Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இன்று ரொறன்ரோ 187 ஆவது ஆண்டில் கால் பதிக்கிறது.🇨🇦

யாயினியின் இந்த பக்கம் 136ஆவது பக்கம் திருப்பி உள்ளது..🤭

 • Like 1
Link to comment
Share on other sites

 • Replies 3.6k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

இன்று ரொறன்ரோ 187 ஆவது ஆண்டில் கால் பதிக்கிறது.🇨🇦

யாயினியின் இந்த பக்கம் 136ஆவது பக்கம் திருப்பி உள்ளது..🤭

வாழ்த்துக்கள் யாயினி.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
 

புரியாத புதிர்

 
 
 
thanks.jpg

இன்றைய உலகில் வாழும் மனிதர்களாகிய நாம் அரிகத்தோ, நேசி, நன்னி, ஸ்பாசொபோ, தங்ஸ் என ஒருவர்க்கு ஒருவர் உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் நன்றி கூறுகிறோம். உதட்டளவில் நன்றி சொல்கின்றவர்களும் கடமைக்காக நன்றி சொல்கின்றவர்களும் இருக்கிறார்கள். அப்படி போலியாக நன்றி சொல்பவரின் நடிப்பை குரலின் தன்மையும் கண்ணிலுள்ள கருமணியின் சுருக்கமும் காட்டிக்கொடுக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அவர்கள் கூறும் நன்றியைக் கேட்பதால் கேட்பவர் மனம் மகிழ்ச்சி அடையாமல் வேதனைப்படும். இது சிலவேளைகளில் உறவை வளர்ப்பதற்குப் பதிலாக பிரித்துவிடும். இத்தகைய நன்றி கூறுதல் தேவைதானா?

நன்றியை ஆழ்மனதில் இருந்து உள்ளன்போடு கூறுகின்றவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு உள்ளன்போடு கூறப்படும் நன்றி மனிதஉறவை வலுப்படுத்தும். இது சமுதாய கட்டமைப்பிற்கும் உலக ஒருங்கிணைப்பிற்கும் உதவுகின்றது. அதில் எந்தவொரு கருத்து வேற்றுமைக்கும்  இடமில்லை. ஆனால் நாம் நம் நன்றியை மடல்களாகவும் பரிசுப்பொருட்களாகவும் கொடுப்பதுடன் எமது கடமை முடிந்ததென்று அவர்களைக் கண்டும் காணாதவர்களாக இருக்கின்றோம். இதுவே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. 

எமது சங்கத்தமிழ் முன்னோர்களோ ஒருவர் செய்த நன்மைக்கு அதாவது நன்றிக்கு கட்டாயம் உதவி செய்து தீரவேண்டும் என்ற பண்போடு வாழ்ந்தார்கள்.  திருவள்ளுவரும் செய்ந்நன்றியறிதல் என்ற அதிகாரத்தில் மட்டுமல்லாமல் நடுவுநிலைமை, பண்புடைமை, குற்றங்கடிதல், வினைத்தூய்மை  போன்ற அதிகாரங்களில் கூட நன்றியை (நன்மையை) சிறப்பித்துக் கூறியுள்ளார். 

நன்றி என்ற சொல்லை நம் பண்டைத்தமிழர் நன்மை என்ற கருத்தில் உபயோகித்துள்ளனர். ஔவையார் "நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி என்று தரும்கொல் எனவேண்டா" எனக் கூறிய இடத்தில் ஒருவர்க்கு நாம் ஒரு நன்மை செய்தால் அந்த நன்மை எப்போது எமக்குத் திரும்பக்கிடைக்கும் என்று யோசிக்கவேண்டாம் எனக்கூறுகிறார். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இதில் நாம் இன்று கூறும் வாய் வார்த்தையையா ஔவையார் நன்றி என்றார்? அப்படிக் கூறியிருப்பின் 'நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்' எனக்கூறியிருக்கமாட்டார். 'நன்றி ஒருவர்க்கு சொன்னாக்கால்' என்றே கூறியிருப்பார். 

இது மட்டும் எனக்குப் புரியாத புதிரில்லை. இதற்கு மேலேயும் இருக்கின்றது? இது எனது அறியாமையா? அன்றேல் இன்றைய தமிழர்களாகிய நாம் 'நன்றி' என்ற சொல்லின் உண்மைத் தன்மையை பிறமொழி மோகத்தில் தொலைத்துவிட்டோமா? எம்நாட்டில் ஒட்டவந்தவர் மேல் எமக்கு ஏற்பட்ட மோகத்தால் கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் தொலைத்தவை எண்ணிலடங்கா. 'இரண்டாயிரத்து நானூறூ ஆண்டுகளின் முன்னர் "தமிழ்கூறு நல்லுலகம்" என்று பனம்பாரனார் கூறினார். இவர் தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் எழுதியவர். அவர் காலத்திற்கு முன்பிருந்தே நம் தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தது. தனக்கென ஒரு நாகரீகத்தை உருவாக்கி அதனை உலகுக்கு அளித்தது. அதனாற்றான் தொல்பொருள் ஆய்வுகளில் தமிழனின் தொன்மங்கள் உலகெங்கும் கிடைக்கின்றன' என மார்தட்டிச் சொல்லும் எம்மைப்பார்த்து எம் இளம் சந்ததியினர் சிரிக்காது இருக்க வேண்டும். 

