Sign in to follow this  
அபிராம்

மைதிலி

Recommended Posts

1_zpsf44beddc.jpg

உலர்த்திய மஞ்சள் சுடிதாரை காற்றிலே உதறிவிட்டு கயிற்றிலே தொங்கவிட்டு அது காற்றிலே அலையாமல் இருக்க இறுக்கியை அழுத்திவிட்டு, அடுத்த உடைக்காக கொஞ்சம் ஒதுக்கியபோது தான் அவள் முகம் எனக்கு தெரிந்தது.

பெண்மைக்கு ஏற்ற உடல், குளித்த பின்னர் வடிவாக துவட்டாமல் அணிந்திருந்த ஆடைகள் சில இடங்களில் ஈரம் மிச்சம் இருந்ததை காட்டின எங்கள் மனசை போல.

நீண்ட கரிய முடி, கொடியிலே கதிரை வைக்காமல் எட்டி துணிகளை காயவைக்க கூடிய அளவான உயரம். பிரம்மன் மற்றவர்களிடம் கொடுத்து படைக்காமல், தானே சிரத்தை எடுத்து படைத்த ஒரு அழகுப்பதுமை.

கோயில் கோபுரத்திலே இருந்த சிலை உடைந்து கீழே விழுந்து விட்டதோ என்று அண்ணாந்து பார்க்க வைக்கும் ஒரு அழகு தேவதை.

நான் வந்த நோக்கம், இலக்கு, கடமை, ஒழுக்கம் எல்லாவற்றையும் மீறிய ஒரு உணர்ச்சி என்னை அவளை நோக்கி பார்க்க வைத்தது.அவளும் பார்த்தாள் . அந்த பார்வையை இன்றும் மறக்க ஆயிரம் கண்களை தேடி அலைகிறேன், தருமன் வீட்டில் யாகத்துக்கு வைத்த மாவில் புரண்ட எலியை போல.

மைதிலி, இந்த பெயரை அவளின் தோப்பனார் அவளுக்கு ஏன் வைத்தார் என்று தெரியவில்லை இருந்தாலும், அந்த பெயர் அவளை தவிர வேறு யாருக்கும் அவ்வளவு பொருந்தாது.

திடீர் என்று அவளின் முற்றத்தில், கோயில் வளாகத்தில் தோன்றிய வேற்று ஆளை பார்த்த பயம் கொஞ்சம் கூட அவளின் கண்களில் தெரியவில்லை.

உங்களைத்தான் எத்தனை தரம் கேட்கிறது, யார் நீங்கள் எதுக்கு கோயிலுக்குள்ளே வந்திருக்கிறீர்கள் என்ன வேணும் உங்களுக்கு.?

என்னையா கேட்கிறீங்கள்.? திடுக்கிட்டு சுதாரித்த எனக்கு அவள் எட்டாம் தரம் கேட்ட கேள்வி காதிலே ஏறியது.

பதில் சொல்ல மூளை அவ்வளவு நேரம் எடுத்து நான் என்றைக்குமே பார்த்ததில்லை.

கொஞ்சம் குடிக்க தண்ணீர் கிடைக்குமா.?

ஊரிலே வேற இடம் கிடைக்காமல் இங்கே வந்து தான் தண்ணி கேட்கணுமா .?

இல்லை கோயில் கிணத்திலே குடிப்பம் என்று தான் வந்தேன். வாளியை காணவில்லை. அது தான் ... இழுத்த என்னை..

அவள் தான் உடுப்புடன் வாளியை கொண்டு வந்த குற்ற உணர்வு தாக்க, கீழ் சொண்டை பல்லால் கடித்த படி, உடுப்பிலே இருந்து சொட்டிய நீரில் கோலம் போட்டாள்.

அது எனக்கு பொறுப்பாளர் ஆறுமாதமாக வேவு எடுத்து அளவு பார்த்து கீறி தந்த மன்னார் வரைபடைத்தை ஒத்திருந்தது.

தொடரும்.

Edited by அபிராம்
 • Like 6

Share this post

Link to post
Share on other sites

வணக்கம்,நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுபவப் பகிர்வோடு வந்திருக்கிறீர்கள்.தொடருங்கள்.போட்ட படம் நன்றாக இருக்கிறது

Share this post

Link to post
Share on other sites

தொடருங்கோ........அபிராம்

Share this post

Link to post
Share on other sites

ஆரம்பமே ஊர் நினைவுகளுக்கு எம்மை அழைத்துச் செல்கின்றது!

