Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • Replies 3.3k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது முகநூல் எப்படி பலதும் பத்துமாக பிரகாசித்ததோ அது போன்று என்னை பல ஆண்டுகளுக்கு முன் உறுப்பினர் ஆக்கிக் கொண்ட யாழில் பல அம்சங்களையும் பதிவிட எண்ணி உள்ளேன்...அடுத்த பக்கத்தில் எந்தப் பதிவுகளும் பதிய

ஆயிரம் புள்ளினளை அள்ளித் தந்த அனைத்து உறவுகளுக்கும்  மனம் நிறைந்த நன்றிகள். 1,000 ???

நீ உழைக்கும்  உழைப்பில் சிறிதாவது உனக்கென சேமித்து வைத்துக்கொள்  இல்லையெனில்  கஷ்டம் வரும்பொழுது உதவுவதற்கு யாரும் முன் வர மாட்டார்கள் உன் சகோதரனாக இருந்தாலும். 1ரூபாயாக இருந்தாலு

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

கிழமையில் முன்று நாட்கள் அடிக்கடி என் காதை பிளக்கும் சொல்லாடல் "மம் நோ சால்ட் அன்ட் நோ வாட்டர்." 

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களின் மிகுதிக்கால வாழ்வு இந்த இரண்டையும் தன் மனப்போக்கில் உட் கொள்ளும் நோயாளியின் கையிலேயே தங்கியுள்ளது..ஏன் இவற்றை சொல்லவருகிறேன் என்றால் பெரும் பாலும் நம்மவர்களை தாக்கும் நோய்களில் முக்கிய பங்கு வகிப்பவை ஒன்று நீரளிவுநோய் மற்றையது சிறுநீரக செயல்இளப்பு என்று சொல்லலாம்..நீரளிவுநோயாளிகள் உங்கள் குருதியில் உள்ள சீனித்தன்மையின் அழவை கட்டுப்பாட்டுக்குளவைத்திருப்பீர்களேயானால் மேலதிக நோய் தாக்கங்களிலிருந்து சற்றேனும் நம் உடலை பாதுகாத்து கொள்ளலாம்..வீட்டிலிருக்கும் மற்றைய உறவுகளுக்குள் ஏற்படும் சிரமங்களையும் தவிர்த்து கொள்ளலாம்.

எனது தாயார் சிறுநீரகம் பாதிப்படைந்த நோயாளி . கடந்த இரண்டு ஆண்டுகளாக டயலஷ்சிஸ் முறையூடாக உடலில் களிவுநீர் சுத்திகரிப்பு நடந்து வருவது வழமையாயிற்று..எல்லாருக்கும் இவற்றைச் சொல்லி புரிய வைப்பது கடினம்..நான் இவை பற்றி யாரோடும் பெரிதாக பேசிக்கொள்வதும் இல்லை.ஆனால் நம்மை சூழ உள்ளவர்களினது வாய் ரொம்ப பெரியதாச்சே என்ன வேணும் என்றாலும்; எப்படி வேணும் என்றாலும் பேசிக் கொள்ளாம்..

ஏன் எனில் நேற்று அம்மாவின் உறவுக் காறப் பெண்மணி ஒருவர் போண் எடுத்து பேசிக் கொண்டிருந்து விட்டு கேட்டார்;  
அன்றொரு முறை உங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது எனக்கு மட்டும் தேனீர் தந்தீர் ஆனால் உமது அம்மாவுக்கு கொடுக்கவில்லயே ஏன்....? இதனுடைய உள்ளார்ந்த அர்த்தம் என்ன நோய் என்று அறிதலே..சிறுநீரக பாதிப்புக்கு உள்ளான நோயாளிக்கு வளங்க ௯டிய நீரானது இதில் இணைக்கப்பட்டுள்ள தண்ணீர் போத்தலுக்குள் உட்பட்டதாகவே இருக்க வேண்டும்.. தேனீர்.தண்ணீர்.சூப் எவ்வகையான தண்ணித் தன்மை கொண்ட உணவுகளும் இந்தச் சிறிய போத்தலுக்கு உட்பட்டது தான் என்றால் அடிக்கடி ஒரு நோயாளிக்கு தண்ணீர்; தேனீர் போன்றவை கொடுத்து பராமரிப்பது மிகவும் கடினம்...அந்த கேள்விக்கு பின்னரான பதிலாக அந்த நோய் அதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் நாளாந்தம் எடுக்க ௯டிய தண்ணீரின் அழவு என நிறைய விளக்கங்கள் கொடுக்க வேண்டிய நிலையாயிற்று...