அதற்கு நாம் செய்யத்தக்கது என்ன? நாமும் எமது முன்னோரும் எவற்றை எப்படித் தொலைத்தோம் என்ற தரவையாவது எமது சந்ததியினருக்கு வைத்துச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். அகஆதாரங்களையும் புறஆதாரங்களையும் கொண்டு இதனை நாம் காட்டலாம். பண்டைய நூல்கள் சொல்லும் ஆதாரங்கள் அகஆதாரங்களாகும். கல்வெட்டு தொல்பொருள் போன்றவற்றால் கிடைக்கும் ஆதாரங்கள் புறஆதாரங்களாகும். என்னுள் நன்றியைப் பற்றிய புதிரைப்போட்டவர் திருவள்ளுவரே. ஆதலால் அவர் திருக்குறளில் கூறியுள்ள அகஆதாரங்களைக் கொண்டு நன்றி என்ற சொல்லின் புரியாத புதிரைப் புரிந்துகொள்வோம்.

திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தில் 
"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்"
என்கிறார். ஒருவன் அடையக்கூடிய நன்மைகளுக்கு அவனின் நல்லொழுக்கமே வித்தாகுமாம். 
"கொடுவாக வையாது உலகம் நடுவாக 
நன்றிக்கண் தங்கினான் தாழ்வு"           - (குறள்:117)
என நன்றியை நடுவுநிலைமை அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். நடுவுநிலைமையோடு நன்மைகள் செய்து வாழ்ந்தவர் வறுமை அடைந்தாலும் உலகம் அதனை தாழ்வாக நினைக்காதாம். இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் பயன்தரும் சொற்களைப் பேசுவதால் மகிழ்வைத்தரும் நன்மைகள் உண்டாகும் என்பதை "நயன்ஈன்று நன்றி பயக்கும்" எனச்சொல்கிறார். 

தூது என்ற அதிகாரத்தில் கூட மாற்றான் மனம் மகிழுமாறு எடுத்துக்கூறி நன்மை உண்டாக்குவதாக தூது இருக்க வேண்டும் என்பதை 
"நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது" என்கிறார். 

குற்றம் கடிதல் எனும் அதிகாரத்தில் எக்காலத்திலும் தன்னை உயர்வாக மதிக்கக்கூடாது, நன்மை தராத செயல்களைச் செய்யவும் கூடாது என்பதை
"வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை"                           -(குறள்: 439)  
எனக்கூறியவர், வினைத்தூய்மை அதிகாரத்திலும்
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை"                              -(குறள்: 652)
என புகழும் நன்மையும் தராத செயல்களை என்றும் செய்யாது விட்டுவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
 
எமக்குத் தேவைப்பட்ட  நேரத்தில் ஒருவர் செய்த நன்மை சிறிதாக இருந்தாலும் தினையளவு நன்மையாக இருந்தாலும் அந்த நன்மையை மறப்பது நன்றல்ல. ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு உய்வே கிடையாது. என்றெல்லாம் 'செய்நன்றிஅறிதல்'  அதிகாரத்தில் கூறுகிறார். நன்மையைக் கொடுக்காத செல்வத்தைப்பற்றி 'நன்றியில்செல்வம்' எனும் அதிகாரத்தில் சொல்கிறார். மேலே நன்றி எனச் சொன்ன இடங்களில் எல்லாம் நன்மை என்ற கருத்திலேயே திருவள்ளுவர் கூறுகிறார்.
 
அவர் பண்புடமை என்னும் அதிகாரத்தில் பிறரது இயல்பை அறிந்து நடக்கும் தன்மையைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் யாருடைய பண்பை உலகம் பெரிதாகப் பாராட்டும் என்பதை
"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு"                     - (குறள்: 994)
என்று கூறுமிடத்தில் நன்றியை தர்மமாகக்  காட்டுகிறார். அதாவது எல்லோரும் பயனடையக் கூடியவாறு நீதியுடன் தர்மத்தை செய்பவர் பண்பையே உலகம் பாராட்டுமாம். 
 
திருவள்ளூவர் நன்றியை நல்லது, நன்மை, தர்மம் போன்ற கருத்துக்களிலேயே கையாண்டுள்ளார். ஆனால் நாமோ ஒருவர் செய்த உதவிக்கு நன்றி கூறுகிறோம். அல்லது நமது நன்றியைத் தெரிவிப்பதற்காக பொருட்களைக் கொடுக்கிறோம். இந்நிலை ஏன் வந்தது என்பது எனக்குப் புரியவில்லை? உதவிசெய்தவர்க்கு நன்றி சொல்வதே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. ஆனால் திருவள்ளுவரோ எமக்கு முற்றிலும் முரணாக நிற்கிறார். 
 
