Jump to content

'ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை ''சாமிகளின் – சாகசங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
'ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை!'
பகீர் கிளப்பும் டெல்லி பத்திரிகையாளர்
 

24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்!

 குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது p8.jpgஅளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இருக்கிறது. கொலைச் சதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய விசாரணை காலக்கட்டத்தை நீட்டித்துக்கொண்டே போகிறது. ஜெயின் கமிஷன் குற்றம்சாட்டிய நபர்கள் இன்னமும் விசாரணையே செய்யப்படவில்லை. இந்த நிலையில் ராஜீவ் கொலைச் சம்பவம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துவிட்டன. அவை கிளப்பும் சந்தேகங்கள் மலையளவு உள்ளன. அதற்குத்தான் பதில் சொல்வார் யாரும் இல்லை!

எழுதியவர் ஒரு பத்திரிகையாளர்!

இதோ டெல்லியில் இருந்து புதிய குரல். எழுப்பி இருப்பவர்  ஃபெராஸ் அஹ்மத் என்ற  மூத்த பத்திரிகையாளர். அவர் எழுதியுள்ள புத்தகத்தின் பெயர், 'ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ [Assassination of Rajiv Gandhi AN INSIDE JOB?].

இந்தப் புத்தகத்தை முன்னாள் அவுட்-லுக் ஆசிரியர் வினோத் மேத்தா வெளியிட்டார். முன்னாள் பி.ஜே.பி தலைவர் கோவிந்தாச்சாரியார், முன்னாள் சி.பி.ஐ அதிகாரிகள் அமோத் கான், ஜனதா தளக் கட்சி பொதுச்செயலாளர் எஸ்.சி.தியாகி ஆகியோர் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கெடுத்தது அவர்களுக்கும் அந்தப் புத்தகத்துக்கும் உள்ள தொடர்பைக் காட்டின. 'ஒரு நிருபராக இருந்தவர் இப்படியொரு புத்தகம் எழுதியிருப்பது நல்ல முன்னுதாரணம்’ என்று பாராட்டினார்கள்.

''ராஜீவ் காந்தி கொலை ஒரு 'ஒப்பந்தக் கொலை’. அரசியல் ஆதாயத்துக்காக நடந்தது. இந்தக் கொலை செய்தவர்களுக்கு இது உண்மையான நோக்கம் இல்லை. ராஜீவ் கொலை செய்யப்படுவதன் மூலமாக ஆதாயம் அடைந்தவர்கள்தான் இந்தக் கொலையைத் தூண்டியவர்கள்'' என்று வாதங்களை வைக்கிறது இந்தப் புத்தகம்.

கொலை செய்யத் தூண்டியது யார்?

இந்தக் கொலைக்கான சதி திட்டம் தீட்டியது விடுதலைப்புலிகள் அமைப்பும் அதன் தலைவர் பிரபாகரன் என்றும் சி.பி.ஐ குற்றம் சுமத்தியது. ''இந்தக் கொலை பிரபாகரனுக்குத் தெரிந்தும் இருக்கலாம் அல்லது அவருக்குத் தெரியாமலேயேகூட நடந்திருக்கலாம். ஆனால் இந்தக் கொலையினால் விடுதலைப்புலிகள் பலனடையவில்லை. அவர்கள் ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக்கூட கருதவில்லை. இந்தக் கொலைக்கான பின்னணிகள் வேறு...'' என்கிற சந்தேகத்தை வைக்கும் ஃபெராஸ், ''ராஜீவ் கொலையினால் பலனடைந்தவர்கள் அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசா, இந்தியாவில் பிரதமராகப் பதவிஏற்க வந்த நரசிம்ம ராவ் போன்றவர்களில் யாராவது ஒருவருக்கு பின்னணியில் இருப்பவர்கள்தான்'' என்று அதிரடியாக ஒரு புதிய கோணத்தை காட்டுகிறார் ஃபெராஸ் அஹ்மத்.

p9.jpg

''இது என்னுடைய கற்பனை அல்ல!''

ஃபெரோஸ் அஹ்மத் இந்த மாதிரியான முடிவுக்கு எப்படி வந்தார் என்பதை அறிய அவரை டெல்லியில் சந்தித்தோம். ''இது என்னுடைய கற்பனை அல்ல. பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். ராஜீவ் காந்தி கொலையின் பின்னணிப் பாதுகாப்பை விசாரித்த ஜெயின் கமிஷன் மற்றும் வர்மா கமிஷன் என்ன கூறியது என்பதை முதலில் பார்த்தேன். இவற்றோடு இந்தக் கொலை குறித்து சி.பி.ஐ இயக்குநர் கார்த்திகேயன், ராஜீவ் கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ அதிகாரி வினோத் குமார் ராஜு, அப்போது சட்ட அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் தமிழக டி.ஜி.பி மோகன்தாஸ், பத்திரிகையாளர் மனோஜ் மிட்டல் என்று பலர் இது பற்றி சொன்னவற்றை தொகுத்தேன். இப்படி எழுதியவர்கள் எல்லாம் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள். இதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.''

''பிரபாகரனுக்கு ராஜீவ் பற்றி பயம் இல்லை!''

''1989-ம் ஆண்டு தேர்தலில் வி.பி.சிங்கிடம் தோல்வியுற்ற ராஜீவ் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழ்நிலையில் இல்லை. ராஜீவ் கொலை செய்யப்பட்ட பின்னர்தான் அனுதாப அலை ஏற்பட்டது. அப்படியும் காங்கிரஸால் 240 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது. மற்ற கட்சிகளின் ஆதரவுடன் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இதனால் அவர் கொலை செய்யப்படவில்லை என்றால் அவரால் ஆட்சிக்கு நிச்சயமாக வந்திருக்க முடியாது. இந்தக் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ கொலைக்கான காரணமாக வைத்தது, 'ராஜீவ் காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனக்கும் தன்னுடைய எல்.டி.டி.இ இயக்கத்தையும் அழித்துவிடுவார் என்று பிரபாகரன் பயந்தார். இதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டார்’ என்பதுதான்.

ஆனால் இது எவ்வளவு மடத்தனமானது என்பதை அறியலாம். ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வரக்கூடிய சூழ்நிலையும் இல்லை. அப்படியே வந்தாலும் படைகளை இலங்கைக்கு அவரால் அனுப்பவும் முடியாது. முன்பு அவர் அமைதிப்படையை [ஐ.பி.கே.எஃப்.] அனுப்பியது இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே உடனான உடன்பாட்டின் அடிப்படையில் அனுப்பினார். பின்னர் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரேமதாசா தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டு இருந்தது. ராஜீவ் காந்தி பதவியில் இருந்தவரை படைகளை திரும்பப் பெறுவதில் விரும்பம் இல்லாமல் இருந்தார். ஆனால், இலங்கையில் ஜனாதிபதியாக வந்த பிரேமதாசாவுக்கு இந்தியப் படைகள் இலங்கையில் இருப்பதில் மிகவும் அதிருப்தியடைந்து, திரும்ப அனுப்புவதில் மும்முரமாக இருந்தார். இதனால் ராஜீவ் பதவி விலகும்முன்பு 1989 செப்டம்பர் மாதம் பிரமேதாசாவுடன் மற்றொரு ஒப்பந்தம் போட்டு படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டார். அதே வருடம் டிசம்பர் மாதம் ராஜீவ் காந்தி அதிகாரத்தையும் இழந்தார். 1990-ம் ஆண்டு தி.மு.க ஆதரவுபெற்ற வி.பி.சிங் ஆட்சிக்கு வந்து இந்திய படைகளும் திரும்பி வந்தன. இறையாண்மை பெற்ற இலங்கை போன்ற நாடுகளுக்கு, நாம் நினைத்தமாட்டில் படைகளை அனுப்ப முடியாது. இதனால் பிரபாகரனுக்கோ, எல்.டி.டி.இ அமைப்புக்கோ ராஜீவ் காந்தி மீது பயமோ அச்சமோ கிடையாது. புலிகளுக்கு அவரது கொலைக்கான தொடர்பில் சம்பந்தமே இல்லை. இந்தக் கொலையில் விடுதலைப்புலிகள் உறுதியாக ஈடுபடவே இல்லை என்று நான் சவால் விடவும் இல்லை. இந்த விவகாரங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் வழக்கை விசாரித்தவர்கள் சொல்லும் கூற்றுக்கு அர்த்தமில்லை என்பது என் கருத்து.''

சிவராசன் ஏன் தப்பிக்கவில்லை?

''1990-ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் கொல்லப்பட்டார்கள். அதில்  விடுதலைப்புலிகள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இந்தக் குழுவில் சிவராசன் ஈடுபட்டு இருப்பது பற்றி சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் இவர்கள் எல்லோரும் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தப்பிச் சென்றனர். ராஜீவ் கொலையில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டு இருந்தால் அடுத்த நிமிடமே இங்கிருந்து தப்பியிருப்பார்கள். ஏன் போகவில்லை? 1991 மே 21-ம் தேதி மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் கொலை நடந்தது. கிட்டத்தட்ட ஜூன் 23-ம் தேதி வரை சிவராசன் சென்னையில்தான் இருந்தார். சம்பவம் நடந்த ஸ்ரீபெரும்புதூருக்கும் கடற்கரைக்கும் மிகப்பெரிய தூரம் கிடையாது. புலிகள் சாலையில் பறப்பதைவிட படகில் பறப்பதில் மிகவும் கெட்டிக்காரர்கள். ஆனால் அவர் அப்படி போகவில்லை. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஆட்டோவில்தான் சென்னைக்கு எல்லோரும் ஒன்றாகத் திரும்பிவந்துள்ளனர் இந்த அமெச்சூர் சதிக்காரர்கள். மறுநாள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நளினியை சிவராசன் அவரது அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டுபோய் விட்டுள்ளார். இடையில் சுபா, நளினி, பத்மா ஆகியோருடன் சிவராசன் திருப்பதிக்கும் சென்று வந்துள்ளார். இவர்கள் என்ன பக்தி புலிகளா? 24-ம் தேதி செய்தித்தாளில் மனித வெடிகுண்டு தாணுவின் புகைப்படம் வெளி வந்துவிடுகிறது. அது தடயவியல் வல்லுநர் சந்திரசேகர் லீக்-அவுட் செய்ததால் வந்தது. அதன் பிறகு சிவராசன் சாலை மார்க்கமாக டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். அவர் யாழ்ப்பாணம் தானே சென்றிருக்க வேண்டும். எதற்காக டெல்லி செல்ல நினைத்தார்?

ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு ஒருநாள் முன்பு சிவராசன், ராஜீவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த கனகசபாபதி என்பவரை டெல்லிக்கு அனுப்பி வாடகை வீடு பார்க்கச் சொல்லியிருந்தார். மற்றொரு குற்றவாளியான ஆதிரையையும் டெல்லிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டார். இவர்கள் எதற்காக டெல்லி சென்றனர்? அப்போது இருந்த பிரதமரைக் கொல்லவா? அல்லது செங்கோட்டையைத் தகர்க்கவா? இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கக் காரணம் இந்த விவகாரத்தில் புலிகளின் தொடர்புகள் சந்தேகத்துக்குரியவை என்பதை விளக்கத்தான்!''

தணு யார், பிரபாகரனுக்குத் தெரியுமா... இதனால் லாபம் அடைந்தவர்கள் யார்... சிவராசனை வேறு யார் பயன்படுத்திக் கொண்டது?

 

http://www.vikatan.com/

 

Link to comment
Share on other sites

இன்னும் ஒருத்தரும் வாசிச்சு முடியேல்லயா?? :unsure: இசைக்கச்சேரியை இன்னும் காணேல்ல..??! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒருத்தரும் வாசிச்சு முடியேல்லயா?? :unsure: இசைக்கச்சேரியை இன்னும் காணேல்ல..??! :D

 

 

நடந்து முடிந்த துன்பவியல் சம்பவங்களை  தூக்கி  நிறுத்த நினைப்பது ஏனோ ராசா...?? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒருத்தரும் வாசிச்சு முடியேல்லயா?? :unsure: இசைக்கச்சேரியை இன்னும் காணேல்ல..??! :D

அரசியல் விற்பனர்கள் நித்தா கொள்ளுகினம் இனி எழும்பி சோம்பல் முறிச்சு வருவினம்...விடுப்பு பாக்கிறதில என்னா ஒரு ஆர்வம்
Link to comment
Share on other sites

ஒப்பந்த கொலை என்றால் காசு வாங்கி கொண்டு கொல்லுவது தானே? காசு வாங்க தான் டெல்லிக்கு போக பார்த்தார்களோ??? :)

 

சிலவேளை பத்மநாபாவை கொன்றதால் தான் "தள்ளி" வைத்த படியால்....கொலையை ஒரு தொழிழாக செய்ய சிவராசன் முற்பட்டாரா??

