• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • உந்த விமானங்களை பார்க்க ஏறவே பயமா இருக்குது. உலகத்தரம் வாய்ந்த விமானங்கள்.. சேவையில் ஈடுபடாமல்.. உந்த ஹிந்தியன் சேவைகளை நம்பி.. இந்து சமுத்திரத்தில் மீன்களுக்கு இரையாக விருப்பமில்லை.  இந்த விமானங்களின் பயணப்பாதுகாப்பு விபரங்கள் வெளியிடப்படுவதோடு.. இவை எவ்வளவு காலம் சேவை மூத்தவை என்பதும் தெரிவிக்கப்பட வேண்டும். ஏலவே பாதுகாப்பற்ற கடவைகளை அமைச்சு ரயிலை விட்டு தமிழ் மக்களை தினமும் கொன்றொழிப்பது போல்.. பழைய பறைனை விமானங்களை விட்டு.. தமிழர்களை கடலுக்குள் கொட்டாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 
    • வரதராஜப் பெருமாளுக்கு சொல்லேல்லையோ.. அவர் தானே கடைசில பூட்டுப்போட்டவர். ஈழநாடு.. இல்லாமல் போவதற்கு காரணமானவர்களே.. இப்போ அதை மீண்டும் திறக்கிறார்களாம். ஆனால் தலைகள் மட்டும் மாற்றம். 
    • மிகவும் கவலையாக உள்ளது. தமிழ் மக்களுக்கென்று ஒருவரும் இல்லை. நேற்று ஒரு காணொலியில் கோத்தவுக்கு வாக்களிக்கா விட்டால், ஹம்பானைக்கு (செம்மையாக) அடி வாங்க வேண்டும் என ஒருவர் சொல்ல அதை ஒர் சட்டத்தரணியும் ஆமோதிக்கின்றார் எல்லோரும் சிரிக்கின்றார்கள்.  என்ன ஒரு ஆணவமான பேச்சு. தன் குடும்பத்தை அழித்த கோத்தவிற்கே மலைய‌கத்திலும், கொழும்பிலும் வடக்கு கிழக்கிழும் தமிழர்கள் வாக்களிக்கின்றார்கள் என்றால் எது இவர்களை அவ்வாறு தூண்டுகின்றது?
    • நிழலி  உதை எல்லாம் யார் செய்தது?....தூண்டி விட்டது யார்?...எய்தவனான ஜ.தே.கட் சியை விட்டுப் போட்டு அதை செய்து முடித்த  அம்பை நொந்து என்ன பயன்?...கோத்தா வந்தால் மட்டு மக்களுக்கு/தமிழர்களுக்கு  சார்பாக செயற்படுவார் என்பதால் அவர் வர வேண்டும் என ஒருத்தரும் அங்கு எதிர் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் . கோத்தா என்டால் முஸ்லீம்களுக்கு ஒரு பயம் இருக்குது...அவர்களை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க சக்தி சஜீத்தை விட இவருக்கு உள்ளது...முஸ்லீம் ,தமிழ் கலவரத்தை தூண்டினாலும் அதை அடக்கும் சக்தியம் இவருக்கு உண்டு. இரண்டாவது அபிவிருத்தி...நீங்கள் விரும்பினாலோ/விரும்பா விட்டாலோ வடக்கை அபிவிருத்தி செய்தது முழுக்க மகிந்தா  தான் ...கிழக்கை கோத்தா மூலம் அபிவிருத்தி செய்யலாம் என்று அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். மற்றப்படி ஏற்கனவே வேற திரிகளில் எழுதின மாதிரி இருவரும் அரசியல் ரீதியாய் ஒரு துரும்பை கூட அசைக்கப் போவதில்லை ...சஜீத் சார்ந்த கட்சி அமசடக்காய் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம்  கிழக்கில் தொடர்ந்தும் வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கபடுகின்றனர்,நிலங்கள் தொடர்ந்தும் அபகரிக்கபடுகின்றன...ஜ.தே.க  கட்டுப்படுத்த முடியாத படியால் கோத்தா அவர்களை கட்டுப்படுத்துவார் என்று நம்புகிறேன்  வட ,கிழக்கு பிரிவு என்பது உங்களை மாதிரி கண பேர் கிழக்கு மக்களது பிரச்சனையின் ஆழத்தை புரிந்து கொள்ளாமையில் இருந்து தொடங்குகிறது