Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும்...,

மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்...,

இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஞாயிறு பொழுது அனைவருக்கும் இனிதாக வாழ்த்துக்கள். நாற்பது பக்கத்தை தாண்டி போய்க் கொண்டு இருக்கிறது,அப்படி என்ன தான் பதிந்துள்ளேன் என்று எனக்கே புரிய இல்ல.எனது பக்கத்தைப் புரட்டிப் பார்த்து கருத்துக்களைப் பகிர்பவர்களுக்கும்,விருப்பு வாக்குகளை இட்டுச் செல்லும் அனைத்து உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

 

10530889_344687999037331_700577565612671

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

 

110px-Red_ribbon.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் இருந்தே ஒரு சம்பள மில்லாத உத்தியோகம் பார்க்கத் தொடங்கி,சத்தியமா இப்போ இரண்டு கிழமைக்கு மேலாக தேனீர் குடிக்கிற நேரத்தில இருந்து எல்லாம் மாறிட்டு.

 

1148965_617835218257256_1129166605_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசும்முன் கேழுங்கள்

எழுதும்முன் யோசியுங்கள்,

செலவழிக்கும் முன்...

சம்பாதியுங்கள்.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

527957_458062284234551_450521684_n.jpg?o

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்

 

1450109_762796020452463_3804826585639971

உலகம் போற்றும் மாமேதைஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார் .நியூட்டன் ஐன்ஸ்டீன் வரிசையில் ஹாக்கிங் வைக்கப்பட்டு போற்றப்படுகிறார்.

இயற்பியல் அறிஞர். அண்டவெளியின் தோற்றத்தையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் பற்றி ஆராய்ந்து மகத்தான கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர்.

1942ஆம் ஆண்டு பிறந்தவர். இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8 ஆம் தேதி பிறந்தவர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்த போது தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார்.

21 வயதில் மருத்துவ சோதனைகள் பல செய்தார் தசைகளை வெட்டி எடுத்து பரிசோதனை செய்த போதிலும் மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (myotrophic Lateral Sclerosis) என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார். இரண்டு மூன்று ஆண்டுகளில் மரணம் உறுதி என்று தீர்மானமாகக் கூறினார்கள்.

மருத்துவமனையில் துயரத்தில் இருந்த ஸ்டீபனுக்கு அருகே சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்ட ஒரு சிறுவனின் மரணம் பயம் தருவதற்குப் பதிலாக தைரியம் கொடுத்தது. உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார்.நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோது ஹாக்கிங்குக்கு தொண்டையில் ஓர் அறுவை சிகிச்சை செய்தனர்.பேசும் திறனையும் இழந்தார்.

இவரால் பிறர் உதவியில்லாமல் நடக்க படிக்க எழுத முடியாது. பேசும் திறனும் போய்விட்டது. இவரது மொத்த நடமாட்டமும் ஒரு சின்ன சக்கர நாற்காலியில் அடக்கம்.சக்கர நாற்காலியில் இருந்தபடியே பல்கலைக்கழக ஆய்வினை முடித்து பேராசிரியர் ஆனார்.கேம்பிரிட்ஜில் நியூட்டன் வகித்த பதவியான லூக்காசியன் கணிதவியல் பேராசிரியர் பதவியினை வகிக்கிறார்.

இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள் அண்டவியலும் (cosmology) குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும்.

பெருவெடிப்புக் (Big Bang) கொள்கைக்கான கணிதப்பூர்வ நிரூபணத்தை அளித்ததன் மூலம் இயற்பியல் உலகில் புகழின் உச்சிக்கு வந்தார் ஸ்டீஃபன் ஹாக்கிங். இம்முழு பேரண்டமும் ஒரு சிறு புள்ளியிலிருந்து வெடித்து வெளிப்பட்டது என இக்கொள்கை கூறுகிறது. அப்புள்ளியானது முடிவற்ற சிறிய புள்ளியாகவும் முடிவற்ற அடர்த்தியுடனும் முடிவற்ற நிறையீர்ப்பு கொண்டதாகவும் இருந்தது. ரோஜர் பென்ரோஸ்(Roger Penrose) என்பவருடைய கணித நுணுக்கங்களை பயன்படுத்தி தன்னுடைய நிரூபணங்களை ஹாக்கிங் நிறுவினார்.