தந்தையும் மகனும் ஒருவர்க்கொருவர் என்ன செய்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு நாடகக்காட்சியாகக் புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில் காட்டுகிறார். நீங்களும் பாருங்கள். முதற்காட்சியில் ஒரு தந்தை தான் பெற்ற மகனை படிக்கவைத்து கற்றவர் அவையில் முன்வரிசையில் இருக்கக்கூடிய தகுதியை உண்டாக்க நன்றி(நன்மை) செய்கின்றான்.
"தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்"                        - (குறள்: 67)
 
அடுத்த காட்சியில் தந்தை செய்த நன்றியைப் பெற்றுக்கொண்ட மகனின் பெருமையை, புகழை மற்றவர்கள் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தவர்கள் இப்படிபட்ட பெருமைகளையுடைய மகனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ! எனப் புகழ்கிறார்கள். மற்றோர் சொல்லும் அச்சொல்லைக் கேட்டு தந்தை மனம்மகிழும்படி மகன் உதவி செய்கின்றான்.
"மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்"     - (குறள்: 70)
தந்தை செய்த நன்றிக்கு மற்றவர்கள் புகழும்படி வாழ்வதே மகன் தந்தைக்குச் செய்யும் உதவியாகும்.
 
இதனால் நான் அறிந்து கொண்டது முதலில் செய்யப்படுவது நன்றி, அதற்கு நாம் செய்யும் கைமாறே உதவியாகும். அதனாலேயே 'அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்' என்றும் 'நன்றிக்கடன் தீர்த்தேன்' எனவும் சொல்லும் வழக்கமும் ஏற்பட்டிருக்கிறது. நன்றி என்பது செய்யப்படுவதே அல்லாமல் சொல்லப்படுதல்ல. உதவியும் செய்வதே அல்லாமல் சொல்வதல்ல. நம் முன்னோர்  நம்மைவிட பண்பாட்டில் நன்கு பண்பட்டிருந்தனர். சொல்வதைவிட செய்வதே பெரிதென எண்ணினர்.
 
அதனாலேயே ஒருவர் எதுவித நன்றியும் (நன்மையும்) செய்யாதிருக்க மற்றவர் செய்யும் உதவியை திருவள்ளுவர்
"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது"                     - (குறள்: 101)
எனக்கூறியதோடு 
"உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து"        - (குறள்: 105)
என்பதில் ஒருவர் செய்த உதவியை அளவிடமுடியாதாம். அது உதவியைப் பெற்றுக்கொள்பவரின் மனதின் தன்மைக்கு ஏற்ற அளவில் இருக்குமாம் என்கிறார்.
 
கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். ஒருவர் செய்த நன்மைக்கு (நன்றிக்கு) நன்றிக்கடனாக உதவிசெய்தல் சிறந்ததா?  அல்லது நன்றி கூறுதல் சிறந்ததா? இதில் எதனை மிகவும் பண்பட்ட மனிதர்கள் செய்வார்கள்? நம் முன்னோர் எம்மைவிட எவ்வளவு பண்பட்டவராய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும். இவ்வாறு மிகஉன்னத நிலையிலிருந்த எமது பண்டைத்தமிழர் பண்பாட்டைத் தொலைத்துவிட்டு மற்றவர்கள் போல் வாய்வார்த்தையில் நன்றி சொல்கிறோம் இல்லையே என அங்கலாய்த்துக் கொண்டும், மேடைகளிலே ஒரு பெரிய பட்டியலை வைத்துக்கொண்டு அரைமணி நேரத்திற்கு மேலாக நன்றி கூறிக்கொண்டே இருக்கிறோம். இது ஏன்? இதுவும் எனக்குப் புரியாத புதிரே! 
 
நன்றி என்பது ஒருமையில் சொல்லப்படும் சொல். அதற்கு பன்மை கிடையாது. நன்றி என்பதுடன் 'கள்' விகுதி சேர்த்து ஏன் பன்மையில் சொல்கிறோம்? என்பதும் எனக்குப் புரியாத புதிரே! நன்றி சொல்லவேண்டும் என்றால் பல்லாண்டு! பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு! பலகோடி நூறாயிரத்தாண்டு! என வாழ்த்துவது போல்  பலநன்றி, பல்லாயிர நன்றி, பலகோடி நன்றி என்றோ நன்றிபலகோடி என்றோ சொல்லி மகிழலாம். Thank என்பதை நன்றி என்றும்  Thanks என்பதற்கு நன்றிகள் என்றும் யாரோ ஒருவர் சொல்லத் தொடங்க நாமும் தொடர்கதையாகத் தொடர்கிறோம்.
 
