Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • Replies 3.4k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது முகநூல் எப்படி பலதும் பத்துமாக பிரகாசித்ததோ அது போன்று என்னை பல ஆண்டுகளுக்கு முன் உறுப்பினர் ஆக்கிக் கொண்ட யாழில் பல அம்சங்களையும் பதிவிட எண்ணி உள்ளேன்...அடுத்த பக்கத்தில் எந்தப் பதிவுகளும் பதிய

ஆயிரம் புள்ளினளை அள்ளித் தந்த அனைத்து உறவுகளுக்கும்  மனம் நிறைந்த நன்றிகள். 1,000 ???

பூப்பூவாப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ... (1)      நான் ரசித்த சில மலர்கள்  உங்கள் ரசனைக்காகவும் இங்கே...    1. யூகலிப

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

இன்று இரவுநேர மாற்றம்...

No automatic alt text available.

தகவலுக்கு நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, குமாரசாமி said:

தகவலுக்கு நன்றி.

  இங்கு 25. 03.18 நேர மாற்றம் குமாரசாமி அண்ணா 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tharsan1985 said:

  இங்கு 25. 03.18 நேர மாற்றம் குமாரசாமி அண்ணா 

நல்லகாலம் நான் இன்னும் மணிக்கூட்டிலை கை வைக்கேல்லை....தகவலுக்கு நன்றி.

Link to post
Share on other sites

#ஸ்டீபன்_ஹக்கிங்_காலமானார்

லண்டன்: பிரபல பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் மரணமடைந்தார். அவருக்கு வயது 76.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் பல முக்கிய ஆய்வுகள் செய்து இருக்கிறார்.

இந்த நூற்றாண்டின் அதி புத்திசாலிகளில் மிக முக்கியமானவர் ஹாக்கிங். சர்க்கர நாற்காலியில்இருந்தபடியே பல சாதனைகளை படைத்தவர் ஹாக்கிங்
வாழ்க்கை மாறியது

இவருக்கு 21 வயது இருக்கும் போது மோட்டார் நியூரான் நரம்பியல் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இவரது கழுத்திற்கு கீழே உள்ள பகுதி முழுக்க வேலை செய்யாமல் போனது. மொத்தமாக வீல் சேரில் முடங்கினார் ஹாக்கிங். அவரது ஆயுள் காலம் சில காலமே என்று டாக்டர்கள் கூறி விட்டனர். ஆனால் அதை ஹாக்கிங் முறியடித்தார்.

நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இவர் சாதனைகளில் இறங்கினார். இவரது கண் அசைவுகளை வைத்து என்ன பேசுகிறார் என்று கண்டுபிடிக்க சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு அதுவே அவரது குரலாக மாறியது. அதன்பின் நடந்தது வரலாறு, அறிவியல் சரித்திரம். இவர் செய்த ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் இப்படித்தான் வெளியானது.

மிகவும் சிறந்தவர்

இவரது ஆராய்ச்சிகள், கருத்துக்களை பார்த்த உலக விஞ்ஞானிகள் இவரை சுற்றி சுற்றி வந்தார்கள். இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர் ஹாக்கிங் என்பதில் சந்தேகமே இல்லை.

Image may contain: 1 person
Link to post
Share on other sites

கொசுக்களை ஒழிக்கும் சிட்டுக்குருவி... அவற்றை அழித்தது யார்? #WorldSparrowDay

சிட்டுக்குருவி

‘‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா.. அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதம்மா...’’ என்ற பாடல் கேட்கும் போதெல்லாம் நினைவின் இடுக்கில் இருந்து பட்டெனப் பறக்கும் ஒரு சிட்டுக்குருவி. மனிதர்களோடு மனிதர்களாக கலந்து வாழ்ந்த இந்தச் சின்னஞ்சிறிய உயிர் அழிவின் விளிம்பில் இருக்கிறது. உயிர்பன்மயத்தை உயிர்ப்போடு வைத்திருக்க உயிர்ச்சங்கிலி எத்தனை முக்கியமானது என்பது நமக்குத் தெரியும். ஆனால், மனிதனின் ஒவ்வொரு செயலும் அந்தச் சங்கிலியின் கண்ணிகளைக் காவு வாங்கிக்கொண்டே இருக்கிறது. விளைவு, புவிவெப்பம், நோய்களின் பெருக்கம், சூழல்கேடு, ஆரோக்கியக்கேடு என நமது செயலுக்கான பலன் பலவழிகளில் திரும்ப வந்து துவைத்தெடுக்கிறது. 

கூரைகள், வீடுகளின் முற்றங்கள், இடுக்குகளில் தனக்கான கூடுகளைத் தானே வடிவமைத்துக்கொண்டு காலையில், ‘க்வீச்...க்வீச்..’எனக் குட்டிக் குயிலாகத் துயிலெழுப்பும் சிட்டுக்குருவிகள் சத்தம் இன்றைக்குக் கேட்பது அரிதாகிவிட்டது. கிராமங்களிலேயே இந்த சத்தம் அரிதானபோது நகரங்களில் கேட்கவே வேண்டாம். உயிர்பன்மயத்தில் உடைந்துபோன கண்ணிகளை ஒட்ட வைக்கும் முயற்சியில் உலகம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒருகட்டமாக சிட்டுக்குருவி பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2010-ம் ஆண்டு முதல் இது கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக டெல்லி அரசு இதை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளது.

