Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

*படித்ததில் பிடித்தது 

சுவிஸ்சர்லாந்தில் நடந்த ரெண்டு அதிசயம்...!!!

“நீங்க சும்மா இருந்தா போதும்,மாதம் 1,72,000 ரூபா உங்கள் வீடுதேடி வரும்” என்று ஒரு அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வந்தா எப்படி இருக்கும்...

கேட்கவே சந்தோசமா இருக்குதுல...

அப்படி ஒரு அதிசய அறிவிப்பை “சுவிஸ்” அரசாங்கம் சில நாட்களுக்கு முன்னால் அறிவித்ததும் உலகமே ஆச்சரியத்தில் உறைந்தது.

1.ஒவ்வொரு குடிமகனுக்கும் மாதம் “அடிப்படை” ஊதியமாக 1,75000 ரூபாய் ( சுவிஸ் மதிப்பில் சுமார் 2500 Franc ) வழங்கப்படும்.

2.ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம்
“அடிப்படை” ஊதியமாக 45,000 ரூபாய்
( சுவிஸ் மதிப்பில் சுமார் 625 Franc ) வழங்கப்படும்.

3.சுவிஸியில் 5வருடமாக குடியிருக்கும் வெளிநாட்டவருக்கும் இந்த சட்டம் செல்லுபடியாகும்.

உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் கணவன்,மனைவி மற்றும் குட்டிப்பாப்பா இருந்தால்...

அந்த குடும்பத்திற்கு “அடிப்படை” ஊதியமாக மாதம் 3,95,000 அரசாங்கம் வழங்கும்.( சிவாஜில ரஜினி சொல்ற மாதிரி அவங்க ‘சும்மா இருந்தா மட்டும் போதும்’)

இப்படி ஒரு சட்டத்தை அமலாக்கம் செய்ய ஒரு பொது வாக்களிப்பை அரசாங்கம் நடத்தியது, 

அந்த வாக்களிப்பின் முடிவு உலகையே மற்றோரு முறை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

5யில் 4ங்கு பேர் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.78% சதவீதம் பேர் “சுவிஸ்” அரசின் ‘அடிப்படை’ ஊதியம் எங்களுக்கு வேண்டாம் என்று...

தங்கள் முடிவை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவுக்கும் அவர்கள் சொல்லும் காரணம் இன்னமும் வியப்பாகவுள்ளது.

1.இந்த அறிவிப்பை கேட்டு , இன்னும் சில வருடங்களில் கோடி கணக்கான மக்கள் எங்கள் நாட்டில் சட்டரீதியாகவும்,சட்ட விரோதமாகவும் நுழைவார்கள்.

2.இந்த அடிப்படை ஊதிய சட்டம் எங்களையும் எங்கள் சந்ததியினரையும் சோம்பேறிகளாக மாற்றும்.

3.அடிப்படை ஊதியத்தால் எங்கள் அடிப்படை உரிமையை நாங்கள் இழக்க நேரிடும்.

இது சரித்திரத்தில் எழுதவேண்டிய நாள்...

ஸ்விஸ் மக்கள் எடுத்திருக்கும் இந்த முடிவைக் கண்டு இலவசத்தில் மூழ்கிப்போன ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டும். 

நாம் இன்னமும் தமிழ், சோழர்கள், திருக்குறள், சித்தர்கள் என்று பழையபெருமையை வெட்கமில்லாமல் பாடிக்கொண்டு...

கிடைக்கும் 1000,2000 ரூபாய்க்கும் சொல்ற கட்சிக்கு கண்ண மூடிக்கொண்டு ‘ஓட்ட’ப் போட்டுட்டு...

இலவசமா ‘பினாயில்’ குடுத்தா கூட போட்டிப்போட்டு வாங்கி குடிக்கிறோம்.

இதுல எதுக்கு எடுத்தாலும் ஒரு பஞ்ச் டயலாக் வேற “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி”னு...

அநேகமா இந்த வரியை உச்சரிக்கும் கடைசி சந்ததி நாமாகத்தான் இருக்கும்...

நம் அடுத்த சந்ததி நம்மை நினைத்து நிச்சயம் பெருமைபட மாட்டாங்க.

நம்மைப் போல் சுவிஸ் நாட்டிற்கென்று பலபெரும் பெருமை இல்லாமல் இருந்து இருக்கலாம்...

ஆனால் அவர்கள் சரித்திரத்தில் எழுதிவிட்டனர் காலத்தால் அழிக்க முடியாத அவர்களது நிகழ்காலப் பெருமையை.

வாழ்த்துக்கள் சுவிஸ் மக்களே...!!!

Image may contain: mountain, sky, outdoor and nature

.

.

ஆக்கம்:- யே.வீ

Edited by யாயினி
  • Like 3
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Thesiyam

தமிழர்கள் மத்தியில் அறிமுகமான NEW SPICELAND TAKE OUT, CATERING AND BAKERY உட்பட 21 உணவகங்களுக்கு டொரொன்டோ பொது சுகாதார சேவை ஆய்வாளர்களினால் 
சுகாதார விதிமுறைகளை மீறியதற்காக நிபந்தனையுடனான அனுமதி (conditional pass) வழங்கப்பட்டுள்ளது 

திங்கட்கிழமை, Aug மாதம் 7ஆம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை, Aug மாதம் 13, 2017 திகதி வரையிலான காலப்பகுதிகளில் பரிசோதனைகள் நடத்தியபோது உணவுப்பொறிகளின் கட்டுப்பாட்டின் கீழ் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிடத்தக்க குறைபாடுகள் காணப்பட்டுள்ளன.