இவற்றறையெல்லாம் விடப்புரியாத பெரிய புதிர் ஒன்று இருக்கிறது. தமிழ் என்பதை ஏன் ஆங்கிலத்தில் 'Tamil' என எழுதுகிறோம்? சொல்கிறோம்? 'Thamil' என்று எழுதலாமே? யாரோ விட்ட பிழையை நாம் ஆண்டாண்டு காலமாகத் தொடர்வது ஏனோ??
இனிதே,
தமிழரசி
 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

இவற்றறையெல்லாம் விடப்புரியாத பெரிய புதிர் ஒன்று இருக்கிறது. தமிழ் என்பதை ஏன் ஆங்கிலத்தில் 'Tamil' என எழுதுகிறோம்? சொல்கிறோம்? 'Thamil' என்று எழுதலாமே? யாரோ விட்ட பிழையை நாம் ஆண்டாண்டு காலமாகத் தொடர்வது ஏனோ??

உண்மைதான்... நானும் இதை எண்ணுவதுண்டு. பகிர்வுக்கு நன்றி 

7 hours ago, யாயினி said:

இன்று ரொறன்ரோ 187 ஆவது ஆண்டில் கால் பதிக்கிறது.🇨🇦

யாயினியின் இந்த பக்கம் 136ஆவது பக்கம் திருப்பி உள்ளது..🤭

வாழ்த்துக்கள் யாயினி 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அனைத்து உலக பெண்கள் தினமான நாளை மார்ச் 8 திகதி தொடக்கம், Tim Hortons வருடம் தோறும் நடத்தும் role up the win போட்டியும் ஆரம்பமாகிறது.😀🤭

அனைத்துலக பெண்களுக்கும் மகளீர் தின நல் வாழ்த்துக்கள்.💐🌻

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கோவிட19 தொற்றால் மரணமடைந்த  கனேடியர்களை நினைவு கூறும் தேசிய தினமாக மார்ச்11 திகதியை பிரதமர் யஸ்ரின் ரூடோ அறிவித்துள்ளார்.

தேசியம் இணையத்திலிருந்து..

Edited by யாயினி
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

tamil .....thamil .......= தப்பு.....முன்பு tamizh  = தமிழ் என்றுதான் வழக்கத்தில் இருந்தது.....!

பின்பு tamil  என்றே எல்லோரும் பின்பற்றுகின்றனர்.....!

Why is it Tamil Nadu and not Tamizh Nadu ? #Kosh - YouTube

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Daylight saving time 2021: When do the clocks go forward in Ontario?

Sean Davidson

Sean DavidsonMulti-Platform Writer, CTV News Toronto

@SeanDavidson_ Contact

Published Thursday, March 11, 2021 3:45PM EST
Daylight savings 2021 time change

Daylight saving 2021 begins on Sunday in Ontario, pushing the time forward one hour. (Pexels)

SHARE:

 
 
LRedditTORONTO -- Daylight saving time for 2021 will begin this weekend, pushing clocks forward an hour in Ontario and most of Canada early Sunday morning.

Here's everything you need to know about the clocks going forward and the beginning daylight saving time in the province.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் வயது வந்த பெற்றோரை வைத்திருப்போர் அவர்களுக்கு உரிய கொரோனா தடுப்பூசியை (pharmacy/) தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.இது கனேடியர்களுக்கு.

ஊசி போடுவதும் போடாமல் விடுவதும் அவரவர் விருப்பம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி யாயினி.
வெகுவிரைவாக நாட்கள் ஓடிவிட்டன.

நீங்கள் போட்டதை நம்பாமல் எனது வீட்டு கலண்டரையும் பார்த்து உறுதி செய்தேன்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி யாயினி.
வெகுவிரைவாக நாட்கள் ஓடிவிட்டன.

நீங்கள் போட்டதை நம்பாமல் எனது வீட்டு கலண்டரையும் பார்த்து உறுதி செய்தேன்.

நான் சொல்வதை நீங்களும் நம்பறதில்லையா ரூபாட்..🤭👋

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

நான் சொல்வதை நீங்களும் நம்பறதில்லையா ரூபாட்..🤭👋

யாயினி நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
அவ்வளவு சீக்கிரம் வந்துட்டுதே?
இது உண்மை?
என்று நம்பமுடியாமல் இருந்தது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

யாயினி நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
அவ்வளவு சீக்கிரம் வந்துட்டுதே?
இது உண்மை?
என்று நம்பமுடியாமல் இருந்தது.

