Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
உலகத்திலேயே தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்ல எண்களையும் ரூபாய் தாள்களில் பயன் படுத்தப்படும் ஒரே நாடு மொரீசியஸ்
196177479_1057293584676642_2530401534602
 
 
189928980_1057293628009971_4127717297866
 
 
 
 • Like 2
Link to comment
Share on other sites

 • Replies 3.7k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்
தமிழ் அகராதியின் தந்தை ....😍😍
May be an image of 1 person and text
 
 
 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

12 ஆழ்வார்கள

 
Tamil-Daily-News-Paper_4177776575089.jpg
 
 
 1. பொய்கையாழ்வார்
 2. பூதத்தாழ்வார்
 3. பேயாழ்வார்
 4. திருமழிசையாழ்வார்
 5. நம்மாழ்வார்
 6. மதுரகவி ஆழ்வார்
 7. குலசேகர ஆழ்வார்
 8. பெரியாழ்வார்
 9. ஆண்டாள்
 10. தொண்டரடிப்பொடியாழ்வார்
 11. திருப்பாணாழ்வார்
 12. திருமங்கையாழ்வார்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு க
தாயுதம் பயிற்சி அளித்தவர்?
பலராமன்

2. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?
கிளி

3. ”தாய்மொழி” என்பது?
தாய் குழந்தையிடம் பேசுவது

4. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு 
முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”-எனும் தொடர் 
உணர்த்துவது?
தமிழின் பழமை

5. இரண்டாம் வேற்றுமை உருபு?


6. ”வனப்பு” எனும் சொல்லின் பொருள்?
அழகு

7. ”காலை மாலை”-இதில் பயின்று வருவது?
உம்மைத் தொகை

8. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் 
கொள்ளும் வகையில் அமைப்பது?
கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்

9. ”தளை” எத்தனை வகைப்படும்?
7

10. ”அஞ்சு”-இதில் உள்ள போலி?
முற்றுப் போலி

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
 

தமிழ் ஆண்டுப்பெயர்கள்

நற்றோன்றல் 1 பிரபவ
உயர்தோன்றல் 2 விபவ
வெள்ளொளி 3 சுக்கில
பேருவகை 4 பிரமோதூத
மக்கட்செல்வம் 5 பிரசோற்பத்தி
அயல்முனி 6 ஆங்கிரச
திருமுகம் 7 ஸ்ரீமுக
தோற்றம் 8 பவ
இளமை 9 யுவ
மாழை 10 தாது

ஈச்சுரம் 11 ஈஸ்வர
கூலவளம் 12 வெகுதான்ய
முன்மை 13 பிரமோதி
நேர்நிரல் 14 விக்ரம
விளைபயன் 15 விஜூ
ஓவியக்கதிர் 16 சித்ரபானு
நற்கதிர் 17 சுபானு
தாங்கெழில் 18 தாரண
நிலவரையன் 19 பார்த்திப
விரிமாண்பு 20 விய

முற்றறிவு 21 சர்வசித்
முழுநிறைவு 22 சர்வதாரி
தீர்பகை 23 விரோதி
வளமாற்றம் 24 விக்ருதி
செய்நேர்த்தி 25 கர
நற்குழவி 26 நந்தன
உயர்வாகை 27 விசய
வாகை 28 சய
காதன்மை 29 மன்மத
வெம்முகம் 30 துன்முகி.wikipedia.org

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
192668460_4004160513005286_5152044455323
 
விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய நுட்பங்கள்
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கட்டை விரல்
➖➖➖➖➖
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.
ஆள்காட்டி விரல்
➖➖➖➖➖➖
உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.
உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.
நடுவிரல்
➖➖➖➖➖
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.
மோதிரவிரல்
➖➖➖➖
ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.
மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.
சிறுவிரல்
➖➖➖
சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.
மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.
உள்ளங்கை
➖➖➖➖
மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.
மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Ontario அதன் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு வெள்ளிக்கிழமை திரும்பியது.
மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு திரும்பிய Ontario! - தேசியம்
 
 
தெசியம்.கொம்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கடும் பனி இரவில் தன் வீட்டின் முன் ஏழை மனிதன் இருப்பதை அவதானித்தார் ஒரு செல்வந்தர்.

முதியவருக்கு அருகில் வந்து கேட்டார்
“வெளியே குளிர் உங்களுக்கு சூடான உடைகள் இல்லயா? உங்களுக்கு குளிர் இல்லையா?

முதியவர் பதிலளித்தார்,

” எனக்கு சூடான உடைகள் இல்லை , ஆனால் நான் இப்போது அதற்கு பழக்கப்பட்டுள்ளேன் “

கோடீஸ்வரன் பதிலளிக்கிறார்

“நான் வரும் மட்டும் காத்திருங்கள் நான்
உங்களுக்கு ஆடை தருகிறேன்”

அந்த ஏழை மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான், அவன் காத்துக்கொண்டிருந்தான். அந்த
மனிதன் தன் வேலையால் ஏழை மனிதனை மறந்து விட்டான்.

காலையில் அவர் அந்த ஏழை மனிதனை நினைவு கொண்டார். அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அந்த முதியவர் குளிரால் இறந்துவிட்டார்.

அந்த மனிதன் கையில் எழுதப்பட்டுள்ளது ” எனக்கு சூடான உடைகள் இல்லாத போது, நான்
குளிருக்கு போராட முடிந்தது. ஆனால் நீங்கள் எனக்கு உதவ வாக்குறுதி அளிக்கும் போது, நான் உங்கள் வாக்குறுதிக்கு அடிமையாகி, நான்
குளிர்க்கு எதிராக போராடும் திறனை
இழந்துவிட்டேன்.”