ம்ம்ம்...கோலம்... மன்னார் வரைபடம்...தொடருங்கள் அபிராம்! :D

Share this post

Link to post
Share on other sites

தொடருங்கோ........அபிராம் 

Share this post

Link to post
Share on other sites
மைதிலி என்ற பெயரே வில்லங்கமான ஒரு பெயர்தான்.
மைதிலியாகவே பருவ வயதில் மாறிவிடுவர் போலிருக்கு.

Share this post

Link to post
Share on other sites

மைதிலி என்ற பெயரே வில்லங்கமான ஒரு பெயர்தான்.
மைதிலியாகவே பருவ வயதில் மாறிவிடுவர் போலிருக்கு.

அப்படித்தெரியவில்லையே

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக

வீட்டில் இருக்கே....... :wub:  :wub:

Share this post

Link to post
Share on other sites
கடைகள் வைத்திருப்பவர்கள் ....... பிசினஸ் அது இது என்று கூறிக்கொண்டு .....
மலேசிய தாய்லாந்து சிங்கபூர் இந்தியா என்று ஐரோப்பாவில் இருந்து அடிக்கடி போய் வருவார்கள்.
 என்ன பிசினெஸ் என்று எமக்கு தெரியும்.
 
நீங்கள் இப்பவும் பரிசில்தானே நிற்கிறீர்கள் ?
அதெல்லாம் அந்த பெயரின் தாக்கம்தான். 
 
பெயர் மட்டும் மாறியிருந்தால் .............. உங்கள் பிசினெசும் மாறியிருக்கும்.  

Share this post

Link to post
Share on other sites

mannar.jpg

மன்னார் தீவை மாந்தையுடன் இணைக்கும் பாலம் தான் மன்னார் நகரப்பகுதிகான ஒரே தரைவழி தொடர்பு.

தொண்ணூறுகளின் கடைசி காலங்களில் மன்னார் நகரபகுதியை சென்றடைய வேண்டுமானால் ஏழு இராணுவ தடை முகாம்களின் சோதனைகளை தாண்டித்தான் செல்ல வேண்டும். அதில் செட்டிக்குளம் சோதனை முகாமும், மாந்தை முகாமும் கடுமையானவை.

இவற்றை தாண்டி உள்ளே சென்றாலும், நகர பேரூந்து தரிப்பிடத்தில் விசேட அதிரடிப்படையினர் புகைப்படங்கள் எடுத்து தான் மன்னாரினுள்ளே நுழைய அனுமதிப்பர்.

நானும் அறிவும் மன்னாருக்குள்ளே வந்து ஏழு நாட்கள் தான் ஆகி இருந்தன. படையினருடன் சேர்ந்து இயங்கும் "காக்கை வன்னியனை" அழித்தொழிக்கும் நடவடிக்கை.

மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் அதன் சுற்றுப்புறத்துக்கு உள்ள அழகும் பசுமையும் நகரப்பகுதிக்கு இல்லை. கழுதைகளும் புழுதியும் தான் நகரத்தை நிறைத்து இருக்கும். பெரும்பாலான வியாபார நிறுவனங்களை இஸ்லாமிய சகோதரர்கள் வைத்திருந்தார்கள். நகரப்பகுதி எப்பவுமே சனமும் சத்தமுமாக இருக்கும்.

சின்னக்கடையில் வைத்து ஒரு முறையும், வைத்தியசாலை சந்தியில் வைத்து ஒரு முறையும் "காக்கை வன்னியனை" படையினருடன் சந்தித்த போதும் அது சமருக்கான சூழலாக அமையவில்லை.

இரண்டு மைகிரோ ரக கைத்துப்பாக்களும், இரண்டு கைஎறி குண்டுகளும் மட்டுமே இருக்கும் நாங்கள் ஏகே எல்எம்ஜி உடன் அலையும் அதிரடிபடையை எதிர்கொள்வதற்கு சரியான இடம் அமையவேண்டும். தாக்குதலுக்கு பின்னர் ராணுவத்தினர் வகுக்கும் "சக்கர வியுகத்தை" உடைக்க வேண்டும். எங்களில் யாருக்காவது காயம்பட்டால் வியுகம் உடைப்பது கூட ஒரு தனி ஆளால் செய்ய வேண்டும். இதனால் இரண்டு மூன்று தடவை தாக்குதல் பிற்போடப்பட்டது.

