Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

எண்சாண் உடம்பு

என்பார்கள்!

அவரவர் கையால்

அவரவர் உடம்பு எட்டுச் சாண்தான்!

எறும்புக்குக் கூட 

அதன் கையால் அளந்தால்

எட்டுச் சாண்தான்  உடம்பென்று

இயம்புகிறாள் அவ்வை!

காலில் இருந்து சாண் போட்டு அளந்தால்

இரண்டு சாணில் முட்டிவரை வரும்!

எட்டில் இரண்டு (2 /8 )

கால்தானே-(1 /4 ) …!

அதனால்தான்…..

அதைக் ‘கால்’ என்றார்கள் நம் தமிழர்கள்!

நான்கு சாண் அளந்தால் இடுப்புவரை   வரும் ! 

எட்டில் நான்கு (4 /8 ) அரை தானே(1/2)…!

அதனால்தான்…

இடுப்பை “அரை” என்றார்கள் நம் முன்னோர்கள்!

அதில் கட்டப் படும் கயிற்றை 

‘அரைஞாண் கயிறு’ என்று

பொருளோடு புகன்றார்கள்!  

Link to comment
Share on other sites

 • Replies 3.7k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்
வெறுமனே இரண்டு வீரர்களை மட்டும் அனுப்பி தங்கம் வென்றிருக்கும் நாடு என்ற பெருமையை பேர்முடா பெற்றுள்ளது.
May be an image of 1 person
 
 
 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2021 at 23:59, யாயினி said:

 

இளநி பற்றி இனிப்பான பதிவு யாயினி........!   👌

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
ஏதாவது தேடித் தேடிப் படிப்படிதில் இப்படியான விமர்சனங்கள் ஊடாகவும் புத்தகங்களை அவற்றை எழுதியவர்ளைப் பற்றி அறிந்து கொள்ளும வாய்ப்பு கிடைக்கும் அல்லவா..அப்படித் தான் இதுவும்....
 
 
 
 
 
A Passage North- Arun Arudpragasam 1/13
 
அருட்பிரகாசம் கொழும்பில் தமிழ் பெற்றோருக்குப் பிறந்தவர். தத்துவயியலில் முனைவர் பட்டத்தை அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில் பெற்றவர். The Story of a Brief Marriage என்ற இலங்கை இறுதிப்போரில் இளம் தம்பதியரைக் கதைக்களமாகக் கொண்ட இவரது முதல் நாவல் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தியாவிலும் இலங்கையிலும் வருடத்தின் பகுதிகளில் வசிக்கிறார். இவரது இந்த இரண்டாவது நாவல் புக்கர் 2021 நீண்டபட்டியலில் இடம்பெற்ற பதிமூன்று நாவல்களில் ஒன்று.
உலகத்தின் எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளில் இருந்து தொகுக்கப்பட்ட Flash Fiction தொகுப்பில் ஆசியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கதை இலங்கையில் இருந்து. சிங்களப்பெண் எழுதிய கதையில், கதாபாத்திரம் தெருவில் போகையில் பயங்கரவாதி மனிதவெடிகுண்டு வெடித்துப் படுகாயமடைந்து, சாலை நடைமேடையில் விழுந்து கிடக்கும் நிலையை வர்ணித்து, நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டிருப்பாள். இது முக்கிய செய்தி. அவர்கள் உலகுக்கு தம்மை அப்பாவிகளாகக் காட்டிக் கொள்ளும் முயற்சி. ஆங்கிலத்தில் எழுதினால் உலகம் முழுதும் வாசிக்கப்படுகிறது. அருட்பிரகாசம் அதே வைத்தியத்தை அவர்களுக்குத் திரும்ப அளிக்கிறார். சிங்கள ராணுவம் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றதை, குட்டிமணியின் கண்கள் மரணத்திற்குப்பின் தமிழ் ஈழத்தை பார்வையில்லாத ஒருவருக்குப் பார்வை அளித்துப் பார்க்கும் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, அவர் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டதைத் தெளிவாகக் கதையினூடே பதிவு செய்கிறார். புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற நூல் தொண்டை நெறிக்கப்பட்ட தமிழர் குரலை சத்தமாக உலகஅரங்கில் ஒலிக்க வைக்கிறது.
உலகம் முழுவதும் படிக்கப்படும் நூல்களுக்கு உலகத்தன்மை இல்லை என்றால் வரவேற்பு இல்லாது அலமாரியில் அடையும். பெரியபுராணத்திற்கும் உலக வாசகர்களுக்கும் என்ன சம்பந்தம்? கதையில் வரும் கிருஷ்ணன் பேரழிவின் போது டெல்லியில் கல்லூரியில் படிக்கிறான். அவன் மனம் எல்லாம் தாய்நாட்டில் அழிவுகள் நடுவே இருக்கிறது. இங்கே பூசலாரின் முழுக்கதையும் வருகிறது. சிவன் மன்னன் கட்டிய கோயிலை விட்டு மனத்தில் கட்டிய கோயிலுக்குப் போன கதை. ஒரு நாடோடிக்கதை போல் வரும் இந்தக்கதை இப்போது கிருஷ்ணனின் மனநிலையைத் தெளிவாக வாசகர்கள் புரியும் வண்ணம் சொல்கிறது, பெரிய புராணத்தையும் உலகஅரங்கில் சொல்லியாயிற்று, இலங்கை அரசின் அத்துமீறல்களையும் சொல்லியாயிற்று. மூன்றுமாங்காய்கள்.
இந்தியக் குடும்பங்களில் இன்று கூட பெண்கள் சமையலறையை அரசாட்சி செய்யும் இடமாக நினைப்பது வெகுசில வீடுகளில் தொடர்கிறது. பாட்டி, இருபத்தைந்து வயது பேரன் இருந்தும் சமையலறையில் மருமகள் நுழைவதை ரசிப்பதில்லை. கால்கள் முடியாது மாடி இறங்க பலநிமிடங்கள் ஆனாலும் சிரமப்பட்டு வந்து அங்கே பொருட்கள் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறாள். அதுவும் முடியாமல் போனபோது சமையலறையில் என்ன நடக்கிறது என்று எல்லோரிடமும் விசாரித்துத் தெரிந்து கொள்கிறாள்.
கிருஷ்ணன் என்ற இருபத்தைந்து வயது இளைஞனைச் சுற்றிக் கதை நகர்கிறது. இந்தியாவில் படித்து, அஞ்சும் என்ற பெண்ணுடன் வாழ்க்கை நடத்தி, அவள் ஜார்கண்ட் போராளிகளுடன் இணைந்து வேலைசெய்யப் போவதாகச் சொல்லிப் பிரிகையில், அவள் போல் தானும் தாய்நாட்டுக்குத் திரும்பி ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் கொழும்புக்கு வருபவன், அம்மாவுடனும், பாட்டியுடனும் இரண்டுமாடி வீட்டில் தங்குகிறான். அஞ்சும் இடமிருந்து நான்கு ஆண்டுகள் கழித்து ஒரு மெயில் வருகிறது, அதே நேரத்தில் பாட்டிக்கு Caretaker ஆக இருந்த ராணி வடகிழக்குப்பகுதி கிராமத்தில் இறந்த செய்தி வருகிறது. ஈமக்கிரியைக்கு கிருஷ்ணன் பயணத்தில் முன்னோக்கிச் செல்லும் போது அவன் நினைவுகள் பின்னோக்கிப் போகின்றன.
கிருஷ்ணன் இறந்து போன ராணி மற்றும் அவனது அப்பம்மா, பழைய காதலி அஞ்சும் ஆகிய மூவரையும் குறித்த நினைவுகளை அசைபோடுகிறான். ராணி தன் இரண்டு மகன்களையும் போரில் இழந்து மனநிலை பாதிக்கப்பட்டவள். கிணற்றில் விழுந்து கழுத்து முறிந்து அவள் இறந்தது விபத்தா? இல்லை தற்கொலையா? அவளது குடும்பத்தினர், அவள் கொழும்புவில் வேலைக்கு இருந்த சமயத்தில் இவர்கள் அவளை சரியாகக் கவனிக்காததால் தற்கொலை செய்து கொண்டாள் என்று பழிசொல்வார்களோ என்ற குற்றஉணர்வு அவனை ஈமச்சடங்கில் பங்குகொள்ளத் தூண்டுகிறது. கடைசியில் இவன் தெரிந்து கொள்வது என்ன?
அஞ்சும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு திடீரென ஏன் தொடர்பு கொள்ளவேண்டும்? இருவரும் ஒத்துக்கொண்டு தானே பிரிந்தனர்! இப்போது அவன் என்ன பதில் தர வேண்டும்? பழைய உறவைத் தொடரும்படியா இல்லை தொடராமல் இருக்கும் படியா?
Meursaultல் பாதி கிருஷ்ணன். எல்லாவற்றிலும் ஈடுபடுவதும் எதிலும் பற்றில்லாது விலகுவதும், மனதில் வெறுமை சூழ்ந்து இருப்பதும், தத்துவார்த்த சிந்தனைகளும் கலந்த கலவை கிருஷ்ணன். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மேகத்தைத் தூது விடும் பாடல், புத்தரின் சரிதை, குட்டிமணி கதை, பெண் கரும்புலிகள் கதை, பாலி மொழியில் எழுதப்பட்ட புத்தமதப் பெண்கள் எழுதிய கவிதைகள் என்று வேறுபட்ட விசயங்கள், நினைவுகளில் கலப்பதால் கதையுடன் இடைஞ்சல் இல்லாது கலக்கின்றன. இறப்புக்குப் பின் என்ன? மனம் தாளமுடியாத வலியை அனுபவிக்கும் பொழுது ஏன் உடல் அனுபவிக்கும் வேதனைகள் பெரிதாய் தோன்றுவதில்லை என்று தத்துவார்த்த விசயங்களும் கலந்து வருகின்றன. சிப்பத்தில் மொத்தமாகச் சேர்த்துக்கட்டிய பலவும் மேற்கத்திய வாசகர்களுக்கு புது உலகத்தின் வாயில். அந்தக் காரணத்தினாலேயே இது நீண்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கக்கூடும். அருட்பிரகாசத்தின் மொழிநடையும் அருமை.
May be an image of text that says 'At this novel's| cenire is an exquisite form of noticing, way of rend rendering consciousness and handling ime that connects Arudpragasam the great novelists the past COLM TOIBIN, author Troeklym and the Tatement of Mary A PASSAGE NORTH a novel RS.320.00 ANUK ARUDPRAGASAM Longlisled The 2021 Booker Prize'
 