வாக்குறுதி அளிக்கும் முன் சற்று யோசியுங்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா என்று. அது இன்னொருவரின் மரணத்திற்கு கூட வழிவகுக்கலாம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
நட்பு..
" நள்ளுதல்"
" கூடுதல் "
" பழகுதல்"
சொல்லும் போதே
எத்தனை இன்பம்
எத்தனை இனிமை
எத்தனை மணம்
நட்பு..
"அகம்" சார்ந்த
உணர்வு.
இரு உள்ளமதைக்
கட்டும்
ஆதனின்
பந்தம்
நட்பு..
அருமையானது
அற்புதமானது
அரணானது
ஆழமானது
நட்பு..
மனங்களுள்
மணம் வீசும்
மலர்.
நட்பு..
உனக்கென நான்
என
உடன் வரும்
துணை.
நட்பு..
வலிகள் கடக்க
வலிமை தரும்
வலிய சக்தி
நட்பு ..
துன்பம் தாங்கி,
துயர் விலக்கி,
வாழ்விலும்
தாழ்விலும்
பிரியாத
பாதுகாப்பு .
நட்பு..
அகவை, அறிவு,
ஆற்றல்,செல்வம்,
பதவி, பலம்,
எல்லாம் கடந்து
உறவாய் நிற்கும்
உயரிய நிலை
நட்பு..
ஆணோடு ஆணா,
பெண்ணோடு பெண்ணா,
இதையும் கடந்து
ஆணும், பெண்ணுமா
நேற்றும், இன்றும்,
ஏன் நாளையும்
கூட இது
விடையிலா
வினாவே
நட்பு..
ஔவையோடு அதியமான்
கொண்ட அன்பு
தமிழ் வாழ
நெல்லிக்கனி உவந்த
பாலினம் சாராத
காலத்தால் அழியாத
தூய நிலை.
நட்பு..
"ஈருடல் ஓருயிர்"
என்னும்
மனம் ஒன்றுபடுதல்
நட்பு..
நீ வேறு,
நான் வேறு என
பிரித்தறியப்படாது
"இருவரும் ஒன்றே"
என்னும்
உணர்வுகளின்
சங்கமத்தில் வாழும்
தனி உலகம்.
நட்பு..
அறிவும்,
அனுபவமும்
நிறைந்த
நல்லோர்பால்
நாளும் வளரும்
"வளர் பிறை" .
நட்பு..
அறிவற்ற ,
அனுபவமற்ற
கீழானவர் பால்
தோன்றின்
"தேய் பிறை" என
தேய்ந்து விடும்.
நட்பு ..
கூடிக் கலந்து,
சிரித்து
மகிழ்வதன்று.
வரம்பு கடந்தால்,
வரையறை மீறினால்,
நெறி கடந்து
தவறு இழைத்தால்,
முன் நின்று ,
இடித்துக் கூறி
நல்வழிப்படுத்துவது
நட்பு..
தீயவை விலக்கி
மனமதைச்
செம்மைபடுத்தி
நேர்வழி செலுத்தி
துன்பமதை உடனிருந்து,
தோள் கொடுத்துத்
தாங்கி,
பகிர்ந்து,
துயர் துடைத்து
"உனக்கென நான்"
என
உணர்த்துவது.
நட்பு..
தோழன்/ தோழி யின்
துயர் துடைப்பதில்
"வினாடி" யும்
விரயமாக்காது
விரைந்தோடித்
தாங்கும் காப்பு.
நட்பு..
கிட்டுவது
"பெறுதற்கரியதோர் பேறு"
நட்பு..
கிட்டியவர்கள்
"பெரும்பேறு பெற்றோர்"
நட்பு..
கடித்தாலும்,
ஒடித்தாலும்,
நசுக்கினாலும்,
பிழிந்தாலும்
கரும்பு போல்
இனிப்பானது
கண்டவுடன்
கண்மலர்தல்
நட்பன்று.
முகமலர்தல்
நட்பன்று.
நட்பு.
அன்பினால்
"அகம்" மலரும்
நிலை
இரு உயிரும்
ஒன்றை ஒன்று
உணரும் நிலை
ஒத்த மனம்
அதில்
ஊற்றெடுக்கும்
உன்னத
உணர்வுகள்
கோடி தேடிக்
குவிப்பதிலும்
உற்ற நண்பன்
ஒருவனைத்
தேடிக் கொள்வது
கோடி நலம்
நட்பிற்குத்
தொலைபேசி
உரையாடல்
கட்சேவை
குறுஞ்செய்தி
பரிமாற்றம்
நேரடி சந்திப்பு
மிதமிஞ்சிய
பழக்கம்,
நெருக்கம்
தேவையன்று
நட்பு..
தாயாக,
மகளாக,
தமக்கையாக,
தாரமாக,
தோழியாக
பல நிலைகளில்
பரிணமிக்கும்
உன்னத நிலை
நட்பு..
தந்தையாக,
மகனாக,
சகோதரனாக
கணவனாக,
தோழனாக
பல நிலைகளில்
துணை நிற்கும்
தூய நிலை
"இவர் எனக்கு இத்தன்மையவர்"..
" நான் அவருக்கு இன்னம்"..
புனைந்துரைக்கும்
நட்பில்
இரு உள்ளங்கள் அல்ல
இரு உருவகங்கள்
நட்பு கொள்ளுகின்றன.
நல் நட்பு
சிறப்பிழக்கும்
தருணம்
"இது"
உள்ளூரக் கனிந்து,
உயிருறவாய்
நெருங்கி உள்ளோர்க்கு
"முகமனுரை"
தேவையன்று
முகமனுரை
பெருகப் பெருக
அந்தரங்க நட்பு
அகத்தை விட்டு
அகன்று விடும்.
பாசம், நேசம்,
வீடு, உறவு
நூறு சொந்தம்
வந்த பின்னும்
மனம் தேடுகின்ற
அமைதி
நட்பு!
இந்தப்
பண்பான,
அன்பான,
பழகிய,
அழகிய,
இனிய ,
பழைமையான
நட்பைத்
தோழமையோடு
உரிமையோடு
உணர்ந்து,போற்றி
வாழ்தல்
என்றும் வாழ்வில்
இனிமையே!
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல
வினைக்கரிய யாவுள காப்பு - 781
நவில் தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு - 783
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
நட்பாம் கிழமை தரும் - 785
முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகம் நக நட்பது நட்பு - 786
இனையர் இவர்எமக்கு இன்னம் யான் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு - 790
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
மங்கையராய் பிறப்பதற்கே
நல்ல மாதவம் செய்திட
வேண்டுமம்மா..
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
பெண்ணே நீ..
அன்பில் அன்னை..
அழகில் தேவதை..
அறிவில் அமைச்சு..
பெண்மையின் மென்மை..
மென்மையில் மலர்..
மனிதம் காக்கும் புனிதம்..
பெண்ணே நீ..
இதயம் களவாடும்
இன்பக்காதலி..
இல்லம் காக்கும்
இனிய மனைவி..
தோள் தாங்கும்
தோழி..
உயிர் சுமக்கும்
தாய்மை...
உயிருக்கு உருவம்
தரும் பெண்மை..
ஆணின் ஆண்மைக்கு
வெற்றி ..
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
திருக்குறள் போற்றும்
பெண்ணே..
இனியவளே..
அன்பிற்குரியவளே..
தெய்வ மகளே...
கரையற்ற கல்வி..
கருணை உள்ளம்..
நிறைவான அறிவு..
பெற்றவளே...
அன்பான கண்கள்.
கனிவான பார்வை..
இனிக்கும் சொற்கள்.
கொண்டவளே..
எல்லாம் நிரம்பிய
தாயே...
சக்தியே...
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
பாரதி கண்ட
புதுமைப் பெண்ணே..
பெண்ணியத்திற்கு
குரலோசை எழுப்பி
புதியதோர் சமுதாயம்
படைத்திட
புயலென புறப்படு....
பெரியாரின் கனவு
நிறைவேற
பெண் அடிமைத்தனம்
ஒழித்து
பெண் இனம் மேம்பட
தீபங்கள் ஏற்றி..
சாதிக்கப் புறப்படு..
தரித்திரங்கள் துடைத்துச்
சரித்திரங்கள் படைக்கப்
புறப்படு பெண்ணே..
சிறகுகள் விரித்து
எட்டுத் திசையெங்கும்
புறப்படு...
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
உனக்கு நிகரேது பெண்ணே..
வானம் தொட்டு விடும் தூரம்..
வானம் உன் வசமாகும்
புறப்படு..
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
பெண்ணிற் பெருந்தக்க யாவுள ..
பெண்ணே பெருமை உடைத்து ..
பெண்ணிற் பெருந்தக்க தில் ..
பெண்ணினால் பெண்மை உடைத்து .. ..
பெண் நிறைந்த நீர்மை பெரிது ..
(சுபா சுப்ரமணியம்)
Edited by அன்புத்தம்பி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8h  · 
 
