Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிக்கமுடியவில்லை என்பது அறிவுத்திறனின் பிரச்சினை அல்ல. ஒருவரின் இயல்பும் அல்ல. பழக்கம் இல்லாமலாகிவிடுவதுதான் அது. அதை வெல்ல ஒரே வழி தொடர்ச்சியாக வாசிப்பதுதான்.

நாம் வாசிக்கும்போது ஒருவேளை ஆரம்பத்தில் வெறுமே தகவல்களை மட்டுமே கவனிக்கக்கூடிய வாசிப்பை நிகழ்த்தலாம். வெறுமே கதைச்சுவாரசியத்தைமட்டும் வாசித்துச்செல்லலாம். ஆனால் நாம் தொடர்ந்து வாசித்துக்கோண்டே இருந்தோமென்றால் மெல்லமெல்ல நம் அகம் மேலதிக வாசிப்பை நிகழ்த்த ஆரம்பித்திருப்பதைக் காண்போம். நாம் அதை வலிந்து செய்யவேண்டியதில்லை. அதுவே நிகழ ஆரம்பிக்கும்.

- ஜெயமோகன்

 

 

 

Edited by யாயினி
Link to post
Share on other sites
 • Replies 3.3k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது முகநூல் எப்படி பலதும் பத்துமாக பிரகாசித்ததோ அது போன்று என்னை பல ஆண்டுகளுக்கு முன் உறுப்பினர் ஆக்கிக் கொண்ட யாழில் பல அம்சங்களையும் பதிவிட எண்ணி உள்ளேன்...அடுத்த பக்கத்தில் எந்தப் பதிவுகளும் பதிய

ஆயிரம் புள்ளினளை அள்ளித் தந்த அனைத்து உறவுகளுக்கும்  மனம் நிறைந்த நன்றிகள். 1,000 ???

நீ உழைக்கும்  உழைப்பில் சிறிதாவது உனக்கென சேமித்து வைத்துக்கொள்  இல்லையெனில்  கஷ்டம் வரும்பொழுது உதவுவதற்கு யாரும் முன் வர மாட்டார்கள் உன் சகோதரனாக இருந்தாலும். 1ரூபாயாக இருந்தாலு

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

உண்மையான அன்பிற்கு

ஏமாற்றத் தெரியாது

ஏமாற மட்டுமே

தெரியும்...

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
கோவில் அதிசயங்கள்..!

அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.

ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!

அவைகளில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளது.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மத்திய வங்கியால் . புதிய வடிவமைப்பில் மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்ட .
10 ரூபா குற்றிகள்..சில

இலங்கையின் 25 மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்தினதும் தனித்துவம் வாய்ந்த பண்புகளையும் முக்கியத்துவம் மிக்க அடையாளங்களையும் அங்கீகரித்து அவற்றினை விபரணப்படுத்தும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி 10 ரூபா நாணயக்குற்றிகளைக் கொண்ட புதிய தொடரொன்றினை வெளியிட்டுள்ளது.

 

இலங்கையின் 25 மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்தினதும் தனித்துவம் வாய்ந்த பண்புகளையும் முக்கியத்துவம் மிக்க அடையாளங்களையும் அங்கீகரித்து அவற்றினை விபரணப்படுத்தும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி 10 ரூபா நாணயக்குற்றிகளைக் கொண்ட புதிய தொடரொன்றினை வெளியிட்டுள்ளது.

 

யாழ்.மாவட்டத்தில் நல்லூர் ஆலய முகப்பையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடா கடற்கரை மற்றும், பாடும் மீன்களையும், கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்களஞ்சியத்தையும், மன்னார் மாவட்டத்தில் மடுமாதா தேவாலயத்தையும், திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர விகாரை, கோணேஸ்வரம் கோவில், பள்ளிவாசல் ஆகியவற்றையும், முல்லைத்தீவு மாவட்டத்தில், மீன்பிடியையும், வவுனியா மாவட்டத்தில் நெல் மற்றும் மரக்கறி உற்பத்தியையும் குறிக்கும் வகையில் நாணயக் குற்றிகள் அச்சிடப்பட்டுள்ளன.

