Sign in to follow this  
கவிதை

"நல்லாயிருக்கு...!" - [ஒரு பக்கக் கதை - கணவன்மார்களுக்கு மட்டும்]

Recommended Posts

                            10678730_10204526957830975_5462177959173
 
    சாப்பிட உட்கார்ந்தவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் . அன்று அவனுக்கு மிகவும் பிடித்தமான உணவைத்தான் அவள் சமைத்திருந்தாள். அவள் தான் சமைத்த உணவின் சுவையை அவன் முகபாவத்திலேயே பார்த்துத் தெரிந்துகொள்வாள். ஆனால் இன்றைக்கு அவன் முகம் எதையுமே பிரதிபலிக்கவில்லை. மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டவன்..."போயிட்டுவாறன்" என்று சொல்லிவிட்டு உணவைப்பற்றி எதுவுமே சொல்லாமல் உடனேயே வெளியே கிளம்பிவிட்டான்.

'ஏதாவது சொல்லுவான்' என எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தவளின் முகம் சட்டென்று வாடிப்போனது. அவன் கிளம்பியதிலிருந்து இவளுக்கு எந்தவேலையும் ஓடவில்லை. 'தன் சமையல் சரியில்லையோ?' என நினைத்தவள், அந்தக் கவலையில் தானும் சாப்பிட மறந்துபோனாள்.

மாலை அவன் மீண்டும் வீட்டுக்கு வந்ததும்... சோர்வாக உட்கார்ந்திருந்த அவள் பக்கத்தில் போய் அமர்ந்தவன்...

"என்ன மேடம்... ரொம்ப சோகமா இருக்கிறமாதிரி இருக்கு... என்னாச்சு?" என குறும்புப் புன்னகையோடு வினவினான். அவள் "ஒன்றும் இல்லை" என ஒற்றைவார்த்தையில் சொல்லிவிட்டு "இரவுக்கு என்ன சமைக்க?" என கேட்டபடியே எழுந்தவளின் கரத்தினை எட்டிப் பற்றியவன்...

அவன் புதிதாய் வாங்கிவந்த ஒருசோடி தங்க வளையலை அவள் கையில் மாட்டியபடியே, "இது எதுக்காகத் தெரியுமா? இன்னிக்கு மேடத்தோட ஸ்பெஷல் சமையலுக்கு...!" என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை ஆவலோடு பார்த்தான்.

அவள் முகம் மகிழ்ச்சியில் திளைக்கும் என எதிர்பார்த்தவனுக்கு... அவள் கண்கள் கலங்கியது ஏனென்று புரியவில்லை. "என்ன ஆச்சு?" என அவன் வினவும் முன்பே,

அவன் மாட்டிவிட்ட அந்தத் தங்க வளையல்களை கழற்றி அவன் கரங்களுக்குள் மீண்டும் வைத்துவிட்டு, அவள் சொன்ன வார்த்தைகள்...

"நீங்கள் சாப்பிட்டிவிட்டு 'நல்லாயிருக்கு' என்று சொல்லுற அந்த ஒற்றை வார்த்தைக்கு இந்த தங்கவளையல் என்ன... எந்தத் தங்கக் குவியலும் ஈடாகாது... ! எனக்கு இதெல்லாம் வேணாம் ! "
அவள் அதைச் சொல்லுபோதே அவள் கண்கள் கலங்கி, குரல் தளுதளுக்கத் தொடங்கியது.

- இப்பொழுதுதான் அவனுக்கு எல்லாமே புரிந்தது... தான் இதுவரை நாளும் விட்ட தவறும் கூட-
கலங்கியவளின் கரங்களை காதலோடு பற்றி... தன் அருகே இழுத்து அணைத்தவன்,

" மன்னிச்சுக்கோம்மா ....உண்மையிலேயே நல்லா இருந்திச்சு...! இனி அதை அப்பப்பவே சொல்லுறன். இப்ப ஓகேவா...?"
என சொல்லியபடியே மீண்டும் அந்த ஜோடி வளையல்களை அவள் கரங்களில் அணிவித்தான்.
இப்பொழுது மறுப்பேதும் சொல்லாத அவள்  முகத்தில் உதிர்ந்த புன்னகையும் அத்தனை அழகாய் இருந்தது.

*****************                         ******************                           ******************                       ******************

"நல்லாயிருக்கு..." என்ற அந்த ஒற்றைவார்த்தைதான் உங்களுக்காக பாடுபடும் மனைவி எதிர்பார்க்கும் அதியுயர் விருது. அந்த உயரிய விருதினை அவ்வப்போதே கொடுத்துவிடுங்கள். அவளின் சமையல் மட்டுமல்ல உங்கள் இல்லறவாழ்வும் சுவைக்கும்...! :)

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

கூடுதலான ஆண்கள் இப்படித்தான்...

சிறுசிறு தவறுகளை  விட்டுவிட்டு

பெருமளவில் நட்டமடைகின்றனர்

இவரும் நல்லாயிருக்கு என்பதற்கு பதிலாக தங்கநகை.... :lol:  :D

தங்கத்தின் விலையை  நினைச்சா உலகமே சுற்றுது... :(

Share this post

Link to post
Share on other sites

பொன் பொருளை விட, உரிய கால நேரத்தில்பொதிந்த வார்த்தைகள்  தங்கத்துக்கும் மேலானவை :D

Share this post

Link to post
Share on other sites

அது சரி.... நல்லாயிருக்கும் போது நல்லாயிருக்கு என்று சொல்வது போன்று மோசமாக இருக்கும் போது மோசமாக இருக்கு என்றும் சொல்ல வேண்டுமல்லவா..

