Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

11205545_109727766025338_901034252571946

 

“வெளிநாடு சென்ற மகனுக்கு அப்பா எழுதும் கடிதம்”

 

அவர் ஒரு கிராமத்து "அப்பா" (வெளிநாடு சென்ற பிறகு பெற்றவர்களை மறந்து சொகுசாக வாழும் ஒரு மகனுக்கு ஒரு தந்தை எழுதும் கடிதம்)

-அன்பு மகனுக்கு உன் அப்பா எழுதுவது..."

படிப்பில்லாமல் நான் பட்ட கஷ்ட்டங்களை யெல்லாம் நீயும் பட்டுவிடக்கூடாது. வெளிநாட்டில் படித்து நீ முன்னே வேண்டுமென்று..." இரவும்,பகலுமாய் என் இரத்தத்தை வியர்வையாக்கி உன்னை அனுப்பி வைத்தேன்..."!!

ஆனால் நீயோ அதில் கிடைத்த சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்...! (என்னையும் மறந்து)

உன்னை வெளிநாட்டிற்கு அனுப்பும் போது உன் நினைவாக "தென்னங்கன்றை" வைத்தேன்..."!

அதுகூட வளர்ந்து மரமாகிவிட்டது. உன்னை நினைத்து மனம் நெறுப்பாய் சுடும் போதெல்லாம் ஆறுதல் சொல்ல உன் பிம்பம் இல்லாவிட்டாலும்..." இந்த மரத்தின் நிழலால் குளிர்ச்சி தரும்..."!

 

அங்கு கிடைக்கும் பணமும், சுகமும் உனக்கு இன்பமூட்டுகிறது...!

இங்கு இந்த மரம் தரும் கனியும், நீரும் என் பசியைப்போக்குகிறது...!

 

நீ "ஈ மெயிலில்" மூழ்கிக்கொண்டிருக்கும் நேரம்..."

என் மீது "ஈ" மொய்த்த செய்தி வந்து சேரும்...!

என் இறுதி ஊர்வலத்திற்காகவும் நீ வரமாட்டாய் என்றாலும் பரவாயில்லை மகனே..."!

என்னை சுமந்து செல்ல தென்னை ஓலை இருக்கிறது..."!!

நான் உனக்கு கற்றுத்தந்தேன் வாழ்க்கை இது தானென்று...!

நீ எனக்கு கற்றுத்தந்தாய் உறவுகள் இதுதானென்று..!!

 
 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

 

 

11205545_109727766025338_901034252571946

 

“வெளிநாடு சென்ற மகனுக்கு அப்பா எழுதும் கடிதம்”

 

அவர் ஒரு கிராமத்து "அப்பா" (வெளிநாடு சென்ற பிறகு பெற்றவர்களை மறந்து சொகுசாக வாழும் ஒரு மகனுக்கு ஒரு தந்தை எழுதும் கடிதம்)

-அன்பு மகனுக்கு உன் அப்பா எழுதுவது..."

படிப்பில்லாமல் நான் பட்ட கஷ்ட்டங்களை யெல்லாம் நீயும் பட்டுவிடக்கூடாது. வெளிநாட்டில் படித்து நீ முன்னே வேண்டுமென்று..." இரவும்,பகலுமாய் என் இரத்தத்தை வியர்வையாக்கி உன்னை அனுப்பி வைத்தேன்..."!!

ஆனால் நீயோ அதில் கிடைத்த சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்...! (என்னையும் மறந்து)

உன்னை வெளிநாட்டிற்கு அனுப்பும் போது உன் நினைவாக "தென்னங்கன்றை" வைத்தேன்..."!

அதுகூட வளர்ந்து மரமாகிவிட்டது. உன்னை நினைத்து மனம் நெறுப்பாய் சுடும் போதெல்லாம் ஆறுதல் சொல்ல உன் பிம்பம் இல்லாவிட்டாலும்..." இந்த மரத்தின் நிழலால் குளிர்ச்சி தரும்..."!

 

அங்கு கிடைக்கும் பணமும், சுகமும் உனக்கு இன்பமூட்டுகிறது...!

