Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

10473541_717038135012818_738357808853820

 

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், யாழ்ப்பாணம்

இலங்கையில் காணப்படும் இந்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த ஒரு திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோயில் கருதப்படுகிறது.

மாவிட்டபுரம் கந்த சுவாமி கோயில், இலங்கையின் வட பகுதியில் காணப்படுவதுடன் யாழ்பாணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கென சிறப்புகள் உண்டு. இந்த ஆலயத்தின் வரலாற்றில் முக்கிய இடத்தினை மாருதபுரவல்லி என்னும் அரசி குதிரை முகம் நீக்கிய கதை பிடித்துள்ளது.

இந்தியாவின் தமிழகத்தில் மதுரை நகரை ஆட்சி புரிந்த மன்னர், உக்கிரப்பெருழகி. இம்மன்னனின் மகள் மாருதப்புரவல்லி. இவ்வரசி குதிரை முகத்துடன் காணப்பட்டதுடன் குண்ம நோயினாலும் வருந்தினாள். எல்லா வகையான வைத்தியர்களும் வைத்தியம் செய்தும் இவளுடைய நோய் தீரவில்லை. சாந்தலிங்க முனிவருடைய வழிக்காட்டலின் கீழ் அரசி தென்னிந்தியாவில் இருந்து கீரிமலை வந்து நீராடி கந்தசாமி ஆலயத்தையும் வழிப்பட்டு வந்தார். இந்நிலையில் இவருடைய நோய் நீக்கியதுடன் குதிரை முகமும் நீங்கி மகா பேரழகு பெற்று காணப்பட்டாள். இதன் பயனாக மதுரையில் இருந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக சிற்பாசிரியர்களையும் பொருட்களையும் கொண்டுவந்து இங்கு மாவிட்டப்புரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தனர்.

இந்த ஆலயம் இரு நூறு வருடங்களுக்கு மேற்பட்டதாகும்.போர்ச்சுகீசியர்கள் இலங்கை மீது படையெடுத்து இலங்கையை கைப்பற்றிய வேளையில் மத மாற்றும் முகமாக இந்து ஆலயங்களை அழித்து தேவாலயங்களை நிர்மாணித்தார்கள். அப்போது மாவிட்டப்புரம் கந்தசுவாமி கோயிலும் அழிக்கப்பட்டது.அவ்வேளையில் ஆலயத்தில் இருந்த கந்தசுவாமி திருவுருவத்தை மக்கள் கிணறு ஒன்றினுள் மறைத்து வைத்தார்கள்.

போர்ச்சுகீசியர்கள் ஆட்சி முடிந்து ஒல்லாந்தர் ஆட்சி ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டு மீண்டும் கந்தசுவாமியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிப்பாடு நடைபெற துவங்கியது. இடைக்காலத்தில் மூலஸ்தானத்தில் வேல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

இன்றும் கூட கந்தசுவாமி வழிப்படுடன் மூலஸ்தானத்தில் வேலும் வைக்கப்பட்டு வழிபடுவதையும் காணலாம். கந்தசஷ்;டி யாகத்துடன் கூடியது. சூரன் போர் புரியுங்காட்சி மிகச் சிறப்பானது. இங்கு நித்திய பூசைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சுக்கிர வார உற்சவம், மாத உற்சவம் ஆகியனவும் உண்டு. கொடித் தம்பம் வெள்ளியினாலானது. கந்தபுராணத்திற் கூறப்படும் “இந்திர மயில்” இங்கு வாகனமாக உள்ளது. தலவிருட்சம் “காஞ்சி மா” ஆகும். ஆலயத்தின் மேற்குக் கோபுர வாசலில் புராதன ராஐகோபுரம் வானளாவி நிற்கின்றது. இங்கு மூன்று வீதிகள் உள. புராணபடனம் ஆண்டு தோறும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

 

 

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அரிய படம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ரோம் நாட்டில் வணங்கப்பட்ட விநாயகர் வழிபாடு.

Ancient romans used to worship Ganpati, elephant headed son of Shiva and parvati. Romans were, are and will always belong to Sanatan Dharma.

The god's name is Quenavady [ Ganapathi ],

 

10702049_712363922146906_903008218067119

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் நேசிக்கும் ஒருவர் நம் அன்பை புரிந்து கொள்ளாமல் நம்மை விட்டு பிரிந்தால்!

