Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஊனம்


ஓவியம் வரைகையில்
தூரிகை உடைந்ததோ?
பிரம்மனுக்கு!--------------------------

ஏழ்மை


பள்ளிக்கூடத்திற்கு
செங்கல் சுமக்கும்
சிறுமி


---------------------------

நவீன பேய்!


நவீன மனுஷனுக்கு
பேய் பிடிச்சிருக்கு
கைபேசி உருவில்

 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 3.5k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது முகநூல் எப்படி பலதும் பத்துமாக பிரகாசித்ததோ அது போன்று என்னை பல ஆண்டுகளுக்கு முன் உறுப்பினர் ஆக்கிக் கொண்ட யாழில் பல அம்சங்களையும் பதிவிட எண்ணி உள்ளேன்...அடுத்த பக்கத்தில் எந்தப் பதிவுகளும் பதிய

ஆயிரம் புள்ளினளை அள்ளித் தந்த அனைத்து உறவுகளுக்கும்  மனம் நிறைந்த நன்றிகள். 1,000 ???

நீ உழைக்கும்  உழைப்பில் சிறிதாவது உனக்கென சேமித்து வைத்துக்கொள்  இல்லையெனில்  கஷ்டம் வரும்பொழுது உதவுவதற்கு யாரும் முன் வர மாட்டார்கள் உன் சகோதரனாக இருந்தாலும். 1ரூபாயாக இருந்தாலு

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முன்பு பாவிக்கப்படட பழைய சாந்தகப்பை
இப்படிதான் இருக்கும் இப்பொழுது எப்படி என்று தெரியவில்லை

 

186455959_3959316970771214_1634729877782

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
இளையராஜா பற்றி - சுஜாதா
 
சென்னை, கத்தோலிக்க திருச்சபையின் தமிழ் மையத்தின் நவீன சவுண்ட் ஸ்டுடியோவில், சுற்றிலும் இதமான ஒலிப் பின்னல்கள் சூழ, இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் ஆரட்டோரியோ பகுதியைக் கேட்டு மகிழ்ந்தேன். உடனே, அவருக்கு போன் செய்து பாராட்டினேன். ''வீட்டுக்கு வாங்க, சாவகாசமா பேசலாம்!'' என்றார். சென்றேன்.
 
முதலில், திருவாசகம் சிம்பொனி அனுபவம். இதை சிம்பொனி என்று அழைப்பது சரியில்லை என்கிறார். ஆரட்டோரியோஎன்கிற வகையில் தான் சேரும். ஆரட்டோரியோ என்பது musical work for orchestra and voices on a sacred theme. வாத்தியங்களுக்கும் குரல்களுக்கும் ஆக்கப் பட்ட புனிதமான கருத்துள்ள இசைப் படைப்பு.
 
''சிம்பொனி என்பது குறைந்தபட்சம் நான்கு அசைவுகள் கொண்ட விஸ்தாரமான இசைக்கோலம். சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவுடன் வாசித்ததால் மட்டும் இதை சிம்பொனி என்று சொல்ல முடியாது. கூடாது'' என்றார். இருந்தும், சிம்பொனி என்ற பதம் நிலைத்துவிட்டது. தென்னாடுடைய சிவன் என்னாட்டுக்கும் இறைவன் விதித்தது அது.
 
மாணிக்கவாசகரின் தமிழ் இளையராஜாவின் பரிவு மிக்க குரலில், முதலில் ஒலிக்கிறது.
 
'பூவார் சென்னி மன்னன் என்
புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்து
உணர்வாய் உருக்கும்
வெள்ளக்கருணையினால்...'
 
இவ்வாறு துவங்குகிறார். (புயங்கம் என்றால், பாம்பு அல்லது ஒருவகைக் கூத்து) உடன், ஹங்கேரி புடாபெஸ்ட்டின் பாரம்பரியமிக்க பில்ஹார்மானிக் குழுவின் (நெறியாளர் & லாஸலோ கோவாக்ஸ்) நூற்றுக்கணக்கான வயலின்களும், மேற்கத்திய வாத்தியங்களும் கம்பீரமாகச் சேர்ந்துகொள்ள, ஸ்டீஃபன் ஷ்வார்டஸ் (அகாடமி அவார்ட் வாங்கியவர்) அளவாக,
 
I’m just a man
Imperfect lowly
How can I reach for
Somthing holy
 
என்று ஆங்கில வரிகளாக மொழி பெயர்க்க, ஓர் அமெரிக்கர் அதைப் பாட, நியூயார்க்கில் பதிவு செய்த குரல்களும் சென்னைக் குரல்களுடன் சேர்ந்துகொள்ள, ஒரு பரவச நிலையில் பத்தாம் நூற்றாண்டுத் தமிழும் இருபத்தோராம் நூற்றாண்டு இசையின் இதமும் உலகளவு விரிய,
மெய் சிலிர்க்கிறது. சொர்க்கத்துக்கு அடியவரோடு எழும் தருணத்தில், மாணிக்கவாசகர் இயற்றிய யாத்திரைப் பத்திலிருந்து எடுத்த இந்தத் துவக்கம் ஈசன் செயலாக நிகழ்ந்தது என்கிறார் இளையராஜா.
 