Toronto Public Health issued yellow conditional passes to 21 Toronto food places including NEW SPICELAND TAKE OUT, CATERING AND BAKERY for significant infractions.

One or more significant infractions were observed under the Food Premises Regulation during an inspections between Monday, Aug. 7 and Sunday, Aug. 13, 2017.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 178 ஆவது உலக புகைப்பட திரு நாள்(world photography day)...இந்த தருணத்தில் அனைத்து புகைப்பட கலைஞர்களுக்கும், உங்கள் திறமைகள் மேலும் சிறந்து விளங்க எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..

Image may contain: sky, cloud, plant, nature and outdoor

 

Photographs like the one with Napalm girl during Vietnam War (L) or Aleppo boy Omar Daqneesh sitting in an ambulance (R) have shocked the world causing massive outrage. (Source: File Photo)

Image may contain: 2 people, people sitting, child and outdoor
 

ஆகஸ்ட் 19 → உலக புகைப்பட தினம் (World Photography Day)

வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 19ம் நாள் உலக புகைப்பட தினமாக உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது.

Louis Daguerre அவர்களினால் ஒளிப்படமெடுத்தல் செயற்பாட்டு அபிவிருத்தியில் துணைபுரிந்த Daguerreotype கண்டுபிடிக்கப்பட்டதே உலக புகைப்பட தினம் தோற்றம்பெறுவதற்கு காரணமாக விளங்கியது.

ஜனவரி 9, 1839ம் ஆண்டு பிரெஞ்சு விஞ்ஞான அறிவியற் கழகமானது Daguerreotype இனது செயற்பாடுகளை அறிவித்தது. சில மாதங்களின் பின்னர் ஆகஸ்ட் 19, 1839ம் ஆண்டு இந்தக் கண்டுபிடிப்பினை உலகுக்கான இலவசப்பொருளாக பிரெஞ்சு அரசாங்கமானது அறிவித்தது.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 19 . (#WorldPhotographyDay)

Photography என்கின்ற சொல் கிரேக்க மொழியில் இருந்து உருவானதாகும். போட்டோ(phōtos) என்பது கிரேக்க மொழியில் ஒளி என பொருளாகும். கிராபி(graphé) என்ற சொல்லுக்கு வரைதல் என்பது பொருளாகும். இந்த இரு சொல்லும் இணைந்தே "ஒளியில் வரைதல்" என அர்த்தம். கிரேக்க சொல்லான இதுவே உலகம் முழுவதும் போட்டோகிராபி #Photography என அழைக்கப்படுகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

World photography day Agust 19, 2017 .நான் சுட்டது..பலகாரம் அல்ல படம்!??

Image may contain: food
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 (World Mosquito Day), ஆண்டுதோறும் ஆகத்து 20 ஆம் நாள் பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சர் ரொனால்டு ராஸ் 1987 ஆகத்து 20 ஆம் நாள் பெண் கொசுகள் மூலமாக மலேரியா நோய் மனிதருக்குப் பரவுகிறது என முதன் முதலில் கண்டுபிடித்தார்.இவர் தனது கண்டுபிடிப்பின் பின்னர் இந்நாள் உலக கொசு நாள் என்ற பெயரில் ஆகத்து 20 அன்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டும் என வேண்டுகோள்: விடுத்தார்.

சுகாதார மற்றும் வெப்பவலய மருத்துவத்துக்கான இலண்டன் பள்ளி ஆண்டு தோறும் இந்நாளில் கண்காட்சிகள் உட்படப் பல கொண்டாட்டங்களை 1930களில் இருந்து நடத்தி வருகிறது

Image may contain: 1 person
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

சர் ரொனால்டு ராஸ் 1987 ஆகத்து 20 ஆம் நாள் பெண் கொசுகள் மூலமாக மலேரியா நோய் மனிதருக்குப் பரவுகிறது என முதன் முதலில் கண்டுபிடித்தார்.

யாயினி, ஆண்டை ஒரு முறை...சரி பாருங்கள!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

யாயினி, ஆண்டை ஒரு முறை...சரி பாருங்கள!

1897.....என்பதே சரி..நன்றி புங்கையண்ணா..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகம்(அறும்.அரும்...Arum?)ஆகிய கதை..நம்மவர்கள் எப்படியெல்லாம் தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்கிறார்கள் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிசைப்பண்கள்
**************************************************
உலகின் முதல் இசை 
தமிழிசையே!!
***********************************************
இசைத்தமிழின் தொன்மை – 75
***********************************************

பழந்தமிழிசையில் பண்கள்
**********************************
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
கர்நாடக இசையும் தமிழிசையும்  
**************************************************
கர்நாடக இசை மற்றும் தமிழிசை ஆகிய 
இரண்டு இசை மரபுகளையும் ஒப்பு நோக்குகையில் 
இன்றைய கர்நாடக இசையில் பயன்படும் 
இசை வழக்குகள், முந்தைய பழந்தமிழ் இசையின் வழக்குகளுக்குப் புதிதாகப் பெயரிட்டும், 
அதிக பயன்பாட்டினால் வளர்ச்சி அடைந்தும், 
கால மாறுபாட்டிற்கேற்ப உருமாற்றமடைந்தும் 
இருக்கின்றன எனலாம். 

ஏழாம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டுவரை 
பக்தித் தமிழ் இலக்கியங்கள் தமிழ்நாட்டில் கோலோச்சின.