பகல் வேளைகளில் சந்தேகத்தை தவிர்க்க, இஸ்லாமிய இன சகோதர வியாபரிகளிடம் சாரங்களை வாங்கி வீடு வீடாக கூவி கூவி விற்போம், கிடைக்கும் வருவாயில் இனிய மாலை பொழுதுகளில் குளிர்களி வாங்கி சாப்பிடுவோம், வைத்திய சாலைக்கு முன்னால் இருக்கும், இயலாத பிச்சைகாரர்களுக்கு மதிய உணவு வாங்கி கொடுப்போம்.

இரவு வேளைகளில் தங்குவதற்கு பாதுகாப்பான இடம் இல்லாமையால், ஒரு போத்தல் சாராயம் வாங்கி கொடுத்து, தொலைத்தொடர்பு கோபுர காவலாளியை மடக்கி, நானும் அறிவும் தொலைத்தொடர்பு கோபுரத்திலேயே கயிற்றினால் எம்மை இணைத்து நகரத்துக்கு 100 மீற்றர் உயரத்தில் தூங்குவோம். ஆனந்தமான இரவுக் காற்றும், நிலவும், குசு குசு இரகசிய பேச்சுக்களும் எங்களின் நிம்மதியான தூக்கத்துக்கு துணை போயின.

இரவும் பகலும் இப்படியே கழிந்தாலும், இலக்கை நெருங்க முடியாமை எங்களை வதைத்து கொண்டு தான் இருந்தது.

ஒன்பதாம் நாள் மதியம் என்னை சைக்கிளின் முன் பாரில் இருத்தியபடி அறிவு சைக்கிளை மிதித்து வந்தான். நானும் அவனுக்கு துணைக்கு "பெடல் போட்டேன்". மதிய உணவு பொதிகளும் விற்காத மிச்ச சரங்களும் சைக்கிளில் தொங்கிய படி இருக்க, நாங்கள் இருவருமே சரம் தான் அணிந்து இருந்தோம்.

தாழ்வுபாடு போகும் பேரூந்து எங்களை கடந்து வைத்தியசாலை சந்தியில் திரும்பியது. பேரூந்து புழுதிக்கு நடுவே "காக்கை வன்னியன்" சந்தியில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தான். அதிரடிப்படை கொஞ்சம் தாண்டி போயிருந்தது. இருவருமே ஒரே நேரத்தில் இயங்கினோம். சைக்கிளை ஊண்டி மிதிச்சவாறே எங்கள் மைக்கிரோக்கள் முழங்கின ஏழு குண்டுகள், எப்படியும் ஐந்து இலக்கை தவறாமல் தாக்கி இருக்கும். மண்ணிலே குருதி கொப்பளிக்க விழுந்து கிடந்தான்.

அதிரப்படை கண்டபாட்டுக்கு சுட்டுக்கொண்டு அந்த இடத்துக்கு வரும்போது, நாங்கள் தாழ்வுபாடு பேரூந்தில் ஏறி இருந்தோம்.

இந்த தாக்குதலின் வெற்றியை தொடர்ந்து தான்,இரண்டு மாதங்கள் கழித்து என்னை கையிலே ஒரு வரைபடமும் கொடுத்து உயிலங்குளம் ஊடாக நானாட்டானுக்கு அனுப்பி இருந்தார் பொறுப்பாளர்.

தொடரும்.

(கருத்துகளை ஊக்கங்களையும் அளித்த உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.)

Edited by அபிராம்
 • Like 2

Share this post

Link to post
Share on other sites

படத்துக்கு நன்றி ஈசன். உங்கள் அனுமதியுடன் கதை முகப்பில் போடலாமா...??

Share this post

Link to post
Share on other sites

மைதிலி எப்ப அடுத்த தொடர் ?

Share this post

Link to post
Share on other sites

2vuklfp.jpg

அவள் தண்ணீர் கொ(மெ)ண்டுவந்து தந்த பித்தளை செம்பை வாங்கும் போது, அவளின் வெண்டைக்காய் விரல்கள் என்னை உரசியது, அதன் அதிர்வுகள் செம்பிலே இருந்த தண்ணீரில் இலகுவாய் தெரிந்தன.

அதை எங்கள் இருவரின் கண்களும் பார்க்க தவறியதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்.

அவளின் கைகள் தான் செம்பை என் நோக்கி நீட்டின, கண்கள் தரையிலே புற்களை எண்ணி கொண்டிருந்தன.

உங்களின் பெயரை தெரிந்து கொள்ளலாமா.?

