Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
No automatic alt text available.
 

எப்படி வந்தது முட்டாள் தினம்?

ஏப்ரல் முதல் தேதி, உலகமெங்கும் முட்டாள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று யாரை ஏமாற்றி 'முட்டாள்' ஆக்கினாலும், அவர்கள் கோபித் துக்கொள்ள மாட்டார்கள். முட்டாள்களுக்காக ஒரு தினம் கொண்டாடவேண்டும் என்ற யோசனையை வெளியிட்டவர் பாஸ்வெல் என்பவர்தான்!

சூரிய வழிபாட்டுக்கும் இந்த விழாக் கொண்டாட் டத்திற்கும்கூடச் சம்பந்தம் இருப்பதாகப் பழைய நூல்களிலிருந்து தெரிய வருகிறது.

ஆதி குடிகளான ஸெல்ட் சாதியினர், லியூ என்ற சூரியக் கடவுளைக் குறித்து இந்த வசந்த விழாவைக் கொண்டாடினர். இதில் முக்கிய அம்சம், ஒருவர் மற்றொருவரை ஏமாற்றிக் கிண்டல் செய்வதாகும்.

இப்படி முட்டாளாக்கப்படுபவர்களை பிரான்ஸில் 'ஏப்ரல் ஃபிஷ்(மீன்)' என்றழைக்கிறார்கள். அக்காலத்தில் ஏப்ரலுக்கு ஏப்ரல் ஆங்கில வருடப்பிறப்பு கொண்டா டப்பட்டு வந்தது. அந்த வருடப் பிறப்பன்று பிறரை முட்டாள்களாக்கிக் குதூகலமாகக் கொண்டாடி வந்தனர். ஏப்ரல் முட்டாள் விளையாட்டுக்களெல்லாம் அன்று காலை வேளையில் மட்டும்தான் செய்யப்பட வேண்டும். மாலையில் கிண்டல் செய்தால், கிண்டல் செய்பவரேதான் முட்டாள்!

இதைக் குறிப்பிடும் ஒரு கவிதை...

'மார்ச் மறைந்தது; ஏப்ரல் வந்தது. நீதான் முட்டாள்; நானில்லை!' (March has gone and April comes; you are a fool and I’m none.)

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தினாற்செய்த உதவி

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ “சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக்கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு செக் கொடுத்துவிடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”. என்கிறார்.

அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

யாரோ முன் பின் தெரியாத இரு மாணவர்களிடம் ஏன் பேட்ரெவ்ஸ்கி இப்படி நடந்துகொள்ளவேண்டும்? அதனால் அவருக்கு என்ன லாபம்?

“எரியும் வீட்டில் பிடிங்கிய வரை லாபம் என்று கருதுவது தானே புத்திசாலித்தனம். நாம விட்டுக்கொடுத்தாலோ இல்லை உதவி பண்ணினாலோ அதுனால நமக்கு என்ன லாபம்?” இப்படித் தான் பெரும்பாலானோர் நினைப்பார்கள்.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை…” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

ஆண்டுகள் உருண்டன.

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு.

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.

“நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.

பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

இத்தோடு முடியவில்லை ஹூவரின் நன்றிக்கடன். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் (1946) போலந்துக்கு உதவுவதற்கு என்றே ஒரு தனி கமிஷன் ஹூவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் சார்பாக போலந்துக்கு நேரில் சென்ற ஹெர்பர்ட் ஹூவர், அந்நாட்டிற்கு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவுத் திட்டங்களை வகுத்துக்கொடுத்துவிட்டு அவற்றிற்கான அமெரிக்க அரசின் உதவிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். இதன் காரணமாக போலந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹெர்பெர்ட் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவருக்கு போலந்து நாட்டு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. போலந்து மக்கள் மனதில் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார் ஹெர்பெர்ட் ஹூவர்.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் UNICEF & CARE என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டு அமைப்புக்களை ஹூவர் ஏற்படுத்தினார். அதன் மூலம் உலக முழுதும் பல லட்சம் மக்கள் இன்றும் பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

அதனால் தான் நம் பாரதி, ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடினான். அவன் தீர்க்கதரிசி.

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில்…… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை! பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே…..காலம் குறித்து வைத்துகொண்டது..

படித்ததிலிருந்து....