தமிழ்நாட்டு வரலாற்றில் கி.பி. 3 ம் நுாற்றாண்டு முதல் 6ம் நுாற்றாண்டு வரை களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது. 

தொடர்ந்து 20 ம் நுாற்றாண்டு வரை தமிழகம் 
மாறிமாறி பிற மொழி மன்னர் குலங்களால் தான் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. 

அப்போதும் வடமொழி அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இந்தப் பிறமொழி ஆதிக்கம் காரணமாகத் 
தமிழ்க்கலைகள் பல ஆதரிப்பார் இல்லாமல் 
அழிய நேரிட்டது. 

பல்லவர்கள் வடமொழிக்கும் தெலுங்குக்கும் 
முக்கியத்துவம் அளித்தனர். 

நாயக்கர் காலம் தெலுங்கு காலகட்டம். 
பிறகு மராட்டியர் காலகட்டம். 

இந்தக் காலகட்டங்களில் பொதுவாகத் தமிழ்க் 
கலைகளுக்கு இறக்கமும் தொடர்ச்சியறுதலும் நிகழ்ந்தன.

தமிழிசையின் ஆதி மும்மூர்த்திகளான 
அருணாசலக் கவிராயர், 
முத்துத் தாண்டவர், 
மாரிமுத்தாப் பிள்ளை 

ஆகியோர் வளர்த்த தமிழிசை புறக்கணிக்கப்பட்டது.

தியாகராஜர், 
சியாமா சாஸ்திரிகள், 
முத்துசாமி தீட்சிதர்

என்போரும் தெலுங்கு மொழியிலே கீர்த்தனைகளை எழுதினார்கள். 
பாடகர்கள் அவற்றையே மேடைகளில் பாடினார்கள்.

தமிழ் இசை கர்நாடக இசை என்றபெயரில் வடமொழிச் சுரங்களோடு வளர்ந்தது. 

தமிழ்ப் பாடல்களே பாடப்படாமையால் கர்நாடக இசை தமிழிசைக்கு அந்நியமானது என்று மக்கள் எண்ணத் தொடங்கினர். 

இதனால் பழந்தமிழிசை மெல்ல மெல்ல 
மறையத் தொடங்கியது.

தமிழரிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்ப்பண்களையும் கிளைப்பண்களையும் வகுத்தும் 
பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்களின் பெயர்களையும் வடசொல்லாக மாற்றியும், 'கருநாடக சங்கீதம்' 
எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றது. 

சாரங்க தேவர் 
********************
சாரங்கதேவர் என்பவர் கி.பி.1210 - 1241 வரையுள்ள 
காலத்தில் காசுமீரத்திலிருந்து தமிழகம் வந்து 
தேவாரப் பண்களை அறிந்து வடமொழியில்
“சங்கீத ரத்னாகரம்” என்னும் நூலை எழுதினார். 

இது வடமொழியில் இயன்ற இசையிலக்கண நூலாகும். 

தமிழ்நாட்டில் வளர்ந்திருந்த இசையை 
நன்கு பயின்ற பின்னரே அந்நூல் இயற்றப்பட்டுள்ளது. 

அந்நூலில் சாரங்க தேவர் 
இந்தளம், காந்தாரப்பஞ்சமம், நட்டராகம், பஞ்சமம், 
தக்கராகம், தக்கேசி, நட்டபாடை, கெளசிகம், செவ்வழி, செந்துருத்தி, தேவாரவர்த்தினி, காந்தாரம், குறிஞ்சி, 
மேகராகக் குறிஞ்சி முதலிய தமிழ்ப்பண்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பதாம் நூற்றாண்டில் மதங்க முனிவர் இயற்றிய 
“பிருகத தேசி” என்னும் நூலிலும் தமிழ்ப் பண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

13-ம் நூற்றாண்டுக்குப் பின் தமிழ்நாட்டிலேயே 
இசை இலக்கண நூல்கள் வடமொழியில் 
எழுதும் வழக்கம் ஏற்பட்டு விட்டது. 

அந்நூலில் உள்ள இசையமைப்பு முறை தேவாரம், 
திவ்விய பிரபந்தத்தில் உள்ள தமிழிசைப் பண்ணமைப்பு முறையை ஆதாரமாகக் கொண்டது. 

வடமொழிப் பெயர்கள் இராகங்களுக்கு இடப்பட்டு, 
முதல்முதல் வெளிவந்த கர்நாடக இசைநூல், 
கர்நாடக இசைக்கு முதல்நூல் அதுதான் என்றும் அறியப்படுகின்றது. 

சங்கீத ரத்னாகரத்தின் வாயிலாகத் தமிழிசை 
வடநாடுகளுக்கு அறிமுகமானதாகக் கூறலாம். 

இசை நூல்களில் வடமொழிப்பெயர்கள் 
இடம்பெறத் தொடங்கின. 

சில ராகங்களுக்குச் சாரங்க தேவர் “பாஷா ராகங்கள்”
என்று பெயரிட்டுள்ளார். 

“பாஷா” என்று அவர் கூறவது தமிழ் மொழியையேயாகும். 

இந்துஸ்தானி இசை 
******************************

கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டுவரை தென்னிந்திய 
இசையென அழைக்கப்பட்ட தமிழிசை மட்டுமே 
இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்திருந்தது. 