‘(2005) வருகிற ஜூன் 30ம் தேதி, சென்னை மியூஸிக் அகாடமியில், இதன் கேசெட்டும் சி.டி\யும் வெளியிடப் போகிறார்கள். எல்லோரும் உற்சாகத்துடன், தமிழ் தெரிந்தவர்கள் கூடுதல் உற்சாகத்துடன் இதை வாங்கிக் கேட்கலாம். சினிமா இசையையும், ஒரே மாதிரியான குத்துப் பாடல்களையுமே கேட்டலுத்த செவிகளுக்கு மிகவும் மாறுபட்ட ஓர் அனுபவம் காத்திருக்கிறது.
''அதை நான் குறை சொல்ல மாட்டேன். நினைத்தால் என்னால் பாப் இசையை ஒரு கைசொடக்கில் கொண்டுவர முடியும். அந்தச் சங்கீதம் ரசனைக்கு ஏற்ப இறங்கி வருவது. இந்தச் சங்கீதம் படியேற்றம். புடாபெஸ்ட்டில், அவர்கள் நான் எழுதியதை ஒத்திகையாக முதலில் வாசித்தபோது,
தமக்குள் சிரித்துக் கொண்டார்கள். நான் நிறுத்திவிட்டு, மொழிபெயர்ப்பாளரைக் கூப்பிட்டு, அவர்களிடம் பேசினேன். ‘நீங்கள் பின்னணி வாசிக்கப்போகும் இந்தப் பாடல், பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தலைசிறந்த மன்னன் கவிஞனுடையது. இறைவனிடம், பிறந்தலுத்த ஓர் ஆத்மாவின் வானுலக இச்சைகளையும் தெரிவிக்கும் உன்னதமான பாடல்கள்’ என்றேன்.
 
மறுபடி பாடிக் காட்டினேன். அவர்கள் இப்போது கண்கள் விரிந்து, பாடலின் ஆத்மாவைப் பிடித்து, சிறப்பாக வாசிக்கத் துவங்கினார்கள். சவுண்ட் இன்ஜினீயர் ரிச்சர்ட் கிங், ‘இம்மாதிரி எல்லா அமைப்பாளர்களும் பாடிக் காட்டினால், சிறப்பு கூடும்' என்றார் இளையராஜா.
முதல் மூன்று நிமிஷத்துக்கான இசைக்கு ஸ்கோர் எழுபது பக்கம் எழுதியிருந்தேன். ஒரே நாளில் 26 பக்கம் எழுதியதைப் பார்த்து, கின்னஸ் சாதனையாக வியந்தார்கள்’’ என்றார் இளையராஜா.
 
''இதற்கெல்லாம் காரணம் யார்?'' என்றேன்.
 
''ஈசன்தான். இளையராஜா ஒரு கருவிதான். கத்தோலிக்க நண்பர்கள் மையத்தையும், பாஷை தெரியாத பில்ஹார்மானிக் குழுவையும், நியூயார்க் குரல்களையும், மாணிக்கவாசகர் என்னும்மேதையையும் ஒருங்கிணைத்தது ஈசன்தான். கடவுள் இருக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்வே அத்தாட்சி!’’ என்றார். மற்றொரு ஜீனியஸைச் சொல்லாமல் விட்டு விட்டார்.
ராஜாவின் திருவாசகத்தை ரசிக்க, நான் சிபாரிசு செய்யும் வழிகள் இவை.
 
1. சி.டி.யோ, டேப்போ... முதலில் காசு கொடுத்து வாங்குங்கள்.
 
2. இன்டர்நெட்டில் அனுப்பாதீர்கள். பிரதி எடுக்காதீர்கள். ஒரு அபாரமான கலைஞனுக்கு செய்யக்கூடிய குறைந்தபட்ச மரியாதை இது. மேலும், எம்.பி.3&யில் கேட்காதீர்கள். அதில் நிகழும் கம்ப்ரெஷன் இதன் உண்மையான செவிக்கினிமையைக் குறைத்துவிடும்.
 
3. போஸ் போன்ற ஒரு நல்ல சிஸ்டத்தில், சர்ரவுண்ட் சவுண்டில் கேளுங்கள். காரிலோ, செல்போன் பேசிக்கொண்டோ கேட்காதீர்கள். மற்ற பேரை தொந்தரவு செய்யாமலிருக்க விரும்பினால், ஆப்பிள் ஐபோடு சார்ந்த சில அபாரமான ஹெட்போன்களிலும் கேட்கலாம்.
 
4. தனிமையில், இரவில் அல்லது அதிகாலையில் கேளுங்கள். இரண்டு நாள் விட்டு மறுபடி கேளுங்கள். நான், மையத்தில் தனியாக இருளில் உட்கார்ந்துகொண்டு, சவுண்ட் ப்ரூஃப் ஸ்டுடியோவின் நிசப்தத்தில் கேட்டேன்.
 
5. ரொம்ப அலறவிடாதீர்கள். சிம்பொனியில் உள்ள ஏற்ற இறக்கங்களை மழுப்பிவிடும்.
 
6. கொஞ்சம் சங்கீதம் தெரிந்தால் நல்லது. ராகம் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. அந்தந்த ராகங்கள் தரும் மூடை (Mood) இயல்பாக உங்கள் உள்ளத்தில் அனுமதியுங்கள்.
 
7. கேட்டு முடித்ததும் பாராட்டி, இசைஞானிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள்.
 
8. உங்கள் நண்பர் களை வாங்கச் சொல்லுங்கள். இம்மாதிரியான முயற்சிகளுக்கு ஆதரவு தந்தால்தான், இந்தப் புதிய சங்கீதம் மேன்மேலும் நம் இலக்கியங்களுக்கும் உலகுக்கும் இசைப்பாலம் அமைக்கும்.
 
ராஜா அடுத்துச் செய்ய விரும்பும் காரியங்கள் என்னென்ன என்பதைப் பற்றிக் கொஞ்சம் பேசினோம். திவ்ய பிரபந்தத்தையும் செய்ய விரும்புகிறார். அதுபோல், சிலப்பதிகாரத்தின் சில அபாரமான வரிகளை மியூஸிக் வடிவத்தில் சுலபமாகச் செய்யமுடியும் என்கிறார்.
ராமாயணம் அல்லது மகாபாரதத்திலிருந்து சில பகுதிகளை எடுத்துக்கொண்டு இசைமாலை சூட்டலாம் என்கிறார். தேவை நிதி. டி.வி.எஸ்., சன்மார் போன்ற நிறுவனங்களும், வங்கிகளும், விளம்பரத்துக்கு ஏராளமாகச் செலவழிக்கும் கம்பெனிகளும், தங்க, வைர வியாபாரிகளும்,
புடவைக் கடைக்காரர்களும் இணைந்து நிதி ஒதுக்கினால் சாத்தியமாகும். என்னிடம்ஒரு கோடி ரூபாய் இல்லை. இருந்தால், உடனே செக் எழுதித் தந்திருப்பேன். அத்தகைய அனுபவத்தை அவர் ஏற்படுத்தினார். நன்றி ராஜா ஸார்!
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
உழவாரம்
வீட்டு வளவில் அல்லது தோட்டத்தில் புல் அகற்றுவதற்குப் பயன்படும் ஒரு ஆரம்பகாலக் கருவி இது. 
உழவாரம் என்பது இன்று பலராலும் அறியாத ஒன்றாக  வந்து கொண்டிருக்கிறது. இதன் உபயோகத்தைப் பற்றிக் கிராமப்புற இளைஞர் சமுதாயம் சிறிது அறிந்திருந்தாலும் பட்டணத்து இளைஞர்களுக்கு இதன் பயன்பாடு பற்றி விவசாயப் போதனாசிரியர்கள் விளக்க வேண்டிய நிலையே உள்ளது.

