Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார்.
1929 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அவரது இறுதி காலத்தில் அவரோடு பழகும் வாய்ப்பும் அவரிடம் ஆசீர்வாதம் பெறும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது.
மிகச்சிறந்த பண்பாளன் எல்லாவற்றுக்கும் மேலாக ஆடம்பரமற்ற எளிமையின் வடிவமான மிகச்சிறந்த மனிதன் மிகச்சிறந்த நிர்வாகி அவர்.
அவர் எம்மை விட்டு பிரிந்த போதும் அவருக்கு நிகரான அல்லது ஒருபடி மேலான தனது புதல்வனை எமக்கு தந்திருக்கின்றார்.
இன்று யாழ் மாநகர சபை தற்காலிகமாக இயங்குகின்ற இடம் நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கு உரித்தான இடம். யுத்தத்தினாலே நகரில் இருந்த மாநகர சபை கட்டடம் இடிந்து அழிந்த போது அதனை தற்காலிகமாக இயக்க ஓர் இடம் தேவைப்பட்டது. அவ் இடத்தினை இலவசமாக மாநகர சபைக்கு தந்துதவியவர் இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரே ஆவார்.
யாழ் நகரில் தற்போது மிகக் கம்பீரமாக கட்டி எழுப்பப்பட்டுவரும் மாநகர சபைக்கான நகர மண்டப கட்டட தொகுதி இலங்கையின் மிகச்சிறந்த கட்டட கலை வல்லுனர்களில் ஒருவரான இவரது புதல்வனின் வடிவமைப்பிலேயே அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசினால் கட்டி முடிக்கப்பட்டு மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தின் வடிவம் தொடர்பில் கட்டட கலை நிபுணர்களிடையே ஓர் போட்டி நடாத்தப்பட்டது. அப்போட்டியாளர்களுக்கு மத்தியில் வெற்றியாளரை தீர்மானிக்கும் நடுவர்களுள் ஒருவராகவும் இவரது புதல்வன் செயற்பட்டார்.
மாநகர சபைக்கும் நல்லூர் உற்சவ காலத்திற்குமான தொடர்பு விபரிக்க வேண்டிய ஒன்றல்ல.
அந்த வகையில் மாநகர சபைக்கும் நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்குமான பந்தம் நீண்டது ஆழமானது.
அந்த வகையில் அவரது இழப்பு எமக்கு பாரிய இழப்பு. அவரது பிரிவால் துயர் உற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் பக்தர்கள் அனைவருக்கும் எனதும் மாநகர சபையினதும் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரது ஆத்மா சாந்தி அடைய நல்லூர் கந்தனை வேண்டுகின்றேன்.
வி. மணிவண்ணன்
முதல்வர்
யாழ் மாநகர சபை
May be an image of 1 person, standing and outdoors
 
 
 
 
Link to comment
Share on other sites

 • Replies 3.8k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் ஆத்ம சாந்திக்காக சிதம்பரம் கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றபட்டப்பட்டது....

 

குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் ஆத்ம சாந்திக்காக சிதம்பரம் தெற்கு கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்பட்டப்பட்டது - Muthalvan News

Edited by யாயினி
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஊடகவியலாளர்கள் இருவருக்குப் பகிர்ந்து வழங்கப்படுவதாக நோர்வே விருதுக் குழு அறிவித்திருக்கிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டு ஊடகவியலாளர் மரியா ரெஸ்ஸா (Maria Ressa) ரஷ்ய ஊடகவியலாளர் திமித்ரி முரட்டோவ் (Dmitry Muratov) ஆகிய இருவருக்குமே தத்தமது நாடுகளில் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்ற நடத்திவரும் துணிச்சல் மிக்க போராட்டத்துக்காக இந்த உயர் விருது வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
May be an image of 2 people and text that says 'அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு ー 2001 இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு மரியா ரெசா, டிமிட்ரி ஆகிய 2 LO0T பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க எடுத்த முயற்சிக்காக நோபல் பரிசு அறிவிப்பு /Polimemnews'
 
 
 
 
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
ஒக்டோபர் 10 தமிழீழ பெண்கள் நாளுக்கு வித்திட்ட முதல் வித்து 2ம் லெப் .மாலதி நினைவு நாள்.
 
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான 2ம் லெப் மாலதி.
244439234_4586588591384085_2818467666816
 
 
244447485_4586588668050744_1875829071486
 
 
 
 
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது
*ப்ளீஸ்*
என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..
ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!
கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..
இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!!
கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,*
*பீரோவை அடுக்கி வை..*
*மதியானத்தில் தூங்காதே..*
*எப்ப பாரு என்ன டிவி?*
*புக் எடுத்து படி...*
*வீட்டு வேலை செய்*,
கல்யாணம் பண்ணி போற இடத்துல என்ன நினைப்பாங்க, சரியா வளர்க்கலேன்னு என்னை திட்ட மாட்டாங்களா" என்று நை.. நை.. புகைச்சல் காதில் விழும்போதெல்லாம் உச்சத்தின் எரிச்சலுக்கு என்னை இட்டு சென்றது..
 