தென்னிந்தியாவில் வளர்ந்து நின்ற தமிழிசை 
வட இந்தியாவெங்கும் பரவி மாறுபட்ட பெயர்களோடு வழங்கிவந்தாலும்கூட, காலப்போக்கில் 
முஸ்லிம் அரசர்கள் இந்தியாவை ஆட்சிசெய்யத் 
தொடங்கிய காலம் தொடக்கம் முஸ்லிம் நாடுகளின் 
இசையின் வரவால் தனித்துவம் இழந்தது.

இரண்டறக் கலந்தது. 
அதுவே இந்துஸ்தானி இசை என்று 
இப்போது வழக்கத்தில் உள்ளது. 

பிற நாட்டு இசைக்கலப்பால் புதுவடிவம்பெற்ற 
வட இந்திய இசையே இந்துஸ்தானி இசை. 

ஆனால் அடிப்படை மரபு மாறாமல் இன்றும் 
கடைப் பிடிக்கப்பட்டு வருவது தென்னிந்திய 
இசையேயாகும். 

அதுவே கர்நாடக இசை என்ற பெயரில் 
வழங்கிவரும் தமிழிசை.

14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், 
ஹரிபாலர் என்பவர் எழுதிய “சங்கீத சுதாகரம்” என்ற 
நூலிலேயே முதன்முதலாக, கர்நாடகஇசை, இந்துஸ்தானிஇசை என்ற இரண்டுவகை இசைகளின் பெயர்கள் குறிப்படப்பட்டுள்ளன. 

கன்னடம் தனியொரு மொழியாகத் தோன்றி 
1100 ஆண்டுகளே ஆகின்றன. 

தெலுங்கு மொழி தோன்றி 
900 ஆண்டுகளே ஆகின்றன.

ஆனால் இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு 
முன்னரே பக்தி இலக்கியங்களான 
தித்திக்கும் தேவாரங்கள் தோன்றிவிட்டன. 

2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழிசை செழித்து 
தழைத்து ஓங்கி நின்றது என்பதைப் பழந்தமிழ் 
இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.

பார்ப்பனப் புரட்டும் திருட்டும்!
******************************************
தமிழ்கத்தின் ஊர்ப்பெயர்களையே வடமொழியில் 
கும்பகோணம் (குடமூக்கு), 
வேதாரண்யம் (மறைக்காடு), 
விருத்தாசலம் (பழமலை) 
என்று மாற்றியதைப் போலவே திட்டமிட்டு 
இசைத்துறைக் கலைச் சொற்களையும் 
வட சொற்களாகக் காட்ட ஆரியர் முற்பட்டனர்.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருந்தும் ஆரியர் தாம் பயின்ற 
இசை முறைகளையும் இசையிலக்கணங்களையும் 
தமிழ் மொழியில் எழுதாது வஞ்சகமாகவே  
வடமொழியிலேயே எழுதி வைத்தனர்.

17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை மன்னரிடம் அமைச்சராய் இருந்த கோவிந்த தீட்சிதர் “சங்கீத சுதா” என்னும் இசை நூலை வடமொழியில் இயற்றினார். 

இவருடைய இரண்டாவது மகன் வேங்கடமகி 
இராகங்களைப் புதியதொரு முறையில் வரிசைப்படுத்தி “சதித்தண்டிப் பிரகாசிகை” என்னும் நூலை எழுதினார். 
தமிழ்நாட்டில் வழங்கி வந்துள்ள இசைமுறையை சில திரிபுகளுடன் அந்நூலில் எழுதி வைத்துள்ளார். 

எனினும் அதை தமிழில் எழுதாமல் வடமொழியிலேயே எழுதினார். 

இதில் இசைத்துறையில் வழக்கிலிருந்த 
தமிழ்சொற்களையும் இராகங்களின் 
தமிழ்ப்பெயர்களையும் பெரும் அளவில் இருட்டடிப்பு செய்துவிட்டார்.

ஆபிரகாம் பண்டிதர்
******************************
இந்த ஆரிய நாசகார இருட்டடிப்பு குறித்து இசைப்பேரறிஞர் மு.ஆபிரகாம் பன்டிதர் தனது கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூலில் குறிப்பிடுவது :

“பூர்வம் தமிழ் மக்கள் சுரங்களையும் சுருதிகளையும் இராகம் உண்டாக்கும் விதிகளையும் அனுசரித்து பாடிவந்த 12,000 ஆதி இசைகளும் அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்படும் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டும் அந்நிய பாஷைச் சொற்களால் உருவமைந்தும் நாளது வரையும் வழங்கி வருகின்றன. 

தமிழில் வழங்கும் அநேக வார்த்தைகளைத் தங்கள் 
பாஷையில் முதல் முதல் இருந்ததாக மற்றவர் 
நினைக்கும்படி காலாகாலங்களில் மாற்றி, 
மாற்றியதற்கிணங்க நூல்களும், புராணங்களும், கட்டுக்கதைகளும் செய்து பரப்பி வந்தார்கள். 

அவர்கள் சொன்னதையெல்லாம் நம்புகிறவர்கள் 
ஏற்பட்டபின் சமஸ்கிருத பாஷையின் அநேக வார்த்தைகள் தமிழில் வந்து வழங்க தலைப்பட்டன. 

இதை விவேகிகள் அறிவார்கள். 
அதிகம் சொல்ல இங்கு அவசியம் இல்லை. 