 

http://2.bp.blogspot.com/-is6BVxhKLdo/VMFBsKeNjkI/AAAAAAAAAlg/gi1eRX5nqdg/s1600/P1090055.JPG

 

Edited by அன்புத்தம்பி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
கொடுக்காப்புளி
spacer.png


அக்காலக் கிராமகுட்டிஸுடன் இது நெருங்கிய தொடர்புடையது.சுருள் சுருளான சிவப்பான காயும் பழங்களை உண்ண சிறுவர்கள் போட்டி போடுவார்கள் சில ரகங்கள் துவர்ப்பாகவும் சிலரகங்கள் இனிப்பாகவும் இருக்கும்.

 
Edited by அன்புத்தம்பி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிஷாகந்தி மலர் - கேரளா, ஊட்டி, கோவை போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரும் தன்மை கொண்ட நிஷாகந்தி செடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கள் பூக்கிறது.
வெண்மை நிறத்தில் அதிக வாசனையுடன் இரவில் மட்டுமே பூக்கும் மலர்களை, "அனந்த சயனப் பூ" என்று அழைக்கின்றனர்.
இந்த பூக்கள் இரவு சுமார் 9 மணிக்கு மேல் பூத்து அதிகாலை 4 மணிக்குள் வாடி விடுகின்றன. பூக்களில் விஷ்ணு பாம்பு படுக்கை சயனத்திருப்பது போன்ற தோற்றம் இருப்பதால், அனந்த சயனப் பூ என அழைப்படுகின்றது. செடியில் உள்ள இலைகளில் இருந்து பூக்கள் மலர்கின்றன.
இரவின் நறுமணம் எனப் பொருள்படும் நிஷாகந்தி மலர் மலையாள இலக்கியங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க இடம் பெற்றுள்ளது. இந்த மலரை பெரும்பாலும் யாருமே பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் இதன் ஆயுள் மிகக் குறுகியது. இதன் மொட்டு சூரியன் மறைந்த பிறகு விரியத்தொடங்கி மறுநாள் சூரியன் உதிப்பதற்குள் வாடிவிடும். இது முழுமையாக விரிந்திருப்பது நள்ளிரவில் மட்டுமே.

ஆண்டுக்கு ஓரிருமுறை மழைக்காலத்தில் மட்டும் மொட்டு உருவாகி இரு வாரங்களில் முழுமை அடைகிறது. ஒரு மாலை வேளையில் அது விரியத் தொடங்குகிறது. நள்ளிரவில் அது சுமார் ஒரு அடிக்குமேல் விட்டமுள்ள அழகிய மலராக மலர்ந்து மணம் வீசுகிறது. விடிவதற்குள் வாடித் தலை சாய்ந்து விடுகிறது.

மணமான அன்றே விதவையான பெண்ணுக்கு உருவகமாக இந்தமலரை மலையாள இலக்கியங்கள் கூறுவதுண்டு. விரகதாபத்தின் சோகமலராக இந்த அழகிய மலரை மலையாளக் கவிதைகள் வர்ணிக்கின்றன.


நிலாவின்றே நாட்டிலே நிஷாகந்தி பூத்தல்லோ
மானச மைனே வரூ.. மதுரம் நுள்ளி தரூ..
நின் அரும பூ வாடியில் நீ தேடுவதாரே ஆரே..
என்ற மலையாளப் பாடல் மதுரமாய் ரீங்கரிக்கும்.


இது கள்ளிச்செடி வகையைச் சேர்ந்தது. பெரும்பாலான கள்ளிச் செடிகளைப் போலவே இதுவும் இலைகளை நட்டாலே அதிலிருந்து துளிர்விட்டு வளரக்கூடியது. செடி எளிதாக வளரும் என்றாலும் சில வகை மண்ணில் இது பூப்பது அரிது. சில இடங்களில் பூப்பதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். பொருத்தமான மண்வகையும் காலநிலையும் அமைந்தால் ஓரிரு ஆண்டுகளில் பூக்க ஆரம்பிக்கும். மழைக்காலங்களில் மட்டுமே மொட்டுவிடும். ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ பூக்கலாம்.

இதன் வாசனையும் அழகும் நள்ளிரவில் காண்பது அற்புதமான அனுபவம்.


