Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
YOUTUBE-வை தொடர்ந்து முற்றாக முடங்கிய ஜிமெயில் சேவை!

பதிவேற்றுனர்: தமிழினி

திகதி: 14 Dec, 2020
breaking

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான YOUTUBE-வை தொடர்ந்து ஜிமெயில் சேவையும் முற்றாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

சற்றுமுன் இந்த முடக்கம் உலகின் பல நாடுகளிலும் ஏற்பட்டுள்ளதாக பயனாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்த முடக்கம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்கள் எதனையும் YOUTUBE, மற்றும் G.MAIL நிறுவங்களின் தாய் நிறுவனமான கூகுள் நிறுவனம் வெளியிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

 

YOUTUBE-வை தொடர்ந்து முற்றாக முடங்கிய ஜிமெயில் சேவை! (thaarakam.com)

 
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • Replies 3.6k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

First doses of COVID-19 vaccine administered in Toronto hospit

 
image.jpg
Watch LIVE as the first person in Ontario is administered a COVID-19 vaccine.
 
 
image.jpg
The first Pfizer-BioNTech COVID-19 vaccine in Ontario is administered to personal support worker Anita Quidangen.
 
 
  facebook-icon.png  
  twitter-icon.png  
 
  reddit-icon.png  
  share-icon.png  
  print-icon.png  
  email-icon.png  
Chris Herhalt

Chris Herhalt, Web Content Writer, CP24

@_Herhalt


Published Monday, December 14, 2020 5:38AM EST
Last Updated Monday, December 14, 2020 12:22PM EST

A Toronto personal support worker has become the first person in Canada to receive an approved vaccination against the novel coronavirus.

At about noon Monday, Anita Quidangen sat down for her jab at University Health Network’s downtown campus.As she received her shot, the room erupted in applause.

Anita

Quidangen has worked at The Rekai Centres on Sherbourne Street since 1988.

“She has worked tirelessly to care for some of our most vulnerable, both throughout this pandemic and since her first days as a PSW in 1988. Anita has spent years rolling up her sleeves to protect our province, and today, she didn't hesitate to find a new way to do so. She represents the best of the Ontario Spirit,” Ontario Premier Doug Ford said in a statement

The Ontario government says she is the first person to be given an approved dose of the COVID-19 vaccine in the whole country.

Several of Quidangen’s colleagues at Rekai also received their shots on Monday.

They included Lucky Aguila, a registered practical nurse, Derek Thompson, a personal support worker, Cecile Lasco, a personal support workers and Colette Cameron, a registered nurse.

Ontario’s first few thousand doses of the Pfizer-BioNTech COVID-19 vaccine touched down in Hamilton late on Sunday night, and reached Toronto later on Monday morning.

The province initially said the first recipients of the vaccine would be inoculated on Tuesday but the province has now said people will begin receiving the shots on Monday.

A UPS cargo plane carrying the vaccine landed in Hamilton, with some of the first 6,000 doses of vaccine expected to arrive at a UHN hospital site in Toronto around 9 a.m. Monday morning.

Doses of the vaccine will also head to The Ottawa Hospital, but are likely coming from a plane that landed at Mirabel Airport in Montreal due to its proximity.

Infectious diseases specialist Dr. Abdu Sharkawy told CP24 on Monday the doses cannot come soon enough.

"We’re very excited, obviously the vaccine can’t come soon enough, this is giving us a great boost of morale."

He said that even after widespread inoculation begins, people will still have to mask in indoor settings and stay apart from one another.

"(The) vaccine is an insurance policy, it’s not a cure-all, so we’re going to have to be very disciplined."

Ontario reported 1,940 new cases of COVID-19 on Sunday, along with 23 new deaths.

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கனடியர்களுக்கு செலுத்தப்படும் COVID தடுப்பூசிகள்

DECEMBER 15, 2020
COVID-Vaccine-696x392.jpg

கனடாவில் முதல் COVID தடுப்பூசிகள் திங்கள்கிழமை (14) கனடியர்களுக்கு செலுத்தப்பட்டது.

COVID தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு வரலாற்று தருணமான இந்த நிகழ்வு V-Day என விவரிக்கப்படுகின்றது. Quebecகிலும் Ontarioவிலும் Pfizer தடுப்பூசிகள் முன்னுரிமை பெற்ற ஒரு சிறிய குழுவினருக்கு வழங்கப்பட்டது.

Gisele-Levesque-300x200.jpg கனடாவில் முதலாவது தடுப்பூசியைப் பெற்ற 89 வயதான Gisele Levesque

இந்தத் தடுப்பூசியை Quebec நகரத்தில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் வசிக்கும் 89 வயதான Gisele Levesque என்பவர் திங்கள் காலை 11:25 மணியளவில் முதலில் பெற்றுள்ளார். Quebec சுகாதார அமைச்சர் Christian Dube இதனை உறுதிப்படுத்தினார். Ontarioவில் முதல் தடுப்பூசி முன்னணி சுகாதார ஊழியர் Anita Quidangen என்பவருக்கு திங்கள் மதியம் 12 மணியளவில் வழங்கப்பட்டது. Torontoவில் உள்ள பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பின் ஒரு பகுதியான Michener நிறுவனத்தில் அவர் இந்தத் தடுப்பூசியை பெற்றார்.

Anita-Quidangen-300x200.jpg Ontarioவில் முதலாவது தடுப்பூசியைப் பெற்ற Anita Quidangen

இந்த வாரம், 10 மாகாணங்களில் உள்ள 14 தளங்களில் COVID தடுப்பூசிகள் கனடியர்களுக்கு வழங்கப்படுகின்றன. நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் மற்றும் ஊழியர்கள், COVID நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் முன்னணி சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கு இந்தத் தடுப்பூசி முதலில் வழங்கப்படவுள்ளது

Newfoundland and Labradorரில் இந்த வாரம் முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் என மாகாண முதல்வர் Andrew Furey தெரிவித்தார். Prince Edward தீவிலும் இந்த வாரம் முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் என தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Heather Morrison கூறினார். New Brunswickகில் இந்த வாரம் முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் என மாகாண முதல்வர் உறுதிப்படுத்தினார். Nova Scotiaவில் இன்று (15) முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி Robert Strang தெரிவித்தார்.

Manitobaவில் முதலாவது தடுப்பூசி நாளை (16) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Saskatchewanனில் இந்த மாத இறுதியில் முதலாவது தடுப்பூசி வழங்கப்பட ஏற்பாடாகியுள்ளது. Albertaவில் முதலாவது தடுப்பூசி நாளை வழங்கப்படும் என மாகாண சுகாதார அமைச்சர் Tyler Shandro கூறினார். British Columbiaவில் இந்த வார இறுதிக்குள் முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் என மாகாண சுகாதார அதிகாரி Bonnie Henry தெரிவித்தார்.

Nunavut, Northwest பிராந்தியம் ஆகிய இடங்களில் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் முதலாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளன. Yukonனில் இலைதுளிர் காலத்துக்குள் முதலாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளன..

 

தேசியம.கொம்

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தொல்பொருள் என்ற ரீதியில் மக்களின் காணி மட்டக்களப்பில் கபளீகரம்?

 

(வ.சக்திவேல்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் என்ற ரீதியிலும், வனப் பாதுகாப்பு என்ற ரீதியிலும் மக்களின் பூர்வீகக் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு வருவதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர். ஜி.பி.ஆர். தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பிலே இருந்து கொண்டு மட்டக்களப்பு மக்களின் பூர்வீக இடங்களை அடையாளமிடும் அதிகாரிகள்; மாவட்டத்திலுள்ள கிராமசேவையாளர் முதல் அரசாங்க அதிபர் வரையிலான எந்தவித அதிகாரிகளுக்கும் தெரியாமல் கொழும்பிலிருந்து வந்து தொல்பொருட் களுக்குரிய இடம் எனவும், வன இலாகாவுக்குரிய இடம் எனவும் அடையாளப்படுத்தி விட்டுச் செல்வதாகவும் அவ்வாறு அவர்களால் அடையாளப்படுத்தப்படும் இடங்களுக்குள் பொதுமக்கள் யாரையும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்து வதாகவும் பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.

batticaloa-land-7.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங் களை மையப்படுத்தி ஒவ்வொரு பிரதேசத்திலும் தலா 35 இற்கு மேற்பட்ட இடங்கள் இவ்வாறு தொல் பொருட்களுக்குரிய இடங்களாக அடையாளப்படுத்தப்படுவதாக வும் அறிய முடிகின்றது.

batticaloa-land-3.jpg
இது இவ்வாறு இருக்க தமிழ் மக்கள் வருடா வருடம் தமது கால்நடைகளை மேய்த்துவரும் மேச்சல்தரைப் பகுதிகளையும், வனப் பாதுகாப்பு என்ற போர்வையில் உரிய திணைக்களத்தினர் அப்பகுதிகளை அடையாளப்படுத்தி எல்லைக் கற்களை நட்டு உரிய பகுதிக்குள் கால்நடைகளை மேய்க்க வேண்டாம் எனவும், அவ்வாறு தவறி ஒரு கால்நடையாவது அப்பகுதிக்குள் சென்று மேய்ந்தால் அதனைக் கட்டி வைத்து நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான நிதி தண்டப்பணமாக செலுத்தி வருவதாகவும், பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

batticaloa-land-13.jpg
மட்டக்களப்பு மாவட்டம் விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைப் பிரதான தொழிலாகக் கொண்டு மக்கள் தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் தமது வாழ்வாதாரத்துக்கும், வாழ்விடங்களுக்கும் தகுந்த அதிகாரிகள் உந்துசக்தியளித்து, விருத்தி செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும். மாறாக ஜீவனோபாயத்தையும், வாழ்விடங்களையும் இல்லாமல் செய்து அரச சொத்துக்கள் என்ற போர்வையில் காணியை கபளீகரம் செய்வது எந்த வகையில் நியாயமானது? என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

batticaloa-land-12.jpg
மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான மயிலத்தமடு மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினரால் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இப்போது ஐயாயிரம் ஏக்கர் வரை அபகரிக்கப்பட்டு அங்கிருக்கும் தமிழ் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர்.