 
 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Scarboroughவில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள Majestic City கடைத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனம் மோதியதில் இரண்டு வயது குழந்தை ஒன்று பலியாகியுள்ளது.
May be an image of car and outdoors
 
 
 
1h  · 
Scarboroughவில் அமைந்துள்ள Majestic City கடைத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனம் மோதியதில் இரண்டு வயது குழந்தை ஒன்று பலியாகியுள்ளது.
இன்று (சனி) மாலை 5:15 மணியளவில் இந்தச் சம்பவம் Markham Road and McNicoll Avenue சந்திப்புக்கு அருகாமையில் நிகழ்ந்தது.
Majestic City கடைத் தொகுதியில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புகைப்படம்: நன்றி CP24
 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
01.08.2021
 
Andre de Grasse வெண்கலம் வென்றார் ....
Andre de Grasse has won bronze .....
May be an image of 1 person and text that says 'CANAD TORONTO2015 DE GRASSE'
 
 
 
36m  · 
Tokyo ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 M இறுதிப் போட்டியில் கனடிய வீரர் Andre de Grasse வெண்கலம் வென்றார்.
Canadian Andre de Grasse has won bronze in the men’s 100m final at the Tokyo Olympics.
 
 
மார்க்கம் நகரில் இவர் பெயரில் ஒரு சிறுதெரு உள்ளது.
 
 
 
 
 
 
 
 
 

எம்மா மெக்கியோன்: ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை

3 மணி நேரங்களுக்கு முன்னர்
எம்மா மெக்கியான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மனிதர் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்வதே பெரும் சாதனைதான். ஆனால் இந்த டோக்யோ ஒலிம்பிக்கில் ஒரு வீராங்கனை மட்டும் ஏழு பதக்கங்களை வென்று மொத்த உலகை மலைக்க வைத்திருக்கிறார். அவர் பெயர் எம்மா மெக்கியோன்.

ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீராங்கனையான இவர், டோக்யோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் ஏழு பதக்கங்களைக் குவித்திருக்கிறார்.

ஏழு பதக்கங்கள் வென்ற எம்மாவின் சாதனை பற்றிய ஏழு முக்கிய தகவல்கள் இதோ.