 

சொல்லுங்க மக்களே...சொல்லுங்க.....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலோ திரு.naanthaan இப்ப கதை சொல்றது Faraz Ahmad அவரை கேளுங்க எசமான் கேளுங்க புத்தக விற்பனை அந்த மாதிரியாம் இந்திய காசு 495.00 அவரின் கோணங்களை யாரும் மறுதலிக்கமுடியாத வகையில் அனுகியிருக்கார் கடைசியிலை பாருங்க காங்கிரஸ்முக்கியஸ்த்தர் ஒருவரை கை காட்டும் அப்ப பம்மிகிட்டு இருக்கவேண்டி வரும் தலை. :D

Link to comment
Share on other sites

அலோ திரு.naanthaan இப்ப கதை சொல்றது Faraz Ahmad அவரை கேளுங்க எசமான் கேளுங்க புத்தக விற்பனை அந்த மாதிரியாம் இந்திய காசு 495.00 அவரின் கோணங்களை யாரும் மறுதலிக்கமுடியாத வகையில் அனுகியிருக்கார் கடைசியிலை பாருங்க காங்கிரஸ்முக்கியஸ்த்தர் ஒருவரை கை காட்டும் அப்ப பம்மிகிட்டு இருக்கவேண்டி வரும் தலை. :D

 

காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்+சோனியா+சாமிகள் இடம் காசு வாங்கிட்டு "நாங்க" தான் செஞ்சோம் என்றால் இன்னும் கேவலாமா இருக்காது??

 

முதலாவது எங்கள் நாட்டை சீரழிச்ச படியால் செய்தோம் என்று ஒரு பெருமிதமாவது இருந்தது... :)

 

இது என்ன

 

"செய்தோம்..ஆனா செய்யல்ல"  கேஸ் தானே :)

 

சிவராசன் செஞ்சாரா இல்லையா? சிவராசன் ஏன் பத்மநாபாவை போட்டார்? பிறகு ஏன் கூலி-கொலையாளி ஆனார் என்று அந்த புத்தகம் சொல்லுதா என்று வாசிச்சு சொல்லுங்க :) ப்ளீஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

டெல்லியில் இருந்து புதிய குரல். எழுப்பி இருப்பவர்  ஃபெராஸ் அஹ்மத் என்ற  மூத்த பத்திரிகையாளர். அவர் எழுதியுள்ள  'ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ [Assassination of Rajiv Gandhi AN INSIDE JOB?].

 

இந்திய அமைதிப்படை.... ஈழத்தில் செய்த அட்டுழியங்களுக்கு.....

ராஜீவ் காந்தியை, புலிகள் கொன்றிருக்காமல் விட்டிருந்தால்.... புலிகளுக்குத் தான், அது அவமானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் மரணம் ஒரு விபத்து.

 

இந்திரா குடும்பமே விபத்தில் சிக்கிய குடும்பம் தானே.

 

சஞ்சேய்... மரணம் விபத்து.

 

இந்திரா மரணம் விபத்து..!

 

அந்த வகையில்..

 

ராஜீவ் மரணம் விபத்து.

 

ஏன்.. நேதாஜி மரணம் கூட விபத்து. 

 

புலிகள் இதனை எல்லாம் ஏன் துன்பியல் என்றார்களோ தெரியவில்லை. புலிகள் சில விடயங்களில் தொடர்ந்து வாயை பொத்திக்கிட்டே இருந்திருக்கலாம். துன்பியல் என்று சொல்லப் போய்.. கடைசியில் அது உரிமை கோரலாக திரிக்கப்பட்டு.. இன்று... அதை சாட்டு வைச்சே ஒரு தேசிய இனத்தின் உரிமைப்போராட்டத்தின் முக்கிய வலு முறிக்கப்பட்டு ஹிந்திய இறையாண்மை அதனால் வலுப்படுத்தப்பட்டுள்ளதாம்.. என்ற நிலை தோன்றி உள்ளது. 

 

இது ஒப்பந்த விபத்தா அல்லது செய்த கொடுமைகள் சார்ந்த விபத்தா என்பதை சுப்பிரமணியன் சுவாமியிடம் கேட்டால் விலாவாரியாச் சொல்வாரே.  :icon_idea:

Link to comment
Share on other sites

தலைவர்தான் உத்தரவு கொடுத்தாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை - முன்னாள வெளியுறவுச் செயலாளர் ஏ.பி. வெங்கடேஸ்வரன்

http://archive.tehelka.com/story_main21.asp?filename=Ne110406_I_am.asp

புலிகள் இயக்கத்தில் அப்போது மாத்தயா இருந்தார் என்பதும், அவர் இந்திய உளவுத்துறையின் சதி வலைக்குள் சிக்கிக் கொண்டிருந்தார் என்பதும் கூடுதல் தகவல்.

ஆனாலும் இயக்கத்துக்கு பொறுப்புக் கூறவேண்டிய கடமை இருந்திருக்கும். ஆகவே அது ஒரு துன்பியல் சம்பவம்.. :huh:

Link to comment
Share on other sites

இது பழைய ஒரு பதிவு. இப்போது என்னமாதிரியான கருத்தைக் கொண்டுள்ளார் என்பது தெரியவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(பாகம் 2)

 

ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை! புலிகளுக்கு சம்பந்தமே இல்லை! அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் (பாகம் 2)

 

rajiv-ghandhi2-197x300.jpgசிவராசனின் இரட்டை வேடம்!
பத்திரிகையாளரின் பகீர் பேட்டி தொடர்கிறது..

”ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அவரது பேட்டி கடந்த இதழில் வெளியாகி இருந்தது. இந்த இதழிலும் தொடர்கிறது.

இதோ ஃபெரோஸ் அஹ்மத் பேசுகிறார்…

சிவராசன் ஏன் டெல்லி போனார்?

”என்னுடைய வாதம், சிவராசன் சுயேட்சையாக செயல்பட்டு இருக்கலாம் என்பதுதான். இதனால்தான் அவர் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பவில்லை. உயிருக்கு பயந்துதான் அவர் போகவில்லை. டெல்லிக்கு போகக் காரணம் வேறு யாரோ அவருடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்திருந்துள்ளனர். யார் அது? இந்த கொலையில் இருவர் ஆதாயமடைந்தனர். ஒருவர் இலங்கை ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசா. மற்றொருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று இதனால்தான் சொல்கிறேன்.

ராஜீவை கொன்ற பின்னர் யார் பயனடைவார்கள்? ஒன்று அவரது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லது அப்போது ஆட்சியில் இருப்பவர்கள். ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தியை கொன்ற மனித வெடிகுண்டு தணு ராஜீவ் காந்தி அருகில் செல்ல அனுமதிக்கக் காரணமாக இருந்தவர்கள் யார்? அவர் பல்வேறு தடைகளைத்தாண்டி ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்கச் செல்ல காரணமாக இருந்தது மறைந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினர். மரகதம் சந்திரசேகரும் அவருடைய மகள் லதா பிரியகுமாரும் இதில் முக்கியமானவர்கள். இவர்களோடு லதா கண்ணன் கோகிலா போன்றோர்களும் வந்துள்ளனர். ராஜீவ் பொதுக்கூட்ட மேடையில் ஏறுவதற்கு சற்றுமுன்புதான் கொல்லப்பட்டார். ஆனால், அவரோடு வந்த மரகதம் சந்திரசேகர், லதா பிரியகுமார், லலித் சந்திரசேகர் போன்றோர் ராஜீவ் காந்தியோடு உடன் வரவில்லை. அன்றைய தினம் இந்தப் பொதுக்கூட்டத்துக்குப் பின்னர் தரம் சந்த் ஜெயின் என்பவரது இடத்தில் ராஜீவ் காந்தியை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்துள்ளது. ஆனால் அந்த இடத்தை ஆய்வு செய்த புலனாய்வுத் துறை அதை நிராகரித்தது. இப்படிப்பட்ட மோசமான ஏற்பாடுகளை யார் செய்தது?
மரகதம் சந்திரசேகர் குடும்பம் இந்திரா காந்தி குடும்பத்துக்கு வேண்டியவர்கள். மரகதம் சந்திரசேகர் மகன் லலித் சந்திரசேகரின் மனைவி சிங்களர். இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளுக்கு சிவராசன் சுமார் ஐந்து லட்ச ரூபாயை லலித் சந்திரசேகருக்கு கொடுத்துள்ளார். நீதிபதி வர்மா கமிஷனும் சுப்பிரமணியன் சுவாமியும் இதைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினரை குற்றம்சாட்ட முயற்சிக்கவில்லை. ‘அவர்கள் அப்பாவித்தனமாக உதவியிருக்கலாம்’ என்கின்றனர். சி.பி.ஐ-யின் முதன்மை புலன் விசாரணை அதிகாரியான கே.ரகோத்தமன் ஐந்து லட்ச ரூபாய் பொதுக்கூட்டத்துக்கு லலித் சந்திரசேகர் வாங்கியிருக்கலாம் என்கிறார். இவை அனைத்தும் சந்தேகத்தை அதிகமாகக் கிளப்பக் கூடியவை!”

இந்தக் கொலையாளிகள் யார்?

sivarasan-thanu-300x173.jpg”இந்தக் கொலையாளிகள் யார்? கொலையாளிகள் குறித்த சந்தேகங்களைத் தெளிவு படுத்தவேண்டும். இவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்? இவர்களை அனுப்பியது எல்.டி.டி.இ-யை சேர்ந்தவர்கள்தானா என்பது முக்கியம். சிவராசன் எல்.டி.டி.இ இயக்கத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், இதற்கு முன்பு அவர் இருந்தது டெலோ. அந்த இயக்கம் அழிந்த பின்னர் இங்கு வந்துள்ளார். மிக முக்கிய சந்தேகம், சிவராசனின் இரட்டை வேடம். எல்.டி.டி.இ-யிலும் இருந்து கொண்டு மற்றவர்களுக்காகவும் செயல்பட்டு இருக்கலாம் என்கிற கோணம்தான் உறுதியாகத் தெரிகிறது. சிறப்புப் புலனாய்வு பிரிவு தலைவர் டி.ஆர்.கார்த்திகேயன் குறிப்பிட்டபடி, இந்த ஆபரேஷனுக்கு மொத்தம் ஒன்பது பேர் படகில் வந்து கோடியக்கரையில் இறங்கினார்கள். சண்முகத்தின் வீட்டில் தங்கிவிட்டு வந்துள்ளனர். கடைசி வரை ஒன்றாக இருந்தவர்கள் சிவராசன், சுபா, தணு, நேரு போன்றவர்கள். இதில் தணு இறந்தவுடன் மற்ற மூன்று பேர்கள் ஒன்றாக இருந்தனர். ஆனால் ஆதிரை, விஜயானந்த், சிவரூபன், கனகசபாபதி ஆகியோரை இந்த ஆபரேஷனில் சிவராசன் நேரடியாகச் சேர்க்கவில்லை. ஒருவரை ஜெய்ப்பூருக்கும் மற்றொருவரை போபாலுக்கும் வேறு சிலர் டெல்லிக்கும் சென்றனர். இவர்களுக்கு இந்தக் கொலையில் என்ன தொடர்பு? பொத்தம் பொதுவாக இவர்கள் எல்லாம் சதி திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்கிறது சி.பி.ஐ. ஆனால், சிவராசன் உபயோகித்தது இந்தியர்களை மட்டுமே. அவர்களில் நளினிக்கோ இறந்துபோன போட்டோகிராபர் ஹரிபாபுவுக்கோ சதித்திட்டம் பற்றி எதுவுமே முன்னமே தெரியவில்லை.”

தணு யார்?

ராஜீவைக் கொன்ற மனித வெடிகுண்டு தணு யார்? இதிலும் தெளிவு இல்லை. கார்த்திகேயன் சொல்கிறார், ‘தணு எல்.டி.டி.இ என்பதற்கு ஒரு வீடியோ இருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு பெண் கொடியைப் பிடித்துச் செல்ல… அவர்தான் தணு’ என்கிறார். தணு இலங்கைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவரது மகள் என்று சொல்லப்பட்டது. இது குறித்து டி.ஆர். கார்த்திகேயன், ‘தணு, ராஜரத்தினத்தின் மகளாக இருப்பார் என்று கருதுகிறோம்’ என்கிறார்.
இந்து ஃப்ரெண்ட்லைனில் ஒரு செய்தி வந்தது. இலங்கையிலிருந்து அதே ராஜரத்தினத்தின் நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு கருத்தைச் சொல்லியுள்ளார். ‘எனக்கு ராஜரத்தினம் நெருங்கிய நண்பர். அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன். அவர் ஜெர்மனியில் செட்டில் ஆகியுள்ளார். இரண்டாவது மனைவியையும் நான் இருக்கும் இடத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளனர். நான் சென்று பார்த்தேன். இரண்டாவது மனைவியும் அவரது மத்திய தர வயதுடைய மகளும் இருந்தனர். இவருடைய இளைய மகள் இலங்கை ராணுவத்தினர் சண்டையில் இறந்து போயுள்ளார்’ என்கிறார். இப்படிப்பட்ட தகவல்களுக்கிடையே தணு யார் என்பதை நிரூபிக்கப்படவில்லை. சிவராசன் ஒருவரைப் பற்றிதான் தெரிகிறது. இந்தப் பெண்கள் தணு, சுபா யார் என்பதில் குழப்பம். சரியான ஆதாரங்கள் இல்லை.”