The way home
ஒரு அழகான கிராமத்து படம். சில விசயங்களை நாம் வாழ்நாள்ல மிஸ் பண்ணிட கூடாதுனு நினைப்போம் இல்லை. அப்படியான தருணங்களில் ஒன்றாக இந்த திரைப்படத்தை பார்க்க செலவு செய்யும் நேரம் இருக்கும். நாம காணக்கூடிய அன்றாட வாழ்க்கை முறைகளில் தாத்தா, பாட்டி பேரனுக்கிடையிலான அனுபவங்கள் தொலைந்து போன வாழ்க்கை முறைகளில் பழக்கப்பட்டு கொண்டிருக்கிறோமில்லயா அப்படியான வாழ் முறையை காணக்கிடைக்காதா என்று ஏங்கிக் கிடப்பவருக்கான படம் இது.
காது மந்தமா கேட்காத, சரியா பேச்சுவராத கிரமாத்து பாட்டி அவரை கொஞ்சமும் பிடிக்காத நகரத்து பழக்கவழக்கங்களுக்குட்பட்ட பேரன். இவர்களுக்கு இடையிலான கதைதான் The way home. இந்த கதையில் திரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிக்கக்கூடிய மாதிரி சினிமா தனமே இல்லாத, இதோ நாம கண்முன் காணும் ஒன்றை போல அனுபவத்தை தரும் கிராமத்து பசளையோடிய காட்சிப்படுத்தல். மொழியே இல்லாமல் புரிந்து கொள்ளக்கூடிய திரைப்படம். கட்டாயம் பாருங்கனு சொல்லல பார்த்தா சந்தோஷமா இருப்பிங்கனு சொல்லுறன்.
May be an image of 2 people, people standing, outdoors and text

பி.கு
ஆங்கிலத்திலும் மொழி பெயர்ப்பு வந்துள்ளதாக அறியதக் கூடியதாக இருக்கிறது..

