Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
No automatic alt text available.
 
மகாகவி பாரதியார். . .


அரிது அரிது மானிடராதல் அரிது. அதனினும் கூன் குருடுசெவிடு நீங்கிப் பிறத்தல் அரிது என்பதோடு மட்டும் ஒளவை தனது பாடலை நிறுத்திவிட்டார்.

வளர்ந்து வரும் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும், எடுக்கவும் கொடுக்கவும் கூடிய சமுதாய அமைப்பை இப்பொழுது பெற்று வருகிறோம். எனவே தானமும் தவமும்கூட எந்த ஒரு விதத்திலாவது செய்துவிட முடியும்.

இத்தனைக்க மேல் ஒருவன் கவிஞனாகப் பிறக்கிறான் என்றால் அது எத்தனையோ நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்ச்சி என்றுதான் கூறமுடியும். கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியார் ஒருவரே.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு எத்தனையோ தேசியத் தலைவர்களைப் பெற்றெடுத்த பெருமை உண்டு. வ.உசி. சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்றவர்கள் அதே மாவட்டத்தில் பிறந்தவர்கள். எட்டையபுரத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சின்னச்சாமி அய்யருக்கும் லெட்சுமி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைதான் நமது சுப்ரமணிய பாரதியார்.

அவர் இளமையிலேயே கவிபாடக்கூடிய திறமை பெற்றிருந்தார். பதினொரு வயது நிரம்பிய சுப்பையா என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரை எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர். அவைகளில் வெற்றி பெற்றதால் அந்தப் புலவர்கள் வியந்து அளித்த பட்டம் 'பாரதி'.

அவர் 1894-1897 வரை திருநெல்வேலி ஹிந்துகல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை படித்தார். படிக்கும் போதே தமிழ்ப் பண்டிதர்களுடன் ஏற்பட்ட சொற்போர் காரணமாக 14 வயதிலேயே அக்கால வழக்கப்படி திருமணம் நடந்தது. 7 வயது நிரம்பிய செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

1898-1902 வரை காசியில் தனது அத்தை குப்பம்மாள் அவர்களுடன் தங்கியிருந்தார். அப்போது அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேசத் தேர்வு எழுதி வெற்றிப்பெற்றார். காசி இந்து சர்வகலாசாலையில் ஹிந்தியும், வடமொழியும் பயின்றார். அப்போதுதான் நமது பாரதியாருக்கு தலைப்பாகை கட்டும் பழக்கமும் மீசை வைத்துக் கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டதாக அறிகிறோம். மீண்டும் எட்டையபுரம் வந்து 1902 முதல் இரண்டாண்டு காலத்திற்கு எட்டையபுரம் மன்னருக்குத் தோழனாக இருந்தார். அப்போதுதான் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'விவேக பானு' என்ற பத்திரிகையில் இவரது முதல் பாடல் 'தனிமை இரக்கம்' அச்சாகி வெளியிடப்பட்டது.

1904ம் ஆண்டு மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அதே ஆண்டு நவம்பரில் சென்னையிலிருந்து வெளிவரும் 'சுதேசமித்திரன்' பத்திரிகைக்கு உதவியாசிரியரானார். பின்பு 'சக்கர வர்த்தினி' என்ற பத்திரிகையின் ஆசிரியராக ஆனார்.

1905ம் ஆண்டில் பாரதியார் அரசியலில் ஈடுபட்டு இருந்தார். தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார்.

1906ல் சென்னையிலிந்து 'இந்தியா' என்ற வாரப் பத்திரிகை துவங்கி அதன் மூலம் தனது அரசியல் கருத்துக்களை இந்நாட்டு மக்களிடம் பரப்பினார். அப்போது திருமலாச் சாரியார். வ.உ.சி. சர்க்கரைச் செட்டியார் முதலியோரின் நட்புக் கிடைத்தது.

சூரத் காங்கிரசில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் 1907ல் பிளவு ஏற்பட்டது. பாரதியார், திலகர் போன்ற தீவிரவாதிகள் பக்கம் நின்று பணியாற்றினார். அப்போது திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் முதலியோரைச் சந்தித்தார். கிருஷ்ணசாமி அய்யர் என்ற தேசபக்தர் பாரதியாரின் பாடல்களில் உள்ள வேகத்தின் தன்மையை உணர்ந்து 'சதேசகீதங்கள்' என்ற தலைப்பில் அவரது பாடல்கள் பலவற்றை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார்.

1908ஆண்டு 'சுயராஜ்ஜிய தினம்' சென்னையிலும் தூத்துக்குடியிலும் கொண்டாடப்பட்டது. அதில் வ.உ.சி சுப்ரமணியசிவா போன்றவர்களுக்குச் சிறைத்தண்டனை கிடைத்தது. அந்த வழக்கில் பாரதியார் சாட்சியம் சொல்லியுள்ளார்.
அதே ஆண்டில் கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் வெளியிட்ட 'சுதேச கீதங்கள்' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு ஒன்றை பாரதியார் வெளியிட்டார்.

இது வெளிவந்தபின், பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதியார் மீது ஒரு கண்ணோட்டம் விட்டது. 'இந்தியா' பத்திரிகையின் சட்ட ரீதியான ஆசிரியர் கைது செய்யப்பட்டு பாரதியார் மீது வாரண்ட் போட்டது. பாரதியார் தலைமறைவானார். புதுச்சேரி சென்றார். அங்கும் போலீஸ் தொல்லைகளுக்கு உட்பட்டார்.

அப்போது 'இந்தியா' பத்திரிகை 1910 வரை புதுச்சேரியிலிருந்து தனது தேசியத் தொண்டைத் துவங்கியது. எரிமலை வெடித்தது போன்ற எழுத்துக்களால் மக்களிடையே விடுதலை வேட்கையைப் பரப்பினார். இதனைக் கண்ட பிரிட்டிஷார் இந்தியா' பத்திரிகை வருவதைத் தடுத்தது. அத்துடன் பத்திரிகை, விற்பனைக் குறைவால் நின்று போயிற்று.

