Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Beschi_Tamil_literature.jpg

 

 

மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவரின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
 
 இத்தாலியில் பிறந்த வர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார்.
 
 மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார். அதற்காகத் தமிழ் கற்றார். தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே இலக்கியப் பேருரை கள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார்.
 
 கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்றுதான் மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார் இந்த முன்னுதாரணப் புலவர்.
 
 இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய வற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
 
 வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழி களைக் கற்கவும் உதவியாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். நிகண்டுக்கு மாற்றாக பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார்.
 
 அந்த காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார். பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தன. மக்கள் சிரமமின்றிப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரைநடையாக்கினார்.
 
 தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத் தமிழை விவரித்தார்.
 
 உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே.
 
இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றினார். இவரைப்போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை.
 
 தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். ஒன்பது மொழிகளில் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தவர், தனது 67-வது வயதில் மறைந்தார்.
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

தேவை இருந்தால்

உன்னை தெய்வம் என்பர்

உன்னால்

தேவை முடிந்த பின்

உன்னையே

தேவாங்கு என்பர்.-

 

அருள் நிலாவாசன்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் !!!!!!

1528488_857870447580105_7156444309227997

 

 

நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்துவிடும்

பூவாக இருந்து விட கூடாது,

மேலும்,மேலும் மலரை உருவாக்கும்

செடியாக இருக்க வேண்டும்.-அரிஸ்டாட்டில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை செய்ய விரும்பிற போது

அதை செய்வதற்காகவே

இருக்கிறோம் என

எண்ண வேண்டும்..கர்மவீரர். காமராஜர்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்குத் துயரை பரிசளித்தவர்களை மிகச் சாதாரணமாக கடந்து செல்லும் கணம் மிக அற்புதமானது.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

November 9, 2014 marks the 25th Anniversary of the fall of the ‪#‎BerlinWall‬

 

1277454_845781102122450_9185360576441388

 

 

நன்றி யாயினி.

 

25வது பேர்லின் பெரும்சுவர் இடிப்பை அரசியல் ரீதியாக வெகுவிமரிசையாக கொண்டாடினர். ஆனால் மக்கள் மனதில் பெரும்சுவர் இன்னும் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

 

 

 

இதைத்தான் நேற்று என் கடைக்குட்டியும் சொன்னவன். கீழே நான் விழுத்திய பொருளை அவனை எடுக்க சொல்ல, அவன் சொன்னான் இதை நீங்களே செய்ய வேண்டிய வேலை மற்றவர்களை ஏன் கேட்கின்றீர்களென்று :D

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கங்களோடு அனைவருக்கும் இனிதான பொழுதாகட்டும்..!!!

 

10808_735292903207277_711718438343982940

காலத்தைப்போல் பழிவாங்குவது வேறெதுவும் இல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1796483_685482308232150_7484066767672737

 

 

இன்று ஞாபகார்த்த தினம்..

 

 (Remembrance Day) என்பது போரில் தமது உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தும் நாள் ஆகும். இந்த நாள் நவம்பர் 11 இல் பொதுநலவாய நாடுகள் பலவற்றில் அவதானிக்கப்படுகிறது.சிவப்பு நிற பொப்பி மலர்கள் இந்த நாளுக்குரிய சின்னமாக விளங்குகின்றது. பொப்பிச் செடிகள், கொடூரமான போர் நடைபெற்ற பிளாண்டர் எனும் இடத்தில் மிகையாகப் பெருகிக் காணப்பட்டன. இதன் சிவப்பு நிறம் போரில் சிந்திய குருதியின் நிறத்தை நினைவுபடுத்தியது. போர் மருத்துவரும் கவிஞருமான சோன் மாக்கிரே எனும் கனடிய வீரரின் "பிளாண்டர் புலத்தில்" எனும் கவிதையின் வரிகள் வீரர்களைப் புதைத்த இடங்களில் வளரும் பொப்பிச் செடிகளைக் குறிப்பிட்டது. இக்கவிதை மூலம் பொப்பி பிரபல்யம் அடைந்தது. நினைவுறுத்தும் நாளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொப்பிகளை அணிவது வழக்கத்தில் வந்தது.

