Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பு வெள்ளையில் கண்கவரும் பறவைகள்

 
வாலாட்டிக்குருவி (willie wagtail)
 
1.%2Bwillie%2Bwagtail.JPG
 
ஆஸ்திரேலிய மேக்பை (Australian magpie)
 
2.%2Baustralian%2Bmagpie.JPG
 
 
 
கருப்பு அன்னம் (black swan)
இறக்கைகளை விரிக்காதபோது.. 
 
cc3.JPG
 
கருப்பு அன்னம் (Black swan)
பறக்கும்போது  பளீரென வெளித்தெரியும் வெள்ளை இறகுகள்
 
3.%2Bblack%2Bswan.JPG
 
ஆஸ்திரேலிய கூழைக்கடா (Australian pelican)
 
4.%2B%2Baustralian%2Bpelican.JPG


 
மண்கூட்டுக் குருவி (mud lark) அல்லது
மேக்பை குருவி (magpie lark)
 
5.%2Bmagpie%2Blark.JPG
வெண்புருவம் இருப்பின் அது ஆண் குருவி
 
 
cc40.JPG
வெண்புருவமற்றது பெண்குருவி
 
 
ஆஸ்திரேலிய வெள்ளை அன்றில் (Australian white ibis)
 
6.%2Baustralian%2Bwhite%2Bibis.JPG
 
 
 
சாம்பல்வண்ண கசாப்புக்காரப்பறவை (Grey butcherbird)
 
7.%2Bgrey%2Bbutcherbird.JPG
 
 
கருப்பு வெள்ளை கரவாங் (pied currawong)
 
8.%2Bpied%2Bcurrawong.JPG
 
 
மஸ்கோவி வாத்து (muscovy duck)
அறிமுகப்படுத்தப்பட்டப் பறவையினம்
 
9.%2Bmuscovy%2Bduck.JPG
 
 
கருப்பு வெள்ளை நீர்க்காகம் (little pied cormorant) 
 
10.%2Bpied%2Bcormorant.JPG
 
 
 
ஆஸ்திரேலிய பாம்புத்தாரா (Australian darter)
 
cn32.JPG


 
சிறிய கருப்பு நீர்க்காகம் (little black cormorant)
 
re52.JPG
 
 
 
 
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை எழுதி என்ன சாதித்திருக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

DSCF3470.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு விரக்தி ஏன் யாயினி?...உங்கட பதிவுகளை வாசிப்போர் எத்தனை பேர் இருக்கிறார்கள்.தவிர உங்கட மனதில் பட்டதை,சரி எனப்பட்டதை தானே நீங்கள் எழுதுகிறீர்கள். அதில் ஏன் தயக்கம்?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, யாயினி said:

இதுவரை எழுதி என்ன சாதித்திருக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

ஏன் இங்கு யாராவது எழுதி

அதன் மூலம் எதையாவது சாதித்ததாக சொன்னார்களா பிள்ளை.

முடிந்தவரை எழுதுங்கள்

பரப்புங்கள்

தேவையானவர்கள் எடுத்துச்செல்வார்கள்

பொறுக்குபவர்கள் பொறிக்கொள்வார்கள்

நேரமிருப்பவர்கள் பதிந்து செல்வார்கள்...

தொடருங்கள்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயினின் இரண்டாவது பெரிய,ஆனால் காலாசர முக்கியம் வாய்ந்த, முற்காலத்தில்" கத்தலோனா" எண்டு அழைக்கப்பட்ட இன்றைய பார்சிலோனா நகரத்துக்கு ,உலகம் எங்கும் இருந்து உல்லாசப் பிரயாணிகளை அழைக்கும் இந்த "sagrada familia" கட்டிடம், பார்பதுக்கு "திகில்" படங்களில் பேய் வசிக்கும் இடம்போல இருந்தாலும், இது ஒரு தேவாலயம் .

1882 இல் கட்டத்தொடன்கிய இந்த " கத்தலோனா " ஸ்டைல் மொடேர்ன் தேவாலயம் 2030 இல் தான் கட்டிமுடியும் என்கிறார்கள்! இவளவு நீண்ட வருடங்கள் இந்த உலகத்தில ஒரு கட்டிடம் கட்டப்படுவது இது ஒன்றுதானாம். 