தமிழ்ப் புலவர் கபிலர் கூறும் ’நள்ளிருள் நாறி’ (Selenicereus) இரவில் மணம் வீசும்
நிஷாகந்தி மலராக இருக்கக் கூடும். இது ‘இருள் வாசி’ எனப்படும் இருவாட்சி மலர் என்றுகூறுவோரும் உண்டு.
நிஷாகந்திப் பூ 2418458851_86a1506c28

நன்றி தமிழ் சாட்

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாயின் பாரம்

விவேகானந்தரிடம் ஒருவன் ''சுவாமி! குழந்தை உருவாக தந்தையும், தாயும் தான் காரணமாக இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே தாயை மட்டும் போற்றுகிறார்களே?'' என்று கேட்டான். அவனிடம் விவேகானந்தர், ''அதோ அங்கே தெரிகிறதே.. அந்த கல்லை எடுத்துவா'' என்றார். அவன் அந்த கல்லை தூக்கி வந்தான். அது இரண்டு கிலோ எடை கொண்டது. '' இந்த கல்லை உன் மடியில் நாலுமணி நேரம் கட்டிக்கொண்டு இரு. பிறகு என்னிடம் வா'' என்றார் விவேகானந்தர். அவனும் அந்த கல்லை நாலு மணிநேரம் கட்டிக்கொண்டு இருந்தான். அவனுக்க சிரமமாக இருந்தது. எழும்பிப் போனான். ''சுவாமி, என்னால் இந்த பாரத்தை தாங்க முடியவில்லை. சிறு சந்தேகம் கேட்டதற்கு இவ்வளவு பெரிய தண்டனை தந்துவிட்டீர்களே? என்றான். விவேகானந்தர் புன்னகைத்தார். ''இந்த இரண்டு கிலோ கல்லை உன்னால் நாலு மணிநேரம் கூட வைத்திருக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாயானவள் ஏறக்குறைய பத்து மாதம் குழந்தையை சுமக்கிறாள். அதை அவள் பாரம் என்று அலுத்துக்கொள்கிறாளா? அதனால்தான் தாய்க்கு அதிக முக்கியத்துவம்'' என்றார்.

 

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

june 05.2021

 

இன்று எனது இரண்டாவது ஊசி போடும் தவணை வந்து விட்டது..போடுவமா விடுவமா என்றால் போட வேண்டிய கட்டாயங்கள் நிறைய வந்து போய்க் கொண்டு இருக்கிறது..வேலை நிமித்தம் பல வைத்திய நிலையங்களை நாடிப் போக வேண்டும். மற்றும் இதர விடையங்களுக்குக்காக...போட்டும் காச்சல் வந்துட்டால்.....😷

3 hours ago, அன்புத்தம்பி said:

தாயின் பாரம்

விவேகானந்தரிடம் ஒருவன் ''சுவாமி! குழந்தை உருவாக தந்தையும், தாயும் தான் காரணமாக இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே தாயை மட்டும் போற்றுகிறார்களே?'' என்று கேட்டான். அவனிடம் விவேகானந்தர், ''அதோ அங்கே தெரிகிறதே.. அந்த கல்லை எடுத்துவா'' என்றார். அவன் அந்த கல்லை தூக்கி வந்தான். அது இரண்டு கிலோ எடை கொண்டது. '' இந்த கல்லை உன் மடியில் நாலுமணி நேரம் கட்டிக்கொண்டு இரு. பிறகு என்னிடம் வா'' என்றார் விவேகானந்தர். அவனும் அந்த கல்லை நாலு மணிநேரம் கட்டிக்கொண்டு இருந்தான். அவனுக்க சிரமமாக இருந்தது. எழும்பிப் போனான். ''சுவாமி, என்னால் இந்த பாரத்தை தாங்க முடியவில்லை. சிறு சந்தேகம் கேட்டதற்கு இவ்வளவு பெரிய தண்டனை தந்துவிட்டீர்களே? என்றான். விவேகானந்தர் புன்னகைத்தார். ''இந்த இரண்டு கிலோ கல்லை உன்னால் நாலு மணிநேரம் கூட வைத்திருக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாயானவள் ஏறக்குறைய பத்து மாதம் குழந்தையை சுமக்கிறாள். அதை அவள் பாரம் என்று அலுத்துக்கொள்கிறாளா? அதனால்தான் தாய்க்கு அதிக முக்கியத்துவம்'' என்றார்.

 

அவ்வப்போது நேரம் எடுத்து நல்ல நல்ல விடையங்களை இணைக்கும் தம்பிக்கு மிகவும் நன்றி...✍️

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அசைவ விரும்பிகள் ஏன் சைவ விலங்குகளை சாப்பிடுகின்றன?

மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, மாஸ்கோ சென்றிருந்தார். அவர், கம்யூனிச எதிர்ப்பாளர். ரஷ்ய அதிபராக இருந்த பிரஷ்னேவுக்கும், தேசாய்க்கும் இடையே விண்வெளி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக அமையவில்லை. ''நான் சந்தோஷமான நேரங்களில் விருந்தினருடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவேன். ஆனால், உங்களுடன் டீ மட்டும்தான் குடிக்கலாமென தோன்றுகிறது '' என்றார் பிரஷ்னேவ். அதற்கு,''நான் டீ குடிப்பதை விட்டு 70 ஆண்டுகள் ஆகின்றன'' என்றார் தேசாய். பிரஷ்னேவ் விடவில்லை. ''சரி, நாம் சாப்பிடலாம். நான் அசைவம், நீங்கள்?'' என்று கேட்டார். '' நான் சைவம். அசைவ விரும்பிகள் ஏன் சைவ விலங்குகளை சாப்பிடுகிறீர்கள் என்றுதான் எனக்கு தெரியவில்லை'' என்றார் தேசாய், கிண்டலாக. பிரஷ்னேவுக்கு கடுங்கோபம் என்றாலும், தேசாயின் மதிநுட்பத்தை ஆச்சரியத்துடன் ரசித்தார்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, யாயினி said:

june 05.2021

 

இன்று எனது இரண்டாவது ஊசி போடும் தவணை வந்து விட்டது..போடுவமா விடுவமா என்றால் போட வேண்டிய கட்டாயங்கள் நிறைய வந்து போய்க் கொண்டு இருக்கிறது..வேலை நிமித்தம் பல வைத்திய நிலையங்களை நாடிப் போக வேண்டும். மற்றும் இதர விடையங்களுக்குக்காக...போட்டும் காச்சல் வந்துட்டால்.....😷

அவ்வப்போது நேரம் எடுத்து நல்ல நல்ல விடையங்களை இணைக்கும் தம்பிக்கு மிகவும் நன்றி...✍️

யாயினி இரண்டாவது ஊசி போட்டு விட்டீர்களா? உடல்நலம் எவ்வாறு இருக்கிறது?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜெகதா துரை said:

யாயினி இரண்டாவது ஊசி போட்டு விட்டீர்களா? உடல்நலம் எவ்வாறு இருக்கிறது?

