Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்து யாழ்பாண ஐஸ்கிறீம் கடைகள்!!

178133646_3831473606936091_2667816349718
யாழ்ப்பாணக் கோட்டையின் பின்புறமாக இருந்து கிழக்கு நோக்கி அலுப்பாந்தி துறை வரும் பாதையில் RVG Ice Cream Company ( ஆர்விஜி ஐஸ்கிறீம் ) என ஒரு ஐஸ் கிறீம் கம்பனி எமது காலத்தில் இருந்தது.
அலுப்பாந்தி கடற்துறை போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்டது.
சின்னக்கடை சந்தை 1982 ஆம் ஆண்டில் திருத்திக் கட்டப்பட்ட போது அங்கு தான் இரு வருடங்கள் கொட்டில் போடப்பட்டுச் சந்தை இயங்கியது.
யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் கிரிக்கெற் மச் பார்த்து விட்டு வரும் போது ஆர்விஜி ஐஸ்கிறீம் கம்பனிக்குப் போவோம்.
அங்கு கடை போன்ற அமைப்பு இல்லை. ஆனாலும் மொத்த விலைக்கு ஐஸ்கிறீம் தருவார்கள்.
10 சதத்திற்கு தடி ஐஸ்பழமும், 15 சதத்திற்கு ஐஸ்சொக்கும் வாங்கியதாக ஒரு ஞாபகம். மொத்த விலைக்குத் தருவார்கள்.
இது 1977 ஆம் ஆண்டுக் கதை.
ஆர்விஜி ஐஸ் பழம் வெள்ளைக் கலரில் பசுப்பால் சேர்த்து தயாரித்திருப்பார்கள்.
அதனை உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கும் போது இனிப்புக் காரணமாகச் சொண்டும் சொண்டும் ஒட்டும்.
அதன் சுவை இன்றளவும் ஞாபகத்தில் இருக்கிறது.
1984 ஆம் ஆண்டில் கோட்டை இராணுவ முகாம் தாக்குதல் நடைபெற்ற காலத்துடன் ஆர்விஜி ஐஸ்கிறீம் கம்பனி மூடப்பட்டதோ தெரியவில்லை.
அந்த ஆர்விஜி ஐஸ்கிறீம் தொழிற்சாலை அழிந்து வெறும் காணியாக இப்போது உள்ளது
அதே போல சின்னக்கடை சந்தையிலிருந்து பாங்சால் வீதி வழியாக மேற்கு நோக்கிப் போகும் போது முதலாவதாக வரும் சந்தியில் தான் நல்லூரில் இன்று இருக்கும் அகில இலங்கை புகழ் றியோ ஐஸ்கிறீம் கடை சிறிய கடையாக அந்த நாளில் இருந்தது.(படம்)
கோட்டை இராணுவ முகாம் மீதான சண்டையுடன் இடம் பெயர்ந்து பின்னாளில் நல்லூர் வந்தது.
றியோ, ஆர்விஜி, ஐஸ்கிறீம் கடைகளில் ஐஸ் பழங்களை வாங்கி சைக்கிள்களிலும், தள்ளி உருட்டும் வண்டில்களிலும் எடுத்துச் சென்று விற்கும் பலர் இருந்தார்கள்.
மணி ஒன்றை இடைவிடாது கிலுக்கிக் கொண்டு ஊர் ஊராக ஐஸ் பழங்கள் விற்பார்கள்.
நாம் 25 சதம், 30 சதம், 40 சதம் எனப் பழத்திற்கு ஏற்றவாறு காசு கொடுத்து வாங்குவோம். தகர வாளி உக்கினால் அதன் பிடியைக் கொடுத்தால் 25 சதப் பழம் ஒன்று தருவார்கள். பழைய அலுமினியப் பாத்திரம் கொடுத்தும் வாங்குவார்கள்.
ஐஸ்பழப் பெட்டியுடன் சாக்கு ஒன்றைக் கட்டியிருப்பார்கள். அதில் வாளிக் கம்பி அலுமினியப் பாத்திரங்களை வியாபாரிகள் போடுவார்கள்.
ஐஸ்பழம் குடிக்கும் ருசியில் எப்பயடா வீட்டு வாளி உக்கும்.அதன் பிடியைக் கொடுத்து ஐஸ்பழம் வாங்குவொமென ஆவல்படுவோம்.
வண்ணார்பண்ணைச் சிவன்கோயிலுக்கு அண்மையில் சந்திரா ஐஸ்பழம் என கடையுடன் இணைந்த ஒரு தொழிற்சாலை இருந்தது. அவர்களது ஐஸ்பழங்களும் தனி ருசி தான்.
இவர்களை நம்பி வாழ்ந்த சைக்கிள், தள்ளு வண்டில் வியாபாரிகள் குடும்பங்கள் பல நூறு இருந்தது.
சந்திரா ஐஸ்பழ முதலாளி பெரும் மீசைக்காரன்.அவர் இந்திய வம்சாவழி.
1990 யூன் சண்டையுடன் படகேறி தமிழகம் சென்றார். பின் மீள வரவில்லை.
இதை விட ஐஸ்பழ வான்கள் பாடல்களைப் போட்டபடி ஊரெங்கும் பகல் இரவாகத் திரியும்.
அதையும் மறித்து ஐஸ்பழங்கள் வாங்குவோம்.
கோயில் திருவிழாக் காலங்களில் இரவில் ஐஸ்பழ வான்கள் ஒளிமயமாக நிற்கும் காட்சி ஒரு தனி அழகு தான் .
இன்றைய காலத்தில் அவற்றைக் காண முடியாது. எல்லாமே கடைகள் மயமாகி விட்டது. இன்று வகை வகையாக விதம் விதமாக ஐஸ்கிறீம் வகைகள் 50 ரூபா முதல் 1000 ரூபா வரை விற்பனையாகிறது.
அன்றைய நாளில் தடி ஐஸ்பழம், சொக், கோன் போன்ற வகைகள் தான்.
இன்று யாழ் நகரில் பிரமாண்டமாக இருக்கும் லிங்கம் கூல்பார் 1960 களில் எனது தந்தையார் இளைஞனாக இருக்கும் காலத்தில் வெலிங்டன் தியேட்டர் சந்தியில் மூக்குப் பொடியும் பீடாவும், சர்பத்தும் விற்ற ஒரு கடையாகவே இருந்தது.
அப்புலிங்கம் அவர்களின் திறமை, தனித்துவமான சுவையுடன் பொருள்களைத் தயாரித்தமை காரணமாகப் பெரும் தொழிலதிபராக முடிந்தது.
புங்குடுதீவு,வேலணை போன்ற கிராமங்களிலிருந்து வந்தோரே பெரும் ஐஸ்கிறீம் முதலாளிகளாகினார்கள்.
பல்தேசியக் கம்பனிகள் கடைவிரித்து ஊருக்கு ஊர் பலசரக்குக் கடைகளில் குளிர்சாதனப் பெட்டிகளை வழங்கி ஐஸ்கிறீம் வகைகளை வழங்கி விட்டார்கள்.
அதனால் சைக்கிள், தள்ளு வண்டி மூலமாக விற்கும் தொழில் முற்றாகவே அற்றுப் போனது.
வான் மூலமாக விற்கும் தொழிலும் அருகி விட்டது. வீட்டுக்கு வீடு குளிர்சாதனப் பெட்டிகள் வர ஐஸ்கிறீம் ஐயிட்டங்களை வாங்கி வைக்கப் பழகி விட்டார்கள்.
சுயமாகத் தயாரிக்கவும் பழகி விட்டார்கள்.
யாழ்ப்பாணத்து ஐஸ்கறீம்களின் கதையின் நீளம் அதிகமானது.
எது எப்படி இருப்பினும் யாழ்ப்பாணத்து ஐஸ்கிறீம் முதலாளிகளின் கைப்பக்குவத்தில் தயாராகும் ஐஸ்கிறீம்களின் சுவையைப் போலத் தாம் உலகில் வேறு இடத்தில் ஐஸ் கிறீம் குடிக்கவில்லையென பல நாடுகள் தெரிந்தோர் கூறுகின்றனர்.
– வேதநாயகம் தபேந்திரன்
(ஆசிரியர், யாழ்ப்பாண நினைவுகள்)
படம்: ஆதிகால றியோ ஐஸ்கிறீம் கடை
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெய்யிலுக்கு இந்தப் பதிவைப் படித்ததும் ஐஸ்கிரீம் சுவை வாய்க்குள் சென்று உடலில் இறங்கி ஒரு குளிர்ச்சியான போதை தருகின்றது......!  😎

நன்றி ஐஸ்சுத்தம்பி.....!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நினைவிருக்கா...
எத்தனை தொலைக்காட்சி தொடர்கள் வந்த போதும் அன்று 70,80...களில் எம்மை கட்டிப்போட்டு வைத்திருந்த இத்தொடருக்கு ஈடாகுமா..?
வேதாளம் முருங்கை மரம் ஏறியது கதையில்; ஆனால் நிஜத்தில்... எத்தனை கடை ஏறியிறங்கியிருப்போம் தவறவிட்டு விடுவோமோ என்கிற நம் பயக் கதையில்.
இம் முயற்சியில் நாமும் விக்கிரமன்களே...
முதல் முதலில் இரவல் தந்து என்னை புத்தகத்தில் புதையச்செய்தவர் என் அப்பாவின் அருமைத் தோழர் அமரர் 'தர்மலிங்கம் மாமா' (அம்புலிமாமா தந்த அன்பு மாமா)
🤩 அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்திரா, கோகுலம், லயன், முத்து, ராணி காமிக்ஸ்... இவைகள்தான் எங்கள் அன்றைய கார்ட்டூன், அனிமேஷன் எல்லாம்...
 
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானிடரே! சொல்லிடுவீர்!

 
 
 
1901221_672641789460074_1262185196_n.jpg
 
 
தேன்குருவி நான் என்பார் தேசத்தே உள்ளோர்கள்
தேன் அருந்த முடியாதே தேடுகிறேன் பூமரங்கள் 
தேன் அருந்த பூத்தேடி தேசத்தே அலைந்தே 
தேன் சிந்தும் பூமரத்தைத்  தேடியே இளைத்தேன்
தேன் சிந்தும் பூமரங்கள் தெருவோரம் கண்டீரோ!
தேனினிக்கும் தமிழாலே தெண்டனிட்டு கேட்கிறேன்
தேன் சிந்தும் பூமரங்கள் தேசத்தே கண்டீரேல்
தேன்குருவி எந்தனுக்கு தேடிவந்து சொல்லிடுவீர்!
 
பார் எங்கும் பறந்து பாழடைந்த நிலமெங்கும்
பார்த்துப் பார்த்து  அலுத்துப் பதறிப் பரிதவித்து
வேர்த்து விறுவிறுத்து வெந்து உடல் நூலாய்
வேரற்ற மரம் போல வீழும்நிலை வந்ததனால்
நீர் அருந்த நினைத்து நீர்நிலைகள் தேடி
நீர் அற்று வாடி நிம்மதியைத் தொலைத்தேன்
நீர் அற்றுத் தேனற்று நிலம்பாழாக காரணம் 
யார் என்று அறிவீரோ! மானிடரே! சொல்லிடுவீர்!
 
இனிதே,
தமிழரசி.
 
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழங்கால ரோமாபுரி வரலாறு: ரோம் நகரம் எரியும் போது உண்மையிலேயே நீரோ ஃபிடில் வாசித்தாரா?

