Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தகவல்.
இணைப்புக்கு நன்றி யாயினி.

Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எதிர் வரும் புதன்கிழமைக்கு பின் காச்சல் வரலாம் என்று தோணுது.. பார்க்கலாம்.என்ன இந்த காச்சல் வந்தால் சனம் நெஸ்டமோல்ட், ஓறேஞ் பார்லி,நெக்டோ எல்லாம் வாங்கி தருவது கஸ்ரம்.🤭😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, யாயினி said:

எனக்கு எதிர் வரும் புதன்கிழமைக்கு பின் காச்சல் வரலாம் என்று தோணுது.. பார்க்கலாம்.என்ன இந்த காச்சல் வந்தால் சனம் நெஸ்டமோல்ட், ஓறேஞ் பார்லி,நெக்டோ எல்லாம் வாங்கி தருவது கஸ்ரம்.🤭😆

 

Paracetamol ratiopharm 500 mg Tabletten

கை காவலாய் கைப்பையில் கொண்டு திரியவும்.அவசரத்துக்கு  கொஞ்சம் உதவி செய்யும்.

Edited by குமாரசாமி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து யாழ் கள உறவுகளுக்கும், இனிய உயிர்த்த ஞாயிறு நல் வாழ்த்துக்கள்.💐💐..happy Easter.🐰🐰

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நான்  ஊசி போட்டு கொண்டதன் பின்னர் .. சுகாதார அலுவலகத்திலிருந்து வந்த மெயிலின் ஒரு பகுதி...இப்போ கொஞ்சம் காச்சல் மாதிரி ஒரு உணர்வு .. பார்க்கலாம்...🤔

Thank you for doing your part in stopping the spread of COVID-19 and keeping Ontarians Healthy.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறிமியர் டக்போர்ட் முதல் தடுப்பூசி அஷ்றா சனிக்காவை எடுத்திருக்கிறார்.

இன்று முதல் பீல் பகுதியில் வசிக்கும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்  தங்களுக்கு உரிய தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.அனைவரும் கொரோனாவிலிருந்து விடுபடும் ஆண்டாக பிலவ வருடம் அமையட்டும்.✍️👋

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Toronto நகரம் May மாதம் 18ஆம் திகதியை , தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அறிவிக்கிறது.
City of Toronto is proclaiming May 18, Tamil Genocide Remembrance Day.
May be an image of text
 
 
 
நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து பயணிப்போம்: கனேடிய நாடாளுமன்றத்தில் ஹரி ஆனந்தசங்கரியின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு உரை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நாம் விரும்பி பிறக்காதது போல
நடக்கும் காரியங்களும் நாம் விரும்பி
நடப்பவை அல்ல.!
 
கவிஞர் கண்ணதாசன்
 
sunday routine.....படித்ததிலிருந்து.
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பழந்தமிழ் இசையில் ஆதியில்
தமிழ்ப் பண்களுக்கு "யாழ்" என்றும், பின்னர் "பாலை" என்றும், தற்காலத்தில் "மேளகர்த்தா இராகம்" என்றும் பெயர் வழங்கி வருகின்றது.
அவை :
1). செம்பாலை (அரிகாம்போதி)
2). படுமலைப்பாலை (நடபைரவி)
3). செவ்வழிப்பாலை (இருமத்திம தோடி)
4). அரும்பாலை (சங்கராபரணம்)
5). கோடிப்பாலை (கரகரப்பிரியா)
6). விளரிப்பாலை (தோடி)
7). மேற்செம்பாலை (கல்யாணி)
-திருப்பூர். இரா. சுகுணாதேவி-
May be a closeup of rose
 
 
 
படித்ததிலிருந்து.
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இனி வரும்
முனிவரும்
தடுமாறும் கனிமரம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"காடு" என்பதற்கான நம் தொன்தமிழ் மக்களின் இனிய சொற்கள்:-
 
1). வல்லை = பருத்து நெடிதுயர்ந்த மரங்கள் நெருங்கிய காடு.
2). இறும்பு, குறுங்காடு =
சிறுமரங்கள் நிறைந்த காடு.
3). அரில், அறல், பதுக்கை =
சிறு தூறுகள் பம்பின காடு.
4). முதை = மிக முதிர்ந்த முற்றிப்போன மரங்களையுடைய காடு.
5). சுரம், பொதி = மரங்கள் கரிந்து போன காடு.
6). கணையம், மிளை, அரண் =
அரசனது காவலில் உள்ள காடு.
 