கனடாவில் "லெஸ்ட் வீ போர்கெட்" (lest we forget) எனும் வாக்கியம் இந்நாளுடன் தொடர்புடையதாய் இருக்கின்றது, போர்த் தியாகிகளை ஒருபோதும் மறத்தலாகாது எனும் எச்சரிக்கையை இந்த வாக்கியம் தெரிவிக்கின்றது.

 

 

1457568_667107989989686_777713765_n.jpg?

 

 

World War-I Ended 11.11.1918 @ 11 am....

 

 

553207_667106519989833_1604328849_n.jpg?

 

 

2532_765266103498782_622616977_n.jpg?oh=

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றாண்டு காணும் பொப்பி மலரும் கால்நூற்றாண்டு காணும் காந்தள் மலரும்....



இன்று பொப்பி தினம். மனித வரலாற்றின் படிநிலைகளில் உலக வரலாற்றினை மாற்றியமைத்து புதிய உலக ஒழுங்கிற்கு வித்திட்ட நாள். மனித இனம் தோன்றியதிலிருந்து குழுக்களாகவும், பிரதேசங்களாகவும் சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலைமை மாறி முழு உலகமுமே சண்டையிட்டு மிகப்பெரும் அழிவைச் சந்தித்து இனிமேல் இப்படியொரு யுத்தம் தேவையில்லை என முடிவெடுத்தநாள். மனித நாகரிகத்தின் உயர் விழுமியங்களான சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் என்பவற்றை மதிக்கவேண்டும்,கடைப்பிடிக்கவேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்திய நாள்.

ஏன் இவைகள் எல்லாவற்றிற்கும் மோலாக உலகப் போரையே நிறுத்திய நாள். சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநிறுத்துவதற்காக யுத்த பூமியில் விழுந்த வீரர்களை நினைவு கூரும் நூறாவது ஆண்டு நாளாகவும் அமைகிறது.

நவம்பர் 11 உலகின் சமாதானத்திற்கானதும், சமத்துவத்திற்கானதும், சுதந்திரத்திற்கான நூறாவது ஆண்டாக அமைய. உலகின் எங்கோ ஒரு கோடியில் இந்து சமுத்திரத்தின் மையத்தில் சுதந்திரத்திற்காக தம்முயிர்களை அர்ப்பணித்துப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழினம் ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் என்பவற்றை நிலைநாட்ட ஈழத்தில் வீழ்ந்த வீரர்களை நினைவு கூரும் 25வது ஆண்டு காந்தள் மலர் நாளாக நவம்பர் 27 ஐ உலகத்தமிழினம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

 

10306242_801751329863560_148416969152108

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று யாழ் பல்கலைகழகத்தில் 30ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா.அதில் பட்டங்கள் பெறும் அனைத்து தாயக உறவுகளுக்கும் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!2008-4-13_33237_congratz_sk_mod.gif

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்...

 

மூன்று அமெரிக்க மாநிலங்களில் தமிழுக்கு அங்கீகாரம்!- அமெரிக்க தமிழ் கல்விக் கழகம் சாதனை..
 
English summary Due to the hard efforts of American Tamil Academy, Tamil language got the accredition from three American states, ie, Texas, Minnesota and Missouri .

 

டல்லாஸ்: அமெரிக்காவின் மினசோட்டா, மிசெளரி மற்றும் டெக்சஸ் ஆகிய மூன்று முக்கிய மாநிலங்களில் தமிழ் மொழிக்கு அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமெரிக்க தமிழ் கல்விக் கழகம் இந்த அரிய சாதனையைச் செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் நடக்கும் தமிழ்ப் பள்ளிகள், அமெரிக்க மண்ணில் நடக்கும் பள்ளிகளுக்கு இணையான தரத்துடன் இயங்குகின்றன என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது அத்தனை சுலபமாக கிடைக்கும் ஒன்றல்ல!