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தைப் பார்க்கவே புரியுது நல்ல படமாகத்தான் இருக்கும்.......பகிர்வுக்கு நன்றி சகோதரி.....!  👍

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
CANADA
 

Record $128M in Lotto Max prizes up for grabs Tuesday

 

யாராவது ஸ்கார்பிறோ விட்டு தள்ளி இருப்பவர்கள் எடுத்து பாருங்கள்..லொற்றோ மேக்ஸ்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
ஜீவன் முக்தி!!
-------------------------
பலரையும் எதோ பிரம்மிப்பிலும், பயத்திலும், தேடலிலும் ஆழ்த்தும் ஒரு சொல்."ஜீவன் முக்தி".
ஜீவன் முக்தி என்றால் என்னவென்றே தெரியாமல் திரிபவர் பலர். ஜீவன் முக்தி என்றால், ஜீவித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது உயிருடன் இருக்கும்போதே முக்தி அடைவது என்பது தான் பொருள்.
என்னது உயிருடன் இருக்கும்போதே முக்தியா?
அது எப்படி?
முக்தி என்றால் செத்தபிறகு வைணவரானால் வைகுண்டதிற்கும், சைவர்கலானால் கயிலாயதிர்க்கும் சென்றால்தானே முக்தி. அதெப்படி வாழும்போதே முக்தி? என்கிறீகளா!!
வைகுண்டம், கயிலாயம் என்று இருந்தால்தானே ஜி செத்தபிறகு அங்கே போவதற்கு!!
முதலில் முக்தி என்றால் என்னவென்று தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முக்தி என்பது ஒரு வடமொழிச் சொல்.
அதற்கு தமிழில் "விடுதலை" என்று பொருள்.
எதில் இருந்து விடுதலை?
நம் மனதில் இருந்துதான்!!!
இப்பிரபஞ்சத்தில் நாம் நம் மனதைத் தவிர வேறு எதற்குமே அடிமையாக இருக்கவில்லை.
நம்மை, நாம் நம் இன்வாழ்கையை சுகித்து வாழமுடியாத வண்ணம் செய்வது நம் மனம்தான்.
இறைவன் புரியும் அணைத்து செயல்களிலும் மூக்கை நுழைத்து இது சரி தவறு என்று அதிகப்பிரசங்கித்தனம் செய்வது நம் மனம் தான்.
மனதின் பிடியில் இருந்து விடுபடுவதே உண்மையில் விடுதலையாகும்,
மனோ நாசமே முக்தியாகும்,
அவ்வாறு உயிருடன் இருக்கும்போதே நாம் நம் மனதை ஜெயித்து, கற்பனைகளை கடந்து, சிந்தையை நினைப்பர வைத்தோமேயானால், அதேவே ஜீவன் முக்தி.
"முக்தி என்பது ஒருவன் வாழ்நாளில் அடையப்பட வேண்டுமே தவிர, செத்தபிறகு எங்கோ சென்று அடைவது அல்ல" என்று மகரிஷி வசிஷ்டர் தன் யோக வாசிஷ்டம் என்னும் நூலில் தீர்கமாக மொழிகிறார்.
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அன்புத்தம்பி said:
ஜீவன் முக்தி!!
-------------------------
பலரையும் எதோ பிரம்மிப்பிலும், பயத்திலும், தேடலிலும் ஆழ்த்தும் ஒரு சொல்."ஜீவன் முக்தி".
ஜீவன் முக்தி என்றால் என்னவென்றே தெரியாமல் திரிபவர் பலர். ஜீவன் முக்தி என்றால், ஜீவித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது உயிருடன் இருக்கும்போதே முக்தி அடைவது என்பது தான் பொருள்.
என்னது உயிருடன் இருக்கும்போதே முக்தியா?
அது எப்படி?
முக்தி என்றால் செத்தபிறகு வைணவரானால் வைகுண்டதிற்கும், சைவர்கலானால் கயிலாயதிர்க்கும் சென்றால்தானே முக்தி. அதெப்படி வாழும்போதே முக்தி? என்கிறீகளா!!
வைகுண்டம், கயிலாயம் என்று இருந்தால்தானே ஜி செத்தபிறகு அங்கே போவதற்கு!!
முதலில் முக்தி என்றால் என்னவென்று தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முக்தி என்பது ஒரு வடமொழிச் சொல்.
அதற்கு தமிழில் "விடுதலை" என்று பொருள்.
எதில் இருந்து விடுதலை?
நம் மனதில் இருந்துதான்!!!
இப்பிரபஞ்சத்தில் நாம் நம் மனதைத் தவிர வேறு எதற்குமே அடிமையாக இருக்கவில்லை.
நம்மை, நாம் நம் இன்வாழ்கையை சுகித்து வாழமுடியாத வண்ணம் செய்வது நம் மனம்தான்.
இறைவன் புரியும் அணைத்து செயல்களிலும் மூக்கை நுழைத்து இது சரி தவறு என்று அதிகப்பிரசங்கித்தனம் செய்வது நம் மனம் தான்.
மனதின் பிடியில் இருந்து விடுபடுவதே உண்மையில் விடுதலையாகும்,
மனோ நாசமே முக்தியாகும்,
அவ்வாறு உயிருடன் இருக்கும்போதே நாம் நம் மனதை ஜெயித்து, கற்பனைகளை கடந்து, சிந்தையை நினைப்பர வைத்தோமேயானால், அதேவே ஜீவன் முக்தி.
"முக்தி என்பது ஒருவன் வாழ்நாளில் அடையப்பட வேண்டுமே தவிர, செத்தபிறகு எங்கோ சென்று அடைவது அல்ல" என்று மகரிஷி வசிஷ்டர் தன் யோக வாசிஷ்டம் என்னும் நூலில் தீர்கமாக மொழிகிறார்.

