Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
"தமிழ் ஈழம்"
போராளிகள் 
இறந்து கொண்டிருக்கும்
மண் என்றார்கள்...
திருத்தினேன்...
போராளிகள் 
பிறந்து கொண்டிருக்கும்
மண்...!!!
- காசி ஆனந்தன்
Image may contain: fire
 • Like 2
Link to post
Share on other sites
 • Replies 3.3k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது முகநூல் எப்படி பலதும் பத்துமாக பிரகாசித்ததோ அது போன்று என்னை பல ஆண்டுகளுக்கு முன் உறுப்பினர் ஆக்கிக் கொண்ட யாழில் பல அம்சங்களையும் பதிவிட எண்ணி உள்ளேன்...அடுத்த பக்கத்தில் எந்தப் பதிவுகளும் பதிய

ஆயிரம் புள்ளினளை அள்ளித் தந்த அனைத்து உறவுகளுக்கும்  மனம் நிறைந்த நன்றிகள். 1,000 ???

நீ உழைக்கும்  உழைப்பில் சிறிதாவது உனக்கென சேமித்து வைத்துக்கொள்  இல்லையெனில்  கஷ்டம் வரும்பொழுது உதவுவதற்கு யாரும் முன் வர மாட்டார்கள் உன் சகோதரனாக இருந்தாலும். 1ரூபாயாக இருந்தாலு

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்
Image may contain: one or more people, people standing and crowd
Image may contain: one or more people, people standing, crowd and indoor
Image may contain: one or more people and night
Image may contain: one or more people and outdoor
+5
Jaffna Today 
25 mins · 

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக எழுச்சியுடன் மாவீரர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்

உங்கள் கல்லறை மீதிலே கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்..
#மாவீரர்_நாள் : 2017

 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
 

கிளிநொச்சி கனகபுரத்தில்..
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்...
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்....

Image may contain: one or more people, people standing, sky and outdoor
 · 
 · 
Image may contain: one or more people, people standing, sky and outdoor
 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hrs · 
 
Image may contain: 1 person
Image may contain: 12 people, crowdImage may contain: 3 people
Image may contain: one or more people
Image may contain: 1 person, basketball court
+3
கரன் நித்தி 
 தமிழீழ தேசிய மாவீரர் நாள் - 2017 
இலண்டன் EXCEL· 
 ·
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
வன்னியூர் செந்தூரன் added 2 new photos.
 · 
தமிழீழ மாவீரர் நாளாகிய இன்று வானில் தென்பட்ட தமிழீழ வடிவிலான மேகக்கூட்டம். உணர்த்தும் செய்தி என்ன?
 · 
Image may contain: cloud and sky
 
Edited by யாயினி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 3 people, night
காவலூர் அகிலன்
 
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்...
 · 
 
- மூன்று மாவீரர்களின் தாயார் பொதுச் சுடரேற்றினார்.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 2 people, people standing and outdoor
 
பிரான்ஸ் சார்சல் நகர மேயரும் அவரது உதவியாளரும்மாவீரர் தினத்திற்கு மிக பெரிய இடத்தை இலவசமாக கொடுத்து உதவியதோடு மட்டுமல்லாது சங்கர் அவர்களது சிலையும் திறந்து வைக்கப் பட்டதாக அறிந்து கொண்டேன்.
 
Edited by யாயினி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Ajax நகரில் நேற்றிரவு நிகழ்ந்த வாகன விபத்தில் பத்து வயதான சர்மிளா விஜயகுமார் என்ற சிறுமி மரணமடைந்துள்ளார்.

 · 
 
 
Edited by யாயினி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காலியானி

இத்தாலி பொருளாதார மேதை

இத்தாலியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஃபெர்டினாண்டோ காலியானி (Ferdinando Galiani) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இத்தாலியின் கியெட்டி நகரில் (1728) பிறந்தார். கற்றறிந்த உறவினரிடம் பாரம்பரியக் கல்வி பயின்றார். ஆரம்பத்தில் இருந்தே பொருளாதார விஷயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மதக் கல்வியும் முடித்து தேவாலயப் பணியில் சேர்ந்தார்.