 

10404497_763279890411396_76214083748608416797_763279880411397_899448773113952193

 

1378619_763279883744730_25241485873136021920549_763279887078063_8713309721438369

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது தான் வாழ்வின் முதல்

நாள் என்று வாழுங்கள்,

இது தான் வாழ்வின்

கடசி நாள் என்று

அன்பு செலுத்துங்கள்...

 

கவிஞர் வைரமுத்துவின் வரிகளிலிருந்து..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் Buffalo வில் ஆறடிக்கும் மேற்பட்ட பனிப் பொழிவு..

 

 

1502244_688067571291359_3423779200192333

 

10647138_688067394624710_290312674183141

 

 

Edited by யாயினி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக குழந்தைகள் நாள் (Universal Children's Day) டிசம்பர் 14 1954  இலிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெவ் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐநா அவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநல திட்டங்களை உலகெங்கும் நடாத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

10527710_537705703042158_758593707906918

 

 

பன்னாட்டு குழந்தைகள் நாள் (International Children's Day, ICD) பல நாடுகளில் ஜீன் 1 ம் நாள் கொண்டாடப்படுகிறது. உலக சிறுவர் தினமும் முதியோர் தினமும் இலங்கையில் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்றன.குழந்தைகள் நாள் (Children's Day) உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்பான காலை வணக்கங்கள்...அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!.இன்று முதல் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்.

 

 

 

 

 

1399554_920632717948754_6863652622155204

 

Edited by யாயினி
Link to post
Share on other sites

காலை வணக்கம்..!

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பலரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட மாவீரர்கள் பற்றிய சிறப்பு தொகுப்பை கீழ் இணைக்கப்பட்டுள்ள பகுக்கு சென்று பார்வையிடலாம்.

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/148506-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2014-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாளை நான் இல்லை எனினும் என் நினைவுகள் இருந்தால் சரி ..அது போதும் ....

என வித்தாக்கிப்போன வீர மறவர்களின் கல்லறைகளை தட்டி எழுப்பும் பிஞ்சு.

 

10433212_355633507950869_737985704276102

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பார்க்கும் அனைத்து இதயங்களையும் கண்ணீர் வர வைக்கும் காட்சி இது. :(

250341_806545839384109_90496912044472163

 

 

Edited by யாயினி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

33698_446165676550_218441_n.jpg?oh=fd8d2

535948_756146771127315_14161927899957918

யாழ்ப்பாணம்.மாவீரர் தின பதாகை..

 

10653504_744309085661843_204552343861845

10648986_744307775661974_731310074989038

 

 

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அன்று.2003

 

1553472_744305908995494_5423001809514863

10680078_744305578995527_427459452265544

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் நுழைவாயில்......

 

10423824_744305412328877_282302126697988

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் அன்று ஒரு பொழுதில் இப்படித் தான் மாவீரர் தினம் அனுஷ்டிக்கபட்டது...

 

10694286_10203865046399122_3029873734866

 

Kalarai-12-600x450.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

10157249_505714812904871_257588023993467

 

இந்தப் புகைப்படத்தில் இடது புறம்

இருப்பது யாரென்று எவரிடமாவது கேட்டால்,

மாவீரன் என்ற சொல்லுக்கு சரியான உதாரணம்,

வீரம் என்ற சொல்லுக்கு புது அர்த்தம படைத்தவன்

என்று சொல்வர்...

அதே வலது புறம்

இருப்பது யாரென்று கேட்டால் எவரிடமும்

பதில் இருக்காது...

காரணம் இவன் தமிழன்... உலகம் கொண்டாட மறந்த

மாவீரர்களுள் முதன்மையானவன் இவன்...

300 # spartans படம் கிரேக்க

புராணங்களை தழுவி எடுக்கப்பட்டது... அதில்

கூறப்பட்டிருக்கும் வீரம் மட்டும் அல்ல, உலகில்

படைக்கப்பட்ட வீர காவியங்கள் அனைத்தையும் நம்

சமகாலத்தில் நடத்திக் காட்டியவன் தான் இவன் ...