இது தொடர்பில் கிழக்கை மீட்போம் என மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்காது அரசாங்கத்துக்குப் பயந்து ஒளிந்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 28.11.2020 அன்று மாதவனை, மயிலத்தமடு பகுதிக்குச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பண்ணையாளர்கள் மத்தியில் இவ்வாறு தெரிவித்தனர்.

மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட காணிகளில் பரம்பரை பரம்பரையாக தமது கால்நடைகளை வளர்த்து எமது மாவட்டத்தின் எல்லைகளையும் பாதுகாத்து வருகின்ற பண்ணையாளர்கள் இந்த அரசாங்கத்தின் துணையுடன் பெரும்பான்மைச் சமூகத்தினரால் அடித்து விரட்டப்பட்டு வருகின்றனர்.

இதற்கு முன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் அப்பகுதிக்கு வந்த பெரும்பான்மை யினத்தைச் சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில் 2015ஆம் ஆண்டு நல்லாட்சிக் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசென்று குறித்த அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்தியதோடு, எமது மாவட்டத்தின் எல்லையை விட்டே வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

நல்லாட்சியில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முட்டுக்கொடுத்ததாக சிலர் தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்தார்கள். அந்த முட்டுக்கொடுப்பு எமது மக்களின் சுதந்திரமான செயற்பாட்டுக்கும், எமது மண்ணை பதுகாப்பதுக்குமே என்பதை இப்போது அறிவார்கள்.

அண்மைக்காலமாக வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வருவதோடு பண்ணையாளர்களையும் வெளியேற்றி வருகிறார்கள். இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கூட தீர்மானம் எடுப்பதற்கு இராஜாங்க அமைச்சர், அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் ஆகியோர் அஞ்சுகிறார்கள். இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் இவர்களால் எடுக்க முடியவில்லை.

batticaloa-land-6.jpg

தற்போது கடந்த இரண்டு நாட்களாக அந்தப் பகுதியில் உள்ள பண்ணையாளர்களை வெளியேறுமாறும், மாடுகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் கோரி அந்தப் பகுதியில் சட்ட விரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள்; சிலர் பண்ணையாளர்களை அச்சுறுத்தி வருவதோடு கால்நடைகளையும் துன்புறுத்தி வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இந்த அபகரிப்புக்கு எதிராகவும், பண்ணை யாளர்கள் தாக்குப்படுவதற்கு எதிராகவும் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது. இதற்கான ஆவணங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

batticaloa-land-5.jpeg
பறிபோகும் மட்டக்களப்பின் எல்லைப் பிரதேசம்? அத்து மீறும் பௌத்த பிக்கு… பின்னணியில் யார்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு தலைமையிலான சிலர் அத்துமீறி அபகரித்து துப்புரவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் பண்ணையாளர்கள் இணைந்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளர், ஏறாவூர் பற்று ஈரளக்குளம் கிராம சேவையாளர், கரடியனாறு பொலிஸார் ஆகியோரை சம்பவ இடத்திற்குச் சென்று சந்தித்து கலந்துரையாடியதோடு காணி அபகரிப்பில் ஈடுபடும் பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

batticaloa-land-11.jpg

இதன் போது அம்பாறை மாவட்டத்தின் தெகியத்தகண்டிய பிரதேசத்தில் இருந்து வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் 106 குடும்பங்களுக்கு 5 ஏக்கர் காணி வீதம் விவசாய செய்கைக்குத் தர வேண்டும் என்றும் நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.

குறித்த பகுதிக்குப் பொறுப்பான கிராமசேவையாளர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளர், பொலிஸார் இணைந்து, அவர்களிடம் நீங்கள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து வந்து மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது, உங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் காணி தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

குறிப்பாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் வலய முகாமையாளராக வந்திருந்த அதிகாரி, நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளுக்குள் உள்ள காணிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளீர்கள். இதில் இருந்து வெளியேறுங்கள் நாங்கள் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக அம்பாறை மாவட்டத்துக்குள் காணி தருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அதனை ஏற்றுக்கொள்ளாத காணி அபகரிப்பாளர்களில் ஒருவர் அந்த இடத்திலிருந்து நேரடியாக கிழக்கு மாகாண ஆளுநருடன் தொலைபேசியில் பேசி மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளரிடம் தொலைபேசியைக் கொடுத்து ஆளுநருடன் கலந்துரையாடக் கூறியுள்ளார்.

இதன் போது ஆளுநர் கட்டாயம் குறித்த சிங்களக் குடும்பங்களுக்கு விவசாயம் செய்ய காணி வழங்க வேண்டும் என்று அதிகாரியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் காணி வழங்குவதாக வலய முகாமையாளர் ஆளுநரிடம் தெரிவித்துள்ளார்.

இருந்த போதும் அதற்கு இணங்க மறுப்பு தெரிவித்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் எங்களுக்கு இந்த மாவட்டத்தில்தான் காணி வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன் பின்னர் குறித்த இடத்திலிருந்து அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் வெளியேறியுள்ளனர்.

batticaloa-land-1.jpg

ஆனால் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் அங்கிருந்து வெளியேறியதன் பின்னர் அங்கு இருந்த பலர் காணிகளை அளந்து பிரித்து அடைத்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்களுடன் அண்மையில் கலந்துரையாடியதன் படி குறித்த பகுதிக்குப் பொறுப்பான மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளரை அனுப்பி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம் பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் அவர் கலந்துரையாடியதன் பின்னர் காணி அபகரிப்பாளர்களை சந்தித்தும் பேசியுள்ளார்.

ஆனால் சட்டவிரோதக் காணி அபகரிப்பாளர்களை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியால் வெளியேற்ற முடியவில்லை. இதற்கு பின்னால் அரசியல் நிகழ்சி நிரல் ஒன்று உள்ளதைக் காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கால்நடைகளை மேய்க்கும் மேய்ச்சல் தரைப் பகுதியில் விவசாயம் செய்தால் அதை கால்நடைகள் சென்று சாப்பிடும் போது இரண்டு தரப்புக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் தமிழ், சிங்கள இன முரண்பாடுகள் ஏற்படக்கூடும்.

batticaloa-land-8.jpg
எனவே இந்த விடயம் குறித்து அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்தி தங்களது மேய்ச்சல் தரைக் காணியை காப்பாற்றித் தருமாறு பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது இவ்வாறு இருக்க மயிலத்தமடு, மாதவனை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு, மாதவனைப் பகுதியிலுள்ள பண்ணையாளர்களை 13.12.2020 அன்று மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு மீண்டும் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

மூன்று தலைமுறைகளாக தாங்கள் குறித்த பகுதியில் கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், தற்போது தங்களை அங்கு வரும் பெரும்பான்மையினர் அங்கிருந்து செல்லுமாறு அச்சுறுத்துவதாகவும் மாடு வளர்க்கும் தமது பகுதிகளை உழுது பயிர்செய்வதற்கு முயற்சிப்பதாகவும் பண்ணையாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த விடயத்தில் தங்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் எனவும் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்டத்தில் இவ்வாறு தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தும் இடங்களையும், ஏனைய காணி அபகரிப்புச் செய்யும் இடங்களையும் நான் நேரடியாகச் சென்று பார்வையிட்டு வருகின்றேன். கொழும்பிலிருந்து கொண்டு மட்டக்களப்பு மக்களின் பூர்வீக நிலங்களை மாட்டத்திலுள்ள அரச நிர்வாகத்திற்குத் தெரியாமல் எல்லையிட்டு, கையகப்படுத்துவதென்பதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். தமிழர்களின் பூர்வீக நிலங்கள், வழிபாட்டுத் தலங்கள், மேய்ச்சல் தரைப் பகுதி என்பன அவற்றுள் அடங்குகின்றன. மயிலத்தமடு, மாதவனை ஆகிய பிரதேசங்கள் எமது கால்நடைப் பண்ணையாளர்கள் மேச்சல்தரைக்காக காலாகாலமாக பயன்படுத்தி வருகின்ற ஒரு பகுதியாகும்.

ஆனால் இவ்வாறு காணி அபகரிப்புகளில் ஈடுபடுபவர்களால் அங்குள்ள பண்ணையாளர்களை அச்சுறுத்துவது, மிரட்டுவது, கால்நடைகளைச் சுடுவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இதற்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. இவ்விடயம் குறித்து நாம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றோம் என கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

batticaloa-land-3.jpeg

எது எவ்வாறு அமைந்தாலும் தமது பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து தற்போது வரைக்கும், தமது வாழ்வாதாரத்திற்காகவும், கால்நடை வளர்ப்புக்காகவும், விவசாயத்திற்காகவும், குடியிருப்புகளுக்காகவும், அமைந்துள்ள நிலத்தை அரசியல் அதிகாரத்தின் திணிப்பின் பெயரில் கையகப்படுத்தும் செயற்பாடுகளையும், குறித்த நிலப்பரப்புகளை அரச சொத்துக்கள் என்ற போர்வையில் கையகப்படுத்தி வேறு மாவட்டத்தினருக்குப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளையும், கட்சி பேதங்களைக் கடந்து மக்களிடம் கைகூப்பி வாக்குப்பெற்ற மக்கள் பிரதிநிதிகள் முன்னின்று செயற்பட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையே மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

 

 

தொல்பொருள் என்ற ரீதியில் மக்களின் காணி மட்டக்களப்பில் கபளீகரம்? – Thinakkural.

 

நான் இணைக்கும் தகவல்கள் ஏற்கனவே வேறு எங்காவது இணைகப்பட்டிருநதால் தாரளமாக வெட்டிக் கொள்ளலாம்..✂️

 
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மரபு மாற்றம் அடைந்த புதிய வைரஸ் லண்டனில் வேகமாகப் பரவுகின்றதா?