தென்னைஓலையின் நார் கிழித்து, சின்னஞ்சிறிய அலகால், கூடுகளைப் பின்னும் அழகே அலாதியானது. சிட்டுக்குருவியில் ஒருவகையான தேன்சிட்டு, சோளம், கம்பு ஆகிய தானியப் பயிர்களின் ஒற்றைத் தட்டையில் கூடுகட்டி வசிக்கும். தானியங்கள், சிறிய பூச்சி இனங்கள், சில தாவரங்களின் பூக்கள்தான் சிட்டுக்குருவிகளின் உணவு. சிட்டுகளின் அழிவால், பயிர்களின் மகரந்தச்சேர்க்கை பாதிக்கப்பட்டு, மகசூலும் குறைந்து வருகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். அடைக்கலக்குருவி, ஊர்க்குருவி எனப் பலபெயர்களில் அழைக்கப்படும் சிட்டுக்குருவிகள், காகத்திற்கு அடுத்து மனிதர்களுடன் நெருக்கமாக வாழும் பறவை. இவை அழிய, செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு, குருவிகளின் கருவை சிதைக்கிறது எனச் சொல்லப்பட்டாலும் அவை, இன்னமும் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், செல்போன் டவர்கள் வருவதற்கு முன்பாகவே குருவிகளை விரட்டிவிட்டன நமது செயல்கள்.

சிட்டுக்குருவி

வெளிக்காற்று உள்ளே வராமல் குளிரூட்டப்பட்ட வீடுகள், நெருக்கமான வீடுகள், முற்றம் இல்லாமல் முழுவதுமாக மூடிய வீடுகள், மரங்கள் இல்லாதது போன்ற காரணங்களால்தான் சிட்டுகள் நகரங்களில் இருந்து நகர்ந்துவிட்டன. எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் ‘மெத்தைல் நைட்ரேட்’ காற்றில் கலந்து வளிமண்டலங்களை மாசுபடுத்துகின்றன. இதனால், சிட்டுக்குருவிகளுக்கு உணவாகும் சில பூச்சி இனங்கள் அழிந்துபோகின்றன. இதனால் ஏற்படும் உணவுப்பற்றாக்குறை சிட்டுக்குருவையை நகரங்களை விட்டு விரட்டிவிட்டது. பலசரக்குக் கடைகளில் சிந்திச்சிதறும் தானியங்களை உண்டுவந்தன. பல்பொருள் அங்காடிகள் வந்த பிறகு அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. நகரங்களில் இருப்பதைப் போலவே கிராமப்பகுதிகளிலும் வாழவழியில்லை. கிராமப்பகுதிகளிலும், பயிர்களில் தெளிக்கும் ரசாயனங்கள், குறைந்துப்போன சிறுதானிய சாகுபடி ஆகியவை இந்த இனம் அழிய காரணமாகிவிட்டது. வேறு என்னதான் செய்யும் அந்தச் சின்னஞ்சிறிய உயிரினம்? வாழ்தலுக்காக உணவு கிடைக்கும் பகுதியை நோக்கி நகர்ந்துவிட்டன. கொசுக்களின் முட்டை சிட்டுக்குருவிகளின் விருப்ப உணவு. குருவிகள் இல்லாததால், கொசுக்கள் கொட்டமடிக்கின்றன..நோய்கள் நம்மை வட்டமடிக்கின்றன. 

‘எத்தனை அடிச்சாலும் தாங்குறான்டா’ என வடிவேல் காமெடிபோல, இத்தனை இன்னல்களுக்கும் இடையில் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன சிட்டுக்குருவிகள். அவற்றைக் காக்க வேண்டிய நமது சமூகக் கடமை. முதலில் நமது குழந்தைகளுக்குக் குருவிகளை அறிமுகம் செய்து வையுங்கள். கடிகாரத்திலேயே குருவியின் ஓசையை மணிக்கொரு முறை கேட்டுக்கொண்டிருந்தது நம்மோடு போகட்டும். நம் குழந்தைகளாவது, சிட்டுகளின் சிம்பொனியைக் கேட்கட்டும். இதற்காக நாம் அதிகம் மெனக்கெடவேண்டாம். வாய்ப்பிருப்பவர்கள், வீடுகளில் சிட்டுக்குருவி தங்குவதற்கான வசதியை ஏற்படுத்திக்கொடுங்கள், வீட்டு மொட்டைமாடி, பால்கனி போன்ற இடங்களில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், கொஞ்சம் சிறுதானியங்களையும் வைத்தால் போதும் ஓடோடி வந்து உக்கார்ந்துவிடும் சிட்டுக்குருவி. பழைய பானைகள், அட்டைப்பெட்டிகள் என ஏதாவது ஒன்றில் சிறிது வைக்கோல் நிரப்பி ஒருமூலையில் வைத்து விட்டால், குருவிகள் அதில் குடியேறிவிடும். தற்போது கடைகளில் சிட்டுக்குருவிகளுக்கான கூடுகள் கிடைக்கின்றன. நாம் மனது வைத்தால் நகரங்களிலும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கலாம். அதற்குத் தேவை சிறிது தானியம், சிறிது தண்ணீர், பெரிய மனது.. இவை அனைத்தும் நம்மிடம் இருக்கின்றனதானே..!

http://www.vikatan.com

Image may contain: bird
Image may contain: bird
 • Like 2
Link to post
Share on other sites

இன்று அனைத்துலக கவிதை தினம்.அனைத்து கவிஞர்களுக்கும் மேலும் பல படைப்புக்களை வெளிக் கொண்டு வர உளம் நிறைந்த வாழ்துக்கள்..கவிதை வாசித்தல் எழுதுதல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றினை நோக்கமாகக் கொண்டுள்ளது.

No automatic alt text available.AImage may contain: flower
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலையிலே கூடு கட்டி 

கிளையிலே கால் பரப்பி  --- குஞ்சின் 

வாயிலே இரை தரும் 

வண்ண மலர்ச் சிட்டு......!  