இயல் இசை நாடகமென்னும் முத்தமிழில் உள்ள 
இசைத் தமிழாகிய சங்கீதத்தை தென்னாட்டிலிருந்தே 
மற்றவர்கள் கொண்டு போனார்கள் என்பது பற்றியும் வடபாஷைக்காரரும் தமிழ்நாட்டிலிருந்தே இசைத்தமிழைக் கொண்டு போயிருக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு எழுத நேரிட்டது”.

கடந்த 200 ஆண்டுகளுக்குள்ளாகத்தான் ஆரியர் 
தென்னிந்திய இசைமுறைக்கு “கருநாடக சங்கீதம்” என்ற பெயரைச் சூட்டியுள்ளனர். 

20-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழ்நாட்டு நடனக்கலைக்குப் “பரத நாட்டியம்” என்று 
புதிய பெயரைச் சூட்டி அது நிலை பெற்றுவிட்டது போலவே சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழிசை முறைக்கு “கருநாடக சங்கீதம்” என்ற பெயரிட்டு நிலை நிறுத்தியுள்ளனர்.

சுமார் 700 ஆன்டுகளுக்கு முன்பு வடமொழியில் 
“சங்கீத ரத்னாகரம்” எனும் இசை நூலை எழுதிய சாரங்கதேவர்தான் தமிழிசை முறையில் சரிகமபதநி 
என்னும் ஏழு தமிழ் குறியீடுகளுக்கும் 
வடமொழிப் பெயர்களை வலிந்து கொடுத்து 
அந்த ஏழு சுரங்களும் வடமொழியிலிருந்து வந்தன 
எனும் பெரும்புரட்டை ஏற்படுத்தினர். 

***********************************************
சிறீ சிறீஸ்கந்தராஜா
19/08/2017

Image may contain: one or more people
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை மதியம் 21.08.2017 சூரிய கிரகணம் உறவுகளே..கிட்டத்தட்ட 90 ஆண்டுகளின் பின் வருகின்ற கிரகணமாகவும் உற்றுப் பார்க்கும் சந்தர்பத்தில் கண்களுக்கு அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தி விடும் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.ஆகவே சற்று அவதானம் வேண்டும்.

சூரிய கிரகணம்

கங்கண சூரிய கிரகணம்!

"சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. எப்போதும் சூரிய கிரகணமானது, அமாவாசை நாளில்தான் ஏற்படும். அப்போது சூரியனின் முழுப்பகுதியோ  (முழு சூரிய கிரகணம்) அல்லது ஒரு பகுதியோ  (பகுதி சூரிய கிரகணம்) மறைந்து காணப்படும். இப்போது வரும்  சூரிய கிரகணத்தை 'கங்கண கிரகணம்' அல்லது 'வளைய கிரகணம்' என அழைக்கிறார்கள். 

 பூமியைப் பொறுத்தவரை, நிலவின் பாதை வட்டமானதல்ல. நீள்வட்டப் பாதையாகவே இருக்கின்றது. இதனால் நிலவுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் 3.56 லட்சம் கிலோ மீட்டராகவும் நீள்வட்டத்தில் 4.07 லட்சம் கிலோ மீட்டராகவும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம்....

Image may contain: sky, cloud, tree and outdoor
Image may contain: sky, tree, cloud, outdoor and natureஇன்று மதியத்தின் பின் நான் எடுத்த படம்..
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்நிதியில் 22.08.2017 செவ்வாய் அதிகாலை கொடியேற்றம்
கொடியேற்றத்தில் நடப்பது என்ன?
....................................................................................................