‘பிரபாகரனுக்குத் தெரியுமா?”

”ஆரம்பக் கட்டத்தில் உள்ளவற்றைப் பார்க்கும்போது இவர்கள் பிரபாகரனுக்கு தெரிந்தே வந்தவர்களாக தெரிகிறது. சில தகவல் தொடர்புகள் ரகசிய சாம்பாஷணைகளில் தெரிகிறது. பின்னர் ஒருவேளை பிரபாகரனுக்கு தெரிந்து அவரே நினைத்திருந்தால்கூட அவரால் தடுக்க முடியாமல் போயிருக்கலாம் என்பதைதான் நான் உணர்கிறேன். 1991 மார்ச் ஏப்ரலில் வந்த சிவராசன் டீம் பின்னர் எல்.டி.டி.இ சம்பந்தப்படாத நபர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தி வந்தது. சிவராசன் உபயோகித்து வந்த வயர்லெஸ் சாதனங்கள் எல்லாம் புலிகள் இயக்கத்துக்கு சம்பந்தப்பட்டவை அல்ல. எல்.டி.டி.இ உளவுத்துறை தலைவரான பொட்டு அம்மனின் டிரான்ஸ்மிட்டர் ஆப்ரேட்டர் சிவரூபன் சிவராசனோடு இருந்தார்.
ஆனால், அவரை சிவராசன் உபயோகிக்கவிலை. அவர் கண்ணிவெடியில் காலை இழந்ததால் செயற்கைகால் பொருத்த ஜெய்பூருக்கு சென்றுவிட்டார். இப்படி சிவராசன் யாரையும் உபயோகிக்கவில்லை. தனியாக அவர் வைத்திருந்த வயர்லெஸ் சாதனங்களைத்தான் உபயோகிக்கிறார். இதைவைத்து யாரோடு இவர்களுக்குத் தொடர்பு? இது குறித்து சி.பி.ஐ முழுமையாக விசாரிக்கவில்லை.”

”எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?”

”இந்த ஒப்பந்த கொலைக்கு பிரேமதாசா காரணமாக இருந்திருக்கலாம். இலங்கை சிங்கள அரசின் இந்த சதித்திட்டத்தில் பிரபாகரனையே நாடியிருக்கலாமா அல்லது டெலோவிலிருந்து வந்த சிவராசனை மட்டும் பயன்படுத்தியிருக்கலாமா என்கிற சந்தேகம் வருகிறது. சிவராசன் இலங்கை மின்சார வாரியத்தின் ஊழியர். இதற்கான அடையாள அட்டையும் உண்டு. ஆனால், சிவராசன் குரூப்க்கு பின்னணியில் பிரேமதாசா இருந்திருந்தால் அவர் இலங்கைக்கோ, யாழ்ப்பாணத்துக்கோ சென்றிருக்க முடியும். இந்தியாவில் சுற்றிக்கொண்டுதான் வந்தார். தப்பி செல்லாததை வைத்தும் முடிவுக்கு வரமுடியாது. காரணம், பிரேமதாசா சாதாரணப்பட்டவர் அல்ல… தன்னுடைய அரசியல் எதிரியான இலங்கை அமைச்சர் லலித் அதுலத்முதலி கொலை போன்ற விவகாரங்கள் இதற்கு உதாரணம். ஆனால், சி.பி.ஐ இந்தக் கோணத்தில் விசாரணையை நடத்தவில்லை.”

வெளிநாட்டு பங்களிப்புகள்!

”நான் என்னுடைய புத்தகத்துக்கு ‘கி பிuரீமீ சிஷீஸ்மீக்ஷீuஜீ’ என்றுதான் பெயர் வைக்க நினைத்தேன். ராஜீவ் கொலை வழக்கு விவகாரத்தில் இந்தியாவில் எல்லா அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு ‘கவர்-அப்’ செய்தனர். புலன் விசாரணையிலிருந்து சுப்ரீம் கோர்ட் வரை இது நடந்தது. அனைத்து உண்மைகளையும் குழப்பி, எல்லா சாட்சியங்களையும் அழித்து, இறுதியாக புலிகள்தான் இதற்குக் காரணம் என்கிற பிடிவாதமான முடிவை சி.பி.ஐ-யினர் கொடுத்தனர். ஆனால், எனக்கு எல்.டி.டி.இ-தான் காரணம் என்பது தெரியவில்லை. ஒருவேளை எல்.டிடி.இ இதில் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அது பெரிய அளவில் இருந்திருக்காது என்று சொல்ல முடியும். எனக்குப் பல்வேறு ரகசியங்களை உடைத்தது தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த மோகன்தாஸ் எழுதிய நாவல்தான்!”

– அது அடுத்த இதழில்!
– விகடன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அந்த ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்கவில்லை!
மோகன்தாஸ் சொன்னதை வழிமொழியும் ஃபெரோஸ் அஹ்மத்

ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இந்த புத்தகத்தை எழுதியுள்ள டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மதுவின் பேட்டி கடந்த இரண்டு இதழ்களாக வெளியாகி உள்ளன. அதன் இறுதிப்பகுதி இது. இதோ ஃபெரோஸ் அஹ்மத் பேசுகிறார்...

p17.jpg

 

''இப்படி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்று என்னைத் தூண்டியது தமிழகத்தின் டி.ஜி.பி-யாக இருந்த மோகன்தாஸ். அவர் ஒரு நாவல் எழுதியிருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியாது. உண்மையில் அது நிஜக்கதை. ராஜீவ் கொலைக்கான பின்னணி, காரணகர்த்தாக்கள் எல்லாம் இந்த நாவலுக்குள் வருகிறார்கள். இந்த நாவலின் பெயர் ‘‘The Assassination’’ . 1993-ம் ஆண்டு இந்த நாவல் வெளியானது. நாவலில் உள்ள தகவல்களை இந்திய 'ரா’ உளவுத் துறை அதிகாரிகள் அவருக்கு கொடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இதை வெளியிட்டது 'ரா’ சம்பந்தப்பட்ட பப்ளிகேஷன்[launchers].   இந்தப் புத்தகம்p17a.jpgமக்களிடம் சென்று சேராமல் தடுத்துவிட்டனர். அப்போது நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். எனக்குக்கூட இந்தப் புத்தகம் பற்றிய தகவல், சுப்பிரமணியன் சுவாமியின் புத்தகத்தின் மூலம்தான் கிடைத்தது. இந்தப் புத்தகத்தை தேடினேன். எங்கேயும் கிடைக்கவில்லை. இறுதியில் புலனாய்வுத் துறை நண்பர் ஒருவர் கொடுத்த தகவலின்படி அந்தப் புத்தகத்தை வாங்கப்போனேன். அங்கே அந்தப் புத்தகத்தின் ஜெராக்ஸ்தான் எனக்கு கிடைத்தது.

இந்தப் புத்தகம் அப்படியே ராஜீவ் கொலைச் சதியை திட்டமிட்டவர்களை, பலனடைந்தவர்களை கதாபாத்திரங்களாக எடுத்து வைக்கிறது. வில்லன் கேரக்டராக இருப்பவர் பாதர் மூன்சைன். இவர்தான் சந்திரா சாமி. ராஜீவ் காந்தியாக ஜார்வின் என்கிற கேரக்டர் வருகிறது. சுந்தன் என்கிற கேரக்டர் பிரபாகரனை வெளிப்படுத்துகிறது. ஐரோப்பிய மொழி ஒன்றில் 'ஒற்றை கண்’ணுக்கு சைக்லேப்ஸ் என்று சொல்லப்பட... அந்தப் பெயர் சிவராசனுக்கு. இவர் Delta Force II என்கிற சினிமா படத்தைப் பார்த்து மனித வெடிகுண்டு தணுவை உருவாக்கும் கதை இந்த நாவலில் வருகிறது.

ராஜீவ் கொலையை நேரடியாக எழுதினால் அது அப்போதைய ஆளுங்கட்சியை எதிர்நோக்க வேண்டியது இருக்கும் என்பதை எதிர்பார்த்து ஒரு நாவலாகக் கொடுத்துள்ளார். அவருடைய பதவிக்காலத்தின் இறுதியில் எல்.டி.டி.ஈ-க்கும் மோகன்தாஸுக்கு விரோதம் உண்டு. ஆனாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையை சொல்லியுள்ளார். இது 'கான்ட்ராக்ட் கில்லிங்’ என்கிறார். இந்த நாவலின்படி பாதர் மூன்சைன்னுக்கு (சந்திராசாமி) ஜார்வின் (ராஜீவ் காந்தி) மீது போபர்ஸ் ராணுவ பீரங்கி பேரத்திலிருந்து விரோதம் தொடங்குகிறது. பாதர் மூன்சைன் சுந்தனை தொடர்பு கொண்டு ஒப்பந்தம் பேசுகிறார். ஜார்வினை தீர்த்துக்கட்டும் ஒப்பந்தம். சுந்தன் இந்த ஒப்பந்தத்துக்கு முன்வரவில்லை. 'நான் இதுபோன்ற வேலையெல்லாம் செய்வது இல்லை’ என்கிறார் சுந்தன். இதற்கு சில காரணங்களையும் சுந்தன் சொல்கிறார். ''அரசியல் ரீதியாக ஜார்வின் ஒழிந்து போய்விட்டார். அவர் அதிகாரத்துக்கு திரும்ப வரப்போவதில்லை. அதிலும் எங்கள் இயக்கம் இது போன்ற கான்ட்ராக்டையெல்லாம் எடுத்துச் செயல்படாது. எங்கள் இயக்கத்துக்கு தேவைப்பட்டால் செய்வோம். அவருடைய ராணுவம் எங்களைக் கொல்ல திரும்ப வரப்போவதில்லை. இப்படிப்பட்டவரைக் கொல்ல எங்கள் ஆட்களை வீணாக்க நான் விரும்பவில்லை. ஆனால், பணத்துக்காக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்பவர்கள் இருக்கிறார். அவர்களைப் பாருங்கள்’ என்று கூறியது நாவலில் வருகிறது. ஆனால், சுந்தன் தலையிடவில்லை. இரண்டு தடவை சந்திக்க ஏற்பாடு செய்ததோடு சரி என்று நாவல் சொல்கிறது.

'எல்.டி.டி.ஈ-க்கு இதில் சம்பந்தம் இல்லை’ என்பதை ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாள் முதல் 'ரா’ உளவு அமைப்பு சொல்லி வருகிறது. 1991 மே 21-ம் தேதி இரவு ராஜீவ் காந்தி கொல்லப்படுகிறார். 22-ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூடுகிறது. அதில் ஐ.பி இயக்குநர், 'ரா’ அமைப்பின் தலைவர் எல்லாம் இருக்கின்றனர். ஆனால், கூட்டத்தின் முடிவில் சுப்பிரமணியன் சுவாமி, 'கொலைக்கான காரணம் எல்.டி.டி.ஈ’ என்று p17c.jpgஅறிவிக்கிறார். 'ரா’ தலைவர், 'இதில் எல்.டி.டி.ஈ இல்லை’ என்கிறார். அதன் பிறகு தமிழக அரசியல்வாதிகள் இதனைக் கையில் எடுத்து எல்.டி.டி.ஈ-தான் காரணம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

எல்.டி.டி.ஈ-யின் முக்கிய புள்ளிகளிடம் விசாரிக்கவில்லை. அந்த இயக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு தமிழகத்தில் திரிந்த கீழ்மட்டத்தைச் சேர்ந்த சிலரைப் பிடித்து வாக்குமூலத்தையும் சில கடிதங்களையும் ஆதாரமாக வைத்து எல்.டி.டி.ஈ-யை சி.பி.ஐ குற்றவாளியாக ஆக்குகிறது. தணுவும் சாந்தனும் பிரபாகரனுக்கு எழுதியதாகச் சொல்லப்படும் கடிதங்களை இரும்பொறை என்பவரிடமிருந்து கைப்பற்றியதாகக் கூறியது சி.பி.ஐ. இறந்து போனவர்களின் கடிதங்கள் இவை. கையெழுத்து உண்மையா என்பது இதுவரைத் தெரியாது. ஆனால், சி.பி.ஐ சில சாட்சியங்களை அவர்களே உருவாக்கி எல்.டிடி.ஈ-யைச் சம்பந்தப்படுத்தினர்.

ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளர் என்கிற அனுபவத்தில் நான் சொல்லுவது, இதில் பல சாட்சியங்கள் உருவாக்கப்பட்டவை. இது ஒரு ஒப்பந்தக் கொலை. பணத்துக்காக நடந்தவை. சிவராசன் ஒரு இரட்டை ஏஜென்ட். இந்திய புள்ளிகள்தான் இந்த ஒப்பந்தக் கொலைக்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஜெயின் கமிஷன் ரிப்போர்ட்படி பிரபல சவூதி அரேபிய ஆயுத வியாபாரியான அட்னான், அர்னி மில்லர், சந்திராசாமி போன்றவர்களுக்கிடையே ஏராளமான மில்லியன் டாலர் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. ஜெயின் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட  பின்னரும் இந்த வெளிநாட்டுத் தொடர்பு தகவலை சி.பி.ஐ-யும் சிறப்புப் புலனாய்வும் ஏன் கவனத்தில் எடுத்துகொண்டு இந்த கோணத்தில் விசாரிக்கவில்லை? என்பதுதான் என்னுடைய கேள்வி.  சிவராசன் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு 1991 மார்ச் மாதம் சிங்கப்பூர், சவூதி அரேபியா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.  இது விசாரணையின் ஒரு பகுதி. ஆனால், இவற்றை ஏன் மூடி மறைத்தனர்? இப்படி ஏராளமான கேள்விகள் உள்ளன.

கணவரைக் கொல்லக் காரணமானவர்களை சோனியா ஏன் கண்டுபிடித்துச் சொல்லவில்லை? என்று நீங்கள் கேட்கலாம். அப்படி அவர் அதை செய்திருந்தால் அவரது காங்கிரஸ் கட்சியையே குழி தோண்டிப் புதைத்திருப்பார்கள். இப்படியொரு சூழ்நிலை உருவாவதைத் தடுக்கத்தான் சோனியா மௌனமானார்'' என்று முடித்தார் ஃபெரோஸ் அஹ்மத்.

உண்மைக் குற்றவாளிகளை பி.ஜே.பி அரசாவது அடையாளம் காட்டுமா?

சரோஜ் கண்பத்

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

நன்றி பெருமாள். தொடர்ந்து இணையுங்கள்..! இந்தியாவுக்கு மறுபடியும் புலி தேவைப்படுவதால் இதெல்லாம் வருகிறதோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

நன்றி பெருமாள். தொடர்ந்து இணையுங்கள்..! இந்தியாவுக்கு மறுபடியும் புலி தேவைப்படுவதால் இதெல்லாம் வருகிறதோ தெரியவில்லை.

 

விகடனில் வந்த சிறு தொடர் இந்தப் பேட்டி. இவ்வாரத்துடன் முடிவடைந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

'ராஜீவ் கொலை உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தக சர்ச்சை குறித்து அவரது பேட்டி ஜூ.வி-யில் வெளியானது. இதுபற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச்செயலாளர் பொன்.கிருஷ்ணமூர்த்தி நமக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். இதோ அந்தக் கடிதம்...

p17.jpg

 

''தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி தொடர்ந்து பலர் பல கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். டெல்லி பத்திரிகையாளரும் அவர்களில் ஒருவர். அவர் வெளிப்படுத்திய கருத்துகள் உண்மைக்கு மாறானவை. 1991-ம் ஆண்டு மே மாதம் 17-ம் தேதி இரவு சுமார் 8.15 மணியளவில் சென்னை ஷெனாய் p16a.jpgநகரில் அமைந்துள்ள அன்னை மரகதம் சந்திரசேகர் வீட்டுக்கு டெல்லியில் இருந்து திருமதி.மார்க்ரெட் ஆல்வா போன் செய்கிறார். அந்த போனை எடுத்தவர் ராஜாமணி என்ற தம்பி. அன்றைய தினம் அன்னை மரகதம் சந்திரசேகர், அகில இந்திய காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவராக இருந்தார். 'தலைவர் ராஜீவ் காந்தி 21-ம் தேதி சென்னை வருகிறார். தங்கள் தொகுதியிலும் பிரசாரம் செய்யப் போகிறார். ஏற்பாடு செய்யுங்கள்’ என்று ஆல்வா சொன்னார். மரகதம் அம்மாள், 'என்னால் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய முடியாது. நேரம் போதாது. லேட்டாகச் சொல்கிறீர்கள்’ என்று கூறி போனைத் துண்டித்துவிட்டார். மீண்டும் இணைப்பில் வந்த ஆல்வா, 'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி அளித்த பட்டியலில் நான்கு தொகுதிகள் மட்டுமே இருந்தன. 1. சிதம்பரம், 2. மணிசங்கர் அய்யர், 3. ரங்கராஜன் குமார மங்கலம், 4. வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் தொகுதிகளுக்கு வந்தால் அருகில் உள்ள மற்ற தொகுதி வேட்பாளர்களையும் மேடையேற்றி கூட்டம் நடத்தலாம் எனக் குறிப்பிட்டிருந்தார். தலைவர் ராஜீவ் காந்தியின் நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளரான நான் அதை தலைவர் பார்வைக்கு அனுப்பினேன். எங்கே மரகதம்மா தொகுதி என்று கேட்டு கடிதத்தைத் திருப்பி அனுப்பினார். அதனால் நேரடியாக நான் உங்களோடு தொடர்பு கொள்கிறேன். தலைவரிடம் நீங்கள் கூட்டம் நடத்த மூன்று நாட்கள் போதாது என்று கூறியதைச் சொன்னேன். அவர் தமிழ்நாட்டுக்குச் சென்று மரகதம்மா தொகுதிக்குப் போகாமல் இருக்க முடியாது. அவர் மேடை போடாவிட்டால் அவர் தொகுதியில் நடுரோட்டில் நின்று பேசுகிறேன் என்கிறார்’ என்று ஆல்வா சொன்னார். இதனால் கூட்டம் நடத்த மரகதம்மா ஒப்புக்கொண்டார். இந்த உரையாடலின்போது உடனிருந்தவர்கள் நானும் தம்பி ராஜாமணியும்.

ஸ்ரீபெரும்புதூரில் மரகதம்மா தேர்வு செய்த இடத்தை நிராகரித்துவிட்டு, மாவட்ட நிர்வாகம்தான் அந்த இடத்தைத் தேர்வு செய்தது. எங்களுக்கும் நாள் குறைவாக இருந்ததால் வேறு வழியில்லாமல் அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டியதாயிற்று. எனவே, நாங்கள் வேண்டுமென்றே இந்த இடத்தைத் தேர்வு செய்தோம் என்பது தவறானது.

p17a.jpg

வர்மா கமிஷனில், 'லலித்சந்திரசேகர் அவர்கள் ரூ.5 லட்சம் பணம் வாங்கினார்’ என்ற பதிவே இல்லை. சுப்பிரமணியன் சுவாமி அப்படிச் சொன்னாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. தனு என்ற பெண்ணை தலைவர் ராஜீவ் காந்திக்கு  அருகில் நெருக்கமாக செல்வதற்கும் மாலை அணிவிப்பதற்கும், மரகதம் சந்திரசேகரும் லதா பிரியகுமாரும் உதவினார்கள் என்று அந்த டெல்லி நண்பர் கூறுகிறார். இதை நான் வன்மையாக மறுக்கிறேன். 21.05.1991 தேதி அன்று காலை சுமார் 10 மணியளவில் ஷெனாய் நகர் மரகதம்மா வீட்டில் இருந்து நானும் அவரும் பழவேற்காட்டுக்கு பிரசாரத்துக்குச் சென்றோம். அங்கு படகு விபத்தில் மரகதம் சந்திரசேகர் கடல் நீருக்குள் மூழ்கிவிட்டார்கள். மீனவ சகோதரர்கள் அவரை மீட்டு தரைக்குக் கொண்டு வந்தார்கள். மூர்ச்சையாகிப்போன அவரை நானும், மாவட்டத் தலைவர் டி.எல்.சிவலிங்கமும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்து சுமார் 2.30 மணிக்கு அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தோம். வீட்டுக்குச் சென்ற அவர் ஓய்வெடுத்துவிட்டு சுமார் 6 மணியளவில் புறப்பட்டு விமான நிலையம் சென்று ராஜீவ் காந்தியை வரவேற்று, அவருடனேயே ஸ்ரீபெரும்புதூர் வந்தார். இதற்கு இடையில்  மரகதம் சந்திரசேகர், ஸ்ரீபெரும்புதூருக்கு வரவில்லை. அப்படியிருக்கையில், தனு மாலை அணிவிக்க மரகதம் உதவினார் என்பது எவ்வளவு பெரிய அபத்தமானது? லதா பிரியகுமார், அன்றைய இரவு சுமார் 8.30 மணியளவில்தான் கூட்டம் நடக்கும் இடத்துக்கே வந்தார். மரகதம்மாவும் லதா பிரியகுமாரும் இறந்துவிட்ட இந்த நேரத்தில் உண்மையே இல்லாத கற்பனைக்கும் எட்டாத விஷயங்களை அந்தப் பத்திரிகையாளர்  எழுதுவது எந்த வகையில் சரி?

நான் லலித் சந்திரசேகரிடம் பேசினேன். அவர் சொன்னதைக் குறிப்பிட விரும்புகிறேன். 'சிவராசன் என்பவனிடம் நான் பணம் வாங்கியதாக அந்தப் பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். தலைவர் படுகொலைக்கு முன் சிவராசனை யாரென்றே எனக்குத் தெரியாது. படுகொலைக்கு பின்னர்தான் பத்திரிகையின் வாயிலாக அவர் புகைப்படத்தைப் பார்த்து அவர்தான் சிவராசன் என்று தெரிந்து கொண்டேன். என் தாயார் மரகதம் இந்த குண்டுவெடிப்பில் மயங்கி விழுந்து கோமா நிலைக்குப் போனார். 12 நாட்களுக்குப் பிறகுதான் நினைவு திரும்பினார். என் உடம்பில் பாய்ந்த சிறு ரவை குண்டுகள் இன்றும் என்னை வாட்டி வதைக்கின்றன’ என்று கூறினார்.

யாரையோ காப்பாற்றுவதற்காக இப்படி பலரும் பேச ஆரம்பித்துள்ளார்கள். அதற்காக மரகதம்மா குடும்பத்தின் மீது பழிசொல்வது பாவம்!''

படம்: ப.சரவணகுமார்

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமிகளின் – சாகசங்கள் – ( சுப்ரமணியன் சுவாமி + சந்திராசாமி )( பகுதி-1 )

எத்தனையோ கமிஷன்கள் நியமிக்கப்பட்டன….

எவ்வளவோ விசாரணைகள் நடந்தன….

எத்தனையோ ரிப்போர்ட்டுகள் அளிக்கப்பட்டன ….

ஆனால் ஒரு முக்கியமான,

மிக மிக முக்கியமான கேள்வி -

இரண்டு (ஆ) சாமிகளும் – ராஜீவ் கொலை நிகழ்ந்த நேரத்தில் எங்கே இருந்தார்கள் ….?

-என்பதற்கான விடை இன்று வரை காணப்படவே இல்லை என்பதே உண்மை. இதற்கான விடையை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், இதுவரை எந்த அரசும் தீவிரமாக ஈடுபடவில்லை….. ஏன் …?

இந்த கேள்விக்கான சரியான விடைகடைசி வரை

காணப்படாமலே போகக்கூடும்..

ஏனென்றால், சம்பந்தப்பட்டவர்களின் கையில்

சிக்கி இருக்கும் ரகசியங்கள் எக்கச்சக்கம்…!

தீவிரமாக விடை காணும் முயற்சியில் எந்த அரசு

இறங்கினாலும், அதை ஒரே வாரத்தில் கவிழ்ப்பதற்கான

ரகசியங்கள் ஒருவரின் கைவசம் இருக்கிறது

என்பதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்குமோ

எனக்குத் தெரியாது…! ஆனால், சில சமயங்களில் உண்மை – கற்பனையை விட அதிசயமாக இருக்கும் என்பதும்

நிஜம் தானே …?

முதல் சாமியை அவரது இன்றைய வடிவத்தில் – பலருக்கும் தெரியும். ஆனால், அவரது முன் கதை அநேகமாக -இன்றைய பலருக்குத் தெரிந்திருக்காது. இரண்டாவது ஆசாமியை – அனேகமாக எல்லாரும் மறந்தே போயிருப்பார்கள்.

இரண்டாவது ஆசாமியைப் பற்றி முதலில் சில செய்திகள்.

இவரை தாந்த்ரீக் என்று சொல்வாகள் ( மந்திரவாதி …..?)

முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர்,

பி.வி.நரசிம்மராவ் இரண்டு பேருக்கும் “ராஜகுரு”….

நமது முதல் சாமிக்கு “ஜிக்ரி தோஸ்த்” – அதாவது,

“என்னுயிர்த் தோழன் “

இந்திரா காந்திக்கும் வேண்டியவர் ( இந்திராவுக்கு மிகவும்

வேண்டப்பட்டவர் வேறோரு மந்திரவாதி – அவர் பெயர்

திரேந்திர பிரம்மச்சாரி )

படித்தால் நம்ப மாட்டீர்கள்.