 • கார்த்திகேசு குமாரதாஸன்

ண்டனின் தென்கிழக்குப் பகுதியில் ‘கொவிட் 19’ வைரஸ் சற்றுத் திரிபடைந்த புதிய வடிவில் பரவிவருவது அவதானிக்கப்பட்டிருக்கிறது என்று பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் Matt Hancock இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

01-8-1.jpg

லண்டனின் சில பகுதிகளில் கடந்த வாரம் தொற்று வீதம் திடீரென அதிகரித்தமைக்கு திரிபடைந்த (new strain of coronavirus) புதிய வைரஸ் காரணமாக இருக்கக் கூடும் என்ற தகவலை அவர் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டிருப் பதாகவும் பிரிட்டிஷ் நிபுணர்கள் தீவிர ஆய்வுகளை நடத்திவருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

லண்டன், கெனற் (Kent) ,எசெக்ஸின் சில பகுதிகள் (Essex) மற்றும் Hertfordshire ஆகிய இடங்களில் திடீரெனத் தொற்றின் வேகம் அதிகரித்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், 60 வெவ்வேறு இடங்களில் சுமார் ஆயிரம் பேரில் இந்தப் புதிய வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார்.

“அது தடுப்பூசிக்குக் கட்டுப்படாத தீவிரம் பெற்ற ஒரு வைரஸா என்பதை இப்போது உறுதியாகக் கூறமுடியாது” என்பதையும் அமைச்சர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவித்தார்.

முதிர்ச்சியடைந்த – மரபு மாற்றம் பெற்ற – இந்த வைரஸ்தான் தொற்றுக்கள் வேகமாகப் பரவுவதற்குக் காரணமா என்பதை இன்னமும் நிச்சயமாகக் கூறமுடியாவிட்டாலும் தடுப்பு நடவடிக்கைகளில் மிக விழிப்பாக இருக்க வேண்டிய அவசியத்தை இது எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

லண்டன் உட்பட பல பகுதிகளிலும் தீவிர மூன்று அடுக்கு(Tier 3) வைரஸ் தடுப்பு நடைமுறைகள் புதன்கிழமை இரவு தொடக்கம் அமுலுக்கு வருகின்றன.

அண்மையில் டென்மார்க்கில் மிங் எனப்படும் சிறிய பண்ணை விலங்குகளில் இருந்து திரிபடைந்த வைரஸ் நூற்றுக்கணக்கானவர்களில் தொற்றி அங்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது.

வைரஸ்கள் பொதுவாக உயிரினங்களில் மாற்றம் அடைவது இயற்கையே. மனிதர்களில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அதிகரிக்க வைரஸ் அதன் தன்மைகளை மாற்றித் தன்னைத் தக்கவைப்பதற்கு முயற்சிக்கும். அதற்காக அது மரபு மாற்றம் பெறுகிறது.இது குறித்து பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதார நிறுவன நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் வைரஸ் பரவலின் ஒரு கட்டத்தில் அதன் மரபுக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்ற தடுப்பு மருந்துகள் மரபு மாற்றம் பெற்ற புதிய வைரஸ்களின் வரவு காரணமாக வலுவிழந்து போகலாம் என்ற அச்சம் அறிவியலாளர்களிடையே நிலவுகின்றது.

படம் : பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் Matt Hancock.

 

மரபு மாற்றம் அடைந்த புதிய வைரஸ் லண்டனில் வேகமாகப் பரவுகின்றதா? – Thinakkural

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கொவிட்-19 குறித்து சமூக ஊடகங்களில் வரும் மூலிகை வைத்தியங்களை முயற்சிக்க வேண்டாம்: உள்நாட்டு மருத்துவ அமைச்சு

 

கொவிட்-19 நோய்த்தொற்றைத் தடுக்க அல்லது வைரஸைக் குணப்படுத்துவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மூலிகை மருந்துகளின் சமையல் குறிப்புகளை பரிசோதனை செய்ய வேண்டாம் என்று தேசிய உள்நாட்டு மருத்துவ அமைச்சகம் இன்று மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

herbal-300x199.jpg
கொவிட்-19 ஐ குணப்படுத்த உதவும் என்று கூறி உள்ளூர் பொருட்களுடன் கூடிய சமையல் குறிப்புகள் பெருமளவில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன என்று தேசிய உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு, கிராம மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இவ்வாறான வைத்தியங்களை முயற்சிக்க வேண்டாம் என்று நாங்கள் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர கூறினார்.

பல உள்நாட்டு மருந்துகள் குறித்த பரிசோதனைகள் தற்போது நடத்தப்பட்டு வருவதாகவும், சோதனைகள் முடிந்ததும் மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

✂️

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி -01 – என்.கே.எஸ். திருச்செல்வம்

 • என்.கே.எஸ்.திருச்செல்வம்

NKST.jpegநேற்று முன்தினம் ஒரு மறக்க முடியாத நாள். இசை மாமேதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தன் உடலை மட்டும் இவ்வுலகில் இருந்து எடுத்துச் சென்ற நாள். ஆனால் நம் நெஞ்சில் நிறைந்த பாடல்களை எமக்கெல்லாம் உயிராகத் தந்து விட்டுச் சென்ற நாள்.

அண்ணன் எஸ்.பி.பி. அவர்களின் பாடல்கள் தொடர்பில் கடந்த 50 வருடங்களாக என் அடி மனதில் தேங்கிக் கிடக்கும் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஏனெனில் அன்று எனது பேச்சாகவும், மூச்சாகவும் இருந்தது அவரின் பாடல்களே.

ஒரு திரையுலகப் பிரபலத்திற்காக நான் அதிக மனவேதனை அடைந்த இரண்டாவது சந்தர்ப்பம் நேற்றைய தினத்தில் நடந்தது.

1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி காலை நான் மிகவும் வேதனையடைந்து, அன்று இரவு மிகவும் மனமகிழ்ச்சி அடைந்த மறக்க முடியாத நாள். அன்று இரண்டு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன.

b-100.jpgஅன்று காலை, என் நெஞ்சில் மானசீக ஆசானாக வீற்றிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அந்த சமயத்தில் நான் அடைந்த துயரம் அளவிட முடியாதது. அன்று இரவே எனக்கு முதல் வாரிசாக என் மகன் பிறந்து, அந்தத் துயரத்தை ஈடுகட்டும் அளவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நாள் அது.

அன்றைய தினத்தின் பின்பு நான் மிகவும் வேதனை அடைந்தது நேற்றைய தினத்தில் தான்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அடுத்த படியாக நான் நேசித்த, என் மனம் கவர்ந்த திரையுலகப் பிரபலம் என்றால் அது எஸ்.பி.பி அவர்கள் தான்.

காரணம் இந்த இருவரும் மானசீகமாக என் வாழ்க்கையோடு இணைந்து என்னை வழி நடத்தியவர்கள்.

சிறுவயது முதல் எம்.ஜி.ஆர் அவர்களின் நல்ல கருத்துக்களை கடைப்பிடித்து வளர்ந்தது போல, எஸ்.பி.பி.அவர்களின் இனிமையான பாடல்களை சிறுவயது முதல் கேட்டு மகிழ்ச்சியாக வளர்ந்தவன் நான்.

எனக்கு விபரம் தெரிந்த வகையில் நான் முதலாவதாக திரைப்படம் பார்த்தது1965 ஆம் ஆண்டு. நான் பார்த்த முதலாவது திரைப்படம் எம்.ஜி.ஆர் அவர்களின் “எங்க வீட்டுப் பிள்ளை”. அப்போது எனக்கு 4 வயது.

இரண்டு ரூபாய் கொடுத்து வாடகைக் காரில் குடும்பத்தோடு எம்மைக் கூட்டிச் சென்று அந்தப் படத்தைப் அப்பா காண்பித்தார்.

b-99.jpgஎங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வரும் “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இந்த ஏழைகள் வேதனை படமாட்டார்” எனும் பாடல் பசு மரத்து ஆணி போல இன்றும் என் மனதில் பதிந்துள்ளது.

என் தந்தையார் ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எனவே மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடப்படும்போது கூட்டிச் சென்று காண்பிப்பார். அன்று எமது தந்தை மட்டுமல்ல நான், எனது அண்ணா, சின்னத் தங்கை எல்லோருமே எம்.ஜி.ஆர் அவர்களின் ரசிகர்கள் ஆனோம்.

அன்று முதல் என் தந்தையார் மூலம் மக்கள் திலகத்தின் பல படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

கன்னித்தாய், அன்பேவா, பறக்கும் பாவை, தனிப்பிறவி, நான் ஆணையிட்டால், அரச கட்டளை, காவல்காரன், ஒளி விளக்கு, கணவன், கண்ணன் என் காதலன், குடியிருந்த கோயில், ரகசிய பொலிஸ் 115, நம்நாடு ஆகிய திரைப்படங்களைப் பார்த்த ஞாபகம் உண்டு.

இப்படங்களைப் பார்த்தபின் அதில் இடம் பெறும் எம்.ஜி.ஆர் பாடல்களை டி.எம்.எஸ் அவர்களின் குரலில் வானொலியில் விரும்பிக் கேட்க ஆசை ஏற்பட்டது.

அன்று திரைப்பட பாடல்களைக் கேட்டது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை-2 எனும் வானொலியில் தான். அன்று இருந்த ஒரே வானொலியும் அதுதான். திரையில் பார்த்த எம்.ஜி.ஆர் பாடல்களை ரசித்துக் கேட்கக் கூடிய ஒரே சாதனம் அதுதான். காலப்போக்கில் அதுவே என் உயிர் நாடியாக மாறியது.

b-98.jpgபாடசாலை நேரம், வீட்டில் படிக்கும் நேரம் தவிர நான் அதிக நேரத்தை செலவிட்டது வானொலிப் பெட்டியின் அருகிலே தான்.

1969 ஆம் ஆண்டு, எனக்கு 8 வயது. இலங்கை வானொலியில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது “புது வெள்ளம்” எனும் நிகழ்ச்சியில் ஒரு புதிய குரலில் அந்த இனிமையான பாடல் ஒலித்தது.