 

சொல்லி வேல இல்ல அருமையான படம்......!  tw_blush:

 • Thanks 1
Link to post
Share on other sites

மார்ச் 21 - உலக வன நாள்


"பூமிப்பந்தின் வெப்பம் அதிகரித்துக் கொண்டேச் செல்கிறது. சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது முயற்சி செய்யுங்கள், இல்லைஎன்றால் எதிர்காலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அநேகம். இப்போதாவது விழித்துகொள்ளுங்கள்" என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அரசும் மக்களும் கவலைப்படுவது போல் தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக மரம் நடுதல் நடைபெற்றாலும் இன்னும் முழுவீச்சில் இல்லை. விழிப்புணர்வு ஊட்டுவதிலேயே காலம் சென்றுக் கொண்டிருக்கிறது...

மரம் வெட்டுபவர்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்க படவேண்டும், . காடுகளில் மரங்கள் வெட்டுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது...வனப்பகுதிகள் காணாமல் போய்க் கொண்டே இருக்கின்றன. மரங்கள் குறைந்ததால் மழை குறைந்து தண்ணீர் கிடைக்காமல் வன விலங்குகள் நாட்டுக்குள் வரத் தொடங்கிவிட்டன...!? வனவிலங்குகள் பயிர்களை சேதபடுத்துகின்றன என்று சொல்ல தெரிந்த நமக்கு, அந்த விலங்குகளின் நிலையில் இருந்து யோசிக்க தெரியவில்லை .

சாலைகள் போடுவதற்கென்று வெட்டப்பட்ட மரங்கள் பல லட்சங்களை தாண்டும். சாலைகள் போட மரத்தை வெட்டியவர்கள் மீண்டும் அங்கே மரத்தை நட்டு பராமரிக்கவேண்டிய பொறுப்பையும் எடுத்துகொண்டால் நன்றாக இருந்திருக்கும். இதை முறைபடுத்தி இருந்தால் இன்று பல லட்சம் மரங்கள் உண்டாயிருக்கும். முக்கிய நாட்களில் மரம் நடுவதை ஒரு விழாவாக கொண்டாடுவதுடன் தங்களது சேவை முடிந்துவிட்டது என இருந்துவிடாமல் தொடர்ந்து அதனை பராமரித்து வளர்க்கும் கடமையும் தங்களுக்கு உண்டு என்பதை மறக்கலாகாது.

உலக வன நாள் இன்று:

மரம் வெட்டாதே என்று சட்டங்கள், கட்டுப்பாடுகள் போட்டாலும் வெட்டுபவர்கள் வெட்டி கொண்டே தான் இருக்கிறார்கள். அதனையும் ஒரு உயிராக பார்க்கும் மனித நேயம் மிக்க மனிதர்கள் குறைந்துவிட்டார்கள்.

உலக வெப்பமயமாதல் குறித்து உலகமே கவலை கொள்ள ஆரம்பித்துவிட்ட இன்றைய நாளில் ஓடி ஓடி மரங்களை வளர்கிறோம், வளர்க்க சொல்லி விழிப்புணர்வு கொடுத்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு மரம் நன்கு வளர குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும், இதை சிறிதும் சிந்திக்காமல் சில நிமிடங்களில் வெட்டி எறிந்து விடுகிறார்கள்.

மரம் வெட்டுவதை பெரிய பாவ செயலாக நம் முன்னோர்கள் சொல்வதுடன் மட்டும் இல்லாமல் நடைமுறையிலும் நடந்து கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை பற்றி படித்த போது மிக பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அத்தகைய சில ஆச்சர்யங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.சங்க பாடல்கள் பல இருக்கின்றன அவற்றில் சில மட்டும் இங்கே...

* நறுந்தண் தகரம் வகுளம் இவற்றைவெறும்புதல் போல் வேண்டாது " (திணைமாலை நூற்றைம்பது 24 )

இந்த பாடலில் "சுயநலத்திற்காக மரங்களை வெட்டுபவர்கள் எத்தகைய கொடுமை செய்யவும் தயங்க மாட்டார்கள். அத்தகையோரின் வீட்டில் பிறக்கும் பிள்ளைகளும் பிறர் படும் துன்பத்திற்கு வருந்தகூடியவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே அத்தகையோரின் வீட்டு பெண்ணை விரும்புவதும், மணம் முடிப்பதும் சரி இல்லை, இது குறித்து கொஞ்சம் யோசி " எனத் தோழன் ஒருவன் தலைவனுக்கு அறிவுரை கூறுகிறான்.

மரங்களை வெட்டுவதை பற்றி இப்படி சொல்வதை கூட விடுங்க,மரங்களின் நுனி பகுதியை கூட கிள்ளகூடாது. அப்படி கிள்ளுவது அறமற்ற செயல் என்று சொல்லி இருப்பதை என்னவென்று சொல்ல...

நெறிதிரிவார் இன்மையால் இல்லை முறிதிரித்து
கண்டல் அம் மண் தில்லை " (திணைமாலை நூற்றைம்பது 61)

" எம்நாட்டில் அறநெறி தவறி நடப்பவர்கள் எவரும் இல்லையாதலால் கண்டல் சோலைகளில் உள்ள தாழை மரங்களின் நுனிப்பகுதிகள் முறிந்த காட்சியைக் கூட எங்கும் காண முடியாது " தன் நாட்டின் சிறப்பை பற்றி தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

தாவரங்கள், நீர்நிலைகளின் மதிப்பை உணர்ந்து அதற்கேற்றபடி வாழ்ந்து சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு உணர்த்தி உள்ளனர் பண்டைய தமிழர்கள் !!

அவர்களின் வழி வந்தவர்கள் நாம் , இன்றைய பாஸ்ட் புட் உலகில் நாம் அவற்றையெல்லாம் மறந்து விட்டோம் , உங்கள் அனைவரையும் களத்தில் இறங்கி மரங்களை வளர்க்க சொல்லவில்லை , மரத்தின் அவசியத்தை உணருங்கள் காலம் தன் பணியை செய்யும் .