1. 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 4 * 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே, 4 * 100 மீட்டர் மிட்லே ரிலே என நான்கு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 100 மீட்டர் பட்டர்ஃப்ளை, 4 * 200 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே, கலப்பு 4 * 100 மீட்டர் மிட்லே ரிலே ஆகிய போட்டிகளில் வெண்கலம் வென்றுள்ளார்.

2. ஒரு பெண் வீராங்கனை ஒரே ஒலிம்பிக்கில் ஏழு பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை என்கிறது ஏ.எஃப்.பி செய்தி முகமை.

3. இதுவரையான ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியா 14 தங்கத்துடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. இதில் நான்கு தங்கத்தை எம்மா மெக்கியோன் மட்டும் வென்று கொடுத்திருக்கிறார்.

4. உலகிலேயே, ஒரே ஒலிம்பிக் போட்டியில் 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டிகள் என இரண்டிலும் தங்கம் வென்ற நான்காவது பெண்மணி இவர்தான் என்கிறது இ.எஸ்.பி.என் வலைதளம்.

5. ஆஸ்திரேலியாவின் இயான் தார்ப் மற்றும் லீசல் ஜோன்ஸ் ஆகியோர் தலா 9 ஒலிம்பிக் பதக்கங்களைப் வென்ற சாதனையையும் முறியடித்திருக்கிறார் எம்மா மெக்கியோன்.

6. டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற நான்கு தங்கம் மற்றும் மூன்று வென்கலத்தோடு, கடந்த 2016 ஒலிம்பிக் போட்டியில் வென்ற ஒரு தங்கம், இரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை எம்மா மெக்கியோன் வென்றுள்ளார் என்கிறது இ.எஸ்.பி.என்.

7. பதக்கங்கள் போக, இரு ஒலிம்பிக் சாதனைகளை படைத்து இருக்கிறார். 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் 23.81 நொடிகள் எனவும், 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் 51.96 நொடிகள் என இரு ஒலிம்பிக் சாதனைகளைப் எம்மா மெக்கியோன் படைத்திருக்கிறார் என்கிறது ஒலிம்பிக்ஸ் வலைதளம்.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆஸ்கர் ஃபிகாரோ: தண்டு வட சிகிச்சையைத் தாண்டி தங்கம் வென்ற ஒலிம்பிக் நாயகனின் கதை

 • கெளதமன் முராரி
 • பிபிசி தமிழுக்காக
29 ஜூலை 2021
ஆஸ்கர் ஃபிகாரோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

2008 பீய்ஜிங் ஒலிம்பிக்கில் படுதோல்வி, ஒரு முறை கூட எடையை தூக்க முடியாமல் மிக மோசமான செயல்பாடுகளோடு போட்டியில் இருந்து வெளியேற்றம். கடுமையான விமர்சனங்கள், முதுகுத் தண்டில் வலி, மெல்ல செயலிழக்கும் வலது கை, உடல் மீது போர் தொடுக்கும் வயது என தன்னையும், தன் சூழலையும் வென்ற ஒலிம்பிக் நாயகன் ஆஸ்கர் ஃபிகாரோ (Oscar Figueroa) குறித்து பார்க்கப் போகிறோம்.

நானும் இவர்களோடு சேர்ந்து பயிற்சி பெற விரும்புகிறேன் என சிறுவனாக இருந்த ஆஸ்கர் கேட்டதற்கு "வா, வா வந்து பயிற்சி செய்" என ஊக்கமளித்து பாலபாடம் எடுத்தவர், அவரது முதல் பயிற்சியாளர் டமரிஸ் டெல்காடோ.

"நான் நம்பர் 1-ஆக இருப்பது பிடிக்கும்" என ஆஸ்கர் அடிக்கடி கூறுவார். வாகனங்களில் முன் வரிசை காலியாக இருந்தால், அவர் அங்கேயே அமர்ந்து கொள்வார் என ஆஸ்கரின் இளமை காலங்களை நினைவுகூர்கிறார் டமரிஸ்.

அவர் டமரிஸின் பயிற்சிக் கூடத்துக்கு வந்த போது அவருக்கு பளுதூக்குதல் குறித்து ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. காலப்போக்கில் சட்டெனெ நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார் என்கிறார் டமரிஸ்.

 

இளைஞர்களை சுண்டி இழுக்கும் குற்ற சம்பவங்கள், ஆஸ்கரையும் வசீகரித்து வளைத்துப் போட முயன்றது. இருப்பினும் காலம் அவரை ஜெய்பெர் மஞ்சரெஸ் (Jaiber Manjarres) என்கிற பயிற்றுநரிடம் அழைத்துச் சென்றது.

ஆஸ்கர் ஃபிகாரோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொஞ்ச காலத்திலேயே ஆஸ்கர் ஒரு நல்ல விளையாட்டு வீரனாக, புதிய உச்சங்களைத் தொடும் ஒருவராக வருவார் என அடையாளம் கண்டுகொண்டார் ஜெய்பேர்.

நல்ல பயிற்சியோடு, மிகச் சரியான காலகட்டத்தில் பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றார் ஆஸ்கர். 2004ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 56 கிலோ உடல் எடை பிரிவில் கொலம்பியா சார்பாக பங்கேற்று ஐந்தாவது இடம் பிடித்தார். அப்போது அவருக்கு வயது 21.

சரி அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் உறுதி என நம்பிக்கையோடு பயிற்சியைத் தொடர்ந்தார்.

2008 பெய்ஜிங்கில் 62 கிலோ உடல் எடைப் பிரிவில் தங்கம் எனக்கு தான் என தன்னை மேம்படுத்திக் கொண்டு களமிறங்க தயாராகிக் கொண்டிருந்தவருக்கு முதுகு மெல்ல வலிக்கத் தொடங்கியது.

சரியாக பீய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சில வாரம் முன்பு, ஆஸ்கரின் கழுத்துப் பகுதியில் வலி வலி அதிகரிக்கிறது.

ஆஸ்கரால் முன்பைப் போல பளுதூக்கும் ராடை இறுகப் பற்றிப் பிடிக்க முடியவில்லை. அவர் கையில் இருந்து ராட் நழுவத் தொடங்கியது, அதனோடு அவரது கனவும் நழுவத் தொடங்கியது.