Edited by யாயினி
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசளிப்போம்!... இன்று உலக சிறுவர் புத்தக தினம்...புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் பழக்கமாகி வரும் நிலையில், சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் உலக சிறுவர் புத்தக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், எழுத்தாளரும், கவிஞருமான ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சென்னின் பிறந்த நாளே உலக சிறுவர் புத்தக தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம், அதுவும் தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மிகக்குறைந்து கொண்டே வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆறாம் / ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியைப் படிக்கத் திணறுவது தெரிய வந்துள்ளது. தமிழில் தான் எத்தனை படைப்புகள், எத்தனை தரமான எழுத்தாளர்கள், எத்தனை அறிவு பொருந்திய விஷயங்கள். தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமன்றி, புத்தகங்களை குழந்தைகள் தொடர்ந்து படிப்பதின் மூலம் இன்றியமையாத பல உன்னத நலன்களை அளிக்க வல்லது. புத்திக்கூர்மை, அறிவு, சமச்சீரான எண்ண ஓட்டம், ஆழ்ந்த உறக்கம், சகிப்புத்தன்மை, எண்ணத்தில் உறுதி போன்ற நலன்களை பெறுகின்றனர். ஜோகன் டிக்கின்ஸ் என்பவர் “broken the hell)” என்ற புத்தகத்தை தேடி, பன்னிரண்டு ஆண்டுகளாக 16,000 கி.மீ க்கு மேலாக அலைந்து திரிந்திருக்கிறார். அந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் டிக்கின்ஸ் குடும்பம் , உறவு, பணம், சந்தோசம் என வாழ்வின் ஒரு அத்தியாயத்தையே தொலைத்திருந்தார். ஆனால் அந்த புத்தகத்தை கண்டுபிடித்த தருணத்தில் உலகையே வென்றவரைப்போல் ஆனந்தப்பட்டார். இந்த மகத்தான பிரதியை அச்சாக்கி, இனிவரும் தலைமுறையினருக்கு கொடுத்துவிடமுடியும் என்பதைவிட வேறென்ன சந்தோசம் இருந்திருக்கும் அவருக்கு வாழ்வில்?

bookkids.jpg

புத்தகங்கள் நம் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிடும். காரல்மார்க்ஸின் ஒரு புத்தகம் உலகவரலாற்றையே மாற்றி இருக்கிறது. திருவள்ளுவரின் திருக்குறள், மானுடப்பண்புகளை உலகெங்கிலும் விதைத்திருக்கிறது. பகவத்கீதை திலகரையும், டால்ஸ்டாயின் ஒரு நூல் மகாத்மாவையும் உலகம் போற்றும் உன்னதத் தலைவர்களாக்கி இருக்கிறது.

ஒரு புத்தகமும், அதன் வாசிப்பும் நமக்கு ஆயிரம் ஆயிரம் கண்களையும் செவிகளையும் கொடுத்து, அறிவின் விசாலப்பாதையில், உலகின் ஏதோ ஒரு மூலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது. மொட்டை மாடியின் குட்டிச்சுவரில் உட்கார்ந்து படித்து கொண்டிருக்கும் நம்மை, விக்கிரமாதித்யன் காலத்திற்கும், ஈழத்தின் போர்ச்சத்தங்களுக்கும் நடுவே தன் அம்மாவைத்தேடி அலையும் குழந்தையின் பரிதவிக்கும் மன நிலைக்கும் கொண்டு சென்றுவிடுகிறது.

 

நம்மால் போகமுடியாத இடத்திற்கெல்லாம் புத்தகம், அதன் சாளரத்தின் வழியே கூட்டிப்போகும். நம் கைக்கு எட்டும் தூரத்தில் எவரெஸ்ட்டை கொண்டுவந்து நிறுத்தும் , காலுக்கடியில் கங்கையை ஓடவிடும். தேயிலைத்தோட்டங்களில், ஏகாதிபத்தியத்தின் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் எவனோ ஒருவனுக்காக நம்மை தேம்பி தேம்பி அழவைக்கும்.

அடுத்தவர் மீதான அன்பையும், பாசத்தையும் கரிசனத்தையும், சகோதரத்துவத்தையும் விதைக்கும். வாசிப்பின் வாயிலாகவே சேகுவேராவுக்கும் பிடல் காஸ்ட்ரோவுக்கும் சலாம் போட வைக்கும்.

.jpgஅலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தபோது, இங்கு எழுதப்பட்ட நூல்களை எடுத்துவரும்படி அந்நாட்டு அறிஞர்கள் கேட்டுகொண்டார்களாம். புத்தகங்களை உருவாக்காத தலைமுறை உலகை மேம்படுத்தாது. புத்தகங்களை வாசிக்க தொடங்கிய பின்புதான் மைனராக இருந்த தலைமுறை மேஜரானது. புத்தகம் புரட்சியை உண்டு பண்ணும். கோடான கோடி மனிதர்களின் இதயங்களில் பட்டாம்பூச்சிகளாக பறக்கவிடும். புத்தகம் ஒரு நல்ல நண்பன். காதல் எப்போதும் கேட்க மட்டுமே செய்யும். நட்பும் புத்தகமும் தான் கொடுக்க மட்டுமே செய்யும்.

