Jump to content

திரு சிவராசா கருணாகரன் தாக்கப்பட்டது உண்மையா?


Recommended Posts

திரு கருணாகரன் கிளீநொச்சியில் தாக்கப்பட்டதாக முகநூலில் செய்திகள் வெளீயாகி உள்ளான உண்மையா?

Link to comment
Share on other sites

கவிஞர் கருணாகரன் மற்றும் அவரது இரு மகன்கள் கிளிநொச்சியில் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டனர்:-

 
 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கிளிநொச்சி:-

 

கவிஞர் கருணாகரன் மற்றும் அவரது இரு மகன்கள் கிளிநொச்சியில் இனம் தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளானதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிந்திக் கிடைத்த தகவல் - தாக்தலாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்... விசாரணை தொடர்கிறது...

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111119/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

தோழன் கருணாகரன் தாக்கப்பட்ட சேதி அதிற்ச்சியாய் இருந்தது. என் முகநூலிலும் கண்டனத்தை பதிவு செய்தேன். பிந்திவந்த சேதிகள் மாணவர் பிரச்சினையில் கருணாகரனின் மகன் தாக்கப்பட்டதாக்வே உறுதிப்படுத்துகின்றன. தயவு செய்து உண்மை நிலையை யாராவது உறுதி செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

நேற்று மாலை கிளிநொச்சியில் பிரபல எழுத்தாளரும் கவிஞரும் ஈபிடிபியின் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரகுமாரின் சகபாடியுமான சிவராசா கருணாகரன் மற்றும் அவருடைய இரண்டு புதல்வர்களும்  சிலரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

முன்னதாக கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்பாணம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தாக்குதலாளிகளைக் காவல்துறை தேடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈபிடிபியின் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரகுமாரின் மதுபானசாலையொன்றின் பினாமியாக கிளிநொச்சியில் செயற்படுத்தி வருகையில் அது தொடர்பான பிணக்கொன்றையடுத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக்கழகத்தின் வெளியீடான வெளிச்சம் இதழின் ஆசிரியராக இருந்த கருணாகரன் தற்போது ஈபிடிபியின் முக்கிய பிரமுகராகச் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

எல்லோருடைய கண்ணீரையும் எடுத்துச் செல்பவன்

 

942164_10200179493583662_1883303083_%252

ஈழநிலத்தின் நித்திய வடுவாயிருக்கும் ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து அய்ந்து நிமிடப் பயணத்தூரத்திலிருக்கும் ‘இயக்கச்சி’ கிராமத்தில் 1963-ல் பிறந்தவர் கவிஞர் கருணாகரன். ஈழப்போராட்டம் முனைப்புற்ற எண்பதுகளின் ஆரம்பத்தில் காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் தொழிலாளியாகயிருந்தபோது மார்க்ஸியத்தால் ஈர்க்கப்பட்டு, இடதுசாரிச் சிந்தனையுள்ளதாக அறியப்பட்ட ஈழப் புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) தன்னை இணைத்துக்கொண்டவர். 1990-ல் அந்த அமைப்பு கலைக்கப்பட்டதன் பின்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சு மற்றும் காட்சி ஊடகப்பிரிவுகளில் பணியாற்றியவர். 2009-ல் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசபடைகளும் புலிகளும் தமிழ் மக்களுக்கு இழைத்த பெருங் கொடுமைகளை, தடுப்பு முகாமிற்குள் இருந்தவாறே தனது எழுத்துகளால் உலகம் அறியச் செய்தவர்.

யுத்தத்திற்குள்ளும், அதிகாரத்தின் கடுமையான கண்காணிப்பிற்குள்ளும் வாழ்ந்தவாறே அவற்றை எதிர்கொண்டு முப்பது வருடங்களாக இடைவிடாது எழுதிக்கொண்டிருக்கும் கருணாகரன் ஆறு கவிதைத் தொகுப்புகளையும் (ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல், ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள், பலியாடு, எதுவுமல்ல எதுவும், ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள், நெருப்பின் உதிரம்) ‘வேட்டைத்தோப்பு’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் ‘இப்படி ஒரு காலம்’ என்ற கட்டுரைத் தொகுப்பையும் நமக்கு அளித்திருக்கிறார். அவரது நேர்காணல்களின் தொகுப்பு ‘ஒரு புகைப்படக்காரன் பொய்சொல்ல வேண்டியதில்லை’ என்ற தலைப்பில் விரைவில் வெளிவரயிருக்கிறது.

புஷ்பராணியின் ‘அகாலம்’ நூலுக்கு எழுதிய முன்னுரையில் "சுயவிசாரணை என்பதும், சாட்சியமளித்தல் என்பதும் பொறுப்புக்கூறுதல் என்பதும் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயற்பாடுகளாகும். இதைச் செய்யாமல் ஏற்பட்டிருக்கும் இந்தப் பெருந்தேக்கத்திலிருந்து போராட்டத்தை எப்படி முன்னகர்த்துவது?" எனக் கேட்டிருந்த கருணாகரன் இங்கே தன் பங்கிற்கு ஓர் உரையாடல் வெளியைத் திறந்திருக்கிறார்.

இந்த உரையாடல் மின்னஞ்சல் மற்றும் அலைபேசி வழியே நிகழ்த்தப்பட்டது.

-ஷோபாசக்தி
18. 06. 2014

நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். பணவசதி அதிகமில்லையென்றாலும் நிலம் தாராளமாக இருந்தது. தென்னையும் பனையும் நின்றன. வயல் இருந்தது. அய்யா, சிவராசா. ஆன்மீகவாதி. ஆனால், எந்த அமைப்பிலும் சேராதவர். அமைப்புகளில் நம்பிக்கையில்லாதவர். பற்றுகள் அதிகமில்லாதவர். நல்ல வாசிப்பாளர். அய்யாவின் சொந்த ஊர் அச்சுவேலிக்கு அருகில் உள்ள இடைக்காடு. வாசிகசாலையை உயிர்நாடியாகக் கொண்ட ஊர். அங்கே ஏற்பட்ட பழக்கம்தான் அய்யாவின் வாசிப்பு. அதனால் ஏராளம் புத்தகங்களை வைத்திருந்தார். தொழில் விவசாயம். இடைக்காட்டில் தோட்டம் செய்வது வேறு. இயக்கச்சியில் நெல் விதைப்பதும் பயிர் வளர்ப்பதும் வேறு. மழையை நம்பிய மானாவாரிச் செய்கை. மழை பிழைத்தால் வாழ்க்கையும் பிழைத்து விடும். அப்படித்தான் எல்லாமே பிழைத்தன. எனக்கு இப்பொழுதும் நினைவிருக்கிறது, எனக்கு 11, 12 வயதாக இருக்கும்போது அய்யா பழைய வயல் போதாதென்று புதுக்காடு வெட்டி வயல் விதைத்தார். பச்சைப் பசேல் என்று வளர்ந்த பயிர் ஒரு மாதத்திலேயே மஞ்சளாகிக் கருகியது. தோட்டம் செய்வதாக இருந்தால் தண்ணீர் பாய்ச்ச முடியாது. மணல் கண்டம். ஆகவே, துரவிலிருந்து பனையோலைப் பட்டையால் அள்ளி இறைக்க வேண்டும். சோளகக் காற்று எழும்ப முதல் பயிர்ப்போகத்தை முடித்திடுவது நல்லது. அதற்குப் பிறகென்றால், இறைத்துக் கட்டாது. அதைவிடக் கோடையில் துரவுகள் வற்றி விடும். அல்லது நீர் ஆழத்திற்குப் போய்விடும். ஆழத்துரவில் நீரள்ளிக் கால்நடையாக மேலேற முடியாது. இப்படியெல்லாம் சிரமப்பட்டுப் பயிர்வளர்த்தால், குரங்குத் தொல்லை. கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள் தோட்டத்திற்குள் நுழைந்தால் அத்தனை பயிரும் நாசம். குரங்குக்குக் காவல் இருந்து மாளாது. எங்கள் ஊரில் எல்லா விவசாயிகளும் கெட்டது இந்தக் குரங்குப் பட்டாளத்தால்தான்.

அது சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலம். பாணுக்குக் கியூவில் நின்ற சனங்களில் நானும் ஒருவனாக அதிகாலை நான்கு மணிக்கு சங்கக் கடை வாசலில் நின்றிருக்கிறேன். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் மழை பிழைத்தது. பயிரும் பிழைத்தது. அது பிழைத்தபிறகு - வேறு வழியில்லாமல் அய்யா கூலிக்குப் போனார். எட்டுப்பேர்கள் கொண்ட குடும்பத்தை கூலிக்குப்போய் வாழ வைப்பதைப்பற்றி யோசித்துப் பாருங்கள். ‘மூன்று வேளையும் சாப்பிட வேணும். அப்பிடிச் சாப்பிடக்கூடிய ஒரு வாழ்க்கை வேணும்’ என்பதே அந்த வயதில் என்னுடைய பெரிய இலட்சியமாக இருந்தது.

அம்மா சிவபாக்கியம். சிறுவயதிலேயே ஒரு கண்ணில் பார்வையிழந்திருந்தாலும் நல்ல வாசகி. பெரிய எழுத்து மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை என்று இதிகாசங்கள், காப்பியங்கள் தொடக்கம் விக்கிரமாதித்தன் கதைகள், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வசிந்தாமணி, நளவெண்பா, தேவார திருவாசகம் என்று எல்லாவற்றையும் படித்திருந்தார். பிறகு வந்த ஆனந்தவிகடன், சுடர், சுதந்திரன், கலைமகள், சாண்டில்யன், மு.வ, நா. பார்த்தசாரதி வரை தொடர்ந்து வாசித்தார். அம்மா அய்ந்தாம் வகுப்பு வரைதான் படித்தவர் என்று யாரும் சொல்ல முடியாது. தான் படித்த கதைகளையெல்லாம் அப்படியே எங்களுக்குச் சொல்வார். பிறகு அத்தைமாரும் ஒன்றுவிட்ட சகோதரியான மனோன்மணி அக்காவும் ஜெயகாந்தன், மணியன் என்று வாசித்தார்கள். அயலில் இருந்த இரத்தினசிங்கம், பத்மநாதன் இருவரும் வீரகேசரி பிரசுரங்கள் தொடக்கம் மாலைமதி வரை ஏராளம் புத்தகங்களை வாங்கினார்கள். நான் ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலை 14, 15 வயதில் வாசித்தேன். 

ஆறு பிள்ளைகளில் மூத்தவன் நான். இயக்கச்சியில் ஆரம்ப வகுப்புகளைப் படித்தேன். பிறகு பளை மகா வித்தியாலயத்தில் படித்தேன். படிக்கும்போதே அய்யாவுடன் தோட்டத்தில் வேலை செய்தேன். வயலில் உழவு, விதைப்பு, வயற்காவல், அறுப்பு, சூடடிப்பு என்று ஆயிரம் வேலைகள். இடையிடையே அய்யாவோடு கூலி வேலைக்கும் போனேன். போதாக்குறைக்கு, மாடு மேய்ப்பு, காடு வெட்டு, கட்டை பிரட்டு, துரவு வெட்டு, வீடு மேய்ச்சல், பனை மட்டை வெட்டு, தேங்காய் உரிப்பு, குழைவெட்டு, விறகு கொத்தல், வேட்டைக்குப் போதல், சந்தையில் வியாபாரம் என்று இன்னும் ஆயிரம் வேலைகள். இப்படியெல்லாம் செய்தே படித்தேன். படிக்கின்ற காலத்தில் நல்ல ஆசிரியர்கள் கிடைத்தார்கள். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளத்தான் எங்களுக்குத் தெரியவில்லை. எங்களை எப்படியாவது உருப்பட வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் எவ்வளவோ முயன்றார்கள். முறிந்தார்கள் என்றுகூடச் சொல்லலாம். எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது குழந்தை ம.சண்முகலிங்கம், சிவ பண்டிதர் க.கணபதிப்பிள்ளை போன்றவர்கள் எனக்கு ஆசிரியர்களாக இருந்தனர். ஆனால் என்ன பயன்? ஆனால், எங்களின் விதி வலியது. அவர்களை அது தோற்கடித்து விட்டது. 

மன்னாரில் மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் கட்டுமானப் பகுதியில் வேலை கிடைத்தது. அங்கே ஒரு வருடம் வேலை செய்தேன். தோதுப்படவில்லை. பிறகு ஊருக்கு வந்து உப்பளத்துக்கு வேலைக்குப் போனேன். அதுவும் சரிப்படவில்லை. பின்பு காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் வேலைக்குச் சேர்ந்தேன். 

இயக்கச்சி மிகத் தொன்மையான ஊராக இருந்தாலும் படித்துப் பட்டம் பெற்றவர்கள் என்று யாரும் இருக்கவில்லை. அப்பொழுது எட்டாம் வகுப்பு வரையுமான பள்ளிக்கூடம் மட்டுமே அங்கிருந்தது. பத்துப் பன்னிரண்டு ஓட்டு வீடுகள். மீதி அத்தனையும் ஓலை வீடுகள். மணல் ஒழுங்கைகள். பெரும்பாலும் கால்நடையாகத்தான் மற்ற இடத்துக்குப் போகமுடியும். சைக்கிள் ஓட்டமுடியாது. காடுகளில் உறைந்த தெய்வங்கள். என்னவோ தெரியவில்லை.. காடுகளில்தான் எல்லாக் கோயில்களுமே இருந்தன. தென்னைகள் நிறைந்த தோப்புகள். மீதிக் காடுகளிலும் வெளிகளிலும் ஏராளம் பனங்கூடல்கள். இடையிடையே சிறு குளங்களும் வயல்களும். ஊரில் தோட்டமும் வயலும் காட்டு வேலையும்தான் பெரும்பாலான ஆட்களுக்கு தொழில். கொஞ்சப்பேர் பனந்தொழிலுக்குப் போவார்கள். சீசனுக்கு உப்பள வேலைக்கும் சிலர் போனார்கள். 

பங்குனி தொடங்கி வைகாசி வரை கோயில்களில் குளிர்த்தியும் பொங்கலும் கூத்தும் பாட்டும் அமர்க்களமாக இருக்கும். பெரும்பாலும் குலக்கோயில்கள்தான். ஆவணியில் கோலாகலத் திருவிழாக்கள். அக்கம் பக்கம் என பத்துப் பன்னிரண்டு ஊர்கள் திருவிழாப் பங்கில் இருந்தன. இதில் சாதிப் பங்கும் உண்டு. வடமராட்சி கிழக்கும், பச்சிலைப்பள்ளியும் ஒன்றாக இருந்த காலமது. கடற்கரையிலிருந்தும் சனங்கள் ஊருக்கும் கோயில்களுக்கும் வருவார்கள். ஊரில் தாராளமாகத் தண்ணீர் இருந்தது. நல்ல தண்ணீரும் மண்வளமும் தாராளமான நிலமும் எல்லோருக்கும் இருந்தன. பெரிய தென்னந்தோட்டங்கள் எல்லாமே யாழ்ப்பாணத்தார்களிற்கு சொந்தமாக இருந்தன. சனங்களில் பாதிப்பேருக்குமேல் அந்தத் தோட்டங்களில்தான் வேலை செய்தார்கள். எனினும் சனங்கள் வறுமையில் வாடினார்கள். 

ஊரைப்பற்றி இன்னொன்றையும் சொல்ல வேண்டும். குலக்கோயில்கள் ஊரில் இருந்தன என்று சொன்னேன் அல்லவா. சாதிகள் நிறைந்திருக்கும் ஊரில் இப்படிக் குலக்கோயில்கள் இருப்பது வழமை. வீடுகளிலும் உறவுகளிலும் மட்டும் சாதி பார்க்கப்படவில்லை. கோயில்களில், பள்ளிக்கூடங்களில், பொதுக்கிணற்றில் என்று எல்லா இடமும் பிரிகோடுகள் தாராளமாக இருந்தன. இடையிடையே சாதிச்சண்டைகள் நடந்து பொலிசுக்கும் கோர்ட்டுக்கும் போனதும் உண்டு. ஒரு தடவை நடந்த சாதிச் சண்டையில் கிழக்குப் பகுதியில் இருந்த மக்கள் இயக்கச்சிச் சந்திக்கு வர முடியாமல், காட்டுப்பாதை வழியாக ஆனையிறவுக்குப் போய், அங்கிருந்தே பஸ் ஏறினார்கள். ஆனையிறவில் அப்பொழுது பொலிஸ் நிலையமும் சிறியதொரு இராணுவ முகாமும் இருந்தன. தங்களுக்கு கொஞ்சப் பாதுகாப்பை ஆமியும் பொலிசும் தரும் என்று கிழக்குப்பகுதி மக்கள் நம்பினார்கள். ஆனால், அங்கேயிருந்த தமிழ்ப் பொலிசார் இவர்களின் காட்டுவழியை மற்றப் பகுதியினருக்குக் காட்டிக் கொடுத்தார்கள். அவர்கள் காட்டில் காத்திருந்து இந்தப் பாதையால் வந்தவர்களைச் சுட்டனர். பிறகு பொலிஸ் பாய எல்லோரும் காட்டில் தலைமறைவாகித் திரிந்து நீதிமன்றத்தில் வெளிப்பட்டார்கள். இந்தப் பிரிகோடுகள் இன்னும் கூட மாறவில்லை. 