 
10-american-tamil-academy-600.jpg
 
அமெரிக்க தமிழ் கல்விக் கழகம் சிவானந்தன் மாரியப்பன் தலைமையில் இயங்கும் மிகப் பெரிய தமிழ் கல்வி அமைப்பு இந்த அமெரிக்க தமிழ் கல்விக் கழகம். இலாப நோக்கமற்ற வரிவிலக்கு பெற்ற இந்த கல்வி அமைப்பு 4 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு எப்படி தமிழுக்கு அமெரிக்காவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது என்பது குறித்து சிவானந்தன் மாரியப்பன் கூறியதாவது:
 
62 பள்ளிகள் முதற் கட்டமாக ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை அறிமுகப் படுத்தித் தற்பொழுது 62 பள்ளிகள் அவற்றைப் பயன்படுத்துகின்றன, அமெரிக்க நாட்டில் மட்டுமல்லாது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் பள்ளிகளும் இவற்றில் அடங்கும். இதுவரை 8 நிலைகள் உருவாக்கப்பட்டு 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் பயில்கின்றனர். அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் கல்வி மேலாண்மைக்கான பொதுவான மென்பொருள்களை நிறுவி உதவி புரிகிறது. அத்துடன் மின்கற்றலுக்கான பாடங்களையும் உருவாக்கி வருகிறது அ.த.க. இவற்றின் மூலம் வகுப்பறை பயிலுதலைக் கடந்து மேல்நிலை மாணாக்கர் பழகுத் தமிழுக்கான இலக்கணமும், அறிமுக நிலை மாணவர்கள் ஊடாட்டு மென்பொருள் வழியே அடிப்படை தமிழ் எழுத்துக்களையும், சொற்களையும் பயில முடியும்.
 
தன்னார்வலர்கள்
அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் வாரயிறுதியில், முழுதும் தன்னார்வத் தொண்டர்களால் இலாப நோக்கமற்று நடத்தப்படுபவை. தம் பிள்ளைகள் அமெரிக்க மண்ணில் வாழ்ந்தாலும், அவர்கள் தமிழ் படிக்க வேண்டுமென விழையும் பெற்றோர்கள் செலுத்தும் கட்டணங்களை மட்டுமே முதலாகக் கொண்டு நடைபெறும் பள்ளிகள்தான் அனைத்துமே. பயிற்றுவிக்கும் ஆசிரியர் யாவரும் ஊதியம் எதுவுமின்றி ஒவ்வொரு வாரமும் தங்களின் பொன்னான நேரத்தைச் செலவிட்டுப் பணியாற்றும் தன்னார்வத் தமிழ் பெற்றோர்கள் தாம். எந்த அரசாங்கங்களும் (இந்திய/தமிழக) இவற்றுக்கு நிதியுதவியோ, இடமோ, பொருளோ வழங்குவதில்லை.
 
அமெரிக்கா தரும் சலுகை: அமெரிக்க நாட்டில் இலாப நோக்கமற்ற அமைப்புகளுக்கு வழங்கப்படும் சலுகையாக வகுப்பறை வசதிகள் சற்றுக் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கிடைக்கின்றன. தன்னார்வச் சேவைகளால் இயங்கும் தமிழ்ப் பள்ளிகளின் செலவீனங்களில் பெரும்பகுதி வகுப்பறை வாடகைக்கே செலவாகிறது. இந்தச் சூழ்நிலையிலும் தமிழ்க் கல்வியைத் தரத்துடன் வழங்குவதன் மூலமே அமெரிக்கத் தமிழ் மாணாக்கர் மற்ற மொழிகளைப் போலத் தமிழையும் ஒரே தரத்தில் மதிப்பர் எனும் குறிக்கோளுடன் இயங்கி வருபவை இப்பள்ளிகள்.
 
தமிழ் கற்பதிலும் பயன்: பெற்றோரின் விருப்பத்திற்காகத் தொடக்கப் பள்ளியில் (நான்கு / ஐந்தாம் வகுப்பு வரை) படிக்கும் மாணாக்கரே பெரும்பான்மையாக வாரக் கடைசியில் நடைபெறும் தமிழ்ப் பள்ளிகளில் பயில்கின்றனர். நடுநிலை/மேல்நிலை பள்ளி மாணாக்கரின் முதன்மை கல்வி சார்ந்த வகுப்புகளும் அதனை ஒட்டிய வீட்டுப் பாடங்களும் தினசரிச் சுமையாகிப் போவதால் அவர்களுக்கு வாரநாட்களில் மிகக் குறைந்த நேரமே கிடைக்கிறது. வாரக் கடைசி நாட்களில் இவர்கள் விளையாட்டு, மற்ற பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த ஆளுமையிலிருந்து மாணாக்கரை மீட்டுத் தமிழ் மொழி கற்பதிலும் அவர்களுக்குப் பயன் உள்ளது என்பதைப், பெற்றோரின் வற்புறுத்தலின்றி அவர்களாகவே உணர, தமிழ்ப் பள்ளிகளுக்கு உயரிய கல்வி நிறுவனம் எனும் அங்கீகாரம் ஒரு மாபெரும் தேவை.
 