ம்ம் மோடோனா போட்டேன்.நேற்று ஒன்றும் தெரியவில்லை.இராத்திரிக்கு பிறகு மிகவும் களைப்பாக இருப்பது போல் ஒரு உணர்வு.மிகவும் இயலாது வந்தால் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள் பார்க்கலாம்..😌👋

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, யாயினி said:

ம்ம் மோடோனா போட்டேன்.நேற்று ஒன்றும் தெரியவில்லை.இராத்திரிக்கு பிறகு மிகவும் களைப்பாக இருப்பது போல் ஒரு உணர்வு.மிகவும் இயலாது வந்தால் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள் பார்க்கலாம்..😌👋

கவனமாக இருங்கள். 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

மதத்தையும் அரசியலையும் கலக்காத மாசற்ற மன்னராகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான்!

tipu.jpg
திப்பு சுல்தான் (1750 - 1799)

திப்பு சுல்தான் 1787 ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கொள்கைகள் சிலவற்றைப் பிரகடனம் செய்தார். அவற்றை வரி தவறாமல் வாசித்து, வரிகளுக்குள் பொதிந்து கிடக்கும் கருத்துகளின் ஆழ அகலங்களை ஆய்வுசெய்து பார்த்தால் திப்புவின் ஆட்சித் திறனும் அரசியல் மேன்மையும் வெளிப்படும். “பிற மதங்களிடம் சகிப்புத் தன்மையே புனித குரானின் அடிப்படைக் கோட்பாடு. மத விஷயங்களில் நிர்ப்பந்தம் என்பதே கூடாது; அவரவர் விருப்பத்தை மதிப்பதே புனித குரானின் வாக்கு; பிற மதங்களின் விக்ரகங்களை அவமதிக்காதீர்; பிற மதத்தினருடன் வாதம் புரியக் கூடாது எனக் கட்டளையிடுகிறது புனித குரான். மனிதர்கள் தங்கள் நற்காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது அவசியம்; நமக்கொரு நல்ல மார்க்கம் வழங்கப்பட்டுள்ளது.

“அல்லா விரும்பியிருந்தால் எல்லோரையும் ஒரே இனமாகவே படைத்திருப்பார். எனவே, ஒருவர் மற்றவர் நற்காரியங்களுக்காகத் துணை புரியுங்கள் என்கிறது திருமறை. எங்களுக்கு ஓர் இறைவனைக் காட்டப்பட்டுள்ளார். “மதப் போர்வையில் சிலர் இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் அத்துமீறி நுழைந்து பொய்யையும், கடவுள் தன்மையற்ற வெறுப்பையும், பகைமையையும், உபதேசிப்பதைக் கண்டு வேதனைப்படுகிறேன். சாதி, மதம், இனம் இவற்றின் பெயரால் நமது மைசூர் அரசின் ஆளுகையில் உள்ள எவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதையும், ஒதுக்குவதையும் நான் சட்டவிரோதமானது என அறிவிக்கிறேன்.”
காலத்தால் அழிக்க முடியாத இந்த அறிவிப்பை திப்புவின் ஆட்சிக்காலத்திலிருந்த மக்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் கல்வெட்டாய்ப் பதிக்க முயற்சித்தார் திப்பு. திப்பு தன்னை ஒரு முழுமையான இஸ்லாமியராகவே வடிவமைத்துக் கொண்டார். அவர் சார்ந்த மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். ஆனாலும் அவரது ஆட்சியில் இந்துக்களுக்கு சுதந்திரமான முழு வழிபாட்டு உரிமைகள் இருந்தன. அவரது ஆட்சி அதிகாரத்தில் இந்துக்கள் பலர் மிகவும் உயர்மட்டப் பதவிகளில் இருந்தனர். தவறு நடக்கும் போது இஸ்லாமியர் என்பதற்காக திப்பு என்றுமே தனிச் சலுகை வழங்கியதில்லை. இந்துக் கோயில்களுக்கு மானியங்களை அள்ளி அள்ளி வழங்கினார் திப்பு.

சிருங்கேரி மடத்தை மராட்டிய மன்னர்களின் வெறிகொண்ட தாக்குதலிலிருந்து காப்பாற்றியவர் திப்பு. மத விவகாரங்களை முறையாகக் கவனிப்பதற்கென்று தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை கண்ணின் கருமணிபோல் காப்பாற்றினார். மைசூர் நாட்டில் நஞ்சன்கூடு பகுதியில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு திப்பு வழங்கிய ‘மரகதலிங்கம்’ முக்கியத்துவம் பெற்றதாகும். ஒன்பதரை அங்குலம் உயரமுள்ள பச்சை வண்ண மரகதலிங்கம் இப்போதும் கோயிலில் பார்வதி சிலைகுப் பக்கத்தில் உள்ளது. இன்றளவும் இந்த லிங்கம் பார்வதியுடன் சேர்த்து பரவசத்தோடு மக்களால் வழிபடப்படுகிறது. திப்பு வழங்கிய இந்த அரிய மரகதலிங்கத்தை ‘பாதுஷா லிங்கம்’ என்றே அழைக்கின்றனர்.