கருங்குழிகளிலிருந்து ஒளியுட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருங்குழிகளிலிருந்து துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றனவென்றும் அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும் இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இவ்வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.கருந்துளைகளின் ஆவியாதல் குறித்த ஹாக்கிங் கொள்கை புரட்சிகரமானதாகவும் வினோதமானதாகவும் இருந்த போதிலும் பெருமளவில் எற்றுக்கொள்ளப்பட்டது.

1985ஆம் வருடம் அவரது உடல் முழுவதும் செயல் இழந்தது. ஆனாலும் முயற்சி நம்பிக்கையை இழக்காமல் வலது கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன் வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார்.காலம்-ஓர் வரலாற்றுச் சுருக்கம் (A Brief History of Time) என்ற புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது.விற்பனை பட்டியல் வரிசையில் முன்னிலை வகித்த நூல்.சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் எளிய மொழியில் அறிவியல் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இந் நூல்கள் பலரையும் கவர்ந்தது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கணிப்பொறி மென்பொருள் ஒன்றைக் கண்டுபிடித்து சக்கர நாற்காலியில் பொருத்தித்தந்தார். சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.

இத்தாலியில் உள்ள போப் ஆண்டவர் ஸ்டீஃபன் ஹாக்கிங் அழைத்து பெருமைப்படுத்தியது மட்டுமல்லாமல் போப் ஆண்டவர் காலில்தான் எல்லோரும் மண்டியிட்டு வணங்குவார்கள். ஆனால் அவர் இவர் காலில் மண்டியிட்டார் .

சக்கரநாற்காலியில் அமர்ந்துக்கொண்டு கண்களின் அசைவால் கண்ணியோடு உறவாடி தன்னுடைய கருத்தினை நிரூபிக்க முனைந்துக்கொண்டிருக்கிறார் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்...

அந்த ஆண்டவனும் ஊனம் தான் வழமையானது

handicap-maze.jpg?w=300&h=266

 

 

என் பிராத்தனைகளை அவன் கேட்பதை,

நான் உணராவிட்டால்,

அந்த ஆண்டவன், காது கேளாதவன்.

 

என் கேள்விகளுகெல்லாம் அவன்

அமைதியாய் சொல்லும் பதில்களை

நான் உணராவிட்டால்,

அந்த ஆண்டவன், வாய் பேச முடியாதவன்.

 

என் செயல்களில் உள்ள நல்ல வற்றை

அவன் பார்ப்பதை

நான் உணராவிட்டால்,

அந்த ஆண்டவன், பார்வை அற்றவன்.

 

என் பிரச்சனைகளை தீர்த்துவெய்க்க

ஒவ்வொறு முறையும் அவன் கைகொடுப்பதை

நான் உணராவிட்டால்,

அந்த ஆண்டவன், கைகள் இல்லாதவன்.

 

என் தனிமையான பயணங்களில் என் தோழனாய்

என்னுடன் அவன் நடப்பதை

நான் உணராவிட்டால்,

அந்த ஆண்டவன், கால்கள் இல்லாதவன்.

 

நாம் உணராவிட்டால், அந்த ஆண்டவனே ஊனமாகி விடுகிறான்!!!

நம் ஊனமுற்ற நண்பர்களின் கெதி?

ஆதரிப்போம் நம் உணர்வுகளால்!!!

 

disabled330x316-jpg.jpg?w=300&h=287

3rd Dec - International disability Day

http://dhans.wordpress.com/

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Rowland_Hill_-_Project_Gutenberg_etext_1

 

ரோலண்ட் ஹில் (Rowland Hill, ( டிசம்பர் 3, 1795 - ஆகஸ்ட் 27, 1879), நவீனஅஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர்  என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் என்னுமிடத்தில் பிறந்தவர்.