 
-திருப்பூர். இரா. சுகுணாதேவி-
May be an image of rose and nature
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
#இசைஞானி இளைய ராஜா பற்றிய இணையங்களில் சிதறி கிடக்கும் கட்டுரை மற்றும் தகவல்களின் தொகுப்பு
என்ற பெயரில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம்
♥️ #ஆனந்தவிகடன் ♥️இதழில் வெளியான கட்டுரையின் தொகுப்பு நண்பர்களே
படிக்கத்தவறீயர்களுக்காக இந்த பதிவு
==============================
பிரீமியம் ஸ்டோரி
‘ராஜாவைப் பாத்துட்டு வரலாம்டா’ என்பார் ‘வாத்தியார்’ பாலு மகேந்திரா. சாலிகிராமத்தில் உள்ள வாத்தியாரின் வீட்டிலிருந்து கிளம்பி அருணாசலம் சாலையின் பரபரப்பான போக்குவரத்துக்கிடையே பெரும்பாலும் நடந்துதான் செல்வோம்.
பிரசாத் ஸ்டூடியோவின் வாயிலுக்குள் நுழையும் போது ஆங்காங்கே படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும். அதற்கான பரபரப்பையும் இரைச்சலையும் கடந்து வலது பக்கம் திரும்பும் போது இடது ஓரத்தில் பெரிய சைஸ் பிள்ளையார் துதிக்கையில் மறைத்திருக்கும் புன்சிரிப்புடன் அமர்ந்திருப்பார். அவரைத் தாண்டிச் சென்றால் வலது பக்கத்தில் ஒரு கட்டடம். ஊரை விட்டு விலகி எங்கோ காட்டுக்குள் தனித்து அமைந்தி ருக்கும் ஓர் ஆலயம் போல. பிற மாநிலத்திலிருந்து வந்திருக்கும் இசைக்கலைஞருக்கு அங்கு ஒரு வேலையும் இருக்காது. ஆனால் சென்னைக்கு வந்தால் நேராக பிரசாத் ஒலிப்பதிவுக்கூடத்துக்கு வர வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம். அப்படித்தான் அந்த இடம் திகழ்ந்தது. பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தின் தடித்த மரக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் ஒரு விஸ்தாரமான கூடம். ஒரு மூலையில் உள்ள மனிதரின் மூச்சுக் காற்றின் சத்தத்தை மறு மூலையில் உள்ள மற்றொரு மனிதர் கேட்கலாம். மூச்சடைக்க வைக்கும் நிசப்தம்.
இளையராஜா
இளையராஜா
‘இங்கேதான்டா நம்ம பாட்டு எல்லாம் ரெக்கார்டு ஆச்சு’ சொல்லியபடியே செல்வார் ‘வாத்தியார்.’
ஒவ்வொரு இடமாகக் கூர்ந்து பார்த்தபடியே செல்வேன். ஓர் இடத்தில் யேசுதாஸ் அமர்ந்து ‘என் இனிய பொன் நிலாவே’ பாடுவார். இன்னொரு இடத்தில் நின்றபடி எஸ். ஜானகி அருகில் நிற்கும் பாலசுப்பிரமணியத்தைப் பாராமலேயே ‘ஓ வசந்த ராஜா’ பாடுவார். இதற்குள் மற்றொரு தடித்த மரக்கதவை நெருங்கியிருப்போம். செருப்பை வெளியே விட்டுவிட்டு உள்ளே நுழைந்தால் வெள்ளை உடையில் நெற்றியில் திலகமிட்ட இளையராஜா சிரித்தபடி, ‘வாங்க’ என்பார். அந்த அறை முழுக்க ஒரு சுகந்த நறுமணம் கமழும்.
புகைப்படங்களில் அமர்ந்திருக்கும் ரமண மகரிஷியும், யோகி ராம்சுரத்குமாரும் அந்த அறையில் இளையராஜாவுடன் அமர்ந்திருப்பதாகவே தோன்றும். இசை தவிர வேறேதும் அந்த இடத்தில் பேசத் தோன்றாது. எதுவுமே பேசத் தோன்றாது என்பது இன்னும் சரியாக இருக்கும். வாத்தியார் படங்களுக்கான கம்போஸிங் அநேகமாக அரைமணிநேரத்துக்குள் முடிந்துவிடும். வாத்திய இசைச் சேர்ப்பு மற்றும் குரல் பதிவு நடைபெறும் போது மொத்த அரங்கும் வேறாக மாறிவிடும். அப்போதும்கூட வாத்தியங்கள் இசையும், பாடகர், பாடகிகளின் குரல்களும் மட்டுமே நம் காதுகளுக்குக் கேட்கும். கிட்டத்தட்ட ஐம்பதிலிருந்து எழுபது பேர் அமர்ந்து இசைத்தாலும் அங்கு இசை தவிர வேறெந்த சின்ன சத்தத்தையும் நாம் கேட்டுவிட முடியாது. தத்தம் வாகனங்களில் இசைக்கருவிகளை சுமந்தபடி வந்து இறங்கி, பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துக்குள் நுழையும் இசைக்கலைஞர்கள், ஒலிப்பதிவில் வாசிக்கும் போதும் சரி, வாசித்து முடித்து ஒலிப்பதிவுக் கூடத்தை விட்டுக் கிளம்பும் போதும் சரி, ஒரு பிரார்த்தனையை, பூஜையை நிறைவேற்றி விட்டுச் செல்வதுபோலவேதான் அவர்கள் முகபாவமும் உடல்மொழியும் அமைந்திருக்கும்.