%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%
 
இன்று
*சாம்பார் சூப்பர்,*
*வத்தக்குழம்பு சூப்பர்*
என்று அடுத்தவர் என்னை பாராட்டும்போதுதான் அந்த குடைச்சலின் பெருமை துளிர்த்து எட்டி எட்டி பார்த்தது! மெல்ல என் மர மண்டைக்கு விஷயம் ஏற ஆரம்பித்தது..
*இதிலும் நான்தான் தோற்று போனேன்*.
இருந்தாலும் இந்த அம்மாவுக்கு இவ்வளவு கல்நெஞ்சம் இருக்கக்கூடாது.. அப்போதுதான்
*நூடுல்ஸ் வந்த புதிது..*
அதன் மீது அப்படி ஒரு பிரியம் வந்துவிட்டது.. ஒருநாள் அதை வாங்கி சாப்பிட 5 ரூபாய் கேட்டால்கூட என் அம்மா கறார்தான்.. தர முடியாது என்ற ஒற்றை வார்த்தையை அழுத்தமாக சொல்லிவிட்டார்..
*உங்க சமையல் வெறுப்பா இருக்கும்மா, நூடுல்ஸ்தான் வேணும்*
என்று அழுதாலும் ஒரு பதிலும் அங்கு வரவே வராது..
5 ரூபாய் தராத அம்மா எல்லாம் ஒரு அம்மாவா? என்று நொந்து போய் அழுதடியே அன்று தூங்கிவிட்டேன்.
மறுநாள் காலை தூங்கி எழுந்தால், வீட்டுக்கு வந்த பாத்திர வியாபாரியுடன் அம்மா பேசி கொண்டிருந்தார். அந்த வியாபாரி கையிலும், சுற்றிலும் புதுபுது பாத்திரங்கள் கண்ணை கூசின.
*ஆமா.. எல்லா பாத்திரத்திலயும் என் பொண்ணு பேர் பெரிசா பொறிச்சிடுங்க..*
செலவு பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க என்று சொல்லி கொண்டிருந்தார்.. இன்று வரை ஒரு டம்பளரில் தண்ணீர் எடுத்து குடித்தாலும் அதில் உள்ள என் பெயர் என்னை குத்தி காட்டி கொண்டே இருக்கிறது.
*ஏனோ தெரியவில்லை, இப்போதுவரை நூடுல்ஸ் சாப்பிடும் எண்ணமும் எனக்கு வரவே இல்லை*.
இந்த விஷயத்திலும் நான்தான் தோற்று போனேன்!!
ஓயாத குடைச்சல், எப்பவுமே திட்டு, எப்பவுமே ஒரு அட்வைஸ், எதுக்கெடுத்தாலும் ஒரு பிளாஷ்பேக், அம்மா எப்பவுமே இப்படித்தானோ என்ற நினைப்பு இளம்வயதில் வந்தபடியே இருந்தது.
நான் பிரசவ வார்டில் இருந்தபோது, *அம்மா* என்று எத்தனை முறை கூப்பிட்டிருப்பேன் என்றே தெரியாது, குழந்தையை பெற்று கொண்டு வீடு வந்து சேர்ந்ததும் அவர் ஒரு நிமிடம் சும்மா இல்லையே..
இதை சாப்பிடு
அதை சாப்பிடாதே
இதை குடி
இப்படி திரும்பு
அப்படி படு,
குழந்தையை இப்படி பிடிச்சு தூக்கு
என்று சொல்லி கொண்டே இருந்தார். அவ்வளவு காலம் இல்லாமல், அம்மாவின் வயிற்றில் தழும்புகள், வடுக்களை அப்போதுதான் பார்த்தேன்.. பிரசவ போரில் நான் தந்த பரிசு போலும்.. நடுமண்டையில் சுரீரென்று எனக்கு உரைத்தது.. அம்மா எப்பவும் போலவேதான் இருக்கிறார்.. நான்தான் ஒவ்வொன்றிற்கும் எரிச்சல், குடைச்சல், என டிசைன் டிசைனாக பெயர் வைத்து கொண்டு இருந்திருக்கிறேன் என்று!!
*இப்போதும் நான்தான் தோற்றேன்!*
என் மகள் குட்டி தேவதை போலவே இருப்பாள் என்று கற்பனை செய்து கொண்டு, தையல் மிஷினில் கைத்தறி துணியில் பாவாடை தைத்து உடுத்தி அழகு பார்க்கும்போதுகூட, எனக்கு கண்ணில் பட்டது என்னவோ அதில் தொங்கி கொண்டும், ஒட்டிக் கொண்டும் இருந்த கலர் கலர் நூல்கள்தான்.. "இந்த டிரஸ் நல்லா இல்லைம்மா, நூல் நூலா தொங்குது.. இதை பார்த்தா என் பிரண்ட்ஸ் கிண்டல் செய்வாங்கன்னு" தைத்த 2 நிமிசத்துலயே கழற்றி முகத்தில் எறிந்த நிகழ்வின் காலம் உருண்டாலும் இன்னமும் வலித்து கொண்டே இருக்கிறது.
"இவ்ளோ பெரிய பெண்ணாகியும் இன்னும் ரிப்பன் வைத்து சடை பின்னிக்க தெரியலயா, என்ற அம்மா திட்டிய அதே வார்த்தைகளை இன்று என் மகளிடம் என்னையும் அறியாமல் சொல்வது வியப்பாக உள்ளது! எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என் அம்மா!! இந்த விஷயத்திலும் நான்தான் தோற்று நிற்கிறேன்.
ஏனோ தெரியவில்லை.. என்னை பார்க்கும்போதெல்லாம் ஓயாமல் சொல்லும் பொய்
*ஏன் இப்படி இளைச்சிட்டே, ஏன் இப்படி கறுத்து போயிட்டே* என்பதுதான்..
*தட்டில் சட்னி மீதமிருக்குது பாரு, அதுக்காக இன்னும் ஒரே ஒரு தோசை*
என்று சாக்கு சொல்லி சுடச்சுட சுட்டுப்போடும் அலாதியே இன்றும் தனி அழகுதான்.. சாப்பிட்டு முடித்த பிறகு தான் தெரியும் சட்னியை முன்கூட்டியே தட்டில் அதிகமாக ஏன் வைத்தார் என்று?
அந்த அன்பின் சூட்சுமம்கூட தெரியாமல்
*அப்போதும் நான்தான் தோற்று நிற்பேன்!!*
எத்தனை விஷயத்தில்தான் நான் இப்படி தோற்று கொண்டே இருப்பேனோ தெரியாது.. இந்த தொடர் தோல்வி எனக்கு பிடித்திருக்கிறது.. காரணம், என் அம்மா சளைக்காமல் வெற்றி பெற்று கொண்டே இருப்பதால்!!!
*உலகின் தலை சிறந்த முதல் தியாகி அம்மா மட்டுமே*
சொக்கி போகும் முதல் உலக அழகிகளும் இவர்களே!!
உலகின் மிக பெரிய பொருளாதார மேதையுமே அம்மா மட்டுமே!!
*எத்தனை இடர்பாடுகள்*,
*எத்தனை துயரங்கள்,*
*எத்தனை வலிகள்*
வந்தால் என்ன?
உலக உருண்டையில் கலந்துவிட்ட இந்த தாய்மையானது அனைத்தையும் புரட்டி போட்டு கொண்டு மேலே சென்று கொண்டே இருக்கும்!!
எல்லா அம்மாக்களுக்கும் சமர்ப்பனம்!!
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்று மனோரம்மா ஆச்சியின் நினைவு தினம்.

 

 

Geethappriyan Karthikeyan Vasudevan

4h  · 
 
 
 
 
 
 
 
 
 
 
96359743_10158552553696340_8897405098787
 
 
 
இந்தியன் படத்தின் இந்தி வடிவம் இந்துஸ்தானி என்ற பெயரில் வெளியானது, காரணம் சன்னி தியோல் இந்தியன் என்ற பெயரை பாலிவுட் ஃபிலிம் சேம்பரில் பதிந்திருந்தார்,அவர் பதிவு செய்த பெயரை இயக்குனர் ஷங்கருக்கு தர மறுத்து விட்டார்.அவர் நடித்த இந்தியன் படம் 2001 ஆம் ஆண்டு தான் வெளியானது,
தமிழில் மனோரமா நடித்த குப்பம்மா என்ற செருப்பு தைக்கும் தொழிலாளி முனுசாமியின் மனைவி கதாபாத்திரத்தை இந்தியில் குலாபோ ராம் என nativity க்காக மாற்றியிருந்தனர், அதில் இந்தி நடிகை அருணா இரானி நடித்தார்.
நம் மனோரமாவின் நடிப்புடன் ஒப்பிடுவதற்கு வேண்டி இதை இங்கு பதிவிடவில்லை, மனோரமா நமது தமிழ் சினிமாவிற்கு எத்தகைய பெருமை என்பதை நாம் உணர வேண்டும் என்பதற்கு வேண்டியே இதைப் பதிகிறேன்,
எனக்கு ஜென்டில்மேனில் வரும் சத்துணவு ஆயா மனோரமா கதாபாத்திரமும் இறுதியில் மிகவும் நெகிழ வைத்து விடும்,
இந்தியன் படத்தில் குப்பம்மா மண்ணை வாறித் தூற்றித் தரும் சாபத்தைப் பார்த்து ஒரு லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரி திருந்தியிருந்தாலும் அது இயக்குனருக்குக் கிடைத்த வெற்றி தான், அது நிகழ்ந்ததா தெரியாது, ஆனால் அத்தனை நிஜமாக அந்த குப்பம்மா கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் மனோரமா, எத்தனை சக்தி மிகுந்த வசனங்கள் , தீயின் ஜ்வாலையாக வெளிப்பட்டிருக்கும்,அதற்கப்புறம் இந்தியன் தாத்தா அந்த பதவித் தினவு கொண்ட கருவூல அதிகாரியைக் கொல்கையில் நமக்கு தவறாகவே தெரியாது, நாமே அரசு அதிகாரியால் வஞ்சிக்கப்பட்டதைப் போன்ற உணர்வை மனோரமா அவர்கள் ஏற்படுத்தியிருப்பார்.
இந்தியில் அருணா இரானிக்கு அதே தமிழின் வசனங்களே தரப்பட்டுள்ளன, இவர் அபாரமான நடிகை எந்த சந்தேகமே இல்லை, ஆனால் அவரிடம் விளிம்புநிலை மனுஷியாக மாற்றுப் புடவை உட்பட அத்தனையையும் விற்று கருவூல அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்துவிட்டு காசோலைக்குக் காத்திருக்கும் குப்பம்மாவின் பரிதவிப்பு இல்லை.
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Germany SPD கூட்டாட்சியில் ஊதிய உயர்வு €12! முக்காடு விவகாரம் பொலிசில் முறைப்பாடு! 10-10-2021