ஆனால் – இதைச் சொல்லி இருப்பவர் முன்னாள்

வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்.

இப்போது தான் சொன்னார் என்றாலும், நம்பிக்கை குறையும்.

ஆனால் 09/04/2013 -அன்று – பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் இறந்த மறுநாள் ‘இந்து’ ஆங்கில செய்தித்தாளில் வெளிவந்த கட்டுரை இது – எனவே நம்பலாம் தானே -

சந்திராசாமியுடனான ஒரு அனுபவம் பற்றி நட்வர் சிங்

சொல்வதை, அவரது வழியிலேயே படிக்கலாம் -

( from K. Natwar Singh’s book

“Walking with Lions -Tales from a Diplomatic Past”)

chandraswami.jpg?w=640&h=436

——————

நட்வர்சிங் இங்கிலாந்தில் படித்தவர்.

படிக்கும்போது, இங்கிலாந்தில் இந்திய தூதரகத்தின் வனப்பை பார்த்து வியந்தவர் பின்னாளில் தமது படிப்பை முடித்தபிறகு indian foreign service -ல் தேர்வு செய்யப்பட்டு,

ஒரு நாள் அதே இங்கிலாந்தின் இந்திய தூதரகத்திற்கே

துணை உயர் ஆணையர் (டெபுடி ஹை கமிஷனராக) ஆகிறார்.

அடிக்கடி, இந்தியாவில் இருந்து வரும் நண்பர்கள் அவரைப் பார்க்கவேண்டும், இவரைப் பார்க்க வேண்டும் ஏற்பாடு செய்ய முடியுமா என்று தொல்லை கொடுப்பது வழக்கம் என்றும் அதற்கு தாம் வளைந்து கொடுத்ததில்லை என்றும் கூறுகிறார்.

அப்படி இருந்த காலக் கட்டத்தில், 1975ல் ஒரு நாள்

சந்திராசாமி என்பவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு :

“நான் இங்கிலாந்து வந்திருக்கிறேன். யஷ்பால்கபூர் உங்களை சந்திக்கச் சொன்னார். வந்து சந்திக்க முடியுமா” என்று.

“நான் எல்லாம் உங்களை வந்து சந்திக்க முடியாது.

நீங்கள் வேண்டுமானால் வந்து என்னை இந்தியத் தூதரக

அலுவலகத்தில் அல்லது என் இருப்பிடத்தில் சந்திக்கவும்” என்று சொல்லிவிட்டேன்.

அடுத்த நாள் சந்திராசாமி இவரை வந்து சந்தித்தது மட்டும்

இல்லாமல் அவரது இருப்பிடத்திற்கு விருந்துக்கு வருமாறு அழைத்து பிரமாதமான விருந்தொன்றும் அளித்திருக்கிறார்.

விருந்துக்குப் போன இடத்தில்,

சந்திராசாமி, நட்வர்சிங்கின் மனைவியை அழைத்து -

ஒரு வெள்ளைத் தாளில் 5 கோடுகளை கிழித்து

அதை 5 ஆகப் பிரித்து கிழித்து ஒவ்வொன்றிலும்

ஒரு கேள்வி எழுதவைத்து அவற்றை ஒரு சதுரங்க

பலகையில் வைத்து அதிலிருந்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

அந்த சுருட்டப்பட்ட காகிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது

என்று பார்க்காமலேயே சொல்லிவிட்டு -

மிஸஸ் நட்வர்சிங்கை அந்த சுருட்டப்பட்ட காகிதத்தை பிரித்துப் பார்க்கச் சொல்ல, அந்த கேள்வி அந்த காகித துண்டில் அப்படியே இருந்தது கண்டு சந்திராசாமி விஷேச சக்தி பெற்றவர்

என வியந்தாராம் மிஸஸ் நட்வர்சிங்.

இதெல்லாம் நட்வர்சிங்குக்கு அறவே

பிடிக்கவில்லை என்றாலும் வேண்டாவெறுப்பாக

பார்த்துக் கொண்டிருந்தாராம்.

அடுத்ததாக சந்திராசாமி, இங்கிலாந்தில் மௌண்ட்பேட்டன் மற்றும் மார்கரெட் தாட்சர் ஆகியோரைச் சந்திக்கவேண்டும்

ஏற்பாடு பண்ண முடியுமா என்று கேட்டிருக்கிறார்…..

margaret-thatcher-2.jpg?w=640

வேறு வழியின்றி முயற்சித்திருக்கிறார் நட்வர் சிங்.

நல்ல வேளையாக மௌன்ட் பேட்டனுக்கு வெளியூர்

செல்ல வேண்டியிருந்ததால் தப்பித்தார்.

மார்கரெட் தாட்சர் கன்சர்வேடிவ் கட்சியின் சீனியர் தலைவர். அப்போதைய – பார்லிமெண்டில் எதிர்க்கட்சித் தலைவர்…

நம்பிக்கையின்றியே, நட்வர் சிங், மார்கரெட் தாட்சரிடம் முயற்சி செய்தபோது, அவர் கூலாக, “பார்க்கலாம் – ஆனால் 10 நிமிடம்

தான் ஒதுக்க முடியும்…. ஆமாம் எதற்காக சந்திராசாமி

என்னைச் சந்திக்க விரும்புகிறார்” என்றாராம்.

(தொடர்கிறது ….பகுதி-2-ல் )

சந்திராசாமியும் – மார்கரெட் தாட்சரும் …..!!! (சாமிகளின் சாகசங்கள் -( பகுதி-2 )

அப்போது சந்திராசாமிக்கு இந்தியைத் தவிர வேறு எந்த

மொழியும் தெரியாது.( பிற்காலத்தில், தொழில் தேவைக்காக ஆங்கிலம் கற்றுக்கொண்டார்…) எனவே சந்திப்பின்போது, மொழி பெயர்ப்பாளர் வேலையையும் நட்வர்சிங்கே மேற்கொண்டிருக்கிறார்.

அப்போது, முப்பது வயது கூட நிரம்பாதவராக இருந்தார் சந்திராசாமி. அவரை கடனே என்று அழைத்துக் கொண்டு, சொன்ன நேரத்திற்கு நட்வர்சிங் மார்கரெட் தாட்சரை சந்திக்கச் சென்றிருக்கிறார்.

margaret-thatcherchandraswamy-natwarsing

மார்கரெட் தாட்சரின் உதவியாளர் ஒருவர்,

இவர்களை ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்று

உட்கார வைத்து விட்டு, எதற்காக தன்னைச் சந்திக்க சந்திராசாமி விரும்புகிறார் என்று தாட்சர் தெரிந்து கொள்ள விரும்புகிறார் என்று கேட்டிருக்கிறார்.. இதற்கு “மேடம் சற்று நேரத்தில் தானாகவே தெரிந்து கொள்வார்” என்று சொல்லி இருக்கிறார்

சந்திராசாமி.

சில நிமிடங்கள் கழித்து இவர்களை சந்தித்த தாட்சரிடம்,

நட்வர்சிங்கின் மனைவியிடம் செய்தது போலவே,

ஒரு வெள்ளை காகிதம் கொண்டுவரச்செய்து, அதை கோடிட்டு, 5 பகுதிகளாக்கி, சந்திராசாமி, தாட்சரிடம் நீங்கள் உங்களுக்குத் தோன்றும் கேள்விகளை எழுதி வையுங்கள் என்றாராம்.

அதே போல் தாட்சரும் செய்ய, முதல் தாளில் தாட்சர் எழுதி இருந்த விஷயத்தை காகிதத்தைப் பார்க்காமலே சொன்னாராம். பின்னர் தாட்சரை காகிதத்தை பிரித்து சரி பார்த்துக் கொள்ளச் சொன்னாராம். இதே போலவே, இரண்டு, மூன்று, நான்கு என்று 5 காகிதங்களையும் கரெக்டாகச் சொன்னாராம் ச.சாமி. அசந்து போன மார்கரெட் தாட்சர் -

“உங்களிடம் மேலும் சில கேள்விகள் கேட்கட்டுமா” என்று

கேட்க, சந்திராசாமி சரியாக பதில் சொல்லிகொண்டே வர,

நட்வர்சிங் மாற்றி மாற்றி மொழி பெயர்த்து சொல்ல

நேரம் ஓடிக்கொண்டே இருந்ததாம்.

ஒரு குறிப்பிட்ட கேள்வியுடன் “சன் செட்” (சூரிய மறைவு)

ஆகி விட்டது. கேள்விகள் போதும் இனி வேண்டாம் என்று

சந்திராசாமி முடித்துக்கொண்டாராம்.

ஆரம்பத்தில் 10 நிமிடம் தான் தருவேன் என்ற தாட்சர்,

நேரம் காலம் பற்றி எல்லாம் நினைக்கும் நிலையிலேயே இல்லையாம்.அந்த அளவிற்கு பேச்சு தொடர்ந்து கொண்டே இருந்ததாம். நட்வர்சிங்க்குக்கு ஒன்றும் புரியவில்லையாம். நாம் சந்திராசாமியை மிகச் சிறியவராக எடைபோட இங்கு மார்கரெட் தாட்சரே இவருக்கு கீழ் படிந்து விட்டாரே – என மலைப்பு எய்த, தாட்சர் “மறுபடியும் உங்களை சந்திக்கமுடியுமா?” எனக் கேட்க நட்வர்சிங் மொழிபெயர்ப்பு செய்வதற்குள் சந்திராவே “ட்யூஸ்டே

ஈவ்னிங் – 5 ஓ க்ளாக் அட் நட்வர்சிங் ரெசிடன்ஸ்”

(செவ்வாய் மாலை 5 மணிக்கு நட்வர்சிங் இல்லத்தில் ) என்று உடைசல் ஆங்கிலத்தில் சொல்லி விட்டாராம்.

அதை விட ஆச்சரியமான ஒன்று – சந்திராசாமி அலுவலகம் வரும்போதே கையில் இருந்த திருநீறை இறைத்தபடி, தெளித்தபடி வந்தாராம். ஏய், இங்கெல்லாம், இதெல்லாம் இப்படி செய்யக் கூடாது என்று நட்வர்சிங் எச்சரித்தாராம். கையில் திருநீறு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டையுடன் இருந்த சந்திராசாமி ஒரு தாயத்தை எடுத்து தாட்சரின் இடதுகையில் கட்டிக் கொள்ளச் சொன்னாராம்.

அதை நட்வர் சிங்க் மொழிபெயர்க்க மறுக்க – அந்த அம்மாவே தானாகவே “என்ன இது ..?” என்று விளக்கம் கேட்டு,வாங்கி கட்டிக் கொண்டாராம்.அடுத்த அதிர்ச்சியாக சந்திரா,இந்த அம்மாவை செவ்வாய் கிழமை வரும்போது சிவப்பு வண்ண ஆடை அணிந்து வரச் சொல்லுங்கள் என்றாராம்.

நட்வர்சிங்க் கோபம் அடைந்தாராம். இங்கிலாந்தின்

இரும்புப் பெண்மணி என கூறப்படும், எதிர்கட்சித் தலைவராய் இருக்கும் ஒருவரிடம் நாம் எப்படி சிவப்பு ஆடை அணிய வேண்டும் எனச் சொல்வது , இதெல்லாம் அதிகமாகத் தெரியலையா உனக்கு என சந்திராவை திட்ட ஆரம்பிக்கும்போது அது என்ன என தாட்சரே நட்வர்சிங்கிடம் கேட்டு தெரிந்து  கொண்டாராம். பிறகு அப்படியே ஆகட்டும் என்றாராம்.

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சிவப்பு ஆடையுடன் கையில் கட்டிய தாயத்துடன் மார்கரெட் தாட்சர் சரியாக நட்வர்சிங்க் இல்லம் வந்து விட்டார்.

பேசும்போது – சந்திரா சாமியிடம், நான் இங்கிலாந்தின் பிரதமர் ஆவேனா? எப்போது ? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு சந்திராசாமி இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் பிரதமர் ஆவீர்கள். நீங்கள் 9,11,அல்லது 13 ஆண்டுகள் நீங்கள் இந்த இங்கிலாந்தை பிரதமராக ஆள்வீர்கள் என்றாராம்,

இது நடந்தது 1975ல். அதன்பிறகு 1979ல் ஜாம்பியாவில்

காமன்வெல்த் சம்மிட் நடைபெறும்போது இங்கிலாந்தின் பிரதமராக மார்கரெட் தாட்சரை வரவேற்கும் பொறுப்பில் நட்வர்சிங்   இருந்தாராம்.

ஜாம்பியாவுக்கு இந்திய தூதராக 1977ல் நட்வர் சிங்அனுப்பப்பட்டு அதுமுதல் அங்கே பொறுப்பில் இருந்தாராம்.