1911ல் மணியாச்சியில் கலெக்டர் ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்ட போது புதுச்சேரியில் உள்ள தேசபக்தர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அங்கு உள்ள தேசபக்தர்களுக்குத் தாங் கொணாத் துன்பத்தை ஆட்சியினர் கொடுத்தனர். மேலும் அவர்களை அங்கிருந்த வெளியேற்றவும் முயற்சிகள் நடைபெற்றன. பாரதியாரின் சீடர்கள் ஏராளமாயினர்.

பாரதியார் 1912-ல் கீதையை மொழி பெயர்த்தார். மேலும் கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்கள் எழுதப் பெற்றன. பாஞ்சாலி சபதம் வெளியிடப் பெற்றதும் இந்த ஆண்டில்தான்.

அடுத்த ஆண்டில் 'ஞானபாநு' என்ற பத்திரிகைக்குச் செய்திகள் சேகரித்துக் கொண்டிருந்தார். 1914ல் முதல் உலகப் போர் துவங்கியதும் அங்கு உள்ள தேசபக்தர்களுக்கு ஏராளமான தொல்லைகள் ஏற்பட்டன.

பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் 1917ல் கண்ணன் பாட்டு முதற்பதிப்பைச் சென்னையில் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து 1918ல் 'சுதேச கீதங்கள்', 'நாட்டு பாடல்' முதலியன வெளியிடப்பட்டன.

புதுச்சேரி வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு உணர்வால் பாரதியார் 1918ம் ஆண்டு நவம்பர் 20ந் தேதி அங்கிருந்து வெளியேறினார். அப்போது கடலூருக்கு அருகே கைது செய்யப்பட்டு, சில நாட்கள் சிறை இருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவுடன் கடையத்துக்குச் சென்றார்.

1918 முதல் 1920 வரை கடையத்தில் வாழ்ந்து வந்த பாரதியார் எட்டையபுர மன்னனுக்கு சீட்டுக் கவிகள் மூலம் தன் நிலைமையைச் சொல்லியும் எவ்விதப் பயனும் ஏற்படாமல் சென்னைக்கு வந்தார். சென்னையில் ராஜாஜி அவர்கள் வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார்.

1920ல் மீண்டும் சுதேசிமித்திரனுக்கு உதவியாசிரியரானார். பாரதியாரின் எழுத்துக்கள் அப்போது அதில் நிறைய இடம் பெற்றன.

1921ல் திருவல்லிகேணியில் கோயில் யானை ஒன்றால் தூக்கி எறியப்பட்டு, அதிர்ச்சியுற்று, நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவுக்குப் பின் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார். உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்ற பாரதியார், உலக மக்களின் உள்ளங்களிடையே இன்னும் வாழ்ந்து வருகிறார். வாழ்க மகாகவி பாரதியார்.

Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

11.12.16

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children's Fund or UNICEF) 11 டிசம்பர் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டால் உலகயுத்ததில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களிற்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.

No automatic alt text available.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்.எஸ். சுப்புலட்சுமி நினைவு தினம்:

11-12-2004

 
எம்.எஸ். சுப்புலட்சுமி இறந்த தினம்:  11-12-2004
 
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச்சத்திலும் சந்தோசத்திலும் மக்கள் : 32 வருடங்களின் பின்னர் வவுனியாவில் நிகழ்ந்த சம்பவம்

Published by MD.Lucias on 2016-12-12 11:54:54

Share3
 

D0d9590d.jpg

வவுனியா, நெடுங்கேணி ஒலுமடு  கிராமத்தில் ஒரு தொகை முரளி மரம் பழுத்து குலுங்கியுள்ளது. இதனால் ஒரு பகுதியினர் அச்சத்திலும், ஒரு பகுதியினர் சந்தோசத்திலும் பழத்தினை பிடுங்கி விற்பனை செய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.D55d0dd.jpg

 இதேபோன்று 1984 ஆம் ஆண்டு முரளி மரம் பழுத்து குலுங்கியுள்ளது. இக் காலப்பகுதியில்  மக்கள் பெரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.0fd55df.jpg

இந்நிலையில் 32 ஆண்டுகளின் பின்னர் தற்போது  அதிகப்படியான பழம் காய்த்துள்ளமையால் 1984 ஆண்டு ஏற்பட்ட வறட்சி போன்று தற்போதும் ஏற்பட்டு விடுமா என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.Dd5f09f.jpg

 இதேவேளை குறிப்பிட்ட சிலர் பழங்களை பிடுங்கி ஒரு கிலோகிராம் 160 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை விற்பனை செய்து வருகின்றார்கள். Dfd.jpg

மேலும்  ஒரு சிலர் பழங்களை பிடுங்குவதற்காக மரம் அறுக்கும் கருவியை பயன்படுத்தி   மரங்களை அறுத்து விழுத்துவதனால்  அவ்விடத்தில் பொலிசாரும், வனவள பகுதியினரும்  குவிக்கப்பட்டுள்ளனர்.dsfdsfd.jpg

 

 நெடுங்கேணி ஒலுமடு, ஊஞ்சால்கட்டி, மருதோடை, காஞ்சிர மோட்டை வயல் பிரதேசம், முல்லைத்தீவு  தண்ணிமுறிப்பு பகுதிகளிலும்  முரளிப்பழம் பழுத்து குலுங்கியுள்ளமை  குறிப்பிடத்தக்கது. Fdfds.jpgFsfdf.jpgUntitled-2.jpg

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிசம்பர் 11 ↔ உலக மலைகள் தினம்

 
உயிரினங்களின் வாழ்க்கையில் மலைகள் பிரதான வகிபாகத்தினைப் பெறுகின்றன.  மலைகள், உலகத்திற்கு தேவையான தூய நீரினை அதிகபட்சமாக வழங்குவதுடன், மேலும் பல்வேறு வகையான தாவரங்களினதும், விலங்குகளினதும் பிரதான கேந்திர நிலையமாக விளங்குவதுடன், மனிதனின் வாழிடமாகவும் விளங்குகின்றன.
 
international-mountain-day_big.jpg
 
காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசடைதல், வெடிப்பு நடவடிக்கைகள், ஆயுத மோதல்கள் இன்ன பிற காரணங்களினால் மலைகள் பிரதான பாதிப்பினை எதிர்நோக்குகின்றன. 