ஆகமம் சாராத பக்திசார் வழிபாட்டு மையமாக இருக்கும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியின் கொடியேற்ற நிகழ்வு ஏனைய ஆலயக் கொடியேற்ற நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டதாகும். 
.
ஆவணி மாத பூர்வபக்க பிரதமை கூடும் நேரத்தில் இங்கு கொடியேற்றம் இடம்பெறுவது வழமை. அந்த வகையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் இரவு 12.49 இற்கு அமாவாசை அற்றுப் போவதால் அதன் பின்னா் விடிகாலையில் கொடியேற்றம் என அறிவித்துள்ளனா். 
.
வைரவப் பெருமானுக்குக் காப்புக் கட்டிப் பின்னர் பிள்ளையார் பூசை மூலவரான வேலவருக்குப் பூசை என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து கொடியேற்றத்தின் முக்கிய நிகழ்வான கேடகப் பூசை இடம்பெறும்
.
ஆலய வாயிலில் மூலஸ்தானத்தை நோக்கியவாறு உள்ள நந்திக்கு (இடபத்திற்கு) முன்பாக கேடயம் வைக்கப்பட்டிருக்கும் . (கேடகம் என்பது சுவாமியைக் காவிச்செல்லும் கூடு) கேடகத்தின் உச்சியில் உள்ள கலசத்தில் தருப்பை, ஏழு மாவிலைகள் என்பவற்றைப் பட்டுத் துண்டால் கட்டி பூசை இடம்பெறும். இதனைக் கலச பூசை என்கின்றனர். இதுவே கொடியேற்றத்தின் முக்கிய நிகழ்வு.
.
கொடியேற்றம் நிகழ்ந்ததன் அறிகுறியாக ஆலய வாயிலில் சேவல் கொடியைப் பறக்கவிடுவா் அதன்பின் எழுந்தருளி வேலவருக்குப் பூசை இடம்பெறும். அவரை கேடகத்தில் எழுந்தருளச் செய்து உள்வீதியுலா வரச் செய்வர். 
.
வள்ளி அம்மன் வாசலுக்கு எழுந்தருளி வேலவர் வந்ததும் அவரை வள்ளி அம்மன் கோவிலுக்குக் கொண்டு சென்று தீர்த்தக் குளத்தில் நீர் எடுத்து வேலவருக்கும் வள்ளி அம்மைக்கும் விசேட பூசை இடம்பெறும். 
.
தொடர்ந்து கேடகத்தில் எழுந்தருளி வேலவர் வெளிவீதியுலா வருவாா். கோவிலுக்கு வடக்குப் புறமுள்ள வாயிலில் (கதிர்காம வாயில்) தீர்த்தக் குளத்தில் நீர் எடுத்து கும்பம் வைத்து அர்ப்பணிப்பா். நூற்றுக்கணக்கான தேங்காய்களை சிதறு தேங்காயாக உடைத்து அர்ப்பணிப்பா். 
.
அர்ப்பணங்கள் நிறைவுற்றதும் வேலவர் தனது சந்நிதானத்தை வந்தடைவார்.
.
சந்நிதியில் பூசை செய்பவர்களைப் பூக்காரர் என அழைப்பர். இவர்கள் வாய்கட்டியே பூசை செய்வர். 
.
பூசை முறை தமக்குத் தெரியாது என இவ்வாலயத்தைத் தாபித்த மருதர் கதிர்காமர் முருகப் பெருமானிடம் கோரியபோது முருகன் அவரை கண்மூடுமாறு பணித்ததாகவும் அடுத்த கணம் கதிர்காமத்தில் அவரை சேர்ப்பித்ததாகவும் அதன் மூலம் பூசை முறையையும் வேல் ஒன்றையும் அவர் பெற்றதாகவும் ஐதிகம் உண்டு.
.
முருகனும் கதிர்காமரும் உரையாடிய இடம் ஆலய முகப்பில் உள்ள நந்திக்கு அருகில் உள்ள இரண்டு குந்துகள் ஆகும். இந்த இரண்டு குந்துகளிலும் அவர்கள் எதிர் எதிர் இருந்து கதைத்தார்கள் என்ற நம்பிக்கையில் அக்குந்துகளில் எவரும் இருப்பதுவும் இல்லை. ஏன் அதற்குக் குறுக்கே போகக் கூடாது (அதாவது நேர் வாயிலால் கோவிலுக்குள் போகக்கூடாது) என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது. 
.
மூலவராக வேற்பெருமான் உள்ளார். இதைவிட அடியவர்கள் வழங்கிய வேல்களையும் இங்கு வைத்துள்ளனர். 
.
முருகனது உபதேசப்படி உப்பு இடாமல் 65 ஆலம் இலைகளில் வெண்பொங்கல் படைக்கப்படுகின்றது. இதுவே முருகனுக்கான பிரசாதம். இதனை மருந்து என்றுதான் அழைப்பர். 
.
சந்நிதியில் விபூதி வாங்கும் போது ஒரு கையால் வாயைப் பொத்தியபடி நிற்க பூசகர் விபூதியைப் பெறவேண்டியவருடைய சிரசில் விபூதியை தூவி நெற்றியிலும் பூசிவிடும் மரபும் உள்ளது. 
.
மருதர் கதிர்காமர் முருகனிடம் தனக்கு விபூதி கொடுக்கத் தெரியாதே என்று கூறியபோது இப்படி விபூதியைக் கொடு என முருகன் வழிப்படுத்தினார் என நம்புகின்றனர். இதனால் அவரது சந்ததியினரும் அந்த மரபைப் பின்பற்றுகின்றனர். 
.
சந்நிதித் திருவிழாவையொட்டி வழமை போல சந்நிதியான் ஆச்சிரமத்தில் தினந்தோறும் அன்னதானம் மற்றும் ஆன்மீக உரைகள் இடம்பெறவுள்ளன.
.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டிலும் ஆன்மீக நிகழ்வுகள் ஆலய வெளிவீதியில் மாலை மற்றும் இரவு வேளையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
.
-லலீசன் லலீசன்.

Image may contain: outdoor
No automatic alt text available.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"I am a little pencil in the hands of a writing God who is sending a love letter to the world." -Mother Teresa

கருணை பிறந்த தினம் !

Image may contain: 1 person, smiling, closeup
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, closeup
 
தாய் !

"இரத்த சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை முறியடிக்க முடியாது.உங்களுடைய கொடுமைகள் எல்லாம் உங்கள் தலையிலேயே வந்து விடியும் "என்று முழங்குகிறாள் தாய்!

~ மாக்சீம் கார்க்கியின் தாய் ~

மாக்சீம் கார்க்கியின்"தாய் "படித்துக் கொண்டிருக்கையில் பாவெல் அம்மாவாக என் கண் முன்னே ஒரு உருவம் அடிக்கடி வந்து சென்றது.கைத்தறி நூல் புடவையில் கையில் ஒரு துணிப்பையுடன் கண்களில் தீராத சோகத்துடன் அந்த உருவம் எனக்குள்ளே பலமுறை தோன்றி என்னைப் பாதித்தது.

அவள் வேறு யாருமில்லை!நிறையப் படிக்காதவள்.உலகம் அறியாதவள்.ஏழைத் தொழிலாளியின் மனைவி.வாழ்வில் பெரிதும் அலைக்கழிக்கப்பட்டவள்.மகன் விட்டுச் சென்ற பணியை பெரும் விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டவள்.இப்படி ஏகத்திற்கு பாவெலின் தாய் பெல்கேயாவும்,பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளும் ஒரே புள்ளியில் இணைந்த இரண்டு கோடுகள் போல் தெரிந்தாள்.