* வர்த்தகவாதக் கொள்கைக்கு (Mercantilism) ஆதரவாக ‘டிராட்டேட்டோ டெல்லா மொனேடா’ என்ற நூலை எழுதினார். இது இவரது மாஸ்டர்பீஸாகப் போற்றப்படுகிறது. பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றும் பணியாளர்கள் குறித்து ஒரு நூல் எழுதினார். இந்த நூல்கள் வாயிலாக நாடு முழுவதும் பிரபலமானார்.

* இவரது அரசியல், சமூகப் பொருளாதார அறிவுக்கூர்மை அந்நாட்டு மன்னரை ஈர்த்தது. பாரீஸில் பணியாற்றி வந்த தூதரின் செயலாளராக 1759-ல் நியமிக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நேபிள்ஸ் நகரில் அரசு ஊழியராகப் பணியாற்றினார். பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதிலும், நிர்வாகத்திலும் அரசுக்கு உதவினார்.

* இத்தாலி, பிரெஞ்ச் ஆகிய இரு மொழிகளிலும் பல கட்டுரைகள், கடிதங்கள் எழுதினார். பொருளாதார, சமூக, அரசியல் வாழ்க்கை பற்றிய இவரது அபாரமான கருத்துகள் பெரிதும் போற்றப்பட்டன. அரசோ, சட்டமோ அதன் மதிப்பீடுகளை மற்றவர்களிடம் திணிக்கக்கூடாது என்றார்.

* பிரான்ஸின் பிரபல பொருளாதார நிபுணர் டென்னிஸ் டைடரோட், பிரபல தத்துவவாதி ஆன் ராபர்ட் ஜாக்குவஸ், வால்டேர் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். இவரது எழுத்துகள் மக்களின் வாழ்க்கைத்தரம், சமூக அறிவியல் ஆகியவற்றை மையமாக கொண்டிருந்தன.

* அந்த காலக்கட்டத்தில் நிலவிய சமூகம், பொருளாதாரம், அரசியல் நிலவரங்கள் குறித்த விரிவான பதிவாக இவை அமைந்தன. பொருளாதார நிபுணர் என்ற முறையில் இவரது கருத்துகள் மிகவும் உண்மையாகவும், எதார்த்தமாகவும் இருந்தன. இவரது சிந்தனைகளில் அரிஸ்டாட்டிலின் தாக்கம் பிரதிபலித்தது.

* 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல தத்துவமேதை விக்கோவின் படைப்புகளை ஏராளமாக வாசித்தவர். அவருடைய தாக்கங்களும் இவரிடம் மிகுந்திருந்தன. பொருளாதாரம் குறித்து பிரபல அறிஞர் மொரெல்லெட்டுடன் அடிக்கடி விவாதித்தார். பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து அறிந்து, தனது தனித்துவம் வாய்ந்த சிந்தனைகள் குறித்து எழுதியும் பேசியும் வந்தார்.

* இவர் எழுதிய ‘ஆன் மனி’, ‘டயலாக்ஸ் ஆன் தி கிரெய்ன் ட்ரேட்’ ஆகிய பொருளாதார ஆய்வுக் கட்டுரைகள் நாடு முழுவதும் பிரபலமடைந்து, சிறந்த பொருளியல் நிபுணர் என்ற பெருமையை இவருக்குப் பெற்றுத் தந்தன. முதல் கட்டுரையில் பயன்பாடு, பற்றாக்குறை அடிப்படையில் மதிப்புக் கோட்பாட்டை வகுத்தார். பொருளாதார மதிப்பீடு குறித்த இவ்வளவு ஆழமான சிந்தனை அதுவரை யாரிடமும் காணப்பட்டதில்லை என்று கருதப்படுகிறது.