திப்புவின் மலபார் படையெடுப்பின்போது குருவாயூர் கைப்பாற்றப்பட்டது. அங்குள்ள புகழ்மிக்க கிருஷ்ணன் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள்,திப்புவின் படை முற்றுகையிட்டுவிட்டதால் கோயிலுக்கு சேதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினர். அவசர அவசரமாக கருவறையில் இருந்த கிருஷ்ணன் சிலையை அப்புறப்படுத்தி வேறு ஒரு மறைவான இடத்தில் கொண்டுபோய் வைத்தனர். இந்தச் செய்தியறிந்த திப்பு, அர்ச்சகர்கள் அனைவரையும் அழைத்து, தைரியம் கூறியதுடன், தாமே முன்னின்று, மீண்டும் கருவறையில் இருந்த இடத்திலேயே அச்சிலையை ‘பிரதிஷ்டை’ செய்து, தானும் மகிழ்ந்து அனைவரையும் மகிழ்வித்தார். அத்துடன் குருவாயூர் வட்டத்தில் வசூலாகும் வரிப்பணம் முழுவதும் கிருஷ்ணன் கோயிலுக்கே அர்ப்பணம் செய்தார். திப்பு ஆட்சியின் தலைநகரமாக விளங்கிய சீரங்கப்பட்டணத்தில் சீரங்கநாதர் கோயில் உள்ளது. “அரண்மனை அருகிலேயே அமைந்த இக்கோயிலின் மீது திப்புவுக்குத்தனி ஈடுபாடு இருந்தது. இக்கோயிலுக்கு திப்பு வழங்கிய பல வழிபாட்டுப் பொருள்கள் இன்றும் அவர் பெயரைத் தாங்கியபடி அக்கோயிலில் உள்ளன.

தனது கொள்கையறிவிப்பால் மட்டுமல்லாது நடைமுறையில் ஆட்சியிலும், தனிப்பட்ட வாழ்விலும் இத்தகைய மக்கள் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றியவர் திப்பு. “இறைவனின் தோட்டத்து மலர்கள் பலநிறம் கொண்டவை. அவை அன்பு எனும் தேன் நிறைந்தவை. அதுபோலவே மதங்களும் அன்பை வளர்க்கும் பல நெறிகளாகும்” என்கின்ற குரானின் வாசகத்தை பிறழாமல் உணர்ந்து பின்பற்றியவர் திப்பு சுல்தான் என்று இஸ்லாமிய அறிஞர்களே பாராட்டி இருக்கின்றனர். மதத்தையும் அரசியலையும் கலக்காத மாசற்ற மன்னராகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான்.

 

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..
=====================================
➤லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.
➤நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.
➤நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.
➤விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.
➤விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.
➤கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.
➤கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்
➤கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்.
 
12033243_875252959234677_541707312376362
 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, அன்புத்தம்பி said:

41bf5910.jpg

உங்கள் நேரத்திற்கும் பகிர்வுகளுக்கும் மிகவும் நன்றி 👋

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்? -பொது அறிவு தகவல் Began_101.மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?
பேகன்
-
2. நாற்கவிராச நம்பி எழுதிய நூல்?
அகப்பொருள்
-
3. முற்றியலுகரத்தில் முடியும் எண்?
7
-
4. பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது?
முல்லைப் பாட்டு
-
5. எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் 
அது _______________ எனப்படும்?
தன்வினை
-
6. பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு 
எடுத்துக்காட்டு?
யாதும் ஊரே யாவரும் கேளீர்
-
7. ”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை 
இகழ்வாரைப் பொறுத்தல் தலை”-இக்குறளில் அமைந்துள்ள 
அணி யாது?
உவமையணி
-
8. ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர்?
திருமூலர்
-
9. ”காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி 
வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் 
ஓடிபோவானே” எனப் பாடியவர்?
-
தேசிக விநாயகம் பிள்ளை
-
10. வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர 
மெய் _____________ ஆக மாறும்?
”ட” கர மெய்
-
--------------------------------------
நன்றி-இணையம்
 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1500 ஆண்டுகளுக்கும் முன்பே அறவியலுடன் அறிவியல் கலந்த நம் தமிழர் நூல் திருவாசகம்!
மானுடப் பிறப்பின் தோற்றத்தில், தாய்வயிற்றினுள் கருவாய் இருக்கும் போதே எத்தனை வகையான அழிவுகளில் இருந்து தப்பிப்பிழைத்து பிறவி எடுக்கிறோம் என்பதை மாணிக்கவாசகர் தமது போற்றித் திருஅகவலில்...
“மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர்இரு திங்களில் பேர்இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறுஅலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படுந்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்”
-.
-திருப்பூர். இரா. சுகுணாதேவி-
May be an image of rose
 
 
 
 
 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
ராஜராஜேஸ்வரம் 🔥🔥🔥🔥
மிக மிக பொருத்தமான பெயர். திருக்கோவிலுக்குள் சென்று கருவறையில் உடையார் ஸ்ரீ ராஜராஜேஸ்வரம் உடையாரை கண் குளிர தரிசித்து விட்டு திருக்களிற்றுப்படிகளில் இறங்கி வந்து கோவிலை வலம் வந்த போது தான் தஞ்சை திருக்கோவிலின் பெயரான "ராஜராஜேஸ்வரம்" மற்றும் இறைவன் "உடையார் ஸ்ரீ ராஜராஜேஸ்வரமுடையார்" பெயர்களில் உள்ள ராஜகம்பீரம் உணர முடிந்தது.
இறைவன் மீது தான் கொண்டிருந்த உண்மையான நம்பிக்கை, கலைகளை போற்றிய மாண்பு, தமிழ் மீது தான் கொண்ட காதலை மெய்ப்பிக்க கல்வெட்டுகளில் த…
See More
May be an image of outdoors, temple and text that says 'ராஜராஜேஸ்வரம் உலகமே வியக்கும் திருக்கற்றளியை தஞ்சையில் எழுப்பி 'ராஜராஜேஸ்வரம்" என ராஜ கம்பீர பெயரிட்டு மகிழ்ந்தவர் "மாமன்னர் ராஜராஜ சோழர்"'
 
 
 
 
 
 