No automatic alt text available.Image may contain: drink
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

கிழமையில் முன்று நாட்கள் அடிக்கடி என் காதை பிளக்கும் சொல்லாடல் "மம் நோ சால்ட் அன்ட் நோ வாட்டர்." 

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களின் மிகுதிக்கால வாழ்வு இந்த இரண்டையும் தன் மனப்போக்கில் உட் கொள்ளும் நோயாளியின் கையிலேயே தங்கியுள்ளது..ஏன் இவற்றை சொல்லவருகிறேன் என்றால் பெரும் பாலும் நம்மவர்களை தாக்கும் நோய்களில் முக்கிய பங்கு வகிப்பவை ஒன்று நீரளிவுநோய் மற்றையது சிறுநீரக செயல்இளப்பு என்று சொல்லலாம்..நீரளிவுநோயாளிகள் உங்கள் குருதியில் உள்ள சீனித்தன்மையின் அழவை கட்டுப்பாட்டுக்குளவைத்திருப்பீர்களேயானால் மேலதிக நோய் தாக்கங்களிலிருந்து சற்றேனும் நம் உடலை பாதுகாத்து கொள்ளலாம்..வீட்டிலிருக்கும் மற்றைய உறவுகளுக்குள் ஏற்படும் சிரமங்களையும் தவிர்த்து கொள்ளலாம்.

எனது தாயார் சிறுநீரகம் பாதிப்படைந்த நோயாளி . கடந்த இரண்டு ஆண்டுகளாக டயலஷ்சிஸ் முறையூடாக உடலில் களிவுநீர் சுத்திகரிப்பு நடந்து வருவது வழமையாயிற்று..எல்லாருக்கும் இவற்றைச் சொல்லி புரிய வைப்பது கடினம்..நான் இவை பற்றி யாரோடும் பெரிதாக பேசிக்கொள்வதும் இல்லை.ஆனால் நம்மை சூழ உள்ளவர்களினது வாய் ரொம்ப பெரியதாச்சே என்ன வேணும் என்றாலும்; எப்படி வேணும் என்றாலும் பேசிக் கொள்ளாம்..

ஏன் எனில் நேற்று அம்மாவின் உறவுக் காறப் பெண்மணி ஒருவர் போண் எடுத்து பேசிக் கொண்டிருந்து விட்டு கேட்டார்;  
அன்றொரு முறை உங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது எனக்கு மட்டும் தேனீர் தந்தீர் ஆனால் உமது அம்மாவுக்கு கொடுக்கவில்லயே ஏன்....? இதனுடைய உள்ளார்ந்த அர்த்தம் என்ன நோய் என்று அறிதலே..சிறுநீரக பாதிப்புக்கு உள்ளான நோயாளிக்கு வளங்க ௯டிய நீரானது இதில் இணைக்கப்பட்டுள்ள தண்ணீர் போத்தலுக்குள் உட்பட்டதாகவே இருக்க வேண்டும்.. தேனீர்.தண்ணீர்.சூப் எவ்வகையான தண்ணித் தன்மை கொண்ட உணவுகளும் இந்தச் சிறிய போத்தலுக்கு உட்பட்டது தான் என்றால் அடிக்கடி ஒரு நோயாளிக்கு தண்ணீர்; தேனீர் போன்றவை கொடுத்து பராமரிப்பது மிகவும் கடினம்...அந்த கேள்விக்கு பின்னரான பதிலாக அந்த நோய் அதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் நாளாந்தம் எடுக்க ௯டிய தண்ணீரின் அழவு என நிறைய விளக்கங்கள் கொடுக்க வேண்டிய நிலையாயிற்று...

Image may contain: drink

நீங்கள் ஏன் மற்ற்வர்களுக்கு விளக்கம் கொடுக்கிறீர்கள் யாயினி?...இப்படியான கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல் மெளனமாக இருங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Image may contain: one or more people
Loganathan Kanapathipillai 
· 
 

மார்ச் 7, 2017> ”ஆசுகவி” கல்லடி வேலுப்பிள்ளை அவர்களின் 157ஆவது ஜனன தினம்

"கொண்டாடினான் ஒடியற்கூழ்"…!