இளையராஜா
இளையராஜா
நான் இயக்கிய ‘படித்துறை’ திரைப்படத்தின் இசைப்பதிவுக்காகத் திருநெல்வேலியிலிருந்து கணியன் இசைக் கலைஞர்கள் பிரசாத் ஒலிப்பதிவுக்கூடத்துக்கு வந்திருந்தார்கள். முன்பின் அறிந்திராத அந்த ஒலிப்பதிவுக் கூடம் அவர்களுக்கு முதலில் அச்சத்தை ஏற்படுத்தியது. குளிரூட்டப்பட்ட ஒலிப்பதிவுக் கூடத்தில் அவர்களின் வாத்தியத்தை உஷ்ணப்படுத்த வாத்தியத்தில் மின்சலவைப்பெட்டி(Iron box) வைத்து சூடுபடுத்தினார்கள். இன்னொரு பக்கம் ‘படித்துறை’ படத்துக்காக கணேஷ், குமரேஷ் சகோதரர்கள் வயலின் வாசிக்க, கர்னாடக சங்கீதப் பாடகிகள் சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஶ்ரீ குரல்களில் பாடல் பதிவாகிக் கொண்டிருந்தது. அவர்கள் பதிவு முடிந்ததும் கணியன் இசைக்கலைஞர்களின் வாசிப்பு துவங்கியது. பிரசாத் ஒலிப்பதிவுக் கூடம் அதுவரை கேட்டிராத நாதத்தைக் கேட்டது. தன்னிடம் வாசிக்கிற எல்லா இசைக் கலைஞர்களையும் வரவழைத்து அந்தக் கலைஞர்களின் தாளலயத்தை ரசிக்கச் செய்தார், இளையராஜா. நிறைவில் அந்தக் கலைஞர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
ஒருநாள் ஒலிப்பதிவு அறையிலிருந்து, இசைக்கருவிகளின் இசைப்பதிவு நடைபெறும் ஒலிப்பதிவுக் கூடத்தைத் தாண்டி இளையராஜா அவர்களுடன் அவரது அறைக்குச் சென்று கொண்டிருந்தேன். சட்டென்று நின்றவர், அந்த இடத்தைக் காண்பித்துச் சொன்னார். ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னியே. அந்தப் பாட்டு ‘மனிதா மனிதா’, அதை இங்கேதான் ரெக்கார்டு பண்ணினேன்.’ எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அதன் வயலின் குழு இசையைக் கேட்டு நான் அது மும்பையில் பதிவு செய்யப்பட்ட பாடல் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
இசையாலயம்
வட இந்தியப் புகழ்பெற்ற பாடகரான உதித் நாராயணன் அத்தனை பக்தியுடன் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துக்குள் நுழைவதைப் பார்த்திருக்கிறேன். அவர் மட்டுமா, லதா மங்கேஷ்கர் ஆஷா போஸ்லே சகோதரிகள், உஸ்தாத் சுல்தான் கான், ஹரிபிரஸாத் சௌரஸ்யா, அஜோய் சக்ரபர்த்தி, அவரின் மகள் கௌஷிகி சக்ரபர்த்தி. இவர்கள்போக நம் பெருமைமிகு கலைஞர் பாலமுரளிகிருஷ்ணாவிலிருந்து பாம்பே ஜெயஶ்ரீ வரை எத்தனை பேர்! மாண்டலின் ஶ்ரீநிவாஸ், திருவிழா ஜெய்சங்கர் என அவர்கள் அனைவரையும் வேறு ஆளாக மாற்றிவிடும் வித்தையை பிரசாத் ஒலிப்பதிவுக் கூடம் சத்தமில்லாமல் செய்துவந்தது.
வேறெதற்கோ சென்னை வந்த ஆஷா போஸ்லே, ஒலிப்பதிவுக்கூடத்துக்கு இளையராஜாவைப் பார்க்க வந்திருக்கிறார். அப்போது ஒலிப்பதிவாகிக்கொண்டிருந்த ஒரு பாடலின் மெட்டைக் கேட்டு மெய்மறந்து அதையே பாடிப் பாடிப் பார்த்து ரசித்திருக்கிறார். பாடல் பதிவின்போது பாடிக்கொண்டிருந்த யேசுதாஸ் மற்றும் எஸ்.ஜானகியின் கவனம் கலையும் அளவுக்கு ஆஷா போஸ்லே ரசித்துத் தள்ளிய அந்தப் பாடல், ‘தென்றலே என்னைத் தொடு’ திரைப்படத்தின் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ பாடல்.
கேரளத் திரைப்பட இயக்குநர்களான பரதன், பத்மராஜன், அடூர் கோபாலகிருஷ்ணன், கே.ஜி.ஜார்ஜ், ஐ.வி.சசி, ஜோஷி, ஃபாஸில், விஸ்வாம்பரன், சத்யன் அந்திக்காடு, ஜிஜோ, மோகன், ராஜீவ் நாத், பிரதாப் போத்தன், பத்ரன், ப்ரியதர்ஷன், டென்னிஸ் ஜோஸஃப், ஜோமோன், சி.பி.பத்மகுமார், ஜோஷி மேத்யூ, ராஜீவ் அஞ்சல், அனில்பாபு, ஷியாம பிரசாத், சித்திக், வினயன்.