ஒருக்கால் மோசமாக இருக்கு அல்லது உப்பு பத்தவில்லை என்று சொல்லிப் பாருங்கோ.  சந்தியிலிருக்கின்ற கோயிலில் இருக்கும் காளியை அப்பதான் வீட்டுக்குள் அதுவும் மூஞ்சிக்கு முன்னமே பார்ப்பீர்கள்.

ஹ்ம்ம்ம்

இப்படிக்கு,

இப்படிச் சொல்லி நொந்து நூடுல்ஸாக போனவன்

உங்களுக்கு  இன்னும் அனுபவம் காணாது என்பது தெரிகிறது

வாழ்க்கைப்பட்ட பின் மேலும் கீழுமாக மட்டுமே  தலையாட்டத்தெரிந்து கொள்ளணும்

தோல்விகள் மட்டுமே கிடைக்கும் போர்க்களத்தில்

நெஞ்சு நிமிர்த்துதல் தேவையோ....?

உங்களது அடுத்த பிர்ச்சினை

ஒருக்கால் மோசமாக இருக்கு அல்லது உப்பு பத்தவில்லை என்று சொல்லிப் பாருங்கோ.  சந்தியிலிருக்கின்ற கோயிலில் இருக்கும் காளியை அப்பதான் வீட்டுக்குள் அதுவும் மூஞ்சிக்கு முன்னமே பார்ப்பீர்கள்.

நீங்கள் கொடுத்துவைத்தவர்

நாங்கள் ஆமாப்போட்டும் அதைத்தான் வீட்டில் பார்க்கின்றோம் :lol:  :D

இப்படிக்கு,

இப்படிச் சொல்லாமலேயே நொந்து நூடுல்ஸாக போனவன்

(நெடுக்கின் கண்ணில் படாதிருக்கக்கடவது :lol:  :D )

Edited by விசுகு

Share this post

Link to post
Share on other sites

கூடுதலான ஆண்கள் இப்படித்தான்...

சிறுசிறு தவறுகளை  விட்டுவிட்டு

பெருமளவில் நட்டமடைகின்றனர்

இவரும் நல்லாயிருக்கு என்பதற்கு பதிலாக தங்கநகை.... :lol:  :D

தங்கத்தின் விலையை  நினைச்சா உலகமே சுற்றுது... :(

பெண்கள் எதிர்பார்க்கும் சின்னச்சின்ன விடயங்களை பெரும்பாலான ஆண்கள் கவனிக்கத் தவறுகின்றனர்!

அந்த சின்னச் சின்ன  விடயங்களுக்குள்தான்.... பென்னம்பெரிய சந்தோசங்கள் ஒளிந்திருக்கின்றதென்பதனை பலர் புரிந்துகொள்வதில்லை.

புரிந்துகொண்டால்....... இவ்வளவு கஷ்டம் தேவையில்லை! :)

கருத்துக்கு மிக்க நன்றி விசுகண்ணை! :)

Share this post

Link to post
Share on other sites

பொன் பொருளை விட, உரிய கால நேரத்தில்பொதிந்த வார்த்தைகள்  தங்கத்துக்கும் மேலானவை :D

அதுதான் உண்மை அக்கா! உரிய காலத்தில் சொல்லப்படும் நன்றியும், மன்னிப்பும்  எல்லாவற்றிலும் மேலானவை!  அதை உணர்ந்து நடந்தாலே போதும்... !

Share this post

Link to post
Share on other sites

அது சரி.... நல்லாயிருக்கும் போது நல்லாயிருக்கு என்று சொல்வது போன்று மோசமாக இருக்கும் போது மோசமாக இருக்கு என்றும் சொல்ல வேண்டுமல்லவா..

ஒருக்கால் மோசமாக இருக்கு அல்லது உப்பு பத்தவில்லை என்று சொல்லிப் பாருங்கோ.  சந்தியிலிருக்கின்ற கோயிலில் இருக்கும் காளியை அப்பதான் வீட்டுக்குள் அதுவும் மூஞ்சிக்கு முன்னமே பார்ப்பீர்கள்.

ஹ்ம்ம்ம்

இப்படிக்கு,

இப்படிச் சொல்லி நொந்து நூடுல்ஸாக போனவன்

ம்ம்ம்ம்ம்.... அது என்னவோ உண்மைதான் நிழலி! :lol:

ஆனால் எந்த ஒரு எதிர்மறையான கருத்துக்களையும் பக்குவமாக எடுத்துச் சொல்லவும் வழியிருக்கு!

"என்ன இது..? உப்பும் இல்லை ஒண்ணும் இல்லை... சப்பெண்டு இருக்கு!" என்று சொல்வதற்குப் பதிலாக...  "இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்" என்றுகூட சொல்லலாம். இரண்டுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு! :):icon_idea:

ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்... முயன்று பாருங்கள்! விழுகிற 'சாத்து' குறைவா விழுறதுக்கு சான்ஸ் இருக்கு! :lol::D

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

  "இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்" என்றுகூட சொல்லலாம். இரண்டுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு! :):icon_idea:

ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்... முயன்று பாருங்கள்! விழுகிற 'சாத்து' குறைவா விழுறதுக்கு சான்ஸ் இருக்கு! :lol::D

ம்ம்... இப்படிச் சொன்னால், ரோசம் கெட்ட மனுசனுக்கு இன்னும் உப்புத் தேவையாகத் தான் இருக்கும் என்று பதில் வரும்... தேவையா எனக்கு

Share this post

Link to post
Share on other sites

ம்ம்... இப்படிச் சொன்னால், ரோசம் கெட்ட மனுசனுக்கு இன்னும் உப்புத் தேவையாகத் தான் இருக்கும் என்று பதில் வரும்... தேவையா எனக்கு

அதுவும் தெரிஞ்சு போச்சா.... :lol:  :D

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this