Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணற்ற ஞாபகங்கள், எண்ணில் அடங்கா அனுபவங்கள் என பலதும் பத்துமாய் நினைவைகளை கடந்து சென்ற வருடம் அள்ளி தந்து போய் இருக்கிறது.

 

 

 

கடந்த பக்கங்கள்⬅️

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்
- நா. முத்துக்குமார்

 

 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

02.01.2021

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக் கொண்டு

தும்பார் “திருமேனித் தும்பிக்கை யான்” பாதம்

தப்பாமற் சார்வார் தமக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதும் இல்ல
எப்போதும் இல்ல-இவ்வார கல்கிக்காக ரஜினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டு அர்ச்சகர்களின் ஆடையின் நிறம் பேர்ப்பிள்.இது கனடா கொரோனா பேர்ப்பிளைக் கண்டால் ஓடிடுமோ என்னமோ.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் மாறிய உறவுகள்

story_mother_baby_620x380.jpg

நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வாசுகியை, ஒலிப் பெட்டியில் இருந்து வந்த  பைலட்டின் குரல்  தட்டியெழுப்பியது.  இன்னும் ஒரு மணி நேரத்தில் சியாட்டில் டோகோமோ ஏர்போர்ட்டை அடையப் போவதாக அவர் அறிவித்தார். வாசுகி தன் பக்கத்தில் இருந்த கணவன் மனோகரைத் தட்டியெழுப்பி. 

“மாமா,  இன்னும்  ஒரு மணி நேரத்துல  லேண்ட் ஆகும் போல இருக்கு.  நீங்க டாய்லெட் போகணும்னா போயிட்டு வாங்க”

“ஐ அம் ஃபைன், நீ போகணுமா?” 

“இல்ல மாமா,  இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்”  என்று அவள் சொல்லும் பொழுதே , மனோகர் மீண்டும் தூங்கச் சென்றதைப் பார்த்தாள் . மனோகர் அவளுடைய தாய்மாமனும் கூட. அறுபது வயதைக் கடந்த இந்த இணையர்களுக்கு  மூன்று  பிள்ளைகள் 

முதல் பையன், பிரபு மைக்ரோசாஃப்ட்டில்  ஆர்க்கிடெக்ட். அவனது வீட்டிற்குத்தான் இவர்கள் போகிறார்கள்.  இரண்டாவது பெண்  அனிதா. அவளது கணவன் மற்றும் குழந்தையுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் செட்டிலாகி விட்டாள். மூன்றாவது பையன் கிரிஸ் என்கிற கிருஷ்ணமூர்த்தி .   நியூயார்கில்  வேலைப்  பார்க்கிறான். இன்னும் சில மணி நேரங்களில், பசங்களைப் பார்க்கப்போகும் சந்தோசம், அவள் கண்களில்  நன்றாகத் தெரிந்தது. 

அவள் மனதில் “ஏர்போர்ட்டில  அனிதாவும், பிரபுவும் பசங்களோட வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க . அனிதா அவங்க ஊர்லேயிருந்து டிரைவ் பண்ணிக்கிட்டு வரேன்னு சொன்னாள். இவங்களை  நேராகப்  பார்த்து கிட்டத்தட்ட ஆறு வருஷம் ஆகிவிட்டது.  கிரிஸ் வந்து இருக்கமாட்டான்.” அவனைப்  பற்றி நினைத்ததும், அவளது கண்களில் மளமளவெனக் கண்ணீர் கொட்டியது.

கண்ணீரைத் துடைத்துவிட்டு “மாமா, டாய்லெட்டுக்குப் போகணும்,  எழுந்துக்கிறீங்களா?” 

 திடீரென்று மீண்டும் எழுப்பியதால், மனோகருக்கு  ஒன்றும் புரியவில்லை.

“இப்பதான் போக வேண்டாம்னு சொன்னே?”

“இப்ப போகணும் போல இருக்கு, மாமா.”

மனோகர் எழுந்து நின்று, அவளுக்கு வழி விட்டார். அவள் நடந்து செல்லும் பொழுது, சகப் பயணிகளை நோட்டமிடடாள். 

வீடியோ கேம்ஸில்  மூழ்கியிருந்த சிறுவர்கள்,  பல நாள் விட்ட தூக்கத்தை விமானத்தில் பிடிக்க நினைக்கும் அம்மாக்கள், ஏன் குழந்தை அழுகிறது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் அப்பாக்கள், ஆங்காங்கே கருப்பு முடிக்கு நடுவில் சில வெள்ளை முடியிருப்பது போல சில வெள்ளைக் காரர்கள், ஏசியன் வெஜிடேரியன் ஆர்டர் சொதப்பியதால், வீட்டிலிருந்து கொண்டு வந்த வறட்டு சப்பாத்தியை சாப்பிடும்  பெரிசுகள், கணவனின் தோளில் தலை சாய்த்து தூங்கும் இளம் பெண்கள், இதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் வரிசையாக ஒரு படம் கூட விடாமல் பார்க்கும் நடுத்தர வயதினர் என பல ரக மக்களை சுமந்துக் கொண்டு சற்று தள்ளாடியபடியே விமானம் போய் கொண்டிருந்ததைக்  கவனித்தாள்.