முதல் நாள் அழுதிடுங்க,

இரண்டாம் நாள் கவலைபடுங்க

மூன்றாம் நாள் சிந்தியுங்கள்!

நம் பாசத்திற்கு சிறிது கூட அருகதை இல்லாத ஒருவருக்காக நாம் கவலை கொள்வதில் என்ன இருக்கிறது!

நட்பு என்றால் சண்டைகள்,கருத்து வேறுபாடுகள் வந்தாலும் பிரியாமல் இருப்பது தான்!

காரணமே இல்லாமல் ஒருவர் பிரிந்தால் , நட்பும் அல்ல....அன்பும் அல்ல ....அதற்கு பெயர் சுய நலம்...!

அவர்களுக்காக நாம் வருத்த படுவது சரியானதும் அல்ல!!

காதலி பிரிந்தால் கூட அழாதவன் நண்பன் பிரிந்தால் அழுவான்!!

உண்மையான நட்பாக இருந்தால் மட்டுமே!

இப்போ மூன்றாவது நாளை முதல் நாளாக முயற்சி செய்யுங்கள்

முதல் நாள் சிந்தியுங்கள்:

பிரிந்தவர் நட்பு உண்மையானதா என்று,

பின் கவலை , அழுகை,

அழுதால் வலிகள் போவதில்லை!

உங்கள் நட்பு உண்மை என்றால் உங்களிடமே வரும்...

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Halloween - கலோவீன் தினம்

குரு அரவிந்தன்

மேலை நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களில் கலோவீன் தினமும் (Halloween) ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் 31ம் திகதி கலோவின் தினம் அயர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இதர நாடுகளில் கொண்டாப் படுகின்றது. பெரியவர்களும் குழந்தைகளும் மிகவும்வேடிக்கையாக இத்தினத்தை இங்கே கொண்டாடுவர். ஊரிலே பிள்ளைகள் இரவிலே வெளியே திரிவதைத் தடுப்பதற்காகப் பெரியவர்கள் பேய்பிடிக்கும், பிசாசு அடிக்கும், கொள்ளிவால் பிசாசு தொடரும், முனி அடித்தால் வாயால் இரத்தம் கக்கும், என்றெல்லாம் சொல்லிப் பயமுறுத்துவதுண்டு. இப்படித்தான் எங்கள் வீட்டிற்கு சற்றுத் தள்ளியிருந்த புளிய மரத்தில் முனி இருக்கிறது என்றெல்லாம் சொல்லி இரவிலே வெளியே திரியாமல் எங்களுக்குப் பயம் காட்டிப் பெற்றோர் மிரட்டி வைத்திருந்ததை இத்தினங்களில் மீண்டும் நான் நினைவுபடுத்திப் பார்ப்பதுண்டு. இரவிலே வெளிக்கிட்டுத் திரிவதற்குப் பயந்து பயந்தே வாழ்ந்ததொரு காலமது.

பிரித்தானியாவில்தான் முதன்முதலாகக் கலோவீன்தினம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகக் கொண்டாடப்பட்டது. அறுவடைக்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிப்பதையும், வெளிச்சகாலம் முடிந்து இருட்டுக்காலம் தொடங்குவதையும் இந்தக் கொண்டாட்டம் குறிக்கும். பழைய ஆங்கிலச் சொல்லான கலோவீன் என்றால் தெய்வீகத்தன்மை பெறச்செய்தல் என்ற கருத்துப்படும். பொதுவாக இத்தினத்தில் ஆரேஞ்ச் நிறமும் கறுப்பு நிறமும் அதிகமாகப் பாவிக்கப்படும். அரேஞ்ச் நிறம் அறுவடைக் காலத்தையும், கறுப்பு நிறம் இறப்பையும் குறிக்கும். அத்தினத்தில் பேய்கள் பிசாசுகள் போலப் பெரியவர்களும், சிறியவர்களும் வேடமிட்டு ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று வேடிக்கையாக விருந்து தரும்படி கேட்பார்கள். பெரியவர்கள் தெருவிலே நின்று கொள்ள, சிறுவர், சிறுமிகள் பேய் பிசாசுபோல வேடமிட்டு வாசலில் வந்து வேடிக்கையாக ஏமாற்றுவார்கள். சில சமயங்களில் வீட்டில இருப்பவர்களும் பயங்கரமான வேடமணிந்து விருந்து கேட்டு வந்த பிள்ளைகளுக்குப் பயம் காட்டுவார்கள். அதன்பின் பிள்ளைகள் கொண்டுவந்த தட்டிலே இனிப்பு, சொக்லட் போன்றவற்றைப் போடுவார்கள். மாலை 5மணியில் இருந்து இரவு ஒன்பது, பத்து மணிவரை அயலில் உள்ள வீடுகளுக்குச் சென்று (Tricks or Treats) இனிப்பு வகைகளைச் சேகரிப்பார்கள். இப்படிச் சேகரித்துக் கொண்டு வந்தவற்றைத் தரம் பிரித்து பிடித்தவற்றைத் தாங்கள் எடுத்துக் கொண்டு வேண்டாத மிகுதியைப் பெற்றோரிடம் தள்ளி விடுவார்கள்.