தமிழுக்கான அங்கீகாரம்: தமிழ்ப் பள்ளிக்கான அங்கீகாரம் என்பது அமெரிக்க மண்ணில் நடக்கும் பள்ளிகளுக்கு இணையான தரத்துடன் நடைபெறும் கல்வி நிறுவனம் என்பதற்கான சான்று. இந்த அங்கீகாரத்தினைப் பெறுவது எளிதல்ல. கல்வித் துறையில் பணியாற்றி அனுபவமில்லாத தன்னார்வலர்களால் நடத்தப்படும் பள்ளிகள், உயர்தரக் கல்வி நிறுவனத்துக்கான அங்கீகாரம் பெற முயல்வது ஒரு மலைப்பான விஷயம். ஒருங்கிணைந்த பாடத் திட்டம் அமெரிக்கத் தமிழ் கல்விக் கழகம்.
 
ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தினை வடிவமைத்து, உருவாக்கி, அவற்றைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மெருகேற்றும் பணியினைச் செய்து வருகிறது. மட்டுமல்லாமல், பள்ளி நிர்வாகம், மின்கற்றல் போன்ற கட்டுமானப் பணிகளை அனைத்துப் பள்ளிகளுக்கும் பயன்பெறும் வண்ணம் செயல்படுத்துகிறது.
 
வட்டார தமிழ் அமைப்புகள் இருப்பினும், இதனைக் கடந்து பரந்து விரிந்த அமெரிக்க நாட்டில், மாநில/மாவட்ட அளவில் நடைபெறும் பள்ளிகளை நிர்வகிப்பது அந்தந்தப் பகுதி தமிழ்க் கல்வி அமைப்புகளும் தமிழ்ச் சங்கங்களும் தான். மாணவர்களைச் சேர்ப்பது, ஆசிரியர்களை இனம் கண்டு நியமிப்பது, வகுப்பறைகளை வாடகைக்குப் பதிவு செய்வது பின்னர்த் தலையாயக் கடமையான தமிழ் மொழியைச் சீரிய முறையில் அடுத்த தலைமுறைக்குக் கற்பிப்பது போன்ற நடைமுறைப் பணிகள் வட்டாரத் தமிழ்ப் பள்ளி அமைப்புகளையே சாரும்.

 

வேறுபட்டது இப்படி பல்வேறு சூழல்களில், அனைத்தையும் ஒருங்கிணைத்து நடைபெறும் அமெரிக்கத் தமிழ் பள்ளிகளின் அமைப்பு முறை தமிழ் நாடு, சிங்கப்பூர், மலேயா, ஈழம் போன்ற நாடுகளில் 12 ஆண்டுகள் தமிழ் கற்கும் முறையைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது.

தமிழ் இரண்டாவது மொழி அமெரிக்காவில் இரண்டாவது மொழியாகவே தமிழ் மொழியைக் கற்கிறார்கள். அமெரிக்க நாட்டுக் கல்வி முறைப்படி குறைந்த பட்சம் மேல் நிலைப் பள்ளியில் (9 முதல் 12 வரை) நான்கு ஆண்டுகள் ஆங்கிலமன்றி வேறொரு மொழியை மாணாக்கர் கட்டாயமாகப் பயில வேண்டும். இதற்காக 4 மொழி மதிப்பீட்டு புள்ளிகளை (language credits) மாணாக்கர் பெற முடியும். இதனால் கல்லூரியில்/பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் சேருவதற்குத் தேவையான கூடுதல் புள்ளிகள் கிடைப்பதுடன், கட்டணமும் வெகுவாகக் குறைகிறது

அங்கீகாரம் இதற்காகத்தான் பள்ளி ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வாரமும் 2 முதல் 4 மணி நேரம் செலவழித்துத் தமிழ் கற்கும் மாணாக்கருக்கு மற்ற மொழிகளைப் போல மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுத் தந்தால் மட்டுமே அவர்கள் உந்துதலுடன் தமிழ் கற்பர் என்ற நிலை உருவானது. இதனை மனதில் கொண்டு தமிழ் மொழி கற்பதற்கான தேவையையும் பூர்த்தி செய்வதுதான் தமிழ்ப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் (Accreditation).