இதை வடிவமைத்த ,1852 இல் இதே பார்சிலோனா நகரத்தில், ஒரு ஏழ்மையான கத்தோலிக்க மதப பற்றுள்ள குடும்பத்தில் பிறந்த ,அந்தோனியோ கைடி ,இன்றுவரை " மொடெரன் ஆர்கிடெக்சர் " அதிசம் எண்டு அழைக்கப்படுவதால் உலகம் எங்கும் இருந்து கிளாசிகல்,மொடேர்ன் " ஆர்கிடெக்சர்" படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு மக்கா,மதினா போல இருப்பதால், வந்து ,சுற்றிப் பார்த்து ஒவ்வொரு " Catalan Modernisme " விசியதையும் ஆரவமாகப் பார்த்து, குறிப்பு எடுகின்றார்கள்! 

கைடி இதை அவரோட 35 வயதில் கட்டதொடங்க, வடிவமைத்து மட்டும் தான், இப்ப வேறு பல அர்கிடேக்சர்கள் ,தொடர்ந்து அவரோட" Neo-Gothic period பிளானை " வைத்து 2030 இல கட்டி முடிபபத்தாக உறுதி எடுத்துள்ளார்கள். 

பல ஆர்கிடெக்சர் விசியன்களில் ஆதாரமகாவே புதுமை செய்துள்ளார் கைடி , பாவனைக்கு உதவாத பிங்கான் கோப்பைகளை, பாவித்த இரும்புகள்,வேறு என்ன என்ன "ரீ -சய்கிளிங் "செய்ய முடியுமோ அவளதையும் வீண் ஆகாமல், எல்லாவற்றையும் ,அங்க,இங்க செருகி , "முப்பரிமான "கலை அம்சம் ஆக்கியுள்ளார். 

அந்தோனியோ கைடி இந்த தேவாலயத்தை வடிவமைத்து " இது கடவுளின் வாசஸ்த்தலம் " எண்டு சொன்னதால்,அவரை "கடவுளின் ஆர்கிடெக்சர்" என்கிறார்கள் ஸ்பனிஷ் மக்கள்! அப்படி சொன்னது மட்டுமல்ல இன்றுவர இந்த தேவாலயம் கட்டுவதுக்கான செலவு பார்சிலோன நகர மக்களின் பொதுப்பணம்! 

அந்தோனியோ கைடி, கலியாணமே கட்டாமல், மனதை ஒருமுகப் படுத்தி , இதை வடிவு அமைத்து இருக்கிறார் ,ஆனாலும் அவர் வாழ்ந்த விதம் கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு,தனிமையில் ,சமுகத்தில இருந்து ஒதுங்கி , நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேவாலயத்தில் பிராத்தனை பண்ணிக்கொண்டு , ஆடம்பரம் இல்லாமல் ஒரு பிச்சைகாரன் போல வாழ்ந்திருக்கிறார். 

அவரோட 72 வது வயதில் ,ஒரு சாலை விபத்தில் இறந்துபோக,யாரோ ஒரு பிச்சைகாரன் போல அவர் இருந்ததால, அலட்சியமான பார்சிலோனா மக்கள், அவர் யார் எண்டு தெரியாமல் , கவனிக்காமல் விட , அம்புலஸ் வண்டி தாமதித்து வர,அவர் சில மணித்தியாலங்களில் இறந்து போய் விட்டாராம்,அதன் பின் செய்தி கசிய, இன்ருவரை ஸ்பெயின்ல் நடந்த மிகப் பெரிய ஊர்வலம் அந்தோனியோ கைடியின் மரண ஊர்வலம் என்கிறார்கள்.

இந்த முடிவுறாத , அவரின் வாழ்நாள் வடிவமைப்பை, அவர் இரவும், பகலும் கண்ட கனவின் தொடர்ச்சியா , sagrada familia தேவாலயத்தின் முதல் நிலத்தடி தளப்பகுதியில் அவரோட பூதவுடலை அடக்கம் செய்து இருக்கிறார்கள் பார்சிலோனா மக்கள்.! 