இங்கு இந்த மரம் தரும் கனியும், நீரும் என் பசியைப்போக்குகிறது...!

 

நீ "ஈ மெயிலில்" மூழ்கிக்கொண்டிருக்கும் நேரம்..."

என் மீது "ஈ" மொய்த்த செய்தி வந்து சேரும்...!

என் இறுதி ஊர்வலத்திற்காகவும் நீ வரமாட்டாய் என்றாலும் பரவாயில்லை மகனே..."!

என்னை சுமந்து செல்ல தென்னை ஓலை இருக்கிறது..."!!

நான் உனக்கு கற்றுத்தந்தேன் வாழ்க்கை இது தானென்று...!

நீ எனக்கு கற்றுத்தந்தாய் உறவுகள் இதுதானென்று..!!

 

 

 

படத்திலிருக்கும் வரிகள்

கீழேயுள்ள கருத்தடன் முரண்படுகிறது யாயினி

 

வெளிநாடு சென்ற மகனுக்காக

அப்பா எழுதும் கடிதம் என்று வரணும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10407568_415786301937340_278435241967131

விகடன் பேட்டியிலிருந்து....

 

''விளம்பரங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துட்டீங்களாமே... ஏன்?''

 

''ஆமா தம்பி. நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். 'மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்'னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன்.

பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் 'ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க'ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.

 

'நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?'னு கேட்டாங்க.

'வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்'னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க!''

 

இப்பதிப்பை ஆக்கியது Jayant Prabhakar.

 

தலை வணங்குகிறேன்,ஏழை விவசாயியின் மகனாக.

 

 

மனிதத்தை நேசிக்கும் நல்ல மனிதர் ராஜ்கிரண் பல்லாண்டு வாழட்டும்

 

 

11009134_1448135048812373_54852682701802

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்திலிருக்கும் வரிகள்

கீழேயுள்ள கருத்தடன் முரண்படுகிறது யாயினி

 

வெளிநாடு சென்ற மகனுக்காக

அப்பா எழுதும் கடிதம் என்று வரணும்..

 

 

ஆ..சரி..இதனை வாசித்த இடத்தில் சிலர் இப்படித் தலைப்பிட்டு இருந்தார்கள்...“வெளிநாடு சென்ற மகனுக்கு அப்பா எழுதும் கடிதம்” 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிதான காலை வணக்கங்களோடு,அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர்  தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

11011606_109967949334653_103198358384842

 

11147858_837335993024937_828151496981785

11251284_1477201655873883_47477208998109

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலகப்போர் முடிந்த 70 வது ஆண்டு கொண்டாட்டம்.உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய இரண்டாம் உலகப்போர் முடிந்து 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனையொட்டி அந்த போரில் கலந்து கொண்டு, கடும் சிரமத்திற்கிடையே வெற்றி பெற்ற பிரிட்டன், ரஷ்யா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் 70 வது ஆண்டு வெற்றி விழாவை கொண்டாடுகின்றன.

 

11109596_10155600295555637_514961234552111081187_10155600295535637_8915726295738

10403275_10155600295380637_5978958767839

11206005_10155600296280637_5995260220175

11205123_10155600295595637_5316591272554

11165313_10155600295735637_3106223264158

11161364_10155600296305637_8863449968593

10157408_10155600296270637_3347052148716

11059559_10155600296165637_7941371441954

11221301_10155600296220637_3972948896587

11205123_10155600295500637_8611928276463

11227581_10155600295675637_6697373954859

1544975_10155600296075637_87860569829471

11243469_10155600296210637_8656519338548

11209630_10155600295690637_7431334862341

10930093_10155600295635637_3881670709822

11206075_10155600295470637_1179742377002

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11164570_110622169269231_481387244977883

 

 

உலக செவிலியர் நாள்..உலக செவிலியர் அமைப்பு (International Council of Nurses) இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசு சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland) என்பவர் இந்நாளை செவிலியர் நாளாக அறிவிக்க அன்றைய அதிபர் ஐசன்ஹோவருக்கு விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.