படிக்க நேரம் ஒதுக்குவோம். புத்தகத்திற்கு பணம் ஒதுக்குவோம். அப்போதுதான் இந்த உலகம் நம்மை ஒதுக்காமல் இருக்கும். இந்த நாளில், குழந்தைகளுக்கு நல்ல அறிவு சார்ந்த புத்தகங்களை பரிசளித்து அவர்களை படிக்க செய்யலாம். எதிர்கால தலைமுறை வாசிப்பு பழக்கம் இல்லாமல் வளர்வது சமூகத்தை பின்னோக்கி இழுத்துச்சென்றுவிடும். இன்றே உங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை உருவாக்கும் முதல் அடியை எடுத்து வையுங்கள். குழந்தை விரும்பும் ஒரு அழகிய புத்தகத்தை அவர்களுக்கு பரிசளியுங்கள்.

Image may contain: 2 people
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 2 உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள் (World Autism Awareness Day )
*******************************

புரிந்துகொள்ளப்பட வேண்டிய “ஆட்டிசம்” (Autism)

 

Xnq6Q1v.png?1

  • ஆட்டிசம் (Autism) என்றால் என்ன?
  • ஆட்டிசம் (Autism) பாதிப்பின் அறிகுறிகள் என்னென்ன?
  • ஆட்டிசம் (Autism) குணப்படுத்த முடியுமா?
  • ஆட்டிசம் (Autism) இனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பயிற்சிகள் என்னென்ன?

பார்ப்பதற்கு சாதாரண குழந்தைகளைப் போலவே இருக்கும், ஆனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் எவ்வாறு பிள்ளைகளினை வழிகாட்டலாம் எனும் கேள்விகளுக்கு விடையளிக்கும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

 
  • இக்கட்டுரையில் ஆட்டிசம் (Autism) எனும் சொல் Autism spectrum disorder (ASD) மற்றும் autism எனும் ஆங்கில வார்த்தைக்கு பதிலாகவே பயன்படுத்தப்படுகின்றது

Autism spectrum disorder (ASD) மற்றும் autism எனும் சொற்களினால் விபரிக்கப்படும் ஆட்டிசம் (Autism) என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு/ அசாதாரண வளர்ச்சி, செயற்பாட்டில் ஏற்படும் அசாதாரண நிலைமை ஆகும். இலங்கையில் ஏறத்தாள 35,000 இற்கு மேற்பட்டவர்கள் ஆட்டிசம் (Autism) குறைபாட்டுடன் இருப்பதாக ஓர் ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது. அமெரிக்காவில் 150 பேரில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளது என ஒரு ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் 20 லட்சம் பேர் ஆட்டிசம் (Autism) குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் ஏறத்தாள 550,000 இற்கு மேற்பட்டவர்கள் இக்குறைபாட்டுடன் இருக்கின்றார்கள். வளர்ச்சியடைந்த மற்றும் மேற்கத்தேய நாடுகளில் வாழும் மக்களிடையே ஆட்டிசம் (Autism) பற்றிய விழிப்புணர்வும் இது பற்றிய அறிவும் காணப்படுகின்ற போதிலும் இலங்கை போன்ற நாடுகளில் இது சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் அறிவு ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றதுஎனலாம் .ஆட்டிசம் (Autism) குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் திகதி உலக ஆட்டிசம் (Autism) விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இது ஒரு குறைபாடுதான் பெற்றோர்களின் சரியான கவனிப்பின் மூலம் அவர்களை திறமைசாலிகளாக மாற்றமுடியும் என்கின்றனர் துறைசார்  நிபுணர்கள். தற்போது உலகம் முழுவதும் வெகு வேகமாக அதிகரித்து வரும் குறைபாடுகளில் ஆட்டிசம் (Autism) மிக முக்கியமானது. உலகளவில் ஆட்டிசம் (Autism) குறைபாடால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இலங்கையில் இன் நிலைமை இரண்டு மடங்காகும் அபாயமிருப்பதாக ஓர் ஆய்வு குறிப்பிடுகின்றது.