கல்லடி வேலுப்பிள்ளையின் வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய கல் ஒன்று இருந்தது அதனால் எல்லோரும் அவரைக் கல்லடி வேலன் என்று செல்லமாக அழைத்தனர்.

கல்லடி வேலுப்பிள்ளைக்கு சுப்பையா என்ற பெயருடைய அருமை நண்பர். இவர், இரத்தினபுரியிலுள்ள நிவிற்றிக்கொல்லை என்னும் ஊரிலுள்ள மருத்துவமனையில் வைத்தியராகப் பணிபுரிந்து வந்தார்.
புலவருக்கு தனது நண்பனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு நாள் புலவர் தம் நண்பரைப் பார்ப்பதற்காக நிவிற்றிக் கொல்லைக்கு புறப்பட்டுச் சென்றார். புலவர் நிவிற்றிக் கொல்லைக்கு சென்ற வேளை, நண்பகல் வெயில் நெருப்பாக எரித்தது. புலவர் தன்னுடைய பசி தாகம் என்பவற்றைப் பொருட்படுத்தாது நண்பனின் வீட்டை அடைந்தார்.

புலவரை எதிர்பாராது கண்ட நண்பரையும் மனைவியும், அவரை வரவேற்று உபசரித்து, புலவரின் சுகநலங்களை விசாரித்தனர். வைத்தியரின் மனைவியார் புலவர் களைப்பாக இருந்ததை உணர்ந்தார். எனவே அவர் புலவருடைய களைப்பைப் போக்க எண்ணி, உடம்பு அலுப்புக்கு உவப்பானது ஒடியற்கூழே என எண்ணியதுடன், ஒடியற் கூழில் புலவருக்கு மிகப் பிரியம் உண்டு என்பதும் அவருக்குத் தெரியும்.எனவே வைத்தியரின் மனைவி கூழ் காச்சி கணவருக்கும், அவரது நண்பருக்கும் பரிமாறினார்.

புலவரும் நண்பரும் கூழ் குடிக்க அமர்ந்தனர். பலா இலையை மடித்துக் கோலினர், கூழை அள்ளி ஊதி ஊதிக்குடித்தனர். அந்தக்கூழ் மிகவும் சுவையாக இருந்தது. ” என்ன அருமையான் கூழ்” என்று வியந்தார் புலவர். புலவரின் பசியும், களைப்பும் நீங்கியது. உடனே ஆசுகவி ஒடியற் கூழைப்பற்றிப்பாடினார். 

“அல்லையுற்று இரத்தினபுரி அண்டி
அப்பாலே நிவிற்றிக்கொல்லை
அடைந்த அலுப்புக் கொண்டதற்கு
கல்லடியான் வண்டாரும் மாலை அணி
மற்புயற் சுப்பையனுடன்
கொண்டாடினான் ஒடியற் கூழ்” என்பதே அந்தப் பாடல்.

(4ம் ஆண்டு தமிழ் பாடப்புத்தகத்தில் "கொண்டாடினான் ஒடியற்கூழ்" என்ற தலைப்பில் இக்கதையினை விரும்பி படித்தது இன்றும் நினைவில் உள்ளது.)

 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் மார்ச் 06.2017ல் ரொறன்டோ தனது 183 ஆண்டை நிறைவு செய்திருக்கிறது.

Image result for toronto imagesImage result for toronto images


 

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திருச்சிற்றம்பலம்
"யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே".
திருச்சிற்றம்பலம்

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

* பெண் விடுதலை என்பது, அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் பொருளாதாரச்சுரண்டல்
முறைகளிலிருந்தும் விடுதலை பெறுவதாகும்…

...

வே.பிரபாகரன்

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மகளிர் தின வரலாறு!


Womens day மார்ச்8, 1857 - அன்று முதல் உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆனால், அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான‌ போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது.

