Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

எண்சாண் உடம்பு

என்பார்கள்!

அவரவர் கையால்

அவரவர் உடம்பு எட்டுச் சாண்தான்!

எறும்புக்குக் கூட 

அதன் கையால் அளந்தால்

எட்டுச் சாண்தான்  உடம்பென்று

இயம்புகிறாள் அவ்வை!

காலில் இருந்து சாண் போட்டு அளந்தால்

இரண்டு சாணில் முட்டிவரை வரும்!

எட்டில் இரண்டு (2 /8 )

கால்தானே-(1 /4 ) …!

அதனால்தான்…..

அதைக் ‘கால்’ என்றார்கள் நம் தமிழர்கள்!

நான்கு சாண் அளந்தால் இடுப்புவரை   வரும் ! 

எட்டில் நான்கு (4 /8 ) அரை தானே(1/2)…!

அதனால்தான்…

இடுப்பை “அரை” என்றார்கள் நம் முன்னோர்கள்!

அதில் கட்டப் படும் கயிற்றை 

‘அரைஞாண் கயிறு’ என்று

பொருளோடு புகன்றார்கள்!  

Link to comment
Share on other sites

 • Replies 3.6k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

bumfk_289495.jpg

பால் அருந்தும் அழகை
பாலகன் ரசிக்கிறான் !

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
வெறுமனே இரண்டு வீரர்களை மட்டும் அனுப்பி தங்கம் வென்றிருக்கும் நாடு என்ற பெருமையை பேர்முடா பெற்றுள்ளது.
May be an image of 1 person
 
 
 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2021 at 23:59, யாயினி said:

 

இளநி பற்றி இனிப்பான பதிவு யாயினி........!   👌

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
ஏதாவது தேடித் தேடிப் படிப்படிதில் இப்படியான விமர்சனங்கள் ஊடாகவும் புத்தகங்களை அவற்றை எழுதியவர்ளைப் பற்றி அறிந்து கொள்ளும வாய்ப்பு கிடைக்கும் அல்லவா..அப்படித் தான் இதுவும்....
 
 
 
 
 