“ஆயிரம் நிலவே வா-ஓராயிரம் நிலவே வா”

பாடல் இடம்பெற்ற படம் – அடிமைப்பெண்.

பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா.

இசை-கே.வி.மகாதேவன்

பாடலை எழுதியவர்-புலமைப்பித்தன்

படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடல் இது. ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்டது.

பத்திரிகைகள் மூலம், பாடசாலை நண்பர்கள் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்ட எம்.ஜி.ஆரின் திரைப்படம் அடிமைப்பெண். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு ஒரு புதியவர் பின்னணி பாடியுள்ளார் என்பது சற்று வியப்பாக இருந்தது. இருந்தாலும் அந்தப் புதிய குரல் ஏதோ இனம் புரியாத வகையில் என் மனதைக் கவர்ந்தது.

எஸ்.பி.பி.அவர்கள் பாடி நான் கேட்ட முதலாவது பாடல் அதுதான்.

ஆனால் இது எஸ்.பி.பி அவர்கள் பாடிய 5 ஆவது தமிழ்த் திரை இசைப்பாடல்.

1969 ஆம் ஆண்டு எஸ். பி.பி.அவர்கள் தமிழ்த் திரை உலகில் அடி எடுத்து வைத்த காலம். அவர் மொத்தமாக 5 பாடல்களைப் பாடியிருந்தார்.

நாளையும்..

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி -01 – என்.கே.எஸ். திருச்செல்வம் – Thinakkural

 

 
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரசுக்கு எதிராக முககவசங்களின் செயல்திறன் – விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள்

face-mask-02.jpgகொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் கொரோனா வைரசுக்கு எதிரான கருவிகள், முக கவசங்கள் பற்றி அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் விஞ்ஞானிகள் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவினர் ஆராய்ச்சி நடத்தி வந்தனர். இந்த ஆராய்ச்சி முடிவுகளை அவர்கள் ஜாமா உள்மருத்துவ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் காலத்தில் பல புதுமையான கருவிகள், முக கவசங்கள் வந்துள்ளன, ஆனாலும் சில முக கவசங்கள்தான் வான்வழி துகள்களை வடிகட்டுவதில் நேர்த்தியானதாகவும், நல்ல செயல்திறன் மிக்கதாகவும் உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர். பல்வேறு வகையிலான நுகர்வோர் தர முக கவசங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட முக கவசங்களின் பாதுகாப்பை மதிப்பிட்டு அதில் தெரிவித்து இருக்கிறார்கள்.

facemask-300x162.jpg

அறுவை சிகிச்சை முக கவசங்கள் 38.5 சதவீத வடிகட்டும் செயல்திறனை கொண்டுள்ளன; அதே நேரத்தில் அவற்றை முறையாக காதுகளில் அணிந்து இறுக்கமாக இருந்தால் அவை 60.3 சதவீதம் அளவுக்கு செயல்திறனை கொண்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

2 அடுக்குகளை கொண்ட நைலான் முக கவசங்கள் 80 சதவீத செயல்திறனை வழங்கும் என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். என் 95 ரெஸ்பிரேட்டர் முக கவசங்களை பொறுத்தமட்டில் அவை அதிகபட்சமாக 90 சதவீதம் வரை பாதுகாப்பை தரும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரசுக்கு எதிராக முககவசங்களின் செயல்திறன் – விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் – Thinakkural

 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் விமானம் ‘மனித தவறுகளின்’ காரணமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளதை நம்பவில்லை – கனடா முக்கிய தகவல்

By
Seelan
 -
2 mins ago
 
Share
 
 
 
625.500.560.350.160.300.053.800.748.160.

உக்ரைன் விமானம் ‘மனித தவறுகளின்’ காரணமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளதை, ‘நான் நம்பவில்லை’ என கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2020 ஜனவரி 8 ஆம் தேதி, உக்ரைன் ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான போயிங் 737 பயணிகள் விமானம், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் பயணித்த 176 பேரும் பலியாகினர். இறந்த 176 பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஈரான், கனடா, உக்ரைன், ஆப்கானிஸ்தான், ஜேர்மனி, சுவீடன் மற்றும் பிரித்தானியா குடிமக்கள் அடங்குவர்.

Advertisement

சில நாட்களுக்கு பின்னர், உக்ரைன் பயணிகள் விமானத்தை தாங்கள் தான் ‘தவறுதலாக’ சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்தது. மேலும், ‘மனித தவறுகளின்’ காரணமாக அதை சுட்டு வீழ்த்திவிட்டதாக கூறியது.

அக்டோபரில், விபத்திற்கான காரணம் குறித்து தங்கள் நாட்டைச் சேர்ந்த தடயவியல் குழு ஆய்வு செய்யும் என கனடா அறிவித்தது.

இந்நிலையில், உக்ரைன் விமானம் ‘மனித தவறுகளின்’ காரணமாக சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் கூறுவதை நான் நம்பவில்லை என கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் Francois-Philippe Champagne தெரிவித்துள்ளார்.

விமானத்தை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டதை நாங்கள் பார்த்தோம். என்னை பொறுத்தவரை இந்த விஷயம் தான் எல்லா வகையான கேள்விகளையும் சந்தேகத்தையும் எழுப்பியது.

உக்ரைன் விமான தாக்குதல் குறித்து கனடா தொடர்ந்து விசாரிக்கும் மற்றும் பொறுப்பானவர்களை அடையாளம் காண இது தொடர்பாக ஈரான் வெளியிட்ட அனைத்து அறிக்கைகளையும் ஆய்வு செய்யும் என்று Francois-Philippe Champagne கூறினார்.

 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டுக்குரிய முதன்மைச் செய்தியாக கோரோணா 19 இடம் பிடித்திருக்கிறது. அதற்கு அடுத்ததாக (அதாவது அமைப்பு ரீதியாக நடைபெற்ற  வன்முறை) சம்பவங்களைப் பற்றிய செய்தியும் இடம் பிடித்திருக்கிறது..கனேடிய ஊடகங்கள் மத்தியில் இடம் பெற்ற கருத்துக் கணிப்பினுடாக இந்த இரண்டு விடையங்களும் தமக்கான இடத்தை பிடித்திருப்பதாக அறியக் கூடியதாக இருக்கிறது..

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி-02 – என்.கே.எஸ். திருச்செல்வம்

 •  என்.கே.எஸ். திருச்செல்வம்

NKS.thiru_.200.png“ஆயிரம் நிலவே வா” பாடலை முதன் முதல் கேட்ட பின்பு இப்பாடல் மீண்டும் இலங்கை வானொலியில் எப்போது ஒளிபரப்பாகும் என அவதானித்துக் கொண்டிருந்தேன். கேட்ட முதல் தடவையே என் மனதில் இடம் பிடித்த இப்பாடலை கேட்டு எழுதிப் பாட வேண்டும் என எண்ணினேன்.

கையில் கொப்பியும், பென்சிலுமாக காத்துக் கொண்டிருந்தேன். பாடல் அடுத்த நாளும் வானொலியில் ஒலித்தது. வானொலியில் பாடலைக் கேட்டுக் கொண்டே அதன் வரிகளை வேகமாக எழுதத் தொடங்கினேன். இரண்டு தடவைகள் கேட்ட பின்பு பாடலை முழுமையாக எழுதி விட்டேன். அன்று முதல் இலங்கை வானொலியில் ஒளிபரப்பாகும் புதிய பாடல்களைக் கேட்டு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது.

இதற்காக இலங்கை வானொலியில் புது வெள்ளம், பொங்கும் பூம்புனல், அன்றும் இன்றும் ஆகிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் நேரத்தைத் தவற விடுவதில்லை.

இசைச் சிகரம் எஸ். பி.பி அவர்கள் தமிழ்த்திரை உலகில் அடி எடுத்து வைத்த 1969 ஆம் ஆண்டில் 5 பாடல்களை மட்டுமே பாடியிருந்தார். அந்த 5 பாடல்களில் அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆருக்காக பாடிய “ஆயிரம் நிலவே வா” பாடல் மிகவும் பிரபல்யம் அடைந்தது. அடிமைப்பெண் திரைப்படம் அந்த ஆண்டு சித்திரை வருடப் பிறப்பின் பின் வெளியிடப்பட்டது.

SPB-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தயாரித்த இந்த பிரமாண்டமான திரைப் படத்தில் மொத்தமாக 6 பாடல்கள்.

அதில் 3 தனிப்பாடல்களை டி.எம்.எஸ் அவர்கள் பாடினார். கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் தனது முதலாவது பாடலைப் பாடினார். பி.சுசீலாவுடன் எஸ்.ஜானகியும் இணைந்து ஒரு பாடலைப் பாடினார்கள்.

98-1.jpgஆனால் படத்தில் இடம்பெற்ற முத்தாய்ப்பான ஒரே ஒரு காதல் டூயட் பாடலை பி.சுசீலா அவர்களுடன் இணைந்து எஸ்.பி.பி அவர்கள் பாடி, அதன் மூலம் மிகவும் பிரபல்யம் ஆகி, தமிழ்த்திரை இசையில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தார்.

அன்றைய கால கட்டத்தில் கொழும்பில் உள்ள கலைமகள் கம்பனி, எம்.கே.பொன்னையாபிள்ளை, சாந்தி புத்தகசாலை ஆகிய இடங்களில் இருந்து தான் பாட்டுப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படும். அவை வெளிவருவதற்கு சில வாரங்கள் ஆகும்.

ஆனால் பாட்டுப் புத்தகங்கள் வெளிவரும் முன்பே வானொலியில் பாடல்களைக் கேட்டு முழுமையாக எழுதி, அவற்றை தாளம் தப்பாமல், ராகத்தோடு பாடும் பழக்கமும் எனக்கு ஏற்பட்டது.

இதனால் நண்பர்கள், உறவினர்கள் புதிய பாடல்களைப் பாடிக்காட்டும்படி என்னிடம் கேட்பார்கள். அவர்கள் விரும்பும் புதிய பாடல்களைப் பாடிக் காட்டி பாராட்டுக்கள் பல பெற்றேன்.