 • Like 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...

சிலவற்றை சிரித்து கடந்து போ....
சிலவற்றை சிந்தித்து கடந்து போ... இனிய புது விடியல் வணக்கங்கள்...

 • Like 2
Link to post
Share on other sites

விழிப்புணர்வு நாள் (World Autism Awareness Day )
*******************************

புரிந்துகொள்ளப்பட வேண்டிய “ஆட்டிசம்” (Autism)

 

ஆட்டிசம் (Autism) என்றால் என்ன?
ஆட்டிசம் (Autism) பாதிப்பின் அறிகுறிகள் என்னென்ன?
ஆட்டிசம் (Autism) குணப்படுத்த முடியுமா?
ஆட்டிசம் (Autism) இனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பயிற்சிகள் என்னென்ன?
பார்ப்பதற்கு சாதாரண குழந்தைகளைப் போலவே இருக்கும், ஆனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் எவ்வாறு பிள்ளைகளினை வழிகாட்டலாம் எனும் கேள்விகளுக்கு விடையளிக்கும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.


இக்கட்டுரையில் ஆட்டிசம் (Autism) எனும் சொல் Autism spectrum disorder (ASD) மற்றும் autism எனும் ஆங்கில வார்த்தைக்கு பதிலாகவே பயன்படுத்தப்படுகின்றது
Autism spectrum disorder (ASD) மற்றும் autism எனும் சொற்களினால் விபரிக்கப்படும் ஆட்டிசம் (Autism) என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு/ அசாதாரண வளர்ச்சி, செயற்பாட்டில் ஏற்படும் அசாதாரண நிலைமை ஆகும். இலங்கையில் ஏறத்தாள 35,000 இற்கு மேற்பட்டவர்கள் ஆட்டிசம் (Autism) குறைபாட்டுடன் இருப்பதாக ஓர் ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது. அமெரிக்காவில் 150 பேரில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளது என ஒரு ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் 20 லட்சம் பேர் ஆட்டிசம் (Autism) குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் ஏறத்தாள 550,000 இற்கு மேற்பட்டவர்கள் இக்குறைபாட்டுடன் இருக்கின்றார்கள். வளர்ச்சியடைந்த மற்றும் மேற்கத்தேய நாடுகளில் வாழும் மக்களிடையே ஆட்டிசம் (Autism) பற்றிய விழிப்புணர்வும் இது பற்றிய அறிவும் காணப்படுகின்ற போதிலும் இலங்கை போன்ற நாடுகளில் இது சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் அறிவு ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றதுஎனலாம் .ஆட்டிசம் (Autism) குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் திகதி உலக ஆட்டிசம் (Autism) விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இது ஒரு குறைபாடுதான் பெற்றோர்களின் சரியான கவனிப்பின் மூலம் அவர்களை திறமைசாலிகளாக மாற்றமுடியும் என்கின்றனர் துறைசார் நிபுணர்கள். தற்போது உலகம் முழுவதும் வெகு வேகமாக அதிகரித்து வரும் குறைபாடுகளில் ஆட்டிசம் (Autism) மிக முக்கியமானது. உலகளவில் ஆட்டிசம் (Autism) குறைபாடால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இலங்கையில் இன் நிலைமை இரண்டு மடங்காகும் அபாயமிருப்பதாக ஓர் ஆய்வு குறிப்பிடுகின்றது.

ஆட்டிசம் (Autism) சம்பந்தமாக பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் வளர்ச்சி அடைந்த நாடுகளில் பல மில்லியன்கணக்கான டொலர்களை ஆட்டிசம் (Autism) சம்பந்தமான ஆராட்சிகளுக்கும் , நலத்திட்டதிட்கும் செலவளிக்கப்படுகின்றன. எனினும் எந்தக் காரணத்தினால் இந்த ஆட்டிசக் குறைபாடு ஏற்படுகிறது என்பது சரியாக கண்டறியப்படாமல் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல குறைகளுடன் இருந்தாலும் ஏதோ ஒரு அதீத திறனுடன் இருப்பார்கள் என்பது மட்டும் தெரிகிறது. உலக வரலாற்றில் ஆட்டிசம் (Autism) உடன் பிறந்த பல குழந்தைகள் பின்நாளில் பல சாதனைகளை நிலைநாட்டிய சாதனையாளர்களாக மாறியிருக்கின்றார்கள் ஆட்டிசம் (Autism) உடனிருக்கும் ஒரு பிள்ளையின் திறனை வெளிக் கொணர்வது சிறந்த பயிற்சியின் மூலமும் பெற்றோர்களின் கவனத்திலுமே உள்ளது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கட்டுப்பாடின்றி காணப்படுவர். ஒதுக்கமாக காணப்படுவார்கள் ,அனைவரிடமும் சகஜமாக பழகாமல் பேசாமல் ஓரிடத்தில் அமராமல் முனுமுனுத்துக்கொண்டோ /சத்தமிட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்த செயல்பாடுகள் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். பொதுவாக தொடர்பாடலில் கஷ்டப்படுவார்கள் மற்றும் அடுத்தவர்கள் சொல்வதனை புரிந்துகொள்வதில் சிரமத்தினை எதிர்கொள்வார்கள். Children with autism have trouble communicating. They have trouble understanding what other people think and feel. This makes it very hard for them to express themselves either with words or through gestures, facial expressions, and touch.

ஆட்டிசம் (Autism) இனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளது பெற்றோர்கள் இது பற்றிய போதிய விளக்கத்துடனும் விழிப்புணர்வுடனும் திகழ்வதன் மூலமும் சிறந்த துறைசார் நிபுணர்களின் உதவியுடன் அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ற பயிற்சிகளை கொடுக்கும்போது அவர்களிடம் பெரும் மாற்றங்களை காண முடிகிறது என்கின்றனர் இவர்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள். அப்படி பயிற்சியளித்தால் அவர்களிடம் ஒளிந்திருக்கும் அதீத திறன்களைக் கண்டறிய முடிகிறது என்கின்றனர்.