ஆட்டிசம் (Autism) சம்பந்தமாக பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் வளர்ச்சி அடைந்த நாடுகளில் பல மில்லியன்கணக்கான டொலர்களை  ஆட்டிசம் (Autism) சம்பந்தமான ஆராட்சிகளுக்கும் , நலத்திட்டதிட்கும் செலவளிக்கப்படுகின்றன. எனினும்  எந்தக் காரணத்தினால் இந்த ஆட்டிசக் குறைபாடு ஏற்படுகிறது என்பது சரியாக கண்டறியப்படாமல் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல குறைகளுடன் இருந்தாலும் ஏதோ ஒரு அதீத திறனுடன் இருப்பார்கள் என்பது மட்டும் தெரிகிறது. உலக வரலாற்றில் ஆட்டிசம் (Autism) உடன் பிறந்த பல குழந்தைகள் பின்நாளில் பல சாதனைகளை நிலைநாட்டிய சாதனையாளர்களாக மாறியிருக்கின்றார்கள் ஆட்டிசம் (Autism) உடனிருக்கும் ஒரு பிள்ளையின்  திறனை வெளிக் கொணர்வது சிறந்த பயிற்சியின் மூலமும் பெற்றோர்களின் கவனத்திலுமே உள்ளது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கட்டுப்பாடின்றி காணப்படுவர். ஒதுக்கமாக காணப்படுவார்கள் ,அனைவரிடமும் சகஜமாக பழகாமல் பேசாமல்  ஓரிடத்தில் அமராமல் முனுமுனுத்துக்கொண்டோ /சத்தமிட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்த செயல்பாடுகள் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். பொதுவாக தொடர்பாடலில் கஷ்டப்படுவார்கள் மற்றும் அடுத்தவர்கள் சொல்வதனை புரிந்துகொள்வதில் சிரமத்தினை எதிர்கொள்வார்கள். Children with autism have trouble communicating. They have trouble understanding what other people think and feel. This makes it very hard for them to express themselves either with words or through gestures, facial expressions, and touch.

ஆட்டிசம் (Autism) இனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளது பெற்றோர்கள் இது பற்றிய போதிய விளக்கத்துடனும் விழிப்புணர்வுடனும் திகழ்வதன் மூலமும்  சிறந்த துறைசார் நிபுணர்களின் உதவியுடன் அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ற பயிற்சிகளை கொடுக்கும்போது அவர்களிடம் பெரும் மாற்றங்களை காண முடிகிறது என்கின்றனர் இவர்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள். அப்படி பயிற்சியளித்தால் அவர்களிடம் ஒளிந்திருக்கும் அதீத திறன்களைக் கண்டறிய முடிகிறது என்கின்றனர்.

EUj8zdl.jpg?1

aXyHW90.jpg?1

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலமே அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறனைக் கண்டுகொள்ள முடியும் என்கின்றனர் இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள். ஆட்டிசம் (Autism) பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறனுடன் காணப்படுகிறார்கள். பேசும்/ உரையாடும் பயிற்சி, பழகும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் மூலம் இவர்களின் குறைகளை ஓரளவு நிவர்த்தி செய்யமுடியும்.

பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும் பிள்ளையின் வளர்ச்சியிலும் விருத்தியிலும் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்படும். குறிப்பிட்ட மாதத்தில் தாயின் முகம் பார்த்து சிரிப்பது, பேசுவது , கை அசைப்பது , என குறிப்பிட்ட மாதங்களில் இந்த வளர்ச்சி தானாக இருக்கவேண்டும். இதையும் மீறி சில குழந்தைகள் பேசத் தெரியாமல் இருப்பார்கள். தவிர ஆறு மாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் குழந்தை இருத்தல், தாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் இருத்தல், 12 மாதங்களான பின்பும் மழலைச் சப்தங்கள் செய்யாமலிருந்தல், ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் 18 மாதங்களில் பேசினாலும் ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்ப திரும்பச் சொல்லுதல் இதன் ஆரம்ப அறிகுறிகளாகும். விளையாடுவதில் சிக்கல் 18 – 24 மாதங்களில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல், தனியாகவே இருத்தல், கைகளை உதறிக் கொண்டே இருத்தல், ஒரு பொருளையோ, நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை, கதை கேட்பதில் விருப்பமின்மை தூக்கமின்மை, தூங்கும் நேரம் குறைவு, கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும் வலியை உணராதிருத்தல் போன்றவையும் அறிகுறிகளாகும். குழந்தை பிறந்த 24 மாதங்களில் குழந்தை நல நிபுணர் ஒருவரின் ஆலோசனையை பெற்று தேவையான பரிசோதனைகளைமேற்கொண்டால் , குழந்தைக்கு ஆட்டிசம் (Autism) உண்டா, இல்லையா என்பதை அறியலாம்.

ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் அவர்களுக்கான பயிற்சியை எளிதில் தொடங்கிவிடலாம். 2 வயதுக்குள் அடையாளம் கண்டுகொண்டால் குணப்படுத்துவது எளிது என்று துறைசார் நிபுணர்கள் கருதுகின்றனர். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து, சரி செய்ய முடியும். அவர்களது தனித்திறமைகளை கண்டறிந்து, சுயதொழில் கற்றுத்தரலாம். ஆட்டிசம் (Autism) என்பது நோய் அல்ல. அது ஒரு வகை குறைபாடு/மனநிலை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்,” என்கின்றனர் இலங்கையில் பிறக்கும் குழந்தைகளில் 0-3 வயதிற்கு உற்பட்ட குழந்தைகளில் 93 பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு இக்குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இக்குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர். இது மூளை வளர்ச்சி, மனவளர்ச்சி குறைபாடில்லை என்பதை பெற்றோர், சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். நமது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் ஆட்டிசம் (Autism) இற்கு உட்பட்டவர்களாக இல்லையே நாம் ஏன் அவர்களை புரிந்து கொள்ளவேண்டும் ஆட்டிசம் (Autism) பற்றி அறியவேண்டும் எனும் அலட்சியப்போக்கில் இருக்காமல். நாளை எமக்கு பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கு அல்லது நம்மை சார்ந்த குழந்தைகள் ஆட்டிசம் (Autism) இனால் பாதிக்கப்பட்டால் ??? எனவே ஆட்டிசம் (Autism) பற்றிய கட்டுரைகள் வாசிக்கப்படவேண்டும் , ஆடிசம் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்குகளில் பங்குபற்றவேண்டும் ஆட்டிசம் (Autism) உடன் வாழும் பிள்ளைகளும் மக்களும் நிச்சயம் புரிந்துகொள்ளப்படவேண்டும் எனக்கூறி ஆட்டிசம் (Autism) பற்றிய விரிவான கட்டுரையொன்றில் மீண்டும் சிந்திப்போம் .

 

qYY3HPD.png?2

A.R Yasminmubarak
Trainer/Coach/Consultant
(Reading PhD Psychology,(PAU USA) 

No automatic alt text available.
 
 

ஏப்ரல் 2 உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள் (World Autism Awareness Day )
***************************************************************************

பிரத்தியேகக் குழந்தைகள் அல்லது கடவுளின் குழந்தைகள் என்று ஒரு பகுதியால் அதிகக் கவனிப்புக்கு உள்ளக்கப்பட்டும், மறுபகுதியால் புத்திசுவாதீனமற்றது என்று ஒதுக்கப்பட்டு எங்காவது மூலைகளில் தள்ளிவிடப் படுவதுமான செயல்களில் இருந்து, சாதாரணமாக அல்லது சிறப்புமிகு பிறவிகளாக எம்மை நினைத்துக் கொள்ளும் நாம் விழிப்புணர்வு பெற வேண்டிய நாள். 
.
எம்மைப்போல எல்லாவற்றையும் எமக்குப் புரியும் விதத்தில் வெளிப்படுத்த முடியாத அவர்களுக்குப் போல அவர்களை அவர்களாக புரிந்து கொள்ள முடியாத எமக்குள்ளும் இந்த ஆட்டிசம் என்னும் குறைபாடு இருக்கவே செய்கிறது. வீத அளவு மட்டும் தான் வித்தியாசம். 
.
உலகப் பிரபலங்களும் சாதனையாளர்களுமான
.
அப்துல்கலாம் 
பில்கேட்ஸ் 
ஐன்ஸ்டீன்
நியூட்டன்  
...............
...............
................ இப்படி எத்தனையோ சாதனையாளர்கள் ஆட்டிசத்தில் இருந்து வெளியில் வந்து சாதனை படைத்தவர்கள் தான் .
.
என்ன ஒன்று, அவர்களை புரிந்துகொள்ள கொஞ்சம் அன்பும், பொறுமையும், அணைத்து உயர்த்த ஆதரவான கைகளும் தேவை. வெளியில் கூட வேண்டாம் வீட்டிலாவது .....
முடியுமா எம்மால் ? 

.

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Popular Contributors

 
 
thestar.com logo

The quest for healing and justice in the homeland of Toronto’s Tamil community: Tory

Toronto Mayor John Tory visited the Northern Province of Sri Lanka in mid-March to learn about where the city’s Tamil community is from, why they left and Sri Lanka’s road to healing and justice.

 
Toronto Mayor John Tory meets with Sri Lankan women protesting outside government offices holding photos of  their sons and grandsons who disappeared during the civil war.
Toronto Mayor John Tory meets with Sri Lankan women protesting outside government offices holding photos of their sons and grandsons who disappeared during the civil war.  (JOHN TORY PHOTO)  
Those who know members of our community from Sri Lanka in Toronto will know they are enterprising, successful, engaging people. Good citizens, good neighbours and good friends.

You probably know a lot less about their home country and how many of them, mostly Tamil, came to be here in Toronto.

In fact, many were either escaping or just getting away from a lengthy and tragic civil war in Sri Lanka — a war with many chapters over many decades.

It was within that context that I recently visited Sri Lanka along with Councillors Michael Thompson and Neethan Shan, the first Tamil Canadian elected to Toronto City Council.