அதன் பின்பு எஸ்.பி.பி.அவர்களின் ஏனைய பாடல்களையும் தேடித்தேடி வானொலியில் கேட்டு எழுதினேன்.

1969 ஆம் ஆண்டு மொத்தமாக 5 பாடல்களை எஸ்.பி.பி.அவர்கள் பாடியிருந்தார்.

முதலாவது பாடலை எம்.எஸ்.வி.அவர்களின் இசையில் “ஹோட்டல் ரம்பா” எனும் திரைப்படத்திற்காகப் எஸ்.பி.பி. அவர்கள் பாடினார். ஆனால் அந்தப்படம் வெளிவரவில்லை.

அவர் பாடிவெளிவந்த முதலாவது பாடல்.

“இயற்கையென்னும் இளையகன்னி”

எம்.எஸ்.வி.அவர்களின் இசையில் “சாந்தி நிலையம்” திரைப்படத்தில் ஜெமினி கணேசனுக்காக பி.சுசீலாவுடன் இணைந்து பாடிய காதல் டூயட் பாடல்.

ஆங்கிலத் திரைக்கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் மொத்தம்

5 பாடல்கள். டி.எம். எஸ் அவர்கள் குழுவினருடன் ஒரு பாடல் பாடினார். பி.சுசீலா அவர்கள் 2 தனிப் பாடல்கள் பாடினார். எல்.ஆர்.ஈஸ்வரி ஒரு பாடலைப் பாடினார். படத்தில் இடம் பெற்ற ஒரே ஒரு டூயட் பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடினார் எஸ்.பி.பி.

பாடலின் ஆரம்பத்தில் இருவரும் இசைத்த ஹம்மிங் நம் இதயத்தை வருடி எங்கோ கொண்டு சென்றது. இலங்கை வானொலியில் கேட்டு கேட்டு நான் ரசித்த இந்தப் பாடலும் பிரபல்யம் அடைந்தது.
இரண்டாவது பாடல்.

“முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு”

இது ஜெமினி கணேசனுக்காக கோதண்டபாணி அவர்களின் இசையில் “குழந்தை உள்ளம்” எனும் திரைப்படத்தில் பி.சுசீலாவுடன் எஸ்.பி.பி.அவர்கள் பாடிய பாடல். இந்தப்பாடலை அன்று இலங்கை வானொலியில் கேட்டதில்லை.

நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் ஜெமினி, வாணிஶ்ரீ ஆகியோரை வைத்து சொந்தமாகத் தயாரித்த படம். படம் ஓடவில்லை.

படத்தில் மொத்தமாக 6 பாடல்கள். டி.எம்.எஸ் அவர்கள் ஒரு பாடலும், பி.சுசீலா 4 பாடல்களும் பாடினர். பி.சுசீலா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுடன் ஒரு பாடல்,

எஸ்.பி.பி.அவர்களுடன் ஒரு பாடல். எஸ்.ஜானகியுடன் ஒரு பாடல், தனியாக ஒரு பாடல் என பாடினார். தனியாக பாடிய “அங்கும் இங்கும் ஒன்றை ரத்தம்” எனும் பாடல் மட்டும் கொஞ்சம் மனதில் நின்றது. எஸ்.பி.பி.பாடிய பாடல் உட்பட ஏனைய பாடல்கள் எதுவும் மக்கள் மத்தியில் வரவில்லை.

94-3.jpgஆனால் பாட்டுப் புத்தகத்தில் பாடல் இருந்தது. பாடலை வானொலியில் கேட்காத படியால் மெட்டு தெரியவில்லை. பலருக்குத் தெரியாத அபூர்வமான SPB பாடிய பாடல்.

பிற்காலத்தில் வீடியோவில் தான் இப்பாடலைப் பார்த்தேன்.

மூன்றாவது பாடல்.

மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்.

புன்னகையின் நினைவாக”

“பால்குடம்” படத்தில் இடம் பெற்ற பாடல். எம்.எஸ்.வி.அவர்களின் இசையில் ஏ.வி.எம்.ராஜனுக்காக பி.சுசீலாவுடன் இணைந்து எஸ்.பி.பி.பாடிய சோகப் பாடல்.

“உனக்காக…அன்பே…நான்… உனக்காக.” எனும் வரிகளில் எஸ்.பி.பி யின் மாயக்குரல் மனதை உருக்கும் சோகமாக ஒலித்தது. இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்க முடிந்தது.

இந்த இரண்டு படங்களும் 1969 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகின.
நான்காவது_பாடல்.

“பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்

கடற்கரை மணலில் இருப்போமா”

97-2.jpg“கன்னிப்பெண்” படத்தில் எம்.எஸ்.வி. அவர்களின் இசையில் எஸ்.ஜானகி அவர்களுடன் இணைந்து பாடிய காதல் டூயட் பாடல். பிற்காலத்தில் சூப்பர் பின்னணிப் பாடல் ஜோடி எனப் புகழப்பட்ட எஸ்.பி.பி- எஸ்.ஜானகி ஆகியோர் முதன் முதலாகப் பாடிய பாடல். படத்தின் இரண்டாவது நாயகனாக நடித்த சிவகுமாருக்காக எஸ்.பி.பி. இப்பாடலைப் பாடினார்.

எஸ். பி.பி. தனது முதலாவது ஆண்டில் பாடிய இந்தப் பாடல் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது.

மொத்தத்தில் SPB அவர்கள் தமிழத் திரையுலகில் காலடி எடுத்து வைத்த முதல் ஆண்டிலே பாடிய 5 பாடல்களில் 4 பாடல்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தன.

நாளையும் ஒலிக்கும்..

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி-02 – என்.கே.எஸ். திருச்செல்வம் – Thinakkural

 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி-03 – என்.கே.எஸ். திருச்செல்வம்

 • என்.கே.எஸ். திருச்செல்வம்

NKS.thiru_.200.pngஇசை அரசன் எஸ்.பி.பி அவர்கள் அறிமுகமான முதல் ஆண்டிலே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் 3 பாடல்களும், கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் ஒரு பாடலும், தெலுங்கு திரைப்பட இசை அமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணி அவர்களின் இசையில் ஒரு பாடலும் பாடினார்.

5 பாடல்கள் மட்டுமே பாடியிருந்தாலும் எஸ்.பி.பி அவர்கள் பட்டி தொட்டி எல்லாம் புகழ் பெற்றிருந்தார். அதற்குக் காரணம் “ஆயிரம் நிலவே வா” பாடல்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் “அடிமைப்பெண்” திரைப்படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடியது. படத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பி அவர்கள் பாடிய “ஆயிரம் நிலவே வா” பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.

அறிமுக ஆண்டான 1969 ல் 5 பாடல்கள் பாடிய எஸ்.பி.பி அவர்களுக்கு அடுத்த ஆண்டான 1970 ல் 14 பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்கள் என்று கூட சொல்லலாம். 14 பாடல்களில் 7 பாடல்கள் அவரின் இசையில் பாடினார்.

SPB-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0இந்த 14 பாடல்களில் ஒன்றைத் தவிர ஏனைய 13 பாடல்களும் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்து அன்றைய இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.

1970 ல் பொங்கல் அன்று “ஏன்” என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளிவந்தது. ரவிச்சந்திரன், லஷ்மி, ஏ.வி.எம்.ராஜன் ஆகியோரின் நடிப்பில் டி.ஆர். ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பாவின் இசையில் 7 பாடல்கள் இடம்பெற்றன. இவற்றில் எஸ்.பி.பி. அவர்களுக்கு இரண்டு பாடல்கள் பாடும் வாய்ப்பை கிடைத்தது. இதிலே ஒரு சிறப்பான பாடல்.

89-14.jpgஅண்ணன், தங்கை ஆகியோர் பாடும் டூயட் பாடல்கள் தமிழில் மிக மிகக் குறைவு என்றே கூறலாம். பாசமலர் பாடலுக்குப் பின் அப்படியான பாடல்கள் வந்ததாக ஞாபகம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு பாடலை ஹம்மிங் பாடகி சரளாவுடன் இணைந்து பாடினார் எஸ்.பி.பி.

வருவாயா_வேல்முருகா_என்_மாளிகை #வாசலிலே

எனும் பாடல் அது. அந்த அண்ணன், தங்கை பாடலை அண்ணன் ஏ.வி.எம். ராஜனுக்காக அனாயாசமாகப் பாடியிருந்தார் எஸ்.பி.பி.

அண்ணனும் தங்கையும் மகிழ்ச்சியோடு முருகனை வீட்டுக்கு அழைப்பது போன்ற வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

அண்ணனுக்கு பெண் பார்க்க-
வரும் அண்ணியை என் கண் பார்க்க
என் தங்கையின் துணையை நான் பார்க்க-
அந்த இன்பத்தை நீ பார்க்க-
நீ வருவாயா வேல்முருகா…

எனும் வரிகள் அண்ணன் தங்கை பாசத்தை படம் பிடித்துக் காட்டின.

இரண்டாவது பாடலை படத்தின் நாயகனான ரவிச்சந்திரனுக்காகப் பாடினார் எஸ்.பி.பி.

#இறைவன்_என்றொரு_கவிஞன்-
#அவன்_படைத்த_கவிதை_மனிதன்
என்ற இந்தப் பாடல் ஒரு தத்துவப் பாடலாக அமைந்தது.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 7 பாடல்களில் டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, சரளா ஆகியோர் 5 பாடல்கள் பாடியிருந்தனர். இருப்பினும் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய பாடல்கள் இரண்டும் பிரபல்யம் அடைந்தன.

அந்த ஆண்டு சித்திரை புதுவருடப்பிறப்பு அன்று வெளியான இரண்டு படங்களில் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய இரண்டு பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

அவற்றில் ஒன்று அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் வசனம் எழுதி, திருமலை மகாலிங்கம் இயக்கிய “காதல் ஜோதி” எனும் திரைப்படம். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், காஞ்சனா ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படத்தில் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் இசையில் 4 பாடல்கள் இடம்பெற்றன.