நோ.. நான் தவறாகவே நினைக்க வில்லை.. வாயை முடிட்டு மேலே சிரிக்கிறேன் பாருங்கள்.. சும்மா பகிடியாக எல்லாம் சொன்னால்...👋😀

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி யாயினி......!   👍

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நாளை இலைத் துளிர் காலம் ஆரம்பமாகிறது.🌱🌿🍃☘️🍀🌻🌹🌷🍁🍂

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, யாயினி said:

கனடாவில் நாளை இலைத் துளிர் காலம் ஆரம்பமாகிறது.🌱🌿🍃☘️🍀🌻🌹🌷🍁🍂

யாயினி, ஜேர்மனியிலும்... நாளைக்குத்தான்  வசந்த காலம், ஆரம்பிக்கின்றது.  
ஆனால்.... இப்ப சாதுவாக, பனி கொட்டி... உடனே கரைகின்றது.
வாற  புதன் கிழமையிலிருந்து, +10  பாகைக்கு மேல் வரும் என்று.. 
காலநிலை அறிக்கை சொல்கின்றது.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நேற்று இங்கு ஆலங்கட்டி மழை(சிறிய சிறிய ஐஸ் உருண்டைகள்) பெய்தது. யாராவது அதில் சறுக்கி விழுவார்கள் என்று யன்னலால் பார்த்து கொண்டிருந்தேன், துரதிஷ்டவசமாக யாரும் விழவில்லை......!  🤔

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

நேற்று இங்கு ஆலங்கட்டி மழை(சிறிய சிறிய ஐஸ் உருண்டைகள்) பெய்தது. யாராவது அதில் சறுக்கி விழுவார்கள் என்று யன்னலால் பார்த்து கொண்டிருந்தேன், துரதிஷ்டவசமாக யாரும் விழவில்லை......!  🤔

🤭

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2021 at 09:15, suvy said:

நேற்று இங்கு ஆலங்கட்டி மழை(சிறிய சிறிய ஐஸ் உருண்டைகள்) பெய்தது. யாராவது அதில் சறுக்கி விழுவார்கள் என்று யன்னலால் பார்த்து கொண்டிருந்தேன், துரதிஷ்டவசமாக யாரும் விழவில்லை......!  🤔

என்னவொரு வில்லத்தனம்.!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜெகதா துரை said:

என்னவொரு வில்லத்தனம்.!

ஆ..ஆ.🤭😁 எனக்கு சுவியண்ணா எழுதியிருப்பதை படிக்கும் போது வேலையிலிருந்து ஓய்வு பெற்ற  பின் அனேகரது நிலை சன்னலால் வெளியே பார்த்துக் கொண்டு இருபடபதாகவே அமைந்திருக்கும்..அதுவும இந்தக் கொரோணா வந்த பின் எங்க போறது .....என்ன செய்வது.......இவை தான் என் கண் முன் வந்து போனது...🤔

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜெகதா துரை said:

என்னவொரு வில்லத்தனம்.!

 

On 20/3/2021 at 20:12, யாயினி said:

🤭

சமூக அக்கறையை வில்லத்தனம் என்று கொச்சப்படுத்தக் கூடாது பிள்ளைகாள்.......யாராவது விழுந்திருந்தால் சிரிப்பை அடக்கிக் கொண்டென்றாலும் ஓடிப்போய் தூக்கி விடுவன்தானே ......உங்களுக்கு முன்னால நான் சறுக்கி விழுந்தால் நீங்கள் சிரிக்க மாட்டீர்களா மனசாட்ச்சியுடன் சொல்லுங்கள். ஜஸ்ட் லைக் தட் அப்படி இது சும்மா ஒரு இதுதான்.......!  😂

3 hours ago, யாயினி said:

ஆ..ஆ.🤭😁 எனக்கு சுவியண்ணா எழுதியிருப்பதை படிக்கும் போது வேலையிலிருந்து ஓய்வு பெற்ற  பின் அனேகரது நிலை சன்னலால் வெளியே பார்த்துக் கொண்டு இருபடபதாகவே அமைந்திருக்கும்..அதுவும இந்தக் கொரோணா வந்த பின் எங்க போறது .....என்ன செய்வது.......இவை தான் என் கண் முன் வந்து போனது...🤔

இருக்கும் இருக்கும் .......நான் படுகிற பாடு எனக்கெல்லோ தெரியும்.... வருகிற 1 ம் திகதி இப்ப இருக்கிற வீடு திருப்பி திருத்திக் குடுக்க வேணும்......(பேரப்பிள்ளைகளின் விளையாட்டுகள் எல்லாம் வீடு முழுக்க சித்திரங்களாய் கிடக்கு.....பெயிண்ரிங், பேப்பர் ஓட்டுதல், கழுவல் ,துடையல் என்று ஒரே வேலை..... நானும் மடமும் மட்டும்தான். பிள்ளைகளும் வரேலாது.....இவ்வளவுக்குள்ளும் யாழுக்குள்ளும் வந்து போறதே பெரிய விடயம்.......!   😁

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

 

சமூக அக்கறையை வில்லத்தனம் என்று கொச்சப்படுத்தக் கூடாது பிள்ளைகாள்.......யாராவது விழுந்திருந்தால் சிரிப்பை அடக்கிக் கொண்டென்றாலும் ஓடிப்போய் தூக்கி விடுவன்தானே ......உங்களுக்கு முன்னால நான் சறுக்கி விழுந்தால் நீங்கள் சிரிக்க மாட்டீர்களா மனசாட்ச்சியுடன் சொல்லுங்கள். ஜஸ்ட் லைக் தட் அப்படி இது சும்மா ஒரு இதுதான்.......!  😂