கலோவின் தினத்திலன்று சூனியக்காரி, கறுப்புப் பூனை, வெளவால், ஆந்தை, சிலந்தி, சிலந்திவலை, எலும்புக்கூடு, மண்டை ஓடு, பூசணிக்காய், விளக்குமாறு, சூலம் போன்ற விளையாட்டுப் பொருட்களால் வீட்டின் வாசலை அலங்கோலம் செய்து வைத்திருப்பர். பெரிய பூசணிக்காயை (Jack-o-Lantern) எடுத்து அவற்றைப் பயங்கர முகங்களைப் போலச் செதுக்கி அதன் வடிவைமாற்றி வாசலில் வைத்திருப்பர். இருட்டில் இருக்கும் அவற்றில் மெழுகு திரிகளைக் கொளுத்தி மெல்லிய வெளிச்சத்தை ஏற்படுத்தியிருப்பர். பயங்கரமான இடத்தை நோக்கிப் போவது போன்ற ஒரு சூழலை இங்கே ஏற்படுத்தியிருப்பர். இந்த வாரத்தில் பெரியவர்கள் குழந்தைகளுக்குப் போய் பிசாசு கதைகள் சொல்வதிலும், அப்படியான பயங்கரப் படங்களைக் குடும்பமாகச் சென்று பார்ப்பதிலும் அதிக நேரத்தைச் செலவிடுவர். நகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் கலோவீன் கேளிக்கை விருந்துகளுக்கு கலோவீன் ஆடைகள் அணிந்து முகத்திற்கு மைபூசிச் செல்வர்.

இந்த மாதத்தில் அனேகமான கடைகளில் கலோவின் தினத்திற்கான பொருட்களே முக்கிய வியாபாரப் பொருட்களாக இருக்கும். கலோவீன் ஆடைகள், முகமூடிகள் போன்ற பொருட்கள் அதிகமாக விற்பனையாகும். கலோவீன் கதைகள் அடங்கிய புத்தகங்கள், கலோவீன் புகைப்படங்கள், கலோவீன் ஒளிப்பட குறுந்தட்டுக்கள் போன்றவையும் அதிகம் விற்பனையாகும். அங்காடிகளில் பெரிய, சிறிய பூசணிக்காய்கள், ஆப்பிள் பழங்கள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டிருக்கும். வேலைத்தலங்களில் மட்டுமல்ல, பாடசாலைகளிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் விதம் விதமான ஆடைகள் அணிந்து, முகத்திற்கு மைபூசி வருவார்கள். பெண்கள் தேவதைகள், மந்திரக்காரி, சூனியக்காரி போன்று ஆடைகள் அணிந்திருப்பர். காலோவீன் வாழ்த்து மடல்கள் வரைந்து ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வர். பத்திரிகைகள் சிறுவர்களுக்கான கலோவீன் சித்திரம் வரையும் போட்டி, கலோவீன் நிறம் தீட்டும் போட்டி போன்றவற்றை இந்த வாரங்களில் நடத்துவர். பெரிய அங்காடிகளிலும் சிறுவர், சிறுமிகளை ஊக்குவிப்பதற்காக இப்படியான நிறம் தீட்டும் போட்டிகளை நடத்திப் பிள்ளைகளுக்குப் பரிசுகள் கொடுப்பர்.