16 ஜூன் 2021
ரோமாபுரி மன்னன்

பட மூலாதாரம்,BETTMANN

(இந்தக் கதை, 'இன் அவர் டைம்' என்ற பிபிசி ரேடியோ ஃபோரில் ஒலிபரப்பான நீரோ குறித்த 50 நிமிட நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.)

"ரோம் நகரம் எரியும் போது, நீரோ மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார்."இந்தச் சொல்லாடல், ரோமானிய பேரரசர் நீரோவைப் பற்றிய பிரபலமான ஒன்று. நீரோ ரோமுக்கு தீ வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அவர் வேண்டுமென்றே அவ்வாறு செய்தார் என்று கூறப்படுகிறது.வரலாற்றின் பக்கங்களில் நீரோ ஒரு கொடூரமான ஆட்சியாளராக அறியப்படுகிறார், அவர் தனது சிற்றன்னை, அவரது மக்கள் மற்றும் மனைவிகள் அனைவரையும் கொன்று, தனது நீதிமன்றத்தில் இருந்த திருநங்கைகளை மணந்ததாகவும் கூறப்படுகிறது. கி.பி 54இல், தனது பதினாறு வயதில், நீரோ தனது தாயின் முயற்சியால் ஒரு பேரரசின் சக்ரவர்த்தியானார். அந்தப் பேரரசு, ஸ்பெயினிலிருந்து வடக்கே பிரிட்டன் மற்றும் கிழக்கில் சிரியா வரை பரவியிருந்தது. அரசாட்சி மீது மோகம் கொண்ட நீரோவின் தாயார் அக்ரிபீனா, சதித்திட்டங்கள் மற்றும் கலகங்கள் மூலமாக, நீரோவுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தந்தார். அக்ரிபீனா தனது 'மாமா', பேரரசர் கிளாடியஸை மணந்தார், பின்னர் நீரோவை பேரரசரின் மகளுக்கு மணமுடித்தார். இதன் மூலம் நீரோ, அரச குடும்பத்தில் உறுப்பினராகவும், ராஜாவின் வாரிசாகவும் ஆனார், அதே நேரத்தில் ராஜாவுக்கும் ஒரு மகன் இருந்தான்.அக்ரிபீனா பேரரசர் கிளாடியஸை விஷம் கலந்த உணவைக் கொடுத்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது, ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று உறுதிப்படுத்த முடியவில்லை.

தாயைக் கொன்ற நீரோ

நீரோ ஆட்சியைப் பிடித்தபோது, அவரது தாயார் அக்ரிபீனா அவரது நெருங்கிய ஆலோசகராக இருந்தார். ரோமானிய நாணயங்களில் கூட நீரோவின் படங்கள் அச்சிடப்பட்டன. ஆனால் ஆட்சிக்கு வந்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதிக அதிகாரம் மற்றும் சுதந்திரம் வேண்டி, நீரோ தனது தாயையே கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. நீரோ தனது தாயைக் கொல்லச் செய்த முதல் முயற்சி தோல்வியடைந்தது. நீரோ தனது தாயைக் கடற்கரையில் நடந்த ஒரு விழாவிற்கு அழைத்தார். ஒரு கப்பலில் அவரைத் திருப்பி அனுப்புவதாகவும் அந்தக் கப்பலை வழியில் நீரில் மூழ்கடித்துத் தாயைக் கொல்வதாகவும் திட்டம். ஆனால் இந்த முயற்சியில் அவர் தப்பிவிட்டார். இதற்குப் பிறகு நீரோ தனது தாயைக் கிளர்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டி, அவரைக் கொல்லச் சிலரை அனுப்பினார்.

நீரோ தன் தாயைக் கொன்றது ஏன்?

ரோம் மக்களைக் கவர, கிரேக்க வழக்கப்படி, நீரோ மிகப் பெரிய அளவில் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்தார்

பிபிசி வானொலி நிகழ்ச்சியில் பேசிய பண்டைய ரோமாபுரி குறித்த நிபுணர் பேராசிரியர் மரியா வாயெக், "நீரோவின் தாய் மிகவும் தந்திரம் நிறைந்தவராகவும் பேராசை கொண்டவராகவும் இருந்தார். அவர் தனது மகனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கச் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தன் மகனுடனே கூட உடலுறவு கொள்ளவும் துணிந்தார் என்று சில ஆவணங்கள் கூறுகின்றன.

FOTOTECA STORICA NAZIONALE

பட மூலாதாரம்,FOTOTECA STORICA NAZIONALE

ஆனால், இதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால், தன்னைக் கொல்ல அனுப்பப்பட்ட ஆளிடம் அவர் தாயார், தனது வயிற்றைக் காட்டி, நீரோவின் பாவம் வளரும் இந்த வயிற்றில் கத்தியால் குத்துமாறு கூறியதாக மரியா கூறுகிறார். தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே அதிகாரப் போராட்டத்தின் சூழலிலேயே வளர்ந்ததால், அது அவரது ஆளுமை மற்றும் சிந்தனையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது மரியாவின் கருத்து.

ஆட்சிக்காகச் செய்யப்பட்ட திருமணங்களும் கொலைகளும்

நீரோவின் காலம் முதல் நூற்றாண்டு என்று கூறும் மரியா, "அப்போது, ரோமானியப் பேரரசு ஐரோப்பாவில் பிரிட்டனில் இருந்து ஆசியாவில் சிரியா வரை பரந்து விரிந்திருந்தது. ஆனால் இந்த பரந்த சாம்ராஜ்யம் நிலையற்றதாக இருந்தது. ஒரு சுதந்திரத் தலைவர், செனட்டின் உதவியுடன் ஆட்சி செய்து வந்தார். ரோமானியப் பேரரசின் முதல் பேரரசரான அகஸ்டஸ், அதிகாரத்தில் இருப்பவர்களிடையே சமத்துவம் குறித்த ஒரு யோசனையை அறிமுகப்படுத்தினார்.ரோமின் முதல் பேரரசர் அகஸ்டஸ் சீசரால் தொடங்கப்பட்ட அமைப்பில், ஜூலியஸ் கிளாடியஸ் சீசர் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக அதிகாரத்தை வைத்திருக்க விரும்பினர். இதன் விளைவாக அதிகாரத்தைப் பெற குடும்பத்திற்குள் ஒரு போராட்டம் ஏற்பட்டது.

அதிகாரத்தைப் பெறுவதற்காக, குடும்பத்தில் திருமணங்கள், குழந்தைகளைத் தத்தெடுப்பது, விவாகரத்து செய்தல், நாடுகடத்தப்படுதல், நாட்டுக்கு வெளியேயிருந்து ஆட்சி செய்வது என்று தம் போட்டியாளரை அகற்ற எல்லா விதமான, தந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.ரோமானியப் பேரரசின் இரண்டாவது பேரரசரான திபெரியஸின் ஆட்சியின் போது நீரோவின் பாட்டி சிறையில் அடைக்கப்பட்டார். நீரோவின் தாய் மூன்றாவது மன்னனின் ஆட்சியில் நாடுகடத்தப்பட்டார். கிளாடியஸின் ஆட்சியின் போது, நீரோவின் தாயார் நாடு திரும்பினார். மேலும் அவர் தனது மாமாவான பேரரசரை மணந்து அரச குடும்பத்தில் தனது இடத்தைப் பிடித்தார்.

நீரோவின் ஆளுமை மற்றும் தன்மை குறித்த பிபிசி வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரிட்டன் செளத் ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுஷ்மா மாலிக் கூறுகையில், ரோமானிய பேரரசின் நான்காவது பேரரசரான கிளாடியஸ் கி.பி 41 முதல் 54 வரை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின் கடைசி நாட்களில், கிளாடியஸ் நீரோவின் தாயார் அக்ரிபீனா உட்பட தனது மனைவிகளையே பெரிதும் சார்ந்து வாழ வேண்டியிருந்தது என்று தெரிவிக்கிறார்."இந்த மனைவிகளில், 'மிகவும் அவப்பெயர் கொண்டவர்,' முசலினா என்று வரலாற்றுப் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறது. அவர் கிளாடியஸைச் சுற்றி ஒரு வலையை விரித்திருந்தார். அவர் செனட்டர்களுடன் உடல் உறவு கொள்ளும் அளவுக்குக் கூடச் சென்றார், தனது இச்சைக்காகத் தன் நிலையைக் கூட அவர் மறந்தார். கிளாடியஸ் அவளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் என்றும் வரலாறு கூறுகிறது." என்று சுஷ்மா மாலிக் கூறுகிறார்.நீரோ மற்றும் கிளாடியஸின் காலங்களை ஒப்பிடும் சுஷ்மா மாலிக், "நீரோவின் ஆரம்ப நாட்களில் அவரைச் சுற்றிச் சில நல்ல மனிதர்கள் இருந்தார்கள், இதில் செனெகா மற்றும் அஃப்ரெக்ஸ் புரூஸ் என்ற தலைவர்களும் இருந்தனர். செனெகா நீரோவின் உரைகளின் எழுத்தாளரும் ஒரு தத்துவஞானியும் ஆவார்.

ரோமாபுரி மன்னன்

பட மூலாதாரம்,BETTMANN

கர்ப்பிணி மனைவியைக் கொன்ற நீரோ

நீரோ தனது முதல் மனைவி ஆக்டேவியாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் அவளை நாடு கடத்திக் கொலை செய்ய உத்தரவிட்டார். அதன் பிறகு நீரோ போபியாவை காதலித்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். போபியா கர்ப்பமாக இருந்தபோது, நீரோ ஒரு நாள் கோபமடைந்து அவளையும் கொன்றான்.

நீரோவின் ஆட்சியின் முதல் ஐந்து ஆண்டுகள் ரோமானியர்களுக்குப் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. பண்டைய ரோமில், செனட் அமைப்பு தான் நிர்வாகம் மற்றும் ஆலோசனை குழுவாக இருந்தது. நீரோ ரோமன், செனட்டுக்கு அதிகாரம் அளித்தது, ரோமானிய ராணுவத்தைத் திருப்திகரமாக வைத்திருந்தது, விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்தது போன்றவற்றால், பொது மக்களிடையே புகழ் பெற்றது. ஆனால் இந்த ஆரம்பகால வெற்றிகள் நீரோவின் எஞ்சிய காலத்தில் நடந்த கொடூரமான வன்முறை மற்றும் காட்டுமிராண்டித்தனத்தால் மறைக்கப்பட்டன.

தனது செயல்களால், நீரோ வரலாற்றின் பக்கங்களில் தீமை மற்றும் துன்மார்க்கத்தின் அடையாளமாக மாறினார்.

கிளாடியஸின் காலத்தில் செனட் புறக்கணிக்கப்பட்டது போல, தனது ஆட்சியில் நடக்காது என்றும் ராஜீய விவகாரங்களில் இந்த அமைப்பின் முக்கியத்துவம் மீட்டெடுக்கப்படும் என்றும் நீரோ செனட்டிற்கு உறுதியளித்தார் என்று பேராசிரியர் சுஷ்மா மாலிக் கூறுகிறார்.

ரோமானிய ராணுவமான பிரிட்டோரியன் காவல்படையினருக்கான ஊதியம் சரியான நேரத்தில் வழங்கப்படும் என்றும் நீரோ உறுதியளித்தார். அந்த ஆரம்ப நாட்களில், நீரோ ரோம் விவகாரங்களில் பெரும்பாலானவற்றை செனட்டின் பொறுப்பில் விட்டுவிட்டார்.