இந்த நுர்த்ராண்டின் மிகச் சிறந்த மொடேர்ன் ஆர்கிடெக்சர், அந்தோனியோ கைடி, இறப்பதுக்கு சில வாரம் முன் ஒரு குறிப்பு ,தான் ஏன் ,எல்லாரையும் போல இல்லாமல் ,விதியாசம்கா வாழ்ந்தேன் என்று எழுதி வைத்ததை ,அவரோட கல்லறையின் அருகில் ஸ்பானிஷ்ல் எழுதி வைத்திருந்தார்கள்,.அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இப்படி தொடங்குகின்றது...".My good friends are dead; I have no family and no clients, no fortune nor anything. Now I can dedicate myself entirely to the Church......".

.நாவுக் அரசன் 
பார்சிலோனா ,இஸ்பெயின் இல் இருந்து .

 
Naavuk Arasan's photo.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13407259_1701490990103238_23011727890420

‪போராடி‬ தோற்றால்.... மரணம் கூட வெற்றிதான் 
போராடாமல் தோற்றால்.... மரணம் கூட ‪மன்னிக்காது‬.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஃப்ளோரின் [Florin] எனும் இலத்தின் மொழிச் சொல்லுக்கு மலர் என்பது பொருளாம். அந்த இலத்தின் சொல்லில் இருந்துதான் Flower என்பது உருவாகி விட்டது. 13403960_766855883456051_626288468304333

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியாளர் சே குவேரா பிறந்ததினம் இன்றாகும்.
எங்கே அநீதியைக் கண்டாலும்
உங்கள் மனம் தாங்கமுடியாமல் துடிக்கிறதா...??
அப்படியானால் நீயும் என் நண்பன்தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினி

உங்கள் கடைசி சில பதிவுகளைப் பார்த்தேன்.  இயற்கைப் படங்களும் இளையராஜாவின் பதிவுகளும் மிகவும் அருமை.  நான் இளையராஜாவின் பரம ரசிகன் அதனால் அவரைப்பற்றிய பதிவுகள் எங்கெல்லாம் வருகிறதோ மிகவும் ரசிப்பேன்.

யாழுக்கு வருவது, விரைவாக மேலோட்டமாகப் பார்ப்பது, உடனே சென்றுவிடுவது இப்படியாகவே சிலவருடங்கள் சென்றுவிட்டது.  நீண்டகால்த்தின் பின் இந்தப்பதிவை செய்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Blood-Donation-in-Nagpur1.jpg இன்று உலக குருதிக் கொடையாளர் தினம்.

world blood donor day!!

T-bloodType1-enHD-AR1.jpg

blood-groups.png

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சே குவேரா: புரட்சியின் நிறம் ஓவியக் காட்சியில்....

13174040_1096290170432369_40196190406033

 

ஓவியர் புகழேந்தி

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் கவிஞர் வாலியிடம் கேட்டார்:
ஐயா இப்போ பாடல்கள் எல்லாம் எப்படியிருக்கு ?

வாலி கூறினார்:
முன்னேல்லாம் படத்துக்கு
இருபதுப் பாட்டுனங்கா
பத்துப் பாட்டுனங்கா
எட்டுப் பாட்டுனங்கா

இப்போ நிப்பாட்டு நிப்பாட்டுகுறங்க...:)

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகரும்,பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் தமிழீழ விடுதலைக்காகவும்,தமிழ்த் தேசிய அரசியலுக்காகவும் தீவிரமாகக் களமிறங்கிப் பணியாற்றினார்.விடுதலைப் புலிகளை ஆதரிப்பதிலும்,தமிழீழத்தை ஆதரிப்பதிலும் முன்னணியிலிருந்தார்.தம்முடைய இறுதி மூச்சு வரையில் ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்தார்.உலகத் தமிழர்களின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரியவராக விளங்கினார்.

இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து,பல வெற்றிப் படங்களை இயக்கி, வெற்றிக் கண்டதோடு மட்டுமல்லாமல், ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், மணிவண்ணன் அவர்கள். ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அவர், தனது 50-வது திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கிமுடித்து, அதன் இசையையும் வெளியிட்டுள்ளார். இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்த அவர், ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, மற்றும் ‘ஆகாய கங்கை’ போன்ற திரைப்படங்களுக்குக் கதாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 1982ல், தமிழ்த் திரையுலகில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர், ’24 மணி நேரம்’, ‘நூறாவது நாள்’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சின்ன தம்பி பெரிய தம்பி’, ‘தெற்குத் தெரு மச்சான்’, ‘அமைதிப்படை’ போன்ற வெற்றிப் படங்களைத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிசாக்கியவர். அத்தகைய சிறப்புமிக்க இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன்.

மணிவன்னான் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘மணிவண்ணன் ராஜகோபால்’. அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

மணிவண்ணன் அவர்களது தாயார் ஒரு பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது தந்தை ஒரு அரிசி வியாபாரியாகவும், ஜவுளி வர்த்தகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தனர். மேலும், அவருடைய குடும்பத்தில் ஒரே மகன் என்பதாலும், வீட்டில் அவருக்குச் செல்லம் அதிகமாகவே இருந்தது. இதனால் அவருக்குப் படிப்பில் அதிகளவு நாட்டம் செல்லவில்லை. இருப்பினும், கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.யூ.சி வரை படித்த அவர், பலருடன் நட்பாக இருந்தார். அப்பொழுது அவருக்கு அறிமுகமானவரே, சத்யராஜ் அவர்கள். கல்லூரியில் படிக்கும் போது, பல மேடை நாடகங்களால் ஈர்க்கப்பட்ட அவர், சில நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

திரையுலகப் பிரவேசம்

பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தால் பெரிதும் கவரப்பட்ட மணிவண்ணன் அவர்கள், 1௦௦ பக்கம் ரசிகர் மின்னஞ்சல் ஒன்றை பாரதிராஜாவிற்கு அனுப்பினார். அவரது உள்ளார்வமிக்கத் தாக்கத்தை உணர்ந்த பாரதிராஜா அவர்கள், அவரை சந்திக்க விரும்பியதால், சென்னை சென்றார், மணிவண்ணன். மேலும், 1979ல் பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கும் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார். ‘நிழல்கள்’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஆகாய கங்கை’, ‘லாட்டரி டிக்கெட்’, ‘நேசம்’ போன்ற படங்களுக்குக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்திருக்கிறார். ‘புதிய வார்ப்புகள்’, ‘கொத்த ஜீவிதாலு’ (தெலுங்கு), ‘கிழக்கே போகும் ரயில்’ (தெலுங்கு), ‘ரெட் ரோஸ்’ (ஹிந்தி) மற்றும் ‘லவ்வர்ஸ்’ (இந்தி) போன்ற படங்களில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர், பாரதிராஜாவின் ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.

திரையுலக வாழ்க்கை

1982ல் வெளியான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படமாகும். அதைத் தொடர்ந்து, ‘ஜோதி’ (1983), ‘வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்’ (1983), ‘இளமைக் காலங்கள்’ (1983), ‘குவாகுவா வாத்துக்கள்’ (1984), ‘ஜனவரி ஒன்னு’ (1984), ‘இங்கேயும் ஒரு கங்கை’ (1984), ‘இருபத்தி நாலு மணிநேரம்’ (1984), ‘நூறாவது நாள்’ (1984), ‘அன்பின் முகவரி’ (1985), ‘விடிஞ்சா கல்யாணம்’ (1986), ‘பாலைவன ரோஜாக்கள்’ (1986), ‘முதல் வசந்தம்’ (1986), ‘இனி ஒரு சுதந்திரம்’ (1987), ‘தீர்த்தக் கரையினிலே’ (1987), ‘புயல் படும் பாட்டு’ (1987), ‘கல்யான் கச்சேரி’ (1987), ‘ஜல்லிக்கட்டு’ (1987), ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ (1987), ‘கணம் கோர்ட்டார் அவர்களே’ (1988), ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ (1988), ‘மனிதன் மாறிவிட்டான்’, (1989), ‘வாழ்க்கை சக்கரம்’ (1990), ‘சந்தனக்காற்று’ (1990), ‘புது மனிதன்’ (1991), ‘தெற்குத் தெரு மச்சான்’ (1992), ‘கவர்மென்ட் மாப்பிள்ளை’ (1992), ‘மூன்றாவது கண்’ (1993), ‘அமைதிப்படை’ (1994), ‘வீரப்பதக்கம்’ (1994), ‘ராசாமகன்’ (1994), ‘தோழர் பாண்டியன்’ (1994), ‘கங்கை கரை பாட்டு’ (1995), ‘ஆண்டான் அடிமை’ (2001), ‘நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ’ (2013) என ஐம்பது திரைப்படங்கள் இயக்கியுள்ளார். தற்போது, தனது 50-வது திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கிமுடித்து, அதன் இசையையும் வெளியிட்டுள்ளார்.