இத்தினத்தில் அனேகமானவர்கள் முகமூடி போட்டும் உருமாற்றம் செய்தும் இருப்பதால் மாலை நேரத்தில் நகர் காவல் அதிகரிக்கப்பட்டிருக்கும். சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்புக் கருதி, மாலைநேரத்தில் குழந்தைகள் தனியே செல்லக்கூடாது என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருக்கும். 1978ம் ஆண்டு கலோவீன் என்ற பெயரில் ஜோன் காப்பென்ரரின் நெறியாள்கையில் ஆங்கிலப் படம் ஒன்றும் வெளிவந்திருந்தது. 2007ம் ஆண்டு மீண்டும் கலோவீன் படம் ஒன்று இதே பெயரில் றொப் சோம்பியால் (Rob Zombie) படமாக்கப்பட்டது.

by Kuru Aravinthan

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வப் போது இந்தப் பக்கத்தையும் பார்த்தும்,கருத்துக்களைப் பகிர்ந்தும்,வாழ்த்துக்களை சொல்லி செல்லும் அனைவருக்கும் நன்றிகள் பல..வேறை வேலை இல்லாமல் இருந்து இது ஒன்று என்ன செய்யுது பாருங்களன் என்று நினைக்க மாட்டீங்கள் என்று நம்பிறன்.. :)

 

nanri.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாய் நான் முதலில் பார்ப்பது உங்களின் பக்கம்தான். நேற்று மட்டும் அந்த மாவிட்டபுரத்துக்கு பச்சை போட மூன்று , நாலு தரம் வந்திருப்பேன். ஒருமாதிரி இன்று போட்டிட்டன் சகோதரி..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாய் நான் முதலில் பார்ப்பது உங்களின் பக்கம்தான். நேற்று மட்டும் அந்த மாவிட்டபுரத்துக்கு பச்சை போட மூன்று , நாலு தரம் வந்திருப்பேன். ஒருமாதிரி இன்று போட்டிட்டன் சகோதரி..! :)

 

 

நானும்  மேலேயுள்ள  கணபதியண்ணைக்கு 

ஒரு பச்சை போடலாம் என்று நேற்றிலிருந்து பலமுறை குத்துறன்..

முடியல... :)

(மிக அரிய படம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ரோம் நாட்டில் வணங்கப்பட்ட விநாயகர் வழிபாடு.

Ancient romans used to worship Ganpati, elephant headed son of Shiva and parvati. Romans were, are and will always belong to Sanatan Dharma.

The god's name is Quenavady [ Ganapathi ],) :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்..அனைவருக்கும் இனிதான நாளாக அமைய வாழ்த்துக்கள்.கனடா, அமெரிக்கா,மற்றும் சில இடங்களில் இன்று கலோவீன் தினம் கொண்டாடப்படுகிறது அதற்காகவும் எனது வழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

16277_661183613915457_326947384_n.jpg?oh


இது இந்தப் பக்கத்தை பார்த்து செல்பவர்களுக்காக இன்று வளங்கப்படும் இனிப்பு. :)

 

1383435_661291393904679_859782179_n.jpg?


HAPPY HALLOWEEN:)

 

945958_661032223930596_606314071_n.jpg?o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

t98241.gift98185.gift98196.gif

ஜேர்மனியிலும்... இன்று தான்,  ஹலோவீன்.
பழைய தலைமுறையை சேர்ந்தவர்கள் இதில், அவ்வளவு ஆர்வம் காட்டா விட்டாலும்,

நடுத்தர வயதினர், சிறுவர் கணிசமாக சொக்லேட் வாங்குவதற்காக வீடுகளில் மணியடிப்பார்கள்.

கதவை திறந்து சொக்லேட்...கொடுக்காவிட்டால், சுவருக்கு முட்டை அடி நிச்சயம் கிடைக்கும் என்பதால்....

இனிப்புகளை, சிறிய பைகளில் போட்டு ஆயத்தமாக வைத்திருப்பார்கள்.

அனேகமாக.... இரண்டு மணித்தியாலத்தில்.... இந்தக் கூத்தெல்லாம் அடங்கி விடும்.t98243.gif

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியிலும்... இன்று தான்,  ஹலோவீன்.

பழைய தலைமுறையை சேர்ந்தவர்கள் இதில், அவ்வளவு ஆர்வம் காட்டா விட்டாலும்,

நடுத்தர வயதினர், சிறுவர் கணிசமாக சொக்லேட் வாங்குவதற்காக வீடுகளில் மணியடிப்பார்கள்.

கதவை திறந்து சொக்லேட்...கொடுக்காவிட்டால், சுவருக்கு முட்டை அடி நிச்சயம் கிடைக்கும் என்பதால்....