1910-ம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரா செர்கினே, ஒரு தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். அந்த தீர்மானத்தின் முக்கிய சாரம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதற்கிடையில், 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

மார்ச் 8-ம் தேதிக்கும், மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டு பெண் வர்க்கமே அறிந்துகொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்று இருக்கிறது. 1789-ம் ஆண்டு ஜூன் 14-ம்‌ தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.

1907-ல் தொடக்கம். 1909-ல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம், 1910-ல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு, 1911-ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம், 1912-ல் Bread and roses வாசகம், 1914-1916-ல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம், 1917-ல் ரஷ்யாவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட மகளிர் தினம், 1945 தனி பெண்ணுக்கான உரிமை, உலக பெண்களுக்கான உரிமையாக மாற்றப்பட்ட வருடம். 1975-1977 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. 2014-ல் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

சமீப காலமாகத்தான் இந்தியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது.

No automatic alt text available.
 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் பெண்மணிகளுக்கு கிடைத்த சில அங்கீகாரங்கள்...

 
 
     மார்ச் 08 திகதியானது உலகளாவியரீதியில் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகின்றது. சர்வதேச மகளிர் தினமானது 1909ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டுவருகின்றது. 

 
Happy-Womens-Day.jpg
 
 
·        பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து ஆகும்.(1893ம் ஆண்டு)

 
·        ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற முதல் பெண்மணி பிரிட்டனைச் சேர்ந்த சார்லொட் கூப்பர், இவர் 1900ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். 

 
·        பெண்கள் முதன்முதலில் தடகள மற்றும் சுவட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது 1928ம் ஆண்டு அம்ஸ்ரெர்டாம் ஒலிம்பிக் போட்டியிலாகும். 

 
·        பெண்களுக்கான மருத்துவப் பாடசாலையினை நிறுவிய முதல் நாடு ஜப்பான் ஆகும். 1900ம் ஆண்டு யோஷிகா யயோய் என்பவரால் நிறுவப்பட்டது.

 
·        விண்வெளிக்கு பயணம் செய்த முதல் பெண்மணி ரஷ்யாவினைச் சேர்ந்த வெலன்டினா தெரெஷ்கோவா ஆவார். (1963ம் ஆண்டு)

 
HighFlight-ValentinaTereshkova42.jpg
 
 
·        முஸ்லிம் நாடொன்றில் தலைமைத்துவத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட முதல் பெண்மணி பெனாசீர் பூட்டோ ஆவார். இவர் 1988ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக மக்களால் தெரிவுசெய்யப்பட்டார்.

 
Benazir-Bhutto2.jpg
 
·        பெண்கள் பட்டப்படிப்பினை மேற்கொள்ள அனுமதி வழங்கிய முதல் ஐரோப்பிய பல்கலைக்கழகம் சூரிச் பல்கலைக்கழகம் ஆகும்.(1865ம் ஆண்டு)

 
·        ஐக்கிய அமெரிக்க தபால் துறை வரலாற்றில் தபால் முத்திரையில் உருவப் படம் பொறிக்கப்பட்ட முதல் பெண்மணி என்கின்ற பெருமையினைப் பெறுபவர் ஸ்பெய்ன் மகாராணி இசபெல்லா ஆவார்.(1893ம் ஆண்டு)

     கிறிஸ்தோபர் கொலம்பஸ்சின் நாடுகாண் பயணத்திற்கு வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை இவரையே சாரும்.
 
·        எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்த முதல் பெண்மணி ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த ஜுன்கோ தஃபெய் ஆவார்.(1975ம் ஆண்டு)

 
fl20120527x2b.jpg
 
 
·        ஐக்கிய நாடுகள் சபையானது 1975ம் ஆண்டினை சர்வதேச பெண்கள் ஆண்டாக பிரகடனப்படுத்தியது.

 
·        தற்போது உலகில் 17 நாடுகளில் பெண்கள் ஜனாதிபதிகளாகவும், பிரதம மந்திரிகளாகவும் ஆட்சிபீடத்தில் இருக்கின்றனர். 
    அந்த நாடுகளாவன;  ஜேர்மனி, லைபீரியா, ஆர்ஜென்ரீனா, பங்களாதேஷ், ஐஸ்லாந்து, லுத்துவேனியா, கொஸ்டாரிக்கா, டிரினாட் & ரொபாக்கோ, அவுஸ்திரேலியா, ஸ்லோவாக்கியா, பிரேசில், கொசோவா, தாய்லாந்து, டென்மார்க், ஜமைக்கா, மலாவி, தெ கொரியா
 • Like 5
Link to post
Share on other sites

இனிய மகளிர் தின வாழத்துக்கள்

A woman is like a tea bag – you never know how strong she is until she gets in hot water. – Eleanor Roosevelt

Happy Women's day to all the loving women !