I had been in Sri Lanka 10 years ago but was basically prohibited from going to the north of that beautiful country as it was at the time a war zone.

But with hostilities having ceased a few years ago, I was able to go to Jaffna and other communities in the north on this visit and I came away with a much better understanding of what will be required if the Tamil people are to have healing and justice.

One of the first things that strikes you as you travel the north is the extraordinary military presence. Every couple of miles there is a military base, far in excess of what you would expect to see in even a highly militarized democratic country.

When you ask, you are told most of these bases are located on land forcibly taken from Tamil citizens and that, taken together, they represent a military presence of one soldier for every three Tamil citizens.

 

Needless to say, this unilateral use of formerly privately owned land, combined with the suffocating military presence itself, causes immense anxiety on the part of the people of northern Sri Lanka and impairs the healing process.

There is no memorial or monument for the Tamil community in the Northern Province to remember their loved ones who were lost during the civil war.

The Tamil community has created a makeshift memorial at Mullivaikal, the land where the last phase of the civil war took place. The United Nations estimates that 40,000 lives were lost during this last phase. It was extremely moving for me to light a lamp, lay flowers and have a moment of reflection at this memorial.

While I was there, quiet protests were taking place and one in particular was very moving. It consisted of a group of middle aged women, protesting outside government offices, holding pictures of young men.

When I spoke with them, I realized these pictures were of their sons and grandsons. Many had received reports of these young men being taken away in the latter stages of the war, but they hadn’t been seen or heard from since.

Think about it. Your child, rounded up years ago and taken away, and despite some recent initiatives on the part of the government to trace the fate of these kids, most everything remains shrouded in mystery.

Imagine being one of those moms knowing the government knows more than they are telling you about the fate of your son. I saw the pain in their eyes, and as a father and grandfather, I immediately understood it.

These emotionally traumatized moms need some closure, even if the news is bad. Making public years old government reports on these missing kids would be a good start.

It seems reasonable to conclude, as the Northern Province’s chief minister advocates, that only a truly independent, accountability mechanism comprising of international actors will ever really be able to deliver justice when it comes to past human rights transgressions, disappearances and loss of lives.

The establishment of an accountability process comprising of internationally respected judicial actors could allow for a calming reassurance that reconciliation really can happen and that real change can take place.

The area also desperately needs a plan for economic and social investment. As with most places in the world, opportunity and a job will accomplish a huge amount when it comes to achieving social justice for the Tamil people.

While much of this initiative has to come from the Sri Lankan government itself, I am happy to report that we did sign a memorandum of understanding between the City of Toronto and the District of Jaffna whereby we will work together on everything from education to economic development to the renewal of their historic library, which was destroyed during the war. As a symbolic gesture to show good faith and partnership on the memorandum of understanding, we donated books to the Jaffna Public Library from the Toronto Public Library.

The entire experience of visiting the Northern Province of Sri Lanka was incredibly moving precisely because we met real people who had experienced real trauma and who had still not seen action by the government adequate to constitute justice and promote real healing.

If there is a glimmer of hope it comes from the fact the present government is seen as having taken a few small steps on some of these issues after years of denial by previous governments.

The challenge now becomes one of taking the next, bigger steps. Give those moms the information they so much need and deserve about their missing kids. Return serious quantities of land to rightful owners and at the same time reduce military presence. Establish an accountability process with the involvement of international actors to examine what happened. And develop a real plan to help this region and the Tamil people to have a sense of hope and opportunity.

I look forward to working with the community here in Toronto to help make these things happen.

 

John Tory is the mayor of Toronto.

 

Read more about: 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 7ம் திகதி - உலக சுகாதார தினம்Popular Contஇன்று உலக சுகாதார தினம்..

உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. 1950-ம் ஆண்டு முதல் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் முக்கிய நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு இயற்கை முறை வேளாண்மை, சுத்தமாக சமைப்பது, முழுமையாக சமைப்பது, உணவு கெட்டுப்போகாமல் சரியான வெப்பநிலையில் பாதுகாப்பது, சுத்தமான நீரை பயன்படுத்துவதே இந்தாண்டு உலக சுகாதார தினத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

No automatic alt text available.
No automatic alt text available.

Popular

ஏப்ரல் 7ம் திகதி - உலக சுகாதார தினம் 

1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார அமையம் (World Health Organaisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ம் திகதியினை உலக சுகாதார தினமாக கொண்டாடுகிறோம்.

"அதிக இரத்த அழுத்தம்’’- என்பது இந்தாண்டு இத்தினத்தின் தொனிப்பொருளாகும். உடலில் ரத்த அழுத்தம் அதிகரிப்பது மாரடைப்பு, பக்கவாதம், கிட்னி செயலிழத்தல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைகிறது.