இனிப்புகளை, சிறிய பைகளில் போட்டு ஆயத்தமாக வைத்திருப்பார்கள்.

அனேகமாக.... இரண்டு மணித்தியாலத்தில்.... இந்தக் கூத்தெல்லாம் அடங்கி விடும்.

 

ம்ம்ம்... :)

 

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

t98241.gift98185.gift98196.gif

ஜேர்மனியிலும்... இன்று தான்,  ஹலோவீன்.

பழைய தலைமுறையை சேர்ந்தவர்கள் இதில், அவ்வளவு ஆர்வம் காட்டா விட்டாலும்,

நடுத்தர வயதினர், சிறுவர் கணிசமாக சொக்லேட் வாங்குவதற்காக வீடுகளில் மணியடிப்பார்கள்.

கதவை திறந்து சொக்லேட்...கொடுக்காவிட்டால், சுவருக்கு முட்டை அடி நிச்சயம் கிடைக்கும் என்பதால்....

இனிப்புகளை, சிறிய பைகளில் போட்டு ஆயத்தமாக வைத்திருப்பார்கள்.

அனேகமாக.... இரண்டு மணித்தியாலத்தில்.... இந்தக் கூத்தெல்லாம் அடங்கி விடும்.t98243.gif

 

 

வருவது பேய்களின் கூட்டாளிகள் அல்லாவா??

இங்கும் அப்படித்தான்......t98196.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயர்க்கை அனர்த்ததில் மரண மெய்திய அனைத்து மலையக மக்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும்,அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!

603924_675995242434294_2037440307_n.jpg?

 

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருவது பேய்களின் கூட்டாளிகள் அல்லாவா??

இங்கும் அப்படித்தான்......t98196.gif

 

பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும் போது....எனக்கு வருபவர்களுக்கு, சொக்லீத் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை.

நான்... வீட்டில் இருந்த அப்பிள், பியர்ஸ் போன்றவற்றை கொடுத்து விட்டேன். சிறிது நேரத்தில்.... சட...புட என்று சத்தம் கேட்டது.

அப்பாவும் எனக்கு ஏதோ... சத்தம் என்று விட்டு விட்டேன்.

அடுத்த நாள் சுவர் முழுக்க, அப்பிள் கயரும், முட்டை மஞ்சள் கருவும்.

பின்பு ஒரு கிழமையில் தான் தெரிந்தது, அந்த வாண்டு மகனுடன் நாலாம் வகுப்பில்... ஒன்றாக படித்துக் கொண்டிருந்தது.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பண்டார வன்னியன் நினைவு தினம்!

(இறுதி வன்னி நாட்டு அரசன்)

 

Pandara_Vanniyan.gif

 

முழுப்பெயர்

குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்

 

பிறப்பு 1777 பிறப்பிடம் வன்னி, இலங்கை

இறப்பு 31 ஒக்டோபர் 1803

 

(லெப். வொன் டெரிபோர்க்கினால் தோற்கடிக்கப்பட்டார்)

இறந்த இடம் கற்சிலைமடு, இலங்கைபின்வந்தவர் பிரித்தானிய இலங்கை அரச வம்சம் வன்னியர்

 

சமய நம்பிக்கைகள்-இந்து.

10422944_869154959770589_980644181907719

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

07delam.jpg

 

k-7.jpg

 

பண்டார வன்னியனைப் போரில் கொன்றவனுக்கு இருந்த மனிதாபிமானத்தையும், தின்று ஏப்பம் விட்டு நிற்கிறது... சிங்களத்தின் மனிதாபிமானம்! :o

 

தொடர்ந்து இணையுங்கள்... யாயினி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

07delam.jpg

 

k-7.jpg

 

பண்டார வன்னியனைப் போரில் கொன்றவனுக்கு இருந்த மனிதாபிமானத்தையும், தின்று ஏப்பம் விட்டு நிற்கிறது... சிங்களத்தின் மனிதாபிமானம்! :o

 

தொடர்ந்து இணையுங்கள்... யாயினி!