 

ரோலண்ட் ஹில், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1837 ஆம் ஆண்டு, தனது 42 ஆவது வயதில் "தபால் அலுவலகச் சீர்திருத்தம்: இதன் முக்கியத்துவமும் நடைமுறைச் சாத்தியமும்" ("Post Office Reform: its Importance and Practicability") என்ற அவரது பிரபலமான பிரசுரத்தை வெளியிட்டார். இப் பிரசுரத்தில் அவர் அதிகாரப்பூர்வ, முன்னரே அச்சடிக்கப்பட்ட கடித உறைகளையும், ஒட்டத்தக்க தபால்தலைகளையும் வெளியிடவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டினார். பிரித்தானியத் தீவுகளுக்குள் எந்த இடத்துக்கும் அரை அவுன்ஸ்  நிறையுள்ள தபாலை அனுப்புவதற்குக் குறைந்த சீரான கட்டணமான ஒரு பென்னியை  அறவிடவேண்டுமெனவும் அவர் ஆலோசனை வழங்கினார்.

 

இதற்கு முன்னர் தபால் விநியோகம் செய்யப்பட வேண்டிய தூரத்தையும், கடிதத்தின் தாள்களின் எண்ணிக்கைக்கும் ஏற்பவே கட்டணம் அறவிடப்பட்டது. ரோலண்ட் ஹில்லின் ஆலோசனைப்படி, ஒருபென்னி கட்டணம், குறிப்பிட்ட நிறைக்கு உட்பட்ட கடிதமொன்றை நாட்டின் எந்தமூலைக்கும் அனுப்ப முடிந்தது. முன்னர் தபால் கட்டணம் 4d க்கும் கூடுதலாகவே இருந்தது.

 

எனினும் சேவைக்கான கட்டணத்தைச் செலுத்துவது அனுப்புனரா, பெறுனரா என்ற பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் விருப்பத்துக்குரியதாகவே இருந்துவந்தது. தபாலதிபர் நாயகமாக (Postamaster general ) இருந்து ரோலண்ட் ஹில் எடுத்த முயற்சிகள் பல ஆண்டுகள் பலனளிக்காமலேயிருந்தது.

 

குறைந்த கட்டணம், எழுத வாசிக்கத்தெரிந்த கூடுதலானவர்கள் தபால் சேவையைப் பயன்படுத்த வழி செய்தது. 1840 மே 6ஆம் திகதி முதலாவது தபால்தலை வெளியிடப்படுவதற்கு முன்னரே, அதே ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி, முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன் சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவரிடமும் எதையும் எதிர்-பார்க்காதீர்கள்

எதிர் பார்த்தால் இறுதிவரை எதையும்,

சாதிக்காமலே போய் விடுவீர்கள்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் நிறைவைப் போன்ற நலமும்

ஒழுக்கத்தைப் போன்ற அணிகலமும்

உடல்நலத்தைப் போன்ற பேறும் உலகில்

வேறெதுவும் இல்லை......இனிய காலை வணக்கங்கள்...

46247_486504468056999_595274603_n.jpg?oh

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறுக்க நினைப்பவர்களுக்கு

நாம் என்ன செய்தாலும்,

தீயதாகவே தென்படுவது

சகஜம்...!!!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10801858_887753147932127_781782325089760

 

உலகெங்கும் பரந்து வாழும்

இன்பத்தமிழ் உறவுகள் அனைவருக்கும்

கார்த்திகை தீபம் திருநாள் வாழ்த்துக்கள்...

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கார்த்திகை விரதம்.

 

ஆலயங்களில் குமராலய தீபம் 04.12.2014...வீடுகளில் சர்வாலய தீபம் 05.12.2014..அனுஷ்டிக்கபடுகிறது.

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.