நாமெல்லாம் ஒரு போராட்டத்தை எதுவரை எடுத்துச்செல்வோம் என்று தெரியாது.உடல்சோர்வு கொஞ்சம் தெரிந்தாலே உண்ணாவிரத்தை முடித்துக்கொள்ளும் ஜாதியை சேர்ந்தவர்கள் நாம்!தீர்வு வந்து சேரும் வரைக்கும் நமக்கு பொறுமையும் இருக்காது.அந்த போராட்டங்களில் உறுதியும் தொடராது.இவ்விரண்டும் இம்மியளவு கூட குறையாமல் 26 வருடங்களாக ஒரு தாய் போராட்டம் நடத்துகிறாள் என்றால் அவள் இருக்கும் திசையை நோக்கி வணங்க தோன்றுகிறது.

ஈன்ற கன்று இறந்ததுகூட தெரியாமல் வைக்கோல் அடைத்த பொம்மைக் கன்றினை நாவினால் தடவிப்பார்த்து பால் சுரக்கும் பசுவின் ரகம் இல்லை இவள் என்பது நன்றாகவே புரிகிறது. எந்நேரமும் தன் வயிற்றைத் தடவிப்பார்த்து உயிர்ப்பைச் சோதிக்கும் உயரிய தாயே அற்புதம்மாள்!

பெரும் செல்வச்செழிப்போ உலக ஞானமோ இல்லாத சாதாரணப் பிண்ணனி கொண்டவர்தான்.ஆனால், அதையும் தாண்டி மகனின் ஜீவாதாரப் போராட்டத்தை முன்நின்று நடத்தும் பக்குவமும் அளவற்ற பாசமும் இதில் அடங்கி இருக்கிறது.

உயிர்ப்பிச்சையோ ,பெரும் கருணையோ பின்னிருக்கட்டும் !முதலில் என் மகன் செய்த தவறு என்ன? என்று ஓங்கி ஒலிக்கும் இந்த தாயின் கேள்விக்கு இங்கே பதுக்கி நின்று கூட பதில்ச்சொல்ல ஆளில்லை! சாட்சிகள் அற்ற விசாரணை. மிரட்டி,அடித்து,மிதித்துப் பெறப்பட்ட ரத்தவாடையான ஒரு வாக்குமூலம்.யாரையாவது அவசரமாக குற்றவாளியென நிரூப்பிக்க வேண்டிய ஒரு அவசியம்.இந்தச் சூழலில் வழங்கப்பட்ட தண்டனை இது.இதை எதிர்த்தே இந்தத்தாயின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

ஆரம்பகாலத்தில் தான் சார்ந்து இருந்த சிலர் தன்னை கைவிட்ட போதிலும் நம்பிக்கையைக் கைவிடாமல் இவள் சந்தித்து கொண்டிருக்கும் போராட்டம் வியக்க வைக்கிறது.எத்தனை தலைவர்களை ,எத்தனை நீதிமன்றங்களை, சந்தித்து மறுக்கப்பட்ட நீதியை ,இழைக்கப்பட்ட அநீதியை இந்த தாய்மை சொல்லிக் கதறி இருக்கும் என்று நினைத்தாலே நெஞ்சம் கசிக்கிறது.

பொய்க்குற்றத்தைச் சுமத்திய காவல்துறை அதிகாரிக்கே குப்புற படுத்தாலும் தூக்கம் வரவில்லையாம்.சுய சரிதையில் கழிவிரக்கம் தேடிக் கொண்டார்.இந்த 26 ஆண்டுகளில் தான் செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்கும் ,இன்னமும் எதிர்நோக்கும் ஒருவனின் நிலை எப்படி இருக்கும்?எண்ணிப் பார்த்தால் நமக்குத் தூக்கம் வராது.

இத்தனை ஆண்டு கால போராட்ட வாழ்க்கையில் தனியொருத்தியாக இந்தத் தாய்ப்பறவை பல கதவுகளை தட்டியதில் சிறிய ஜன்னல் ஒன்று திறந்திருக்கிறது! இன்று அந்தத்தாய் முகத்தில் கொஞ்சம் சந்தோஷம் தோன்றியிருக்கும்.

ஆனால்,இன்னும் இன்றும் எங்கோ ஓரிடத்தில் எழுவர் விடுதலைக்கான,நீதிக்கான, போராட்டத்தில் கால்கடுக்க நின்றுகொண்டிருப்பாள் என்பது யாரும் அறியாத ஒன்று!

"எவள் ஒருவள் அநீதியுடன் முரண்பட்டு மோதுகிறாளோ அவளே பிற்காலத்தில் புரட்சிப் புயலான தாய் ஆகிறாள்."

பா.வெங்கடேசன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 27: நவின அஞ்சல் முறையை அறிமுகப் படுத்திய ரோலண்ட் ஹில் மறைந்த நாள் இன்று.'
1837 ஆம் ஆண்டு, தனது 42 ஆவது வயதில் "தபால் அலுவலகச் சீர்திருத்தம்: இதன் முக்கியத்துவமும் நடைமுறைச் சாத்தியமும்" ("Post Office Reform: its Importance and Practicability") என்ற அவரது பிரபலமான பிரசுரத்தை வெளியிட்டார். இப் பிரசுரத்தில் அவர் அதிகாரப்பூர்வ, முன்னரே அச்சடிக்கப்பட்ட கடித உறைகளையும், ஒட்டத்தக்க தபால்தலைகளையும் வெளியிடவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டினார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: text
 

ஆகஸ்ட் 30 ⇨ காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச தினம்

பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பான செயற்பாடானது குறிப்பிட்டதொரு பிராந்தியத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்படாமல் உலகளாவிய ரீதியிலான பிரச்சினையாக தற்சமயம் மாற்றமடைந்துள்ளது.