பெயரை தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்..?

இந்த கேள்வியை எதிர்பார்த்து இருந்தவள் போல பதில் வந்தது. அது நேற்று நாங்கள் உயிலங்குளத்தை கடக்கும்போது காவலரணில் இருந்த இராணுவ வீரனின் தானியங்கி துப்பாக்கி ரவையின் வேகத்தை விட அதிகமாக இருந்தது.

இல்லை... அடுத்த முறை ...வாசலிலே இருந்து கூப்பிட்டு... உள்ளே வரலாமே என்று தான்.

அம்மானுக்கு பிறகு இப்போ தான் பதில் சொல்லும் போது நாக்குழறுகிறது.

எதுக்கு வரணும்..?

பெண் உருவில் ஒரு அம்மான். பதில் சொல்ல முழிக்கும் போது தான் கஷ்டமான கேள்விகளை கேட்கிறாள்.

மைதிலி...

தலையை கூட துவட்டாமல் ஈரத்துணியோட யாரோடையடி பேசி கொண்டு இருக்கிறாய்..

அவளின் தாயின் அதட்டல் தான் அவளுக்கு சூழ்நிலையை புரியவைத்தது.

நுனி நாக்கை நான்கு பற்களால் கடித்து கொண்டு தனக்கு தானே தலையில் அடித்து கொண்டு செம்பை கூட வாங்காமல் தாயை நோக்கி ஓட்டமெடுத்தாள்.

அவளின் பின்னழகு அசைந்தாட அவள் ஓடிய ஓட்டம், நாங்கள் பாரீட்சார்த்தமாக அடிச்சு பார்த்த எறிகணையின் அசைவுகளை எனக்கு ஞாபகபடுத்தியத்தில் தவறேதும் இல்லை. (பிற்காலத்தில் அதுக்கு பெயர் "சமாதானம்")

செம்பை கிணத்து கட்டிலே வைத்துவிட்டு, படலையை சாத்திவிட்டு அவளின் வீட்டை திரும்பி பார்த்தேன். சாளரத்தின் வழியிலே அவளின் கண்கள் மின்னல் வெட்டியதை காண தவறவில்லை.

ஆனால் நடந்த எல்லாவற்றையும் நானாட்டான்-வங்காலை சந்தியில் இருந்த குறிசூட்டு காவலரணில் இருந்தபடி இராணுவ வீரனின் இரு கண்கள் அவதானித்து கொண்டிருந்தன என்று அன்றைக்கு எனக்கு தெரியவில்லை.

(தொடரும்)

என்னை தேடிய உறவுகளுக்கும், கருத்திட்ட விருப்புகளை வழங்கிய உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Edited by அபிராம்
 • Like 2

Share this post

Link to post
Share on other sites

இராணுவம் பார்த்திட்டானா.. இது எங்க போகப்போகுது எண்டு விளங்குது. அருமையான தொடர் அபிராம்.

Share this post

Link to post
Share on other sites

அபிராம் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறோம் தொடருங்கள்

Share this post

Link to post
Share on other sites

கருத்துகளை இட்ட இசை மற்றும் கண்மணி அக்காவுக்கு நன்றிகள். விருப்பளித்த நந்தனுக்கும் நன்றிகள்.

தொடரை வாசிக்கும் உறவுகளுக்கும் நன்றிகள்.

Share this post

Link to post
Share on other sites

20 வரியோடை அடுத்த தொடர் தொடரும். இன்னும் கொஞ்சம் எழுதலாமில்ல ?