 

ஜனவரி 1974இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.

 

ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அது அங்கு சமூகமளிக்கும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

 

ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் மே 9 இலிருந்து மே 15 வரை 1974 ஆம் ஆண்டிலிருந்து செவிலியர் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.

 

புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale, மே 12, 1820 – ஆகஸ்ட் 13, 1910) நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி. போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.

 

பிரிட்டிஷ் செல்வம் பொருந்திய உயர்குடிக் குடும்பமொன்றில் இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார்.[1] இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் (1889-1880), தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் (முன்னர் ஸ்மித்)(1794- 1875). வில்லியம் நைட்டிங்கேலின் இயற்பெயர் வில்லியன் எட்வார்ட் ஷோர். இவரது தாயாரின் மாமனான பீட்டர் நைட்டிங்கேல் என்பவருடைய மரண சாசனத்தின் மூலம் அவருடைய சொத்துக்கள் வில்லியத்துக்குச் சேர்ந்தன. அத்துடன், வில்லியம், நைட்டிங்கேல் என்னும் பெயரையும் நைட்டிங்கேல் குடும்பச் சின்னங்களையும் கூட அவர் ஏற்றுக்கொண்டு வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் ஆனார். புளோரன்சின் தாய்வழிப் பாட்டனான வில்லியம் சிமித் அடிமை முறை ஒழிப்புக்காக வாதாடியவராவார்.

 

எம்ப்லீ பார்க், புளோரன்ஸ் நைட்டிங்கேலின் குடும்ப வசிப்பிடம், இப்பொழுது ஒரு பாடசாலையாக உள்ளது.

 

கிறிஸ்தவர் என்ற முறையில் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாக தாதியர் சேவையை அவர் உணர்ந்தார். 1837 ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட இந்த உணர்வு அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. பெற்றோரின், குறிப்பாகத் தாயாரின் எதிர்ப்புக்கும், துன்பத்துக்கும் மத்தியில், தாதியர் சேவையில் ஈடுபடவேண்டும் என்னும் தனது முடிவை புளோரன்ஸ் 1845 ஆம் ஆண்டு அறிவித்தார். இவ் விடயத்தில் தொடர்ந்து தாதியர் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டமை அச்சேவையில் இவரது பெருவிருப்பையும், அவரது காலத்தைய பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதாகவும் அடையாளம் காணப்படுகிறது. அக் காலத்தில் தாதியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். தாதியர் சமையலாட்களாகவும் வேலை செய்யவேண்டி இருந்தது.

 

புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டு டிசம்பரில், இலண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து புளோரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அக்காலத்தில் வறியோர் சட்டம் தொடர்பான சபையின் தலைவராக இருந்த சார்லஸ் வில்லியர்ஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக்கொண்டார். இது வறியோர் சட்டத்தில் சீர்திருத்தம் கோருவதில் அவரை ஈடுபடுத்தியதுடன், மருத்துவ வசதிகளின் வழங்கலுக்கும் அப்பால் அவரது ஈடுபாட்டை விரிவாக்கியது.

 

1846 ஆம் ஆண்டில் ஜேர்மனி பயணத்தில் கண்ட கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் கவனிப்பும் மருத்துவச் சேவையும் இவரை மிகவும் கவர்ந்தன.

 

தாதியர் சேவையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து திருமணம் தடை செய்யும் எனக் கருதி ரிச்சர்ட் மொங்க்டன் மில்ன்ஸ் எனும் அரசியல்வாதியுடனான தனது உறவை முறித்துக் கொண்டார். பின்னாளில், சிறந்த அரசியல் வாதியும், போர்ச் செயலராக்ப் பணியாற்றியவருமான சிட்னி ஹேர்பேர்ட் என்பவரை ரோமில் சந்தித்து அவர்பால் ஈர்க்கப்பட்டார். சிட்னி ஹேர்பேர்ட் ஏற்கெனவே மணமானவர். எனினும் இருவரும் வாழ்நாள் முழுதும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர்.