அப்பொழுது பொது அமைப்புகளிலும் உள்ளுர் அரசியலிலும் ஈடுபட்டவர்கள் எல்லோரும் ‘மேல்நிலை’யினராகவே இருந்தனர். கிராம சபை உறுப்பினர்களும் கிராமசபைத் தலைவர்களும் பொது அமைப்பின் நிர்வாகமும் இந்தப் ‘பெரியவர்களின்’ கைகளிலேயே இருந்தன. நான் பிறந்த காலத்தில் இருந்த மாதிரியே இன்னும் எனது கிராமம் உள்ளது. எந்தப் பெரிய முன்னேற்றமும் இல்லை. அப்போதாவது, ஊருக்குள் மோதல்களும் முரண்பாடுகளும் இடையிடையே இருந்தாலும் ஒட்டுறவிருந்தது. இப்பொழுது அதுவும் இல்லை.

  • 'தேனி' இணையத்தில் புலிகளின் வதைமுகாமில் அனுபவித்த சித்திரவதைகளைத் தொடராக எழுதிவரும் கொம்யூனிஸ்ட் மணியம் உங்களது ஊரவர், உறவினர். அப்போது கொம்யூனிஸ்ட் இயக்கம் உங்களது பகுதிகளில் செயலாற்றினார்களா?
நான் ஆரம்பப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அவர் சீனாவுக்குச் சென்று வந்ததாக நினைவு. அந்த அளவுக்கு சீன சார்பு இடதுசாரிய இயக்கச் செயற்பாட்டாளராக இருந்திருக்கிறார். அவருடைய தொடர்பினால் அவருக்கு நெருக்கமான சில தோழர்கள் இயக்கச்சியிலும் வந்து தங்கியிருந்திருக்கிறார்கள். ஆனாலும் பிற இடங்களில் நடந்ததைப்போல இயக்கச்சி, பளை, வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் எத்தகைய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளும் இடதுசாரிகளால் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. 1970-களில் வன்னியில் குறிப்பிடத்தக்க வேலைகளைச் செய்திருக்கிறார்கள். தென்பகுதியிலிருந்து வந்திருந்த மலையக மக்களுக்கு ஆதரவாக 'கழனி' என்ற சஞ்சிகையை வெளியிட்டிருக்கிறார்கள்.

பின்னாட்களில் என்னோடு அவர்கள் அறிமுகமாகியபோது இதைப்பற்றியெல்லாம் சொன்னார்கள். பிறகு கட்சி வேலைகளோடு யாழ்ப்பாணத்தில் புத்தகக்கடையும் வைத்திருந்தார் மணியம். பல இயக்கத்தவர்களும் மணியத்தோடு பழகினார்கள். தொடர்புகளை வைத்திருந்திருக்கிறார்கள். அந்த நாட்களில் நான் ஈரோஸில் இருந்தேன். சந்தித்துக்கொள்வோம். பேசுவோம். ‘வெளிச்சம்’ இதழின் ஆசிரியராக நான் இருந்தபோது கூட நாம் உரையாடிக்கொண்டேயிருந்தோம். துரதிர்ஷ்டவசமாக அந்தக் காலத்தில்தான் அவர் கைதாகினார். அவர் கைதாகியபோது அவருடைய மூத்த மகள் கைக்குழந்தை. குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவரை மீட்க உதவுமாறு கேட்க, புதுவை இரத்தினதுரையின் அலுவலகத்திற்கு அவருடைய மனைவி வந்திருந்த காட்சியை என்றும் மறக்க முடியாது. மணியம் விடுதலையானபோது அவரைப் பார்த்ததும் மறக்க முடியாத ஒரு துயர்க்காட்சியே. 

  • 1980-களில் பல தேசிய விடுதலைப் போராட்ட இயக்கங்கள் இயங்கி வந்தபோதும் ஈரோஸ் இயக்கம் உங்களது தேர்வானது எப்படி?
ஊரிலும் வேலைக்குப்போன இடங்களிலும் சந்தித்த பிரச்சினைகள் வெவ்வேறு வகையான அனுபவங்களைத் தந்தன. வெவ்வேறு இடங்களில் இருந்து வந்த, வேறு வேறான சமூகப் பின்புலங்களில் இருந்து வந்த மனிதர்கள் எனக்குப் புதிதான உலகங்களைத் திறந்தனர். இன்னொரு பக்கத்தில் 15, 16 வயதிலேயே எனக்குக் கடவுள் நம்பிக்கை குறையத் தொடங்கியது. விசுவாசமுடைய ஆன்மீகவாதியான அய்யாவுக்கு அவருடைய சொந்த வாழ்க்கையில் ஏராளம் துன்பங்களும் துயரங்களும் நேர்ந்தது ஏன் என்ற கேள்வி, பதில் இல்லாமல் வளர்ந்து கொண்டேயிருந்தது. தந்திரசாலிகளும் பொய்யர்களும் ஏமாற்றுப் பேர்வழிகளும் கயவர்களும் முன்னேறிக்கொண்டிருந்தனர். அவர்களே சந்தோசமாக இருந்தனர். இதெல்லாம் என்னை வேறு விதமாகச் சிந்திக்கத் தூண்டின. 

1982-ல் நான் காங்கேசன்துறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது நா. விஸ்வலிங்கம் அறிமுகமாகினார். விஸ்வலிங்கம் சோவியத் சார்புடைய கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். காங்கேசன்துறையில் நானும் அவரும் ஒரே வீட்டில் அருகருகாக இருந்த அறைகளில் தங்கியிருந்தோம். இருவருக்குமிடையில் நட்பு உருவாகி, தோழமையாக வளர்ந்தது. பலதையும் படித்தோம். விவாதித்தோம். நான் மார்க்ஸியத் தத்துவத்திலும் நடைமுறையிலும் ஈடுபாடுள்ளவனாக மாறினேன். விஸ்வலிங்கம் என்னுடைய பெயரில் ‘மல்லிகை’ சஞ்சிகைக்கு சந்தா கட்டினார். ‘தாயகம்’ இதழ்களை வாங்கிக்கொண்டு வந்தார். எனக்கு வேண்டிய புத்தகங்களையெல்லாம் எங்கெல்லாமிருந்தோ கொண்டுவந்தார். தன்னுடைய சிந்தனைக்குத் தோதாக இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவன் கிடைத்திருக்கிறான் என்ற மகிழ்ச்சி அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். அவருக்கூடாகவே ஈரோஸ் உறுப்பினர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. பவானந்தன், சின்னபாலா, நிர்மலன். ரவி (ஏழாலை), பெரிய சண் எனத் தோழர்கள் அறிமுகமாக ஈரோஸில் உள்ளீர்க்கப்பட்டேன். 

வர்க்க விடுதலைப் போராட்டத்துடன் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் சமாந்தரமாக எடுத்துச் செல்வது என்ற நிலைப்பாட்டை ஈரோஸ் சொன்னது. ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் அரச அதிகார இயந்திரத்தை மக்களுக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படாத வகையில் முடக்குவது என்ற நோக்கில் ஈரோஸ் செயற்பட்டது. அடிநிலை மக்களின் மீதான கரிசனைகள் அதிகமாகத் தெரிந்தன. மலையக மக்கள், முஸ்லிம் மக்கள், தமிழ் மக்கள், சிங்கள முற்போக்கு சக்திகள் என்போரை இணைத்து போராட்டச் சக்திகளாகவும் போராட்டத்தின் ஆதரவுச் சக்திகளாகவும் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஈரோஸ் கொண்டிருந்தது. பால் சமத்துவம் பேணவேண்டும் என்ற அக்கறையுமிருந்தது. இப்படியான விசயங்கள் ஈரோஸில் ஈர்ப்பை ஏற்படுத்தின. இயக்கத்தில் இணைந்த போது பெரும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. நெஞ்சு நிரம்பக் கனவுகளிருந்தன. வெல்லுவோம் என்ற உறுதியேற்பட்டது.

  • இயக்கத்திற்குள் உங்களது பங்களிப்புகள் எவையாயிருந்தன?
பெரும்பாலும் அரசியற் போராளியாகவே இருந்தேன். சில தாக்குதல் நடவடிக்கைகளில் மட்டுமே பங்கெடுத்திருக்கிறேன். ‘பொதுமை’ என்ற கொள்கை விளக்கப் பத்திரிகை, ‘நாங்கள்’ என்ற மாணவர் இதழ் உள்ளிட்ட ஈரோஸின் வெளியீடுகளுக்காக அவற்றின் ஆசிரிய பீடத்தில் செயற்பட்டிருக்கிறேன். பொதுமையை சின்னபாலாவுடன் நான், சூரி, பீற்றர் ஆகியோர் இணைந்து வெளிக்கொண்டு வந்தோம். இயக்கத்தின் வெளியீட்டுத்துறை என்றால், சுவரொட்டிகளை வடிவமைப்பது தொடக்கம் இயக்கத்தின் கொள்கைப் பரப்புரை சார்ந்த வேலைகள்வரை பலவாக இருக்கும். அவற்றைச் செய்தோம். கொஞ்சக்காலம் யாழ்ப்பாணத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கு வெளியே வன்னி, கிழக்கு மாகாணம், மன்னார் போன்ற இடங்களுக்கும் பயணம் செய்யும் போராளிகளையும் பொருட்களையும் இடமாற்றம் செய்யும் பணி. ஆனையிறவைக் கடக்க வேண்டும் என்றால் இயக்கச்சியின் பின்னால் பயணம் செய்ய வேண்டும். இந்தப் பயண வழியை நன்றாக அறிந்திருந்தவர்கள் என்ற காரணத்தினால், இந்தப் பணியை நான்கைந்து தோழர்கள் செய்ய வேண்டியிருந்தது. பிறகு பயிற்சி முகாமை நடத்தினோம். அதற்குப் பிறகு தென்மராட்சிப் பிரதேசத்தில் அரசியற்பணி. 

  • உங்களது நெருங்கிய தோழர் வே. பாலகுமாரன் குறித்து உங்களது மனப்பதிவுகள் - குறிப்பாக அவரது இலக்கிய ஈடுபாடுகள் குறித்து?
அவர் ஒரு துக்கந்தி்ன்னியாக, மற்றவர்களின் குறைகேள் மனிதராக, பிறரை ஆற்றுப்படுத்துகிறவராக, தோழமையில் கரைந்தவராக, இளைய தலைமுறையில் அதிக நம்பிக்கை கொண்டவராக இருந்தார். புஸ்பராணி தன்னுடைய சுயசரிதையான ‘அகாலம்’ நூலில் கூறுவதைப்போல ‘எப்போதும் எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று பாலகுமாரன் விரும்பினார். அதற்காகக் கடுமையாக உழைத்தார். ஆனால், அது சாத்தியமாகவேயில்லை’ என்றுதான் அவருடைய வாழ்க்கை இருந்தது. 

ஒருபோது, தன்னுடைய அமைப்பின் தோழர்களைக் காப்பாற்றுவதற்காக ‘ஈரோஸ் அமைப்பு கலைக்கப்படுகிறது’ என்று எடுத்துக்கொண்ட தீர்மானம் பிறகு ஒட்டுமொத்த மக்களுக்கே பாதகமாக மாறியதையிட்டுத் துக்கமடைந்தார். ஆனால், 1990-ல் அவர் எடுத்திருந்த அந்த முடிவு ஈரோஸின் தோழர்களைக் காப்பாற்ற உதவியது என்பதை மறுக்க முடியாது. இதனால் அவர் அன்று ஆறுதலடைந்தார். ஆனால், அவருடைய அந்த முடிவையிட்டுப் பல தோழர்கள் அன்று பாலகுமாரன் மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தனர். என்றாலும் அவர்கள் எல்லோரும் பாலகுமாரனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்றுதான் சொல்வேன். ஒருபோது, பல தோழர்களைக் காப்பாற்றுவதற்காக அவர் எடுத்த அந்தத் தீர்மானம் பின்னாளில் அவரைக் காப்பாற்றவில்லை, அது அவருக்குப் பாதகமாகியது என்ற வரலாற்றின் துயரத்தையும் கசப்போடு இங்கே பதிவுசெய்கிறேன். தன்னைப் பலியிட்டே அவர் மற்றவர்களை மீட்டார் அல்லது பாதுகாத்தார்.

தன்னுடைய போராட்ட வாழ்க்கையையிட்டு பின்னாளில் அவர் மிக மிக வருந்தினார். பொருந்தாத இடத்தில் தான் வந்து சேர்ந்திருப்பதாக எப்பொழுதும் துக்கப்பட்டுக்கொண்டிருந்தார். இது துக்கத்தையும் ஒருவிதமான பற்றற்ற – விடுபடல் நிலையையும் அவரிடம் உண்டாக்கியது. இடையிடையே அவரிடம் ஏனைய தோழர்கள் அவதானித்த அல்லது அவரிடம் குறையெனக்கண்ட ‘பற்றற்ற மனநிலை’ மற்றும் ‘விலகல் நிலை’ இதன்பாற்பட்டதே. ஏற்பட்ட தோல்விகளையிட்டு உண்டான துக்கத்தை விட “தோல்விக்கும் தோல்விகளுக்கான தவறுகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறோம். தவறுகளுக்கெல்லாம் சாட்சியாக – ஒத்தோடும் உடந்தையாளர்களாக இருந்திருக்கிறோம்“ என்ற குற்றவுணர்வினால் அவர் அமைதியற்றிருந்தார். இதனால் கொந்தளிக்கும் மனதோடு அவருடைய நாட்கள் கழிந்து கொண்டிருந்தன. பிந்திய வாழ்க்கையை தன்னுடைய தண்டனைக் காலம் என்றே பாலகுமாரன் கருதினார். ஒரு பக்கத்தில் ஒடுக்குமுறையாளர்களின் நெருக்கடி. இன்னொரு பக்கத்தில் விடுதலை விரும்பிகள் என்போரினால் உண்டாகிய நெருக்கடிகள். அதிகாரத்தின் சுவை எங்கும் பரவிக்கொண்டிருந்தது. இது நல்லதல்ல என்று கருதினார் பாலகுமாரன். இதையெல்லாம் அவர் ஓரளவுக்கு பகிரங்க நிலையில் பலரிடமும் மனம் விட்டுச் சொல்லித் துக்கப்பட்டிருக்கிறார். கடுமையாக விமர்சித்திருக்கிறார். எந்த நிலையிலும் பகிரங்கமாகப் பேசுவதன் மூலமாக தனக்கான நெருக்கடிகளை வலிந்து உண்டாக்கிக்கொண்டேயிருந்தார். ஒரு பகிரங்க மோதலை உண்டாக்கவே அப்படிச் செய்கிறேன் என்று சொன்னார். அதேவேளை அப்படிப் பேசுவதே அவருடைய நெருக்கடிகளை நீக்குவதாகவுமிருந்தது. யாரும் பேசமுடியாத – பேசவே விரும்பாத ஒரு சூழலில் இப்படி ஒரு மனிதர் பேசிக்கொண்டிருப்பது அவசியம் என்றார். அது சரியென்றே எனக்கும் பட்டது. சில சந்தர்ப்பங்களில் அவர் தனக்கான தண்டனையாளனாக, தன்னைத்தானே மறுப்போனாக இருந்திருக்கிறார். சனங்களின் துயரத்தைத் துடைக்க வந்த நாங்கள் சனங்களுக்குச் சுமையாக மாறியிருக்கிறோம், சனங்களின் விடிவுக்காக போராடப் புறப்பட்டவர்கள் சனங்களின் சுதந்திரத்தை மறுப்பவர்களாக மாறியிருக்கிறோம், யாரும் கேட்காமல் நாங்களாகவே போராட வந்தோம், பிறகு. நாங்களே போராட்டத்தின் குறுக்கே நிற்கிறோம் என்றெல்லாம் வேதனைப்பட்டார். மரணத்தின் மூலமே இந்தத் தண்டனையிலிருந்து விடுபட முடியும் என்று அவர் சொன்னபோது அவர் கொண்டிருந்த துயரத்தின் பாரத்தை உணர்ந்தேன். 