 

உங்கள் பட இணைப்பிற்கு மிக்க நன்றி புங்கையண்ணா.காலையில் வெளியே போக வேண்டி இருந்ததினால் அதிகம் தரவுகளைத் தேடி எடுக்க முடியவிலை..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாய் நான் முதலில் பார்ப்பது உங்களின் பக்கம்தான். நேற்று மட்டும் அந்த மாவிட்டபுரத்துக்கு பச்சை போட மூன்று , நாலு தரம் வந்திருப்பேன். ஒருமாதிரி இன்று போட்டிட்டன் சகோதரி..! :)

 

ம்ம்ம்..உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சுவியண்ணா.உண்மையாக பிரியோசனமான பகுதியாக இருக்கிறதா என்று அறிவதற்கு நமக்கும் ஆவலாக இருக்கும் அல்லவா..அதனால் ஒவ்வொரு பத்துப் பக்கத்தை தாண்டும் போதும் மற்றவர்களிடமிருந்து அவ்வப்போது நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10404306_380930095403340_283042254722472

 

மண்சரிவு பேரனர்த்தத்தினால் காவுகொள்ளப்பட்ட மக்களுக்கு இதய அஞ்சலிகள் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

பதுளை மாவட்ட கொஸ்லாந்த மீரிய பெத்த தோட்டத்தில் இடம் பெற்ற மண்சரிவின் போது உயிர் நீத்த மலையக மக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் தமிழ்த் தேச மக்களுடன் இணைந்து எமது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கின்றோம்.

புதன்கிழமை காலை மேற்படி தோட்டத்தில் இடம் பெற்ற அனர்தத்தை அறிந்து நாம் அதிர்ச்சி அடை...ந்தோம். 300க்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இது இந்த வருடத்தில் இடம் பெற்ற மாபெரும் அவலம். ஸ்ரீலங்கா அரசின் இன அழிப்புக் காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்களை நாம் இழந்தோம். அந்தத் துயரத்திலிருந்து நாம் மீள்வதற்கு முன்னரே எமது உறவுகளுக்கே ஏற்பட்ட அனர்த்தத்தினால் மிகுந்த கவலையடைகின்றோம்.

இது தவிர்த்திருக்கக் கூடிய அனர்த்தம் என்பதை அறியும் போது எமது கவலை இரட்டிப்பாகின்றது . தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் இப் பிரதேசம் பாதுகாப்பற்றது என 2005ம் ஆண்டு அறிவித்திருந்தும் கூட மக்களை பாதுகாப்பான இடத்தில் குடியேற்ற எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. அரசின் பொறுப்பற்ற செயற்பாட்டினாலேயே எமது பக்கள் இந்தப் பேரழிவைச் சந்திக்க நேரிட்டுள்ளது. அரசின் இந்த அக்கறையீனமான பொறுப்பற்ற செயற்பாட்டிற்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கின்றோம்.

மலையகத்தில் வேறு பல பிரதேசங்களில் இது போன்ற ஆபத்தான நிலை இருக்கின்றது. அங்கும் அனர்த்தங்கள் வராமல் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலையக தலைமைகளை வேண்டுகின்றோம்.

மலையக மக்கள் தமது குருதியை வியர்வையாக்கி தமது இந்த நாட்டை வளப்படுத்தியவர்கள். ஆனால் அவர்களில் வாழ்வு நிலையோ வார்ததைகளில் எழுதக்கூடியது அல்ல. பல நூறுவருடங்கள் கழிந்தும் தமது நிலத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாதவர்களாக உள்ளனர். தங்களுடைய விடுதலை தொடர்பாக அவர்கள் நடாத்தும் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவினையும், ஒத்துழைப்பினையயும் வழங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாராக உள்ளது.

இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மலையக உறவுகளுக்கு எங்களால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் சர்வதேச மட்டத்தில் மலையக விவகாரத்தை பேசு பொருளாக்குவதற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்றைக்கும் தயாராக இருக்கின்றது என்பதையும் எமது உறவுகளுக்கத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தலைவர் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

செல்வராசா கஜேந்திரன்

பொதுச்செயலாளர் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" தமிழரின் அறிவியல் நூல் தொல்காப்பியம் "

உயிரினங்களையும், புலன்களையும் அடிப்படையாக வைத்து அறிவு ஆறாக பகுக்கப்பட்டிருப்பதையும் மேலும் அது எந்தெந்த உயிரினங்களுக்கு எந்தெந்த அறிவு என்றும் அதே போல் எந்தெந்த புலன்கள் எந்தெந்த நிலைக்கான அறிவுடன் செயல்படுகின்றன என்றும் தொல்காப்பியர் விளக்கியிருகிறார்.

" ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றோடு நாக்கே

ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றோடு மனமே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

புல்லும் மரணும் ஓர் அறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே

நந்தும் முரளும் ஈர் அறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே

சிதலும் எறும்பும் மூ அறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே

நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே

மாவும் மாக்களும் ஐ அறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே

மக்கள் தாமே ஆறாறிவு உயிரே

பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே

ஒருசார் விளங்கும் உள என மொழிப "

நூல் – தொல்காப்பியம்

அதிகாரம் – பொருளதிகாரம்

திணை – மரபியல்

விளக்கம் :-

ஓரறிவு – தொடுவறிவு மட்டுமே கொண்டவைகள் ஓரறிவு உயிரினமாக பகுக்கப்பட்டுள்ளது. புல், செடி, கொடி, மரம், போன்றவை ஓரறிவு உயிரினங்களாகும்.

ஈரறிவு– தொடுவறிவுடன் சேர்த்து இரண்டாவதாக சுவையறிவும் கொண்ட உயரினங்கள், ஈரறிவு உயரினங்களாக பகுக்கப்பட்டுள்ளது. சங்கு, சிப்பி போன்றவை ஈரறிவு உயிரினங்களாகும்.

மூவறிவு – தொடுவறிவு, சுவையறிவு ஆகியவற்றுடன் மூன்றாவதாக சுவாச அறிவும் (மோப்ப சக்தி) கொண்ட உயரினங்கள், மூவறிவு உயரினங்களாக பகுக்கப்பட்டுள்ளது. சிதல்(கரையான்), எறும்பு போன்றவை மூவறிவு உயிரினங்களாகும்.

நான்கறிவு – தொடுவறிவு, சுவையறிவு, சுவாச அறிவு ஆகியவற்றுடன் நான்காவதாக விழியறிவும் (கண்களால் கண்டு உணர்தல்) கொண்ட உயரினங்கள், நான்கறிவு உயரினங்களாக பகுக்கப்பட்டுள்ளது. நண்டு, தும்பி போன்ற உயிரினங்கள் நான்கறிவு உயிரினங்களாகும்.

ஐந்தறிவு – தொடுவறிவு, சுவையறிவு, சுவாச அறிவு, விளியறிவு, ஆகியவற்றுடன் ஐந்தாவதாக செவியறிவும் கொண்ட உயரினங்கள், ஐந்தறிவு உயரினங்களாக பகுக்கப்பட்டுள்ளது. விலங்குகளும், பறவைகளும் ஐந்தறிவு உயரினங்களாகும்.

ஆறறிவு – மேற்கண்ட ஐந்து அறிவுகளையும் சேர்த்து ஆறாவதாக பகுத்தறியும் அறிவை கொண்ட ஓர் உயிரினம் தான் மனிதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்..அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!

 

184395_191749637525526_7751472_n.jpg?oh=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரவு நேர மாற்றம்...The end of Daylight Saving Time..

 

clock1.jpg

 

 

 

கடிகாரம் வரலாறு !!

மிகப் பழங்காலத்தில் சூரியனின் இயக்கத்தையும், அதன் விளைவாக நிகழும்நிழல்களின் நகர்வையும் அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது.வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சுமேரியர்கள் நேரத்தை அளவிடமுயன்றதாகவும், இதில் முன்னோடிகளாகவிளங்கியவர்கள் அவர்களே என்றும் கருதப்படுகிறது. சுமேரிய நாகரிகமே ஒரு ஆண்டை மாதங்களாகவும், மாதத்தை நாட்களாகவும், ஒரு நாளைப் பல கூறுகளாகவும் பிரித்தது என்றும்கூறப்படுகிறது.காலப்போக்கில் அரேபியர்கள் தமது சொந்த முறைகளைக் கையாண்டு நேரத்தை அளப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

 
மற்றும் சூரியன் நகர்வதைப் பின்பற்றி 24 பெரிய கம்பங்களை வட்டப்பாதையில் நிறுவி, ஒளியும் நிழலும் அவற்றின் மீது விழுவதன் அடிப்படையில் எகிப்தியர்கள் நேரத்தை அளவிட்டனர். தொடர்ந்து நேரத்தை அளவிடும் முயற்சி பல்வேறு நாகரகங்கள் வாயிலாகப் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டது.அதே வேளையில் கிரேக்க நாட்டில் தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனத்தில், தண்ணீர் ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டது.
 