 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
ஒரு வைத்தியர் மிக அவசரமா ஓடி வந்து ஆப்ரேஷன் அறைக்குள் நுழைந்து ஆடைகளை மாற்றிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தார்.....
அங்கு பிள்ளையின் அப்பா மிகவும் கோபத்துடன் இவ்வளவு லேட்டாவா வருவீங்க என் பிள்ளைக்கு என்னவானாலும் நடந்தா யார் பொறுப்பு என்று காரசாரமாக பேசினார்...
வைத்தியர் : சிரித்த முகத்துடன் கூறினார் எனக்கு வைத்தியசாலையில் இருந்து call வந்தது அவசரமாக ஓடி வந்துட்டேன்... பொறுமையாக இருங்கள் உங்கள் மகன் இறக்கவில்லை.. நான் வந்துவிட்டேன் பார்த்துக்கொள்கிறேன் என்றார்..
ஆமாம் சொல்விர்கள் உங்கள் மகனுக்கு இப்படி ஒன்று நடந்தால் இப்படி லேட்டா வந்து இப்படியெல்லாம் பேசுவீங்களா எண்டார் பிள்ளையின் தகப்பனார்..
Dr சொன்னார். புன்னகையுடன் பொறுமையாக இருங்கள் நான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆபரேஷன் ரூம்க்கு சென்று சில மணித்தியாலங்கள் கழித்து வெளியே வந்து உங்கள் மகன் மிக்க நலமாக உள்ளார்.. மேலதிக விடயங்களை nurse இடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவசரமாக புறப்பட்டு சென்றார்....
அவ்விடம் வந்த nurse இடம் தகப்பனார் பிள்ளை தொடர்பில் கேட்டுவிட்டு Dr.ஏன் அவசரமா போகிறார் என்று வினவினார். அதற்க்கு nurse சொன்னார்....
Dr இன் மகன் நேற்று விபத்தில் சிக்குண்டு உயிரிழந்தார். அவரது இறுதி கிரியை மயானத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. அந்தநேரம் உங்கள் பிள்ளையின் நிலை குறித்து call பண்ணிய போது அதை விட்டுட்டு Dr.உடனே ஓடி வந்து ஆபரேஷன் செய்து விட்டு மீண்டும் மகனின் இறுதி சடங்கிற்கு சென்றுவிட்டார் என nurse கூறினார்...
தகப்பன் தான் ஆவேசப்பட்டது தவறு என்பதை உணர்ந்தவனாக மிகுந்த கவலையுடன் தன் மகனை பார்க்க சென்றார் 😢😢😢
நீதி :: யாரையும் வெளியில் பார்த்து இடை போடாதீர்கள் அவர்களுக்குள்ளும் உங்களை விட அதிகம் பொறுப்பும் கவலையும் இருந்திருக்கும்.... எனவே வார்த்தைகளை பேணிக்கொள்ளுங்கள்.. !!
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இனிய நன்றி தெரிவித்தல் நாள் நல் வாழ்த்துக்கள்!

happy thanksgiving
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இழந்துவிட்ட பொன்னுலக உணவுமுறையின் ‘மகிமைகள்’: இளவேனில்

 

 

மனிதர்கள் பழங்காலம் குறித்த அதீதக் கற்பனைகளை எப்போதும் விரும்புகிறார்கள். கடந்த காலங்களை அமைதியும் வளமும் மிகுந்த ‘பொன்னுலக’மாகவே அனேகரும் நம்ப விரும்புகிறோம். மகிமையும், மேன்மையும் மிக்க முன்னோர்களின் வாழ்வு முறை மீதான ஏக்கம் நம்மில் இருந்துகொண்டே இருக்கிறது. இழந்துபோன பொன்னுலகம் பற்றிய தீவிர நம்பிக்கைகளே, இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகைப் பெருமளவு நிர்மாணிக்கும் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களின் தீராப் பசிக்கு, அமுது படைக்கும் அட்சய பாத்திரங்களில் ஒன்றாக திகழ்கின்றன.

இணைய உலகம் குறிப்பிட்ட அளவில் பொன்னுலகக் கதைகளால் நிரம்பி இருக்கின்றது. உலகமயமாக்கல் காலத்தில் இறந்தக் காலமென்பது இழந்துவிட்ட பூர்விகக் கதைகளின் மீது கட்டி எழுப்பப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. ‘பூர்விகம்’ என்பதன் பொருள் உணவு, உடை, சமூக ஏற்றத்தாழ்வுகள், மொழி, போர், கலை, வழிபாட்டுமுறை என்று அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த வாழ்முறையை குறிக்கிறது. இவை அனைத்திலும் உணவுமுறை குறித்த மகிமை கதைகள் இணைய வெளியில் அதிகப்படியான கவனம் பெறுகின்றன. அப்படியான முக்கியத்துவம் பல நேரங்களில் அறிவியல் மறுப்பு வாதங்களாக பரிணமிக்கின்றன. இன்றைய கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நோயிக்கு தீர்வாக இயற்கை மருத்துவமும், உணவு வழி மருத்துவமும் மெய்நிகர் வெளியை ஆக்கிரமித்திருக்கும் அதே நேரம் அவை பெருமளவில் தடுப்பூசிக்கி எதிரான முழக்கங்களாகவே நிறைவுப் பெறுகின்றன.