* வணிகத் துறைக்குக் கட்டுப்பாடு தேவை என்பதை தனது 2-வது கட்டுரையில் வலியுறுத்தியிருந்தார். இது ஏற்கெனவே அங்கு பிரபலமாக இருந்த முழுமையான வணிக சுதந்திரக் குரலுக்கு எதிரானதாக இருந்தது. 1769-ல் வெளிவந்த ‘டயலாக்ஸ் ஆன் தி காமர்ஸ் இன் வீட்’ என்ற நூலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

* 18-ம் நூற்றாண்டின் தலைசிறந்த பொருளாதார, சமூக, அரசியல் மேதையாகப் போற்றப்படும் ஃபெர்டினாண்டோ காலியானி 59-வது வயதில் (1787) மறைந்தார்.

Image may contain: 1 personபடித்ததிலிருந்து.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் மீன்பிடிக்க போனால் பாம்பு வருதாம் 1f632.png?

Image may contain: one or more people and people sitting
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Sri Lankan family deported after spending 5 years in Canada

Immigration, Refugees and Citizenship Canada said decision 'not taken lightly'

December 3, 2017
sri lanka deportation

The family arrived at Trudeau airport at 3 p.m. Sunday. (Radio-Canada) 

2k shares

A Sri Lankan family who spent five years in Canada was deported Sunday despite appeals to Public Safety Minister Ralph Goodale to issue a reprieve.

Their flight took off from Montreal's Trudeau airport Sunday evening.

Before leaving their home in Parc-Extension, Robert Lawrence, the father of the family, said they were all very sad, but still love Canada despite their deportation.

"What can you do? We have to all obey the rules and regulations," Lawrence told CBC News.

"We enjoyed the last five years of our lives in Canada. Good lives."

The family was applying for permanent residence in Canada on humanitarian and compassionate grounds. After review, their application was rejected.

He said members of his church in Outremont came to see them Sunday morning and they all cried together.

Lawrence worked for the United Nations in Sri Lanka's Eastern province during the civil war which ended in the defeat of the separatist Tamil Tigers by the Sri Lankan majority Sinhalese government.

In 2012, he left the country in hopes of protecting his family from any backlash for the work he did during that time.

Lawrence deportation montreal

The Lawrence family left Sri Lanka right after the civil war. (CBC)

'Makes no sense'

Immigration, Refugees and Citizenship Canada would not comment on the family's case but said, "a decision to remove someone from Canada is not taken lightly."  

"Canada is committed to ensuring that people being removed from Canada are not sent to a country where they would be in danger or at risk of persecution," spokesperson Scott Bardsley said.

NDP MP Alexandre Boulerice said deporting a family that had integrated into Quebec society over the years "makes no sense."

Lawrence's family includes his wife, three daughters, son, daughter-in-law and four-month-old grandchild.

Edited by யாயினி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
நெல்சன் மண்டேலா நினைவு தினம் இன்று..
 
Image may contain: 1 person
 
நெல்சன் மண்டேலா...

Nelson Mandela பிறப்பு: ஜூலை 18, 1918 மறைவு 5 டிசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இருண்ட கண்டத்தின் விடிவெள்ளி..
கறுப்பின மக்களின் கலங்கரை விளக்கம்…
ஆம்..அழுவதும், தொழுவதும், அடிமைகளாய் அடங்கிக்கிடப்பதும் விதி என்று வீழ்ந்து கிடந்த தென்னாபிரிக்க கறுப்பின மக்களை, எழுவதும், எதிர்த்து நிற்பதும்,தடைகளை தகர்த்து விடுதலை பெறுவதும் காலம் அவர்களுக்கிட்ட கட்டளை என்பதை உணர்த்தி அவர்களின் அடிமை விலங்குடைத்து சுதந்திரக்காற்றை சுவாசிக்க வைத்த நெல்சன் மணே;டேலா என்ற மாபெரும் போரளி, மாபெரும் தலைவர் மறைந்துவிட்டார்.
அந்த மாபெரும் தலைவனின் மறைவையிட்டு தென்னாபிரிக்க மக்கள் மட்டமல்லால், உலக கறுப்பின மக்கள் மட்டுமல்லாமல் உலகில் விடுதலையை நேசிக்கும் அனைத்து இன மக்களும் கலங்கி நிற்கின்றனர்.