என்றாலும் அவர் நம்பிக்கையூட்டும் விதமாகவே பொதுப்பரப்பில் பேசிக்கொண்டிருந்தார். இது ஒரு சுயமுரணாகத் தோன்றியது. இதைப்பற்றி அவரிடமே கேட்டேன். தன்னுடைய துக்கங்களை மற்றவர்களிடம் இறக்கி வைப்பது ஒரு போதுமே நல்லதல்ல. அவர்களுடைய நம்பிக்கைகளை வளர்க்க வேண்டுமே தவிர, அவர்களை நம்பிக்கையீனமடையச் செய்யக் கூடாது என்றார். தன்னுடைய மன உளைச்சலை யாரிடமும் ஏற்றிவிட அவர் விரும்பவில்லை. அத்தனை துயரங்கள், ஏமாற்றங்களின் மத்தியிலிருந்தும் தான்கூட மீண்டு விடவேண்டும் என்றே முயன்றார். இதற்காக, தான் கேட்கும் பாடல்களைக்கூட உற்சாகமூட்டும் விதமாகவே தெரிவு செய்தார். எத்தகைய தவறுகளிலிருந்தும் நாம் மீண்டுவிட முடியும், சரியை நோக்கித் திரும்பி விட முடியும் என்ற நம்பிக்கையும் அவரிடமிருந்தது. உலகைப் புதிய முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பியது அவருடைய மனம். எதற்கும் எல்லைகளை அவர் வகுத்துக்கொண்டதாக நான் உணரவில்லை. எவரிடத்திலும் எதனிடத்திலும் அவருக்குப் பேதங்கள் இருந்ததில்லை. தன்மீது படிந்துறைந்த அடையாளங்களையெல்லாம் துறந்து விடத் தவித்தார். ஆனால், அவர் நினைத்ததைப்போல எதுவும் நடக்கவில்லை. அப்படி நடப்பதற்கு எதுவும் எளியதாக இருக்கவுமில்லை. தன்னைச் சமநிலைப்படுத்திக் கொள்வதற்காக கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தார். இதற்காக நிறையப் படித்தார். மனித வாழ்க்கையின் விநோதத்தையும் புதிர்கள் நிறைந்த சமூக மனதையும் அறிந்து கொள்ளுவதில் அவருக்கு ஈர்ப்பு இருந்தது. அதற்கு வாசிப்பதைத் தேர்ந்தார். நான் பார்த்த அளவில் போராட்டத்தின்போது அவரை விட அதிகமாக வாசித்தவர்கள் இல்லை. புதிதாக எழுத வந்தவர்களை ஊக்கப்படுத்தினார். புதிய சிந்தனைகளை அவர்களிடமிருந்து கோரினார்.

  • நீங்கள் புலிகளின் பக்கமாக நகர்ந்ததற்கான காரணங்கள் எவை?
1990 யூன் மாதத்தில் ஈரோஸ் இயக்கம் கலைக்கப்படுவதாக இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான தோழர் வே. பாலகுமாரன் அறிவித்தார். ஈரோஸ் இயக்கம் புலிகளோடு இணையவில்லை. இணைக்கப்படவும் இல்லை. ஈரோஸ் கலைக்கப்பட்ட பிறகு, விரும்பியவர்கள் சுயாதீனமாக எந்த முடிவையும் எடுக்கலாம் என்று சொல்லப்பட்டது. சிலர், புலம்பெயர்ந்து நாட்டைவிட்டுப் போனார்கள். சிலர் கொழும்பில் நின்றனர். சிலர் ஒதுங்கிக் கொண்டனர். சிலர் இந்தியாவுக்குச் சென்றனர். மிகச் சிலர் மட்டுமே புலிகளோடு இணைந்தனர். 

நானும் ஒதுங்கியிருந்தேன். யுத்தம் தீவிரமாகி புலிகளின் வசமே எல்லாம் என்ற நிலை உண்டானது. நான் ஊடகத்துறையைச் சேர்ந்தவன். ஈரோஸிலும் பெருமளவுக்கு அதையே செய்தவன். ஆகவே ஊடகமொன்றில் வேலை செய்ய வேண்டும் என்ற நிலை. அதேவேளை எனக்கு நாட்டை விட்டு வெளியேறக்கூடிய வசதியோ மனநிலையோ குடும்பச்சூழலோ அமையவில்லை. முக்கியமாக என்னுடைய திருமணம் என்னைத் தனிமைப்படுத்தி வைத்திருந்தது. எப்படியோ புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில்தான் வாழ வேண்டும் என்ற நிலை. அப்பொழுது ஈரோஸ் உட்படப் பிற அமைப்புகளில் இருந்தவர்களை விடுதலைப் புலிகள் தங்களிடம் மெதுவாக உள்ளீர்த்துக்கொள்ளத் தொடங்கினர். இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துக்குப் பின்னரான காலகட்டத்தில் புலிகளிடம் ஒரு மாறுதலான நிலையும் உண்டாகியிருந்தது. அரசொன்றை நோக்கிய எத்தனிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனால் பல்வேறு தரப்பினரையும் தம்மோடு இணைத்துக்கொள்ளக்கூடிய நிலைமைகள் உருவாகின. இதன்படி பலருக்கும் வெளி வேலைகள் கொடுக்கப்பட்டன. என்னையும் அவர்கள் ஏதோ ஒருவகையில் உள்ளீர்க்க முயற்சித்தனர். எங்கள் பிரதேசத்தில் இருந்த பொறுப்பாளர் செல்வராஜா - எங்கள் ஊர்க்காரர், பின்னர் தளபதியாக இருந்தவர்- அடிக்கடி என்னை அழைத்தார். தன்னுடைய வேலைகள் சிலவற்றைச் செய்து தரமுடியுமா என்று கேட்டு பொதுவான வேலைகளை ஒப்படைத்தார். பிறகு என்னிடம் அடிக்கடி வரத் தொடங்கினார். 

1991-ல் கவிஞர் புதுவை இரத்தினதுரை தொடர்பு கொண்டு, ‘ஒரு கலை - இலக்கிய சமூக இதழை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன். பலரும் அதில் பங்குபற்றுகிறார்கள். இப்படிப் பலரையும் இணைத்துப் பொதுவான ஒரு நிலைப்பாட்டை உருவாக்க விரும்புகிறோம். பலரும் பங்கேற்பதன் மூலமாகத்தான் நாம் ஒரு பொதுத்தளத்தை உருவாக்கலாம். நீ எனக்கு உதவியாக இருந்தால் நல்லது’ என்றார். அப்பொழுது புதுவை இரத்தினதுரை புலிகளின் கலை - பண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பாளராக இருந்தார். புதுவை ஏற்கனவே பழக்கமானவர். இடதுசாரி இயக்கத்தில் இருந்தவர். கவிஞர். ஆகவே, முற்போக்கான முறையில் சில காரியங்களைச் செய்யலாம் என்ற நம்பிக்கை பலருக்கும் ஏற்பட்டது. இதனால் பலரும் அவருடன் ஒத்துழைத்தனர். ஈரோஸின் முடிவுக்குப் பிறகு, அமைப்புகள் எதிலும் இணைவதில்லை என்ற தீர்மானத்தில் இருந்த எனக்கு, புதுவையின் அழைப்பும் செல்வராஜாவின் அழைப்பும் பெருங்குழப்பத்தை உண்டாக்கின.

புதுவை இரத்தினதுரையின் அழைப்பின்போது இதையெல்லாம் தெளிவாகச் சொன்னேன். என்னுடைய நிலையையும் நிலைப்பாட்டையும் புரிந்து கொண்ட புதுவை சம்மதித்தார். ‘உன்னுடைய சுயாதீனத்தை எந்த வகையிலும் இந்தப் பணி பாதிக்காது. உனக்குச் சுதந்திரமுண்டு. நான் அதற்குப் பொறுப்பு’ என்றார். இதற்கு முன்பு பாலகுமாரனிடமும் சின்னபாலாவிடமும் இதைப்பற்றிப் பேசியிருந்தேன். அவர்கள் என்னுடைய நிலைப்பாட்டை ஆதரித்தனர். என்றாலும் இது எந்த அளவுக்குச் சாத்தியமாகும் என்ற கேள்விகள் அவர்களிடமிருந்தன. அமைப்பில் இணைந்து கொள்வதில்லை என்ற என்னுடைய நிலைப்பாட்டில் நான் உறுதியாகவே இருப்பது என்று முடிவு செய்து கொண்டேன். ஊரில் இருந்து நெருக்கடிப்படுவதை விட, புதுவை இரத்தினதுரையுடன் இணைந்து இதழில் வேலையைச் செய்வது பரவாயில்லை என்று பட்டது. 

இடையிடையே எனக்கும் புதுவை இரத்தினதுரைக்குமிடையில் சில அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டாலும் நாங்கள் மிக நெருக்கமான நண்பர்களாக, தோழர்களாக, சகோதரர்களாக இருந்திருக்கின்றோம். அவர் சொன்னதைப்போல இறுதிவரை என்னை மிகக் கௌரவமாக மதித்து நடந்து கொண்டார். ஒரு மூத்த சகோதரனாக என்மீது அதிக கரிசனையோடிருந்தார். என்னையிட்டு இயக்கத்திலும் வெளித்தளத்திலும் உண்டாகிய விமர்சனங்கள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் என் பொருட்டு அவரே தாங்கினார், பொறுப்பெடுத்தார். ‘நீ கொஞ்சம் அவதானமாக நடந்து கொள், கண்டபடி எல்லாவற்றையும் எல்லாரிடமும் கதைக்காதே’ என்று கூட எச்சரித்திருக்கிறார். 

  • புலிகள் இயக்கத்திற்குள் உங்களது அனுபவங்கள் எவ்வாறிருந்தன?
நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் அல்ல. ஆகவே புலிகளின் உறுப்பினர் ஒருவருடைய அனுபவம் என்னிடமில்லை. அதாவது நான் உள் ஆள் அல்ல. வெளி ஆளே. கலை - இலக்கிய சமூக இதழ் ஒன்றை பல்வேறு தரப்பினரையும் இணைத்து வெளியிடும் பணியே என்னுடையது. ஊடகத்துறையிலும் இலக்கியத்திலும் பரிச்சயமுள்ளவனாக நான் இருந்ததால், இந்தப் பணியைச் செய்யக்கூடியதாக இருந்தது. இதனையே அவர்களும் விரும்பினர். பிறகு, அவர்கள் ஒரு தொலைக்காட்சியை ஆரம்பிக்க முயன்றபோது அதற்கான ஆயத்தப்பணிகளில் இணைந்திருந்தேன். ஓர் எல்லைவரையில் அவர்களுடன் நெருங்கி வேலை செய்தவன் என்ற வகையிலும் எதையும் அவர்களிடம் வெளிப்படையாகவே சொல்லும் ஒருவன் என்றவகையிலும் என்னைப்பற்றி மதிப்பார்ந்த அபிப்பிராயம் அவர்களிடம் இருந்தது. அதைப்போல எனக்குத் தோன்றுவதையெல்லாம் பொருத்தமானவர்களிடம் நேரடியாகச் சொல்லியும் வந்தேன். அந்த அடிப்படையில் ஒரு உறவும் வளர்ந்திருந்தது. 

இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்தின் பின்பான காலத்தில் புலிகள் தங்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசொன்றை நிறுவத் தொடங்கியிருந்தனர். அரசொன்றை உருவாக்கும்போது ஏராளமான சவால்களும் குணமாற்றத் தேவைகளும் புலிகளுக்கு ஏற்பட்டன. இது புலிகளுக்கு மட்டுமல்ல, எந்தப் போராட்ட அமைப்புக்கும் ஏற்படும் ஒரு நிலை. ஒரு யதார்த்தம். ஒரு நிர்ப்பந்தம். ஆகவே ஏற்கனவே புலிகளிடமிருந்த பல விடயங்களையும் கடும்போக்குகளையும் புலிகள் மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. பிரபாகரன் புதிய – வேறுபட்டதொரு - அரசையும் ஆட்சிமுறையையும் நடைமுறைப்படுத்த விரும்பினார். அதன்படி அவரையும் மீறிப் பலவற்றிலும் நெகிழ்ச்சிகள் உண்டாயின. இந்த நிலையில் என்னைப்போன்ற பலருடைய கருத்துகளுக்கும் ஓரளவு இடமளிக்கப்பட்டது. 

இந்தக் காலப்பகுதியில் இயக்கத்தினுள்ளே பல விதமான போக்குகளை உடையவர்கள் வெளிப்படையாகவே இயங்கத் தொடங்கினர். சிலர் பெரியாரிஸ்டுகளாக இருந்தனர். சிலர் பெண் விடுதலையாளர்களாக இயங்கினர். சிலர் பெண்விடுதலைக்கெதிரான சிந்தனையைக் கொண்டிருந்தனர். சிலர் பிரதேசவாதிகளாக இருந்தனர். சிலர் பிரதேசவாதத்தைக் கடந்தவர்களாக இருந்தனர். சிலர் தீவிர தேசியவாதிகளாகச் செயற்பட்டனர். சிலர் இடதுசாரி நிலைப்பட்டவர்களாக இருந்தனர். சிலர் இயக்க நலனே முதன்மையானது, இயக்கம் பலமாக இருந்தால்தான் மக்களுக்காகப் போராட முடியும் என்றனர். சிலர் மக்கள் நலனே முக்கியமானது, மக்களுக்காகவே இயக்கமும் போராட்டமும், மக்களின் அபிப்பிராயம் நன்றாக இருந்தாலே இயக்கமும் போராட்டமும் வளரும் என்று சிந்தித்தனர். இப்படிப் பலவிதமான சிந்தனைப் போக்குடையவர்களும் இயங்கக் கூடிய ஒரு வெளி மெல்ல மெல்ல உருவாகி வந்தது. அரசொன்றை நோக்கிய வளர்ச்சியின் போது இதெல்லாம் நிகழ்வது தவிர்க்க முடியாதது. 

பல்வேறு பட்ட சிந்தனையை உடையவர்களும் தமக்கான வெளிகளில் வேலை செய்யக் கூடியதாக, இயங்கக் கூடியதாக இருந்தது. இந்த நிலை வளர்ச்சியடைந்து ஒரு புதிய நிலையை எட்டவேண்டும் என்று பலரும் விரும்பினர். அப்படி எதிர்பார்த்தனர். இதற்கு ஏற்றமாதிரி, புலிகளிடத்திலும் பலவிதமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. உதாரணமாக, 1990-ல் முஸ்லிம்களை வடக்கிலிருந்து கட்டாயமாக வெளியேற்றிய புலிகள் பின்னர் அந்த முடிவு தவறானது என்று சொன்னது மட்டுமல்லாமல் அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டதும் உண்டு. அதைப்போல, முன்னர் பரம எதிரிகளாகக் கருதிய பலரை பின்னாட்களில் அரவணைத்துச் செல்ல முற்பட்டனர். மாற்றுக் கருத்துரைப்போரைச் சகித்துக்கொள்ளும் நிலையும் மெல்ல மெல்ல உருவாகி வந்தது. முன்னர் தடைசெய்யப்பட்டிருந்த ‘சரிநிகர்’, ‘தினமுரசு’ போன்ற பத்திரிகைகள் உள்ளே வரத்தொடங்கின. கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ தொடக்கம் புலிகளைக் கடுமையாக விமர்சித்த ஷோபாசக்தி, சக்கரவர்த்தி போன்றோரின் புத்தகங்கள் வரை புலிகளுடைய புத்தக நிலையங்களில் விற்பனையாகின. போராளிகள் பலவிதமான புத்தகங்களையும் வாசிக்க அனுமதிக்கப்பட்டனர். 