அப்போது எந்த மருத்துவராலும், பிசியோதெரபிஸ்ட்களாலும் அவருக்கு என்ன பிரச்னை என கண்டு பிடிக்க முடியவில்லை. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டன. ஆஸ்கர் கொலம்பியாவின் பதக்க நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

போட்டி நெருங்க நெருங்க ஆஸ்கரின் வலி அதிகரித்தது என்கிறார் மருத்துவர் கார்லோஸ் பொசாடா.

ஒரு உலக தரமான பேட்ஸ்மேன் போல்டாவது எத்தனைஅவமானகரமான விஷயமாக கருதப்படுகிறதோ, அப்படி பளுதூக்குதலில் ஒரு முயற்சி கூட வெற்றி பெறாமல் போட்டியில் இருந்து விலகுவது அதற்கு நிகரானது.

ஆஸ்கர் ஃபிகாரோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆம் பதக்கம் வெல்லும் திறன் கொண்ட ஆஸ்கரின் வலது கையால் பளுதூக்கும் ராடை இறுகப் பற்ற முடியவில்லை. அவர் மனதளவிலேயே தளர்ந்திருந்தார் என்கிறார் அவரது ஆரம்ப கால பயிற்றுநர் டமரிஸ்.

ஸ்னாச் முறையில் மூன்று முயற்சிகளும் ஒரே போல அவரது வலது கை பிரச்னையால் தோல்வியடைந்து வெளியேறினார். கண்ணீரும், மருத்துவர் கார்லோஸ் மட்டுமே உடன் இருந்தனர்.

"என் பயிற்றுநர் என் வலியைக் குறித்தோ, என்னைக் குறித்தோ எதையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. போட்டியின் பாதியிலேயே என்னை விட்டுச் சென்றுவிட்டார். அவர் பார்வையில் நான் எதற்கும் பயன்படாத ஒருவனாக இருந்தேன்," என ஒலிம்பிக்ஸ் சேனலிடம் கூறியுள்ளார் ஆஸ்கர்.

ஒலிம்பிக் போன்ற அழுத்தம் நிறைந்த போட்டியில், ஒரு விளையாட்டு வீரர் பயிற்றுநர் இல்லாமல் பங்கேற்பது சாத்தியமற்ற ஒன்று.

ஆஸ்கருக்கு எதிராக பல கடினமான விமர்சனங்களை முன் வவைத்தனர். ஆஸ்கருக்கு காயம் எதுவும் இல்லை என்றனர். ஒலிம்பிக்கில் விளையாட ஆஸ்கர் விரும்பவில்லை என அவரின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குறியாக்கினர். ஒட்டுமொத்த விளையாட்டு சமூகமும் அவருக்கு எதிராக இருந்தது.

அவருக்கு காயம் ஏற்பட்டதா இல்லையா என விளையாட்டு பத்திரிகைகளில் தலையங்கங்கள் தீட்டப்பட்டன. போட்டியின் போதே கியூபாவைச் சேர்ந்த ஒருவர், உங்களுக்கு இருக்கும் பிரச்னை C6 - C7 Cervical Hernia-வாக இருக்கலாம் என்றார்.

எம்.ஆர்.ஐ பரிசோதனையில் அது உறுதி செய்யப்பட்டது. இந்த நோயால் கை கால்கள் விளங்காமல் போகலாம் என மருத்துவர்கள் கூறினர். அவரது மொத்த உலகமும் இருண்டது.

அதுவரை தான் வாழ்கையில் விடாத கண்ணீரை அந்த இருட்டில் வடித்ததாக ஆஸ்கரே ஒலிம்பிக்ஸ் சேனலிடம் கூறியுள்ளார்.

ஆஸ்கர் ஃபிகாரோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஓய்வு பெற்றுவிடலாமா, இப்படித் தான் என் விளையாட்டு வாழ்கை முடிவுக்கு வர வேண்டுமா? என குழப்பத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.

ஏதோ ஒரு சிறிய வெளிச்சம் இதிலிருந்து மீண்டால் என்ன? என அவரை யோசிக்க வைத்தது. முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே தீர்வு என்றனர்.

நான் மீண்டும் விளையாட முடியுமா என்பது மட்டுமே ஆஸ்கரின் ஒற்றை கேள்வி.

முடியும் என்றனர்.

சிக்கலான அறுவை சிகிச்சை முடிந்தது.

முழு நம்பிக்கையோடு மீண்டும் பயிற்சிகளைத் தொடங்கினார். மீண்டும் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் கொலம்பியா சார்பாக கலந்து கொள்ள தகுதிபெற்றார். இருப்பினும் ஆஸ்கர் தன் தங்கப் பதக்கத்தைத் தவற விட்டார்.

2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்கர் ஃபிகாரோ (Oscar Figueroa) வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு, தனக்கு நெருக்கமான ஒருவரிடம் "எனக்கு தங்கம் வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இத்தனை நாள் ஆஸ்கரின் விளையாட்டை விமர்சித்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது அவர் எண்ணத்தை விமசிக்கத் தொடங்கினர்.

பளுதூக்குதல் போன்ற விளையாட்டுகளில் 30 வயதைக் கடந்து முழு செயல்திறனோடு இருப்பது, அதே 62 கிலோ உடல் எடையை ஆண்டுக் கணக்கில் கட்டுப்பாடோடு வைத்திருப்பது, ஃபிட்னஸ் என இந்த இலக்கு அதிக சவாலானது.

அதை எல்லாம் ஆஸ்கர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. 2016 ஒலிம்பிக்கில் தங்கம் எனக்கு வேண்டும் என்கிற இலக்கில் குறியாக இருந்தார்.

ஆஸ்கர் ஃபிகாரோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதுகு வலி அவரை விடுவதாக தெரியவில்லை. மீண்டும் ஜனவரி 2016-ல் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதுவும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சுமார் 7 மாதத்துக்கு முன்.

அறுவை சிகிச்சைக்குப் பின், மீண்டும் ஏ, பி, சி... என பயிற்சியைத் தொடங்கினார். கொலம்பியா அணி ரியோவைச் சென்றடைந்தது. 62 கிலோ உடல் எடைப் பிரிவில் பிரபலமாக இருந்த ஆஸ்கரின் வருகையை பலர் பாராட்டினாலும், அவரது உடல் முன்பைப் போல இல்லை என வருத்தப்பட்டனர்.