 
இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்துவதற்காக வருடாந்தம் டிசம்பர் மாதம் 11ம் திகதி உலக மலைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

 
 
 
 உலக நிலப்பரப்பில் 27% பங்கிற்கு மலைகள் பரந்து வியாபித்துள்ள அதேவேளை உலக மக்களில் 12%பங்கானோருக்கு தேவையான வதிவிடத்தினை மலைகளே வழங்குகின்றன. ஆனால் உலகில் 50% இற்கும் அதிகமானோர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மலை வளங்களிலேயே தங்கியுள்ளனர்.
 
North_American_Grey_Wolf_Rocky_Mountains.jpg
 
♪ மலை வாழ் மக்களில் 80% இற்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டின் கீழேயே வாழ்கின்றனர்.

 
♪ உலகில் 80% இற்கும் அதிகமான தூய நீரானது மலைகளிலிருந்தே கிடைக்கின்றது.

 
ws_Road_over_mountains_2560x1600.jpg
 
♪ உலகில் மிக உயரமான மலைச்சிகரமானது இமய மலைத் தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலைச் சிகரமாகும். இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 29036 அடி (8850மீற்றர்கள்ஆகும்.
 
mt-everest-peak+(1).jpg
 
♪ உலகில் 7000 மீற்றருக்கும் உயரமான எல்லா மலைகளும் ஆசியாக் கண்டத்திலேயே அமைந்துள்ளன, குறிப்பாக 8000மீற்றரிலும் உயரமான 14 மலைச் சிகரங்கள் இமய மலைத்தொடரிலேயே அமைந்துள்ளன. 

 
♪ உலகில் மிக உயரமான மற்றும் மிகப் பெரிய மலைகளில் சில சமுத்திரங்களின் அடியில் அமைந்துள்ளன.  ஹவாய் தீவில் அமைந்துள்ள "மவுனா கேய்" மலையே நீரின் கீழ் அமைந்துள்ள மிகப்பெரிய மலையாகும். பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள "மவுனா கேய்" மலையின் உயரம் கடலின் அடியிலிருந்து 33474 அடி (10203 மீற்றர்கள்) ஆகும். குறிப்பாக, "மவுனா கேய்" மலையானது கடலுக்கு மேலே 13796 அடி (4205மீற்றர்கள்) உயரமானதாகும்.

 
♪ உலகில் அதிக சதவீதத்தில் மலைப் பாங்கான இடங்களினைக் கொண்டுள்ள முதல் 20 நாடுகளும் வருமாறு; அன்டோரா, லிச்ரென்ஸ்ரெய்ன், பூட்டான், லெசோதோ, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், சுவிட்சர்லாந்து, மஸிடோனியா, லெபனான், றுவாண்டா, ஆர்மேனியா, நேபாளம், ஜோர்ஜியா, பொஸ்னியா ஹெர்ஸ்சிகோவினா, லாவோ மக்கள் ஜனநாயக் குடியரசு, சுவாஸிலாந்து, துருக்கி, ஆஸ்திரியா, அல்பேனியா, ஸ்லோவேனியா.

 
♪ கனடாவில் அமைந்துள்ள "லோகன்" மலையானது உலகில் பிரசித்தி பெற்ற மலைகளில் ஒன்றாகும். 19859 அடி உயரத்தினைக் கொண்ட இவ் மலை சிகரத்தினை மனிதன் அடைந்த முதல் நிகழ்வு இடம்பெற்றது 1925 ஆண்டாகும். 

 
logan.jpg
 
♪ உலகில் மிக நீளமான(4900 மீற்றர்கள்) மலைத்தொடர் அந்தீஸ் மலைத்தொடராகும்.

 
AndesMountains1.jpg
 
♪ ஆபிரிக்க கண்டத்தில் மிக உயரமான மலை (5895மீற்றர்கள்)  தன்சானியாவில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலை. இது எரிமலை வகையினைச் சேர்ந்ததாகும்.

 
♪ இலங்கையின் மிக உயரமான மலை பீதுறுதாலகால மலை (2524 மீற்றர்கள்) ஆகும்.
 
♪ இந்தியாவின் மிக உயரமான மலை உத்தரா காண்டத்தில் அமைந்துள்ள நந்தா தேவி மலை (7816 மீற்றர்கள்) ஆகும். ஏனெனில்  8586 மீற்றர்கள் உயரமுடைய கன்சென்ஜுங்கா மலை இந்திய | நேபாள எல்லையில் அமைந்துள்ளது.
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று திருக்கார்த்திகை (விளக்கீடு) .....Happy Deepam Festival.

 · 
Image may contain: fire and candles
Image may contain: night, fire and candles
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, text
· 
டிசம்பர் 14, 2016⇨ ஐக்கிய அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜோர்ஜ் வாஷிங்டன் அவர்களின் 216 நினைவு தினம்

ஜோர்ஜ் வாஷிங்டன் ஒருமுறை குதிரையில் தனியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது வழியில் கட்டைகள் ஏற்றிய ஒரு வண்டியை இழுக்க முடியாமல் திணறும் குதிரைகளை அடித்து விரட்டிக் கொண்டிருந்தான் ஒரு படை வீரன். குதிரைகளின் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட ஜோர்ஜ் தன் குதிரையை விட்டுக் கீழே இறங்கி தான் ஒரு சக்கரத்தையும், படை வீரன் இன்னொரு சக்கரத்தையும் தள்ளி விரட்ட குதிரைகள் வண்டியை இழுத்துச் சென்றன.

"குதிரைகளால் முடியாதபோது நாம் தான் உதவ வேண்டும். படை வீரனும் மனிதன்தான் என்பதை உணர வேண்டும்'' என்றார் உடன் வந்தவர்களிடம். அதன் பின்பு படை வீரனை நோக்கி," ஆமாம்...! இந்த வண்டி எங்கே போக வேண்டும்?'' என்றார்.

"நாளை காலையில் எங்கள் தலைவர் ஜோர்ஜ் வாஷிங்டன் பதவி ஏற்பு விழாவிற்காக... ஆமாம்...! தாங்கள்?'' என்றான் அந்த வீரன்.