 அவள் முகத்தைக் கழுவி விட்டு, சூடாக ஒரு காபியும் எடுத்துக் கொண்டு  தன் இருக்கைக்குத் திரும்பினாள். மனோகர் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்ற வேதியியல் ஆசிரியர். இது அவர்களின்  முதல் அமெரிக்கப் பயணம்.

தூங்கிக்கொண்டிருந்த மனோகரை  ஆசையாக பார்த்தப்படியே அவளது மனதிற்குள்  ” கிட்டத்தட்ட மனுஷன்  35 வருஷ வாழ்க்கையை  டீச்சிங்,  டியூஷன்னு  எங்களுக்காகவே அர்ப்பணித்தார்.   இந்தப் பசங்களப் பார்க்கணும்னு மாமாவுக்கு ரொம்ப ஆசை! இந்த கிரிஸ் கிறுக்குப் பயலாலே  அமெரிக்கா   வருவதற்கே எங்களுக்கு  பிடிக்கல.  அனிதா மேல மாமாவுக்கு பாசம் அதிகம்.  அவளது முதல் குழந்தையோட ஒரு வருட  பிறந்தநாள் அடுத்த மாசம் வருது.  அப்பாவை எப்படியோ பேசி வர  வச்சுட்டா.” என்று நினைத்து பெருமூச்சு விட்டாள். 

மேலும் தன் எண்ணங்களைத் தொடர்ந்தாள்.

 “சில பேர் இத சொல்லி நான் கேட்டிருக்கேன்.  அம்மாவுக்குத் தாய்மை என்கின்ற பட்டத்தை முதலில் கொடுத்த முதல் குழந்தை மேல் எப்போழுதுமே ஒரு  தனி பாசம் இருக்கும்.  அப்பாக்களுக்குத் தான் இன்னும் ஒரு  ஆண்மகன்தான் எனச்  சொல்ல வைத்த  கடைசி குழந்தை மேல ஒரு தனி அட்டாச்மென்ட் இருக்குமுன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.   கிரிஸ் மேல மாமாவுக்கு ஒரு தனி அக்கறை இருந்துச்சு. இந்தப் பாவிப்பய எல்லாத்தையும் போட்டு உடைச்சுட்டானே! ”  என்று மிக வருத்தமாக அவள் நினைக்கும் பொழுது, திடீரென்று மனோகர் கண்களைத்திறந்து 

“நீ என்ன  கூப்பிட்டியா?”  எனக்  கேட்டார்.

“இல்ல மாமா”

“நான்  எழுந்ததும்  ஒரு விதத்தில நல்லதுக்குதான்.  இம்மிகிரேஷன்  அண்ட்  கஸ்டம்ஸ்  பார்ம்ஸ் இன்னும் முடிக்கல”  என்று சொல்லிவிட்டு  கட்டங்களை நிரப்ப ஆரம்பித்தார்.   கிட்டத்தட்ட அரைமணி நேரத்தில்,  விமானம் தரையிறங்கியது.   செல்போனில் “டிங்” என்று ஒரு சிறிய சப்தம்.  போனை அன்லாக் செய்து பார்த்தால் ” வெல்கம் டு யூ.ஸ்.ஏ.. நாங்கள் பேக்கேஜ் ஏரியாவில் காத்திருக்கிறோம்”  என்று பிரபுவிடம் இருந்து ‘ஃபேமிலி ‘வாட்ஸ்அப்’   குரூப்பு’க்கு ஒரு மெசேஜ்.  உடனே அவர் ஒரு ‘ஸ்மைலி’யை போட்டு  ” சீ யூ சூன்”   என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார்.  

‘வாட்ஸ்அப்’   இன்றைய இயந்திரக் காலக்கட்டத்தில் குடும்ப உறவுகளை இணைக்கும் ஒரு அதிசய செயலி என்றால் மிகையாகாது!!. முன்பெல்லாம் வெளி ஊர்களில்  வசிக்கும்  பசங்களுக்கு மாதத்தில் இரண்டு முறைக்  கூட சொந்தங்களுடன்  பேச நேரமிருப்பதில்லை. ‘வாட்ஸ்அப்’   வந்தபிறகு “பேமிலி குரூப்” அம்மாக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.  பல அம்மாக்கள் பசங்க  பேசறாங்களான்னு  கவலைப்படுவதில்லை. பத்து தடவை  அம்மா மெசேஜ் போட்டா, பசங்களும் ரெண்டு தடவையாவது கால் பண்ணி பேச வேண்டியிருக்கு. பசங்க படிச்சாங்களான்னு பார்க்கவும் முடியுது. அதனால ‘வாட்ஸ்அப்’  அம்மாக்களுக்கு கிடைச்ச “அஸ்திரம்” என்றே சொல்லலாம்!

கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்தில் எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து,  பிரபுவின் வீட்டை அடைந்தனர். ஒரு மாதம் வேகமாக ஓடி விட்டது.  அனிதா வீட்டிற்குச் செல்ல மனோகரனும்,  வாசுகியும் ரெடியாக இருந்தனர்.

“டேய் பிரபு,  கிரிஸ் அவங்க வீட்டுக்கு வரமாட்டான் தானே? ” 

“அப்பா,  எத்தனை தடவை சொல்றது.  நான் அவனோட காண்டக்ட்ல இல்லை.  அனிதாகிட்ட  பத்து தடவையாவது ஃபோன் பண்ணிக் கேட்டிருப்பேன். அவள் பாப்பா ‘பார்ட்டி’க்கு கிரிஸ்  வர மாட்டான்னுதான் சொன்னாள்.”

அதைக் கேட்ட வாசுகி ” நீ காண்டக்ட்ல இல்லைன்னு தெரியும்.  சின்ன வயசுலிருந்தே, அவனுக்கு எல்லாமே அக்கா தான்.  எனக்கு என்னமோ அவங்க  ஏதோ ஒரு குளறுபடி பண்ணுவாங்கன்னு தோணுது”

“அம்மா,  இதுக்கு மேல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.   மூணு மணி நேரத்துல உங்க ஃபிளைட். வாங்க கிளம்பலாம். என் பொண்ணு ஸ்கூல்ல பெரிய ஈவென்ட். அதனால நாங்க வர முடியாது.  அடுத்த மாசம் வந்து நாங்கள் அவர்களைப்  பார்க்கறோம்னு சொல்லு”  எனச் சொல்லி முடித்து அவர்களுடன்  ஏர்போர்ட்டிற்குச் செல்லத் தயாரானான்.

***

ன்று புதன்கிழமை.  அனிதாவின் குழந்தையின் முதல் வருடப் பிறந்த நாள் விழா முடிந்து மூன்று நாட்கள் ஓடி விட்டது.  அனிதா அம்மா அப்பாவின் பெட்ரூம் கதவை மெதுவாகத்  தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள். 

“அம்மா தூங்கறீங்களா?

“இல்லம்மா, சும்மாதான் படுத்துகிட்டு  இருக்கோம்”

“உங்களைப்  பார்க்க  ஒரு ஃபேமிலி வந்திருக்காங்க, ஹாலுக்கு  வரீங்களா?”

சிறிது நேரத்தில் மனோகரும், வாசுகியும் ஹாலுக்கு வந்தனர்.

அங்கே ஹாலில் கிரீஸும் இன்னொரு  வாலிபனும் உட்கார்ந்து இருந்தனர்.   அந்த வாலிபன் நீலக் கலர் போலோ டி-ஷர்ட்டும்,  வெள்ளை நிற கதர் வேட்டியும் அணிந்திருந்தான்.  நெற்றியில்  பளிச்சென்று திருநீறு.  சற்று தூக்கியவாறு ஹேர் ஸ்டைல். மாநிறம், ஒல்லியான உடலமைப்பு.

“எனக்குத்  தெரியும்,  நீ இப்படி பண்ணுவேன்னு.  எங்களுக்குத்தான் அவங்களைப்   பார்க்கவே  பிடிக்கலைன்னு சொன்னேன்ல. ”  என்று கண்களில் கண்ணீரோடு வாசுகி கேட்டாள்.

“அனிதா,  எம்மா எங்களைக்  கஷ்டப்படுத்துற? நான் யாரை எங்க வாழ்க்கையில திரும்பவும் பார்க்கவே கூடாதுன்னு நினைத்தோமோ, அவங்களை கூட்டிட்டு வந்திருக்கே” என்று மனோகரன் சொல்லிவிட்டு,  சட்டென்று திரும்பி வாசுகியின் கையை பிடித்துக்கொண்டு அவரது ரூமிற்கு சென்று கதவை மூடிக்கொண்டார். 

 அனிதாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.    அப்பா, அம்மா ரூமிற்குச் சென்று அவர்களைச் சமாதானப்படுத்துவதா, இல்லை அவர்கள்  அவமானப்படுத்திய தம்பியின் ஃபேமிலியிடம் மன்னிப்புக்  கேட்பதா என்று ஒன்றும் புரியவில்லை.

அனிதா முதலில் வீட்டுக்கு வந்த விருந்தினரைச் சமாளிப்போம் என்று நினைத்து ” எக்ஸ்ட்ரீம்லி சாரி, கார்த்திகேயன்.  சாரிடா கிரிஸ். இவ்வளவு  வயலண்ட்டா   ரியாக்ட்  பண்ணுவாங்கன்னு நான் எதிர்பார்க்கல! ரியலி சாரி” என்று சொல்லி மிகவும் வேதனைப்பட்டாள்.