ஸ்னாச் பிரிவில் 142 கிலோ எடையையும், க்ளீன் அண்ட் ஜெர்க்கில் 176 கிலோ எடையையும் தூக்கி 318 கிலோ உடன் தன் பல்லாண்டு கனவை நிறைவு செய்தார்.

176 கிலோ க்ளீன் அண்ட் ஜெர்க்கை வெற்றிகரமாக நிறைவு செய்து தங்கத்தை உறுதி செய்த போது, மனம் உடைந்து அழத் தொடங்கினார். அரங்கில் உள்ள அத்தனை பேருக்கும் நன்றி கூறினார்.

பளுதூக்கும் வீரர்கள், போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் போது, தங்களுக்கென பிரத்யேகமாக தயரிக்கப்பட்ட பளுதூக்கும் காலணிகளை மேடையில் விட்டுச் செல்வது வழக்கம். பளுதூக்கும் ராடை முத்தமிட்டு, காலணிகளை விட்டுச் சென்றார்.

குரல் தழுதழுக்க ஆனந்தக் கண்ணீரோடு கொலம்பிய தேசிய கீதம் பாடி தங்கமகனாய் விடைபெற்றார் ஆஸ்கர் ஃபிகாரோ.

இரு முறை முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை, டன் கணக்கிலான விமர்சனங்கள், அதிகரிக்கும் வயது என எந்த ஆயுதத்தாலும், ஆஸ்கரின் தன்னப்பிக்கையையும், இலக்கையும் சிதைக்க முடியவில்லை.

விடாமுயற்சியின் விஸ்வரூபனாக இப்போதும் ஒலிம்பிக் உலகில் மதிக்கப்பட்டு வருகிறார் நான்கு ஒலிம்பிக் களம் கண்ட நாயகன் ஆஸ்கர் ஃபிகாரோ.

 

ஒலிம்பிக்கில் இந்தியா - அட்டவணை

 

 

 
 

 

Date

Event

Athletes

Sport

ஜூலை 23

மகளிர் தனிநபர் தரவரிசை சுற்று

தீபிகா குமாரி

வில்வித்தை

ஜூலை 23

ஆடவர் தனிநபர் தரவரிசை சுற்று

அதனு தாஸ்,பிரவீன் ஜாதவ், மற்றும் தருண்தீப்ராய்

வில்வித்தை

ஜூலை 23

மகளிர் வெல்டர் வெயிட் ரவுண்ட் ஆஃப் 32

லவ்லீனா பொர்கோஹென்

குத்துச்சண்டை

ஜூலை 23

ஆடவர் வெல்டர் வெயிட் ரவுண்ட் ஆஃப் 32

விகாஸ் கிஷன் யாதவ்

குத்துச்சண்டை

ஜூலை 23

ஆடவர் சூப்பர் ஹெவி வெயிட் ரவுண்ட் ஆஃப் 32

சதீஷ் குமார்

குத்துச்சண்டை

ஜூலை 24

கலப்பு குழு 1/8 நீக்குதல்

அதனுதாஸ், தீபிகா குமாரி

வில்வித்தை

ஜூலை 24

கலப்பு குழு காலிறுதி

அதனுதாஸ், தீபிகா குமாரி

வில்வித்தை

ஜூலை 24

கலப்பு குழு அரையிறுதி

அதனுதாஸ், தீபிகா குமாரி

வில்வித்தை

ஜூலை 24

கலப்பு குழு பதக்க பந்தயங்கள்

அதனுதாஸ், தீபிகா குமாரி

வில்வித்தை

ஜூலை 24

ஆடவர் இரட்டையர் குழு கட்டம்

சாத்விக் சாய்ராஜ்ரன்கிரெட்டி/சிராக் ஷெட்டி vsலீ யாங், வாங் சி லின்

பாட்மிண்டன்

ஜூலை 24

ஆடவர் ஒற்றையர் குழு கட்டம்

சாய் ப்ரநீத் vs ஜிபர்மேன் மிஷா

பாட்மிண்டன்

ஜூலை 24

ஆடவர் பூல் ஏ

இந்தியாvsந்யூசிலாந்து

ஹாக்கி

 / 12

Olga Fikotova: காதலால் தேசங்களைக் கடந்த ஒலிம்பிக் வீராங்கனை - கெளரவித்து அழகு பார்த்த அமெரிக்கா

30 ஜூலை 2021
வட்டு எறியும் ஓல்கா ஃபிகொடோவா

பட மூலாதாரம்,GETTY IMAGES

1956. உலகம் அமெரிக்கா மற்றும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா என இரு பெரும் நாடுகளுக்குப் பின் வரிசை கட்டி நின்று கொண்டிருந்த கால கட்டமது.

இன்று செக் குடியரசாக இருக்கும் நாடு, அன்று செக்கோஸ்லோவாக்கியாவாக இருந்தது.

அந்நாட்டைச் சேர்ந்த சுமார் ஆறு அடி உயரம், அஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஒரு பெண் மருத்துவ கல்லூரி மாணவிக்கு விளையாட்டின் மீது அதீத காதல் இருந்தது. அவர் பெயர் ஓல்கா ஃபிகொடோவா (Olga Fikotova).

கல்லூரியில் படித்த கொண்டிருந்த போது வட்டு எறிதல் (Discuss Throw) அவரை வெகுவாக ஈர்க்க, அதை தன் பாணியில் வீசத் தொடங்கினார்.

நல்ல உடல் வலுவும், திறனும் இருப்பதை அவரது பயிற்றுநர் அடையாளம் கண்டார். ஆனால் அவரிடம் வட்டு எறியும் ஒரு ரிதம் மட்டும் சரியாக அமையவில்லை. வட்டு எறிதலுக்கோ அந்த ரிதம் தான் அத்தனை அவசியமானது.

அதையும் ஓல்கா மெல்ல சரி செய்து கொண்டார். 1955ஆம் ஆண்டில் அவர் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அவரை மேற்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளுக்குத் தயார் செய்ய, ரஷ்யாவின் முன்னாள் ஒலிம்பிக் வட்டு எறிதல் வீராங்கனையே களமிறங்கினார்.

ஒரு கட்டத்தில் குருவை மிஞ்சிய சீடராக உருவெடுத்தார். அப்படியே ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவும் தகுதி பெற்றார். 1956 ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் செக்கோஸ்லோவாக்கியா நாட்டுக்காக போட்டியிட்டு தங்கப் பதக்கம் வென்றார்.