1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்த நெல்சன் மண்டேலாவின் முழுப்பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’. 13 குழந்தைகள் கொண்ட
குடும்பத்திலிருந்து முதன் முதலாக பாடசாலைக்குச் சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே படித்து வந்தார். கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, தென்னாபிரிக்கா மற்றும் லண்டன் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941-ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.
கறப்பின மக்கள் பெரும்பான்மையாக வாழும் தென்னாபிரிக்காவை மிகச் சிறுபான்மையாக உள்ள வெள்ளையின நிறவெறி அதிகார வாக்கம் அடக்கியாண்டதை எதிர்த்து நெல்சன் மண்டேலா தனது 21 வது வயதில் போர்கொடி தூக்கினார்;.தன்னுடைய வயதையுடைய கறுப்பின இளைஞர்களை திரட்டி தென்னாபிரிக்காவின் மண்ணின் மைந்தர்களான கறுப்பின மக்களுக்கு ஆக்கிரமிப்பாளராக வந்து குடியேறிய வெள்ளை இனவாதிகள் செய்யும் கொடுமைகளை எதிர்த்துப் போராட வேண்டிய தேவையை உணர்த்தினார்.அடக்குமுறையாளர்களுக்கு அடிபணிந்து வாழ்வதால் மாற்றம் வந்துவிடாதென்பதையும், எதேச்சாதிகாரத்துக்கு அடிபணியாது துணிவுடன் எதிர்த்து நின்று போராடுவதன் மூலம் தான் விடிவை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் அவர் புரியவைத்தார். 
1948 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற புதிய வெள்ளை இனவாதஅரசாங்கம் கறுப்பின மக்களுக்கெதிராக முன்பிருந்த அரசாங்கங்களை விட அதிகளவுக்கு அடக்குமுறையை திணித்தது. மண்டேலா அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து அந்த அரசாங்கத்தின இனஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினார்.
ஆனால் நிறவெறியும் ஒடுக்குமுறையும் எல்லைமீறிச் செல்வதை கண்டு சீற்றம் கொண்ட மண்டேலா முழுநேரமாக அரசியலுக்குள் புகுந்தார். விரைவிலேயே கறுப்பின மக்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான ‘ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
அதுவரை மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டுவந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை நெல்சன் மண்டேலா தலைமையேற்றதும் வெள்ளை நிறவெறி ஆட்சியை எதிர்த்து அறவழி போராட்டங்களை நடத்தும் போராட்ட அமைப்பாக மாற்றினார். அவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதையும் மகக்ள் மத்தியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவதையும் கண்ட வெள்ளை நிறவெறி; அரசாங்கம் 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என்று குற்றம் சாட்டி நெல்சன் மண்டேலாவையும் 150 க்கும் மேற்பட்ட அவரது தோழர்களையும் கைது செய்தது. நீண்ட சட்ட போராட்டத்திற்கும் சர்வதேச அழுதங்களுக்கும் பின்பு 1961ல் அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயற்பட்டார். இதன் காரணமாக 1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960 ம் ஆண்டு; கறுப்பின மக்களுக்கு தனியான கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக மண்டேலா ளூயசிநஎடைடந சார்பெவில் நகரில் ஊர்வலம் ஒன்றை; நடாத்தினர். இந்த ஊர்வலத்தை கலைப்புதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். 
இந்தச் சம்பவம் தென்னாபிரிக்காவில் பெரும் கொந்தழிப்பை ஏற்படுத்திய மட்டுமல்லாமல் நெல்சன் மண்டேலாவின் சிந்தனைப் போக்கிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது
ஆம் உரிமைகளை யாசித்துப் பெறமுடியாது பேராடித்தான் பெற வேண்டும் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்
அது வரை மென்போக்கு அரசில் கட்சியாக இருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆயுதப் போராட்ட விடுதலை அமைப்பாக மாறியது.
ஏற்கனவே லத்தீன் அமெரிக்காவில் சேகுவராவால் நடத்தப்பட்ட அரசுக்கு எதிரான கெரில்லா போர் முறையை ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தேர்ந்தெடுத்தது