 

கிரீமியாவில் நைட்டிங்கேல் ஆற்றிய பணிகளுக்கும், பொதுவாக அவரது துறையில் ஆற்றிய பணிகளுக்கும், ஹேர்பேட் வசதிகள் செய்து கொடுத்ததுடன் ஊக்கமும் கொடுத்து வந்தார். புளோரன்சும் ஹேர்பேட்டின் அரசியல் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.

 

1851 ஆம் ஆண்டு 4 மாதங்கள் கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் பெற்ற பயிற்சி மூலம் தாதியியல் பால் இவரது கவனம் தீவிரமடைந்தது.

ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ், ஐக்கிய இராச்சிய மற்றும் ஒட்டோமான் பேரசுப் படைக் கூட்டணிக்குமிடையே 1854 - 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார்.

 

கிரீமியப் போரில் காயமடைந்த வீரர்களுடைய நிலைமை மோசமாக இருப்பது குறித்த அறிக்கைகள் போர் முனையில் இருந்து பிரித்தானியாவுக்குக் கசிந்தபோது புளோரன்ஸ் அது குறித்துத் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார். புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது சிற்றன்னை உட்பட அவரால் பயிற்றுவிக்கப்பட்ட 38 தாதியரும் துருக்கியில் இருந்த ஐக்கிய இராச்சியத்தின் முதன்மை முகாமிற்கு நவம்பர் 1854ம் ஆண்டு சென்றடைந்தனர்.[4] நவம்பர் தொடக்கத்தில் நைட்டிங்கேல் ஸ்கட்டாரியில் இருந்த செலிமியே முகாமுக்குச் சென்றார். அங்கே நிர்வாக அலட்சியத்தினால், போரிற் காயமுற்ற வீரர்கள் அதிக பணியால் களைத்திருந்த மருத்துவப் பணியாளரால் சரிவரக் கவனிக்கப் படாமையைக் கண்டார்கள். மருந்துத் தட்டுப்பாடும் சுகாதாரக் குறைவும் உயிராபத்து விளைவுக்கும் தொற்றுக்களும் அம்முகாமில் காணப்பட்டன. நோயாளருக்கான உணவைத் தயாரிப்பதற்கான வசதிகளும் இருக்கவில்லை.

 

புளோரன்ஸ் சூழல் தூய்மையாக இல்லாததாலேயே நோய்கள் பரவுகின்றன என்னும் கொள்கையுடையவர். அதன் சார்பில் தீவிரமாக வாதடியும் வந்தார். இதனால், புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது தாதியர் குழுவும்முகாமின் மருத்துவமனையையும், கருவிகளையும் முழுமையாகச் சுத்தப்படுத்தியதுடன், நோயாளர் கவனிப்பையும் ஒழுங்குபடுத்தினர். எனினும் இவர் காலத்தில் ஸ்கட்டாரியில், இறப்பு வீதம் குறியவில்லை. மாறாக, அதிகரித்துவந்தது. அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது அங்கேயே கூடுதலான இறப்புக்கள் நிகழ்ந்தன.

 

அவருடைய முதல் மாரிகாலத்தின்போது 4,077 வீரர்கள் அங்கே இறந்தனர். போர்க் காயங்களினால் இறந்ததிலும் 10 மடங்கு கூடுதலானோர், டைபாய்ட், வாந்திபேதி (cholera), வயிற்றோட்டம் (dysentery) ஆகிய நோய்களுக்குப் பலியாயினர். அளவுக்கதிகமான இட நெருக்கடி, குறைபாடுள்ள கழிவு வாய்க்கால்கள், காற்றோட்டம் இன்மை ஆகியவற்றால், முகாமின் தற்காலிக மருத்துவ மனை நோயாளருக்கு உயிராபத்தை விளைவித்தது. இந் நிலை காரணமாக, 1855 ஆம் ஆண்டில் ஒரு சுகாதாரக் குழு பிரித்தானிய அரசினால் ஸ்கட்டாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது புளோரன்சும் அவரது தாதியரும் வந்து 6 மாதத்துக்குப் பின்னராகும். இவர்கள் வாய்க்கால்களைச் சுத்தப்படுத்தி, காற்றோட்டத்தையும் மேம்படுத்தினர். இதனால் இறப்புவீதம் பெருமளவு குறைந்தது.