நேரப்போக்கிற்கு வலைத்தளங்களில் படித்து விட்டு பிடித்தவற்றை இங்கும் பகிர்வது..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்
ஒருவரான 🔰🔰 வாரன் பபேட் 🔰🔰
நமக்கு கூறும் அறிவுரைகள் அல்ல வாழ்க்கையின் பணத்தின் நெறிமுறை .
1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
( ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும் .)
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
( ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும் .)
3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
( சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது. )
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....
( எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பி விடக்கூடாது.)
இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!
► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!
🔰🔰 நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. ஓடுவது முள் அல்ல..! உன் வாழ்க்கை 🔰🔰
Amudhan maheshvarma .
May be an image of 1 person and text that says 'நீ உறங்கிக் கொண்டு இருந்தாலும் உனக்கு வருமானம் வரக்கூடிய வாய்ப்பை நீ ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் சாகும் வரை நீ உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.. ç Hel'
 
 
 
 
 
 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
 

டின் உணவு’ பிறந்தவிதம்

 

 
இன்று பெரிய சூப்பர் மார்க்கெட்களில் `டின்களில்’ அடைக்கப்பட்ட உணவுகள் கிடைக்கின்றன. இவற்றின் தாயகம் எது தெரியுமா? இத்தாலி நாட்டுப் போர்க்களம்தான். 1796-ல் பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் தன் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்த 3 லட்சத்து 50 ஆயிரம் போர் வீரர்களை இத்தாலிக்கு அனுப்பினார். அந்த வீரர்கள் எதிரி நாட்டு வீரர்களுடன் மட்டுமல்ல, பசியுடனும் போராட வேண்டியிருந்தது.

படை வீரர்கள் நன்கு சாப்பிட்டு நலமாக இருந்தால்தான் போரில் வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்தார் நெப்போலியன். அதனால் பிரான்சுக்குத் திரும்பியதும், `பயணத்தின்போது உணவைக் கெட்டுப்போகாமல் வைத்திருக்கும் வழிமுறையைக் கண்டுபிடிப்பவருக்குப் பெரிய பரிசு வழங்கப்படும்’ என்று அறிவித்தார். நிக்கோலஸ் அப்பெர்ட் என்ற மளிகைக்கடைக்காரர் ஏற்கனவே அதுபற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார். காற்றுப்படாத உணவுகள் கெட்டுப் போகாமல் அதிக காலம் இருக்கும் என்று அவர் கண்டுபிடித்தார். காற்று எளிதில் புக முடியாத கண்ணாடிப் பாத்திரங்களை நிக்கோலஸ் வடிவமைத்தார். அதனுள் உணவை அடைத்து வைத்துப் பரிசோதனை செய்தார். மாதக் கணக்கில் உணவு கெட்டுப் போகாமல் இருந்தது. நெப்போலியனின் பரிசும் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அந்தக் கண்ணாடிப் பாத்திரங்கள் அதிகக் கனமுள்ளதாகவும், செலவு பிடிப்பதாகவும் இருந்தன.

பிரையன் டான்கின் என்ற பிரிட்டீஷ்காரர் அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அவர், கண்ணாடிப் பாத்திரங்களுக்குப் பதிலாக தகர டின்னை பயன்படுத்தினார். மெல்லிய தகரத்தைச் சுருட்டி, இரு முனைகளையும் ஒட்டினார். மேல்- கீழ் பக்கங்களில் மெல்லிய தகடுகளால் மூடினார். 1812-ல் காய்கறிகள், சமைத்த உணவுகளை டின்களில் அடைத்து விற்கத் தொடங்கினார்.

டின் உணவுகள் வருவதற்கு முன், உயிருள்ள கால்நடைகளையே கப்பலில் ஏற்றிச் செல்வார்கள். அவை சமைக்கப்படும் வரை உணவு கொடுத்து வளர்ப்பார்கள். டின்கள் வந்த பிறகு அந்தத் தொல்லை நீங்கிவிட்டது.
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நத்தையைப் பற்றி அறிவோம்.... Snail01

மோலஸ்க் பைலம் என்ற தொகுதியில் ஒரு வகையான கேஸ்ட்ரோபோட்ஸ் (gastropods.) என்ற வகையை சார்ந்தது தான் நத்தை.இதற்கு தூரத்து சொந்தம் ஆக்டோபஸ். கிரீக்கில் காஸ்ட்ரோ என்றால் வயிறு, போடோஸ் என்றால் கால்கள் , வயிற்றில் கால்களைக்கொண்டது என பொருள். நத்தை வயிற்றின் மீது தான் ஊர்ந்து செல்கிறது, அதன் வாயும் அங்கே தான் இருக்கிறது, தட்டு , ஸ்பூன் எல்லாம் வைத்து சாப்பிடாது, அதன் சாப்பாடே தட்டு தான் , எதன் மீது ஊர்ந்து செல்கிறதோ அதனை உண்ணும்.

நில நத்தைகள், கடல் நத்தைகள் என்று இரண்டு வகை உண்டு , வயல்களிலும் தோட்டத்திலும் காண்பது நிலவகை. முன்னால் இரண்டு நுகர் உணர்வு கொம்புகள் உண்டு அதன் முனையில் சக்திவாய்ந்த கண்கள் உண்டு!அவை ஊர்ந்து செல்லும் போது ஒரு கோழை படிவத்தை விட்டு செல்லும் அது எளிதாக நகர உதவுகிறது.மேலும் அதன் உடல் உலராமல் இருக்கவும் பயன்படுகிறது.கோடைகாலத்தில் நீண்டகால உறக்கத்தில்(hybernation) சென்று விடும் நத்தை அப்போது இந்த கோழைபடிவத்தை வைத்து தான் உடலை போர்த்திக்கொள்ளும். மீண்டும் மழை பெய்தவுடன் வெளிவரும்.

* ஒரு நத்தையால் கூர்மையான பிளேடு் ஒன்றின் விளிம்பில் கூட நகர்ந்து செல்ல முடியும் அத்தனை வலிமையானது அதன் பாதங்கள் மற்றும் அடிவயிறு!

*மூல வியாதிக்கு நத்தை கறி சாப்பிடுவது இன்றும் இருக்கும் நாட்டு வைத்தியம்!