கன்னடத்தில் சங்கர் நாக், சித்தலிங்கையா, ராஜேந்திர சிங் பாபு, சுனில்குமார் தேசாய், எஸ்.நாராயண், நகத்திஹல்லி சந்திரசேகர், ஏ.எக்ஸ்.பிரபு, கே.எம்.சைதன்யா, சாய் பிரகாஷ், ஆர்.சந்துரு, ஶ்ரீநிவாஸ் ராஜு, பி.எம்.கிரிராஜ், ஏ.எம்.ஆர்.ரமேஷ்.
தெலுங்கில் பாப்பு, பானுமதி ராமகிருஷ்ணா, தாசரி நாராயண ராவ், சிங்கீதம் சீனிவாசராவ், கோதண்டராமரெட்டி, வம்சி, கொம்மினேனி சேஷகிரி ராவ், ராகவேந்திர ராவ், மோகன் காந்தி, ராம் கோபால் வர்மா, கமலாகர காமேஸ்வர ராவ், கிருஷ்ண வம்சி, கீத கிருஷ்ணா, க்ராந்தி குமார், உமாமகேஸ்வர ராவ், குமார் நாகேந்திரா, குணசேகர்.
இவர்கள் அனைவருமே அவரவர் தேசத்திலிருந்து தமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்தனர். அவரவர் ஊர்களில் ஒலிப்பதிவுக் கூடங்கள் இல்லாமலில்லை. இவர்கள் அனைவரிடமும் தனித்தனியே கேட்டாலும் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடம் குறித்த தத்தம் பிரத்தியேக அனுபவங்களை உணர்ச்சிபூர்வமாகச் சொல்வார்கள். பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தைத் தமிழ்த் திரைப் படங்களிலும் காண்பித்தார்கள். இளையராஜாவின் நண்பரான இயக்குநர் பாரதிராஜா ‘நிழல்கள்’ திரைப்படத்தில் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் நடந்த பாடல் பதிவைப் படமாக்கினார். `வாத்தியார்’ பாலுமகேந்திரா ‘ரெட்டைவால் குருவி’ திரைப்படத்தில் இளையராஜாவின் கம்போஸிங் அறையைப் படமாக்கிப் பதிவுசெய்து மகிழ்ந்தார். பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் தனது ‘சாதனை’ திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஒரு திரைப்பட இயக்குநராக இளையராஜாவுடன் பாடல் கம்போஸிங்கில் பங்குபெறச் செய்தார்.
கே.பாலச்சந்தர் அவர் பங்குக்கு ‘புதுப் புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தைப் படமாக்கினார். இளையராஜாவின் தீவிர ரசிகரான கமல்ஹாசனோ ஒரு படி மேலே போய் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தைத் தனது ‘ராஜபார்வை’ திரைப்படத்தின் டைட்டில்ஸ் முழுவதும் காட்டியதோடு அல்லாமல், தானே இசைக்குழுவினருடன் அமர்ந்து வயலின் இசைத்தார். இப்படி பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துடன் தம்மைத் தொடர்புபடுத்தி மகிழ்ந்தார்கள், நம் திரைக்கலைஞர்கள்.
இன்றைக்கு பிரசாத் ஒலிப்பதிவுக் கூடம் மூடிக்கிடக்கிறது. மத்திய மந்திரிகளே இளையராஜாவைப் பார்ப்பதற்காக பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்து அவரது அறையில் அமர்ந்து பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் யாரிடமும் உதவி கேட்காத இளையராஜா சட்டப்படி, காவல்துறையை நாடியிருக்கிறார். இந்த நேரத்தில் இப்படி ஒப்பிடாமல் இருக்க இயலவில்லை. இந்த கோவிட் காலத்தில் அடைந்துகிடக்கும் கோடிக்கணக்கான மனிதர்களின் மனதுக்குப் பெரிய ஆறுதலாக இருக்கும் இளையராஜாவைப் போன்ற ஒரு கலைஞர் மேற்கு வங்கத்திலோ, கேரளத்திலோ பிறந்திருந்தால் இந்நேரம் இந்த ஒலிப்பதிவுக் கூடம், ஒரு கலைக்கூடம் என்பதை உணர்ந்து, அதை அருங்காட்சியகமாக மாற்றி, அரசு தன்னுடைமையாக்கி, அந்த ஒப்பற்ற கலைஞனுக்கு வழங்கி கௌரவப்படுத்தியிருக்கும். தான் இசையமைத்த ஆயிரம் படங்களில், பத்தாயிரம் பாடல்களில் பெரும்பாலானவற்றை இளையராஜா பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில்தான் உருவாக்கியிருக்கிறார். இளையராஜாவுடன் வளர்ந்த, இளையராஜாவால் வளர்ந்த எண்ணிலடங்கா கலைஞர்கள் நினைத்தால் அரசாங்கத்தை அணுகி ‘தமிழர்களுக்கும் கலைஞர்களை கௌரவிக்கத் தெரியும்’ என மேற்கு வங்கத்துக்கும் கேரளத்துக்கும் சவால் விடலாம்
நன்றி ++++++++#ஆனந்தவிகடன் வார இதழ்.
அன்புடன் உங்கள்
இளையராஜா இசைப்பாசறை🎵
May be an illustration of 3 people and text
 