இரத்த அழுதத்தத்தை கட்டுப்படுத்தாமல் விட்டால், பார்வை குறைபாடு, இருதய செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உலகளவில் மூன்று இளைஞர்களில் ஒருவர் அதிக இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்காவில் நடுத்தர நாடுகளில் 40 சதவீத இளைஞர்களுக்கு இந்த பாதிப்பு உள்ளது. இது கட்டுப் படுத்தக்கூடியது.

உப்பு பயன்படுத்துவதை குறைப்பது, சரியான அளவில் உணவு எடுத்துக்கொள்வது, அற்ககோல், புகையிலை பயன்படுத்தாமல் இருப்பது, உடல் எடையை சீராக வைத்தல், தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவை மூலம் இதை கட்டுப்படுத்தலாம்.

***

GK # உலக சுகாதார அமைய தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அமைந்துள்ளது.

 

Edited by யாயினி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவையினால் உலக சுகாதார தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.

No automatic alt text available.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

சுத்தமான நீரை பயன்படுத்துவதே இந்தாண்டு உலக சுகாதார தினத்தின் முக்கிய நோக்கம் ஆகு

உலகம் முழுவதுமே என்றுமில்லாதவாறு தண்ணீர் பஞ்சம் ஏற்பட தொடங்கியிருக்கிறது.இது ஏன் எப்படி என்று கண்டு பிடித்து தண்ணீர் பஞ்சம் இல்லாமல் செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 2 people, people sitting and shoes
 

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
national volunteer week-தேசிய தன்னார்வ தொண்டு வாரம்..ஏப்பிரல் 6-12
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வைரமுத்து தேசிய விருது பெற்ற படங்கள்:

ஆண்டு படம்
1986 முதல் மரியாதை
1993 ரோஜா
1995 கருத்தம்மா மற்றும் பவித்ரா
2000 சங்கமம்
2003 கன்னத்தில் முத்தமிட்டால்
2011 தென்மேற்குப் பருவக்காற்று 
2017 தர்மதுரை

விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவிஞர் வைரமுத்து, தற்கொலை எண்ணத்தைத் தடுக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்ட தனது பாடலுக்கு விருது கிடைத்திருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வைரமுத்துபடத்தின் காப்புரிமைFACEBOOK

"அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது என்றும், பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல; நான் ஒரு கருவி மட்டுமே", என்று ஓர் அறிக்கையில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை ஞானியால் காப்பற்றப்பட்ட ஒரு சொல்..இடமிருந்து-வலம்:- காப்புரிமை ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கூட்டுக்குள் நிற்காமல் வெளியே வாருங்கள் , இன்னும்  எழுதலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
நிழலியண்ணா 2014ல் எழுதிய கவிதை ஒன்று பிடித்தது ஆகையால் இன்றைய இந்தப் பக்கத்தை நிரப்புகின்றது..
 

எல்லா இரவுகளையும் போல

சில இரவுகள் இருப்பதில்லை

 

வானில் அலையும்

ஒற்றைக் குருவியின்

துயர் அப்பிய

குரலை போல

சில இரவுகள்

காரணமின்றி

துயரால் நிரம்புகின்றன

 

எங்கோ அறுந்து போன

ஒரு இழை

ஞாபகத்தில் வந்திருக்கலாம்

என்றோ காணாமல் போன

நண்பனின் குரல்

மீண்டும் கேட்டு இருக்கலாம்

அல்லது

எப்போதோ எவருமற்று

தனித்து விடப்பட்டதின்

துயரம் தீண்டி இருக்கலாம்

 

புரண்டு படுக்கையில்

நிரடிப் போகும் ஒரு

நொடி நினைவுத் துளியால்

சில இரவுகள்

காரணமின்றி

துயரத்தில் மூழ்கி விடுகின்றன

 

ரயில் பயணங்களில்

இரா வேளையில்

குளிர் காற்றிடை பாடும்

விழியற்ற பாடகனின்

குரலில் வழியும்

வேதனையைப் போல

இருக்கின்றன

இந்த இரவுகள்

 

பின்னிரவொன்றில்

விளக்கற்ற வீதி ஒன்றில்

விற்று முடிந்து செல்லும்

கடலைக்காரனின் வண்டியில்

லாம்பு வெளிச்சம் போல

இருக்கின்றன

இந்த இரவுகள்

 

கரை ஒதுங்கி

இயக்க எவருமற்று

தொடுவதற்கும் நாதியற்று

குப்புறக் கிடக்கும்

ஒரு படகின்

பெரு மூச்சுப் போல

கழிகின்றன

இந்த இரவுகள்

 

எதையோ ஒன்றை இழந்து விட்டதாக

ஏதோ ஒன்று அறுந்து விட்டதாக

எவரோ விட்டுப் பிரிந்து விட்டதாக

கடக்கின்றன

இப்படியான இரவுகள்

 