நட்வர்சிங் மற்றும் மிஸஸ் நட்வர்சிங்கும் இங்கிலாந்தின்

பிரதமர் மார்கரெட் தாட்சரை விமானத்தில் இருந்து

இறங்கும்போது வரவேற்க நின்று கொண்டிருக்கும் போது

தாட்சர் விமானத்திலிருந்து இறங்கி வர,

“சந்திராசாமி சொன்னது அப்படியே பலித்துவிட்டது போலிருக்கிறதே” என்று மனைவியிடம் மெதுவாக

சொன்னாராம். அருகில் அதைக்கேட்டுக் கொண்டே வந்த

மார்கரெட் தாட்சர் -

நட்வரை தனியாக அழைத்து , “அதைப்பற்றி எல்லாம் இனி வெளியே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்” என்றாராம்.

அதற்கு நட்வர்சிங்கும் , “சொல்ல மாட்டேன், ஒருபோதும்

சொல்ல மாட்டேன்” என்றாராம்.

-சந்திராசாமி கூறியதை உறுதிப்படுத்தும் வண்ணம் -

இங்கிலாந்தின் பிரதமராக 11 ஆண்டுகள்

6 மாதங்கள் பதவி வகித்தார் தாட்சர்.

ஆச்சரியமாக இல்லை ….?

இந்தியாவின் உச்சத்தில் இருந்த அரசியல்வாதிகள் பலர்

இவருக்கு அடிமையானதன் பின்னணி சந்திராசாமியின்

இந்த சாமர்த்தியம் தான்.

இப்பேற்பட்ட அசகாய சூரர்களான சாமிகள் இருவரும்

மே-21 ந்தேதி ராஜீவ் காந்தியின் மரணம் நிகழ்ந்த அன்று சென்னையில் இருந்தார்கள் என்பது ஒரு செய்தி.

இந்த செய்தியை உறுதி செய்பவர் யார் ….?

ஜெயின் கமிஷன் முன்பாக திரு.சுப்ரமணியன் சுவாமியிடம் இது குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது -

அவரது “ரீ-ஆக்-ஷன் என்ன ….?

(தொடர்கிறது -பகுதி-3-ல்)

 
 

நரசிம்மராவ் காலத்தில் அழிக்கப்பட்ட தகவல்கள்…. (சாமிகளின் சாகசங்கள் – பகுதி- 3 )

நரசிம்மராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது 

ராஜீவ் கொலை விசாரணை

சம்பந்தப்பட்ட மிக முக்கியமான சில கோப்புகள் காணாமல் போயின.

அதெப்படி எப்படி பிரதமரின் அலுவலகத்தில் இருந்த கோப்புகள்,

அதுவும், நாட்டையே உலுக்கிய ராஜீவ் கொலை வழக்கு சம்பந்தமான

பைல்கள் காணாமல் போகும்..?

அவை அழிக்கப்பட்டன அல்லது வேண்டுமென்றே

ஒழி(ளி…? )க்கப்பட்டன என்பது தானே உண்மையாக இருக்க முடியும் …?

யார் கொடுத்த செய்தி இது …?

எப்படி இதை நம்புவது …?

அப்படிக் காணாமல் போன கோப்புகளின் பட்டியலை ஆதாரங்களுடன்

அப்போதைய ‘அவுட் லுக்’ ஆங்கில ஏடு (24.11.1999 இதழ்) பட்டியலிட்டுக்

காட்டி இருக்கிறது. 

‘அவுட் லுக்’ தந்த விவரங்கள் கீழே -

———————–

outlook-logo.jpg?w=640

File containing intercepted messages from foreign intelligence agencies, said to be

addressed to Chandraswami and Janata Party president Subramanian Swamy,

destroyed by senior officials in the PMO.

File on IB’s assessment of the role played by Zail Singh and Chandraswami in 1987

to topple Rajiv Gandhi missing.

File with records of official briefings by intelligence agencies on the assassination to

Rao’s home minister S.B. Chavan missing. The former minister confirms he was

briefed orally.

File No. 8-1-WR/JSS/90/Vol.III—containing notings of bureaucrats regarding security

arrangements for Rajiv Gandhi from November ’89—was lost from the PMO in ’91.

Later, it was doctored and reconstructed by the Narasimha Rao government before

it was submitted to the Jain Commission.

File No. 1/12014/5/91-IAS/DIII reported missing since 1995. It pertained to the

terms of reference of the Verma and Jain commissions of inquiry.

The April 20, 1991, wireless intercept with the leading question—should Rajiv be

killed in Delhi or Madras?—missing.

———————-

1989 நவம்பரிலிருந்து ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி

அதிகாரிகள் எழுதிய குறிப்புகளைக் கொண்ட கோப்பு (8-1-WR/JSS/90/volIII)

பிரதமர் அலுவலகத்திலிருந்து 1991 ஆம் ஆண்டே காணாமல் போய் விட்டது.

ஜெயின் ஆணையம் இந்தக் கோப்பை கேட்டபோது இந்த கோப்பு

கிடைக்கவில்லை…… பிறகு, இருக்கும் தகவல்களை வைத்து,

ஒட்டு வேலைகள் செய்து புதிதாக ஒரு கோப்பை தயாரித்து, ஆணையத்தின் முன் சமர்ப்பித்தார்கள்.

இந்தக் கோப்புகளை எழுதிய அதிகாரிகளில் ஒருவர் வினோத் பாண்டே.

இவர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அமைச்சரவை செயலாளராக

இருந்தவர். ஜெயின் ஆணையத்தின் முன் சாட்சியமளித்த அந்த அதிகாரி,

கோப்புகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, இந்தக் கோப்புகளில் தான் எழுதிய

குறிப்புகள் இடம் பெறவில்லை; இவை திருத்தப் பட்டவை என்றார்.

அப்போது உள்துறையில் துணை அமைச்சராக இருந்தவர்,

திரு. ப. சிதம்பரம் அவர்கள்…. !!

கோப்புகள் திருத்தி, ஒட்டி, போலியாக தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து ஜெயின் ஆணையம் உள்துறை அமைச்சகத்தை அழைத்துக் கேட்டது. திரு.ப.சிதம்பரம் கூண்டில் ஏறி, ‘ஆம், ஒரிஜினல் கோப்புகளை எவ்வளவு தேடியும் கிடைக்காததால், இருக்கின்ற தகவல்களை

வைத்துக்கொண்டு கோப்புகளை புதிதாக தயாரித்தது உண்மைதான்’ என்று ஒப்புக் கொண்டார்.

அதே போல், சந்திரசாமி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி

ஆகியோருடன் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு

பேசியபோது, உளவுத்துறையால் இடைமறித்துக் கேட்கப்பட்ட

உரையாடல்களைப் பதிவு செய்த கோப்பை பிரதமர் அலுவலகத்தைச்

சேர்ந்த மூத்த அதிகாரிகளே அழித்து விட்டனர்.

இந்த தகவல், ஆதார அழிப்புகளுக்கு – என்ன காரணம் …..?

சந்திராசாமி வெறும் ஜோசியம் கூறும் சாமியார் மட்டுமல்ல…

தாந்த்ரீக வேலைகளுடன் அவர் நின்று விடவில்லை….

அவருடைய தொடர்புகள் வெறும் அரசியல்வாதிகளோடும்

நின்று விடவில்லை.

அகில உலக அளவில், நேரிடையாகவும், கள்ளத்தனமாகவும் கூட

ஆயுத பேர, வியாபாரங்களில் ஈடுபட்ட மிகப்பெரிய புள்ளிகளான

அட்னன் கஷொகி (Adnan Khashoggi) மற்றும் என்ரி மில்லர் (Ernie Miller)

ஆகியோருடன் வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு -

கள்ள ஆயுத பேரங்களில் ஈடுபட்டிருந்தார். ( இந்த விஷயம்

பிற்பாடு நிரூபிக்கப்பட்டு, அவருக்கு எட்டு கோடி ரூபாய் அபராதம்

விதிக்கப்பட ஒரு காரணமாகவும் இருந்தது. )

அப்போதைய பிரதமரான நரசிம்ம ராவுக்கு இவர் குரு.

பல முக்கியமான விஷயங்களில் நம்பிக்கையான ஆலோசகர்…!

இருவருக்கும் 25 ஆண்டுக்கால நெருங்கிய பழக்கம்.

சந்திராசாமியின் வியாபாரங்களில் சுப்ரமணியன் சுவாமிக்கு

என்ன பங்கு, எந்த அளவிற்கு தொடர்பு – என்பது நமக்குத் தெரியாது.

ஆனால் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது

அனைவருக்கும் தெரிந்த உண்மை.

1998 ஆம் ஆண்டு ராஜிவ் சர்மா என்பவர் ராஜீவ் காந்தி கொலையைப்

பற்றி ‘Beyond the Tigers’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்திற்கு ராஜீவ் கொலை நடந்தபோது மத்திய புலனாய்வுத்

துறையின் இயக்குனராக இருந்த விஜய்கரன் என்ற அதிகாரியே முன்னுரை எழுதியிருப்பதைப் பார்க்கும்போது, இதில் கூறப்படும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது..

அவர் தனது முன்னுரையில், இந்த புத்தகம் ஒரு போலீஸ் டைரியைப் போல்

இருப்பதாக குறிப்பிடுகிறார்.

போலீஸ் டைரியைப்போல் என்பதைவிட, போலீஸ் டைரியிலிருந்தே

பல செய்திகள் அப்படியே பிரதி எடுக்கப்பட்டுள்ளது போல் இருக்கிறது

என்று இந்த புத்தகத்தைப் பற்றிய விமரிசனங்கள் கூறுகின்றன.

எனவே, புலனாய்வுத் துறையில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரியே

இந்த புத்தகத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு கொண்டிருப்பார் என்றும் தோன்றுகிறது. இந்த புத்தகத்திற்கு பின் இணைப்புகளாக தரப்பட்டுள்ள ஆவணங்கள் புலனாய்வுத் துறை தொடர்புள்ளவையாகவே இருக்கின்றன….

இந்தப் புத்தகத்தின் முக்கிய கருத்து எப்படிப் போகிறது ……?

ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப் புலிகள்தான் என்று

இந்த புத்தகம் கூறுகிறது. ஆனால், அந்தக் கொலைக்குப் பின்னால்,

சில சர்வதேச சக்திகள் இருந்தன. அந்த சர்வதேச சக்திகளுக்காக

விடுதலைப் புலிகள் இந்தக் கொலையை செய்து முடித்துவிட்டு,

அதற்கு பிரதிபலன்களாக சக்தி வாய்ந்த கப்பல்களையும் ஆயுதங்களையும்

பெற்றுக் கொண்டார்கள். ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகுதான் புலிகளுக்கு

கப்பல்களில் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வரத் தொடங்கின.

எனவே, இதனைச் செய்து முடித்தால், பெரிய அளவிலான ஆயுத சப்ளைகள் செய்வதாகக்கூறி சில வெளிசக்திகள் விடுதலைப் புலிகளை இதில் செயல்பட வைத்திருக்கின்றன என்பதே இந்த புத்தகத்தின் மையக்கருத்து…!!

அந்த சர்வதேச சக்திகள் எவை …..?

சந்திராசாமிக்கு அதில் என்ன பங்கு ….?

ராஜீவ் காந்தி கொலை நிகழ்ந்த சமயத்தில், மத்தியில் பிரதமராக

ஆட்சி புரிந்தவர் சந்திரசேகர். அவரது அரசில், சட்ட அமைச்சராக

இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர் திரு.சுப்ரமணியன்சுவாமி.

கொலை நிகழ்ந்த நாளில், திருவாளர்கள் சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி

இருவரும் சென்னையில் தான் இருந்தார்கள் என்று ஜெயின் கமிஷன்

முன்பாக சாட்சியம் கூறப்படுகிறது…

ஆனால், இந்த விஷயங்களை மறைக்க முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

(இந்த விவரங்கள் பின்னால் வருகின்றன…)

” File containing intercepted messages from foreign intelligence agencies,

said to be addressed to Chandraswami and Janata Party president Subramanian

Swamy, destroyed by senior officials in the PMO. “

எனவே, நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, ராஜீவ் காந்தி

கொலை வழக்கில் சந்திராசாமி மற்றும் சுப்ரமணியன் சுவாமி

சம்பந்தப்பட்ட தகவல்கள் அழிக்கப்பட்டன என்று ‘அவுட் லுக்’

இதழ் ஆதாரங்களுடன் கூறுவது எங்கே கொண்டு போய் விடுகிறது …..?

இது விஷயத்தில் தீவிரமாகத் தோண்ட ஆரம்பித்த ஜெயின் கமிஷனை

முடக்குவதற்கான அனைத்து வேலைகளிலும் ராவ் அரசு இறங்கியது….

முதலில், நரசிம்ம ராவ் ஆசியுடன் முஷ்டாக் அஹ்மத் என்கிற

அட்ரஸ் இல்லாத வக்கீல் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில்,

ஜெயின் கமிஷனைக் கலைக்க வேண்டும் என்று ஒரு பெட்டிஷன்

போட்டார். இது கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டவுடன் -

மத்திய அரசு வெளிப்படையாக சுப்ரீம் கோர்ட்டில் இதே விஷயத்திற்காக,

ஒரு special leave petition (SLP) தாக்கல் செய்தது…..