உலக இயக்கத்தின் அடிப்படையாக ‘உணவு’ இருக்கிறது. உயிர்களின் பரிணாமமும் முரண்களும் உணவுத் தேவையைச் சார்ந்து உருவானவை. இந்திய நிலப்பரப்பில், இழந்துவிட்ட உணவுப் பெருமிதத்தின் பெரும்பான்மையான உரையாடல்கள் ’காலனியத்துக்கு முன் X பின்’ எனும் அரசியல் கலாச்சார முரண்களில் இருந்தே உருவானவைகளாக இருக்கின்றன; அல்லது வரலாற்றின் எல்லைகளை மேலும் இறுக்கினால் இது ’உலகமயமாக்கலுக்கு முன் X பின்’ எனும் முரண்களின் மோதல்களாகப் பார்க்க முடியும். ’காலனியத்துக்கு முன் X காலனியத்துக்குப் பின்’ எனும் முரண், இழந்துவிட்ட உணவுப் பெருமிதத்தின் உரையாடல் வெளியை மூன்று நூற்றாண்டுகள் வரை விரிவாக்கிப் பேசுவதற்கான வாய்ப்பைத் தரும். ’காலனியத்துக்கு முன் X காலனியத்துக்கு பின்’ எனும் முரணை ’இயந்திரமயமாக்கலுக்கு முன் X இயந்திரமயமாக்கலுக்குப் பின்’ என்று வரையறுக்கும் சாத்தியங்களும் இருக்கின்றன அல்லது ’நிலப்பிரபுத்துவ உணவு முறை X முதலாளித்துவ உணவு முறை’ எனும் பொருளாதார முரணாகவும் அணுக முடியும். நம் காலத்தின் உணவு முரண்களை ’நிலப்பிரபுத்துவ உணவு முறை X முதலாளித்துவ உணவு முறை’ எனும் நிலையிலிருந்து அணுகுவது பண்பாட்டு/பொருளாதார உரையாடல்களை நிகழ்த்த உதவும் என்று கருதுகிறேன்.

இயந்திரமய/முதலாளித்துவக் காலகட்டத்தில் நடந்தேறிய இடம்பெயர்வுகளின் ‘வேகம்’ குறித்து வரலாறு பற்றி அடிப்படை அறிவு இல்லாத எவராலும் கூட மிகவும் இயல்பாக புரிந்துக்கொள்ள முடியும். இடம்பெயர்வுகளின் வேகம் என்பது மனித சமூக நிகழ்வுகளான மொழி, கலை, அரசியல், உணவுமுறை, உற்பத்திமுறை, குற்றம் என அனைத்தையும் உள்ளடக்கியதே. இழந்துவிட்ட நம் உணவுப் பெருமித முரண்களை, ‘இடம்பெயர்வுகளின் வேகம்’ உருவாக்கியிருக்கிறது.

முதலாளித்துவ உணவுமுறையின் இடம்பெயர்வுகள் ஏகாதிபத்தியம் மற்றும் அறிவியல் ஆகியவற்றின் பின்புலத்தில் அதுக்கலாம் வரை நடந்தேறிய இடப்பெயர்வுகளைக் காட்டிலும் மிகவும் விரைவாக நடந்தேறியது. முதலாளித்துவ உணவு முறைகளின் வேகமான இடம்பெயர்வுகள் அதே அளவு வேகத்தோடு நிலப்பிரபுத்துவ உணவு முறையை நீர்த்துபோகச் செய்தது. உலகெங்கிலும், குறிப்பாக, நிலப்பிரபுத்துவம் தீர்க்கமாக மத நிறுவனங்களுடன் சேர்ந்து இயங்கிய பதினான்காம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிவியல் அக்காலத்தின் முற்போக்குப் பொருளாதாரமாகப் பார்க்கப்பட்ட முதலாளித்துவத்துடன் இணைத்து இயங்க ஆரம்பித்தது.அறிவியல் முதலாளித்துவதுடன் இணைத்து இயங்குவதின் பண்பாட்டு, வரலாற்று காரணங்களை குறித்த சுவாரஸ்யமான ஆய்வுகளும் விவாதங்களும் பல இருக்கின்றன.

காலனிய இந்தியாவில் இயந்திரமயம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் மூன்றும் ஒருங்கிணைந்து முதலாளித்துவ உணவுமுறையின் வேகமான இடப்பெயர்வுக்கான வெளியை உருவாக்கிக் கொடுத்தது. இந்தக் காலகட்டம் தான் உணவுமுறை/தானிய இடப்பெயர்வுகள் நடந்தேறிய முதல் காலகட்டமா எனில், இல்லை எனும் பதிலையே மானுடவியல், தொல்லியியல் ஆய்வுகள் அறியத் தருகின்றன. இடப்பெயர்வுகளே பரிணாமத்தின் அடிப்படை, இடப்பெயர்வுகளே பன்முகத்தன்மை கொண்ட உயிர்களை உருவாக்கிப் பரிணமிக்க வைக்கிறது.

Essay_Elavenil_1.jpg?resize=900%2C506&ss

21ஆம் நூற்றாண்டின் உணவுமுறையை அமெரிக்க நொறுக்குத்தீனி உணவு முறை என்றும் சொல்லலாம். அதற்குக் காரணம் இழந்துவிட்ட உணவுப் பெருமிதங்கள் உடல் நலம், ஆரோக்கியம் மீதே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்க நொறுக்குத்தீனி உணவு முறை முதலாளித்துவ உணவுமுறையின் உட்பிரிவாக இருப்பதால், நிலப்பிரபுத்துவ உணவு முறை X முதலாளித்துவ உணவு முறை எனும் முரண்களிலிருந்து அணுகுவது சில பதில்களைக் கண்டடைய உதவும். அமெரிக்க நொறுக்குத்தீனி உணவு முறை என்பதைப்போல் இந்திய நிலப்பிரபுத்துவ உணவு முறையைச் சாதிய உணவுமுறை என்று வரையறுக்கலாம். முதலாளித்துவ உணவு முறையையும் சாதிய உணவுமுறையையும் ஒப்பிடும்போது, லாபம் என்ற அடிப்படை நோக்கிலேனும் முதலாளித்துவ உணவுமுறை சாதி சார்ந்த உணவுப் பாகுபாடுகளை மிகக் குறுகிய அளவிலேலேனும் களைந்தது.

எடுத்துக்காட்டாக, இந்திய இந்துச் சமூகத்தில் நெய்யின் பயன்பாடு; இதை நிலப்பிரபுத்துவ உணவுமுறை X முதலாளித்துவ உணவுமுறை எனும் நிலைகளில் வைத்து பார்க்கலாம். இத்தகைய ஒப்பிடு முதலாளித்துவ உணவுமுறையே மிகவும் சிறந்தது எனும் தீர்ப்பை எழுதுவதற்கான வேலை அல்ல. மாறாக, நிலப்பிரபுத்துவ உணவுமுறை X முதலாளித்துவ உணவுமுறைகளின் முரண் மெய்நிகர் உலகின் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களின் தகவல் பசிக்கான காலமாக எப்படி மாறி இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதே.

மெய்நிகர் உலகில் பரவும் உண்மை போன்ற தகவல்கள், சதிக்கோட்பாட்டுப் பிரதிகள், போலிச் செய்திகள் ஆகியவற்றில் அதிகம் இடம்பெறுவது பெருமுதலாளித்துவ நிறுவங்களின் சதி வலைகளும், லாப வெறியும் (இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் பெருமுதலாளித்துவ நிறுவங்களுக்குமான நெருங்கிய உறவை மறுக்க முடியாதுதான்) அதன் மூலம் இழந்துபோன பெருமையைமிகு உடல்நலமிக்க தானியங்களையும், கால்நடை இனங்களையும் அழிக்கும் வேலையை செய்கின்றன எனும் கருத்தை உருவாக்கியிருக்கின்றன. இலுமினாட்டி சதி கோட்பாடுகளிலிருந்து உருவாகும் இந்த பெருமித வெளிப்பாடுகள் உபரி/லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு கூட்டு முதலாளித்துவத்தை கேள்வி கேட்காமல் ஒரு சுவாரசியமான சதி கதைகளை சொல்வதுடன் நிறைவு கொள்கின்றன. மேலும் இந்தியாவில் ‘தூய்மை’ அல்லது ‘பூர்விகம்’ மீதான ஏக்கம் என்பது இழந்துவிட்ட சாதிய ஆதிக்கத்தின் ஏக்கமாகவே கருதவேண்டியும் இருக்கின்றது.