1961ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது.அதன் பின் தொடர்ச்சியாக வெள்ளை நிறவெறி அரசாங்கப் படைகள் மீதும் அதன் நிர்வாக கட்டமைப்புகள் மீதும் நடத்தப்பட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களால் தென்பிரிக்க நிறவெறி அரசு ஆட்டங்கண்டது.1961ல் நெல்சன் மண்டேலாவுக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்தது.
ஆனாலும் அவர் தலைமை மறைவாக இருந்து விடதலைப் பேரை வெற்றிகரமாக நடத்தினார்.மண்டேலாவின் எழுச்சி ஆபிரிக்காவை தாண்டி அமெரிக்க ஐரொப்பா மற்றும் ஆசிய கண்டங்களிலும் எதிரொலித்தது..அவரது பேராட்டத்துக்கான ஆதரவுத்தளம் விரிந்தது.
ஆடக்குமுறைக்கு உள்ளான மக்களுக்கும் தங்களின் விடுதலைக்காக பேராடும் மக்களுக்கு எந்த உதவியும் செய்யாத அமெரிக்கா வழக்கப்போல தென்பிரிக்காவில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மனிதஉரிமை மீறலில் ஈடுபடுகிறது என்றும் அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் நெல்சன் மண்டேலா ஒரு பயங்கரவாதி என்றும் பிரகடனப்படுத்தியது.அதேரிக்காவின் நேச நாடுகளும் அதை பின்பற்றின. ஆனால் அவற்றைவிட அதிகமான நாடுகளும் பெரும்பாலான உலக மக்களும் அவரை ஒரு விடுதலைப் போராளியாகவே பார்த்தனர்.

1962ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி மண்டேலா தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினர் அவரையும் அவரது 10 முக்கிய தோழர்களையும் சுற்றிவளைத்து கைதுகைது செய்தனர். அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தது அரசைக் கவிழ்க்க முயன்றது அமைதியைக் குலைத்தது, கலகத்தை உருவாக்கியது ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டன. 1964-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12-ம் திகதி மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.
;உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.
பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்டார். 1988-ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே அவர் சென்றதால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
மண்டேலாவை கைது செய்ததால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் போராட்டம் ஒய்ந்துவிடவில்லை.
அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னியின் தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.
‘மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்’ என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுத்தலைவராக பதவிக்கு வந்த டெக்ளார்க் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.

11.2.1990 அன்று அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெக்ளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.அதன்படியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்..அப்போது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதுமண்டேலாவின் விடுதலையை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன.
1994ம் ஆண்டு மே 10 ந் திகதி அவர் தென்னாப்பிரிக்காவின் முதன் முதல் கறுப்பின அரசுத்தலைவர் ஆனார்.1999 இல் பதவியை விட்டு விலகிய அவர் 2வது முறை அரசுத்தலைவர் பதவிக்கு போட்டியட மறுத்துவிட்டார்.
உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் ‘நேரு சமாதான விருது’ ‘பாரத ரத்னா’ விருது மகாத்மா காந்தி சர்வதேச விருது உட்பல பல சர்வதேச விருகளைப்பெற்ற நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் திகதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.
இன்று நெல்சன் மண்டேலா என்ற மனிதர் மறைந்துவிட்டார்.அவரது உயிர் மூச்சு ஓடங்கிவிட்டது.ஆணால் எழுப்;பிய விடுதலைக்குரல் ஓய்ந்துவிடவில்லை புரட்சித்தீ அணைந்துவிடவில்லை.
ஏனென்றால ;உலகில் இன்னமும் நிறவெறியும் இனவெறியும் ஒழிந்துவிடவில்லை.பாரபட்சமும் பிறப்பைக் கொண்டும் நிறத்தைக் கொண்டும் மனிதனை மனிதம் இழிவுசெய்து கெடுமையும் மறைந்துவிட வில்லை.