A Passage North- Arun Arudpragasam 1/13
 
அருட்பிரகாசம் கொழும்பில் தமிழ் பெற்றோருக்குப் பிறந்தவர். தத்துவயியலில் முனைவர் பட்டத்தை அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில் பெற்றவர். The Story of a Brief Marriage என்ற இலங்கை இறுதிப்போரில் இளம் தம்பதியரைக் கதைக்களமாகக் கொண்ட இவரது முதல் நாவல் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தியாவிலும் இலங்கையிலும் வருடத்தின் பகுதிகளில் வசிக்கிறார். இவரது இந்த இரண்டாவது நாவல் புக்கர் 2021 நீண்டபட்டியலில் இடம்பெற்ற பதிமூன்று நாவல்களில் ஒன்று.
உலகத்தின் எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளில் இருந்து தொகுக்கப்பட்ட Flash Fiction தொகுப்பில் ஆசியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கதை இலங்கையில் இருந்து. சிங்களப்பெண் எழுதிய கதையில், கதாபாத்திரம் தெருவில் போகையில் பயங்கரவாதி மனிதவெடிகுண்டு வெடித்துப் படுகாயமடைந்து, சாலை நடைமேடையில் விழுந்து கிடக்கும் நிலையை வர்ணித்து, நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டிருப்பாள். இது முக்கிய செய்தி. அவர்கள் உலகுக்கு தம்மை அப்பாவிகளாகக் காட்டிக் கொள்ளும் முயற்சி. ஆங்கிலத்தில் எழுதினால் உலகம் முழுதும் வாசிக்கப்படுகிறது. அருட்பிரகாசம் அதே வைத்தியத்தை அவர்களுக்குத் திரும்ப அளிக்கிறார். சிங்கள ராணுவம் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றதை, குட்டிமணியின் கண்கள் மரணத்திற்குப்பின் தமிழ் ஈழத்தை பார்வையில்லாத ஒருவருக்குப் பார்வை அளித்துப் பார்க்கும் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, அவர் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டதைத் தெளிவாகக் கதையினூடே பதிவு செய்கிறார். புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற நூல் தொண்டை நெறிக்கப்பட்ட தமிழர் குரலை சத்தமாக உலகஅரங்கில் ஒலிக்க வைக்கிறது.
உலகம் முழுவதும் படிக்கப்படும் நூல்களுக்கு உலகத்தன்மை இல்லை என்றால் வரவேற்பு இல்லாது அலமாரியில் அடையும். பெரியபுராணத்திற்கும் உலக வாசகர்களுக்கும் என்ன சம்பந்தம்? கதையில் வரும் கிருஷ்ணன் பேரழிவின் போது டெல்லியில் கல்லூரியில் படிக்கிறான். அவன் மனம் எல்லாம் தாய்நாட்டில் அழிவுகள் நடுவே இருக்கிறது. இங்கே பூசலாரின் முழுக்கதையும் வருகிறது. சிவன் மன்னன் கட்டிய கோயிலை விட்டு மனத்தில் கட்டிய கோயிலுக்குப் போன கதை. ஒரு நாடோடிக்கதை போல் வரும் இந்தக்கதை இப்போது கிருஷ்ணனின் மனநிலையைத் தெளிவாக வாசகர்கள் புரியும் வண்ணம் சொல்கிறது, பெரிய புராணத்தையும் உலகஅரங்கில் சொல்லியாயிற்று, இலங்கை அரசின் அத்துமீறல்களையும் சொல்லியாயிற்று. மூன்றுமாங்காய்கள்.
இந்தியக் குடும்பங்களில் இன்று கூட பெண்கள் சமையலறையை அரசாட்சி செய்யும் இடமாக நினைப்பது வெகுசில வீடுகளில் தொடர்கிறது. பாட்டி, இருபத்தைந்து வயது பேரன் இருந்தும் சமையலறையில் மருமகள் நுழைவதை ரசிப்பதில்லை. கால்கள் முடியாது மாடி இறங்க பலநிமிடங்கள் ஆனாலும் சிரமப்பட்டு வந்து அங்கே பொருட்கள் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறாள். அதுவும் முடியாமல் போனபோது சமையலறையில் என்ன நடக்கிறது என்று எல்லோரிடமும் விசாரித்துத் தெரிந்து கொள்கிறாள்.