 

(தொடருகிறது – பகுதி-4-ல் )

 

http://vimarisanam.wordpress.com/

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலையாளி சு.சாமியிடம் நடந்த ஜெயின் கமிஷன் விசாரணை :

நீதிபதி கேள்விகளை கேட்கக் கேட்க சுப்ரமணிசாமியின் பதில்கள் இப்படி வருகிறது.
“எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை தெரியுமா?”
[ஏளனமாக] “இவரை யார் என்றே எனக்குத் தெரியாது.”
“தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?”
என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.”
சாமிக்கு ஏதோ ஒரு 200 எம்.பி.க்கள் இருப்பதைப் போலவும் கட்சிக்குப் பல செயலர்களை வைத்திருப்பதை போலவும் ஒரு நினைப்பு. அலட்சியம். 
நீதிபதி தொடர்ந்தார்.
“சரி, உங்கள் கட்சி சார்பாக நீங்கள் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் இருக்கிறதா, சொல்லமுடியுமா?”
“எனக்கு அதுவெல்லாம் நினைவில்லை.”
“உங்கள் கட்சி அலுவலகத்தில் சுற்றுப்பயண விவரம் இருக்குமே. அதைப்பார்த்து சொல்லலாமே?”
“இந்த கேள்வியை கேட்டவுடன் ஏதோ சாமர்த்தியமாக சொல்வதாக நினைத்து வகையாக மாட்டினார் சாமி.
“அந்தத் தேர்தல் சுற்றுப்பயண விவரம் எல்லாம் கட்சி அலுவலகத்தில் இருந்தது தான். இதோ இருக்கிறாரே வேலுச்சாமி, இவர் கட்சியைவிட்டு போகும்போது அந்த பைலை எல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிட்டார்” என்று கூறியதும் நீதிபதிக்கு முகம் சுருங்கியது.
“என்ன மிஸ்டர். இப்போதுதானே அந்த வேலுச்சாமியை யார் என்றே தெரியாது என்றீர்கள். உடனே எப்படி அவர்தான் அந்த பைலை திருடிக்கொண்டார் என்கிறீர்கள். உண்மையை சொல்லுங்கள். [வேலுச்சாமியை] அவரை உங்களுக்கு தெரியுமா தெரியாதா?’’ என்றார் முறைத்துப் பார்த்தபடி. 
அப்போதுதான் சாமிக்கு தான் மாட்டிகொண்டோம் என்பது தெரிந்தது. அப்படியே முழித்தார். 
“சரியாக சொல்லுங்கள் மிஸ்டர். இது நீதிமன்றம். நீங்கள் விளையாடுவதற்கான இடம் இல்லை. அவரை உங்களுக்கு முன்னமே தெரியுமா? தெரியாதா?” என்றார். சுப்ரமணியசாமியிடமிருந்து பதிலேதும் இல்லை. திணறினார். அதன் பிறகு கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மிக நிதானமாக யோசித்து நினைவில்லை தெரியாது என்றபடியே பதிலளிக்கத் தொடங்கினார். 
“சரி மே மாதம் 21ம் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு எப்படி வந்தீர்கள். விமானத்திலா, ரயிலிலா?”
இந்த கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் தலைகுனிந்தபடியே நின்றார் சாமி. 
“21ம் தேதி காலையிலிருந்து மாலைவரை நீங்கள் டெல்லியில் இல்லை. வேறு எங்கோ ரகசியமாக இருந்தீர்கள் என்பதற்கு என்ன பதில்?”
“இல்லை நான் டெல்லியில் தான் இருந்தேன்.”
“சரி டெல்லியில்தான் இருந்தீர்கள் என்றால் அதற்கு என்ன ஆதாரம். மத்திய அமைச்சர்களின் மூவ்மென்ட் ரிப்போர்ட் பைல் இருக்குமே. இருக்கிறதா?” என்ற கேள்விக்கு “அது தொலைந்துபோய்விட்டதாக மத்திய அரசு பதில் அளித்திருக்கிறது” என்றார் அரசு தரப்பு வழக்கறிஞர்.
அடுத்து சாமியை பார்த்து “நீங்கள் 21ம் தேதி டெல்லியில்தான் இருந்தீர்கள் என்பதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா?” என்றார். 
“ஓ இருக்கிறதே” என்ற சாமி ஆங்கில நாளேட்டில் வந்திருந்த இரண்டு துண்டு செய்தியை எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த நீதிபதி ஜெயினுக்கு முகம் சுருங்கியது. சாமி சரியாகத்தான் சொல்கிறார். நாங்கள்தான் ஏதோதவறாக புகர் செய்திருக்கிறோம் என்பதாக அது பட்டது. உடனே அதை கொடுக்கும்படி நான் கேட்டேன். எனது வழக்கறிஞரிடம் அதைக் கொடுத்தார். அதைப் பார்த்த எனது வழக்கறிஞர் “ஆமாம் வேலுசாமி, சாமி சரியாகத்தான் சொல்கிறார். அன்றைய தினம் பகல் முழுக்க அவர் டெல்லியிலேதான் இருந்திருக்கிறார்” என்றார். அவருக்கும் பிடிப்பு விட்டுப்போனது. எனக்கு பெரியகுழப்பம். அந்த செய்தித்தாள் பகுதியை கொடுங்கள் என்று வாங்கிப்பார்த்தேன். அன்றைய தினம் சாமி டெல்லியில் செய்தியாளர்களைப் பார்த்து ஒரு செய்தி கொடுத்திருப்பதாக பதிவாகியிருந்தது. எனக்கும் குழப்பம். அதிர்ச்சி. ஒன்றும் புரியாமல் இது எப்படி சாத்தியம் என்று பார்க்கிறேன். அப்படியே நீதிபதியையும் பார்த்தேன். நாங்கள் எதோ தவறான புகாரை கொடுத்த நபர்கள். சாமி சரியானவர்தான் என்ற பார்வை தெரிந்தது. இதையெல்லாம் கவனித்தபடி இருந்த பிரியங்கா காந்தி முகத்திலும் குழப்பம்.
நான் மீண்டும் அந்த செய்தித்தாள் பத்திகளைப் பார்த்தேன். சிங்கள் கால செய்தி, அதன் கீழே கடைசியாக பி.டி.ஐ., பி.டி.ஐ என்று இரண்டிலுமே இருந்தன. இருந்துகொண்டிருந்த என் முகத்தில் மின்னல் வெளிச்சம். உடனே நீதிபதியைப் பார்த்து “இது போய், சாமி திட்டமிட்டு நீதிமன்றத்தை ஏமாற்றியிருந்தார். அவரது ஏமாற்று புத்தியை இங்கேயும் காட்டியிருக்கிறார்.” என்றேன். அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் குழப்பம். நீதிபதி என்னைப்பார்த்ஹ்டு “எப்படிக் கூறுகிறீர்கள்?” என்றார். 
“சார், சுப்ரமணியசாமி கொடுத்த அந்த இரண்டு செய்திகளின் கிழேயும் பி.டி.ஐ என்றிருக்கிறது. இவர் நேரடியாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்திருந்தால் அப்படி வந்திருக்காது. பி.டி.ஐ என்பது ஒரு செய்தி நிறுவனம். ஒருவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் பி.டி.ஐ நிருவனத்தில் உள்ள ஒருவரைப் பிடித்து செய்தியைக் கொடுக்கலாம். சாமியும் அப்படித்தான் கொடுத்திருக்கிறார். அதனால்தான் செய்தியின் கிலே பி.டி.ஐ என்று போட்டிருக்கிறார்கள். பொய்யான ஆவணங்களைக் காட்டி நீதிமன்ற விசாரணையை திசைதிருப்புகிறார் சாமி. அவர் செய்தியாளர்களை சந்தித்திருந்தால் எங்கே சந்தித்தார். அதில் யாராவது ஒரு செய்தியாளரை அடையாளம் கூற முடியுமா?” என்று கேட்டதும் நீதிபதிக்கு மட்டுமல்ல பிரியங்காவின் முகத்திலும் ஒரு திருப்பம். 
நீதிபதியும் சாமியைப் பார்த்து என் கேள்விக்கு பதில் என்ன என்று கேட்கிறார். சாமியிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. அவருக்கு வியர்க்கத் தொடங்கியது. தடுமாறுகிறார் என்பதும் புரிந்தது. எல்லோரும் இதைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார்கள். 
அடுத்த கேள்வி. “மே மாதம் 22ம் தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் உங்களுக்கு மதுரையிலும் திருச்சியிலும் பொதுக்கூட்டநிகழ்ச்சி இருந்தது. கட்சியின் தேர்தல் பிரச்சாரம். தெரியுமா?”
திணறினார். யோசித்தார். “தெரியவில்லை. சரியாக நினைவில்லை” என்றார். 
“யோசித்து சரியாக கூறுங்கள்?” என்றார் நீதிபதி. 
“இல்லை, எமக்கு அப்படி ஒரு நிகழ்ச்சி இருந்ததாக நினைவில்லை” என்றார்.
அப்போதுதான் நான் வைத்திருந்த 1991 மே மாதம் 21ம் தேதி வந்திருந்த மாலைமலர், மதுரைமணி ஆகிய இரண்டு மாலை நாளேட்டை எடுத்தேன். இரண்டும் மதுரை பதிப்பு. அந்த இரண்டு நாளேட்டிலும் சுப்ரமணியசாமி 22ம் தேதி மாலை மதுரையில் பொதுகூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்ற விளம்பரமும் செய்தியும் வந்திருந்தது. அதில் சுப்ரமணிய சாமியோடு நானும் மதுரை மாவட்ட ஜனதா கட்சி தலைவரும் கலந்துகொள்வதாக இருந்தது. கட்சி சார்பான விளம்பரம் செய்தி அறிக்கைதான் அது. அதை சாமியிடம் காட்டினேன். இப்போதாவது நினைவிருக்கிறதா, தெரிகிறதா என்றேன். அதை வாங்கிப் பார்த்தவர் ஒன்றும் சொள்ளமுடியாதவராக ஒரு மாதிரியாக தலயாட்டி பிறகு ஆமாம் நினைவிருக்கிறது என்றார். 
“ஆக 22ம் தேதி மதுரையிலும் 23ம் தேதி திருச்சியிலும் நீங்கள் பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு பேச இருந்தீர்கள். சரிதானே? அடுத்த கேள்வி. 
யோசித்தபடியே “ஆமாம்” என்றார். 
“அது தேர்தல் பிரச்சார காலகட்டம். 22ம் தேதி மதுரை பொதுகூட்டத்திற்கு நீங்கள் முன்கூட்டியே விமான டிக்கெட் முன்பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையா? அப்படியென்றால் அந்த விமான டிக்கெட் எங்கே?” என்ற கேள்வியை கேட்டதும் சாமிக்கு மேலும் வியர்வை கொட்டத்தொடங்கியது. 
“22ம் தேதி மதுரைக்கு செல்லவேண்டும் என்றால் நீங்கள் அன்றைய தினம் காலை டெல்லியில் இருந்து 6 மணி விமானத்திற்குதான் புறப்பட்டுச் செல்லவேண்டும். அதற்கு நேராக பேருந்துக்குச் சென்று டிக்கெட்டை வாங்குவதுப் போல் வாங்கமுடியாது. ஆக முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும். எங்கே அந்தப் பயணச்சீட்டு?” மீண்டும் எனது கேள்வி. 
சாமியிடம் இருந்து பதில் இல்லை. முழித்தார். ஏதோ சொல்லவருகிறார். ஆனால் முடியவில்லை. நீதிபதியும் எங்கே அந்தப் பயணச்சீட்டு விவரம் என்ற கேள்வியை கேட்கிறார். 
பட்டென்ற பதில் இல்லை. நன்றாக முழித்துவிட்டு கடைசியாக “நான் அந்த புரோகிராமை கேன்சல் செய்துவிட்டேன். அதனால் டிக்கெட்டையும் கேன்சல் செய்துவிட்டேன்” என்றார். அப்படி சொன்னதும் அங்கே இருந்த மொத்த பார்வையாளர்களும் அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்கிறார்கள். அவர்கள் அனைவரும் முக்கியமானவர்கள். மெத்த படித்தவர்கள். ஒரு நிமிடம் மௌனமாக செல்கிறது நேரம். 
“சரி டிக்கெட்டை கேன்சல் செய்தீர்கள் என்றால் அதற்க்கான படிவம், அத்தாட்சி எங்கே?” என்றேன். இந்த நேரத்தில் சாமிக்கு மேலும் வியர்த்தபடி இருந்தது. கிட்டத்தட்ட சட்டை முழுவதும் நனைந்திருந்தது. 
பிறகு மிக தயங்கித் தயங்கி “நான் விமான டிக்கெட்டே எடுக்கவில்லை” என்றார். 
“முதலில் விமான டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டேன் என்றீர்கள். பிறகு டிக்கெட்டே எடுக்கவில்லை என்கிறீர்கள். சரி, ஏன் எடுக்கவில்லை? அதற்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்கவேண்டுமில்லையா? அது என்ன காரணம்? கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரத்தையே கேன்சல் செய்துவிடும் அளவிற்கு என்ன முக்கிய வேலை. என்ன காரணத்திற்க்காக மதுரை பயணத்தை உறுதி செய்யவில்லை? கேன்சல் செய்தீர்கள்? என்ற அடுக்கடுக்கான கேள்விக்கு சாமியிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. நிற்க தடுமாறினார். நிற்கமுடியாமல் விசாரணை கூண்டின் கைப்பிடியை பிடித்துக்கொண்டார். உடல் முழுவதும் நனைந்துவிட்டது. 
அப்போதுதான் நான் என் வழக்கறிஞர் பாலகிருஷ்ணனிடம் அதை மெதுவாக சொன்னேன். அதை கேட்ட அவர் புத்துணர்ச்சி பெற்றவராக சத்தம் போட்டு “எஸ் மை லாட், த ஹோல் வேல்ட் சேஞச் தேர் ப்ரோக்ராம் ஆப்டர் த அசாசினேசன் ஒன்லி, பட் அவர் ஜென்டில்மேன் டாக்டர் சாமி சேஞச் is ப்ரோக்ராம் பிபோர் த அசசினேசன் [மொத்த உலகமும் இந்த ராஜீவ்காந்தி படுகொளைக்க்ப் பிறகுதான் தமது திட்டத்தை மாற்றிகொண்டது. ஆனால் சுப்ரமணியசாமி மட்டுமே படுகொலைக்கு முன்பாக தனது பயணத்திட்டத்தை மாற்றியிருக்கிறார். அது ஏன்? முக்கியமாக தேர்தல் பிரச்சாரத்தைவிட்டு எங்கோ ரகசியமாக தங்கியிருக்க காரணம் என்ன?” என்று கேட்டபோது 
யாரிடமும் எந்த சத்தமும் இல்லை. “இந்த கேள்விக்கு பதிலை சொல்லுங்கள் மிஸ்டர்” என்றார் நீதிபதி. சாமியிடம் இருந்து பதில் இல்லாதஹ்டு மட்டுமல்ல, தலைகுனிந்தபடி நிற்கிறார். இப்போது நனைந்த உடலில் இருந்து வியர்வை அவரது கைவிரல் வழியாக சொட்டியபடியே இருக்கிறது. எல்லோரும் அந்தக் கோலத்தைப் பார்க்கிறார்கள். எனக்கு எஹ்டோ இனம்புரியாத இன்ப அதிர்ச்சி உடலுக்குள்ளாக பாய்கிறது. யார் குற்றவாளி என்பது அம்பலபட்டதாக திருப்தி. எனக்கே இப்படி இருக்கிறது என்றால் தந்தை ராஜீவ்காந்தியை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மக்கள் பிரியங்காவிற்கு எப்படி இருக்கும் என்று அவரைப் பார்க்கிறேன். அவரது முகம்... ஆத்திரத்திலும் கோபத்திலும் அப்படியே தீ ஜ்வாலையாக முகமெல்லாம் சிவந்து கண்கள் சுப்ரமணிசாமியின் மீது ஆவேசப் பார்வையோடு நிலைகுத்தி நின்றிருந்தது. அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. கோவலனை பறிகொடுத்த கண்ணகி பாண்டிய மன்னனின் அரசவை மண்டபத்திற்குள் தலைவிரி கோலமாக நுழைந்ததை இளங்கோவடிகள் கூறுவதை படித்த ஞாபகம்தான் சட்டென்று நினைவுக்கு வந்தஹ்டு. தலைகுனிந்தபடியே நின்ற சாமி எந்தப் பக்கமும் திரும்பவில்லை. நீதிபதி ஜெயினோ சுப்ரமணியசாமியை உற்றுப் பார்த்தவர் அப்படியே பார்த்தபடியே இருக்கிறார். பார்வையாளர்கள் மத்தியிலும் ஒரே நிசப்தம். அடுத்து நீதிபதி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு. ஆனால் ஜெயின் கன்னத்தில் கைவைத்தபடியே சாமியை பார்த்தபடியே இருக்கிறார். இரண்டு நிமிடங்கள் அப்படியே ஓடுகிறது. பேனாவை மூடி மேஜை மேல் வைத்தார். பிறகு கண்ணாடியை கழற்றி மேசைமீது வைத்தபடி அப்படியே எழுந்தார். வழக்கமாக “கோர்ட் is அட்ஜர்ன்ட்” என்று சொல்வதைக்கூட மறந்து சாமியை மேலும் முறைத்தப் பார்த்தபடியே அவரது அறைக்குள் சென்றார். பிறகு சாமியும் விசாரணைக் கூண்டிலிருந்து இறங்கினார். பார்வையாளர்களும் எழுந்து அங்குமிங்கும் நகர்ந்தார்கள். சாமி பிரியங்காவை கடக்கும் போது பாடியே தலைகுனிந்து நடந்தார். அந்த நேரத்தில் நான் பிரியங்காவை பார்க்கரின். சுப்ரமணியசாமியை அப்படியே சுட்டெரித்துவிடுவதைப் போல் பார்க்கிறார். முகத்தில் ஆதங்கம். ஆத்திரம் எல்லாம் ஒன்றுகூட கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. ‘நீதானா அந்தக் குற்றவாளி?’ என்ற முறைப்பு அது. அப்படியே என்னையும் பார்க்கிறார். ஒருவித ஏக்கம், இயலாமை எல்லாம் கலந்த சாந்தமான பார்வையோடு தலைசாய்த்து இமைமூடினார். அதை நன்றி என் எடுத்துகொள்வதா? தெரியவில்லை. அடுத்த நொடி அங்கிருந்து வேக வேகமாக வெளஎரினார். 
அவர் சென்றவுடனேயே அங்கு இருந்த மூத்த வழக்கறிஞரான தத்தா ஓடிவந்து என் கைகளைப் பற்றினார். “இந்த வழக்கு இவ்வளவு நாளும் இருட்டில் இருந்தது. இன்றுதான் அதன்மீது ஒரு வெளிச்சக்கீற்று மின்னலாய் பாய்ந்திருக்கிறது. இவ்வளவு நாளும் திக்குத் தெரியாத நிலையில் இருந்தது. மிகவும் நன்றி” என்று தட்டிகொடுத்தார். அதே போன்று காங்கிரஸ் கட்சி சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞரான மிட்டலும் ஓடிவந்து கட்டிபிடித்துக்கொண்டார். “என்னால் எப்படி விவரிப்பதென்று தெரியவில்லை. சாமி அந்த இரண்டு பத்திரிக்கை செய்திகளையும் காட்டியபோது இத்தோடு எல்லாம் முடிந்தது என்று நினைத்துவிட்டேன். ஆனால் நீங்கள்..? வாய்மை வென்றிருக்கிறது. பரவாயில்லை” என்றார். அது என் கடமை என்பதால் பாராட்டக எடுத்துகொள்ள முடியவில்லை.
அதேபோன்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரானா விடியல் சேகர் ஓடிவந்து “அண்ணே இந்த நாளை வாழ்கையில் மறக்க முடியாதண்ணே. உங்கள் மூலமாக இன்னைக்கு இந்த வழக்கில் ஒரு வெளிச்சம் கிடைத்திருக்கிறதண்னே” என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், எனக்கு பரிச்சயமில்லை என்றாலும் விடியல் சேகரோடு சேர்ந்து கைகொடுத்துப் பாராட்டினார். இதேல்லாம் சொல்ல காரணம் இருக்கிறது.
இப்படி வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத பலரும் என்னை அங்கே அங்கீகரித்தார்கள், பாராட்டினார்கள். கட்டிபிடித்து உருகினார்கள். ஆனால் ஒருவர் மட்டும் என்னை கோபமாக முறைத்தது முறைத்தபடியே இருந்தார். என்னை வெறுப்பாக பார்த்தபடி எழுந்து விறுவிறுவென வெளியேறினார். அவர்தான் சி,பி,ஐ சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான கார்த்திகேயன். பரவாயில்லை நாங்கள் புலனாய்வு செய்யாததைக்கூட நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று பாராட்ட வேண்டாம்.
ஹலோ என்று ஒரு வார்த்தையாவது பேசியிருக்கலாம். ஆனால் இல்லை. ஏதோ அவரை விசாரணைக் கூண்டில் நிறுத்தி அவர்தான் இந்தப் படுகொலையின் சூத்ரதாரி என் நான் வாதடியதைப் போன்று முறைத்துக்கொண்டே சென்றார். அது தான் வேடிக்கையாக இருந்தது. 
சரி போகட்டும். அதன் பிறகு நான் வழக்கறிஞரோடு அவரது அளிவலகம் சென்று மற்ற வேலைகளை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக விமானம் ஏறினேன். அந்த விமானத்தில் வலதுபக்கம் மூன்று இருக்கைகள். இடது பக்கம் இரண்டு இருக்கைகள். நுழைவு வாசல் ஓரத்தில் இருந்த மூன்று இருக்கையில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியும், அவரது நண்பர் வழக்கறிஞர் வீரசேகரனும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் பக்கத்தில் நான் அமர்ந்துகொண்டேன். என்னைப் பார்த்த கி.வீரமணி “வாழ்த்துகள் வேலுச்சாமி. இன்னைக்கு பிரமாதமாக ஆர்க்யுமென்ட் செயதீர்கலாமே. நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டேன். பரவாயில்லை சதிகாரர்கள் யார் என்பது ஓரளவு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது” என்று பாராட்டினார். நானும் சிரித்தபடியே “ஆமாம்” என்றேன். இதற்குள் விமானம் புறப்படத் தயார் நிலைக்கு வந்தது. அந்த கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக ஒருவர் உள்ளே நுழைந்தார். என்னை கண்டதும் நெருப்பை மிதித்திவிட்டதைப் போன்று முகம் மாறினார். அப்படியே முகத்தை திருப்பிக்கொண்டு எனக்குப் பக்கத்தில் இரண்டுபேர் அமரக்கூடிய இருக்கையில், என்பக்கமாக உட்கார்ந்தார். சும்மா அப்படி திரும்பினாலே என்முகத்தைப் பார்த்துவிடலாம். அப்படியிருந்தும் டெல்லி முதல் சென்னைவரை சுமார் இரண்டரை மணிநேரம் அந்த முகத்தை என்பக்கம் திருப்பவே இல்லை. கழுத்தில் சுளுக்கு விழுந்தவரை போன்று அந்தபக்கமே முகத்தை திருப்பிகொண்டார். யார் அந்த பெரிய மனிதர் என்று திரும்பவும் கேட்டுவிடாதீர்கள். சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனே தான். அவருக்கு ஏன் என்மீது இவ்வளவு காழ்புணர்ச்சி என்று யோசிக்கும்போதே அவர் புலன்விசாரணை செய்த கோணமும் லட்சணமும் நினைவுக்கு வந்து தொலைத்தது. அதிகாரம் வைத்திருப்பவர்கள் சொல்வதே தீர்ப்பாகிவிடுகிறது என்ன செய்வது, 
“தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும்” 
என்ற குரலை கார்த்திகேயன் படித்திருக்க மாட்டாரோ?