நடிகராக மணிவண்ணன் ஒரு உதவி இயக்குனராக தமிழ்த் திரையுலகில் நுழைந்த மணிவண்ணன், பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’ என்ற படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். அக்கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால், தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ படத்தில் நடித்த கதாபாத்திரம் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றதால், அவர் ‘கோகுலத்தில் சீதை’, ‘காதல் கோட்டை’, ‘அவ்வை சண்முகி’, ‘காதலுக்கு மரியாதை’, ‘ஜீன்ஸ்’, ‘பொற்காலம்’, ‘சங்கமம்’, ‘படையப்பா’, ‘முதல்வன்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘முகவரி’, ‘ரிதம்’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘டும் டும் டும்’, ‘காசி’, ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசீகரா’, ‘மஜா’, ‘சம்திங் சம்திங்… உனக்கும் எனக்கும்’, ‘ஆதி’, ‘சீனா தானா’, ‘சிவாஜி’, ‘குருவி’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தில்லாலங்கடி’, ‘வேலாயுதம்’ போன்ற பல்வேறு படங்களில் தனக்கென உரித்தான பாணியில் வசனங்களை சர்வசாதாரணமாக அவரது சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தி, அவர் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமின்றி மிகப்பெரிய நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். அவர், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.

இல்லற வாழ்க்கை

மணிவண்ணன் அவர்கள், செங்கமலம் என்பவரை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர். அவரது மகனும் ஒரு நடிகரென்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் வாழ்க்கை

மணிவண்ணன் அவர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்தார். மேலும், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.

இறப்பு

இயக்குனராகத் தனது 50 வது படத்தை இயக்கி, அப்படத்தை வெளியிட்ட மணிவண்ணன் அவர்கள், தனது 58வது வயதில் மாரடைப்பால் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில் காலமானார். அவரது விருப்பப்படி,அவரது உடல் தமிழ் ஈழக் கொடியால் மூடப்பட்டது.

காலவரிசை

1954: தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார்.

1979: பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கம் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.

1989: ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.

1982: ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படமாகும்.

1994: அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

2006: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்த அவர், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில்,அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.

பல இயக்குநர்களையும், நடிகர்களையும் உருவாக்கியவர்.கட்சி பேதங்களை தாண்டி தன் நடிப்பாலும்,இயக்கத்தாலும்,அரசியற்செயற்பாட்டாலும் அனைவராலும் மதிக்கப்பட்ட தமிழ் உணர்வாளரான திரு.மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம்.Sivaranjan Eelamranjan Thanabalasingham's photo.