இராணுவச் சர்வாதிகாரச் செயற்பாடுகள், உள்நாட்டுக் குழப்பங்கள், மற்றும் எதிர்கட்சிகளுக்கெதிரான அரசியல் அடக்குமுறைகள் ஆகியன உலகில் காணாமல் போனோர் தொடர்பான செயற்பாடுகளுக்கு மூலகாரணங்களாகும். 

2010 டிசம்பர் 21ம் திகதிய ஐ.நா பொதுச்சபையின் 65வது பொது அமர்வில் ஆகஸ்ட் மாதம் 30ம் திகதியினை காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச தினமாக பிரகடனம் செய்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
" எழுத்தாற்றலை ஓரளவுக்குப் பயிற்சியால் வளர்த்துக் கொள்ள முடியும். தமிழ் நன்றாகத் தெரிய வேண்டும். தமிழில் நிறையப் படிக்க வேண்டும். அதிகம் பேசாமல் நிறையக் கவனிக்க வேண்டும். எழுத்து என்பது ‘Memory shaped by art‘ என்று சொல்வார்கள். உண்மை எத்தனை? கற்பனை எத்தனை? அவற்றை எந்த அளவில் கலப்பது? நடந்ததைச் சொல்வதா? நடந்திருக்க வேண்டியதைச் சொல்வதா? இந்த ரசாயனம் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நாளாகும். இதற்குக் குறுக்கு வழியே இல்லை. நிறைய எழுதிப் பார்க்க வேண்டும். எழுதியதைச் சில தினங்கள் விட்டுப் படித்துப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு வாசகனின் கோணத்திலிருந்து அதை பார்க்க இயலும். கொஞ்சம் கூடக் கருணையே காட்டாமல் அநாவசிய வார்த்தைகளையும் வாக்கியங்களையும் சிதைத்து விட வேண்டும். நான் எழுதியதெல்லாம் மந்திரம் போல; ஒரு வார்த்தையை நீக்க முடியாது; நீக்கக் கூடாது என்பதெல்லாம் மடத்தனம். உங்களுக்கே திருப்தி வரும்வரை திரும்பத் திரும்ப எழுதுவதிலும் திருத்துவதிலும் நீக்குவதிலும் சேர்ப்பதிலும்தான் நல்ல எழுத்து ஜனிக்கிறது."
.
சுஜாதா 
.
3 May 1935 - 27 February 2008 
.
Image may contain: 1 person
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழிளாளர் தினம்.04.09.2017..அனைத்து தொழிளாளர்களுக்கும் விடுமுறை நாள் வாழ்த்துக்கள்!

No automatic alt text available.
 
 
 
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொத்தகம் என்ற சொல்லே பின் புத்தகமானது பொத்தகம் என்ற சொல் போந்தே என்ற சொல்லின் இருந்து வந்தது போந்தே என்றால் பனை என்று பொருள் படும் பனையோலையில் எழுதப்பட்டதால்
போந்தயகம் போந்தகம் பொத்தகம் பின் புத்தகமானது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: one or more people and people sitting
Image may contain: 1 person, fire
Image may contain: one or more people, tree and outdoor
Image may contain: 1 person, crowd and outdoor
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sept 05, 2017 ⇨ #அன்னை தெரேசாவின் 20வது நினைவு தினம்

அன்னை #தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் கஷ்டங்கள் நிறைந்ததென்றும்,வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும் ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும் குறிப்பிட்டிருந்ததன் மூலம் அன்னை ரோஜா தோட்டத்தில் அல்ல முட்பாதைகளுக்குள் பயணித்திருக்கின்றார் என்ற உண்மை தெளிவாகின்றது. 

ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரேசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்ற போது அந்த செல்வந்தர் அன்னையின் கைகளில் காறி உமிழ்ந்திருக்கின்றார். கைக்குள் விழுந்த எச்சிலைமூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்குப் போதும் ஏழை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்ற அமைதியான பதிலால் திக்குமுக்காடிப் போன அந்நபர் அன்னையின் கால்களில் வீழ்ந்து கதறியழுது மன்னிப்பு கோரியதுடன் ஏழைகளுக்கு வாரி வழங்க முன்வந்தார். இது அன்னையின் பொறுமைக்கு கிடைத்த பரிசு. 

அன்னை தெரேசா மரணித்த தினமான செப்டம்பர் 5ஆம் திகதியை சர்வதேச கருணை தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளமையானது மனிதநேயம் கொண்ட சமுதாயத்துக்கு கிடைத்த வெற்றியாகும். 

நீ கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்கு தான் தாயாகி இருப்பாய் ஆனால் நீ கருணையுற்றதால் பல்லாயிரம் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறாய்!!!

Image may contain: 1 person, closeup
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

By யாயினி?
?Started September 5, 2014.?

நான் கனேடிய மண்ணில் கால் பதித்து இன்றோடு 23 ஆண்டுகள்.இந்த 23 ஆண்டுகளுக்குள் சந்தித்தவை; கடந்தவை என ஏராளம்.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.