இருக்கும் இருக்கும் .......நான் படுகிற பாடு எனக்கெல்லோ தெரியும்.... வருகிற 1 ம் திகதி இப்ப இருக்கிற வீடு திருப்பி திருத்திக் குடுக்க வேணும்......(பேரப்பிள்ளைகளின் விளையாட்டுகள் எல்லாம் வீடு முழுக்க சித்திரங்களாய் கிடக்கு.....பெயிண்ரிங், பேப்பர் ஓட்டுதல், கழுவல் ,துடையல் என்று ஒரே வேலை..... நானும் மடமும் மட்டும்தான். பிள்ளைகளும் வரேலாது.....இவ்வளவுக்குள்ளும் யாழுக்குள்ளும் வந்து போறதே பெரிய விடயம்.......!   😁

நாமும் யஸ்ட் லைக் தற் அந்த பாணியில் தான் எழுதுறோம்..அப்புறம் மடம் என்றால் யாரு உங்கள் துணைவியாரா‌‌..சரி நேரம் கிடைக்கும் போது எல்லாம் யாழுக்கு வாங்கோ‌‌.‌‌.👋

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் குறிப்பாக ரொறன்ரோ பகுதியில் வாழும் இலங்கை ஓய்வூதியர்களுக்கான உங்கள் இருப்பை  உறுதி செய்வதற்கானக (life certificate) பூர்த்தி செய்து அனுப்புவதற்கான இறுதி திகதி மார்ச் 25/2021ஆகும்.அதாவது நாளைய தினம்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழக சட்டசபையின்... நூற்றாண்டு விழா இன்று! தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த விழாவின் தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு தலைமை செயலக வளாகத்தில் 5 அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை உயர் பொலிஸ் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் 7 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி செல்லும் வழிநெடுகிலும் 10 அடிக்கு பொலிஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1231915
  • சமீபத்திய அரசியலில்... இரு பெரும் துரோகங்களை, மக்கள் எதிர்கொண்டுள்ளனர் – ஹரிணி அமரசூரிய சமீபத்திய அரசியல் வரலாற்றில் பொதுமக்கள் இரு பெரும் துரோகங்களை எதிர்கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர ஒன்றிணைந்த மக்கள், அந்த ஆட்சியால் அதிருப்தி அடைந்தனர். பின்னர் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை பற்றிய வாக்குறுதிகளின் அடிப்படையில் 2019 இல் மக்கள் மீண்டும் நம்பிக்கையை இழந்துள்ளதாக ஹரிணி அமரசூரிய கூறினார். துரோகங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது பல்வேறு வழிகளில் தீர்வுகளைத் தேடுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அதே தரப்பினர் தற்போதும் மக்களை மீண்டும் ஏமாற்றவும் காட்டிக் கொடுக்கவும் புதிய தோற்றத்துடன் வெளியே வரத் தயாராகி வருகின்றன என்றும் ஹரிணி அமரசூரிய கூறினார். எனவே மக்கள் மீண்டும் ஏமாறாமல் தடுப்பதற்கு அனைத்து முற்போக்கு சிந்தனையுடைய அனைவரையும் ஒன்றிணையுமாறு அவர் அழைப்பு விடுத்தார். https://athavannews.com/2021/1231911
  • பாவேந்தரும் தமிழும்     எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு (சங்கநாதம்: 1-2)   எனும் முழக்கம், தமிழக மேடைகளிலும், தமிழ் உணர்வு கொண்ட ஏடுகளிலும், தமிழர்களிடையேயும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓர் எழுச்சிக்குரல்; தமிழ் உணர்ச்சியின் வெளிப்பாடு. இந்த உணர்ச்சியின் பிறப்பிடம் பாவேந்தர் பாரதிதாசனின் உள்ளம். பாரதிதாசனின் இந்த உள்ள உணர்ச்சியை அவரது பாடல்களில் பெரும் அளவில் பார்க்கலாம். தமிழ் மீதுகொண்ட பற்றால், அதைத் தன் உயிரினும் மேலாக நேசித்தமையால், தமிழை என் உயிரே என்று அழைத்து மகிழ்ந்தார். அதன் இனிமையின் சிறப்பினையும் பல பாடல்கள் மூலம் எடுத்துக்காட்டுகின்றார். விருப்பத்துக்குரிய பொருளை, தேன், பால், என்றும் கண், உயிர் என்றும் கூறும் மரபைக் கவிஞர்களிடம் காணலாம். அடியார் பலர் இறைவனை இவ்வாறு பாடியுள்ளனர். பாரதிதாசன் தமிழ் மொழியைத் தேன், பால், கண், உயிர் என்று கருதிப் பாடியுள்ளார். மொழியை இவ்வாறு வருணித்துப் பாடும் மரபும் புதியது. இம்மரபுக்கு முன்னோடியாய்த் திகழ்ந்தவர் பாரதிதாசன்.   