 

மருந்துத் தட்டுப்பாடும் குறையூட்டமும் அதிக பணியுமே நோயாளிகளான வீரர்களின் இறப்புக்குக் காரணமென புளோரன்ஸ் நைட்டிங்கேல் கருதினார். படைவீரரின் உடல்நிலை குறித்து அரசாணைக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் போது வாழ்க்கைத் தராதரம் மற்றும் சுகாதாரமான சூழல் கீழ்மட்டத்திலிருப்பதுவும் முக்கிய காரணமெனக் கருத ஆரம்பித்தார். இந்தப் போர் அனுபவம் அவரது பிற்கால வாழ்வில் சுகாதாரமான சூழலைப் பேணலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைப்பதில் பெரும்பங்கை வகித்தது.

பிரித்தானியாவில் இருந்த இராணுவ மற்றும் பொது மருத்துவமனைகளில் கவனிப்பையும் சூழலையும் மேம்படுத்த வேண்டுமென்று நைட்டிங்கேல் வாதாடி வந்தார். மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் (Notes on Hospitals), அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த பாடநூலாகக் கருதப்பட்ட தாதியர்பணி பற்றிய குறிப்புக்கள் (Notes on Nursing), "உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்" (Notes on Matters Affecting the Health), "பிரித்தானிய இரணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், செயல் திறனும் (Efficiency and Hospital Administration of the British Army) என்பவை நைட்டிங்கேல் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில.

போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக பிபிசியினால் கருதப்பட்டார். அவர் சற்று நாட்களில் நோய்வாய்ப்பட நேர்ந்தது. போரில் அவரது பணியின் மூலம் ஏற்பட்ட தகைவே(மனவுளைச்சல்) அதற்கான மூலகாரணியென எண்ணப்படுகிறது.

விக்டோரிய அரசியின் வேண்டுகோளை ஏற்று, படைவீரர்களின் உடல்நலன் குறித்த அரசு ஆணைக்குழுவை அமைப்பதிலும் அவ்வாணைக்குழுவிற்குத் தேவையான அறிக்கைகள் ஆயத்தப்படுத்தி வழங்குவதிலும் ஈடுபட்டார். பெண்ணாகையால் இவ்வாணைக்குழுவிற்குத் தலைமை தாங்க இவருக்கு அனுமதி இருக்கவில்லை. சிட்னி ஹேர்பேர்ட் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அறிக்கையில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் முன்னின்று செயலாற்றினார். She often referred to herself in the masculine, as for example "a man of action" and "a man of business". மேற்குறித்த ஆணைக்குழுவின் செயற்பாட்டின் மூலம் படை வீரர்களது மருத்துவ கவனிப்பு மாற்றம் பெற்றதுடன் இராணுவத்தினருக்கான மருத்துவப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது.

 

துருக்கியிலிருந்த போது நவம்பர் 29 1855 அன்று இவரது பணியினைக் கௌரவிக்கும் முகமாக நடந்த கூட்டத்தில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது. நன்கொடைகள் குவிந்தன. இந்நிதியத்தின் பணத்தில் £45000களைக் கொண்டு புனித தோமையர் மருத்துவமனையில் யூலை 9 1860 அன்று நைட்டிங்கேல் பயிற்சிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக புளோரன்ஸ் நைட்டிங்கேல் தாதியிய மற்றும் செவிலியர் பயிற்சிக்கூடம் என அறியப்படுகிறது. இவரெழுதிய தாதியியற் குறிப்புகள் என்னும் 139 பக்கங்களுடைய புத்தகம், நைட்டிங்கேல் பயிற்சிக்கூடத்திலும் ஏனைய தாதியர் பயிற்சிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக அமைந்தது. தாதியியலுக்கான ஒரு நல்ல அறிமுகமாகவும் இந்நூல் கருதப்படுகிறது.