கட்டுரை அவ்வளவு தானா? அதான் ஒலிம்பிக்கில் தங்கம் ஜெயித்துவிட்டாரே என கேட்கிறீர்களா?

ஓல்கா ஃபிகொடோவா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இனி தான் கதையே ஆரம்பம்.

தங்க மங்கை ஓல்கா ஃபிகொடோவாவுக்கு, மெல்பர்னில் ஒலிம்பிக் போட்டிகளில் ஹேமர் த்ரோ போட்டியில் அமெரிக்கா சார்பாக கலந்து கொண்டு தங்கம் வென்ற ஹரால்ட் கானொலி உடன் காதல் ஏற்பட்டது.

மெல்பர்ன் முழுக்க காதலோடு சுற்றித் திரிந்தனர். செக்கோஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த ஓல்கா மழலை ஆங்கிலத்தில் பேசி காதல் செய்தார் என்கிறது ஒலிம்பிக்ஸ் சேனல்.

மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. இருவரும் தங்கள் நாடுகளுக்குச் செல்ல வேண்டிய தருணம் வந்தது.

ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.

இவர்களது காதலை, அவர்களது வீட்டார் எதித்தார்களோ இல்லையோ, செக்கோஸ்லோவாக்கியா கடுமையாக எதிர்த்தது.

ஹரால்டை திருமணம் செய்து கொண்டால், இனி தன் செக்கோஸ்லோவாக்கியா நாட்டுக்காக விளையாடவே முடியாது என ஓல்கா ஃபிகொடோவாவை அச்சுறுத்தியது.

பல கட்ட பிரச்சனைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, ஓல்கா ஃபிகொடோவா, ஹரால்ட் கானொலியை மணந்து அமெரிக்காவில் குடியேறினார்.

செக்கோஸ்லோவாக்கியாவும், ஓல்காவை அச்சுறுத்தியதோடு நிற்காமல், அவர் மீண்டும் செக்கோஸ்லோவாக்கியாவுக்காக விளையாட முடியாத படி செய்தது.

பிறந்த நாடான செக்கோஸ்லோவாக்கியா கைவிரித்தாலும், மாப்பிள்ளை கொடுத்த புகுந்த நாடான அமெரிக்கா அவரை அன்போடு வரவேற்றது. அதோடு தன் நாட்டின் சார்பாகவும் விளையாட அனுமதித்தது அமெரிக்கா.

அமெரிக்க கொடியேந்திச் செல்லும் ஓல்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

1956-க்குப் பிறகு 1960, 1964, 1968, 1972 என நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவுக்காக விளையாடினார். தேசங்களைக் கடந்து நட்பும், அமைதியும் பரவ வேண்டும் என்பது தானே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நோக்கமும். அதை தன் வாழ்கை வழி நடத்திக் காட்டியவர் ஓல்கா ஃபிகொடோவா.

இதை எல்லாம் விட 1972 ஒலிம்பிக் போட்டிகளின் போது, அமெரிக்க தேசிய கொடியை ஏந்தி, அமெரிக்க அணியை வழிநடத்திச் செல்லும் பெருமையை ஓல்காவுக்கு வழங்கி கெளரவித்தது அமெரிக்கா.

இப்போது ஒரு முழு அமெரிக்கராகவே வாழ்ந்து வருகிறார் ஓல்கா. அவரது மகன் அமெரிக்காவில் தேசிய அளவில் ஒரு பெரிய ஈட்டி எறிதல் வீரராகவும், அவரது மகள் அமெரிக்காவின் கைப்பந்து அணியில் ஒரு வீராங்கனையாகவும் வளர்ந்தனர் என்கிறது ஒலிம்பிக்ஸ்.காம் என்கிற வலைதளம்.

'தி ரிங்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்கிற பெயரில் தன் காதல் கதை குறித்து ஒரு புத்தகமே எழுதியுள்ளார் ஓல்கா கானொலி ஃபிகடோவா.

இன்று வரை எத்தனையோ காதல் கதைகள் ஒலிம்பிக் போட்டிகளைச் சுற்றி நிகழ்ந்தாலும், அத்தனை காதல் கதைகளுக்கும் முத்தாய்ப்பாய் மணி மகுடமாய் திகழ்வது, ஓல்கா - ஹரால்ட் காதல் கதை தான் என்றால் அது மிகையல்ல.

 
Edited by யாயினி
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சோழர் கால சிலைகள்: திருடப்பட்ட கலைப் பொருட்களை திருப்பித் தரும் ஆஸ்திரேலியா - இந்தியா வரும் வரலாற்று சின்னங்கள்

31 ஜூலை 2021
National Gallery of Australia

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட அல்லது திருடப்பட்ட 14 கலைப் பொருட்களை மீண்டும் ஒப்படைக்க உள்ளது ஆஸ்திரேலியா.

இவற்றில் ஒரு கலைப் பொருளைத் தவிர மற்ற அனைத்தும், கலைப்பொருள் விற்பனையாளர் மற்றும் கடத்தல்காரர் என்று குற்றம்சாட்டப்படும் சுபாஷ் கபூர் என்பவருடன் தொடர்புடையவை. இந்தியாவில் சட்ட விசாரணையை எதிர்கொண்டுள்ள சுபாஷ் கபூர் தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறார்.

மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த சிலைகள், புகைப்படங்கள் உள்ளிட்ட 2.2 மில்லியன் டாலர்கள் (சுமார் 15 கோடி இந்திய ரூபாய்) மதிப்பு கொண்ட, இந்தியாவுக்கு சொந்தமான கலைப் பொருட்கள் ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்திடம் (நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா) உள்ளன.

இவற்றை இந்தியாவிடமே திருப்பித்தரும் பட்சத்தில் "எங்கள் வரலாற்றின் மிக கடினமான ஓர் அத்தியாயம் முடிவடையும்" என இந்த அருங்காட்சியகத்தின் இயக்குநர் நிக் மிட்ஸ்வெச் தெரிவித்தார்.

இதில் சில பொருட்கள் தமிழகத்தின் சோழர் காலத்தை சேர்ந்தவை. 12ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இந்துக் கலைகள் வளர்ச்சியடைந்த போது செய்யப்பட்ட சில சிலைகளும் இதில் அடங்கும்.