செனட்டின் கிளர்ச்சி எழக்கூடாது என்றும் அவர் முயற்சி செய்தார். அப்படி எழும் கிளர்ச்சியால் ஒருவருக்கெதிராக ஒருவர் சதியில் ஈடுபட்டனர். தனது ஆட்சியின் ஆரம்ப நாட்களில், நீரோ செனட்டின் நம்பிக்கையை மீட்டெடுக்க முயன்றார், மேலும் அவர்களுக்கும் ரோமுக்கும் ஒரு சிறந்த ஆட்சியாளராகத் தாம் இருக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அளிக்க முயன்றார்.

ரோமானியர்களைக் கவர, நீரோ கி.பி 54 இல் கிரீஸ்-ல் நடப்பது போன்ற பெரிய அளவிலான விளையாட்டுகளை ஏற்பாடு செய்தார். மக்களின் பொழுதுபோக்குக்காக சர்க்கஸ் போன்ற பல விஷயங்களும் இந்த விளையாட்டுகளில் சேர்க்கப்பட்டன.

நீரோவின் ஆரம்ப நாட்கள் ரோமின் பொற்காலம் என்று பிரிட்டனில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மத்தேயு நிக்கோல்ஸ் வரலாற்றுக் குறிப்புகளுடன் உறுதிப்படுத்துகிறார்.

நவீன காலங்களில் கூட, ஆட்சியாளர்கள் தங்கள் ஆரம்ப நாட்களில் இதுபோன்ற பல முடிவுகளை எடுப்பது, மக்களிடையே அவர்களின் புகழை அதிகரிக்கிறது, ஆனால் படிப்படியாக அவர்களின் புகழ் அவர்கள் ஆட்சி செய்யும் முறையாலேயே முடிவடைகிறது என்று அவர் கூறினார்.

நீரோவின் புகழ் பெரும்பாலும் அவரது கடைசி நாட்கள் வரை நீடித்திருந்தது என்று மேத்யூ கூறுகிறார். நீரோ தனது ஆட்சிக் காலத்தில் எதிர்கொண்ட பிரச்னைகள் குறித்துப் பேசிய மேத்யூ, ஜூலியஸ் கிளாடியஸ் இந்த அரச வம்சத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி மன்னர் என்று கூறுகிறார்.

ALBERTO PIZZOLI

பட மூலாதாரம்,ALBERTO PIZZOLI

நீரோ ஆட்சிக்கு வந்தபோது, அவர் பல சிக்கல்களை எதிர்கொண்டார். அவர் பொறுப்பேற்றபோது, நிர்வாகம் சீராக இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அதிகாரத்தைப் பெற குடும்பத்திற்குள் ஒரு கடுமையான போராட்டம் நடந்து கொண்டிருந்தது, தவிர, சதித்திட்டங்கள் உச்சத்தில் இருந்தன. கூடுதலாக, செனட்டின் உயரடுக்குப் பிரபுக்களைத் திருப்திப்படுத்துவது அவசியமாக இருந்தது. மாகாண ஆளுநர்கள் இருந்தனர், அவர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, ரோம் மக்கள் விளையாட்டு மற்றும் கண்காட்சிகளில் ஆர்வம் காட்டினர்.

நீரோ இவர்கள் அனைவரின் நலன்களையும் சமநிலைப்படுத்தி அவர்களை திருப்திப்படுத்த வேண்டியிருந்தது என்று மேத்யூ கூறுகிறார்.

நீரோ ஆட்சியைக் கைப்பற்றிய போது இருந்த ராஜ்ஜியத்திற்கும் அவர் விட்டுச் சென்ற போது இருந்த ராஜ்ஜியத்திற்கும் இடையே அதிக வித்தியாசம் இருந்ததா என்ற கேள்விக்கு மேத்யூ, இந்தப் பேரரசு, தொடர்ந்து எல்லைகளின் விரிவாக்கத்தின் அடிப்படையில் அமைந்தது என்று ஒப்புக்கொள்கிறார். நீரோவின் காலத்தில் ராஜ்ஜியம் விரிவாக்கப்படவில்லை. ஆனால் அதில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்கிறார் அவர்.

ராஜ்ஜியங்களை வெற்றி பெறுவதன் மூலம் கிடைக்கக்கூடிய பொருட்கள் வரத்து இல்லாததால், ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவது இன்னும் கடினமானது.

ரோம் எரியும் போது நீரோ குழல் வாசித்ததாகக் கூறப்படுவது உண்மையா?

கி.பி 64 இல் ரோமாபுரி எரிந்து சாம்பலானது. நீரோ சக்கரவர்த்தியால்தான் தீ வைக்கப்பட்டதாக வதந்தி பரவியதுடன் ரோம் எரியும் போது நீரோ ஃபிடில் வாசித்ததாகவும் கூறப்பட்டது.தீ விபத்து குறித்து, வரலாற்றாசிரியர் சுஷ்மா மாலிக் கூறுகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில், குறைந்தது இரண்டு வரலாற்றாசிரியர்களாவது நீரோ தானே ரோமில் தீயை வைத்தார் என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். மீண்டும் ஒரு நகரைக் கட்டியெழுப்பி, அதில் தான் விரும்பிய புகழ்பெற்ற கோல்டன் ஹவுஸை உருவாக்க நீரோ விரும்பினார் என்று தெரிவிக்கிறார்.ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் நீரோவுக்கு ஆதரவாக வாதிடுகின்றனர், அவர் இந்த நெருப்பை வைக்கவில்லை, ஏனென்றால் அவருடைய அரண்மனையே கூட இந்த நெருப்புக்கு இரையானது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதே காலகட்டத்தின் மற்றொரு வரலாற்றாசிரியரான டெசிட்டஸ், நீரோ தான் தீ வைத்தார் என்பது ஒரு வதந்தி என்று கூறுகிறார். "நீரோ இதைச் செய்திருப்பார் என்பது நகைப்புக்குரியதாகத் தெரிகிறது. நீரோ பின்னர் நகரத்தை மிகச் சிறந்த முறையில் மீண்டும் கட்டியெழுப்பினார். தீ விபத்து ஏற்பட்டால், மீண்டும் விரைவாகப் பரவக்கூடாது என்பதற்காக அகலமான சாலைகள் கட்டப்பட்டன, மேலும் சிறந்த கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்று சுஷ்மா மாலிக் கூறுகிறார். இரண்டு வரலாற்று ஆதாரங்கள் நீரோ தானே நகரத்திற்கு தீ வைத்ததாகக் கூறுகின்றன என்கிறார் மேத்யூ. தீ எரிந்து கொண்டிருந்த போது அலங்கார ஆடையுடன் பாட்டுப் பாடத் தொடங்கினார் நீரோ என்பது அவர்களின் வாதம்.

ஏழாம் நூற்றாண்டில் புல்லாங்குழல் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் நீரோவின் காலத்தில் ஃபிடில் இசைக்கருவியே இல்லை என்றும் மேத்யூ கூறுகிறார். நீரோ லைர் என்ற இசைக்கருவியை வாசித்ததாகவும் கூறப்படுகிறது.

தீ வைத்ததாகக் கிறிஸ்துவர்கள் மீது குற்றச்சாட்டு

நீரோ சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தினர் தான் தீ வைத்ததாகக் குற்றம்சாட்டினார்.அந்த நேரத்தில் ரோமில் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும், பொது மக்கள் கிறிஸ்துவர்களின் மத நம்பிக்கைகளைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருந்ததாகவும், அவர்களைப் பற்றி வெறுப்பு உணர்வைக் கொண்டிருந்ததாகவும் டெசிட்டஸ் எழுதுகிறார் என்று சுஷ்மா மாலிக் கூறுகிறார்.எனவே பொது மக்களால் எளிதில் நம்பப்படுமாதலால் கிறிஸ்தவர்களைக் குற்றம்சாட்டுவது மிகவும் எளிதானது. நீரோ பின்னர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் நோக்கில், தீ வைத்ததற்குத் தண்டனையாகப் பொது வெளியில் அவர்களை துக்கிலிடச் செய்தார், காட்டு ஓநாய்களின் முன் அவர்கள் வீசப்பட்டனர், இரவில் உயிருடன் எரிக்கப்பட்டனர், பொதுமக்கள் அந்தக் காட்சியைக் காண கூட்டப்பட்டனர்.

முடிக்கப்படாத நீரோவின் அரண்மனை

இந்த தீ விபத்துக்குப் பிறகு, நீரோ ஒரு பெரிய அரண்மனையைக் கட்டினார். இதில் ஆடம்பரமான தளபாடங்கள் மற்றும் அறைக்கு வாசனை சேர்க்க சுவர்களுக்குள் வாசனை திரவிய குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கும் "கோல்டன் ரூம்" இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த அரண்மனையை நிர்மாணிப்பதற்காக ஒரு பெரிய அளவிலான பொருட் செலவிடப்பட்டது. ஆனால் அது கட்டி முடிக்கப்படாமலே இருக்கிறது.

சாம்பல் குவியலிலிருந்து மீண்டு, பழைய வாழ்க்கையை எட்ட முயன்று கொண்டிருந்த அந்த நகர மக்கள், இந்த அரண்மனையை நிர்மாணிப்பதில் மகிழ்ச்சியடையவில்லை. இது விளையாட்டு மற்றும் கொண்டாட்டங்களுக்காக, பொதுமக்களுக்காகத் திறக்கப்படும் என்று கூறப்பட்ட போதும் அவர்கள் இதை விரும்பவில்லை.

நீரோ இசைக்கருவியான லைர் வாசிப்பதிலும் பாடல் பாடுவதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். மேடையில் நடிப்பதையும் அவர் விரும்பினார். ஆனால் ரோமப் பேரரசரின் தகுதிக்கு இவை பொருத்தமில்லாதவை என்று செனட்டினர் கருதினர். ஆனால் நீரோ அதைப் பொருட்படுத்தவில்லை, கிரேக்கத்திற்குச் செல்ல ஒரு வருடம் விடுமுறை எடுத்தார், அங்கு அவர் நாடகப் போட்டிகளில் பங்கேற்றார்.மேடையில் ஒரு சோகமான கதையில் கதாநாயகியாக நடித்தபோதெல்லாம் நீரோ அவர் தனது இரண்டாவது மனைவி போபியாவின் முகமூடியை அணிந்திருந்தார் என்று கூறப்படுகிறது. அவரது கொலை காரணமாக அவர் துக்கத்திலும் குற்ற உணர்ச்சியிலும் சிக்கித் தவித்தார் என்பதற்கு இது ஒரு அடையாளம்.