 
தமிழ் கற்றால் 4 கூடுதல் மதிப்பீட்டுப் புள்ளிகள் மொழி மதிப்பீட்டு புள்ளிகளுக்காக ஸ்பானிஷ், ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ஏன் ஜப்பானிய, சீன மொழிகளைப் பயிலும் தமிழ் மாணாக்கர் அமெரிக்க நாடு முழுவதும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மற்ற மொழிகளுக்கு மாற்றாக அல்லது கூடுதலாகத் தமிழ் மொழியைப் பயில்வது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 4 மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுத் தரும்.
 
முதல் படி அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் வாயிலாகத் தமிழ் கற்கும் மாணாக்கரின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது ஒரு முதல் படி. தமிழர் அடர்த்தியாக வாழும் ஊர்களில் முழு நேரப் பொதுப் பள்ளிகளிலேயே தமிழ் மொழியைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பாக இது அமையக்கூடும்.
 
3 ஆண்டு உழைப்பு தமிழ்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவது என்பதைத் தலையாயக் கடமையாகக் கொண்டு அ.த.க. கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்ததன் பயனாகத் தற்பொழுது 3 மாநிலங்களில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
 
3 மாநிலங்களில் மினசோட்டா, மிசெளரி மற்றும் டெக்சஸ் (ஹூஸ்டன் நகரப் பள்ளி) பள்ளிகள் இந்த மாபெரும் அங்கீகார முத்திரையை ஈண்டெடுத்திருக்கிறார்கள். ஹூஸ்டன் பள்ளி முதலில் ஜூன் 2014ல் இந்த அங்கீகாரத்தைப் பெற்றது அதனைத் தொடர்ந்து மினசோட்டா/மிசெளரி மாநிலப் பள்ளிகள் அக்டோபர் 2014ல் இந்த மைல்கல்லைத் எட்டியிருக்கிறார்கள்.
 

இந்தப் பள்ளி அங்கீகாரத்தை வழங்கிய நிறுவனத்தைப் பற்றிய சிறு குறிப்பு: அட்வான்செட் (AdvancEd www.advanc-ed.org) எனும் இந்நிறுவனம் கல்வி நிலையங்களின் ஆற்றலைப் பல பரிமாணங்களில் ஆய்வு செய்து தரச் சான்றிதழ் வழங்கும்உலகளாவிய நிறுவனம்.

 

இதுவரையில் இந்நிறுவனம் உலகம் முழுதும், ஏறக்குறைய 20 மில்லியன் மாணாக்கர் பயிலும், 32,000 கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் 50 மாநிலங்களிலும் ஏற்கத்தக்க கல்வி மதிப்பீட்டு நிறுவனம் அட்வான்செட் ஒன்று தான். அட்வான்செட் வரையறுக்கும் பள்ளி மதிப்பீடுகளைத் மீறியதொரு தரம் இன்று வரை எதுவுமில்லை என்று சொல்லலாம்.
 
 
அரசுப் பள்ளிகளை விட சிறப்பான முறையில் மினசோட்டா, மிசௌரி, ஹூஸ்டன்- டெக்சாஸ் ஆகிய 3 தமிழ்ப் பள்ளிகளும் அரசு நடத்தும் பொதுப் பள்ளிகள் பெற்ற சராசரிப் புள்ளிகளை விட, அதிகப் புள்ளிகள் பெற்று சீர்மிகு தரத்துடன் நடப்பதாக, அட்வான்செட் தனது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் பல மில்லியன் டாலர்கள் செலவழித்து முழுதுமாக எற்று நடத்தும் பொதுப் பள்ளிகள் பல அட்வான்செட் வரையறுக்கும் அடிப்படைத் தரத்தைக் கூடத் தாண்டாது என்பதும், தரமான அரசாங்கப் பள்ளிகளின் சராசரி தரக் கட்டுப்பாட்டு புள்ளிகளைக் காட்டிலும் கூடுதலாகப் பெற்று இம்மூன்று தமிழ்ப் பள்ளிகளும் அங்கீகாரத்தை ஈன்றெடுத்திருக்கின்றது என்பதுதான் இதில் சிறப்பு.
 