என்றாலும் மையப்பகுதி தன்னுடைய அடிப்படையான சிந்தனைப்போக்கிலிருந்து விடுபடவில்லை. இருந்தபோதும் வரலாற்றுரீதியாக மாற்றங்கள் ஏற்படுவதை மையப்பகுதியினால் கட்டுப்படுத்த முடியாது. ஒன்றில் மாற்றங்களைக் குறித்து மையப்பகுதி சிந்திக்க வேண்டும், அல்லது மாற்றங்கள் மையப்பகுதியை மாறி வருமாறு நிர்ப்பந்திக்கும் என்று எதிர்பார்த்தேன். இதுதான் விதியாகும். எனவே இதில் ஏதாவது ஒன்று நிகழும் என்று நம்பினேன். 

  • முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதற்காகப் புலிகள் உளப்பூர்வமாகவே வருந்தியிருந்தால், மன்னிப்புக் கேட்டபின்பு வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முஸ்லிம்கள் மீளவும் குடியேறுவதை புலிகள் அனுமதித்தார்களா? இந்த மன்னிப்புப் படலத்தின் பின்பும்கூட கிழக்கிலும் எல்லைப்பகுதிகளிலும் முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டார்களே?
இது ஒரு சிக்கலான நிலை. தங்களின் தவறை புலிகள் உணர்ந்திருந்தபோதும் அதைத் திருத்திக்கொள்வதற்கும் அதற்குப் பரிகாரம் காண்பதற்குமான சூழல் உருவாகியிருக்கவில்லை. தொடர்ந்துகொண்டிருந்த போர் இதற்கெல்லாம் வாய்ப்பளிக்கவில்லை. முஸ்லிம்களிடம் புலிகள் மன்னிப்பைக் கோரியது சமாதான முன்னெடுப்புக் காலத்திலேயே. அப்போதுதான் அவர்கள் முஸ்லிம் கொங்கிரஸையும் சந்தித்தனர். தொடர்ந்து வடக்குக் கிழக்கில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்தனர். ஆனாலும் அவர்களில் ஒருசாராரிடம் தொடர்ந்தும் முஸ்லிம் விரோதப் போக்கிருந்தது உண்மை. குறிப்பாகக் கிழக்கு மாகாணப் போராளிகள் பலரிடம் இதை வெளிப்படையாகவே அவதானித்திருக்கிறேன். வடக்கிலும்கூட இத்தகைய மனநிலை உடையவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்தனர். முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி நாம் பேசினால், அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நியாயப்படுத்துவார்கள். ‘வடக்கில் இருந்து கொண்டு நீங்கள் இப்படிப் பேசலாம், அங்கே கிழக்குக்கு வந்து பாருங்கள். எப்படியெல்லாம் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியும்’ என்பார்கள். இதை நாம் மறுத்து, ‘ தமிழர் தரப்பிலும் தவறுகள் நிகழ்ந்திருக்கிறது தானே’ என்றால் அதை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதனால், எதிர்பார்த்த மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு வாய்ப்புகள் ஏற்படவில்லை. புலிகளின் தலைமை இதற்கான முயற்சிகளை இன்னும் அழுத்தமாக முன்னெடுத்திருக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. இதேவேளை முஸ்லிம்களுடன் உறவைக்கட்டியெழுப்ப வேண்டும் என்று உள்ளே பலர் வலியுறுத்தி வந்தனர். 

இங்கே நீங்கள் மேலும் ஒரு விடயத்தைக் கவனிக்கலாம்... புலிகளிடத்தில் மட்டுமல்ல, இப்பொழுதுகூட மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், அம்பாறை, கல்முனை போன்ற இடங்களுக்குப் போனீர்கள் என்றால், அங்கேயுள்ள தமிழ் மக்களில் அநேகமானவர்கள் முஸ்லிம்களிடம் கோபமாக – விரோத மனப்பாங்கோடு இருப்பதைக் காணலாம். அதேபோல தமிழ் மக்களைக் குறித்து எச்சரிக்கை உணர்வோடு, சந்தேகத்தோடு , அச்சத்தோடு, விரோதத்தோடு முஸ்லிம்கள் உள்ளதையும் அறிவீர்கள். இதைச் சிலர் மூடிமறைக்கலாம். ஆனால், இதுதான் உண்மை. உள்ளே சூடு ஆறாத தணலாகக் கொதிநிலையில் இந்தப் பிரச்சினை உள்ளது. இதைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் எந்தத்தரப்பிலும் முறையாக அப்பொழுதும் மேற்கொள்ளப்படவில்லை, இப்போதும் நடைபெறவில்லை. 

போர் நடந்து கொண்டிருந்த சூழலில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மட்டுமல்ல, வெளியேறிச் சென்ற தமிழர்கள் திரும்பி வரக்கூடிய சூழலும் உருவாகவில்லை. பதிலாக புலிகளின் பகுதியை விட்டு இன்னும் இன்னும் வெளியேறவே மக்கள் விரும்பினர். ‘பாஸ்’ நடைமுறையைப் பயன்படுத்தித்தான் மக்களைப் புலிகள் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர்.  

தங்களிடமுள்ள விரோதத்தைப் பிரயோகித்துக்கொள்வதற்கு போர் பலருக்கும் வாய்ப்பளித்தது. இதனால் நீங்கள் குறிப்பிட்ட மாதிரியான தவறுகளும் பிழைகளும் குற்றங்களும் தாராளமாகவே நடந்தன. எல்லாத் தவறுகளுக்குமான தண்டனையாகவே இறுதி நிகழ்ச்சிகள் அமைந்தன. 

  • புலிகள் இயக்க அணிகளிற்குள் இலக்கியச் செயற்பாடுகள் எப்படியிருந்தன? உங்களது இலக்கியச் சகாக்களாக யார் இருந்தார்கள்?
நான் முன்னரே சொன்னதைப்போல அமைப்பினுள்ளே பலவிதமான சிந்தனைப் போக்குடையவர்களும் நிலைப்பாடுகளை உடையோரும் இருந்தனர். இதனால் பகிரங்கமாகவே உள் மோதல்களும் உள் முரண்களும் அணிகளும் இருந்தன. அமைப்புக்கு வெளியிலும் இந்த மாதிரியான வெவ்வேறு சிந்தனை, ரசனை, இலக்கிய நோக்கு உள்ளவர்கள் இயங்கினர். அவரவர் தமக்குத் தமக்குச் சாத்தியமான இலக்கியப் போக்கினைக் கொண்டனர். இதற்குத்தோதாக இயக்கத்தினுள்ளேயே பலவிதமான ஊடகங்கள் இயங்கின. மேலும் மேலும் புதிய புதிய வெளியீடுகள் உருவாகிக் கொண்டேயிருந்தன. அதற்கேற்றமாதிரிப் போட்டிகளும் பகைமையும் உண்டாகியிருந்தது. 

என்னுடைய இலக்கியப் பணிகளுக்கும் போக்குகளுக்கும் அமைவாக பாலகுமாரன், புதுவை இரத்தினதுரை, அன்ரன் பாலசிங்கம், கு.கவியழகன், மருதம், மலைமகள், கலாநிதி க.சோமஸ்கந்தன், வளநாடன், சேரலாதன், தமிழ்க்கவி, தூயவன், பொபி. பேப்பர் ரவி போன்ற பலர் இருந்தனர். 

  • புலிகள் இயக்கத்தில் மாற்றுக் கருத்துகளையும் விமர்சனங்களையும் சகித்துக்கொள்ளும் பண்பு உங்கள் காலத்தில் எவ்வாறிருந்தது?
1990-களில் இருந்த நிலை, 2000-களில் இன்னும் வளர்ச்சியடைந்தது. மாற்றுக்கருத்துள்ளோரையும் மாற்று ஊடகங்களையும் சகித்துக்கொள்ளும் – ஏற்றுக்கொள்ளும் நிலை சற்று வேகமாக உருவாகி வந்தது. ஆனையிறவு வெற்றி புலிகளைப் பற்றிய அபிப்பிராயத்தைப் பலரிடமும் மாற்றியமைத்தது. அதுவரையிலும் புலிகளுக்கு எதிர்முனையில் நின்ற கருத்தாளர்களில் ஊடகவியலாளர் தராகி சிவராம் உள்ளிட்ட பலர் புலிகளுடன் நெருக்கமாகத் தொடங்கினர். சரிநிகர். தினமுரசு போன்ற பத்திரிகைகள் தடை நீக்கப்பட்டு வன்னியில் விற்பனையாகின. சம்மந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்ற பிறநிலை அரசியல்வாதிகள் எல்லோரையும் ஏற்றுக்கொண்டு அல்லது இவர்கள் எல்லாம் உள்வரக் கூடிய ஒரு நிலையைப் பேண வேண்டும் என்ற எண்ணம் புலிகளிடம் உருவாகியிருந்தது. துரோகி – தியாகி என்ற புனித எல்லை பிரிப்பைக் கைவிடும் நிலை ஏற்பட்டது. ஆனால், இவையெல்லாம் தம்மை மீறிப்போவதையும் அவர்கள் விரும்பவில்லை. தங்களுடைய பிடி தளர்வதை புலிகள் ஒருபோதும் விரும்புவதில்லை, அதற்கு அனுமதிப்பதுமில்லை என்பது நீங்கள் அறிந்ததே.

  • மாற்றுக் கருத்துள்ளோரைச் சகிக்கும் பண்பு புலிகளிடம் வளர்ந்தது, ஆனால் மாற்றுக் கருத்தாளர்கள் தங்களை மீறிப் போவதை அவர்கள் விரும்பவில்லை என்பது முரணான நிலையல்லவா. மாற்றுக் கருத்தாளர்கள் எனச் சொல்லப்படுபவர்கள் புலிகளுடைய நிலைப்பாட்டையும் அதிகாரத்தையும் அடிப்படையில் ஏற்றுக்கொண்டால் அவர்களிற்கு ‘கருத்துச் சுதந்திரம்’ வழங்கப்பட்டது என்றுதானே இதை எடுத்துக்கொள்ளவேண்டும்? மாற்றுக் கருத்தாளர்கள் புலிகளின் அதிகாரத்தைக் கடந்து சென்றபோது அவர்கள் கொல்லப்பட்டது உண்மைதானே.  நீங்கள் குறிப்பிடும் காலப்பகுதிகளை ஒட்டித்தானே சின்னபாலா, கேதீஸ், அதிபர் கணபதி இராசதுரை, சபாலிங்கம் எல்லோரும் புலிகளால் கொல்லப்பட்டார்கள். 2002-க்குப் பின்னான சமாதான காலத்தில் மட்டும் புலிகள் 400-க்கும் மேற்பட்ட மாற்றுக் கருத்தாளர்களையும் மாற்று அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் கொன்றொழித்திருப்பதற்கு சாட்சியமாக சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளின் ஆவணங்களுள்ளன. இதிலெங்கே இருக்கிறது மாற்றுக் கருத்துகள் மீதான கரிசனையும் சுதந்திரமும்?
உண்மை. ஆனாலும் தொடக்ககாலப் புலிகளுக்கும் நாம் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கும் 1995-க்குப் பிந்திய புலிகளுக்கும் அதற்குப் பிறகு 2002-க்குப் பிறகான புலிகளுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தன. நீங்களும் நானும் குறிப்பி்ட்டுள்ளதைப்போல, மாற்றுக்கருத்தாளர்களை அவர்கள் தங்கள் வரையறைக்குள் - அதிகார எல்லைக்குள் சமரசப்படுத்தி வைத்திருந்தது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே. இதனால் பின்னாளில் புலிகளுடன் மென்போக்கை அல்லது சாய்வுப்போக்கைக் கொண்ட தராகி சிவராம் போன்றவர்கள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்கள். இப்படிப் புலிகளிடம் சாய்ந்தால் பிறகு எப்படி மாற்றுக்கருத்தாளராக – மாற்றுக்கருத்துகளை முன்வைக்கக்கூடியதாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுவதும் நியாயமானதே. 

இதேவேளை வெளியரங்கில் இல்லாமல், உள்ளரங்கில் கருத்துகளைச் சொல்வோரையும் விமர்சிப்போரையும் புலிகள் ஏற்றுக்கொண்டனர். உள்ளரங்கில் முன்வைக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் முழுமையாக இல்லாது விட்டாலும் பல மாற்றங்களைச் செய்யத் தலைப்பட்டனர். இதனால், தங்களுக்குள் மாற்றுக் கருத்துக்களை வைத்திருந்தவர்களும் சில விட்டுக்கொடுப்புகளுடன் அல்லது மாற்றங்கள் நிகழும் என்ற அடிப்படையில் புலிகளுடன் இணைந்து வேலை செய்தனர். ஆனால் யாராக இருந்தாலும் தங்கள் கருத்துக்கு ஆதரவாக செயற்பட்டவர்களையே புலிகள் அனுமதித்தனர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. ஆகவே முழு அளவில் மாற்றுக் கருத்துடையவர்களை அனுமதித்தார்கள் எனச் சொல்லமுடியாது. அப்படியானவர்கள் தொடர்ந்தும் குறிவைக்கப்பட்டார்கள் என்பது உண்மை.

வெளியரங்கில் முன்வைக்கப்படும் கருத்துகளும் விமர்சனங்களும் எதிரிக்கு - அரசுக்குச் சார்பாக அமைந்து, தங்களையும் போராட்டத்தையும் பலவீனப்படுத்திவிடும் என்று கருதினர். இதை அவர்கள் பகிரங்கமாகவே தெரிவித்தும் வந்தனர். ஆகவே, கடினமான விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் பகிரங்கத்தளத்தில் யாரும் முன்வைப்பதை அவர்கள் விரும்பவில்லை. பதிலாக அத்தகைய கருத்துகளையும் விமர்சனத்தையும் ஏன் கடுமையான விவாதங்களையும் தங்களிடம் நேரடியாக முன்வைப்பதையே விரும்பினார்கள். அப்படிச் செய்வது ஆபத்தில்லாததாக இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடமிருந்தது. போரில் ஈடுபடும் தரப்புகளின் பொதுக்குணவியல்பு இது. ஆனால், முந்திய புலிகளிடம் இதற்குச் சாத்தியமிருக்கவில்லை. முந்திய புலிகளிடம் கடும்போக்கும் இறுக்கமும் அதிகமாக இருந்தது. தங்களை விமர்சித்தவர்களுடன் அவர்கள் எந்த வகையிலும் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. பிந்திய புலிகளிடத்தில் நெகிழ்ச்சியிருந்தது. ஒரு விதமான குணமாற்றம் நிகழ்ந்தது. 

இதற்கொரு உதாரணம் இறுதிப்போர் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் மு.திருநாவுக்கரசு கிளிநொச்சியில் புலிகளின் அணுகுமுறை மற்றும் தீர்மானங்கள் தொடர்பாக கடுமையான உரையொன்றை ஆற்றியிருந்தார். அந்த உரை பெருமளவுக்கு, பிரபாகரனின் தீர்மானங்களில் உள்ள தவறுகளை அல்லது பிரபாகரனின் தவறான முடிவெடுப்புகளை – அவருடைய அரசியல் வழிமுறையைக் குற்றம் சாட்டிக் கண்டித்தது. இதை அவர் வன்னிக்கு வெளியே எழுத்திலோ பேச்சிலோ கொண்டு வந்திருக்க முடியாது. அப்படிக் கொண்டு வந்திருந்தால் அவர் வேறு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கலாம். 

எனவே, இப்படியான சூழலில் ஓரளவுக்கு உள்ளரங்கில் உரையாடல் ஒன்று நடக்கக் கூடிய நிலை உருவானது. இது முன்னேற்றகரமானது என்பேன். சற்றுக் கால நீட்சி ஏற்பட்டிருந்தால் இதில் மேலும் குணமாற்றங்கள் – நல்நிகழ்ச்சிகள் நிகழ வாய்ப்பிருந்திருக்கும். இது அவர்களுக்குள் நிகழ்ந்த பண்புவிருத்தி என்பதை விட புறநிலைமைகளின் விளைவானது என்றுதான் சொல்ல வேண்டும்.