சிரித்துக்கொண்டே ஜோர்ஜ் வாஷிங்டன் சொன்னார், "இன்று சக்தி வாய்ந்த படைத் தளபதி ஜோர்ஜ் வாஷிங்டன்; நாளைய சாதாரண அமெரிக்க ஜனாதிபதி'' என்று கூறி குதிரையில் ஏறிப் பறந்தார்.

December 14, 2013 ⇨ United States of America's first jaṉātipatiyāṉa George Washington their 214th memorial day
George Washington once a horse in the cup trip and she laughed.
Then on the way around the load a vaṇṭiyai the hair without the tiṇaṟum when the horse, who was a force veeran. Horse of the unbelievers who understand his George the horse from the get down is a wheel, the creator of veeran another wheel down and the horses went into vaṇṭiyai.
" not by the horse when it is we need help. Defence forces is the man that I should feel with me '' came with them. Then new creation to the champ," yes...! This train should go where you?''.
A day in the morning: " Our President George Washington post acceptance ceremony for reading... Yes...! If you are of?'' the veeran.
Keep on smiling George Washington said, " today powerful paṭait general George Washington, tomorrow's normal American President ' ' in the horse ēṟip paṟantār.
 
 · 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் பிந்திய பதிவு..15.12.2016

டிசம்பர் 15 ⇨ சர்வதேச தேயிலை தினம்

 
சர்வதேச தேயிலைத் தினமானது 2005ம் ஆண்டு முதல் ஒவ்வொருஆண்டும் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இலங்கைஇந்தியாபங்களாதேஷ்நேபாளம்வியட்னாம் போன்ற ஆசிய நாடுகளிலும்கென்யாஉகண்டாதான்சானியாமாலாவி போன்ற ஆபிரிக்கநாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
1.JPG
 
தேயிலை தொடர்பிலான சில சுவாரஷ்சியமான  தகவல் துளிகள்;

 
√ தேயிலையின் இரசாயனவியல் பெயர் "கமேலியா சிசென்சிஸ்" ஆகும்.
 
√ தேயிலையானது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டவரால் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.
2.JPG
 
√ தண்ணீரினை அடுத்து உலகில் அதிகம் பேரால் நுகரப்படும் பானம் தேநீர் ஆகும். 

 
√ தேயிலையானது உலகில் சுமாராக 52 நாடுகளில் வளர்க்கப்படுகின்றது.
3.JPG

√  உலகில் தலா நுகர்வு அடிப்படையில் உலகில் அதிகளவு தேநீரை நுகர்வோர் அயர்லாந்து நாட்டவரே ஆவர்.
4.JPG

√  உலகில் தினசரி 3 பில்லியன் குவளை தேநீர் நுகர்வு செய்யப்படுகின்றது.
5.JPG

√ தேயிலையானது பல்வேறு வகையான ஆரோக்கியமான நன்மைகளை அளிக்கின்ற நோயெதிர்ப்பு சக்திகள், விற்றமின்கள், கனிப்பொருட்களை கொண்டுள்ளதாக ஆய்வுகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.  இதன் சில நன்மைகளாவன;
* கொலஸ்ரோலை ஒழுங்குபடுத்துகின்றது.
புற்று நோய்,  நீரிழிவு, இதய நோயிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.

நீர்ப்பீடணத் தொகுதியினை ஊக்குவிக்கின்றது.

எலும்புகளைப் பலப்படுத்துகின்றது.

மூட்டு வாத நோயிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.

பக்றீரியா, வைரஸ்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.

உடற்பருமனை குறைக்க உதவுகின்றது.

பற்களுக்கு உறுதியளிக்கின்றது.
6.jpg 
(புகைப்படம் - சூரியகந்தை, இரத்தினபுரி)


√ தேயிலையில் பிரதானமாக 06 வகைகள் உண்டு.
அவையாவனகிறீன் (Green), வைட் (White), யெலோ (Yellow), ஊலங் (Oolong), ரெட் (Red)ப்ளக் (Black) ஆகியனவாகும்இவைஅனைத்தும் தேயிலையில் இருந்து வந்தாலும்

இவை தயாரிக்கப்படும் முறைகளாலும்பதப்படுத்தும்முறைகளாலும் இவ்வாறு வேறுபடுகின்றன
tree2.JPG

√ உலகில் 3200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேயிலைத் தாவரம் சீனா நாட்டில் காணப்படுகின்றது.

 
 

ஒவ்வொரு நாளும் நாம் அருந்துகின்ற தேநீரின் சுவை எமக்கு உற்சாகத்தினை வழங்குகின்றதுஅந்த தேநீரின் சுவையின் சுவையினை எமக்கு வழங்க தம்மை அர்ப்பணிக்கின்ற தொழிலாளர்களினை ஒரு கணம் நினைத்துப் பார்ப்போம்.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Saturday, December 17, 2016

சிறகெட்டும் தொலைவில் வானம் 

 