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட அவர்கள் ஏதோ ஒன்றை செய்து தமிழ் மக்களை சந்ததிகளை ஊக்குவிக்கின்றார்கள். அதை பாராட்டத்தான் வேண்டும்.  பெரும்பாலும் எதிர்மறையாகவே சிந்திக்கின்றோம். அது தப்பு. நிழலி  சொல்வதுபோல்  5000 ரூபா ஒரு வாரத்துக்கு காணாதுதான். ஆனால் அங்கு ஒரு ஆளின் ஒருநாள் சம்பளம் சாப்பாடு தேநீருடன் குறைந்தது 1500 ரூபாவுக்கு அதிகம்.(அதுக்கும் ஆள் கிடைப்பது கஷ்டம்). சராசரி 20,000 ரூபா மாதம் உழைத்தால் ஆஹா ஓஹோ என்று இல்லாவிட்டாலும் தாராளமாய் ஒரு குடும்பம் வாழ முடியும். "பாலன் பஞ்சம் பத்து வயது வரை" என்று அது பின்பு அந்த குடும்பத்துக்கு உதவியாய் இருக்கும். அன்று (இந்த யுத்தகாலங்களுக்கு முன்பு) நாங்கள் எல்லாம் அறுசுவை உண்டியும் பாயாசமும் சாப்பிட்டா வளர்ந்தனாங்கள். சுற்றி வர இருக்கும் அயலில் எல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஏழெட்டு பிள்ளைகள்.எல்லோரும் செத்தா போனார்கள். இங்கு (பிரான்சில்) மூன்று பிள்ளைகளுக்கு மேல்தான் சரியான உதவித் தொகை,மற்றும் சில சலுகைகள் கிடைக்கும். அதுக்காக அரசாங்கம் தரும் அந்தப் பணம் பிள்ளைகளை வளர்க்க தாராளமாய் காணும்.ஆனால் நாங்கள் வீட்டுக்கும், காருக்கும் கடன் வாங்கி அதைக் கட்ட இரவு பகல் பாராமல் நாய் பேயாய் உழைக்க வேண்டி இருக்கு.அப்படி இருந்தும் சில பல  பெற்றோர்களின் சண்டைகளால் பிள்ளைகளை அரசாங்கம் எடுத்து வளர்த்து வருகிறது. இங்கு செய்யும் உழைப்பில் மூன்றில் ஒரு பங்கு ஊரில் செய்தால்கூட போதும் சராசரி வாழ்க்கைக்கு உத்தரவாதம் உண்டு. ஏனைய இனங்கள் எல்லாம் வருமானத்தைப் பார்த்தா பிள்ளைகளை பெறுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிழைகளை பெற்று விட்டால்  பின் ஏதோ ஒரு வகையில் வருமானம் வரும்......!  🤔
  • சிறீலங்காவில் சிங்களவர்களும் சோனகர்களும் ஆபிரிக்க ஏழைகள் மாதிரியா வாழ்கிறார்கள்??? மட்டக்களப்பு மாநாகரசபையும் இப்படி ஓர் தீர்மானத்தை எடுத்தார்கள். 
  • கோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா? அ.தா.பாலசுப்ரமணியன்பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சீனாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்பட்ட இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நவம்பர் 29-ம் தேதி இந்தியத் தலைநகர் டெல்லிக்கு வருகிறார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே, வழக்கத்துக்கு மாறான அவசரத்துடன் இந்தியா தனது வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரை இலங்கைக்கு அனுப்பியது. அவர் புதிய அதிபரை சந்தித்துப் பேசியதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் வாழ்த்துச் செய்தியை கோட்டாபயவிடம் அவர் ஒப்படைத்தார். இந்தியப் பிரதமரின் அழைப்பை ஏற்று கோட்டாபயவும் புது டெல்லி வர ஒப்புக்கொண்டார். கோட்டாபய பயணம் செய்யப்போகும் முதல் வெளிநாடு இந்தியாதான். முதல் முதலாக இந்தியா இந்திய வெளியுறவு அமைச்சரின் அவசரமான இலங்கைப் பயணத்தையும், தயக்கமின்றி கோட்டாபய இந்தியா வர ஒப்புக்கொண்டதையும் எப்படிப் புரிந்துகொள்வது? படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோட்டாபய ராஜபக்ஷ "வழக்கமாக, இலங்கையில் பிரதமர், ஜனாதிபதி முதலிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முதல்வேலையாக இந்தியா வருவது வழக்கம். டெல்லியில் அவர்கள் பூஜை செய்யப் போகிறார்கள் என்றுகூட தமாஷாக சொல்வார்கள். ஆனால், தற்போது சீனாவை கருத்தில் கொண்டு, புதிய அதிபர் இந்தியா வருவதற்கு முன்பே இந்தியா தனது வெளியுறவு அமைச்சரை இலங்கை அனுப்பியுள்ளது. நிலைமை மாறியுள்ளது என்கிறார்" மூத்த இந்தியப் பத்திரிகையாளரும், இலங்கையில் இருந்து பணியாற்றிய அனுபவம் பெற்றவருமான நிருபமா சுப்ரமணியன். 