17202678_1446922048691227_79217239247434

 

 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

மகளீருக்கு வாழ்த்துக்கள்.

 

5 hours ago, nunavilan said:

இனிய மகளிர் தின வாழத்துக்கள்

A woman is like a tea bag – you never know how strong she is until she gets in hot water. – Eleanor Roosevelt

Happy Women's day to all the loving women !

17202678_1446922048691227_79217239247434

 

 

 


மிக்க நன்றி ஈழப்பிரியன் மற்றும் நுணா.

Edited by யாயினி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கனடிய பாராளுமன்றத்தில் சர்வதேச பெண்கள் தினம் 
International Women’s Day @ Canadian Parliament.

 
Image may contain: 2 people, people sitting, table and indoor
ThesiyamLike Page

கனடிய பாராளுமன்றத்தில் சர்வதேச பெண்கள் தினம் 

International Women’s Day @ Canadian Parliament

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று கனடிய பாராளுமன்றத்தில் 338 இளம் பெண்கள் (கனடாவின் ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து ஒருவர் என்ற வகையில்) கலந்துகொண்ட அமர்வொன்று நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் பிரதமர் Trudeau உரையாற்றினார்

To mark the International Women’s Day, 338 young women ((one from each riding in the country) from across Canada were at the Parliament Hill today. Prime Minster Trudeau spoke at today’s gathering.

 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கத்தோடு...இன்று அதிக குளிர் நிறைந்த ஒரு நாளாகும்.:)

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காலச்சக்கரம் எப்படியெல்லாம் சுழண்டுகொண்டிருக்கு என்பதுக்கு வரலாற்றின் வாக்குமூலம் நூதனசாலை என்று சொல்ல நினைக்கத்தோன்றுகிறது. நின்று நிமிர்ந்து ஒரு நாட்டின் வரலாறை அதன் வளர்ச்சியின் பக்கம் நின்று படமெடுத்து சென்ற தலைமுறையின் தொன்மையான காலமாற்றமும் ,முன்னோடிச் சிந்தனைகளும் உயிராக்கிய உத்தரவாதங்களை இன்றைய தலைமுறைக்குக் கையில்க் கொடுப்பது போல ஆவணமாக்கிவிடும் மியுசியங்கள் செய்வதுபோல எந்த எழுத்தில் வரும் பாடப்புத்தகங்களும் செய்வதில்லை என்று நினைக்கிறேன். 

இந்த உலகத்திலையே அதிகம் மியூசியம் என்ற நூதனசாலை உள்ள நகரம் சுவீடனில் தலைநகரம் ஸ்டோக்ஹோலம் என்று ஒரு உல்லாசப்பயணிகள் வழிகாட்டிக் குறிப்பில் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. எண்பத்தைந்து மியூசியம் இருக்குதாம் என்று விபரமாக அதில ஒவ்வொரு மியூசியம் பற்றியும் சின்னச் சின்ன குறிப்பு எழுதியிருந்தார்கள். சில மியூசியங்கள் பெருந்தன்மையோடு இலவசம். பல மியூசியங்கள் உள்ளே நுழைய பேர்சில கையை விட்டுத் துலாவவேண்டும் போலிருந்தது 

முக்கியமாக அஞ்சு சத்துக்குப் பிரயோசனம் இல்லாமல் வம்பளந்துகொண்டும் , வில்லங்களை விலைக்கு வேண்டிக்கொண்டு , உருப்படியான திசைகளில் பயணிக்காமலும் இந்த நகரத்தில் வசித்துக்கொண்டு, இந்தத் தகவல் தெரியாமல் இருந்துகொண்டு இருக்கிறேனே என்பது என்னைப்பொறுத்தவரை என் உலக அறிவுபற்றிய போதாமை கொஞ்சம் கேவலமாகத்தான் என்னையே பார்த்தது. 