அப்படி ஒரு ஜீவன்முக்தராக "ஜனக மகாராஜா" சீதாப்பிராட்டியாரின் தந்தை வாழ்ந்திருந்தார்......!  🙏

 • Like 3
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1.”மலைப் பிஞ்சி” என்பது?
குறுமணல்

2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?
நாஞ்சில் நாடு

3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?
ஒடிஷா

4.”தமிழ் மொழி” என்பது?
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

5.”இரவும் பகலும்” என்பது?
எண்ணும்மை

6.”கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை

7. ”நல்ல மாணவன்” என்பது?
குறிப்புப் பெயரெச்சம்

8. “கடி விடுது”-இச்சொல்லில் “கடி” என்பதன் பொருள்?
விரைவு

9. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு?
2008, மே 19

10. உயிர் அளபெடையின் மாத்திரை?
3 மாத்திரை

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
சைவ சமய புராணங்களில் இரண்டு தவங்கள் முக்கியமானவை.
 
1. பகீரத தவம் - கங்கை நதியை பூமிக்கு கொண்டு வர சிவபெருமானை நோக்கி தவமிருப்பது.
2. அர்ஜூன தவம் - பாசுபதம் எனும் ஆயுதம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருப்பது.
பகீரத தவம் - பகீரதனின் முன்னோரான சகரரின் மனைவியான சுமதிக்கு 60 ஆயிரம் மகன்கள், மற்றொரு மனைவியான கேசனிக்கு ஒரு மகன். அசுவமேத யாகத்தை மன்னர் சகரர் செய்கிறார். அதன்படி குதிரையை விடுவிக்கின்றனர். குதிரையானது கபிலர் எனும் முனிவரின் குகை வாயிலில் இருக்கிறது. குதிரையை காணாது தேடிவந்த 60 ஆயிரம் பேரும் கபில முனிவரிடம் சண்டைக்கு செல்கின்றனர். கபிலரால் சபிக்கப்பட்டு சாம்பலானார்கள்.
கேசியின் மகனுக்கு பிறக்கும் பகீரதன் அரசரானதும் தன்னுடைய முன்னோர்கள் 60 ஆயிரம் பேர் முக்தி அடையாமல் இருக்கிறார்கள் என அறிந்து வருந்துகிறான். அவர்களை முக்தி பெற வைக்க தேவலோகத்தில் இருக்கும் கங்கை நதியை பூமிக்கு வர வைக்க சிவபெருமானை நோக்கி தவமிருக்கிறான். பெருந்தவம் கங்கையை பூமிக்கு வர வைக்கிறது. 60 ஆயிரம் முன்னோர்களும் முக்தி அடைகிறார்கள்.
 
அர்ஜூன தவம் - பாண்டவர்கள் சூதாடி தோற்ற பிறகு வனவாசம் மேற்கொள்கின்றனர். அந்தக்காலத்தில் 'பாசுபதம்' எனும் ஆயுதத்தை பெற சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் அர்ஜூனன். மூகாசுரன் என்ற அசுரன் அர்ஜூனன் தவம் கலைக்க பன்றியாக உருவெடுத்து மோதி தொல்லை செய்தான். பன்றியை கொல்ல அர்ஜூனன் அம்பு எய்த.. மற்றொரு அம்பும் அந்த பன்றியை துளைக்கிறது. அந்த அம்புக்கு உரிமையாளர் வேடனாக வந்த சிவபெருமான்.
பன்றி யாருக்கு சொந்தம் என வேடனுக்கும், அர்ஜூனனுக்கும் ஒரு சண்டை நடந்து இறுதியில் சிவபெருமான் அர்ஜூனனுக்கு பாசுபத அஸ்திரத்தை தந்தார்.
சிவாலயங்களில் ஒரு தவக்காட்சி சிற்பமாக இருக்கிறது. ஒரு ஆண் ஒற்றைக்காலை மட்டும் தரையில் ஊன்றி கடுமையாக தவமிருக்கிறார். அந்த தவம் செய்யும் மனிதர் அர்ஜூனனா? பகீரதனா என நமக்கு குழப்பம் நேரிடும். அதை எளிதாக வேறுபடுத்தி காட்டிட சிற்பி ஒரு உத்தியை கடைபிடிக்கிறார். அது பன்றி.
தவம் செய்யும் சிற்பம் அர்ஜூனன் என்றால் அவர் பின்புறமாக பன்றி சிற்பமும் சேர்த்து வடிக்கப்படும். பகீரதன் என்றால் அவர் மட்டுமே தவமிருப்பார்.
May be an image of 1 person and text that says 'பேரூர் சிற்பம் அர்ஜுன தவம், போரூர் பகீரத தவம், மாமல்லபுரம்'
 
 
வாசித்ததிலிருந்து............
 
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
* வெகு காலங்களுக்கு முன் அதாவது சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு (EOCENE AGE) முன், இந்தப் பகுதியில் வெப்பத்தால் எரிமலைகள் வெடித்துச் சிதறின. இதனால் மலைகளில் பெரும் நில வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. எரிமலைச் சாம்பல், நிலச்சரிவில் வந்த மண், பாறைகள் இவைகளெல்லாம் பெரு வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இன்று கல் மரங்கள் நின்று கொண்டிருக்கும் பகுதியில் படிந்தன. நின்று கொண்டிருந்த பெரிய மரங்கள் தம் நிலை மாறாமலேயே அப்படியே புதையுண்டன. சில மரங்கள் பெருவெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டுக் கிடைநிலைக் கல்மரங்களாயின.
* மரங்கள் அழுகும் நிலை, உளுத்துப் போகும் நிலைக்கு வரும் முன்னரே, எரிமலை சாம்பல், மண் இவையெல்லாம் நீரில் கலந்து மரத்தில் இறங்கி செல்லுலோசை உருகச் செய்து திடமான படிமங்களாக இறுகின. இந்த 'கல்லாய் மாறுதல்' (PETRIFICATION) நிகழ்வில் மரங்கள், கல்மரங்களாக மாறி இன்றைக்கும் நமக்கு ஏதாவது இடங்களில் அகப்படுகின்றன.
* கிடை நிலைக் கல்மரங்கள்: சாத்தனூர், திருவக்கரை, இராஜஸ்தானில் உள்ள பொக்ரேன் பகுதி போன்ற இடங்களில் காணப்படும் கல்மரங்கள் அனைத்துமே ‘கிடை நிலையிலேயே (Horizontal type) கண்டறியப்பட்டுள்ளன. அரிசோனா கல்மரங்களும் கிடை நிலை வகையாகும்.
* அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தில் எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க் (YELLOW STONE NATIONAL PARK) கில் உள்ள கல் மரங்கள் நிற்கும் கல் மரங்கள்( Vertical Type) ஆகும்.இவைகள் நிற்கும் மரங்களாகவும் கல்லாக மாறிய நிகழ்வின் எச்சங்களாகவும் உள்ளன.
* உதகை, பொட்டானிக்கல் கார்டனில் உள்ள கல்மரத்தைப் பாருங்கள். கீழே விளக்கம் தந்துள்ளனர்.இது இந்திய புவியியல் ஆராய்ச்சியமைப்பு ( G S I)நிறுவியுள்ள கல் மரச் சின்னமாகும்.திருவக்கரைப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புவிசார் தொல்லியல் சின்னமாகும். இவையே புதுவை அருங்காட்சியகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Agnisiragu Mudiarasu
194685764_1448789182139521_5189877947480
 