 

தாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாக இருந்ததுடன் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன. 1869ல் எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவ கல்லூரியொன்றையும் இவர் தோற்றுவித்தார். 1882 ஆம் ஆண்டளவில் நைட்டிங்கேல் தாதியர் பரவலாகச் சேவை புரிந்தனர். புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1883 இல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருது பெற்றார். 1907 இல் ஓர்டர் ஒவ் மெரிட் எனும் விருதையும் இவர் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி இவராவார்.

 

குரோனிக் ஃபட்டீக் சின்ட்ரோம் (Chronic Fatigue Sydnrome)(அதீத களைப்பு ஏற்படல்) எனும் நோய் இவருக்கு இருந்ததாக கருதப்படுகிறது. இவரது பிறந்த நாள் இந்நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் நாளாக உள்ளது. 1896 ஆம் ஆண்டளவிலிருந்து படுத்த படுக்கையானார். 1910, ஆகஸ்ட் 13 ஆம் நாள் தனது 90 ஆம் வயதில் மிகவும் அமைதியாக தனது அறையில் மரணமெய்தினார்.Park Lane. இவர் இறந்த போது வெஸ்ட்மின்ஸ்டர் அபியில் புதைக்க அரசு முன்வந்த போதும், அவரது உறவினர்களால் அது மறுக்கப்பட்டது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உடல் ஈஸ்ட் வெலோவிலுள்ள புனித மார்கரட் தேவாலய இடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளது.

 

சிறுவயதில் கணிதத்தில் திறமையுள்ளவராயிருந்த இவர் தனது தந்தையாரின் கற்பித்தலில் அப்பாடத்தில் வல்லவாரானார். குறிப்பாகத் தரவியலில் ஆர்வமுள்ளவராக இருந்த இவர், தனது ஆய்வறிக்கைகளில் தரவியலை பெரியளவில் பயன்படுத்தினார்.

 

தரவுகளை வரைபடமாக்கி அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். பலவிதமான வரைபுகளை உருவாக்கி அவற்றின் மூலம் தரவுகளை வகைப்படுத்தி அறிக்கைகளில் பயன்படுத்தினார்.

இந்தியாவின் கிராமப்புறங்களின் சுகாதாரம் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்ட புளோரன்ஸ் நைட்டிங்கேல் சீர்திருத்தப்பட்ட மருத்துவ மற்றும் கிராம கவனிப்புச் சேவைகளை நடைமுறைப்படுத்துவதிலும் முக்கியமானவராய் இருந்தார்.

1858 இல் பதவியேற்றதன் மூல அரச தரவியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியானார்.

மருத்துவ மற்றும் தாதியியற் துறைகளிலேயே இவர் புழ் பெற்றிருந்தாலும், இங்கிலாந்தின் பெண்ணியத்தில் முக்கியமான ஒருவருமாவார்.

 

1850-1852காலப்பகுதியில் சுயபரிசோதனை, உயர்குடி மற்றும் தன் குடும்பப் பெண்களின் வாழ்க்கை பற்றி யோசித்த புளோரன்ஸ் நைட்டிங்கேல், தனது சிந்தனைகளை "சமய மெய்யியல் தேடலுடையவர்களுக்கான சிந்தனைகள்" என்ற நூலாக எழுதினார். இந்நூல் மூன்று பாகங்களுடையது. மூன்றும் சேர்த்து இந்நூல் வெளியிடப்படவில்லையாயினும் 'கசான்ட்ரா' எனும் ஒரு பகுதி ரே ஸ்ட்ரக்கி என்பவரால் 1928ம் ஆண்டு வெளியிடப்பட்டு த காஸ் (The Cause) எனும் பெண்ணிய வரலாற்று நூலில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டது.