அந்தப் பெண்ணை பாட்டி என்பதா? அம்மா என்பதா எனக்கு அப்போது போல் இப்போதும் புரியவே இல்லை. வயதானாலும் நெடிதுயர்ந்த நீண்ட உருவம். முழங்கைகளுக்கு கீழான கைகள் தவிர அவரின் முகத்தை கூட அதிகம் பார்த்ததில்லை. ஆளரவம் குறைந்த மங்கல் பொழுதுகளில் எப்போதாவது வீதிகளில் அவரைக் கண்டிருக்கிறேன். 
கிட்டத்தட்ட மங்கிய காவி நிறத்தில் பருத்தி நூற் புடவை, பின்னாளில் தான் புரிந்தது. அது மங்கிய காவி அல்ல பழுப்பேறிய வெள்ளை என்று. அவர் மஞ்சள் நிறத்தின் மங்களத்துக்கு மறுதலிக்கப் பட்டவர். புடவைத் தலைப்பால் தலைமூடப்பட்டிருக்கும் மொட்டாக்கு மீறி அந்த முகத்தை எப்போதும் முழுமையாகப் பார்த்ததில்லை. எப்போதும் குனிந்து கூன் விழுந்தது போல் ஓரு நடை. அந்த திடகாத்திர உருவ அமைப்புக்கு அந்தக்கூன் இயல்பாக பொருந்திப் போகாமல், அவர் தன்னை குறுக்கி நடப்பது போலவே தோன்றும் எனக்கு. சற்றே வெளித்தெரியும் கரங்கள் வாடிவதங்கிய கனகாம்பரம் நிறத்தில் இருக்கும். எப்போதும் வாயில் எதோ ஒரு முணுமுணுப்பு. அது அப்போது ஸ்லோகம் என்று நினைத்தேன். இப்போது சோகமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. 
மங்கல் விழுந்த மாலைகளில், வீடுகளற்ற வளவுகளின் வேலிகளில் படர்ந்திருக்கும் பிரண்டைத் தண்டு, அல்லது மொசுமொசுக்கை, வாதநிவாரணி ஏதாவது ஒரு இலை பறித்துப் பையில் அடைந்து கொண்டிருப்பார். அவர் மொட்டாக்கு போடும் விதத்தில் அந்தக் கையும் பையும் கூட அதற்குள் மறைந்திருக்கும்.  
அவர் யாரோடும் பேசி நான் பார்த்ததில்லை. தன்னோடு மட்டுமே பேசுவார். யாரும் அவரை நெருங்கிச்சென்று பேசியும் நான் கண்டதில்லை. ஒருவேளை அவர் பேசவே மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். தெரியாமல் நான் அருகே சென்று" பாட்டி நான் உதவலாமா" என்று கேட்டேன் ஒருநாள். அவசரம் ஏதுமில்லாமல் திரும்பி மொட்டாக்கு மறைத்த முகத்தால் அவர் என்னை நோக்கிய போது, அந்தக் கண நேரப் பார்வையில் அது வயதான முகம் அல்ல என்று கண்டேன். கனிவாக நோக்கி விட்டு பதில் ஏதும் சொல்லாமல் கருமமே கண்ணாயினார். 
அந்த நேரங்கள் தவிர அவரை எங்குமே நான் கண்டதில்லை. மாலை விளையாடிக்களைத்த பொழுதுகளில் அநேகமாய் அவரையே பின் தொடரும் என் பார்வை. பொதுவாகவே வீடுகளில் அயலட்டத்தைப் பற்றிப் பேசிக்கொள்ளும் போதும், அவர் பற்றி எந்தப் பேச்சும் வீட்டில் வந்து நான் கண்டதில்லை. நானாகவே ஒருமுறை வீட்டில் விசாரித்தபோது," அது குருக்களின் தாய்" என்ற அசுவாரசியமான பதிலுடன் வீடு தன் பாட்டுக்கு இயங்கியது. 
அப்போ அவரை எப்படி எனக்குத் தெரியாமல் போகும். அங்கே அந்த வீட்டில் என் தோழிகள் இருக்கிறார்களே. அங்கு அதிகம் யாரும் போவதில்லை. நானும் எப்போதாவது தான் போவேன். அப்போதும் அவரை நான் கண்டதில்லை. ஒருமுறை அந்த வீட்டுக்கார என் நண்பிகளிடம் அவர் பற்றி விசாரித்த போது
" அது எங்கள் பாட்டி" என்றார்கள்.
" எதுக்கு அவ கோவிலுக்குக் கூட வருவதில்லை. மாலையில மட்டும் வெளியே வருகிறா " என்றேன்.
"அது கைம்பெண். முழுவியளத்துக்கு ஆகாது."  
மிக இயல்பான வார்த்தையுடன் அவர்கள் தங்கள் சுவாரசியமான பேச்சை தொடர்ந்தார்கள். எனக்கு மட்டும் எதுகும் காதில் விழாமல் போனது. 
அந்த வீட்டின் கடைக்குட்டியான ராஜி என்றழைக்கப்பட்ட ராஜேஸ்வரி மட்டும் அனேகமாக பாட்டி நிற்கும் இடங்களைத் தேடி வரும் . பாட்டி பேசாதபோதும் அதுவா வாய் ஓயாமல் அவவுடன் பேசிக்கொண்டே நடக்கும் . என்னோடு அந்த என்னிநிலு சின்னவளான சின்னப் பெண்ணுக்கு சற்று அதிக நெருக்கம் இருந்ததால் யாருமில்லா பொழுதுகளில் குடும்ப ரகசியம் சொல்லும். பாட்டியின் நரக வாழ்வு பற்றி உடைந்த குரலில் அது பேசும் போது அதுக்கு வயது பத்து. அப்போதே அதன் முற்போக்கு எண்ணங்களும் அதை செயற்படுத்த முடியாத சூழ்நிலையும் வித்தியாசமாக சந்தோசமாக இருக்கும். 
பின் எங்கள் வீட்டில் எப்போதும் அதையே அந்தப் பாட்டி பற்றிய விபரங்களையே விடுத்து விடுத்து விசாரிக்க ஆரம்பித்தேன்.
"உன் வயதுக்கு இதெல்லாம் வேண்டாத விசயங்கள். போய் புத்தகத்தை எடுத்துப் படிச்சு உருப்படுற வழியைப்பார்." எப்பவும் போல பாட்டியின் அறிவுரை அது. 
அடுத்து 
"உன்னைச் சுற்றியிருக்கிற உலகத்தைப் படி முதலில. அது தான் புத்தகப்படிபை வழிநடத்தும்" என்ற பீடிகையுடன் தாத்தா பக்கத்தில் இருத்தி அனைத்துக் கொண்டு கதைக்கத் தொடங்க பாட்டியும் சேர்ந்து கொண்டு சொன்ன விபரங்களில்.....
தலை மழிக்கப்பட்டு மொட்டாக்குக்குள் அந்தப் பெண்ணுடல் உணர்வுகள் விழுங்கிய, விருப்புக்கள் மறுக்கப்பட்ட தன் யாகத்தை ஆரம்பிக்கும் போது அவவின் வயது இருபத்தியிரண்டே மட்டும் தான்.  
அதன் பின் முழுவியளத்துக்கு ஆகாத மூதேவியாகி, அந்த வீட்டின் வேலைக்காரியாகி, வெளிவாசல் தவிர்த்து கோடிப்பக்க வழிமட்டும் அவவின் உபயோகத்துக்காக்கி , கொல்லைப்புற மூலையில் தனிமையில் ஒதுக்கமாகி, வெறுந்தரைப் படுக்கையாகி , உப்புக் காரம் வெங்காயம் பூடு தவிர்த்த உணவுகளின் சுவையும் நிராகரிக்கப்பட்ட வராகி,....  