கிருஷ்ணன் என்ற இருபத்தைந்து வயது இளைஞனைச் சுற்றிக் கதை நகர்கிறது. இந்தியாவில் படித்து, அஞ்சும் என்ற பெண்ணுடன் வாழ்க்கை நடத்தி, அவள் ஜார்கண்ட் போராளிகளுடன் இணைந்து வேலைசெய்யப் போவதாகச் சொல்லிப் பிரிகையில், அவள் போல் தானும் தாய்நாட்டுக்குத் திரும்பி ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் கொழும்புக்கு வருபவன், அம்மாவுடனும், பாட்டியுடனும் இரண்டுமாடி வீட்டில் தங்குகிறான். அஞ்சும் இடமிருந்து நான்கு ஆண்டுகள் கழித்து ஒரு மெயில் வருகிறது, அதே நேரத்தில் பாட்டிக்கு Caretaker ஆக இருந்த ராணி வடகிழக்குப்பகுதி கிராமத்தில் இறந்த செய்தி வருகிறது. ஈமக்கிரியைக்கு கிருஷ்ணன் பயணத்தில் முன்னோக்கிச் செல்லும் போது அவன் நினைவுகள் பின்னோக்கிப் போகின்றன.
கிருஷ்ணன் இறந்து போன ராணி மற்றும் அவனது அப்பம்மா, பழைய காதலி அஞ்சும் ஆகிய மூவரையும் குறித்த நினைவுகளை அசைபோடுகிறான். ராணி தன் இரண்டு மகன்களையும் போரில் இழந்து மனநிலை பாதிக்கப்பட்டவள். கிணற்றில் விழுந்து கழுத்து முறிந்து அவள் இறந்தது விபத்தா? இல்லை தற்கொலையா? அவளது குடும்பத்தினர், அவள் கொழும்புவில் வேலைக்கு இருந்த சமயத்தில் இவர்கள் அவளை சரியாகக் கவனிக்காததால் தற்கொலை செய்து கொண்டாள் என்று பழிசொல்வார்களோ என்ற குற்றஉணர்வு அவனை ஈமச்சடங்கில் பங்குகொள்ளத் தூண்டுகிறது. கடைசியில் இவன் தெரிந்து கொள்வது என்ன?
அஞ்சும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு திடீரென ஏன் தொடர்பு கொள்ளவேண்டும்? இருவரும் ஒத்துக்கொண்டு தானே பிரிந்தனர்! இப்போது அவன் என்ன பதில் தர வேண்டும்? பழைய உறவைத் தொடரும்படியா இல்லை தொடராமல் இருக்கும் படியா?
Meursaultல் பாதி கிருஷ்ணன். எல்லாவற்றிலும் ஈடுபடுவதும் எதிலும் பற்றில்லாது விலகுவதும், மனதில் வெறுமை சூழ்ந்து இருப்பதும், தத்துவார்த்த சிந்தனைகளும் கலந்த கலவை கிருஷ்ணன். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மேகத்தைத் தூது விடும் பாடல், புத்தரின் சரிதை, குட்டிமணி கதை, பெண் கரும்புலிகள் கதை, பாலி மொழியில் எழுதப்பட்ட புத்தமதப் பெண்கள் எழுதிய கவிதைகள் என்று வேறுபட்ட விசயங்கள், நினைவுகளில் கலப்பதால் கதையுடன் இடைஞ்சல் இல்லாது கலக்கின்றன. இறப்புக்குப் பின் என்ன? மனம் தாளமுடியாத வலியை அனுபவிக்கும் பொழுது ஏன் உடல் அனுபவிக்கும் வேதனைகள் பெரிதாய் தோன்றுவதில்லை என்று தத்துவார்த்த விசயங்களும் கலந்து வருகின்றன. சிப்பத்தில் மொத்தமாகச் சேர்த்துக்கட்டிய பலவும் மேற்கத்திய வாசகர்களுக்கு புது உலகத்தின் வாயில். அந்தக் காரணத்தினாலேயே இது நீண்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கக்கூடும். அருட்பிரகாசத்தின் மொழிநடையும் அருமை.
May be an image of text that says 'At this novel's| cenire is an exquisite form of noticing, way of rend rendering consciousness and handling ime that connects Arudpragasam the great novelists the past COLM TOIBIN, author Troeklym and the Tatement of Mary A PASSAGE NORTH a novel RS.320.00 ANUK ARUDPRAGASAM Longlisled The 2021 Booker Prize'
 