2.

ஒரு உணவின் புவியியல் சார்ந்த தேவைகள் பயன்களையும் கருத்தில் கொண்டே, பூர்விகம் எனும் கருத்தை அணுக வேண்டி இருக்கின்றது. மேலும் பூர்விகம் என்பது என்ன என்ற கேள்விக்குப், பதில் தூய்மைவாதக் கருத்தியல்களின் வழியேதான் வெளிப்படுகிறது. எது பூர்விகம் எனும் கேள்விக்கு, இந்த அண்டத்தில் நிலையான எந்த ஒரு பதிலும் இல்லை. மேலும் உயிர்களின் பரிணாம வரலாற்றில் பூர்விகம், தூய்மை போன்ற கருத்தாக்கங்களைத் தொக்கி நிற்கும் எந்த உயிர்களும் பரிணாமித்ததில்லை. பூர்விகம், தூய்மை எனும் பதங்களை மானுடவியல், மரபியல், பரிணாம உயிரியல், தொல்லியல் தரவுகள் முன்வைக்கும் பொது இரண்டு பதங்களும் பொருள் சிதைந்து காணாமல் போய்விடுகின்றன. இங்கு எதுவுமே எப்போதுமே பூர்விகமாக இருந்திருக்கவில்லை – மனிதர்கள், உணவுப் பயிர்கள், கால்நடைகள் உட்பட.

தமிழ் இணைய வெளியும் அதன் அங்கமான சமூக ஊடகவெளியும் பெருமளவில் தமிழ் அடையாளப் பெருமிதங்களிலே உழல்கிறது. இறந்த போன பூர்விகப் பொன்னுலகின் பெருமைகளில் திகட்த்திகட்டத் தமிழ் மெய்நிகர் சமூகம் நிரம்பி வழிகின்றது. அப்பெருமிதங்கள் மிகுதியான போலிகளால் அல்லது உண்மையைப் போன்ற செய்திகளால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. மொழிப் பெருமிதங்கள், சாதிப் பெருமிதங்கள், பண்பாட்டுப் பெருமிதங்கள் என்று முடிவற்று நீளும் வரிசையில் இழந்துவிட்ட பூர்விக உணவுமுறைப் பெருமிதங்களும் அதையொட்டிய ஏக்கங்களும் அதை மீட்டெடுக்கும் முயற்சிகளும் நாள்தோறும் பெரும்பான்மையான தமிழரின் சமூக ஊடக வெளிகளை ஆக்கிரமித்திருக்கின்றன.

தமிழ் மெய்நிகர் உலகின் நிரந்தர வைரல் நிகழ்வுகளில் ஒன்று, இழந்துவிட்ட பூர்வீகக் கால்நடை இனங்கள் குறித்த செய்திகள். குறிப்பாக மாடுகள். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மனிதர்கள் fertile crescent என்று மானிடவியலாளர்கள் அழைக்கும் இன்றைய சிரியா, லெபனான், ஜோர்டான் நாடுகளை ஒட்டிய பகுதிகளில் முதன் முதலில் மாடுகளைத் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக வளர்க்கத் தொடங்கியதை இன்றளவில் கிடைக்கப் பெற்றிருக்கும் தொல்லியல் மானுடவியல் சான்றுகள் உறுதி செய்கின்றன. பிரபலமான மானுடவியல் நூல்களான ’ஆதி இந்தியர்கள்’, ’துப்பாக்கி, கிருமி மற்றும் எஃகு’ போன்றவற்றைக் கொண்டே இந்தத் தரவுகளை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

Fertile Crescent அல்லது ஜாக்ரோஸ் மலைகளிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணித்த மக்கள் கால்நடை வளர்ப்பினை கிழக்கு ஆசியா முழுவதும் கொண்டு சென்றார்கள். இவர்களில் ஒருசிலரே பின்னாளில் சிந்து சம்வெளில் நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள். அவர்களே இப்போது அழிந்துவிட்ட அனால் இன்றைய இந்திய மாட்டு இனங்களின் முன்னோரான இந்திய ஒவ்ராக்ஸினை (indian aurochs) வளர்த்தனர். இந்திய ஒவ்ராக்ஸ், ஒவ்ராக்ஸ் எனும் அழிந்துவிட்ட ஆதி மாட்டு இனத்திலிருந்து தோன்றியது. ஒவ்ராக்ஸ், போஸ் அக்யூடிஃப்ரான் எனும் ஆதி மாட்டு இனத்திலிருந்து பாலிக்கோன் எனும் பனி யுகத்தில் தோன்றியது. ஒவ்ராக்ஸ் மற்றும் போஸ் அக்யூடிஃப்ரான் இந்திய நிலப்பகுதியில் இருந்து மட்டும்தான் தோன்றியது என்பதற்கான எந்தத் தரவுகளும் இல்லை.

ஒவ்ராக்ஸ்கள் பரிணாம வளர்ச்சியில் இரண்டு பிரிவுகளாக மாறி ஒன்று கிழக்கை நோக்கியும் மற்றொன்று மேற்கை நோக்கியும் பிரிந்து சென்றன. கிழக்கை நோக்கிப் பயணமான ஒவ்ராக்ஸ்களில் இருந்து தோன்றிய ஜீபூ, பின்னாளில் எழுபத்தைந்து மாட்டினங்களாகப் பரிணமித்தது. அதில் குறிப்பிடும்படியான ஒன்று, தமிழ்நாட்டின் காங்கேயம் மாடுகள். மிக இயல்பாகப் புரிந்துகொள்ளகூடிய செய்தி, இத்தகைய பரிணாம வளர்ச்சி இயற்கை அல்லது செயற்கைக் கலப்பினுடாகவே இருக்க முடியும் அல்லது நேரடிப் பரிணாம வளர்ச்சி என்ற வாய்ப்பையும் கருதலாம்.

எனவே, தமிழ் நிலத்துக்கான தூய்மையான,பூர்வீக இனமாக எந்த ஒரு மாட்டு இனமும் இல்லை எனலாம். மாறாக இழைமணி (DNA) தரவுகள் இன்று நம்மிடம் இருக்கும் அல்லது நாட்டு மாட்டினங்கள் எனப்படும் அனைத்தும் எல்லையற்ற இயற்கை / செயற்கை கலப்பினங்களின் முடிவுகள்தான் என்பதைக் காட்டுகின்றன. எந்தவொரு பொருளும் இயற்கையான ஒழுங்கைத் தக்கவைக்க முடியாது, காரணம் இயற்கையில் ஒழுங்கு என்று ஏதும் இல்லை அல்லது ஒழுங்கு காக்கும் எதுவும் பிழைத்திருக்காது.

தமிழ் பூர்வீக மாட்டினங்களைக் காப்பாற்றுவதற்கான இயக்கம் பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ / மன்னராட்சிக் கால அல்லது காலனித்துவத்திற்கு முந்தைய சமூகங்களின்போது மனிதர்களால் வளர்க்கப்பட்ட இயற்கை / செயற்கைக் கலப்புகள் மூலம் உருவான இனங்களைக் காப்பாற்றும் இயக்கமாகும். நிலப்பிரபுத்துவ / மன்னராட்சிக் காலப் பெருமிதங்கள் வெளிப்படையாக ஆண்டான் X அடிமை காலப் பெருமிதங்களே. சமூக அடுக்குகளில் தங்களின் அபரிதமான ஆதிக்கத்தை இழந்துவிட்ட நினைவு வெளியின் வியாகூலமே பாரம்பரியத்தைப் பற்றி மிகுந்த அக்கறை கொள்ள வைக்கின்றது.

