Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 நேசறி தொடக்கம் அஞ்சாம் வகுப்பு வரைக்கும் ரீச்சர்மார்  கைகால் கழுவவேணும் எண்டு சொல்லிக்குடுத்ததை கணக்கெடுக்காத சனத்துக்கு ஆப்பு வைச்சிருக்கு கொரோனா..

இப்பிடி அஞ்சாம் வகுப்பு விசயத்தை கனக்க சொல்லலாம்....சொன்னால் என்னை  விசரன் பைத்தியக்காரன் எண்டுவினம் 🤣

 

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

கொரோனா நல்ல பழக்கங்களையும் கொண்டுவந்துள்ளது தான்.

உண்மையில் எனக்கு வேலையிலிருந்து மேல் இணைத்த கேள்விகள் அடங்கிய  தாழ்   ஒன்று அனுப்பி இருந்தார்கள்.எனக்குரிய கிளையண்ட் ரிடம் இந்தக் கேள்விகள் கேட்டு பதில் இல்லை என்று வந்தால் மட்டுமே நான் வேலைக்கு போக வேண்டும்..நான் போணில்  இந்த கேள்விகளை  கேட்கும் போது   மறு முனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.. இப்படி தான் நிறைய சொல்லாம்....

Link to comment
Share on other sites

 • Replies 3.6k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

உண்மையில் எனக்கு வேலையிலிருந்து மேல் இணைத்த கேள்விகள் அடங்கிய  தாழ்   ஒன்று அனுப்பி இருந்தார்கள்.எனக்குரிய கிளையண்ட் ரிடம் இந்தக் கேள்விகள் கேட்டு பதில் இல்லை என்று வந்தால் மட்டுமே நான் வேலைக்கு போக வேண்டும்..நான் போணில்  இந்த கேள்விகளை  கேட்கும் போது   மறு முனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.. இப்படி தான் நிறைய சொல்லாம்....

மறு முனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அவருக்கு கொரானா வந்தவிட்டது என்று எடுத்து கொண்டு வேலைக்கு போகாமல் விடவேண்டியது தான் 😀

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎-‎01‎-‎2021 at 00:10, யாயினி said:

 

COVID-19 Screening in Effect

இந்தப் பக்கத்தை புரட்டிப் பார்ப்பவர்களுக்கான கோவிட் 19 கேள்விகள் முடிந்தால் பதில் தாருங்கள்..😆✍️..

 

1. Do you currently have a Fever and Dry Cough? yes or no

2. Have you or anyone in your home travelled outside Canada in the last 14 days? yes or no

3. Have you been in contact with anyone who is COVID 19 positive or is under investigation? yes or no

இதற்கு எல்லோரும் உண்மையை சொல்லுவினம் என்று உங்களுக்கு எப்படித் தெரியும் ....தவிர, அறிகுறிகள் இல்லாத நோய் கொண்டவர்கள் உண்மை சொல்ல மாட்டார்கள்/தேவையுமில்லை 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வேலைக்குபுறப்பட்டாச்சு..01.02.2021அனைத்து ஜீவராசிகளுக்கும் இனிய நாளாக அமையட்டும்.😀

இன்றைய நாள் குறிப்பேட்டிலிருந்து..யாயினி

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, யாயினி said:

வேலைக்குபுறப்பட்டாச்சு..01.02.2021அனைத்து ஜீவராசிகளுக்கும் இனிய நாளாக அமையட்டும்.😀

இன்றைய நாள் குறிப்பேட்டிலிருந்து..யாயினி

கொரோனா தவிர்த்து என்று குறிப்பிடுங்கள் அம்மணி .....அது வேற தன்னையும் இந்தப்பிள்ளை வாழ்த்துறா என்டு நினைக்கப் போகுது......!   😁

 • Haha 1
Link to comment
Share on other sites

9 hours ago, suvy said:

கொரோனா தவிர்த்து என்று குறிப்பிடுங்கள் அம்மணி .....அது வேற தன்னையும் இந்தப்பிள்ளை வாழ்த்துறா என்டு நினைக்கப் போகுது......!   😁

அதுக்கு இப்ப தான் முதலாவது பிறந்தநாளும் முடிந்தது, சுவி அண்ணா! 😆

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

படித்தேன்.05.02.2021

 

ஒரு சில தானியங்களைக் தான் கொத்தி தின்று விட்டுப் போகிறது அந்த வாலாட்டிக் குருவி-மொத்த வயல்களையும் தூக்கி கொண்டு போய் விடுமோ என்று உற்றுப்  பார்த்துக் கொண்டு இருக்கிறது சோளக் கொல்லை பொம்மை-
வைக்கோலை சேமிக்கும் குருவிகள் தானியம் சேமிப்பது இல்லை 
பறவைகள் மனிதனை நம்புகின்றன
மனிதன் தான் பறவைகளை நம்புவது இல்லை.