ரவிச்சந்திரனுக்காக சீர்காழி கோவிந்தராஜன் இரண்டு பாடல்களைப் பாடினார். எல் ஆர்.ஈஸ்வரி ஒரு பாடல். படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து எஸ்.பி.பி. பாடினார். மென்மையான இதய ராகமாக அந்தப் பாடல் ஒலித்தது.

#காதல்_ஜோதி_அணையாதது-

#கண்கண்ட_கனவெல்லாம்_கலையாதது எனும் இப்பாடலின் ஆரம்பத்திலும், இடையிலும் மனதை வருடும் ஹம்மிங் இசையை எஸ்.பி.பி, சுசீலா ஆகிய இருவரும் வழங்கி இருந்தமை பாடலைக் கேட்கும் எம்மை எங்கோ கொண்டு சென்றது. அத்தனை இனிமையான ஹம்மிங்.

இலங்கை வானொலியில் அடிக்கடி இப்பாடல் ஒலித்து சூப்பர் ஹிட் பாடலானது.

எஸ்.பி.பி. அவர்கள் பாடிய அடுத்த பாடல் இடம்பெற்ற படம் “பத்தாம் பசலி”. ஜெமினி கணேசன். நாகேஷ், ராஜஸ்ரீ ஆகியோரை வைத்து கே.பாலசந்தர் இயக்கிய படம். ஜெமினி கணேசன் நாயகனாக நடித்தாலும் நாகேஷ் அவர்களுக்கே படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

90-8.jpgபடத்தில் மொத்தமாக 6 பாடல்கள். எல்லாப் படல்களையும் ஆலங்குடி சோமு எழுத, வி.குமார் இசையமைத்திருந்தார்.

நாகேஷ் அவர்களுக்காக டி.எம்.எஸ். குரலில் 3 பாடல்கள். எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா ஆகியோர் தனியாக ஒவ்வொரு பாடலைப் பாடினார். படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடலை பி.சுஷீலாவுடன் இணைந்து எஸ்.பி.பி. பாடியிருந்தார்.
#ராதை_கேட்பது_என்ன_வரம்-
#ரகசியம்_ஏனோ_முகுந்தனிடம்”

எனும் இப்பாடலை இலங்கை வானொலியில் கேட்க முடியவில்லை. படத்திலும் பாடல் இடம் பெறவில்லையாம். இன்று வரை இந்தப் பாடலை நான் கேட்டதில்லை. இப்படி ஒரு பாடல் உள்ளதென்பதை பாட்டுப் புத்தகத்தின் மூலமே நான் தெரிந்து கொண்டேன்.

நாளையும் ஒலிக்கும்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி-03 – என்.கே.எஸ். திருச்செல்வம் – Thinakkural

 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒன்லைன் கல்வியால் மாணவரிடையே அதிகரிக்கிறது பார்வைக் குறைபாடுகள் – எச்சரிக்கிறார் கண் சிகிச்சை நிபுணர்

 

 

 

 

மாணவர்கள் கணனியை அதிக நேரம் பயன்படுத்துவதால் பார்வைக் கோளாறால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இதற்காக தினமும் 20 தொடக்கம் 30 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இது தொடர்பில் பெற்றோர் அவதானம் செலுத்துவது அவசியம் என்று மாத்தறை பொது மருத்துவமனையின் கண்சிகிச்சை நிபுணர் பிரியங்க இத்தவெல தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒன்லைன் மூலம் கல்வி கற்கும் மாணவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அவசியம் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“இந்த காலப்பகுதியில் அதிகமான மாணவர்கள் வாந்தி, மயக்கம், கண் நோவு, கண்களில் இருந்து கண்ணீர் வடிதல் போன்ற நோய் அறிகுகளுடன் தனிப்பட்ட ரீதியிலும் அரச வைத்தியசாலைக்கும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் ஒன்லைன் கல்வியில் அதிகநேரம் செலவிடுகின்றனர். கணனி அல்லது கைபேசியின் திரையை தொடர்ச்சியாக பார்ப்பதன் காரணமாக பார்வை கோளாறுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் என்னிடம் சிகிச்சைக்கு வரும் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களில் 60 வீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு இந்த பிரச்னை இருக்கின்றது. அத்துடன் சிறுவர் கண்சிகிச்சை நிலையத்துக்கு வரும் பிள்ளைகளில் 80 வீதத்துக்கும் அதிகமானவர்களிடம் இந்த நிலையை காணக்கூடியதாக இருக்கின்றது.

இது நல்ல நிலைமையல்ல. இந்த நோய் அறிகுறியுடன் சில பிள்ளைகளின் செயற்பாடுகளும் மாறி இருக்கின்றன. அவர்களுக்குவழமைக்கு மாறாக அதிகம் கோபம் ஏற்படுகின்றது. ஒன்லைன் கல்வி கற்கும் மாணவர்கள் கணனி அல்லது கைபேசியை தொடர்ச்சியாக பார்க்காமல், 20நிமிடத்துக்கு ஒரு முறை 20 செக்கன்களேனும் ஓய்வெடுப்பது அவசியம். ஆசிரியர்களும் இது தொடர்பில் அறிந்துகொண்டு மாணவர்களுக்கு அதன் பிரகாரம் ஓய்வு வழங்கவேண்டும். அத்துடன் ஒன் லைனில் படிக்கும் முறையை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

ஒன்லைன் கல்வியால் மாணவரிடையே அதிகரிக்கிறது பார்வைக் குறைபாடுகள் – எச்சரிக்கிறார் கண் சிகிச்சை நிபுணர் – Thinakkural

 
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Breaking news..

கோவிட்19 பரவுவதை தடுக்கும் முகமாக இங்கிலாந்திலிருந்து கனடாவுக்கு வருபவர்கள் தடை செய்யப் படுகிறார்கள்.

தேசியம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி-04 – என்.கே.எஸ். திருச்செல்வம்

 • என்.கே.எஸ்.திருச்செல்வம்

NKS.thiru_.200.png

1970 ஆம் ஆண்டு மேமாதம்“வீட்டுக்கு வீடு” எனும் திரைப்படம் வெளியானது. ஜெய்சங்கர், லக்ஷ்மி, முத்துராமன் நடிப்பில் சி.வி.ராஜேந்திரன் இயக்கிய இப்படத்தில் 5 பாடல்கள். கண்ணதாசனின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி. இசையமைத்திருந்தார். பி.சுசீலா, சாயிபாபா ஆகியோர் ஒவ்வொரு தனிப்பாடல்களையும், எல். ஆர்.ஈஸ்வரி இரண்டு தனிப் பாடல்களையும் பாடியிருந்தனர்.

படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடலை எல்.ஆர். ஈஸ்வரியுடன் இணைந்து ஜெய்சங்கருக்காக எஸ்.பி.பி பாடினார்.

“அங்கம் புதுவிதம்-அழகினில் ஒரு விதம்-நங்கை முகம் நவரச நிலவு” எனும் இப்பாடல் ஆரம்பத்தில் ஹம்மிங் இசையுடன் தேனாக ஒலித்தது. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகி ஹிட் ஆனது.

“கற்பனை அற்புதம்-காதலே ஓவியம்-
தொட்டதும் பட்டதும் தோன்றுமே காவியம்”
எனும் முதலாவது சரணத்தின் இறுதியில் வரும் வரிகள், இருவரின் குரலிலும் தேனைக் கலந்து ஊட்டியது. பாடலும் வெற்றி பெற்றது.

SPB-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B01970_ஆம்_ஆண்டு_ஜூலை_மாதம் எஸ்.பி.பி அவர்கள் பாடிய பாடல்களுடன் இரண்டு திரைப் படங்கள் வெளிவந்தன. ஒன்று ஜெய்சங்கர், லக்ஷ்மி நடித்து, சின்னப்பா தேவர் தயாரித்த “மாணவன்”. சங்கர்-கணேஷ் இரட்டையர்களின் இசையில் படத்தில் 4 பாடல்கள். இரண்டு தனிப் பாடல்கள், இரண்டு ஜோடிப் பாடல்கள்.

ஜோடிப் பாடல்களில் ஒன்றை டி.எம்.எஸ். உடன் பி.சுசிலா பாடினார். “வீசிலடிச்சான் குஞ்சுகளா” எனும் இப்பாடலுக்கு மட்டும் உலக நாயகன் கமல் இளைஞனாக முதன் முதல் தோன்றி ஆடிப் பாடினார்.

அடுத்த காதல் ஜோடிப் பாடலை ஜெய்சங்கருக்காக பி.சுசிலாவுடன் இணைந்து எஸ்.பி.பி. பாடினார்.

“கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ” எனும் வாலியின் இப்பாடல் சங்கர்-கணேஷ் இசையில் எஸ்.பி.பி பாடிய முதலாவது பாடலாகும்.

“ஆஹா.. ஹா.. ஆஹா.. ஆஹா..

லல்ல லல்ல லா…லல்ல லல்ல லா ‘

என பாடலின் ஆரம்பத்தில் தொடங்கும் ஹம்மிங் இசை இருவரின் குரலிலும் தித்திப்பாக ஒலித்தது. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த இப்பாடல் எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைத்த பாடல் போலவே இருந்தது. சங்கர்-கணேஷ் இசையமைத்த பாடல் என்பதை நம்ப முடியவில்லை. அத்தனை சிறப்பாக மெட்டமைத்திருந்தனர் சங்கர்-கணேஷ் இரட்டையர்கள்.

பாடலின் இரண்டு சரணங்கள் மட்டுமே வானொலியில் ஒலித்தன. வீடியோவிலும் அப்படியே. இந்த இரண்டு சரணங்களுக்கும் இடையில் இன்னுமொர் சரணம் இருந்ததை பாட்டுப் புத்தகத்தின் மூலமே அறிந்து கொண்டேன்.

“வானவில்லின் ஏழு வண்ணம் கண்ணோடுதான்-

வாங்கி வந்த பாவை இனி உன்னோடுதான்-

நான் தொடத்தான்… நாணமோ

தேன் சுவைத்தேன்… தீருமோ”

என வாலி அவர்கள் எழுதிய அழகிய வரிகளை எஸ்.பி.பி-பி.சுசீலா அவர்களின் குரல்களில் கேட்க முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது.