ஸ்டோக்ஹோலாமில் உள்ள பெரிய முக்கியமான நூதனசாலையான நசினால் ஹிஸ்டோரிஸ்க் மியூசியம் மட்டும் பல வருடம் முன் போய்ப்பார்த்த நினைவு இருக்கு. அதில் கொஸ்மேனியம் என்ற 360 பாகையில் வெள்ளித்திரையில் விழுத்தி விண்வெளி சம்பந்தமான ஒளிப்படங்கள் காட்டும் தியேட்ட்ர் இருப்பதால் ஆரவாக்கோளாறில் போய்ப்பார்த்தேன் .மற்றப்படி சுவீடனின் நசினால் ஹிஸ்டோரி பற்றி அக்கறை இருந்ததில்லை. அதைவிட அபா( ABBA ) இசைக்குழுவின் மியூசியம் இருக்கு என்றும் கேள்விப்பட்ட்துண்டு , இது ரெண்டையும் விட இன்னும் எண்பத்தி மூன்று மியூசியங்கள் இருப்பது ஆச்சரியமான தகவல்தான் .

சுவீடன் கண்ணாடியை உருக்கி அதில் கிண்ணங்கள் செய்வதில் உலகப்பிரபலம். அவர்கள் வடிவமைக்கும் கிண்ணங்கள் அவர்களின் புதுமையும் பழமையும் கலந்த விசித்திரமான எண்ண அலைகளை எப்பவுமே பிரதிபலிக்கும். சாதாரணமான வீடுகளிலேயே அலங்காரமான அதே நேரம் ஒரு விதமான அப்ஸ்ட்ரக் கலையம்சமுள்ள கண்ணாடிக்கு கிண்ணங்களை மேசைகளில் வைத்து இருப்பார்கள். அதைப்பற்றி பெருமையாகப் பேசுவார்கள் , 

பல்லு விளக்காத நாறல் வாயை வைச்சு உறிஞ்சி அதில தண்ணி ஊற்றிக்குடிக்கவே கொஞ்சம் தயக்கமாக இருக்கும். பார்த்துக்கொண்டிருப்பதே பராவசங்கள் கொடுக்கும் நளினமான வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட அப்படியான அம்சலேகாத்தனமான கண்ணடிக் கிண்ணங்களுக்கேயென்று ஒரு மியூசியம் இருக்கு, அதனுள்ளே எப்ப்டிக் கண்ணாடிக் கிண்ணங்கள் வாயால ஊதி வடிவமைப்பது என்ற செய்முறை நிலையமும் இருக்கு. 

நெருப்புப்பெட்டி எப்படி ஆதிகாலத்தில் இருந்து காலத்தோடு சமாந்தரப் பயணத்தில் மாறி மாறி வந்தது என்று ஒரு நெருப்புப் பெட்டி வரலாற்று மியூசியம் இருக்கு . புகையிலை எப்படி சுவீடனில் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வடிவமெடுத்து சிகரெட் ஆகவும் சுருட்டு ஆகவும் ஊதிப் புகை தள்ளியவாறு கால வெளியில் பிரயாணம் செய்தது என்று ஒரு டொபாக்கோ மியூசியம் இருக்கு. சுனுஸ் என்று கொடுப்புக்குள் அடயும் சின்னப் பையில் உள்ள புகையிலை வடிவமே சுவீடனில்தான் கண்டுபிடிக்கப்பட்டதாக அதில சொல்லி இருந்தார்கள் .சிகரெட் பத்துவதை விடவிரும்புபவர்கள் அதிகம் நுரையீரலுக்கு நேரடி அலுப்புக் கொடுக்காத சுனுஸ் பாவனையில் இறங்குகிறார்கள் 

சுவீடன் அபா(ABBA ) என்ற இசைக்குழுவை உலகத்துக்குத் தந்து கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்த நாடு. அபா ஒரு இசை சகாப்தம் . அவர்கள் பேசிய மொழி சுவிடீஷ் தாய் மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் பாடி உலகை ஒரு ஆட்டு ஆட்டியவர்கள். Pure Entertainment என்பதை எண்பதுக்களில் குறைவில்லாமல் அள்ளிக்கொடுத்தவர்கள் 

அவர்களின் இசைவாழ்வின் முக்கியமான எல்லா அம்ஸங்களையும் சேர்த்து வைத்து அபா ABBA மியூசியம் உருவாக்கியுள்ளார்கள். அபா இசையில் சுழன்று உலகப் பணத்தை அள்ளிக்கொண்டு சுவிடனுக்கு வந்ததோ அதுபோல அபா மியூசியம் இப்ப இசைரசிக உல்லாசப்பிரயாணிகளின் வ்ருகைப் பணத்தை உள்நுழையும் கட்டணத்தில் உண்டியல் குலுக்கி சுருட்டி எடுக்குது. அதுக்கு நிறையவே தகுதியும் இருக்கு. 