சமதளங்களின் சமரன் என்று அழைக்கப்பட்ட

ப்ரிகடியர் பால்ராஜ்...

# போர் உச்சத்திலிருந்த காலத்தில், இலங்கைத்

ராணுவத் தளபதி ராணுவ மந்திரியிடம்

பால்ராஜைப் பற்றி இப்படியாய்க் கூறுகிறார்...

"நீங்கள் கொடுத்த 45000

ராணுவத்தினரை வைத்து பிரபாகரன்

வந்து இருந்தால் கூட

எதிர்கொண்டு விடுவோம்... ஆனால்

அங்கே நிற்பது பால்ராஜ்... நம் ஒட்டுமொத்த

ராணுவத்தையே கொண்டு வந்து நிறுத்தினாலும்

அவனை வெல்ல முடியாது..."

வெறும் 1200 புலிகளை வைத்துக்

கொண்டு உள்ளும் வெளியுமாய் 45000 சிங்கள

ராணுவ வீரர்களை எதிர்கொண்டான்... அதுவும்

ஒரு நாள், இரண்டு நாள் அல்ல 34 நாட்கள்... ஆம்

புலிகள் ஆனையிறவை மீட்பதற்காய் களமாடிக்

கொண்டிருக்கையில், பால்ராஜ் தலைமையில்

1200 புலிகள் காடுகளும், மரங்களும் அற்ற

சமவெளியில், கடல் வழியாய் களமிறக்கப் பட்டனர்...

எந்த வித உதவியும் இல்லை. உணவு, குடிநீர்,

மருத்துவம் என எதற்கும், எங்கும் செல்ல

முடியாது... அவர்களை தரைப்படை, கடற்படை,

வான்படை என 45000 ராணுவத்தினர்

சுற்றிவளைத்து தாக்கியும் 'வதிரையன்

பாக்ஸ்' என்ற தாக்குதல்

உத்தியை கையாண்டு அத்துனை ராணுவத்தினரையும

் தலைதெறிக்க ஓடவைத்தவன்...

# இவன் கையாண்ட 'வதிரையன் பாக்ஸ்' மற்றும்

அவன் இருந்த ராணுவச் சூழல்கள் இன்றும்

உலகெங்கிலும் உள்ள ராணுவக் கல்லூரிகளில்

முக்கியப் பாடமாய் உள்ளது...

# புலிகளின் பிரதிநிதி, அமெரிக்க ராணுவக்

கல்லூரிக்குச் ஒரு முறை சென்றிருக்கையில்,

அங்கு பயின்ற மாணவர்கள் வியந்துப்

பாரட்டியது பால்ராஜையும், அவன் கையாண்ட

வதிரையன் பாக்ஸ் யுக்தியையும் தான்...

# யுத்த நிறுத்த காலத்தில் ஒரு முறை,

பால்ராஜ் கொழும்பு விமான நிலையம்

சென்றிருக்கையில் அவனை சூழ்ந்த ராணுவத்

தளபதிகள் ராணுவ உடையுடன்

வந்து அவனுக்கு மரியாதை செலுத்தி,

அவனிடம் கூறியது,

"நாங்கள் நூற்றுக் கணக்கான தளபதிகள்

போரை வழிநடத்திக் கொண்டிருக்கையில்,

எங்களுக்கு எதிராய் ஒரே ஒருவன்

களமிறக்கப்பட்டு நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம்.

அவனை எங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும்

காணவேண்டும் என்று விரும்பினோம்... எங்கள்

அனைவரின் கனவு நாயகன் நீங்கள்..."

இப்படியாய் இவன் விட்டுச் சென்ற சரித்திர

முக்கியத்துவம் வாய்ந்த அடையாளங்கள்

ஏராளம்...

எதிரிகளின் சிம்மசொப்பனமாய் திகழ்ந்த இந்த

மாவீரன், மாரடைப்பால் 2008 ஆம்

ஆண்டு இதே நாளில் இயற்கையால்

நம்மிடமிருந்து பறிக்கபட்டான்...