சாண்டோ சின்னப்பா தேவர் ஒரு தீவிர முருக பக்தர். இதனால் அவரது படங்களுக்கு பாட்டெழுதும் போது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் முருகன் பற்றிய சொற்களை சேர்த்து எழுதுவது வழக்கம். இதே யுக்தியை வாலி அவர்களும் இந்தப்பாடலில் கையாண்டிருந்தார். பாடலின் மூன்றாவது சரணம் அவ்வாறு எழுதப்பட்டது.

“மின்னுகின்ற கன்னிரண்டும் வேலாயுதம்-

மங்கை மனம் மன்னனுக்கு மயில் வாகனம்-

வா பக்கம் வா… நெருங்கி வா-

தா தொட்டுத் தா… தொடர்ந்து தா”

எனும் அந்த வரிகள் எஸ்.பி.பி-சுசீலா ஆகியோரின் குரலில் தேன் சுவையை ஊட்டியது.

90-11.jpg#1970_ஆம்_ஆண்டு_ஜூலை_மாதம் வெளிவந்த அடுத்த திரைப்படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், வாணிஸ்ரீ நடித்த “தலைவன்”. பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையானாயுடுவின் இசையில் 4 பாடல்கள் படத்தில் இடம்பெற்றன. மூன்று ஜோடிப் பாடல்கள். ஒரு தனிப்பாடல். தனிப்பாடல் ஒன்றையும், ஜோடிப்பாடல்கள் இரண்டையும் டி.எம்.எஸ்.அவர்கள் பாடினார்.

படத்தில் ஒரு காதல் டூயட் கனவுப் பாடல். இப்பாடலைப் பாடும் வாய்ப்பு எஸ்.பி.பி. அவர்களுக்குக் கிடைத்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்காக இரண்டாவது பாடலை பி.சுசிலாவுடன் இணைந்து எஸ்.பி.பி பாடினார்.

“நீராளி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில்”

எனும் அப்பாடலை வாலி அவர்கள் எழுதியிருந்தார். இலங்கை வானொலியில் கேட்ட இப்பாடலை அப்போதே திரையிலும் பார்த்தேன்.

திரைப்படம் கருப்பு-வெள்ளையாக இருந்தபடியால் கனவுப் பாடலை நன்றாக ரசிக்க முடியவில்லை. எம். ஜி. ஆர். அவர்கள் எழுபதுகளில் நடித்து வெளிவந்த திரைப்படங்களில் மூன்று படங்கள் மட்டுமே கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டன. அவற்றில் “தலைவன்” படமும் ஒன்று. பாடலின் சரணத்தின் இடையில் எஸ்.பி.பி. அவர்கள் இசைக்கும் ஹம்மிங் இசை இதயத்தை வருடிச் சென்றது.

நாளையும் ஒலிக்கும்

 

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி-04 – என்.கே.எஸ். திருச்செல்வம் – Thinakkural

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Breaking News.

முகக்கவசம் அணியாததால் சிலி ஜனாதிபதிக்கு அபராதம் விதிப்பு! 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆண்டு முடிவிற்கு இன்னும் மிகுதியாய்  இருப்பது பத்தே பத்து நாட்கள் மட்டுமே.✍️

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்று முதல் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்துகனடாவுக்குவரும் விமானங்கள் தடை செய்யப் படுகிறது.

Edited by யாயினி
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, யாயினி said:

இன்று முதல் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்துகனடாவுக்குவரும் விமானங்கள் தடை செய்யப் படுகிறது.

அடுத்து வரும் 72 மணிநேரத்துக்கு என்கிறார்கள் 

https://globalnews.ca/news/7533898/feds-meeting-to-discuss-new-coronavirus-variant-spreading-in-u-k/

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

அடுத்து வரும் 72 மணிநேரத்துக்கு என்கிறார்கள் 

https://globalnews.ca/news/7533898/feds-meeting-to-discuss-new-coronavirus-variant-spreading-in-u-k/

இங்குள்ள தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றில் நான் மேலே குறிப்பிட்டுள்ளது போல் சொல்கிறார்கள்..

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் – பகுதி 5 – என்.கே.எஸ். திருச்செல்வம்

 • என்.கே.எஸ்.திருச்செல்வம்

NKS.thiru_.200.png

1970 ஆம் ஆண்டு மீண்டும் இன்னுமோர் திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக எஸ்.பி.பி அவர்கள் பாடும் வாய்ப்பு கிட்டியது. பழம் பெரும் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர், கலைச்செல்வி ஜெயலலிதா நடித்து வெளிவந்த “தேடி வந்த மாப்பிள்ளை” படத்தில் எம்.எஸ்.வி அவர்களின் இசையில் ஒரு பாடலைப் பாடினார் எஸ்.பி.பி.

திரைப்படத்தில் மொத்தமாக 7 பாடல்கள். இவற்றில் டூயட் பாடல்கள் மூன்று. இந்த மூன்று பாடல்களையும் டி.எம்.எஸ், பி.சுசீலா ஆகியோர் பாடினர். தொடர்ந்து ஜோடிப் பாடல்களைப் பாடி வந்த எஸ்.பி.பி அவர்களுக்கு வழமைக்கு மாறாக இப்படத்தில் தனிப்பாடல் ஒன்றை மட்டுமே பாடும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் தனிப் பாடல்கள் 4. இவற்றில் இரண்டு பாடல்களை டி.எம். எஸ். அவர்களும், ஒரு பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியும் பாட, அடுத்த பாடலை எஸ்.பி.பி. பாடினார்.

SPB-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B013 ஆவது பாடல்

“வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்-

அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்”

எனும் இப்பாடல் வாலி அவர்களின் வரிகளில் தாயைப் போற்றிப் பாடும் பாடலாக எஸ்.பி.பி. அவர்களின் குரலில் ஒலித்தது.

தாய்ப்பாலில் வீரம் கண்டேன்-

தாலாட்டில் தமிழைக் கண்டேன்

உண்ணாமல் இருக்கக் கண்டேன்-

உறங்காமல் விழிக்கக் கண்டேன்

மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ

அது உன்னிடத்தில் நானறிந்த பாடம் அல்லவோ

எனும் வரிகள் மூலம் எஸ்.பி.பி. அவர்கள் தாயைப் போற்றிப் பாடிய முதலாவது பாடலாக இது அமைந்தது.

b-10.jpg1970 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியான “நவக்கிரகம்” திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான பாடலைப் பாடும் வாய்ப்பு எஸ்.பி.பி. அவர்களுக்குக் கிடைத்தது. கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் முத்துராமன், சிவகுமார், லக்ஷ்மி, நாகேஷ் ஆகியோர் நடித்த இப்படத்தில் வாலியின் பாடல்களுக்கு வி.குமார் இசையமைத்திருந்தார்.

படத்தில் மொத்தம் 5 பாடல்கள். நடிகர்களே வசனம் போல பேசும் பாடல்கள் மூன்று. இசையோடு பாடும் பாடல்கள் இரண்டு. அவற்றில் ஒன்றை ஏ.எல்.ராகவன் பாடினார். அடுத்த பாடல் ஒரு காதல் டூயட் பாடல். இப்பாடலை பி.சுசிலாவுடன் இணைந்து சிவகுமாருக்காக எஸ்.பி.பி. பாடினார். பாடினார் என்பதை விட “ஹம்” செய்தார் என்பதே சரி.

அன்றைய கால கட்டத்தில் பாடல்களின் ஆரம்பத்திலும், இடையிலும் பாடகர்கள் ஹம்மிங் இசைப்பது பாடல்களின் இனிமையைக் கூட்டும் ஒரு விடயமாகக் கருதப்பட்டது. அந்த வகையில் எஸ்.பி.பி அவர்களின் குரல் ஹம்மிங் இசைப்பதற்கு பொருத்தமானதாகவும் இருந்தது. இதை இனம் கண்டு கொண்ட இசையமைப்பாளர் எம்.எஸ்.வி அவர்கள் எஸ்.பி.பிக்குக் வாய்ப்புக் கொடுத்த தனது முதல் பாடலிலேயே அவரை ஹம்மிங் இசைக்க வைத்தார். அந்தப்பாடல் “இயற்கையென்னும் இளையக்கன்னி”.

அதன் பின்பு இசையமைப்பாளர்கள் எஸ்.பி.பி பாடிய பல பாடல்களை ஹம்மிங் இசையோடு பாட வைத்தனர். இவர்களை விட ஒரு படி மேலே சென்று ஒரு வித்தியாசமான கோணத்தில் எஸ்.பி.பி. அவர்களைப் பாட வைத்தார் இசையமைப்பாளர் வி.குமார்.

14 ஆவது பாடல்

“உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது”

எனும் அந்தப்பாடல், ஆரம்பத்தில் எஸ்.பி.பி அவர்களின் ஹம்மிங் இசையோடு தொடங்கும். பி.சுசீலா அவர்கள் பாடலைப் பாடுவார். எஸ்.பி.பி பாடலின் இடையிலும், முடிவிலும் ஹம்மிங் மட்டும் இசைத்துக் கொண்டிருப்பார். இப்படி பாடல் வரிகள் எதையும் பாடாமல்

ஆஹாஹா… ஓஹோஹோ… ம்ம்ம்… லல்லல்லா..

என எஸ்.பி.பி அவர்களை ஹம்மிங் மட்டும் பாடவைத்து அந்தப் பாடலை முடித்து புதுமை செய்தார் வி.குமார். எஸ்.பி.பி அவர்களின் ஹம்மிங் இசைக்காக மட்டுமே இந்தப் பாடலை எத்தனை தடவையும் வேண்டுமானாலும் கேட்டகலாம்.