ஜெயதேவன்
நன்றி முகநூல்.

Edited by யாயினி
 • Like 2
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு குப்பை ஏற்றும் வாகனத்தில் படித்தேன்..no farmers .no food.we support farmers.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
 

இரண்டாம் உலகப்போர் வீரன் கப்டன் ரொம் மோரைகாவுகண்ட கொனாBy Thoora-பிப்ரவரி 2, 20EtO42dBXUAQ5FM3.jpg?resize=800%2C450&ssl

PIC – Twitter

இரண்டாம் உலகப்போர் வீரன் கப்டன் ரொம் மோர்(Captain Sir Tom Moore) கோவிட் நுண்மிப் பெருந்தொற்றுக் காரணமாக இன்று தனது 100-வது அகவையில் காலமானார்.

EtIF5zNXIAADzj-.jpg?resize=800%2C605&ssl

கோவிட் தொற்றின் முதற் காலப்பகுதியில் பல முன்னிலை மருத்துவக் களப் பணியாளர்கள் பிரித்தானியாவில் உயிரிழந்ததைத் தொடர்ந்தும், கடந்த ஆண்டு அங்கு முற்றான முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவப் பணியாளர்களுக்காக சுமார் 33 மில்லியன் பவுண்ட் நிதியை திரட்டிய மனிதநேயம் மிக்க பெருமனிதராக கப்டன் ரொம் மோர் மக்கள் மனங்களில் பெருமை பெற்றுள்ளார்.

kuviran.png?resize=800%2C450&ssl=1

பிரித்தானியாவின் தேசிய சுகாதாரத்துறைக்கு நிதி திரட்டும் வண்ணம் தனது வீட்டுத் தோட்டத்தை 100 முறை சுற்றி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டு வந்தார். இதனை முன்னிட்டு பிரித்தானியாவின் மகாராணியார் இரண்டாம் எலிசெபெத் கடந்த ஜூலை மாதம் அவருக்கு பெருமதிப்பளிப்புச் செய்திருந்தார்.
பல ஆண்டுகாலமாக புற்றுநோய்க்காக மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த கப்டன் மோர், நிமோனியாவாலும் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவச் சிகிச்சை காரணமாக உடற் சுகாதார நிலையைக் கருத்திற் கொண்டு, கோவிட் தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டிருக்கவில்லை என்று மருத்துவத்துறை விளக்கம் அளித்துள்ளது.

EtO_fpMWYAI1CqF.jpg?resize=800%2C451&ssl

இந்நிலையில், கடந்த வாரம் ஜனவரி 22ம் நாள் கோவிற் பெருந்தொற்றாலும் பாதிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் ஜனவரி 31ம் நாள் பெட்ஃபோர்ட் (Bedford) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

EdIujxjXYAEIXlU.jpg?resize=800%2C533&ssl

இத்தேசத்துக்கும் உலகத்துக்கும் கப்டன் கொடுத்த உத்வேகத்தை அங்கீகரிப்பதாக மகாராணியார் வெளியிட்டுள்ள இரங்கல்ச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

bj1.jpg?resize=800%2C514&ssl=1

அவ்வாறே பிரித்தானியப் பிரதமர் வொறிஸ் ஜோன்சன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், கப்டன் ரொம் மோரை நினைவு கூர்ந்து இரங்கல்ச் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

EtPBXOuXIAEI_23.jpg?resize=800%2C696&ssl

இரண்டாம் உலகப் போரின் போது கப்டன் ரொம் மோர் இந்தியா, முன்னர் பர்மா என்று அழைக்கப்பட்ட மியன்மார் போன்ற நாடுகளில் பிரித்தானிய இராணுவ வீரனாக கடமையாற்றியுள்ளார்.

EtPKuLGXYAEUfG5.jpg?resize=800%2C534&ssl 10 Downing Street

இவரின் இழப்பை முன்னிட்டு தேசிய துக்கதினமாக நினைவு கூரும் வகையில், 10 Downing Street-ல் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் பிரித்தானிய தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

குவிரன்.கொம்

Edited by யாயினி
 • Sad 1
Link to comment
Share on other sites

24 minutes ago, யாயினி said:

இரண்டாம் உலகப்போர் வீரன் கப்டன் ரொம் மோர்(Captain Sir Tom Moore) கோவிட் நுண்மிப் பெருந்தொற்றுக் காரணமாக இன்று தனது 100-வது அகவையில் காலமானார்.