தமிழீழ மக்கள் மட்டுமல்ல, தலைவர்

பிரபாகரனே ஆசைப்பட்டது, இவன் களத்தில்

விளையாடியதை திரையில் காணவேண்டும்

என்று.....

இங்கு, காசுக்காய் அரை நிர்வாணமாய் வந்த

நடிகைகளின் வாழ்கையை எல்லாம் திரையில்

காண்பிக்க ஆட்கள் இருகிறார்கள்...

ஆனால் இனம் காத்த குல

தெய்வங்களை பற்றி பேசக்கூட ஒருவரும்

இல்லை...

நாமாவது, இந்த நாளில் உலகம் கொண்டாட மறந்த

இந்த மாவீரனை மறவாது நினைப்போம்... நம்

பிள்ளைகளுக்கும் இவன் போன்ற மாவீரர்களின்

வாழ்கையை எடுத்துக் கூறுவோம்...

'தமிழர்களின் தாகம் தமிழ்தேசத் தாயகம்'

நான் வாசித்த நேசித்த உண்மை.

 • Like 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கக்கோரி பிள்ளையானின் தம்பியால் வழங்கப்பட்ட பணம்! வாழைச்சேனை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் என்ற பயத்தின் நிமிர்த்தமே பிரதேச சபையின் தவிசாளரால் நாளை கூட்டப்படவிருந்த வரவு செலவு திட்ட பிரேரணை கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக தவிசாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதேச சபையின் தவிசாளர் நாளை கூட்டப்படவிருந்த வரவு செலவு திட்ட பிரேரனையினை ஒத்தி வைப்பதாக ஊடகவாயிலான அறிக்கை விட்டுள்ளதை கண்டித்து பதினைந்து சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடக சந்திப்பொன்றினை ஓட்டமாவடி நாவலடியில் நடாத்தினர். குறித்த ஊடக சந்திப்பின் போது சபை உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட வறிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் சபை உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிதிக்கு மேலதிமாக நிதியினை செலவு செய்ததாக கூறினார். சபை நிதியினை எவ்வாறு செலவு செய்ய முடியும். இவ்வாறே சபையில் பல ஊழல்கள் இடம்பெற்று வருகின்றன. அத்தோடு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரின் சகோதரர் சபை உறுப்பினர்களின் சிலரை எங்களது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள் நாங்கள் உங்களுக்கு பணம் வழங்குகின்றோம் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார். இவர் முஸ்லிம் சபை உறுப்பினர்கள், தமிழ் சபை உறுப்பினர்கள் அதுமட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சபை உறுப்பினர்களிடம் பணம் வழங்குவதாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதேச சபை உறுப்பினர் கி.சேயோன் குற்றம் சாட்டியுள்ளார். வாழைச்சேனை பிரதேச சபையில் பல ஊழல்கள் காணப்படுகின்றன. தவிசாளர் தலைமையில் செய்யப்பட்ட ஊழல்களை மறைப்பதற்காகவே வரவு செலவுத் திட்டத்தினை ஒத்தி வைத்துள்ளார். பிரதேச சபையின் தவிசாளர் தன்னால் எந்தவித ஊழலும் செய்யவில்லை என்று சொன்னால் சபையை கூட்டி வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பியுங்கள் என்று சபையின் பிரதி தவிசாளர் எஸ்.யசோதரன் சவால் விடுத்துள்ளார். அத்தோடு முடியுமானால் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்து அதனை வெற்றி கொண்டு காட்டுங்கள். எங்களிடம் உங்களின் நடவடிக்கைக்கு எதிரான பதினைந்து உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்து காணப்படுகின்றோம். தோல்வியின் பயத்தின் காரணமாகவே தவிசாளர் வரவு செலவுத் திட்டத்திற்கான சபை அமர்வினை கால வரையறையின்றி ஒத்திவைத்துள்ளதாக சபையின் பிரதி தவிசாளர் எஸ்.யசோதரன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட வறிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் சபை உறுப்பினர்களால் இருபத்தியொரு இலட்சம் ரூபாய் நிதிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிலையில் முப்பத்தி மூன்று இலம்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறுகின்றார்கள்.  இது தொடர்பில் விளக்கம் கேட்ட போதும் இதுவரை எங்களுக்கு பதில் இன்னும் வழங்கப்படவில்லை என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் இப்றாஹிம் (அஸ்மி) தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டமானது சபைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்றதாக அமையவில்லை. அத்தோடு எங்களால் சமர்பிக்கப்படும் பிரேரணைகள் தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தவிசாளர் மக்கள் நலன் சார்ந்து செயற்படுவதில்லை என தமிழ் தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் கே.