உதாரணமாக தமிழ்ச் சமூகத்தில் கால்நடைகள் – வீரம் இரண்டிற்கும் இருக்கும் நேரடித் தொடர்பிலிருந்து இதைப் புரிந்து கொள்ள முடியும். மனிதர்களின் வீரம் ஆதிக்கத்துடன் தொடர்பிலலிருக்கும் ஒரு உணர்வு. புகழ்பெற்ற 2017 ஜல்லிக்கட்டுப் போராட்டம் கூடஇழந்த கலாச்சாரப் பெருமிதத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டமாகவே இன்றுவரை பார்க்கப்படுகிறது. வீரம் பண்பாடு போன்ற பதங்களே, பெரும்பாலான இளம் தலைமுறையினரை வீதிகளை நோக்கி – உண்மையில் கடற்கரையை நோக்கி – வரவைத்தது.

இழந்துவிட்ட பொன்னுலக மகிமையின் ஒரு பகுதியாக மெய்நிகர் உலகில் காணக்கூடிய மற்றொரு சுவாரஸ்யமான வாதம் பூர்வீகப் பயிர்கள். உலகெங்கிலும் நுகரப்படும் மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்றைப்பற்றி நாம் பேசலாம் – வாழைப்பழம்! ஏனென்றால் வாழைப்பழத்தை மனிதர்கள் வளர்க்க ஆரமித்ததும் ஒரு சுவாரசியமான கதைதான்.

தமிழ்ப் பண்பாட்டின் பிரதான பழங்களில் ஒன்று வாழைப்பழம். மா, பலா, வாழை எனும் பிரபலமான சொற்றொடர் தமிழ் பேசும் மக்களிடையே வாழை மரத்தைத் தமிழ் நிலத்தின் மரம் என்றும் வாழைப்பழம் தமிழ் உணவின் ஒரு பகுதி என்று உறுதியாக நம்புவதற்கு ஏற்றதாக இருக்கின்றது. வாழைப்பழம் தமிழ் உணவின் ஒரு பகுதி என்ற கருத்தில் எந்தச் சிக்கலும் இல்லை, ஆனால் எந்தக் காலம் முதல் என்பதில்தான் அடிப்படையான சிக்கல் இருக்கின்றது.

வாழைப்பழத்தைப் பற்றிய வசீகரமான உண்மை என்னவென்றால், ஆஸ்ட்ரோனேசியர்களின் வருகைக்கு முன்னர் பப்புவா நியூ கினியாவில் முதன்முதலில் அது பயிரிடப்பட்டது. பின்னர், ஆஸ்ட்ரோனேசியர்கள் வாழை பயிரிடலைத் தென்கிழக்கு ஆசியா முழுவதும் எடுத்துச்சென்றனர். பின்னர் வாழை தமிழ் பேசும் மக்கள் உட்படப் பல தென்கிழக்கு ஆசியர்களின் பிரதான உணவின் ஒரு பகுதியாக மாறியது. வாழைப்பழம் என்பது தமிழ் உணவின் ஒரு பகுதி மட்டுமல்ல, பண்பாட்டு விழுமியங்களிலும் நேரடியான பங்கேற்பைச் செய்கின்றது, குறிப்பாக விழாக்கள், திருமணங்கள், பக்தி நிகழ்வுகள் என்று சொல்லலாம்.

வரலாற்றின் காலவரிசையில், ஒரு பசிஃபிக் தீவுக்கூட்டத்தின் காடுகளில் வளர்க்கப்பட்ட காட்டு மூசா தாவரம் ஆஸ்ட்ரோனேசியர்களின் வருகைக்காகக் காத்திருந்தது, பின்னர் பண்பாட்டு முக்கியத்துவத்தை அடையக் கிட்டத்தட்ட 7000+ மைல்கள் பயணித்து ஜாக்ரோஸ் மலைகளிலிருந்து கிழக்கு ஆசியாவுக்கும் பின்னாளில் தென்இந்தியாவிற்கும் குடிபெயர்ந்த ஒரு குழுவினருக்குப் பிரதான உணவின் ஒரு பகுதியாக மாறியது. எனவே, வாழைப்பழத்தின் புனிதம் பற்றிய கருத்தாக்கத்தில் பற்று கொள்ள வேண்டியிருந்தால், வாழைப்பழத்தை உண்பதை தமிழர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டி இருக்கும்.

தமிழ் அடையாளத்தின் அடிப்படையாகக் கருதப்படும் மற்றொரு பிரபலமான தாவரத்துக்கும் இதே வாதம் பொருந்திப்போகிறது. போரஸஸ் அல்லது பனை மரம். பனை தமிழ்நாடு அரசின் உத்தியோகபூர்வ மரமாகும், தமிழ் மக்களுக்கான தெய்வீக மரமாகவும் கருதப்படுகிறது. பனையின் பூர்விகம் ஆப்ரிக்காவின் வெப்பமண்டல நிலத்தில் உருவானது. ஆப்ரிக்கா இந்தியாவுக்கு இடையேயான நீர்வழி பாதையில் ஆசியாவுக்குக் கொண்டுவரப்பட்டு இந்தியத் துணைக் கண்டத்தில் குடியேறியது என்று வரலாற்று, மரபணு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (Pipatchartlearnwong,et.al)

தமிழ் அடையாளத்தைக் காப்பதற்கான வழிகளில் ஒன்று பூர்விக இனங்களைப் பாதுகாத்தல் என்ற கருத்தைத் தமிழ்ச் சமூகத்தில் பரவலாகப் கேட்க முடியும் அதுவே நம்மில் பலரைத் தமிழ் நாட்டு மாடுகளை, பனைமரத்தை என்று பலவற்றைப் பாதுகாக்கும், அழியும் நிலையில் இருக்கும் எந்தவொரு உயிரினத்தையும் பாதுகாப்பது காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் அதை தமிழ் அடையாளத்துடன் இணைப்பது பொருத்தமானதாக இருக்காது. மாறாக அதை ஆப்பிரிக்க அடையாளத்துடனே இணைத்துப் பார்க்க முடியும் (குறிப்பாக ஒரு துணை-சஹாரா அடையாளமாகப் பார்க்க வேண்டி இருக்கலாம்.)

3.

பெருமிதம் அல்லது மகிமை எப்போதும் பரிணாமவெளியின் எல்லையைக் குறுக்கும் பணியை மட்டுமே செய்யும். வளர்ச்சியின் எல்லைகள் பன்முகத்தன்மையுடன் வடிவிலே இயங்கும். பன்முகத்தன்மை இயற்கையின் ஒழுங்காக இருக்கின்றது அல்லது பன்முகத்தன்மையின் தேர்வுகளைக் கொண்டே உலகம் தன்னை உருவாக்கிக்கொண்டு இன்று வரை விரிவடைந்துகொண்டே செல்கிறது.