மக்கள் விரோதியின் நாடகத்துவமான மரணம்

அவர் 30 வயதை எட்டிய நேரத்தில், நீரோவின் எதிர்ப்பும் கெட்ட பெயரும் பெரிதும் அதிகரித்தன. இராணுவத்தின் ஆதரவுடன், செனட் நீரோவை "மக்களின் எதிரி" என்று அறிவித்தது, இது ஒரு வகையில் அவரது மரணத்தை அறிவித்தது, அதாவது நீரோ கண்ட இடத்தில் கொல்லப்படலாம் என்று பொருள். பாதுகாப்பு அதிகாரிகள் பின் தொடர்ந்துவர, நீரோ இரவின் இருளில் தப்பி ஓடி, நகரின் புறநகரில் உள்ள தனது அரண்மனைகளில் ஒன்றில் மறைந்து தற்கொலை செய்து கொண்டார்.நீரோ தனது உயிரை மாய்த்துக் கொண்டபோது, அவரது கடைசி வார்த்தைகள் 'குவாலிஸ் ஆர்டிஃபெக்ஸ் பேரியோ' என்று கூறப்படுகிறது. நீரோவின் கடைசி தருணங்களில் பேசப்பட்ட இந்த வார்த்தைகளின் சரியான பொருளைக் குறிப்பிடுவது கடினம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவை பல அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம்:

"என் மரணத்தில் கூட நான் ஒரு கலைஞன்""என்னுடன் இறப்பவர் எப்பேர்ப்பட்ட கலைஞர் !""நான் ஒரு வர்த்தகனைப் போல இறக்கிறேன்"நீரோவின் இந்த வார்த்தைகளின் பொருள் என்னவாக இருந்தாலும், அவரது கடைசி வார்த்தைகள் அவரைப் போலவே நாடக பாணியில் இருந்தன என்று கூறினால் அது மிகையாகாது.

bbc.com/tamil/global-57481496?at_custom3=BBC+Tamil&at_custom1=%5Bpost+type%5D&at_custom2=facebook_page&at_custom4=9E21B006-CE96-11EB-BA29-
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, யாயினி said:

பழங்கால ரோமாபுரி வரலாறு: ரோம் நகரம் எரியும் போது உண்மையிலேயே நீரோ ஃபிடில் வாசித்தாரா?

இந்தக் கேள்வி நீண்ட காலமாக எனக்குள் இருக்கிறது.

இந்தக் கட்டுரையை வைத்து. ர முடிவுக்கு வர முடியவில்லை.

இணைப்புக்கு நன்றி யாயினி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 

பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான பயன்களும்!!

மாப்பிளை சம்பா :
உடலை பலபடுத்தும் மாமருந்து . திருமணதிற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.

கவுணி அரிசி :
புது மாப்பிள்ளைகான விருந்துணவு அரிசி. இதன் கஞ்சி குடித்தால் குதிங்கால் வலி நீங்கும் .

சிவப்பு கவுணி அரிசி :
புது மண தம்பதியர் உண்ண வேண்டிய அரிசி . இது ஒரு பலகார அரிசி. இட்லி,ஆப்பம், பணியாரம் செய்ய ஏதுவானது . குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும் .கருவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும் .

சேலம் சன்னா :
கர்ப்பகாலத்தில் உண்ண வேண்டிய அரிசி . குழந்தை பேரு நன்முறையில் நடக்கும் . களைப்பில்லாமல் வேலை செய்ய உதவும் . இது நாய் கடி விஷத்தை முறிக்கும் .

பூங்காற் அரிசி :
மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி . தாய்பால் சுரக்கும் .

கட்ட சம்பா அரிசி :
நோய் எதிர்ப்பு சக்தி தரும் .

சிங்கினி கார் அரிசி :
எல்லா விதமான நோயாளிகளும் உண்ண வேண்டிய அரிசி. உடல் நலம் பெற உதவும் .

இலுப்பைபூ சம்பா அரிசி :
சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். மூட்டு வலி,பக்க வாதம் போன்ற நோய்க்கான மருந்து . நரம்பு பிரச்சனையின் மருந்து .

காட்டுயானம் அரிசி :
இந்த அரிசியில் காஞ்சி வைத்து கறிவேப்பில்லை போட்டு மூடி வைத்து , மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் . இப்படி தொடர்ச்சியாக செய்தால் புற்றுநோயால் ஏற்படும் புண்கள் ஆறும் . இதுவே புற்று நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டும் என ஆய்வுகள் நடைபெற்று வருகிறது .

சூரகுருவை அரிசி :
நோய் எதிர்ப்பு சக்தி தரும் .

பனங்காட்டு குடவாழை அரிசி :
தொழிலாளர்களின் தோழன் இந்த அரிசி . அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பும், உடல் வலிமையையும் தரும் .

கருடன் சம்பா :
நோய் எதிர்ப்பு சக்தி தரும். சாப்பாடு மற்றும் பலகார அரிசி .

கருங்குறுவை அரிசி :
இதன் நெல் கரு நிறம். அரிசி செந்நிறம்  இது ஒரு மாமருந்து. இந்த அரிசியுடன் மூலிகை மருந்து சேர்த்தால் லேகியம் செய்ய முடியும் . அது யானைக்கால் நோய்க்கான மருந்து . குஷ்டதிற்க்கும் , விஷகடிக்கும் மாமருந்து. உடலை வலுவாக்கும் காயகல்ப சக்தி கொண்டது . இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஊரவைத்து ஆறுமாதம் கழித்து எடுத்தால் பால் போல் இருக்கும் . இதற்க்கு 'அன்ன காடி 'என்று பெயர் .இது காலராவிர்க்கான மருந்து . இது கிரியா ஊக்கியாக உள்ளது .

கார் அரிசி :
சர்க்கரை நோய்க்கும், வாதம் சம்பந்தமான நோய்க்கும், கரப்பான் களுக்கும் மருந்தாகும்.

தங்க சம்பா :
இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன் ஜொலிக்கும். நோய் எதிர்ப்பு திறனும் கொடுக்கும்.

தூயமல்லி அரிசி :
மேல குறிப்பிட்ட எல்லா அரிசிகளும் சிவப்பரிசி . கட்ட சம்பா தவிர்த்து . தூய மல்லி அரிசியானது இன்னும் மல்லிகை போல் பளபள வென இருக்ககூடியது .மக்கள் எதிர்ப்பார்க்கும் எல்லா குணங்களும் கொண்ட ஒரு அரிசி . தெவிட்டாத , நோய் எதிர்ப்பு சக்தி தரும் அரிசி .

இந்த பாரம்பரிய அரிசி எதுவும் உரமோ, பூச்சி கொல்லி மருந்தோ இல்லாமலேயே வளரக்கூடியது. மேற்காணும் அரிசி வகைகள் தானாக வளரக்கூடியது . தானே எதிர்ப்பு திறனுடன் வளர்வதால் இந்த அரிசியை உன்னுபவர்களுக்கும் அதே எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது.

பாரம்பரிய அரிசி உண்போம் . ஆரோக்கியத்தை பேணி, ஆயுளை அதிகரிப்போம்.

நன்றி-நெல் அதிகாரம்-தொகுப்பாளர் ரா. பொன்னம்பலம் அவர்களின் புத்தகத்தில் இருந்து

மேற்காணும் அரிசி வகைகள் அனைத்தும் , எல்லா இயற்கை உணவு அங்காடிகளில் கிடைக்கிறது . விலை சற்று அதிகம் . மருத்துவரிடம் கொடுப்பதில் பாதியை விவசாயிக்கும் கொடுக்கலாமே !

நன்றி-சுவாதி,வலை தமிழ்.

பல நெல்-அரிசி வகைகள் இன்று அழிந்து விட்டன என்கிறார்கள். இதேபோல் மாட்டிலும்-பசுவிலும் பல இன வகைகள் இருந்தனவாம்.ஒவ்வொரு இனப் பசுவும் கொடுக்கும் பால் மருத்துவக் குணங்கள் கொண்டன என்று படித்திருக்கிறேன். தெரிந்தவர்கள் பகிரலாம்.தெரிந்து கொள்ள முடியும்.

இதற்குக் காரணம் மண்வளம் காரணமாக அங்கு வளரும் புல்,செடி,மூலிகைகளைக் சாப்பிடுவதனால்,அங்கு வளரும் பசுக்கள் தரும் பால் மருத்துவக் குணங்கள் கொண்டவை என்று சொல்கிறார்கள். அவையெல்லாம் இப்போது எங்கே? இன்னமும் இருக்கின்றனவா?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, யாயினி said:
நினைவிருக்கா...
எத்தனை தொலைக்காட்சி தொடர்கள் வந்த போதும் அன்று 70,80...களில் எம்மை கட்டிப்போட்டு வைத்திருந்த இத்தொடருக்கு ஈடாகுமா..?
வேதாளம் முருங்கை மரம் ஏறியது கதையில்; ஆனால் நிஜத்தில்... எத்தனை கடை ஏறியிறங்கியிருப்போம் தவறவிட்டு விடுவோமோ என்கிற நம் பயக் கதையில்.
இம் முயற்சியில் நாமும் விக்கிரமன்களே...
முதல் முதலில் இரவல் தந்து என்னை புத்தகத்தில் புதையச்செய்தவர் என் அப்பாவின் அருமைத் தோழர் அமரர் 'தர்மலிங்கம் மாமா' (அம்புலிமாமா தந்த அன்பு மாமா)
🤩 அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்திரா, கோகுலம், லயன், முத்து, ராணி காமிக்ஸ்... இவைகள்தான் எங்கள் அன்றைய கார்ட்டூன், அனிமேஷன் எல்லாம்...
 

அனேகரின் வாசிப்பு முதல் நிலை  வேதாளம் முருங்கை ஏறின கதையோடு தான் ஆரம்பித்தது என்று சொல்லி கொள்ளலாம்.. எனக்கும் அப்படித்தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகி வரும் ஆல்கஹால் அற்ற பீர் மற்றும் ஒயின்

  • ஃபில் மெர்சர்
  • பிபிசி, சிட்னி
 
ஐரீன்

பட மூலாதாரம்,IRENE FALCONEl

 

 

ஆல்கஹால்அல்லாத பீர் மற்றும் ஒயின்.

ஆம். நீங்கள் படித்தது சரிதான். பீர், ஒயின் என்றாலே மதுபானங்கள் தானே. அதென்ன ஆல்கஹால் அல்லாத பீர் மற்றும் ஒயின் என்று கேட்கலாம்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி வடக்கு பகுதியின் கடற்கரை ஓரத்தில் தொழில்முனைவோரான ஐரீன் ஃபால்கோன் முதன் முதலாக ஆல்கஹால் அல்லாத பீர் மற்றும் ஒயின் கடை ஒன்றை திறந்துள்ளார். அவரது கடையின் பெயர் ’சான்ஸ் டிரிங்க்ஸ்’.

"இதுதான் ஆஸ்திரேலியாவின் முதல் ஆல்கஹால் அல்லாத மதுபானக்கடை. மேலும் இங்கிருக்கும் ஒரு பெரிய மதுக்கடைக்கு நேரெதிரே என் கடையை திறந்திருக்கிறேன். ஒரு தொழில்துறையை சீர்குலைக்க வந்திருக்கிறேன்" என்கிறார் ஐரீன

தற்போது ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற பானங்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது.

"முன்புபோல் கிடையாது. தற்போது இதை அனைவரும் மகிழ்ச்சியாக வாங்கி செல்கின்றனர்" என்கிறார் ஐரீன்.

மாற்றம்

பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஆஸ்திரேலியாவிற்கு குடி என்பது புதிது கிடையாது. உலகின் அதிகம் மது அருந்தும் நாடுகளின் பட்டியலில் முதல் சில இடங்களில் இந்த நாடு இல்லை என்றாலும், இங்கு பொது இடத்தில் மது அருந்துதல் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றே. யார் வேண்டுமானாலும் எளிதாக மது வாங்கலாம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் விலையும் குறைவுதான்.

ஆனால், இந்த பழக்கம் சற்று மாறிக் கொண்டு வருவது போல தெரிகிறது.

"ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி நாம் போய் கொண்டிருக்கிறோம்" என்கிறார் தனது மனைவி கரோலைனுடன் ஆல்கஹால் அல்லாத பானங்களை தயாரிக்கும் அலிஸ்டர் வைட்லி.