இந்த பொருட்கள் அனைத்தும் அடுத்த சில மாதங்களில் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுபாஷ் கபூர் மூலம் 2008இல், ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கப்பட்ட இந்து மதக் கடவுள் சிவனின் வெண்கல சிலை ஒன்று உள்பட பல கலைப்பொருட்களை கான்பெர்ராவில் உள்ள கலைப்பொருட்கள் அருங்காட்சியகம் திருப்பி அளித்துள்ளது.

12th Century sculpture of the dancing child-saint Sambandar

பட மூலாதாரம்,NATIONAL GALLERY OF AUSTRALIA

 
படக்குறிப்பு,

12ஆம் நூற்றாண்டை சேர்ந்த குழந்தை சம்பந்தர் சிலை.

கலைப்பொருட்கள் அனைத்தும் இன்னும் சில மாதங்களில் இந்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் நிக் மிட்ஸ்வெச் தெரிவித்துள்ளார்.

"நன்னடத்தை மற்றும் நட்பை வெளிப்படுத்தும் அசாதாரணமான செயல் இது" என்று ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய உயர் ஆணையம் (தூதரகம்) ஆஸ்திரேலிய அரசின் முடிவைப் பாராட்டியுள்ளது.

கலைப் பொருட்களை சட்ட ரீதியான மற்றும் நியாய ரீதியிலான கூறுகளின் அடிப்படையில் மதிப்பிட்டு அவற்றின் உண்மைத் தன்மையை கண்டறியும் வழிமுறையை தாங்கள் அறிமுகம் செய்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் தேசிய அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

Group portrait of a Gujarati family

பட மூலாதாரம்,NATIONAL GALLERY OF AUSTRALIA

 
படக்குறிப்பு,

2009இல் வாங்கப்பட்ட குஜராத்தி குடும்பத்தின் படம் ஒன்றும் இந்தக் கலைப் பொருட்களில் அடக்கம்.

கலைப் பொருட்கள் திருடப்பட்டோ, சட்டவிரோதமாக எடுக்கப்பட்டோ, வெளிநாடுகளில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக ஏற்றுமதி செய்யப்பட்டோ, நியாயமற்ற முறையில் வாங்கப்பட்டோ இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால், அவற்றை தங்கள் அருங்காட்சியகத்தில் இருந்து நீக்கிவிட்டு அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

சுபாஷ் கபூருக்கு எதிராக அமெரிக்காவில் பெரிய அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'ஆப்ரேஷன் ஹிட்டன் ஐடால்' (Operation Hidden Idol) சட்ட நடவடிக்கை மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நூறு கலைப்பொருட்கள் அவரிடமிருந்து மீட்கப்பட்டன.

மன்ஹாட்டன் நகரத்தில் 'ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் ' (Art of the Past) எனும் பெயரில் கலைப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்று இவர் நடத்தி வந்தார். 2012ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதல் முறையாக அமெரிக்க அரசு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
142 கோடி ரூபா பெறுமதியான குதிரையுடன், களமிறங்கும் இலங்கைப் பெண்
இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய போட்டியாளராக மாறியுள்ள, மெடில்டா கார்ல்ஸன், குதிரையோட்ட போட்டியில் தகுதிகாண் முதல் சுற்றில் நாளை போட்டியிடவுள்ளார்.
இந்தப்போட்டி இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
போட்டி தொடர்பில் மெடில்டா கால்ஸன் கூறுகையில், 6 மில்லியன் யூரோ (சுமார் 142 கோடி இலங்கை ரூபா) பெறுமதியான குதிரையுடன் தான் களமிறங்குவது வெறும் கையுடன் செல்வதற்கு அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஜேர்மனியில் வாழ்ந்துவருகின்ற மெட்டில்டா, இலங்கை சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுகின்ற முதலாவது குதிரையோட்ட வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
பல குதிரையோட்ட போட்டிகளில் பங்குபற்றிய அனுபவத்தைக் கொண்ட 37 வயதான இவர், கடந்த 2019இல் மாத்திரம் மெக்ஸிகோ சிட்டி, மியாமி, பாரிஸ், ரோம், மொனாக்கோ, லண்டன், தோஹா மற்றும் ப்ரேக் ஆகிய நகரங்களில் நடைபெற்ற குதிரையேற்ற போட்டிகளில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இதுவரை 16 குதிரையேற்ற போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ள மெட்டில்டா கார்ல்சன், உலகின் முன்னணி குதிரையோட்ட வீரர்கள் பங்குபற்றும் க்ளோபல் சம்பியன்ஸ் லீக் தொடரில் தொடர்ந்தும் பங்கேற்று வருகின்றார்.
1984 செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி கண்டியில் பிறந்து 3 மாத கைக்குழந்தையாக இருந்தபோது சுவீடன் நாட்டைச் சேர்ந்த தம்பதியினரால் மெட்டில்டா கார்ல்சன் தத்தெடுக்கப்பட்டார்.
சுவீடனில் குதிரையோட் போட்டிகள் பிரபல்யம் என்பதால் 8 வயது முதல் முறையாக ரய்டார்சோல்ஸ் கெப் என்ற விளையாட்டுக் கழகத்தில் இணைந்து பயிற்சிகளை எடுத்துக் கொண்டதுடன், தனது 18 ஆவது வயதில் முதல் முறையாக குதிரையோட்ட போட்டியில் பங்கேற்றார்.
May be an image of 1 person, horse and text that says 'SUBSCRIBE f'
 
 
 
 
 
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் பந்தல்கால் நாட்டுதல் -2021
231010167_3048751992013391_8431349541537
 
 
220003345_3048752168680040_8053097803514
 
 
221691771_3048752128680044_5184047382640
 
 
219781068_3048752008680056_3806133264416
 
 
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
எட்டாவது தடைதாண்டலை பாய மறுத்த 142 கோடி பெறுமதியான குதிரை. இலங்கையின் பதக்க கனவு கலைந்தது.
May be an image of riding on a horse, horse and text that says '5 MATHILDA KARLSSON ELMINATED INDIVIDUAL JUMPING'
 
 
 
 
 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
🌼ஒருகுட்டி கதை
219854475_209190027823818_89065715245510
 
🌼ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.
🌼'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.
பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி,
🌼அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.
🌼அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டானர்.
🌼அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.
🌼அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார்.
🌼அதற்கு சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன்.
🌼என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்.
கடைக்காரர் வியந்தார்.
🌼ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது.
🌼வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார்.
🌼தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவ்வொருவரும்
நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்...
 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11h  · 
 
BREAKING:
Tokyo ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 200 மீற்றர் போட்டியில் கனடியரான Andre De Grasse தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
Canada’s Andre De Grasse has won gold in the men’s 200-metre race at the Tokyo Olympics.
May be an image of 1 person
 
 
 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

``இது எனக்கு ஹாபி மட்டும் இல்ல; எதிர்காலமும்தான்!" - ஓவியத்தில் கலக்கும் அரசுப்பள்ளி மாணவி

மாணவி தேஜாஸ்ரீ ( தே.சிலம்பரசன் )

அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்புப் படித்து வரும் தேஜாஶ்ரீ, கண்களைக் கவரும் வகையில் அழகிய வண்ண ஓவியங்களைத் தீட்டி வருவதோடு, பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளையும் பெற்று அசத்தி வருகிறார்.