 அதற்கு கார்த்திகேயன் ” டேக் இட் ஈசி அக்கா.  இதை நாங்கள் எதிர்பார்த்தோம்.  அட்லீஸ்ட் கிரிஸ் நீண்ட காலத்திற்குப் பிறகு அவங்க அப்பா அம்மாவை  நேரில பார்த்ததுல ஒரு சின்ன  சந்தோஷம் ”  

அதைக் கேட்டதும், கிரிஸ்  கண்களில் கண்ணீர். அவனுக்குப்  பேச்சு வரவில்லை.  சிறிது

தண்ணீர் கேட்டு குடித்துவிட்டு, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

“அனிதா,  நான் தான்  உன்கிட்ட சாரி கேக்கணும்.  என்னால நீ அப்பா அம்மாவோட ரிலேஷன்ஷிப்பை  இழந்து விடாதே.  பாப்பாவைப் பார்த்தது ரொம்ப சந்தோஷம்.  நாங்க கிளம்பறோம்” என்று சொல்லிவிட்டு இருவரும் மிகுந்த வருத்தத்துடன் அந்த இடத்தை விட்டு கிளம்பினர்.  அன்று இரவு கிட்டத்தட்ட எட்டு மணி வரை, வாசுகியும்  மனோகரனும்  அந்த ரூமை விட்டு வெளியே வரவே இல்லை.  

இரண்டு நாள் கழித்து,  கவிதா மீண்டும் கதவைத் தட்டிவிட்டு அவர்கள் ரூமிற்குள் சென்றாள். மனோகர் அவளைப்  பார்த்தவுடன்,  வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.  அவள் வருவது தெரியாதது போல  வாசுகி கைகளில் ஏதோ ஒரு புத்தகம்.

“உங்களுக்கு  என்னோட பேச  பிடிக்கலைன்னு தெரியுது.  உங்க மனசுல நான் என்னமோ நம்ப வைத்து கழுத்தறுத்துட்டேன்னு  நினைக்கிறீங்க.  அவ்வளவு பெரிய பாவம் நான் ஒன்னும் செய்யல.  எனக்கு ஒரு அஞ்சு நிமிஷம் பேச டைம் கொடுங்க. நீங்க என்கிட்ட திரும்பி பேச வேண்டாம்.”

 அறையில் ஒரே நிசப்தம். அனிதா தான் சொல்ல நினைப்பதைச் சொல்ல ஆரம்பித்தாள்.

“அவனோட  அந்த வாழ்க்கை அவன் ஒன்றும்  ஆசைப்பட்டு ஏற்றுக் கொண்டதில்லை. இது மரபியல், அதாவது   ஜெனிடிக்ஸ்  சம்பந்தப்பட்ட ஒரு ப்ராப்ளம். நீயும் அப்பாவும் இதற்கு காரணம் இல்லை.   நீ அவனுக்கு  ஒரு பெண்ணைக்  கல்யாணம் பண்ணிக் கொடுத்து இருந்தேனா,  அந்தப்  பெண்ணோட  வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? அவள்  வாழ்க்கையே பாழாய்ப் போயிருக்கும்.  கண், கையில்லாம சிலபேர் பிறப்பதுபோல, இவனுக்கு ஜீன் சம்பந்தமான பிரச்சனை.  அதுக்கு அவனை எப்படித் தண்டிக்க முடியும்?  இதுக்குமேலே என்கிட்ட பேச வேறு விஷயம் இல்லை.  ”  என்று சொல்லி  முடிப்பதற்குள்,

 “அனிதா, பிரபுகிட்ட பேசிட்டோம். நாளைக்கு ஈவினிங் வந்து, அவங்க வீட்டுக்கு எங்களைக்  கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டான் ” என்று  மனோகர் சொல்லும் பொழுது, அவள் கண்களில் வந்த கண்ணீரைக் காட்டிக் கொள்ளாமல், அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

அந்த நிகழ்வுக்குப் பின்னர் அனிதாவுடன் பட்டும் படாமலே அவர்கள் பேசிக் கொண்டனர். கிட்டத்தட்ட மூன்று மாதங்களில்  இந்தியாவிற்கும் கிளம்பிச் சென்றனர். 

 கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.   ஒரு நாள் காலைப் பொழுதில்,  பிரபுவிற்கு  வாசுகியிடமிருந்து ஒரு இன்கம்மிங் கால் வந்தது.

“பிரபு,  அப்பா டெஸ்ட் ரிசல்ட்ஸ் வந்துடுச்சு. அப்பாவோட இரண்டு கிட்னியும்  ரொம்ப பழுதடைந்து விட்டதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு  இதுக்கு மேல டயாலிசிஸ்  எல்லாம் பண்ண முடியாது. கிட்னி ட்ரான்ஸ்பிளாண்ட்தான் பண்ணனும்னு சொல்லிட்டார்.  இன்னும் இரண்டு மாசம் தான் கெடு குடுத்திருக்காரு  “

“ஓ மை காட்,  செலவு பத்தி நீ கவலைப்படாதே.எப்ப ட்ரான்ஸ்பிளாண்ட் செய்யலாமுன்னு சொல்லறாரு? “