 
194192939_1448789248806181_9120689274634
 
 
 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
கொஞ்சம் இவற்றையும் ரசிக்கலாமே.....
May be an image of bird and outdoors
 
 
 
 
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
ஜூன் 16 – உலக கடல் ஆமை தினம்
100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக, கடல் ஆமைகள் உலக சமுத்திர பகுதிகளில் வாழ்ந்துவருகின்றன. இவை கடல் சூழலின் சமநிலையினைப் பேணுவதில் இவை பிரதான வகிபாகம் வகிக்கின்றன.
மனித செயற்பாடுகளின் காரணமாக அதாவது முட்டை, இறைச்சி, தோல், மற்றும் பிற தேவைப்பாடுகளுக்காக மனிதனால் கடல் ஆமைகள் அளவுக்கதிகமாக வேட்டையாடப்படுகின்றன. அத்துடன் அவற்றின் வாழிடங்கள் சிதைக்கப்படுவதும், எதிர்பாராதவிதமாக மீன்பிடி வலைகளினால் அவை பிடிக்கப்படுவதும், மேலும் காலநிலை மாற்றங்கள் க…
See More
See Translation
No photo description available.
 
 

Loganathan Kanapathipillai

 
 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சுஐப் எம். காசிம்- ஒவ்வொரு வருடத்தின் ஒக்டோபர் இறுதிதினம் நெருங்கி வரும் நாட்களிலே நெஞ்செல்லாம் வலியெடுக்கும் நினைவெல்லாம் தடுமாறி நீர் நிறையும் கண்களிலே உணர்வெல்லாம் தத்தளித்து உதிரம் அலையெழுப்பும்    தாயகத்தின் நினைவெழுந்து தவிதவித்து மனம் கதறும் வேகாத உடலோடு வெந்த உயிர் தொங்கி நின்று பிறந்த தாய் மண்ணினைவில் பிரிவில் துடிதுடிக்கும்    "இன்னுயிர்த் தாய் ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகள் போல் நூறு பலஆண்டுகளாய் நோகாதும் நொடியாதும் ஒருயிராய், ஈருடலாய் ஒன்றிணைந்து வாழ்ந்த அந்தக் காலத்தின் நினைவெழுந்து கண்கள் குளமாகிவிடும்    ஓர் புலத்தில் தான் வாழ்ந்து ஓர் மொழியைத் தான் பேசி வாழ்ந்த அந்தக்காலத்தின் வசந்த உறவுகளில் காலக் கொடுங் கிழவன் கண்பட்டுப் போனது போல் ஒக்டோபர் தொண்ணூறு உருக்குலைக்க வந்ததுவோ?    எண்ணி முப்பத்தி ஓராண்டு போனபின்னும் இன்றைக்கு என்றாற்போல் இதயம் துடிக்கிறது    என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியவில்லை ஏனிந்தப் படையெடுப்பு என்றெவருக்கும் புரியவில்லை யாரும் கனவினிலும் இதையெண்ணிப் பார்த்ததில்லை எல்லாம் ஓரீர் நாளில் இரண்டாகப் போயிற்று    வீட்டோடு வாசல் வியாபாரச் சாலைகள் தோட்டம் துரவு தொழும் பள்ளி காணி வயல் கை கழுத்து தங்க நகை காசு பணம் உடுபிடவை அத்தனையையும் பறித்து ஆளை மட்டும் வீதியிலே வேட்டு முழக்கத்தில் விரட்டியடித்த வலி ஒக்டோபர் இறுதியினை உயிராக்கி வைக்கிறது    கண் அழுது வாய் குளறி காட்டு மேடு பள்ளத்தில் அரசியல் அகதிகளாய் யாருமிலா அநாதைகளாய் உண்பதற்கு ஏதுமின்றி உடுக்க மாற்றுடையுமின்றி வடக்கின் அடியிருந்து வடமேற்கு முடிவரைக்கும் விழுந்து எழுந்து விறகாகிக் காய்ந்தும் போய் உயிரைக் கையில் பிடித்து ஓடியது கொஞ்சமல்ல    தாய் நாடு பேய் வீடாய் தமிழகமோ சுடுகாடாய் தமிழினத்திற்குரியரல்ல தமிழ் தேசியமும் கிடையா என்று வடபுலத்தின் எண்பதாயிரம் முஸ்லிம்களும் வந்தேறு குடிகள் என்றும் விரட்டி அடித்ததுவும் வீறாப்புப் பேசியதும் ஒக்டோபர் தொண்ணூறின் ஓரங்க நாடகமாம்    நூறுகிலோ மீற்றருக்கும் நீளமான தூரத்தை நொண்டி நடந்த வலி நோவின்னும் மாறவில்லை    பாதை முழுவதிலும் படைத்தவனின் பெயர் சொல்லி அழுது மன்றாடியதை யாரும் மறக்கவில்லை    இன்றைக்கில்லாவிடினும் என்றைக்கோ ஓர் வழியை காட்டும்படி இரந்து கதறியதை மறக்கவில்லை    எல்லாச் சுமைகளையும் இறைவன் மேலே சுமத்தி ஏந்தல் நபி அவர்கள் இரங்கலுக்காய் நோன்பிருந்து வடபுலத்து முஸ்லிம்கள் வாழ்வில் ஒளி வீச அல்லாஹ்வின் பாதையிலே அடியெடுத்துச் செல்கின்றோம்..!   https://www.madawalaenews.com/2021/10/blog-post_613.html
  • Un - Tested level 1.38160 படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, 1.37895 இல்லை. கிடையான மன்சல் கோடு break out level அதனால் அது ஒரு தற்காலிகமான  வலயம். Un - Tested level 1.38160 இங்குதான் Break out traders தமது Stop loss ஐ இடுவதால் இந்த வலயம் முக்கியமாகிறது. விலை ஏன் Un - Tested level test செய்யவேண்டும்? அதற்கு கூறப்படும் காரணம் சந்தையைக்கட்டுப்படுத்துவர்கள்(Market Makers) சில்லறை வர்த்தகர்களின் stop loss கையகப்படுத்தி அதன் மூலம் தமக்கு தேவையான திரவநிலையை உருவாக்குதல். Resistance level test உம் அவ்வாறே.
  • "தர்மம் தலைக்ககும்" இரக்க குண பெண்மணி ஒருத்தி தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்... அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு, ஏதோ முனகிக் கொண்டே போவான். இது அன்றாட வழக்கமாயிற்று!. ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று, கிழவன் என்ன முனகுகிறான் என்று செவிமடுத்து கேட்டாள். அவன் முனகியது, இதுதான்: "நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்; நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்." தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான். 'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்; "நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும், "இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்; " ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ; ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்; செஞ்ச புண்ணியம் ஒனக்கே திரும்பும்" ன்னு தினம் தினம் உளறிட்டுப் போறானே' என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள். 'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள். 