 
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக காற்று தினம் (World Wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது. Zuidwester%20-%20RWE%20Innogy%20-%20cred

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16 June 2016

பூமராங்கும் டிஜிரிடூவும்

 
 
 
 
 
 
boom2.JPG
படம் 1
 
பூமராங் என்றதுமே பலருக்கும் ஆஸ்திரேலியாவின் நினைவு வந்துவிடும். ஆஸ்திரேலியாவின் கலாச்சார பாரம்பரிய அடையாளங்களுள் பூமராங்குக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. பண்டைக்காலத்தில் ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்கள் வேட்டையாடப் பயன்படுத்திய மரக்கருவிதான் பூமராங் (boomerang).  இன்று உலகமுழுவதும் பல நாடுகளில் விளையாட்டுப்பொருளாய்ப் பயன்படுத்தப்படும் பூமராங்கின் பிறப்பிடம் ஆஸ்திரேலியாதான் என்று நம்புவதற்கான ஆதாரங்கள் பலவும் கிடைத்துள்ளன.  ஆஸ்திரேலியாவின் மிகப் பழமைவாய்ந்த கிம்பர்லி பிரதேச பாறை ஓவியங்களில் கங்காரு போன்ற விலங்குகளை இந்த பூமராங் கொண்டு தாக்குவது போன்ற காட்சிகள் காணக்கிடைத்துள்ளன. அப்பாறை ஓவியங்களின் வயது இருபதாயிரம் வருடங்களுக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
boo1.jpg
படம் 2
கூட்டல் வடிவ பூமராங்
 
ஆதிகாலத்தில் விலங்குகளின் எலும்பால் தயாரிக்கப்பட்ட பூமராங்குகள்பிறகு மரத்தால் தயாரிக்கப்பட்டனகருப்புவாட்டில் மரம் மற்றும் குறிப்பிட்ட சில யூகலிப்டஸ் மரங்களின் நல்ல வைரம்பாய்ந்த மரங்களின் உறுதியான வேர்ப்பகுதிகள்பருத்த கிளைகள் அல்லது அடிமரத்தண்டுகள் போன்றவற்றிலிருந்துதான் பூர்வகுடிகளின் பாரம்பரிய பூமராங்குகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இன்றுபிளைவுட்பிளாஸ்டிக் போன்ற பொருட்களாலும் பூமராங்குகள்தயாரிக்கப்படுகின்றனபூமராங்குகள் பல வடிவங்களில் பல அளவுகளில் காணப்படுகின்றனபூமராங் என்றாலேஎறிந்தவரிடம் திரும்பிவந்துவிடும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டுஆனால் எல்லா பூமராங்குகளும் எறிந்தவரிடம்திரும்புவதில்லை.

 
 
boo%2B5.jpg
படம் 3
 
பூர்வகுடி பூமராங்குகளில் மூன்று வகை உண்டுகங்காரு போன்ற விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டது ஒருவகைஇலக்கைத் தாக்குவது மட்டுமே அதன் வேலைமிக லேசான வளைவுடனும் மழுங்கிய முனைகளுடனும் இருக்கும்அது எறிந்தவரிடம் திரும்பிவருவதில்லைஇரண்டாவது சற்று அதிகமாக வளைந்து ‘V’ வடிவத்தில் மழுங்கியமுனைகளுடன் இருக்கும்பூமராங் என்றதுமே நம் நினைவுக்கு வருவதும் இதுதான்இது இலக்கைத் தாக்கி எறிந்தவரிடமேதிரும்பிவரக்கூடியதுஇது பறவைகளைத் தாக்கப் பயன்பட்டதுமூன்றாவது கூட்டல் வடிவத்தில் இருக்கும். சிலவற்றின் முனைகள் மிகவும் கூராக இருக்கும்இது எதிரிகளைத் தாக்கப் பயன்பட்டதுபூர்வகுடியினர் பயன்படுத்தியபூமராங்குகளில் பூர்வகுடியினரின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளனஇன்று தயாரிக்கப்படும் நாகரிக மற்றும் அலங்காரபூமராங்குகளிலும் பூர்வகுடி ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டு அசலைப்போன்ற மாயையை உருவாக்கி விற்பனையில் சாதனைபடைக்கின்றன.
 