 
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்லில் கண்ட இசை வண்ணம்!

 

• ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு -
 
 
202103110331_KG__1595585732750_p38-39.jp

 

தமிழகத்தில் இரண்டு கோயில்களில் கல் நாதஸ்வரங்கள் உள்ளன. அவை மிகவும் பழைமையானவை.

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் ஒரு கல் நாதஸ்வரம்.

ஒவ்வொரு ஆண்டும் மிக முக்கியமான உற்சவ தினத்தன்று மட்டும் அந்தக் கல் நாதஸ்வரம் இசைக்கப்படுகிறது.

ஒரு நாள் மட்டும் கோயிலின் நாதஸ்வரக் கலைஞர் அந்தக் கல் நாதஸ்வரத்தில் நாத இசையினை இசைக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் இன்னொரு கல் நாதஸ்வரம் உள்ளது.

அது முந்நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டது.

கிருஷ்ணப்ப நாயக்க மன்னர் காலத்துக் கல் நாதஸ்வரம் என ஸ்தல புராணம் குறிப்பிடுகிறது.

மார்கழி மாத உற்சவத்தில் ஒரு நாள் அந்தக் கல் நாதஸ்வரம் வாசிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் நடனம் ஆடியுள்ளனர். கடந்த ஆறேழு ஆண்டுகளாக கோயிலில் கல் நாதஸ்வரம் வாசிக்கப்படவில்லை.

அதன் பாதுகாப்புக் கருதி மரப்பெட்டியில் வைத்துப் பூட்டியுள்ளனர்.

ஆனால் நமக்கு அந்தக் கல் நாதஸ்வரங்களைச் செதுக்கி உருவாக்கித் தந்துள்ள சிற்பக் கலைஞர்கள்

யாரென நமக்குத் தெரியாது.

இந்தக் கொரோனா லாக்டவுன் பொது ஊரடங்கு காலத்தில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி

தென்காசி சிற்பக் கலைஞர் ஒருவர் கல் நாதஸ்வரம் ஒன்றினை வடிவமைத்து உருவாக்கித் தந்திருக்கிறார்.

அதைத் தென்காசியில் வசிக்கும் நாதஸ்வரக் கலைஞர் ஒருவரும் வாசித்துக் காட்டியிருக்கிறார்.

தென்காசி அருகே வேட்டைக்காரன்குளத்தில் உள்ளது காளி சிற்பக் கலைக்கூடம்.