இயந்திரமய நவீன உலகில் உருவான போக்குவரத்து இயந்திரங்கள் மனிதர்களையும் தானியங்களையும் கால்நடைகளையும் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டுசெல்லும் பணியை விரைவாக்கியது. உலகமயமாக்கல், பொருள்முதல்வாதக் கூறுகளின் தொடர்புகளை இதற்கு முன்னான நூற்றாண்டுகளைவிட இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் மிகவும் எளிமையாக்கியிருக்கிறது. எடுத்துக்காட்டாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் அல்லது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு தமிழர் மொஸரெல்லா பாலாடைக் கட்டிமீது பெருவிருப்பம் கொண்டிருந்தால் அதை தெற்கு இத்தாலியில்தான் சுவைப்பேன் என்று விரும்பினால் அதைச் சுவைக்க குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகலாம். ஆனால் இன்று அதே விருப்பத்தை இருபத்திநான்கு மணிநேரத்தில் நிறைவேற்றலாம் அல்லது அதே தெற்கு இத்தாலிய மொஸரெல்லா இந்தியப் பல்பொருள் அங்காடிகளிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.

பயிர்கள், கால்நடைகள், உணவுகள், மனிதர்கள், பண்பாடுகள் நகர்வு அல்லது புலம்பெயர்வு பொன்னுலகமான இறந்த காலத்தைவிடத் தற்போதைய நூற்றாண்டுகளில் மிகவும் எளிதாக நடந்தேறுகிறது. இயற்கையான புலம்பெயர்வுக்கு மாறான இந்த விரைவான புலம்பெயர்வுகள் நமக்கு முடிவற்ற அச்சத்தை கொடுக்கிறது. அந்த அச்சம் உயிர் பயத்தைக் கொடுக்கிறது. ஆனால் அறிவியல் இந்த அச்சத்துக்கு எதிரான பதிலையே அளிக்கிறது. மருத்துவ அறிவியலின் வளர்ச்சி மனிதர்களின் வாழ்நாளை அதிகமாக்கியிருக்கிறது.

பழமை மீதான ஏக்கம் இன்னொரு வகையில் மனிதர்களில் பிரதிபலிக்கிறது என்று கருதுகிறேன். அது நம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள். எடுத்துக்காட்டாக இந்த பிரதியின் தொடக்கத்தில் எழுதியதை போல், கோவிட்-19 தொற்றுக்குத் தீர்வாகப் பாரம்பரிய வைத்தியமுறை அல்லது உணவு சார்ந்த சிகிச்சைமுறை எளிமையான தீர்வாக முன்வைக்கப்படுகிறது. இப்படியான பாரம்பரிய வைத்தியமுறை அல்லது உணவு சார்ந்த சிகிச்சை எளிமையான தீர்வாக நமக்குத் தோன்றுகிறது. இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் கலந்த குடிநீரைத் தீர்வாகப் பார்ப்பது எளிமையானதாகத் தோன்றலாம். அதுவே குழாய்கள் மாட்டப்பட்டு அவசர சிகிச்சையில் இருக்கும் காட்சி அதிகம் அச்சமூட்டுவதாக இருக்கின்றது.

மனிதர்கள் எப்போதும் தங்கள் கேள்விகளுக்கு எளிதான தீர்வுகளையும் பதில்களையுமே விரும்புகிறோம். மெய்நிகர் வெளியின் எளிமையான தீர்வுகள், நாம் உண்மை என்று நம்புவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான சார்பான ஆதாரங்களை நோக்கியே நம்மை இயக்குகின்றன. இதை உளவியல் ‘உறுதிப்படுத்தல் சாய்வு’ என்று சொல்கிறது. இதைத்தான் பெரும்பான்மையான நேரங்களில் நம்மை அறியாமல் இணைய வெளியில் செய்ய எத்தனிக்கிறோம். உறுதிப்படுத்தல் சாய்வே இத்தகைய பொன்னுலகக் கதைகள் மெய்நிகர் உலகில் பரவுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

மனிதர்களை இணைக்கமாக்கவும், வாழ்வு முறையை மேலும் சனநாயகமாக்கவும் அனைத்துவிதத் தொழிநுட்பச் சாத்தியங்களுடன் தொடங்கிய இந்தப் புதிய நூற்றாண்டு அதைச் செய்யாது தன்னிடம் இருக்கும் தொழிநுட்பச் சாத்தியங்களைக் கொண்டு மனிதர்களைத் தனிமையானவர்களாய் மாற்றி, சிந்தனை வெளிகளின் எல்லையை மிகவும் சுருக்கியிருக்கின்றது. இத்தனிமை மெய்நிகர் வெளியில் நம் இருப்பை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளி அதன்மூலம் நம்மிலிருந்து மேலும் அதிகப்படியான தரவுகளை உறிஞ்சும் வேலைகளைச் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகள் சிறப்பாகச் செய்கின்றன. அதுவே அபத்தப் பெருமிதங்கள் நிரம்பிய போலிச் செய்திகளையும் சதிக்கோட்பாடுகளையும் நோக்கி இழுக்கின்றன. இதன் ஒருபகுதியாக இழந்துவிட்ட ஆரோக்கியமான பொன்னுலக உணவுமுறை மீதான ஏக்கமும் வெளிப்படுகிறது.

இழந்துவிட்ட பொன்னுலக உணவுகள் குறித்து கவலை தோய்ந்த குரல்களை, நம் இன்றைய மனித வாழ்வின் அனைத்து நிலையிலும் ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவத்துக்கு எதிரான குரலாகவும் நிச்சயம் கருதலாம். எடுத்துக்காட்டாக, மரபணு மாற்றுத் தானியங்கள், இரசாயன உரங்கள், அணு ஆற்றல் போன்று வரிசை படுத்தலாம். மேலும், உபரி மீதான பேராசை கொண்ட முதலாளித்துவ உணவுகளின் தீமைகள், இதனால் உருவாகி வரும் நோய்கள் அல்லது காலநிலை மாற்றங்கள் நமது இருப்பை அச்சுறுத்துகின்றன. உபரி மீதும் மூலதனம் மீதும் வேட்கை கொண்ட ஏதோ ஒருவகையில் நிலப்பிரபுத்துவ விழுமியங்களை கொண்டிருக்கும் கூட்டு முதலாளித்துவம் குறித்து. ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ், கார்ல் மார்க்ஸ், ரோசா லக்சம்பர்க், அன்டோனியோ கிராம்ஸ்கி ஆகியோரின் நாட்களில் இருந்து டேவிட் கிராபர், யானிஸ் வருஃபாகிஸ், எஸ்தர் டஃப்லோ, தாமஸ் பிகெட்டி போன்றோரின் சமீபத்திய அத்தியாயங்கள் வரை விவாதிக்கவேண்டிய நீண்ட முடிவற்ற உரையாடல் அது.

மூலதனப் பொருளாதாரம் குறித்த அபத்தங்களுக்குத் தீர்வு, நிலப்பிரபுத்துவ வாழ்க்கைமுறைக்குச் செல்வது அல்லது இழந்துவிட்ட பொன்னுலகை மீட்டெடுப்பது. இப்படி மீட்டெடுக்கப்டும் வாழ்க்கை இந்தியச் சமூகத்தில் சமத்துவமற்ற சாதியச் சமூகமாகத்தான் முடியும். அல்லது, வறுமை, பஞ்சம், பட்டினி, முடிவடையாப் போர்கள், அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், காலநிலை ஆபத்துக்கள் என்று பலவற்றுக்குக் காரணமான கூட்டு முதலாளித்துவத்தின் லாப வேட்கைக்கும் தீர்வு சாதியமும்/ஏற்றத்தாழ்வுகளும் நிரம்பிய பொன்னுலகம் அல்ல.