நேற்றும் இப்படித்தான்

ஒரு பாரமிக்க இரவொன்று

கடந்து போனது

 

-------------------------

 

ஏப்ரல் 08, 2014

Edited April 8, 2014 by நிழலி 
ஒரு பந்தி விடுபட்டு விட்டது..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நந்தன் said:

ஒரு கூட்டுக்குள் நிற்காமல் வெளியே வாருங்கள் , இன்னும்  எழுதலாம்

ம்ம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person
 

வரலாற்றில் இன்று


◆ 1079 - போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்டானிஸ்லாஸ் தூக்கிலிடப்பட்டார். 

◆ 1831 - உருகுவேயில் சல்சிபுதிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர். 

◆ 1865 - ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார். 

◆ 1899 - ஸ்பெயின் புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தது. 

◆ 1905 - ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார். 

◆ 1921 - விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது. 

◆ 1955 - ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர். 

◆ 1957 - பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்டது. 

◆ 1965 - ஐக்கிய அமெரிக்காவில் ஆறு மத்திய மேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 256 பேர் கொல்லப்பட்டனர். 

◆ 1970 - அப்போலோ 13 ஏவப்பட்டது. 

◆ 1979 - தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம். 

◆ 1981 - தெற்கு லண்டனில் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் கலவரத்தில் 300 காவற்துறையினரும் 65 பொதுமக்களும் காயமுற்றனர். 

◆ 1987 - இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் லண்டனில் கைச்சாத்தானது. 

◆ 2002 - வெனிசுவேலாவில் அதிபர் ஹியூகோ சாவெஸ் இற்கெதிராக இராணுவப் புராட்சி இடம்பெற்றது. 

◆ 2007 - அல்ஜீரியாவின் தாலைநகர் அல்ஜியேர்ஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 33 பேர் கொல்லப்பட்டு 222 பேர் காயமுற்றனர். 

◆ 2012 - இந்தோனேசியாவில் சுமாத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

பிறப்புகள் 

◆ 1869 - கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (இ. 1944)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுதுபவன்
கவிஞன் போல்-எல்லா
தொழிலுக்கும் தொழிளாளிக்கும்
பெயருண்டு...

நிஜப் பெயருமுண்டு 
தொழில் பெயருமுண்டு
நாகரீக மாற்றம் -பிட்சாவும்
பேகரும் இன்னோரன்ன

ஆங்கிலேய உணவுகள்-வயிற்றை

நிரப்புவதால் கமக்காரன் இல்ல விவசாயி 

கனவிலும் நினைவிலும் 
வருவதேயில்லை.

அவனுக்கும் உணர்வுண்டு
அவனது இரத்தமும்-அவன்
கை படும் மண்ணும்
சிவப்பு தான்; மனித
 மனங்கள் மட்டும்-ஏனோ
வானவில்லை போல்
மனம் (நிறம்)
மாற்றி கொள்கின்றனர்.!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: one or more people

ஏப்ரல் 12 – மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்

முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற விண்வெளி வீரராகக் கருதப்படுகின்ற சோவியத் ஒன்றியத்தினைச் சேர்ந்த யூரி ககாரின் 1961ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் திகதி வஸ்டொக்-1 விண்கலத்தில் பயணித்து, 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாக தரையிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

யூரி ககாரினின் விண்வெளிப் பயணத்தின் 50ஆவது  ஆண்டு நிறைவையிட்டு 2011ம் ஆண்டு ஐ.நா பொதுச்சபை, ஏப்ரல் 12ம் திகதியினை மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாளினை பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 12 – வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச தினம் 

பொருளாதார நிலை, குடும்பத்தின் மோசமான சூழல், நகரத்துக்கு இடம்பெயர்தல், குழந்தைத் தொழிலாளர் முறை முதலான காரணங்களால் பாதுகாப்பற்றச் சூழலில் வீதியோரச் சிறுவர்கள் வாழ்ந்திட வேண்டிய நிலை நீடிக்கிறது. 

வீதியோரச் சிறுவர்களுக்கு அடிப்படை உரிமை, பாதுகாப்பு, கல்வி முதலானவற்றை உறுதி செய்வதற்காக, சி.எஸ்.சி என்ற வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச அமைப்பால் கடந்த 2011-ல் வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

# உலகளாவியரீதியில், 100 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் வீதியோர வாழ்க்கை வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

@ வளமான எதிர்காலத்தினை இச்சிறுவர்களுக்கு வழங்க எம்மால் இயன்ற பங்களிப்பினை நல்கி இச்சிறார்களின் வாழ்வு சிறக்க பாடுபடுவோமாக...!

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.