அங்கே சிற்பக் கலைஞர் மாரியப்பனும் அவர் அப்பா கே. காந்தியும் பரம்பரை பரம்பரையாகவே கல் சிற்பக் கலைஞர்கள்.

கோயில்களுக்கு சுவாமி, அம்பாள் விக்கிரகங்களாக கல் சிற்பங்கள் செதுக்கித் தர்றது எங்களுக்குப் பரம்பரை கைத்தொழில்.

எனக்கு விவரம் தெரிஞ்சு எங்க தாத்தா காலத்துலேந்து இதைத்தான் பண்ணிட்டு வர்றோம்.

சுவாமி கற்சிற்பங்கள், அப்புறம் கோயில்களுக்குத் தேவையான கல் வேலைப்பாடுகள்லாம் செஞ்சு தர்றோம்.

இப்ப நாலைஞ்சு மாசமாவே எல்லா தொழிலும்போல எங்கத் தொழிலும் ரொம்பவே டல்லடிச்சுப் போடிச்சு"

என்கிறார் மாரியப்பன்.

 

கல் நாதஸ்வரம் உருவாக்கணும்னு உங்களுக்கு எப்படித் தோணுச்சு?"

பட்டறையில எத்தினி நாளைக்குத்தான் சும்மாவே உக்கார்ந்து இருக்குறது?

ஒரு நாள் நான் பாட்டுக்கு யோசிச்சேன். இந்தக் கல்லுல ஒரு நாதஸ்வரம் நாமலே உருவாக்கிப் பாத்தா என்னன்னு தோணுச்சு.

இங்கிட்டு தூத்துக்குடி ஆழ்வார்திருநகரியிலும் தஞ்சாவூரு பக்கம் ஒரு கோயில்லயும் கல் நாதஸ்வரம் இருக்குறதா கேள்விப்பட்டிருக்கேன்.

அது எந்தக் காலத்துல யாரு செஞ்சதோ நமக்குத் தெரியலை. இப்ப இந்தக் காலத்துல நாம ஒரு கல் நாதஸ்வரம் செஞ்சு

உருவாக்கிப் பாத்தா என்னன்னு தோணுச்சு. உடனே நான் காரியத்துலயும் எறங்கிட்டேன்.

ஒரு வாரத்துல அதைச் செஞ்சும் முடிச்சிட்டேன். உடனே எங்க ஊர்ல நாதஸ்வரம் வாசிக்கிற ஒருத்தரை வரச் சொல்லி

அந்தக் கல் நாதஸ்வரத்தைக் காமிச்சேன். அவரு கையோட சீவாளி மத்ததெல்லாம் கொண்டாந்து இருந்தாரு.

எடுத்து வாசிச்சாரு."

நாம் அந்த நாதஸ்வரக் கலைஞரிடம் பேசினோம். இருவத்தைஞ்சு வருசமா நான் நாயனம் வாசிக்கிறேங்க.

பொதுவா நாதஸ்வரம்ங்கறது ஆச்சா மரத்துலதான் கடைஞ்சு செய்வாங்க.

நீளமான அதனோட உடல் பாகம் ஆச்சா மரத்துல கடைவாங்க. அலசு எனப்படும் வட்ட வடிவமான தலை பாகத்தை

வாகை மரத்துல கடைஞ்சு செய்வாங்க. ஆனா நா இதுவரைக்கும் இதுபோல கல் நாதஸ்வரத்துல

வாசிச்சது இல்லே. நானும் வாசிச்சுப் பாத்தேன். சுருதி சுத்தமா நாதம் நல்லா வந்திச்சு," என்றார் நாதஸ்வரக் கலைஞரான ராமச்சந்திரன்.

சிற்பி மாரியப்பனிடம் தொடர்ந்து பேசினோம்...

ஒரே கல்லுல உருவாக்கினது இந்தக் கல் நாதஸ்வரம். ஒரு அடி நீளம் அதனோட உடல் பாகம்.

அலசுங்கற வட்ட வடிவம் அதனோட விட்டம் நீளம் நாலு இன்ச். உடல் பாகத்தின் மேலாக ஏழு இடங்கள்ல துவாரம் துளையிட்டு அமைச்சிருந்தேன்.

கீழே ஒரு துவாரம் போட்டிருந்தேன். ஒரு வாரம் ஆச்சு, நான் இதை உருவாக்கி முடிக்க.

செஞ்சு முடிச்சப்புறம் நான் கூட இது ரொம்ப வெயிட்டா இருக்குமோனு யோசிச்சேன்.

கடைக்கு எடுத்துட்டுப் போயி வெயிட் போட்டுப் பாத்தேன். ஒரு கிலோவை விடக் கம்மியாத்தான் இருந்துச்சு.