“ட்ரான்ஸ்பிளாண்ட்டுக்கு பெரிய வெயிட்லிஸ்ட் இருக்குப்பா.  என்னோட பிளட் குரூப்பும்  அப்பா குரூப்பும்  வேற வேற. அதனால நான் கொடுக்க முடியாது. என்ன பண்றதுன்னு தெரியலபா.  அப்பாக்கு வேறு எந்த பிராபளமும் இல்லை.  ட்ரான்ஸ்பிளாண்ட் கிடைச்சா, அப்பா  இன்னும் பத்து வருஷமாவது உயிரோடு இருப்பாருன்னு  டாக்டர் சொல்றாரு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல” அதற்கு மேல் பேச முடியாமல் வாசுகி அழுதவாறு ஃபோனை கட் பண்ணினாள்.

சில வாரங்களுக்குப் பிறகு, அம்மாவிடமிருந்து பிரபுவிற்கு மீண்டும் ஒரு  போன்  கால்.

 “டேய் பிரபு,  அந்த மாங்காடு அம்மன் கருணைதான்பா!!!.  யாரோ ஒருத்தர் அப்பாவுக்கு ஒரு கிட்னி தரேன்னு  சொல்லிட்டாரு. பர்ஃபெக்ட் மேட்ச்சுன்னு  டாக்டர் சொல்றாரு! அதனால  நாளைக்கே  ஆப்பரேஷன்.  அனிதா கிட்ட போன் பண்ணிச் சொல்லிடு”  என்று சொல்லிவிட்டு லைனை கட் பண்ணி விட்டாள்.

அன்று ஆபரேஷன் நாள்.  வாசுகி ஆபரேஷன் தியேட்டர் காத்திருப்பு அறையில் உட்கார்ந்துக் கொண்டு  கந்த ஷஷ்டி கவசம் படித்துக் கொண்டிருந்தாள். 

“அம்மா” என்று ஒரு பரிச்சயமானக்   குரல். கையில் குழந்தையுடன் கிறிஸ்!

” நீ எங்கடா இங்க?  எனக்கு இருக்கிற கஷ்டம் போறாதா? நீ வேற வந்து, ஏன்  கஷ்டப்படுத்துற. உன்னை யாரு இங்கே வரச் சொன்னது” என்று கோபமாகக் கேட்டாள்.

“அம்மா நான் உனக்காக வரல.  அப்பாக்கு  கார்த்திகேயன் தான் கிட்னி தானம் செய்யறான் .  நான் அவனைக் கவனிச்சுக்க வந்திருக்கிறேன்”

வாசுகிக்கு  தூக்கி வாரிப் போட்டது. ” என்னடா சொல்ற?”

“அப்பா நிலைமையை  ஒரு மாதத்திற்கு முன்னாடி அனிதா  எங்களுக்கு ஃபோன் பண்ணிச் சொன்னாள்.  கார்த்திகேயனுக்கு எல்லோருக்கும் உதவுற  குணம்!  எந்த ஒரு வீக்கெண்டும்  வீட்ல இருக்க மாட்டான்.  வீட்டு வசதி, சாப்பாடு வசதி  இல்லாத மக்களுக்கு    உதவி செய்ய போயிடுவான்.  ஒரு வருடத்திற்கு ஒரு முறை,  ஏழை மக்களுக்கு உதவ ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு வருவான். அவன்தான் பிடிவாதமாக பேசி, இந்தியாவுக்கு வந்து இந்தத் தானத்தைச் செய்கிறான்.” என்று சொல்லியபடியே குழந்தையை அடுத்த  தோளிற்கு மாற்றினான்.

“உன்கிட்ட முன்னாடியே சொன்னா, நீ ஒத்துக்க மாட்டேன்னு  எனக்குத் தெரியும்.  உனக்கு உன்  மாமாண்ணா  ரொம்ப உசுருன்னு  எனக்குத் தெரியும்.”

வாசுகி கண்களில் தாரை தாரையாய்க்  கண்ணீர்.  அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.  சிறுவயதிலேயே அப்பாவை இழந்து, அவளது குடும்பம் பணக் கஷ்டத்தில் திண்டாடிக் கொண்டிருந்தது.  அந்தச் சமயத்தில்,  தாய்மாமன் மனோகர்தான் அவளைத் திருமணம் செய்து கொண்டு ,அவளது தாய்வழி குடும்பத்தையும் காப்பாற்றினான்.   வாசுகியின் உலகமே மாமா மனோகர் தான். தன் கை  இரண்டையும் கூப்பி அவனைக் கும்பிட்டாள். 

“அம்மா, ஏன் ஒரு குழந்தையைப் போல நடந்துக்கிறீங்க?  உள்ள இருக்கறது என்  அப்பாவும் தான்!”

 வாசுகி அவனைக்  கூப்பிட்டு, தன் பக்கத்தில் உட்கார வைத்து அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“இந்தக் குழந்தை யார் என்று” சற்று ஆச்சரியமாக கேட்டாள் .