அலிஸ்டர் மற்றும் கரோலைன் வைட்லி

பட மூலாதாரம்,SEADRIFT

 
படக்குறிப்பு,

அலிஸ்டர் மற்றும் கரோலைன் வைட்லி

பெரும் மதுபான நிறுவனங்கள் விற்கும் மதுபானங்கள் ஒருபக்கம் இருக்க, ஆல்கஹால் அல்லாத பானங்களையும் நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

"நான்கு பேருடன் கூடிப் பேசி, மகிழ ஏதோ ஒரு பானம் தேவைப்பகிறது. அது மதுவாக தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை" என்கிறார் கரோலைன்.

எனினும் போதைக்காக ஆஸ்திரேலிய மக்கள் தேர்ந்தெடுப்பது மதுபானங்களைதான். மதுபானத்தை பொறுத்தவரை எந்த அளவும் ஆபத்துதான் என்கிறார்கள் சுகாதார அதிகாரிகள். இருப்பினும் எந்த ஒரு ஆணும் பெண்ணும் 10கிராம் ஆல்கஹாலுக்கு மேல் அருந்துவது மிக ஆபத்து என அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளில் 18ல் இருந்து 24 வயதுடைய ஆஸ்திரேலியர்கள் குடிக்காமல் இருப்பது இரட்டிப்பாகி உள்ளதாக லா டிரோப் பல்கலைக்கழகத்தின் மதுபான கொள்கை ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

27 வயதாகும் ஜெஸ் ஸ்டோர் மதுவிலக்கை கடைபிடித்து வருகிறார்.

அனைத்து விதமான மதுபானங்களையும் குடித்துவந்த அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த பழக்கத்தை கைவிட்டார்.

"எனது இருபதுகளில் பதற்றத்தால் அதிகம் குடித்து வந்தேன். ஆனால் தற்போது என் மனநிலை சிறப்பாக இருக்கிறது. குடித்து உங்கள் உணர்வுகளை இழப்பதை விட, இந்த உலகத்தை உணர்வது நன்றாக இருக்கிறது" என்கிறார் அவர்.

அதே போல வயதான சில ஆஸ்திரேலியர்களும் மதுவிலக்கை விரும்புகிறார்கள்.

"மது இல்லாத வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்கிறார் இரண்டு பதின்ம வயது குழந்தைகளின் தாயான 44 வயதாகும் ஜனீன் யங்.

ஜனீன் தனது 15 வயதில் குடிப்பழக்கத்தை தொடங்கினார். பின்னர் அவரால் ஒரு சில நாட்களில் இரண்டு பாட்டில்கள் ஒயின் வரை குடிக்க முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் மது அருந்தும் பழக்கத்தை கைவிட்டார்.

"நான் அப்போது இக்கட்டான சூழலில் இருந்தேன். என்னால் என் குழந்தைகளுக்கோ என் கணவருக்கோ என் நேரத்தை கொடுக்க முடியவில்லை. பதற்றமாகவும், யாருடன் பேசாமலும், மன சோர்வுடனும் இருந்தேன். எனக்கு இருந்த பதற்றம் அனைத்தும், நான் குடிப்பழக்கத்தை நிறுத்தியவுடன் காணாமல் போனது."

அதே நேரத்தில் மதுப்பழக்கத்தை விடும் முடிவு பலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக மாறியது.

"ஆரம்பத்தில் மதுப்பழக்கம் இல்லாதது ஒரு மாதிரியான பார்வையை தந்தது. தற்போத அது ஒரு நேர்மறையான வாழ்வியல் முடிவாக பார்க்கப்படுகிறது" என்கிறார் Sober upside என்ற ஆஸ்திரேலிய ஆதரவு மற்றும் ஆலோசனை இணையதளத்தின் சாரா கொனெலி.

கொரோனா பெருந்தொற்றும் மாற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்களை தள்ளியது.

சிட்னியில் இருக்கும் மோடஸ் ஒபெராண்டி ஆலையில் சக நிறுவனர் ஜாஸ் வியரின். இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் ஆல்கஹால் அற்ற நார்ட் பீரை அறிமுகப்படுத்தியது.

ஜாஸ் மற்றும் கிராண்ட் வியரின்

பட மூலாதாரம்,NORT

 
படக்குறிப்பு,

ஜாஸ் மற்றும் கிராண்ட் வியரின்

"இந்தப் பெருந்தொற்றுக்கு முன் மக்கள் சற்று அதிகமாக குடித்து வந்தார்கள். உண்மையில் இருந்து தப்பிக்கும் வழியாக அது இருந்தது. மக்களின் வாழ்வில் சமநிலையை உருவாக்க இது எனக்கு கிடைத்த வாய்ப்பாக பார்த்தேன். பீர் மாதிரியான சுவையில், ஆல்கஹால் இல்லாத பீரை உருவாக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால், அதை இத்தனை பேர் விரும்புவார்கள் என நினைக்கவில்லை என்கிறார்" வியரின்.

ஆஸ்திரேலியர்களால் மதுவை ஒட்டுமொத்தமாக விடமுடியாது, ஆனால், ஒரு சமநிலையை எதிர்ப்பார்க்கிறார்கள்

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ரேசன் அரிசியே சாப்பிட்டார் காமராஜர்
**********************************************************
வட்ட செயலாளர் ஆகி விட்டாலே, தங்கத் தட்டிலில் சாப்பிடும் காலம் இது. ஆனால் எளிமையாக வாழ்ந்த காமராஜர் உணவு பழக்க வழக்கத்திலும் எளிமையை கடைபிடித்தார்.
சாதம், ஒரு குழம்பு, கொஞ்சம் கீரை மசியல், ஒரு பொரியல் சிறிது மோர் என்ற அளவில் மிக எளிமையாக உணவு வகை இருந்தாலே காமராஜருக்குப் போதுமானது.
அவரிடம் உதவியாளராகவும் சமையல்காரராகவும் இருந்த பைரவனிடம் அவர், நாம் அனாவசியமாக செலவு செய்யக் கூடாது.
ரேசன் அரிசியைத்தான் வாங்கிச் சாப்பிட வேண்டும். சாதாரண மக்கள் எந்த உணவைச் சாப்பிட்டு வருகிறார்களோ, அதைத்தான் நாம் சாப்பிட வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தார்.
ரேசன் அரிசி என்றால், இப்போது உள்ள உயர் ரக அரிசி அல்ல.
அந்தக் காலத்தில் கொட்டை கொட்டையாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் மிக மோசமானதாகவும் ரேசன் அரிசி இருக்கும். அதை வாங்கித் தீட்டிக் கல் பொறுக்கிச் சுத்தப்படுத்தி தான் சமைக்க வேண்டும்.
அப்படிச் சமைத்தாலும் சாதம் நாற்றமெடுக்கும்.
இதனால் சாதாரண மக்களே ரேசன் அரிசியை வாங்குவதற்குத் தயங்கிக் கொண்டிருந்தனர். பரம ஏழைகளும் கூலித் தொழிலாளர்களும் தான் ரேசன் அரிசியைச் சமைத்து உண்பார்கள்.
இப்படிப்பட்ட நாற்றமெடுத்த ரேசன் அரிசியைக் கொண்டு சமைத்த சாதத்தைத்தான் காமராஜர் பல ஆண்டு காலம் முகம் சுளிக்காமல் சாப்பிட்டு வந்தார்.
ரேசன் அரிசி சாதத்தில் வரும் நாற்றத்தைச் சரிக்கட்ட சாப்பாட்டில் ஓரிரு சொட்டு நெய்யை விட்டாலே போதும் என்று யாரோ சொல்ல காமராஜர் ஐம்பது கிராம் நெய்யை வாங்கி வரச் செய்து, தினசரி இரண்டு சொட்டு நெய்யைச் சாப்பாட்டில் தெளித்துக் கொண்டு சாப்பிட்டு வந்தாராம்.
நெய் வாங்கும் போது ஐம்பது கிராமுக்கு மேல் வாங்கக் கூடாது ஒரு மாதத்திற்கு அந்த நெய்யைத்தான் செலவிட வேண்டும் என்று காமராஜர் கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தார்.
சுமார் ஏழெட்டு ஆண்டுகள் வரை நாற்றமெடுத்த ரேசன் அரிசியையே சாப்பிட்டு வந்த காமராஜர், பின்னர் சக்தி அரிசி, எனப்படும் கைக்குத்தல் அரிசியை வாங்கி வந்து சமைக்கும்படி பைரவனுக்கு உத்தரவிட்டார்.
வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் தான் அவர் சன்னரக அரிசி சாதம் சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
படித்ததிலிருந்து......
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

வரலாற்று வடிவமாகத் திகழும் யாழ்ப்பாணம் நகுலேஸ்வரர் ஆலயம்

 

 

 

கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயம் ஆகும். மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையபெற்ற மிகப்பழமைவாய்ந்த இவ்வாலயம் இலங்கையில் உள்ள பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகும்.

காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான இவ்வாலயம், நகுல முனிவர், சோழவேந்தன், நளன், அருச்சுனன், மாருதப்புரவீகவல்லி, ஆதி சோழ மன்னன், முசுகுந்தன் போன்ற வரலாற்று நபர்களால் வழிபடப்பட்ட தீர்த்தத் திருத்தலம் என வரலாற்று சான்றுகளில் கூறப்பட்டு வருகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலை கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்றும் பெயர் கொண்ட இக்கோயில் இந்நாளில் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டடு வருகின்றது.

9dMGrAF5T0dTMxAi_Overgrown_Statues.jpg?w
ஈழப்போரில் குண்டுவீச்சினால் சேதமடைந்த நகுலேசுவர ஆலயத்தின் கோபுரம்
படஉதவி : visitsrilanka.com

ஆரம்ப காலங்களில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராக காணப்பட்டதாகவும் பின் கடலரிப்பினால் மலைத்தொடர் அழிந்துபோனதாகவும் எஞ்சியுள்ள அடிவாரமே இப்போதுள்ள கீரிமலை என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

இருப்பினும் சமய நம்பிக்கைகளின் படி, மேரு மலையின் உச்சியில் தவம் செய்து கொண்டிருந்த சுதாமா என்னும்  முனிவர், தனது தவத்திற்கு இடையூறு செய்தமைக்காக யமத்கினி என்ற வேடனுக்கு சாபமிட்டுள்ளார். அதனால் அவன் கீரிமுகம் பெற்றதாகவும் பின்னாளில் அவ் வேடன் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சாப விமோசனம் பெற்று கீரிமுகம் நீங்கியதால் நகுல முனிவர் என அழைக்கப்பட்டதாகவும் இதனையடுத்தே இப்பிரதேசம் கீரிமலை என்றும் நகுலகிரி என்றும் பெயர் பெற்றதாகவும் சமய சித்தாந்தங்களின் படி சிலர் நம்பி வருகின்றனர்.