11.2.1990ல் நெல்சன் மண்டேலே சிறையிலிருந்து வெளியே வந்த போது ‘இனவெறி நிறவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது என்றும் கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்த வார்த்தைகள் இன்னும் அர்த்த முள்ளவையாக தென்னாபிரிக்க மக்களினது மட்டுமல்லாமல் விடுதலை வேண்டி நிற்கும் உலகிலுள்ள அனைத்து மக்களினதும் குரலாக அது என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
நெல்சன் மண்டேலா என்ற மாமனிதனுக்கு விடுதலைiயும் சமத்துவத்தையும் மாநிடத்தையும் நேசிக்கும் உலக மக்களுடன் கைகோர்த்து நாமும் எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

படித்ததிலிருந்து..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

International human rights day | மனித உரிமைகள் நாள்.

உலக மனித உரிமைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

No automatic alt text available.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 2 people, people smiling
செல் வா கவி
 
 

வைரமுத்து ஐயா அவர்களின் முதல் பாடலான

"இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள், நாணுகிறாள்...
வேறு உடை, பூணுகிறாள்...

என்று ஆரம்பிக்கும் பாடலில் கீழ் வரும் இரண்டு சரணங்களைத் தவிர இன்னுமொரு சரணம் எழுதப்பட்டு பாடலில் இடம் பெறவில்லை. அந்த சரணத்தை வாசித்து பாருங்கள். 

சரணம் :- 1

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்...
ராத்திரி வாசலில் கோலமிடும்...
வானம் இரவுக்கு பாலமிடும்...
பாடும் பறவைகள் தாளமிடும்...
பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ...

சரணம் :- 2

வானம் எனக்கொரு போதி மரம்...
நாளும் எனக்கது சேதி தரும்... 
ஒரு நாள் உலகம் நீதி பெறும்...
திருநாள் நிகழும் தேதி வரும்...
கேள்விகளால், வேள்விகளை...
நான் செய்தேன்...

பாடலில் இடம் பெறாத மூன்றாவது சரணம் :-

இரவும் பகலும் யோசிக்கிறேன்...
என்னையே தினமும் போசிக்கிறேன்...
சாலை மனிதரை வாசிக்கிறேன்...
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்...
பேதங்களே, வேதங்களா கூடாது…

என்று எழுதி இருப்பார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

Image may contain: 1 person, smiling, hat and closeup
Image may contain: flower, plant and nature
Image may contain: 1 person, sunglasses and text
 
 

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 135 ஆவது பிறந்த தினம் 11.12.2017.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாரதியார் இவர்களுக்குகாகவும் வஞ்சகம் செய்யாது ஒரு வரியையாவது எழுதி வைத்து விட்டு போயுள்ளார்..."ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா! "?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எம்.எஸ். சுப்புலட்சுமி நினைவு தினம்: 
11-12-2017  எம்.எஸ். சுப்புலட்சுமி (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி) 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. 1998-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று

எம்.எஸ். சுப்புலட்சுமி (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி) 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. 1998-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். இவர் 2004-ம் அண்டு டிசம்பர் 11-ந்தேதி காலமானார்.

Image may contain: 1 person, smiling, eyeglasses and closeup
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

TTC to be free Sunday in honour of new Line 1 subway extension launch.

 
No automatic alt text available.
No automatic alt text available.
Image may contain: indoor
Thesiyam added 3 new photos.
· ரொறன்ரோ போக்குவரத்துச் சபையின் சேவைகள் இன்று (டிசம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை) முழுவதும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ரொறன்ரோ போக்குவரத்துச் சபையின் புதிய சுரங்கப் பாதை புகையிரத சேவை பொதுமக்கள் பாவனைக்கு இன்று காலை முதல் திறக்கப்படுகின்றது.