1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த இரண்டு திரைப்படங்களில் எஸ்.பி.பி. அவர்கள் பாடிய மூன்று பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் ஒன்று “காவியத் தலைவி” எனும் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது. ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், செளகார் ஜானகி ஆகியாரை வைத்து கே.பாலச்சந்தர் இயக்கிய படம். கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி இசையமைத்திருந்தார். படத்தில் மொத்தம் 7 பாடல்கள். ஒரு பாடலைத் தவிர ஏனைய பாடல்கள் எல்லாம் இலங்கை வானொலி மூலம் பிரபல்யம் ஆயின. நான்கு தனிப் பாடல்களை பி.சுசீலா பாடினார். பழம்பெரும் நடிகையும், பாடகியுமான எஸ்.வரலக்ஷ்மியுடன் சேர்ந்து சுசீலா மேலும் ஒரு பாடலைப் பாடி இருந்தார். “நேரான நெடுஞ்சாலை” எனும் ஒரு காவியப் பாடலை எம்.எஸ்.வி. பாடினார். படத்தில் இடம் பெற்ற ஒரே ஒரு காதல் டூயட் பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ரவிச்சந்திரனுக்காகப் பாடியிருந்தார் எஸ்.பி.பி அவர்கள்.

15 ஆவது பாடல்

“ஆரம்பம் இன்றே ஆகட்டும்-ஆறேழு நாட்கள் போகட்டும்”

எனும் அப்பாடல் இலங்கை வானொலியில் பல தடவைகள் இனிமையாக ஒலித்ததைக் கேட்டேன். ஆனால் பிற்காலத்தில் இப்பாடலை வீடியோவில் பார்த்தபோது, நான் வானொலியில் கேட்ட பாடலை விட சற்று வித்தியாசமாக இருந்தது. வானொலியில் கேட்ட பாடலில் இடையிசை அதிகமாக இருந்தது. அத்துடன் சரணத்தின் சில வரிகள் இரண்டு தடவைகள் ஒலித்தன. அதனால் பாடல் ஒலிக்கும் நேரம் சற்று அதிகமாக இருந்தது. இப்படி பல பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டுள்ளேன்.

இன்னும் வரும்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் – பகுதி 5 – என்.கே.எஸ். திருச்செல்வம் – Thinakkural

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பழைய புதிய வைரஸ் பரவல் காரணமாக லணடனிலிருந்து வெறும் பிளைட்டை கூட அனுப்பி விடாதீர்கள் என்று கொலன்ட் சொல்லி விட்டதாம்..இது பகிடியாக பகிரப்படும் விடையம் அல்ல 😆நாங்களும் திருமதி. ஜஸ்டின் ருடோவுக்கு வருத்தம் வந்தப்போ சொல்லி இருக்க வேணும்..🤔

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
 

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் – பகுதி-06 -என்.கே.எஸ். திருச்செல்வம்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் – பகுதி-06 -என்.கே.எஸ். திருச்செல்வம்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் – பகுதி-06 -என்.கே.எஸ். திருச்செல்வம்நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் – பகுதி-06

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் – பகுதி-06 -என்.கே.எஸ். திருச்செல்வ

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் – பகுதி-06 -என்.கே.எஸ். திருச்செல்வம்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் – பகுதி-06 -என்.கே.எஸ். திருச்செல்வம்

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் – பகுதி-06 -என்.கே.எஸ். திருச்செல்வமநான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் – ப

 

NKS.thiru_.200.png

1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த திரைப்படம் ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன், சரோஜாதேவி ஆகியோர் நடிப்பில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய “மாலதி”.

இப்படத்தில் மொத்தமாக மூன்று பாடல்கள் இடம் பெற்றிருந்தன. மூன்றும் ஜோடிப் பாடல்கள். இவற்றில் ஒரு பாடலை டி.எம்.எஸ், எல்.ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடினர். ஏனைய இரண்டு பாடல்களையும் பி.சுசிலாவுடன் இணைந்து எஸ்.பி.பி பாடினார். கண்ணதாசன் அவர்களின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைத்திருந்தார்.

“கற்பனையோ கை வந்ததோ-சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்”.

SPB-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0என ஒரு பாடல் தொடங்குகிறது. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த இந்தப் பாடலை அந்தக் காலத்தில் முணுமுணுக்காத இளைஞர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு சூப்பர் ஹிட் பாடலாக இது விளங்கியது. இப்பாடலின் சரணத்தின் இறுதிப்பகுதியில் வரும் “சுகமோ சுகம்-சுகமோ சுகம்-சுகமோ சுகம்” எனும் வரிகள் இருவரின் குரல்களில் மனதை மயக்கின.

17 ஆவது பாடல்

“மாலதி” படத்தில் இடம்பெற்ற அடுத்த பாடல்

“சிடுசிடு சிடுசிடு சிடுசிடு சிடுசிடு எங்கே போவோம்”

எனத் தொடங்கும் பாடல். இப்பாடலிலும் பல்லவியின் இறுதிப் பகுதியில் வரும்

“பச்சைக் கிளிபோல ஊரெங்கும் பறந்து- இச்சை மொழிபேசி எங்கெங்கும் திரிந்து- பார்த்தும் பாராமல் மகிழந்தாலென்ன- பாடித் திரிந்தாலென்ன”

எனும் வரிகள் இருவரின் குரல்களில் சிறப்பாக அமைந்தன.

மாலதி திரைப்படத்தை அந்தக்காலத்தில் நான் பார்க்கவில்லை. பாட்டுப் புத்தகம் மட்டுமே என்னிடம் இருந்தது. எஸ்.பி.பி. அவர்கள் பாடிய இந்த இரண்டு பாடல்களையும் ரவிச்சந்திரனுக்காக பாடியிருந்தார் என நினைத்திருந்தேன். காரணம் பாட்டுப் புத்தகத்தின் முகப்பில் ரவிச்சந்திரன், சரோஜாதேவி ஆகிய இருவரின் படங்களே காணப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் இத்திரைப்படத்தை வீடியோவில் பார்த்தபின் தான் தெரிந்தது எஸ்.பி.பி. அவர்கள் குரல் கொடுத்தது ரவிச்சந்திரனுக்கு அல்ல, ஜெமினி கணேசனுக்கு என்பது.

18 ஆவது பாடல்

1970 ஆம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் எஸ்.பி.பி. அவர்களுக்கு இரண்டு பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படம் “நிலவே நீ சாட்சி”.

உயிருக்குயிராக காதலித்த இருவரில் காதலி சந்தர்ப்ப வசத்தால் மனோதத்துவ டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. இதை அறிந்த காதலன் சுய நினைவை இழக்கிறான். இந்நிலையில் தன் நண்பனின் தம்பியான காதலனை குணப்படுத்த மனோதத்துவ டாக்டர் கடும் முயற்சியை மேற்கொள்கிறார். அப்போது தன் மனைவிதான் நண்பனின் தம்பியின் காதலி என்பதை அறிந்து, தன் மனைவியால் மட்டுமே அவளின் பழைய காதலனுக்கு மீண்டும் சுயநினைவைக் கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்து கணவன் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக கதை அமைந்துள்ளது.

பி. மாதவன் இயக்கத்தில் ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, முத்துராமன் நடித்த இப்படத்தில் கண்ணதாசனின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி. இசையமைத்துள்ளார். படத்தில் உள்ள 5 பாடல்களும் பிரபல்யமானவை. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்கள். இவற்றில் இரண்டு பாடல்களை எஸ்.பி.பி.பாடியுள்ளார். ஒரு பாடலை தனியாகவும், அடுத்த பாடலை பாடகி ராதாவுடன் இணைந்தும் பாடியுள்ளார்.

அந்தக் காலத்து இளைஞர்கள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக இப்பாடல் அமைந்திருந்தது. தான் காதலியை வர்ணித்துப் பாடும் அந்தப் பாடல்.

“பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ ”

பாடலின் ஆரம்பத்தில் எஸ்.பி.பி. அவர்கள் பாடும் ஹம்மிங் வழமை போல மிகவும் இனிமையாக இருந்தது.

“மூன்று கனிச்சாறு ஒன்றாகப் பிழிந்து-

மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து-

போதை மதுவாகப் போனமேனி மலர்ந்து-

பூவை வந்தால் பெண்ணாகப் பிறந்து”

என தன் காதலியை வர்ணிக்கும் இந்த வரிகளை எஸ்.பி.பி.யின் குரலில் மூன்று கனிச்சாற்றையும் பாடலைக் கேட்கும் நாம் ஒன்றாகப் பருகியது போல இனிக்கும். அதிலும் மூன்று சரணங்களிலும் வரும் கடைசி வரிகளான,

“பூவை வந்தால் பெண்ணாகப் பிறந்து”

“காணக் காணவேண்டும் ஒரு கோடி இன்று”

“இன்பம் அவளின்னும் அறியாத கல்வி”

ஆகிய மூன்று வரிகளும் உண்மையில் எத்தனை தடவைகள் கேட்டாலும் அலுக்காதவை..

19 ஆவது பாடல்

அடுத்த பாடலை எஸ்.பி.பி. அவர்கள் பாடகி ராதாவுடன் இணைந்து பாடியிருந்தார். அரிதான சில பாடல்களை மட்டும் பாடிய பாடகி ராதா. படத்தில் மனதை உருக்கும் அந்த உச்சக்கட்டப் பாடல்,

“நிலவே நீ சாட்சி-மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்-

நிலவே நீ சாட்சி ”

காதலர்கள் காதலிக்கும் சமயம் நிலவை சாட்சியாக வைத்து காதலி பாடும் பாடல் இது. படத்தின் உச்சக் கட்டத்தில் காதலனுக்கு பழைய நினைவுகள் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்பதற்காக இன்னொருவனின் மனைவியான காதலி அந்தப் பாடலை மீண்டும் பாடும் போது, காதலன் நினைவு திரும்பி, தான் பழைய காதலியைப் பார்த்த மகிழ்ச்சியில் தானும் தொடர்ந்து அப்பாடலைப் பாடுவதாக அந்தக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பாடல்களையும் ஜெய்சங்கருக்காக எஸ்.பி.பி. பாடியுள்ளார்.

பாடல்கள் தொடரும்..

நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும் – பகுதி-06 -என்.கே.எஸ். திருச்செல்வம் – Thinakkural

 

 
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)