மற்றது நீங்கள் குறிப்பிட்டமாதிரி 2002-க்குப் பின்னான சமாதான காலத்தில் மாற்றுக்கருத்தாளர்களையும் மாற்று அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் பலியிட்டதற்குச் சாட்சியமாக இருந்த சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளின்ஆவணங்கள்தான் புலிகளுக்கான இறுதிக்கால நெருக்கடிகளை உண்டாக்கியதில் பெரும்பங்காற்றின என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள முடியும். 

  • நீங்கள் புலிகள் அமைப்பில் செயற்பட்டுவிட்டு அவர்களது தோல்விக்குப் பின்பே அவர்களை விமர்சிக்கும் சுடலை ஞானம் பெற்றவரென பரவலாகக் கிளம்பும் விமர்சனங்கள் குறித்து?
அவர்களையிட்டு வருந்துகிறேன். அவர்களுக்குப் பதில் சொல்லவும் முடியாது. அதற்கு அவசியமும் இல்லை. ஏனென்றால், ஒருவரைப் பற்றி, அல்லது ஒரு விசயத்தைப் பற்றி முழுமையாக அறியாமல் எழுந்தமானமாகக் கருத்துரைப்போரையிட்டு நாம் கவலைப்பட முடியாது. அவர்களைக் கருத்திற் கொள்வதற்கு அவசியமும் இல்லை.

உங்கள் கேள்வியே தப்பானது. நான் ஒரு போதுமே புலிகள் அமைப்பில் சேரவும் இல்லை. செயற்படவும் இல்லை என்பதை முன்னரே தெளிவாக்கியுள்ளேன். ஆகவே வெளியில் இருந்து கொண்டு எப்படி அனுசரணையாளராக – பணியாளராக இயங்கினேன் என்பதைப் பற்றியே நாம் பேசலாம். 

அவர்களுடன் ஊடகப் பணியாற்றியவன் என்ற வகையில் என்னுடைய பார்வையையும் விமர்சனத்தையும் அவர்களிடமே பகிரங்கமாகச் சொல்லி வந்திருக்கிறேன். இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இதற்கு இன்னும் பல உயிருள்ள சாட்சியங்கள் உண்டு. இப்பொழுது புலிகள் களத்தில் இல்லை. ஆகையால் இப்போதைய என்னுடைய விமர்சனத்தையும் அபிப்பிராயத்தையும் உள்ளரங்கில், அவர்களின் முன்னிலையில் வைக்க முடியாது. அத்துடன் அந்த அமைப்புத் தோற்ற பின்னர், அந்தத் தோல்வி எதனால் ஏற்பட்டது, இனி என்னமாதிரியான அணுகுமுறைகள் தேவை என்று சொல்வது அவசியமானது என நினைக்கிறேன். இது அவர்களைத் தூற்றுவதாகவோ அவமதிப்பதாகவோ அமையாது. அப்படி ஒரு காரியத்தை நான் செய்யவும் இல்லை. ஒரு காலகட்டத்தில் முக்கியமான பாத்திரத்தை வகித்த ஓர் இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை தீமைகளும் பகுத்தாயப்படுவது அவசியமானதே. இதில் தப்பென்ன! 

புலிகள் தற்போது இல்லாதபோதும் கடந்த காலத்தின் சரி பிழைகளை பரிசீலனை செய்ய வேண்டிய கட்டத்தில் – அவசியத்தில் நாம் இருக்கிறோம். இது தவிர்க்கவே முடியாத ஒன்று. எமது தவறுகளையும் பலவீனங்களையும் நாம் களைவது மாயைகளில் இருந்து விடுபடுவதற்கு உதவும். அப்பொழுதுதான் வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியும். அப்படிப் பயணிக்க வேண்டுமாயிருந்தால் எதார்த்த தளத்தில் நமது கால்கள் பதியவேண்டும். இதை நோக்கியே செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

  • நீங்கள் இப்போது ஈ.பி.டி.பி.யின் ஆதரவாளரென்றும் அவர்களோடு இணைந்து வேலை செய்கிறீர்களென்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் காய்கிறார்களே.. இது எவ்வளவிற்கு உண்மை?
நான் அரசியல்வாதியல்ல. சனங்களில் ஒருவன். ஊடகத்துறையாளன். இலக்கியவாதி. சமூகச் செயற்பாட்டில் ஆர்வமுள்ளவன். அதிகாரப் பசியோ அமைப்புகளில் ஈடுபாடோ இல்லாதவன். எனவே, அவர்களுடைய காய்ச்சலுக்கு அவர்கள்தான் எங்காவது மருந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அது சரி.. இப்படிக் காய்கின்றவர்கள் யார்? அவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? முன்னர் என்ன செய்தார்கள்? இனி என்ன செய்யப் போகிறார்கள்? 

மேலும் ஒரு கவிதை.

அப்போது நாங்கள் கிழக்குத் தெருவிலிருந்தோம்

 

எங்களைக் கிழக்குத் தெருக்காரர் என்றார்கள்

பிறகு

எங்கள் தெருவுக்குக் கிழக்கே இன்னொரு தெரு வந்தது
.

 

அப்போது எங்களை மேற்குத் தெருக்காரர் என்றனர்
.

 

ஆனால்
நாங்கள் அப்போதும் இப்போதும் இருப்பது ஒரே தெருவில்தான்
.

  • இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?
பூக்கள் மலர்ந்து கொண்டிருக்கின்றன. மேலும் பூக்கள் மலரட்டும். நூறு பூக்களாக, ஆயிரம் பூக்களாக... லட்சம் மலர்களாக... ஆனால் அப்படி ஏராளம் பூக்கள் மலர்வதை விரும்பாத சூழலே தமிழ்த் தேசிய அரங்கில் காணமுடிகிறது. இது தமிழ்ச் சமூகத்துக்கும் அதனுடைய எதிர்காலத்துக்கும் நல்லதல்ல. இந்தப் போக்கினால் பெரும் நட்டத்தைத் தமிழ் மொழியும் தமிழ்ச் சமூகமும் உலகமும் ஏற்கவேண்டியிருக்கிறது. 

  • புகலிடத் தமிழ் இலக்கியம், ஈழத்து இலக்கியப் பரப்பில் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது? புகலிட இலக்கியத்தின் தாக்கம் தாயகப் படைப்பாளிகளைப் பாதித்துள்ளதா?
புகலிட இலக்கியம் தொடர்பாகக் கூர்மையான அவதானிப்பும் ஈடுபாடும் விருப்பார்வமும் 1990-களிலிருந்தே உள்ளது. அதேவேளையில் புகலிட இலக்கியத்தையும் கருத்தாடல்களையும் எதிர்த்த – கடுமையாக விமர்சித்த நிலையும் உண்டு. நாட்டைவிட்டுப் போனவர்கள் எவருக்கும் நாட்டைப் பற்றியும் போராட்டத்தைப் பற்றியும் கதைக்க உரிமையில்லை என்றமாதிரியான ஒரு மனப்பாங்கின் வெளிப்பாடு இது. 

ஆனால், இது பின்னாளி்ல் மாறி, புகலிடத் தேசியவாதிகளும் நாட்டிலுள்ள தேசியவாதிகளும் ஒன்றாகக் கொடியேற்றுகின்றனர். மாற்றுக்கருத்தாளர்கள் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொண்டவாறே உள்ளனர். 

இந்தப் பின்னணியில் தாயகத்தை நினைவு கூரும் புகலிட இலக்கியத்தை விட, புகலிட நாடுகளில் எதிர்கொள்ளும் சவால்களையும் நெருக்கடிகளையும் பேசும் இலக்கியம் தாக்கத்தை ஏற்படுத்தியதுண்டு. புதிய களம், புதிய பிரச்சினைகள், புதிய திணை என்பதெல்லாம் வியப்பையும் ஆர்வத்தையும் உண்டாக்கியது. அது பல புரிதல்களுக்கும் வழியேற்படுத்தியது. 

அதேவேளையில் மாற்றுக்கருத்துத் தளத்தில் நடைபெற்ற, கடந்த மற்றும் நிகழ்காலத்தை விமர்சனத்துக்குள்ளாக்கும் இலக்கிய எழுத்தும் விவாதமும் இன்னொரு சாராரிடம் கரிசனையை உண்டாக்கியது. குறிப்பாக எதிர்ப்பிலக்கியம். எதிர்ப்பிலக்கியத்துக்கான களத்தைப் புகலிடமே வழங்கியது. நாட்டில் எதிர்ப்புக் குரலையும் விமர்சனத்தையும் முன்னிறுத்த முடியாதபோது புகலிடமே அதற்கான சாத்தியத்தை ஓரளவுக்கு வழங்கியது. அப்படியான ஒரு சாத்தியம் இருந்தபடியால்தான் உங்களுடைய கதைகளே எழுதப்படக் கூடியதாக இருந்தது. ஆகவே, இதையும் நாம் புகலிட இலக்கியத்துடன்தான் அடையாளம் காணவேண்டும். ஈழத்து இலக்கியத்தின் ஒரு காலகட்ட ஜனநாயகக் குரலை உயிர்ப்பித்ததில் புகலிட இலக்கியத்திற்கு முக்கியமான பாத்திரமும் பங்களிப்பும் உண்டு. இரண்டு வகையான எழுத்துகளும் போக்குகளும் இரண்டு சாராரிடமும் தாக்கத்தை உண்டாக்கின. தமிழ் இலக்கியத்திற்கு அதுவொரு திறமான வளம். 

  • யுத்தம் இவ்வாறுதான் முடியும், புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று நீங்கள் முன்பே எதிர்ப்பார்த்திருந்தீர்களா?
'தெருவெங்கும் வெடியோசை கேட்கும் 

எங்கள் தேசமே தீப்பற்றி எரியும். 

எல்லாமே ஒரு நாளில் முடியும்

என்று 1993-ல் ஒரு நாள் சட்டத்தரணி பொன். பூலோகசிங்கம் பாடினார். அப்பொழுது

'தெருவெங்கும் தமிழோசை கேட்கும்

தமிழ் தேசத்தில் விடிவெள்ளி பூக்கும் 

திருநாளில் தமிழீழம் வெல்லும்...' 

என்ற பாடல் பிரசித்தமாக இருந்தது. இந்தப்பாட்டையே அப்படி பொன். பூலோகசிங்கம் மாற்றிப்பாடினார். இயக்கத்தினுள்ளிருந்த குறைபாடுகளையும் போராளிகளின் போக்குகளையும் மதிப்பிட்டதனால் வந்த அனுமானம் இது.

இதைப்போல இன்னும் பல நண்பர்கள் இயக்கத்தையும் போராளிகளின் நடத்தைகளையும் விமர்சிக்கத் தொடங்கினார்கள். பிறகு, தளபதிகள், பொறுப்பாளர்களின் மத்தியிலேயே இப்படியான சிந்தனையும் விமர்சிக்கும் பழக்கமும் ஏற்பட்டன. இயக்கத்தை விமர்சித்ததற்காகவே பொறுப்புகளிலிருந்து அகற்றப்பட்ட பல பொறுப்பாளர்களும் தளபதிகளும் உள்ளனர். அவர்களில் பலர் புலம்பெயர் நாடுகளிலேயே தற்போதுள்ளனர். 

‘வெளிச்சம்’ இதழில் இணைந்து வேலை செய்த காலத்தில் நா.யோகேந்திரநாதனும் நானும் இந்த நிலையைக் குறித்து பல நாட்கள் துக்கத்துடன் பேசியிருக்கிறோம். 1990-ன் நடுப்பகுதியிலிருந்து ஒடுக்குமுறையாளரைப்பற்றி கதைப்பதை விட ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிக்கொண்டிருப்போரின் குறைபாடுகளைப் பற்றிக் கதைப்பதிலேயே அதிக கவனமும் அதிக நேரமும் செலவிடப்பட்டது. இந்த நிலை எங்கே கொண்டுபோய் விடுமென்று பலரும் கவலைப்பட்டனர். 1995 யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது கடுமையான விமர்சனங்களை அன்ரன் பாலசிங்கமே பலரிடத்திலும் சொன்னார். இப்போதைய யாழ்ப்பாணச் சிவில் சமூக அமைப்பைச் சேர்ந்த பலர் அந்த நாட்களில் இயக்கத்தின் செயற்பாடுகளைப் பற்றி என்னுடன் விவாதித்திருக்கின்றனர், விமர்சித்திருக்கின்றனர். இன்னும் பல போராளிகளுடன் கடுமையாக விமர்சனத்தில் ஈடுபட்டிருக்கிறோம். எல்லாம் நல்லதோர் எதிர்காலத்துக்காகவும் சனங்களின் நன்மைக்காகவுமே. 

இதை ஒத்த கருத்தொன்றை, தமிழீழம் சாத்தியமற்றது என்பதை 2008-ல் கவிஞர் நிலாந்தன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் உறுதிபடச் சொல்லியிருந்தார். இந்தமாதிரி ஒரு அபாயநிலை ஏற்பட்டுள்ளது என்று பிரபாகரனிடம் நேரிலேயே தெரிவித்திருந்தார் பாலகுமாரன். பிறகு இதைக் குறித்து விரிவான கடிதத்தையும் எழுதினார். இப்படிப் பலர் இந்த முடிவை ஓரளவுக்கு முன்னுணர்ந்திருந்தனர். 

போரில் பெறும் வெற்றிகள் அல்லது இராணுவபலம் மட்டுமே எதையும் தீர்மானிக்கும் என்ற எண்ணம் புலிகளிடம் மேலோங்கியிருந்தது. எப்போதும் சண்டைக்காரர்களுக்கே, போரில் தீரச்செயல்களைச் செய்வோருக்கே அதிக மதிப்பும் செல்வாக்கும் கொடுக்கப்பட்டது. அரசியலைக் குறித்தும் இராசதந்திரத்தைக் குறித்தும் பிராந்திய – சர்வதேச உறவைக் குறித்தும் மக்களைக் குறித்தும் கவனமெடுத்துச் சிந்திப்போரைப் பற்றிப் பெரிய அளவில் நம்பிக்கைகளும் வேலைத்திட்டங்களும் இருக்கவில்லை. 

ஆனால், புறச்சூழலின் அரசியல் மண்டலம் வேறு விதமாக உருவாகி வந்தது. அந்த அரசியலுக்கு ஏற்ப, பொறிமுறைகளை புலிகள் உருவாக்கவில்லை. அல்லது போதவில்லை. ஜனநாயக வெளியை உண்டாக்கவில்லை. பல்வேறு தரப்பினரும் தோழமையுடன் உறவு கொள்ளக்கூடிய நிலையைப் பேணவேண்டும் என்று சிந்திக்கவில்லை. அப்படியான உறவு பேராட்டத்தைப் பலவீனப்படுத்தி விடும், இறுதி இலக்கான தமிழீழ இலட்சியத்தைப் பழுதாக்கி விடும் என்ற எண்ணமும் சந்தேகமும் தலைமைப்பீடத்திடம் இருந்தது. 

இதனால், உலக அரசியல் மற்றும் மாறிவரும் பொருளாதாரச் சிந்தனைகள் எப்படியுள்ளன என்று மதிப்பிடாமல், பிராந்திய சக்திகளின் அசைவுகளைப் பற்றிச் சரியாக அறியாமல் தங்கள் விருப்பத்தை மட்டும் முதன்மைப்படுத்துவதற்கு முயன்றனர். இது பேரபாயத்திலேயே போய் முடியும் என்று உணர்ந்திருந்தோம். அப்படி உணர்ந்தபடியால்தான் அதைத் தடுத்து நிறுத்துவதற்காக அவர்களுடன் விவாதிக்கவும் விமர்சிக்கவும் வேண்டியிருந்தது. 

  • புலிகள் இயக்கத்தின் தோல்வியை ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் அரசியல் தோல்வியெனக் கொள்ளலாமா?
அப்படித்தான் அது பார்க்கப்படுகிறது. இதுதான் துயரம். ஓர் அமைப்பு ஏன் தோற்றது என்பதை அறியாமல், அதைப்பற்றிய நேர்மையான ஆய்வுகளைச் செய்யாமல், அந்த அமைப்பை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றினால், தோல்வி நிரந்தரமாகி விடும். தோல்வியைப் படிப்பினையாகக் கொள்வதென்பது, தோல்வியிலிருந்து மீள்வதற்கே வழிவகுக்கும். தோல்வியுற்ற வழியிலேயே தொடர்ந்தும் செல்வதென்பது மீண்டும் தோல்விகளையே தரும். தமிழர்கள் நிரந்தரமாகத் தோற்றுக்கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் எதையும் மறுபார்வைக்குட்படுத்த விரும்புவது குறைவு. தங்கள் மீதான விமர்சனத்தை விரும்புவதில்லை. இது ஒரு பெருங்குறைபாடு. இந்தக் குறைபாடே ஏனையவர்களுக்கான வெற்றியைக் கொடுக்கிறது. தமிழர்களுக்குத் தோல்வியை நிரந்தரமாக்குகிறது. 