 

25 minutes ago, யாயினி said:

மருத்துவப் பணியாளர்களுக்காக சுமார் 33 மில்லியன் பவுண்ட் நிதியை திரட்டிய மனிதநேயம் மிக்க பெருமனிதராக கப்டன் ரொம் மோர் மக்கள் மனங்களில் பெருமை பெற்றுள்ளார்.

இத்தகைய கருமவீரருக்கு உளப்பூர்வமான அஞ்சலிகள். 🙏

நல்ல ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளப்பட வேண்டியவர்.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாகனப் பேரணிகள்

FEBRUARY 7, 2021
147152904_10218433890423037_866519327947

இலங்கைத்தீவில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாகனப் பேரணிகள் நாளை (ஞாயிறு) Torontoவிலும் Montrealலிலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.

இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் இனவழிப்பை நிறுத்தவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் முன்னெடுக்கப்படும் “பொத்துவில் முதல் பொலிகண்டிவரை” பயணிக்கும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்த வாகனப் பேரணிகள் ஏற்பாடாகியுள்ளன. இந்த வாகனப் பேரணிகளில் கலந்து கொள்வோர் COVID சுகாதார, வாகன நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Torontoவில் வாகனப் பேரணி

நாளை (February 07, 2021) Toronto பெரும்பாக்கத்தில் நான்கு இடங்களில் மதியம் 12 மணிக்கு இந்த வாகனப் பேரணி ஆரம்பமகின்றது.

இந்த வாகன பேரணி ஆரம்பமாகும் இடங்கள்:

Markham & Steeles
Brampton Shoppers World
Mississauga City Centre
Ajax New Spiceland

Montrealலில் வாகனப் பேரணி

நாளை (February 07, 2021) Montrealலிலும் மதியம் 12 மணிக்கு வாகனப் பேரணி ஆரம்பமகின்றது. இந்த வாகன பேரணி Montreal திருமுருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமகின்றது.

தேசியம்நேசன்.கொம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்று அம்மாவின் பிறந்த நாள் ஆனால் அவர் நம்மோடு இப்போ இல்லை.... 🙏🙏

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, யாயினி said:

இன்று அம்மாவின் பிறந்த நாள் ஆனால் அவர் நம்மோடு இப்போ இல்லை.... 🙏🙏

அதனால் என்ன உங்களின் உணர்வுகளோடும் நினைவுகளோடும் என்றும் அவர் வாழ்கின்றார்.....!

 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வாழ்த்துக்களுக்கு நன்றி  பாஞ் ஐயா😊 நன்றி  நிலாமதி அக்கா😊 நன்றி நுணா😊 நன்றி குமாரசாமி ஐயா😊 தமிழன் என்றாலே அடங்காதவன்தானே😉 நன்றி புங்கை அண்ணா😊 நன்றி நந்தன்😊 எனக்கு கொடுவாள் தாற பிளான் போலிருக்கு😁 வாழ்த்துக்களுக்கு நன்றி  ஈழப்பிரியன் ஐயா😊 வாழ்த்துக்களுக்கு நன்றி  தமிழ் சிறி ஐயா😊
  • Meditation Music for Relaxing and Studying, Gain Focus Back and Improve your Concentration கடல் அலைகளினொடு இதமான இசை
  • “ரிஷாட் வாசஸ்தலம் எனக்கு வேண்டாம்” August 2, 2021 ரிஷாட் பதியுதீன், முன்னாள் வர்த்தக அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய வாசஸ்தலத்தை, தற்போது பயன்படுத்தும் அமைச்சர் பந்துல குணவர்தன, அந்த வாசஸ்தலத்தை மீண்டும் கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளார். கொழும்பு-7, மெகென்சி வீதி, 37ஆம் இலக்க இல்லத்தையே ரிசாட் பயன்படுத்தினார். அதனை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது பயன்படுத்துகின்றார். அந்த இல்லத்தையே அமைச்சர் பந்துல குணவர்தன கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளார் என அவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசெம்பர் மாதம் தொடக்கம், ,தற்போதைய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அந்த இல்லத்தை கையளிக்க பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனால், குறித்த இல்லத்தில், தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ள பல சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் வெளிவரம் நிலையில், குறித்த இல்லத்தின் இரண்டு அறைகள் பொலிஸாரால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த இல்லைத்தை புனரமைப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 12 மில்லின் ரூபாய் பணத்தை செலவு செய்ய, தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன, வறுமை நிலையிலுள்ள சிறுமிகள் குறித்த வீட்டுக்குள் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் பாரதூரமானது என்றார். குறித்த உத்தியோகப்பூர்வ இல்லத்தை மீண்டும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தனவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://globaltamilnews.net/2021/164118    
  • காயங்களின்றி காலம் எதையும் வாழ்க்கையில் கற்றுக் கொடுப்பதில்லை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.