Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய

5 முக்கிய அம்சங்கள்:-

1. எதுவும் சில காலம் தான்.

2. சிந்தனை செய், கோபப்படாதே.

3.  உன்னை மட்டுமே வாழ்வில் முழுமையாக நம்பு.

4. எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால்,

ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக தெரியாது.

5. வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை,

அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விட்டு செல்.

Link to comment
Share on other sites

 • Replies 3.7k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

"யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே"

யானையை எய்யச் சென்றவன் யானையைப் பிடித்து வெற்றியோடு திரும்புவதும் உண்டு.

சிறுபறவையை வேட்டையாட எண்ணியவன், வெறுங்கையுடன் திரும்புவதும் உண்டு.

அதனால் நமது இலக்குகள் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும்.இலக்கில்லாத வாழ்க்கை முள்ளில்லாத கடிகாரத்தைப் போல

அது யாருக்கும் பயன் தருவதில்லை இவ்வரிய கருத்தை உணர்த்தும். சங்க இலக்கியப் பொன்மொழி,.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சில உயிரினங்கள் பற்றிய தகவல்கள்

மின்சாரமீன்

உடலில் மின்சக்தியை உற்பத்தி செய்யும் பலவகை மீன்கள் உள்ளன. அவற்றின் தசைகளில் மின் சக்தி உற்பத்தியாகின்றது. ஒரு நரம்பு தூண்டி விடும் பொழுது பெரும்பாலான தசைகள் சுருங்கும்.

ஆனால் விசேஷமான மின் தசைசுருங்க முடியாது. நரம்பு அதை தூண்டும் போது ஒரு மின் அதிர்ச்சி உண்டாகின்றது. யீல் எனப்படும் மீன் 500 வோல்ட் மின் சக்தியை உற்பத்தி செய்கின்றது.

தன்னருகில் உள்ள ஓர் உயிரினத்தை ஸ்தம்பித்துப் போகச் செய்ய அதுபோதுமானதாகும். தன் இரையை அது இவ்வாறு கவர்ந்து விழுங்கிக் கொள்கின்றது.

வெட்டுக்கிளி

ஆபிரிக்காவின் பயிர்ச் செய்கைக்குப் பெரும் அழிவுக்காரணியாக விளங்குவது வெட்டுக்கிளி ஆகும்.(Grrass hopper) கோடிக்கணக்கில் கரும் முகில்கள் விரைந்து வந்து இறங்குவது போல விளை நிலத்தில் இறங்கி, அழித்து விடும் பூச்சிகள் இவை கரப்பான் பூச்சி இனத்தைச் சேர்ந்தவை. கடித்துண்ணும் தாடை கொண்டவை.

பெரும் கூட்டம் கூட்டமாகவே வலசைபோகும் இயல்பினை கொண்டது. வெட்டுக்கிளிகளில் குட்டையான உணர்கொம்புகளுள்ளவை ஒருவகை ஆகும். இன்னொரு வகை நீண்ட உணர்கொம்புகளைக் கொண்டவை வெட்டுக்கிளி எக்காரணத்தாலோ இலட்சக்கணக்காகப் பெருகி ஒன்றாக கூடி வலசை சென்று பயிர் பச்சைகளை எல்லாம் தின்று நாட்டைப் பாழ் செய்து பஞ்சம் உண்டாக்கின்றன.

கடல் சாமந்தி

கடலில் வாழும் விந்தையான உயிரினங்களில் ஒன்று கடல் சாமந்தி. பார்ப்பதற்கு ஒரு பூவைப்போல இருக்கும். வெள்ளை, சிவப்பு, நீலம், பச்சை ஆகிய நிறங்களில் கடற் சாமந்தி காணப்படும். தடித்த மயிர் போன்ற பற்றுக் கொம்புகளுள்ளன.

கடல் சாமந்தியின் வாயில் ஒருயீன் சிக்கினால் இப்பற்றுக் கொம்புகளில் உள்ள நச்சு ஏறி அது மயங்கி விடும். கடல் சாமந்தியின் கருவிலிருந்து புழு போன்ற வார்வாக்கள் வெளிவந்து தனித்தனி சாமந்தியாக .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பறவைகளின் ௬டுகள். பலவிதம்...

ஒரு பறவையின் கூட்டைப் பார்த்து அக்கூட்டினுள் வாழும் பறவை எது என்று எளிதில் கூறிவிடலாம். நமது கட்டை விரல் அளவேயுள்ள ரீங்காரச் சிட்டு அதற்குரிய சின்னஞ்சிறு கூட்டைக் கட்டுகின்றது. மிகப்பெரிய கூட்டைக் கட்டுவது வழுக்கைத் தலைகழுகு ஆகும். தேன்கூடு மூன்று மீட்டர் குறுக்களவும் ஆறேகால் மீட்டர் உயரமும் இருக்கும். அமெரிக்க ரொபின் பறவை மண்ணில் கூடு கட்டும்.

சுவிட்லெட் பறவை தன் வாயிலுள்ள பசையால் வீடுகட்டும்.