எந்த இயக்கத்தின் தோல்வியும் இறுதித் தோல்வியாக அமைய முடியாது. எவருடைய இழப்பும் நிரந்தர இழப்பாக, நிரந்தர வெற்றிடமாக, நிரந்தரத் தோல்வியாக அமைந்து விடுவதில்லை. தோல்விகளுக்குக் காரணமாக அமைந்த அடிப்படைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு மாற்று உபாயங்களையும் மாற்று வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கும்பொழுது வெற்றி நிச்சயமாகக் கிட்டும். மனிதர்கள் ஆற்றல் மிக்கவர்கள். புதிதாகச் சிந்திக்கும் திறனுள்ளவர்கள். மனித இயல்பும் திறனும் இதுதான். படிப்பினைகளிலிருந்து புதிதாகச் சிந்திப்பது புதிய வழிகளில் பயணிப்பதாகும். இந்த விதியை மீறினால், மாறினால் பின்னடைவும் தோல்வியும் நிச்சயமாகும். அப்படித் தோற்றால் அதுவே அழிவைத் தரும். ஆகவே, வெற்றியும் தோல்வியும் எங்கள் சிந்தனைமுறையில், எங்களுடைய மனதில்தான் உள்ளது. 

  • இன்று தாயகத்தில் மக்களது அரசியல் உணர்வுநிலை எப்படியிருக்கிறது? அவர்கள் இன்னொரு தமிழீழப் போராட்டத்திற்குத் தயாராக இருக்கிறார்களா?
எந்தச் சமூகத்திலும் பல விதமான எண்ணப் போக்குடையவர்கள் இருப்பார்கள். அதில் ஒருசாரார் தமிழீழப் போராட்டம் தேவை என்று சொல்லக் கூடும். பெரும்பாலானவர்கள் வேறு எண்ணங்களோடிருக்கிறார்கள். இழப்புகளை அதிகமாகச் சந்தித்தவர்களில் ஒருசாரார் பிச்சையும் வேண்டாம் நாயும் வேண்டாம் என்றிருக்கிறார்கள். சிலர் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும் வலிகளுக்கும் நிச்சயமாக தக்கபாடம் படிப்பிக்க வேண்டுமென்று எண்ணுகிறார்கள். சிலர் நியாயமான தீர்வொன்றை அரசாங்கம் முன்வைத்தால் அதை ஏற்றுக்கொள்வது நல்லது என்கிறார்கள். வேறு சிலர் இது ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை, இன்னும் இதற்காக நாம் அலைய முடியாது என்று சலிக்கிறார்கள். சிலருக்கு இந்தப் பிரச்சினை நல்ல பிழைப்பு. பலருக்கு இது நெருக்கடி. பெரும்பாலான மக்கள் மீண்டும் கடந்த காலத்துக்குச் செல்ல விரும்பவில்லை. 

  • கடந்த வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றிருக்கிறது. விடுதலைப் புலிகளின் மீதுள்ள மக்களின் அபிமானமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான வாக்குகளாக உருமாறியிருக்கிறது என்று சொல்லப்படும் கருத்து எவ்வளவுக்குச் சரியானது?
அரசாங்கத்தின் மீதான அதிருப்தியும் கோபமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாய்ப்பாகியது. இதேவேளை போர்க் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை போன்ற செய்திகளும் வினையாற்றின. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, அரசின்மீது அழுத்தத்தைப் பிரயோகித்து, தமிழ் மக்களின் பாதிப்புக்கு நிவாரணமாக ஒரு தீர்வைப் பெற்றுவிடலாம் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் உண்டாகியது. இதைச் செய்ததில் ஊடகங்களின் பங்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பும் மிகக் கூடுதலாகவே இருந்தன. இதுவும் கூட்டமைப்புக்கு வாய்ப்பாகியது. 

புலிகளின் மீதுள்ள அபிமானத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களித்தனர் என்றால், புலிகளின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் எவரையும் கூட்டமைப்பு தன்னுடைய வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கியிருக்கவில்லையே என்பதையும் நீங்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் மீதுள்ள மக்களின் அபிமானமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான வாக்குகளாக உருமாறியிருக்கின்றன என்று சொல்வோர் இதைக் குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்! ஆகவே, அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிரெதிர் முனைகளில் பிரதானப்படுத்திய இனவாதத்திற்கே – அதன் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிகளவான வாக்குகள் கிடைத்தன. ஏனையவை துணைக் காரணங்களே. 

  • தமிழ்க் கட்சிகள் எல்லாம் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படும் சாத்தியமுண்டா? குறிப்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் கூட்டமைப்பில் இணைய வாய்ப்புகளுள்ளனவா?
இனவாதத்தை அரசியலின் அடிப்படையாக வைத்திருக்கும்வரை – அதை முதலீடாகக் கொண்டிருக்கும் வரையில் இந்த மாதிரியான விருப்பங்கள் நிறைவேறாது என்றே கருதுகிறேன். அப்படி நிறைவேறினாலும் அவற்றினால் நன்மை ஏதும் கிட்டாது. ஏற்கனவே இணைந்த கட்சிகளினால், கூட்டமைப்பினால் என்னதான் நடந்திருக்கிறது? இதற்கு மேல் எத்தனை கட்சிகள் இணைந்தாலும் அதனால் எந்த நன்மையும் கிட்டும் என்றில்லை. ஈ.பி.டி.பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்தால், அதனால் என்ன நன்மைகள் மக்களுக்குக் கிட்டும்? கிழக்கின் நிலைமைகள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை எப்படிச் சிந்திக்கத் தூண்டும் என்று சொல்லத் தெரியவில்லை. 

இவை இப்படியே ஒன்று சேர்வதற்கு முன் புதிய முறையிலான சிந்தனைக்கும் செயல்முறைக்கும் செல்ல வேண்டும். எல்லாத்தரப்புகளிடமும் குணாம்சரீதியான மாற்றம் தேவை. அதற்குத் தம்மைத் தயார்ப்படுத்தக் கூடிய, அர்ப்பணிக்கக் கூடிய மனம் இவர்களிடம் வரவேண்டும். அதற்கான சாத்தியங்கள் உண்டா? அப்படியான ஓர் அதிசயம் நடந்தால்... அப்பப்பா நினைக்கவே மயிர்க்கூச்செறிகிறது! 

  • ஈழப்போரட்டத்தின் மிகப் பெரிய ஆதரவுச் சக்திகள் புகலிடத் தமிழர்கள். புகலிடத் தமிழர்களின் ஆதரவுத் தளத்தைத் தாயக மக்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள்?
புகலிடத் தமிழர்கள் ஈழப்போராட்டத்தின் ஆதரவுச் சக்திகளா? அவர்கள் தாங்கள் சந்திக்க விரும்பாத யதார்த்தத்தை எங்களின் மீது திணிக்க முற்படுகிறார்கள். இது என்ன அடிப்படையில் நியாயமாகும்? இந்த யதார்த்தத்தைத் தாங்களோ, தங்கள் சொந்த பந்தங்களோ சந்திக்கக் கூடாது என்று,வேறு பாதுகாப்பான புலத்துக்கு – தளத்துக்கு நகர்ந்துகொண்டு தங்கள் எண்ணங்களையும் நிலைப்பாட்டையும் மட்டும் மாறாப்புள்ளியில் வைத்திருக்கிறார்கள். தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது. 

  • புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பை இவ்வளவு எளிமைப்படுத்திவிட முடியுமா என்ன? அவர்கள் கடூழியம் செய்து சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை மாதாமாதம் புலிகளிற்குக் கொடுத்திருக்கிறார்கள். வங்கிகளில் பெருந்தொகைகளைக் கடனாகப் பெற்றும் புலிகளிற்குக் கொடுத்திருக்கிறார்கள். இன்றுவரை அந்தப் பணத்திற்கு வட்டி கட்டி மாய்கிறார்கள். ஈழத்தில் யுத்தம் நடந்தபோது போர்நிறுத்தத்தை வேண்டி உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் பேரணிகளையும் நிகழ்த்தினார்கள். இலங்கை அரசின் கொடுமைகளை சர்வதேச மக்களிடம் தங்களால் முடிந்தளவுக்கு எடுத்துச் சென்றார்கள். இப்போது கூட இலங்கை அரசின் யுத்தக் குற்றங்களின் மீது சர்வதேச விசாரணை வேண்டுமெனப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் போராட்டத்திற்கான காத்திரமான பங்களிப்புகளில்லையா?
புலம்பெயர் தமிழர்களின் உணர்வு மதிக்கத்தக்கது. ஆனால், வழிமுறை பொருத்தமற்றது. 

இப்படியெல்லாம் கொடுக்கப்பட்ட பணத்திற்கான விளைவு அல்லது பயன் என்ன? இந்த உச்சமான போராட்டங்களின் மூலமாக எதனைத் தாயக மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடிந்தது? போரை நிறுத்த முடிந்ததா? அழிவுகளைத் தடுக்க முடிந்ததா? குறைந்த பட்சம் ஓர் உயிரையாவது பாதுகாக்க முடிந்ததா? இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்மொழியவோ, அதை நோக்கி இலங்கை அரசை நகர்த்தவோ, இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கிற ஒரு நிலையை சர்வதேச சமூகத்திடம் உருவாக்கவோ முடிந்ததா?அல்லது போர் முடிந்த பிறகு ஒரு அய்ம்பது பேர்களுக்காவது அழிந்துபோன வீடுகளைக் கட்டிக்கொடுத்திருக்கிறார்களா? பொதுமைப்பட்ட உதவும் அமைப்புகள் ஏதாவது உருவாக்கப்பட்டு மக்களுக்கான முறையான உதவிகள் செய்யப்படுகின்றனவா? சிறிய அளவிலான மனிதாபிமான உதவிகள் உதிரியாகக் கிடைக்கின்றன என்றபொழுதும் இவர்கள் சொல்லும் அளவுக்கும் காட்டப்படும் பிம்பங்களின் அளவுக்கும் ஏதுமில்லை.

நீரை இறைப்பதல்ல முக்கியம். அதை எப்படிப் பயன்படுத்துகிறோம்? எதற்காக இறைக்கிறோம் என்பதிலேயே நீரின் பெறுமதியும் உழைப்பின் பெறுமதியும் தங்கியுள்ளன. 

  • தமிழகத்திலுள்ள புலிகள் ஆதரவுச் சக்திகளான நாம் தமிழர் கட்சி, மே பதினேழு இயக்கம், பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்றவை குறித்து நமது மக்களின் மதிப்பீடு எப்படியிருக்கிறது?
சனங்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்துவதேயில்லை. 

  • சரி..உங்களது மதிப்பீடு என்ன?
எல்லாமே பயனற்றவை. ஈழத்தமிழருடைய அரசியலை மேலும் சிக்கலாக்கி விட்டதில்தான் இவற்றின் பங்கு அதிகம். 

  • அண்மையில் பிரசன்ன விதானகேயின் 'ஒப நத்துவ ஒப எக்க' திரைப்படம் சென்னையில் திரையிடப்பட்டபோது தமிழ்த் தேசியவாதக் குழுக்கள் அவற்றை எதிர்கொண்டவிதம் குறித்து என்ன கருதுகிறீர்கள்? நீங்கள் பிரசன்னவுடன் இணைந்து பணியாற்றியுள்ளீர்களா?

எனக்கு பிரசன்னவுடன் இணைந்து பணியாற்ற வாய்க்கவில்லை. ஆனால், அவருடைய படைப்புகளின் மீதும் அவர்மேலும் மதிப்புண்டு. நாங்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் ஏராளமிருக்கின்றன. தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியவாதக் குழுக்கள் தங்கள் வழமையை ஒத்த காரியத்தையே செய்திருக்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். அப்படிச் செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியப்பட முடியும். 

கடுந்தேசியவாதத்திற்குக் கண்கள் கிடையாது. 

  • இலங்கை இனமுரண்களிற்கு என்னதான் தீர்வு? பெருகிவரும் சிங்கள இனவாதத்தையும் பவுத்த மதவாதத்தையும் தடுத்து நிறுத்தவே முடியாதா?
இனமுரண்தான் இலங்கை அரசியலின், ஊடகத்துறையின் அசல் முதலீடு. இனவாதிகளையே இலங்கையர்கள் கொண்டாடுகிறார்கள். இனவாதத்திற்கு எண்ணெய் ஊற்றிக்கொண்டிருப்பவர்கள் மக்கள். அவர்களை ஊற்ற வைப்பவர்கள், அரசியல்வாதிகளும் ஊடகங்களும் புத்திஜீவிகளும் மதவாதிகளும். இடதுசாரிகள் கூட இனவாதத்தைப் பேசினால்தான் அங்கீகாரம் கிடைக்கும் என்று உணர்த்தியவர்கள் இலங்கையர்கள். இதனால் இடதுசாரிகளே இனவாதத்திற்குக் கட்டுப்பட்டுச் சேவகம் செய்ய முற்பட்டனர். 

இனவாதிகளைத் தங்களுடைய அரசியல் தலைமையாகத் தெரிவு செய்யும்வரையில், அவர்களை அதிகாரத்தில் இருத்தும்வரையில் இனவாதமே கொடிகட்டிப்பறக்கும். இனவாதத்தின் விளைவாக ஒரு பெரும் போர் நடந்து முடிந்திருக்கிறது. ஆனால், இனவாதம் முடிவுக்கு வரவில்லை. இந்தப் போரினால் பேரழிவுகளையும் பாதிப்புகளையும் இலங்கைச் சமூகங்கள் அத்தனையும் நேரடியாகச் சந்தித்தன. இன்னும் அந்தப் பாதிப்புகள் தீவிரமாகவே உள்ளன. ஆனாலும் எந்தத் தரப்பும் இதிலிருந்து பாடங்களைப் படித்ததாகத் தெரியவில்லை. முன்னர் இருந்ததை விட மேலும் மேலும் இனவாதம் தீவிரமடைந்துகொண்டு போகிறது. இனக் கட்சிகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. அவையே பலமடைந்துகொண்டுமுள்ளன. நான் இந்தப் பதிலை உங்களிற்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, பேருவளையில் முஸ்லிம் மக்களின் மீது பொதுபல சேனாவைச் சேர்ந்தவர்கள் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏட்டிக்குப்போட்டியாக இனரீதியான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் வரையில் இதற்குத் தீர்வில்லை. 

சமூகத்தின் பொறுப்பு மிக்க தரப்பினர்கள், ஊடகங்கள், கல்வி அமைப்பினர், கலைஞர்கள், மதபீடங்களைச் சேர்ந்தோர் எல்லாம் இனவாதத்திற்கு மாற்றாகச் சிந்திக்கும் முறையைப் பலமாக்க வேண்டும். ஆனால், அது சாதாரணமானதல்ல. அப்படி மாற்றாகச் சிந்திப்போரை துரோகிகளாக்கும் போக்கு நீடிக்கும் வரையில், அதைச் சனங்கள் நம்பும்வரையில் இலங்கையில் மாற்றங்கள் நிகழச் சாத்தியமில்லை. அனுமன் இலங்கையை எரித்ததை விட இவர்கள் இலங்கையை எரிப்பதே பெரிய எரிப்பாகும். 

  • ஈழத் தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்பது வெள்ளாளர்களின் அரசியல் விருப்புத்தானே தவிர ஒடுக்கப்பட்ட சாதிகளின் விருப்பல்ல, அவர்கள் தேசியவாதக் கோரிக்கைகளிற்கு அப்பாலுள்ளவர்கள் என்று சொல்லப்படுவது குறித்து?
முற்றிலும் உண்மை. சரியானது. மேட்டுக்குடியினரின் இந்த விருப்பம் ஏனைய சமூகத்தினரிடத்திலும் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியொரு தோற்றப்பாடும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு ஏனைய விடயங்கள் பொதுமைப்படுத்தப்படவில்லை. அல்லது பகிரப்படவில்லை. 