இதனைக் கொண்டாடும் விதமாக இன்று முழுவதும் ரொறன்ரோ போக்குவரத்துச் சபையின் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஒன்ராரியோ மாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர் Steven Del Duca இதற்கான அறிவித்தலை நேற்று வெளியிட்டிருந்தார்.

இன்று அதிகாலை 5 மணிக்கு ஆரம்பமான இலவச சேவை நாளை அதிகாலை 5 மணிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஒன்ராரியோ மாகாண அரசாங்கம் இந்த இலவச சேவைக்கான செலவீனங்களைப் பொறுப்பேற்கின்றது.

#ttc
#freeride
#newline1subwayextension

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

2017 ஆம்

 வருடம் விடை பெற இன்னும் இருக்கும் நாட்கள் .

No automatic alt text available.மட்டுமே..?


இந்த வருடமும் கலண்டர் தாளைத் தான் கிளிச்சுட்டு இருந்திருக்கிறன்...

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, மார்ச் 2004 யாழ்ப்பாணத் தமிழர்களைப் பலவந்தமாக கருணா வெளியேற்றியதையடுத்து மட்டுநகரில் வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டுக் கிடந்தன மட்டுநகர், செங்கலடி, களுவாஞ்சிக்குடி, பாண்டிருப்பு, கல்முனை ஆகியவிடங்களில் அமைந்திருந்த யாழ்ப்பாணத்தமிழருக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் அனைத்தும் பூட்டப்படுள்ளன. யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களை கருணா 12 மணிநேர அவகாசத்தில் விரட்டியடித்ததையடுத்து பெருமளவு யாழ்ப்பாணத் தமிழர்கள் உயிர் அச்சத்தில் வடக்கு நோக்கிப் பயணமாகிக்கொண்டிருந்தார்கள்.  முதல் நாளில் மட்டும் குறைந்தது 5000 யாழ்ப்பாணத் தமிழர்கள் வவுனியா, யாழ்ப்பாணம் கொழும்பு ஆகிய மாவட்டங்கள் நோக்கிப் பயணித்ததாக மட்டக்களப்பிலிருந்து சமூக சேவகர் ஒருவர் அறியத் தந்தார். யாழ்ப்பாண தமிழர்களுக்குச் சொந்தமான சொத்துக்களும், வியாபார நிலையங்களும் கருணா குழுவினரால் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  கல்வியங்காட்டுப்பகுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணத் தமிழருக்குச் சொந்தமான ஆடை நெசவு ஆலையும் மூடப்பட்டிருந்தது.  தமக்கு கருணா குழு கொலை அச்சுருத்தல் விடுத்துவருவதால் தாம் வெளியேறுகிறோம் என்று யாழ்ப்பாணத் தமிழர்கள் பொலீஸிடம் கொடுத்த முறையீடுகளைப் பொலீஸார் கண்டுகொள்ளவில்லையென்று அவர்கள் தெரிவித்தனர். பாண்டிருப்பில் வியாபார நிலையம் ஒன்றினை நடத்திவந்த தர்மரத்தினம் எனும் வர்த்தகர் அவரது கடையிலிருந்த அனைத்துப் பண்டங்களும் பலவந்தமாக ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு அவரும் அவரது குடும்பமும் கடத்திச் செல்லப்பட்டு, "இனிமேல் இங்கிருந்தால் உங்களைக் கொல்வோம்" என்று கருணா குழுவினரால் எச்சரிக்கப்பட்டு உடுத்திருந்த உடையுடன் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். மட்டக்களப்பு செங்கலடி ஆகிய பகுதிகளில் யாழ்ப்பாணத்தமிழர்களுக்குச் சொந்தமான பெருமளவு வீடுகளும், வியாபார நிலையங்களும் கருணா குழுவினராலும், அவர்களது ஆதரவாளர்களாலும் சூரையாடப்பட்டபின்னர் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. முஸ்லீம்களுக்குச் சொந்தமான வர்த்தக் நிலையங்கள் மட்டுமே திறந்திருந்ததாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  மட்டக்களப்பில் மீதமிருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்கள் தமது உயிருக்குப் பயந்து அன்றைய பொழுதுகளைக் கழித்ததாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.  