* சில நத்தைகள் விஷத்தன்மை கொண்டது , பெப்டைட்(peptides) வகை விஷம்.அதிலும் கடலில் வாழும் கூம்பு வடிவ நத்தையின்

கூம்பு வடிவ நத்தை

(Conus magus,Conus geographus) விஷம் வீரியமானது அதன் இரைகளை விஷம் கொண்ட நாக்கால் அம்புவிடுவது போன்று விட்டு தீண்டி செயலிழக்க செய்து சாப்பிடும். அதன் விஷம் ஒரு வினாடியில் 10 இல் ஒரு பகுதி நேரத்தில் தாக்கி செயலிழக்க செய்யும், இயற்கை விஷத்தில் வேகமானது இது தான். ஆனால் மனிதர்களை தாக்குவதில்லை. தெரியாதனமாக நாமே கையால் தொட்டு கொட்டு வாங்கினால் உடல் உறுப்புகள் செயல் இழக்கப்படலாம்,மரணம் வெகு அரிதே!

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சில்வண்டு

gucfs_213633.jpg

 

காட்டுக்குச் செல்பவர்கள் அனுபவிக்கும் ஒரு விஷயம் இரவு நேரத்தில் பெரும் கச்சேரியைப் போன்று கூட்டங்கூட்டமாக ஏதோ ரீங்காரம் செய்வதை கேட்டிருக்கலாம். இந்த ரீங்காரமிடும் சிறு பூச்சி, ஈயைப் போன்ற அளவுடனே இருக்கும். ஆங்கிலத்தில் இப்பூச்சியின் பெயர் சிகாடா. தமிழில் சில்வண்டு என்றும் சிதடிப் பூச்சி என்றும் அழைக்கப்படும் அப்பூச்சியின் உலகத்துக்குள் கொஞ்சம் எட்டிப் பார்ப்போம். மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலங்களில் அதிகம் உலவும் இப்பூச்சிகள் மற்ற இடங்களிலும் காணக் கிடைக்கும். பெண் பூச்சிகள் மரத்தின் பொந்துகளில் முட்டையிடும்.

முட்டை ஒன்றரை மாதத்தில் பொரிக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம்பூச்சி கீழே விழுந்து தரையில் குழி பறித்து உள்ளே சென்று தங்கிவிடும். எத்தனை நாட்களுக்கு? நாட்களல்ல, ஆண்டுகளுக்கு! பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னரே, மண்ணுக்குள் இருந்து வெளிஉலகுக்கு வரும். அதுவரை ஜாலியாக மரத்தினுடைய வேர்களின் முனைப் பகுதியில் போய் சாவகாசமாகத் தங்கி, தனக்குத் தேவையான உணவை வேரிலிருந்தே பெற்றுக் கொள்ளும். பதினேழு ஆண்டுகள் மண்வாசத்துக்குப் பிறகு வெளியே வரும் பூச்சிகள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறது தெரியுமா? ஆண்டுகளல்ல, நாட்கள்! வெறும் ஒரு வாரம் மட்டுமே. அதிலும் பெரும்பாலான நேரம் இனப்பெருக்கம் செய்வதிலேயே கழித்து விடும். வெவ்வேறு அம்மாக்களின் முட்டைகளிலிருந்து வெளியே வந்த பூச்சிகள் எல்லாம் சொல்லி வைத்தது போல 17 ஆம் ஆண்டிலோ அல்லது 13 ஆம் ஆண்டிலோ வெளியுலகுக்கு வருவது ஏன் என்று ஆராய்ச்சியாளர்கள் மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் பூச்சிகள் ஏன் அந்த ஓசையை எழுப்புகின்றன தெரியுமா?

அவை உள்ளேயும் வெளியேயும் சவ்வை விரைவாகத் தள்ளி ஓசை எழுப்புகின்றன. சவ்வின் உட்புறம் உள்ள தசையை சுருக்கி விரிப்பதன் மூலம் இந்த சவ்வை அசைக்கின்றன. இந்தத் தசை விநாடிக்கு நூறு முறைகூட சுருங்கி விரியும்.

அடிவயிற்றில் உள்ள மத்தளம் போன்ற சவ்வை விரைவாக அதிர வைத்து ஓசை எழுப்புகின்றன.

ஆயிரக்கணக்கான பூச்சிகள் ஒரு சேர குரல் கொடுக்கும்போது, கூட்டுஇசை போலிருக்கும். புதிதாக மலைப்பகுதிக்குச் சென்றால், இந்த ஓசையின் அளவை வைத்தே காடு எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைக் கூறிவிடலாம். நிறைய பூச்சிகள் ரீங்காரமிட்டால், அந்தக் காடு மனிதர்களின் கைகளில் இருந்து தப்பி, தொந்தரவில்லாமல் இருக்கிறது என்று அர்த்தம். குறைவாகக் கேட்டால், காடு அழிந்து வருகிறது என்று பொருள்.

அமைதிப் பள்ளத்தாக்குப் போன்ற ஒரு சில அடர்ந்த காடுகளில் மட்டும் இந்தப் பூச்சிகளின் ஓசை கேட்பது இல்லை. அதனால்தான் அந்தக் காடுகளுக்கு அமைதிப் பள்ளத்தாக்கு என்று பெயர் வந்தது.

பொதுவாக, இணை சேர்வதற்காகவே ஆண் பூச்சிகள் பெண் பூச்சிகளைக் கவர்வதற்காக இந்த ஓசை எழுப்புகின்றன. இணைசேரும் காலம் முடிந்ததும், மரப்பொந்தில் சென்று முட்டையிடும். முட்டை பொரித்து வெளி வந்தவுடன் இளம்பூச்சி, டாடா காட்டிவிட்டு மண்ணுக்குள் சென்று விடும். அப்புறமென்ன, பதிமூன்று, பதினேழாவது ஆண்டில்தான் தங்கள் நிலவாசத்தை முடித்துக் கொண்டு வனவாசத்துக்கு வரும், வெறும் 7 நாள் ஆயுசுக்காக...

 

http://tamizhukkuamuthentruper.blogspot.com/2016/04/blog-post_18.html

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.