விழுப்புரம், விராட்டிக்குப்பம் சாலை அருகே உள்ள போதிதர்மன் நகரில் வசித்து வருகின்றனர் ராஜேஷ்கண்ணன் - இளையரசி தம்பதி. இவர்களின் மூத்த மகள் 13 வயதாகும் தேஜாஸ்ரீ. ஓவிய ஆசிரியரான தன் தந்தையைப் பார்த்து சிறுவயதிலிருந்தே ஓவியத்தின் மீது அதிக நாட்டம் கொண்ட இந்தச் சுட்டி, கடினமான ஓவியங்களையும் கண் கவரும் வகையில் எளிதில் வரைந்து முடித்து அசத்துகிறார்.

தேஜாஸ்ரீ
 
தேஜாஸ்ரீ

தன் வீட்டில் தான் வரைந்த ஓவியத்துக்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்த தேஜாஸ்ரீயிடம் பேசினோம். ``விழுப்புரம், பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில படிக்கிறேன். அப்பா டிராயிங் டீச்சர். அதனால அப்பா வரைவதைப் பார்த்து நானும் சின்ன வயசுல இருந்தே வரைவதற்குக் கத்துக்கிட்டேன். ஓவியம் வரைய எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒன்றாம் வகுப்புப் படிக்கும் போதிலிருந்தே நிறைய டிராயிங் போட்டிகள்ல ஜெயிச்சிருக்கேன். அப்பாவும் அம்மாவும் எனக்கு ஓவியத்துக்குத் தேவையான எல்லா பொருள்களையும் வாங்கித் தருவாங்க'' என்றவர், ஓவியத்தில் தான் முயன்ற சாதனைகள் பற்றிப் பகிர்ந்தார்.

 

``12 அடி நீலம் பிரஷ் வச்சு தொழிலாளர் தினத்தன்று ஓவியம் வரைந்து `கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'ல ரெக்கார்ட் பண்ணி இருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ் 11 பேர் கூட சேர்ந்து காந்தி ஜெயந்தி அன்றைக்கு 30 நிமிடத்தில் 500 மீட்டர் ரிப்பனில் 2,000 காந்தி தாத்தா படம் வரைந்தோம். அப்போ `ஓவிய சிறகு விருது' கொடுத்தாங்க. அதேபோல `சாதனைப் பெண் விருது'ம் வாங்கியிருக்கேன். இது மட்டுமல்லாம, கொரோனா வைரஸ் பரவி இருக்கும் இந்த நேரத்துல நிறைய ஆன்லைன் போட்டியில் கலந்துகிட்டு நிறைய சர்டிஃபிகேட் வாங்கியிருக்கேன். நேற்று முன்தினம் அரசு சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியப் போட்டியிலும் முதல் பரிசு பெற்றுள்ளேன்.

ஓவியத்தை சும்மா ஹாபியா நான் வரையலை. இதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டுப் போவேன். எனக்கு எதிர்காலத்தில் டிராயிங் டீச்சராகவோ, கட்டடக்கலையில் இன்டீரியர் டிசைனராகவோ ஆகணும்னு ஆசை" என்கிறார் கண்கள் மின்ன.

குடும்பத்தாருடன் தேஜாஸ்ரீ
 
குடும்பத்தாருடன் தேஜாஸ்ரீ

தேஜாஸ்ரீயின் அப்பா ராஜேஷ் கண்ணனிடம் பேசினோம். ``தேஜாஸ்ரீ படிக்கிற பூந்தோட்ட நகராட்சிப் பள்ளியில் 2012-ல் இருந்து நான் பகுதிநேர ஓவிய ஆசிரியரா இருக்கேன். தேஜாஸ்ரீயை தொடக்கக் கல்வி ஆங்கில வழியில படிக்க வச்சேன். பகுதிநேர ஆசிரியரா இருந்து வாங்குற சம்பளம் ஃபீஸ் கட்டுவதற்கு போதலை. அதனால, அவங்களை அரசுப் பள்ளிக்கு மாத்திட்டேன். நான் டிராயிங் பண்ணும்போது, சின்ன வயசுல இருந்தே என் கூட பக்கத்துல உட்காந்துகிட்டு அவங்களும் டிராயிங் பண்ணுவாங்க. வளர வளர நாளிதழ்கள்ல வரக்கூடிய ஓவியம் தொடர்பான பகுதிகள்ல பிராக்டீஸ் பண்ணுவாங்

அப்படியே படிப்படியா நல்லா டிராயிங் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஏதாவது கரெக்ஷன் என்றால் மட்டும்தான் என்கிட்ட வந்து கேட்பாங்க. பள்ளி அளவிலும் சரி, பள்ளிகள் அளவிலும் சரி... ஓவியப்போட்டி என்றாலே இவங்களுக்கு பரிசு நிச்சயம் உண்டு. படிப்பிலயும் ரொம்ப கெட்டிக்காரிதான். சில விருதுகளும், 70 சான்றிதழ்களும் இப்போவரை வாங்கியிருக்காங்க. இப்போ கைவினைப் பொருள்கள் வகுப்புக்குப் போறாங்க.

மாணவி தேஜாஸ்ரீ
 
மாணவி தேஜாஸ்ரீ தே.சிலம்பரசன்

அவங்க ஆசைப்படியே வளரணும்னு நினைக்கிறோம். ஓவியம் அவங்க வாழ்க்கையில எப்பவும் ஒரு அங்கமா இருக்கணும்னு விரும்புறோம்'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

சுட்டி தேஜாஸ்ரீயின் ஓவியப் பயணம் தொடரட்டும்!

 
 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.