தேசிய நிலைப்பாட்டை விட்டு விலகி நின்றால் தம்மீது ‘பின்னிலைச் சமூகத்தினர்’ என்ற அடையாளம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் பின்தங்கிய நிலையுடைய மக்களும் தேசிய முலாமைப் பூசிக்கொள்கிறார்கள். குறிப்பாக பின்தங்கியநிலைச் சமூகங்களிலிருந்து படித்து முன்னேறியவர்களும் நிதிப்பலத்தினால் முன்னுக்கு வந்தவர்களும் இந்த முலாமை வலிந்து பூசிக்கொள்ள விரும்புகிறார்கள். அப்படிப் பூசிக்கொள்வதன் மூலமாகத் தாங்களும் பொதுத்தளத்தில் நிற்கக்கூடிய ஒரு தகுதி கிட்டும் என்று நம்புகின்றார்கள். ஆனால், இவர்கள் நம்புவதைப்போல இந்தத் தமிழ்த் தேசியத்தில் உள்ளடக்க விரிவு கிடையாது. 

  • ஆனால் ஈழவிடுதலைப் போராட்டம் வீறாக எழுந்தகாலம் முதல் அது முள்ளிவாய்க்காலில் வீழும்வரை வெள்ளாளர்கள் அல்லாதவர்களின் தலைமையையும் போராளிகளையும் பெருமளவில் கொண்டிருந்தது உண்மையல்லவா? ஆரம்பகாலப் போராளித் தலைமைகளான புஸ்பராஜா, கி.பி.அரவிந்தன் போன்றவர்கள் கடுமையான வெள்ளாள மேலாதிக்க எதிர்ப்பு மனநிலையைக் கொண்டவர்கள். பிரபாகரனும் அப்படியே. 1983-களில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்திற்கு பின்பு திரண்ட தலித் இளைஞர்களின் மிகப்பெரும் எழுச்சியை வெள்ளாளச் சிந்தனைகளிற்குப் பலியானதன் விளைவு என்றா மதிப்பிட முடியும்? ஆயிரக்கணக்கான தலித் இளைஞரக்கள் தங்களது உயிர்களை இந்தப் போராட்டத்தில் பலியிட்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சுயசிந்தனைகளற்றவர்கள் என்றா கருதுகிறீர்கள்?கடந்த வட மகாணசபைத் தேர்தலின்போதும் கூட தலித் மக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தானே கிடைத்துள்ளன. "மேட்டுக்குடியினரின் இந்த விருப்பம் ஏனைய சமூகத்தினரிடத்திலும் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது" என்ற உங்களது பதில் சிங்கள இனவாதத்திற்கு எதிரான அர்ப்பணிப்புகள் நிறைந்த போராட்ட வரலாறை வெள்ளாளர்களிற்குக் குத்தகைக்குக் கொடுத்துவிடுவது போன்றதல்லவா?
இங்கே நாம் ஒரு விடயத்தை முதலில் கவனத்திற்கொள்ள வேண்டும். அதிகாரத்திலும் வளர்ச்சியிலும் இருக்கும் ஒரு தரப்பை முன்னுதாரணமாகக் கொண்டுதான் ஏனைய சமூகங்கள் தங்களை வடிவமைக்கின்றன. கல்வி அறிவிலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சியடைகின்ற ஏனைய சமூகத்தினர் - பின்நிலையினர் - தங்களை வடிவமைப்பது அல்லது தங்களைக் கருதுவது அல்லது தம்மை நிறுவ முயற்சிப்பது தங்களுக்கு மேலான சமூகங்களைப் போன்றவர்கள்தான் தாங்களும் என்பதையே. வெள்ளையர்களைப்போல அல்லது ஐரோப்பியர்களை, அமெரிக்கர்களைப்போல தாங்களும் வரவேண்டும், நடக்கவேண்டும் என்று கறுப்பர்களும் ஆசியர்களும் முயற்சிப்பதை அறிவீர்கள். பிராமணர்களைப்போல தாங்கள் மாறவேண்டும் என்று பிற இந்திய சமூகத்தினரிற் பெரும்பாலானவர்கள் குறிப்பாகப் படித்தவர்களும் நிதிவசதியுடையோரும் முயற்சிக்கின்றனர். இங்கே இலங்கையில் வெள்ளாளரைப்போல வரவேண்டும் என்று ஏனையவர்கள் சிந்திக்கின்றனர். இந்த எண்ணத்தை தமிழ்த் தேசியத்தைத் தூக்கும் வெள்ளாள மேலாதிக்கம் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறது. இதற்குச் சிங்கள இனவாதம் பொருத்தமாக உதவுகிறது. 

நீங்கள் குறிப்பிட்டபடி கி.பி.அரவிந்தனோ, சி. புஸ்பராஜாவோ, பிரபாகரனோ வெள்ளாள மேலாதிக்க எதிர்ப்பு மனநிலையைக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களும் இந்தத் தேசியவாத அலைக்குப் பலியானவர்கள்தான். என்றபடியால்தான் இன்னும் – இத்தனை பெரிய போராட்டத்திற்குப் பிறகும் சிங்கள மேலாதிக்கத்திடமிருந்து மட்டுமல்ல, வெள்ளாள மேலாதிக்கத்திடமிருந்தும் தமிழ்ச் சமூகத்தின் பிற அடுக்கினர் விடுதலையைப் பெறமுடியவில்லை. மாற்றங்களை உருவாக்க முடியவில்லை. ஏனென்றால் வெள்ளாள மனநிலையை – வெள்ளாள அதிகாரத்தைக் கடந்து செல்ல இவர்கள் யாராலும் முடியவில்லை. ஆகவே, இவர்கள் எதிர்பார்த்த – போராடிய இலக்கை எட்டமுடியவில்லை. 

இந்த அடிப்படையின்படி, இந்த அவதானிப்பின் பிரகாரம் நான் இங்கே வெள்ளாள மேலாதிக்கம் என்று குறிப்பிடுவது தனியே ஒரு சாதிப்பிரிவினரை மையப்படுத்தியது மட்டும் அல்ல. அது குணாம்சரீதியானது என்ற பொருளிலேயே அதைப் பயன்படுத்துகின்றேன்.  1983- களில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்திற்குப் பின்பு திரண்ட தலித் இளைஞர்களின் மிகப்பெரும் எழுச்சியை வெள்ளாளச் சிந்தனைகளிற்குப் பலியானதன் விளைவு என்றே சொல்வேன். கடந்த மாகாணசபைத் தேர்தலின்போது பின்னிலை (தலித்) மக்கள் திரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்ததையும் அப்படித்தான் பார்க்கிறேன். இன்னும் ஒன்றையும் அழுத்திக்கூற விரும்புகிறேன். போராட்டம் தீவிரமடைந்து பெரும் நெருக்கடி உண்டானபோது அந்த வலியை அதிகமாகச் சுமந்தவர்கள் பின்னிலைச் சமூகத்தினரே. பின்னாளில் போராட்டத்தில் அதிகளவில் ஈடுபட்டவர்களும் பாதிப்புக்குட்பட்டவர்களும் அவர்களே. புஸ்பராணி தன்னுடைய ‘அகாலம்’ நூலிலேயே இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். தேடுதலும் கைதும் சிறையும் என்று வரும்போது பெரும்பாலான இளைஞர்கள் மிகச் சாதுரியமாகத் தப்பிச் சென்று விட்டார்கள் என்கிறார் அவர். இப்படித் தப்பிச் சென்றவர்கள் பெரும்பாலும் மேட்டுச் சமூகத்தினர்கள்தான் என்பதை நீங்கள் அவதானிக்க முடியும். பின்னிலைச் சமூகத்தினர் நெருக்கடி நிலையிலிருந்து தப்பிச்செல்லும் மனநிலையை அதிகமாகக் கொண்டிருப்பதில்லை என்பது ஒரு காரணம். அவர்களுடைய வாழ்க்கைமுறை எதையும் திரளாக – ஒருமித்து - எதிர்கொள்ளும் இயல்பைக் கொண்டது. எனவே தப்பிச்செல்லும் நுட்பங்களை அவர்கள் அதிகம் அறிந்திருப்பதில்லை. இதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த, இருக்கின்ற கல்வி அறிவு மற்றும் தொடர்பாடல் போதாமைகள். இன்னொரு காரணம், பொருளாதார வசதியில் பின்தங்கிய நிலை. இந்த மாதிரியான விசயங்கள் இவர்களை நெருக்கடிக்குள்ளேயே வைத்திருந்தது. நெருக்கடிக்குள்ளிருந்த மக்களை இனவாத அலையில் கிளர்ந்தெழச் செய்வது இலகுவானது. அதுதான் நடந்ததும். 

ஆகவே வெள்ளாள மனநிலை என்பது பிற சமூகத்தினரிடத்திலும் ஒரு விசமாகப் பரவியுள்ளது என்பேன். போராட்டத்தையே வெள்ளாள மனநிலைக்குத்தானே குத்தகைக்கு விட்டிருந்தோம். இப்பொழுதுகூட இதுதானே நிலை. 

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இன்னொரு விடயத்தையும் பார்க்கலாம். இப்பொழுதும் வெள்ளாளச் சமூகத்தினர்தான் ஒப்பீட்டளவில் ஏனையவர்களை விட கல்வி மற்றும் நிதிப்பலத்தோடு இங்கே உள்ளனர். ஏனென்றால், இவர்கள் நெருக்கடிகளிலிருந்தும் பாதிப்புகளிலிருந்தும் ஏற்கனவே வெளியேறி, தங்களைப் பாதுகாப்பான தளங்களில் வலுவாக நிலைப்படுத்திக்கொண்டதால் இந்த வளர்ச்சியைப் பெற்றனர். மற்றவர்கள் நெருக்கடிக்குள் சிக்கிப் பாதிப்பை அதிகமாகச் சந்தித்ததால் நலிந்து போயிருக்கின்றனர். 

  • தமிழர்களது பாரம்பரிய வாழ்நிலங்களில் இன்று நடைபெறும் சிங்கள மக்களுடைய குடியேற்றங்களை இயல்பானதென்றா கருதுகிறீர்கள்? இது சிங்கள இனவாதத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைதானே? இதைத் தடுத்து நிறுத்தவே முடியாதா?
இதொரு சிக்கலான விசயம். சிங்களவர்கள் இலங்கையின் எந்தப் பாகத்திற்கும் போய் வேலை செய்யவும் வாழவும் தயாராக உள்ளனர். அப்படித்தான் வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள். தமிழர்கள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே செல்வதை விரும்பமாட்டார்கள். அப்படி வெளியே செல்வதாக இருந்தால், வெள்ளவத்தைக்கோ வத்தளைக்கோ தெகிவளைக்கோதான் போவார்கள். அல்லது புலம்பெயர்ந்து போகத்தயாராக இருக்கிறார்கள். வன்னிக்கோ படுவான்கரைக்கோ வாகரைக்கோ விடத்தற்தீவுக்கோ போவதற்கு யாரும் தயாராக இல்லை. இது திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள நகரம் சார்ந்த மனதின் பொதுவான நிலை . ஆனால், இவர்கள்தான் சிங்களக் குடியேற்றத்தைப் பற்றி அதிகமாகக் கதைக்கிறார்கள். இப்படிக் கதைப்பவர்கள் தங்கள் சொந்த ஊரில் குடியிருப்பதற்கே விரும்புதில்லை. தீவிலும் வன்னியிலும் வலிவடக்கிலும் ஏனைய எல்லா இடங்களிலும் தரிசாகிக்கொண்டிருக்கும் வயல் நிலங்களும் காடுமண்டிக்கொண்டு போகும் வளவுகளும் இதற்குச் சாட்சி. 

வாய்ப்புகளையும் வளங்களையும் தேடிச்செல்லும் மனித இயல்பிற்கு அரச அங்கீகாரமும் பாதுகாப்பும் இருந்தால் அது மேலும் ஊக்கமாக அமையும். இதைச் சிங்கள மக்கள் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசாங்கமும் இதைச் சாதகமாகப் பயன்படுத்துகிறது. 

தமிழ்த் தேசிய அரசியலுக்கும் இது தேவை. ஏனென்றால், இதைப்பற்றி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசிக்கொண்டிருக்கிறார்களே... இப்படி ஏதாவது பிரச்சினைகள் இருந்தால்தான் அதை வைத்து அரசியல் பண்ணிக்கொண்டிருக்கலாம். இப்படியெல்லாம் இருக்கும்போது தடுத்து நிறுத்துவதைப் பற்றிக் கதைப்பது சிரிப்புக்கிடமானது. 

ஆனால், இலங்கைத்தீவில் அமைதியை உருவாக்க வேண்டும், இனங்களுக்கிடையில் நல்லெண்ணத்தை உண்டாக்க வேண்டுமென்றால் இந்தக் குடியேற்றங்களை அரசு ஊக்கப்படுத்தக் கூடாது.

  • முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தது ஒரு முழுமூச்சிலான இனப்படுகொலை என்பதில் உங்களிற்கு மாற்றுக் கருத்துண்டா? நடந்தது இன அழிப்பல்ல. அது புலிப் பயங்கரவாதத்தை அழிப்பதற்கான நடவடிக்கையே என்ற தொனியில்தானே மருத்துவர் நடேசன் போன்றவர்கள் பேசிவருகிறார்கள். INSD-யைச் சேர்ந்த சுசீந்திரன் நேர்காணலொன்றில் நடந்ததை இனப்படுகொலை என வரையறுக்க முடியாது என்றாரே?
இலங்கையில் சமூகங்கள் இனவாத ரீதியாகவே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் அப்படியே வளர்க்கப்படுகின்றன. இப்படி வளர்க்கப்படும்போது எந்தத் தரப்பு அதிகாரத்தை உச்சமாக வைத்திருக்கிறதோ அது தனக்கு எதிர்நிலையில் இருக்கும் தரப்பை உச்சகட்டமாகப் பலவீனப்படுத்த முனைகிறது. முள்ளிவாய்க்காலில் நடந்ததும் இதுதான். முள்ளிவாய்க்காலுக்கு முன்பு நடந்ததும் இதுதான். முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு நடப்பதும் இதுதான். வல்வெட்டித்துறையில், உடும்பன்குளத்தில், காத்தான்குடியில், அனுராதபுரத்தில், அளுத்கமவில் நடந்ததும் இனி நடக்கப்போவதும் இதுதான். வாய்ப்புக் கிடைக்கும்போது அடுத்தவரின் வயிற்றில் கத்தியைப் பாய்ச்சுவதற்கே பலரும் காத்திருக்கிறார்கள். 

இதேவேளை நாங்கள் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். 1971, 1989 – 1990 ஆகிய காலகட்டங்களில் ஜே.வி.பியை ஒடுக்கும்போது அரசாங்கம் செயற்பட்ட விதம் எப்படியிருந்தது? கேள்விக்கிடமில்லாத வகையில் மனிதக்கொலைகள் நடந்தன. 2009-ல் இசைப்பிரியாவைப்போல 1971-ல் மனம்பெரி சிதைக்கப்பட்டாள். இதை எப்படிச் சொல்வது? அரசு, அதிகாரம், ஏகாதிபத்தியம் போன்றவற்றிற்கு எதிராக எந்தச் சக்தி தலையெடுத்தாலும் அதன்பேரால் அந்தத் தரப்பு மக்களும் பிரதேசங்களும் அழிக்கப்படுவதொன்றும் புதியதல்ல. 

தவிர, இவை தொடர்பாக ஒவ்வொருவருக்கும் மாறுபாடான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. 

அறமும் அரசியலும் அவரவர் நிலைப்பாடு சார்ந்தது. 

  • கருணாகரனின் இலக்கிய நோக்கு எது? இலக்கிய ஆதர்சங்கள் யார்?
சனங்களைக் குறித்தும் வாழ்வைக் குறித்தும் எழுதுவதும், இயங்குவதும் நோக்கு. இந்த நோக்கில் இயங்குகின்ற அனைவரையும் பால், மொழி, இன, மத, நிற, வயது வேறுபாடுகள் மற்றும் அடையாளங்களுக்கு அப்பால் ஆதர்சமாகக் கொள்கிறேன். இதில் நீங்களும் உண்டு. சிரியக் கவிஞர் அடோனிசும் உண்டு. சிங்களப் படைப்பாளி இசுரு சாமர சோமவீர, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் எடுவர்டோ கலியானோரும் உண்டு. இதுபோலப் பலர்.