Kz8ApBGNt1FuplZR_5df5c4b7c942ff58bfa4cfa
உள்நாட்டுப் போரில் பாதிப்புக்குள்ளான
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் நுழைவுப் பகுதி
படஉதவி : visitsrilanka.com

பொதுவாகப் பழமையான ஆலயங்கள் என்றாலே வரலாற்று நிகழ்வுகளும் சில ஐதீகங்களும் கொட்டிக்கிடப்பது வழக்கம். அந்த வகையில் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் சான்றுகள் ஆரியச்சக்கரவர்த்திகால வரலாற்றையும் போர்த்துக்கேயர்கால வரலாற்றையும் நினைவுபடுத்துவதாக தொல்லியல் துறையினர் தெரிகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் நல்லுரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில், அரச ஆதரவு பெற்ற பிரதான தலமாக நகுலேச்சரம் ஆலயம் திகழ்ந்துள்ளது. பின்னர் மூன்று பிரகாரங்களும் ஐந்து கோபுரங்களும் கொண்டு காணப்பட்ட இந்த பிரம்மாண்ட ஆலயமானது போத்துக்கீசியர் காலத்தில் இடிக்கப்படுள்ளது. கி.பி 1621 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர்கள் நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், நகுலேசுவரம் ஆகிய ஆலயங்களை இடித்தழித்துள்ளனர். அப்போது பரசுரபாணி ஐயரெனும் பிராமணர் கீரிமலை ஆலயங்ககளின் சில பொருட்களையும் விக்கிரகங்களையும் கிணறுகளுள் போட்டு மூடி வைத்தார் என யாழ்ப்பாண வைபவ மாலையில் குறிப்புகள் காணப்படுகின்றது. 

மற்றும் நகுலேசஸ்வரத்தின் வரலாறுகள் தொடர்பில் தட்சிண கைலாசபுராணம், யாழ்ப்பாண வைபவமாலை, சீர்பாதகுலவனாறு, கைலாசமாலை, நகுலேஸ்வர புராணம், நகுலகிரிப்புராணம் என்பனவும் நகுலேஸ்வரர் விநோத விசித்திரக் கவிக்கொத்து, நகுலாம்பிகை குறவஞ்சி, நகுலமலைச் சதகம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பம்சமெனலாம்.

pyZM1xi8Lio5N84S_FotoJet.jpg?w=700
யாழ்ப்பாண வைபவ மாலை புத்தகம் 
படஉதவி : poobalasingham.com

இக்கோவிலின் சிறப்பில் ஒன்றான தீர்த்தமானது, பகீரதனின் முயற்சியால் பூமிக்கு கொண்டு வரப்பட்ட கங்கையின் துளிகள் என நம்பப்பட்டு வருகின்றது. பரமசிவன் பார்வதிக்காக உருவாக்கிய தீர்த்தம் இது என்றும் கூறுவார்கள். ஆகையால்தான் இந்த தீர்த்தம் காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு இணையான மகத்துவம் பெற்று விளங்குகின்றது

n6lA9noUkSMlK7XB_D1D-AciW0AAcfFA.jpg?w=7
கீரிமலைத் தீர்த்தக் குளம்
படஉதவி : twitter.com

1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வரலாற்று நிகழ்வுகள் நம்பப்படும் வகையில் இங்குள்ள சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மாருதப்புரவல்லி குதிரை முகத்துடன் இருக்கும் சிற்பங்கள், முனிவரிடம் வரம் பெறுவது போல் செதுக்கப்பட்ட சிற்பங்கள், குதிரைமுகம் நீக்கிய மாருதப்புரவல்லியின் தோற்றம், ஆட்சி அரியணையில் அவர் வீற்றிருக்கும் காட்சி போன்று செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் இவ்வாலயத்தின் வரலாற்று மரபுரிமையை நினைவு படுத்துவனவாக உள்ளது எனலாம். 

U7hs3okVp1b5ec9L_ATxBn0Vdzwtn0mnF_FotoJe
நகுலேஸ்வரம் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள தூண் சிற்பங்களும், குதிரை முகம் கொண்ட மாருதப்புரவல்லியின் சிற்பமும்
படஉதவி : flickr.com
Skifq28GWD9eLHUs_nagule-03.jpg?w=700
உடைந்த நிலையில் காணப்படும் நகுலேஸ்வரம் ஆலயத்தில் சிற்பங்கள்
படஉதவி : flickr.com

யாழ்ப்பாணக் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம், இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பல்வேறு குண்டு வீச்சுகளையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டு பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி கேதாரகௌரி விரதத்தின் போது கோயிலின் மீது குண்டுகள் வீசப்பட்ட நிலையில் மூலஸ்தானம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் பெரும் சேதத்திற்குள்ளானது. அந்நிலையில் பக்தர்களும் அர்ச்சகர்களும் சிறப்பு அனுமதியின்றி இக்கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. பின்னர் 2009 ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது மக்கள் வழிபாட்டிற்கு விடப்பட்டது.

 
8QEGwff0rxn8ULNX_blogspot.com.jpg?w=700
புனரமைப்பின் போது எடுக்கப்பட்ட நகுலேஸ்வரர் ஆலயத்தின் தோற்றம்.
படஉதவி : blogspot.com
niGsnBCKZoRrEZrC_jaffnatours-naguleswara
நகுலேஸ்வர ஆலயத்தின் உள்வீதி
படஉதவி : thesundayleader.lk
Xnu0yzTruWq7DhH4_DfUAYwTV4AEm21j.jpg?w=7
கீரிமலை நகுலேஸ்வரர் கோவிலின் தற்போதைய பிரதான கோபுரம்
படஉதவி : twitter.com

இந்நாட்களில் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையான நேரத்தில் எண்ணற்ற சைவப்பெருமக்கள் தங்கள் பித்ருக் கடன்களை கீரிமலைத் தீர்த்தத்தில் செலுத்தியா பின்னர் ஆலயம் சென்று மோட்ச தீபம்ஏற்றி, ஆத்ம சாந்தி பிரார்த்தனை செய்து வேண்டுதலை நிறைவு செய்வதை வழக்கமாகக் கொண்டு நகுலேஸ்வரரின் தரிசனம் பெற்று வருகின்றனர்.https://roar.media/tamil/main/history/jaffna-naguleswaram-temple

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

195295574_10226320322656407_879297385231

’’நினைவிருக்கா?’’

இதை எப்படி மறக்கிறது, மறந்தால் எனது மழலை காலத்தையும் மறந்துவிடவேண்டியதுதான்.

வண்ண வண்ண ஓவியங்கள் மிக எளிமையான கதைகள், அதிலும் இந்த வேதாளம் விக்கிரமாதித்தன் கதையை படிக்கும்போது மன்னன் கையில் வாள், அந்த பாம்பு எல்லாம் பார்த்து லேசான பயத்துடனேயே படித்த ஞாபகம். 

என் அம்மாவாங்கி அவ படித்து பின்னாட்களில் அண்ணா படித்து அதற்கப்புறம் நான் படித்து என்று பல அம்புலிமாமாக்கள் உட்பட பல சிறுவர் மலர்கள், நாவல்கள், அந்தகால பத்திரிகைகள் என  வாசிப்பு பழக்கமும் தமிழார்வமும் மிக்க என் தாயாரினால் எங்கள்  வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன,

ஒரு இடப்பெயர்வில் ஒரு மாசம் வேறு இடத்தில் தங்கியிருந்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது  அத்தனையையும் கறையான் அரித்து இருந்தது, கூடவே எம் குழந்தை பருவ நினைவுகளையும் சேர்த்து.

டிஜிட்டலுக்கு மொத்த உலகமுமே மாறிவிட்டாலும் இந்த வேதாளங்கள் அந்த முருங்கைமரத்தை மறக்காமலிருக்கும்.

அன்புதம்பியும் யாயினியும் பக்கம் பக்கமாக பகிரும் அம்சங்கள் பல்சுவையானவை... தொடர்க. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு பையனுக்கு புதுசா கல்யாணம் ஆகுது,கொஞ்ச நாள் கழிச்சு வேலைக்கு போனவன் திரும்ப வரும்போது புது மனைவிக்கு ஆசையாய் முறுக்கு வாங்கிவந்திருக்கிறான்,அவன் மனைவி ராத்திரி பத்து மணிக்கு உட்கார்ந்து கடக்கு முடக்கு சத்தத்துடன் சாப்பிடுகிறாள்,......
♥அடுத்த நாள் காலையில் அவன் அம்மா சொல்றாங்க "பாத்து, வளர்த்து, படிக்க வச்சு, கல்யாணம் பண்ணிவச்ச ஆத்தாளுக்கு இது வரை எதாவது வாங்கி கொடுத்து இருக்கியா,ஆனா நேத்து வந்தவளுக்கு முறுக்கு" என்று சொல்லி மகனுடன் தனது முதல் சண்டையை ஆரம்பித்திருக்கிறார் அவனது அம்மா.
♥அதுவரை கள்ளம், கபடம் தெரியாத அந்த பையனுக்கு ஒரு யோசனை,........
♥முறுக்கு வாங்கி போய் கொடுத்தால் தானே பிரச்சனை,இன்று முதல் மனைவிக்கு அல்வா வாங்கி போய் கொடுப்போம் என்று வாங்கி செல்கிறான்,
♥அடுத்த நாள் அம்மா ஒன்றும் கேட்கவில்லை..... ஏன் என்றால,
அவனது மனைவி சாப்பிடும் போது சத்தம் வரவில்லை,
♥அம்மாவை ஏமாற்ற முதன் முதலில் அல்வா பயன்பட்ட காரணத்தால்....
அடுத்தவர்களை ஏமாற்றுவதற்கு "அல்வா" கொடுப்பது என்ற பெயரும் வந்தது
அல்வா பிறந்த கதை ... இதுதான்....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்ரீ நடராஜர் சிலை ஜெனிவா ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்ட நாள் இன்று.
(18 -6 -2004)
ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் [European Organization for Nuclear Research,]
ஜெனீவா அருகே சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (CERN) உலகின் மிகப்பெரிய மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை மிகவும் நுட்பமான அறிவியல் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறது.
"நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் அனைத்தையும் உருவாக்கும் துகள்களின் அடிப்படை கட்டமைப்புகளை நாங்கள் ஆய்வு செய்கிறோம்," என்கிறது அந்த நிறுவனத்தின் இணையதளம்.
'கடவுள் துகள்கள்' என்று பரவலாக அறியப்படும் 'ஹிக்ஸ் போஸான்' துகள்கள் இருப்பது வெறும் அனுமானமாக இருந்த சூழலில், ஹிக்ஸ் போஸான்ஸ் அளவில் நிறையுடைய துகள்கள் இருப்பதை கண்டறிந்த ஆய்வுகள் இங்குதான் செய்யப்பட்டன.
அறிவியல் ஆராய்ச்சியில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய ஆய்வு நிறுவனத்தின் வளாகத்தில் இரண்டு மீட்டர் உயரம் உள்ள நடராஜர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.இந்த சிலை 2004 ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று அங்கு நிறுவப்பட்டது. ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் நிறுவப்பட்ட ஆண்டும் அதுதான்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் இடையில் 1960 ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர்பு பல்லாண்டுகளாக நீடித்து வருவதைக் கொண்டாடும் வகையில் இந்தியா அளித்த பரிசுதான், 39 மற்றும் 40 என எண்ணிடப்பட்ட கட்டடங்களுக்கு இடையே உள்ள சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலை என்கிறது அந்த ஆய்வு மையத்தின் அலுவல்பூர்வ இணையதளம்.
நடனமாடும் நிலையில் உள்ள சிவப்பரம்பொருள் சனாதன தர்மத்தில்[ ஹிந்து மதம் ] நடராஜர் என்று அழைக்கப்படுவதாகவும், நடனத்தின் மூலம் சிவன் பிரபஞ்சத்தை ஆக்கவும், இயக்கவும் அழிக்கவும் முடியும் என்பது சனாதன தர்மத்தில் நம்பிக்கையாக உள்ளது என்றும் அந்த இணையதளம் கூறுகிறது.
'காஸ்மிக் டான்ஸ்' என்று வழங்கப்படும் நடராஜரின் பிரபஞ்ச நடனத்தைத் துணை அணுத்துகள் அல்லது அணுவகத்துகளின் (Subatomic particles) நகர்வுடன் உருவகப்படுத்தும் வகையிலேயே இந்திய அரசு இந்த சிலையைத் தேர்வு செய்தது என்று கூறுகிறது ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் கேள்வி - பதில் பக்கம் ஒன்று.
இந்த சிலையைச் செய்த சிற்பி கும்பகோணம் இராஜன் ஆவார்.தில்லியில் உள்ள இந்திய அரசின் நிறுவனமான 'சென்ட்ரல் காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் எம்போரியம்' 1998 ஆம் ஆண்டு அளித்த ஆணையின் பேரில் இந்திய வெளியுறவுத் துறைக்குச் சிலையைச் செய்து கொடுத்ததார் கும்பகோணத்தில் சிற்பக்கூடம் நடத்தி வந்த சிற்பி இராஜன்.
201915634_2886379241577577_2931234652991
 
 
200046715_2886379314910903_3513246958230
 
 
202366585_2886379308244237_2331285632498
 
 
202507740_2886379351577566_7969365958123
 
 
202304612_2886379291577572_9460417852006
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

201464882_10158637136118780_132801383218

 

ரொம்ப நாள் கனவு. பணம் இல்லாததால இதுவரைக்கும் வாங்க முடியலை.