தனது இருபத்தியிரண்டு வயதுக்குள் தாயாக்கிய மூன்று பிள்ளைகளை வீட்டில் உள்ளவர்களின் வசவுகளோடு வளர்த்து, அவர்களின் எந்த நன்மைக்கும் முன்னே வரும் அனுமதி மறுக்கப்பட்டவராகி கொல்லைவாசல் வழியே ஒட்டி நின்று பார்க்கும் வாழ்க்கையாகி........ 
உணவில் சுவை தவிர்த்து, மனதில் மகிழ்வு தவிர்த்து, மனிதர்கள் தவிர்த்து , நடைமுறை வாழ்வின் கருத்துப் பகிரல்கள், சிறிய சிரிப்புக்கள் கூட மறுக்கப்பட்டு நடந்து கொண்டிருந்த யாகத்தில் ஓரு கன்னி மன உணர்வுகள் முற்றிலுமாய் வெந்து, அந்தத் தங்கத் தேகம் தினம் தினம் தீயில் வாடிய கொடுமை நடந்து கொண்டிருந்தத காலத்தில், .. 
அவரது வயோதிப அப்பாவின் மனைவி காலமான போது மட்டும் அப்பா முழுவியளத்துக்கு உதவாமல் போகவில்லை. ஆண் மகன் வருமானம் நின்றால் குடும்பம் சந்தியில் நிற்கவேண்டும். சம்சாரம் இல்லாத குருக்கள் சவுண்டியாகத்தான் போகவேண்டும். சவுண்டியாகப் போவதானால் தினத்துக்கும் ஐந்து காலப் பூஜை போல் ஐந்து சாவு விழவேண்டும். விஷேச நாட்களின் திருவிழாக்கள் போல் விஷேசச் சாவுகள் இல்லை, அதனால் மேலதிக வருமானம் இல்லை. வருமானத்துக்காக மட்டுமே மீண்டும் திருமணம் என்ற போர்வையில் வயதான அப்பா பிள்ளைகளிலும் இளமையாக ஒரு மனைவி தேடிக்கொண்டார்.  
மகள் வாழவேண்டிய வயதில் மூலையில் முடங்கி ஜடம் போல் சுருண்டு உணர்வுகளை உள்ளத்துக்குள் எரித்து வென்று துடித்துக் கிடக்க, அவர் புது மனைவியுடன் பன்னீர் வாசத்தில், முகம் கொள்ளாப் பூரிப்பில் வலம் வந்து கொண்டிருந்தார். 
அதன் பின்னான காலங்களில் போரும் இடப்பெயர்வும் , புலப்பெயர்வுமாக நீண்ட வருடங்களை விழுங்கியிருந்தது. அந்த இடைவெளியில் பல மனிதர்களை என் மனம் மறக்கவில்லையாயினும், மனதில் தூரமாகி நினைவுகளில் நி ல்லாது போயினர். அப்படித்தான் அந்தப் பாட்டியும் எப்போதாவது ஒரு கணம் நினைவில் வருவதோடு சரி. புதிய சூழல், புதிய மனிதர்கள், புதிய பிரச்சனைகள் என் மனதுக்கு மனதுக்கு நெருக்கமாகிப் போயின. 
நீண்ட இடைவெளியின் பின் பிறந்த மண்ணுக்கான பயணம். அதில் மனதுக்கு நெருக்கமானவர்களும், நினைவுகளில் அழிக்கமுடியாத சம்பவங்களால் பதிவாகியிருந்த இடங்களும் தவிர எதுகுமே நினைவில் இல்லாத பொழுதொன்றில் எனது சிறியதாய் வீட்டு ஹூட் இல் குடும்பமாகக் கூடியிருந்து கதைத்துக் கொண்டிருந்தோம் 
வீட்டின் கேட் திறக்கப்பட்டது. யாரோ என் சித்திக்கு வேண்டியவர்கள் என்ற நினைவில் திரும்பிப் பார்த்து விட்டு நான் என் பேச்சைத் தொடர்ந்தேன். கேற்றுக்கு உள்ளே மதிலோடு ஒன்றி குறுகி நின்ற பெண்ணைப் பார்த்து 
"உள்ளே வந்து இருமன் அம்மா "என்ற சித்தியின் குரலுக்கு,
" இல்லை அம்மா ரோட்டால கல்யாண ஊர்வலம் வருகுது என்ர முகத்தில முழிக்கக் கூடாது அது தான்.... அவர்கள் விலக நான் போய் விடுவேன்" என்ற பெண் அவசரமாக புடவைத்தலைப்பை இழுத்து குனிந்த தலையை மூடிக்கொண்டது. 
வார்த்தைகளில் அந்தப்பெண்ணின் நிலை எனக்குப் புரிந்தது. சின்ன வயதில் இருந்து வெறுத்த ஒரு விடயத்தை புலப்பெயர்வில் கொஞ்சம் அதன் தாக்க நினைவுகளில் இருந்து விலகியிருந்து , ஊருக்குப் போய் சேர்ந்தவுடன்திரும்ப அதை வாங்கி மனதில் போட்டு கொந்தளிக்க விருப்பமற்று அதை பெரிது படுத்தாமல் இருக்க முயற்சித்தேன். கல்யாண ஊர்வலம் கடந்தது
" வரேம்மா" என்ற விடைபெற லு டன் அந்தப் பெண் வெளியேறும் போது
"இந்தப் பிள்ளையை உனக்கு மறந்து விட்டதா? எங்கட கோவில் ராஜேஸ்வரி, உன் குட்டி ராஜி" என்று சித்தி சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனது மனது. 
பட்டுப் பாவாடையும் , நீண்டகூந்தலின் ஒற்றைச் சடையின் நுனியில் அசையும் அசையும் குஞ்சமும், தலை கொள்ளாக் கதம்பச் சரமும் , அதைச் சட்டமிட்டு அடக்கிய மல்லிகைச்சரமும் கைநிறைந்த கண்ணாடிவளையல்களுமாக , மஞ்சள் குளித்தமுகத்தில் கண்ணுக்குக் கருகருவென்று மையிட்டு, புருவ மத்தியில் சாந்து மின்ன அலங்கார பூஜிதையாக, பால அம்பிகைபோல் அந்தப் பெண்ணின் தோற்றம் மனதில் வந்து போனது , 
மனம் கட்டுமீறி ஹோ என்று அதிர்ந்து கதறிப் பரபரக்க எழுந்து ஓடினேன். புடவைத்தலைப்பால் தலையில் முக்காட்டிட்டு குனிந்த படி, குறுகி நடந்து கொண்டிருந்த அந்தப்பெண்
"ராஜிம்மா" என்ற அழைப்புப் போன்ற என் கூவலில் சட்டென நின்றது. கிட்டே நெருங்குகையில் அடையாளம் கண்டுகொண்டு
"அக்கா "என்ற அந்தக் குரலில் அதிர்வும் ஆர்வமும் பாசமும் கூடவே இனங்கான முடியா ஒரு இறப்பும் இருந்தது முகமும் கூட உயிரைத் தொலைத்திருந்தது .
சுகம் விசாரித்த விதத்தில் அன்பு மாறாமல் இருந்தது அவள் குரல் பின்  
எந்த ஆர்வமும் அற்ற இறந்து போன இயந்திரக் குரலில் 
" நான் வெளியே வருவதில்லை அக்கா. என் மகன் ஆஸ்பத்திரியில் அதால தான் வெளிக்கிட்டனான்." 
" உள்ளே வரீங்களா ராஜி" என்றேன். சற்றுத் தயங்கி சுற்றும் முற்றும் பார்த்து
1549250_421333598030081_7189147692876558979_n.jpg