  • யாழ்ப்பாணத்தில் நடந்த 41-வது இலக்கியச் சந்திப்பின் முதன்மையான செயற்பாட்டாளர்களில் நீங்களுமொருவர். அந்தச் சந்திப்பு பல சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் கிளப்பியது. நிலாந்தன், யேசுராசா, யோ. கர்ணன் போன்ற முக்கியமான படைப்பாளிகள் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. உண்மையில் அவர்கள் சந்திப்பைப் புறக்கணித்தார்கள். நிகழ்வில் பங்குபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் யாழ்ப்பாணம் வரை வந்த கவிஞர் சோலைக்கிளி சந்திப்பில் கலந்துகொள்ளாமல் திரும்பிச் சென்றார். எங்கே தவறு நிகழ்ந்தது?
இலக்கியச் சந்திப்புக் குறித்து ‘தீராநதி’ இதழிற்காக லீனா மணிமேகலையுடன் நிகழ்த்தியிருந்த உரையாடலில் இவைபற்றியெல்லாம் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். மேலதிகமாகச் சொல்வதென்றால், ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளாமல் விடுவது வேறு. அதைப் புறக்கணிப்பது வேறு. எதிர்ப்பது வேறு. நீங்கள் குறிப்பிட்ட நண்பர்கள் உட்பட இன்னும் சிலர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இவர்களில் நிலாந்தனைத் தவிர, பலரும் யாழ்ப்பாணத்தில் நடக்கிற வேறு நிகழ்ச்சிகளுக்கும் போவதில்லை. அப்படியென்றால், அவற்றையும் இவர்கள் தங்களுடைய அரசியலின் நிமித்தம் புறக்கணிக்கிறார்களா? 

இந்த நிகழ்ச்சிக்குத் தி்ட்டமிட்ட புறக்கணிப்போ, எதிர்ப்போ என்றால் அதற்கொரு எதிர்வினை வடிவம் கண்டிப்பாக இருக்கும். யோ. கர்ணன் மட்டும் தன்னுடைய எதிர்ப்பை கலந்து கொள்ளாமல் விடுவதன் மூலமாகவும் எழுத்தின் வழியாகவும் வெளிப்படுத்தியிருந்தார். ஏனையவர்கள் அந்த அளவுக்குச் செல்லவில்லை. சோலைக்கிளி அவருடைய நண்பர்களால் வழிமாற்றப்பட்டுச் செல்லப்பட்டார். பின்னர் வருத்தம் தெரிவித்தார். மற்றும்படி வேறு எதிர்ப்புகளை நான் அறியவில்லை. சிலர் வழமையைப்போல இணையவெளியில் குப்பைகளைக் கொட்டியிருந்ததாக அறிந்தேன். 

இலக்கியச் சந்திப்பு அரச சார்பு நிகழ்வு, அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கிற நிகழ்வு என்றமாதிரியான ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கச் சிலர் முயன்றனர். அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப்போக்கை மறைக்கிற ஒரு முயற்சி இது என்றும் சொல்ல விரும்பினார்கள். எதிர்க் கற்பனைக்கும் எதிர்மனநிலையின் விளைவாக உருவாகிற குற்றச்சாட்டுக்கும் எல்லைகளில்லை. அந்த நிகழ்ச்சி இந்தக் கற்பனைகளையும் குற்றச்சாட்டுகளையும் பொய்யாக்கும் வகையிலேயே நடந்து முடிந்தது. நிகழ்வின் முன்னர் காட்டப்பட்ட எதிர்ப்புகள், குற்றச்சாட்டுகள், குசுகுசுப்புகள் எதுவும் பின்னர் காணப்படவேயில்லை. உண்மையில் இந்த நிகழ்வு இவர்கள் சொன்னதைப்போலவோ கருதியதைப்போலவோ அரசு சார்பாக நடந்திருந்தால், நிகழ்வுக்குப்பின்னர் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் எழவில்லை. அதேவேளை இலக்கியச் சந்திப்பு அனைத்து நிலைப்பாடுகளுக்கும் கோட்பாடுகளுக்கும் இடமளிக்கும் திறந்த களவெளியாகவே இருந்தது. இது வெற்றி என்றே சொல்வேன். யாழ்ப்பாணச் சூழலில், தமிழ்ச் சூழலில் இது ஒரு மாறுதலாக, உடைப்பாகவே இருந்தது. 

இலக்கியச் சந்திப்பை நடத்தக்கூடிய சூழல் யாழ்ப்பாணத்திலோ இலங்கையிலோ இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், இலக்கியச் சந்திப்புக்கு முன்பும் பின்பும் யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் புலம்பெயர்ந்தவர்கள் வந்து கோயில்களுக்குப் போகிறார்கள். சுற்றுலாச் செல்கிறார்கள். நல்லூர்த் திருவிழாத் தொடக்கம் எல்லா ஊர்க்கோயில்களின் திருவிழாக்களும் பொங்கல்களும் சிறப்பாக நடக்கின்றன. நூல் வெளியீடுகளும் இலக்கியக் கூட்டங்களும் நிகழ்கின்றன. இலக்கியத்தின் மீது ‘பேராவல்’ கொண்ட புலனாய்வுப் பிரிவினரோ அப்போதும் இப்போதும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வந்து கொண்டேயிருக்கிறார்கள். 

நாங்கள் அடிப்படையில் தீண்டாமைச் சமூகத்தின் பிரதிநிதிகள். அந்த எண்ணமே பல விதமாக, பல அளவுகளில், விகித வேறுபாட்டில் எல்லோரிடமும் உள்ளது. இலக்கியச் சந்திப்பில் மட்டுமல்ல சாதாரண நூல் வெளியீடுகளில் கூட இந்தத் தீண்டாமை வருத்தத்தையும் வருத்தக்காரரையும் நீங்கள் காணலாம். 

மலவாசலில் மூக்கை வைத்திருப்பதில் சிலருக்கு அலாதிப் பிரியம் என்றால் அதற்கு நாமென்ன செய்ய முடியும்? 

  • அகதியாகப் புலம்பெயர்ந்து வெளிநாடொன்றுக்குச் சென்று விடலாம் என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?
எங்காவது வெளியேறிப் போய்விடலாம் என்று பல தடவைகள் யோசித்திருக்கிறேன். ஆனால், அந்த எண்ணம் பிறகு தீர்ந்தடங்கி விடும். அதற்கு இரண்டு பெரிய காரணங்களிருந்தன. ஒன்று, என்னோடு போராட்டத்தில் இயங்கி மண்ணாகிப் போனவர்கள். அல்லது இனி என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள். இவர்களை விட்டு நான் வெளியேறிச் செல்ல முடியவில்லை. இன்னொரு காரணம், அப்படித்தான் வெளியேற வேண்டும் என்ற நெருக்கடி நிலை வந்தபோதும் வெளியேறுவதற்கான சூழலும் பொருளாதாரமும் அமையவில்லை. 

நாம் நினைப்பதைப் போலவா எல்லாம் நடந்தன! நடந்து கொண்டிருக்கின்றன!! 

  • எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மா எனக்களித்த நேர்காணல் பல புலி ஆதரவாளர்களிற்குக் கடுமையான அதிருப்தியைக் கொடுத்தது. அவர் விலைபோய்விட்டார் என்றெல்லாம் வசைகளை வீசினார்கள். இந்த நேர்காணலைத் தொடர்ந்து உங்கள் மீதும் அவ்விதமான வசைகளை எதிர்பார்க்கலாம். போராட்டத்திற்காகத் துரும்பைக் கூடக் கிள்ளிப்போடாதவர்கள் இத்தகைய வசைகளையும் சாபங்களையும் போராட்டத்திற்காகத் தங்களது நீண்ட காலங்களை அர்ப்பணித்தவர்கள் மீது வீசும்போது உங்களது மனநிலை எவ்வாறிருக்கும்?
இதையிட்டுச் சிரிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை. 

பொதுவெளியில் இயங்கும்போது, கடந்த காலத்தை மீள்பரிசீலனை செய்ய முற்படும்போது, தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்க வேண்டுமென்று சொல்லும்போது இப்படியெல்லாம் எதிர்ப்புகள் வரும். தோல்வியடைந்த தரப்பின் உளவியல் எளிதில் சமநிலைப்படுவதில்லை. ஆகவே, இதையெல்லாம் நாம் எதிர்ப்பார்க்கவே வேண்டும். நாங்கள் எங்களைக் குறித்துச் சிந்திப்பதை விடமும் எதிர்காலச் சமூகத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தேவையானதைச் செய்யப்போய், சொல்லப்போய் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகுவதை விட போகிற போக்கில் நாங்களும் தேசியவாதத்தைப் பேசித் தாராளமாகச் சம்பாதிக்கலாம். உலகம் சுற்றலாம். புனிதர்களாகத் தோற்றமளிக்கலாம். அது எங்களுக்குப் பயன்தருமே தவிர, அதனால் சனங்களுக்கோ எதிர்காலத் தலைமுறைக்கோ எதுவும் கிடைக்கப்போவதில்லை. ஆகவே சிலுவைகளையும் முள்முடிகளையும் சுமந்து கொண்டு எங்களால் முடிந்ததைச் செய்ய விரும்புறோம். 

அடுத்தது, நாங்கள் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நடிப்புச் சுதேசிகளை அதிகமாகக் கொண்ட சமூகம் நமது. நடிப்புச் சுதேசிகள் போடுகின்ற வேசமும் அவர்களுடைய குரைப்பும் கடுமையாகத்தானிருக்கும். 

தமிழர்கள் பல படிகளில் முன்னேற வேண்டிய நிலையில் இருக்கும்போது இந்த மாதிரியான பிரச்சினைகளும் பார்வைகளும் இருந்தே தீரும். குறிப்பாக ஜனநாயக உரிமைகளைப் பற்றியும் ஜனநாயக அடிப்படைகளைப் பற்றியும் ஜனநாயக நடைமுறைகளைப் பற்றியும் தமிழர்களுக்குச் சரியான அறிமுகமோ அறிவோ கிடையாது. அவர்கள் தங்கள் கருத்து மட்டுமே சரியானது, அதையே மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதுவே ஜனநாயகம் என்றும் நம்புகிறார்கள். இத்தகைய நம்பிக்கையோடுதான் சோக்கிரட்டீஸ் நஞ்சூட்டப்பட்டார். புருனே உயிரோடு எரிக்கப்பட்டார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். காந்தி சுடப்பட்டார். கலிலியோ சிறையிலடைக்கப்பட்டார். வரலாறு இப்படித்தான் சிரிப்புக்கிடமளித்தபடி துயரமாக நீள்கிறது. 

இதற்கும் மேலுமொன்று சொல்வதென்றால், எந்த அமைப்பிலும், எப்போதும் உண்மையான போராளிகள் நடந்த எல்லாவற்றையும் நிதானமாகவே பார்க்கிறார்கள். அரைகுறைகளே புலம்புகின்றன. 

  • கருணாகரன் யார்? உங்களது முதன்மையான அடையாளமாக எதை முன்னிருத்த விரும்புவீர்கள்?
நானொரு வழிப்போக்கன். எந்த அடையாளத்தையும் நான் விரும்பவில்லை. அப்படி ஏதேனும் அடையாளங்கள் இருந்தால் அதைத் துறந்து விடவே விரும்புகிறேன். 

என்னுடைய புன்னகையைத் தந்து விட்டு 

எல்லோருடைய கண்ணீரையும் எடுத்துச் செல்கிறேன் 

மாபெரும் சவப்பெட்டியில் 

நிரம்பியிருக்கும் கண்ணீரைப்போக்கி விடுகிறேன் 

கள்ளிச்செடிகள் இனியில்லை 

காற்றுக்கு வேர்களில்லை 

ஒளிக்குச் சுவடுகளில்லை. 

('ஆக்காட்டி' அச்சு இதழில் பக்கங்களின் அளவு காரணமாக இந்நேர்காணல் சற்றே சுருக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது ) 

நன்றி: ஆக்காட்டி http://www.aakkaddi.com/2014/07/blog-post_4916.html

 

Link to comment
Share on other sites

3ஆம் இணைப்பு - கருணாகரனின் மகன் மீதான தாக்குதல் – உண்மை என்ன? கவிஞர் கருணாகரன் கூறுகிறார்:-

 

 

karuna_CI.png

அன்பான நண்பா்களுக்கு ஒரு வேண்டுகோள்..

"எனது மகன் மகிழ் மற்றும் அவருடைய நண்பா்களும் நேற்று (31.08.2014) வகுப்பு முடிந்து வீதியால் வந்துகொண்டிருந்த போது 3 இளைஞா்களால் வழிமறித்து தாக்கப்பட்டனா்.

பாடசாலையில் தலைமை மாணவா்களாக இருக்கும் மகிழும் அவருடைய நண்பா்களும் ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொண்டமையைச் சொல்லியே இந்த இளைஞா்கள் தாக்கியுள்ளனா்.

இதனால் காயம் அடைந்த மகிழ் வீதியால் சென்றவா்களாலும், அதில் நின்றவா்களாலும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

மகிழ் தாக்கப்பட்ட செய்தியை அறிந்த நான் சம்பவ இடத்திற்குச் சென்று விசாாித்த போதே என்னையும், குறித்த இளைஞா்களும் அவருடன் சோ்ந்தவா்களும் தாக்கினாா்கள்."

இதுவே நடந்தது.

ஆனால் இந்தச் செய்தியை பல ஊடகங்களும் பல வகையாக வெளியிட்டுள்ளதாக அறிகிறேன். இதனால் நண்பா்கள், உறவினா்கள் மத்தியில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே நண்பா்கள் எவ்வகையான குழப்பங்களுக்கும் உட்படவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

தவறான செய்தியைப் பிரசுாித்த ஊடகங்கள் அவற்றைத் திருத்திப் பிரசுாிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலதிக விசாரணைகளைப் பொலிசாா் மேற்கொண்டு வருகின்றனா். சட்ட ரீதியான நடவடிக்கைக்காகக் காத்திருக்கிறேன் என்பதை நண்பா்களுக்குத் தொிவித்துக் கொள்கிறேன்.

 

2ஆம் இணைப்பு - கருணாகரனின் மகன் மீதான தாக்குதல் – உண்மை என்ன? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கிளிநொச்சி:-

கவிஞர் கருணாகரனின் இளைய மகனும் நண்பர்களும் வீதியால் சென்றுகொண்டு இருக்கையில்   அவரது நண்பரை சில இளைஞர்கள் தாக்கியுள்ளார்கள்....  நீங்கள் பள்ளிகூடத்தில் சீன் காட்டுகிறீர்களா  என்று கேட்டிருகிறார்கள்... இந்த தாக்குதல் முரண்பாடுகளைின் போது

நண்பனை காக்கப்போன கருணாவின் மகனையும் தாக்கி கியுள்ளார்கள்...

தாக்கியவருடைய  தம்பியின் மகன் கருணாவின் மகனின் பள்ளியில் படிக்கிறார்... அவர் மீது முன்பு ஒரு முறை தலை மயிரை வெட்டுமாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த இரு மாணவ தலைவர்களின் மீதான தாக்குதலே இது...

கருணாவின் மகன் கிளிநொச்சி மகா  வித்தியாலயத்தின் மாணவ முதல்வர். மற்றவர் துணை மாணவ முதல்வர்... இதில் தாக்கப்பட்டது கருணாவின் இளைய மகன் மட்டுமே மற்ற மகன் இதில் சம்பந்தப் படவில்லை... சம்பந்தபட்டவர்கள் கைது செய்யப்பட்டு விட்டார்கள்... இந்த முரண்பாடுகளை தடுக்க முற்பட்ட கருணாகரன் தாக்கப்பட்டாரா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் இருந்து தகவல்களை பெற முடியவில்லை...

 

கவிஞர் கருணாகரன் மற்றும் அவரது இரு மகன்கள் கிளிநொச்சியில் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டனர்:-

31-08-2014 - 16:40

கவிஞர் கருணாகரன் மற்றும் அவரது இரு மகன்கள் கிளிநொச்சியில் இனம் தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளானதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிந்திக் கிடைத்த தகவல் - தாக்தலாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்... விசாரணை தொடர்கிறது...

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111119/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.