  • நந்தன் இதுக்கும் ஒருக்கா புள்ளி போடப்பா. பயிற்சி மாத்திரமல்ல எப்படி சாமர்த்தியமாக சிங்கள குடியேற்றம் செய்வது போனபோக்கில் இராணுவ முகாம் அமைக்காமல் சிறிய குடியேற்றம் சிறிய விகாரை அப்புறமா பாரிய முகாம் இப்படி குடியேற்றத்துக்கு றோடு போட்டு கொடுத்ததும் மொசாட் தான்.
  • துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, மார்ச் 2004 யாழ்ப்பாணத் தமிழர்களை மட்டக்களப்பிலிருந்து உடனே வெளியேறுமாறு கருணா அறிவிப்பு இன்று மட்டக்களப்பின் சகலவிடங்களிலிம் இருந்து யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும், மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை உடனேயே மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு துரோகி கருணா எச்சரித்திருப்பதால் மட்டக்களப்பில் அசாதாரணமான அச்சநிலையும் பதட்டமும் காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.  கருணா துணை ராணுவக்குழுவுடன் இணைந்து சிங்களப் பொலீஸாரும் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை உபயோகித்து யாழ்ப்பாணத்தமிழர்களை 12 மணிநேரத்திற்குள் மட்டக்களப்பிலிருந்து வெளியேறுமாறும் அல்லது விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தமிழர்களை கடுமையாக விமர்சித்த துண்டுப்பிரசுரங்கள் மட்டக்களப்பு நகரின் பலவிடங்களிலும் ஒட்டப்பட்டதோடு, "யாழ்ப்பாணத்தமிழர்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் பிணிகள், சாபக்கேடுகள்" என்றும் விழித்திருந்தன.  மட்டு நகரில் பல்லாண்டுகளாக அரச அதிகாரிகளாகவும், வர்த்தகர்களாகவும் வாழ்ந்துவந்த பல்லாயிரக்கணக்கானோரை சகல அசையும், அசையா சொத்துக்களையும் அப்படியே விட்டு விட்டு வெறும் 500 ரூபாயோடு மட்டும் 12 மணிநேர அவகாசத்தினுள் வெளியேறவேண்டும் என்கிற எச்சரிக்கை நகர் முழுதும் கருணா குழுவினராலும், சிங்களப் பொலீஸாரினாலும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்தது.
  • துரோகத்தின் நாட்காட்டி : நாள் 29, மார்ச் 2004 கருணா துணை ராணுவக்குழுவுக்கெதிரான சுவரொட்டிகள் மட்டக்களப்பில் காணப்படுகின்றன கருணாவுக்கெதிரான சுவரொட்டிகள் மட்டக்களப்பின் பலவிடங்களிலும் காணக்கூடியதாகவிருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.  மட்டக்களப்பு நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கருணாகுழுவுக்கு எதுவித உதவிகளையும் செய்யவேண்டாம் என்று கோரும் பல சுவரொட்டிக்களைக் காண முடிந்துள்ளது.  பொலீஸார் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததன்படி பெருமளவு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடமாடி வருவதாகவும், இவர்களே இவ்வாறான துண்டுப்பிரசுரங்களையும் சுவரொட்டிகளையும் விநியோகித்துவருவதாகவும் கூறினர். "பலவிடங்களிலும் வெளிப்படையாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் வலம்வருவது தெரிகிறது. ஆனாலும், கருணாகுழுவுக்கெதிரான நடவடிக்கைகளை அவர்கள் உடனேயே ஆரம்பிப்பார்களா என்று சொல்லத் தெரியவில்லை" என்று மட்டக்களப்பிலிருந்து கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் தெரிவித்தார்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.