எல்லா செலவையும் சுருக்கி கொஞ்சம் கொஞ்சமா பணத்தை சேர்த்து வச்சு நேத்து தான் வாங்கினேன்.

வாங்கினதுல இருந்து என் கண்ணு பூராவும் இது மேலேயே தான் இருக்கு.

இவ்வளவு காஸ்ட்லியா வாங்கணுமா?ன்னு எல்லாரும் கேட்டாங்க.

அந்த கலருக்கே எவ்வளவு வேணாலும் குடுக்கலாம்னு சொல்லிட்டேன்.

வீட்டுல மத்தவங்க எல்லாம் சமாதானம் ஆயிட்டாலும் இதை வச்சு எனக்கும் என் மனைவிக்கும் பயங்கர சண்டை.இதை...குழம்பா வைக்கலாமா? ரோஸ்டா பொறிக்கலாமா?ன்னு..!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தந்தைகளாக இருக்கும் அனைத்து உறவுகளுக்கும், இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் 💐👋

 

Edited by யாயினி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2021 at 23:47, யாயினி said:

அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்திரா, கோகுலம், லயன், முத்து, ராணி காமிக்ஸ்... இவைகள்தான் எங்கள் அன்றைய கார்ட்டூன், அனிமேஷன் எல்லாம்...

சிறுவயதில் இந்த மூன்றையும் அப்பா வாங்கிவரும் பொழுது எனது முதல் தெரிவு - ராணி காமிக்ஸ் அதிலும் மாயாவியும் மாடஸ்தியும்தான் அதிகம் விரும்பிவாசித்தவை..  அதன்பின்பு அம்புலிமாமா - வேதாளம் சொல்லும் கதை மூன்றாவதுதான் - கோகுலம்.. 

நன்றி யாயினி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்ககாலத் தந்தையர் - பகுதி 1

 
%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25A3%25E0%25AF%258D%2B2.jpg
 
ஆதிமனிதனின் வாழ்க்கை மெல்ல நாகரீகம் அடைய அடைய தாயைவிட தந்தையர் முதன்மை அடையத் தொடங்கினர். தந்தைக்கும் பிள்ளைக்கும் உள்ள தொடர்பு பரம்பரை பரம்பரையாக வருவதை மனிதர் கண்டனர். பண்டைய தமிழரும் அதனை அறிந்திருந்தனர். தொல்காப்பியத்தில் 
“தந்தையர் ஒப்பர் மக்கள்”                            
                                            - (தொல்.கற்பு: 145: 23)
என்னும் பழமொழியை தொல்காப்பியர் கூறுவதால் அவர் காலத்திற்கு முன்பிருந்தே பரம்பரையியல் பற்றிய தெளிவு தமிழரிடம் இருந்ததை நாம் அறியலாம். ஆதலால் தந்தையர் என்ற தகுதியை அடைய ஒருவருக்கு பிள்ளைகளாகிய மக்கள் இருக்க வேண்டும். மக்களைப் பெறுவதற்கு காளையர் காலம் காலமாகச் செய்வது காதல் தானே. காளையர் காதல் செய்ய கன்னியர் வேண்டாமா? கன்னியரைப் பெற்ற சங்ககாலத் தந்தையர் எப்படி கன்னியரை வளர்த்தனர் பார்ப்போமா?
 
 
 
மகள் நிலத்தில் நடந்தாலே மனம் நொந்து அதட்டும் சங்ககாலத் தந்தையைப் பற்றி அகநாநூற்றில் 
“எந்தையும் நிலன் உறப்பெறான், சீரடி சிவப்ப
எவன் இல! குறுமகள்! இயங்குதி என்னும்”        
                                            - (அகம்: 12: 2 - 3)
என மகள் சொல்வதாக கபிலர் காட்டுகிறார். மகள் நிலத்தில் நடப்பதைப் பார்த்த தந்தை அதனைப் பொறுக்கமாட்டது எடி! சின்ன மகளே! உன் சிறிய அடி சிவக்க எதற்காக அங்கும் இங்கும் திரிகிறாய், என அதட்டிக் கேட்பாராம். தான் பெற்றெடுத்த மகள் மேல் சங்ககாலத் தந்தைக்கு எவ்வளவு பேரன்பு பார்த்தீர்களா? 
 
 
பொன்போன்ற மேனியும் அழகிய கூந்தலுமுடைய இளநங்கை ஒருத்தி, பெருஞ்செல்வனான தன் தந்தைக்குச் சொந்தமான அகன்ற பெரிய மாளிகையில் நடந்து திரிந்தாள். அதனை கயமனார் என்ற சங்ககாலப் புலவர் பார்த்தார்.
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி
அஞ்சில் ஓதி இவளும்
பஞ்சில் மெல்லடி நடை பயிற்றுமே”
                                                                   - (குறுந்தொகை: 324: 6 - 9)                               
என அதனை நேரடி வருணனையாகத் தந்துள்ளார்.
 
images-122.jpeg
விளையாடுகின்ற பந்தை காலால் உருட்டி, உருட்டி ஒடுபவள் போல ஓடி அவளது பஞ்சு போன்ற மென்மையான பாதங்கள் நடை பயில்கின்றனவாம். கயமனார் இப்பாடலில் செல்வத்தந்தையையும் பெரிய மாளிகையில் நடந்து திரிந்த மகளையும் மட்டும் எமக்குக் காட்டவில்லை. அதற்கு மேலாக ஒரு வரலாற்றைப் பொதிந்து வைத்திருக்கிறார். அந்த இளநங்கையின் நடையைக் கூறவந்தவர், ‘ஆடு பந்து உருட்டுநள் போல’ எனச் சொன்ன இடத்தில் சங்ககால மகளிர் கால்ப்பந்து ஆடியதையும்  வரலாற்றுப் பதிவாகத் தந்திருக்கிறார். இந்த இருபத்தொராம் நூற்றாண்டில் கூட தமிழ்ப்பெண்களால் பெரிதாக இன்னும் விளையாடப்படாத கால்பந்தாட்டத்தை, சங்ககாலப் பெண்கள் சாதாரணமாக விளையாடித் திரிந்ததை இவ்வரி எமக்குக் காட்டுகின்றது.   
 
பாரி பறம்பு நாட்டை ஆண்ட குறுநில மன்னன். அவன் கடைஎழு வள்ளல்களில் ஒருவன். அவனே முல்லைக்கொடிக்கு தேரீந்தவன்.  சங்ககாலப் புலவர்களில் புகழ்பூத்த கபிலர் பாரியின் அரசவைப் புலவராகவும், பாரியின் புதல்வியரான ‘பாரிமகளிரின்’ குருவாகவும் இருந்தவர். பாரிமகளிரின் தமிழ் அறிவைப் பறைசாற்றியபடி சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடல் பாரிமகளிரை  சங்கப்புலவர் வரிசைக்கு உயர்த்தி இருக்கிறது.
 
Unknown-24.(null)
தந்தையாகிய பாரி மேல் அவர்கள் வைத்திருந்த அன்பையும் அவர்களது கையறுநிலையையும் பாடலில் வடித்திருக்கிறார்கள். 
“அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையோம் எம் குன்றம் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றெறி முரசின் வேந்தர் எம் 
குன்றம் கொண்டார் யாம் எந்தையும் இலமே”       - (புறம்: 112)
பாரிமகளிரின் இப்பாடல் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழராகிய எமது கையறுநிலைக்கும் பொருந்தும். நாம் தாய் நாட்டைப் பெரிதாக மதித்து ஈழம் எமது தாய்நாடு எனக்கூறுகிறோம். நம் தாய்நாடாகிய ஈழம், போரில் சிக்கிச் சிதறுண்டு சீரழிந்து கிடப்பதுபோல் பாரியின் பறம்புமலையும் சங்ககாலப் போரால் சிதைந்து கிடந்தது. அதைப் பார்த்த கபிலர் பறம்புமலையின் பழைய சிறப்பை கூறுமிடத்தில் பாரிமகளிரின் தந்தைநாடு எனப்போற்றியுள்ளார்.
 
images-121.jpeg
“பாசிலை முல்லை முகைக்கும்
ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே”     - (புறம்: 117: 9 - 10)
பசுமையான முல்லை அரும்பு போன்ற பற்களையுடைய அழகிய வளையல்களை அணிந்த பாரிமகளிரின் ‘தந்தை நாடு’ என்கிறார். பாரி பொறுப்பு மிக்க தந்தையாய் இருந்து, தன் மகளிர் இருவருக்கும் கல்வியறிவு ஊட்டி வளர்த்ததாலேயே சங்கப்புலவர் வரிசையில் பாரிமகளிர் தனியிடம் வகுக்கின்றனர். சங்ககாலத்  தந்தையர் வாழ்வுக்கு பாரியும் நல்ல ஓர் எடுத்துக்காட்டாகவே விளங்குகிறான்.
 
இன்னொரு சங்ககாலத் தந்தை தன் அருமை மகளின் உயிர்காக்க என்ன எல்லாம் கொடுக்க முன்வந்தான் என்பதைப் பார்ப்போமா? நன்னன் பூழி நாட்டை ஆண்ட சிற்றரசன். அவனது தோட்டத்து மாமரத்தில் இருந்த மாங்கனி ஒன்று, அருகே ஓடிய வாய்க்காலில் வீழ்ந்து மிதந்து வந்தது. இளம் பெண் ஒருத்தி அந்த வாய்க்காலில் நீந்தி விளையாடிக்கொண்டிருந்தாள். அவ்வாய்க்காலில் மிதந்து அவளருகே வந்த அம்மாங்கனியை எடுத்து உண்டாள். அதனை அறிந்த நன்னன் அவளுக்கு மரண தண்டனை விதித்தான். சான்றோர் பலர் தடுத்தும் நன்னன் கேட்கவில்லை. 
 