1.1.1 தமிழ் உயிர் போன்றது   தமிழ் மொழி மீது பாரதிதாசனுக்கு அளவு கடந்த பற்று உண்டு. இதனை அவரது பாடல்களில் பரவலாகக் காணலாம். வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம், அவர் தமது தமிழ்ப் பற்றை வெளியிடுவார். தமிழைத் தன் உயிரினும் மேலாக மதித்தார், போற்றினார். எனவே,   செந்தமிழே ! உயிரே ! நறுந்தேனே ! செயலினை மூச்சினை உனக்களித்தேன் (பாரதிதாசன் இசையமுது, தமிழ்: 5)   என்று பறை சாற்றுகின்றார். இனிய தேன்போன்ற தமிழ்மொழிக்குத் தன் வாழ்வையே, வாழ்க்கையின் செயல்பாடுகள் முழுவதையுமே அர்ப்பணித்தார். எனவே தான், ‘செயலினை மூச்சினை உனக்களித்தேன்’ என்று கூறுகிறார்.   • தமிழெனும் அமிழ்தம்   பொதுவாக, அமிழ்தம் (அமுதம்) என்றால் உணவு என்று பொருள். வானுலகில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவிற்கும் அமிழ்தம் என்று பெயர். அது மிகவும் சுவை உடையது என்றும், அதை உண்பதினால் தான், தேவர்கள் சாகா வரத்துடன் வாழ்கிறார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. நல்ல சுவையான உணவை உண்ணும் போதுகூட, "ஆகா! என்ன சுவை! என்ன சுவை! ‘அமிழ்தம்’ போன்றல்லவா இருக்கிறது” என, தேவர்கள் உண்ணும் உணவை மனத்திற்கொண்டு, கூறுகிற மரபு உண்டு. பாரதிதாசனுக்கோ தமிழே அமிழ்தமாகின்றது. எனவே   தமிழுக்கும் அமுதென்று பேர் ! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் (இன்பத் தமிழ்: 1-2)   என்று பாடுகிறார். பாரதிதாசன் இன்றும் நம்மிடையே உயிர்ப்புடன் உலவவும், நம் உணர்வினைத் தூண்டவும் அவர் படைப்புகள் தானே காரணம்! எனவே தமிழை அமிழ்தம் என்றும் உயிர் என்றும் சொன்ன சொற்கள் மிகை அல்லவே!   • தமிழெனும் உயிர்   இயற்கையில் பல்வேறு வகையான சுவைகள் இருக்கின்றன. நன்கு பழுத்த பழத்தின் சுளையில் இனிமை இருக்கிறது. கரும்புச் சாற்றிலும் இனிமை உண்டு. தேனிலும் இனிமை உண்டு. காய்ச்சிய வெல்லப் பாகிலும் இனிமை இருக்கிறது. பசுவின் பாலிலும் இனிமை இருக்கிறது. தென்னையின் இளநீரிலும் இனிமை இருக்கிறது. அவ்வாறு ஆயின் தமிழில் என்ன இருக்கிறது? இதோ பாரதிதாசன் கூறுவதைக் கவனியுங்கள்: http://www.tamilvu.org/courses/degree/c011/c0114/images/c0114101.jpg காட்சி   கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும், நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் ! (பாரதிதாசன் கவிதைகள் - முதல் தொகுதி 19. தமிழின்இனிமை, முதல் பாடல்)   (கழை = கரும்பு) என்ன நண்பர்களே! “எனினும்”, “இருந்தாலும்” என்று பாரதிதாசன் கூறுவதின் பொருள் என்ன? தமிழில் “இனிமையைக் காண்கிறேன் என்று சொல்ல அவர் தயங்குகிறாரா? சற்று எண்ணிப் பாருங்கள். ‘இனிப்புடையதாயிருத்தல்’. ‘உயிர்ப்பு உடையதாயிருத்தல்’ - இவற்றுள் எது மிகுதியும் விரும்பத்தக்கது? உயிர் இல்லையேல் சுவைப்போருக்கு இனிப்பு ஏது, நுகர்ச்சி ஏது? கனி, கரும்பு, தேன், பாகு, பால், இளநீர் - அனைத்தின் சுவையும் உயிர் என்ற ஒன்று இருந்தால் தானே நுகரமுடியும். தமிழ் மொழியின்பால் கவிஞர் கொண்ட ஆழ்ந்த பற்று இதில் தெரிகிறதல்லவா! வடலூர் இராமலிங்க வள்ளலார் ‘தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் பருப்பும் தேனும் கலந்த கலவையை விடச் சுவையானவன் இறைவன்’ என்றார். பாரதிதாசனுக்கு அந்த உணர்வை, இனிமையைத் தமிழ் தந்திருக்கிறது. “சோலையினுள் மலர்களின் தேன் அருந்தவரும் வண்டின் ஒலியையும், புல்லாங்குழல் (Flute) ஒலியையும், வீணையின் இசையையும், குழந்தைகளின் மழலைப் பேச்சினையும் கேட்டு மகிழ்ந்து, அவற்றோடு மெய்மறந்து ஒன்றி இருக்கிறேன். ஆனால் அவற்றிடமிருந்து என்னை நான் விடுவித்துக் கொள்ள இயலும். தமிழை விட்டு என்னால் பிரிய முடியாது. ஏன் என்றால், தமிழும் நானும் உடலும் உயிரும் போன்றவர்கள்” இதனைத்,   தமிழும் நானும் மெய்யாய் உடல் உயிர்கண்டீர் (பாரதிதாசன் கவிதைகள் முதல்தொகுதி 19. தமிழின் இனிமை, மூன்றாவது பாடல்)   என்று குறிப்பிடுகிறார். மேலும், தமிழ் மொழி தமிழ்மக்களின் உயிராக இருப்பதால், உலகிலுள்ள அனைத்தையும் வெல்லும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்று பறைசாற்றுகின்றார்.   