EUj8zdl.jpg?1

aXyHW90.jpg?1

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலமே அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறனைக் கண்டுகொள்ள முடியும் என்கின்றனர் இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள். ஆட்டிசம் (Autism) பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறனுடன் காணப்படுகிறார்கள். பேசும்/ உரையாடும் பயிற்சி, பழகும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் மூலம் இவர்களின் குறைகளை ஓரளவு நிவர்த்தி செய்யமுடியும்.

பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும் பிள்ளையின் வளர்ச்சியிலும் விருத்தியிலும் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்படும். குறிப்பிட்ட மாதத்தில் தாயின் முகம் பார்த்து சிரிப்பது, பேசுவது , கை அசைப்பது , என குறிப்பிட்ட மாதங்களில் இந்த வளர்ச்சி தானாக இருக்கவேண்டும். இதையும் மீறி சில குழந்தைகள் பேசத் தெரியாமல் இருப்பார்கள். தவிர ஆறு மாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் குழந்தை இருத்தல், தாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் இருத்தல், 12 மாதங்களான பின்பும் மழலைச் சப்தங்கள் செய்யாமலிருந்தல், ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் 18 மாதங்களில் பேசினாலும் ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்ப திரும்பச் சொல்லுதல் இதன் ஆரம்ப அறிகுறிகளாகும். விளையாடுவதில் சிக்கல் 18 – 24 மாதங்களில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல், தனியாகவே இருத்தல், கைகளை உதறிக் கொண்டே இருத்தல், ஒரு பொருளையோ, நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை, கதை கேட்பதில் விருப்பமின்மை தூக்கமின்மை, தூங்கும் நேரம் குறைவு, கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும் வலியை உணராதிருத்தல் போன்றவையும் அறிகுறிகளாகும். குழந்தை பிறந்த 24 மாதங்களில் குழந்தை நல நிபுணர் ஒருவரின் ஆலோசனையை பெற்று தேவையான பரிசோதனைகளைமேற்கொண்டால் , குழந்தைக்கு ஆட்டிசம் (Autism) உண்டா, இல்லையா என்பதை அறியலாம்.

ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் அவர்களுக்கான பயிற்சியை எளிதில் தொடங்கிவிடலாம். 2 வயதுக்குள் அடையாளம் கண்டுகொண்டால் குணப்படுத்துவது எளிது என்று துறைசார் நிபுணர்கள் கருதுகின்றனர். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து, சரி செய்ய முடியும். அவர்களது தனித்திறமைகளை கண்டறிந்து, சுயதொழில் கற்றுத்தரலாம். ஆட்டிசம் (Autism) என்பது நோய் அல்ல. அது ஒரு வகை குறைபாடு/மனநிலை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்,” என்கின்றனர் இலங்கையில் பிறக்கும் குழந்தைகளில் 0-3 வயதிற்கு உற்பட்ட குழந்தைகளில் 93 பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு இக்குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இக்குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர். இது மூளை வளர்ச்சி, மனவளர்ச்சி குறைபாடில்லை என்பதை பெற்றோர், சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். நமது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் ஆட்டிசம் (Autism) இற்கு உட்பட்டவர்களாக இல்லையே நாம் ஏன் அவர்களை புரிந்து கொள்ளவேண்டும் ஆட்டிசம் (Autism) பற்றி அறியவேண்டும் எனும் அலட்சியப்போக்கில் இருக்காமல். நாளை எமக்கு பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கு அல்லது நம்மை சார்ந்த குழந்தைகள் ஆட்டிசம் (Autism) இனால் பாதிக்கப்பட்டால் ??? எனவே ஆட்டிசம் (Autism) பற்றிய கட்டுரைகள் வாசிக்கப்படவேண்டும் , ஆடிசம் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்குகளில் பங்குபற்றவேண்டும் ஆட்டிசம் (Autism) உடன் வாழும் பிள்ளைகளும் மக்களும் நிச்சயம் புரிந்துகொள்ளப்படவேண்டும் எனக்கூறி ஆட்டிசம் (Autism) பற்றிய விரிவான கட்டுரையொன்றில் மீண்டும் சிந்திப்போம் .

 

A.R Yasminmubarak
Trainer/Coach/Consultant
(Reading PhD Psychology,(PAU USA)

Image may contain: text
 • Like 1
Link to post
Share on other sites

குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசளிப்போம்!... இன்று உலக சிறுவர் புத்தக தினம்...புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் பழக்கமாகி வரும் நிலையில், சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் உலக சிறுவர் புத்தக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், எழுத்தாளரும், கவிஞருமான ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சென்னின் பிறந்த நாளே உலக சிறுவர் புத்தக தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம், அதுவும் தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மிகக்குறைந்து கொண்டே வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆறாம் / ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியைப் படிக்கத் திணறுவது தெரிய வந்துள்ளது. தமிழில் தான் எத்தனை படைப்புகள், எத்தனை தரமான எழுத்தாளர்கள், எத்தனை அறிவு பொருந்திய விஷயங்கள். தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமன்றி, புத்தகங்களை குழந்தைகள் தொடர்ந்து படிப்பதின் மூலம் இன்றியமையாத பல உன்னத நலன்களை அளிக்க வல்லது. புத்திக்கூர்மை, அறிவு, சமச்சீரான எண்ண ஓட்டம், ஆழ்ந்த உறக்கம், சகிப்புத்தன்மை, எண்ணத்தில் உறுதி போன்ற நலன்களை பெறுகின்றனர். ஜோகன் டிக்கின்ஸ் என்பவர் “broken the hell)” என்ற புத்தகத்தை தேடி, பன்னிரண்டு ஆண்டுகளாக 16,000 கி.மீ க்கு மேலாக அலைந்து திரிந்திருக்கிறார். அந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் டிக்கின்ஸ் குடும்பம் , உறவு, பணம், சந்தோசம் என வாழ்வின் ஒரு அத்தியாயத்தையே தொலைத்திருந்தார். ஆனால் அந்த புத்தகத்தை கண்டுபிடித்த தருணத்தில் உலகையே வென்றவரைப்போல் ஆனந்தப்பட்டார். இந்த மகத்தான பிரதியை அச்சாக்கி, இனிவரும் தலைமுறையினருக்கு கொடுத்துவிடமுடியும் என்பதைவிட வேறென்ன சந்தோசம் இருந்திருக்கும் அவருக்கு வாழ்வில்?