“எங்க குழந்தைதான்” வாசுகிக்கு ஒன்றும் புரியவில்லை.

“எனது ஆண் உயிர் அணு  கொண்டு, ஒரு வாடகைத்  தாய் மூலமாக இந்த குழந்தைப்  பிறந்தது” எனச்  சொன்னான்.

 “பாப்பாவுக்கு லஞ்ச் ரெடி பண்ண வேண்டும். நீ கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ள முடியுமா?”

“கட்டாயம் பாத்துக்கிறேன்.  பாப்பா பெயர் என்ன?”

“பத்மாவதி, பத்மா என்று கூப்பிடுவோம்”

வாசுகியின்  அம்மாவின் பெயர் பத்மாவதி. அவள் குழந்தையை அவனிடம் இருந்து வாங்கிக்  கொண்டு அவனைப் போய் விட்டு வரும்படி கூறினாள்.

அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்த  பின்,  அந்தக்  குழந்தையை ஆசையாகப்  பார்த்தாள்.  மனதில் பல எண்ணங்கள்

“கிரிஸோட  முகத்தோற்றம்  குழந்தைகிட்ட  இருக்கு. அனிதா சொன்னமாதிரி   அவன் பிறப்பில் குறைபாடிருந்தால்,  இவன்  என்ன பண்ணுவான் . நாங்க அவமானப்படுத்தினாலும், அந்தப் பையன் எவ்வளவு பெரிய உதவி செய்து இருக்கான். பெரிய மனசுதான். ஒரு காலத்துல ஆணும் இல்லாம பெண்ணும் இல்லாம இருக்கிற மக்களை,     சினிமால  காமெடி டிராக்லதான் யூஸ் பண்ணாங்க. ஆனா இன்னிக்கு அவங்கள புரிஞ்சுகிட்டு அழகா “திருநங்கையர்” என்று  ஒரு பெயர் கொடுத்து மரியாதை கொடுக்கிறார்கள்.  அது போலத்தான் கார்த்திகேயன், கிறிஸ் போன்ற மனிதர்கள்.  கார்த்திகேயன் என் மருமகள்(ன்)!  உடல் மாறிய உறவுகள்!!!”  என்று அவள் நினைத்து அவர்களை ஏற்றுக் கொள்ளும் பொழுது  வழிந்தக்  கண்ணீரை, குழந்தையின் பிஞ்சு விரல்கள் தடவிக் கொடுத்தது.

— மருங்கர்

 

பனிப்பூக்கள் வலையிலிருந்து வாசித்தது..எனது போண் ஊடாக யாழுக்குள் எல்லா பகுதிக்குள்ளும் உள் நுளைய முடியாத காரணம் எனக்கு புரியவில்லை.அதனாலயே சில விடையங்களை சில நேரங்களில் இதற்குள் மட்டும் ஒட்ட வேண்டிய  சந்தர்ப்பம்.கணணியால் யாழுக்குள்ளும் வேலை விடையங்கள் மட்டும் செய்வேன்..காரணம் அடிக்கடி வைரஸ் தாக்கம்..சோ யாரும் யாயினி வேணும் என்று கொண்டு போய் யாயினி என்னும் பக்கத்தில் ஒட்டுறா என்று நினைத்து கெொள்ள வேண்டாமே.

 

Edited by யாயினி
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு சிறுகதை யாயினி......என்னையும் அறியாமல் என்னைக் கண்கலங்க வைத்து விட்டது.....சிறப்பான கோணத்தில் சிந்தித்திருக்கின்றார் எழுத்தாளர்......!   🌹

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2021 at 04:07, suvy said:

அருமையான ஒரு சிறுகதை யாயினி......என்னையும் அறியாமல் என்னைக் கண்கலங்க வைத்து விட்டது.....சிறப்பான கோணத்தில் சிந்தித்திருக்கின்றார் எழுத்தாளர்......!   🌹

நன்றிகள்..தியாவின் வலைப் பக்கமிருந்து சுட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் 14.01.2021 தொடக்கம் ரொறண்டோவில் அவசரகாலப் பிரகடனம் நடை முறைக்கு வருகிறது..அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே செல்லும் படியும் மற்றபடி வீட்டிலேயே இருக்கும்படியும் வேண்டப்படுகிறார்கள்.

இந்த ஆண்டின் முதல் வேலை எதிர்வரும் வெள்ளிக்கிழமையாக அமைந்தது..அதுக்கும் போக இயலாது என்று நினைக்கிறேன்.🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகப் புத்தகத்திலிந்து....

Confinement le weekend envisagé, crise chez les jeunes, Sri Lanka, record Twitch... Actus du jour

 
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்...

 

Wednesday, 13 January 2021

பொங்குக!

 
pongal.jpg

 

உலகின் நாற்றிசையிலும் புகழ்பரப்பும் எம் தமிழ் உறவுகளுக்கு பொங்குக! தமிழ் ஓங்கவே நன்றாய்! என வாழ்த்துகிறேன். 