திரட்டபட்ட தண்ணிரின் அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இத்தகைய முறை கி.மு. 320-ல் வழக்கத்தில் இருந்து வந்தது. கிரேக்கர்களும்

ரோமானியர்களும் கி.மு.300-400 காலப் பகுதியில் இத்தண்ணீர்க் கடிகாரத்தில் மாற்றங்களைப் புகுத்தி அதனை மேம்படுத்தினர். கி.பி.1510-ஆம் ஆண்டுப் பகுதியில் ஜெர்மன்

நாட்டைச் சார்ந்த பூட்டு செய்யும்  தொழிலாளியான பீட்டர் ஹென்கின் என்பவர், நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரம் ஒன்றை உருவாக்கினார்.

 
பின்னர் 1656-ஆம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசல் (pendulum) அசைவில் இயங்கும் கடிகாரம் ஒன்றை உருவாக்கி நேரத்தை அளவிடும் முயற்சியில் வெற்றி பெற்றார். இவர் ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பாகுபாடு செய்தார். புதிய முறைகளைப் பயன்படுத்திக் கடிகாரத்தையும் மேம்படுத்தினார். இப்போதுள்ள கடிகாரங்களெல்லாம் இதன் முன்னேறிய வடிவங்களேயாகும். துவக்கத்தில் இந்தக் கடிகாரத்தின் பகுதிகளெல்லாம் மரத்தில் செய்யப்பட்டவைகளாகவே இருந்தன. பின்னாளில் இப்பகுதிகள் உலோகத்தாலும், கண்ணாடியாலும் செய்யப்பட்டன.
 
கி.பி.1927-ல் கனடா நாட்டுத் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாரன் மோரிசன் என்பவரால் கண்ணாடியால் ஆன கடிகாரம் ஒன்று உருவாக்கப்பட்டது.இது மிகக் குறைந்த காலத்திலேயே பெரிய வரவேற்பைப் பெற்றது.பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கம்வரை,ஊசல்களைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரங்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. சமச்சீராக அசையும் ஊசல்,கடிகாரத்தின் இரு முட்களை இயக்கிச் சரியான நேரத்தைக் காட்டுவதற்குப் பயன்பட்டது.இவ்வகைக் கடிகாரங்களை இன்றும் ஆங்காங்கே காணலாம். ஆனால் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஊசல்கடிகாரங்கள் மாற்றமடைந்தன. அலெக்சாண்டர் பெயின் என்பவர் 1840-ஆம் ஆண்டில் பாட்டரி (battery) என்னும் மின்கலத்தைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரத்தைக்கண்டுபிடித்தார். பின்னர் பல அறிவியல் அறிஞர்கள் இவ்வகைக் கடிகாரத்தை மேம்படுத்தினர்.
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அழகாய் அடுக்கி வைக்கப்பட்ட சோகங்கள் கொஞ்சம் என்னிடம் உண்டு, எவர் கண்ணும் படாமல் நான் மட்டும் அதை ரசித்திட...

 


 

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ரகசியங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.உங்களாலயே உங்களாலயே அதை ரகசியமாக வைக்க முடியாத போது மற்றவர்களாலும் முடியாது..!!!


காலம் பொன் போன்றது. அதன் முக்கியத்துவத்தை அறிய 8 வழிகள் உள்ளன. இதோ...

1. ஒரு ஆண்டின் மதிப்பு என்னவென்றுதேர்வில் தோல்வி அடைந்த மாணவனை கேளுங்கள்.

2. ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று குறைப் பிரசவத்துக்கு ஆளான ஒரு தாயைக் கேளுங்கள்.

3.ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வாரப் பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.

4. ஒரு நாளின் மதிப்பு என்னவென்று தெரிய, அன்று வேலை கிடைக்காமல் போன ஒரு தினக்கூலித் தொழிலாளியிடம் கேளுங்கள்.

5. ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று ரெயில் நிலையத்தில் சுற்றத்தாருக்காகக் காத்திருக்கும் மனிதரை கேளுங்கள்.

6. ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று ரெயிலைத் தவறவிட்ட பயணியிடம் கேளுங்கள்.

7. ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று ஒரு விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.

8. ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்


 

Edited by யாயினி
  • Like 2
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.