Unknown-23.(null)
அவள் தந்தையோ மகள் செய்த தவறுக்காக எண்பத்தொரு ஆண்யானைகளும், அவளுடைய நிறையளவு பொன்னால் செய்த பாவை ஒன்றும் தருவதாகக் கெஞ்சிக் கேட்டான். அதற்கும் நன்னன் உடன்படாது சிறுபெண் என்றும் பாராது ஈவிரக்கமின்றி மரணதண்டனை கொடுத்தான். அதனைப் பரணர்
“மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு, அவள் நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் 
பெண்கொலை புரிந்த நன்னன்”                                                                  - (குறுந்தொகை: 292) 
எனக் குறுந்தொகையில் கூறியுள்ளார். சங்ககாலத் தந்தையர் தமது பிள்ளைகளுக்காக இன்னும் என்ன எல்லாம் செய்தார்கள் என்பதை தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி.

சங்ககாலத் தந்தையர் - பகுதி 2

 
 
ocean-shark-fish_w725_h484.jpg
சங்ககாலக் கன்னியரை மட்டுமல்ல காளையரையும் தந்தையர் அன்பாகவும் பண்பாகவும் அறிவோடும் வளர்த்துள்ளனர். 
“..................... நளி கடல்
திரைச்சுரம் உழந்த திண்திமில் விளக்கில்
பன்மீன் கூட்டம் என் ஐயர்க் காட்டிய
எந்தையும் செல்லுமார் இரவே” 
 
பெருங்கடலின் அலைகளில் சிக்கிச் சுழலும் படகின் விளக்கொளியில் தன் அண்ணன்மார்க்கு பலவகையான மீன் கூட்டங்களைக் காட்ட, என் தந்தையும் இரவு சென்றார்’ என்கிறாள் ஒரு சங்க காலக் கன்னிகை. சங்ககாலத் தந்தை இரவு நேரத்திலும் கடல்வாழ் மீன்களின் கூட்டத்தை தன் மக்களுக்குக் காட்டி, கடல்வாழ் உயிரினம் பற்றிய அறிவை வளர்த்தமை நெஞ்சை தொடுவதாகும்.
 
பிள்ளைகளின் பெயரைக் கூறியும் சங்ககாலத் தந்தையர் அழைக்கப்பட்டிருக்கின்றனர். 
செம்பொற்சிலம்பின் செறிந்த குறங்கின்
அம்கலுழ் மாமை, அஃதை தந்தை
அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்”         - (அகம்: 96: 11 - 13)
செம்பொன்னால் செய்த சிலம்பையும், குறங்கு செறிபூட்டிய தொடைகளையும், அழகொழுகும் மாமை நிறத்தையும் உடைய அஃதை என்பவளின் தந்தை என இச்சோழ அரசனை மருதம் பாடிய இளங்கடுங்கோ குறிப்பிடுகிறார்.
 
அதேபோல் அணிகலன் அணிந்திருக்கும் பணைத்த தோள்களையுடைய ஐயை என்பவளின் தந்தை மழைபோல் வாரி வழங்கும் தித்தன். அவனும் ஒரு சோழ அரசனே. அதனை 
“இழையணி பணைத்தோள் ஐயை தந்தை
மழைவளம் தரூஉம் மாவண் தித்தன்”               - (அகம்: 6: 3 - 4)
என பரணர் கூறியுள்ளார்.
 
அகுதை என்பவன் பெரும் வீரன். நான் முன்னே சொன்ன அஃதையும் இந்த அகுதையும் ஒருவர் அல்ல. அஃதை சோழ அரசன் மகள். இந்த அகுதை பாண்டியப்படை மறவன். இவனைக் கபிலர் ‘மணநாறு மார்பின் மறப்போர் அகுதை’ எனப் புறநானூற்றில் புகழ்ந்துள்ளார். இவனின் தந்தையை ‘அகுதை தந்தை’ எனப் பரணரும் குறுந்தொகையில் குறிப்பிடுகின்றார். அகுதையின் தந்தை வெள்ளிப்பூண் போட்ட தலைக்கோல் வைத்திருக்கும் ஆடல் மங்கையருக்கு பெண்யானைகளைப் பரிசாகக் கொடுத்தாராம்.
 
“இன்கடுங்கள்ளின் அகுதை தந்தை
வெண்கைடைச் சிறுகோல் அகவன் மகளிர்
மடப்பிடி பரிசின் மான”
என்கிறார் பரணர்.
 
இதில் சிறுகோல் என்பது தலைக்கோல். அதனை 
“இருங்கழை இறும்பின் ஆய்ந்து கொண்டறுத்த
நுணங்கு கண் சிறுகோல் வணங்கிறை மகளிரோடு”   
                                                   - (அகம்: 97: 9 - 10)
என மாமூலர் அகநானூற்றில் சொல்வதால் அறியலாம். அரசர் கையில் செங்கோல் இருப்பது போல பரதக்கலையில் தலைசிறந்து விளங்குபவருக்கு கையை அலங்கரிக்கக் கொடுப்பதே தலைக்கோல். ஐயை தந்தை, அகுதை தந்தை என பிள்ளைகளின் பெயரைக் கூறி தந்தையரை அழைக்கும் வழக்கம் பண்டைக் காலத் தமிழரிடமிருந்து தொடர்ந்து வருகின்றது. 
 
சங்ககாலத் தந்தையர் தம் மக்களுக்கு செய்து கொடுத்த தங்கநகைகள் பற்றிய செய்திகளையும்  சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. மகளொருத்தி தனக்கு தோளில் அணியும் எல்வளை வேண்டும் என அழுதாள். ஆனால் தந்தையோ காப்புகள் கழன்று விழாதிருக்க முன்கையில் அணியும் தொடி செய்து கொடுத்தார். அவள் காதல் வசப்பட்ட பொழுது தோள் மெலிந்தாள். அவளது உடல் மெலிய கையில் இருக்கும் காப்புகள் தானே கழன்று விழும். அதனால் அவளின் காதல் பெற்றோருக்குத் தெரியவந்திருக்கும். தந்தை செய்து கொடுத்த தொடி காப்புகள் கழன்று விழாது தடுப்பதால் அவளது காதலை பெற்றோர் அறியவில்லை. எனவே தந்தையின் செயலை எண்ணி மகள் மனதுக்குள் பாராட்டும் காட்சியை
‘திருந்து கோல் எல்வளை வேண்டி யான் அழவும்‘     
                                                    - (நற்றிணை: 136)
எனத் தொடங்கும் நற்றிணைப்பாடல் காட்டுகிறது. சங்ககாலத் தந்தையர் மட்டுமே பிள்ளைகளுக்கு நன்மை செய்தார்கள் என நினைக்க வேண்டாம். பிள்ளைகளும் தந்தையர்க்கு உதவி செய்ததை சங்க இலக்கியம் எடுத்துச் சொல்கிறது. 
 
images-147.jpeg
அன்னிஞிமிலி என்பவளின் தந்தை கோசர்களின் ஆட்சிக்காலத்தில் மாடுமேய்க்கும் தொழில் செய்து வந்தார். அவருடைய மாடொன்று ஒருவரின் வயலில் புகுந்து அங்கு முளைத்திருந்த பயறை மேய்ந்தது.   அது கோசர்களின் அவையில் விசாரணைக்கு வந்தது. அன்னிஞிமிலியின் தந்தை, தமது மாடு பயறை மேய்ந்ததை ஒப்புக்கொண்டபோதும், கோசர்கள் அவரின் கண்களை பெயர்த்து எடுத்தனர். இதனை அறிந்த அன்னிஞிமிலி, ‘தன் தந்தையின் கண்களைப் பறித்தவர்களை யான் பழிவாங்குவேன். அதுவரை பாத்திரத்தில் உணவு உண்ணமாட்டேன். தூய ஆடை உடுக்கமாட்டேன்’, என சூளுரத்தாள். அவள் தந்தையின் கண்கொண்டவர் அரசனாக இருந்த போதும் அவள் அதற்குப் பயப்படவில்லை. அதனை ஒரு தவமாகவே மேற்கொண்டாள். கோசர்கள் செய்த கொடுமையை திதியன் என்பவனுக்கு கூறி, அவன் துணையோடு தன் வஞ்சினம் முடித்து தந்தையை மகிழ்வித்தாள். அந்த வரலாற்றுப் பதிவை
“பாசிலை அமன்ற பயறு ஆபுக்கென
வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து, அருளாது
ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பிய
செருஇயல் நல்மான் திதியற்கு உரைத்து அவர்
இன்உயிர் செகுப்பக் கண்டு சினம்மாறி
அன்னிமிஞ்லி............”                                        - (அகம்: 262)
என பரணர் அகநானூற்றுப் பாடலில் எழுதியுள்ளார். 

அழகிய பெண்ணின் தந்தையை எப்படி தன் வசமாக்கி அவளை அடையளாம் என நினைக்கும் இளைஞன் ஒருவனையும் அகநானூறு காட்டுகிறது. 
 
 
2+-+Copy.jpg
வேறு நாட்டு இளைஞன் ஒருவன் கடற்கரையில் ஓர் அழகிய இளமங்கையைக் கண்டான். காதல் கொண்டான். ‘பொன் போன்ற பூக்களைச் சூடியிருக்கும் கூந்தலை உடையவள். கடற்கரையில் விளையாடிக் களைத்திருக்கும் அவளுக்கு விலையாக கப்பல் நிறைந்த பொருளைக் கொடுத்தாலும் என்னால் அடைய முடியாதவள். கடல் முத்துக்களை வாரிக் கொணர்ந்து அவற்றைப் பிரித்து எடுக்கும் பெருந்துறைக்கு உரிமையானவன் அவளுடைய தந்தை. ஆதலால் நம் நாட்டைவிட்டு இங்கு வந்து, அவளின் தந்தையுடன் சேர்ந்து அவளின் உப்பளத்தில் வேலை செய்தும், ஆழ்கடலுக்கு மரக்கலத்தில் சென்றும், அவனைப் பணிந்தும் அவனோடு இருந்தால் ஒருவேளை, அவனது மகளை எனக்கு மணம் செய்து தருவானோ?’, என நினைக்கின்றான். 
 
“பொன் அடர்ந்தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப்
பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள்
திணிமணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய்தொடிக் குறுமகள்,
நலம்சால் விழுப்பொருள் கலம்நிறை கொடுப்பினும்
பெறல் அருங்குரையள் ஆயின் அறம் தெரிந்து
நாம் உறை தேஎம் மரூஉப்பெயர்ந்து அவனொடு
இருநீர் சேர்ப்பின் உப்புடன் உழுதும்
பெருநீர்க்குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்
தருகுவன் கொல்லோ தானே! விரிதிரைக்
கண் திரள்முத்தம் கொண்டு ஞாங்கர்த்
தேனிமிர் அகன்கரைப் பகுக்கும் 
கானலம் பெருந்துறைப் பரதவன் எமக்கே?”      
                                                  - (அகநானூறு: 280)
என அம்மூவனார் கூறுவதிலிருந்து, இரண்டாயிர வருடங்களுக்கு மேலாகியும் காதல் செய்யும் இளைஞர்களின் மாறாத உளப்பாங்கையும் காணலாம்.
 
பெண்களின் அழகில் மயங்கி பெண்கேட்டு வந்த அரசரையும், அரசரென்றாலும் பெண் கொடுக்க மறுக்கும் தந்தையரையும் தொடர்ந்து காண்போம்.
இனிதே, 
தமிழரசி.
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.