 

கசான்ட்ரா, கல்வி கற்றிருந்த போதும் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் தாய் மற்றும் அக்கா நடத்திய சோர்வான வாழ்க்கை போன்று பெண்கள் அதீத பெண்மையால் கையாலாகாதவர்களாய்ப் ஆக்கப்படுவதைக் கண்டிக்கிறது.சமூக சேவைக்காக அவர்களது வசதியான வாழ்வை புளோரன்ஸ் நிராகரித்தார். இவ்வாக்கம் தனது யோசனைகள் மக்களால் உள்வாங்கப்படாது போய்விடுமோ என்ற புளோரன்சின் கவலையைப் பிரதிபலிக்கிறது. கசான்ட்ரா என்பவள் அப்பலோவின் பெண்பூசாரியாவாள். தெய்வீக தீர்க்கதரிசனம் பெறுபவளாயினும் இவளது எச்சரிக்கைகள் கணக்கிலெடுக்கப்படுவதில்லை.

 

பராமரிப்பு, செயலில் கவனம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை என்பவற்றைக் கடைப்பிடித்ததன் மூலம் அனைத்துத் தாதியர்க்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

தரவியல் பயன்பாட்டில் இவர் தனது காலத்தினை விட முற்போக்கான சிந்தனை மற்றும் செயற்பாடுகள் உடையவராயிருந்தார்.

நைட்டிங்கேல் தாதியர் பயிற்சிக்கூடத்தின் சேவை இன்றும் தொடர்கிறது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியகம் ஒன்று லண்டனிலும் இன்னுமொன்று இவரது வீடான கிளெய்டன் ஹவுசிலும் உள்ளன.

 

உலகத் தாதியர் தினம் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளன்று கொண்டாடப்படுகிறது.

கே எல் ஏம் (KLM) விமான நிறுவனம் தங்கள் எம் டி (MD)-11 விமானமொன்றிற்கு புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரை இட்டிருக்கிறது.

இஸ்தான்புல்லில் உள்ள மூன்று வைத்தியசாலைகள் இவர் பெயரைக் கொண்டுள்ளன.

 

ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெல்லி மருத்துவ நிலையம் (இத்தாலியின் முதல் பல்கலைக்கழகஞ் சார் மருத்துவமனை)தாதியியலில் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக தாதியருக்கு உதவும் படுக்கையருகே வைக்கும் கம்பியில்லா இணைப்புக் கொண்ட கணினியொன்றிற்கு 'பெட்சைட் புளோரன்ஸ்' (bedside Florence) எனப் பெயரிட்டுள்ளது.

புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரைத் தாங்கியுள்ள பல நிறுவனங்கள் தாதியியல் சார்ந்தவையாயினும், கனடாவிலுள்ள நைட்டிங்கேல் ஆராய்ச்சி மையம் புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு இருந்ததாக நம்பப்படும் அதீத களைப்பு ஏற்படல் நோய் (Chronic Fatigue Sydnrome) பற்றி ஆராய்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீன ஓவிய ஆர்வலர்கள் மத்தியில் பிகாசோவின் ஓவியங்களுக்கு எப்போதுமே மவுஸ் அதிகம். ‘குவர்னிகா’, ‘தி ஓல்ட் கிடாரிஸ்ட்’ என்று அவர் வரைந்த ஓவியங்கள் அனைத்தும் இன்றளவும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவை.

அந்த வகையில், அவர் 1955 ஆம் ஆண்டில் வரைந்த “உமன் ஆப் அல்ஜியர்ஸ்" என்ற ஒவியம் நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் நேற்று ஏலத்துக்கு வந்தது. 12 நிமிடங்களே நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஏலத்தின் இறுதி தொகையைக் கேள்விப்பட்ட பலருக்கு தலை சுற்றியது. காரணம், உலகில் அதிகவிலைக்கு விற்கப்பட்ட ஓவியம் இதுதான். இந்த ஓவியம் 179 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 1150 கோடி ரூபாய்) விலைபோனது.

இந்த ஓவியம் மட்டுமில்லாமல் பல உலகப்புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் மற்றும் சிற்பக்கலை வல்லுநர்களின் சிற்பங்களும் நேற்று பல மில்லியன் டாலருக்கு ஏலம் போனது.

இதற்கு முன் பிரான்சிஸ் பேக்கன் என்ற ஓவியர் தீட்டிய “திரீ ஸ்டடீஸ் ஆப் லூசியன் பிராட்" என்ற ஓவியம் 142 மில்லியன் டாலருக்கு (சுமார் 866 கோடி ரூபாய்) 2013 ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது நினைவு கூறத்தக்கது.