புத்தகங்கள் நம் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிடும். காரல்மார்க்ஸின் ஒரு புத்தகம் உலகவரலாற்றையே மாற்றி இருக்கிறது. திருவள்ளுவரின் திருக்குறள், மானுடப்பண்புகளை உலகெங்கிலும் விதைத்திருக்கிறது. பகவத்கீதை திலகரையும், டால்ஸ்டாயின் ஒரு நூல் மகாத்மாவையும் உலகம் போற்றும் உன்னதத் தலைவர்களாக்கி இருக்கிறது.
ஒரு புத்தகமும், அதன் வாசிப்பும் நமக்கு ஆயிரம் ஆயிரம் கண்களையும் செவிகளையும் கொடுத்து, அறிவின் விசாலப்பாதையில், உலகின் ஏதோ ஒரு மூலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது. மொட்டை மாடியின் குட்டிச்சுவரில் உட்கார்ந்து படித்து கொண்டிருக்கும் நம்மை, விக்கிரமாதித்யன் காலத்திற்கும், ஈழத்தின் போர்ச்சத்தங்களுக்கும் நடுவே தன் அம்மாவைத்தேடி அலையும் குழந்தையின் பரிதவிக்கும் மன நிலைக்கும் கொண்டு சென்றுவிடுகிறது.

நம்மால் போகமுடியாத இடத்திற்கெல்லாம் புத்தகம், அதன் சாளரத்தின் வழியே கூட்டிப்போகும். நம் கைக்கு எட்டும் தூரத்தில் எவரெஸ்ட்டை கொண்டுவந்து நிறுத்தும் , காலுக்கடியில் கங்கையை ஓடவிடும். தேயிலைத்தோட்டங்களில், ஏகாதிபத்தியத்தின் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் எவனோ ஒருவனுக்காக நம்மை தேம்பி தேம்பி அழவைக்கும்.

அடுத்தவர் மீதான அன்பையும், பாசத்தையும் கரிசனத்தையும், சகோதரத்துவத்தையும் விதைக்கும். வாசிப்பின் வாயிலாகவே சேகுவேராவுக்கும் பிடல் காஸ்ட்ரோவுக்கும் சலாம் போட வைக்கும்.
bookreading250.jpgஅலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தபோது, இங்கு எழுதப்பட்ட நூல்களை எடுத்துவரும்படி அந்நாட்டு அறிஞர்கள் கேட்டுகொண்டார்களாம். புத்தகங்களை உருவாக்காத தலைமுறை உலகை மேம்படுத்தாது. புத்தகங்களை வாசிக்க தொடங்கிய பின்புதான் மைனராக இருந்த தலைமுறை மேஜரானது. புத்தகம் புரட்சியை உண்டு பண்ணும். கோடான கோடி மனிதர்களின் இதயங்களில் பட்டாம்பூச்சிகளாக பறக்கவிடும். புத்தகம் ஒரு நல்ல நண்பன். காதல் எப்போதும் கேட்க மட்டுமே செய்யும். நட்பும் புத்தகமும் தான் கொடுக்க மட்டுமே செய்யும்.

படிக்க நேரம் ஒதுக்குவோம். புத்தகத்திற்கு பணம் ஒதுக்குவோம். அப்போதுதான் இந்த உலகம் நம்மை ஒதுக்காமல் இருக்கும். இந்த நாளில், குழந்தைகளுக்கு நல்ல அறிவு சார்ந்த புத்தகங்களை பரிசளித்து அவர்களை படிக்க செய்யலாம். எதிர்கால தலைமுறை வாசிப்பு பழக்கம் இல்லாமல் வளர்வது சமூகத்தை பின்னோக்கி இழுத்துச்சென்றுவிடும். இன்றே உங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை உருவாக்கும் முதல் அடியை எடுத்து வையுங்கள். குழந்தை விரும்பும் ஒரு அழகிய புத்தகத்தை அவர்களுக்கு பரிசளியுங்கள்.

Image may contain: 2 people, people sitting
 • Like 2
Link to post
Share on other sites

வாக்கினிலே இனிமை வேண்டும்...!

கடும் அலை மோதலிலும் -- அசையாது 
கரும் பாறை. 

மண் உரசி நடக்கையிலும் -- நசுங்காது 
மயில் தோகை. 

சுடும் கோடை வெய்யிலிலும் -- கருகாது 
நெடு ம‌ர‌ம். 

விழும் ப‌னி வேளையிலும் -- சுருங்காது 
மலர் கூட்டம். 

சீறும் காற்றின் வேகத்திலும் -- க‌லையாது 
குருவிக் கூடு. 

சிந்தும் மழை நீரிலும் -- சிதையாது 
சிலந்தி வலை. 

ஆனால் ...

சொல் ஒரு சொல்லில்
சிதைந்திடும் ந‌ம் ம‌ன‌ம் !


படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்..