 
P1700025%25E0%25AE%2585.JPG
படம் 4
 
 
ஆஸ்திரேலிய பூர்வகுடி கலாச்சாரத்தைப் பறைசாற்றும் மற்றொரு அடையாளம்  டிஜிரிடூ  (Didgeridoo) னப்படும்இசைக்கருவிடிஜிரிடூ ஒரு காற்றூது கருவிஆஸ்திரேலிய பூர்வகுடிகளுடைய பாரம்பரிய இசைக்கருவிகிட்டத்தட்ட 1500 ஆண்டுகளாக மக்களின் புழக்கத்தில் இவ்விசைக்கருவி இருப்பதோடு இன்று உலகின் பல நாடுகளிலும் அறிமுகமாகிஇசைக்கப்படுகிறது என்பது வியப்புடிஜிரிடூவின் குறைந்தபட்ச நீளம் மூன்று அடிஅதிகபட்ச நீளம் பத்து அடிபாரம்பரியவிழாக்களின்போது இசைக்கப்படும் இக்கருவியை பூர்வகுடியைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே இசைப்பது வழக்கம்.  இந்தக்கருவியைக் குறிப்பிடப் பயன்படும் didgeridoo என்ற வார்த்தையோ அதற்கு நிகரான வார்த்தையோ எந்த பூர்வகுடிமொழியிலும் கிடையாது என்பது வேடிக்கைஏனெனில் இது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தைபூர்வகுடிமொழிகளில் இதற்கு வெவ்வேறு பெயர்கள் உண்டுஅவற்றுள் சில – mako, liddung, ngorla, morlo, wuyimbarl, ngunebobanja, mudburuja, morle, yirdaki, yigi yigi போன்றவை.

 
 
did1.jpg
படம் 5
டிஜிரிடூவில் வாய்வைத்து ஊதும் பகுதி
 
யூகலிப்டஸ் மரத்தண்டிலிருந்தும் கிளைகளிலிருந்தும் இக்கருவிகள் தயாரிக்கப்படுகின்றனஇதற்கான மரத்தைத்தேர்ந்தெடுப்பது ஒரு கலைமரம் உயிரோடும் இருக்கவேண்டும் கரையான் அரித்து உள்ளே கூடாகவும் இருக்கவேண்டும்ஏன் கரையான் அரித்த மரமாக இருக்கவேண்டும்கரையான்கள் அரித்திருப்பதால் உள்ளே ஏற்பட்டிருக்கும்காற்றறைகள்தாம் டிஜிரிடூவில் சரியான இசையை எழுப்ப உதவுகின்றனஅதனால் அப்படிப்பட்ட மரத்தைத் தேர்ந்தெடுத்துகூரான கல் ஆயுதங்களைப் பயன்படுத்திசரியான அளவுக்கு வெட்டி பட்டைகளை அகற்றி உள்ளே சுத்தம் செய்துஉபயோகிக்கிறார்கள்டிஜிரிடூவின் மீது மிருகக்கொழுப்பு அல்லது எண்ணெய் தடவப்பட்டு நெருப்பில் வாட்டப்பட்டுமெருகேற்றப்படுகிறதுடிஜிரிடூவில் வாய் வைத்து ஊதும் பக்கம் உதடுகளில் உறுத்தாமல் இருக்கவும் ஊதும் காற்றுவெளியேறாமல் இருக்கவும் தேன்மெழுகு தடவப்படுகிறதுடிஜிரிடூ நேராகவும் இருக்கலாம் கோணல்மாணலாக வளைந்தும்இருக்கலாம்எப்படி இருக்கிறதென்பது பிரச்சனையில்லை.. அதிலிருந்து வெளிப்படும் கணீரென்ற இசையே பிரதானம்.
 
 
P1720852.JPG
படம் 6
 
உடல்சிலிர்க்க வைக்கும் டிஜிரிடூ இசையைக் கேட்க ஆவலா.. கீழிருக்கும் சுட்டிகளில் டிஜிரிடூ இசைக்கருவியின் செய்முறையையும், வாசிக்கும் விதத்தையும் பூர்வகுடியைச் சார்ந்த பிரபல டிஜிரிடூ இசைக்கலைஞர் டேவிட் ஹட்சன் விளக்குவதைப் பார்க்கமுடியும். தாங்கள் வாழும் சூழல் சார்ந்த பறவை விலங்குகளின் ஒலியை எவ்வளவு அழகாக இசைக்கிறார் இந்த இசைக்கருவியில்!