------ திருச்சி வேலுச்சாமி, “ராஜீவ் படுகொலை: தூக்கு கயிற்றில் நிஜம்” என்ற நூலில் இருந்து...

https://www.facebook.com/photo.php?fbid=246059822264396

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பமீலா என்று ஒரு பிரான்ஸ் நாட்டு அழகி சந்திரசுவாமியின் பிடியில் இருந்தார்.
1983-1984இல் அவர் தான் பிரபாகரனை சந்திக்க போவதாக பலாலி வந்தார்.
அப்போது யாழில் உள்ள பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக கூட வந்தது.
 
அப்போதுதான் அலன் தம்பதியினரை ஈப்பி ஆர் எல்ப் பினர் கடத்தி வைத்திருந்தார்கள். 
 
இந்த பமீலா விற்கு என்ன நடந்தது யாருக்காவது தெரியுமா??
எங்கள் ஊரில் அப்போது புலிகள் பற்றிய செய்திகளுக்கு தணிக்கை 
எங்கும் டெலோ எதிலும் டெலோ என்று இருந்ததால் .. அந்த செய்தி முழுதுமாக ஞாபகம் இல்லை.
 
நிச்சயமாக புலிகள் அவரை கொல்லவில்லை என்று தெரிகிறது.
அப்படி ஏதும் நடந்திருந்தால் .............. இங்க கொஞ்சபேர் ..
பமீலாவிட்கு அரங்கம் திறந்து ... சங்க உறுப்பினர் ஆகி இருப்பார்கள்.
 
என்ன நடந்தது என்று அறிய ஆவலாக உள்ளது 
ஞபாகம் உள்ளவர்கள் எழுதுவீர்களா ?? 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.