குணசேகரம் தெரிவித்தார். அத்தோடு தவிசாளர் கொரோனா வைரஸ் காரணமாக சபையை கால வரையறையின்றி ஒத்திவைப்பதாக ஊடகவாயிலாக தெரிவித்திருந்தார். இது அவரது இயலாமையை காட்டுகின்றது. இவர் உடனடியாக வரவு செரலவுத் திட்டத்தினை சமர்ப்பித்து தோல்வியுற்று ஒரு நல்ல மக்கள் சேவையில் ஈடுபடும் ஒரு உறுப்பினரிடம் ஒப்படைத்து விலகுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் தமிழ் தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் கே.குணசேகரம் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பிப்பதற்கு உடனடியாக சபையை கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரி பதினைந்து பிரதேச சபை உறுப்பினர்களால் மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்ட பிரேரனை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எந்தவித அறிவித்தலும் வழங்கவில்லை என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சபை உறுப்பினர் எம். தையூப் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னனி, தமிழ் தேசிய முன்னனியின் சபை உறுப்பினர்கள் பதினைந்து பேர் சபை நடவடிக்கைக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.ibctamil.com/srilanka/80/155228  
  • இனி தீர்வு என்று ஒன்று இல்லை. அதுவும் இந்த அரசாங்கத்தில் நடப்பதென்பது நினைக்கவும் முடியாது. இப்போது ராணுவ ஆட்சி இங்கு நடக்கிறது. நடப்பதை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான். இலங்கை இந்தித்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு முன்னேறியிருக்க வேண்டியதுதான் இருந்த ஒரே சந்தர்ப்பம். அதை முழுமையான தீர்வாக ஏற்றுக்கொள்ளவிடடாலும் ஒரு ஆரம்பமாக இருந்தது. இதேபோல நோரவேய் அரச அனுசரணை இப்படியாக நிறைய சந்தர்ப்பங்களை தவற விடடாயிற்று. வேணுமென்றால் இன்னுமோர் எழுபது வருடம் போராடலாம். முடியுமென்றால் இப்பபோதைக்கு இருப்பதை தக்க வைக்க முயட்சிக்கலாம். இருந்தாலும் , அவர்கள் ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரித்துள்ளார்கள். அதை மாற்ற முடியுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும். அல்லது புலம்பெயர் சமூகத்தால் எதாவது செய்ய முடியுமென்றால் முயட்சிக்கலாம்.  
  • ஓம் முடிந்தவுடன் உங்களை கூப்பிறம் சிட்னியில இருந்து சட்னி செய்து அனுப்பிறதுக்கு. சும்மா ஒரு ரைமிங்குக்காக, போட்டுதாக்காதேங்கோ, I am பாவம் www.youtube.com/watch?v=sgyJAaPCPbA
  • கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த பல்கலை மாணவர்கள்; கைது செய்யப்படுவீர்கள்- எச்சரிக்கை விடுத்த பொலிஸார்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர். அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர். எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.     https://www.ibctamil.com/srilanka/80/155233?ref=imp-news  
  • யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணத்தை முடக்கவுள்ளதாக சில பத்திரிகைகளில் தவறான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த செய்தியின் ஊடாக பொது மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக காரைநகர் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரிடம் நேரடியாக தொடர்புகளைப் பேணிய 21 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு நாளைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த பரிசோதனை முடிவில் பலருக்கு தொற்று இனங்காணப்பட்டால் மாத்திரமே சில வேளைகளில் காரைநகர் பிரதேசத்தை முடக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.எனினும் அது தொடர்பில் இதுவரையில், எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-குடாநாட்டை-முடக்கு/  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.