 
 
 
மற்ற காற்றூது கருவிகளை இசைப்பதற்கும் டிஜிரிடுவை இசைப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைக்கும்போது ஊதுகுழல் ஊதுபவரின் வாய்க்குள் இருக்கும். புல்லாங்குழல் போன்றவற்றில் துளையின் மீது வாயை வைத்து ஊதுவர். ஆனால் இந்த டிஜிரிடுவை இசைக்கையில் வாய் முற்றிலுமாய் இசைக்கருவியின் ஊதுதுவாரத்துக்குள் இருக்கும். மூச்சினை உள்ளிழுத்து நிறுத்தி  ப்ப்ப்ர்ர்ர்ர்… என்று வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுடன் வெளியேற்றுவதன் மூலம் இசை வெளிப்படுகிறது.  
 
இக்காலத்தில் டிஜிரிடூக்களைத் தயாரிக்க கருவிகள் வந்துவிட்டனஅதோடு கரையான் அரித்த மரங்களின்அவசியமற்றுப்போய் அலுமினியம் போன்ற உலோகங்கள்யூகலிப்டஸ் அல்லாத வேறு மரங்கள்மூங்கில்ப்ளாஸ்டிக்மண்போன்ற பல்வேறு பொருட்களாலும் உலோகங்களாலும் டிஜிரிடூக்கள் தயாரிக்கப்படுகின்றன
 
 
வைரம்பாய்ந்த மரக்கட்டைகளிலிருந்து வேட்டைக்கான ஆயுதங்களையும் கரையான் அரித்த மரக்கட்டைகளிலிருந்துஇசைக்கருவியையும் தயாரித்துப் பயன்படுத்திய பூர்வகுடி மக்களின் வாழ்வியல் ரசனை மிகவும் வியக்கவைக்கிறதல்லவா?

 
&&&&&
 
(படம் 4,6 தவிர ஏனையவை இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை)
 
geethanjali.blog.spot
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் யாயினி...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வப்போது இந்தப் பக்கத்தையும் புரட்டி விட்டுப் செல்பவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

untitled.jpeg

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சகோதரி...! இயக்குனர்  மணிவண்ணன், மற்றும் ஆதிவாசிகளின் இசைக் கருவிகள் எல்லாம் நல்ல செய்திகளாக இருக்கின்றன....!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

தொடருங்கள் சகோதரி...! இயக்குனர்  மணிவண்ணன், மற்றும் ஆதிவாசிகளின் இசைக் கருவிகள் எல்லாம் நல்ல செய்திகளாக இருக்கின்றன....!!

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுவியண்ணா.அவ்வப்போது ஒரு சிலராவது  வந்து டாப்பு பதிவதனால் தான் இந்தப் பக்கத்தை கொஞ்சமாவது இழுத்துக் கொண்டு போகிறேன்....இல்லையே இழுத்து மூடப்பண்ணிட்டு ஓடிடுவன்..ஆதிவாசிகளிகள் பற்றிய தொகுப்பு ஏற்கனவே புங்கையண்ணாவும் யாழுக்குள் எழுதிப் பதிந்ததாக நினைவிருக்கிறது...தப்பாக இருந்தால் புங்கையண்ணா அடிக்க வராதீங்கோ..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, யாயினி said:

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுவியண்ணா.அவ்வப்போது ஒரு சிலராவது  வந்து டாப்பு பதிவதனால் தான் இந்தப் பக்கத்தை கொஞ்சமாவது இழுத்துக் கொண்டு போகிறேன்....இல்லையே இழுத்து மூடப்பண்ணிட்டு ஓடிடுவன்..ஆதிவாசிகளிகள் பற்றிய தொகுப்பு ஏற்கனவே புங்கையண்ணாவும் யாழுக்குள் எழுதிப் பதிந்ததாக நினைவிருக்கிறது...தப்பாக இருந்தால் புங்கையண்ணா அடிக்க வராதீங்கோ..:)

உங்களின் பக்கத்தை இங்கு வரும் எல்லோரும் பார்க்கின்றார்கள் ஆனால் கருத்திடத்தான் கொஞ்சம் பஞ்சி தட்ஸ் ஆல்....! நீங்கள் தொடருங்கள்...!!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.