நாற்றிசையிலும் இருக்கும் எட்டு நாகங்கள் ஒன்றோடொன்று பிணைந்து எம் தமிழைக் காக்கும் பொங்கல் வாழ்த்தை சித்திரக் கவிதையாய் புனைந்துள்ளேன். அப்பொங்கல் வாழ்த்தை மங்கலம் பொங்கப் படித்து மகிழுங்கள்.

 

%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%2B%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%2588%2B-%2B%25E0%25AE%258E%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25AA%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25A3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpeg
பண்டைய தமிழரை நாகர்கள் எனவும் அழைப்பர். இன்றும் தமிழரைத் தெழுங்கில் அரவாளு’ [அரவு - பாம்பு] எனக்கூறும் வழக்கம் உண்டு. அந்நாளைய தமிழர் கிடைத்தற்கு அரிய தமது செல்வங்களை நிலவறைகளில் வைத்து அவற்றுக்குக் காவலாக நாகங்களையும் வளர்த்தனர். அதனாலேயே நாகம் காத்த நிதியம் போல என்னும் உவமைத் தொடர் தமிழில் உண்டு. நாகங்கள் காக்கும் பொருளை எவரும் களவாட முடியாதென நம்பினர்.

 

உலகின் நாற்றிசை எண்நாகம் ஒன்றாய்ப் பிணைந்து தமிழ் எனும் பெருநிதியை எட்டுப்பக்கமும் காக்க இச்சித்திரக் கவிதையைப் புனைந்தேன்.

கவிதையை வாசிப்பது எப்படி? பார்ப்போமா?

பொங்குக தமிழ் ஓங்கவே நன்றாய் எனும் ஓரடிக் கவிதை எட்டு நாகத்துள்ளும் இருக்கிறது. ஒவ்வொரு நாகத்தின் தலையிலிருந்து வால்வரை பொங்குக தமிழ் ஓங்கவே நன்றாய் எனக் கவிதையை படியுங்கள். விரும்பினால் பொங்குக தமிழ் வரைப் படித்ததும் ஓங்கவே நன்றாய் என்பதை மடித்தும் படிக்கலாம்.

நான் கீறி எழுதிக்கொடுத்த எண்நாகப் பிணையல் சித்திரக் கவிதையை மீண்டும் மெருகேற்றிக் கீறி அதற்குள் எழுத்துக்களை அச்சிட்டுத் தந்த எனது குட்டி மச்சான் கீரனுக்கு என் பொங்கல் வாழ்த்தும் மகிழ்ச்சியும் உரியனவாகுக.

இனிதே,

தமிழரசி.

 
 
 
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய உழவர் திரு நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.😀

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உழவர் திருநாளாம் தைத்திருநாள் வாழ்த்துக்கள்! 

உழவர் திருநாளாம் தைத்திருநாள் வாழ்த்துக்கள்!
 

உழவர் திருநாளாம் தைத்திருநாள் இன்று (15) உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் இந்து மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருக்கிறது. இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரியன் பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர்.  இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர். உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது. 

தை முதலாம் திகதி தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாக இது கருதப்படுகின்றது. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், 22080 1231455033795 1451712149 30668403 1912371 nஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.  பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. நன்றி கூறும் திருவிழாவாக தைப்பொங்கல் அமைவதனால் அனைத்து மக்களிடத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக தைப்பொங்கல் அமைந்துள்ளது.

வரலாற்று ரீதியாக பார்க்குமிடத்து சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது என்ற வரலாற்று கதை அனைவர் மத்தியிலும் பிரபலமாக நினைவூட்டப்பட்டு வருகின்றது.

imagesபொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்....

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் போகிப் பண்டிகை:


தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. அல்லது "பழையன கழிதலும் புதியன புகுதலும்" அதாவது பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.

போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.Bhogi images download பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசி நாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.


இரண்டாம் நாள் தைப்பொங்கல்:

தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். அதாவது மண்ணிலானாThaipongal 4 புதுப்பானைகளை பலர் வாங்குவர். பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவர். புத்தாடைகளை வாங்குவர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் சாணத்தினால் பெரியதொரு வட்டமிடுவர். அதில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர்.

முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள்.

indexபொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது.




மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் / பட்டிப்பொங்கல்

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத்z p 33 Thai 03 தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.



உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும்.  'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

நான்காம் நாள் காணும் பொங்கல்:

TH PONGAL CELEBRAT 1331393gகாணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.


பொங்க வைக்கும் முறை:
 

பொங்கலன்று அதிகாலை எழுந்து தலைக்குளித்து. வீட்டு முற்றத்தில் சாணத்தினால் வட்டமிடுவர். அதன் பின்னர் மஞ்சள் நீர் தௌித்து அவ்விடத்தினை சுத்தமாக்குவர். பின்னர் கோலம் இட்டு அதன் நடுவில் புதிய பானையை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர்.

முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் தாம் நுகர்வது வழமை. இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில் இன்றைய தினம் தைப்பொங்கலை கொண்டாடும் அனைத்து இணையத்தள வாசகர்களுக்கும் எமது மனமார்ந்த தைத்திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

1389687318 thai pongal sri lanka hindu festival 3671318

 



பூங்குழலி பாலகோபாலன்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

NEWS | TORONTO & LOCAL NEWS - GTA NEWS HEADLINES - CANADA NEWS

NEWS

Ontario reports 2,998 new COVID-19 cases; 100 new deaths in part due to investigation in London

Cp24.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

Towing Truck துறையில் ஊழல் குற்றச்சாட்டு – தமிழரும் ஒருவராம்: OPP

JANUARY 18, 2021
image-1.jpg OPP குற்றம் சாட்டியுள்ள 52 வயதான சுதேஷ்குமார் சிதம்பரம்பிள்ளை

Towing Truck துறையில் நிகழ்ந்ததாக கூறப்படும் ஊழல் குறித்த குற்றச்சாட்டை தமிழர் ஒருவரும் எதிர்கொள்கின்றார்.

52 வயதான சுதேஷ்குமார் சிதம்பரம்பிள்ளை என்ற தமிழர் மீதும் Ontario மாகாண காவல்துறை (OPP) குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. Steve பிள்ளை என்ற பெயரை உபயோகிக்கும் இவர் Highway 400 and Sheppard சந்திப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள Steve’s Towing என்ற நிறுவனத்தின் உரிமையாளராவார்.

image-2-300x225.jpg Steve’s Towing நிறுவனம்

நேற்று (சனி), OPP Towing Truck துறையில் நிகழ்ந்ததாக கூறப்படும் ஊழல் குறித்து தனது மூத்த அதிகாரிகள் மூன்று பேர் மீது குற்றச் சாட்டுக்களை பதிவு செய்ததுடன் நான்கு பேரை பணி இடைநீக்கம் செய்திருந்தது. Toronto பெரும்பாக பகுதிக்குள் உள்ள Towing நிறுவனங்களுக்கு குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் முன்னுரிமை அளித்ததாக OPP குற்றம் சாட்டுகின்றது.

சிதம்பரம்பிள்ளை April மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

தேசியம் இணையத்திலிருந்து..

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

COVID-19 Screening in Effect

இந்தப் பக்கத்தை புரட்டிப் பார்ப்பவர்களுக்கான கோவிட் 19 கேள்விகள் முடிந்தால் பதில் தாருங்கள்..😆✍️..

 

1. Do you currently have a Fever and Dry Cough? yes or no

2. Have you or anyone in your home travelled outside Canada in the last 14 days? yes or no

3. Have you been in contact with anyone who is COVID 19 positive or is under investigation? yes or no

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/1/2021 at 22:12, யாயினி said:

 

"எவரெவரோ மகானுபாவர் அவர்கள் அனைவருக்கும் வந்தனம்"

உன்னி பெற்ற தேனீ .....அம்மா அம்பாளுக்கு குடம் குடமா தேனாபிஷேகம் செய்திருக்கின்றார் அதுதான் அப்படி ஒரு இனிமையான குரல்.....!   💐

நன்றி யாயினி.....!  🌹

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, யாயினி said:

இந்தப் பக்கத்தை புரட்டிப் பார்ப்பவர்களுக்கான கோவிட் 19 கேள்விகள் முடிந்தால் பதில் தாருங்கள்..😆✍️..

1.இப்போது மட்டுமல்ல கொரோனாவுக்காக ஒழுங்காக கைகழுவி இடைவெளி கடைப்பிடிக்க தொடங்கியதில் இருந்து காய்ச்சல் இருமல் தடிமனே வருவதில்லை 😀

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

1.இப்போது மட்டுமல்ல கொரோனாவுக்காக ஒழுங்காக கைகழுவி இடைவெளி கடைப்பிடிக்க தொடங்கியதில் இருந்து காய்ச்சல் இருமல் தடிமனே வருவதில்லை 😀

 

Just testing & fun..நன்று
தொடருங்கள்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

1.இப்போது மட்டுமல்ல கொரோனாவுக்காக ஒழுங்காக கைகழுவி இடைவெளி கடைப்பிடிக்க தொடங்கியதில் இருந்து காய்ச்சல் இருமல் தடிமனே வருவதில்லை 😀

 

 நேசறி தொடக்கம் அஞ்சாம் வகுப்பு வரைக்கும் ரீச்சர்மார்  கைகால் கழுவவேணும் எண்டு சொல்லிக்குடுத்ததை கணக்கெடுக்காத சனத்துக்கு ஆப்பு வைச்சிருக்கு கொரோனா..

இப்பிடி அஞ்சாம் வகுப்பு விசயத்தை கனக்க சொல்லலாம்....சொன்னால் என்னை  விசரன் பைத்தியக்காரன் எண்டுவினம் 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

 

கொரோனா நல்ல பழக்கங்களையும் கொண்டுவந்துள்ளது தான்.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.