அபா(ABBA ) மியூசியம் தான் மிகவும் ஆர்வமாகப் பார்க்கும் ஆசையை உருவாக்கி உள்ளது. அவர்களின் பாடல்களை கிடாரில் வாசித்து இருக்கிறேன். அப்பிடி என்னதான் செய்து அதிசயமான அந்த இசையை அவர்கள் உருவாக்கினார்கள் என்று அறிய ஆவலாக உள்ளது. அபா(ABBA ) இல் இருந்த ரெண்டு பெண்களையும் ரெண்டு ஆண்களையும் தவிர அந்த இசைக்குழுவில் மற்ற யாரெல்லாம் இருந்து இசை வடித்தார்கள், இசைக்கருவி வாசித்தார்கள், முக்கியமாக யார் பேஸ் கிட்டார் , ட்ரம்ஸ் வாசித்தது போன்ற விபரம் எங்கேயும் இல்லை. ஒருவேளை அந்த மியூசியத்தில் நோண்டிப்பார்த்தால் கிடைக்கலாம் என்று நினைக்கிறன் 

மியூசியம் என்ற நூதனசாலைகள் காலத்தின் போக்கில் வரலாறு எப்படி எப்படியெல்லாம் மாறியது என்பதுக்கு கண்ணுக்கு முன்னே விரிந்து கிடக்கும் முக்கியமான சாட்சியாக இருக்கு. அது தரும் விருந்துகளில் இன்றைய இளம் பள்ளிப் பிள்ளைகள் நேரடியாகவே சென்று அவற்றைப் பார்த்துப் படிக்கிறார்கள், வரலாற்றின் வாசனைகள் சுவாசிக்கிறார்கள், ஏன் தங்கள் மூதாதையரின் ஆத்மாவோடும் பேசிக்கொள்கிறார்கள். 

கொஞ்சம் பிராக்டிகல் சயண்டிபிக் அப்புரோச் ஆக ஜோசித்துப் பார்த்தால் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளில் உலகத்தின் போக்கு எப்படி இருக்கும் என்று கனவு காண்கிறார்கள். அந்தக் கனவில் நீண்ட ஒரு சகாப்தத்தை மாற்றங்களோடு இணைத்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார்கள். அதனால்தானோ தெரியவில்லை மூச்சுப் போனாலும் இந்த பிரபஞ்சத்தில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்கிறார்களாக்கும் ..

Image may contain: outdoor
நாவுக் அரசன்(சுவீடன்)
10.03.2017
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, sitting, table and indoor
Loganathan Kanapathipillai 

மார்ச் 11, 2017> பென்சிலின் மருந்தை கண்டு பிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் அவர்களின் 62 ஆவதுநினைவு தினம்.

முன்னொரு காலத்தில் ஸ்கொட்லாந்தில் பிளெமிங் என்ற ஒரு ஏழை விவசாயி வாழ்ந்துவந்தார். ஒரு முறை வயலுக்கு சென்று திரும்பும் அவர் ஒரு அலறல் சத்தத்தை கேட்டார். விரைந்து சென்ற பார்த்த போது, அங்கே ஒரு சிறுவன் புதைகுழியில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கவனித்தார். நிதானமான, ஆனால் நிச்சயமான அந்த மரண பயங்கரத்தில் இருந்து அந்த சிறுவனை அவர் மீட்டெடுத்தார். 

அடுத்த நாள் அந்த விவசாயி வீட்டின் முன்னே ஒரு அலங்கார வண்டி வந்து நின்றது. அதில் இருந்து ஒரு கனவான் இறங்கி வந்து, தன்னை அந்த சிறுவனின் தந்தை என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். தான் நம் விவசாயிக்கு மிகுந்த கடன் பட்டிருப்பதாகவும், அவருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ விரும்புவதாகவும் கூறினார். 