'நன்றி கெட்ட கூனனை' நினைத்து மன உளைச்சலுக்கு ஆளானாள்! நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி, கொலை வெறியாக மாறியது!ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என மதில் மேல் வைக்கப் போனாள். மனம் ஏனோ கலங்கியது; கை நடுங்கியது. 'அவன் அப்படி இருந்தாலும், சே... நாம் ஏன் இப்படியாகணும்'னு அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள். வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்; இட்லியை எடுத்துக் கொண்டு, வழக்கம்போல, "நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ; நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! " என்று சொல்லிக் கொண்டே சென்றான்! அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!. அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்; வாசலில் வாலிபன் ஒருவன் கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான். வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!. "அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;மயங்கி விழுந்துட்டேன்; கண் முழிச்சு பாத்தப்போ... யாரோ ஒரு கூனமுதுகு கிழவன் என்னை தூக்கி உட்கார வச்சு ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான். இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!இதைக் கேட்டதும், பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்! 'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்... அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!' என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன.. "நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் " ...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது! எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை... புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை.... "செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்" "ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்" "வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே"
  • பரீட் இக்பால் - யாழ்ப்பாணம். யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று எட்டுத் திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 31ஆண்டுகளாகின்றன. 31ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன. எனினும், அத்துரதிர்ஷ்ட நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறோம்.   “யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன்சுவை ஊறும், பனையிலையும் புகையிலையும் நன்றாக வளரும்” என்ற இனிய பாடல் வரிகளே யாழ் மண்ணின் இனிமைக்கு சான்றாகும்   1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதுதான் எம் வாழ்வின் துரதிர்ஷ்ட நாள். இப்படியானதொரு கோரச்சம்பவத்தை எதிர்பார்க்காத எம் முஸ்லிம் மக்கள் அனைவரும் தம் அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சுமார் காலை 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர். முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிதான் சோனகத் தெரு. புலிகளின் திட்டத்தை அறியாத அப்பாவி மக்களாகிய நாம் அனைவரும் அதிகூடிய புலிகளின் வருகையைப் பார்த்துத் திகைத்தோம். சோனகத் தெருவை சுற்றியிருந்த அயல் கிராமங்களுக்கு வியாபாரத்திற்காக சென்ற எம் முஸ்லிம் சகோதரர்களை அவசரமாக சோனகத் தெருவிற்கு செல்லுமாறு புலிகள் அக்கிராமங்களுக்குச் சென்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு விடுத்தார்கள். வியாபாரத்திற்கு சென்ற எம் சகோதரர்கள் நிகழவிருக்கும் விபரீதம் தெரியாமல் உடனே சோனகத் தெருவிற்கு விரைந்தார்கள்.    காலை 10 மணியளவில் புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டுச் சென்றனர். நாம் அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினோம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. எம்மை ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். நாம் அனைவரும் என்ன ஏதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது இளம்பருதி என்ற புலி உறுப்பினர் ஒருவன் மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். “முஸ்லிம் மக்களே! உங்களுக்கொரு துயரச் செய்தி. நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று "இளம்பருதி" கூறியதுதான் தாமதம் எமக்கு தலைசுற்றி உலகமே ஒருகணம் இருண்டு விட்டது. இது கனவா? இல்லை நனவா? என்று உணர முடியாமல் தடுமாறி விட்டோம். அடுத்தது என்ன செய்வதென்று புரியாமல் எதிர்காலமே எம் கண்களுக்கு சூனியமாக தென்பட்டது. ஜின்னா மைதானமே கதிகலங்கியது. எம் பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் மாலை மாலையாக ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினோம். எம் சகோதரர்கள் சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள். வாதாடினார்கள். “எம் பிறந்த மண்ணை விட்டு நாம் ஏன் போக வேண்டும்? இது எங்களுடைய சொந்த இடம்; நாங்கள் போக மாட்டோம்” என கூச்சலிட்டார்கள். பெண்கள் கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள்.    புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச் சப்தத்தினால் அதிர்ந்தது. நாம் அனைவரும் பயந்து நடுநடுங்கி விட்டோம். வீட்டில் இருந்தவர்களும் ஜின்னா மைதான துப்பாக்கி வேட்டுச் சப்தத்தை கேட்டு எம்மவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என தெரியாது அல்லோல கல்லோலப்பட்டு ஜின்னா மைதானத்தை நோக்கி நடுநடுங்கி விரைந்தனர். ஜின்னா மைதானம் மேலும் நிறைந்து வழிந்தது. இனி இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக புரிந்து விட்டது. மனைவி, மக்கள், குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரின் உள்ளங்களிலும் நிலைத்திருந்தன. பயந்து, நடுங்கி, அழுது வீங்கிய முகங்களுடன் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்தை விட்டு அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றோம். எமக்கு நடந்த அநியாயத்தைப்போல இனி யாருக்குமே நடக்கக் கூடாது. சொந்த ஊரை விட்டு, சொந்த வீட்டை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறுவது என்றால் சும்மாவா?    ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திலிருந்து வீடுகளுக்கு சென்றதுதான் தாமதம் புலி உறுப்பினர்கள் வீடுகளினுள் புகுந்து எம் சொத்துக்களை சூறையாடத் தொடங்கினார்கள். 2 மணித்தியாலங்களில் வெளியேறுங்கள் என்று மைதானத்தில் வைத்துக் கூறிவிட்டு வீடுகளினுள் புகுந்து உடனே வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள். இனி இங்கிருந்து பயனில்லை, மீறி இருந்தால் உயிர்தான் போகும், எங்கேயாவது போய் உயிரோடாவது இருப்போம், பிள்ளைகளைக் காப்பாற்றுவோம் என்ற நோக்கில் நாம் அனைவரும் பிறந்த மண்ணை விட்டு பிரிய ஆயத்தமானோம். கண்ணில் நீருடனும் நெஞ்சில் கனச் சுமைகளுடனும் நடைபிணமாக வெளியேறினோம்.    பெண்கள் சிலர் தமது பணம், நகைகளை மறைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேற முனைந்தனர். பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள். காதணிகளைக்கூட விடவில்லை. நகைகளுடன் காணப்பட்ட பெண்கள் ஒரு மஞ்சாடி நகை கூட உடலில் இல்லாத நிலையைப் பார்க்கும்போது மிகுந்த கவலை ஏற்பட்டது.   பிறந்து ஓரிரு நாட்கள் கூட கடக்காத பச்சிளம் பாலகர்களை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு நின்ற எம் சகோதரிகளையும் கட்டிலோடு படுக்கையில் கிடந்த வயதான நோயாளர்களை கையில் ஏந்தி நின்ற எம் இளைஞர் சமூகமும் தத்தளித்து நின்ற அந்த அவலக் காட்சி எம் மனக்கண் முன் தோன்றி மறைகின்றது. அந்த கசப்பான அனுபவத்தை மறக்க முயன்றாலும் அன்றைய நினைவுகள் எம் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக நிழற்படங்களாக ஓடிக்கொண்டே இருக்கின்றது......    விடுதலைப் புலிகளின் எண்ணத்தில் இக்காட்சிகள் எவ்வாறு தோன்றினவோ தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் பேசும் தமிழே எங்களின் தாய்மொழியும்கூட. எங்களுக்கு இந்தக் கதியா? சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர். இப்படியான ஓர் அவலநிலை இனி இந்த நாட்டில் யாருக்குமே வரக்கூடாது. சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்த எம்மை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்துவிட்டார்கள் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள்.    வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் மாத்திரமே காரணம். முஸ்லிம்களை வெளியேற்றும்போது தமிழ் மக்களின் முக்கியமானவர்கள், இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.   2002 ஆம் ஆண்டு வட்டக்கச்சியில் நடந்த புலிகள் இயக்கத் தலைவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய மதியுரைஞரான அன்டன் பாலசிங்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு துன்பியல் சம்பவம் என்று மட்டும் கூறி இதுதொடர்பில் முஸ்லிம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.    காலம் தாழ்த்தியாவது வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என உணர்ந்தனர் புலிகள். இது எமக்கு ஓரளவு ஆறுதலளித்தது.    முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்த காத்திரமான, அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  31 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எவ்வாறு ஒன்றாக இருந்தோமோ அந்நிலைமை ஏற்பட வேண்டும்.   தற்போது வடக்கில் முஸ்லிம்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் எமது சமய, கலாசாரத்துடனும் வாழ நல்ல சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான, அர்த்தபுஷ்டியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம்.      .    முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற திட்டத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டுகிறோம்.    .    யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 31 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற கனவு நனவாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். ஆமீன்...!!  பரீட் இக்பால் யாழ்ப்பாணம்.   https://www.madawalaenews.com/2021/10/31_27.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.