" இப்ப விட்டால் இனி எப்ப உங்களைப் பார்ப்பேனோ தெரியாது" என்ற முணுமுணுப்புடன், யாராவது கண்டால்...... என்ற தயக்கத்துடன் உள்ளே வந்தது நான் நேசித்த பால அம்பிகை. அமங்கலத் தோற்றத்தில். 


முன்பு அவர்களது பாட்டி இருந்த கோலம் தான். சிறு மாற்றம், பாட்டியின் புடவை போல் மஞ்சலாகிய வெள்ளைப்புடவை இல்லாமல் தூய வெள்ளையில் சிறு கறுப்புப் புள்ளிகளுடன் புடவை. நெற்றியில் விபூதிக் கீற்றல், கண்களில் வெறுமையுடன் நின்ற அந்தக் குழந்தை இரு தசாப்தங்களின் பின்னும் மாறாத பெண் அடக்குமுறைச் சமுதாயத்தின் சாபத்தின் அடையாளமாய் தோன்றியது. என்னால் எந்தக் கேள்வியும் கேட்க முடியாமல் இருக்க, "மூன்று குழந்தைகள் அக்கா, மூன்றாவது பிறக்க அவர் போயிட்டார். " 
" அண்ணா வீட்டில இருக்கிறேன். சடங்குகளுக்கும், பூஜைக்கும் தேவையான வேலைகள் செய்வதில்லை அது தவிர மிச்சம் எல்லாம் நான் செய்வேன். என்னையும் பிள்ளைகளையும் வைச்சு சாப்பாடு போடும் போது அசையாமல் இருக்க முடியுமா ? " என்ற ராஜியிடம்
" நல்லா தானேம்மா படிச்சுக் கொண்டிருந்தீங்க. இது உங்கட பாட்டி காலமில்லை. ஒரு வேலை தேடிக்கொள்ளக் கூடாதா" என்றேன்.
" வெளியே வெளிக்கிட்டா முழுவியளத்துக்குக் கூடாது. அறுத்துக் கொட்டினவள் வெளியே வாசலுக்குப் போனால் , நாலு பேரைப் பார்க்கையில , பேசுகையில மனம் அலைபாய்ந்து உடம்பு தினவெடுக்கும். குடும்பம் சந்தி சிரிச்சுப்போகும். வீட்டு மூலைக்குள்ள அடங்கிக் கிடக்க வேண்டும் "என்று அவள் சொன்ன வார்த்தை அவளது அல்ல. அந்த சமுதாயத்தின் வார்த்தை. அல்லது அவள் சார்ந்த குடும்பத்தின் குரல். 
உணர்வு தொலைத்த அந்தச் சிற்பம் அடுத்ததாய் சொன்ன வார்த்தை அதனுடையது. 
" அவர் செத்துப் போனதுக்கு எனக்கு எதுக்கக்கா தண்டனை. கடவுளுக்கல்லவா கொடுக்க வேண்டும்." என்ற போது அந்தக் குரல் நிறையவே உடைந்திருந்தது.  
"எனக்கு என் சொந்தக்காலில் நிக்க முடியும், யாரும் விடமாட்டீனம். நான் ....... நான்...... பாட்டியின் கொல்லை அறையில் ...... பாட்டிமாதிரியே,..,..... உயிரோடு இருக்கப் பிடிக்கலைக்கா". 
உடைந்து குமுறி வந்த வார்த்தைகளுடன் தன்னைக் கட்டுப்படுத்தி, சுற்றி வரப் பார்த்து, அவசரமாய் கண் துடைத்து ,
" நீங்கள் என்றபடியால் தான் மனம் விட்டுக் கதைச்சனான் அக்கா. செத்துப் போய் நடைப்பிணமாகத் திரிகின்ற ராஜிக்கு கெதியா சடங்கு முடித்து காடாத்த வேணும் என்று வேண்டிக்கொள்ளுங்க"  
உடைந்த குரலில் கூறிவிட்டு இயந்திரமாய் வெளியேறியது என் பால அம்பிகை.
உடைந்து நொறுங்கி, வெம்பி பேதலித்து , செயலற்ற கோபத்தில் துடித்த மனம் கட்டுப்பாட்டை இழந்து கண்ணீராய் வடிந்தது.  
இத்தனை வருட இடைவெளியில் பெரிதாக எந்த மாற்றத்தையும் சமுதாயம் கொண்டுவரவில்லை. கொண்டுவரவும் மாட்டாது. மாற்றங்கள் தேவை எனில் பாதிக்கப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். சடங்குகள் தேவையில்லை," சிறை உடைத்து வெளியே வா என் சிறு கிளியே. நீ பார்க்காத தூரத்தில், உன் சிறகெட்டும் தொலைவில் விரிந்திருக்கிறது உன் வானம்." என்ற வார்த்தைகள் மட்டுமே என் உதடுகளால் உச்சரிக்க முடிந்தன..

http://oorunii.blogspot.ca/2016/12/blog-post.html?spref=fb

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமையே வெற்றி !!