மாறாக விவாதங்கள், உரையாடல்கள் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தைப் பற்றியதாக மாற்றமடைய வேண்டும். நிச்சயமாக, எல்லாவற்றுக்கும் ஒற்றைத் தீர்வைத் தேடும் கனவுகளைப் பற்றி ஏக்கம் கொள்ள முடியாது. இயற்கை/ செயற்கை நிகழ்வுகள் எதையும் வெள்ளை / கருப்பு என்று முடிவு செய்துவிட முடியாது. எனவே இந்த உரையாடல் ‘மனிதர்கள் X மற்றவை’ எனும் இரண்டு புள்ளிகளில் சிக்கித் தவிக்கும் முடிவற்ற ஒன்றாகவே முடிகிறது.

 
 
 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, யாயினி said:

இனிய நன்றி தெரிவித்தல் நாள் நல் வாழ்த்துக்கள்!

இன்று கொண்டாட்டமும் விடுமுறையும் தானே கனடாவில் 😁

இதே நாள் ஒக்டோபர் 11 தான் உலக பெண் குழந்தைகள் தினமும். தலிபான்கள் பெண் குழந்தைகளை படிக்கவே அனுமதிக்கிறர்கள் இல்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகள் காட்டகூடாது என்பதிற்காகவே இந்த தினம் கொண்டுவரபட்டது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 நிமிடம் வீட்டைப் பேணும் மனைவி முன் உட்காருங்கள்.
வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பதை உணர்வீர்கள்.
10 நிமிடம் ஒரு குடிகாரன் முன் உட்காருங்கள்.
வாழ்க்கை எவ்வளவு சுலபமானது என்பதை உணர்வீர்கள்.
10 நிமிடம் சாதுக்கள் மற்றும் சந்நியாசி முன் உட்காருங்கள்.
கையில் உள்ளவற்றையெல்லாம் தர்மகாரியங்களுக்கு தானம் செய்யணும் போல உணர்வீர்கள்.
10 நிமிடம் ஒரு தலைவர் முன் உட்காருங்கள்.
உங்கள் எல்லா படிப்பும் பயனற்றது என்பதை உணர்வீர்கள்.
10 நிமிடம் ஆயுள் காப்பீட்டு முகவர் முன் உட்காருங்கள்.
இறந்து போவது சிறந்தது என்பதை உணர்வீர்கள்.
10 நிமிடம் வியாபாரிகள் முன் உட்காருங்கள்.
நீங்கள் சம்பாதிப்பது மிகவும் குறைவு என்பதை உணர்வீர்கள்.
10 நிமிடம் விஞ்ஞானிகள் முன் உட்காருங்கள்.
நீங்கள் எவ்வளவு அறியாமையில் உள்ளீர்கள் என்பதை உணர்வீர்கள்.
10 நிமிடம் நல்ல ஆசிரியர்கள் முன் உட்காருங்கள்.
நீங்கள் மீண்டும் மாணவனாக வேண்டும் என்ற ஆசை வருவதை உணர்வீர்கள்.
10 நிமிடம் விவசாயி அல்லது தொழிலாளி முன் உட்காருங்கள்.
நீங்கள் இதுவரை கடினமாக உழைக்கவில்லை என்பதை உணர்வீர்கள்.
10 நிமிடம் ஒரு ராணுவ வீரன் முன் உட்காருங்கள்.
உங்களுடைய சேவைகளும் தியாகங்களும் மிகக் குறைவானது என்பதை உணர்வீர்கள்.
*10 நிமிடம் நல்ல* *நண்பன் முன்* *உட்காருங்கள்.*
*உங்கள் வாழ்க்கையே*
*சொர்க்கமாக*
*உணர்வீர்கள்.*
யாருடன் இருக்கிறோம் என்பது முக்கியம்!
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.
அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.
“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.
அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.
பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”
“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.
ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.
அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.
அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.
அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.
“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”
அவளுக்கு கண்கள் பனித்தன.
அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.
நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)
பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும். .!
 
 
 
 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்களுக்கு நில எல்லையை அடுத்த மாதம் மீண்டும் திறக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முன்மாதிரி ஊடகர் பிரகாஷ் ஞானப்பிரகாசம் | கந்தசாமி கங்காதரன் | Oct 2021

 
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, யாயினி said:

முன்மாதிரி ஊடகர் பிரகாஷ் ஞானப்பிரகாசம் | கந்தசாமி கங்காதரன் | Oct 2021

 

இவனுடைய இழப்புத் தான் எனது தயக்கத்தை உதறி முன் செல்ல தூண்டுகிறது.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Almost 80 unvaccinated staff on indefinite leave from Toronto long-term care home

 
 • Oct 08, 2021
 •  
 • News staff
AddThis Website Tools
Copernicus Lodge
Long-term care home Copernicus Lodge on Roncesvalles Avenue. CITYNEWS/Rick Helinski

A Toronto long-term care home has placed 79 staff members on unpaid, indefinite leave as a part of their required COVID-19 immunization policy.

Copernicus Lodge on Roncesvalles Avenue says when the policy was announced on Sept. 10, there were 111 unvaccinated staff. Since then 32 have received their first doses and the rest have been placed on leave.

A statement from the long-term care home says they have been planning since the early summer for the possibility of a staffing storage due to their low number of vaccinated staff, even before the immunization policy was implemented.

 

They have already backfilled the positions of the staff on leave and are currently fully staffed. All the people working for the home have received at least one dose of a COVID-19 vaccine.

“We are hopeful that our staff will choose to get vaccinated and return to work,” reads the statement.

Ontario announced a mandate that would require all long-term care workers to be vaccinated by November 15 or they would not be able to enter a home.

Previously, workers were required to disclose their vaccination status and those who are unvaccinated for non-medical reasons have to undergo education about the importance of immunization.

Phillips said that while 90 per cent of staff overall have received at least one dose, there were dozens of homes with vaccination rates below 80 per cent.

Advertisement
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
முப்பது வருடங்களுக்கு முன்பு பிள்ளையார்பட்டி செல்கையில் ஒரு பிள்ளையார்பட்டி பிள்ளையார் படம் கொண்ட காலண்டர் வாங்கி வந்தேன், அதில் பிள்ளையார் வாழ்த்து அழகுத் தமிழில் கவிஞர் பாடியது பதிப்பித்திருத்தனர், பச்சை வயல் மனதில் அப்படியே பதிந்து விட்டது, இன்றும் விநாயகர் காயத்ரி மந்திரம் போல இந்த வாழ்த்தையும் சொல்லி துதிக்கிறேன்.
அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலம் எல்லாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக் களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர், பொய்யில்லை கண்ட உண்மை.
245515436_10159875797331340_450806635063
 
 
245008107_10159875797386340_698350990922
 
 
 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
இது தான் வாழ்க்கை ! இது தான் பயணம் !
ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல் மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.
தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.
அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ "நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் "சாரி, என்னால் உன் கல்லறை வரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது" என்று மறுத்துவிட்டாள். நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது.
அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது.
"நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன்"’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான்.
"நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன்" என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே இறந்து போனான்.
உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.
எப்படி ?
1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.
திருத்தப்பட்ட பகிர்ந்த பதிவு !
 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.