சரியாச் சொல்லணும்னா கரெக்டா எண்ணூற்றி ஐம்பது கிராம் அந்தக் கல் நாதஸ்வரம்" என்றார் தென்காசி சிற்பி மாரியப்பன்.

படித்ததிலிருந்து..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆற்றல் மிக்க கதை சொல்லி எஸ்.பொ அவர்களின் பிறந்த தினம் இன்று. அவர்குறித்து ஒரு சுவாரஸ்யமான செய்தியைப் பகிர விரும்புகிறேன்.
 
போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த கவிஞன் பெர்ணான்டோ பெஸோவா. 127 புனைபெயர்களில் எழுதியதாக அறிய முடிகிறது. தமிழில் எனது வாசிப்பிற்கு உட்பட்டவரை, வாசித்தவற்றில் ஞாபகங்களில் உள்ளவரை எஸ்.பொ தான் அதிக புனை பெயர்களில் எழுதியிருக்கிறார். முகநூல் வந்தபிறகு பெர்ணான்டோ பெஸோவாவைக் கூட மிஞ்சுமளவு பலர் பேக் ஐடிகளை வைத்திருக்கிறார்கள் என்பது வேறு விசயம்.
 
தனது பெயரை எஸ்.பொ.என்று சுருக்கி வைத்துக்கொண்ட எஸ்.பொன்ணுத்துரை, ஆரம்பக்காலத்தில் 'நான்' என்ற புனைபெயரைப் பயன்படுத்தினார். நாற்பதுகளில் சுதந்திரனில் ஆறுபுனைபெயர்களில் வாரமொன்றுக்கு இருகதை வீதம் எழுதியுள்ளார். 'சிறீதரன்' என்ற பெயரில் முதலில் கட்டுரைகள் வெளியிட்டார்.
 
கல்கி ஈழத்துச் சிறுகதைப் போட்டியை 'மரகதம்' என்ற இதழில் நடத்தினார். அவ்விதழில் 'எழுவானோர் ஏகாம்பரம்' என்ற பெயரில் எஸ்.பொ. விமர்சனக் கட்டுரைகளைச் செய்துள்ளார். இலங்கை அரசியலை அலச 'அபிமன்யு' என்ற பெயரை 'அக்கினிக்குஞ்சு'ல் பயன்படுத்தினார். ஈழநாட்டில் 'போதிமரநிழலில்' என்ற தலைப்பில் 'வெள்ளாங்காடு வீ. வியாச தேசிகர்' என்ற பெயரிலும், தேசாபிமானியில் 'போகிற போக்கில்' என்ற தலைப்பில் 'பொக்கன் கணபதி' என்ற பெயரிலும், இளம்பிறையில் 'நாமும் நாங்களும்' என்ற தலைப்பில் 'கொண்டோடிச்சுப்பர்' என்ற பெயரிலும், 'பிருகண்ணளை' என்ற பெயரில் நூல் விமர்சனங்களையும் எழுதியுள்ளார்.
நையாண்டிக் கவிதைகள் எழுதுவதற்கு 'மூப்பன் முருகன்', 'துமிலைத் திமிலன்' என்ற பெயர்களையும், பெயர் தெரியாமல் எழுத முயன்றபோது 'பெயர்விழையான்' என்கிற புனைபெயரையும் கையாண்டுள்ளார். எஸ்.பொன்னுத்துரை என்று எழுதுவதற்கு முன், சா.பொன்னுத்துரை என்றும், பொதுஊசி, துரை, பழமைதாசன், புரட்சிப்பித்தன், ராஜ், மித்ர, நச்சாதார்க்கும் இனியன் என்ற புனைபெயர்களையும் பயன்படுத்தியுள்ளார்.
May be an image of 1 person, beard and eyeglasses
 

Riyas Qurana...பக்கத்திலிருந்து.

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமல்ஹாசன்: "உயிருள்ள வரை அரசியலில் இருப்பேன், கட்சியும் இருக்கும்"

24 மே 2021, 
கமல்ஹாசன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மக்களிடம் அறிமுகம் இல்லாதவர்களை புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்னவைக்க நினைத்ததுதான் சர்வாதிகாரமாகத் தெரிவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

கமல், சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்வதாகக் கூறி அக்கட்சியிலிருந்து பல நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறிய நிலையில், கமல்ஹாசன் இவ்வாறு கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் காணொளியில், "நான் ஒரு சிறு விதைதான். இது வீழ்ந்தது,வீழ்த்துவோம் என கொக்கரிக்கும் புள்ளிகளுக்கும் சுள்ளிகளுக்கும் ஒரு செய்தி. விதை விழுந்தாலும் மண்ணில் பற்றிவிட்டால் அது விரைவில் காடாகும்.