Image may contain: plant and outdoor
 • Like 1
Link to post
Share on other sites

ஊக்கம் என்பது என்ன? ஒவ்வொரு மனிதனும் படைக்கப் படுகையில் அளவற்ற ஆற்றலுடனும், அறிவுடனும்தான் படைக்கப்படுகிறான். ஆனால், அவற்றைப் பயன்படுத்தும் விதத்தில்தான் வேறுபாடு உண்டாகிறது. ஊக்கமுடையவன் உயர்கிறான்; ஊக்கமற்றவன் வீழ்கிறான்.
உலகின் சாதனையாளர்கள் எல்லோரையும் பட்டியலிடுங்கள். அவர்களது வாழ்க்கையின் பொதுவான அம்சங்களைக் கவனியுங்கள். அவர்கள் அனைவரும் எடுத்துக்கொண்ட செயலில் எத்தனை தடைகள் இடையில் வந்தாலும் தளர்ந்துவிடாமல் போராடி சாதித்தவர்களாக இருப்பார்கள்.
ஒரு நான்கு வயதுப் பெண்; நிமோனியா சுரத்தால் பீடிக்கப்பட்டதன் காரணமாக அவள் இடது கால் சுரணையை இழந்துவிட்டது. தனது ஒன்பதாம் வயதில் அவள் தனது தாங்கு கட்டைகளை உதறிவிட்டு நடக்கப் பழகத்தொடங்கினாள். தனது 13ம் வயதில் ஓட்டப்பந்தய வீராங்கனையாக வேண்டும் என்று கனவு கண்டாள். பலமுறை கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டாள். ஆனால் மனம் தளரவில்லை. அதன்பின் தான் கலந்துகொண்ட ஒவ்வொரு பந்தயத்திலும் அவள் வெற்றி பெற்றாள். அச்சிறுமிதான் ஒலிம்பிக்கில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை 'வில்மா ருடால்ஃப்'.
இந்தியாவின் ஒரு இளைஞன். அதிகப் படிப்பறிவில்லாதவன். பாரிசவாயுத்தாக்குதலால் கால்கள் செயலிழந்தவன். அவனுக்கு நடனத்தின் மீது தணியாத தாகம். பலமுறை தொலைக்காட்சியில் நடக்கும் நடனப்போட்டிக்கு விண்ணப்பித்தான்; கால்களில்லாமல் எப்படி நடனமாட முடியும் என்று நிராகரிக்கப்பட்டது அவன் விண்ணப்பம்.
சோர்ந்துவிடவில்லை அவன். கடைசியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவன் நடனத்தைப் பார்த்த நடுவர் குழு திகைத்து நின்றது. அக்குழுவினர் 'இந்த நடனத்தை விமரிசிக்கும் தகுதி கூட எங்களுக்கு இல்லை; கால்கள் இல்லாமல் நீங்கள் செய்வ்தை, கால்கள் இருக்கும் எங்களால் செய்ய இயலாது' என்று கூறிப் பரிசு வழங்கினர். அப்போது அந்த வாலிபன் சொன்னான் '" உடல் ஊனம் ஊனமல்ல; மனம் தளர்வதே பெரிய ஊனம்' என்பதே இந்த நாட்டு மக்களுக்கு நான் கூறவிரும்பும் செய்தி"
அந்த இளைஞன் - குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் படேல். அவன் பங்கு பெற்ற நிகழ்ச்சி 'Dance India Dance'.
'Motivation' என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ஊக்கம் ஒருவரிடம் புறக்காரணிகளாலோ, அகக் காரணிகளாலோ தூண்டப்படலாம். புறக்காரணிகளால் ஊக்கமடைவது தற்காலிகமானது. அந்தப் புறக்காரணி சலித்துவிட்டால் ஊக்கக் குறைவு ஏற்பட்டு விடும். உதாரணமாக, ஒருவர் சம்பள உயர்வு, ஊக்கத்தொகை போன்ற புறக்காரணிகளால் தூண்டப்பட்டு ஒரு செயலைச் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய பணத்தேவை தீர்ந்து விட்டால் அவரது ஊக்கம் குறைந்துவிடலாம். ஆனால், தன்முனைப்புடன், அகக்காரணிகளாகிய 'திருப்தி', 'மன மகிழ்ச்சி', 'சாதனையில் விருப்பம்' இவற்றினால் ஒருவர் உந்தப்பட்டு செயல் புரிகையில், அவருக்கு சலிப்பு ஏற்படுவதில்லை. அத்தகையவர்கள் பிறர் பாராட்டவேண்டும், பதவி உயர்வு கிடைக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்துச் செய்வதில்லை. தான் செய்யும் செயலின் நேர்த்தி, தனது மனத்திருப்தி இதையே கருதுவார்கள்.
இது தொடர்பான ஒரு அருமையான கதை. ஒரு சிற்பக் கூடத்தைச் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த ஒருவர் கண்ணில் ஒரே மாதிரியான- ஒத்த (Identical) இரண்டு சிலைகள் கண்ணில் பட்டன. அவர் சிற்பியிடம் கேட்டார், "ஒரே மாதிரி இரண்டு சிலைகள் செய்யும்படி உங்களிடம் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறதா?" சிற்பி பதில் சொன்னார், "இல்லை. ஒரு சிலையில் சிறிய தவறு நேர்ந்துவிட்டது, அதனால்தான் அதே போல் இன்னொன்று செய்துவிட்டேன்."
"இந்தச் சிலையில் குறைபாடு எதுவும் தெரியவில்லையே!" என்று மீண்டும் கேட்டார் பார்வையாளர். "மூக்கின் அருகில் பாருங்கள். மிகச்சிறிய மூளி ஏற்பட்டிருக்கிறது" இது சிற்பியின் பதில். "இதை எங்கே வைக்கப்போகிறார்கள்?" அடுத்த கேள்வி பிறந்தது பார்வையாளரிடமிருந்து. "கோயிலில் இருபதடிப் பீடத்தின்மீது இதை வைக்கப் போகிறார்கள்."
"அடக்கடவுளே! அவ்வளவு உயரத்தில் இருக்கும் சிலையில் இருக்கும் இச்சிறிய குறைபாடு யாருக்குத் தெரியப்போகிறது? நீங்கள் ஏன் இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டு இன்னொன்று செய்ய வேண்டும்?" பார்வையாளர் வியந்தார்.
சிற்பி ஒரு தெய்வீகப் புன்னகையுடன் சொன்னார், "அந்தக் குறைபாடு எனக்குத் தெரியும்" என்று.
தனது வேலையின் நேர்த்தியில் எத்தனை ஈடுபாடு அந்தச் சிற்பிக்கு! இத்தகையவர்களுடைய ஊக்கம் 'ஆத்மதிருப்தி'யால் உந்தப்படுகிறது. எனவே சிறந்த ஆக்கமும் உண்டாகிறது.
இதைத்தான் வள்ளுவர் சொல்கிறார்
'ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையான் உழை.' (ஊக்கமுடைமை - குறள் எண் - 594)
ஊக்கம் உடையவன் யாரோ அவனைத்தேடிக்கொண்டு, உயர்வு செல்லும் என்று சொல்லும் அவர் அடுத்த குறளிலேயே
'வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.' (ஊக்கமுடைமை - குறள் எண் - 595) 
என்றும் வாழ்வில் உயரும் வழியை வரையறுத்துவிடுகிறார்.
கிராமங்களில் வாழ்த்துகையில் 'எண்ணம்போல் வாழ்' என்று வாழ்த்தும் வழக்கம் உண்டு. திருக்குறளும் அதைத்தான் சொல்கிறது. தாமரைத்தண்டின் நீளம் நீர்மட்டத்தினைப் பொறுத்து மாறுவது போல், மக்களது உயர்வும் அவர்கள் மனத்தின் திண்மையை, எண்ணங்களை, ஊக்கத்தைப் பொறுத்ததுதான் என்று அடித்துச் சொல்கிறார் வள்ளுவர்.
ஊக்கமுடைமை அதிகாரத்தின் துவக்கத்திலேயே 
'உடையர் எனப்படுவ தூக்கம் அஃதிலார் 
உடைய துடையரோ மற்று. (குறள் எண் - 591)
ஊக்கம் உடையவரே உண்மையில் எதுவும் உடையவர். அதில்லாதவர்கள் மற்றெந்த உடைமைகளை உடையவர்களாக இருப்பினும் அவர்கள் ஏதுமற்றவர்களாகவே கருதப்படுவர் என்று ஒரே போடாகப் போட்டுவிடுகிறார். ஆம். தன் முனைப்புடன் செயலாற்றுபவர்கள் 'ஊழையும் உப்பக்கம் காணக்கூடியவர்கள்' அல்லவா? ஊக்கமின்றி, தான் தொடங்கிய செயல்களைப் பாதியில் விட்டுவிடுபவர்கள் எப்படி தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளவும், வாழ்வில் உயரவும் முடியும்?
'உடலுக்கு உணவு போன்றது மனதுக்கு ஊக்கம். ஒரு முறை மட்டும் உட்கொண்டால் போதாது, தொடர்ந்து மேலும் மேலும் தன்னைத் தானே உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கவேண்டும். அப்பொழுதுதான், நாம் மேலும் மேலும் பயணப்படமுடியும்' - இது பீட்டர் டேவிஸ் என்ற அறிஞரின் வாக்கு.
ஒரு அருமையான ஜப்பானியப் பொன்மொழி - "If anybody can do it, you also can do it. If nobody can do it, then you must do it." இதை அந்த நாட்டினர் அனைவரும் பின்பற்றுவதால்தான், ஹிரோஷிமா, நாகசாகியில் ஏற்பட்ட பெருநாசத்திற்குப் பின்னும் உலகின் அந்த நாடு தலை நிமிர்ந்து நிற்கின்றது அல்லவா?
ஒரு நாடே ஒட்டு மொத்தமாக உயரமுடியுமானால், நமது முயற்சியால், நமது ஊக்கத்தால் நாம் உயரமுடியாதா? வள்ளுவரின் வாக்கை நினைவுபடுத்திக்கொள்வோம்.
'முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.'