 
 
 
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜனநாயகத்திற்குத் திரும்பிவிட்டதாகக் கூறிக்கொண்டு வடக்கில் வன்முறைகளில் ஈடுபட்டுவரும் அரச துணைராணுவக்குழு தாம் ஜனநாயக வழிக்குத் திரும்பிவிட்டோம் என்று கூறிக்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டுவரும் ஈ பி டி பி துணைராணுவக் குழுவினரின் இன்னொரு அட்டூழியம் யாழ்ப்பாணத்தில் அண்மையில் அரங்கேறியிருக்கிறது. நடந்த அக்கிரமத்தினைத் தடுக்க துணைராணுவக் குழுவின் தலைமையும் பொலீஸாரும் முயல்வது அப்பட்டமாகத் தெரியும் இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. இருவாரங்களுக்கு முன்னர்  யாழ்ப்பாணம் கண்ணபுரம் பகுதியில் புறாக்களை வளர்க்கும் இரு வீடுகளுக்கிடையே நடந்த சம்பவம் ஒன்றில், ஒரு வீட்டினரால் வளர்க்கப்பட்ட சில புறாக்கள் இரண்டாவது வீட்டில்ப் போய் தங்க ஆரம்பித்திருக்கின்றன. இதனையடுத்து இப்புறாக்களுக்கான உரிமைப்பாடும், இப்புறாக்கள் தாமாகவே சென்றனவா அல்லது களவாடப்பட்டனவா என்கிற சர்ச்சையும் கிளம்பியதையடுத்து ஒரு வீட்டிலிருந்து 6 நபர்கள் மற்றைய வீட்டிற்குச் சென்று அங்கிருந்த 3 பேரைத் தாக்கிவிட்டு தப்பியோடியிருக்கின்றனர். இதில் சிக்கல் என்னவென்றால், தாக்கப்பட்ட மூவரும் வடக்கில் இயங்கிவரும் அரச துணைராணுவக் குழுவான ஈ பி டி பி யின் உறுப்பினர்கள் என்பதும், அதிலொருவர் அத்துணை ராணுவக்குழுவின் இணைச் செயலாளர்களில் ஒருவரான "சொர்ணா அக்கா" என்று மக்களால் அச்சப்பட்டு அழைக்கப்படும் லலிதா என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனையடுத்து, முதலாவது வீட்டில் வசித்துவந்த 20 வயது இளைஞரை, பிரச்சினையைச் சுமூகமாக பேசித் தீர்க்கலாம் வா என்று அழைத்த லலிதாவும் அவரது துணைராணுவக் குழுவின்  ஆதரவாளர்களும் நடந்த தவறுக்கு  மன்னிப்புக் கேட்டால் உன்னை விட்டுவிடுகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். இதன்படி அவர்களுடன் பேசச் சென்ற 20 வயது சுகந்தன் எனும் இளைஞரை கடுமையாகத் தாக்கத் தொடங்கிய லலிதாவும் அவரது ஆதரவாளர்களும் ஏற்கனவே தாம் கரைத்துவைத்திருந்த மிளகாய்த்தூள் நீரை அவரின் கண்களில் ஊற்றிச் சித்திரவதை செய்திருக்கின்றனர். அதில் ஒருவர் சுகந்தன் தலை முடியையும் சவரம் செய்திருக்கிறார். தொடர்ந்தும் துணைராணுவக் குழு பெண்களால் தாக்கப்பட்ட அந்த இளைஞரை காப்பற்ற துணியாது பலரும் திகைத்துப்போய் நிற்க இத்தாக்குதல் தொடர்ந்திருக்கிறது. துணைராணுவக் குழுவினரின் அதிகாரமும், குற்றங்களில் இருந்து விலக்களிப்பும் தமக்கு பாதுகாப்புத் தரும் என்கிற ஆணவத்தில் இந்தப் பெண்கள் குழு மிகவும் வெளிப்படையாகவே இத்தாக்குதலினை நடத்தியிருப்பதுடன், தாம் தாக்குவதையும் பெருமையாக  ஒளிப்படமும் எடுத்திருக்கிறது. தமிழக சினிமாவான தூள் படத்தில் அரசியல் ரெளடியாக வந்து கொலைகளை நடத்தும் படிப்பறிவற்ற காட்டுமிராண்டிப் பெண் சொர்ணா அக்காவைப் போன்று ஈ பி டி பி துணைராணுவக்குழுவின் பெண்கள் பிரிவும் செயற்பட்டுவருவதனையடுத்து இவர்களை "சொர்ணா அக்காக்கள்" என்று யாழ்ப்பாணத்தில் மக்கள் அழைக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. நீதித்துறையினதும், காவல்த்துறையினதும் ஆதரவினைப் பெற்றுக்கொண்டு அட்டூழியங்களில் ஈடுபட்டுவரும் இந்தத் துணைராணுவக் குழுவின் பெண்கள் பிரிவு தமது தாக்குதலை பெருமையுடன் சமூகவலைத் தளங்களிலும் பிரச்சாரப்படுத்தியிருக்கிறது.  