மலேசிய மீன்கொத்தி தான் தின்ற மீன்களின் முட்டைகளை ஓரிடத்தில் சேர்த்து வைத்து வீடு கட்டும். நியூசிலாந்திலுள்ள மட்டன் பறவை தரையில் பொத்து தோண்டி வசிக்கும். சருகு, புல், குச்சி முதலியவற்றை கொண்டு மயில் நிலத்தில் வீடு கட்டும். பூநாரைகள் ஒவ்வொன்றும் தனித்தனி வீடு கட்டாமல் பலவும் ஒன்றுகூடி ஓரிடத்தை தேர்ந்தெடுத்து மணலில் பள்ளம் தோண்டி வாழுமாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தினமும் தொடருவமா..

விடுவோமா என்ற இரட்டை

மனதோடு

தொடரப்படும் பக்கம்......

கோலம் அழகா ?

புள்ளி அழகா ?

கருத்தாய் ரசிக்கும்

கற்பனையே அழகு...!

இனிய காலை வணக்கம் !!!!

 

1779333_1452359058327279_1509466662_n.jp

10473767_592958770833302_854758324685788

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்ரோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஜக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

 

உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.

 

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளின் கோபமும் சண்டையும் அடுத்த விளையாட்டு ஆரம்பிக்கும் வரை தான்!

ஆனால் பெரியவர்களின் சண்டை தான் அடுத்த தலைமுறைகள் வரை நீடிக்கிறது!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..?

 

01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.

 

02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.

 

03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.

 

04. 1835 ல் அவரது காதலி மரணம்.

 

05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.

 

06. 1838 ல் தேர்தலில் தோல்வி.

 

07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

 

08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

 

09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.

 

10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.

 

11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.

 

12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார். இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை...

 

உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்...!

 

12128_1452694708293714_2097627853_n.jpg?

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உன்னால் எதைச் சிறப்பாகக் செய்யலாம் என்று நம்புகின்றாயோ,

அதைச் சிறப்பாக செய்ய முயற்சி செய்,

அதுவே வெற்றி பெற உற்ற வழி...!! கார்லஸ் மார்க்கஸ்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்று கவிஞர் கண்ணதாசன் நினைவு தினம்.

கண்ணதாசன் (ஜுன் 24,1927 – அக்ரோபர் 17,1981)புகழ் பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

 

Kannadasan.gif

இவரது படைப்புக்கள்

 • இயேசுகாவியம்
 • அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
 • திரைப்படப் பாடல்கள்
 • மாங்கனி

மற்றும் கவிதை நூல்கள்,புதினங்கள்,வாழ்க்கைச் சரிதம்,கட்டுரைகள்,நாடகங்கள் என பல தரப்பட்ட படைப்புக்களை மக்களுக்காக விட்டு சென்றவர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உன்னை புரிந்து கொள்ளாத எதுவும்

உன்னுடன் நிலைப்பதில்லை,

உன்னை புரிந்து கொண்ட எதுவும்

உன்னை விட்டு விலகுவதுமில்லை.

– கௌதம புத்தர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உண்மையான உறவுகள் என நம்பியவர்கள் சில சமயம் வேஷம் போடுவதால் உண்மையான அன்பும் ஊமையாகிப் போகிறது..!!

உங்களை நம்பியவர்களை ஒரு போதும் காயப்படுத்தாதீர்கள் அதன் வலியைப் போக்க எப்போதுமே வழி இருக்காது..!! இதை எழுதும் என்னைப் பார்க்கும் போது கூட பைத்தியக்காரியைப் போலத் தோணலாம்.ஆண்டவன் உங்களுக்காகவும் ஒரு ஏமாறத்தை வைத்திருப்பான்..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

படித்தது..

உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும்.

ஆனால்,நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம் என்று சொல்வார்கள்.தடைகளை வெல்வது எப்படி?இதை எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன.

எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் ஒருவர் எறும்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்.ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப் பொருளைச் சுமந்து கொண்டு சென்றது.

தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்துவிட்டு திடீரென்று நின்றுவிட்டது.மேலே செல்ல முடியாமல் தவித்தது.சிறிது நேரம் கழித்து, தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல் வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது.பின்பு அந்த இரையைக் கவ்விக் கொண்டு சென்றது.எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என எழுதியிருக்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.துன்பம் ஏற்பட்டால், அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற வேண் டும் என்பதை நாம் எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.ஒரு மிகச் சிறிய உயிரியான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும் எந்தத் தடையையும் வெல்ல முடியும்.

கவலையும் காணாமல் போய்விடும்...

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கடல் தாண்டும் பறவைக்கு எல்லாம் இழைப்பாற மரங்கள் இல்லை...ஆனாலும் கலங்காமல் கண்டம் தாண்டுமே...அவற்றை நினைத்தாயினும் நாம் நமக்கு வரும் சோதனைகளை சாதனைகளாக்கி கொள்ள வேண்டும்..

Edited by யாயினி
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் .....அனைத்து உறவுகளுக்கும் மகிழ்வான நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!

10410401_858006854240090_361211915593676

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.