக்கிறது கடைகள். இலங்கைக்கு என விசேடமான கைவினைப்பொருட்கள். ஆடைகள், சிறிய சிறிய நினைவுப்பொருட்கள் என நிறைய பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. ஆனால் சிறியவொன்றுக்கும் இந்தமாதிரி சுற்றுலாத் தலங்களில் அதிக விலையை கொடுக்கவேண்டியிருக்கிறது. நியாயமான விலைகளாக அது எனக்கு தோன்றுவதில்லை. இலங்கையில் எல்லாமே அப்படித்தான் இலங்கை ரூபாவில் அது அதிகமான விலைக்கு வைத்தே விற்கப்படுகிறது. இங்கு விற்கப்படுகிற யானை உருவ அலங்காரம் பதித்த உடைகள் பயணிகளிடம் பிரசித்தமாக இருக்கிறது.  இலங்கை முழுவதும் பயணம் செய்கிற பாதி வெளிநாட்டு பயணிகள் இந்த யானைப்படம் தாங்கிய உடைகளை விரும்பி அணிந்துகொள்வார்கள். இந்த கடைத்தெருக்களை கடந்து மகாநதிக்கரையை அடைந்தாயிற்று. அங்கே மேற்தளத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்தவாறு யானைகள் கூட்டம் கூட்டமாக குளிப்பதையும் விளையாடுவதையும் பார்ப்பது மனதிற்கு ஒரு இலகுவான உணர்வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.    மகிழ்ச்சியை ஒரு மன இலகுவை ஏற்படுத்துகின்ற மிருகமாக யானைகளை அன்று கண்டேன். ஆனால் அவற்றால் அதை உணர முடியுமா என்று எனக்கு தோன்றவில்லை. அது அதன் இயல்பில், அதன் மகிழ்வில், அதன் பொழுதுகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தது. ” Be a rainbow someone clouds ” என மாய ஏஞ்சலோ சொல்லியிருப்பார். அதுபோல அன்று எங்கள் வானத்தில் சிறு மகிழ்ச்சியின் வண்ணக்கோடுகளாக இந்த யானைகள் இருந்தன. மிருகங்களின் உலகில் மனிதர்கள் இல்லை. அவை அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் உலகில் மிருகங்கள் இருக்கின்றன. மிகவும் உணர்வுபூர்வமாக அதை நாங்கள் நேசிக்கிறோம். பாதுகாப்பு, வேலையை இலகுபடுத்த, வியாபாரம் , போர், உணவு , செல்லப்பிராணி என ஏதேதோ காரணத்திற்காக நாங்கள் மிருகங்களின் தயவில்லாமல் எப்பொழுதுமே நகரமுடியாது இருக்கிறோம். எல்லாவற்றையும் இயந்திரத்தனத்தால் செய்து முடித்துக்கொள்ள முடியும் என்று ஆகிவிட்டபோதும் எங்கள்  உலகில் சிறிய பூனைக்குட்டியாவது தேவைப்படுகிறது. நிட்சயம் இந்த யானை சரணாலயத்திற்கு வாருங்கள். நிட்சயம் மகிழ்ச்சியடைவீர்கள். ஆனால் இயற்கையின் அற்புதமான மிருகம் எப்படியெல்லாம் அழித்துக்கொண்டிருக்கிறோம் என்றும் தோன்றும். யானைகளிடம் இருந்து மனிதன் நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறது. இதோ இந்த மாதிரியான பண்புகளை , நர்மி
    • தீர்வு இலகுவானது, ஆனால் செய்ய வேண்டுமே. A9 வீதியில் ஒவ்வொரு 5 மைல்களுக்கு, பார்கிங் வசதி செய்ய வேண்டும். பிரதானவீதியில் இருந்து, பக்கத்தில் பார்கிங் வசதி செய்தால், இந்த லாரிகள், டிப்பர் வாகனங்கள், பிரதான வீதியில் அன்றி, அங்கே தான், நிறுத்த வேண்டும் என்று விதியினை கொண்டுவந்தால், இவை தடுக்கப்படலாம். ஒரு மைல் தூரத்தில் பார்க்கிங் வசதி போன்ற தகவல்களை முன்னரே தெரிவிப்பதன் மூலம், வீதியில் நிறுத்துவதை தடுக்கலாம். வீதியில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் தான் விபத்து நிகழ்கிறது. வீதியில் நிறுத்தப்பட்டு இருப்பதால், ஒன்று அதன் பின்னால் மோதுவது அல்லது, ஓவர் டேக் பண்ணும் போது, எதிர்திசையில் வரும் வாகனத்துடன் மோதுவது.    
    • கரும்புலிகள் நாள் ~ யூலை 05 அம்மாவும் அப்பாவும் எங்களுக்குண்டு ஆனாலும் மண்மீது பெரும்பாசம் உண்டு ஆறடி மண்கூட எமக்காக கேளோம் தமிழ்த்தாயின் துயர் தீர்க்க மகிழ்வோடு சாவோம்.. கரும்புலி வீரவேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்! பகிர்வுக்கு நன்றி பையன்26
    • 👍👍 நெல்லை சரகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவுக்கு கட்டுப்பாடு   காவல்துறையினர் பிரண்ட் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம்" என்று நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார். பதிவு: ஜூலை 05,  2020 10:49 AM நெல்லை, சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் போலீசாரின் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இது தொடர்பாக, மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ் ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ்  ஆகிய 5 பேரை  அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்தனர். தந்தை - மகன் கொலை வழக்கில்  பிரண்ட் ஆப் போலீஸ் குழுவைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், "காவல்துறையினர் பிரண்ட் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் என்று  நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார்.  https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/05104910/Control-of-Friends-Group-of-Police--in-nellai.vpf