அவருக்கு பிளெமிங் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார். 
"நன்றி ஐயா! நீங்கள் எனக்கு ஏதேனும் உதவி செய்ய விரும்பினால், என் மகனை உங்களுடன் அழைத்து செல்லுங்கள். அவனை படிக்க வையுங்கள். ஒருவேளை அவன் என்னைப் போலவே இருந்தால், ஒருநாள் நிச்சயமாக உங்களை பெருமை அடைய செய்வான்" 

அந்த சிறுவனை அழைத்துச் சென்ற கனவான், தான் வாக்களித்தது போலவே நன்கு படிக்கவைத்தார். 
அந்த சிறுவனும் தனது தந்தையின் வாக்கை காப்பாற்றினான். சொல்லப் போனால், அந்தகனவானின் மகனின் உயிரை இரண்டாவது முறையாக காப்பாற்றினான். 

அந்த சிறுவன்தான், மனித குலத்தின் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பான பென்சிலின் மருந்தை கண்டு பிடித்த அலெக்சாண்டர் பிளெமிங். நியுமோனியா வியாதியில் இருந்து அவர் காப்பாற்றிய அந்த கனவானின் மகனும் சாதாரண ஆள் இல்லை. பிரிட்டனில் பெரும் சமூக தொண்டாற்றிய ருடாடோல்ப் சேர்ச்சில். அவருடைய மகன்தான், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற பிரதமர்களில் ஒருவரான வின்ஸ்டன் சேர்ச்சில். 

இப்படி விவசாயி மற்றும் அந்த கனவான் செய்த இரண்டு நல்ல காரியங்கள் இந்த உலகிற்கே பெரிய பலன்களை தந்திருக்கின்றன.

 
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

it was not me back ... புதிதாக எதுவுமில்லை அந்தப் பழைய நானேதான்..?

 

நேரம் மாறி விட்டது..இன்னும் குளிர் நிலை மாறவில்வை..?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
 
கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று அவ்வை சொன்னது...
 
 
அவ்வைமட்டுமல்ல முதியோரும் சொல்லி வைத்தனர் .

புதிய ஆக்கம் எழுதலாமா விடுவமா....??

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்வர்யா தனூஸ் ஜனா மேடையில பரத நாட்டியமாடிய மாதிரி பனி கொட்டத் தொடங்கீட்டு.....❄️❄️❄️❄️❄️❄️?????

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, யாயினி said:
 
கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று அவ்வை சொன்னது...
 
 
அவ்வைமட்டுமல்ல முதியோரும் சொல்லி வைத்தனர் .

புதிய ஆக்கம் எழுதலாமா விடுவமா....??

இதென்ன கேள்வி..?

எழுதுங்கள்...யாயினி!

ஒரு ஹைக்கூ திரி ஒன்று தொடங்குங்கள்!

பூந்து விளையாடுவோம்!

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கச்சைதீவு .....

Image may contain: night and outdoor

Image may contain: night

No automatic alt text available.

Image may contain: tree, night and outdoor

Image may contain: one or more people, outdoor and nature

 

Image may contain: night, sky and outdoor

 

Image may contain: people standing, night and outdoor


Image may contain: one or more people, night, sky and outdoor

 

Image may contain: night, tree, plant and outdoor

 

Image may contain: sky, night and outdoor

 

Image may contain: tree, plant, night, sky, outdoor and nature

Image may contain: night, sky and outdoor

 

படங்கள்:- நெடுந்தீவு தனு

Image may contain: sky, cloud, ocean, beach, mountain, outdoor, nature and water

 

 

Image may contain: one or more people, people standing, sky, crowd and outdoor

Image may contain: 2 people, people standing

Image may contain: sky, ocean, cloud, outdoor, water and nature

Image may contain: one or more people, sky, ocean, outdoor and nature

Image may contain: one or more people, people standing, wedding and outdoor

 

Image may contain: cloud, sky and outdoor

Image may contain: ocean, sky, outdoor and water

 

Image may contain: 1 person, standing and indoor

படங்கள்:- நெடுந்தீவு தனு

 • Like 3
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.