அட்வான்செட் நிறுவனத்தைச் சார்ந்த வெவ்வேறு தனி நபர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் மினசோட்டா, மிசௌரி, ஹூஸ்டன் டெக்சாஸ் இம்மூன்று பள்ளிகளையும் ஆய்வு செய்தன. இருப்பினும் ஆய்வின் முடிவுரையாக அவர்கள் குறிப்பிட்டது ஒரே கருத்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாராட்டு "எங்களின் 30 ஆண்டு கல்வித்துறை அனுபவத்தில் இத்தமிழ்ப் பள்ளி அமைப்புகள் போன்றதொரு தன்னார்வு கல்வி நிறுவனத்தைக் கண்டதில்லை. பயிற்றுவித்தல் என்பது இத்தன்னார்வலர்களுக்கு முதன்மை பணியாக இல்லாவிடினும் தரமான கல்வி மற்றும் கல்வி நிறுவனத்துக்கான அத்தனைத் தேவைகளையும்/பணிகளையும் இவர்கள் திறம்படச் செய்வது கண்டு வியக்கிறோம். அத்துடன் தமிழ் மொழியின் மேல் கொண்டிருக்கும் பற்றை பள்ளி நிர்வாகக் குழு, ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணாக்கர உட்பட அனைவரின் கண்களிலும் நாங்கள் காண முடிந்தது" என்றார்கள்.
 
நம்பிக்கை இம்மூன்று பள்ளிகளின் அங்கீகாரம் ஒரு தொடக்கம் தான். இது காட்டுத்தீ போல மற்ற மாநிலங்களுக்கும் பரவும். சிங்கப்பூர், மலேயா நாடுகளுக்குக் குடி புகுந்த தமிழர் எப்படித் தமிழை அந்நாட்டில் தழைத்தோங்கச் செய்தார்களோ அதைப்போலத் தற்போதைய அமெரிக்கத் தமிழ்த் தலைமுறையினர் அமெரிக்க நாட்டில் வாழும் அடுத்த தலைமுறையினருக்கும் அதனைக் கடந்தும் எடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.
 
செம்மொழியான தமிழை அமெரிக்கா உணர்ந்து போற்றும் ஆசியாவின் மூத்த செம்மொழியான தமிழ்மொழி 2000 ஆண்டுகளுக்கும் மேலாக, மாற்றங்களற்ற இலக்கணத்துடன் பயன்பாட்டில் உள்ள ஒரே மொழி என்பதனை உலக வல்லரசான அமெரிக்காவும் உணர்ந்து போற்றும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. பல்வேறு நாட்டு இனங்களையும் மொழிகளையும் பேசும் புலம் பெயர்ந்த மக்களைப் பிரதானமாகக் கொண்டு, அனைத்துப் பண்பாடுகளையும் மொழிகளையும் சமமாக மதிக்கும் அமெரிக்க நாடும் தமிழின் உயர்வையும், பெருமையையும் உணரத் துவங்கியுள்ளது," என்றார்.

Read more at: http://tamil.oneindia.com/news/international/american-tamil-academy-gets-accreditation-tamil-3-us-states-214547.html

 

 

 

 
 
 

 

 

 

 

 

 

 

 

 

 

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பொப்பி தினத்தை நினைவு கூரும் முகமாக சனிபுறோக் மருத்துவமனை சுற்றாடல் பகுதி கனேடிய கொடிகளினால் அலங்கரிக்கபட்டு இவ்வாறு தான் காட்சியளிக்கும்.

1492220_10152634761578369_21426603730349

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாம் என் விருப்பிற்கு உரிய பிராணிகள்...

1908207_501073266702359_6175440291607497

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.