தமிழ் எங்கள் உயிர் என்பதாலே - வெல்லும் தரமுண்டு தமிழருக்குப் புவிமேலே (பாரதிதாசன் கவிதைகள் முதல்பகுதி 23. எங்கள் தமிழ், வரிகள்: 9 - 10)   ஒவ்வொரு மனிதனும், தன் உயிரைப் பேணிப் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும், மேம்பாடு அடையச் செய்வதற்கும், எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வான். அதைப்போல நம் உயிர் போன்ற தமிழைப் பாதுகாப்பதற்கும் வளர்ச்சியடையச் செய்வதற்கும் நாம் எல்லாவித முயற்சிகளையும் தியாகங்களையும் செய்வதற்குத் தயார் ஆக வேண்டும் என்று கூறுகிறார் பாரதிதாசன்.   1.1.2 தமிழின் இனிமை   ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு வகையான இன்பம் கிடைக்கும். சிலருக்குப் பொருள் ஈட்டுதல் இன்பம் தரும். ஒரு சிலருக்கு அவர்கள் வகிக்கும் பதவி இன்பம் நல்கும். புகழ் இன்பம் வழங்கும். ஆனால் பாரதிதாசனுக்கு எது இன்பம் தருகிறது தெரியுமா? தாய்மொழியாம் தமிழ் இன்பம் தருகிறது. தமிழ் தரும் இன்பத்தைத் தம் பாடல்களின் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார். தமிழுக்கு இன்னொரு பெயர் உண்டு. அது உங்களுக்குத் தெரியுமா? என்று வினவும் பாரதிதாசன்,   இன்பம் எனப்படுதல் - தமிழ் இன்பம் எனத் தமிழ்நாட்டினர் எண்ணுக. (முதல் பகுதி : தமிழ் உணவு, வரிகள்: 36 - 37)   என்று குறிப்பிடுகிறார். எனவே, தமிழுக்கு இன்பம் என்று இன்னொரு பெயருண்டு. தமிழ் நாட்டினரே அதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். தமிழ் என்ற உடனே, இன்பம் தானாக வந்து கிட்ட வேண்டும். அந்த இன்பத்தை நீங்கள் நுகர வேண்டும் என்று கூறுகிறார். (கிட்டுதல் = அடைதல், கிட்ட = அடைய) இயற்கையில் அமைந்துள்ள பல பொருள்களை நாம் நுகரும் போது அவை நமக்கு இன்பம் தருகின்றன. அவற்றை மனத்தில் நினைத்த உடனே, இன்ப உணர்வு ஏற்படும். அதைப்போல் தமிழைப் பற்றி நினைத்த உடனேயே இன்ப உணர்வு வரும். தமிழ் இன்பம் தருவதால், அது அமுதம் போன்றது என்று குறிப்பிடுகிறார். அமுதத்தை உண்ணும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, அல்லது இன்பம், தமிழைப் படிக்கும் போது கிடைக்கும். எனவே,   இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு இன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது ! (முதல் தொகுதி, 23. எங்கள் தமிழ் - வரிகள்: 1 - 2)   என்று இனிமையின் எல்லை எனக் கருதப்படும் அமுதத்தையே தமிழ் இன்பத்திற்கு இணையாகக் கூறுகிறார் பாரதிதாசன். http://www.tamilvu.org/courses/degree/c011/c0114/html/c0114101.htm
  • ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இந்தியா தலைமையேற்றது! ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இதனையடுத்து ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குத் தலைமையேற்கும் முதல் இந்தியப் பிரதமர் என்னும் பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார். ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நிலையான உறுப்பு நாடுகளும் மற்ற 10 உறுப்பு நாடுகளும் உள்ளன. பாதுகாப்பு சபைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு உறுப்பு நாடு தலைமையேற்கும். இதன்படி ஒகஸ்ட் மாதத்திற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இந்தப் பதவிகாலத்தில் ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்க உள்ளதாக ஐ.நாவுக்கான முன்னாள் இந்திய தூதர் சையது அக்பருத்தீன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1231906
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.