படித்ததிலிருந்து....

 • Like 1
Link to post
Share on other sites

ஏப்ரல் 7ம் திகதி - உலக சுகாதார தினம் 

1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார அமையம் (World Health Organaisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ம் திகதியினை உலக சுகாதார தினமாக கொண்டாடுகிறோம்.

"அதிக இரத்த அழுத்தம்’’- என்பது இந்தாண்டு இத்தினத்தின் தொனிப்பொருளாகும். உடலில் ரத்த அழுத்தம் அதிகரிப்பது மாரடைப்பு, பக்கவாதம், கிட்னி செயலிழத்தல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைகிறது.

இரத்த அழுதத்தத்தை கட்டுப்படுத்தாமல் விட்டால், பார்வை குறைபாடு, இருதய செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உலகளவில் மூன்று இளைஞர்களில் ஒருவர் அதிக இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்காவில் நடுத்தர நாடுகளில் 40 சதவீத இளைஞர்களுக்கு இந்த பாதிப்பு உள்ளது. இது கட்டுப் படுத்தக்கூடியது.

உப்பு பயன்படுத்துவதை குறைப்பது, சரியான அளவில் உணவு எடுத்துக்கொள்வது, அற்ககோல், புகையிலை பயன்படுத்தாமல் இருப்பது, உடல் எடையை சீராக வைத்தல், தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவை மூலம் இதை கட்டுப்படுத்தலாம்.

***

GK # உலக சுகாதார அமைய தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அமைந்துள்ளது.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.