ஒரு கூட்டுப்புழுவை ஒருவன் பல நாட்களாக கவனித்து கொண்டிருந்தான்.

ஒரு நாள் கூட்டின் முனையில் ஒரு சிறிய தூவாரம் தெரிந்தது அதன் வழியே வெளியே வர அது போராடிக்கொண்டு இருந்தது முட்டி மோதி தவித்தது.

இதை பார்த்துகொண்டிருந்தவன் ஐயோ அது வெளியே வர போராடுகிறதே என லேசாக அதை உடைத்துவிட்டான்
மறுநொடியே பட்டாம் பூச்சி வெளியே வந்து விழுந்தது
"வீங்கிய உடலோடும் சுருங்கிய சிறகுகளோடும் !!

அது எப்போது சிறகடிக்கும் என பார்த்து கொண்டே இருந்தான்
ஆனால் கடேசிவரை அதன் சிறகுகள் விரியவே இல்லை
ஊர்ந்து கொண்டுஇருந்தது.

கூட்டின் சிறு துவாரம் வழியே முட்டி மோதுகையில் அதன் உடம்பில் உள்ள சிறகுகளுக்கு திரவம் பரவும் அப்போதுதான் அது வெளியே வந்தவுடன் சிறகடிக்க ஆற்றல் கிடைக்கும்
ஆனால் அதன் போராட்டம் பொறுக்காமல் உதவிய மனிதனால் அது ஊனப்பட்டு கிடக்கிறது.

இன்று உங்களுக்கு கை நீட்ட உறவுகள் நண்பர்கள் இல்லையே என வருத்தம் கொள்ளாதீர்கள்.

அதுவும் நன்மைதான்...
நாளை உங்கள் சிறகுகள் உங்களுக்காய் "விரியும்"....!

 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல அருமையான விடையங்கள் தொகுக்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்தும் நிறைய விடயங்களை அறிய ஆவலாக இருக்கின்றேன். 

நன்றி யாயினி 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, யாயினி said:


 கடும் குளிர்கால ஆரம்பம் 21.12.2016

No automatic alt text available.

இந்தக் காலங்களிலாவது பிறந்த மண்ணை யோசியுங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

It's the First Day of Winter...21.12.2016...❄️❄️❄️❄️???

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் நீண்ட வார விடுமுறை நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

No automatic alt text available.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் நத்தார் புதுவருட வாழ்த்துகள்?

Merry Christmas & Happy New Year to one and all?

 · 
No automatic alt text available.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


பாலனின் பிறப்பு அனைத்து மக்கள்
வாழ்விலும் சாந்தி - சமாதானம் -
சுபீட்சத்தை ஏற்படுத்தட்டும்........!!! 

•。✯merry Christmas
*./ * \ .*
.*♫*.
, • '*2665.png* ' • ,
'*• ♫♫♫•*'
' *, • ' ♫ ' • ,* '
' * • ♫ *2665.png* ♫• * '
* , • Merry' • , * '
* ' •♫♫*2665.png*♫♫ • ' * '
' ' • Christmas . • ' ' '
' ' • ♫♫♫*2665.png*♫♫♫• * ' '
.x2665.pngx
2665.png•。•。
┊ ┊ ┊ ┊
┊ ┊ ┊ ★
┊ ┊ ☆
┊ ★ ◄──2665.png'Ğσ∂ ßℓєѕѕ Ŷσµ'2665.png
2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png2665.png
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயம் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாச ஆண்டகையினால் வெள்ளிக்கிழமை (23) காலை திறந்து வைக்கப்பட்டது.

 

Image may contain: sky and outdoorImage may contain: sky and nightImage may contain: ocean, sky, twilight, outdoor, water and natureImage may contain: ocean, sky, twilight, outdoor, water and nature

Image may contain: ocean, sky, twilight, outdoor, nature and water

Image may contain: people standing, sky and outdoor

Image may contain: one or more people, sky, twilight and outdoorImage may contain: one or more people, sky, twilight and outdoor

Image may contain: sky and bird

Image may contain: sky, twilight and outdoor

 

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

26.12.2004 அன்று சுனாமி பேரலையால் இறந்த எமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்துவோமாக..!

 
Image may contain: text
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமிப் பேரலை 12 ஆண்டு நினைவு நாள் 26.12.2016

வேண்டாம்!!
இனியொரு 26
■ ■ ■ ■ ■ ■ ■

அரவணைத்து எமை
சுமந்திட்ட அன்னையே
நீ.......
சினமுற்றுச் சீறலாமா?
அலைக்கற்றை கிழித்து 
உலைக்கென உழைத்தோம் 
கொலைக்கரம் கொண்டு
கொன்றொழித்ததேனம்மா?
கரை தொட்டு மீளும் நீ
ஊரெட்ட நினைத்ததேனோ?
உன் அணைப்பு வேண்டி
உன்மடி படகூன்றி
உழைத்த உன் சேய்கள் 
ஏலேலோ பாடி
உன் உடல் நாடி
கரைமீண்ட கால்கள் 
நீளுறக்கம் கொள்ளும் 
நிலைதனை ஏன் கொண்டாய்? 
திரண்ட அலைகளுள் 
உருண்ட உடலங்களை
நீ..........
புணர்ந்து ருசித்தது 
நீதியோ தாயே!
உன்னோடு நாளும்
உறவாடிய உறவுகளை 
சுனாமியெனும் பெயர் சூடி
உன்னோடே எடுத்துவிட்டாய் 
தாயே!
இனியேனும் நீ
அமைதிகொள்வாய் 
"வேண்டாம் 
இனியொரு 26"

■ மல்லாவிக் கஜன்
2016.12.26

●ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட எம் உறவுகளின் நீங்காத நினைவலைகளுடன் இன்றுடன் முடிந்து போகும் பன்னிரெண்டு ஆண்டுகள்...........

Image may contain: candles
  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.