11214221_110754429256005_188322920594688

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கேந்திய பெருமாட்டி(சீமாட்டி) என மிகுந்த அன்புடன் அழைக்கப்பட்ட என்றுமே உலகம் மறக்காத ஃப்ளாரென்ஸ் நைட்டிங்கேல்.

11265478_110751962589585_171200403029920

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு விடிஞ்சுட்டு....காலை வணக்கங்கள்..

 

10452821_10202292973947481_3996145558094

Link to comment
Share on other sites

எனக்கும் விடிஞ்சிட்டுது..! காலை வணக்கம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புங்குடுதீவு 8 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (17 வயது) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி நேற்று பாடசாலைக்கு சென்றவர் மாலைவரை வீடு திரும்பவில்லை.

  

 

பாடசாலை சென்ற மகளை காணவில்லை என பெற்றோர் பாடசாலையில் சென்று பார்த்துடன், அயல் முழுவதிலும் விசாரித்துள்ளனர். இரவு வரை பிள்ளை வீட்டிற்கு வரவில்லை என்று ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது, பிள்ளை காதலித்த நபருடன் சென்றிருக்கலாம். பின்னர் வீட்டிற்கு வருவார் என பொலிஸார் பொறுப்பற்ற விதமாக பதிலளித்துள்ளனர்.

 

பிள்ளையை காணாது பெற்றோர் பல இடங்களில் தேடிய போதும் இன்று காலை பாடசாலைக்கு செல்லும் வழியில் உள்ள காட்டு பக்கத்தில் செருப்பு இருப்பதாக வீதியால் சென்றவர்கள் கண்டு பெற்றோருக்கு தெரியப்படுத்திய பின்னர் பிள்ளையின் பெற்றோர் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்ட போது, கால்கள் இரண்டும் அலரி மரத்தில் கட்டப்பட்ட நிலையில் சடலம் பனை ஓலையினால் மூடப்பட்டு காணப்பட்டுள்ளது. சடலத்தினை கண்ட பெற்றோர் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்திய பின்னர் ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

அதன்போது, ஊர்காவற்துறை நீதவான் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் குறித்த யுவதி 3 ற்கும் மேற்பட்ட நபர்களினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் உடம்பில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் கூறி சடலத்தினை யாழ். போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

மாணவியின் கொலைச் சம்பவத்தினை கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். அதன்போது, அந்த பகுதியில் உள்ள 3 பேர் வருகை தரவில்லை என்றும் அந்த மூவரின் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

11119796_10202973951789591_1042313770093

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10923332_776644842448627_602123563713480

எதிர்பார்த்த போது

கிடைக்காத எதுவும் அதன் பிறகு

எத்தனைமுறை கிடைததாலும்

சந்தோசம் கொடுப்பதில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்வான தருணங்கள் 

மலரட்டும் இனிமையாக...

நெகிழ்வான நேசங்கள் 

நிகழட்டும் இளமையாக... 

என் அன்பான காலை வணக்கங்கள்...

 

1459697_678083885565722_777965316_n.jpg?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15 மே 2015

குமுதினிப்படுகொலை 30ஆவது வருட நினைவுநாள் இன்று!

 

1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 30 வருடங்கள் ஆகும்.

நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

நெடுந்தீவு மக்களின் வாழ்வில் குமுதினிப்படுகொலை மறக்க முடியாதது. ஆண்டுதோறும் இந்தப் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் இனப்படுகொலை வரலாற்றில் மறக்க முடியாத வடுவாக நிலைத்துள்ள குமுதினிப்படுகொலையை நெடுந்தீவு மக்கள் மாத்திரமின்றி உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களும் நினைவுகூறுகின்றனர்.

 

Delftjetty.jpg

 

11261711_10155616783395637_2093070578565

 

11260713_10155616783405637_1285009183789

 

22119_10155616783265637_7106210252547392

 

11141272_10155616783335637_2128024828295

11226929_10155616783300637_7943993714195

 

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.