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்குப் பின்னால் இந்தியா இருப்பதாகப் பார்க்கப்படும் நிலையில், "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இப்போது இந்தியா உறவை மேம்படுத்த விரும்புகிறது" என்ற தகவலை வெளியிட இந்தியா விரும்பியிருக்கலாம் என்கிறார் அவர். பூகன்வில் தீவுக்கூட்டம் உலகின் புதிய நாடாகுமா? ஜே.என்.யூ பல்கலை. கட்டண உயர்வும் ஏழை மாணவர்கள் பரிதவிப்பும் கோட்டாபய சீனா நோக்கிய சாய்வு உள்ளவர் என்று பார்க்கப்படுவதே, இந்திய வெளியுறவு அமைச்சர் ஏன் அவசர அவசரமாக இலங்கை சென்றார் என்பதை விளக்குகிறது என்றே பல பார்வையாளர்களும் சொல்கிறார்கள். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜெய்சங்கர் இலங்கையில் இந்தியா என்ன சாதிக்க விரும்புகிறது என்ற கேள்விக்கு, "இதற்கு ஒரு விடை இல்லை. பல காரணங்கள் இருக்கலாம்" என்கிறார் நிருபமா. மைத்ரிபால மீது அதிருப்தி கொண்ட இந்தியா ஆனால், ஆர்கனைசர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்ற ஆராய்ச்சி அமைப்பின் சென்னை பிரிவின் தலைவரான என்.சத்தியமூர்த்தி இதற்கு ஒரு விடை சொல்கிறார். 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்று, மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்ற பிறகு, இலங்கையில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் கூடும், இலங்கையின் சீனாவின் செல்வாக்கு மட்டுப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, சீனாவின் செல்வாக்கு இலங்கையில் குறையவே இல்லை என்கிறார் அவர். இந்தியாவின் எதிர்பார்ப்புகளை நிறைவேறுவதில் சிறிசேன அரசு எந்த முன்னேற்றமும் காட்டவில்லை என்ற ஏமாற்றம் இந்தியாவுக்கு இருந்தது. குறிப்பாக திரிகோணமலை துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தப் பின்னணியில், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தரும் அழுத்தத்தில் அவை கூறுவதை செவிமடுக்கும் நிலை இலங்கைக்கு ஏற்படும் முன்பே உறவைக் கட்டமைக்க இந்தியா நினைத்திருக்கும் என்கிறார் சத்தியமூர்த்தி. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமைத்ரிபால சிறிசேன அமெரிக்கா லகான்? அதே நேரம் ஏன் இந்தியா வருவதற்கு கோட்டாபய எப்படி உடனடியாக ஒப்புக் கொண்டார் என்ற கேள்விக்கு, பிரான்சில் வாழும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் கௌரிபால் சாத்திரி ஒரு விளக்கம் தருகிறார். கோட்டாபய தமது அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டதாக கூறிவிட்டாலும், அமெரிக்கா வெளியிட்ட குடியுரிமை துறந்தவர்கள் பட்டியலில் கோட்டாபய பெயர் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. அமெரிக்காவில் கோட்டாபயவின் சொத்துகள் இருக்கின்றன. இதைவைத்து, கோட்டாபய சீனா பக்கம் அப்பட்டமாக சாய்ந்துவிடாமல் தடுப்பதற்கான அழுத்தத்தை அமெரிக்கா கொடுத்திருக்கும் என்கிறார் சாத்திரி. இதே கருத்து, வேறு சில பார்வையாளர்களுக்கும் இருக்கிறது. கோட்டாபயவின் இந்தியப் பயணம் எப்படி இருக்கும்? சரி, கோட்டாபயவின் இந்தியப் பயணம் எப்படி இருக்கும்? இந்தியா விரும்பியதை இலங்கையில் எப்படி எட்டும்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநரேந்திர மோதி. "கோட்டாபய பொறுப்பேற்று 15 நாட்களுக்குள் திடீரென எதுவும் மாறிவிடாது. இரு தரப்பு மற்றும் சர்வதேசப் பிரச்சனைகளில் என்னமாதிரியான பார்வை இருக்கிறது என்று இலங்கை மற்றும் இந்தியா ஒன்று மற்றொன்றை மதிப்பீடு செய்யும். தனது எதிர்பார்ப்புகளை இந்தியா பகிர்ந்துகொள்ளும். தமிழர் பிரச்சனை போன்றவற்றை எழுப்பும். ஆனால், கோட்டாபயவின் முதல் பயணத்திலேயே புதிய ஒப்பந்தம் போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது" என்கிறார் சத்தியமூர்த்தி. https://www.bbc.com/tamil/india-50508229