ஊரடங்கினாலும் வாயடங்காது என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றாக நாமாகிவிடக்கூடாது. தோல்வியை ஆராய்ந்து, அதில் வெற்றிப்பாடம் கற்பது நாம் இதுவரை கண்ட சரித்திரம். மக்களிடம் முக அறிமுகம் இல்லாதவர்களையும் சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்னவைக்க நாம் நினைத்ததுதான் சர்வாதிகாரமாகத் தெரிகிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

“என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்” - தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள். pic.twitter.com/ECQqW8r3Do

— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) May 24, 2021

Twitter பதிவின் முடிவு, 1

திறமையின் அடிப்படையில் பெரும் பொறுப்புகளை கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே தந்து வளர வழி செய்தது அன்று அவர்களுக்கு ஜனநாயகத்தின் உச்சகட்டமாகத் தெரிந்திருக்கிறது. பிறகு, காலச்சூழலில் கண்ணுக்கு ஏற்பட்ட மறதியில் அது அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. கூட்டணி வைத்துக்கொள்வதில் நான் காட்டிய வெளிப்படைத் தன்மையும் அதைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு பொறுப்பு கொடுத்த ஜனநாயகமும் அனைவரும் அறிந்தவை.

தோல்விக்குப் பின் அவரவருக்கு இருக்கும் தார்மீக கடமையை ஏற்பது நல்ல ஜனநாயகவாதி செய்யும் செயல். கடமையை மறந்து, நிகழ்ந்துவிட்ட தவறுகளைக் கொட்ட குழி தேடுவது சிலருக்கு ஜனநாயகமாகப்படுகிறது. அது ஜனநாயகமே அல்ல. நம் மய்யக் கிணறு அவ்வளவு சாதாரணமாகத் தூர்ந்துபோய்விடாது என்பது தற்காலிக தாக சாந்திக்காக தண்ணீர் குடிக்க வந்தவர்களுக்கு புரியது. நாற்பதாண்டு காலம் இறைத்து நீர் பார்த்ததில் உடல் சற்றே வியர்த்தாலும் உற்சாக ஊற்று ஊறிக்கொண்டே இருக்கும் என்பது நமக்கு கிடைத்த அனுபவம் சொல்லும் பாடம்.

நமக்கு நம் நீர்நிலையைச் சுற்றித்தான் வேலை. நாடோடிகள், யாத்ரீகர்கள் அப்படியல்ல. ஓரிடம் தங்க மாட்டார்கள். வணிகர்களாக அவர்கள் இருக்கும் பட்சத்தில் வியாபாரம் உள்ளவரை தங்குவார்கள். பிறகு, அவர்கள் வெளியேறிவிடுவார்கள். சில நேரம் திரும்பவும் சென்ற வழியே வருவார்கள். இந்த ஊற்று அன்றும் சுரந்துகொண்டிருக்கும். ஆனால், நம் நீர்நிலையை மீண்டும் அசுத்தப்படுத்த விடமாட்டோம் என்ற உறுதியுடன் நம் பணியை தொடர வேண்டும்.

கமல்ஹாசன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மற்றபடி தம் தவறுகளை மறைக்க சிலர் எழுப்பும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. காலம் பதில் சொல்லும். கட்சியின் உள் கட்டமைப்பை தனி மனிதர்கள் தங்கள் ஆதாயத்திற்கு ஏற்ப மாற்ற ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது. செயல் வீரர்கள், செயலாற்றுபவர்களின் கரங்கள் வலுப்படுத்தப்படும். உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் காண்பார்கள்.

என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும்வரை மக்கள் நீதி மய்யமும் இருக்கும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் படுதோல்வியடைந்தது. வாக்குகளின் அடிப்படையில் நான்காவது இடத்தையே அதனால் பிடிக்க முடிந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் பலர், கமல்ஹாசன் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவதாகக் கூறி மக்கள் நீதி மய்யத்திலிருந்து வெளியேறினர்.

துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர்கள் சி.கே. குமரவேல், முருகானந்தம், சுற்றுச்சூழல் அணியின் செயலர் பத்மப்ரியா உள்ளிட்டோர் இதுபோல வெளியேறியுள்ளனர்.

 

கமல்ஹாசன்: "உயிருள்ள வரை அரசியலில் இருப்பேன், கட்சியும் இருக்கும்" - BBC News தமிழ் 

 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, யாயினி said:

 

மனதுக்கினிய பாடல். 👍
 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.