தன்மீது நடத்தப்பட்ட அநாகரீகமான தாக்குதலினையடுத்து மனமுடைந்துபோன  சுகந்தன் எனும் அந்த இளைஞர் தனது பிறந்த தினமான ஆடி 27 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  ஆனால், அவர் கொரோணாவினால் உயிரிழந்தார் என்று வைத்திய அறிக்கையினைத் தயாரித்த துணைராணுவக் குழு, அவசர அவசரமாக அவரின் உடலினை தகனமும் செய்திருக்கிறது. சுகந்தனின் இறப்பினால் ஆத்திரமடைந்திருக்கும்  அவரது உறவினர்களும் நண்பர்களும், அவரின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லையென்றும், அவர்கள் வெளிப்படையாகவே தரவேற்றியிருக்கும் ஒளிப்படங்கள் சாட்சியமாக இருக்கும்பொழுதும், அவர்கள் இதுவரையில் கைதுசெய்யப்படாமலிருப்பது ஏன் என்று கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.  பலர் பார்த்திருக்க நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது பலராலும் பல கோணங்களில்பதிவுசெய்யப்பட்டபோதும், ஒருவர்கூட இந்த துணைராணுவக் குழு பெண்கள் பிரிவுக்கு எதிராகச் சாட்சி சொல்ல முன்வரவில்லையென்றும், தற்போது சமூக வலைத்தளங்களில் இணைக்கப்பட்டுவந்த இந்த ஒளிப்படங்களை பொலீஸார்  அகற்றி, சாட்சிகளை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுவருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். சுகந்தனின் நண்பர்கள், உறவுகளின் தொடர்ச்சியான அழுத்தங்களையடுத்து வேறு வழியின்றி அந்த 6 சொர்ணா அக்காக்களையும் கைதுசெய்த பொலீஸார், டக்கிளஸின் தலையீட்டினையடுத்து உடனடியாகவே விடுதலைசெய்திருப்பதாகவும் தெரியவருகிறது.  https://www.colombotelegraph.com/index.php/the-epdps-sorna-accahs-precipitate-a-suicide/
  • இங்கேயும் அங்கேயுமாக வருகின்றது உண்மைதான். அன்றைய காலத்திலும் புலிகள் காலத்திலும் மத பிளவுகள் இருக்கவேயில்லை. எல்லாம் சரி சமமாகவே பார்க்கப்பட்டது. தெருவோர தெய்வ சிலைகள் உட்பட...... என்று புலியெதிர்ப்பு  எனும் போர்வையில் தமிழர்கள் தங்களுக்குள் பிரிந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்களோ அன்று முதல் அவர்களுக்குள் மதம் என்பதையும் தம் பேசு பொருளாக்கி செல்வச்செழிப்போடு வாழ நினைக்கின்றார்கள்.
  • அட இந்த மனுசனும் எழுதுறாரோ, அது சரி அந்த ரெண்டு கிலோ வெங்காயம்  சாரி மிளகாய் வாங்கியது.எங்கட ரசீவனோ 😁
  • அப்படியா? மசூதிகளை இடித்து இராமர் கோயில் கட்டுபவர்களும், மாட்டிறைச்சி கேட்டான் என்று அடித்து கொல்பவர்களும் சிவனை வழிபடுவதில்லையா? இந்தியா வீட்டுக்கு வெளியேதான் மதவெறியில் கலவரபூமியாகிறது. இங்கேயும் அங்கேயுமாக இலங்கையில் நிலைமை மாறிவருகிறது. இந்தியத்தமிழருக்கு மதவெறி குறைவு - பிராமணர்களுக்கு நன்றி 😃  
  • குமாரசாமி அண்ணை...  இது... நியானி, சம்பந்தப் பட்ட விடயம் அல்ல. மோகன் அண்ணாவிற்கு என்று... தனி மரியாதை இருக்கு,  தெரியுமோ...   எனக்கு யாழ். களத்தில்  மீண்டும் இணைய முடியாத அளவிற்கு..... நிரந்தர தடை இருந்தது, என்பதனை நீங்கள் அறிவீர்கள். அந்தத் தடைக்காலத்தில், எனக்கு உதவியவர்களும்... யாழ். கள நண்பர்கள் மட்டுமே. எனக்கு... எதிராக நின்ற, ஒரு சிலரும் ... இந்தக் களத்தில்  இப்போ இல்லை. அது... ஏன் என்று புரியாத மர்மமாகவே உள்ளது.  என்னால்... யாழ். களத்தை பிரிந்து இருக்க முடியாத அளவிற்கு... மனதிற்கு ஆறுதல் கொடுக்கும் இடமாகவும்,  அதே.... நேரம், கோபத்தை கொட்டும் இடமாகவும், சிரிக்கவும், சிந்திக்கவும்,  நல்ல நண்பர்களை தரவும்.. யாழ். களம் தான்... எனது, வலது கை  போல் உள்ளதை  உணர்கின்றேன். நீங்கள்... மோகன்  அண்ணாவுடன் தொடர்பு கொள்ள வேண்டும், மீண்டும் திண்ணைக்கு வர வேண்டும், நாங்கள்... ஜாலியாய்.... உரையாட வேண்டும்.. என்பதே... என்னுடைய, ஆசை. 💓  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.